காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

சிறுவர்கள்

பக்கம் தேர்ந்தெடுக்கவும்:

விவசாயியும், பாம்பும் நாரையும்.

ஒரு பாம்மை மக்கள் அடித்து விரட்டினார்கள், அது ஓரிடத்தில் பயந்து ஒளிந்திருந்தது. அந்தப் பக்கமாக ஒரு விவசாயி வந்தான் அவனிடம் ஐயா என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சி மன்றாடியது. விவசாயியும் அதன் மீது இரக்கப்பட்டு தன் வயிற்றுக்குள் ஒளிந்து கொள் என்றான், அவன் குந்திக்கொள்ள பாம்பும் பின்புற வழியாக அவன் வயிற்றில் புகுந்து குடருக்குள் நுழைந்து வயிற்றுக்குள்ளே பத்திரமாக ஒளிந்து கொண்டது. கொஞ்சத் தூரம் சென்றதும் பாம்பே பத்திரமான இடத்திற்கு வந்துவிட்டோம் வெளியே வா என்றான் விவசாயி. இல்லை நான் வரமாட்டேன்.. இந்த இடம் கதகதப்பாக இருக்கிறது, நான் ஏன் வெளியே வரவேண்டும் என்று பாம்பு கேட்டது. வேறு வழியில்லாமல் வயிற்றுக்குள் பாம்பை சுமந்தபடியே சென்ற விவசாயி வழியில் ஒரு நாரையை கண்டு தன் துயர நிலையை சொன்னான். அதற்கு நாரை நீ முன்போலவே குந்தி நன்றாக முக்கு பாம்பு வெளியே வரும் நான் பிடித்துக் கொள்கிறேன் என்று சொன்னது. விவசாயியும் அப்படியே செய்தான் பாம்பு வெளியே தலையை நீட்டியது, அவ்வளவுதான் நாரை அதை வெளியே இழுத்து கொன்றது. அப்போது விவசாயிக்கு ஒரு கவலை பிறந்தது.. ஒரு வேளை பாம்பு குடலுக்குள் விஷத்தைக் கக்கியிருக்குமோ என்று பயந்தான். அவனுக்கு நாரை ஒரு யோசனை சொன்னது.. ஒரு நாளைக்கு ஒரு நாரைப்படி நான்கு நாட்களுக்கு நான்கு நாரைகளை பிடித்து சமைத்துச் சாப்பிடு விஷம் இருந்தால் அகன்றுவிடும் என்று வைத்தியம் கூறியது. அப்படியா இன்றே மருந்து சாப்பிட ஆரம்பிக்கிறேன் என் முதல் மருந்து நீதான் என்று நாரையைக் கழுத்தில் பிடித்துக் கொண்டான் விவசாயி. நாரையை வீடு கொண்டு சென்று ஒரு கூட்டில் அடைத்துவிட்டு, நடந்த விஷயத்தை மனைவியிடம் சொல்லி அதை கறி சமைக்கச் சொன்னான். அவன் மனைவி தன் கணவனை திட்டினாள்.. உன்னைக் காப்பாற்றிய நாரையை கொல்லப்போகிறாயா என்று கோபமாகக் கேட்டாள். நாரையை விட்டால் நான் இறந்துவிடுவேன் என்று விவசாயி அலறினான்.. ஆனால் அவள் கேட்கவில்லை. கணவன் இறந்தாலும் காரியமில்லை என்று கூட்டைத் திறந்து நாரையை வெளியே பறக்க விட்டாள், நாரை மகிழ்வாக பறந்தது ஆனால் பறக்கும்போது அந்தப் பெண்ணின் இரண்டு கண்களையும் சொடக் சொடக்கென கொத்திக் குருடாக்கிவிட்டு பறந்தது. தன் உயிரைவிட நாரையின் உயிர் பெரிதென கருதிய குருட்டு மனைவியுடன் குடும்பம் நடத்த முடியாதென அவளை அடித்துக் கொன்றான் விவசாயி.. மனைவி இறக்க அவனுக்கு பாம்பின் விஷம் வேலை செய்தது.. துடிதுடித்து அவள் பக்கத்திலேயே இறந்தான். குடியானவன், மனைவி, பாம்பு, நாரை இந்த நால்வரிலும் யார் நல்லவர்கள்…? எல்லோருமே தான் தப்பினால் சரி என்று நினைப்பவர்கள்தான்.. ஆனால் அனைவருமே ஒருவருக்காக மற்றவர் வாழ்வதைப் போல வேடமிட்டார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.. இதுபோல நமக்கு விசுவாசமானவர்கள் நமக்காகவே வாழ்வதாக நினைப்போம் ஆனால் தருணம் வரும்போதுதான் உண்மை தெரியும், அதுவரை யாரையும் கண்டு பிடிக்க முடியாது. இப்படித்தான் நண்பர்களும் உங்களுக்குக் கீழ்ப்படிவாக இருப்பதாக வேடம் போடுவார்கள், நீங்கள் சொல்வதற்கு ஆமாம் போடுவார்கள், சந்தர்ப்பம் வரும்போது காட்டிக்கொடுக்கும் சுயநலமிகளாக மாறுவார்கள். எனவேதான் நண்பர்களை பதவியில் அமர்த்தாதீர்கள் தகுதியானவரை பதவியில் அமர்த்துங்கள் என்றான் நெப்போலியன். ஆனால் நண்பர்களும் உங்களுக்கு வேண்டும் நீங்கள் செய்த தவறுகளை யாருடைய தலையில் போடுவது அதற்கு ஒரு நண்பன் வேண்டும். இப்படி பல நண்பர்களுடைய தலைகள் வரலாற்றில் துண்டாடப்பட்டது, ஒரு நண்பன் போனால் என்ன செய்வது என்று நினைக்கிறீர்களா.. அந்த இடத்திற்கு வர இன்னொருவன் காத்திருப்பான். இதுதான் உலகம்.. மேலைத்தேய இராஜதந்திர சிந்தனைகள் இப்படித்தான் நகர்கின்றன.. நல்ல பழமொழிகளை அறிவது மட்டும் சரியானதல்ல மறு பக்கங்களையும் பார்ப்பது அவசியமானது. காலில் விழுந்துவிட்டால் விசுவாசம் வந்துவிடும் என்றோ.. தியாகிகளை போற்றுவோருக்கெல்லாம் தியாக மனம் இருக்கிறதென்றோ தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள்.. எல்லாமே பாம்புகளும் நாரைகளுமாக இருக்கலாம் எச்சரிக்கை

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-04-2016

மேலிடம் நிலையற்றது.

மேலிடம் நிலையானது என்று கருதி தறி கெட்டு நடந்துவிடாதீர்கள்.. காரணம் : உங்கள் மேலிடம் என்றோ ஒரு நாள் வீழ்ச்சியடையும், அப்போது நீங்கள் நட்டாற்றில் நிற்பீர்கள். உங்கள் மேலிடத்தை வீழ்த்த முடியுமானால் விரைவாக வீழ்த்துங்கள் இல்லையேல் நீங்கள் வீழ்த்தப்படுவீர்கள். மேலிடம் தலைமை என்று எதுவுமே கிடையாது உண்மையில் எல்லாமே சந்தர்ப்பம்தான்… யானை மாலை போட்டு ராணியானவளும் மேலிடம்தான்.. மன்னனுக்கு புதல்வனாக பிறந்த முட்டாளும் மன்னன்தான்.. பல முட்டாள்கள் வாக்களித்த இன்னொரு முட்டாளே பிரதமாராக இருப்பான்.. எப்பொழுதுமே உங்கள் மேலிடமே உங்களுக்கு ஆபத்தானது எச்சரிக்கை

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 24-03-2016

புத்திசாலி.

பதவியும் அதிகாரமும் அடைய விரும்புவோர் மேலிடத்தைக் காட்டிலும் தான் புத்திசாலி என்று ஒருபோதும் காட்டிக்கொள்ளக் கூடாது. மேலிடம் தன்னைவிட பத்தி குறைந்தவர்கள் அருகில் இருந்து ஆமா போடுவதையே அதிகம் விரும்பும்.. பின்னர் பல மேலிடங்கள் அழிந்து பரிநாசமாக போகவும் இதுவே காரணமாக இருந்துள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-03-2016

திறமையில் பொறுமை.

உங்கள் திறமையை வெளிக்காட்டாமல் பொறுமை காப்பது பலம் தரும்.. பயன் தரும். உதாரணம் : கலிலியோ யுப்பிட்டர் கிரகத்திற்கு இரண்டு சந்திரன்கள் இருப்பதைக் கண்டு பிடித்தார்.. அதை உடன் வெளியிடவில்லை.. அந்த நாட்டில் மெசிடி என்ற குடும்பம் ஆட்சிக்கு வந்த கொண்டாட்டம் நடந்தபோது அந்த விழாவில் தனது கண்டு பிடிப்பை வெளியிட்டு, அரச குடும்பமே யுப்பிற்றர் என்று கூறினார்.. அதனால் அரச குடும்பம் மகிழ்ந்து தம்மை கடவுளின் அவதாரம் என்று சொன்ன கலிலியோவை அரண்மனை சோதிடராக்கியது.. இல்லையேல் தலையை துண்டு போட்டிருப்பார்கள், இதுதான் உலகம். திறமைசாலிகளை உலகம் தேடி அழிக்க எதிர்கால அச்சமே முக்கிய காரணம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 18-03-2016

தலைமைத்துவம்.

தலைமையில் இருப்பவரை விட நீங்கள் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள முயலாதீர்கள்.. தலைவனின் ஈகோவை பஞ்சர் செய்துவிடாதீர்கள்.. அப்படிச் செய்தால் தன்னைக் கவிழ்க்க சதி செய்வதாக தப்புக்கணக்கு போடுவான் தலைவன்.. அது உங்கள் தலைக்கே உலை வைத்துவிடும்.   உதாரணம் : 14ம் லூயி மன்னனுக்கு அவருடைய நிதி மந்திரி நிக்கோலஸ் மாபெரும் விருந்து வைத்தார்.. தான் பெரியவன் என்று காட்டினால் தனக்கு பிரதம மந்திரி பதவி கிடைக்கும் என்று கருதினார்.   விருந்துக்கு வந்த லூயி மன்னன் செய்த முதல் வேலை நிக்கோலஸ்சை பதவியில் இருந்து நீக்கியதுதான்.   அதன் பின் லூயி மன்னன் அவர் செய்ததை விட பெரிய விழாக்களை செய்தான்.. அதிகாரத்தில் இருப்பவன் எப்போதும் தனது கதிரையை பாதுகாக்கவே முயல்வான்.. அவன் எதிரியாக கருதுவது தனக்கு அருகில் இருப்பவரையே.. எச்சரிக்கையாக இருங்கள்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 09-03-2016

அறநெறியின் அவசியம்.

அறநெறியின் மூலம் ஒரு மனிதனை நல்ல பண்புகளை கொண்ட மனிதனாக மாற்ற முடியும். சிறைத்தண்டனைக்குட்பட்ட நபர் ஒருவரை கூட அறநெறியால் சீர்படுத்த முடியும். எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு கட்டாயம் அறநெறி கல்வியை பெற்று கொடுக்க வேண்டும் என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் கருத்து தெரிவித்தார். இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா முதல்முறையாக நடைப்பெறவிருக்கும் அதேவேளை இலங்கையின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட உள்ளனர். இந்நிகழ்வில் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அறநெறி மற்றும் இந்துபண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் உறுப்பினரும் அறநெறி பாடசாலையின் ஆலோகசரும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான எஸ். தில்லைநடராசா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 26-02-2016

தலைகீழாக திருக்குறள்களை எழுதிய இளம்பெண்.

கோவையைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருவள்ளுவர் ஓவியத்தில் குறள்களை எழுதியும், 24 மணி நேரத்தில் 1330 குறள்களையும் தலைகீழாக எழுதியும் இரட்டை சாதனை படைத்துள்ளார். கோவை ஆலாந்துறையைச் சேர்ந்த லதா- சுப்பிரமணியத்தின் ஒரே மகள் எஸ்.ஹரிப்பிரியா (24). எம்.எஸ்சி ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு சிறுவயதிலேயே படிக்கிற வாசகங்களை தலைகீழாக எழுத வேண்டும் என்ற ஆசை. கணித எண்கள், தமிழ், ஆங்கில வார்த்தைகளை இடமிருந்து வலம் எழுதுவதற்கு பதிலாக, வலமிருந்து இடமாக தலைகீழாக எழுதி, பார்த்தார். பிளஸ் 2 படிக்கும்போது நேரம் கிடைக்கும் நாளில் 1330 திருக்குறளையும் சுமார் 2 ஆண்டுகளில் எழுதி முடித்தார். அதையே நுணுக்கி, எழுதினால் எத்தனை பக்கத்தில் எழுதமுடியும் என்பதை அறிய அரிசியில் வார்த்தை களை எழுதக்கூடிய (லென்ஸ் வைத்து பார்த்தால் மட்டுமே படிக்க முடியும்) பேனா நிப் பயன்படுத்தி எழுத ஆரம்பித்தார். அதையே. திருவள்ளுவர் ஓவியத்தில் எழுதி னால்…? 3 அடிக்கு 1.5 அடி உயர, அகலமுள்ள ஓவியத்தில் உள்ள வள்ளுவரின் தாடியிலும், ஆடையிலும் மட்டும் எழுதினார். 1330 குறளையும் தலைகீழாக 3 நாளில் எழுதி முடித்தார். அண்மையில் கரூரில் நடந்த விழாவில் இவை இரண்டுக்கும் தனித்தனியே ‘ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்’ஸின் தேசிய மற்றும் ‘உலக சாதனை’யை (national and world-record) பெற்று வந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதா வது: ‘‘ஆங்கிலம், தமிழ், இந்தி மற் றும் கணித எண்களை தலை கீழாக வேகமாக எனக்கு எழுத வரும். போட்டி பரிசுன்னு போனதில்லை. எங்க பகுதியில் உள்ள நாட்டியப்பள்ளி ஆசிரியை ஒரு வர், ‘திண்டுக்கல்லில் 3000 பேரை வைத்து திருக்குறள் பாடலுடன் கூடிய நாட்டிய உலக சாதனை நிகழ்வு நடக்கிறது. அதில் 5 ரெக் கார்டு அமைப்புகள் கலந்து கொள் கின்றன. அந்த அமைப்பினரைச் சந்தித்து எழுதியிருக்கும் திருக் குறள்களை காட்டலாமே’ என்று அழைத்தார். அந்த நிகழ்ச்சியில் 2 அமைப்புகளிடம் திருக்குறள் களைக் காட்டினேன். அவர்கள் திருவள்ளுவர் ஓவிய குறள்களை கணக்கில் எடுத்துக் கொண்டனர். மற்றபடி 1330 குறளை தலைகீழாக ஏற்கெனவே பலர் எழுதியுள்ளனர். அதில் உலக சாதனையாளர்கள் 2 நாள் வரை நேரம் எடுத்துள்ளார்கள். நீங்கள் நடுவர்கள் முன்னிலையில் எழுதி அந்த சாதனையை முறியடிக்க முயற்சிக்கலாம் என்றார்கள். ஆலாந்துறையில் இதற்காக நியமிக்கப்பட்ட நடுவர் முன்னிலை யில் எழுதி னேன். 24 மணிநேரம், 35 நிமிடம், 35 நொடிகளில் அத்தனை திருக் குறளையும் தலைகீழாக எழுதி முடித்தேன். தமிழ்மொழியின் அரும்பெரும் மறையான திருக் குறளை உலகு அறியச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப் பம். அதற்காகவே இதை செய்துள் ளேன்’’ என்று அவர் கூறினார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-01-2016

சிந்தனைக்கூற்றுக்கள்.

நீ மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால் திறந்த மனதோடு பேசு அதற்காக கொட்டித்தீர்த்து விடாதே.   இதயத்தை ஆயுதத்தால் வெல்ல முடியாது, மென்மையான அன்பால் தான் வெல்ல முடியும்.   நல்ல விஷயங்களை அமைதியாகச் செய், வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டு பேசட்டும்.   நல்ல எண்ணமும் மகிழ்ச்சியும் இருந்தால் யானையை நூலால் கட்டிக் கொண்டு போவது போல எங்கும் போய் வரலாம்.   உன்னை நீ அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனி; மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி.     பகிர்வு: லபேசன் - ஜேர்மனி.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 06-01-2016

6 வயதுச்சிறுவனின் சாதனை.

இந்தியாவைச்சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவன் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட 39 கார்களுக்கு கீழாக ரோலர் ஸ்கேட்டில் உடலை வளைத்துச் சென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார் இச்சாதனைக்குச் சொந்தக் காரனான பெங்களுருவைச் சேர்ந்த 6 வயதான காகன் சதீஷ் 29 விநாடிகளில் 70 மீற்றர் தூரத்திற்கு தரையிலிருந்து 5 அங்குல இடைவெளியில் உடலை வில்லாக வளைத்துச் சென்றுள்ளான.   ‘நான் ஸ்கேட்டிங்கை விரும்புகிறேன். எனது 3 வயதிலிருந்து இதனைச் செய்கின்றேன் (ஸ்கேட்டிங்). 100 கார்களுக்கு கீழாகச் செல்வதே எனது அடுத்த இலக்கு. ஒலிம்பிக்கிக்கு நான் செல்ல வேண்டும்’ என்கிறான் சாதனைச் சிறுவன் சதீஷ்.   உள்ளுர் ஸ்கேட் கழகத்தில் தனது 3 வயதில் சேர நினைத்த சதீஷை வயது காரணமாக நிராகரிப்பட்டுள்ளான். ஆனால் சதீஷால் ஸ்கேட்டிங் செய்ய முடியும் எனத் தீர்மானித்த சதீஸின் தாய் ஹேமா சதீஷ (28 வயது) முறையான ஸ்கேட்டிங் பயிற்சிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.   ‘அவனது உடல் நெகிழ்தன்மையானது என்பதை எங்களால் காண முடிந்தது. இதன் பின்னரே முறையான பயிற்சிக்கு அனுப்ப தீர்மானித்தோம். இது அவனது விளையாட்டு வாழ்க்கையின் ஆரம்பம் என தாம் எதிhபார்க்கின்றோம்.   பயிற்சியின்போது பல தடவைகள் அவன் காயப்பட்டுள்ளான். ஆனால் ஒருபோதும் பின்வாங்கியதில்லை’ எனக் கூறியுள்ளார் சதீஷின் தாய் ஹேமா. <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/U_ZdDnpMxkg" frameborder="0" allowfullscreen></iframe>

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 28-12-2015

150 ஆயிரம் பரிசுத்தொகையை வென்றுகொடுத்த தமிழ் மாணவன்.

பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர்.   இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புை அமைப்பை வடிவமைத்திருந்தார்.   அதனால் இவரது பாடசாலை முதலாவது இடத்தைப் பெற்று 150,000 பெறுமதியான பரிசினைத் தட்டிக்கொண்டது. இளைய தலைமுறையினரிடையே எரிவாயு சேமிப்பு, பசுமை பேணல் என்பன சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.   இங்கு ஐந்நூறுக்கு மேற்ப்பட்ட பாடசாலைகள் பங்கு பங்குபற்றியிருந்தன . ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முழுமையாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.   அவர்களில் ஆறு பேர் முதற்சுற்றில் தெரிவு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் இவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது இச்சாதனையால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக எம்தமிழ் சமூகமும் பெருமைகொண்டு குறிஞ்சிகனை வாழ்த்துகின்றது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 22-12-2015

வெளிநாடுகளில் செய்யக்கூடாதவை.

உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், பயணிகள் அந்நாடுகளில் பொதுவான சில தவறுகளை செய்யக் கூடாது.   ஏனனில் அவை சில நாடுகளில் சட்டவிரோத அல்லது அநாகரிக செயலாக கருதப்படுகிறதாம். இதோ நீங்கள் என்ன செய்யக்கூடாது என பட்டியலிட்டு தந்திருக்கின்றனர் globelink எனும் இணையத்தளம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 16-12-2015

ஐன்ஸ்டைனை மிஞ்சிய 12 வயதுச்சிறுமி.

இங்கிலாந்தைச்சேர்ந்த 12 வயது சிறுமி அறிவுத்திறன் சோதனையில் இதுவரை யாரும் பெறாத வகையில் அதிகப்பட்சமாக 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.   ஹார்லோ பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியான நிகோல் பார், கடந்த வாரம் நடத்தப்பட்ட அறிவுத் திறன் சோதனையில் 162 புள்ளிகள் பெற்றார். இது இயற்பியல் விஞ்ஞானி ஹொக்கிங், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஐன்ஸ்டீனை விட அதிகம். மேற்குறிப்பிட்ட அனைவரும் 160 மதிப்பெண்களையே பெற்றுள்ளனர் என்பது கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகோலுக்கு 10 வயதாகும்போதே, கணிதப் பாடத்தில் அவரது வகுப்பு மாணர்களைவிடப் பலமடங்கு சிறந்து விளங்கினார் என அவருடைய ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 13-12-2015

இந்திய வெள்ளமும் இருபத்தைந்து உண்மைகளும்.

சென்னை வாசிகளை புரட்டிப்போட்ட கனமழை, பாடங்கள் பலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது. பெருகிவந்த வெள்ளம் தந்த படிப்பினைகள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டியவையே… 1. மக்கள் அவரவர் மதம், மொழி, இனம் போன்றவற்றை எல்லாம் வீட்டிலேயே வைத்துவிட்டு , வீதிகளுக்கு உதவ முன்வந்தனர் கடவுளாக..! 2. உதவாமல் இருந்தவர்களின் பெருமைகள் எல்லாம் ஒரே மழையில் உலகிற்கு தெரிந்து விட்டது. 3. ஊருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும், வெள்ளத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டிய தைரியமும், வெகு விரைவாக மக்கள் மனங்களில் பரவியது. 4. அன்பும் அரவணைப்பும் , வன்முறைகளை விட , வதந்திகளை விட ,வேகமாக பரவியது. 5. தட்டப்படாமலே, உதவுவதற்காக அனைவரின் வீட்டு கதவுகளும் திறந்தே இருந்தன. 6. தங்கள் வீட்டு சொந்த சமையலறையை கூட காணாத கணவர்கள் எல்லாம், நிவாரண முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த சமையல் கூடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். எந்த வசதியும் இல்லாத இடங்களில் தங்கவைக்கப்பட்ட போதும் கூட, மகிழ்ச்சிக்கு குறைவின்றி , மனம் திருப்தியடைந்தது. 7. வீட்டில் குழந்தைகளை மட்டுமே கவனித்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம், தெருவில் மிகப்பெரிய மீட்பு பணிகளில் இறங்கி சாதித்தனர். 8. பத்திரமாய் பாதுகாத்த வந்த பணமுடிச்சுகளும், பர்ஸ்களும், விலை உயர்ந்த உடைமைகளும் எந்தவித பாதுகாப்பும், கேட்பாரும் இல்லாமல் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. 9. இந்துக்கள் வீட்டில் இஸ்லாமிய சகோதரர்கள் தொழுகை செய்தனர். இஸ்லாமியர்கள் வீட்டில் கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்துவர்கள் வீட்டில் சீக்கியர்கள் இறைவனை வேண்டினர். ஒரு வார்த்தை, அல்லது ஒரு சிறிய மறுப்பு கூட இல்லாமல் இவை எல்லாம் நடந்தது. 10. குறும்புத்தனமாக இருந்த நம் இளைஞர்கள் எல்லாம், இன்று உலகிற்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியிருக்கின்றனர்.. 11. முதல் முறையாக உதவிகளும், ஆதரவும் எளியோர்களிடம் இருந்து, சாமானியர்களிடமிருந்து , பணக்காரர்களின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. 12. பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எல்லாம் இந்த முறை, தோழமை என்றால் என்ன? ஒற்றுமை என்றால் என்ன? சேவை என்பது என்ன? என்ற புதிய பாடங்களை , அங்கு தங்கியிருந்த மக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது. 13. உணவு, உடை, உடைமை என சகலமும் இழந்தாலும், நம்பிக்கை இன்னும் மிச்சமிருப்பதால் , முகத்தில் புன்னகை மட்டும் இன்னும் மறையவில்லை. 14. எந்த நாய் மீது கல்லெறிந்து விரட்டினார்களோ, அதற்கே தற்போது அன்புடன் உணவளித்து வருகின்றனர். 15. மிகப்பெரிய அரக்கன் என சித்தரிக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் எல்லாம் ஒரே இரவில் கடவுளாக மாறிப்போயின. லட்சக்கணக்கானோர் மீட்கப்பட, உதவிகள் பெற்றிட அதுவே உதவி செய்தது. 16. பெரும்பாலான வீடுகள் திறந்தே இருந்த போதும், வீட்டில் இருந்த மக்கள் அனைவரும் வீதியில் இருந்த போதும் கூட, எந்த வீட்டிலும் திருட்டோ, மற்ற குற்றங்களோ நடைபெற வில்லை. 17. பாதிக்கப்பட்டவர்களை தங்கள் வீட்டில் தங்க அனுமதித்த எந்த மனிதரும், உணவளித்த எந்த மனிதரும் “நீங்கள் என்ன ஜாதி?” என கேட்டு உதவி செய்யவில்லை. 18. ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்கள் வைத்திருந்த நடிகர்கள், அரசு அதிகாரிகள், வி.ஐ.பி கள் என பலரையும் மீட்டது சாதாரண இளைஞர்களும், சின்டக்ஸ் டேங்க் படகுகளும்தான். 19. ஏ.டி.எம், நிவாரண மையங்கள், பால் விற்பனை மையங்கள் போன்ற பொது இடங்களில் பொதுமக்கள் பொறுமையாக கியூவில் நிற்க கற்றுக்கொண்டனர். 20. அனைத்து உதவிகளும், தாமதம் ஆகாமல் சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல, அரசை விட, தன்னார்வலர்களால் முடிந்தது. 21. திருப்பி செய்யப்படாத, செய்ய முடியாத உதவி என்று தெரிந்தே பலரும் நிவாரண தொகை, நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். எந்த பிரதி பலனும் எதிர்பாராது செய்த உதவிகள்தான் வெள்ளத்தினை விட, பெரிது. 22. நம்மில் இருக்கும் வேற்றுமைகளை விட, சகோதரத்துவம் என்ற ஒற்றுமையின் மூலம் நிறைய செய்ய முடியும் என்பது தெரிந்தது. 23. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டிருந்தாலும் கூட, மாணவர்கள் மனித வாழ்க்கையின், சமுதாயத்தின் பெரிய பாடங்களை இந்த விடுமுறையில்தான் கற்றுக்கொண்டனர். 24. அரசு இயந்திரத்தை விடவும், பன்மடங்கு விரைவாக இந்த சமூகம் ஒன்றிணைந்தால் செயல்படமுடியும் என்பது தெரிந்தது. 25. “அரசியல்வாதிகள் எப்போதும் திருந்தமாட்டார்கள்” என்ற உண்மையை பேய்மழைப் பெருவெள்ளத்தால் கூட, அசைக்க முடியவில்லை.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 10-12-2015

கடவுளை கோவிலில் தேடாதே.

நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம்   கோவிலுக்கு சென்று 100 ரூபாயை கடவுளின் உண்டியலில் போட்டு விட்டு எனக்கு பணம் கொடு, வீட்டை கொடு, சொத்தை கொடு என்று கேட்கிறோம் பூசாரிகளையும் வளர்த்து விடுகிறோம்   நான் அவர்களிடம் சொல்வது போல கடவுள் நம்மிடம் சொன்னால் என்னவாகும். உனக்கும் கை, கால் இருக்கு உழைச்சு சம்பாதிச்சு வாங்குனு சொல்லிட்டா   இல்லாதவன் இல்லை என்று கேட்கும் போது இருப்பவன் கொடுத்தால் அவனும் ஒருவகையில் கடவுள் தான்...   கடவுளை கோவிலில் தேடாதே. உன்னில் உருவாக்கி தேடு

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 28-11-2015

தன்னம்பிக்கை விதைப்போம்.

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.   அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள் "உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு  முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று.   பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் . எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....!   இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்...... அதில் இப்படி எழுதியிருந்தது "மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று...... "இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்" பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது "தாயாலேயே" மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்" என்று.   தன்பிள்ளைகள் மீதான "உயர்வான எண்ணங்கள்" அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்..! குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 25-11-2015

சிறுவனுக்கு கலாம் கொடுத்த 10 உறுதிமொழிகள்.

மும்பையில் உள்ள தேஜஸ் காந்த் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் கலாமிடம் கேட்ட கேள்வியும் பதிலும்… இங்கே தரப்படுகிறது… கேள்வி : நம் நாட்டில் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க என்ன செய்யலாம்.. குடியரசு தலைவராக உங்களது குடி மக்களிடம் என்ன மாதிரியான எதிர்பார்ப்புக்கள் உங்களிடம் உள்ளன..? உங்கள் குடிமக்களுக்கு உங்களுடைய செய்திகள் என்ன..? ஒரு சாதாரண குடிமகனின் வாழ்வையும், குடியரசுத் தலைவர் வாழ்வையும் எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்..? பதில் : இந்தக் கேள்விக்கான பதிலை பத்து அம்சங்கள் கொண்ட உறுதி மொழியினால் தெரிவித்து வருகிறேன்.. இந்த உறுதி மொழிகளே இந்தக் கேள்விக்கான பதிலாகும். இதோ அந்த உயர்வுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழிகள்… 01. நான் மேற்கொண்டு வரும் கல்விப் பணியை அல்லது தொழிலை கவனமாகவும், சிரத்தையுடனும் செய்து அதில் நிபுணத்துவம் பெறுவேன். 02. இப்பொழுதில் இருந்து என் கடமையாக எழுதப் படிக்கத் தெரியாத பத்துப் பேருக்காவது குறைந்தபட்சமாக அதைச் சொல்லிக் கொடுப்பேன். 03. நான் குறைந்தது பத்து மரக்கன்றுகளாவது நட்டு, பராமரித்து வளர்த்து அவற்றை மரமாக்குவேன். 04. நான் வாழும் இடத்திற்கு அருகில் உள்ள கிராம அல்லது நகர் புறங்களில், போதை அல்லது சூதாட்டப் பழக்கத்திற்குள்ளாகி துயருறும் குறைந்தபட்சம் ஐந்து பேரையாவது அதிலிருந்து நிரந்தரமாக மீட்க முயற்சிப்பேன். 05. என் சகோதர மானுடரின் துயரையும், வலியையும் துடைக்க என்னாலான எல்லாம் செய்வதற்கு தொடர்ந்து முயற்சிப்பேன். 06. மதம், இனம், மொழி, ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களைப் பிரித்து, ஆதாயம் தேட முயற்சிக்கும் எந்தவொரு அமைப்பையும் நான் ஆதரிக்கமாட்டேன். 07. நான் நேர்மையாக நடந்து கொள்வதோடு இலஞ்சம் இல்லாத சமுதாயம் உருவாக என்னால் இயன்ற முயற்சிகள் எல்லாம் செய்வேன். 08. ஒரு ஞானமும் விவேகமும், நிறைந்த அறிவார்ந்த பண்பட்ட குடிமகனாக உருவாக நான் முயற்சி செய்வதோடு, என் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் நேர்மையான வழியிலே நடக்கும்படி ஊக்குவிப்பேன். 09. உடல் ஊனம் மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களின் உண்மையான தோழனாக நடந்து கொள்வதோடு, இயன்றவரை நம்மைப் போலவே அவர்களும் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள நான் உண்மையாக உழைப்பேன். 10. நான், என் நாடு மற்றும் சக குடிமக்களின் வெற்றிகளை மகிழ்ந்து கொண்டாடுவேன். ( அதாவது மற்றவர் வெற்றி கண்டு பொறாமைப்பட மாட்டேன்) இத்தோடு நான் எப்போதுமே ஒரு சாதாரண குடிமகனாகவே வாழ்ந்து வருகிறேன்.. நாட்டின் குடியரசு தலைவராக இருந்த போதும் என் வாழ்க்கை முறை மாறவில்லை. இவ்வாறு கலாம் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 19-11-2015

இத்தாலி, அயர்லாந்து, அமெரிக்க பழமொழிகள்.

இத்தாலி 01. சேவல் மௌனமாகவும் கோழி கூவும்படியாகவும் உள்ள வீடு துன்பகரமானது. 02. குழந்தை கேட்கும் ஏன் என்ற கேள்விதான் தத்துவத்தின் சாவி. 03. ஒரு சிறிய உண்மை முழுப் பொய்யையும் நம்பச் செய்துவிடுகிறது. 04. எடுத்துக் கொள்பவனுக்கே உலகம் சொந்தம். 05. சாபங்கள் ஊர்வலம் போல எங்கே தொடங்கியதோ அங்கே முடிவடையும். 06. மெல்லிய ஆடைகளை பெட்டிகளில் அணியாமல் வைத்திருப்பவர்கள் முரட்டு ஆடைகளை அணிய வேண்டியதுதான். 07. உலகம் என்பது பெரிய புத்தகம் எப்படிப் படிப்பது என்று தெரியாதவனுக்கு அது சிறிதே பயன்படுகிறது. 08. ஆன்மா இறைவனுக்கு சொந்தம், உடம்பு மண்ணுக்கு சொந்தம், சொத்து யாருக்கு சொந்தம் ? 09. மூடன் தன்னுடைய செலவில் கற்கிறான், அறிஞன் மற்றவரின் செலவில் கற்கிறான். 10. கடவுள் துணை இருந்தால் சிலந்தி வலையும் சுவராகிறது, கடவுள் கிருபை இல்லாவிட்டால் சுவரும் சிலந்தி வலையாகிறது. 11. மெதுவாகப் பேசுகிறவன் பத்திரமாகப் பேசுகிறான், தூரமாகவும் பேசுகிறான். 12. உண்மைதான் அடிக்கடி தண்டிக்கப்படுகிறது. 13. வேலை செய்பவனுக்கு ஒரு சட்டை வேலை செய்யாதவனுக்கு இரு சட்டைகள். 14. அதிர்ஷ்டம் என்பது ஒரு பசுமாடு அது சிலருக்கு மட்டுமே முகத்தைக் காட்டுகிறது. 15. அறிவுடமை அழிந்து போவதில்லை, அறிவாளிகள் அழிந்து போகிறார்கள். 16. கூரிய முனை கொண்ட நெருஞ்சி முள்தான் விரைவாக வளருகிறது. 17. சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம். 18. விரும்பியதைப் பெற முடியவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக. 19. வறுமை அழகைச் சிதைக்காது. 20. உலகம் எல்லாம் இருப்பது ஒரே ஒரு தேசம்தான்.   அயர்லாந்து : 21. பொய்யன் வீடு தீப்பற்றி எரிந்தாலும் அச்செய்தியும் பொய்யாகிவிடும். 22. கேட்டால் ஒழிய யோசனை கூறாதே. 23. எவன் ஒருவன் புகழை வெறுக்கிறனோ அவனுக்கு புகழ் தானாக வந்து சேரும். 24. நாளை கிடைக்க இருக்கும் கோழியைவிட இன்று கிடைக்கும் முட்டை மேலானது. 25. முட்டாளுடன் விருந்துண்பதைவிட அறிவாளியுடன் கூலி வேலை செய்வது மேலானது. 26. அடிமை போல உழைத்திடு அரசன் போல வாழ்ந்திடு. 27. புலால் இருக்கும்போது பசி இல்லை பசி இருக்கும் போது புலால் இல்லை. 28. மூடின பாலில் ஈ விழாது. 29. நமக்கு பாரமாக இருப்பவரை மன்னிக்கலாம் ஆனால் நாம் மற்றவருக்கு பாரமாக இருப்பதை மன்னிக்க முடியாது. 30. மக்களாட்சி என்பது அரசை ஆள்பவர்களும் எதிர்ப்பவர்களும் இணைந்து இழுத்து செல்லும் வண்டியைப் போன்றது. அமெரிக்கா 31. தோல்வி ஏற்படும் நேரத்தில் மாவீரர்கள் உருவாகிறார்கள். ஆகவே தொடர்ச்சியாக பல பெரிய தோல்விகளே வெற்றியாக வர்ணிக்கப்படுகிறது. 32. இந்த வாழ்வில் நுழைவதற்கு ஒரு வழியைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் மரணத்தின் வாயில்களோ எண்ணிலடங்காமல் இருக்கின்றன. 33. ஒரு மனிதனை நீ மன்னிக்கும் ஒவ்வொரு பொழுதும் அவனைப் பலப்படுத்தி உன்னையும் பலப்படுத்திக் கொள்கிறாய். 34. செயலே புகழ் பேசும். 35. உண்மை எல்லாச் சமயங்களிலும் பேசப்படுவதற்கல்ல. 36. ஒரு பொருளின் இன்றியமையாமை அது தேவைப்படும்போதுதான் தெரியும். 37. வெறுமையான பையால் நேராக நிற்க முடியாது. 38. வலிமை வாய்ந்த நண்பன் வலிமை மிகுந்த எதிரியாக மாறுவான். 39. ஒரு பறவையையும் கூண்டையும் நீ விரும்பினால் முதலில் கூண்டை வாங்கு. 40. ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்கு கடைசியாக வருவான். 41. உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்பற்றியும் வம்பளப்பான். 42. நம்முடைய அறிவுரையை ஏற்காதவரை வெறுக்கிறோம் ஏற்பவரை வஞ்சிக்கிறோம். 43. தீயோர் நேசத்தைவிட தனிமை மேலானது. 44. ஆபத்தும் இல்லை புகழும் இல்லை. 45. தள்ள முடியவில்லையானால் இழு அதுவும் முடியவில்லை என்றால் விட்டுவிட்டுப் போ. 46. அதிட்டம் தைரியத்திற்கு சலுகை புரிகிறது. 47. பொதுவான விதி ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி விலக்கும் உண்டு. 48. மேதைத்தன்மை எவருக்கும் பரம்பரை உரிமையல்ல. 49. உடையவனின் பாதம் வயலுக்கு உரம். 50. ஒருவரை தண்டிப்பதைவிட தயவு காட்டுவது அதிக வல்லமையுடையது. 51. உடலையும் ஆன்மாவையும் ஒன்றாகவே வைத்திரு. 52. பல் இல்லாவிட்டாலும் கூட கலைமானால் சில காரியங்களை சாதிக்க முடியும். 53. கோவிலுக்கு அருகாமை கடவுளுக்கு வெகு தூரம். 54. சிறு செலவுகள் முழுச் செல்வத்தையும் விழுங்கும். 55. ஒரு மனிதனுக்கு உணவு மற்றவருக்கு நஞ்சு.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 13-11-2015

ஷேக்ஸ்பியரின் வெற்றிமொழிகள்.

1564-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஆங்கில எழுத்தாளர். உலகின் மிகச்சிறந்த நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் அறியப்படுகிறார். நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் தனது நாடகத்தில் பிரதிபலித்தவர். இவரது நாடகங்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, நடத்தப்பட்டும் வருகின்றது. இவரது படைப்புகள் ஆங்கில மொழியின் புகழ்பெற்ற படைப்புகளாக விளங்குகின்றன. 400 ஆண்டுகளுக்கு முன் உருவான இவரது படைப்புகள் இன்றும் பெரும்புகழ் பெற்று உலக மக்களால் போற்றப்படுகின்றன. > அளவுக்கு மீறிய நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்களாகவே மாறுகின்றது. > துன்பங்கள் வரும்போது தனியாக வருவதில்லை, அவை மொத்தமாகவே வருகின்றன. > நீங்கள் கண்ணீருடன் இருந்தால், இப்பொழுதே அதை சிந்த தயாராக இருங்கள். > பொற்காலம் என்பது நமக்கு முன்னாள் உள்ளதே தவிர நமக்கு பின்னால் இல்லை. > நல்லது அல்லது கெட்டது என்று எதுவும் இல்லை, நமது எண்ணமே ஒரு விஷயத்தை அவ்வாறு மாற்றுகின்றது. > வைத்துக்கொள்ள எதுவும் இல்லையென்றால் இழப்பதற்கும் எதுவுமில்லை. > எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், சிலரிடம் நம்பிக்கை வையுங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். > பாவத்தினால் சிலர் உயர்கிறார்கள், நேர்மையினால் சிலர் வீழ்ச்சி அடைகிறார்கள். > ஒரு நிமிட தாமதத்தை விட, குறித்த நேரத்திற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு செல்வது சிறந்தது. > ஒரு தவறான சண்டையில் உண்மையான வீரம் இருக்க முடியாது. > எது செய்து முடிக்கப்பட்டதோ, அதை ஒருபோதும் மாற்ற முடியாது. > பலவற்றை கேளுங்கள், ஒரு சிலவற்றை மட்டும் பேசுங்கள்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 07-11-2015