காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

செய்திகள்

பக்கம் தேர்ந்தெடுக்கவும்:

தனுஷ் தயாரிப்பில் கபாலி-2?

2.0′ படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’. தாணு தயாரிப்பில் வெளியான இப்படம் இந்தியளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் சாதனையை வசூலில் முறியடித்தது. அப்படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ’2.0′ உருவாகி வருகிறது. இப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித். இப்படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார். இப்படம் ‘கபாலி 2′ ஆக இருக்கும் என தெரிவிக்கிறார்கள். ஆனால் தனுஷ் மற்றும் ரஞ்சித் இதனை உறுதிப்படுத்தவில்லை. தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவின் மூலமாக இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பால் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 30-08-2016

மைத்திரியின் இணையத்தை முடக்கியவர் கைது.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கிய குற்றச்சாட்டில் மொரட்டுவையைச் சேர்ந்த 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அத்துமீறி நுழைந்தமைக்காக கடுகண்ணாவையைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.president.gov.lk எனும் இணையத்தளத்தை முடக்கி அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பில் அவதூறான செய்திகளை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இணைய குற்றங்கள் பிரிவுக்கு பொறுப்பான ஒரு விசேட குழு இவர்களைக் கைதுசெய்துள்ளது

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 30-08-2016

இறுதிப்போரில் பணம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறிய புலிகள்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். காணமால் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற போது 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சமரவீர, இவர்களுக்குள் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் இருப்பதாக அறிவித்தார். இவ்வாறு தப்பியோடிய நபர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இவ்வாறான சட்ட விரோத செயல்கள் சம்பந்தமாக ஆராய காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைப்பது அவசியமென்று தெரிவித்தார். மேலும் கருத்துக்களை தெரிவித்த அமைச்சர் சமரவீர, காணாமல் போனோரின் அலுவலகம் அமைப்பது தொடர்பாக சில எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்தார். இந்த அலுவலகம் உருவாக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழி வாங்கப்படமாட்டார்கள் என்று அவர் கூறினார். மேலும் கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, உண்மை கண்டறியும் ஆணைக் குழுவொன்றை அமைக்கும் சட்ட மூலம் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமென்று தெரிவித்தார். இதன் மூலம் கண்டறியப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளூர் நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் மாத்திரம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்று தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, இந்த விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என்று மேலும் தெரிவித்தார்

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 30-08-2016

ராஜபக்ச தலைமையில் புதிய கட்சி.

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றார். 2 முறை அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். இதைத் தொடர்ந்து இலங்கை சுதந்திர கட்சியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக கட்சித் தலைவர் பதவியையும் ராஜபக்ச ராஜினாமா செய்தார். கட்சியின் தலைமைப் பொறுப்பை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஏற்றுக் கொண்டார். தற்போது மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் கட்சியில் இருந்து முழுமையாக ஓரம் கட்டப்பட்டுள்ளனர். எனவே புதிதாக கட்சியைத் தொடங்க ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதற்காக மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இலங்கை சுதந்திர கட்சிக்கு இணையான பெயர் ஒன்றை தேர்வு செய்ய ஆலோசித்து வருகிறது. விரைவில் மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 29-08-2016

நேர்மையை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவருடைய எதார்த்தமான நடிப்பு ஒவ்வொருவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொண்டது கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் விஜய் சேதுபதியை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் ஒன்று வெளியானது. அதாவது, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்துள்ள ‘தர்மதுரை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், அந்த படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளத்தில் பாதியை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்ததாக செய்தி வெளிவந்தது. இதற்காக, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது ‘இந்த செய்தி உண்மையல்ல… மன்னிக்கவும்’ என்று விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒரு பைசாகூட செலவழிக்காமல் வீண் விளம்பரங்கள் தேடிக்கொள்ளும் சில நடிகர்கள் மத்தியில், விஜய் சேதுபதியின் நேர்மையான குணம் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.nerma

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 29-08-2016

நல்லூர் தேர் நாளில் யாழ் பாடசாலைகளில் விடுமுறை.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் அறிவித்துள்ளார். இதேவேளை, பதில் பாடசாலை எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நல்லூர் தேர்த்திருவிழா எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 29-08-2016

போதையால் பொலிஸ் வாகனத்தில் மோதிய அருண் விஜய்.

நடிகர் அருண் விஜய் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். நடிகராக தடுமாறிக் கொண்டிருந்த அருண் விஜய்க்கு அஜித்துடன் இணைந்து நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் கைகொடுக்க, தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக அருண் விஜய் மாறிவிட்டார். இவர் நடிப்பில் அடுத்ததாக ‘வா டீல்’, ‘குற்றம் 23′ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. நேற்றிரவு நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அருண்விஜய் தனது குடும்பத்துடன் காரில் திரும்பி வரும் வழியில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது மோதினார். இதில் அருண்விஜய்க்கு காயம் ஏற்படவில்லை என்றாலும் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குடிபோதையில் இருந்தது கண்டறியப்பட்டதால் அவர்மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரைக் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-08-2016

இங்கிலாந்தில் 5 தமிழர் சடலம் கடற்கரையில் மீட்ப்பு.

இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில்  புதன்கிழமை  5 சடலங்கள் கண்டடெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   இவர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது அறியவருகிறது இறந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.   அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில் நேற்று கடலில் மூழ்கி காணாமல் போன மூன்று ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரத்தின் பின்னர், மேலுமிரு சடலங்கள் கரையொதுங்கியதாகக் கூறப்படுகின்றது.   அத்தோடு, மேலுமொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஹெலிக்கொப்டரின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்பிராந்தியப் பொலிஸார் தெரிவித்தனர்.   இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரையில், இங்கிலாந்து முழுவதும் கடலில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   சென்ற கிழமையும் இலங்கைத்தமிழர் ஒருவர் கடலில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்து.   இதுபோன்ற ஆபத்தான கடல்கரைகளில் , மக்கள் குளிப்பதை உடனே தவிர்க்குமாறு பொலிசார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-08-2016

வவுனியா இளைஞன் பிரித்தானியாவில் தற்கொலை.

பிரித்தானியாவில் மலையில் இருந்து குதித்து தமிழ் வாலிபன் பலி – அதிர்ச்சியில் மனைவி   பிரித்தானியாவில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான டிசாந்த் என்பவர் BRIGHTON பகுதியில் உள்ள மலை ஒன்றில் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .   வவுனியா கூமாங்குளம் சிவன்கோவிலடியை சேர்ந்த இவர் பிரித்தானியாவிற்கு சென்று 06 வருடங்கள் என்பது குறைப்பிடத்தக்கது மேலும் இவர்  உளைச்சலில் சிக்கி தவித்த நிலையில் இந்த தற்கொலையினை புரிந்துள்ளாராம் . சிதைந்த நிலையில் மீட்க பட்ட உடல் மரண பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது குறித்த வாலிபனின் தற்கொலை தொடர்பாக பொலிசார் விசாரணைளை முடுக்கி விட்டுள்ளனர் இவரது உடல் இதுவரை மனைவியிடம் கையளிக்க படவில்லை இவருக்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்து பத்து நாட்களேயான நிலையில் இந்த அழகிய வாலிபன் தற்கொலை புரிந்துள்ளது அவரது மனைவியை கடுமையாக பாதித்துள்ளது .   காதல் திருமணம் புரிந்த நிலையில் தாயாருக்கு குறித்த திருமணத்தில் பிடிப்பு இல்லாத நிலையில் மேற்கொள்ள பட்ட தொடர் தொந்தரவினாலேயே மேற்படி வாலிபன் இந்த தற்கொலையினை புரிய நேர்ந்துள்ளது என அவரது நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .   இருபத்தி ஏழு வயதுடைய இந்த வாலிபனின் தற்கொலை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குடும்பங்களில் ஏற்படும் தகராறால் பிரித்தானியாவில் இது போன்ற பல தமிழ் ,ஆண் பெண்கள் தற்கொலை புரியும் சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது என்பது குறிப்பிடதக்கது .

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-08-2016

மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு “காற்று வெளியிடை” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிதி ராவ் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இப்படத்தின் கதாபாத்திரத்துக்காக கார்த்தி உடலைக் குறைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கமாக ஊட்டியில் ஒரு பாடலை படமாக்க இருக்கிறார்கள். இவ்வருட இறுதியில் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-07-2016

ஆறு கால ஆண்டுகள் சிறைத்தண்டனையில் ஓஸ்கர்

தென்னாபிரிக்காவின் புகழ்பெற்ற ஓட்ட வீரர், இரண்டு கால்களும் இல்லாத நிலையில் இரும்பு பிளேட் மூலம் செய்யப்பட்ட கால்களை வைத்து ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் எடுத்தவர் ஒஸ்கார் பிறிற்றோரியஸ். கால்கள் இல்லாதவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த இவர் மன ஊனம் காரணமாக செய்த வேலையால் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த 2013ம் ஆண்டு மாசி மாதம் 14ம் திகதி காதலர் தினத்தன்று தனது காதலியும் மாடல் அழகியுமாக றீவா ஸ்ரீன்காம்பை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். சம்பவதினம் இவருடைய வீட்டின் கழிவறைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே திருடன் என்று கருதி சரமாரியாக சுட்டதாகவும், கதவைத்திறந்து பார்க்க தனது காதலி சுடப்பட்டு கிடந்ததாகவும் கதையளந்துள்ளார். ஆனால் சம்பவதினம் வீட்டில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாக அயலவர்கள் சாட்சியமளித்துள்ளனர். ஏற்கெனவே மாடல் அழகிக்கும் வேறு ஒருவருக்கும் பழக்கம் இருந்தாகவும் இதனால் இருவருக்கும் பொறாமையில் இருந்து ஊற்றெடுத்த அழுகிய மனச்சிக்கல் ஏற்பட்டதாகவும் முன்னைய செய்திகள் கூறியிருந்தன. ஒஸ்கார் பிறிற்றோரியஸ் இரண்டு கால்களும் இல்லாத நிலையில் அவருக்கு ஒரு தன்னம்பிக்கை வீழ்ச்சியும், தாழ்வுச்சிக்கலும் இருந்ததாகவும், ஏற்கெனவே இதுபோல பல வன் செயல்களில் ஈடுபட்ட மோசமான பேர்வழி என்றும் வேறு சில செய்திகள் தெரிவித்திருந்தன. துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்மணியின் குடும்பத்தினரே சாட்சி சொல்ல தயங்குமளவுக்கு இவருடைய வன்குணம் காணப்பட்டுள்ளது. சுடப்பட்ட மாடல் அழகியின் தரப்பு சட்டத்தரணி இவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தார், ஆனால் நீதிபதி ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்ததுடன் மேல் மூறையீடு செய்யவும் வாய்ப்பளித்துள்ளார். தென்னாபிரிக்காவில் மட்டுமல்ல உலகளவில் இந்த வழக்கு உற்று நோக்கப்பட்டது, தென்னாபிரிக்க நீதித்துறையின் நம்பகத்தன்மையை உலகம் மட்டுக்கட்டவும் வழக்கின் மீதான அவதானிப்பு நிலவியது. இருப்பினும் இந்த வழக்கும், அதன் தீர்ப்பும் ஏதோ ஒரு பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவுவதைக் காட்டுகின்றன.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-07-2016

சீன போலி முடடைகள் இந்தியாவுக்குள்.

சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் போலி முட்டைகள் ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்தியாவில் பல உணவுப் பொருட்களைப் போல போலியாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் போலி முட்டைகள் ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பலரையும் கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-07-2016

சுந்தர் C இயக்கத்தில் AR ரஹ்மான்.

படத்தின் பட்ஜெட் 100 கோடி என்கிறார்கள். சிலர் 350 கோடி என்கிறார்கள். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கும் படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது அவர்கள் சொன்னால்தான் தெரிய வரும்.   படத்தின் கதை தயார். ஸ்கிரிப்ட் பணிகள் இறுதிகட்டத்தில். ஆனால், நாயகன், நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. போலவே, படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதிலும் இன்னும் முடிவான தீர்மானம் எட்டப்படவில்லை.   மிகப்பெரிய பட்ஜெட் எனும் போது ரஹ்மான் இருந்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும். அதனால், ரஹ்மானின் கால்ஷீட்டை பெற முயற்சிகள் நடக்கிறது. தேனாண்டாளை பொறுத்தவரை பணம் ஒரு பிரச்சனையே இல்லை.    ஆனால், ரஹ்மான் அப்படியில்லை. அவருக்கு தனது பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறமை இயக்குனருக்கு இருக்கிறதா என்பது முக்கியம். பணத்தைவிட காலம் அதிமுக்கியம்.   எப்படியும் ரஹ்மானை வளைத்துவிடுவார்கள் என்கிறது கோடம்பாக்கம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 06-07-2016

'ராணுவம் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தின'

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால், அது தவறில்லை என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.  போரின் போது இலங்கை இராணுவத்தினர் கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருந்தால், இராணுவத் தேவையின் படி அதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தால், அந்த நேரத்தில் அது சட்டவிரோதமானதல்ல என்பதை தான் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இறுதி மோதல்கள் காலத்தில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்துவதற்கான தடை இருக்கவில்லை என்பதை தமது ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளதாகவும், 2010ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியே இந்த தடை உலகில் செயற்பாட்டுக்கு வந்தது என்றும் மக்ஸ்வெல் பரணகம கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள வாய்மூல அறிக்கையில் 33வது பந்தியானது யுத்தத்தின் இறுதி சமயத்தில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் சுயாதீனமான பக்கச்சார்ப்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக்குற்றச்சாட்டுக்களில் எவ்விதமான புதிய தன்மையும் இல்லை என்று இங்கு கூறவேண்டும். எமது காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட இரண்டாவது ஆணையின் பிரகாரம் நாம் மேற்கொண்ட விசாரணையில் இலங்கை இராணுவம் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியமைக்கான எவ்விதமான நம்பகரமான ஆதாரங்களும் இல்லை என்பதை கண்டுபிடித்தது. தருஷ்மன் அறிக்கையிலும் இவ்வாறு கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான மூலங்கள் முன்வைக்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் முடிவடைந்த பின்னர் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சிப் பிரிவின் உறுப்பினர் ஒருவர் கசியவிட்ட மின்னஞ்சலின் பிரகாரம் மோதல் வலையத்தில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுள்ளது. ஆனால், இலங்கை இராணுவம் அந்தக்குற்றச்சாட்டை மறுத்ததுடன் அந்த மறுப்பானது அந்தநேரம் ஐக்கிய நாடுகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை எமது ஆணைக்குழு அவதானித்திருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணயைாளரின் அறிக்கையை யாராவது வாசிக்கும்போது கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதானது யுத்தக்குற்றம் என்று நினைக்கலாம். ஆனால் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவராக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகின்றேன். அதாவது கொத்துக் குண்டுகள் ஆயுத சாசனத்தின் பிரகாரம் இந்த ஆயுதப் பயன்பாடு இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது உலகில் தடைசெய்யப்பட்டிருக்கவில்லை. மாறாக 2010ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியே இந்த தடை உலகில் செயற்பாட்டுக்கு வந்தது. எனவே யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினர் கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருந்தால், இராணுவத் தேவையின் படி அதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தால் அந்த நேரத்தில் அது சட்டவிரோதமானதல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறேன். ஜெனீவா செயற்பாட்டில் கொத்துக் குண்டுகள் விவகாரம் பாரிய பிரசித்தத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இலங்கையில் யுத்தம் முடிவடைந்தபோது கொத்துக் குண்டு பயன்பாட்டுத்தடை அமுலில் இருக்கவில்லையென்பது பரணகம ஆணைக்குழுவின் இரண்டாவது ஆணையின் பிரகாரம் வெளிப்படுத்தியுள்ளோம் என்பதை வலியுறுத்துகிறோம்.” என்றுள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 06-07-2016

சுவாதி கொலையில் ராம்குமார்.

சென்னை இன்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராம்குமார் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ராம்குமார் கிராமத்து ஏழை, அப்பாவி இளைஞர். சுவாதி கொலை வழக்கில் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. உண்மைக் குற்றவாளியை காப்பாறுவதற்காக ராம்குமார் மீது போலீஸார் பொய் வழக்கு போட்டுள்ளனர். ராம்குமார் இந்த ஜாமீன் மனுவில் கொடுக்கப்பட்ட முகவரியில் தான் நிரந்தரமாக வசித்து வருகிறார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் தப்பி ஓடவோ அல்லது சாட்சியங்களை திசை திருப்பவோ முயல மாட்டார். மேலும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் சுவாதி. இவர் கடந்த ஜூன் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், சிசிடிவி பதிவை முக்கிய ஆதாரமாகக் கொண்டு விசாரணையை தொடங்கிய போலீஸார் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கடந்த 1-ம் தேதி இரவு கைது செய்தனர். போலீஸாரின் கைது நடவடிக்கையின்போது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நேற்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டார். சுவாதியை கொலை செய்ததாக ராம்குமார் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், “எனக்கும் சுவாதி கொலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மை குற்றவாளியை காப்பாற்றுவதற்காக போலீஸார் வழக்கை ஜோடனை செய்துள்ளனர்” என அவர் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 06-07-2016

அமெரிக்க 6 மேடைகளில் இளையராஜா இசைநிகழ்வு.

000 படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ள இசைஞானி இளையராஜா, அவ்வப்போது வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் வருகிற செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இளையராஜா திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் வெவ்வேறு இடங்களில் 6 இசை நிகழ்ச்சிகளை நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இளையராஜா அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, அவர் 2013-ஆம் ஆண்டில் நியூஜெர்ஜியில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். இது இரண்டாவது முறையாகும். இந்த இசை நிகழ்ச்சியில் பங்குகொள்ள 50-க்கும் மேற்பட்டவர்களை இங்கிருந்து அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. யார், யார் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 30-06-2016

சாணியில் தங்கம்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கிர் வனத்தில் வசிக்கும் பசுக்களின் கோமியத்தில் தங்கம் கலந்திருப்பதாக ஆய்வில் கண்டறிந்து உள்ளனர்.    பொதுவாகவே பசுக்களின் கோமியத்தில் மருத்துவ குணம் உள்ளது என்று, முன்னோர்கள் கூறிய வழியில் தற்கால மக்களும் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தில் உள்ள ஆராய்ச்சி மாணவர்கள் கிர் வனத்தில் வசிக்கும் பசுக்களின் கோமியத்தை அதாவது சிறுநீரை ஆய்வு செய்துள்ளனர்.    அந்த ஆய்வின் முடிவு மிகவும் வியப்புக்கு உரியதாக உள்ளது. அதாவது பசுவின் கோமியத்தில் 3 முதல் 10ம் மில்லிகிராம் வரை தங்கம் கலந்துள்ளது என்றும், இந்தத் தங்கத்தை ரசாயணத்தின் மூலம் பிரித்தும் எடுக்கலாம் என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஆனால், இதே வனத்தில் வசிக்கும் ஆடுகள்,மற்றும் எருமை மாடுகளின் சிறு நீரில் இத்தகைய தங்கம் இல்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 30-06-2016

இந்தியாவில் Whatsappக்கு தடையில்லை.

இந்தியாவில் வாட்ஸாப்க்கு தடைவிதிக்க முடியாது என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.    தீவிரவாதிகள், குற்றவாளிகள் சங்கேத மொழிகளில் விஷயங்களை பர்றிமாறிக்கொள்கிறார்கள் என்பதால், இந்தியாவில் வாட்ஸாப் போன்ற முக்கிய ஆப்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கலானது, ஹரியாணாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.    அப்போது, நீதிபதிகள் வாட்ஸாப்க்கு தடை விதிக்க முடியாது என்றும், மனுதாரர் மத்திய தகவல் தொழில் நுட்ப பரிமாற்றத்துறையை இதுக்குறித்து அணுகலாம் என்று ஆலோசனை கூறி மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 30-06-2016

ஆண் வயிற்றில் கற்பப்பை.

ஒசூரை சேர்ந்த ஒரு இளைஞருக்கு வயிற்றில் கர்ப்பப்பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   ஒசூரை சேர்ந்த ஒரு இளைஞருக்கு, ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குடல் இரக்க சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரின் வயிற்றில் கர்ப்பப்பை இருப்பது பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.    இதுபற்றி கருத்து தெரிவித்த மருத்துவர்கள், 5 கோடி ஆண்களில் ஒருவருக்கு கர்பப்பை வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.   இந்த சம்பவம், அந்த மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 24-06-2016

வாயை மூடும் ரஜினி.

அமெரிக்காவுக்கு போன ரஜினி, அங்கிருந்து ரிட்டர்ன் எப்போ? ‘கபாலி’ பட வியாபாரங்களெல்லாம் முடிந்த பின்புதான் என்கிறார்கள்.    ரஜினி லிங்கா ஆடியோ வெளியீட்டு விழா ஸ்டேஜில் பேசிய போது கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த படத்தையே வாங்கினோம். இப்போது தப்புக்கும் நஷ்டத்துக்கும் அவரே பொறுப்பு என்று ஒரு கோஷ்டி கிளம்பியது அல்லவா? அந்த அனுபவம்தான் இப்போது ரஜினியை செயல்பட வைத்திருக்கிறதாம். வாயை திறந்தால்தானே வம்பு? பேசாமல் வியாபாரம் முடிந்த பின்பு ஊர் திரும்பினால்... யார் என்ன கேட்க முடியும்? என்று நினைத்தாராம் சூப்பர் ஸ்டார். ‘கரண்ட் ஒன்று நினைத்தால், பியூஸ் கேரியர் வேறொன்றை நினைப்பது’தானே இப்போது பேஷன் ஆக இருக்கிறது. பின் விளைவுகள் எப்படியிருக்குமோ? போக போகதான் தெரியும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 23-06-2016

நிதி மோசடி குற்றச்சாட்டில் லைக்கா பணியாளர்கள் கைது.

பிரான்ஸ் நாட்டில் லைக்கா நிறுவனம் நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக கைது நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு லைக்கா நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “கடந்த இரு தினங்களாக லைகா மொபைல், லைகா தயாரிப்பு நிறுவனம் குறித்து தமிழ்நாட்டு ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகி வருகின்றன. அவை முற்றிலும் தவறான செய்தி. லைகா மொபைல் நிறுவனம் 21 நாடுகளில் தொலைதொடர்பு சேவை அளித்து வருகிறது. அதுவும் குறிப்பாக அதிக செலவு வைக்கும் தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவையைப் பெற முடியாதவர்களுக்காக நாங்கள் சேவை வழங்கி விருகிறோம். லைகா தயாரிப்பு நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது நாங்கள் பிரபல தமிழ் நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அக்‌ஷய்குமார், தனுஷ், ஜி.பி.பிரகாச்ஜ், விஜய் ஆண்டனி ஆகியோருடன் பணியாற்றுகிறோம். இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடனும் தொடர்பில் இருக்கிறோம். எங்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக சட்டபூர்வமாக இயங்கிவருகிறது. எங்கள் நிறுவனத்துக்கு எதிராக சட்டப்படி எந்த குற்றச்சாட்டும் இல்லை. பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என்று லைக்கா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 23-06-2016

KFC பெட்டியில் மொபைல் சார்ச்.

KFC நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உணவு பெட்டியில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட புதிமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   உலகளவில் புகழ் பெற்ற சிக்கன் உணவக நிறுவனமான KFC வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல்வேறு புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் புதுமையான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. "Watt a Box" என்ற பெயரில் கே.எப்.சி நிறுவனம் உணவு பெட்டியிலேயே மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.    இதற்கு முதல்கட்டமாக, மும்பை மற்றும் டெல்லியில் இந்த புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள. முக்கியமான நேரங்களில் ஸ்மார்ட் போன்கள் சார்ஜ் காலியாகும் நிலையில் சாப்பிடும் போதே மொபைலை சார்ஜ் செய்யும் வகையில் அந்த புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் KFC இன்னும் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 23-06-2016

மணிரத்தினத்தின் கதையா கபாலி?

கபாலி படத்தின் கதை மணிரத்னத்தின் இரு படங்களின் கலவைதான் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.   சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தாணு, கபாலி படத்தின் கதை ரவுடிகதைதான் என்றும், தளபதி, நாயகன் படங்களின் சுந்தர கலவைதான் கபாலி எனவும் கூறினார்.   தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் மும்பை சென்று வேலு நாயக்கராகி தமிழர்கள் நலனுக்கு பாடுபடுவது போல், சென்னை மயிலையைச் சேர்ந்த கபாலி மலேசியா சென்று அங்குள்ள தமிழர்களை தாதாக்களின் பிடியிலிருந்து விடுவிப்பதுதான் கபாலி கதையாம்.   ஜுலையில் படம் திரைக்கு வருகிறது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-06-2016

65.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு.

2015-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 2015-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இது 2014-ம் ஆண்டை விட 5.8 மில்லியன் அதிகமாகும். மக்களின் இடம்பெயர்வுக்கு வன்முறை, உள்நாட்டு போர் மற்றும் வறுமை முக்கிய காரணமாக உள்ளது. உலகின் மொத்த மக்கள் தொகை 7.349 பில்லியன் ஆகும். இதன்படி ஒவ்வொரு 113 பேரில் ஒருவர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளுக்கோ அகதியாக இடம்பெயர்கிறார். அதிகபட்சமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த 5 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் சிரியா (4.9 மில்லியன்), ஆப்கானிஸ்தான்(2.7 மில்லியன்), சோமாலியா(1.1 மில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலை குறித்து அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராந்தி கூறுகையில், “உலக நாடுகள் அகதிகள் பிரச்சனையில் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த மனித இனத்தின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் இன்று நம் முன் உள்ள மிகப் பெரிய சவால்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-06-2016

கனடாவில் இலங்கையர் மீது தாக்குதல்.

கனடாவில் இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை டொரன்டோ பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சீ.பி.சீ செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.   கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கனேடிய குடியுரிமையை பெற்ற குறித்த இலங்கையர் தமது இரவு நேர முறைமாற்றல் தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தம்மை, இலங்கையரா? என வினவியதுடன் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு அச்சுறுத்தியதாகவுதம் தாக்குதலுக்குள்ளான இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.   20 வயது மதிக்கதக்க சுரேஸ் ஒம்மி என்ற இந்த இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.   இந்தநிலையில், உலகின் பாதுகாப்பான நாடுகளில் கனடாவும் ஒன்று என நம்பியிருந்த தமக்கு இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான இலங்கை இளைஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-06-2016

அதிவேகமான கணணி.

உலகின் அதிவேகமான கணினி என்று சீனாவின் அதிசக்தி கணினி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா இந்த பெருமையை ஏழாவது முறையாக பெறுகிறது. ஆனால், சீனாவில் தயாரான கணினி இயக்கிகளை (processors) மட்டுமே பயன்படுத்தித் தயாராகி வெற்றி கண்ட முதல் அதிசக்தி கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது. வானிலை முன்னறிவிப்பு மற்றும் அணு ஆயுதங்கள் வடிமைப்பு போன்ற சிக்கலான வேலைகளை துரிதமாக செய்துமுடிக்க அதிசக்தி இயங்கு திறன் கொண்ட கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற கணினிகளை உருவாக்குவது சீன அரசாங்கத்திடம் மிகப்பெரிய நிதி உதவிகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 20-06-2016

'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதி யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான புகைப்பட ஆதாரங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள கார்டியன் சில புகைப்படங்களையும் வெளியடிட்டுள்ளது. அதாவது இராணுவப் படையினர் சிவிலியன்கள் மீது கொத்தணி குண்டுத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து நிலக்கண்ணி வெடிகளை மீட்கும் பணியாளர்கள் கொத்தணி குண்டுகளை மீட்டுள்ளனர். அரசாங்கத்தின் யுத்த சூன்ய வலயத்தில் இவ்வாறு கொத்தணி குண்டுகளின் பாகங்களை காணக் கிடைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய மீட்புப் பணியாளர் ஒருவர் கொத்தணி குண்டு குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் காணப்படும் கொத்தணி குண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆயுதம் குறித்த கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் அதற்கு முன்னர் ஆட்சி செய்த அசராங்கங்களும் நிராகரித்து வந்தன. கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுப் பகுதியில் நிலக்கண்ணி வெடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது ஆணையிறவு பாச்சிளாப்பள்ளி என்னும் இடத்தில் கொத்தணி குண்டுகளின் 42 பாகங்களை மீட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனத்தின் பணியாளர் தெரிவித்துள்ளார். https://www.theguardian.com/world/2016/jun/20/cluster-bombs-used-sri-lanka-civil-war-leaked-photos-suggest

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 20-06-2016

கனடாவை விட்டு வெளியேறுவோர் தரவுகள் சேகரிப்பு.

நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கடவுச்சீட்டு தரவுகளை சேகரிக்கும் முயற்சியை கனடா ஆரம்பிக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் றலவ் குட்டேல் அறிவித்துள்ளார். கடவுச் சீட்டின் இரண்டாம் பக்கத்தில் இடமபெறும் முழுப்பெயர், தேசிய இனம், வழங்கும் அதிகாரிகள் மற்றும் பயணிகளின் பால் போன்றன இவற்றில் அடங்கும்.   கனடாவிற்குள் நுழைபவர்களின் தரவுகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுவிட்டன.   சேகரிக்கப்படும் இத்தகவல்கள் அம்பர் எச்சரிக்கைக்கு-காணாமல் போகும் குழந்தைகளின் விடயத்தில் சிறந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மனித கடத்தல்களை சமாளிக்க உதவும் என அமைச்சர் குட்டேல் தெரிவித்தார்.   தீவிரவாதிகள் பயணிப்பதையும் தடுக்க உதவுவதோடு விசா விண்ணப்பங்கள மற்றும் குடிவரவு நடைமுறைகள் போன்றனவற்றை சமாளிக்க குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலுமிற்கும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இவை மட்டுமன்றி கனடிய சமூகத்திட்ட ஒருமைப்பாட்டை உறுதிசெய்யவும் உதவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவை விட்டு தரைமார்க்கமாக வெளியேறும் போது அமெரிக்க எல்லைப்புற அதிகாரிகள் குறிப்பிட்ட தரவுகளை சேகரித்து கனடிய அதிகாரிகளிற்கு அனுப்பிவைப்பர். விமான மூலம் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் தரவுகளை எயர்லைன்ஸ் கனடிய எல்லைகள் சேவை அதிகாரிகளிற்கு தெரிவிப்பார்கள். சகல விபரங்களும் 15 வருடங்களிற்கு வைத்திருக்கப்படும்.   சர்வதேச பாதுகாப்பை அதிகரிக்கும் இத்திட்டம் மில்லியன்கணக்கான மக்கள் வரிப்பணத்தை ஏமாற்றுவதை தடுக்கவும்,  மில்லின் கணக்கான டொலர்கள் அரச வேலைவாய்ப்பு நன்மை கொடுப்பனவுகளை நாட்டிற்கு வெளியே இருந்து கொண்டு சட்ட விரோதமாக பெறுவதனைதடுக்கவும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.   இத்திட்டம் முழுமையாக செயல் படுத்தப்படும் பட்சத்தில்  மூலம் கனடிய றெவனியு ஏஜன்சி மற்றும் வேலைவாய்ப்பு சமூக அபிவிருத்தி கனடா, டொலர்கள் 194மில்லியன்கள் தொடக்கம் 319மில்லியன் டொலர்கள் வரை சேமிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 20-06-2016

திருமணத்துக்காக இலங்கை சென்ற இளையர் கைது.

திருமணம் செய்து கொள்வதற்காக பிரிட்டனில் இருந்து இலங்கை திரும்பிய தமிழரை அந்நாட்டு போலீஸார் பொய் வழக்கு சுமத்தி கைது செய்து, சிறையில் அடைத்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் ஏலிங்கில் வசித்து வருபவர் வேலாயுதம்பிள்ளை ரேணுகருபன் (36). இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள சொந்த ஊரில் கடந்த 8-ம் தேதி இவருக்கும், தஜீபா விநாயகமூர்த்தி என்பவ ருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. இதையொட்டி 16 ஆண்டுகளுக்கு பின், பிரிட்ட னில் இருந்து தனது பிறந்த நாளான கடந்த 1-ம் தேதி வேலாயுதம்பிள்ளை யாழ்ப் பாணம் வந்து சேர்ந்தார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த வேலாயுதம் பிள்ளையை போலீஸார் அடித்து துன்புறுத்தி கைது செய்தனர். மேலும் சிறையிலும் அவரை பல்வேறு வகையில் சித்ரவதை செய் துள்ளனர். கடந்த சில தினங்களாக அவரது நிலை என்னவானது என தெரி யவராத காரணத்தினால், குடும் பத்தினர் மனித உரிமை ஆணை யத்திடம் முறையிட்டுள்ளனர். அதன் பிறகே மற்றொருவரை தாக்கியதாக வேலாயுதம் பிள்ளை மீது பொய் வழக்கு சுமத்தி சிறை யில் அடைத்த தகவல் வெளி யாகியுள்ளது. 

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 14-06-2016

ராணுவத்தை வெளியேற்றுமாறு கருணாநிதி வலியுறுத்தல்.

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்துவதாக தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வடக்கு மாகாண முதமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், முதல்வரின் இந்தக் கோரிக்கையை அங்கேயுள்ள இராணுவம் முற்றிலுமாக நிராகரித்து, தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெற முடியாது என்று கூறியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் முக்கிய இராணுவ முகாமான சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு தீப்பிடித்து பெரிய சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதுபற்றி இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, புத்தமதத் தலைமைப் பீடத்துக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்கிரி மாநாயக்கதேரரிடம் ஆலோசனைகள் பெற்றேன். அப்போது அவர் இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது என்று கூறினார். ஆகையால் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளமை தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போன்ற தீராத வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ஈழத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக, அவர்களிடம் வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, இராணுவம் அங்கே தொடர்ந்து இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை புத்த மதத் தலைவரைக் கலந்து கொண்டா ஒரு அமைச்சர் அறிவிப்பது? அது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நியாயமான செயலாகுமா? இலங்கை அரசு, ஈழத் தமிழர்களிடம் பாகுபாடு காட்டாமல் உள்ளது என்பதை நிரூபிக்க முதற்கட்டமாக தமிழர் பகுதிகளிலே இருந்து உடனடியாக இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு நம்பத்தக்க வகையில் நேர்மையோடு எடுக்க வேண்டும். தேர்தலின் போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. அதைக்காப்பாற்ற அவர்கள் வாய்மை உணர்வோடு முன்வருவதே ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் செயல். இதுவே உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் விருப்பம் வேண்டுகோள். இலங்கை அரசு அதை நிறைவேற்றுமா? இந்திய அரசு அதற்கு முன் நிற்குமா?” என்றுள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 14-06-2016