காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

3 மனோகரன் :
காதலிப்போர் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
42 பவுல் :
கொடிய பாவத்துக்கு சமம்.
2 மனோகரன் :
ரஞ்சிதாவுடன் திருப்பதிக்கு சென்ற நித்தியானந்தா.
5 மனோகரன் :
தந்தையாகிய ஓரினச்சேர்க்கை தம்பதி.
24 கதிரவன்:
புத்தகங்கள் காணா சத்தகங்களின் வித்தகங்கள் - பம்பல்Kமனோ.
58 மனோகரன் :
1வது உலகப்போரின் 100வது ஆண்டு நினைவு.
10 மனோகரன் :
காதல் நோயை கண்டுபிடிப்பது எவ்வாறு?
1 ராஜா கனடா:
மலேசிய விமான பணியாளர்கள் பணியிழப்பு.
2 ராஜா கனடா:
ஒபாமாவின் ஐஸ் குளியல்.
1 றாஜபாண்டி:
யாழில் நாய்கடி அதிகரிப்பு.
3 கலட்டியான் :
கும்பாபிஷேகம் மறுமலர்ச்சி மன்றக்கந்தன் - பாலசுப்ரமணியம்.
3 மனோகரன் :
காகிதம் உருவான விதம் - லொள்ளுபாண்டி.
1 சி.சத்தியமூர்த்தி, லண்டன். :
31ம் நாள் நினைவஞ்சலி: இரத்தினசிங்கம் சிவகுருநாதன் - டென்மார்க்.
1 றாஜபாண்டி :
facebook ஆண்டிகள் அதிகரிப்பு.
2 manoharan:
இலந்தையை வெறுக்கும் பறவைகள்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

செய்திகள்

ஜிஹாத் குழுவில் இணையும் போராளிகள் எண்ணிக்கை.

சிரியாவில் இஸ்லாமிய தேசப்போராளிகளுடனான போரில் குறைந்தது இரு அமெரிக்கர்கள் கொல்லப் பட்டதுடன் ஜேம்ஸ் ஃபோலேய் என்ற அமெரிக்கப் பத்திரிகையாளரை தலையைத் துண்டித்துக் கொன்ற ஜிஹாதிஸ்ட்டுப் போராளிகள் அது சம்பந்தப் பட்ட வீடியோ ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் கறுப்பு உடையுடன் முகத்தை மறைத்து பின்னால் நின்ற ஜிஹாதி போராளி ஓர் லண்டன் குடிமகனாக இருக்கலாம் என்ற ஊகங்கள் பரவத் தொடங்கின.   இதை அடுத்து சர்வதேச ரீதியில் சிரியா மற்றும் ஈராக்கில் இஸ்லாமிய தேச ஜிஹாதிஸ்ட்டுப் போராளிகளுடன் இணைய முனைப்புக் காட்டி வரும் வெளிநாட்டினர் குறித்து அதிக கவனம் செலுத்தப் பட்டு வருகின்றது. இதன் ஓர் கட்டமாக சி என் என் ஊடகம் சுமார் 25 நாடுகளில் எத்தனை பேர் சிரியாவிலும் ஈராக்கிலும் ஜிஹாதிஸ்ட்டுக்களுடன் இணையச் சென்றுள்ளனர் என்ற புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது. அவ்விபரம் கீழே: இதேவேளை பிரிட்டனில் ஜிஹாதிஸ்ட்டுக்களைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப் படும் நபர்களினது கடவுச் சீட்டை முடக்கும் வலிமையைப் போலிசாருக்கு வழங்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 02-09-2014

மன்னிப்பு கேட்கும் திரிஷா.

தமிழ்ப் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல், வயிறு சரியில்லை, பிளைட் லேட் என்று ஏதாவது காரணம் சொன்னால் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அஞ்சான் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஆப்சென்டான சமந்தா அப்படிதான் ஒரு கதை சொன்னார்.   தெலுங்கு, கன்னடத்தில் இந்த அழுகுணி ஆட்டம் செல்லுபடியாகாது. ரெட் கார்டே போட்டுவிடுவார்கள். அனாமிகா படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்ளாததால் நயன்தாராவை அதன் பிறகு எந்த தெலுங்குப் படத்திலும் ஒப்பந்தம் செய்யவில்லை.   த்ரிஷா நடித்துள்ள முதல் கன்னட படம் பவர். இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. அவ்வளவுதான். நாலா திசைகளிலிருந்தும் நெருக்கடி. பிறகு வேறு வழியில்லாமல் பெங்களூருவில் வைத்தே பத்திரிகையாளர்கள் மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.   அத்துடன், பெங்களூரு எனக்கு இரண்டாவது வீடு மாதிரி. பவர் படத்தில் நடித்தது மிக்க மகிழ்ச்சியானது என்று இரண்டு பிட்டையும் போட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 01-09-2014

நாய்க்கறி ஹோட்டலை மூடும் உரிமையாளர்.

தென்கொரியவின் கிழக்கு பகுதியில் உள்ள டீஜியா என்ற றோட்டலை ஓ கெயும் இல் என்ற பெண் கடந்த 33 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வந்தார்.   வயது முதிர்வின் காரணமாக இந்த ஓட்டலை தன்னால் தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும், அதனால் கனத்த இதயத்துடன் ஹோட்டலை மூடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   இந்த ஓட்டலின் உரிமையாளராகவும், தலைமை சமையல் பணியாளராகவும் உள்ள இவர், நேற்று தனது கையால் கடைசி வாடிக்கையளருக்கு உணவை பரிமாறினார்.   இந்த ஓட்டலுக்கு இதற்கு முன் இருந்த இரண்டு தென்கொரிய அதிபர்களும் ரெகுலராக வந்துபோகும் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   கடந்த 33 வருடங்களில் இதுவரை 2.5 மில்லியன் நாய்கள் உணவுக்காக விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும், தினசரி சராசரியாக 700 வாடிக்கையாளர்களுக்கு நாய்க்கறி உணவுகளை தான் விற்பனை செய்துள்ளதாகவும் கூறுகிறார் இந்த ஹோட்டலின் உரிமையாளர் கெயும் இல்.   58 வயதான கெயும் இல் , தனது வயது முதிர்வின் காரணமாக ஓட்டலை மூடுவது குறித்து கவலை கொள்வதாகவும், தனக்கு பின்னால் வேறு யாராவது இந்த ஓட்டலை நடத்தி தான் இதுவரை பெற்ற பெயரை கெடுப்பதற்கு இடம் கொடுக்க விரும்பாததால்தான் வேறு யாருக்கும் இந்த ஓட்டலை விற்காமல் மூடுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 01-09-2014

விநோதமான செய்திகள்

எம்மவர் ஆக்கங்கள்

பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.

தொடர்ச்சி ..........   பாசு போட்டு எடுத்து போட்டா பாக்கிய ஆச்சி .எவரும் அறியாமல் ரகசியமாக பயண ஒழுங்குகள் அமளியாக நடக்கின்றது .ரண்டு Bag நிறைய எதோ உர பை சாக்கில் அடைவது போல புழுக்கொடியல் மா /ஊறுகாய் /நல்லெண்ணெய் போத்தில் எல்லாம் அமுக்கு படுகின்றது எடியே பிள்ளை மரகதம் நான் போய் வருமட்டும் வீடு வாசல் /கோழியல் /ஆடு /மாடெல்லாம் கவனிக்கவேணும் வடிவாய் .வேலியிலை குழை வெட்டி கட்டு .அடுக்களையிலை கடகத்திலை கிடக்குது தவிடு .கோளியளுக்கு போடு .முன் படலையை துறந்து போடாதை .கள்ளர் காடையல் தூக்கி கொண்டு போவிடுவான்கள் பொருள் பண்டங்களை .நான் வரேக்குல்லை என்ரை பொடி பெட்டையளிட்டை சொல்லி உனக்கென்னடி வேண்டி கொண்டு வர ? ஐயோ எனக்கொண்டும் வேண்டாமனை.பாக்கியாச்சி பத்திரமாய் போய் வந்தால் காணும் .இல்லையடி எழுப்பும் விடாமல் உலவியாமல் சொல்லடி ஏதும் வேண்டி கொண்டு வர .சரி சரி கேட்டு போட்டியல் எண்டதுக்காக ஒரு வெளி நாட்டு செண்டு போத்தில் வேண்டியானை .எடியே எனக்கு தெரியும் உது உனக்கில்லை .நீ அந்த உங்கடை அயல் வீட்டு பொடியோடை எதோ இதாம் எண்டு நானும் கேள்விபட்டனான் .அவனுக்கு குடுக்கவல்லெ.குடடி குடடி. நானும் அந்த புண்ணிய வாளனை லவ்வி அல்லே கட்டினனான் .     எடே துரை லிங்கா பயணம் வெளிக்கிடேக்கை மம்மல் பொழுதிலை ஒருத்தருக்கும் தெரியாமல் ஒளிச்சு வெளிக்கிட வேணும் .ஆரென் கேட்டால் சொல்லவேணும் .பாக்கியத்துக்கு எதோ பொல்லாத வருத்தமாம் .கொழும்பிலை பிற வெட்டு ஆசுவத்திரியிலை காட்ட கூட்டி கொண்டு போறன் எண்டு .வெளிநாடு போறோம் எண்டு எங்கடை பெண்டுகள் அறிஞ்சாலவை எண்டால் சாமானுகள் திருப்பி  விட்ட கோவத்திலை சாவம் போடுவலவை உந்த கிழவிக்கு விசா குடுக்கபடாது எண்டு .விசா கிடைக்காட்டில் எனக்கு பிறகு விசர் அல்லே பிடிக்கும் . கொழும்புக்கு போய் நேரை கலியாணி லொச்சிலை.இறங்கிவிட்டினம்  முஹம்மத் நானா ஓடிவந்து ஹா வாங்க தம்பி எந்த எம்பசி ? விசா போம் எல்லாம் நாங்க நெரப்பி குடுப்போம்  ஒரு அரு நூறு ரூவாய் .எம்பசிக்கு ஏன்ட்ரை ஓட்டோ ஈக்குது .துரைலின்கன் பதில் இவ்வாறு  டாங்க்ஸ் நானா .நான் இஞ்சினை கொழும்பிலை பன்ரண்டு வருஷங்கள் பல சரக்கு கடையிலை வேலை செஞ்சேன் .சிங்களம் சுமாராய் ஓடும் இங்கிலீசும்  ஒரு மாதிரி yes /No /I dont know சொல்லி சமாளிப்பன் போம் நிரப்புகிறதும் எங்கடை சிங்கர் அண்ணையிட்டை குடுத்து ஒரு சல்லி காசும் இல்லாமல் ஓசியிலை செய்யலாம் .அவர் உங்கினை  பக்கத்திலை புறக்கோட்டை மீன் சந்தையிலை * மாலு கடையிலை " இரண்டாம் மாடியிலை . சரி சரி தம்பி நீங்க செஞ்சுக்குங்கோ .இந்த சீன்கள் அன்று வழமையான சீன்கள் .மொழி அறியாமை கொழும்பு தெரியாமையை உபயோகித்து பணம் பிடுங்கிய காலங்கள் .   இப்போ இரவாக துரைலின்கன் சாப்பாடு கட்ட வெளிகிடுகிறான்  பாக்கியாச்சி உங்களுக்குஎன்ன  மச்சமோ /மரக்கறியோ கொண்டர ? எடே மச்சம் கொண்டந்து போடாதை .இண்டைக்கு நுனசை தேரடா .   நான் விரதம் கண்டியே .சரி சரி உங்களுக்கு சைவ கடையிலை சுத்தி கொண்டு வாறன் .எனக்கு மீன் சாப்பாடு .பயண அலுப்பு தீர ஒரு காலும் போட்டு விட்டுத்தான் வருவான் பேசி கீசி போடாதை .சரி சரி போட்டா .நீ இல்லாட்டால் ஆரடா எனக்கு இதெல்லாம் செய்ய  ? சாப்பாடு முடித்து படுக்கைக்கு ஆயத்தம் .பாயும் தலைகனியும் பாணி பினாட்டு மாதிரி ஒட்டியது .பாக்கியாச்சி நினைத்தா வெளிநாடு போறதென்றால் இதெல்லாம் அனுபவிக்க வேணும் போல என்று நினைத்து .அம்மாளே ஆச்சியே என்று சரிந்து  உறங்கி எழும்பினா விடிய .துரைலின்கனுக்கு ஒட்டிய தலைகணி ஒன்றும் பிரச்சனை இல்லை .மாட்டி போட்டுதானே அவர் .   விடிய இருவரும் ஓட்டோ ஒன்றில் எம்பசி நோக்கி .அங்கு நேர்காணல் ஒரு தமிழ் அம்மா . ""ஆச்சி என் போறியள் வெளிநாடு ?? அது அம்மா என்ரை எட்டு பிள்ளையளும் உங்கினை எதோ அசுரோப்பாவோ அந்த நாடுகளிலை. நானும் பின்னை நான் பெத்த பிள்ளையளையும் /பேர பிள்ளையளையும் பாத்து கொண்டு வரலாம் எண்டுதான் வெளிக்கிடுகிரன்.அது சரி ஆச்சி .ஆனால் சில ஆச்சிமார் உப்பிடி சொல்லித்தான் போவினம் .ஆனால் திரும்பி  வரமாட்டினம் .அதாலை இப்ப இஞ்சை புது சட்டம் நீங்கள் திரும்பி வரவேணும் என்பதற்காக ஒரு பெறுமதியான உறுதி ஒன்று தரவேணும் .ஐயோ அம்மா என்ரை அவர் சிங்கப்பூரிலை உழைச்சு கட்டின பெரிய வீட்டோடை பதின்றண்டரை பரப்பு காணியோடை அங்கினை அம்மன் கோயில் வடக்கு பக்கமாய் .அதை தரட்டே பிணைக்கு ? சரிஅப்ப அதோடை நாளை இண்டைக்கு வாருங்கோ .     மீண்டும் ஓட்டோ லொச்சை நோக்கி .எடே துரைலின்கா துறப்பை பிடி .நீ ஊருக்கு போய் பெரிய வீட்டு அறையை துற .இது பெட்டக துறப்பு .அதை துறந்தால் .இடபக்க மூலையிலை கட்டு கட்டாய் உறுதியல் கிடக்கும் .முகப்பிலை மஞ்சள் பூசி கிடக்கும் .அதுதான் வீடு வளவு உறுதி .எடுத்துகொண்டு ஓடி வாடா என்ரை ராசாவே .நான் நீ வருமட்டும் எதோ சமாளிக்கிறன் இஞ்சை ..... பயணம் தொடரும்   பம்பல்Kமனோ - கலட்டி.         பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா - பம்பல்Kமனோ.

மேலும் படிக்கவும் 8 மறுமொழிகள் சுதர்சன் 25-06-2014

சமூகம்

வாக்குவாதப்படும் தம்பதியினர் மௌனமாக இருப்பது ஆபத்தானது.

கோபம், சண்டை வரும்போது ஆவேசமாக கத்தி கூப்பாடு போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை.   கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மௌனமானது பெரும் ஆபத்தாகும். ஏனென்றால் மௌனமாக இருக்கும்போது, மூளையில் சாத்தான் வந்து அமர்ந்து கொள்ளும் காதலிக்கும் போது நடந்த விஷயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பதுதான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும்.   மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விஷயங்கள் மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். மேலும் இருவரும் மௌனமாக இருப்பதால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும். முதலில் அவர்தான் பேசவேண்டுமென இவரும், இவர்தான் பேசவேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள்.   அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும். அதனால் ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், கட்டிப் பிடித்து உருளுங்கள், ஆனால் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள்.   பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள். அப்போது தான் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீர்வு கிடைக்கும். எனவே பெண்களே கணவருடன் சண்டை ஏற்படும் போது கணவன் வந்து பேசும்போது மௌனமாக இருக்காமல் சற்று விட்டு கொடுத்து போக வேண்டும். 

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 01-09-2014

காதலிப்போர் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த அன்பைப் பற்றிய அபிப்பிராயம் ஒன்று போல இருப்பதில்லை. ஆண்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு மிகவும் முக்கியமானது மற்றும் நாம் அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். நம்பிக்கையுடன் இருந்தால், பெண்கள் எளிதில் காதல் வயப்படுவார்கள்.   அதனால் அவ்வளவாக அன்பில்லாத ஆண்களிடம் தங்களுடைய மனதைப் கொடுத்து விடுவார்கள். எனவே தான், ஒரு புதிய உறவை ஏற்படுத்தும் போது புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். பொதுவாகவே பார்க்க நன்றாக இருக்கக் கூடிய ஆண்களுடன் நாம் பழகி, மனதைப் பறிகொடுத்து பின்னர் மனமுடைந்து விடுவதால், தனிமையில் வருத்தப்படுவோம்.   எனவே, ஒரு இளைஞன் உங்களிடம் உண்மையாகவே அன்பு கொள்ளாமல் இருப்பதை உணர்ந்தால், அவருடன் நீங்கள் தொடர்பில் இருக்க வேண்டாம். ஏனெனில், அந்த உறவு கண்டிப்பாக மகிழ்ச்சியில் முடியப் போவதில்லை. பெரும்பாலான பெண்கள் காலப்போக்கில் உண்மையான உணர்வுகள் வரும் என்று நம்புகிறார்கள் மற்றும் அந்நேரத்தில் சூழல் மாறிவிடும் என்றும் நினைக்கிறார்கள்.   ஒரு நல்ல மனிதரை நீங்கள் சந்தித்து, அவரை உங்களுக்குப் பிடித்திருந்தால், ஒரு துணைவராக இருக்கத் தேவையான உங்களுக்குப் பிடித்த தகுதிகள் அவரிடம் உள்ளனவா என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். ஆண்கள் மோகம் கொண்டவர்கள் என்பது ஒரு வெளிப்படையான இரகசியம். உண்மையில், எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று நாங்கள் சொல்லவில்லை.   ஆனால் பெரும்பாலானவர்கள் முதலில் முகம் மற்றும் உடலின் மேல் தங்களுடைய கவனத்தை செலுத்தி விட்டு, பின்னர் தான் நமது ஆன்மாவின் மேல் காதல் கொள்ள விழைகிறார்கள். உறுதியான மற்றும் நீண்ட கால உறவை நீங்கள் விரும்பினால் உடல் ரீதியான கவர்ச்சிக்கு அங்கு இடம் இருக்கக்கூடாது.   எனவே, உங்களுடைய இதயத்தைக் கொடுக்கும் முன்னர் சற்றே பொறுத்திருந்து விட்டு, பின்னர் அன்பைப் பரிமாறிக் கொள்ளுங்கள். ஒரு ஆண்மகனின் துணையை நீங்கள் தேடும் போது உங்களுடைய மனதில் உள்ள, மிகச்சரியான மனிதரின் உருவத்தை வரைந்து கொள்ளுங்கள்.   உங்களுடைய ஆண் நண்பரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் குணங்கள் உள்ளதா என்று பார்ப்பதன் மூலம் உங்களுடைய கனவுகளை உண்மையாக்க முடியும். பெண்களில் பலரும் தங்களுடைய முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொண்டு விடுவதால், இந்த முடிவில்லாத நிலை தவறான மனிதரைத் தேர்ந்தெடுப்பதில் முடிவடைகிறது.   உங்களுடைய வாழ்வில் சரியான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாகவும், சரியாகவும் எடுக்க வேண்டும். ஆண்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த குணங்களை எப்பொழுதும் கவனித்திருங்கள் மற்றும் அதைப் பெற்றுள்ள மனிதருக்காக காத்திருங்கள்.   இந்த தேவைகளை கொண்டிருக்காத மனிதரைப் பார்த்து உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களுக்கு ஏற்ற துணைவர் யார் என்று இன்னமும் உணராமல் இருந்தால், யாரோ ஒருவரின் அன்பு மற்றும் கவனத்திற்காக உங்களுடைய மனதை கொடுத்துள்ளீர்கள் என்று அர்த்தமாகும்.   அழகான மற்றும் கவர்ச்சியான ஒரு ஆணை நீங்கள் சந்திப்பது மட்டுமே, அவரிடம் காதல் வயப்பட ஏற்ற காரணம் கிடையாது. அழகான முகத்தை விட, அவருடைய தனித்தன்மையான குணங்களே அதிக முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். நீங்களும் அழகான மற்றும் இளமையான பெண்ணாக இருப்பதால், வரும் காலத்தில் ஆர்வமூட்டக் கூடிய நபர்களை சந்திக்க நேரிடும்.   பெரும்பாலான ஆண்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதில்லை என்பதும், அவர்கள் நம்முடன் டேட்டிங் வரும் போது நிறைய விஷயங்களை மறைக்கிறார்கள் என்பதும் தான் நமது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். எனவே தான் வாழ்நாள் முழுவதும் பழக வேண்டிய மனிதரைத் தேர்ந்தெடுப்பதில் நாம் அவசரம் காட்டக்கூடாது

மேலும் படிக்கவும் 3 மறுமொழிகள் சுதர்சன் 29-08-2014

இயற்கையிலிருந்து மருத்துவம் - பவுல்.

* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.   * அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.   * விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.   * கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். * சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.   * நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.   * வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.   * பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.   * புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம். * பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.   * கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.   * சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.   * முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். இருமல், தொண்டை கரகரப்பு பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.   பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும். டான்சில் வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.   கட்டுரைப்பகிர்வு: பவுல் - மேற்கு ஐரோப்பா.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 26-08-2014

சிறுவர்கள்

கண்பார்வையில்லாத வௌவ்வால்.

வௌவ்வாலுக்கு கண் பார்வை கிடையாது. தான் பறக்கும் போது உண்டாகும் காற்றலைகளின் அதிர்வைக்கொண்டு எதிரிலிருக்கும் சுவர், வழி போன்றவைகளை அறிந்து கொள்கின்றன.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 02-09-2014

வெட்டுக்கிளிகளின் காதுகள்.

வெட்டுக்கிளிகளுக்கு காதுகள் அதன் தலைப்பகுதியில் இல்லை, காலில் இருக்கின்றன.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 30-08-2014

இடது கையால் கொடையளித்த கர்ணன்.

கர்ணனின் கொடையுள்ளத்தைச்சோதிக்க விரும்பினார் கண்ணன்.   கண்னன் கர்ணனின் அரண்மனைக்குச் சென்றார். அங்கு கர்ணன் ஒரு பொற்கிண்ணத்தில் இருந்த எண்ணெய்யை வலது கையில் ஊற்றித் தன் தலையில் தேய்த்துக் கொண்டிருந்தான்.   அங்கு வந்த கண்ணன், “கர்ணா, இந்தப் பொற்கிண்ணத்தை எனக்குக் கொடையாகக் கொடு” என்று கேட்டார்.   “இறைவனே! நீங்களா என்னிடம் கேட்கிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டான் கர்ணன்.   பின்னர், அவன் தயக்கம் எதுவுமின்றி அந்தப் பொற்கிண்ணத்தை இடது கையால் எடுத்துக் கண்ணனிடம் கொடுத்தான்.   அதைப் பெற்றுக் கொண்ட கண்ணன், “கர்ணா, உன்னை எல்லோரும் சிறந்த கொடையாளி என்று புகழ்கிறார்கள். உனக்கு இடது கையால் யாருக்கும் தானம் வழங்கக் கூடாது என்பது தெரியாதா?” என்று கேட்டார்.    “இறைவனே, நான் செய்த செயலுக்கு என்னை மன்னியுங்கள். என் வலது கை தற்போது எண்ணெய்க் கறையாக இருக்கிறது. நான் எழுந்து சென்று, கையைக் கழுவிச் சுத்தம் செய்து விட்டு உங்களுக்கு இந்தப் பொற்கிண்ணத்தை வழங்கியிருக்கலாம். ஆனால், அதற்கு சிறிது காலமாகும். உள்ளம் அலை பாயக்கூடியது. காலதாமதத்தால், விலையுயர்ந்த பொற்கிண்ணத்தை நான் எதற்காகத் தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் நினைக்கலாம். கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டவுடனே, கொடுத்து விடுவது என் இயல்பு. அதனால்தான், நான் எனது இடது கையால் கொடுக்க வேண்டியதாகி விட்டது” என்று விளக்கினான் கர்ணன்.   “கர்ணா, உன் கொடையுள்ளத்திற்கு யாரும் இணையாக மாட்டார்கள்” என்று அவனைப் புகழ்ந்து விட்டுச் சென்றார் கண்ணன்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-08-2014

ஆன்மீகம்

உயர்ந்த மனிதனாக உயர்த்துவது.

எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 02-09-2014

எம்மவர் அமைப்புகள்

கனடா-பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் நன்றிகள் - விஜயநாதன்.

கனடா- பண்கலை பாட்டுக் கழக கோடை கால ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்   இப்படிக்கு கனடா- பண்கலை பண்பாட்டுக் கழகம்   விஜயநாதன் - கனடா.

மேலும் படிக்கவும் 12 மறுமொழிகள் சுதர்சன் 16-08-2014

இத்தாலி ஊரவர் ஒன்றுகூடல் படங்கள் - சங்கர்.

இத்தாலி  பண் மக்கள் ஒன்றியத்தால் 10- 08- 2014 அன்று நடாத்தப்பட்ட ஒன்று கூடல் புகைப்படங்கள்!! சங்கர் - பலர்மோ.

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 13-08-2014

மங்கள நிகழ்வுகள்

பிறந்தநாள் அழைப்பிதழ்: நிவேஜன் குணேஸ்வரன் - ஜேர்மனி.

ஜேர்மன் பீலபெல்ட் நகரில் வசிக்கும் திரு.திருமதி .குணேஸ்வரன்-நிர்மலா தம்பதிகளின் அருந்தவப்புதல்வன் “நிவேஜன் ” அவர்கள் (01 .06 .2014)அன்று  பதினெட்டாவது பிறந்தநாளை அன்பு அப்பா,அம்மா, சகோதர்கள் உறவினர்கள் நண்பர்கள்  அனைவருடனும் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்:   காலம் -01.06.2014 ஞாயிற்றுகிழமை    நேரம்-10.00 am   இடம் - FREIZEIT ZENTRUM BAUMHEIDE RABENHOF-76 33609 BIELEFELD ஜெர்மனி       கயன் குகன் - ஜேர்மனி.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 27-05-2014

சமையல்

சோயாமீட் குழம்பு.

வெங்காயத்தையும் பூண்டையும் தோல் உரித்து வைத்துக்கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.   சோயா உருண்டைகளை, கொதிக்கும் நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு குக்கரில் 1 விசில் வரும் வரை வேகவைக்கவும். நீரை வடித்துவிடவும். வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.   அத்துடன் தக்காளியையும் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு உப்பு, புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார்பொடி சேர்க்கவும். நன்கு கொதித்ததும், சோயா உருண்டைகளை குழம்பில் போட்டு, சோயா உருண்டைகளில் குழம்பு சாரும் வரை கொதிக்க விடவும்.   குழம்பு சிறிது கெட்டியானதும் அரைத்ததைக் கரைத்து ஊற்றி, கொதித்ததும் இறக்கிவிடவும்.   தேவையானவை   சோயா மீற் அல்லது மீல்மேக்கர் -15,   சின்ன வெங்காயம் -10,   பூண்டு -10 பல்,   தக்காளி- 1,   சாம்பார்பொடி- 2 டீஸ்பூன்,   உப்பு தேவைக்கேற்ப,   புளி - 1 எலுமிச்சை அளவு.   அரைக்க: தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்,   முந்திரிப்பருப்பு- 4,   சோம்பு- கால் டீஸ்பூன்.   தாளிக்க: கடுகு -அரை டீஸ்பூன்,   சோம்பு -கால் டீஸ்பூன்,   உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்,   பெருங்காயம்- 1 சிட்டிகை,   எண்ணெய் -6 டேபிள்ஸ்பூன்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 31-08-2014

ஆட்டு வறுவல்.

ஒரு குக்கரில் ஆட்டு இறைச்சியை சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய், 1 கப்தண்ணீர் உற்றி 6 விசில் விடவும்.   ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு,பட்டை,கிராம்பு,தனியா, க.மிளகாய் வறுத்து அரைத்துகொள்ளவும்.   கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்வெந்தயம்,கருவேப்பிலை, க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.   வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.   தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.   சிறிது வதக்கி பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த மட்டன் போட்டு நன்கு கொதிக்க விடவும்.   தண்ணீர் வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.     தேவையானவை   மட்டன் -1/2 கிலோ   வெங்காயம் - 1   தக்காளி - 1   மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன்   மிளகாய் பொடி -1 1/2ஸ்பூன்   தனியா பொடி - 1ஸ்பூன்   வெந்தயம் - 1/2ஸ்பூன்   கருவேப்பிலை - சிறிது   எண்ணெய் - 4 ஸ்பூன்   உப்பு-1 ஸ்பூன்   க.மிளகாய்-3   இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்       வறுத்து அரைக்க:   மிளகு - 1ஸ்பூன்   சீரகம் - 1ஸ்பூன்   சோம்பு - 1ஸ்பூன்   பட்டை - 2   கிராம்பு - 1   தனியா - 1 ஸ்பூன்   க.மிளகாய்-2  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 28-08-2014

உளுத்தம்பருப்பு கட்லட்.

உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். மிக்ஸியில் போட்டு, ரொம்பவும் நைஸாக இல்லாமல் அரைக்கவும். சர்க்கரை, ஏலக்காய் இரண்டையும் பொடிசெய்யவும்.   அரைத்த உளுத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் கலந்துகொள்ளவும். அந்த மாவை, ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் விருப்பமான வடிவத்தில் கட்லெட் போல தட்டி வைத்துக்கொள்ளுங்கள்.   அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, தோசைக்கல்லை காயவைத்து, தட்டிய கட்லெட்டுகளை போட்டு, சுற்றிலும் நெய்விட்டு, லேசாகப் பொரிந்ததும் உடனே எடுத்துவிட வேண்டும்.   தேவையானவை   உளுத்தம்பருப்பு - அரை கப்,   நாட்டுச்சர்க்கரை - முக்கால் கப்,   நெய் - கால் கப்,   ஏலக்காய் - தேவையான அளவு.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 25-08-2014

மரண அறிவித்தல்