காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

20 ஆனந்தன்:
புத்தகங்கள் காணா சத்தகங்களின் வித்தகங்கள் - பம்பல்Kமனோ.
51 பவுல் :
1வது உலகப்போரின் 100வது ஆண்டு நினைவு.
29 லொல்லுபாண்டி:
கொடிய பாவத்துக்கு சமம்.
3 மனோகரன் :
காகிதம் உருவான விதம் - லொள்ளுபாண்டி.
1 சி.சத்தியமூர்த்தி, லண்டன். :
31ம் நாள் நினைவஞ்சலி: இரத்தினசிங்கம் சிவகுருநாதன் - டென்மார்க்.
1 றாஜபாண்டி :
facebook ஆண்டிகள் அதிகரிப்பு.
2 manoharan:
இலந்தையை வெறுக்கும் பறவைகள்.
2 ராஜாஹ் :
விழிப்புணர்வுக்காக ஐசில் குளிக்கும் பிரபல்யங்கள் - ஊரவன் ஒருவன்.
2 மனோகரன் :
நாக்கைச்சார்ந்தது.
2 மனோகரன் :
ஆண்மைப்பரிசோதனைக்குத்தயங்கும் நித்தியானந்தா.
1 அற்புதன் :
வெறுக்க நினைப்பவர்களுக்கு..
2 அற்புதன் :
மரத்தில் பழுக்கும் பாவங்கள்.
2 அற்புதன் :
கும்பாபிஷேகம் மறுமலர்ச்சி மன்றக்கந்தன் - பாலசுப்ரமணியம்.
4 மனோகரன் :
காதலின் அளவை அதிகரிக்கும் குறிப்புகள்.
99 பவுல் :
தகவல் பண்கொம்.நெற்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

செய்திகள்

பக்கம் தேர்ந்தெடுக்கவும்:

செடம்பர் 8 இல் சீமானுக்கும் கயல்விழிக்கும் திருமணம்.

இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.   முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார்.   செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வை.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது.   உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.   இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார்.   மணப்பெண் கயல்விழி பற்றியும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதம் பற்றியும் சீமான் கூறியுள்ளதாவது: சிறு வயது முதலே கயலுக்கும் ஈழக் காதல். இதனால் அவரது மகள் கயல்விழிக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் ஈழ உணர்வு ஏற்பட்டுள்ளது. ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து அவர் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.   நாம் தமிழர் கட்சியை நான் தொடங்கிய பின்னர் பல்வேறு ஈழ போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். இந்த போராட்டங்கள் அவரை கவர்ந்துள்ளது.   பிரபாகரனின் மகன் தம்பி பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அம்பலமான சமயத்தில் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்போது கயல்விழி என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்.   தமிழ் ஈழம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் ஈழ மக்கள் படும் துயரங்களை வருத்தத்துடன் பேசி என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஈழப் போராட்டம் தொடர்பாக அவர் வைத்திருந்த உறுதி எனக்கு பிடித்து இருந்தது.   அதே நேரத்தில் நீண்ட நாட்களாக மறைந்த டைரக்டர் மணிவண்ணன் ஐயா பழநெடுமாறன் மற்றும் எனது நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னை வற்புறுத்தி வந்தனர்.   ஈழப்போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால் திருமணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்த என்னை தலைவர்கள் வற்புறுத்தல் திருமணத்தைப் பற்றி யோசிக்க வைத்தது.   இந்த நேரத்தில் ஒரு மித்த கருத்து கொண்ட கயல்விழியும் நானும் சந்தித்து கொண்டோம். இதையடுத்து எனது பெற்றோர் மூலம் முறைப்படி கயல்விழியின் தாயை சந்தித்து பெண் கேட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம்.   ஈழ உணர்வுதான் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது என்றார் சீமான்

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 06-08-2013

சிகப்பு விளக்கிலிருந்து அமெரிக்க மேற்படிப்பு வரை.

மும்பையில் பாலியல் தொழிலாளிகள் வசித்து வரும் காமாத்திபுரா சிவப்பு விளக்குப் பகுதியில் பிறந்து வளர்ந்து படிப்பில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தியதன் மூலம் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக செல்லக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கும் ஸ்வேதா கட்டி (18) எனும் இளம்பெண் ஊடகங்களில் பிரபலமாகியுள்ளார்.     தாழ்ந்த சாதி, வறுமை நிலை காரணமாக தான் படித்த பள்ளியில் கூட பாரபட்சமாக நடத்தப்பட்டபோதும், தனது படிப்பிலிருந்து கவனத்தை தவறவிடவில்லை ஸ்வேதா. இதனால், அந்தப் பகுதியில் பெண்களின் சமூக மாற்றத்திற்காக செயற்பட்டு வரும் தொண்டு நிறுவனமான கிரந்தி, அவருக்கு கல்வியில் உதவ முன்வந்தது.     அக்கல்வி நிறுவனத்தின் உதவியில் தனது ஆங்கில மொழித் திறமையையும், தனது விருப்ப பாடமான மனோதத்துவ துறைக்கான அறிவையும் விருத்தி செய்து கொண்ட ஸ்வேதா, அமெரிக்காவில் மேற்படிப்புக்கான வாய்ப்பை பெற்றார், அமெரிக்கவின் ஃபார்ட் கல்லூரி அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியது. கடந்த வியாழக்கிழமை அவர் அமெரிக்காவுக்கு புறப்ப்ட்டுச் சென்றார். தான் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்த பெண்கள் சிறுமைப்பட்டுக்கொண்டுமப்பதையும், கேவலமாக நடத்தப்படுவதையும் சிறுவயதிலிருந்தே அவதானித்து வந்த ஸ்வேதா, அது போன்ற நிலைமை தனக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். எனினும் இவரது தந்தை உட்பட பல்வேறு நபர்களால் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். எனினும் மும்பையில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இவரது தாயார் மாத்திரமே தொடர்ந்து ஸ்வேதாவின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இவர் கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு விமானம் ஏறுவதற்கு முன்னர், கருத்து தெரிவிக்கையில், 'படிப்பு முடித்து இந்தியா திரும்பிய பின், சமூகத்தில் குறிப்பாக சிவப்பு விளக்குப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண்களுக்கு உதவுவதே தனது நோக்கம் என தெரிவித்துள்ளர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 06-08-2013

எயிட்ஸை கட்டுப்படுத்தும் சோயா விதை.

உயிர் கொல்லியான எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் அரியவகை குணம் சோயா பீன்ஸில் உள்ளதாக, மருத்துவ நிபுணர்கள் கண்டு பிடித்து உள்ளனர். மனிதர்களை தாக்கும், உயிர்கொல்லியான எய்ட்ஸ் நோயைக்கட்டுப் படுத்த பலவிதமான மருந்துகள் கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை கட்டுபடுத்தும் தன்மை நிறைந்ததாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பலகலையின் விஞ்ஞானிகள் சோயா பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் சோயா பீன்ஸில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைத் தடுக்கும் ஜெனிஸ்டின் என்கிற  மூலப் பொருட்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெனிஸ்டின் செல்களில், எச் ஐ வி கிருமிகளை தடுக்கும் ஜெனிட்டின் செல்களில் எச் ஐ வி கிருமிகள்  ஊடுருவி பரவாமல் தடுக்கும் சக்தி படைத்தது. இதன் மூலம் சோயா பீன்ஸ், எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 05-08-2013

இடைத்தேர்தலில் கொங்க்ரஸ் வேட்பாளராக நடிகை திவ்யா.

கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதிக்கு நடக்கயிருக்கும் எம்.பி. சீட்டுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நடிகை திவ்யா ஸ்பந்தனா அறிவிக்கப்பட்டுள்ளார்.   திவ்யா ஸ்பந்தனா முன்னாள் கர்நாடகா முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி. திவ்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கான காரணத்தை இதற்கு மேல் விளக்க வேண்டியதில்லை.  குத்து படத்தில் ரம்யா என்ற பெய‌‌ரில் அறிமுகமான திவ்யாவை அனைவரும் குத்து ரம்யா என்றே அழைத்தனர். சமீபமாகதான் குத்து பிடிக்காமல் திவ்யா ஸ்பந்தனா என்ற தனது சொந்தப் பெயருக்கு மாறினார். கர்நாடக காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டவருக்கு உடனடியாக பொறுப்புகள் வழங்கப்பட்டன. தற்போது எம்.பி. வேட்பாளராக காங்கிரஸால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.   மாண்டியா தொகுதி மக்களை காங்கிரஸ் இதைவிட மோசமாக அவமதிக்க முடியாது. தேர்தல் முடிந்தால்தான் மாண்டியா மக்கள் மக்கா இல்லை மானஸ்தர்களா என்பது தெ‌ரியும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 05-08-2013

வங்கிக்கொள்ளைக்காரனைக்காட்டிக்கொடுத்தால் 10,000 கனடிய வெள்ளிகள் சன்மானம்.

ரொறான்ரோ பொலீஸார் கூரே றிச்சார்ட்சன் எனும் 44 வயதுடைய வங்கிக்கொள்ளைக்காரனை விசாரணைக்காக தேடி வருகின்றார்கள். இந்த தொடர் வங்கிக் கொள்ளையனை பிடிக்க யாராவது உதவி செய்தால் அவர்களுக்கு 10,000 கனேடிய டொலர்களை சன்மானமாக தருவதாக கனடா வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன் 24ம் திகதிக்கு பின்னர் நடைபெற்ற ஏறத்தாள 11 வங்கிக் கொள்ளைச் சம்பவங்களிற்கு இக்கொள்ளைக்காரன் காரணம் என பொலீசார் சந்தேகிக்கின்றனர். இவற்றில் 9 ரொறான்ரோவிலும், 2 வின்னிபெக் நகரிலும் நடைபெற்றுள்ளன. இறுதிக் கொள்ளைச் சம்பவம் கடந்த திங்களன்று இடம்பெற்றது. ஏறத்தாள ஐந்தரை அடி உயரமும், கருமை நிறமும் கொண்ட இக்கொள்ளையனை கண்டால் உடனடியாக பொலீஸாருக்கு தெரிவியுங்கள்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 05-08-2013

சீனிக்கு மாற்றுப்பொருள் கண்டுபிடிப்பு.

உலகில் சர்க்கரை வியாதியால் அல்லல் படும் மக்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், உணவில் சேர்க்கப்படும் சர்க்கரைக்கு பதிலாக, புதிய மாற்றுப் பொருளை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் பிரதான பிரச்னையாக விளங்குவது, நீரிழிவு நோய். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், கிட்னியின் செயல்பாடு மெல்ல மெல்ல குறைந்து, பின் செயலிழக்கும் நிலையை அடைகிறது. இதனால், உணவில் அரிசியை குறைத்தும், காபி, டீ போன்றவற்றில், சர்க்கரையின் அளவை குறைத்தும், தன் இயல்பான உணவு முறைகளை மாற்றிக் கொண்டு, மக்கள் அவதியுறுகின்றனர்.   இதுகுறித்து, பல ஆண்டு ஆய்விற்குப் பின், தென் அமெரிக்க ஆய்வாளர்கள் சர்க்கரைக்கு மாற்றுப் பொருளை கண்டறிந்துள்ளனர். இந்த மாற்றுப் பொருளை பயன்படுத்துவதின் மூலம், சாதாரண சர்க்கரையில் பெறுவதைவிட, 300 மடங்கு அதிக இனிப்பு சுவையை பெற முடியும். மேலும் இதில், கலோரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தலாம்.   “ஸ்டெவியா’ எனும் தாவரத்திலிருந்து தாயாரிக்கப்படும், பொடியிலிருந்து, அதிகப்படியான இனிப்பு சுவை பெறப்படுவதை, தென் அமெரிக்க ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். இந்த பொடியை பல ஆண்டுகளாக, தென் அமெரிக்க மக்கள் தங்கள் உணவுப் பொருட்களில் இனிப்பு சுவையைப் பெற பயன்படுத்தி வந்தாலும், ஆய்வாளர்களின் நிரூபணத்திற்குப் பின்னரே பல நாடுகளை சேர்ந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும், சர்க்கரைக்கு பதிலாக, ஸ்டெவியாவை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.   இதன் மூலம், உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருப்பதால், இதைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக, அமெரிக்க உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.   மேலும், கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையிலிருந்து கிடைக்கும் இனிப்பு சுவையை விட, 300 மடங்கு சுவை அதிகம் கிடைப்பதால், செலவும் குறையும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவை சேர்ந்த, குளிர்பான தயாரிப்பு நிறுவனமான, கோககோலா நிறுவனம் தன் தயாரிப்புகளில், இனிப்பு சுவைக்காக, ஸ்டெவியாவை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்படி, அந்நிறுவன தயாரிப்பான, ஸ்ப்ரைட் குளிர்பானத்தில், ஸ்டெவியாவை உபயோகிக்கும் பணியில், கோககோலா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கலோரிகள் அதிகம் இல்லாததாலும், சர்க்கரையின் அளவை குறைக்க முடிவதாலும், உலக மக்களிடையே, ஸ்டெவியாவின் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக, அமெரிக்க ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 04-08-2013

தீக்காயங்களுடன் 2 மாதக்குழந்தை.

தமிழகத்தில் 2 மாத பச்சிளம் குழந்தையொன்று அடிக்கடி தீப்பிடித்து எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளான கர்ணன்(26), ராஜேஸ்வரி(23) இவர்களுக்கு ராகுல் என்ற இரண்டு மாத கைக் குழந்தை உள்ளது.   ராஜேஸ்வரி தன் தாய் வீடான மோழியனூரில் தங்கியிருந்த போது, இரண்டு மாத ஆண் குழந்தை திடீரென தீப்பிடித்து எரிந்தது.தீக்காயத்திற்கு சிகிச்சை அளித்த பின்பும் அதைத் தொடர்ந்து இரண்டு முறை தீப்பிடித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.   இதனையடுத்து புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், குழந்தையுடன் ராஜேஸ்வரி தங்கியிருந்த போதும் இரண்டு முறை தீப்பிடித்துள்ளது.   இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் அருகே உள்ள கர்ணனின் சொந்த ஊரான டி.பரங்கணியில் தங்கியிருந்த போதும், மர்மமான முறையில் மீண்டும் குழந்தை தீ பற்றி எரிந்தது, வீடும் எரிந்துள்ளது.   இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி தற்கொலைக்கு முயன்றுள்ளார், பின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் குழந்தை ராகுலை சிகிச்சைக்காக உப்பு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.   குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், இரண்டு மாத குழந்தைக்கு உடலில் பல்வேறு தீக்காயங்கள் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   குழந்தைக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொல்லைகள் இல்லை. தீக்காயங்களும் சில நாட்களில் சரியாகி விடுகின்றன. இது புரியாத புதிராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.   இந்நிலையில் தந்தை கர்ணன், குழந்தை பிறந்ததில் இருந்தே ஏதாவது ஒரு விபரீதம் நடந்து கொண்டு தான் உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம், குழந்தையை நாங்கள் வளர்ப்பதா அல்லது அரசிடம் ஒப்படைப்பதா என குழப்பமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 04-08-2013

வீட்டில் புகைப்பிடித்தவரை வீட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மனிய நீதிமன்றம்.

ஜேர்மனியில் வீட்டுக்குள் இருந்து புகை பிடிக்கும் போது, அந்த புகை மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் பட்சத்தில் குறித்த நபரை வீட்டை விட்டு வெளியேற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   ஜேர்மனியின் நகரான டசல்டார்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ப்ரிட் ஹெல்ம் அடோல்ப்(வயது 75) என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.   இவர் வீட்டுக்குள் இருந்து புகைபிடிக்கும் போது, அந்த புகை மற்ற வீடுகளுக்கும் பரவுவதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. இதனையடுத்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. அதாவது, வீட்டில் புகை பிடிக்கும் போது, அந்தப் புகை வீட்டை விட்டு வெளியேறி அடுக்குமாடிக் குடியிருப்பின் பொது இடங்களுக்குப் பரவினால், புகை பிடித்தவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு, தனது வீட்டை முற்றிலுமாக சீல் வைத்தால் தவிர புகை வெளியே வருவதைத் தன்னால் கட்டுப்படுத்த முடியாது என அடோல்ப் தெரிவித்துள்ளார்.   மேலும் நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புகை பிடிப்பவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 04-08-2013

உடற்பயிற்சியின்மையால் நீரிழிவு ஏற்படும் அபாயம்.

துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால், உடலின் மற்ற உறுப்புக்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். அகாடா நீரழிவு மையம் சார்பில், நீரழிவு நோய் மற்றும் அதன் விளைவுகளைத் தடுத்தல் குறித்த மருத்துவ கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கிவைத்த மருத்துவக் கல்லூரி மருந்தியல் துறையின் முன்னால் தலைவர் திருவேங்கடம் பேசுகையில், "அந்த காலத்தில் சிபிலிசி என்கிற பால்வினை நோய் பற்றித்தான் பேச்சு இருந்தது. தர்போது நீரழிவு நோயைப் பற்றி பேசும் அளவுக்கு, அதன் பாதிப்பு அதிகமாக் உள்ளது.   முறையான சிகிச்சைகளால் கட்டுப்படுத்தாவிட்டால், மற்ற உறுப்புக்களையும் அந்த நோய் பாதிக்கும். துரித உணவுகளும், சரியான உடற்பயிற்சி இல்லாததாலும் இந்த நீரழிவு பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். அதன் பாதிப்பால், மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, பார்வை குறைபாடு, கால்களை அகற்றும் அளவுக்கு பிரச்சனை வருகிறது. நோயின் அளவை முதலிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்துவதால் இவற்றைத் தடுக்கலாம். நீரழிவு நோயை கட்டுப்படுத்த மரபணு முறையில் தயாரிக்கப்பட்ட  இன்சுலினை பயன்படுத்துகிறோம். தற்போது 24 மணி நேரத்துக்கு ஒரு முறை போடப்படும் இன்சுலின் கிடைக்கிறது. விரைவில் டெகுலுடெக் என்கிற 42 மணி நேரத்துக்கு போடப்படும் இன்சுலின் வரவுள்ளது." என்றும் மகிழ்வான தகவலைக் கூறியுள்ளார்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-08-2013

மலையாளப்படத்தில் சிம்ரான் கதாநாயகி.

மலையாள சினிமா திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆனவர்களை அவ்வப்போது ஹீரோயினாக்கி சந்தோஷப்பட்டுக் கொள்ளும். இந்தமுறை அது குஷிப்படுத்தியிருப்பது சிம்ரனை. தேவயானி திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு மோகன்லால் ஜோடியாக பாலேட்டன் படத்தில் நடித்தார். அதேபோல் மீனாவுக்கும் ஒரு ஹீரோயின் ரோல் மலையாளத்தில் கிடைத்திருக்கிறது. சிம்ரனை மட்டும் விட்டு வைப்பானேன். ஜீத்து ஜோசப்பின் புதிய படத்தில் மோகன்லால் ஜோயாக சிம்ரனை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் மலையாள சினிமாவின் நவீன இயக்குனர்களில் ஜீத்து ஜோசப்பும் ஒருவர். இவரின் மெமரிஸ் ஆகஸ்ட் 9 ரம்ஜானுக்கு வெளியாகிறது. போலீஸ் அதிகாரி ஒருவர் ஆல்கஹாலுக்கு அடிமையாவதுதான் படத்தின் கதை. பிருத்விராஜ; ஹீரோ. மும்பை போலீஸில் போலீஸாக நடித்த சூட்டோடு இதிலும் போலீஸாக நடித்திருக்கிறார். ரம்ஜானுக்கு வெளியாகும் நான்கு படங்களில் மெமரிஸுக்குதான் அதிக எதிர்பார்ப்பு என்கிறது சேட்டன்களின் சினிமா.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 03-08-2013

அமெரிக்க மாநகர மேயராக போட்டியிடும் சென்னை பிறப்புவாசி.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் உள்ள லாங் பீச் நகர மேயர் பதவிக்கு சென்னையில் பிறந்த சுஜா லொவெந்தால் போட்டியிடுகிறார். லாங் பீச் மாநகராட்சி உறுப்பினராக தொடர்ந்து இரண்டாம் முறையாக பதவி வகிக்கும் சுஜா லொவெந்தால், பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். 2001-ம் ஆண்டு லாங்பீச் கல்வி துறையின் முக்கிய பொறுப்பை இவர் வகித்தபோது அமெரிக்காவின் சிறந்த பள்ளியாக அவரது கண்காணிப்பில் இருந்த பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.   லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான லாங் பீச்சின் மேயராக போட்டியிடுவது குறித்து கருத்து கூறிய சுஜா லொவெந்தால், ‘கல்விதுறை மற்றும் நகர கவுன்சிலின் உறுப்பினராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து நகரின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவேன்’ என்றார்

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 03-08-2013

தேசிய நாளை குதூகலமாக கொண்டாடிய சுவிட்சர்லாந்து.

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக்கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து விளங்குகிறது. பல மொழிகள் பேசப்படும் நாடான இதில் ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் உரோமாஞ்சு (Romansh) ஆகிய நான்கு தேசிய மொழிகள் உள்ளது. இத்தொன்மைமிக்க சுவிட்சர்லாந்து ஓகஸ்டு 1, 1291 இல் நிறுவப்பட்டது. அன்று முதல் சுவிட்சர்லாந்தில் ஓகஸ்ட் 1ம் திகதி தேசிய தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடமும் ஒவ்வொரு மூலைகளிலும், மலைகளிலும் சுவிட்சர்லாந்து மக்கள் தேசிய நாள் விழாவை நேற்று கொண்டாடினர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 02-08-2013

50 லட்சத்தை இழந்த வினுச்சக்கரவர்த்தி.

பெயரில் சக்ரவர்த்தியை வைத்திருக்கும் சீனியர் குணச்சித்திர நடிகர், அடிப்படையில் ஒரு கதாசிரியர். தனக்குள் ஒரு இயக்குனர் ஒளிந்து கொண்டிருப்பதான நம்பிக்கையில, தான் நடிக்கும் படங்களில் மூக்கையும், அறிமுக இயக்குனர் என்றால் முழு தலையையும் நுழைப்பவர்.    உடம்பு சரியில்லாமல் வெளிநாட்டில் சிகிச்சை எடுத்து சென்னை திரும்பியவர், படம் இயக்கும் ஆசையில் ராசா இசையமைப்பாளரிடம் ஐம்பது லட்சங்கள் தந்திருக்கிறார். சேமிப்பில் இருக்கும் மிச்ச பணத்தை வைத்து படம் எடுக்க முடியாது என்பதால், பெரிய படநிறுவனங்களை உதவும்படி கேட்டிருக்கிறார்.   ட்ரெண்ட் தெரியாமல் இவர்வேற இம்சை பண்றாரே என புலம்புகிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். இருக்கிற நிலைமையைப் பார்த்தால் அவருக்கு யாரும் உதவ முன் வருவார்கள் என தெரியவில்லை. அப்படியானால் ராசாவுக்கு தந்த பணம்...? அதுதான் பெரிய கேள்விக்குறி.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 02-08-2013

99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க பிரஜாவுரிமை.

அமெரிக்காவில் வசிக்கும் 99 வயது ஈரானிய பெண்ணுக்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.   ஈரானில் பிறந்தவரான காதூன் கோயகானி, தன் வாழ்நாளில் பல புரட்சிகளையும், போர்களையும் கண்டவர். 30 ஆண்டுகளுக்கு முன், ஈரானை விட்டு வெளியேறி, பல நாடுகளில் வசித்துள்ளார்.   இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் கடந்த 1998ம் ஆண்டு காதூன், தன் மூன்று குழந்தைகளுடன் குடியேறினார்.   இந்நிலையில் கடந்த வாரம் 99 வயதான காதூன் உட்பட, 3,700 பேருக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் பாரசீக மொழியில் கூறுகையில், எனக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த குடியுரிமை கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 02-08-2013

ஹொலிவூட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஏஞ்சலீனா ஜோலி.

ஹொலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை வெளியிட்டது. அதில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய வருமானம் 33 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.185 கோடி) ஆகும். 38 வயதாகும் இவர் சமீபத்தில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘மேல்பிசியன்ட்’ சினிமாப்படம் அடுத்த கோடைகாலம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து 2-வது இடத்தில் 26 மில்லியன் டாலர் (ரூ.150 கோடி) வருமானத்துடன் ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்சும், 3-வது இடத்தை 22 மில்லியன் டாலர் (ரூ.125 கோடி) வருமானத்துடன் நடிகை கிறிஸ்டின் ஸ்டுவார்டும் பெற்று இருக்கிறார்கள்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 01-08-2013

கடந்த நூற்றாண்டுக்குள் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கனடாவில் கண்டுபிடிப்பு.

கனடாவில் புதிதாக நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   வட கனடாவின் Again நதியிலிருந்தே இந்த புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 மீற்றர் நீளம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சியை, Adam Shoalts என்பவர் சுற்றுலா பயணத்தின் போது கண்டுபிடித்துள்ளார்.   இன்னும் பெயரிடப்படதாக இந்த நீர்வீழ்ச்சியை, சுற்றுலா தளமாக மாற்றுவது குறித்து கனடிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதான் கடந்த 100 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 01-08-2013

மீள்வருகையில் நக்மா.

நடிகை நக்மா சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். இவர் 1990–களில் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.   தமிழில் இவர் நடித்த காதலன், பாட்ஷா, சிட்டிசன் படங்கள் பெரிய ஹிட் படங்களாக அமைந்தன. போஜ்புரி மொழி படங்களிலும் நடித்தார். பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் சேர்ந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். தெலுங்கு படமொன்றில் அம்மா கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தை ரோஜா டைரக்டு செய்கிறார். இப்படத்துக்கு பின் மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் குவியும் என்று நம்புகிறார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 01-08-2013

சுவிசில் அதிரடி வீழ்ச்சியில் மதுபான விற்பனை.

சுவிசில் மது உற்பத்தியானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.   கடந்த ஆண்டு சுவிஸ் நாட்டில் 8.4 பில்லியன் லிட்டர் தரமான மதுவானது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த உற்பத்தியானது 1950ம் ஆண்டுகளில் இருந்ததை விட குறைவானதாகும். தற்போது சுவிஸில் 2,50,000 மக்கள் மதுவுக்கு அடிமையாக உள்ளார்கள் என இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 2012ம் ஆண்டின் புள்ளி விபர அறிக்கையில் சராசரியாக ஒரு நபருக்கு 36 லிட்டர் மது மற்றும் 56.5 பீர் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு வெள்ளை மற்றும் சிவப்பு மதுவின் குறைவான இறக்குமதியே காரணம். கடந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி சரிவில் இருந்துள்ளது என்றும் சில மக்கள் குழுக்கள் மத்தியில் நுகர்வோருக்கான சிக்கல் உள்ளது எனவும் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.   இந்த புள்ளி விபரமானது மக்கள் தொகையில் ஏறக்குறைய 20 சதவீதம் பேர் வழக்கமாக மது அருந்துபவர்கள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் ஒவ்வொரு மாதமும் நான்கு மது பானங்களை அருந்துவதாகவும் மற்றும் ஆண்கள் குறைந்தது ஐந்து பானங்கள் அருந்துவதாகவும் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 31-07-2013

அதிக தியேட்டர்களில் தலைவா.

விஜய்யின் தலைவா படத்துக்கு அதிகபட்சமாக தியேட்டர்களை ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதால் சிறிய பட்ஜெட் படங்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை. விஜய் நடித்துள்ள தலைவா வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்தப் படத்துக்கு நகரங்களில் அதிகபட்ச மல்டிப்ளெக்ஸ் ஸ்க்ரீன்களும், கிராமம் சார்ந்த நகரங்களில் இருப்பதிலேயே நல்ல தியேட்டர்களையும் ஒதுக்கியுள்ளனர். அதிகபட்ச அரங்குகளை ஒதுக்கு முதல் வாரத்திலேயே வசூல் பார்க்க இந்த யுத்தி (படம் குறித்து எதிர்மறை பேச்சு நிலவுவதால்!). தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.... சின்னப் படங்கள் இன்னும் 2 வாரம் காத்திருக்க வேண்டும்! தலைவா அதற்கு அடுத்த வாரமே ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் வருகிறது. பொதுவாக இந்த நாளில் பண்டிகைக்கு வெளியாவது போல நான்கைந்து படங்கள் வருவது வழக்கம். இந்த முறையும் 6 படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. ஆனால் தலைவாவுக்கே அதிக தியேட்டர்கள், அதுவும் இரண்டு வாரங்களுக்கு தரப்பட்டுள்ளதால், மற்ற படங்களுக்கு போதிய அரங்குகள் இல்லை. எனவே தேசிங்கு ராஜா மற்றும் ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்கள் மட்டும் இருக்கும் தலைவாவுக்கு ஒதுக்கியது போல மிச்சமிருக்கும் தியேட்டர்களில் வெளியாகின்றன. தங்க மீன்கள், ரகளபுரம் போன்றவை இந்த முறையும் தியேட்டர்களின்றி காத்திருக்கின்றன.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 31-07-2013

ஜேர்மனிய அலுவலகங்களில் பாலியலுறவுகள் அதிகரிப்பு.

ஜேர்மன் அலுவலகங்களில் இளம் பணியாளர்கள் மத்தியில் செக்ஸ் எண்ணமானது மேலோங்கி இருப்பதாக புள்ளிவிபரம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.   ஜேர்மன் அலுவலகங்களில் செக்ஸ் உறவானது குறைவாக இருந்த காலத்தை விட தற்போது பத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இந்த உறவானது மேலோங்கி உள்ளது. அலுவலகங்களில் 18 முதல் 29 வயதுடைய தலைமுறையினர் மத்தியில் செக்ஸ் உறவு என்பது மிகவும் பிரபலமான ஒன்றாகும்.   இது குறித்து போல்ஷ்டர் போர்ஷா( pollsters Forsa ) என்னும் புள்ளிவிப அறிக்கையில், ஜந்தில் ஒரு சதவீதம் பேர் அலுவலகங்களில் நண்பர் என்ற பெயரில் களியாட்டம் போடுகின்றனர் என்றும் மேலும் 30 சதவீதம் பேர் அவர்கள் இந்த மாதிரியான உறவுகளில் ஈடுபடுவது தவறு எனவும் தெரிவித்துள்ளனர். 39 சதவீதம் பேர் கோடை விடுமுறைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் மூலம் தங்களது பந்தங்களை இணைத்துக்கொள்கின்றனர். சிலர் அலுவலகங்களில் கிடைக்கும் இடைவேளை நேரம் மற்றும் வேலை நேரம் முடிந்த பின்பு தங்களது செக்ஸ் உறவுகளை தொடர்கின்றனர்.   இது குறித்து அலுவலகமானது பரீசீலனை செய்ய வேண்டும். அலுவலகங்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடன் பணிபுரிவர்களை ஒரு சகோதரியாக நினைத்து பழகுகின்றனர் என கூறியுள்ளனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 31-07-2013

ஞாபக சக்தியை பாதிக்கும் சுவிங்கம்.

  சிலருக்கு எந்நேரமும் `சூயிங்கம்’மை சவைத்துக் கொண்டிருப்பது ஒரு வழக்கம். ஆனால் இப்பழக்கம், ஞாபகசக்தியைப் பாதிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.   இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட கார்டிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சூயிங்கம் பழக்கம் இல்லாதவர்களைவிட, சூயிங்கம் பழக்கம் உள்ளவர்கள் எழுத்துகளையும், எண்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பதில் அதிகக் கஷ்டப்படுகின்றனர் என்கிறார்கள்.   சூயிங்கம்மை மெல்லும்போது ஏற்படும் அசைவு, தொடர்ச்சியான விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் மூளையின் திறனைப் பாதித்திருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.   கை, கால் விரல்களை நொடிப்பது போன்று சூயிங்கம் மெல்லும் தொடர்ச்சியான செயல், நம்முடைய குறுகிய கால ஞாபகத்திறனில் குறுக்கிட்டு அதைப் பாதிக்கிறதாம்.   சூயிங்கம், குறிப்பாக குறிப்பிட்ட சுவை சேர்ந்த சூயிங்கம் ஒருவரின் திறனைக் கூட்டும், மூளைத் திறனை ஊக்குவிக்கும் என்று முன்பு கூறப்பட்டதற்கு எதிராக தற்போதைய ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது.   ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் மனிதர்கள் சொதப்பக்கூடியவர்கள் என்றும் மேற்கண்ட ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர்.   ஆய்வாளர்களில் ஒருவரான கார்டிப் பல்கலைக்கழகத்தின் மிச்சைல் கோஸ்லோவ், “மூளைக்கு ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம், கவனக் குவிப்புக்கு சூயிங்கம் உதவுகிறது என்று முன்பு சில ஆய்வுகள் வாதிட்டன.   ஆனால், வார்த்தைகள் சார்ந்த ஞாபகத்திறனில், சூயிங்கம் போன்ற பகுதிச் செயல்பாடுகள் குறுக்கிட்டுப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம்” என்று உறுதிபடக் கூறுகிறார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 30-07-2013

மீண்டும் அனிருத், ஆண்ட்ரியா இணைந்து பாடும் பாடல்.

3 படத்திற்கு இசையமைத்த பிறகு இசையமைப்பாளர் அனிருத்தும், பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியாவும் நட்பு வளர்க்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அவர்களது நட்பு எல்லை மீறத் தொடங்கியது. இதனால் பங்ஷன், பார்ட்டிகளில் இருவரும் கலந்து கொள்ளத் தொடங்கினர். அப்போது மப்பில் இருவரும் தன்னை மறந்த நிலையில் நெருக்கமாகி, உதட்டு முத்தங்களை மாறி மாறி கொடுத்துக்கொண்டனர். ஆனால், அப்போது பல கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.   இதனால் அப்போட்டோக்களை வெளியிட்டது அனிருத்து தான் என்று குற்றம் சாட்டிய ஆண்ட்ரியா தனது இமேஜை அனிருத் திட்டமிட்டு டேமேஜ் பண்ணி விட்டதாக கூறி, அதன்பிறகு அவருடனான நட்பை முற்றிலுமாக முறித்துக்கொண்டார். ஆனால், சமீபத்தில் சமீபத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டது குறித்து ஆண்ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார் அனிருத்.   இதையடுத்து சமாதானமடைந்த ஆண்ட்ரியா, வணக்கம் சென்னை படத்தில் அனிருத்தின் இசையில், அவருடன் இணைந்தே பின்னணி பாடியுள்ளார். அதில் ஒரு பாடல் சிம்பு பாடிய எவன்டி உன்னை பெத்தான் பாணியில் எங்கடி பொறந்தே என்று அனிருத் பாடியுள்ளாராம். அந்த பாடலில் ஆண்ட்ரியாவும் இருப்பதால், இருவருக்குமிடையே மீண்டும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியுள்ளதாம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 30-07-2013

டென்மார்க்கில் இரண்டுக்கு ஒருவர் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்.

டென்மார்க்கின் வேலைச் சந்தையில் பணியாற்றுவோரில் சுமார் இரண்டுக்கு ஒருவர் கடுமையான ஸ்ரெஸ் மன அழுத்தத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்று இன்றைய மேக்கா போன் ஆய்வு கூறுகிறது. வாரத்தில் வேலை நாட்கள் நீட்சிப்பட்டிருப்பது, வேலைத்தலங்களில் திடீரென உயர்வடையும் பரபரப்புக்கள் ஊழியர்களை சோர்வடைய வைத்து, விரக்திக்குள் வீழ்த்துகிறது. வாரத்தில் அதிக நாட்கள் வேலை செய்வதால் ஒவ்வொரு நால்வருக்கும் மூவர் என்ற அடிப்படையில் ஸ்ரெஸ் நிலைக்கு போகிறார்கள். வேலைத்தலத்தில் அடிக்கடி தோன்றும் நெருக்குவாரமான பணிகள் உடலைக் களைப்படைய வைத்து மனத்தை சோர்வுக்குள் தள்ளி விரக்திக்குள் வீழ்த்திவிடுகிறது. தொழிற்சாலைகளில் நிலவும் இத்தகைய தேவையற்ற பரபரப்புக்களால் நாலுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பாதிக்கப்படுகிறார்கள். இவ்விதம் பணியாளரை விரக்திக்குள் தள்ளுவதில் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் முக்கியம் பெறுகின்றன. இத்தகைய தொழிற்சாலைகளின் நிர்வாகங்கள் எள் என்று கேட்டால் எண்ணெயாக வழங்கிவிட வேண்டுமென்று துடிதுடிக்கின்றன. எதிர்காலம் குறித்த அச்சத்தாலும், பதட்டத்தாலும் இவர்கள் சக்திக்கு மீறிய தவறை செய்கிறார்கள், ஈற்றில் இவர்களின் தவறான அச்சத்திற்கு பலியாவது பணியாளரே என்கிறார் எதிர்கால தொழிற்துறை நோக்கர் அன்னமரிய டால். மேலும் டென்மார்க் செய்திகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஸ்ரெஸ் பற்றிய செய்திகள் வெளிவருவது வழமையாக இருக்கிறது. காரணம் ஸ்ரெஸ் மிக ஆபத்தான நோய், புற்றுநோய் தோன்றுவதற்கான வழிகாட்டியாக அது அமையும் என்பதால் இந்த எச்சரிக்கை தொடர்கிறது. இருந்தாலும் உலகிலேயே குறைந்த நேரம் வேலை செய்து அதிக சம்பளம் எடுக்கும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும் டென்மார்க்கிலேயே இது நிலை என்றால் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்வோர் உள்ள நாடுகளின் நிலையைக் கேட்கவும் வேண்டுமோ..?

மேலும் படிக்கவும் 4 மறுமொழிகள் சுதர்சன் 30-07-2013

ஜேர்மனியில் Facebook ஆல் மாணவர்கள் துஷ்பிரயோகம்.

ஜேர்மனியில் பேஸ்புக்கை பயன்படுத்தும் நான்கில் மூன்று பங்கு மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. மன்ஸ்டார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூக விஞ்ஞானவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்விலே இந்த தகவல் வெளிவந்துள்ளது. 33 பாடசாலைகளிலிருந்து சுமார் 5,600 வரையான மாணவர்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அநாவசியமான குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்கள் போன்றன தம்மை வந்தடைவதாக நான்கில் மூன்று பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 29-07-2013

30வது பிறந்த நாளை கொண்டாடும் தனுஷ்.

தனுஷ் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். தந்தை கஸ்தூரி ராஜாவின் படமான துள்ளுவதோ இளமை படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் தனுஷ். அதன் பிறகு அவர் நடித்த காதல் கொண்டேன் ஹிட்டானது. பின்னர் திருடா திருடி படத்தில் சாயா சிங்குடன் சேர்ந்து அவர் ஆடிய மன்மத ராசா பாடல் பட்டி தொட்டியெல்லாம் பல நாட்கள் ஒலித்தது. இப்படி படிப்படியாக முன்னேறி வந்தவர் தனுஷ். ஐஸ்வர்யா தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்தார். 2 மகன்கள் தனுஷ், ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர்.   ரூ.100 கோடி வசூல் தனுஷ் ராஞ்ஹனா படம் மூலம் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றார். அவர் நடித்த முதல் இந்தி படமே ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. லண்டனில் கொண்டாட்டம் தனுஷ் இன்று தனது 30வது பிறந்தநாளை லண்டனில் தனது குடும்பத்தாருடன் கொண்டாடினார்.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 29-07-2013

E-mail ஐ கண்டுபிடித்த தமிழர் வேதனையில்.

 இந்தியாவில், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப் படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை,'' என, "இ -மெயிலை' கண்டுபிடித்த, விருதுநகர், முகவூரை சேர்ந்த சிவா அய்யாதுரை கூறினார்.   சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில், உலக அளவில் 1.8 பில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் உள்ள தற்போதைய பாடத்திட்டம், மாணவர்களை வேலை தேடுபவர்களாக உருவாக்குமே தவிர, வேலை கொடுப்பவர்களாக உருவாக்காது. அமெரிக்க மாணவர்கள், பெரிய கண்டுபிடிப்பாளர்களையும், விஞ்ஞானிகளையும், தங்களது முன்மாதிரியாக வைத்துள்ளனர். ஆனால் இந்திய மாணவர்கள், சினிமா நடிகர்களைத்தான், தங்களுடைய முன்மாதிரியாக வைத்துள்ளனர். அமெரிக்காவில் நான், 1978ல், "இ -மெயிலை' கண்டுபிடித்து போது, எனக்கு வயது 14 . அப்போது எனது ஆசிரியர்களும், விஞ்ஞானிகளும் எனது வயதை பார்க்கவில்லை. கண்டுபிடிப்பை பார்த்து ஊக்கப்படுத்தினர். பின், 1981 ல், "இ- மெயில்' காப்புரிமை (பேடன்ட்) பெற்றேன். டில்லியில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.,ல், பல கோடி ரூபாய் புழங்குகிறது. ஆனால், அங்குள்ள தலைமை விஞ்ஞானிகள், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில், இந்தியாவைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள், நோபல் பரிசு பெற்றனர். சுதந்திரத்திற்கு பின், இந்தியாவில் ஆராய்ச்சி செய்த எந்த விஞ்ஞானியும், நோபல் பரிசு பெறவில்லை. கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், சித்த மருத்துவம், கட்டுமரம் போன்றவற்றை கண்டுபிடித்தனர். தற்போது, வெளிநாட்டு கண்டுபிடிப்புகளை, உபயோகப்படுத்துபவர்களாக உள்ளனர், என்றார். தாளாளர் சோலைசாமி, இயக்குனர் சுந்தர், முதல்வர்கள் விஸ்வநாதன், ராமசாமி, ஜெயபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர்: கலசலிங்கம் பல்கலையில்,"தொழில் நுட்பத்தில் தேவை புதுமை' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், சிவா அய்யாதுரை பேசியதாவது: நான், எனது குடும்பத்தாருடன், ஏழு வயதில் அமெரிக்கா சென்று, ஏழைகள் வாழும் பகுதியில் தங்கிப் படித்தேன். டெலிகிராம், போன் மட்டுமே இருந்த காலத்தில், "இ-மெயிலை' கண்டுபிடித்தேன். நான் இந்தியன் என்பதால், அதை அமெரிக்கர்கள் நம்பவில்லை. மேலும், "எக்கோ மெயில்', "ஈ மெடிக்ஸ்' போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளேன். "இந்தியாவில் ஊழல் பெருத்து விட்டது' போன்ற குறைகளை' கூற வேண்டாம். இந்தியாவில் எல்லா வளமும் உள்ளது. இந்தியாவிலிருந்து, சித்தா, யோகாவை வெளிநாட்டினர் கற்று, பயன்படுத்துகின்றனர், என்றார். வேந்தர் ஸ்ரீதரன், துணை வேந்தர் சரவண சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும் 3 மறுமொழிகள் சுதர்சன் 29-07-2013

ஒய்வு பெறும் வயதை தாண்டியும் படிப்பிக்கும் ஜேர்மனிய ஆசிரியர்.

ஜேர்மனியில் ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெற வேண்டிய வயதை தொட்டும், தான் தொடர்ந்து வேலை செய்ய ஆர்வமாக இருப்பதாக கூறி அதற்கான அனுமதியையும் பெற்றுள்ளார்.   ஜேர்மன் சட்டப்படி ஓய்வு பெறுவதற்கான வயது 65 ஆகும், இந்த வயதினை எட்டியவர்கள் கட்டாயம் ஓய்வு பெற்றாக வேண்டும்.   ஆனால் ஆப்ரஹாம் ரியூட்டர் எனும் ஆசிரியர் ஓய்வு பெற மறுத்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் வயது எல்லை காரணமாக அவரை ஓய்வு பெறவேண்டும் என நீதிமன்றமும் வலியுறுத்தயது.   இதேவேளை 150 மாணவர்களின் கையொப்பங்கள் மற்றும் அவர்களது கருத்துக்கள் திரட்டப்பட்டன.   அதில், அவர் அவசியம் தனது சேவையை தொடரவேண்டும், அவர் ஒரு சிறந்த ஆசிரியர் என்றெல்லாம் அதிகளவில் குறிப்பிடப்பட்டிருந்நது.   தனது முயற்சியில் உறுதியாக இருந்த ரியூட்டர், எனது சேவைக்காலத்தை 2014ம் ஆண்டு வரை நீடிக்க வேண்டும் என கலை மற்றும் கல்வி அமைச்சகத்திடமும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ரியூட்டர் மேலும் ஒரு வருடகாலம் தனது சேவையை தொடரலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   இது குறித்து கருத்து தெரிவித்த ரியூட்டர், இத்தொழில் தனக்கு சந்தோசத்தை தருவதாகவும், மனநிறைவை தருவதாகவும் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 28-07-2013

இன்னொருவரை காதலிக்கமாட்டேன் என்கிறார் நயன்.

நயன்தாரா இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார். முதலில் சிம்புவை விரும்பினார். அது முறிந்தது. பிறகு பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்காக மதம் மாறினார். பிரபு தேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்ததால் இருவரும் திருமணம் வரை வந்து பிறகு பிரிந்து விட்டனர். இதற்கான காரணத்தை இதுவரை இருவரும் அறிவிக்கவில்லை. தற்போது நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:-   நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி விட்டு மீண்டும் வந்தால் அவர்களுக்கு வரவேற்பு இருக்காது. ஆனால் எனக்கு அப்படி இல்லை. ஆரம்பத்தில் எப்படி மரியாதை இருந்ததோ அது இப்போதும் கிடைத்துள்ளது. எந்த பின்னடைவும் இல்லை. முன்பை விட பிசியாக இருக்கிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   தெலுங்கில் அனாமிகா படத்தில் நடிக்கிறேன். தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். தனியாக இருப்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. இன்னொரு முறை என் வாழ்க்கையில் நான் காதலில் விழ வாய்ப்பே இல்லை. என் வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என்பதில் முழு சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரத்தை எப்போதும் இழக்க மாட்டேன்.இவ்வாறு நயன்தாரா கூறினார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 28-07-2013

செங்கல்லை உண்ணும் மூதாட்டி.

85 வயதான பாட்டி செங்கற்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி(வயது 85). இவரது கணவர் மாரியப்பன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.   தற்போது தனிமையில் வசித்து வரும் சரஸ்வதி பாட்டி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.   இவரது சாப்பாடே செங்கல் மட்டும் தான், இதனால் இவரை செங்கல் பாட்டி என்றே அழைக்கின்றனர். தினமும் 1 முதல் 3 வரையிலான செங்கல்லை சாப்பிடுகிறார். சிறுவயதில் செங்கலை சுவைக்க தொடங்கினார்.   அதன் சுவை பிடித்துப் போகவே சிறுது சிறிதாக செங்கல்லை சாப்பிட தொடங்கி, தற்போது கண்ணில் எங்கு செங்கல் பட்டாலும் எடுத்து சாப்பிட தொடங்கி விடுகிறாராம்.   இதுகுறித்து அவர் கூறுகையில், 85 வயதாகியும் என்னால் செங்கல்லை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. திருமணத்திற்கு முன்னர் எனது பெற்றோரும், திருமணத்திற்கு பிறகு எனது கணவரும் என்னை திட்டினர்.   பசி காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இதை நான் செய்யவில்லை. நிறைய செங்கல்லை சாப்பிட்டும் கூட எனது உடல் நிலை பாதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 28-07-2013

தொலைபேசியில் அடிமையாகி தற்கொலை செய்த சுவிஸ்(கொம்) தொழிலதிபர்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை நிறுத்த முடியாததால், ஏற்பட்ட மன இறுக்கத்தால், தற்கொலை செய்து கொண்டார். “சுவிஸ் கொம்’ நிறுவன உரிமையாளர், கார்சன் ஸ்லோடர், 49. அவரது, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, போலீஸ் அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான, “சுவிஸ் கொம்’ நிறுவனத்தை தொடங்கிய கார்சன் ஸ்லோடர், திறம்பட நடத்தி வந்தார். தொழில் முறையில் வெற்றி கண்ட இவர், குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்றி இருந்தார். இதன் காரணமாக ஸ்லோடர், தன் மனைவியை, 2009ல் விவாகரத்து செய்தார்; தன் மூன்று பிள்ளைகளிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். விவாகரத்துக்கு முன், திறந்தவெளி மைதானங்களில் ஆடும் விளையாட்டுகளில், அதிக ஆர்வம் காட்டி வந்த அவர், விவாகரத்துக்குப் பின், தன் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை அறவே மறந்தார். எப்போதும், ஸ்மார்ட் போனிலேயே தன் கவனத்தை மூழ்கடித்தார். இதனால் அவர், அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்தார். இந்நிலையில், ஸ்மார்ட் போன் பயன்பட்டால் ஏற்பட்ட மன இறுக்கத்தால், ஸ்லோடர், தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு, அறிக்கை வெளியிட்டு உள்ளது. தொழிலதிபர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் பலரும், ஸ்மார்ட் போன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், அதை குறைத்துக் கொள்ளுமாறு, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-07-2013

பெண்ணை காப்பாற்ற ரயிலை கவிட்கும் ஜப்பானியர்.

ஜப்பானில் தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற பயணிகளும், ரயில்வே துறையினரும் சேர்ந்து ரயிலையே சாய்த்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.    டோக்யோவில் உள்ள மினாமி - உரவ்கா ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றது. அந்த ரயிலில் இருந்து பயணிகள் கீழே இறங்கினர் சில பயணிகள் அந்த நிலையத்திலிருந்து ரயிலிலும் ஏறினர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கீழே இறங்கும் போது ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே இருந்த 8 இன்ச் இடைவெளியில் தவறி விழுந்தார்.   அவரது உடம்பு இடுப்பு வரை பிளாட்பாரத்திற்கும், ரயில் பெட்டிக்கும் இடையே சிக்கிக் கொண்டது. சக பயணிகள் அந்த பெண்ணை மீட்க முயன்றனர், ஆனால் கால் நன்றாக சிக்கிகொண்டிருந்ததால் அவர்களால் அப்பெண்ணை மீட்க முடியவில்லை. உடனே அங்கிருந்த சில பயணிகள் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த ரயிலை லேசாக சாய்த்தால் தான் பெண்ணை மீட்க முடியும் எனத தெரிவித்தனர்.   உடனே அங்கிருந்த சுமார் 40 பயணிகள், ரயில்வே ஊழியர்களுடன் சேர்ந்து அந்த ரயிலை சாய்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். அனைவரின் முயற்சியாலும் ரயில் சாய்க்கப்பட்டு அந்த பெண் பத்திரமாக மீட்கபட்டார்.உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த பெண், நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  தவறுதலாக விழுந்த அப்பெண்ணை காப்பாற்ற சுமார் 32 டன் எடையுள்ள ரயிலை அப்படியே சாய்த்த மக்களின் முயற்சியால் இந்த ரயில் வெறும் 8 நிமிடம் மட்டுமே தாமதாமாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-07-2013

காலையுணவை தவிர்ப்பதால் மாரடைப்பு ஏற்படலாம்.

காலை உணவு சாப்பிடாமல் தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது.  இன்றைய அவசரமான வாழ்க்கைமுறையில், பெரும்பாலானவர்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை. இவ்வாறு ஊட்டச்சத்துக்கு மிக முக்கியமான காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.   45 முதல் 82 வயது வரை உள்ள 26,902 ஆண்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முடிவில், அதிகமாக மது அருந்துபவர்கள், புகை பழக்கமுடையவர்கள், அதிக நேரம் உழைப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், போதிய உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்துவருவதாக தெரியவந்துள்ளது. மேலும், காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு மற்றவர்களை விட திடீர் மாரடைப்பு ஏற்பட 27 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துக் கணிப்பு மற்றும் மருத்துவ ஆய்வை ஒப்பிட்டு எச்சரித்துள்ளனர்.   அது போல இரவு நேர உணவை 10 மணிக்கு பிறகே சாப்பிடும் பழக்கம் இதய நோய்களை கொண்டு வந்து விடும் என கூறியுள்ள ஆய்வாளர்கள் காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆபத்து ஆகிய பிரச்சினைகளும் வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேஷன் ஜர்னல் சர்குலேஷன் (American Heart Association journal Circulation ) இதழில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-07-2013

ஹன்சிகாவுக்கும் சிம்புவுக்குமிடையில் மலர்ந்த காதல்.

சிம்புவும், ஹன்சிகாவும் தங்கள் காதலை வெளிபடையாக டிவிட்டர் மூலம் அறிவித்துவிட்டனர். ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தபோது இவர்களிடையே காதல் எப்படி மலர்ந்தது என்ற விவரம் தற்போது தெரியவந்திருக்கிறது!   சிம்புவுடன் வாலு படத்தில்தான் முதன்முதலில் நடிக்க ஒப்பந்தமானார் ஹன்சிகா. அப்போது திரையுலகில் உள்ள பலரும் அவரை எச்சரிக்கை செய்தார்களாம்! நயன்தாரா விவகாரங்களை சுட்டிக்காட்டி தள்ளியே இரு என்று ஹன்ஷிகாவின் கோலிவுட் தோழிகள் அவருக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதனால் சிம்புவுடன் பேச ஹன்சிகா முதலில் பயந்தார்.   படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிப்போய் முடங்கினார். சிம்புவும் அவரிடம் நாகரீகமாக பழகினார். சிம்புவின் நடவடிக்கைகள் ஹன்சிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்க ஆரம்பித்தது. பிறகு பழக ஆரம்பித்தார். அதன் பிறகுகூட அவர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் இந்த ஊடல் அவர்களை மேலும் நெருக்கமாக்கியது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்ததாகத் தெரிகிறது. மேலும் இருவருக்குள்ளும் காதல் துளிர்த்துள்ளதை உணர்ந்து வெளிப்படுத்தினர்.   இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் முதலில் சம்மதிக்கவில்லை. சிம்புவுக்கு வேலூர் அருகே உள்ள பெண்ணை குடும்பத்தினர் பார்த்து விட்டு வந்தனர். அப்பெண்ணுக்கே திருமணம் செய்து வைக்கவும் தயாரானார்கள்.   ஹன்சிகாவின் தாய் மோனா மொத்வானியும் காதலை முறிக்கும்படி நிர்ப்பந்தித்தார். ஹன்சிகா இப்போதுதான் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். சமீபத்தில் ரிலீசான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம்–2’ படங்கள் ஹிட்டானதால் மார்க்கெட் எகிறியுள்ளது. சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார். கைவசமும் நிறைய படங்கள் குவிந்துள்ளன.   எனவே சினிமாவில் கவனம் செலுத்தும்படியும் காதல், கல்யாணம் என்று போனால் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் மோனா மொத்வானி அறிவுறுத்தினார். சிம்புவும் ஹன்சிகாவும் பெற்றோர் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. காதலில் உறுதியாக இருந்தனர். இன்னொருபுறம் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.   இருவரும் காதலில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியின்றி குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டினார்கள் என்று வாலு படத்தின் இயக்குனர் வட்டாரங்கள் தெரிவிகின்றன. வீட்டில் சம்மதம் பெற்ற பிறகே இருவரும் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்களாம்!

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 26-07-2013

கள்ளக்காதலனுடன் வாழ்க்கை நடாத்தும் அமெரிக்கப்பெண்கள் அதிகரிப்பு.

கணவனை ஏமாற்றுவதில் அமெரிக்கப் பெண்கள்தான் செம கில்லாடிகளாக இருக்கிறார்களாம்.   கணவருக்குத் தெரியாமல் இரகசிய உறவுகளைப் பேணுவதிலும் அமெரிக்கப் பெண்கள்தான் முன்னோடிகளாக உள்ளனர் என ஆய்வொன்று தெரிவிக்கிறது.   கடந்த 20 வருடங்களில் இந்த போக்கு கிடுகிடுவென அதிகரித்து காணப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கணவருக்குத் தெரிந்தும், தெரியாமலும் வேறொரு கள்ளக்காதலுடன் வாழ்க்கை நடத்துவது, இரகசிய வாழ்க்கை நடத்தும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.   அதேசமயம், அமெரிக்க ஆண்கள் தாங்கள் தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்கிறார்களாம். அத்தகையவர்களின் எண்ணிக்கை 21 சதவீதமாக உள்ளது.   பெரும்பாலான பெண்கள் கணவரைத் தவிர இரகசிய உறவுகளைப் பேணுவதற்கு கையில் வேலையும், பணமும் புரளுவதுமே முக்கியக் காரணம் என்கிறது இந்த ஆய்வு.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 26-07-2013

ஸ்பெயினில் ரயில் தடம் புரண்டதில் 60 பேர் பலி.

ஃப்ரான்ஸில் கடந்த வாரம் ஒரு ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து நேற்று புதன் கிழமை இரவு 8 மணி 45 நிமிடத்திற்கு ஸ்பெயினின் செயிண்ட் ஜாக் கோம்பொஸ்ட்டலுக்கு ( Saint-Jacques de Compostelle ), அருகாமையில் உள்ள அங்ராய்ஸ் ( Angrois ), என்னும் இடத்தில் அந்நாட்டின் அதிவேக ரயில் தடம் புரண்டதில் 60 பேர் மரணமடைந்து 126 பேர் படு காயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தற்காலிகமாகவே உள்ளது . இந்த விபத்துப் பற்றி பல கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், ஸ்பெய்னின் முண்ணனி நாளிதழான எல் பாய்ஸ் (El Pais) , தலை நகர் மட்ரீடையும் ( Madrid ) ஃப்ரோலையும் (Ferrol )(Galice) இனைக்கும் அதிவேக இரயிலாகிய அல்வியா ( Alvia 151 ) புதன் இரவு 8.42 க்கு அங்குராய் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் பாலத்தில் திரும்பும் போது தடம் புரண்டுள்ளது . அந்த இரயிலில் 238 பயணிகள் பயணம் செய்துள்ளனர் . விபத்து நடந்த நேரத்தில் அந்த அதிவேக இரயில் 220 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடியுள்ளது ஆனால் அந்த இடத்தில் வரையறுக்கப்பட்ட வேகம் 80 கிலோ மீட்டர்கள் மட்டுமே , எனவே நேற்றைய விபத்துக்குக்கான காரணம் வேகமே என செய்தி வெளியிட்டுள்ளது . அந்த அதிவேக இரயிலில் பயணம் செய்த பெரும்பாலானோர் களீஸ் ( Galice ) என்ற ஊரில் நடக்கவிருக்கும் பாரம்பரிய திருவிழாவில் கலந்து கொள்ள சென்றவர்களே. ஏற்பட்ட இந்த அகோர விபத்தினால், அந்த திருவிழா நிகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை சம்பவ இடத்திற்கு வரவிருக்கும் ஸ்பெய்னின் முதன்மை அமைச்சர் மரியானோ ராஜாய் ( Mariano Rajoy ), விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன் அன்பையும் ஆறுதலையுல் தன்னுடய ட்டுவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் 3 மறுமொழிகள் சுதர்சன் 25-07-2013

அஸ்தியை திருடிய நபர் கைது.

அமெரிக்காவில் போதை பொருளென்று நினைத்து பக்கத்து வீட்டிலிருந்து அஸ்தியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.    அமெரிக்காவின் டென்னிசி நகரில் வசிப்பவர் 28 வயதான வில்லியம் கான்ட்ரெல். இவர் பக்கத்து வீட்டு கதவை உடைத்து ஒரு பெட்டியை திருடினார். அந்த பெட்டியுடன் தனது பாட்டி வீட்டிற்கு தப்பி சென்றார்.    பிறகு வில்லியம்சை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் கூறியதாவது, ' அந்த பெட்டியில் போதைப்பொருளை வைத்திருப்பதாக நினைத்து திருடினேன். ஆனால் அதில் அஸ்தி இருந்தது. எனத் தெரிவித்துள்ளார். பெட்டியின் உரிமையாளர் ஸ்டீவன் மிட்லே இதுபற்றி கூறுகையில் அந்த பெட்டியில் இருந்தது எனது தாயின் அஸ்தி. அந்த பெட்டியின் மேலே எந்தன் தாயின் பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி போன்ற குறிப்புகள் இருந்தன என்று தெரிவித்தார்.    கோகைன் எனப்படும் போதைப்பொருளுக்கு ஆசைப்பட்டு தனது பேரன் இந்த காரியத்தை செய்துவிட்டான் என வருத்தம் தெரிவித்த வில்லியமின் பாட்டி, இந்த செயலுக்காக அவர் மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 25-07-2013

உண்மையான தோற்றத்தை மறைக்காத மனிஷா கொய்ராலா.

பம்பாய், இந்தியன், முதல்வன் படங்களில் அழகாக வந்து கவர்ந்தவர் மனிஷாகொய்ரலா. பம்பாய் படத்தில் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு பாட்டுக்கு அவர் ஓடி வரும் காட்சி ரசிகர்களை கிறங்கடிப்பதாக இருந்தது. அப்படிப்பட்ட மனிஷா கொய்ரலா இன்று ஆளே உரு மாறிப் போய் உள்ளார். திருமணம் அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகும் நிம்மதி பெறவில்லை. புற்று நோய் தாக்கியது. அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மரணத்தின் விளிம்புவரை போய் மீண்டுள்ளார். பூரண குண மடைந்து விட்டார். முதல் தடவையாக இப்போதுள்ள தனது தோற்றத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அழகான தலை முடியை இழந்துள்ளார். கண்ணாடி அணிந்து இருக்கிறார். 42 வயதாகும் அவர் 62 வயது நிரம்பியவர் போல் காட்சி அளிக்கிறார். இந்த தோற்றத்துக்காக அவர் வருத்தம் அடைய வில்லை. தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். அதுவே படத்தை வெளியிட தூண்டியுள்ளது. இதன் மூலம் மற்ற நடிகைகளுக்கு உதாரணமாக திகழ்கிறார். இது குறித்து மனிஷா கொய்ரலா கூறும் போது இப்போதுள்ள என் தோற்றத்தை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன். கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது. நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் மகிழ்ச்சியாக வைப்பார் என்றார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 25-07-2013

கடவுளின் மேலுள்ள பக்தி குறைந்து போகிறது - கேதீஸ்.

2005ம் வருடத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 87 சதவிகி தத்தினர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். இப்பொழுது எட்டு ஆண்டு களுக்குப்பிறகு கணக்கெடுப்பு மேற்கொண்ட போது அதில் ஆறு சதவிகிதம் குறைந்து 81 சதவிகிதத்தினரே கடவுள் நம்பிக்கை உள்ள வர்களாக உள்ளனராம்.   இதுபோன்ற கணக்குகள் துல்லியமாக இருக்கின்றனவா என்பது கேள்விக் குறியே! இன்னும் கூடுதலாக நாத்திகர்கள் இருக்கக் கூடும்.   சீனாவில் 14 சதவிகிதத்தினரும், ஜப்பானில் 16 சதவிகிதத்தினரும், செக் குடியரசில் 20 சத விகிதத்தினரும், பிரான்சில் 37 சதவிகிதத் தினரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அறிவியல் அறிஞர்களைப் பொறுத்தவரை பெரும் அளவில் நாத்திகர்களே. அமெரிக்கா விலிருந்து வெளிவரும் நேச்சர் (இயற்கை) என்ற இதழ் உலகம் முழுவதும் உள்ள ஆயிரம் அறிவியல் அறிஞர்களிடம் கடவுள் பற்றிய வினாவைத் தொடுத்திருந்தது. 93 விழுக்காட்டினர் 1999இல் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்த தாகவும் 1993ஆம் ஆண்டிலோ அது 85 விழுக்காடு என்று நேச்சர் இதழ் தெரிவித்தது. 1914ஆம் ஆண்டிலே விஞ்ஞானிகள் 72 விழுக் காட்டினர் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தனர். (ராணி 11.7.1999). ஆண்டுகள் வளர வளர நாத்திகர்களின் எண்ணிக்கையும் வளர்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (5.6.2010) ஒரு தகவலைக் கூறியதுண்டு. கடந்த பத்து ஆண்டுகளாக நடந்த ஆய்வில் இவ்வுலகில் 50 முதல் 70 கோடி மக்கள் வரை கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.   அய்ரோப்பில் நாத்திகம் பரவலாக உள்ளது. அமெரிக்காவில் 2007இல் 5 விழுக்காட்டினரும், 2008 இல் 19 விழுக்காட்டினரும் நாத்திகர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.   வியட்நாம் 81, சுவீடன் 46.85, டென்மார்க் 43.80, நார்வே 31.72, ஜப்பான் 64.65; செக் குடியரசு 54.61; பின்லாந்து 26.80, பிரான்சு 43.54, தென் கொரியா 30.52, எஸ்டோனியா 49 விழுக்காடு மக்கள் நாத்திகர்கள் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது (5.6.2010).   அதற்கு இரண்டாண்டுகளுக்குமுன் இதே டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (13.6.2008) முக்கியமானதோர் தகவலை வெளியிட்ட துண்டு. Bர்ஐந்ய் Pஎஒப்லெ Oஉத்லிவெ ஒத்ஹெர்ஸ் ப்ய் 15 யெஅர்ஸ் என்ற தலைப்பில் வெளியான தகவல் அது.   அதிக மூளைத்திறன் கொண்டவர்கள் மற்றவர்களைவிட 15 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்கள் என்றது. அறிவார்ந்த மக்களின் மூளை மிக மெது வாகவே மூப்பு அடைவதால், அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்று இத்தாலி நாட்டு கலாப்ரியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.   உண்மையிலேயே அவர்களை அறிவாளி களாக்கும் எஸ்.எஸ்.ஏ.டி.எச். என்ற மரபணு வுக்கே தான் நன்றி கூற வேண்டும். இன்னொரு தகவல் மிக மிக முக்கியமானது. உல்ஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் ரிச்சர்ட்லின் தலைமையில் ஆய்வினை மேற் கொண்டவர்கள் அறிவாற்றல் கொண்ட மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்ப தில்லை. அறிவாற்றலுக்கும், நாத்திகத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இனிவரும் காலத்தில் இந்த நிலை தவிர்க்க முடியாதது - கடவுள் நம்பிக்கை உள்ளவர்களி டையே நிலவும் பக்திகூட சடங்காச்சாரமாக இருக்கிறதே தவிர, கடவுள்மீது அழுத்தமான நம்பிக்கை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்பது வெளிப்படை!   நன்றி: விடுதலை.   செய்திப்பகிர்வு: கேதீஸ் - ஜேர்மனி.

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 24-07-2013

அழகிய பணிப்பெண்களை தேடும் சுவிஸ் பீஸ்ஸா நிறுவனம்.

சுவிட்சர்லாந்தில் புல்டாக் பிட்சா நிறுவனம் தனது கிளையில் பணிபுரிய அழகான இளம் பெண்கள் வேண்டும் விளம்பரம் ஒன்றை அறிவித்துள்ளது.   புல்டாக் பிட்சா நிறுவனமானது ஜெனிவா மற்றும் லுசேர்ன் நகரங்களுக்கு இடையேயுள்ள நியான் என்னும் பகுதியில் இதனை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும் இதன் மூலம் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு பிட்சா வழங்க விரைவில் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.   இந்த விளம்பரம் குறித்து மேகாலி ஹெல்ஸ்மேன் என்னும் பெண்ணியவாதி தனது கடும் எதிர்ப்பினை சுவிஸ் ஊடகமொன்றில் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனமானது பெண்கள் மட்டுமே வேலைக்கு வேண்டும் மேலும் அவர்கள் தோற்றத்தில் அழகானவர்களாக இருத்தல் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளனர்.   இந்த விளம்பரத்தால் அந்த நிறுவனமானது சட்டரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். மேலும் கவர்ச்சியான பெண்களை இந்த தொழிலுக்கு பயன்படுத்துவது என்பது முட்டாள்தனமாக விடயம் என்றும் இதனால் அந்த பெண்கள் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறியுள்ளார். இது குறித்து புல்டாக் பிட்சா உரிமையாளரான பீட்டர் செட்பர் கூறுகையில், நான் இந்த பிட்சா தொழிலை தொடங்கும் போது எதிர்மறையான கருத்துக்களை எதிர்பார்த்தேன் என சுவிஸ் பத்திரிக்கையில் பதில் கூறியுள்ளார்.   பேஸ்புக்கில் இந்த பிட்சாவிற்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றில் ஒரு இரு பெண்கள் மார்பகம் தெரியும் வகையில் வெள்ளை சட்டை மற்றும் தலையில் தொப்பியுடன் கூடவே ஒரு பிட்சா பாக்சுடன் விளம்பரம் கொடுத்துள்ளனர். எனது நிறுவனத்தில் மிகவும் மோசமான ஆடைகளை அணிந்து கொண்டு இந்த தொழிலை செய்யப்போவதில்லை. மேலும் அவர்கள் ஏதேனும் பிரச்சனைகளுக்கு ஆளானால் அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கண்ணீர் வரவைக்கும் புகைக் குண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு 4 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மொடல் அழகிகளும் உள்ளனர். ஏராளமான ஆண்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்கள் தெரிவு செய்யப்படவில்லை.   மேலும் இந்த விளம்பரமானது முழுக்க முழுக்க ஒரு வியாபார நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 24-07-2013

வீதியில் துப்பினால் இங்கிலாந்தில் சட்டரீதியாக நடவடிக்கை.

இங்கிலாந்தில் லண்டன் நகரில் தெருவோரங்களில் எச்சில் துப்ப தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தெருவில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர், பூங்கா, பீச் போன்ற பொது இடங்களுக்கு செல்வோர் மற்றவர்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் எச்சிலை துப்புகின்றனர்.   இதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் சுகாதார கேடு பற்றி கவலைப்படுவதில்லை.   எத்தனை விழிப்புணர்வு பிரசாரம் செய்தாலும் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படாதவரை இதுபோன்ற பழக்க வழக்கத்தை மாற்ற முடியாது.   இந்நிலையில் இங்கிலாந்து செல்லும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டு மக்கள் ஆங்காங்கே எச்சில் துப்புகின்றனர்.   இவர்களின் நடத்தையை கட்டுப்படுத்த லண்டன் நகராட்சி நிர்வாக கவுன்சில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் பொது இடங்களில் எச்சில் துப்புவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.   இந்த தீர்மானம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இது சட்டத்தில் துணை விதியாக சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 24-07-2013

பணிப்பெண்களுக்கு சௌதி அரேபியாவில் புதிய சட்டங்கள்.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்பில் சவுதி அரேபியா புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.   புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் நவம்பர் 3ஆம் திகதி வரை சலுகை காலம் வழங்கப்படவுள்ளது. வீட்டுப் பணிப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பணிப்பெண்களின் உரிமைகள் தொடர்பில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதாக சவுதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனடிப்படையில் பணியாளர்களுக்கு மாதாந்தம் சம்பளத்தை செலுத்த வேண்டும் என்பதுடன் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, ஒன்பது மணித்தியால வேலை, கட்டாய சுகயீன விடுமுறை, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை என்பன பதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனைவிட பணியாளர்களின் உடன்படிக்கையில் உள்ளடக்கப்படாத வேலைகளை வழங்குதல், நியாயமான காரணங்கள் இன்றி பணியார்களின் தொழிலை இரத்து செய்தல் என்பவற்றுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு உரிமை இல்லையெனவும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 24-07-2013

மஞ்சுளா விஜயகுமார் திடீர் மரணம்.

நடிகை மஞ்சுளா இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் கணவர் நடிகர் விஜயகுமாருடன் வசித்து வந்தார் மஞ்சுளா. சில மாதங்களாக நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கட்டிலில் படுத்திருந்தபோது தவறி கீழே விழுந்தார். கட்டிலின் கால் பகுதி அவரது வயிற்றில் குத்தியது. இதில் வயிற்றில் ரத்தம் உறைந்தது. இதையடுத்து மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் இல்லை. இதையடுத்து சிறுநீரகம் பழுதடைந்தது. இன்று காலை மஞ்சுளா உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து பகல் 11.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார். அப்போது விஜயகுமார், மகன் அருண் விஜய் மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். 1965ம் ஆண்டு ‘சாந்தி நிலையம்' படத்தில் சிறுமியாக அறிமுகம் ஆனார் மஞ்சுளா. பின்னர் ‘ரிக்ஷாக்காரன்' படத்தில் கதாநாயகியாக எம்ஜிஆருடன் நடித்தார்.  தொடர்ந்து சிவாஜி, என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கமல், ரஜினி உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்தார். ‘உன்னிடம் மயங்குகிறேன்' என்ற படத்தில் விஜயகுமாருடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் எம்ஜிஆர் திருமணம் நடத்தி வைத்தார். கடைசியாக 2011ம் ஆண்டு வெளியான ‘என் உள்ளம் தேடுதே' படத்தில் மஞ்சுளா நடித்தார். விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா. ஆனாலும் விஜயகுமாரின் முதல் மனைவி குடும்பத்தினருடன் இணக்கத்துடன் வாழ்ந்து வந்தார். விஜயகுமார், மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். முதல் மனைவியின் மகன்தான் நடிகர் அருண் விஜய். மஞ்சுளா உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆலப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.  அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை அவரது இறுதி சடங்கு நடக்கிறது. திரையுலகினர் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்கவும் 14 மறுமொழிகள் சுதர்சன் 23-07-2013

சிறுவர்களுக்கு சொக்கொலேட் கொடுத்து மயக்கும் தலிபான்.

8 வயது குழந்தைகளுக்கு சாக்லெட் ஆசை காட்டி மனித வெடிகுண்டாக மாற்றும் பயங்கரத்தை தாலிபான்கள் செய்துவருவதாக புதிய ஆவணப்படம் ஒன்று தெரிவித்துள்ளது. பசியிலும், பஞ்சத்திலும் வாழும் ஆப்கான் அனாதைக் குழந்தைகளை சாக்லெட் மற்றும் இனிப்புகள் ஆசைக் காட்டி தாலிபான்கள் கடத்திச் சென்று மனித வெடிகுண்டாக மாற்றுவதாக காண்பித்துள்ளது.   பெரிய அளவுக்கு பணமும் கொடுக்கப்படுவதாகவும் தெரிகிறது. மேலும் குழந்தைகள் துப்பாக்கி மற்றும் வெடிபொருள் உபகரணங்களையும் கையாள தாலிபான் கற்றுத் தருவதாக அந்த ஆவணப்படம் காட்டியுள்ளது.   இது குறித்து முன்னாள் தலிபான் போராளி நியாஸ் என்பவர் கூறுகயில், தான் தாலிபான்கள் கடத்தப்படும் போது தனக்கு 8 வயது என்று கூறியுள்ளார்.   இனிப்புகளை தன்னிடம் வழங்கி தற்கொலை குண்டுகள் நிரம்பிய ஆடையுடன் தன்னை ஒரு குறிப்பிட்ட செக் பாயிண்டிற்கு அனுப்பிவைத்தனராம். ஆனால் அவர் எப்படியோ தப்பியுள்ளார். இன்று அனாதை ஆசிரமம் ஒன்றில் இருந்து வருகிறார் நியாஸ். இது குறித்து ஆப்கானிஸ்தானின் விருது பெற்ற இயக்குனர் நஜிபுல்லா குரேஷி கூறுகையில், 'ஆயிரக்கணக்கான குழந்தைகள் இன்னமும் தாலிபான்களால் தேர்வு செய்யப்பட்டு மனித வெடிகுண்டாக மாற்றப்படுகின்றனர். அல்லது வெடிகுண்டுகள் செய்ய கற்றுத் தரப்படுகின்றனர் என்றார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 23-07-2013

ஒஸ்ற்றியாவில் கருணாநிதிக்கு தபால் முத்திரை.

திமுக தலைவர் கருணாநிதியின் 90 ஆவது பிறந்த நாளையொட்டி ஆஸ்ட்ரியாவில் அவரது படத்துடன் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.   திமுக தலைவர் கருணாநிதி தனது 90ஆவது பிறந்தநாளை கடந்த மாதம் 3 ஆம் தேதி கொண்டாடினார். ஆஸ்ட்ரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்ட்ரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம்.  இந்நிலையில் டான் மற்றும் அசோக் ஆகிய இருவரும் சேர்ந்து பொது வாழ்க்கை, சினிமா, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கருணாநிதியின் நினைவாக தாபால் தலையை வடிவமைத்து அதை வெளியிட்டுள்ளனர்.    அந்த தபால் தலையில் கருணாநிதியின் முகம், கட்சிகொடி மற்றும் 90 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த தபால் தலையின் விலை ரூ.7,023 ஆகும்.    தனிப்பட்ட முறையில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டாலும் இதை அங்குள்ள தபால்களில் பயன்படுத்த முடியும்.  

மேலும் படிக்கவும் 6 மறுமொழிகள் சுதர்சன் 23-07-2013

விஜய்யை தவிர்த்த பிரபுதேவா.

டான்ஸர், நடிகர், இயக்குநர் என பல முகங்கள் கொண்டவர் பிரபுதேவா. அத்தனை முகங்களிலும் தன்னுடைய சாதனையைப் பதித்தவர். சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது, 'எந்தெந்த நடிகர்கள் சூப்பராக டான்ஸ் ஆடுவார்கள்?' என கேட்கப்பட்டது.   அவரும் சிரஞ்சீவி, ஹ்ருத்திக், ஷாகித், ரன்பீர், ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்.டி.ஆர்., தனுஷ், சிம்பு, 'ஜெயம்' ரவி என நடிகர்களின் பெயரைச் சொல்லியிருக்கிறார். மாதுரி தீக்‌ஷித், தேவி, சோனாக்‌ஷி ஷின்கா, பிரியங்கா சோப்ரா என நன்றாக டான்ஸ் ஆடக்கூடிய நடிகைகளின் பெயரையும் சொல்லி இருக்கிறார்.   ஆனால், கடைசிவரை விஜய்யின் பெயரைச் சொல்லவே இல்லையாம். இத்தனைக்கும் விஜய்யை வைத்து இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார் பிரபுதேவா. பாலிவுட் ஸ்டார்கள் அக்‌ஷய் குமார், ஷாருக்கான் ஆகியோரே விஜய்யின் நடனத்தை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பிரபுதேவா விஜய்யைத் தவிர்த்த மர்மம் என்ன? என்பது தெரியவில்லை.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 22-07-2013

ஜேர்மனியில் மது விற்பனையில் தாக்கம்.

ஜேர்மனியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மது விற்பனையானது மோசமான விற்பனையை சந்தித்துள்ளது. மதுவின் விலை அதிகரிப்பால் மது ஜாடிகள் அனைத்தும் கலையிழந்து காணப்படுகின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 5 சதவீதம் மது விற்பனையானது வீழ்ச்சியடைந்துள்ளது. 20 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த ஆண்டு மிகவும் மோசமான மது விற்பனை சரிவை சந்தித்துள்ளது என்று டை வெல்ட் (Die Welt) பத்திரிக்கையானது தெரிவித்துள்ளது.   இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலச்சரிவு காரணமாக இந்த பிரச்சனையை சந்தித்திருக்கிறோம் என்று மைக்கேல் ஹபர்(Michael Huber) கூறியுள்ளார். இது குறித்து மதுபான சங்கத்தின் தலைவர் ஹான்ஸ் ஜார்ஜ் எலிஸ் (Hans-Georg Eils) கூறுகையில், கடந்த சில மாதங்களாக ஜேர்மனியில் 1,330 மது வடிப்பகமானது ஈரமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் வானிலை என்பது மது விற்பனையாளர்களுக்கு ஒரு சிறந்த விற்பனைப்பிரதிநிதி (Salesman) எனவும் கூறியுள்ளார். இந்த வகையான மது பிரச்சனைகளை சந்தித்த போதிலும் ஜேர்மன் நாட்டினர் மது தோட்டங்களை வீட்டில் பராமரித்து தங்களுக்கு தேவையான போது மதுபானங்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது வானிலை நன்றாக உள்ளது என்றாலும் ஜீலைக்கு முந்திய மாதங்களில் தொழிற்சாலைகள் மிகவும் சரிவடைந்தே காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதிகமான மதுபான விலை மற்றும் கலப்பு பீர் கலந்து விற்கப்படுவதால் இந்த ஆண்டின் முதல் பாதியில் 6.6 சதவீதம் விற்பனையானது வீழ்ச்சியடைந்துள்ளது. கலப்பு பீர் பானத்தை பெரிதும் சார்ந்திருப்பதால் ஜேர்மன் மதுபானங்கள் இன்னும் 8 சதவீதம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆண்டு மதுபான விற்பனை அதிகரிக்க வேண்டுமெனில் அதன் விலையை குறைத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று டை வெல்ட் (Die Welt) பத்திரிக்கையானது தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 22-07-2013

இங்கிலாந்தில் கொக்க கோல விளம்பரம் தடை.

லண்டனில் கொக்க கோலா விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.   கோக் குடிப்பதால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதாக தவறாக விளம்பரப்படுத்துவதாக கொக்க கோலா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் விதமாக இருப்பதால் இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   இருப்பினும் இந்த குற்றச்சாட்டை கொக்க கோலா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 22-07-2013

புதுவகையான டைனசோர் கண்டுபிடிப்பு.

அமெரிக்காவின் ஆய்வாளர்களால் புதிய வகை டைனோசர் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் எச்சங்களிலிருந்து ஆய்வாளர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். 5 மீற்றர் நீளம் வளரக்கூடியதுடன் இரண்டாயிரத்து 500 கிலோகிராம் பருமன் கொண்ட டைனோசர் இது என தெரிவிக்கப்படுகின்றது.   நீளமான கொம்பும் இந்த டைனோசருக்கு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இராட்சத உயிரினம் ஏழரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-07-2013

தீபாவளிக்கு ஐ வெளிவருவதில் தாமதம்.

ஷங்க‌ரின் பிரமாண்ட ஐ படத்தின் கடைசி ஷெட்யூல் இன்று சென்னையில் தொடங்கியது. படத்தின் 75 சதவீத வேலைகள் முடிந்துவிட்டதாக ஷங்கரே தெ‌ரிவித்திருந்தார். இந்த இரண்டு செய்திகளையும் கூட்டிச் சேர்த்து, ஐ தீபாவளிக்கு வெளியாகும் என சிலர் சொல்லி வருகின்றனர். ஆனால் ஐ தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை என்கிறார்கள். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயா‌ரிக்கும் ஐ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு. விக்ரம், எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். விக்ரம் பல்வேறு புருவத்தை உயர வைக்கும் கெட்டப்புகளில் நடித்துள்ளார். பீட்டர் ஜாக்சனின் வீட்டா வொர்க் ஷாப்புடன் ஷங்கர் இந்தமுறை மேக்கப்புக்காக கூட்டணி அமைத்திருக்கிறார். இன்று படத்தின் கடைசி ஷெட்யூல் முடிவதால் தீபாவளிக்கு படம் வெளியாகும் என சிலர் தெ‌ரிவித்துள்ளனர். சாதாரண படமாக இருந்தால் தீபாவளிக்கு கண்டிப்பாக வந்துவிடும். ஆனால் ஐ-யில் ஸீ‌ஜி வேலைகள் இருக்கின்றன, ரஹ்மான் பின்னணி இசை அமைக்க வேண்டும்... நிச்சயமாக தீபாவளிக்கு வெளிவராது என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்பதே அவர்களின் கணிப்பாக இருக்கிறது. 

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-07-2013

வியர்வையை குடி தண்ணீராக்கும் இயந்திரம்.

சுவீடனை சேர்ந்த பொறியாளர் ஒருவர் வியர்வையிலிருந்து குடிநீர் தயாரிக்கும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.   ஸ்டாக்ஹோமை சேர்ந்தவர் அன்ட்ரியஸ் ஹேம்மர், இவர் மனிதனின் வியர்வையிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை தயார் செய்துள்ளார்.    இந்த புதியவகை இயந்திரத்தில் வியர்வையுடன் கூடிய துணிகளை போட்டு இயந்திரத்தை இயக்கினால், வியர்வை உள்ள துணிகளிலிருந்து நீர் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படும். இம்முறையால் வியர்வை துணிகளில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் உப்புசத்துகள் அகற்றப்பட்டு, சுத்தமான் குடிநீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட குடிநீரை இதுவரை சுமார் 1000 பேர் குடித்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் இந்த குடிநீர், குழாயிலிருந்து கிடைக்கும் நீரை விட சுத்தமாகவும், சுவையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் 780 மில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் இருக்கும் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த வியர்வையை குடிநீராக மாற்றும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-07-2013

கோடிக்கணக்கில் உழைக்கும் 10 வயதுச்சிறுவன்.

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறுவன் தான் வரைந்த ஓவியங்களை பல கோடி ரூபாய்க்கு விற்று தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்துவருகிறார்.  இங்கிலாந்தை சேர்ந்த 10 வயது சிறுவனான கேய்ரான் வில்லியம்சன், இயற்கை காட்சிகளை தத்ரூபமாக வரையும் திறன் கொண்டவர். மிக சிறு வயதிலேயே வரைய துவங்கிய இவர், அண்மையில் தனது ஓவியங்களை சுமார் 340000 பவுண்டுகளுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3,09,21,922 ரூ ) விற்றுள்ளார். மிகுந்த கலைநயத்தோடு தோற்றமளிக்கும் இந்த சிறுவனின் ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்ட 20 நிமிடங்களில், வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல், தொலைபேசி மூலம் இந்த ஓவியங்களை வாங்கியுள்ளனர். இச்சிறுவன் வரைந்த ஓவியங்கள் இடம்பெறும் காலேரியில் பணிபுரியும் இவரது பெற்றோரான கெய்த் மற்றும் மிச்சேல், அவர்களது மகனான 10 வயது கேய்ரான் வில்லியம்சன் மற்ற சிறுவர்களை போல ஒரு சிறுவன் தான் எனவும், அவருக்கு கால்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்குமெனவும் தெரிவித்துள்ளனர். கேய்ரான் வில்லியம்சனின் ஒரு ஓவியம் மட்டும் 30,000 பவுண்டுகளுக்கு விற்பனையானதும், கேய்ரான் ஓவியம் வரைந்து சம்பாதித்த பணம் 1.5 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 20-07-2013

MGR குணமடைய வாலியின் பாடல்.

MGRக்கும் கவிஞர் வாலிக்கும் நெருக்கமான அன்பு உண்டு. MGR உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோது தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் வாலி பாடல் ஒன்று ஒலித்தது. அதுதான் 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன். இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன்... உள்ளம் அது உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்' என்ற பாடல்தான் அது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 20-07-2013

குழந்தையை காரில் விட்டுச்சென்ற கனடியத்தகப்பனுக்கு தர்ம அடி.

  கனடாவின் டொரண்டோவில் ஒன்பது மாத குழந்தை ஒன்றை காரிலேயே வைத்து பூட்டிவிட்டு சென்ற தந்தை ஒருவரை பொதுமக்கள் பயங்கர ஆத்திரத்தோடு கும்பலாக தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   மேற்கு டொரண்டோவின் Oakville என்ற இடத்தில் ஒரு காரின் உள்ளே ஒன்பது மாத குழந்தை ஒன்றை வைத்து பூட்டிவிட்டு ஷாப்பிங் செய்ய தந்தை உள்ளே சென்றுவிட்டார்.   சிறிது நேரத்தில் காரின் உள்ளே வெப்பம் தாங்காமல் குழந்தை பயங்கரமான வியர்வையுடன் அழுது கொண்டிருந்தது. அதை பார்த்த அவ்வழியே சென்று கொண்டிருந்த பொதுமக்கள், உடனடியாக உள்ளே இருந்த தந்தைக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென அந்த தந்தையை தாக்கத்தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.   உடனடியாக காவல்துறையினர் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி, தந்தையையும், குழந்தையையும் பத்திரமாக அனுப்பிவைத்தார். குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.   இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொதுமக்கள் உடனே 911 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டுமே தவிர இவ்வாறு கும்பலாக சேர்ந்து ஒருவரை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்று பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுரை கூறினர்.   டொரண்டோவில் ஒன்பது மாத குழந்தை ஒன்றை காரிலேயே வைத்து பூட்டிவிட்டு சென்ற தந்தை ஒருவரை பொதுமக்கள் பயங்கர ஆத்திரத்தோடு கும்பலாக தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   மேற்கு டொரண்டோவின் Oakville என்ற இடத்தில் ஒரு காரின் உள்ளே ஒன்பது மாத குழந்தை ஒன்றை வைத்து பூட்டிவிட்டு, ஷாப்பிங் செய்ய தந்தை உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் காரின் உள்ளே வெப்பம் தாங்காமல் குழந்தை பயங்கரமான வியர்வையுடன் அழுது கொண்டிருந்தது. அதை பார்த்த அவ்வழியே சென்று கொண்டிருந்த பொதுமக்கள், உடனடியாக உள்ளே இருந்த தந்தைக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.   பின்னர் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென அந்த தந்தையை தாக்கத்தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி, தந்தையையும், குழந்தையையும் பத்திரமாக அனுப்பிவைத்தார். குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.   இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொதுமக்கள் உடனே 911 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டுமே தவிர இவ்வாறு கும்பலாக சேர்ந்து ஒருவரை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்று பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுரை கூறினர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 20-07-2013

புற்றுநோயை கண்டுபிடிக்கும் கத்தி.

புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது, புற்றுநோய் பாதித்த திசுக்களை மட்டும் துல்லியமாக அகற்ற ஒரு புதிய வகை கத்தியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.    பொதுவாக புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஒரு கத்திபோன்ற கருவி பயன்படுத்தப்படும்.   இந்த கருவியை கொண்டு மருத்துவர்கள் புற்று நோய் பாதித்த திசுக்களை அகற்றும் போது, அவை பொசுங்கிவிடும். அப்போது ஒரு விதமான புகை வெளியாகும். அவ்வாறு அறுவை சிகிச்சை செய்யும்போது, புற்றுநோய் தாக்கிய திசுக்களை மட்டும் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது என்பது இயலாத காரியமாகவே இருந்து வந்தது.    இதனால், அறுவை சிகிச்சை செய்தபோதிலும், அந்த நோயாளிக்கு மீண்டும் புற்று நோய் தாக்கும் அபாயமும் இருந்தது. மேலும், திசுக்களின் மாதிரிகளை சோதனைச் கூடத்தில் பரிசோதிப்பதற்கு குறைந்தது அரை மணி நேரமாவது தேவைப்பட்டது.   ஆனால், தற்போது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான ஒரு புதிய கத்தி போன்ற கருவி புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.    இதற்கு காரணம், அந்த கருவியால், புற்று நோய் பாதித்த திசுக்களை சாதாரண திசுக்களில் இருந்து பிரித்துகாட்டமுடியுமென்பதுதான். இதனால் புற்று நோய் பாதித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு மீண்டும் புற்று நோய் தாக்கும் அபாயம் பன்மடங்கு குறையும்.    இதனை சாத்தியமாக்க ஆய்வாளர்கள் முதலில் இந்த கருவியை பயன்படுத்தி திசுக்களின் பண்புகளை அறிந்துகொள்ளும் வகையில் ஒரு தகவல்தொகுப்பை உருவாக்கினர். இதற்காக, 302 புற்று நோய் அறுவை சிகிச்சை நோயாளிகளிடமிருந்து மூளை, நுரையீரல், மார்பு, வயிறு, குடல் மற்றும் கல்லீரல் போன்ற பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட புற்று நோய் பாதித்த திசுக்கள் மற்றும் சாதாரண திசுக்கள் சோதிக்கப்பட்டு மாதிரிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.    லண்டனில் உள்ள இம்ப்பீரியல் கல்லூரியின் இந்த கண்டுபிடிப்பு பற்றிய தகவல் சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது   இந்த கருவியை கொண்டு சோதனை அடிப்படையில், 91 புற்றுநோய் நோயாளிகளின் திசு மாதிரிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. இவை அனைத்திலுமே துல்லியமான முடிவுகள் கண்டறியப்பட்டன என்பதும், இக்கருவியின் விலை சுமார் 250000 பவுண்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 19-07-2013

92 இலட்சம் கோடி வெள்ளிகள் வென்ற அமெரிக்க நபர்.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு வியாபாரிக்கு எதிர்பாராத வகையில் 'பே பால்' அக்கவுண்டில் சுமார் 92 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் கிரெடிட் ஆகியிருந்ததால் அவர் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்.    அமெரிக்காவை சேர்ந்த 56 வயதான கிரிஸ் ரெனால்ட்ஸ் என்பவர் பழங்கால கார் உதிரி பாகங்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார்.    இணையதளம் மூலமாக இந்த தொழிலை செய்ய வசதியாக 'ஆன் லைன் பேங்கிங்' எனப்படும் உடனடி பணப் பறிமாற்ற நிறுவனமான 'பே பால்' நிறுவனத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தார். இந்நிலையில், தற்செயலாக தனது 'பே பால்' அக்கவுண்ட்டின் கையிருப்பை கண்ட கிரிஸ் ரெனால்டுக்கு சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் போனது.   இதற்கு காரணம், அவரது கணக்கில் கையிருப்பாக 92 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 5 ஆயிரத்து 520 லட்சம் கோடி ரூபாய்)இருப்பதாக தகவல் இருந்தது.    பே பால் நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் கிரிஸ் ரெனால்ட், இதுவரை இந்த கணக்கின் மூலம் மாதமொன்றுக்கு 100 டாலர்களுக்கு மேல் வரவு - செலவு செய்தது கிடையாது.  உடனடியாக ஆன் லைன் மூலம் கணக்கு விபரத்தை சரிபார்த்த போது அவரது கையிருப்பு பூஜ்ஜியம் டாலராக இருந்தததாக சீரிஸ் கூறியுள்ளார்.    கணினி குளறுபடியால் இந்த தவறு நேர்ந்து விட்டதாக பே பால் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 19-07-2013

ஒரு கிலோ நிறை குறைத்தால் ஒரு கிராம் பவுண் பரிசு.

துபாயில் மக்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றும் நோக்கத்தில், ஒரு கிலோ எடையை குறைத்தால் ஒரு கிராம் தங்கம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  துபாயில் ஜூலை 19 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் “Your Weight in Gold,” என்னும் இத்திட்டத்தில் ஒருமாத காலத்திற்குள் குறைந்தப்பட்சமாக 2 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட உடல் எடையை குறைத்துக் காட்டுபவர்களுக்கு கிலோவுக்கு ஒரு கிராம் வீதம் தங்கம் பரிசாக வழங்கப்படும். உடல் பருமன் நோயால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் உடல் எடையில் ஒரு கிலோவை குறைப்பவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் பரிசாக வழங்கும் இத்திட்டத்திற்கு அங்கு பெரும் வரவேற்பு உள்ளது. உடல் எடையை குறைக்க உச்சவரம்பு ஏதுமில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.  ஒரு மாதகால முடிவில், அதிக எடையை குறைத்துள்ளவர்களுக்கு பிரத்யேக பரிசும் அளிக்கப்படவுள்ளது.  இதுகுறித்து தெரிவித்த அதிகாரி ஒருவர், அதிக உடற்பருமன் உடைய மக்கள் தங்களின் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கவேண்டுமென்பதே எங்களின் எண்ணம், இதனால் மக்கள் பயனடைவது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியிருக்கிறார். 

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 19-07-2013

கவிஞர் வாலி இன்று மரணம் - வேந்தன்.

 பிரபல கவிஞர் வாலி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். இன்று மாலை 5 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. வாலிக்கு வயது 82. தொடர்ந்து ஒரு ஆண்டாக நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார்.   இந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.   மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் சற்று முன் காலமானார்.   வாலியின் இயற்பெயர் ரங்கராஜன், இவரது சொந்த ஊர் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம்.   1958ஆம் ஆண்டு திரையுலகிற்கு வந்தார். 10,000 பாடல்களுக்கு மேல் இவர் எழுதியுள்ளார்.   பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலி இன்று வியாழன் தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 82. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.   கடந்த ஜுன் 8ம் நாள் அன்று வசந்தபாலனின் தெருக்கூத்து படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர் , அன்று இரவே உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.    இடையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பயனளிக்காமல் இன்று மாலை ஐந்து மணி அளவில் அவர் இறந்தார்.   ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி.   வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழர் ஒருவர் ‘மாலி'யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார் என்று கூறப்படுகிறது.   வாலி ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கினார். இவ்வளவு நீண்ட காலம் நிலைத்து நின்ற திரைப்படப் பாடலாசிரியர் வேறு எவரும் இல்லை என்கிறார் திரைப்பட ஆய்வாளர் வாமனன்.   வாலி பத்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதியதாகக் கருதப்படுகிறது. 2007ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்துவருகின்றனர்.     செய்திப்பகிர்வு: வேந்தன் - கனடா.  

மேலும் படிக்கவும் 22 மறுமொழிகள் சுதர்சன் 18-07-2013

ஜேர்மனியில் கோப்பி வாங்கினால் பல்லு இலவசம்.

ஜேர்மன் காபி நிறுவனமானது தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு பீன்ஸ் விற்பதுடன் சேர்த்து தற்போது பற்கள் மற்றும் கிரீடங்களை விற்பதற்கு திட்டமிட்டுள்ளது.   ஜேர்மனியின் சிபோ நிறுவனம் தனது நிறுவனத்தில் விற்கும் பொருட்களுடன், சேர்த்து தள்ளுபடியாக ஏதேனும் ஒரு பொருளை விற்பதை வழக்கமாக கொண்டுள்ளது.   அதாவது தன் நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபகரணங்கள் அல்லது ஏதேனும் பொருட்களை வழங்கி வருகின்றது.   இந்நிலையில் தற்போது Dentaltechnik-வுடன் வியாபார ரீதியாக இணைந்து பொய்யான பற்களை விற்க திட்டமிட்டுள்ளது.   இந்த பற்களானது பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.   காபி வாங்க வரும் வடிக்கையாளர்கள் Dentaltechnik படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு, மேலும் அதில் ஒரு நபராக 24 யூரோ கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.   பதிவு செய்த நபர்களுக்கு தங்களது பற்கள் குறித்து எந்த வித தேவைகள் ஏற்பட்டாலும், இதனை குறித்த நிறுவனமானது செய்து கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் இதற்கு KZVB சங்கமானது தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன், இந்த திட்டத்தால் நோயாளி மற்றும் பல்மருத்துவர்களுக்கிடையே பெரிய குறுக்கீடு ஏற்படும் என KZVB தலைவரான ஜானுஸ் ராட்(Janusz Rat) தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 18-07-2013

ஓட்டுனரில்லாத கார் இங்கிலாந்தில் பரீட்சை.

இங்கிலாந்தில் டிரைவர் இல்லாமல் ஓடும் கார்களின் சோதனை ஓட்டத்தை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.   இங்கிலாந்தில் கமெரா, ரேடார் மற்றும் லேசர் உணர்வு கருவிகளை கொண்டு டிரைவர் இல்லாமல் ஓடும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.   இந்நிலையில் இக்கார்களின் சோதனை ஓட்டத்தை இந்த ஆண்டு இறுதியில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. கார்கள் தானாக இயங்கினாலும், அதன் இருக்கையின் பின்னால் டிரைவர்கள் அமர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.   தானாக ஓடும் கார்கள் கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   ஏற்கனவே ஓக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்களும், ஜப்பானின் மல்டி நேஷனல் மோட்டார் நிறுவனமான நிஸான் நிறுவனத்தினரும் இணைந்து அறிவியல் பூங்கா சாலையில் இக்காரை வெற்றிகரமாக இயக்கி சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 18-07-2013

சிம்புவை காதலிக்கவில்லை என்கிறார் ஹன்சிகா.

சிம்புவை நான் காதலிக்கவில்லை. அவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்திகளிலும் உண்மையில்லை என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் என இரு படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார். பெரும்பான்மையான நேரத்தை அவருடனே செலவிடுகிறார். சிம்புவை காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணும் எண்ணமும் இல்லை - ஹன்சிகா இதனால் இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவாகி அது இப்போது காதலாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ஹன்சிகாவை சிம்பு திருமணம் செய்வதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்று சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் தெரிவித்தார். இந்த விஷயம் ஹன்சிகா முன்னணி நடிகையாக உள்ள ஆந்திர சினிமா உலகிலும் பரவியது.   இதைத்தொடர்ந்து ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக வந்த ஹன்சிகாவிடம், ராஜேந்தரின் பேட்டியைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர் நிருபர்கள். ‘‘சிலம்பரசனும், நானும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியாகும் செய்திகள் எனக்கு வருத்தத்தைத் தருகின்றன. எங்கள் இருவருக்கும் இடையே காதல் இல்லை. இரண்டு பேரும் நண்பர்களாகவே பழகி வருகிறோம். நானும், சிலம்பரசனும் இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு ஜோடியாக நடித்த மற்ற கதாநாயகர்களுடன் எப்படி பழகுகிறேனோ, அப்படித்தான் சிலம்பரசனுடனும் பழகி வருகிறேன். என் திருமணம் பெற்றோர் விருப்பப்படிதான் நடக்கும். இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவே இல்லை," என்றார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 17-07-2013

நூற்றாண்டின் பின் நோர்வே நகரில் சூரிய வெளிச்சம்.

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாகவே குளிர்காலத்தில் சூரிய ஒளியே படாமல் இருந்த நோர்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவியால் சூரிய வெளிச்சத்தை பெறுகிறது.   கடந்த 1907ம் ஆண்டு நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் ருஜூகான் நகரம் உருவானது. இந்நகரம் நோர்வேயின் டெலிமார்க் பகுதியில், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.   எனவே இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை.   குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்று சூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இதற்கு மாற்று தீர்வை கண்டறிந்துள்ளனர். அதாவது அருகில் உள்ள மலையில் 450 மீற்றர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர்.   அக்கண்ணாடிகளில் படும் சூரிய வெளிச்சம் எதிரொலிப்பதன் மூலம், நகரின் மத்தியப் பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது. இத்திட்டம் கடந்த 1ம் திகதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 17-07-2013

சிங்கம்-3 வருமா? வராதா?

நடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்–2’ படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோவையில் இந்த திரைப்படம் ஓடும் தியேட்டருக்கு நடிகர் சூர்யா நேற்று வந்தார்.படம் ஓடிக்கொண்டிருந்த போது சூர்யா ரசிகர்கள் முன்பு தோன்றி பேசினார். அப்போது ரசிகர்கள் தங்களது செல்போன்களில் சூர்யாவை படம் பிடித்து மகிழ்ந்தனர்.   பின்னர் சூர்யா நிருபர்களிடம் கூறியதாவது:–   எந்த ஒரு திரைப்படத்துக்கும் 2–ம் பாகம் வந்தால் அந்த படத்துக்கு அவ்வளவாக வரவேற்பு இருக்காது. ஆனால் சிங்கம்–2 படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதற்கு படத்தின் டைரக்டர் ஹரி மற்றும் ரசிகர்களே முக்கியம் காரணம். இப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியமைப்பு, வசனம் அனைத்தையும் நீண்டநேரம் யோசித்து படைத்தார். அதன் காரணமாகவே படம் வெற்றியடைந்துள்ளது.   டைரக்டர் ஹரியுடன் சிங்கம்–2 எனக்கு இது 4–வது படம். ஆனால் மற்ற படங்களை காட்டிலும் இந்த படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.நல்ல கதையம்சம் அமைந்தால் சிங்கம்–3 பாகம் கண்டிப்பாக வெளிவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 16-07-2013

3,950 கோடிகளை சொத்துக்களாக கொண்ட இங்கிலாந்து ராணி எலிசபெத்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு ரூ.3950 கோடி என முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.   மகாராணி முடிசூட்டிய 75 ஆண்டுகள் நிறைவு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து இங்கிலாந்து உளவுத்துறை முதன் முறையாக அரச குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்து மதிப்பீடு செய்தது.   அதன்படி ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு ரூ.3950 கோடி. அதில் அவரது கிரீடத்தில் உள்ள உலக புகழ்பெற்ற கோரினூர் வைரம், மற்றும் வைடூரியம் உள்ளிட்ட நகைகளும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.   அதே நேரத்தில் இவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கு ரூ.216 கோடியும். இவர்களது மகனும் அடுத்து முடிசூட்டும் தகுதிபெற்ற இளவரசர் சார்லசுக்கு ரூ.2,215 கோடி மதிப்புள்ள சொத்துகளும் உள்ளன. இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு ரூ.120 கோடி சொத்துக்களும், இளைய மகன் ஹாரிக்கு ரூ.96 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, இளவரசர் வில்லியம் மனைவி கேத்மிடில்டனுக்கு வார இறுதியில் குழந்தை பிறக்க உள்ளது. அரச மரபுபடி அந்த குழந்தைக்கு ரூ.6 ஆயிரம் கோடி சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 15-07-2013

கனடிய அரசியல்வாதிகள் வரிசையில் சி ராதிகா 7 வதிடம்.

கனடா அரசியலில் முதலிடம் பிடிக்கும் ஏழு பேர் குறித்த விடயங்களை ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ் சமூகத்தில் இருந்து முதலாவதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ராதிகா சிற்சபைசனின் பெயரும் உள்ளது. இதன் மூலம் தமிழினத்துக்கு புதிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது. இதில் முதல் பிரதமர், 50 ஆண்டுகளாக கனடா நாடாளுமன்றினை அலங்கரித்த முதல் உறுப்பினர் உள்ளிட்ட முதலிடம் பிடிக்கும் ஏழு பேர் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. 

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 15-07-2013

தலைவா ரிலீஸ் 9 ஒகஸ்ட்.

விஜய் நடித்த தலைவா படம் ஆகஸ்ட் 9ல் ரிலீஸ் ஆகும் என்று ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.   துப்பாக்கி படத்திற்குப் பின்னர் நடிகர் விஜய் நடிக்கும் படம் தலைவா. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் முதல் முறையாக விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்துள்ளார்.   ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வந்தன. ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளின் போது தலைவா படத்தின் ஆடியோவும், டிரைலரும் வெளியிடப்பட்டது. பாட்டும் சரி, டிரைலரும் சரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.   ஆகஸ்ட் 9ல் தலைவா ரிலீஸ. தலைவா படத்தில் விஜய் உடன் இந்தி நடிகை ராகிணியும் இணைந்துள்ளார். இவர்களுடன் சந்தானம், ராஜிவ் பிள்ளை, அபிமன்யூ சிங், சுரேஷ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 9ல் ரிலீஸ் இந்நிலையில் தலைவா படம் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஐயங்கரன் இண்டர்‌நேஷனல் பிலிம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ள தலைவா படத்தினை தமிழகத்தில் வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது. தமிழகம் தவிர்த்து வெளிநாடுகளில் ஐயங்கரன் நிறுவனம் வெளியிடுகிறது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 15-07-2013

சுப்பர் ஸ்டார் கதிரையை பிடிக்கப்போகும் நடிகர்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி பல ஆண்டுகளாக தமிழில் கேட்கப்படுகிறது. அதற்கு இணையாக, என்றும் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று ஒருசாரர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கான போட்டி ஒருபோதும் முடிவுக்கு வரப்போவதில்லை. சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருக்கையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அடைமொழி தந்து அவரது தந்தை டி.ராஜேந்தர் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு முதல் போட்டியை தொடங்கினார். அதன் பிறகு பல பேர். கார் ரேஸிலிருந்து திரும்பி சினிமாவில் முழுக்கவனம் செலுத்திய காலகட்டத்தில், சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் என்று அஜீத் சொன்னது பலத்த சர்ச்சையை கிளப்பியது. தனது கடின உழைப்பையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்த அவர் சொன்ன வார்த்தை பலரை கோபப்படுத்தியது. சிலர் கிண்டலடித்தனர். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் குறித்து அஜீத் இதுவரை வாயே திறந்ததில்லை.      விஜய் தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னதில்லை. அவர் சம்பந்தப்பட்ட மேடையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற கோஷம் இடம்பெறாமல் இருந்ததுமில்லை. விஜய் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பும், விலையும், குழந்தைகளிடம் அவருக்கிருக்கும் வரவேற்பையும் வைத்து அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான தகுதி அவரிடமிருப்பதாக பலரும் கருதுகின்றனர். தயாரிப்பாளர் தாணு அதில் முக்கியமானவர். ரஜினிக்கு அடுத்து விஜய்தான் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்பிடுவார். விஜய் விருது வழங்கும் விழாவில் துப்பாக்கிக்காக விருது வாங்கும் போது இதனை சற்று அழுத்தியே சொன்னார். ஆளவந்தானில் தன்னை நஷ்டப்படுத்திய எதிரி கமல்ஹாசன் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சியில் இப்படிப் பேச கிடைத்த சந்தர்ப்பத்தை தாணு நிச்சயம் தவறவிட மாட்டார். ரஜினியைப் போலவே அடக்கம், ஓபனிங் கிங், ஆன்மீகத்தில் ஈடுபாடு, தனது படங்களையே ப்ரமோட் செய்யாதவர்... என அஜீத்தை அடுத்த சூப்பர் ஸ்டார் என சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவரா இவரா என்ற போட்டியில் இப்போது புதிதாக சூர்யாவையும் கோர்த்துவிட்டிருக்கிறார்கள். சிங்கம் 2 வெற்றிவிழா நிகழ்ச்சியில் பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யாதான் என்று சொல்லி சூர்யாவுக்கே அதிர்ச்சி தந்தனர். நன்றாக காமெடி செய்கிறார், ரஜினி மாதிரியே பேசுகிறார், கறுப்பாக இருக்கிறார் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று சிவ கார்த்திகேயனை முன்னிறுத்துகிற முயற்சிகளும் நடக்கிறது. ஆக, சூப்பர் ஸ்டார் நாற்காலி ஏலத்துக்கு வந்திருக்கிறது. நடிகர் திலகம், மக்கள் திலகம், கலைஞானி என்று வகைதொகையில்லாமல் பட்டங்கள் இருந்தும் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஏன் இந்த அடிதடி. ரஜினி வைத்திருப்பதாலா?     ஓரளவு அது உண்மை. சூப்பர் ஸ்டார் என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு அடைமொழி. இசைத்துறையில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார், கால்பந்தில் சூப்பர் ஸ்டார் என சினிமா தாண்டியும் சூப்பர் ஸ்டார் என்பது பயன்படுத்தப்படுகிறது. மக்கள் திலகம், கலைஞானி போல அது யுனிக்கானது அல்ல. ஒவ்வொரு மொழியிலும் சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கில் சிரஞ்சீவி, இந்தியில் அமிதாப் தொடங்கி ஷாரூக்வரை பல பேர். தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்றால் அது தியாகராஜ பாகவதர். வடஇந்திய ஊடகங்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார், தமிழ் சூப்பர் ஸ்டார் என்றே குறிப்பிடுகின்றன. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பட்டம் தமிழில் ரஜினிக்கு தரப்பட்டது. சூப்பர் ஸ்டார் என்றால் இருக்கிற அனைவரிலும் சிறந்தவர். தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை பெற்றவர் ரஜினி. ஆகவே அவரே சிறந்தவர், அவரே சூப்பர் ஸ்டார். அப்படிதான் பொதுவான ஒரு அடைமொழி ரஜினியின் யுனிக்கான அடைமொழியாக மாறியது. காலப்போக்கில் ரஜினிதான் சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார்தான் ரஜினி என்பதாக அதனை தமிழக ரசிகர்கள் மாற்றிக் கொண்டார்கள். இந்த மாற்றம் பிற மொழிகளில் நடைபெறவில்லை. அதனால்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒருவரை தமிழில் முன்னிறுத்தும் போது எதிர்ப்புக் குரல்கள் வலுவாக எழுகின்றன. பிற மொழிகளில் எப்படியோ. தமிழில் இன்னொரு சூப்பர் ஸ்டாருக்கான வாய்ப்பு குறைவு. குறைந்தபட்சம் ரஜினி இருக்கும்வரை.    

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 14-07-2013

Mercedes கார் வகைக்கு பிரான்சில் தடை.

ஜேர்மனியின் புதியரக மெர்டிஸ் பென்ஸ் கார்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.   கடந்த ஜனவரி ஒன்று முதல் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, புதியதாக உருவாக்கப்படும் கார்களில் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத ஆர்1234 ஒய் எப் வகை குளிர்சாதனக் கருவிகளையே உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.   ஆனால் ஜேர்மனியின் பென்ஸ் உற்பத்தி நிறுவனமான டெய்ம்லர் நிறுவனம், இந்த வகை குளிர்சாதனக் கருவிகளில் உள்ள வாயு எளிதில் தீப்பற்றிக் கொள்ளும், விபத்து நேரிட்டால் கார் வெடித்துச் சிதறிவிடும் வாய்ப்பும் உண்டு என்று தெரிவித்துள்ளது. அதனால், இந்த நிறுவனம் வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்கு நம்பகத்தன்மை கொண்ட பழைய வகையான ஆர் 134ஏ குளிர்சாதனக் கருவிகளையே தொடர்ந்து புதிய ரகங்களிலும் உபயோகப்படுத்துகின்றது.   இந்நிலையில் இந்த வகை கார்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது. ஆனால் மற்ற எந்த ஐரோப்பிய நாடுகளும் தங்களின் புதிய ரக கார்களுக்குத் தடை விதிக்கவில்லை என்று டெய்ம்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.   இதற்கிடையே ஐரோப்பிய யூனியனின் செயல்பிரிவான ஐரோப்பிய கமிஷன் சென்ற மாதம், ஜேர்மன் நிறுவனம் தொடர்ந்து பழைய ரக குளிர்சாதனக் கருவிகளையே தங்கள் வாகனங்களில் உபயோகிக்குமானால் பொருளாதாரத் தடை விதிக்கப்பபோவதாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 14-07-2013

பண இயந்திரத்திருட்டு ஜேர்மனியில் அதிகரிப்பு.

ஜேர்மனி நாட்டில் போலி அட்டையை பயன்படுத்தி தானியங்கி இயந்திரங்களில் திருடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.   இதுவரை ஜேர்மனி நாடு முழுவதும் 250 இயந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் அந்நாட்டில் மக்கள் போக்குவரத்து அதிமாக உள்ள இடங்களிலேயே தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர்.   அவற்றில் முக்கியமான இடமாக வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா(North Rhine-Westphalia), தென் மேற்கு பாடன் உர்டெம்பெர்க்(south-western state of Baden-Württemberg), பெர்லின் நகரம்(Berlin) மற்றும் ஹெசன்(Hessen) ஆகிய பகுதிகளில் திருடுவதையே நோக்கமாக கொண்டுள்ளனர். மேலும் காலாவதியான அட்டைகளை பயன்படுத்தி காந்த தொழில் நுட்பத்தின் உதவியுடன் திருடுவதாக அட்டை பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் போலியான அட்டைகளை பயன்படுத்தி திருடுபவர்களின் எண்ணிக்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. யூரோபே மாஸ்டாகார்டு (Europay, MasterCard and Visa) தொழில்நுட்பமானது இந்த கண்டுபிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பமானது அட்டையின் நம்பகத்தன்மை மற்றும் அட்டை குறித்த முழு விபரத்தையும் தெரியப்படுத்துவதற்கு உதவுகின்றது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 14-07-2013

பேர்த்தியுடன் பிறந்தநாள் கொண்டாடும் வைரமுத்து.

இன்று பிறந்தநாள் காணும் 60 வயதாகும் வைரமுத்துவும், ஒரு வயதை நிறைவு செய்யும் அவரது பேத்தி மெட்டூரியும்... பிறந்தநாள் இருவருக்கும் ஒன்றே...   வைரமுத்து (ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு இரு மகன்கள்,பெயர்கள் மதன் கார்க்கி, கபிலன்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 13-07-2013

சிகிச்சையில் கண் திறந்த பிரேதம்.

New York வைத்தியசாலை ஒன்றில் ஒருபெண் நோயாளி இறந்து விட்டார் என நினைத்து அவரது உடலுறுப்புக்களை வைத்தியர்கள் அகற்றமுற்பட்ட போது அப்பெண் கண்களைத் திறந்துள்ளார்.   Colleen Burns என்ற 41 வயதுடைய நியுயோர்க்கைச் சேர்ந்த பெண் ஒருவர் மிகையான மருந்து உட்கொண்ட காரணத்தினால் 2009 ஒக்டோபர் மாதம் New York.St Joseph’s Hospital Health Centrey அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அப்பெண்ணின் மூளை செத்து அவர் கோமாநிலைக்காளாகிவிட்டார் என வைத்தியர்கள் முடிவு செய்து அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்வதற்காக அகற்ற முற்பட்டபோது சத்திரசிகிச்சை மேசையில் இருந்து எழுந்துள்ளார் என்று கூறப்படுகின்றது. Burnscap உயிருடன் இருக்கின்றார் என்ற அறிகுறிகளை வைத்தியர்கள் உதாசீனம் செய்து உள்ளனர் என சுகாதாரதிணைக்களம் கண்டுபிடித்ததனால் $US6000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   உடலுறுப்புக்கள் அகற்றப்படுவதற்கு முதல் நாள் அவரது கால் விரல்கள் நாசித்துளைகள் போன்றனவற்றில் அசைவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நாக்கு போன்றவைகளும் அசைந்துள்ளன.   Post-Standardep நிருபர்கள் இது சம்பந்தமாக கேள்விகள் எழுப்பும் வரை வைத்தியசாலை இது சம்பந்தமாக எந்தவித விளக்கமும் வெளியிடவில்லையென்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 13-07-2013

ஒரு வயதுக்குழந்தை தனது தந்தைக்கு வாங்கிக்கொடுத்த கார்.

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரை சேர்ந்தவர் பால் ஸ்டவுட். இவருக்கு ஒரு கார் விற்பனை கம்பெனியில் இருந்து நோட்டீசு வந்தது.   அதில் நீங்கள் ஆன்லைனின் டிரேடிங் மூலம் ஒரு கார் வாங்கியிருக்கிறீர்கள். அதன் விலை ரூ.13 ஆயிரம் அதை செலுத்திவிட்டு காரை ஓட்டி செல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காரை வாங்கவில்லை என மறுத்தார். பின்னர் தனது செல்போனை பார்த்த போது அதில் ஆன்லைன் மூலம் கார் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் தனது ஒரு வயது மகளிடம் செல்போனை விளையாட கொடுத்து இருந்தார். அப்போது அவர் தவறுதலாக அழுத்தி உபயோகித்ததில் இச்சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது.   அதை தொடர்ந்து அந்த காரை அவர் வாங்கி விட்டார். தற்போது அதில் தனது மனைவி குழந்தையுடன் வலம் வருகிறார். இவரது குழந்தையின் ஆன்லைன் விளையாட்டு மூலம் வாங்கிய கார் 1962–ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ‘ஆஸ்டின்–ஹீலே ஸ்பரிட்’ ரக கார் ஆகும். இது குறித்து பால்ஸ்டூயட் கூறும்போது, ‘‘நல்லவேளை மிக குறைந்த விலையிலான காரை எனது மகள் தேர்வு செய்து இருக்கிறாள். இல்லாவிட்டால் அதற்குரிய பணத்தை என்னால் செலுத்தியிருக்க முடியாது’’ என சிரித்தபடியே கூறினார்  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 13-07-2013

இளையராஜா: பாக்கியராஜ் ஹார்மோனியப்பெட்டியை எப்படி தொடலாம்.

விலகுது திரை என்ற தமிழிசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த ஆல்பத்தை உருவாக்கியவர் கார்திகா மகாதேவ் ஆவார்.   இந்த விழாவில் பங்கேற்ற பாக்கியராஜ் சிடியை வெளியிட இசையமைப்பாளர் பரத்வாஜ் பெற்றுக் கொண்டார்.   விழாவில் பாக்யராஜ் பேசும் போது, இளையராஜாவிடம் கோபித்துக் கொண்டுதான் நான் இசையமைப்பாளரானேன். கோபம் என்றால் நேரடி கோபம் இல்லை பாடல் பற்றி அவர்கள் விவாதிக்கும்போது சங்கீத ஞானம் இல்லாததால் அதில் கலந்து கொள்ள முடியாமல் தவித்தேன். இதை தவிர்க்க முறைப்படி இசை கற்றேன்.   அதன் பிறகு நான் போடும் டியூன்கள் எல்லாம் நானேதான் போடுகிறேனா என பலருக்கு சந்தேகம் வந்தது. இளையராஜாவுக்கும் என் மேல் பயங்கர கோபம் வந்தது. நீயெல்லாம் ஆர்மேனிய பெட்டியை எப்படி தொடலாம் என்று சண்டைக்கே வந்து விட்டார். நானும் சண்டை போட்டேன். பிறகு என் மீது அவருக்கு கோபம் குறைந்தது. என்று கூறினார் பாக்யராஜ்!

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 12-07-2013

வெள்ளச்சேதப்பயணிகளுக்கு கனடா போக்குவரத்துச்சபையின் 100 வெள்ளிகள் நஷ்ட ஈடு.

திங்கட்கிழமை இரவு 1,400 பயணிகள் ஒரு GO புகையிரதத்திற்குள் அடைபட்டுக்கொண்டனர்.     Don Valley பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ரெயின் அகப்பட்டதால் அதனுள் பயணம் செய்த பயணிகளு மணத்தியால கணக்கில் வண்டியினுள் அகப்பட்டு பின்னர் தீயணைப்பு படையினர் கடற்படை பொலிஸ் பிரிவினராகியோரால் மீட்கப்பட்டனர். வண்டியின் பெட்டிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயணிகள் நனைந்து தோய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.   இதன் காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 100 டொலர்கள் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.   பயணிகளுக்கு இச்சம்பவம் மிகவும் கஸ்டமான தெனவும் மறக்கமுடியாததொரு சம்பவம் எனவும் GO போக்குவரத்து பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். PRESTO காட் பயன்படுத்தும் பயணிகளுக்கு 100 டொலர்கள் அவர்களது காட்டில் சேர்க்கப்படுமென்றும், காகித பயணசீட்டு பாவித்தவர்கள் பயணசீட்டு வாங்கியதற்கான சரியான ஆதாரம் காட்டினால் அவர்களுக்கு 100டொலர்கள் பெறுமதியான PRESTO அட்டை வழங்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 12-07-2013

உலக மக்கள் தொகை தினம்.

1987 ஆடியில் 11ல் உலகின் மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 11ம் தேதி, மக்கள்தொகை தினத்தை ஐ.நா உருவாக்கியது.   வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் சீர்கேடு, வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம், மக்கள் தொகை உயர்வு. ஆண்டுதோறும் வேகமாக உயரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகள், அதைக் கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஜூலை 11ம் தேதி, உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஆண்டுதோறும் 18 வயதுக்கும் கீழே திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சமாக உள்ளது. மறுபுறம் 32 லட்சம் பேருக்கு பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு நடக்கிறது. இளம் வயது திருமணம் காரணமாக, கர்ப்ப கால இறப்பும் அதிகரிக்கிறது. 18 வயதுக்குட்பட்ட திருமணங்களை, அறவே ஒழிப்பதற்கு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். தனிமனித கட்டுப்பாடும் இதில் அவசியம். உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது.தற்போது 713 கோடியாக உயர்ந்துள்ளது. 2050ல் இந்த எண்ணிக்கை 955 கோடியாகவும், 2100ல் 1085 கோடியாகவும் உயரும். இந்திய மக்கள்தொகை, 1950ல் 38 கோடியாக இருந்தது. 2011 கணக்கின் படி, 121 கோடியாக உயர்ந்தது.   இந்நிலையில் இந்த எண்ணிக்கை, 2050ம் ஆண்டில் 162 கோடியாக அதிகரிக்கும் எனவும், அப்போது இந்தியா தான் உலக மக்கள் தொகையில் முதலிடத்தை பெறும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.   மாறாகத் தற்போது 139 கோடி மக்கள் தொகையைக் கொண்டு, முதலிடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை, 2050ல், 138 கோடியாக நிலைத்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுகிறது.   அனைத்து துறைகளிலும் முன்னேறிய சீனாவை, மக்கள்தொகையில் முந்துகிற சாதனையை இந்தியா படைக்க உள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 11-07-2013

தமிழர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் AR ரஹ்மான் பாடல்.

எங்கு தமிழர்களுக்கு கஷ்டப்பட்டாலும், அவர்கள் மனம் தளராமல், துவண்டுபோகாமல் மீண்டும் எழுந்து நிற்கவேண்டும்  என்ற உத்வேகத்தை கொடுக்கும் விதத்திலேயே நெஞ்சே எழு பாடலை உருவாகியிருப்பதாகவும், நிச்சயம் இப்பாடல் அனைத்து தமிழர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியை தரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மரியான் திரைப்படம் எதிர்வரும் ஜூலை 19ம் திகதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் அத்திரைப்படத்தின் பாடல்கள் உருவானதன் பின்னணி குறித்து அத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டி ஒன்றில் இதனை தெரிவித்தார்.  அப்பேட்டி பின்வருமாறு

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 11-07-2013

ஈழப்பெண் என மனம் திறக்கும் MIA.

நாம் அப்படித்தான் இருப்போம்! மனம் திறந்துள்ளார் பொப் இசைப்பாடகி மாயா. இலங்கையில் பிறந்த மாதங்கி அருட்பிரகாசம் பின்னர் அரசியல் தஞ்சம் கோரி பிரித்தானியா வந்தார்.   ஈழத்தமிழ் பெண்ணான இவர் பின்னர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பொப் இசைப்பாடகியாக இருக்கிறார்.   மாதங்கி என்ற பெயரைச் சுருக்கி MIA என்று மாற்றிக்கொண்டார். மடோனா போன்ற உலகப் புகழ்மிக்க பாடகிகளுடன் இவர் இணைந்து பல இசை நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார்.   சமீபத்தில் இவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். தான் ஒரு பாடகியா இல்லை அரசியல் வாதியா என்று யாரும் முடிவெடுக்க முடியாது. பாடகி அரசியல் பேசக்கூடாது என்று விதிகள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   இலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   இலங்கை குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒரே பாடகி இவராகத்தான் இருக்க முடியும். XXகளை தான் ஆதரிக்கிறேன்! அவர்கள் விடுதXXபோராட்ட வீரர்கள் என்று இவர் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.   இதனால் உலகில் வாழும் பல சிங்களவர்கள், இவருக்கு எதிராகப்போர்கொடி தூக்கியுள்ளார்கள்.   இவர் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு முன்னார் சிங்களவர்கள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியும் உள்ளார்கள்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 11-07-2013

NASA வுக்கு 7 வயதுச்சிறுவன் எழுதிய கடிதம்.

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறுவன் வருங்காலத்தில் தான் விண்வெளி வீரர் ஆகவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டுமென ‘நாசா’ மையத்திற்கு கடிதம் எழுதி அசத்தியுள்ளார்.  7 வயது சிறுவன் டெக்ஸ்டர், இவருக்கு வருங்காலத்தில் விண்வெளி வீரர் ஆகவேண்டுமென்பதுதான் லட்சியம். இது தொடர்பாக இவர் அண்மையில் அமெரிக்காவின ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.   விண்வெளி வீரராகவேண்டுமென்ற ஆர்வத்தை பாராட்டி 'நாசா' மையம் இந்த சிறுவனின் கடிதத்திற்கு ஒரு பதிலையும், விண்வெளி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது. நாசாவிற்கு எழுதிய கடித்தத்தில், அச்சிறுவன், ‘‘அன்புள்ள நாசா, எனது பெயர் டெக்ஸ்டர். நீங்கள் செவ்வாய் கிரகத்துக்கு 2 பேரை அனுப்பப் போவதாக அறிந்தேன். எனக்கும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல ஆசையாக உள்ளது. ஆனால் எனக்கு 7 வயது தான் ஆகிறது.   எனவே, நான் வருங்காலத்தில் விண்வெளிக்கு செல்ல ஆசைப்படுகிறேன். நான் ஒரு விண்வெளி வீரர் ஆக என்ன செய்ய வேண்டும்?" எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலதித்த நாசா, சிறுவனை ஊக்கப்படுத்தும் விதத்தில் பதிலளித்திருந்தது. இது டெக்ஸ்டரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   இதுக்குறித்து தெரிவித்த டெக்ஸ்டரின் தாய் கத்ரினா,   டெக்ஸ்டரின் ஆர்வத்திற்கு ‘நாசா’அளித்துள்ள பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த கடிதத்தை பிரித்து படித்ததும் டெக்ஸ்டர் மகிழ்ச்சி அடைந்தான். அங்கிருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களை தனது அறையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான் எனக் கூறினார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 10-07-2013

ஈழச்சிறுமிக்கு உதவிய சூரியா - தமிழ்க்கிறுக்கன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் இலங்கை தமிழ் அகதி மாணவி தினுஷியாவிற்கு, தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம் படிக்க உதவியுள்ளார் சூர்யா.   குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார்.   அதில் தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும், நான்கு ஆண்டுகள் படிப்பிற்க்கான செலவையும், உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர். அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா கட்டிய பணம் திருப்பிக் கேட்க பணத்தை கல்லூரி நிறுவனம் திரும்ப அளித்தது.   அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள மற்ற மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம் கூறினார். அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் இடம் பிடித்த ஒரே மாணவி செல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல்.   தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும், அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் ஈழத்து அகதிகள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.   செய்திப்பகிர்வு: தமிழ்க்கிறுக்கன் - இத்தாலி.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 10-07-2013

இங்கிலாந்திலிருந்து சென்றவர் இளவாளையில் கைது.

வீசா காலம் முடிவடைந்த நிலையில் இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானிய பிரஜை யாழ்ப்பாணம் இளவாளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.   இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்து பிரித்தானிய பிரஜையை மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். வீசா முடிவடைந்த பின்னரும் என்ன காரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார் என்பது தொடர்பாக இளவாளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   இது குறித்து கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்துக்கும் பொலிஸார்  அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 10-07-2013

விஜய், தனுஷ் ஜோடியாக பிபாசா பாசு.

தமிழ்ப்பட இயக்குனர்களின் பாலிவுட் ஹீரோயின் மோகம் இன்னும் விட்டபாடில்லை. பெண்ணானப்பட்ட பிபாசா பாசுவையே ஒரு படத்தில் நடிக்க வைத்து ஆனந்தப்பட்டார் விஜய். சச்சின் படத்தில் ஏராளமான சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த பிபாசா பாசுவால் அப்படத்திற்கு குண்டுமணி அளவுக்கு கூட கலெக்ஷன் அதிகமாகவில்லை. அப்படியிருந்தும் இந்த மோகம் இன்னும் தொடர்வதுதான் வேதனை. விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் இணையவிருக்கும் புதிய படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்தான் என்று உறுதியாக கூறிவிட்டார் முருகதாஸ். அதற்கு 'ஆமாம்' போட்டுவிட்டு ஆவலோடு காத்திருக்கிறார் விஜய்யும். இதற்கிடையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் அல்லவா? இந்த படத்திற்கு யாரை ஹீரோயினாக்கலாம் என்று குரூப் டிஸ்கஷனே நடந்ததாம்.  சமீபத்தில் தனுஷும் சோனம் கபூரும் இணைந்து நடித்த இந்திப்படம் ஹிட். இந்த ஒரு சென்ட்டிமென்ட் போதாதா? சார்... இந்த படத்திற்காக ஏதாவது பாலிவுட் ஹீரோயினை இறக்குமதி பண்ணலாமா என்றாராம் தனுஷ். அதை ஆமோதித்த கே.வி.ஆனந்த் அலியா பட் என்ற ஹீரோயினுடன் பேசிக் கொண்டிருக்கிறாராம். அண்ணியை பார்க்க ஆசைப்படும் தனுஷ் ரசிகர்கள் கூகுள் இமேஜுக்குள் குதித்து அலியா பட்டை தேடி தரிசித்துக் கொள்ளவும்.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 09-07-2013

சர்வதேச கால்ப்பந்துப்போட்டியில் 3வது இடத்தில் தமிழீழம்.

ஐ நா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வதேச கால்பந்துப் போட்டித் தொடரில் தமிழீழ அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. 3வது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியில், தமிழீழ அணி ரேஷியா என்ற அணியுடன் மோதி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.   நேற்று நடந்த இந்தப் போட்டியை பெரும் திரளானோர் பார்த்து ரசித்தனர். தமிழீழ அணிக்கு எடுத்த எடுப்பிலேயே சர்வதேச போட்டி ஒன்றில் 3வது இடம் கிடைத்திருப்பது தமிழீழ மக்களிடையே மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   டின்வேல்ட் மைதானத்தில்  டின்வேல்ட் என்ற மைதானத்தில் இந்தத் தொடருக்கான போட்டிகள் நடந்தன. மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன. இரு பிரிவாக பிரிந்து  அதில் ஏ பிரிவில் 3 அணிகளும், பி பிரிவில் 3 அணிகளும் இடம் பெற்றிருந்தன. இறுதிப் போட்டியில் ஆசிடேனியா - செயின்ட் ஜான்ஸ்  இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. அதில் ஏ பிரிவிலிருந்து ஆசிடேனியா அணியும், பி பிரிவிலிருந்து செயின்ட் ஜான்ஸ் அணியும் மோதுகின்றன. 3வது இடத்தைப் பிடித்த தமிழீழம்  ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழீழ அணி 3வது இடத்துக்கான போட்டியில் ரேஷியாவுடன் மோதியது. விறுவிறுப்பான போட்டி  3வது இடத்துக்கான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. அதில் தமிழீழ அணி அபாரமாக ஆடியது. 5 கோல்கள் போட்ட அந்த அணி, ரேஷிய வீரர்களை ஒரு கோல் கூட போட விடாமல் தடுத்து வெற்றியைப் பெற்றது. தமிழீழ தேசிய கீதம் தமிழீழ தேசிய கீதத்துடன் போட்டி உற்சாகமாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டிய பால் ரீனி  இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் பால் ரீனியும் போட்டிக்கு வந்திரு்நதார். தமிழீழ அணி வீரர்களை அவர் பாராட்டினார். 3வது இடத்துக்கான பரிசையும் அவரே வழங்கினார். தமிழீழ அணியின் வெற்றி குறித்து தமிழ் இளையோர் அமைப்பு பெருமிதம் தெரிவித்துள்ளது  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 09-07-2013

கடும் மழையினால் ரொறொன்ரோவில் போக்குவரத்து, மின்சாரம் நெருக்கடியில்.

Greater Toronto Area பகுதியிலும் நகரத்தின் பல பாகங்களிலும் கன மழையினால் பயணிகள் சிம்ம சொப்பன நிலைமைக்குள்ளாகியுள்ளனர். சுரங்க வழி ரயில் போக்குவரத்து சேவை முற்றாகத் துண்டிக்க ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிசிசாகாவின் 80சதவீத பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. Toronto பூராகவும் 300,000 பாவனையாளர்கள் மின்வலுவை இழந்திருப்பதாக ரொறொன்ரோ Hydro பிரிவினர் கூறியுள்ளனர்.   மக்களை அவரவர் வீடுகளில் இருக்கும்படியும் சுரங்கபாதைகள் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் ரொறொன்ரோ பொலிசார் கூறியுள்ளனர். ரோறொன்ரோ நகரம் கடுமையான இடிழுழக்கம், வெள்ளம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வாகனம் நகராமல் நின்றுவிட்டால்  உதவி கிடைக்கும் வரை வாகனத்திற்குள் இருக்கும் படி பொலிசார் கூறியுள்ளனர். Don Valley Parkway தெற்கு Bayview Avenue விலிருந்து Gardiner Expressway மூடப்பட்டுள்ளது. Don River கரை Yonge Street and York Mills Road ற்கு அண்மையில் Hoggs Hollow பகுதியில் உடையக்கூடிய அபாயம் இருப்பதாக ரொறொன்ரோ பிராந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்கவும் 5 மறுமொழிகள் சுதர்சன் 09-07-2013

சூர்யாவுக்கு கோல் சீட் கொடுக்க முடியாத திரிஷா.

சூர்யாவை வைத்து கெளதம வாசுதேவன் மேனன் இயக்கும் படமான ’துருவ நட்சத்திரம்’ இதில் சூர்யாவுக்கு முதலில் ஜோடியாக ஒப்பந்தமானவர் த்ரிஷா.    ஆனால், இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை த்ரிஷா நீக்கப்பட்டு, அமலாபால் ஒப்பந்தமானார். இப்படி சொல்லாமல் தன்னை நீக்கியதற்கு காரணம் சூர்யாவாகத்தான் இருக்கும் என நினைத்தாலும் சூர்யா படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு நான் பிஸியாக இருக்கிறேன் என்று டுவிட்டரில் அனைவரிடமும் சொல்லி வருகிறார் த்ரிஷா.   இதை சூர்யா கண்டுகொள்ளாமல் இருந்தாலும், ஏ.ஆர்.ரகுமான் இசையில், கெளதமன் இயக்கம், சூர்யா ஹீரோ என தனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு கை நழுவிபோய்விட்டது என்ற ஆதங்கம் மனசுக்குள் இல்லாமல் இல்லை.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-07-2013

இரவு வேலை செய்யும் பெண்களுக்கு மார்பு புற்று நோய் ஏற்படும் அபாயம்.

இரவு நேர பணியில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கனடாவை சேர்ந்த உடலியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும் மார்பக புற்றுநோய் குறித்து இதில் தீவிரமாக ஆராயப்பட்டது.   கனடாவின் வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கிங்ஸ்டன், ஆன்டாரியோ நகரங்களில் மார்பக புற்றுநோய் பாதித்த 1,134 பெண்களிடமும், அதே வயதில் நோய் பாதிக்காத 1,179 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 3ல் ஒருவர் தொடர்ந்து இரவு பணியில் வேலை பார்ப்பவர். 15 முதல் 29 வயது வரையில் அதாவது 14 ஆண்டுகள் வரை தொடர்ந்து இரவு பணிக்கு சென்றுவந்த பெண்களுக்கு எந்த பாதிப்பும் தெரியவில்லை. ஆனால், 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள், தொடர்ந்து இரவு பணியில் இருந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு 2 மடங்காக இருந்தது. இதற்கு முக்கிய காரணம், உடல் சுரப்பிகள்தான் என்று தெரியவந்துள்ளது.   அதாவது தூங்காமல் வேலை செய்வதால், உடலில் தூக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது. தூக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தூக்கத்தை வரவழைக்கவும் உதவும் மெலடோனின் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது. இதனால் உடல் பாதிக்கப்படுகிறது. மேலும் விட்டமின் டி குறைவது, உடல் கடிகாரத்தில் மாற்றம் ஏற்படுவது, வாழ்க்கை முறை மாற்றம் ஆகிய அனைத்தும் மார்பக புற்றுநோய் மற்றும் உடலில் கட்டிகள் போன்றவற்றுக்கு முக்கிய காரணமாகின்றன என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-07-2013

நைஜீரிய பள்ளியில் 42 மாணவர்கள் சுட்டுக்கொலை.

நைஜீரியாவில் அரசு பள்ளியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள். இதனால் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியா யாபே மாகாணம் போடிஸ்கம் நகரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மமுட். இங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கிறார்கள்.   நேற்று பள்ளியில் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் சிதறி ஓடினர். பள்ளி விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை பிடித்து இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.   தீவிரவாதிகளின் வெறியாட்டத்தில் மாணவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள். மேலும் சிலர் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் மேற்கத்திய கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.   இந்த தாக்குதலை தொடர்ந்து நைஜீரிய அரசு அட்மவா, பர்னோ, யாபே உள்ளிட்ட பகுதியில் நள்ளிரவு முதல் தொடர்ந்து அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 08-07-2013

San Franciscoவில் கொறிய விமான விபத்தில் இருவர் பலி.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் போயிங் 777 ரக விமானம் ஓடுதளத்தின் சுற்றுச்சுவரில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இது மிகப்பெரிய பயணிகள் விமானம் ஆகும். இவ்விபத்தில் 2 பேர் பலியாயினர். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.   விபத்தின் காரணமாக ஏர்போர்ட் மூடப்பட்டது. தென் கொரியாவின் சியோல் நகரத்தில் இருந்து 300 பயணிகளை ஏற்றி கொண்டு ஆசியனா ஏர்லைன்ஸ் போயிங் 777 ரக விமானம் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வந்தது. இது அமெரிக்க விமானங்களிலேயே 2 வது மிகப்பெரிய பயணிகள் விமானமாகும். இது வழக்கம் போல் 28 ஆவது ஓடுதளத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது ஓடுதளத்தில் தரையிறங்கிய சில வினாடிகளில் அதன் வால் பகுதி சுற்றுச்சுவரில் மோதியது. இதில் விமானத்தின் வால் பகுதி உடைந்து தீப்பிடித்து கொண்டது. மேலும், விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையில் விழுந்து நொறுங்கியது.   இதனால் பயணிகள் அலறி அடித்து கூச்சல் போட்டனர். உடனடியாக விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள், விமானத்தில் இருந்து எமர்ஜென்சி கதவு வழியாக பயணிகள் சிலர் கீழே குதித்தனர். இதில் பலர் காயம் அடைந்தனர். தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் விமானம் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. இந்த விபத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட தீயில் கருகி 2 பயணிகள் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் குழந்தைகள் உள்பட 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டது. அடுத்தடுத்து வந்த விமானங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

மேலும் படிக்கவும் 6 மறுமொழிகள் சுதர்சன் 07-07-2013

மேற்கத்தேய நிறுவனங்களின் வாயை பிளக்கவைக்கும் இந்திய மாணவர்கள்.

அப்பிள், கூகுள் என பல முன்னணி நிறுவனங்கள் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கை கடிகாரத்தை தயாரித்து வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகின்றன.   எனினும் அப்பிளோ, கூகுளோ இதுவரை அவ்வாறானதொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவில்லை.   இந்நிலையில் பெரிய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ஸ்மார்ட் கடிகாரத்தை இந்திய மாணவர்கள் சிலர்  தயாரித்துள்ளனர். குறித்த ஸ்மார்ட் கடிகாரம் 'அண்ட்ரோய்ட்லி' எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் முற்றிலும் அண்ட்ரோய்ட் இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.   இரண்டு அங்கு திரையைக் கொண்டுள்ளதுடன் 2 மெகாபிக்ஸல் கெமராவினை கொண்டுள்ளது.   புளூடூத், ஜி.பி.எஸ், 256 எம்.பி. ரெம்,  வை- பை, 8 மற்றும் 16 ஜிபி மெமரி என பல வசதிகளை இக்கைக்கடிகாரம் கொண்டுள்ளது. இதன் விலை 150 பவுஸ்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன், சிம் அட்டயை உபயோகிப்பதன் மூலம் இதனூடாக குறுந்தகவல் அனுப்புதல், அழைப்பினை மேற்கொள்ளுதல் போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும்.   இந்திய மாணவர்களின் தயாரிப்பிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 07-07-2013

திருமணத்தின் பின் இரு மாதங்களில் குழந்தைப்பிரசவம்.

திருமணத்தின் பின் இரண்டு மாதங்களில் பெண்ணொருவர் குழந்தையைப்பிரசவித்துள்ளார். இந்த விபரீதச்சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.   யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார்.   இந்நிலையில் குடும்ப வாழ்க்கையை தொடர முன்னர் தனது வயிற்றில் கட்டி உள்ளதாகவும் அதனை சத்திரசிகிச்சை செய்து அகற்றவுள்ளதாகவும் அவர் கணவனுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.   இதனைத் தொடர்ந்து குறித்த பெண் திடீரென்று நேற்று முன்தினம் அதிகாலை வவுனியாவில் குழந்தையென்றை பிரசவித்துள்ளார்.   இதனால் அதிர்ச்சியுள்ள கணவன் உடனடியாகவே குழந்தையையும் குறித்த பெண்ணையும் வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணம் அழைத்து வந்து மாமியார் வீட்டில் நடந்தவற்றைக் கூறி மனைவியையும் அவர் பிரசவித்த குழந்தையையும் விட்டுச் சென்றுள்ளார்.   அத்தோடு அவர் சீதனங்களாக பெற்ற நகை பணம் என்பவற்றையும் திரும்ப கொடுத்துள்ளார்.   இதுதொடர்பாக பெண்ணின் வீட்டார் தீவிரமாக விசாரித்த போது யாழ்ப்பாணத்திலுள்ள ஆச்சிரமமென்றிலுள்ள துறவியொருவரே காரணமென்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்து பெண்ணின் வீட்டார் குறித்த துறவியை சென்று விசாரித்த போது ஆரம்பத்தில் அதனை ஏற்க மறுத்த அவர் பின்னர் ஒருவழியாக அதனை ஏற்றுக் கொண்டு குழந்தைக்கு தானே தகப்பன் என்றும் தெரிவித்துள்ளார்.   இதனைத் தொடர்ந்து உடனடியாகவே அவர் தனது ஆச்சிரமத்தை பூட்டிவிட்டு திறப்புக்களை அருகிலுள்ளவர்களிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 07-07-2013

சிறுமியின் பிரேதத்தை தோண்டியெடுத்து பாலியல் பலாத்காரம்.

சிறுமியொருவரின் சடலம் புதைக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இனந்தெரியாத நபர்களால் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஆறாம் வகுப்பில் கல்வி கற்கும் குறிப்பிட்ட சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை குஜ்ரன்வலா மாவட்டத்தில் கிலா டெடார் சிங் எனும் இடத்திலுள்ள தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது மின்சாரத்தால் தாக்குண்டு உயிரிழந்துள்ளார்.   அன்றைய தினம் மாலை சிறுமியின் உடலை நல்லடக்கம் செய்த அவரது உறவினர்கள், மறுநாள் அவரது கல்லறைக்கு விஜயம் செய்த போது சிறுமியின் சடலம் கல்லறைக்கு அருகில் அலங்கோலமான நிலையில் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவத்தையடுத்து பிரதேசவாசிகள் சிறுமியின் சடலத்திற்கு நிந்தனை செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதிகளில் மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   இந்நிலையில் பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.   அத்துடன் மயானத்தில் புதைகுழி தோண்டுபவர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 06-07-2013

எலே, சிங்கம்-2 நல்லாயிருக்காம்லே.

இதுவரை சூர்யா நடித்த எந்தப் படத்துக்கும் இல்லாத பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியுள்ள சிங்கம் 2 படம் பார்த்தவர்கள் படம் விறுவிறுப்பாகவும் ரசிகனை ஒரு நிமிடம் கூட யோசிக்க விடாமல் கட்டிப் போடும் வகையில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.    வருகிற முதல் தகவல் செய்திகளை வைத்துப் பார்க்கும்போது சூர்யாவைப் பொறுத்தவரை இந்தப் படம் அவரை மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. சிங்கம் 2... எலே படம் நல்லாருக்காம்லே!! சூர்யா நடித்த ஏழாம் அறிவு படம் அவருக்கு வசூல் ரீதியாக நன்றாக அமைந்தாலும், எதிர்மறை விமர்சனங்களையே சந்தித்தது. சமீபத்தில் வெளியான மாற்றான் படம் தோல்வியைத் தழுவியது. இந்த சூழலில் சிங்கம் 2 படம் குறித்து ஆரம்பத்தில் அவ்வளவு உற்சாகமான செய்திகள் வரவில்லை. இதனால் சூர்யா சற்று நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தார்.  இப்போதோ, சிங்கம் 2 படம் குறித்த முதல் தகவல்கள் சூர்யாவையும் அவரது ரசிகர்களையும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. இந்தப் படத்தை ஒரு நாள் முன்பாகவே வெளிநாடுகளில் திரையிட்டுவிட்டனர். படம் பார்த்த ரசிகர்களில் ஒருவர், "இதற்கு முன் சூர்யாவுக்கு இப்படி ஒரு படம் அமையவே இல்லை. சிங்கம் படத்தை விட, இந்த இரண்டாம் பாகம் இரு மடங்கு விறுவிறுப்பாகவும் பொழுதுபோக்காகவும் உள்ளது.    ஹரியின் கடும் உழைப்பு, சூர்யாவின் அநாயாசமான நடிப்பு, விவேக் - சந்தானத்தின் காமெடி, இந்தப் படத்தை வசூலில் அள்ள வைக்கப் போதுமானது," என்று கூறியுள்ளார். சிங்கம் 2... எலே படம் நல்லாருக்காம்லே!! ஒரு இணையதளம் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், "இரண்டே முக்கால் மணிநேரம் இந்தப் படம் ஓடினாலும், ஒரு இடத்தில் கூட போரடிக்கவில்லை," என்று குறிப்பிட்டுள்ளது. சென்னையில் இன்று சிங்கம் 2 ஏக அமர்க்களத்துடன் வெளியாகியுள்ளது. காலையிலேயே சிறப்புக் காட்சிகள் பார்த்தவர்கள் படம் குறித்து நல்லவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 06-07-2013

விமானத்தின் கதவை திறந்த அரசியல்வாதியின் மகனால் நாட்டின் ஒழுங்குக்கே அவமானம்.

நாட்டில் அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு சட்ட ஒழுக்கக் கோவை கிடையாது. ஆனால் இவ்வாறான விடயங்களை முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியமென அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை மிகக் கேவலமான விடயம் என ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.   அவர் மேலும் தெரிவிக்கையில், மலசலகூட கதவு என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த குடிபோதையில் இருந்த கிரிக்கெட் வீரர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் அவதானத்துடன் இருக்கின்றோம். இந்த கிரிக்கெட் வீரரின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கும் மற்றும் முழு நாட்டிற்குமே நன்கு தெரியும்.   நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு போட்டிக்குச் சென்ற இந்த வீரர் 230 பயணிகளை ஏற்றிய விமானத்தில் குடிபோதையில் அநாகரீகமாக ஒழுக்கமின்றி நடந்து கொண்டமை முழு நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.   இவ்வாறு பெரிய பதவியில் இருக்கும் நபர்களின் பிள்ளைகளுக்கு ஒழுக்கக் கோவை, சட்ட ஒழுங்கு கிடையாது. இவ்வாறான செயற்பாடுகளை முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியமென அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை கேவலமான விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   இதேவேளை தனது மகன் ஓடும் விமானத்தின் கதவைத் திறந்த விவகாரம் ஒரு சின்ன விடயம் எனவும், அதனை ஊடகங்களே முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து பெரிய பிரச்சினையாக்கியுள்ளது கண்டிக்கததக்கது எனவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 06-07-2013

மணக்காமல் பிள்ளை பெறும் தாய்மார் சுவிசில் அதிகரிப்பு.

சுவிட்சர்லாந்தில் திருமணத்திற்கு முன்பு குழந்தைபெறும் தாய்மார்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளியியல் விபரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2012ம் ஆண்டில் திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்களின் சதவீதம் 20.02 அதாவது 82,200 என கணக்கிடப்பட்டுள்ளது. ஜரோப்பிய நாடுகளின் மொத்தக் கணக்கெடுப்பில் 39.5 சதவீதம் பெண்கள் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுள்ளர்.   கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2012ல் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை 1.7 சதவீகிதம் அதிகரித்துள்ளது. பெண்கள் தங்களது 30 வயதிலிருந்து முடிவு காலம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள பெரிதும் விரும்புகின்றனர். இதற்கு முன்னர் 35 வயதில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள பெரிதும் விரும்புவர். ஆனால் தற்போது 30 வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் பெரிதும் விரும்புவதாக சுவிட்சர்லாந்தின் புள்ளியியல் ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுடைய இறுதி காலம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 05-07-2013

மருத்துவக்குணம் கொண்ட உள்ளிப்பூடு.

  நம் சமையலறை அலமா‌ரி‌யி‌ல் உள்ள ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு எப்போதும் மு‌ன்னு‌ரிமை உண்டு.   பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.   பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.   பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். பூண்டை உணவில் சேர்த்தால் நல்லது. ஆனால் அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன. அதனால், அப்படியே கடித்து விழுங்குவது மிகவும் நல்லது.   தொண்டை கரகரப்பாக இருருந்தால் நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விட்டால் உடனே சரியாகும். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால் சர்க்கரை அளவை சீராக்குகிறது. இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து விடும்.   பூண்டில் "அலிசின்" என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.   அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு. மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும் அலர்ஜி நீங்கிவிடும். பல் வலி வந்தால் ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் பல்வலி போய்விடும்.   தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டால் ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் என எதுவும் வராது.   பூண்டு சாப்பிட்டால் மூச்சு விட்டாலும் அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 05-07-2013

ஜெனீவாவில் உலகின் அதி விலை கூடிய சண்ட்விச்.

கிளப் சாண்ட்விச் விற்பனையில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா தான் உலகின் விலையுயர்ந்த நகரமாம்.   ஹோட்டல்.கொம் என்ற இணையதளத்தில் இந்த கிளப் சாண்ட்விச் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தளத்தில் உள்ள தகவலின் படி சராசரியாக கிளப் சாண்ட்விச் சுவிஸ்ஸில் உள்ள நகரத்தில் 19.96 யூரோ (28.91 பிராங்க் அல்லது 31.32 டொலர்) ஆகும். கடந்த வருடம் பாரிஸ் நகரம் தான் (17.99 யூரோ) விலையுயர்ந்த நகரமாக கருதப்பட்டது. இந்த கிளப் சாண்ட்விச் பலவகைகளில் உள்ளன. ஆனால் பொதுவாக இதில் சிக்கன், பன்றி இறைச்சி, கீரைகள் மற்றும் வெண்ணெய் போன்ற ஒரு வகை கிரீம்கள் அனைத்தும் கலந்து சுடப்பட்ட ரொட்டிகளில் கலந்து முக்கோண வடிவத்தில் வெட்டப்பட்டு தரப்படுகிறது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 05-07-2013

சூரியாவின் செயலால் முணுமுணுக்கும் வேறு நட்சத்திரங்கள்.

இமயமலைக்கு போனேன், ஹரித்துவார்ல கை நனைச்சேன்' என்று தங்களது ஆன்மீக பயணத்தை பற்றி அடிக்கடி சிலாகிக்கும் முன்னணி ஹீரோக்கள் பலர் இப்போது கப்சிப்!   சூப்பர் ஸ்டார் ரஜினி, விஷால், சரத்குமார், லேட்டஸ்ட்டாக சிம்பு என்று அடிக்கடி இமயமலைக்கு சென்று அதை நட்சத்திர டூரிஸ்ட் ஸ்பாட்டாக ஆக்கிய பெருமையும் இவர்களுக்கு உண்டு. இன்று அந்த இடமே ரணகளமாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் அவரவர் பங்குக்கு அரை காசோ, கால் காசோ டொனேஷன் வழங்கி வரும் நிலையில் மேற்படி ஸ்பாட்டுக்கு நெருங்கிய தொடர்புடைய இவர்கள் யாரும் வாயையும் திறக்கவில்லை. பர்சையும் திறக்கவில்லை.    உத்தரகாண்ட் வெள்ளத்துக்கு ஒரு பைசா கூட கொடுக்க முன்வராத இவர்களை பற்றி யாரும் முணுமுணுக்காவிட்டாலும், ஒருவர் தந்திருக்கும் உதவித் தொகை இப்படியெல்லாம் கேள்விகளை கிளப்பிவிட்டிருக்கிறது. அந்த ஒருவர் சூர்யா. இந்த கொடூரமான வெள்ள சேதத்திற்கு தன் பங்காக பத்து லட்சம் நிதியுதவி செய்திருக்கிறார் அவர்.   இதை தொடர்ந்து மற்றவர்களும் 'கொடுத்துத் தொலையணுமே' என்ற நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதைவிட கொடுமை, 'இந்தாளு சும்மாயில்லாம எதுக்கு நம்ம உயிரை வாங்குறாரு' என்றும் முணுமுணுக்கிறார்களாம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 04-07-2013

புலிகளால் கடித்து கொலை செய்யப்பட்ட இத்தாலி பணியாளர்.

இத்தாலியில் மூடப்பட்ட வனவிலங்கு காப்பகத்தில் வைக்கபட்டிருந்த 3 புலிகள் உணவு அளிக்க வந்த ஊழியரை கடித்து குதறின. இதனால் பலத்த காயமடைந்த அந்த ஊழியர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.   இத்தாலியில் உள்ள பினெரோலோ வனவிலங்கு காப்பகம் இயங்கி வந்தது. பொருளாதார நெருக்கடியால் இந்த காப்பகம் கடந்த 2009 ஆம் ஆண்டு மூடப்பட்டது.    எனினும், காப்பகத்தில் இருந்த 9 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை அதே இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த 5 ஆண்டுகளில் இங்குள்ள புலிகள் குட்டிகளை ஈன்று பல்கிப் பெருகியுள்ளன.  இந்நிலையில், இந்த காப்பகத்தில் பல வருடங்களாக பணியாற்றிய 72 வயது நபர் புலியின் கூண்டை திறந்து அதற்கு உணவு அளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கூண்டிலிருந்த 3 புலிகள் அவர் மீது பாய்ந்து கடித்து குதறின.    சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் அந்த முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.    முறையான பாதுகாப்பின்றி புலிகள் பராமரிக்கப்படுவது குறித்து ஏற்கனவே அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 04-07-2013

சுவிசில் சின்னஞ்சிறு குழந்தையை சித்திரவதை படுத்தியவருக்கு 12 ஆண்டுகள் தண்டனை.

கொடூரமான முறையில் தனது பச்சிளம் குழந்தையை மிருகத்தனமாக சித்திரவாதைப்படுத்திய 28 வயது நிரம்பிய நபருக்கு சூரிச் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.   மனைவிக்கும் அவருடைய நண்பருக்கும் பிறந்திருக்கும் குழந்தை என நினைத்து மனைவி மீதுள்ள சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வாறு குழந்தையை சித்திரவதை செய்துள்ளார்.   அவருடைய மனைவி மிகவும் அழகாக இருப்பதனாலும் அவர் மீதுள்ள பொறமையினால் குறித்த நபருக்கு சந்தேகம் வந்ததை தொடர்ந்து குழந்தையை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்.   மனைவி வீட்டில் இல்லாத போது சூடான பாலை குழந்தையின் வாயில் ஊற்றுவது, பச்சிளம் கைகைளை முறிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளார்.   இதனால் குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இறுதியா குழந்தையில் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளார். குழந்தை உடல் முழுவதும் நீல நிறமாக மாறிய பின்பே தகுந்த சாட்சியங்களுடன் இவரை பிடித்து நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தியுள்ளனர்.   நான்கு மாதங்கள் ஆன குழந்தை தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக சூரிச் நீதிமன்றம் குறித்த நவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 04-07-2013

நமீதாவுக்கு அரசியலில் மோகம்.

சமீபத்தில் விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்த மச்சான் நடிகை, தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளாராம்.   அதாவது, சாலையில் கவனமாக செல்ல வேண்டும் என்பதே அது. போன் பேசியபடியோ அல்லது என் சிந்தனையிலோ வண்டி ஓட்டாதீர்கள் என பொது நலன் கருதி தகவல்களை வெளியிட்டுக் கொண்டே வந்த நடிகை, திடீரென, ‘நான் மட்டும் அரசியலில் இருந்து, ஆட்சியில் அமர்ந்திருந்தால், இப்படி வண்டி ஓட்டுபவர்களுக்கு ஆயிரக் கணக்கில் அபராதம் போடுவேன்' என சந்து கேப்பில் சிந்து பாடினாராம்.      விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு வந்த சந்தேகம் என்னவென்றால், ‘இம்மா பெரிய பஞ்சு மூட்டைக்குள், இப்படியொரு அரசியல் ஆசை ஒளிந்திருக்கிறதா? என்பது தான்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-07-2013

மின்சாரச்செலவை கட்டுப்படுத்த பிரான்சில் புதிய சட்டம்.

பிரான்ஸில் ஆற்றலை சேமிக்கும் வகையில் புதிய வகை சட்டமானது அபிவிருத்தி அமைச்சகத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளது.   பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ் வெளிச்சத்தின் நகரம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.   பிரான்ஸ் நாட்டில் உள்ள நினைவிடங்கள், நியான் விளக்குகளால் அமைக்கப்பட்ட நகரமைப்பு ஆகியவற்றின் மூலம் மாவட்ட நிதி அமைப்பிற்கு நல்ல வருமானம் உண்டு.   இந்நிலையில் அந்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் இதர கட்டிடங்களில், எரியும் விளக்குகள் ஒவ்வொரு நாளும் மாலை அணைத்துவிட வேண்டும் என்று அந்நாட்டு அபிவிருத்தி அமைச்சகமானது அறிவித்துள்ளது. இப்புதிய சட்டம் அமலுக்கு வந்ததால் இரவு நேரத்தில் தெருக்கள் கடைகள் அனைத்தும் இருட்டாக காட்சியளிக்கின்றன.   அமல்படுத்தப்பட்ட சட்டத்தின் படி கட்டிடங்களின் விளக்கானது காலை 1.00 மணிக்கு அணைத்துவிட வேண்டும்.   மேலும் வணிக மையங்கள், அருங்காட்சியங்கள் ஆகியவற்றின் விளக்குகள் வேலை முடிவடைந்த 1 மணிநேரத்திற்கு பின்பு அணைத்து விடவேண்டும் மற்றும் வேலை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உபயோகப்படுத்தவேண்டும். இச்சட்டத்தினை மீறி நடப்பவர்களுக்க 750 யூரோ அபராதமாக விதிக்கப்படும், திடீரென்று அமல்படுத்தும் இச்சட்டமானது ஆற்றலை மற்றும் பணத்தை சேமிப்பதற்காக அரசாங்கத்தின் முயற்சியாகும்.   இதன் மூலம் 200 மில்லியன் யூரோவானது ஒரு வருடத்திற்கு சேமிக்கப்படுகிறது, இச்சேமிப்பானது 750,000 குடும்பங்களின் ஆற்றல் சேமிப்பிற்கு இணையானதாகும்.   மேலும் இச்சட்டமானது சுற்றுலாத் தளங்களுக்கும், முக்கியமான திருவிழா சார்ந்த இடங்களின் பாதுகாப்புக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-07-2013

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சீனாவில் தண்டனை.

சீனாவில் பெற்றோரை கவனிக்காமல் இருக்கும் பிள்ளைகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.   சீனாவில் ஒரு குழந்தை திட்டம் 1970 ஆம் ஆண்டுகளில் அமலுக்கு வந்தது. இதனால், பெரும்பாலான குடும்பங்களில் ஒரேயொரு வாரிசு மட்டுமே உள்ளனர். அவர்களும் இப்போது வேலைவாய்ப்பு தேடி வேறு நகரங்களுக்கு சென்று விடுகின்றனர்.   இளையவர்கள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான வீடுகளில் வயதான பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 100-ல் 14 பெற்றோர்கள் இதுபோன்று கவனிப்பாரின்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூத்த குடிமக்களை பாதுக்காக்க புதிய சட்டம் ஒன்று சீனாவில் இயற்றப்பட்டுள்ளது.   இதன்படி, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களை சராசரியான இடைவெளியில் சென்று சந்தித்து அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டால், பெற்றோருக்கு தேவையான நிதி உதவியை மாதம்தோறும் தவறாமல் அளிக்கவேண்டும்.   அவ்வாறு பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை கவனிக்கவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளிக்கும்பட்சத்தில், போலீசார் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.   சீனாவில் 2015 ஆம் ஆண்டில் 221 மில்லியன் நபர்கள் 60 வயதை தாண்டியிருப்பார்கள் எனவும், 2050 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் முதியவாரக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-07-2013

சிறுநீர் கழிப்பதால் பேர்லினில் நித்திரையற்ற நிலை என புகார்.

ஜேர்மனியின் பெர்லின் பகுதியில் குடியிருக்கும் மக்கள் அண்டைவீட்டினரின் சிறுநீர் கழிக்கும் சத்தமானது மிகவும் இடையூறாக உள்ளது என்று புகார் கொடுத்துள்ளனர். அருகாமையில் உள்ளவர்கள் சிறுநீர் கழிக்கும் சத்தமானது கழிப்பறையின் சுவரையும் தாண்டி வருகின்றது.   இந்த சத்தத்தினால் அலுவலகங்களுக்கு சென்று திரும்பி வந்து ஒய்வெடுக்கும் எங்களுக்கு இடையூறாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.     இது குறித்து நீதிபதி கூறுகையில், ஒரு மனிதனின் சிறுநீர் கழிக்கும் சத்தமானது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றுதான் என கூறி அப் புகாரினை நிராகரித்துவிட்டார்.     மேலும் ஒரு கட்டிடத்தின் தன்மையை பொறுத்தே தீர்வு கூற இயலும். இக்கட்டிடமானது 1950ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளதால் இதிலிருந்து வரும் சத்தத்தை கட்டுப்படுத்த இயலாது.   ஏனெனில் இக்கட்டிடம் மெல்லிய சுவரானது எழுப்பப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 02-07-2013

முதிர்ந்த கதாநாயகர்களுடன் நடிக்க மறுக்கும் நயன்தாரா.

வயதான ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டார். ஏற்கனவே ரஜினியுடன் ‘சந்திரமுகி’ படத்தில் நடித்தார். பாலகிருஷ்ணாவுடன் ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் புதுப்படமொன்றில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் நயன்தாரா மறுத்து விட்டார். தன்னை விட 10 வயது அதிகமான கதாநாயகர்களுடன் நடிக்க ஆட்சேபனை இல்லை, 15 வயது அதிகமான ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். மூத்த நடிகர்களுடன் ஜோடியானால் இளம் ஹீரோக்கள் ஒதுக்கி விடுவார்கள் என பயந்தே இந்த முடிவை எடுத்துள்ளாராம். நயன்தாரா கைவசம் இப்போது 6 படங்கள் உள்ளன. அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’ படத்திலும், உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நடிக்கிறார். இந்தியில் வித்யாபாலன் நடித்து ஹிட்டான ‘கஹானி’ படம் தமிழ், தெலுங்கில் ’அனாமிகா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் கர்ப்பிணி வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார், ஹரி இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 02-07-2013

கனடாவில் உயர்நவீன கடவுச்சீட்டு இன்றுமுதல் உபயோகம்.

கனடா தினத்தன்று உயர்நவீன விலையுயர்ந்த கடவுச்சீட்டு கனடிய பயணிகளின் பாவனைக்கு வருகின்றது.   யூலை மாதம் 1ம் திகதியிலிருந்து புதிதாக வடிவமைக்கப்பட்டு, பல பாதுகாப்பு அம்சங்களடங்கிய, அத்துடன் பாவனையாளர்களின் சொந்த விபரங்களை உள்ளடக்கிய மின்னியல் சில்லு பொருத்தப்பட்ட ePassport ஐ கனடிய மக்கள் பெறுவார்களென கூறப்படுகின்றது.   புதிய பாஸ்போட் பக்கங்கள் முழுவதும் மறைந்த வீரர்கள் அதிகாரிகள் போன்றோரின் விம்பங்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இவை கனடாவின் வரலாற்றை வெளிப்படுத்துவதாகவும் மனதைக் கவரக்கூடியதாகவும் உள்ளன. இப்பிம்பங்கள் RCMP, Terry Fox, Vimy Ridge memorial {1 ம் உலகப் போரில் மறைந்த கனடியரின் ஞாபகார்த்தமாக பிரான்சில் கட்டப்பட்ட நினைவாலயம்} போன்றனவற்றை உள்ளடக்கியுள்ளன. குறிப்பிட்ட ஒரு கோணத்தில் மட்டும் பார்க்க கூடியதாக உள்ள இந்த அமைப்பு பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும் மோசடி செய்வதற்கு இயலாததாகவும் இருக்குமென கூறப்படுகின்றது. 36 பக்கங்களைக் கொண்ட இப்புதிய பாஸ்போட்டின் 5வருடத்திற்கான கட்டணம் 87 டொலர்களிலிருந்து 120 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 வருடத்திற்கான பாஸ்போர்ட்டும் முதல் தடவையாக கிடைக்க கூடியதாக இருக்குமெனவும் அதற்கான கட்டணம் 160டொலர்களெனவும் கூறப்படுகின்றது.   பழைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அதன் கால வரையறை முடியும் வரை உபயோகப்படுத்தலாமென கூறப்படுகின்றது.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 01-07-2013

கருத்தடை மருந்துகள் சிங்களவர் உபயோகிக்கத்தடை.

சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுபல சேனா என்ற சிங்கள அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவுறுத்தி உள்ளார். கட்டுநாயக்காவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், "இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தற்போது அவர்களின் இனத்தை கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்பட அனைத்து துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில் தமது விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஊடாக உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு நாட்டை கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம்.   முஸ்லிம் வர்த்தகத்தையும், முஸ்லிம் மருத்துவர்களையு சிங்களவர்கள் நிராகரிக்க வேண்டும்" என்றார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 01-07-2013

மழையில் சிரித்து நடனமாடிய சகோதரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் மழையில் நடனமாடிய குற்றத்திற்காக இரண்டு சகோதரிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பாகிஸ்தானில் மழையில் நடனமாடி, அதனை வீடியோ எடுத்த சகோதரிகளை சுட்டுக்கொன்ற வெறிச்செயல், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த சகோதரிகளான நூர் ஷேசா(16), நூர் பஸ்ரா (15) மேலும் சில சிறுவர்களுடன் மழையில் நடனமாடியுள்ளனர். இதனை வீடியோவில் பதிவு செய்த அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.    இந்நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், இந்த சகோதரிகள் மற்றும் அவரது தாயாரை ஈவிரக்கமின்றி சுற்றுக்கொண்டனர்.  குடும்ப கவுரவத்தை குலைத்ததாக கருதிய தனது உறவினர்கள் தான் கூலிப்படையை ஏவி தங்கைகளையும், தாயையும் சுட்டுக் கொன்றதாக பலியான பெண்களின் அண்ணன் புகார் அளித்துள்ளார்.    இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் இக்கொடூரச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் தேடிவருகின்றனர்.   மழையில் நடனமாடியதை ஒரு குற்றமாக் கருதி அப்பாவி பெண்கள் இருவரை கொடூரமாக சுட்டுக்கொண்ட சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 01-07-2013

இயக்குனராகும் சந்தானம்.

இன்றைய தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கி கொண்டிருக்கும் சந்தானம் விரைவில் புதிய படத்தை இயக்க உள்ளார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக்குக்கு அடுத்த படியாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சந்தானம்.   இந்நிலையில் இவர் புதிய படமொன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகர் கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.   இதேபோன்று நடிகர் காதல் சுகுமார் திருக்குறள் என்ற படத்தை இயக்கி வருகிறார்.   மேலும் நடிகர் வையாபுரி ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.   இவ்வாறு நகைச்சுவை நடிகர்கள் பலரும் பல அவதாரங்களை எடுத்து வருவதால், தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்ற முடிவு செய்துள்ளாராம் சந்தானம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 28-06-2013

நீரிழிவுக்கு நிவாரணம்.

நீரிழிவு நோயின் ஒரு வகையான முதல்ரக நீரழிவு நோயை மாற்றுவதற்கான நோய்த் தடுப்பு மருந்தின் மாதிரி பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக இருந்ததாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 80 நோயாளிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை குறித்து நாடுகடந்த மருத்துவ விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான தகவல்கள், புதிய நோய்த்தடுப்பு மருந்து இதற்கேற்றவாறு உடலின் நோயெதிர்ப்புச் சக்திக்கு பயிற்சி கொடுக்கும் என்று கூறுகின்றன. இந்தச் சோதனையின் முடிவுகள் மிகவும் முக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலைத் தாக்குகின்ற பக்ரீரியாக்கள் மற்றும் வைரசுக்களை தாக்குவதற்கான பயிற்சியை உடலின் நோயெதிர்ப்புச் சக்திக்கு(முறைமைக்கு) பயிற்றுவிப்பதே நோய்த்தடுப்பு மருந்துகளின் செயற்பாடாகும். அந்தப் பயிற்சியின் மூலம் உடலைத் தாக்கவரும் கிருமிகளை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி தாக்கி அழித்துவிடும். ஆனால், நீரிழி நோயைப் பொறுத்தவரை, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி உடலின் பாகங்களை தாக்குவதன் மூலம் அது உருவாகிறது. அதாவது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி உடலின் கணயத்தில் உள்ள பீட்டா கலங்களை தாக்குவதால் அது ஏற்படுகிறது. இந்த பீட்டா கலங்கள்தான் உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கின்றன. ஆனால் நோய் எதிர்ப்புச் சக்தி அந்த பீட்டாக் கலங்களை தாக்கி அழித்துவிட்டால், இன்சுலின் சுரக்கமுடியாமல் போய் விடுகிறது. இதன் மூலமே முதல் வகை நீரிழிவு நோய் உருவாகிறது. ஆகவே இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய நோய்த்தடை மருந்து, உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு, கிருமிகளை தாக்குவதற்கான பயிற்சியை கொடுப்பதற்குப் பதிலாக, அந்த நோய் எதிர்ப்புச் சக்தி செயற்படாமல் இருக்க அது பழக்குகிறது. ஆகவே குறித்த நோய் எதிர்ப்புச் சக்தி கணயத்தின் பீட்டாக் கலங்களை தாக்காது. அதனால் இன்சுலின் தொடர்ச்சியாகச் சுரக்கப்பட, முதல் வகை நீரிழிவு நோயும் வராது. இந்த புதிய நோய்த்தடுப்பு மருந்து இன்சுலினைச் சுரக்கும் குறித்த பீட்டா கலங்களைத் தாக்கும் வெண்குருதிச் சிருதுணிக்கைகளை செயற்படாமல் இருக்கச் செய்துவிடும். இந்தப் பரிசோதனை நல்ல பலனைத் தந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், இரண்டாவது வகை நீரிழிவு நோய் ”கூடாத உணவுப் பழக்க வழக்கங்களால்” ஏற்படுவதால், அதனை இந்த நோய்த்தடுப்பு மருந்தால் தடுக்க முடியாது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 28-06-2013

ஆயிரம் தமிழகதிகளை திருப்பியனுப்பும் சுவீடன்.

உள்நாட்டு போர் காரணமாக சுவீடனில் தஞ்சமடைந்த இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை நாடுகடத்தப்போவதாக சுவீடன் அரசு அறிவித்துள்ளது.   இலங்கையின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தாம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக சுவீடன் அரசு அறிவித்துள்ளது. சுவீடன் அரசு இந்த நடவடிக்கை குறித்து எழுத்து மூலமாக இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.   அத்துடன் சுவீடனில் தங்கியுள்ள இலங்கையின் புகலிடக் கோரிக்கையார்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றையும் நடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் 4 மறுமொழிகள் சுதர்சன் 28-06-2013

ஆப்பில் தானாக ஏறி இருக்கும் பறோட்டா சூரி.

  பரோட்டா சூரி செய்யும் அலப்பறையால் அவரே அவருக்கு ஆப்பு வைத்துக் கொள்வார் போல என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டாவை அசால்டாக சாப்பிட்ட காட்சி மூலம் பிரபலமானவர் பரோட்டா சூரி. அதன் பிறகு அவர் படிப்படியாக வளர்ந்து வருகிறார்.   விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்தார். அவரின் நடிப்பை பார்த்தவர்கள் சூரி பெரிய ஆளாக வருவார் என்று கூறினார்கள். இந்நிலையில் கொஞ்சம் வளர்ந்ததும் சூரி தனது சேட்டையைக் காண்பிக்க ஆரம்பித்துள்ளாராம். அவர் பண்ணும் அலப்பறையால் அவருக்கு அவரே ஆப்பு வைத்துக் கொள்வாரோ என்று அவரது நலம் விரும்பிகள் வருத்தப்படுகிறார்களாம்.      உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தில் முதல் பாதியில் சூரியும், இரண்டாவது பாதியில் சந்தானமும் வருகிறார்களாம். முதல் பாதியில் நடித்த சூரி இரண்டாம் பாதியிலும் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்துள்ளார். இதைப் பார்த்து சந்தானத்தின் நண்பரனான உதயநிதி டென்ஷனாகிவிட்டாராம். அதன் பிறகு சந்தானமே வந்து சூரியை சமாதானம் செய்தாராம்.    முன்னதாக தில்லுமுல்லு படத்தில் சந்தானம் சூரியை நக்கலடிக்கும் காட்சிகளுக்கு முதலில் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டுள்ளார். இப்படி ஓவரா அலும்பு பண்ணினால் கோலிவுட்டில் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாது தம்பி என்று சினிமா வட்டாரத்தில் கூறுகிறார்களாம்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-06-2013

பிணைத்தொகையை அறவிடும் பிரித்தானிய குடிவரவுத்திணைக்களம்.

குடியேற்ற விதிகளை மீறும் அபாயம் உள்ள பிரித்தானியாவுக்கு வரும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களுக்கு நாட்டுக்குள் வரும் முன் விசா பிணையாக ரொக்கத் தொகையைப் பெற பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.   எதிர்வரும் நவம்பர் முதல் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.     இந்த விசா பிணைக்கு உள்ளாகும் நாடுகளில் பங்களாதேஷ் மற்றும் கானாவும் உள்ளடங்குகின்றன. இதன்படி 6 மாத பயண விசாவில் வரும் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் க்BP3,000 பிணைத்தொகையாக அறவிட பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் பிணைத்தொகை விசா காலத்தையும் மீறி தங்குவோரிடம் அபராதமாக ஈட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.     இந்தத் திட்டம் தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு செயலாளர் தெரேசா மே பிரதமர் டேவிட் கெம்ருனின் கன்ஸர்வேடிவ் கட்சியின் அனுமதியைப் பெற காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.     எதிர்வரும் 2015 ஆம் ஆண்டில் பிரித்தானியாவுக்கு வருவோரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க பிரதமர் கெமரூன் எதிர்பார்த்துள்ளார்.     கடந்த ஆண்டில் பிரித்தானியாவுக்கு ஆறு மாத விசாவில் இந்தியாவில் இருந்து 296,000 பேரும் நைஜீரியாவிலிருந்து 101,000 பேரும் பாகிஸ்தானில் இருந்து 53000 பேரும் இலங்கை, பங்களாதேஷில் இருந்து தலா 14,000 பேரும் பிரிட்டனுக்கு சென்றுள்ளனர்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-06-2013

'ரஷ்யா-இந்தியா கூட்டுச்சதியில் ராஜீவ் கொலை'.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைச்சம்பவம் இந்திய-ரஷ்ய கூட்டுச்சதியின் பிரகாரம் நடைபெற்றதாக ரஷ்யப்பத்திரிகையொன்று பரபரப்புத்தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் வெளிவரும் முன்னணி செய்திப் பத்திரிகைகளில் ஒன்றான Moskovskij Komsomolets  கடந்த ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது.   இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் தXXழ விXXலைXXலிகள் இயக்கத்துக்கு எதுவித தொடர்புகளும் கிடையாது என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஷ்யா நாட்டு உளவுத்துறை எஸ்விஆர் பிறப்பித்தது எனவும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.   இந்தியாவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் செயற்பட்டதாகவும், அவருக்கான உத்தரவுகள் சில ரஷ்யா உளவுத்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டதாகவும் பரபரப்பான தகவல்கள் அந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான பின்புலத்தில் இந்தியாவில் கிடைத்த வேற்று நாடுகள் சிலவற்றின் தொடர்புகள் மூலம் ராஜீவ் படுகொலை சம்பவம் நடைபெற்றதாகவும் அந்தப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் 3 மறுமொழிகள் சுதர்சன் 27-06-2013

நெல்சன் மண்டேலா இறந்துவிட்டதாக வதந்திகள் பரவல்.

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தரும் அந்நாட்டு மக்களின் தேசத் தந்தையாகப் புகழப்படுபவருமான நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்று காரணமாகப் பிரிட்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் இறந்து விட்டார் என இணையத்தில் வதந்திகள் பரவியுள்ளன. 2012 ஜூலை 18 இல் தனது 94 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய மண்டேலா டிசம்பர் மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். சிறிது காலம் ஓய்வெடுத்த அவர் நுரையீரல் தொற்றுக் காரணமாக ஜூன் 8 ஆம் திகதி பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். தற்போது அவரின் உறுப்புக்களின் இயக்கம் படிப்படியாகக் குறைந்து உடல்நிலை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா தொடர்ச்சியாக மண்டேலாவின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றார். இதேவேளை தென்னாபிரிக்காவின் அனைத்து மக்களும் இவருக்காகக் கண்ணீர் மல்கிப் பிரார்த்தித்து வருவதுடன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அவரின் பூர்வீக வீட்டிற்கு விஜயம் செய்து அங்கு இவருக்காக சோகத்துடன் பிரார்த்தித்து வருகின்றனர். மேலும் மண்டேலா சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலை வாசலில் இன்று காலை கூடிழ நூற்றுக் கணக்கான சிறுவர் சிறுமியர் அவருக்கா பிரார்த்தனைப் பாடல்களைப் பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டுவிட்டரின் ஊடாக மண்டேலா இறந்து விட்டார் என்ற வதந்தி பரவியுள்ளதாகவும் இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தென்னாபிரிக்க அரசு தெரிவித்துள்ளது. எனினும் சண்டே டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் மண்டேலாவின் படத்துடன் இது அவரை வழி அனுப்பி வைக்கும் தருணம் என்ற தலையங்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்கவும் 7 மறுமொழிகள் சுதர்சன் 26-06-2013

ஹிந்திச்சினிமாவில் தனுஷ், தமன்னா பெருமை.

தனுஷ் இந்தியில் நடித்த 'ராஞ்சனா' படம் தற்போது வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடுகிறது. திரையரங்கில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு நடிகை தமன்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது எல்லைகளை கடந்துகொண்டிருக்கும் சினிமாவில், முன்பெல்லாம் தென் இந்திய நடிகர், நடிகைகள் இந்தியில் பிரபலமாவது கடினம். ஹேமமாலினி, ஸ்ரீதேவி என குறிப்பிட்ட சிலரே அங்கு ஜெயித்தனர். ஆனால் இப்போது எல்லோராலும் இந்திப் படங்களில் நடிக்க முடிகிறது.தனுசும் இந்தியில் நடித்து சாதித்துவிட்டார். அவரது இந்திப்படமான 'ராஞ்சனா' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனுசுடன் தமிழ் படத்தில் நான் நடித்துள்ளேன். சக நடிகரான அவர் இந்தியில் சாதித்தது பெருமையாக உள்ளது. நானும் இந்திப் படங்களில் நடிக்கிறேன், என்னைப் போல் வேறு பல தென் இந்திய நடிகைகளும் இந்திப் படங்களில் நடிக்கின்றனர்.      என் தோழிகளான ஸ்ருதி, இலியானா இவர்களும் இந்தியில் நடிக்கிறார்கள். தனுஷ் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கு இந்தி திரையுலகில் பாராட்டுகள், படவாய்ப்புகளும் குவிகின்றன. தென்னிந்திய நட்சத்திரங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. படஉலகை தமிழ், தெலுங்கு, இந்தி என பிரித்து பேசும் முறை மாறி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 26-06-2013

தூங்கிய வங்கியூழியரால் மில்லியன் தொகை பரிமாறல்.

ஜேர்மனியைச்சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் உடல் அசதியினால் கணனியின் தட்டச்சில் (கீபோர்ட்) கைவைத்தவாறு தூங்கியதில் தவறுவதலாக சிறிய தொகைப்பணத்திற்குப் பதில் 37,269 மில்லியன் ரூபா பரிமாறப்பட்டுள்ளது.   குறித்த ஊழியர் தொகை 62.40 யூரோக்கள் மாத்திரமே பரிமாற வேண்டி இருந்துள்ளது. ஆனால் அசதியினால் ஏற்பட்ட தூக்கத்தில் அவரது கை தட்டச்சின் 2 என்ற இலக்கம் அழுத்தப்பட 222,222,222.22 யூரோ என பதிவாகிவிட்டது. இலங்கை மதிப்பில் 37,269 மில்லியன் ரூபா ஆகும்.   இருப்பினும் குறித்த ஊழியர் விட்ட தவறை உடனடியாக கண்டுபிடித்து திருத்தம் செய்துள்ளது வங்கி. மேலும் தவறிழைத்த ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளது வங்கி.   இதனை எதிர்த்து ஊழியர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அசதியினால் ஏற்பட்ட தவறுக்காக தண்டிக்காது மீண்டும் அவரை பணியில் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 26-06-2013

தோல்வியுற்ற நாடுகளில் இலங்கை 28வது இடத்தில்.

உலகில் தோல்வியுற்ற நாடுகளின் இந்த ஆண்டுக்கான பட்டியலில் சிறிலங்கா 28வது இடத்தைப் பிடித்துள்ளது.   வொசிங்டனை தளமாக கொண்ட அமைதிக்கான நிதியம் என்ற சிந்தனைக் குழாம் ஆண்டுதோறும் தோல்வியுள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.   தோல்வியுற்ற நாடுகளின் இந்த ஆண்டுக்கான பட்டியலில் 178 நாடுகள் தொடர்பாக கணிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.   இந்தப் பட்டியலில் சிறிலங்கா 28 வது இடத்தில் உள்ளது. சிறிலங்கா 92.9 புள்ளிகளுடன் எச்சரிக்கைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.   கடந்த 2011ம் ஆண்டில் 93.1 புள்ளிகளுடன் சிறிலங்கா 29வது இடத்தில் இருந்தது.   இந்த ஆண்டு சிறிலங்கா ஒரு இடம் முன்னேறியுள்ளதன் மூலம், சிறிலங்காவின் மோசமான நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சோமாலியா முதலிடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் பின்லாந்து உள்ளது.   பாகிஸ்தான் 13வது இடத்திலும். பங்களாதேஸ் 29வது இடத்திலும், நேபாளம் 30வது இடத்திலும், இந்தியா 79வது இடத்திலும், மாலைதீவு 88வது இடத்திலும் உள்ளன.      

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 25-06-2013

ஸ்ரீதேவியுடன் இணைந்து பிரபுதேவா நடனம்.

இந்திய சர்வதேச திரைப்பட அகாடமி (இஃபா) விருது இந்த ஆண்டு மக்காவுவில் நடைபெற இருக்கிறது.   வருடந்தோறும் வெளிநாடுகளில் வழங்கப்படும் இஃபா விருது இந்த ஆண்டு மக்காவுவில் அடுத்த மாதம் 4ம் திகதி நடைபெற இருக்கிறது.   இந்தி நடிகைகள் பலர் நடனமாடும் இவ்விழாவில் நடிகை ஸ்ரீதேவியுடன் பிரபுதேவா நடனம் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி நடித்த படங்களில் இருந்து பாடல்கள் இடம்பெறும்.   இதற்கான ஒத்திகையில் ஸ்ரீதேவியும், பிரபுதேவாவும் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 25-06-2013

குடிவெறியில் மணவறையில் தாலிகட்ட முயன்ற மாப்பிள்ளை.

இந்தியாவின் ஒடிசாவில் குடிபோதையில் தள்ளாடியபடி மணமேடைக்கு வந்த மணமகனை, மணமகள் புறக்கணித்து வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.     சப்பள்ளி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம், பர்வத் மல்லிக், 26, என்ற மணமகனுக்கும், 22 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மண்டபத்தில், மணமகள், மங்கல தருணத்திற்காக காத்திருந்த போது, மதுபானம் ஏராளமாக அருந்தியதால், தள்ளாடிய படி, மேடையில் ஏறினான், மணமகன் பர்வத்.   இதைப் பார்த்த மணமகள், கழுத்தில் போட்டிருந்த மாலையை கழற்றி, வீசி எறிந்து விட்டு, மேடையை விட்டு கீழிறங்கினாள். "திருமண நாள் அன்றே மது அருந்தி, சுயநினைவு இல்லாமல் இருக்கும் இவனை திருமணம் செய்ய மாட்டேன்' என தெரிவித்து, தன் உறவினர்களுடன் வெளியேறினாள்.   இதை அறிந்த பொலிஸ் மற்றும் மகளிர் அமைப்புகள், மணமகன் குடும்பத்தினரை கண்டித்தனர்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 25-06-2013

பௌத்த, கிறீஸ்தவ மதத்தலைவர்களுக்கிடையில் அடிதடி.

கொழும்பை அண்மித்த ஹங்வெல்லை பகுதியில் பௌத்த மதகுரு ஒருவருக்கும், கிறிஸ்தவ போதகர் ஒருவருக்கும் இடையிலான மோதலை அடுத்து பிரதேசத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.   நேற்று காலை ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிறு விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.   அப்போது அவ்விடத்துக்கு வந்த அருகிலுள்ள பௌத்த விகாரையின் மதகுரு, கிறிஸ்தவ ஆராதனைகளை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதங்கள் முற்றி, அடிதடி வரை நிலைமை மோசமடைந்துள்ளது. பௌத்த மதகுருவும், கிறிஸ்தவ போதகரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.   இந்த மோதலை அடுத்து ஹங்வெல்ல பகுதியில் பௌத்த மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கிடையில் கடும் பதற்ற நிலை உருவெடுத்துள்ளது.   பிரதேசம் எங்கும் பொலிசார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.   உத்தியோகப்பற்றற்ற முறையில் ஊரடங்குச் சட்டம் அப்பகுதியில் நடைமுறையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.   இதற்கிடையே ஹங்வெல்ல பிரதேசத்தின் இஸ்லாமிய மதத்தலைவரான மௌலவி ஒருவர் பொலிசாரின் வேண்டுகோளை அடுத்து, பௌத்த- கிறிஸ்தவ தரப்புகளை சமாதானப்படுத்தி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 24-06-2013

மணிவண்ணனின் மரணம்.

அரசியல்வாதி, இயக்குநர், நடிகர், எழுத் தாளர் என பன்முகத் தன்மை கொண்ட மணி வண்ணன் பல்வேறு உடல் உபாதைகளுடன் இருந்த நிலையில் கடந்த 15-ந்தேதி தனது 58-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.   விஷயமுள்ள மனிதராக இருந்தாலும் கூட அணுகுவதற்கும், பழகுவதற்கும் எளிமையானவரான மணிவண்ணனின் மரணம் அவரது அபிமானிகளை மட்டுமின்றி, பொதுமக்களையும் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பவர்களையும் கூட கலங்க வைத்துவிட்டது.   மணிவண்ணனை அறிந்தவர்களிடம் பேசிய போது அவரின் வாழ்க்கைப் பயணம் குறித்து சுவாரஸ்யமான பல செய்திகள் கிடைத்தன.   மணிவண்ணனின் அப்பா சுப்பிரமணியம் கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சி தி.மு.க. கிளை செயலாளர். இதனால் சிறுவயதிலேயே அரசியலால் கவரப்பட்ட மணிவண்ணன், உதயசூரியன் சின்னம் வரைந்த பதாகை ஏந்தி ஓட்டுகேட்டுப் போனதுண்டு. கம்யூனிஸ்ட் சிந்தனையாளரான ஸ்கூல் வாத்தியார் காளிமுத்து மாக்ஸிம் கார்க்கியின் “தாய்’ நாவலை மணிவண்ணனுக்கு படிக்கக் கொடுத்தார்.   அதன்பிறகு தோழர் வள்ளுவதாசன் மூலம் “வால்காவிலிருந்து கங்கை வரை’ உள்ளிட்ட நூல்களைப் படித்தவருக்கு கம்யூனிஸ சித்தாந்தங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட… பாடும் திறமை கொண்ட மணிவண்ணன் வலது கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.   மார்க்சிய லெனினிஸ்ட் நக்ஸல்பாரி அமைப்பில் மாநிலக் குழு உறுப்பினராகவும் 1976-ல் தன் 21 வயதில் தீவிரமாக செயல்பட்ட மணிவண்ணனின் இயக்கப் பெயர் “கருப்பையா’.இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமாக அரசியலில் தீவிரம் காட்டாமல் சென்னை வந்தார். “கிழக்கே போகும் ரயில்’ படம் பார்த்துவிட்டு மிக நீண்ட கடிதம் ஒன்றை பாரதிராஜாவுக்கு எழுதி அனுப்புகிறார். அழைப்பு வந்ததன் பேரில் பாரதிராஜாவை சென்று சந்தித்தார்.   புத்தக வாசிப்பில் தீவிரமான மணிவண்ணனின் பேச்சு பாரதிராஜாவைக் கவர்ந்து விடுகிறது. வேலை இல்லாத இளைஞர்கள் பற்றிய கதை ஒன்றைச் சொல்கிறார் மணிவண்ணன். “நீயே வசனமும் எழுதிக் கொண்டு வா’ என்கிறார் பாரதிராஜா. அப்படி உருவானதுதான் “நிழல்கள்’ படம்.   “எவனோ ஒருத்தன் ஜிப்பாவும் கண்ணாடியும் போட்டுக்கிட்டு கோயம்புத்தூர்ல இருந்து வந்து கதை சொன்னான்னு “நிழல்கள்’ படம் எடுத்த! இப்ப என்னாச்சு? இதுவரை தோல்விப் படம் கொடுக்காத நீ தோத்திட்டியே’ என பாரதிராஜாவை பலரும் கடிந்து கொள்ள… பாரதிராஜா அலட்டிக் கொள்ளவில்லை. “என்ன செய்வியோ தெரியாது! உன்னோட கதை-வசனத்துல நான் சூப்பர் ஹிட் படம் தரணும். கதை ரெடி பண்ணு’ என மணிவண்ணனிடம் சொல்ல… அப்படி உருவானதுதான் “அலைகள் ஓய்வதில்லை’. “சிறந்த கதாசிரியர், சிறந்த உரையாடல்’ என இரண்டு மாநில அரசு விருதுகளை எம்.ஜி.ஆர். கையால் வாங்கினார் மணிவண்ணன்.   தொடர்ந்து பாரதிராஜாவிடம் உதவி டைரக்டராக, கதாசிரியராக பணிபுரிந்த மணிவண்ணன் “கோபுரங்கள் சாய்வதில்லை’ படம் மூலம் இயக்குந ரானார். அதன்பிறகு 1988-ல் “கொடி பறக்குது’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக மணிவண்ணனை திரையில் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.   “நூறாவது நாள்’, “முதல் வசந்தம்’, “அமைதிப்படை’ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியபடியே நடிப்பிலும் வளர்ந்து வந்த மணிவண் ணன் “காதல் கோட்டை’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். படத்தின் அபார வெற்றிக்குப் பின் மணிவண்ணன் இல்லாமல் படமே இல்லை என்கிற அளவிற்கு வாய்ப்புகள் குவிந்தது.   வீட்டில் போய் ரெஸ்ட் எடுக்க முடியாத அளவுக்கு பிஸி! இதனால் சொந்தமாக, எல்லா வசதியும் கொண்ட கேரவன் வேனை வாங்கிக்கொண்டு அந்த வேனிலேயே வாழ்கிற அளவிற்கு பிஸியானார். ம.தி.மு.க. கட்சியில் இணைந்து வைகோவுடன் அரசியலில் ஈடுபட்டார்.   இருதய ஆபரேஷன் செய்து கொண்ட பிறகு நீண்ட ஓய்வில் இருந்த மணிவண்ணன் தனது இயக்கத்தில் 50-வது படமாக “நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.’ படத்தை கடந்த மாதம் வெளியிட்டார்.   சத்யராஜை வைத்து ஒரு படம், தன் மகன் ரகுவண்ணனை வைத்து ஒரு படம்… என அடுத்தடுத்த பட வேலைகளுக்கு ஆயத்தமான நிலையில்தான் மணிவண்ணன் காலமாகிவிட்டார்.   “மணிவண்ணனுக்கு பாரதிராஜாவால் ஏகப்பட்ட மனஉளைச்சல். மணிவண்ணனோட அகால மரணத்துக்கு அதுவும் ஒரு காரணம்…’ என இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பலரும் பேசிக் கொண்டார்கள். குருவுக்கும்-சிஷ்யருக்கும் இடையே என்னதான் பிரச்சினை? “”காவேரிப் பிரச்சினைக்காக என் தலைமையில் நெய்வேலியில் திரையுலகினர் போராட்டம் நடந்தது.   பல நெருக்கடி சிரமங்கள் பட்டு அந்த போராட்டத்தை ஏற்பாடு செஞ்சேன். ஆனா அந்த கூட்டத்தை ஒரு ஆள் தன்னோட சுய அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக்கிட்டாரு. (விஜயகாந்த்) இராமேஸ்வரத்தில் மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கப்படுவதை கண்டிச்சு மிகப்பெரிய திரையுலக போராட்டத்தை ஏற்பாடு செஞ்சேன். அங்கே ஒருத்தன் அரசியல் சுயலாபத்துக்கு அந்த மேடையை பயன்படுத்திக்கிட்டான். (சீமான்) அதனால் இனி நான் எந்த போராட்டங்களையும் நடத்த மாட்டேன்!’ என சொல்லி வரும் பாரதிராஜாவுக்கு சீமானின் அரசியல் அவதாரம் பிடிக்க வில்லை. ஆனால் தன் நேசத்திற்குரிய சிஷ்யன் மணிவண் ணன் சீமானின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது பாரதிராஜாவுக்குப் பிடிக்கவில்லை! அதனால் மணிவண்ண னுடன் பேசுவதையே தவிர்த்துவிட்டார் பாரதிராஜா. பாரதிராஜாவை “அப்பா அப்பா’ எனச் சொல்லும் மணிவண்ணனால் பாரதிராஜா தன்னைப் புறக்கணிப்பதை தாங்க முடியவில்லை. அதற்காக அவர் சீமானுடனான தனது அரசியல் நிலைப்பாட்டையும் கைவிடவில்லை.   ஓரிரு மாதங்களுக்கு முன் எஃப்.எம். ரேடியோ சிட்டி பேட்டியில் அழுதே விட்டார் மணிவண்ணன். “அரசியல் ரீதியாக பிரிவு இருந்தாலும் என் ரெண்டாவது தாய், ரெண்டாவது தந்தை பாரதிராஜாதான்’ என்றவர் பாரதிராஜாவுக்கே ரேடியோ மூலம் உருக்கமான கோரிக்கை வைத்தார்.   “என் நேசத்திற்குரிய ஆசான்… அப்பா வணக்கம்! உங்க ஆசீர்வாதத்தால்… அரவணைப்பால் நான் நல்ல நிலையில் இருக்கேன். எனக்கு நீங்கதான் கல்யாணம் பண்ணி வச்சீங்க. நேத்து நடந்த மாதிரி இருக்கு. என் மகளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என் மகனுக்கும் கல்யாணம் ஆகப் போகுது. நான் எவ்ளோ பெரிய டைரக்டராக இருந்தாலும், எத்தனையோ பேர் சிலாகிச்சாலும், அப்பா… சத்தியமா சொல்றேன். நான் எப்பவுமே பாரதிராஜா அஸிஸ்டெண்ட்… (கதறி அழுகிறார்) எப்பவுமே பாரதிராஜா அஸிஸ்டெண்ட் தான். என் மேல கோபமா இருந்தா ஒரு அறை விட்டிருங்க. என் கூட பேசாம இருக்காதீங்க!’   … இப்படி உருக்கமுடன் வேண்டியிருந்தார்.   “பாரதிராஜாவுக்கு தான் மட்டும்தான் டைரக்டர்னு நினைப்பு! மத்தவங்களை ஒரு பொருட்டா மதிக்க மாட்டார்’ என்றும் “ரூம்ல உட்கார்ந்து வசனம் எழுதிக் கொடுக்கும் போது “நல்லா இருக்கு’னு பாராட்டுவார். அதே வசனத்தை ஷுட்டிங் ஸ்பாட்டில் சொல்லும்போது “என்னய்யா வசனம்?’னு ரைட்டிங் பேடை தூக்கி எறிவார்!’ என பாரதிராஜா குறித்து தன் அனுபவங்களையும் சினிமா மேடைகளில் சொல்லி வந்தார்.   இந்நிலையில் ஒரு பத்திரிகை கேள்வி-பதிலில் மணிவண்ணன் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த பாரதிராஜா “அவன் அதிகமா பொய் சொல்வான், பிச்சைக்காரப் புத்தி’ என்றெல்லாம் கடும் வார்த்தைகளில் சொல்லியிருந்தார். இந்தப் பதிலைப் படித்த எல்லோருமே அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு பதில் கேட்டு இரண்டு நாட்களாக மீடியாக்கள் மணி வண்ணனின் செல்போனை முற்றுகையிட… மணி வண்ணனுக்கு மிகுந்த மன உளைச்சல் உண்டாகிவிட்டது. அவரின் மரணத்திற்கான காரணங் களில் இந்த மன உளைச்சலும் முக்கியமானது!” என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.   பாக்யராஜை சந்தித்துப் பேசினோம். “”மணிவண்ணன் நல்ல படைப்பாளி! வித்தியாசமான புத்தகங்களைப் படிக்கிற படிப்பாளி! எழுத்தாளர், பேச்சாளர், சமூக சிந்தனை உள்ள முற்போக்குவாதி. ஈழத்தமிழர்கள் மீது எல்லாருக்குமே ஒரு பரிவு இருக்கும். ஆனா அவங்களை ரத்த உறவா பார்த்துப் பழகியவர் மணிவண்ணன். எனக்குப் பிறகுதான் பாரதிராஜாவிடம் சேர்ந்தார். ஆனாலும் பாரதிராஜாவுக்கு பிடித்தமானவராக இருந்தார் மணிவண்ணன். ஈகோவே பார்க்கமாட்டார். டிஸ்கஷன்ல ஒரு நல்ல ஸீனைச் சொன்னாபோதும், சொன்னவங்க காலைத்தொட்டு வணங்குவார். என்னோட “ஆராரோ ஆரிரரோ’ படத்தில வர்ற “அதிர்ச்சி பைத்தியம்’ கேரக்டரை அவர்தான் சொன்னார். பாரதிராஜா கோபம்கிறது குழந்தைக் கோபம் மாதிரி. தன் படங்கள்ல ஸ்கிரிப்ட்ல ஒர்க் பண்ற திறமையானவங்க தன்னை விட்டு விலகும்போது கோபப்படுவார். எல்லார் மேலயும் பாரதிராஜா கோபப்பட மாட்டார். தனக்குப் பிடிச்சவங்க மேலதான் ரொம்ப கோபப்படுவார். ஓவர் அபெக்ஷனில் பேசுறது பாரதிராஜா வோட வழக்கம். பாரதிராஜா, மணி வண்ணனைப் பத்தி பதில் சொன்ன நேரத்துல மணி வண்ணனோட துயர மரணம் நிகழ்ந்திருச்சு. அது தான் வருத்தமா இருக்கு” என்கிறார் துயரத்துடன்.   இயக்குநர் சீமானிடம் பேசியபோது, “”எதனால் மரணம் ஏற்பட்டது என்று மருத்துவர்களிடம் நான் விசாரித்தபோது, “எதிர்பாராத மனஉளைச்சல்களின் அழுத்தம் காரணமாக இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்றனர். அதனால், விமர்சனங்கள் அவரது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. இறப்பதற்கு முதல்நாள் இரவு 10 மணிக்கு, அப்பா பாரதிராஜா எழுதியவைகள் குறித்து அழுதபடியே என்னிடம் வருத்தப்பட்டார். அப்போ, “அப்பாதானே சொல்லியிருக்கிறார். வருத்தப்படாதீங்கப்பா’ன்னு அவரை தேற்றினேன். “ஆமாம்… ஆமாம்… அப்பாதானே… வருத்தப்படக்கூடாது’ என்றே தன்னை தேற்றிக் கொண்டார் அப்பா மணிவண்ணன். ஆனாலும் மன அழுத்தம் அவரை பாடாய்படுத்தியது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. எல்லாம் முடிஞ்சிடுச்சி. இறந்தவருக்காக இருப்பவரை காயப்படுத்த விரும்பவில்லை” என்கிறார் மிகுந்த சோகமாக. இளையராஜா பற்றி பாரதிராஜா, பாரதிராஜா பற்றி இளையராஜா, மணிவண்ணன் பற்றி பாரதிராஜா… சமீப காலமாக மீடியாக்களில் தெரிவித்துவரும் கருத்துக்கள் விரும்பக் கூடியதாக இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 24-06-2013

உலகின் அசிங்கமான நாய் 2013.

கலிபோர்ணியாவில் இடம்பெற்ற 25வது உலகத்தில் மிக அவலட்சணமான நாய் போட்டியில் மிகபெரிய தலை வாத்தின் பாதங்கள் கொண்ட முயல் வேட்டை நாய்வகையை சேர்ந்த 4 வயதுடைய வேட்டை நாய் வெற்றிபெற்றுள்ளது.   வெள்ளிக்கிழமை சிக்காகோ. கலிபோர்ணியாவில் நடந்த இப்போட்டியில்30 நாய்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. போட்டியில் கடைசி நிமிடத்தில் பங்கு கொண்ட Walle என்ற பெயருடைய இந்த நாய் வெற்றி பெற்றுள்ளது.   இதன் தோற்றம் பல்வேறு நாய்களின் பாகங்களையும், வேறு சில மிருகங்களினதும் பாகங்களையும் ஒட்டியது போன்ற தோற்றம் கொண்டதாக காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 3 மாத குட்டியாக இந்த நாய் தனக்கு கிடைத்ததாக அதன் சொந்தக்காரர் Tammie Barbee கூறியுள்ளார். பலர் தன்னிடம் வந்து இந்த நாய் சரியில்லை என்று தன்னிடம் கூறினார்களென்றும் ஆனால் தனக்கு அதைப் பிடித்திருக்கின்றதென்றும்கூறியுள்ளார்.   போட்டிக்கு வந்திருந்த நீதிபதிகள் நாயின் புதமையான வாத்துநடையால் தாங்கள் கவரப்பட்டதாக கூறியுள்ளனர்.   Walle ற்கு  $1,500  பரிசு கிடைத்ததோடு அடுத்த வாரம் தொலைக்காட்சியில் தோன்றும் வாய்ப்புக்களும் கிடைத்துள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 24-06-2013

23 பெண்களை மணந்து பணம் அபகரித்தவர்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்பெற்றுத் தருவதாய்க் கூறி இளம்பெண்களின் பணத்தைக் கரந்து, 23 திருமணங்கள் செய்துகொண்ட சந்தேக நபரொருவரை பத்தேகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.   48 வயதுடைய இந்த நபர், களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர். சந்தேகநபர், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 23 பேரைத் திருமணம் செய்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர், இளம் பெண்களை ஏமாற்றி 50 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளமையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்படும்போது வெவ்வேறு பெயர்களுடன் கூடிய ஆள் அட்டைகள் பலவும், திருமணச் சான்றிதழ்கள் 04 இருந்திருக்கின்றன. திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு போலி அன்புகாட்டி அவர்களது சொத்துக்களை தனக்குரியதாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளார்.   பொலிஸாரின் விசாரணைகளின்போது குறித்த சந்தேகநபர், தனக்கு நாட்டிலுள்ள முக்கிய புள்ளிகள் பலரைத் தெரியுமென்றும், அவர்கள் மூலமாக தொழில்பெற்றுத் தருவதாக இளம்பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தைக் கரந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.   இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 23-06-2013

20 ஆண்டுகளாக விஜய்யின் சினிமாப்பயணம்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்கள், பல அசத்தலான வெற்றிகள், ஏகப்பட்ட ரசிகர்கள், அரசியலிலும் ஓரளவு செல்வாக்கு என வலம் வரும் விஜய்க்கு இன்று பிறந்த நாள். சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் வரும் பிறந்த நாள் என்பதால் கூடுதல் முக்கியத்துவம். இந்த நாளில் வழக்கமாக அவர் காலையிலிருந்து மாலை வரை நலத்திட்ட உதவி, ரசிகர்கள் கொண்டாட்டம் என பிஸியாக இருப்பார். இந்த முறை அதெல்லாம் கட். அதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. விஜய் மீதும் அவர் படங்கள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், இன்று சினிமாவில் அவர் அடைந்திருக்கும் உயரம் சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை.   நாளைய தீர்ப்பு  விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. 1992-ல் வெளியானது. அதற்கு முன்பும் கூட நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக தலைகாட்டியிருக்கிறார். ஆனால் ஹீரோவாக அவர் நடித்தது நாளைய தீர்ப்பில்தான். ஆனால் அந்தப் படத்தை அத்தனை சுலபத்தில் பத்திரிகைகள் ஏற்கவில்லை. அப்படிக் கிண்டலடித்தன. விஜயகாந்த் செய்த உதவி முதல் படத்தில் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அன்றைக்கு முன்னணியிலிருந்த நடிகர் விஜயகாந்த் உதவியை நாடினார் விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன். தான் இந்த நிலைக்கு உயர எஸ்ஏசி முக்கிய காரணம் என்பதால், விஜய்க்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார் விஜயககாந்த். அந்தப் படம்தான் செந்தூரப்பாண்டி. வழக்கமான எஸ்ஏசி படம்தான் என்றாலும், விஜயகாந்த் என்ற பிராண்ட் அந்தப் படத்தை ஓரளவு வெற்றிப் படமாக்கியது.   ரசிகன் அடுத்து விஜய் சோலோ ஹீரோவாக களமிறங்கிய படம் ரசிகன். சங்கவியின் கவர்ச்சி, கவுண்டரின் கலகல காமெடி என கூடுதல் மசாலாக்களுடன் வந்த அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.   கேவலமான தாக்கு ஆனால் அப்போதும் கூட விஜய்யை மீடியா - பத்திரிகை உலகம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு முன்னணி வார இதழ் 'இந்த மூஞ்சியை காசு கொடுத்துப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் ரசிகர்களுக்கு,' என விமர்சனத்தில் எழுதியது. இதைக் கண்டித்து விஜய்யின் தந்தை நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக, அடுத்த இதழில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது பத்திரிகை. விஜய் மாதிரி நல்ல அழகான நடிகரே இல்லை எனும் அளவுக்கு வர்ணித்து மன்னிப்புக் கோரியது.   காலத்தின் கோலம்    இன்று அதே பத்திரிகை விஜய்க்கு சிறப்பு மலர் வெளியிடுகிறது. விஜய்யும் அலுவலகத்துக்கே போய் அதை வெளியிட்டு சிறப்பிக்கிறார். ஆனால் முன்னணிப் பத்திரிகைகள் எதுவும் கண்டுகொள்ளாத காலத்தில் விஜய்யை தூக்கி வைத்துக் கொண்டாடி மற்ற பத்திரிகைகளை - மீடியாவை விஜய் கண்டு கொள்வதே இல்லை என்பது வேறு விஷயம்!   தொடர் தோல்விகள்    ஆங்... விஷயத்துக்கு வருவோம்... ரசிகனுக்குப் பிறகு விஜய் நடித்த தேவா, விஷ்ணு, சந்திரலேகா, விஷ்ணு, ராஜாவின் பார்வையிலே, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்கள் பெரிதாகப் போகவில்லை.     பூவே உனக்காக அப்போதுதான் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக என்ற படம் வெளியானது. மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. விஜய்யை கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்கடுத்து வந்த நான்கு படங்கள் தோல்வியைத் தழுவின.     லவ் டுடே    விஜய் என்ற ஹீரோவுக்கு ஓரளவு மரியாதை உருவாக்கித் தந்த படம் லவ் டுடே. விஜய் - ரகுவரன் - சுவலட்சுமியின் நடிப்பு அந்தப் படத்தை பெரிய வெற்றிப் படமாக்கியது. பாக்ஸ் ஆபீஸில் விஜய்க்கென தனி மார்க்கெட் இருப்பதைப் புரிய வைத்தது இந்தப் படம்.   சிவாஜி கணேசனுடன்... தொடர்ந்து தந்தை எஸ்ஏசி இயக்கத்தில் ஒன்ஸ்மோர் என்ற படத்தில் நடித்தார். இதில் சிவாஜி கணேசன் முக்கிய வேடத்தில் நடித்தார். அவருடன் சரோஜா தேவியும் நடித்திருந்தார். பழைய இருவர் உள்ளம் பட க்ளைமாக்ஸை வைத்து சுவாரஸ்யமாக கதையை அமைத்திருந்தார் எஸ்ஏசி. படமும் நன்றாகப் போனது.    காதலுக்கு மரியாதை   ஒன்ஸ்மோருக்குப் பிறகு வசந்த் இயக்கத்தில் விஜய் நடித்த நேருக்கு நேரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு சங்கிலி முருகன் தயாரிப்பில் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் பாசில் இயக்கத்தில் நடித்தார் விஜய். அவரை ஒரு முழுமையான நாயகனாக மாற்றியது இந்தப் படம்தான். படமும் 200 நாட்களைத் தாண்டி ஓடி வசூலைக் குவித்தது. இந்த வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தன. விஜய்யின் கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது காதலுக்கு மரியாதை.   துள்ளாத மனமும் துள்ளும்   விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் என்றென்றும் காதல் ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இரண்டு படங்களுமே வெற்றி பெற்று நூறாவது நாளைத் தாண்டின. இது விஜய்யின் மார்க்கெட்டை இன்னும் ஏற்றிவிட்டது.   அப்பா இயக்கத்தில் கடைசி படம்    ஆனால் அதற்கடுத்து வந்த மூன்று படங்கள் தோல்வியைத் தழுவின. அதில் ஒன்று நெஞ்சினிலே. இதை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகரன். இதற்குப் பிறகு விஜய்யை ஹீரோவாக வைத்து எஸ்ஏ சந்திரசேகரன் படம் இயக்கவில்லை. விஜய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதே உண்மை.   குஷி    கண்ணுக்குள் நிலவு, மின்சாரக் கண்ணா ஆகிய இரு படங்களும் தோல்வியைத் தழுவியதால், அடுத்த படத்தை வெற்றிப் படமாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த விஜய்க்கு கை கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. அவர் இயக்கிய குஷி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வந்த ப்ரியமானவளே மற்றும் ப்ரெண்ட்ஸ் ஆகிய படங்கள் நல்ல வெற்றிகளைப் பெற்றன.   பகவதி    தொடர்ந்து ஷாஜகான், தமிழன், யூத் போன்ற படங்களில் கருத்து கந்தசாமியாக வந்து ஏகப்பட்ட உபதேசங்களைச் சொல்லிக் கொண்டிருந்த விஜய், பகவதி படத்தில் அதிரடியாக ஆக்ஷன் ஹீரோவானார். கிட்டத்தட்ட பாட்ஷாவின் உல்டாவாக எடுக்கப்பட்ட அந்தப் படம் கமர்ஷியலாக நல்ல வெற்றியைப் பெற்றது.   வசீகரா  2003-ல் 3 படங்கள் நடித்தார் விஜய். அவற்றில் குறிப்பிடத்தக்கது வசீகரா. சினேகா முதன் முதலில் ஜோடி சேர்ந்த படம். இன்றும் விஜய்யை விமர்சிப்பவர்கள் கூட ரசிக்கும் படமாக அது அமைந்தது. ஆனால் அரசியல் காரணங்களால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அடுத்து வந்த புதிய கீதை அவுட். ஆனால் தொடர்ந்து வெளியான திருமலை விஜய்யை முழு ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டியது.   கில்லி விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னொரு முக்கியமான படம் கில்லி. இந்தப் படம் விஜய்யை விமர்சிப்பவர்களையும் கூட தியேட்டருக்கு இழுக்கும் அளவுக்கு கில்லியாக அமைந்தது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.   திருப்பாச்சி    பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் இது. பக்கா ஆக்ஷன் மசாலா. த்ரிஷா ஜோடி. பரபரவென வேகமாக நகர்ந்த திரைக்கதையும் காட்சிகளும் படத்தை வெற்றி பெற வைத்தன.   சச்சின் கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடித்த படம் சச்சின். இந்தப் படத்தை ஜான் மகேந்திரன் இயக்கினார். அப்போது ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களும் வெளியாகின. சந்திரமுகி வசூல், ஓட்டம் என அனைத்திலும் சரித்திரம் படைத்தது. சச்சினை 200 நாட்கள் கமலா தியேட்டரில் மட்டும் ஓட்டிப் பார்த்து விட்டுவிட்டார்கள். பின்னர் வெளியான சிவகாசியும் கூட வெற்றிப் படமாக அமைந்தது.   ஆதியில் அடி...    ஆனால் ஆதி என்ற படம் விஜய்க்கு பெரிய சறுக்கலாக அமைந்தது. இதிலிருந்து மீள அவருக்கு ஒரு ஆண்டு ஆனது. அடுத்த படத்தில் அவர் பிரபு தேவாவுடன் கைகோர்த்தார். அதுதான் போக்கிரி. இந்தப் படமும் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.   அழகிய தமிழ் மகனில் ஆரம்பித்த சறுக்கல்.. விஜய்யின் கேரியரில் மோசமான காலகட்டமாக அமைந்தது அழகிய தமிழ்மகன் தொடங்கி, சுறா வரையிலான மூன்று ஆண்டுகள். அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, கெஸ்ட் ரோலில் வந்த பந்தயம் என எந்தப் படமும் ஓடவில்லை. விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் அவர் மீது ரெட் கார்டு போடும் அளவுக்கு நஷ்டங்களை ஏற்படுத்திய படங்கள் இவை.   காவலன்  இந்த சரிவைத் தடுத்து நிறுத்திய காவலன் படம். அசின், ராஜ்கிரண் உடன் நடித்திருந்தனர். வடிவேலுவின் காமெடி இதில் ஹைலைட். படம் ஓரளவு வெற்றிப் பெற்றது. அடுத்து வந்த வேலாயுதமும் பரவாயில்லாமல் போனது.   நண்பன்  ஒரு காலத்தில் எஸ்ஏசியின் உதவியாளராக இருந்து, பெரிய இயக்குநராகிவிட்ட ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் நண்பன். த்ரீ இடியட்ஸின் ரீமேக். நல்ல வசூலைத் தந்த படம் இது.   துப்பாக்கி  நண்பனுக்குப் பிறகு ஒரு ஆண்டு இடைவெளிவிட்டு வந்த விஜய் படம் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த இந்தப் படம் ரூ 100 கோடியை வசூலித்ததாகச் சொல்கிறார்கள்.   தலைவா  விஜய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் தலைவா. இந்தப் படத்துக்குப் பிறகு ஜில்லா என்ற படத்திலும், ஏஆர் முருகதாஸின் இன்னொரு படத்திலும் நடிக்கப் போகிறார் விஜய். அரசியல்   சினிமாவில் ஓரளவு வெற்றிகள் வரத் தொடங்கியதுமே தனது அரசியல் ஆசைகளை படங்களில் மெல்ல மெல்ல வெளிப்படுத்தத் தொடங்கினார் விஜய். சினிமாவைத் தாண்டு, வெளி நிகழ்ச்சிகளில் ரசிகர்களுக்கு உதவி, மக்களுக்கு நலத் திட்ட உதவி, பிறந்த நாளன்று உதவிகள் என ஒரு அரசியல்வாதி ஸ்டைலில் செயல்பட ஆரம்பித்தார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனி அமைப்பையும் உருவாக்கினார். இது நடந்தது திமுக ஆட்சிக் காலத்தில்.   தேர்தல் பிரச்சாரம்   விஜய்க்கும் அன்றைய ஆளும் கட்சிக்கும் உரசல் மெல்ல மெல்ல ஆரம்பித்தது, காவலன் பட வெளியீட்டின் போதுதான். அப்போது திமுகவை எதிர்த்து பேட்டியெல்லாம் கொடுத்தார். தேர்தல் வந்தபோது, பகிரங்கமாக தனது ஆதரவை அதிமுகவுக்கு வழங்கினார். தந்தை எஸ்ஏசியுடன் போயஸ் தோட்டம் போய் ஜெயலலிதாவைச் சந்தித்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகமுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் எஸ்ஏசி. இன்றைய நெருக்கடி...   திமுக ஆட்சிக் காலத்திலாவது விஜய்யால் பகிரங்கமாக தனி இயக்கம் தொடங்கி, ஆளுங்கட்சிக்கு எதிராக பிரச்சாரமெல்லாம் செய்ய முடிந்தது. அமர்க்களமாக தனது இயக்கத்தின் நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது. ஆனால் அவர் அணில் மாதிரி யாருக்கு உதவினாரோ, அவர்கள் ஆட்சியிலிருக்கும் இன்றைக்கு விஜய்யால் தனது பிறந்த நாள் நிகழ்ச்சியைக் கூட பகிரங்கமாக நடத்த முடியவில்லை. அதைப் பற்றி வெளிப்படையாக பேசவும் முடியாத நிலை. 20 ஆண்டு திரைவாழ்க்கையில் இப்படி ஒரு சூழலில் பிறந்த நாள் கொண்டாடுவது விஜய்க்கு இதுதான் முதல் முறை!!

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 23-06-2013

விரதமிருப்போருக்கு இருதய நோய் ஏற்பட வாய்ப்புக்கள் குறைவு.

ஒரு நாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.    விரதம் இருப்பது என்பது பல்வேறு மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆண்டில் பல நாட்கள் விரதம் இருப்பது இந்துக்கள் வழக்கம். குறிப்பாக பெண்கள் மாதம் ஒரு நாளாவது நோன்பு இருப்பார்கள். வாரம் ஒருநாள் நோன்பு இருப்பவர்களும் உண்டு.    முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒரு மாதத்துக்கு பகல் நேரங்களில் நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளியையொட்டி உபவாச ஜெபம் என்ற நோன்பு இருப்பது வழக்கம். இப்படி விரதம் இருப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது டாக்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.    விரதம் இருப்பதன் பயன்கள் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில மாதம்தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.  அவர்களுக்கு, மற்றவர்களைவிட மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பெஞ்சமின் ஹோர்ன் கூறி உள்ளார்.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 23-06-2013

கால்ப்பந்து சரித்திரத்தில் புதிய சாதனையில் ஸ்பெயின்.

உலக சாம்பியன்களான ஸ்பெயின் அணி மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுவரை 10 கோல்கள் வித்தியாசத்தில் எந்த அணியும் வென்றதில்லை. ஆனால் ஸ்பெயின் அணி அந்த உலக சாதனையையும் தனக்கு சொந்தமாக்கிக்கொண்டது.   கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. ‘B’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின் அணி, நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவான தஹிதியை சந்தித்தது.  இதில் தொடக்கம் முதலே மிரட்டிய ஸ்பெயின் அணி 10- 0 என்ற கோல் கணக்கில் தஹிதி அணியை எளிதில் தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணியில் பெர்னாண்டோ டோரெஸ் 4 கோலும், டேவிட் வில்லா 3 கோலும் அடித்தனர்.    இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி புதிய சாதனை படைத்தது. சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்திய (FIFA) சர்வதேச போட்டியில் 10 கோல் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.  இதற்கு முன்பு அங்கேரி அணி தென் கொரியாவுக்கு எதிராக 9- 0 என்ற கோல் கணக்கிலும் (1954 உலக கோப்பை போட்டி), எல் சால்வடோர் அணிக்கு எதிராக 10- 1 என்ற கோல் கணக்கிலும் (1982 உலக கோப்பை போட்டி), யூகோசுலாவியா, சாய்ரே அணிக்கு எதிராக 9- 0 என்ற கோல் கணக்கிலும் (1974 உலக கோப்பை போட்டி) வென்றதே சாதனையாக இருந்தது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 22-06-2013

அதிக சம்பளம் வாங்கும் நயன், அனுஷ்கா.

நயன்தாரா, அனுஷ்கா சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை எந்தவொரு தமிழ், தெலுங்கு நடிகையும் இவ்வளவு தொகை வாங்கியது இல்லை. இருவருக்கும் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. எனவே சம்பளத்தை வரலாறு காணாத அளவு ஏற்றி உள்ளனர்.   நயன்தாரா தெலுங்கில் நடிக்கும் ‘அனாமிகா’ படத்துக்காக இந்த சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படம் இந்தியில் ஹிட்டான ‘கஹானி’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார். அதே கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். கர்ப்பிணியாக நடிப்பதற்காகவே ரூ.2 கோடியை அள்ளி கொடுத்துள்ளனர்.   தமிழில் நயன்தாரா அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் ஆர்யாவுடன் ‘ராஜாராணி’ படத்திலும் மற்றும் உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதலி’ படத்திலும் நடிக்கிறார். இப்படங்களுக்கு இரண்டு கோடிக்கு குறைவாகவே சம்பளம் பேசி உள்ளார். தெலுங்கில் சம்பளம் ரூ.2 கோடியானதால் அடுத்து ஒப்பந்தமாகும் புதுப் படங்களுக்கு ரூ.2 கோடி கேட்க முடிவு செய்துள்ளாராம். இதுபோல் அனுஷ்கா ‘ருத்ரமாதேவி’ என்ற சரித்திர படத்தில் நடிக்க ரூ.2 கோடி பெற்றுள்ளார். இதில் அனுஷ்கா மகாராணி வேடத்தில் வருகிறார். இதற்காக வாள் சண்டையும் கற்றார்.   தமிழ், தெலுங்கு ரசிகர்கள் இரு நடிகைகளையும் கனவு கன்னியாக வைத்து கொண்டாடுவதை சம்பள உயர்வு வெளிப்படுத்தி உள்ளது என்கின்றனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 22-06-2013

சீனக்குழந்தைகளை தத்தெடுக்க தடை.

சீனாவில் அனாதைக்குழந்தைகளை இரகசியமாக தத்தெடுத்து வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது சீன அரசு. அண்மையில் ஓட்டலில் தங்கியிருந்த சீனப் பெண் ஒருவர் கழிவறையில்  வீசிய பச்சிளம் குழந்தையை அதிகாரிகள் காப்பாற்றியிருந்தனர். மேலும் அண்மைக்காலமாக சீனாவில் கள்ளத்தொடர்பு, முறையற்ற உறவின் மூலம் குழந்தைகளைப் பெற்று நடுத்தெருவில் விட்டுச்செல்லும் அவலம் அதிகரித்துள்ளது. இதனால் சீனாவில் குழந்தைகள் அனாதைகளாகும் வீதமும் அதிகரித்துள்ளது.இக்குழந்தைகளை இரகசியமாக தத்தெடுத்து வளர்க்க பெருமளவிலானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்தே குழந்தைகள் தத்தெடுப்பில் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற சீன அரசு உத்தரவிட்டுள்ளது.  இப்புதிய உத்தரவின் படி அனாதைகளாக விட்டுச்செல்லும் குழந்தைகளை தனியார்களோ அல்லது குழுவினரோ தத்தெடுத்து வளர்ப்பதற்கு சீன அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.  ஏற்கனவே சீனாவில்  ஒரு பெற்றோருக்கு ஒரு குழந்தை திட்டம் நீடித்து வரும் நிலையில் தற்போது அனாதைக் குழந்தைகளையும் எடுத்து வளர்க்க சீன அரசு தடையிட்டிருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது சீனா. எனினும் 2028 க்குள் சீனாவை இந்தியா சமநிலைப்படுத்திவிடும் எனவும், 1.45 பில்லியன் சனத்தொகை உடைய நாடாக இந்தியா மாறிவிடும் எனவும்  என அண்மையில் தகவல்கள் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் 3 மறுமொழிகள் சுதர்சன் 22-06-2013

ஆசியாவின் மிக உயரமான புத்தர் சிலை வவுனியாவில்.

வவுனியா பாவற்குளம் பிரதேசத்தில் சுமார் 510 அடி உயரத்தில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துவரப்படுவதாக கூறப்படுகின்றது. இதற்கான எற்பாடுகள் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் கடந்த சில மாதங்காக அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தன.   ஆனால் அரச பிரமுகர் ஒருவர் விசேட உலங்குவானுர்தி ஒன்றில் நேற்று பிற்பகல் பாவற்குளம் பிரதேசத்துக்கு சென்று அடிக்கல் நாட்டியதாக தெரியவருகின்றது. பாவற்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் பிரதமரால் நேற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள விடயத்தை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கிற்ன.   ஆசியாவில் மிகவும் உயராமான புத்தர் சிலையாக அது அமைக்கப்படும் என்றும் சுமார் 50 ஏக்கர் காணி அதற்கென பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.   பாவற்குளம் தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசமாகும். இங்கு புத்தர் சிலை வைக்கப்படுவது குறித்து பொதுமக்கள் ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும் நேற்று வியாழக்கிழமை பிரதமர் அங்கு சென்று அடிக்கல் நாட்டியதாக தகவல் கிடைத்துள்ளது. 

மேலும் படிக்கவும் 3 மறுமொழிகள் சுதர்சன் 21-06-2013

மனோரமாவின் வழியை பின்தொடரும் கோவை சரளா.

மனோரமாவிற்கு பிறகு அம்மா வேடம், காமெடி வேடம், குணசித்ர வேடம் என்று கலக்கிக்கொண்டிருப்பவர் கோவை சரளா. லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தில் அம்மா வேடத்தில் நடித்த கோவை சரளாவிற்கு அதன்பிறகு தமிழை விட தெலுங்கில் மார்க்கெட் எகிறி விட்டது. அதனால் ஒரு வருடமாக ஐதராபாத்தில் முகாமிட்டு நடித்து வந்தவர், இப்போதுதான் தமிழ்நாட்டுப்பக்கம் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார். வாலு டைட்டீல் எங்களுக்குத்தான். நாங்கள்தான் அந்த டைட்டீலை முதலில் பதிவு செய்தோம் என்று சிம்புவுடன் மல்லுக்கட்டிய இன்னொரு வாலு படத்தில் தற்போது மாமியார் வேடத்தில் நடித்துள்ளார் கோவை சரளா. (அப்படமும் இப்போது ரெட்ட வாலு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) இதில் படம் முழுக்க தனது மருமகன் தம்பி ராமைய்யாவை காய்ச்சி எடுக்கும் வேடத்தில் நடித்துள்ள சரளா, ஒரு காட்சியில் சாமியார் கோலத்தில் தன்னுடன் மோதும் தம்பிராமைய்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தானும் அம்மன் கெட்டப்பில் மாறி நடித்துள்ளாராம்.   இதில் பக்காவாக அம்மன் கெட்டப்புக்கு மாறவில்லை என்றாலும், அம்மன் தனக்குள் வந்திருப்பது போல் ஆடிப்பாடும் வேடம் என்பதால், முன்னதாக சில தினங்கள் விரதமிருந்து அசைவம் சீண்டாமல் பயபக்தியுடன் நடித்தாராம் கோவைசரளா.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-06-2013

சௌதியில் WhatsApp இக்கு தடை.

செளதி அரேபியா அரசு இன்னும் சில வாரங்களில் வாட்ஸ்ஆப்-ஐ தடை செய்ய திட்டமிட்டுள்ளது. செளதி அரேபியா தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணையம் வைபருக்கு இந்த மாதம் தடை விதித்தது.  இந்நிலையில் வாட்ஸ்ஆப்-புக்கும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. வாட்ஸ் ஆப் மூலம் மக்கள் செலவின்றி தகவல்களை பரிமாறிக் கொள்வதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் சவூதி அரசு இன்டர்நெட், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் கட்டுப்பாட்டை விதிக்க முயல்கிறது. வைபர், வாட்ஸ்ஆப் மற்றும் ஸ்கைப் உள்நாட்டு விதிகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்படி விதிகள் மீறப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.  இந்நிலையில் சவூதி தொலைத்தொடர்பு ரெகுலேட்டர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யுமாறு வாட்ஸ்ஆப்புக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. இதையடுத்து வாட்ஸ்ஆப் பதில் அளிக்காவிட்டால் வரும் ஜூலை மாதம் 9ம் தேதிக்குள் அதற்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-06-2013

கருப்பை புற்றுநோயை உண்டாக்கும் வாசனைப்பௌடர்.

பெரும்பாலான பெண்கள் உபயோகிக்கும் டால்கம் பவுடரில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய மூலப் பொருட்கள் உள்ளதாக் ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பெண்களை தாக்கும் 'ரகசிய உயிர்க் கொல்லி' என்றழைக்கப்படும் கருப்பை புற்று நோய்க்கு வாசனை பவுடரும் ஓர் முக்கிய காரணம் என்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.  8 ஆயிரத்து 525 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த பவுடரை அதிகம் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.    இந்த ஆய்வில் பிறப்புறுப்பில் பவுடர் போட்டுக் கொள்ளும் பழக்கம் உடைய பெண்களுக்கு கருப்பை புற்று நோய் தாக்கும் அபாயம் 24 சதவீதம் அதிகம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.  பிரிகாம் மற்றும் பாஸ்டன் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் 8 வகையிலான ஆய்வுகளை மேற்கொண்ட வகையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கருப்பை புற்றுநோய், பெரும்பாலும் அதிக வளர்ச்சியடைந்தபின்னரே பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவரும் என்பதும், இப்படி டால்கம் பவுடர் உபயோகிக்கும்போது, நமது நுரையீரலுக்குள் இந்த பவுடரின் மூலப்பொருட்கள் சென்றுவிட்டால், அது முற்றிலுமாக கரைய குறைந்தபட்சம் 8 ஆண்டுகளாவது ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 20-06-2013

இன்றைய தில்லு முல்லுவுக்கு கே பாலச்சந்தரின் பாராட்டுக்கள்.

1981-ல் தான் இயக்கி ரஜினி நடித்த தில்லுமுல்லு படத்தின் புதிய ரீமேக்கைப் பார்த்த கே பாலச்சந்தர், அந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தப் படம் பார்த்த பின்னர் கேபி கூறுகையில்,    "இந்த தில்லு முல்லு படம் எனக்கே புதுசா இருக்கு. நிறைய மாற்றங்கள் பண்ணிருக்காங்க. மாடர்ன் ஆகவும் இருக்கு. அதே சமயம் அனைவரும் பார்க்கும் விதமாகவும் அமைத்திருக்கிறார்கள். இது மிக பெரிய அளவில் கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இசை அற்புதமாக வந்துள்ளது. சிவா மிக அருமையாக நடித்துள்ளார்," என்றார்.  இயக்குநர் பத்ரி பற்றி கூறும்போது,    "கொஞ்சம் கூட பழைய தில்லு முல்லு படத்தின் சாயலே இல்லாமல் இந்த காலத்திற்கு ஏற்ப மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார் பத்ரி. தயாரிப்பாளர் வேந்தர் மூவிஸ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைங்கர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்றார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தில்லுமுல்லு படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, ரசிகர்கள் மத்தியில்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 20-06-2013

சட்ட ஆலோசனை கிடைக்காத ஆஸ்த்ரேலிய அகதிகள்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி செல்பவர்களுக்கு, சட்ட ஆலோசனை வழங்குவதற்கான அனுமதி தற்போது மறுக்கப்படுவதாக அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.  அவுஸ்திரேலியாவின் த காடியன் நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.   குறிப்பாக கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதி முகாம்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் இதற்கான அனுமதியினை வழங்குவதில்லை என்று அந்த நிறுவனம் குற்றஞ் சாட்டியுள்ளது. நாளாந்தம் கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தாம் சட்ட ஆலோசனைகளை பெற முடியாதிருப்பதால், எந்த நேரத்திலும் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தைக் கொண்டுள்ளதாக ஆர்.ஏ.சி.ஏஸ். என்ற அகதிகள் நலன் பேணும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.   இது தொடர்பாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று அவுஸ்திரேலியாவின் குடிவரவு திணைக்களத்தை தொடர்பு கொண்டு வினவிய போதும், இந்த விடயம் தொடர்பில் கருத்துக்கள் எதனையும் அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் வெளியிடவில்லை என்று த காடியன் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 20-06-2013

சைட் பிஸ்னஸ் செய்யும் கொமடியன்கள்.

காமெடி நடிகர்களான கஞ்சா கருப்பும், காதல் சுகுமாரும் தங்களின் நடிப்பு தொழிலில் இருந்து கொஞ்சம் விலகி வேறு முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.   கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை சொந்தமாக தயா‌ரித்து நடித்து வருகிறார். ஹீரோ அங்காடித்தெரு மகேஷ். போர்வெல் லா‌ரியின் ஓனராக கஞ்சா கருப்பும், அதில் வேலை செய்பவராக மகேஷும் நடித்துள்ளனர். எம்.பி.கோபி படத்தை இயக்குகிறார். படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து படங்கள் தயா‌ரிப்பது என்ற முடிவில் இருக்கிறார் கஞ்சா கருப்பு.  காதல் சுகுமாருக்கு இயக்குனர் ஆசை. திருக்குரல் என்ற படத்தை சத்தமே இல்லாமல் இயக்கி வருகிறார். படம் முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இவரும் படம் வெற்றி பெற்றால் காமெடியை ஓரங்கட்டி முழுநேர இயக்குனராகும் விருப்பத்தில் இருக்கிறார்.   சந்தானம் போன்ற மெயின் காமெடி நடிகர்களின் ஆதிக்கத்தால் வாய்ப்பு பறிபோன காமெடி நடிகர்கள் பலரும் இவர்களைப் போல சைடு பிசினஸை மெயின் பிசினஸாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். 

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 19-06-2013

யாழ் கோட்டை புனர் நிர்மாணம்.

யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டை புனர்நிர்மாண வேலைத்திட்டம் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதனை காணமுடிகிறது. இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த யுத்த காலத்தில் மிக மோசமாக குறித்த கோட்டை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.   இதனை தற்போது நெதர்லாந்து மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து புனரமைத்து வருகின்றன. தேசிய மரபுரிமைகள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்புனருத்தாண செயற்பாட்டினை தொல்லியல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.  

மேலும் படிக்கவும் 4 மறுமொழிகள் சுதர்சன் 19-06-2013

இறுதிச்சடங்கில் உயிர் பிழைத்த பிரேதம்.

ராமநாதபுரம் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரவி(45). இவர் கடந்த 13 ஆம் தேதி இதயக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக 16 ஆம் தேதி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.    இதை அடுத்து அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தனர். இறுதிச் சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பந்தல் கட்டி உறவினர்களும் கூடிவிட்டனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென அவரது கால் விரல் அசைந்துள்ளது. பின்னர் காலில் சிறிதளவு இயக்கம் இருந்துள்ளது. இதை கவனித்த சிலர், அவரை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.   அப்போது, அவர் உயிருடன் இருப்பதும், அவரது இதயம் பலவீனம் அடைந்திருப்பதும் தெரியவந்தது. இதை அடுத்து, அவர் இதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை உறவினர்களுடன் உற்சாகமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். இந்தச் செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 19-06-2013

லண்டன் கிரிக்கட் மைதானத்துக்கு வெளியே தமிழர் மீது சிங்களவர் தாக்குதல்.

இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை தமிழர்கள் நடத்திய போராட்டத்தின்போது திடீரென சிங்களர்கள் தமிழர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் தாக்கப்பட்டனர்.    லண்டனில் ஐ.சி.சி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இலங்கை-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.  அப்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க கோரி லண்டன் ஓவல் மைதானம் அருகே ஈழ தமிழர்க்ள போராட்டம் நடத்தினார்கள். அப்போது, இவர்களுக்கு எதிராக சிங்கள வெறியர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் போராட்டம் நடத்தினார்கள்.    இந்த நிலையில், திடீரென அவர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருந்த இலங்கை தமிழர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினார்கள். அதில், பெண்கள் மற்றும் குழந்தைகளும் தாக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.  அதை தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து வந்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களையும் சிங்கள வெறியர்கள் தாக்கினார்கள். எனவே, போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டனர். 

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 18-06-2013

சினேகாவை காதலித்தவர்கள்.

பிரசாந்துடன் விரும்புகிறேன் என்ற படத்தில் அறிமுகமானவர் சினேகா. அதன்பிறகு படிப்படியாக வளர்ந்து கமல்ஹாசன் வரை ஜோடி சேர்ந்து ஒரு பெரிய ரவுண்டே வந்தார். பின்னர், தனது மார்க்கெட் சறுக்கிக்கொண்டு வந்த நேரத்தில் விஜயசாந்தி பாணியில் பவானி ஐபிஎஸ் என்றொரு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்து தனக்குள் இருந்த ரப் அண்ட் டப் சினேகாவை வெளியே கொண்டு வந்தார். அதையடுத்து, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோதிலிருந்தே தான் காதலித்து வந்த நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு இல்லத்தரசி ஆனார் சினேகா. இருப்பினும் நடிப்பு ஆசை அவரை ஆட்டுவிக்க, சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிப்பவர், உன் சமையல் அறையில், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.    இந்த நேரத்தில், திடீரென்று சினேகாவின் காதலர்கள் என்ற டைட்டீலில் ஒரு படத்தைப்பற்றிய செய்திகள் வெளியாகின. சினேகாவின் காதலர்கள் என்றதும், திருமணத்துக்கு முன்பு அவர் காதலித்தவர்களைப்பற்றிய கதைதானோ என்று நினைத்து அந்த செய்தியை அனைவரும் ஆர்வத்துடன் படித்தனர். ஆனால், அது வேறொரு சினேகாவைப்பற்றிய கதை. அந்த படத்துக்கும் நடிகை சினேகாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை செய்தியில் படித்தும் சலித்துக்கொண்டனர். ஆனால், இந்த செய்தி சினேகா வட்டாரத்தையும் ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது. அதென்ன சினேகாவின் காதலர்கள். ஏதாவது வம்பு புடிச்ச செய்தியாக இருக்குமோ என்று அவர்கள் அவசர அவசரமாக அந்த செய்தி பரபரப்புடன் படித்துள்ளனர். இது வேறு சினேகாவைப்பற்றிய கதை என்று அமைதியடைந்திருக்கின்றனர். என்றாலும் சினேகாதான் ரொம்ப பதறிப்போனாராம். அதனால் அவுட்டோரில் இருந்த அவரிடம் இது வேறு படத்தின் கதை. படத்தில் நடிக்கும் கேரக்டரின் பெயர் சினேகாவாம் அதைத்தான் டைட்டீலாக்கி உள்ளனர். நீ பயப்படும்படியாக எதுவும் இல்லை என்று அவரை ஆசுவாசப்படுத்தினார்களாம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 18-06-2013

11-வயது தந்தை.

நியூசிலாந்தில் சிறுவன் ஒருவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 36 வயது பெண் அதனால் கர்ப்பமாகி, ஒரு குழந்தையை பெற்றெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தை சேர்ந்த ஒரு சிறுவன், அவனது நண்பனின் தாயாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானான். தனக்கு கொடுக்கப்படும் பாலியல் தொந்தரவை எதிர்த்து என்ன செய்யவேண்டுமென தெரியாத நிலையில், அச்சிறுவன் இக்கொடுமையால் பல நாட்களாக தவித்துவந்துள்ளான்.    இந்நிலையில் சிறுவனை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய அந்த 36 வயது பெண், கர்ப்பமாகி குழந்தையையும் பெற்றெடுத்தார்.  இதனால் வெளிச்சதிற்கு வந்த இந்த விஷயம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.   விசாரணையின்போது போலீசாருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவந்தன.   பாதிக்கப்பட்ட சிறுவன் தொடர்பாக அவன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், நான் அந்த சிறுவன் என்னிடம் கூறிய தகவலை கேட்டு அதிர்ந்து போனேன். அவன் என்னிடம் 1 வருடத்திற்கு முன்னதாகவே அவன் அவனுடைய நண்பனின் தாயால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதை கூறியுள்ளான் எனத் தெரிவித்தார்.     நியூசிலாந்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி ஆண்கள் மீது மட்டுமே பாலியல் வன்கொடுமை சட்டம் பாயும். மேலும், ஒரு பெண் ஒரு ஆணை வற்புறுத்தி உடலுறவு வைத்துக்கொண்டால் அதிகபட்சமாக அந்த பெண்ணுக்கு 14 வருட சிறை தண்டனை கிடைக்கும்.    இதுதொடர்பாக தெரிவித்த குழந்தை நல ஆர்வலர்கள், சிறுவர், சிறுமியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.   பாலியல் வன்கொடுமையால் அந்த 36 வயது பெண்ணுக்கு பிறந்த குழந்தையை ஒரு தொண்டு நிறுவனம் தத்தெடுத்துக்கொண்டு வளர்த்துவருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 18-06-2013

விஸ்வரூபம்-2 இல் இசையமைப்பாளர் மாற்றம்.

விஸ்வரூபம் 2 படத்துக்கு முதல் பாகத்தில் ஒளிப்பதிவு செய்த சானு வர்க்கீஸை மாற்றி ஷாம்தத் சைனுதீனை ஒப்பந்தம் செய்த கமல்ஹாசன் தற்போது இசையமைப்பாளரையும் மாற்றியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.   விஸ்வரூபத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைத்தனர். படத்தின் குவாலிட்டியில் இசைக்கு பெரும் பங்கு இருந்தது. இந்நிலையில் அவர்களுக்குப் பதில் விஸ்வரூபம் 2 க்கு ஜிப்ரானை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இளம் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் கவனம் ஈர்ப்பவராக இருக்கிறார், பாடல்களிலும், பின்னணி இசையிலும். அவரின் இசையை கேட்ட கமல் அவரையே தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 17-06-2013

பிரபல்ய பிறந்தநாள் பாடலின் உரிமைக்கான வழக்கு.

உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் மிக பிரபலமான பிறந்த நாள் வாழ்த்து பாடல் Happy Birthday To You.   இந்த பாடல் எழுதி இசையமைக்கப்பட்டு 120 ஆண்டுகள் கடந்து விட்டது.   தற்போது இந்த பாடல் யாருக்கு சொந்தம் என்பது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.   இந்த பாடல் உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தம் என்று உத்தரவிட கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   அமெரிக்காவில் உள்ள வார்னர் சேப்பல் இசை குழு நிறுவனம், உலக புகழ் பெற்ற Happy Birthday To You பாடல் தங்களுக்குதான் சொந்தம். இதற்கு கோடிக்கணக்கில் செலவிட்டு உரிமை பெற்றுள்ளோம்.   இதை பயன்படுத்துபவர்கள் எங்களிடம் அனுமதி பெற்று அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி வருகிறது.   மேலும் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக பலரிடம் பல கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இது சட்ட விரோதமானது என்று பலதரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் வலுத்து வருகிறது.   இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கடந்த 1893ம் ஆண்டு Good Morning To All என்ற பாடல் அமெரிக்காவின் பேட்டி மற்றும் மைல்ட்ரெட் ஹில் சகோதரிகளால் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.   இதை அடிப்படையாக கொண்டு பின்னர் Happy Birthday To You என்ற பாடல் உருவாக்கப்பட்டது.   இந்நிலையில் 1998ம் ஆண்டு வார்னர் சேப்பல் நிறுவனத்தார் இதன் காப்புரிமை தங்களுடையது என்று கோரி பணம் வசூலித்து வருகின்றனர்.   அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக சட்ட பள்ளி பேராசிரியர் ராபர்ட் ப்ரவுனிஸ் என்பவரும் Happy Birthday To You பாடலை தனி நபர் யாரும் உரிமை கோர முடியாது.   அதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 17-06-2013

சனத்தொகையில் சீனாவை மீறும் இந்தியா.

2028ஆம் ஆண்டு வாக்கில் சீனாவை விஞ்சி உலகின் அதிக ஜனத்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.   அந்த சமயத்தில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளின் ஜனத்தொகையும் நூற்று 45 கோடியாக இருக்கும் என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.   போகப்போக சீனாவின் ஜனத்தொகை மெதுவாக குறைந்துகொண்டு வரும் ஆனால் இந்தியாவின் ஜனத்தொகையானது 2050ஆம் ஆண்டுவரை அதிகரித்துக்கொண்டே போகும் என இந்த அறிக்கை கணித்துள்ளது.   தற்போது 700 கோடியாகவுள்ள உலகின் ஜனத்தொகை 2050ஆம் ஆண்டுவாக்கில் 940 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.     இதில் பெரும்பான்மையான ஜனத்தொகை அதிகரிப்புக்கு வளர்ந்துவரும் நாடுகளே காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.   ஏற்கனவே கணிக்கப்பட்ட ஜனத்தொகை அதிகரிப்புகளை அதிகமான பெருக்கம் ஏற்படும் என்று தற்போது கணிக்கப்படுகிறது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 17-06-2013

அசினின் மீள்பிரவேசம்.

கஜினி படம் மூலம், இந்திக்கு சென்றவர் அசின். போன வேகத்திலேயே அமீர் கான், சல்மான் கான் என, முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்ததால், பிரபல இந்தி நடிகைபட்டியலில் இடம் பிடித்தார் அசின்.   இருப்பினும், அக்ஷய் குமாருக்குஜோடியாக, அவர் நடித்த, “கில்லாடி 786 உட்பட சில படங்கள்தோல்வியடைந்ததால், அசினின்மார்க்கெட்டும், ஏறியவேகத்தில் இறங்கியது. இந்த சூழலில், பிரபுதேவாவுடன் நெருங்கி பழகுவதாக,அசின் பற்றிய செய்திகள், பாலிவுட்டில் பற்றி எரிந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த அசின், எந்த படங்களிலும் நடிக்காமல் வீடேகதியென்று கிடந்தார்.   இப்படியே, ஒரு ஆண்டு கழிந்து விட்ட நிலையில், இப்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். தற்போது, இந்தியில் ஒரு வாய்ப்பு, அவருக்கு கிடைத்துள்ளதாம். இந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கிலும், தொடர்ந்து நடிப்பது என்ற முடிவுக்கும் வந்துள்ளாராம், அசின்.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 16-06-2013

தந்தையர் தினத்துக்கு முன் தந்தையை இழந்த கனடியத்தமிழ் இளைஞன்.

கனடாவிலுள்ள Brampton நகரில் இடம்பெற்ற வாகண விபத்தில் 40 வயதுடைய கோபிநாத் தங்கவேலு என்பவரும் அவரது 5 வயதான மகளான ஆரணியும் பலியானர்கள். காரில் இவர்களோடு பயணித்த தாயும், மூன்று வயது மகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று வயதான மகளின் நிலைமையும் ஆபத்தாகவுள்ளதாகவும், தாயார் கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பிற்பாடு வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரியவருகிறது.   ஐந்து பிள்ளைகளையுடைய இந்த குடும்பத்தினரின் மூத்த மகனான 17 வயதுடைய கீர்த்தி இந்த விபத்தைப் பற்றிக் கூறுகையில் “நான் எனது மற்றைய சகோதரிகளினதும் எனது குடும்பத்தினதும் வாழ்க்கையை இனி எடுத்துச் செல்வதற்காக உறுதியான மனப்பாண்மையுடன் இருக்க வேண்டியதை உணர்ந்து அதற்கான திடத்துடன் இருக்கிறேன்” என்று தெரிவித்ததுடன், தனது தந்தை தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் “தந்தையர் தினத்தை” கொண்டாடுவதற்கு முதல்நாள் அவர் இறந்தது மிகவும் வருத்தமானது என்றும் இறந்த தனது சகோதரி தன்னோடு எப்போதும் விளையாடுபவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.     காணொளி    

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 16-06-2013

உலகின் சிறந்த நகரங்களில் கொப்பன்ஹாகன் முதலிடம்.

உலகத்தின் மிகச்சிறந்த நகரம் என்ற இடத்தை டென்மார்க் தலைநகரம் கோப்பன்கேகன் மறுபடியும் பெற்றுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மொனோக்கிள் என்ற சஞ்சிகை வருடந்தோறும் உலகத்தின் சிறந்த நகரங்களை தேர்வு செய்யும் பணியை செவ்வனே ஆற்றி வருகிறது. இந்த ஆண்டு உலகத்தின் மிகச்சிறந்த 25 நகரங்களை தேர்வு செய்து அவற்றில் கோப்பன்கேகனுக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது. கோப்பன்கேகனுக்கு முதலிடம் வழங்கிய குறிப்புரையில் பின்வரும் விடயத்தையும் மறந்துவிடாமல் குறிப்பிட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே அந்த நகருக்கு சென்றால் சனிக்கிழமை மதியத்துடன் கடைகள் பூட்டப்பட்டு, ஞாயிறு கடைத்தொகுதி வெறிச்சோடிக் கிடக்கும். மேலும் அங்குள்ள மக்கள் எங்கு சென்றார்கள் என்று பார்த்தால் அவர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுக்களில் தங்களை ஈடுபடுத்த சென்றுள்ளார்கள் என்பது தெரியவரும். நாளில் 24 மணி நேரங்களையும், வார விடுமுறைகூட இல்லாமல் நகரத்தை இயங்க வைப்பது ஒரு சிறந்த நகரத்தின் தேர்வுக்கு உகந்ததல்ல என்றும் தெரிவிக்கிறது. அதேவேளை கோப்பன்கேகனை உலகத்தின் பசுமை மிக்க நகரமாக மாற்றவும், சமுதாய வாழ்வை சீராக நடாத்தவும் கடுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மிதிவண்டிகளில் சென்று நகரத்தில் பணியாற்ற சிறந்த மிதிவண்டிப் பாதைகளும் உள்ளன, பாரம்பரியமிக்க ஓர் அழகிய நகரமாக தன்னை அடையாளம் காட்ட தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. நேற்று உலகத்தின் அமைதிமிக்க நாடுகளில் இரண்டாவது இடம் பிடித்த டென்மார்க் இன்று உலகத்தின் சிறந்த தலைநகரம் உள்ள நாடு என்ற சிறப்பை இன்று எட்டித் தொட்டுள்ளது. தலை நகரத்தில் நடைபெறும் வன்முறைகளும் குறையுமாக இருந்தால் கோப்பன்கேகனுக்கு மேலும் சிறப்பு கிடைக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 16-06-2013

மணிவண்ணனின் மரணமும் ஆனந்த விகடனில் வெளியாகிய பாரதிராஜாவின் எழுத்தும்.

மணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பு மற்றும் அகால மரணத்துக்குக் காரணமே, இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான்… அவரது கொடூரமான வார்த்தைகளே மணிவண்ணனைக் கொன்றுவிட்டன என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாரதிராஜாவிடமிருந்து வந்து மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர்கள் இருவர்தான். ஒருவர் கே பாக்யராஜ். மற்றவர் மணிவண்ணன்.பாரதிராஜாவின் கேம்பில் எழுத்தாளர்கள் என கம்பீரமாகச் சொல்லிக்கொண்ட இருவர் பாக்யராஜும் மணிவண்ணனும்தான். இதை பலமுறை பாரதிராஜாவே கூறியுள்ளார்.மணிவண்ணன் மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் வேகத்துக்கு படப்பிடிப்பில் யாராலும் ஈடு கொடுக்க முடியாது. அதே நேரம் மிக இளகிய மனம் படைத்தவர். தன்னிடம் பழகிய அனைவரிடமுமே வெளிப்படையாக நடந்து கொள்பவர்.எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருந்தாலும், தான் பெரிதும் மதிப்பவர்கள் தன்னை அவதூறாகப் பேசினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். ஆயிரம் கருத்து பேதங்கள் இருந்தாலும், தான் மதிக்கும் ஒருவரை எப்போதும் மரியைதைக் குறைவாக அழைத்ததில்லை மணிவண்ணன். ஈழப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதியை தீவிரமாக விமர்சித்தாலும், அவரை எப்போதும் தலைவர் கலைஞர் என்றே குறிப்பிட்டு வந்தார் அத்தனை பேட்டிகளிலும். இயக்குநர் பாரதிராஜா மீதும் மணிவண்ணனுக்கு வருத்தங்கள் உண்டு. அவர் தன்னை நடத்திய விதம், அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மணிவண்ணன் எள்ளலுடன் பேசினாலும், ‘பாரதிராஜா என் தகப்பனைப் போன்றவர் அவரில்லா விட்டால் இன்று திரையுலகில் நான் இல்லை. என்னை இரண்டாம் முறை ஈன்றவர், அவருக்கு என் மீது அன்பிருக்கிறதோ இல்லையோ… எனக்கு எப்போதும் உண்டு. நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால்கூட மன்னிச்சிடுங்கப்பா,” என்று வெளிப்படையாகப் பேசியவர் மணிவண்ணன். ஆனால் பாரதிராஜா தன்னைவிட இளையவரான மணிவண்ணன் பற்றி பாரதிராஜா சமீபத்தில் ஆனந்த விகடனில் எழுதியிருந்ததைப் படித்த அத்தனைப் பேருமே முகம் சுளித்ததோடு, பாரதிராஜாவை சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர். அத்தனை கேவலமான எழுத்து, இதைப் படித்த மணிவண்ணன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவரிடம் பலரும் கருத்துக் கேட்க முயன்றனர் கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது அவரது அலைபேசி. ஆனால் அவர் யாருக்கும் பதிலோ விளக்கமோ சொல்லவில்லை. ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரை இந்த மனஅழுத்தமே கொன்றுவிட்டது என்பதுதான் பேச்சாக உள்ளது. யாகாவாராயினும் நாகாக்க என அய்யன் சொன்னதை பாரதிராஜாக்கள் மறந்துவிடுகிறார்களே!!

மேலும் படிக்கவும் 4 மறுமொழிகள் சுதர்சன் 15-06-2013

பொலிவூட்டுக்குள் நுழையும் இலியானா.

தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் இலியானா பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.   தமிழில் நண்பன் மற்றும் கேடி திரைப்படத்தில் நடித்த இலியானா, தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.   இந்நிலையில் பாலிவுட் திரையுலகம் பற்றி கூறுகையில், இந்தி திரைப்பட வாய்ப்புக்காக காத்து கொண்டிருந்தேன், அது கிடைத்தது எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.   இத்திரையுலகில் என்னுடைய மனது மிகவும் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையாகவும் இருக்கிறது. மேலும் என்னையே முழுமையாக உணர முடிகிறது.   பாலிவுட்டில் நான் நுழைந்தவுடன் பலவிதமான கேள்விகள் என்னிடம் வருகின்றன.     அதிலும் குறிப்பாக பாலிவுட்டில் நெருக்கமான நட்பை வளர்த்து கொண்டிருக்கிறீர்களா என கேட்கின்றனர்.   அன்பு என்பது முக்கியமான ஒன்று தான். ஆனால் அந்த நட்புக்காக நான் நண்பர்களை தெரிவு செய்தே பழகுகிறேன். அதற்கு நீண்ட அவகாசமும் எடுத்துக் கொள்கிறேன்.   தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் எதுவும் கைவசம் இல்லை. மீண்டும் தென்னிந்திய படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் ஏற்று நடிப்பேன்.   ஆனால் எந்த காலத்திலும் அத்திரையுலகத்தை விட்டு விலகிச் செல்ல மாட்டேன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 15-06-2013

பொலிஸ் மீது எச்சில் துப்பிய ஆங்கிலேயருக்கு சிங்கப்பூரில் 4.5 லட்சம் அபராதம்.

சிங்கப்பூரில் குடித்து விட்டு போலீஸ் முகத்தில் துப்பிய பிரிட்டன் நாட்டவருக்கு, 4.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.    பிரிட்டனை சேர்ந்தவர் போர்கன் டங்கன். சிங்கப்பூரில் இயங்கும் விமான நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்படும் பத்திரிகையில், இவர் ஆசிரியராக இருந்தார்.    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மது அருந்தி விட்டு சாலையில் விழுந்து கிடந்த இவரை அந்த வழியாக சென்ற இரண்டு பொலிஸார் எழுப்பி விசாரித்தனர்.   போலீஸை மரியாதை குறைவாக பேசியதற்காக, அவரை கை விலங்கிட்டு அழைத்து சென்றதால் கோபமடைந்த டங்கன், பொலிஸார் மீது எச்சில் துப்பினார்.   இதற்காக அவரை கைது செய்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார்.   ஆனால் டங்கனுக்கு 4.5 லட்சம் ரூபாய் அபராதம் மட்டும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 15-06-2013

பிரித்தானிய இளவரசரின் DNA யில் இந்தியாவின் பாரம்பரியம் - சிரித்திரன்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம்மின் மரபியல் அணுக்களில் (DNA) இந்திய வம்சாவளித் தன்மை காணப்படுவதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.   இதன் மூலம் இந்திய பரம்பரை அணுக்களை கொண்டுள்ள முதலாவது பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தினர் என்ற பெருமையையும் வில்லியம் பெற்றுள்ளார்.    பிரிட்டிஷ் மன்னராக முடிசூடுவதற்கு இரண்டாவது நிலையில் இருக்கிறார் வில்லியம்.  அடுத்த மாதம் இவருக்கும் மனைவி கதெரினுக்கும் புதிய வாரிசு பிறக்கப்போவதும் குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் வில்லியம்ஸின் இரத்த மாதிரி டி.என்.ஏக்களில் ஐரோப்பிய வம்சாவளியினர் இல்லாத டி.என்.ஏக்கள் கலந்திருப்பதாகவும் இது வில்லியம்மின் தாயாரும் முன்னாள் இளவரசியுமான டியானவின் மூதாதையர்களிடமிருந்து வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுக்கிறது.    1788-1820 காலப்பகுதியில் வில்லியம்மின் பாட்டனாரின் பாட்டனார் தெடூர் ஃபோர்ப்ஸ் என்பவர் குஜராத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்காக வேலை செய்து வந்தார். அப்போது அவர் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் எலிசா கெவார்க் எனும் ஆர்மெனிய பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் அப்பெண்ணின் தாயார் வழியினர் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.    எனவே இந்த டி.என்.ஏக்களே தலைமுறை கடது வில்லியம்முக்கும் கடத்தப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.    குழந்தை பிறந்ததும் வில்லியம் - கேட் தம்பதியினர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.   செய்திப்பகிர்வு: சிரித்திரன் - கனடா.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 14-06-2013

கோல்சீட் நெருக்கடியில் காஜல் அகர்வால்.

உலக நாயகன் கமலுடன் ஜோடி சேர நாயகிகளுக்கு கசக்குமா என்ன? ஆனால், பாவம் காஜல் அகர்வாலு க்குத்தான் கால்ஷீட் பிரச்சனையாம். அதனால் உலக நாயகனுடன் ஜோடி சேர  முடியாத வருத்தத்தில் காஜலுக்கு அழுகையே வந்துவிட்டதாம். தெலுங்கில்  சுருதி ஹாசன், காஜல் அகர்வால், அமலாபால், சமந்தா என்று நால்வருக்குள்ளும் கடும் போட்டி  நடந்து வருகையில், கால்ஷீட்டை போட்டி போட்டுக் கொண்டு, பிச்சுக் கொடுத்து விட்ட காஜல் இப்போது கண்களை கசக்கியபடி நிற்கிறாராம். காரணம் கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்துக்கு லிங்குசாமி தரப்பில் காஜலிடம்  திகதி கேட்கப்பட்ட போது, காஜல் விழிபிதுங்கி நின்றாராம். காஜலின் கால்ஷீட் இந்த வருடம் வரை இல்லை. பின்னே  என்ன செய்வார் பாவம். ஹூம் சான்ஸ் வேறு யாருக்கு அடிக்கப்போகிறதோ என்கிற கவலையில் இப்போதே தூக்கம் பிடிக்கவில்லையாம் காஜலுக்கு. லிங்கு சாமி தயாரிக்கும் இந்த படத்தில் கதை வசனம் கிரேசி  மோகன் எழுத, இயக்கும் பொறுப்பை கமலே ஏற்றுக் கொண்டுள்ளாராம். வருகிற அக்டோபர்  மாதம் உத்தம வில்லன் ஷூட்டிங் தொடங்க உள்ளதாம். விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத் தட்ட முடியும் தருவாய்க்கு வந்துவிட்டதாம். அதன் வேலைகள் முடிந்த கையோடு, உத்தம வில்லன் வேலைகளை ஆரம்பிக்க உள்ளாராம் கமல். கமல், கிரேசி கூட்டணி கலக்கலுக்கு கேட்பானேன்?

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 14-06-2013

ஒரு ஈரோவுக்கு கார் விற்பனையில் பிரான்ஸ்.

பிரான்சில் பொருளாதார சரிவு ஏற்பட்டதையடுத்து விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.   இதையடுத்து விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு பிரெஞ்சு கார் டீலர் நிறுவனம் ஒன்று 10,120 யூரோ மதிப்புள்ள ஹுண்டாய் ஐ10 காரை 1 யூரோவுக்கு வழங்க உள்ளது. இதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இந்த பரிசை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் 29,618 யூரோ மதிப்புள்ள Hyundai iX35 diesel SUV காரை வாங்க வேண்டும் மற்றும் அந்த வாகனத்தின் மூலம் 8 வருடங்களுக்கு மேல் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.   இவ்வாறு செய்தால் முன்னர் கூறப்பட்ட காருக்கு 1 யூரோ மட்டுமே செலுத்தினால் போதும். இந்த இரண்டு கார்களுக்கும் அனைத்து சேவைகளும் சமமாகவே வழங்கப்படும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 14-06-2013

கனடிய கடைத்தெருவில் பிறந்த குழந்தை.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரிச்மான்ட் நகரத்தின் ஷாப்பிங் மால் ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த கர்ப்பிணிப் பெண் அங்கு ஒரு ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.   கடைத்தொகுதி பாதுகாப்பு அதிகாரி 911 ஐ அழைத்ததாகவும் தீயணைப்பு பிரிவினர் வரும்முன் அப்பெண் பிரசவித்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.     துணை மருத்துவ பிரிவினர் வரும் முன்னர் குழந்தை பிறந்ததால் தீயணைப்பு படையினர் சிசுவின் தொப்புள் கொடியை வெட்ட வேண்டியிருந்தது.     வியாபாரிகள் ஏராளமான பரிசுப்பொருட்களை குழந்தைக்கு கொடுத்ததோடு, குடும்பத்தினருக்கு இரவு விருந்தும் அளித்துள்ளனர்.     அதுமட்டுமல்லாது பேக்கரி சொந்தக்காரர் ஒருவர் குழந்தைக்கு 18 வயதுவரையும் பிறந்தநாள் கேக் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 13-06-2013

சூர்யாவுடன் ஜோடி சேரும் திரிஷா.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்றும் அவருடன் அமலா பாலும் நடிக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அறிமுகமாகி பத்தாண்டுகள் கடந்த பிறகும் இன்னும் பரபரப்பான கதாநாயகியாகவே திகழ்கிறார் த்ரிஷா. துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டாலும், படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இயக்குநர் கவுதம் மேனன். இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மரியான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மார்க் கோனின்க்ஸ் காமிராவைக் கையாள்கிறார். இவருக்கு பெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். கதாநாயகியாக இயக்குநர் மற்றும் ஹீரோவின் முதல் சாய்ஸே த்ரிஷாதானாம். ஏற்கெனவே மவுனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் சூர்யாவுடன் நடித்தவர்தான் த்ரிஷா. இன்னொரு பக்கம் அமலா பாலுடனும் பேசி வருகிறார்களாம். இருவரையுமே நாயகியாக்கினால் என்ன என்றும் பேசப்பட்டு வருகிறதாம். இந்தப் படத்தில் ஏற்கெனவே சிம்ரனும் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 13-06-2013

உலகின் அதிக வயதுடைய ஆண் மரணம்.

உலகின் மிக வயதான முதியவர் என்று சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஜப்பானை சேர்ந்த முதியவர் இன்று உயிரிழந்தார்.   ஜப்பானின் யோடாங்கோவை சேர்ந்தவர் ஜிரோய்மன் கிமுரா (116). உலகின் மிக அதிக வயாதானவர் எனக் கருதப்பட்ட இவர், இதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடபெற்றுள்ளார்.    கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வந்த இவர், இன்று ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார்.     1897 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப் பருவத்தில் தபால் துறை ஊழியராக பணியாற்றினார்.   தனது 115 வது ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது நீண்ட ஆயுளுக்கு அதிக நேரம் சூரிய வெளிச்சத்தின் கீழ் நின்றிருப்பதுதான் காரணம் என்று அவர் கூறியிருந்தார்.   2012 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் இவர் உலகின் மிக வயதான முதியவராக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கபட்டார்.   நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்த கிமுராவுக்கு 7 பிள்ளைகள், 14 பேரக் குழந்தைகள், 25 கொள்ளுப்பேரன் பேத்திகள், 15 எள்ளுப்பேரன் பேத்திகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 13-06-2013

சாணியில் இயங்கும் விமானம்.

அமெரிக்காவில் நடைபெற்ற 'ஏர்பஸ்' fly your ideas போட்டியில், மாட்டு சாணத்தைக்கொண்டு இயங்ககூடிய விமானங்களை உபயோகிக்கும் சாத்தியகூறுகள் குறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த குழு விளக்கியுள்ளது.   அமெரிக்காவில் நடைபெற்ற விமானங்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு யோசனைகளுக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு குழு மாட்டு சாணத்தால் விமானங்களை இயக்ககூடிய சாத்தியகூறுகளை விளக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.    இப்போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று தங்கள் வடிவமைப்புகளை தாக்கல் செய்தனர்.    அதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர்கள் பசு சாணம் மூலம் இயங்கும் விமானத்தை வடிவமைத்து இருந்தனர். பெட்ரோலுக்கு பதிலாக மீத்தேன் மூலம் இயங்கும் படி தயாரித்து இருந்தனர்.    விமானத்தில் என்ஜினுக்கு அருகே பசு சாணம் கழிவு டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மீத்தேன் தயாராகி விமானத்தை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.    மேலும் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் விமான பயணிகளின் உடலில் இருந்து வெளியாகும் வெப்பம் மூலம் இயங்கும் விமானத்தை வடிவமைத்து இருந்தனர். அதன் மூலம் பயணிகளின் இருக்கையில் உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவை உடலில் இருந்து வெளியாகும் வெப்பத்தை எடுத்து அதை மின்சாரமாக மாற்றி விமானத்தை இயங்க செய்யும்.    ஆஸ்திரேலியா, பிரேசில், மலேசியா, இத்தாலி ஆகிய நாடுகளுடன் இப்போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் குழுவும் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.   சென்னை மாணவர்கள் விமானம் இயங்கும்போது ஏற்படும் சத்தத்தை குறைக்க ஒரு புதிய யோசனையை பரிந்துரை செய்துள்ளனர்.   கடும் போட்டியுடன் நடைபெற்ற இந்த 'ஏர்பஸ்' fly your ideas போட்டியின் வெற்றியாளர் யார் என்பது ஜூன் மாதம் 14 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. 

மேலும் படிக்கவும் 5 மறுமொழிகள் சுதர்சன் 12-06-2013

சம்பளத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய்.

நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் ரூ.16 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஏன் அண்டை மாநிலமான கேரளாவிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளதாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் தெரிவித்துள்ளார். காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி என விஜய் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதில் விஜய் பாடியுள்ள பாடல் சூப்பர் ஹிட்டாகப் போகிறது என்று அஜீத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வரும் விஜய் சம்பளத்தை உயர்த்தி வருகின்றார். இந்நிலையில் நேசன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜில்லா படத்திற்கு ரூ. 16 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறும் நடிகராக விஜய் உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 12-06-2013

127 வயது மூதாட்டி சீனாவில் மரணம்.

உலகின் மிக அதிக வருடங்களுக்கு உயிர் வாழ்ந்தவராக கருதப்பட்ட மூதாட்டி அவரது 127 வது வயதில் காலமடைந்துள்ளார்.   உலகளவில் இதுவரை மிக வயதான பெண்மணி என்று கருதப்பட்ட லுவோ மேயசென் சீனாவில் இன்று மரணமடைந்தார். இவர் 1885 ஆம் ஆண்டு பிறந்ததற்கான ஆதாரப்பூர்வ ஆவணங்கள் உள்ளன. இதன் அடிப்படையில் பார்த்தால் லுவோ மேயசென்னிற்கு 127 வயது ஆகிறது.   சமீபத்தில் மரணமடைந்த ஜப்பான் மூதாட்டியின் மறைவுக்குப் பிறகு உலகின் மிக அதிக வயதான பெண்மணியாக லுவோ மேயசென் கருதப்பட்டார். கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், சீனாவில் உள்ள குவாங்சி மாகாணத்தில் மரணமடைந்தார்.   இந்த வயது முதிர்ந்த மூதாட்டியின் மறைவு குறித்து தெரிவித்த அவரது மகன், ஹுஆங் தெரிவிக்கையில், எனது தாய் மன வலிமை பெற்றவர். அவர் அடிப்படையில் ஒரு மென்மையான பெண்மணியாக இருந்தாலும் சில நேரங்களில் அவருக்கு கட்டுபடுத்த முடியாத கோபம் ஏற்படும். எங்கள் தாயின் உடலை எங்களின் வீட்டில் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் வைத்திருக்கிறோம், இம்மாதம் இறுதியில் ஒரு நல்ல நாள் பார்த்து அவரின் உடலை புதைக்கவுள்ளோம் எனக் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 12-06-2013

வெளிநாடுகளில் வாழ்வோருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை.

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று அங்கு வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.     வெளிநாடுகளில் பிரஜாஉரிமை பெற்ற இலங்கையர் 3 முதல் 5 இலட்சம் பேர்வரை ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளிலும் வசிக்கின்றனர்.   அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக இலங்கை வர விருப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ளோர் அங்கு பிரஜாவுரிமை பெற்ற பின்னர் இலங்கை பிரஜா உரிமை இரத்தாகிறது.   வெளிநாடுகளில் வசிக்கும் இலட்சக்கணக்கான இலங்கையரின் கோரிக்கையின் பேரில் புதிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.     ஆரம்பத்தில் ஒரு இலட்சம் பேருக்கு இரட்டைப் பிரஜாஉரிமை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் 31 மறுமொழிகள் சுதர்சன் 11-06-2013

திரைப்படச்சங்கத்தின் தலைவராக விக்ரமன்.

தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் புதிய தலைவராக விக்ரமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 2013-2015 தலைவராக செயற்படவுள்ளார். ஒவ்வொரு இரு ஆண்டுக்கும் ஒரு முறை இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது.   இயக்குனர் பாரதி ராஜா தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தேர்தல் நடத்தப்பட்டது. வழமை போன்று இரு அணிகள் பங்கு கொண்டன. விக்ரமன் தலைமையிலான ஒரு அணியும், விசு தலைமையிலான மற்றுமொரு அணியும் பங்கெடுத்தன.   நேற்று இரவுகள் வாக்கு எண்ணப்பட்டது. முடிவில் இயக்குனர் விக்ரமனுக்கு 717 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட விசுவுக்கு 562 வாக்குகளும் கிடைத்தன.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 11-06-2013

ரொறொண்டோவில் துவிச்சக்கர வண்டிப்பாதை.

ரொறொன்ரோவில் துவிச்சக்கர வண்டி தனிப்பாதை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதை கொண்டாடும் முகமாக நகர உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை செய்தியாளர் மகாநாடு ஒன்றை நடாத்தவுள்ளனர். Sherbourne வீதி துவிச்சக்கர வண்டி பாதை ஏனைய வாகன போக்குவரத்துக்களிலிருந்து வேறாக்கப்பட்டு ரொறொன்ரோ டவுன்ரவுன் கிழக்கில் வடக்கு- தெற்காக துவிச்சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கென ஒதுக்கப்படும்.  சில விரிவாக்கங்கள் தடைகளாலும், சாயம் பூசிய கோடுகளாலும் வேறுபடுத்தப்படும். இதே போன்று Wellesley, Richmond and Adelaide வீதிகளிலும் சைக்கிள் பாதைகள் அமைக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. downtown ரொறொன்ரோவில் ஒவ்வொரு கிழமை நாட்களிலும் குறைந்தது 30,000 மிதிவண்டி பயணிகள் பயணம் செய்கின்றனரென கூறப்படுகின்றது.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 11-06-2013

குடியேற்றக்கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்யும் பிரித்தானியா.

பிரித்தானியப்பிரஜைகள் தமது குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளிலிருந்து அழைத்து வந்து குடியிருப்பதில் உள்ள குறைந்தபட்ச வருமானம் ரீதியான கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு குடிவரவு தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவொன்று கேட்டுக்கொண்டுள்ளது.   ஐரோப்பிய பொருளாதார வலய நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் குடும்ப உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள வேண்டுமானால், பிரித்தானியப் பிரஜைகள் குறைந்த பட்ச வருமானத் தொகையொன்றைக் காட்டவேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு ஓராண்டுக்கு முன்னர் வந்தது.   வாழ்க்கைத் துணை ஒருவரை பிரிட்டனுக்கு அழைத்து வந்து குடியிருக்க வேண்டுமானால் பிரஜை ஒருவர், ஆண்டுக்கு 18 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகளை சம்பாதிப்பவராக இருக்கவேண்டும்.   அதேபோல பிள்ளை ஒன்றை அழைக்க வேண்டுமானால் அந்தத் தொகை 22,400 பவுண்டுகள் வரை உயர்கின்றது.   அதன் பின்னர் ஒவ்வொரு பிள்ளைக்கும் 2,400 பவுண்டுகள் வரை கூடுதலாக வருமானம் இருக்கவேண்டும்.   இவ்வாறான வருமானம் ரீதியான கட்டுப்பாடுகள் குடும்பங்களை துண்டாடுவதாக நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.     இதேவேளை, பிரிட்டனில் வரிசெலுத்தும் மக்களின் மீது சுமை சுமத்துவதைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறான சட்டங்கள் தேவைப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 10-06-2013

சிம்புவுக்கு பெண் தேடும் வேட்டை.

மன்மத நடிகருக்கு வீட்டில் பெண் தேடுகிறார்கள்.   கடந்த இரு வருடமாக இந்த தேடுதல் படலம் நடந்தாலும் நடிகரின் எவரெஸ்ட் பயணத்துக்கு பிறகு தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியிருக்கிறார்கள்.    அப்படியே அவரின் தங்கைக்கும் மாப்பிள்ளை பார்க்கப்படுகிறது. நடிகர் அடுத்த ஹிமாலய ட்ரிப்புக்கு பேக்கிங் செய்வதற்குள் கல்யாணத்தை முடித்துவிட பார்க்கிறார்கள்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 10-06-2013

எடை அதிகரிப்பால் மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு.

பட்டினிச்சாவுகளை விட உண்டு கொழுத்து அதன்மூலம் நோய்பாதிப்பிற்கு ஆளாகி மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலக அளவில் இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வில் சத்தான உணவு கிடைக்காமல் இறப்பவர்களை விட உடல்பருமனாலும், புகை, மது, போதைப் பழக்கத்தினாலும் அதிக அளவில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.   கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் மட்டும் உடல் பருமன் மூலம் உலக அளவில் 30 லட்சம் பேர் இறந்தனர் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.   சத்துணவு இல்லை   ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் பலருக்கு உண்பதற்கு போதிய உணவு கிடைக்காமல் குறைந்த வயதிலேயே மரணமடைந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் சரியான உணவின்றி 10 லட்சம் பட்டினிச்சாவுகள் நிகழ்ந்துள்ளன.   நோய் பாதிப்பு அதிகம்   ஐந்து வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளை ஒருங்கிணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு ஐநூறு ஆராய்ச்சியாளர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.   உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்றாலும், அவர்கள் நோய்வாய்ப்படுகின்ற அளவு அதிகரித்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.   குறையும் உடல் உழைப்பு   மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் உடல் பருமன் அதிகரிக்கிறது. மேலும் உடல் உழைப்பு குறைவதும் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.   இதயநோயால் இறப்பு   2010 நிகழ்ந்த மரணங்களில் இதயநோயும், மூளையில் ரத்தக்கசியும் நான்கில் ஒருவரின் மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது. அந்த ஆண்டில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் இறப்புகளுக்கு அந்நோய்கள் காரணமாக இருந்துள்ளன.   புகை மதுப்பழக்கம்   உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை உடல்நலப் பாதிப்புகளின் மிகப் பெரிய காரணியாக உருவெடுத்துள்ளன என்று இந்த ஆய்வு காட்டுகிறது.   15 லட்சம் எயிட்ஸ் மரணங்கள்   தவிர எய்ட்ஸ் நோயும் உயிரிழப்புகளுக்கான பெரிய காரணங்களுல் ஒன்றாக இருக்கிறது. 2010ஆம் ஆண்டு மொத்தம் 15 லட்சம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.   காசநோய் மரணங்கள் குறைவு   இறப்புகளை ஏற்படுத்திய காரணங்களின் வரிசைப் பட்டியலில் நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகம் காணப்படுகின்றன. அதேசமயம் காலரா, காசநோய் போன்றவை இப்பட்டியலில் கீழிறங்கியுள்ளன   அதிகரிக்கும் இடைவெளி   மக்களின் ஆயுட்காலம் பரவலாகப் பல நாடுகளிலும் அதிகரித்துள்ளது என்றாலும், சராசரி ஆயுட்கால வயதில் செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி என்னவோ குறையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.   மக்களிடையே நோயின் தாக்கங்கள் பற்றி உலக அளவில் இதுவரை இல்லாத பாரிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தி லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கின்றன.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 10-06-2013

வெளிநாட்டவர்களிடம் அபராதங்களை அறவிடும் சுவிஸ்.

சுவிட்சர்லாந்து நாட்டில் வெளிநாட்டுப் பயணிகள் வாகனங்களை ஒட்டும் போது அரசு குறிப்பிட்டுள்ள வேக வரம்பை மீறினால் அபராதம் செலுத்துதல் அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.   சொந்த நாட்டிற்குத் திரும்பியிருந்தாலும் அவர்களது வீடு தேடி இந்த உத்தரவுக் கடிதம் தரப்படுகின்றது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து, இதுபோன்று போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இந்தியப் பயணிகளிடமும் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கின்றது.   இந்திய காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, 9 ஆயிரம் முதல் 53 அயிரம் வரையிலான அபராதத் தொகைகள் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இந்திய மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை காவல்துறையின் குற்றவியல் பிரிவு, சர்வதேச காவல்துறையின் குழுவாக செயல்படுகிறது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் நீதிமன்ற உத்தரவுகள் இவர்களுக்கு அனுப்பப்படும். இங்குள்ள அயல்நாட்டுக் குற்றவாளிகளை அந்தந்த நாடுகளில் ஒப்புவிக்கும் பிரிவு, இந்த உத்தரவுகளை உரியவர்களிடம் சேர்க்கும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 09-06-2013

அறிவில் முன்னணியில் மூத்த பிள்ளைகள்.

டென்மார்க்கில் நடாத்தப்பட்ட ஆய்வொன்று முதல் பிறந்த அண்ணன் அல்லது அக்கா அதற்கு பிறகு பிறந்த சகோரதரங்களைவிட அறிவில் கூடியவர்களாக இருப்பதாக தெரிவிக்கிறது. பிள்ளைகள் பிறந்தவுடன் முதலாவது பிள்ளைக்காக பெற்றோர் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் இந்தப் பிள்ளைகள் நுண்ணறிவுத்திறனில் இளைய பிள்ளைகளைவிட முன்னணி வகிப்பதாகவும் கூறுகிறது. மொத்தம் 690 பிள்ளைகளிடையே இந்த ஆய்வு நடாத்தப்பட்டது, முதலாவது பிள்ளை நுண்ணறிவில் ஒரு புள்ளி முன்னணியில் நிற்கிறது, இரண்டாவதிற்கும் மூன்றாவதிற்கும் இடையே நுண்ணறிவுப் புள்ளி 2 தொடக்கம் 3 புள்ளிகள் குறைவாகக் காணப்படுகிறது. முதலாவது பிள்ளை பிறந்தவுடன் பெற்றோருக்கு அது புதிய அனுபவமாக இருப்பதால் அதிகூடிய கவனம் எடுக்கிறார்கள் மாறாக பல பிள்ளைகள் பிறக்கும்போது அவர்களுக்கும் ஆறின கஞ்சி பழங்கஞ்சியாகிவிடுகிறது, இது இளைய பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் குறைந்துவிடுகிறது. மேலும் அறிவைக்கூட்டி, நுண்ணறிவுத்திறன் ஒரு புள்ளியால் அதிகரிக்கப்பட வேண்டுமானால் அதற்கான செலவு 160.000 குறோணர் என்று மதிப்பிடப்படுகிறது. எனவே கடைசிப்பிள்ளைக்கும் முதற் பிள்ளைக்கும் இடையே 3 புள்ளிகள் நுண்ணறிவுத்திறனில் வேறுபாடு இருக்குமானால் சுமார் அரை மில்லியன் குறோணர் செலவிட்ட இடைவெளி காணப்படும். அதேவேளை இதற்கு முன்னர் வெளியான ஆய்வொன்று பெற்றோர் அனுபவம் இன்மை காரணமாக முதற் பிள்ளையை செல்லம் கொடுத்து வளர்த்து நாசமாக்கிவிட்டு, அடுத்து பிள்ளைகளை ஒழுங்காக வளர்ப்பதாக தெரிவித்திருந்தது. இப்போது வெளியாகியிருக்கும் ஆய்வு நுண்ணறிவுத் திறன் தொடர்பானது என்பது கவனிக்கத்தக்கது. மறுபுறம் மூத்தோன் இளையோன் என்ற வேறுபாடு பார்க்காமல் தன் பிள்ளைகளில் எப்பிள்ளை அறிவு கூடியதாக இருக்குமோ அதற்கே தாய் முதலிடம் கொடுப்பாள் என்கிறது பழம் பெரும் தமிழ் நூலான புறானூறு.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 09-06-2013

அஜித்துடன் நடிக்கும் தமன்னா கவர்ச்சியில்?

அஜித் படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தேன் என்று வந்த செய்தியை மறுத்திருக்கிறார் நடிகை தமன்னா. கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா. அதன்பின்னர் கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, ஆகிய படங்கள் தான் அவருக்கு ஹிட் ஹீரோயினாக மாற பாதை அமைத்துக் கொடுத்தது. அதன்பின்னர் விஜய்யுடன் நடித்த சுறா, தனுஷுடன் நடித்த வேங்கையும் வெற்றி பெறாததால் தெலுங்கு பக்கம் போனார். அதனால் தமிழ் சினிமாவை விட்டு விட்டு முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டும் நடித்த தமன்னா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் நடிகை தமன்னா படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இது குறித்து தமன்னாவிடம் கேட்டால் உடனே மறுக்கிறார். என்னைப் பொறுத்தவரை கிளாமருக்கு ஒருபோதும் நான் தடை சொன்னதில்லை. காரணம் என் உடல்கட்டுக்கு கிளாமர் உடைகள்தான் மேட்சாக இருக்கும். பையா படத்தில் கூட நான் மழையில் நனைந்தபடி ஆடிப்பாடிய பாடல்களைத்தான் ரசிகர்கள் அதிகமாக ரசித்தார்கள். அந்த வகையில், என்னால் முடிந்த வரை கவர்ச்சி விருந்து கொடுத்திருக்கிறேன். அப்படிப்பட்ட நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன். முழுக்க நனைந்த பின்னர் யாராவது முக்காடு போட என்னிடம் எதுவும் இல்லை என்று சொல்லும் தமன்னா, அஜித் படத்தில் எந்த அளவுக்கு கிளாமராக நடிக்க சொன்னாலும் ரெடியாக இருக்கிறேன் என்கிறார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 09-06-2013

சூனியக்காரனை நரபலி கொடுத்த கிராம மக்கள்.

அசாம் மாநிலத்தில் உள்ள கலபீல்பஸ்தி என்ற கிராமத்தில் சூனியக்காரன் என்ற சந்தேகத்தின் பேரில் கிராம மக்கள் ஒன்று கூடி அந்த நபரை காளியின் முன் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அந்த கிராமத்தில் தேயிலைத் தோட்ட தொழைலாளர்கள் வசித்து வந்தனர். அந்த கிராமத்தில் சில நாட்களாக பலர் திடீரென இறப்பதும், காணாமல் போவதுமான நிலைமை இருந்து வந்துள்ளது. இந்த மர்மத்தின் காரணத்தை கிராம மக்கள் ஆராய்ந்து வந்தனர்.   அதன் பிறகுதான்...   இது ஒரு சூனியக்காரனின் வேலையாகத்தான் இருக்கும் என்று அவர்கள் நம்பினர். இந்த நிலையில்தான் கிராம மக்கள் சந்தேகம் ஜவகர்லால் மியூரா என்ற 55 வயது நபர் மீது ஏற்பட்டது.   கடந்த வியாழனன்று அந்த மியூராவை கிராம மக்கள் கைகளையும், கால்களையும் கட்டி தூக்கி வந்துள்ளனர். பிறகு சடங்கார்த்தமாக அவருக்கு குளிப்பாட்டி, குங்குமப் பொட்டிட்டு ஆல மரத்தினடியில் உள்ள காளி வீற்றிருந்த மேடைக்கு கொண்டு வந்துள்ளனர். பிறகு அவர்கள் அவனைச் சுற்றி ஆடிப் பாடியுள்ளனர். பிறகு கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கையில் மியூராவை வெறித்தனமாக கொலை செய்துள்ளனர்.   பிறகு அவனது உடலைப் புதைத்தனர். செய்தி அறிந்த காவல்துறையினர் மியூராவின் உடலை எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கிராம மக்கள் அந்த மியூரா மீது கடும் கோபத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   இருந்தாலும் 2000 பேர் வேடிக்கைப் பார்க்க இப்படியொரு படு பாதகச் செயலைச் செய்ய எப்படி மனம் வந்தது என்று அப்பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-06-2013

விஜய் பிறந்தநாள் நலத்திட்டம் ரத்து.

ஜூன் 22-ந்தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளாகும்.   இதையொட்டி அவரது ரசிகர்கள் சென்னையில் இன்று ஜூன் 8-ந்தேதி பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.   அதற்காக, சென்னையிலுள்ள ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது.   விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கட்அவுட்டுகள், போஸ்டர்கள் ஒட்டும் பணியை தொடங்கினர்.   இந்த விழாவில்தான், 3 ஆயிரத்து 900 ஏழைகளுக்கு ரூ. 1 கோடி அளவில் நலத்திட்ட உதவி செய்யவிருந்தார் விஜய்.   இந்த விழாவில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்து விஜய் ரசிகர்கள் வேன் மற்றும் பஸ்களில் சென்னைக்கு வர ஆயத்தமாகினர். இந்த நிலையில், நேற்று இந்த விழா ரத்து செய்யப்படுவதாக திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.   இதையடுத்து வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-06-2013

பயணச்சீட்டில்லாமல் பயணம் செய்தவர் மரணம்.

மொஸ்கோ விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய iFly விமானத்தில் பயணச்சீட்டு வாங்காமல் திருட்டுத்தனமாக பயணம் செய்த நபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இத்தாலியின் ரிமினி நகரில் இருந்து ஐ-ப்ளை விமான நிறுவனத்தின் A-330 பயணிகள் விமானம் இன்று அதிகாலை ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது.    அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்ற பிறகு, விமானத்தின் சக்கரங்களை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, அடிப்பகுதியில் சக்கரத்திற்கு மேற்புறத்தில் உள்ள கம்பார்ட்மெண்டில் ஒரு நபர் இறந்து கிடந்தார். அவரது உடல் அப்புறப்படுத்தப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.  முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் அமெரிக்கா வாழ் ஆப்பிரிக்கர் என்றும், பயணசீட்டு வாங்காமல் விமானத்தின் அடிப்பகுதியில் மறைந்திருந்து பயணம் செய்தபோது, அதிக குளிர் காரணமாக இறந்ததாக தெரியந்துள்ளது.   மேலும், இவர் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்யும் என்னத்ஹில் இருந்ததால், இந்த விமானத்தில் சில நாட்களாக இருந்திருக்காலம் என்றும், இந்த நபர் சுமார் 4 நாட்களுக்கு முன்னரே இறந்திருக்ககூடுமெனவும் தெரியவந்துள்ளது

மேலும் படிக்கவும் 4 மறுமொழிகள் சுதர்சன் 08-06-2013

உலகளவில் அதிகளவு கூலி பெறும் விளையாட்டு வீரர்களில் தோனி 16வது இடம்.

உலகில் அதிகளவு சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 16வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.   புகழ்பெற்ற போர்ப் சஞ்சிகை வெளியிட்டுள்ள இப்பட்டியலின் படி கோல்ஃப் வீரர் டைகர் வூட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்துக்கள் தற்போது ரூ.444 கோடிகளால் அதிகரித்துள்ளது.  இவரை தொடர்ந்து சுவிற்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரெர் இந்த வருடத்தில் சம்பாதித்த ரூ.406 கோடிகளுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோஃப் பிரைண்ட்  ரூ. 347 கோடிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்.  கடந்த சில ஆண்டுகளாக 31 வது இடத்தில் இருந்து வந்த மகேந்திர சிங் தோனி இம்முறை 15 இடங்கள் முன்னேறி 16வது இடத்தைப் பிடித்துள்ளார்.  கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 51 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை 100 வீரர்கள் கொண்ட இப்பட்டியலில் மூன்று பெண்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளனர். அதில் டென்னிஸ் வீராங்கணை மரியா ஷரபோவாவும் ஒருவர். செரீனா வில்லியம்ஸ் 68வது இடத்தில் உள்ளார்.  Top 100 Rank Name Sport Nationality Total earnings Salary/winnings Endorsements 1 Tiger Woods Golf United States $78.1 million $13.1 million $65 million 2 Roger Federer Tennis Switzerland $71.5 million $6.5 million $65 million 3 Kobe Bryant Basketball United States $61.9 million $27.9 million $34 million 4 LeBron James Basketball United States $59.8 million $17.8 million $42 million 5 Drew Brees American football United States $51 million $40 million $11 million 6 Aaron Rodgers American football United States $49 million $43 million $6 million 7 Phil Mickelson Golf United States $48.7 million $4.7 million $44 million 8 David Beckham Football England $47.2 million $5.2 million $42 million 9 Cristiano Ronaldo Football Portugal $44 million $23 million $21 million 10 Lionel Messi Football Argentina $41.3 million $20.3 million $21 million 11 Tom Brady American football United States $38.3 million $31.3 million $7 million 12 Derrick Rose Basketball United States $37.4 million $16.4 million $21 million 13 Joe Flacco American football United States $36.8 million $35.9 million $0.9 million 14 Floyd Mayweather, Jr. Boxing United States $34 million $34 million $0 14 Manny Pacquiao Boxing Philippines $34 million $26 million $8 million 16 Mahendra Singh Dhoni Cricket India $31.5 million $3.5 million $28 million 17 Kevin Durant Basketball United States $30.9 million $16.9 million $14 million 18 Alex Rodriguez Baseball United States $30.3 million $29.8 million $0.5 million 19 Fernando Alonso Auto racing Spain $30 million $28 million $2 million 19 Peyton Manning American football United States $30 million $18 million $12 million 21 Rory McIlroy Golf Northern Ireland $29.6 million $13.6 million $16 million 22 Maria Sharapova Tennis Russia $29 million $6 million $23 million 23 Dwyane Wade Basketball United States $28.9 million $17.4 million $11.5 million 24 Tony Romo American football United States $28.8 million $25.8 million $3 million 25 Carmelo Anthony Basketball United States $28 million $19.5 million $8.5 million 26 Lewis Hamilton Auto racing England $27.5 million $26 million $1.5 million 27 Amar'e Stoudemire Basketball United States $27 million $20 million $7 million 28 Novak Djokovic Tennis Serbia $26.9 million $12.9 million $14 million 29 Dwight Howard Basketball United States $26.5 million $19.5 million $7 million 30 Rafael Nadal Tennis Spain $26.4 million $5.4 million $21 million 31 Calvin Johnson American football United States $26.3 million $25.5 million $0.8 million 32 Dale Earnhardt, Jr. Auto racing United States $26 million $13 million $13 million 33 Ray Rice American football United States $25.8 million $24.2 million $1.6 million 34 Joe Mauer Baseball United States $25.5 million $23 million $2.5 million 34 Johan Santana Baseball Venezuela $25.5 million $24.5 million $1 million 36 Derek Jeter Baseball

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 07-06-2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியுமில் இளையராஜா இசை?

சிந்துபைரவி படத்தின் பின்னணி இசையமைக்க இளையராஜாவுக்கு தாமதமானதால் வேறொரு இசையமைப்பாளரை பாலசந்தர் பயன்படுத்தினார். இதன் காரணமாக பாலசந்தருடன் அதன் பிறகு இணைந்து பணியாற்றவில்லை இளையராஜா. அப்படிப்பட்ட இளையராஜாவின் படத்தின் ட்ரெய்லருக்கு இன்னொருவரின் இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.   மிஷ்கின் தனது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் ட்ரெய்லரை யு டியூபில் வெளியிட்டிருக்கிறார். முன்னணி இசை கோர்ப்பு இளையராஜா என்றுதான் ட்ரெய்லரில் வருகிறது. ஆனால் ட்ரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருப்பது சென்ற நூற்றாண்டின் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய இசையமைப்பாளரான Gustav Mahler - ன் சிம்பொனி இசை.   மிக அற்புதமான இந்த இசை ட்ரெய்லருக்கு அட்டகாசமாக பொருந்தியிருக்கிறது. உண்மையில் ட்ரெய்லரின் தரத்தை தூக்கி நிறுத்துவதே இந்த இசைதான். இளையராஜாவின் படத்தில் இன்னொருவரின் இசை இடம் பெற்றது எப்படி? இளையராவுக்கு இது தெரியுமா?   ஆச்சரியமாக இருக்கிறது. 

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 07-06-2013

பெண்களில் மது அருந்தும் எண்ணிக்கை கனடாவில் அதிகரிப்பு.

கனடாவில் பத்து ஆண்டுகளுக்குள் பெண்கள் மத்தியில் மதுப்பழக்கம் அதிகரித்திருப்பதாக கனடியப் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 30சதவீத அதிகரிப்பு ஏற்பட்டள்ளதெனவும் தெரிவித்துள்ளது. ஒரு இருக்கையில்  5 அல்லது அதற்குக் கூடுதலான தரம் மது அருந்துதல் ஆபத்தான மதுபான அளவு எனக் கருதப்படுகிறது. அதுவும் இது மாதத்தில் ஒரு முறையோ அல்லது பல தடவைகளாகவோ கூட இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. பெண்கள் மது அருந்துதலில் ஆண்களை எட்டிப்பிடிக்க முடியவில்லை,  ஆனால் அவர்கள் மத்தியில் இந்தப்பழக்கம் அதிகரிப்பது பல வகையான கேள்விகளை எழுப்புகின்றதென சமுக ஆர்வலர்கள் கூறியிருக்கின்றார்கள்.

மேலும் படிக்கவும் 8 மறுமொழிகள் சுதர்சன் 07-06-2013

கணவனைப்பிரிந்த பின் உடல் நலிந்த பிரித்தானிய பெண்.

இங்கிலாந்திலுள்ள Taryn Wright என்ற 31 வயது பெண் திருமணத்தால் தன் எடையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கூறும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   அவர் தன்னுடைய 10வது வயதில் காதலித்து 12 வது வயதில் Grays என்பவரை திருமணம் செய்துகொண்டார்.   திருமணத்திற்கு முன்புவரை நார்மல் உடல் எடையுடன் இருந்த அவர், திருமணத்திற்கு பின் திடீரென உடல் பெருத்து காணப்பட்டார்.   உணவுக்கட்டுப்பாடு இருந்தும் அவருடைய உடல் எடை சிறிதும் குறையவில்லை.   இதனால் மனம் வெறுத்த அவருடைய கணவர் அந்த பெண்ணைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.     கணவர் பிரிந்த ஒரு வருடத்தில் Taryn Wrigh, எவ்வித சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாமலும், உணவுக்காட்டுப்பாடு எதுவும் இல்லாமல் உடல் இளைத்து விட்டார்.   இது மருத்துவ உலகில் ஒரு அதிசயமாக கூறப்படுகிறது.   Taryn Wright மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் தனிமையிலேயே தன்னுடைய வாழ்நாளை கழிக்கப்போவதாகவும் முடிவு செய்துள்ளார்.   ஆகவே உங்களுக்கும் இப்பிரச்சனை இருக்குமாயின் உடன் உங்கள் கணவரிடமிருந்து/மனைவியிடமிருந்து உடன் பிரிந்து சென்று விடுங்கள்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 06-06-2013

ஷங்காய் திரைப்பட திருவிழாவில் கனடியத்தமிழர் திரைப்படம்.

சீனாவின் சங்காய் நகரில் வரும் 15ம் நாள் ஆரம்பமாகவுள்ள அனைத்துலக திரைப்பட விழாவில் கனேடியத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ‘A Gun & A Ring’  [ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்] என்ற திரைப்படம் தங்கக்கோப்பை விருதுக்கான போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.     Golden Goblet Award  எனப்படும் இந்த விருதே, சங்காய் திரைப்பட விழாவில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதாகும்.     16வது சங்காய் திரைப்பட விழாவில் தங்கக் கோப்பை விருதுக்கான போட்டியில் 12 திரைப்படங்கள் உள்ளன.   கனேடிய இயக்குனர் லெனின் எம். சிவம் A Gun & A Ring படத்தை உருவாக்கியுள்ளார்.     அனைத்துலக அளவில் பிரபலமான இந்த திரைப்படத் திருவிழாவில் திரையிடுவதற்கு உலகின் 112 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் சார்பில் உருவாக்கப்பட்ட 1665 திரைப்படங்கள் போட்டியிட்டன.   இவற்றில் இருந்தே A Gun & A Ring உள்ளிட்ட 12 படங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.     இந்தப் படத்தை இயக்கியுள்ள சிவம் ஏற்கனவே ’1999′ என்ற திரைப்படத்த்தை இயக்கியிருந்தார்.     அந்தப் படம் 2009ம் ஆண்டில் வன்கூவர் திரைப்பட விழாவில் முதல் 10 கனேடியப் படங்களில் ஒன்றாகத் தெரிவாகியிருந்தது.   சங்காய் திரைப்பட விழா வரும் 15ம் நாள் தொடக்கம் 23ம் நாள் வரையான ஒருவாரம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 06-06-2013

இரசயான ஆயுதங்களை உபயோகிக்கும் சீரிய அரசு.

சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.   சாரீன் என்ற இரசாயனத்தை சிரிய அரசாங்கப் படையினர் பயன்படுத்தியமை சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ளதாக பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.     இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் லுரான்ட் பெபியஸ் தெரிவித்துள்ளார்.     சிரியாவின் பல இடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளைக் கொண்டு பிரான்ஸில் சோதனை நடத்தப்பட்டதாகவும் இதில் சாரீன் என்ற இரசாயனப் பதார்த்தம் காணப்படுகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.     இரசாயன தாக்குதல்களுக்கு அரசாங்கமும் அதன் கூட்டணிகளுமே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.     இதேவேளை, சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமையை பிரித்தானியாவும் உறுதிப்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 06-06-2013

டென்மார்க்கில் தொடர் திருட்டுக்கள் தமிழரிடம்.

டென்மார்க்கில் கடந்த சில மாதங்களாக தமிழர்கள் வீடுகளில் திருடர்கள் புகுவதே செய்திகளாகின்றது.தமிழர்கள் வாழும் சகல ஊர்களிலும் களவுகள் தொடரந்தபடி இருக்கின்றது.திருடர்கள் தனியவே வீடுகளில் மட்டும் திருடவில்லை வங்கியிலும் லொக்கரை மொத்தமாக கடத்தி திருடியுள்ளார்கள்.இந்த சம்பவத்தில் மட்டும் ஆறு தமிழரது லொக்கரும் உட்ப்பட திருடப்பட்டது.இதில் 700 சவரன்களும் பலாயிரம் ஈரோக்கள் என திருடியுள்ளார்கள்.இச்சம்பவம் கொல்ஸ்ரபுரோ நகரையொட்டிய சிறுகிராமத்தில் நடந்தசம்பவம். கேர்ணிங் நகரில் இருபது வீடுகளுக்குமேல் திருட்டுக்கள் பதிவாகியுள்ளது.ஸ்கேயின் நகரில் இருவீடுகள் என திருட்டுக்கள் தொடராக தொடர்கின்றது.திருடர்கள் தமிழர்களின் நகைகளையே குறிவைத்துள்ளார்கள்.நகையைதவிர எந்த ஒரு பொருளும் கூட எடுத்து செல்லவில்லை.திருடர்கள் உலோகங்களை கண்டுபிடிக்கும் கருவிமூலமே திருடப்படுகின்றது.நகைகள் இல்லாது போனால் வீட்டு பொருட்களை அடித்து உடைத்துவிட்டு செல்கிறார்கள். தமிழர்கள் தான் திருடுகிறார்களா என்பது டென்மார்க் தமழர்கள் சந்தேகம்.உண்மை அதுவல்ல.ஆனால் திருடர்கள் அதிகமாக பெண்களே.தமிழர்களின் நகைகளை திருடி தமிழர்களுக்கே மீண்டும் விற்கிறார்கள்.அதே தமிழரிடம் மீண்டும் திருடுகிறார்கள்.எமது ஊரவர் சிலரது வீடுகளும் உட்படும்.காவல்துறையினர் இதுவரை எவரையுமே கைதிபண்ணியதாய் தகவல்கள் இல்லை.திருடர்கள் தமிழரை நாட தமிழரே காரணம்.அதாவது விழாக்களுக்கு அதிக நகைகளோடு செல்வதே முதற்க்காரணம்.அடுத்தகாரணங்கள் திருடர்களிடம் திருட்டு நகையை கொள்வனவு செய்வது தமிழர்கள்.காவல்துறையினருக்கு இந்த களவுகளுக்கான காரணமே நகைகள் என பதிலளிக்கிறார்கள். களவுகள் தொடரந்தாலும் அனைத்துமே தமிழர்களிடம் என்பதால் காவல்துறையின் மிக நுன்னியகவனம் செலுத்துவதில்லை என தமிழர்கள் ஆதங்கம்.

மேலும் படிக்கவும் 9 மறுமொழிகள் பண் த பாலா 05-06-2013

சந்தோஷ் சிவனின் இனம்.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் “இனம்” படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரத்ததால் இலங்கை வெளியாகி இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், டைரக்டர் என் பன்முக திறன் கொண்டவர். தற்போது இவர் இனம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதை இலங்கையில் நடந்த போரின் போது அதில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சில மாதங்கள் இலங்கையில் இருந்து ஆய்வு செய்து இந்தப்படத்தை எடுத்துள்ளார் சந்தோஷ் சிவன். இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரத்தத்தில் தோய்க்கப்பட்ட கைரேகையினை இலங்கை மேப் போல வடிவமைத்துள்ளனர். இந்த போஸ்டர் இப்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் போது போரில் பாதிக்கப்பட்ட அந்த சிறுவர்களின் வாழ்க்கை பிரதிபலிக்கும் என்று கூறியுள்ளார் சந்தோஷ் சிவன்.

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 05-06-2013

ஜேர்மன் அகராதியிலிருந்து நீக்கப்பட்ட உலகின் நீளமான சொல்.

ஜேர்மன் மொழியில் உள்ளதாக அறியப்படும் 63 எழுத்துக்கள் கொண்ட உலகின் மிக நீண்ட சொல் ஒன்று ஐரோப்பிய யூனியனில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட நெறிமுறைகளினால் அகராதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் அரிச்சுவடிப் படி இச்சொல் 'Rindfleischetikettierungsueberwachungsaufgabenuebertragungsgesetz' என்றமைகின்றது. ஆங்கிலத்தில் இச்சொல்லின் அர்த்தம் 'Law delegating beef label monitoring' என்பதாகும். 1999 ஆம் ஆண்டு ஜேர்மனின் மேற்கு மாநிலமான Mecklenburg இல் இச்சொல் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தது. தற்போது இச்சொல்லில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென ஐரோப்ப்பிய யூனியனின் புதிய சட்ட நெறிமுறைகள் வலியுறுத்தியுள்ளன. உலகில் உள்ள மொழிகளில் குறித்த ஒரு பொருள் மற்றும் விடயங்களைச் சட்டரீதியாக அல்லது விஞ்ஞான ரீதியாக குறிப்பதற்கு மிக நீண்ட எழுத்துக்களுடன் கூடிய சொற்களால் குறிக்கும் முக்கியமான ஒரு மொழி ஜேர்மன் ஆகும். அதோடு ஜேர்மன் மொழியில் இரண்டு மூன்று சொற்களை ஒன்றாக்கி ஒரே சொல்லாக இஸ்டத்துக்கு உருவாக்கிவிடலாம். இக்காரணத்தினால் இம்மொழி எந்தளவு புகழ் மிக்கதோ அந்தளவுக்கு இதனைக் கற்கும் வெளிநாட்டவரால் வெறுக்கவும் படுகின்றது. ஜேர்மனில் இத்தகைய சொற்கள் 'tapeworm' சொற்கள் என அறியப் படுகின்றன. தற்போது நீக்கப் பட்ட மிகப்பெரிய ஜேர்மன் சொல்லால் குறிக்கப் படும் விடயம் பசுமாடுகளைப் பாதிக்கும் உளவியல் நோய் ஒன்றாகும். இதேவேளை ஜேர்மனில் உள்ள இத்தகைய  மிகப்பெரிய சொற்கள் யாவும் பொதுவாக ஜேர்மன் அகராதிகளில் காணப்படுவதில்லை. ஜேர்மன் அகராதியில் காணப்படும் மிகப்பெரிய சொல் 'Kraftfahrzeughaftpflichtversicherung' என்பதாகும். மோட்டார் வாகனங்களுக்கான உறுதியான காப்புறுதி எனப் பொருள் படும் இதன் ஆங்கில அர்த்தம் 'automobile liability insurance' என்பதாகும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 05-06-2013

சௌதி அரேபிய இளவரசரின் கோடிச்செலவு.

சௌதி அரேபிய இளவரசர்  பஹாட் அல் சௌத் 3 நாள் களியாட்டங்களுக்காக 20.41 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டமை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இளவரசர் பஹாட் அல் சௌத் அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார்.   சமீபத்தில் இவருக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பெரிசில் உள்ள டிஸ்னி லேண்டில் தனது கல்லூரி நண்பர்களுக்கு  விருந்தளிக்க  இளவரசர் முடிவு செய்தார். சுமார் 60 நண்பர்களுடன் டிஸ்னி லேண்டிற்கு சென்றுள்ள இளவரசருக்காக அங்குள்ள கலைஞர்கள் சிறப்பு காட்சிகளை நடத்தி மகிழ்வித்துள்ளனர்.   மூன்று நாட்கள் நடைபெற்ற இக் கேளிக்கைகளுக்காக 20.41 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை மதிப்பில் சுமார் 253 கோடி ரூபாய்) செலவிட்டுள்ளார்.   இளவரசரது செலவீனங்கள் தொடர்பில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய ஊடகங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 04-06-2013

இறங்கி வந்த ஹரிஸ் ஜெயராஜ்.

பிரமாதமான பங்களா, லம்போகினி கார் வகையாறாக்கள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் லிக்விட் கேஷ் என்று பார்த்தால் பெரிதாக சேமிக்கவில்லையாம். இந்த நலிவடைந்த செய்தி இப்போது எதற்கு? விஷயம் இல்லாமலா?அனிருத்தின் அதிவேக வளர்ச்சி நேரடியாக பாதித்தது ஹாரிசைதான். இவர் வாங்கும் சம்பளத்திற்கு டாப் ஃபைவ் இயக்குனர்கள் மட்டுமே ஹாரிசுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும். அந்த ஐந்தும் அனிருத், ரஹ்மான் என்று போய்விட்டால் அடுத்தகட்டத்திற்கு தன்னால் இறங்க முடியாதே என்ற அச்சம் வந்துவிட்டதாம் இவருக்கு. இமான், ஜி.வி.பிரகாஷ், யுவன்சங்கர்ராஜா மூவரும் ஒரு பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மேலேதான் இருக்கிறார் ஹாரிஸ். இந்த நிலையை அப்படியே தக்க வைத்துக் கொள்வதுதான் சரி என்று நினைத்தவர் சமீபத்தில் ஓடோடி சென்று கே.வி.ஆனந்த்தை சந்தித்தாராம். இதற்கு காரணம், ஆனந்தின் புதிய படத்தில் அனிருத் பயன்படுத்தப்படவிருக்கிறார் என்ற செய்திதான். இருவரும் மனம் விட்டு பேசியதில் சிறிதளவு சம்பளத்தை ஹாரிஸ் குறைத்துக் கொள்வதாகவும், அனிருத் இந்த படத்தில் இசையமைக்க போவதில்லை என்றும் முடிவாகியிருக்கிறதாம். கொலசாமியோ, மலைசாமியோ, எப்பவாவது இறங்கி வந்துதானே ஆகணும்?

மேலும் படிக்கவும் 5 மறுமொழிகள் சுதர்சன் 04-06-2013

ஜேர்மனியில் சனத்தொகை குறைகிறது.

இரண்டு ஜேர்மனிகளும் கடந்த 1990ம் ஆண்டில் இணைந்த பின்னர் எடுக்கப்பட்ட மக்கட்த்தொகை கணக்கெடுப்பில் ஒன்றரை கோடி சரிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   ஜேர்மனியின் புள்ளியியல் துறையான Destatis நடத்திய ஆய்வில் இன்றைய மக்கள்தொகை 80.2 மில்லியன் மட்டுமே என்பது தெரியவந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடாக ஜேர்மனி இருப்பதால் மக்கள் தொகை குறைந்து கொண்டே போகின்றது.   ஜேர்மானியர்(92.3%) 74 மில்லியனும், அயல் நாட்டினர்(7.7%)6.2 மில்லியனும், புலம்பெயர்ந்தோர்(19%) பதினைந்து மில்லியனும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.   இவர்களில் 40 மில்லியன் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு இருந்து வருகின்றது. மற்றவர்கள் வேலை வாய்ப்பின்றி அரசின் உதவித்தொகையில் காலம் கழித்து வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறுகையில், எதிர்வரும் 2030ம் ஆண்டில் வேலைபார்க்கும் வயதினரின் எண்ணிக்கை ஆறு மில்லியன் குறைந்துவிடும் என்பதால் தொழில்திறன் மிக்க புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 04-06-2013

லண்டன் வாழ் தமிழ் தொழிலதிபர் பணியாளரால் இந்தியாவில் கடத்தல்.

ரூ.2 1/2 கோடிக்காக இலங்கை தொழிலதிபர் தம்பதியினை கடத்திய 8 பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையை சேர்ந்த கணபதி பிள்ளை தவராஜா மற்றும் அவரது மனைவி சலஜா ஆகியோர் பல வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்து அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர். இவர்கள் தற்போது அங்கு தொழிலதிபர்களாக லண்டனில் வசித்து வருகின்றனர். அங்கு பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்க்கெட்டுக்கள் என இவர்களுக்கு சொந்தமான பல உள்ளன. இந்நிலையில் விடுமுறைக்காக கொழும்பு சென்று அங்கிருந்து தமிழகத்திற்கு வந்த போது சென்னை விமான நிலையத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் லண்டனில் உள்ள தவராஜாவின் மகள் தர்ஷினிக்கு மர்ம நபர் ஒருவர் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உங்கள் பெற்றோரை நாங்கள் தான் கடத்தி வைத்துள்ளோம். 3 லட்சம் பவுண்டு (இந்திய ரூபாயின் மதிப்பில் 2.48 கோடி ரூபாய்) கொடுத்தால் அவர்களை விடுவிக்கிறோம் என மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தர்ஷினி, சென்னை கொளத்தூரில் உள்ள தங்கள் குடும்ப நண்பர் குமாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் லண்டன் பொலிஸாரிடமும் தகவல் கொடுத்துள்ளனர். லண்டன் பொலிஸார், சென்னை பொலிஸ் கமிஷினர் ஜார்ஜ்ஜை தொடர்பு கொண்டு பேசினார். இரு தரப்பினரும் கூட்டாக இணைந்து தேடுதல் மேற்கொண்டனர். இதன் போது தவராஜவின் லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் இலங்கைத்தமிழரான அஜந்தன் என்பவர் இந்த கடத்தலுக்கு மூளையாக செயற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரது நண்பரான திருச்சியை சேர்ந்த நபர் ஒர்வர் மூலம் கடத்தலை அரங்கேற்றி உள்ளனர். தவராஜாவும் அவரது மனைவியாரும் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது பினன்ர் தெரியவந்துள்ளது. போன் அழைப்புக்களை வைத்து அவர்களது இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில்பெயர்ப்பலையுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்து தங்களது பெயரையும் தாங்கள் செல்ல வேண்டிய ஹாட்டலின் பெயரையும் காண்பித்துக்கொண்டிருந்ததாகவும் அதையடுத்தே அவருடன் காரில் சென்று இச்சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டதாகவும் தவராஜா தெரிவித்துள்ளார். சினிமா பாணியில் நடந்த இக்கடத்தல் விவகாரத்தினால் தமிழகத்திற்கு செல்லும் வெளிநாட்டு வாழ் தொழிலதிபர்கள் அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-06-2013

யுவன் இசையில் AR ரஹ்மான் பாடல்.

சமீபகாலமாக ஒரு இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பின்னணி பாடும் சூழல் அதிகரித்து வருகிறது.   அந்த வகையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மரியான் படத்துக்கு தனுசுக்காக ஒரு பாடல் பாடியிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.   ஆனால் அவரது குரல் தனுசுக்கு பொருந்தவில்லை. அதனால் உடனடியாக அந்த பாடலை தனக்கு பாடித்தருமாறு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாவை அழைக்க, அவரும் பாடிக் கொடுத்தார்.   இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானையும தனது இசையில் பாட வைக்க நினைத்தார் யுவன். எனவே தற்போது தான் இசையமைத்துள்ள வலை படத்தில் அஜீத்துக்காக ஒரு பாடலை பாட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.   அவரும் கண்டிப்பாக பாடித்தருவதாக கூறியுள்ளாராம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-06-2013

சுவிஸில் கஞ்சா புகைப்பவர்கள் நீதிமன்றம் செல்லவேண்டிய தேவையில்லை.

சுவிட்சர்லாந்து கஞ்சா புகைப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் மூன்றரை இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரையிலான இளைஞர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.   இனி இவர்கள் பிடிபட்டால் அங்கேயே நூறு பிராங்க் வரை அபராதம் வசூலிக்கப்படும். இவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை. சுவிட்சர்லாந்தில் போதைப்பொருள் கடத்தல், நுகர்வு போன்ற சட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால் சில மாற்றங்கள் ஒக்டோபர் முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு செப