காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

எம்மவர் ஆக்கங்கள்

பக்கம் தேர்ந்தெடுக்கவும்:

பணிப்புலம் ஆதிபராசக்தி அம்பாளின் பக்திப்பாடல்கள் - சுப்பிரமணியம்மை

பணிப்புலம் என்ற ஊரைப் பதிகொண்ட பராசக்தி.. அணிகலன் இல்லாமலே அழகான திருவடிவே...... அணிகலன் பூண்டபின்னர் உன்னழகை என்னசொல்வேன்....! தணியாது பக்தர்களின் பரவச விரதக்கோலம்.....!   இச்சையுடன் இந்தமண்ணில் இறுமாப்பாய் வீற்றிருந்து ..... மெச்சும் அருள்பொழிந்து மேன்மையாய் தேரிலன்று.... பச்சை சாத்துகையில் உன்அழகைப் பார்கையிலே... உச்சந்தலை தொடங்கி உள்ளமெலாம் சிலிர்க்குதம்மா.....!   உன்மண்ணில் உதித்தவர்க்கு ஒருகுறைவும் இல்லையென்ற தன்நிறைவு கொடுத்த தயாபரியே தண்ஒளியே.....' பொன்போன்ற அரவணைப்பும் புனிதமான பண்பும்.. அன்பும் சொரிந்து ஆதரிக்கும் அன்னைநீயே...!   ஆதிபராசக்தி அம்பிகையே ஆவலுடன் தொழுவோர்க்கு பாதிப்பு ஏதுமின்றி பரிபாலிக்கும் பராபரியே....! நீதிக்கும் நேர்மைக்கும் நிலையான சுந்தரியே.... நாதியற்றோர் தமக்கு நலன்கொடுத்த நாயகியே...!   மண்ணிலே ஐந்து கண்டமெலாம் பரந்துவாழும் மாந்தருக்கு எண்ணிய எண்ணப்படி எழுச்சியான வாழ்வுநல்கி... கண்ணியமான கல்விச் செழிப்புற்று வாழ்க்கையிலே... புண்ணியம் அதிகம் செய்த புனிதரெனப் பூரித்தாய்..!   புலம்பெயர்ந்தும் புகழ்பூத்த உன்தன் கிருபையினால்... உலகெலாம் பரந்துவாழும் உன்னடியார் உள்ளத்தை... வலம்வந்து வாஞ்சையுடன் வருடிவிடும் வனிதாமணி... நலத்துடன் வாழவைத்த நம்பிக்கைத் தாயாரே......!   கிழக்கிலே இடும்பருடன் வேட்டைக்கு வருகின்ற அம்பிகையே.... தெற்கிலே கண்ணகையை தங்கையென அமரவைத்தும்... மேற்கில் மக்களாம்விநாயக,முருகமூர்த்தி துணையிருக்க .. வடக்கிலே சிவனைப் பிள்ளையாரை காவல் கொண்டாய்..!       ஆக்கம்: சுழிபுரம் சுப்ரமணியம்மை

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-08-2016

பிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர் - மனுவேந்தன்.

பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக எமது சமுதாயத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றே நான் நான் என் இளமைக்காலம்,அதுவும் ஊரில் வாழ்ந்த காலம்  வரையில் எண்ணிக்கொண்டிருந்தேன்.ஏனெனில் எமது தமிழ்ப் பெற்றோர்கள் என்றும் தம் பிள்ளைகளின் உடல்,கல்வி சம்பந்தமான விடயங்களில் ஏனைய சமுதாயங்களை விட, மிகவும் என்பதனைவிட அதிகம் கவனம் செலுத்துபவர்களாக வாழும் பழக்கம் உடையவர்களாக காணப்படுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்தான்.   இருந்தாலும்,  அன்றும், இன்றும் [புலம்பெயர்ந்து வளர்ந்த நாடுகளில் வாழ்வோர்கூட]பிள்ளைகளின் சில விடயங்களில் பெற்றோரின் அளவுக்கு அதிக கவனங்கள், பிள்ளைகளின் வளர்ச்சிக்கு  தடங்கலாக நடந்து கொள்வது அவதானிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.அவையாவன:   1.குழந்தைகள் பேச ஆரம்பித்தும்,அவர்கள் காணும் காட்சிகளினை  வைத்து கேட்கும் கேள்விகள் கொஞ்சம் துடுக்குத்தனமாகவே இருக்கும்.அதற்கு உங்கள் பதில் புத்திசாலித்தனமாகவும்,பிள்ளையின் அறிவினை வளர்க்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.   -ஆனால் எமது பெற்றோர்கள் என்ன கேள்வியிது என பிள்ளையின் வாயை மூடும் அளவிற்கு அதட்டி,உரப்பி அப்பிள்ளையின் வாய்க்கு  மட்டுமல்ல அப்பிள்ளையின் சுயசிந்தனை  வளர்ச்சிக்கும் சேர்த்துப்பூட்டுப் போட்டுவிடுகிறார்கள்.   2.வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப உலகில் பிள்ளைகளுக்கு தேவையான சாதனங்களைமட்டும் குறிப்பிட்ட காலத்திற் கொருதடவை வாங்கிக் கொடுங்கள்.   -ஆனால் எமது பெற்றோர் ஒரு ”game’புதிதாக வருகிறது எனில் பிள்ளை கேட்கமுதலே அதனை வாங்கிவந்து அதன் பொறுமையினை பூச்சியமாக்கிக் கொள்வர்.   3.பிள்ளைகளின் சுட்டித்தனங்களின்போது அவற்றினை பொறுத்துக்கொள்ள ப்பழகுங்கள்.   ஆனால் எமது பெற்றோர்கள் பிள்ளைகள் ஏறினாலும் ,குற்றம், இறங்கினாலும் குற்றம் கூறி பய உணர்வுகளையும்,கூச்ச உணர்வுகளையும் பிள்ளையிடம் வளர்த்துவிடுகிரார்கள்.   4.ஆரம்பக் கல்விக்காக ஆரம்பிக்கும் பிள்ளைகளுக்கான [அநேகமாக அருகில் அமைந்திருக்கும்]  பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும்போது, பிள்ளைகளை சுதந்திரமாக நடந்துசெல்ல அனுமதியுங்கள். இங்கே பிள்ளைகள் நடந்து செல்கின்றபோழுது  பாதையில் சுய கவனத்தினை கற்றுக் கொள்ள முடிகிறது.   -ஆனால் எமது பெற்றோர்கள் பிள்ளைகளை ஒருகையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு குடுகுடு வென்று இழுத்துக்கொண்டு பாடசாலை செல்வதன் மூலம் பிள்ளைகளின் கவனக்குறைவுக்கு காரணமாகிறார்கள். 5.கல்விக்கான வீட்டு வேலைகளோ,அல்லது அவர்களுடைய அன்றாட கடமைகளிலும் தேவைக்கு அதிகமாகத் தலையிடுவதனை தவிர்ப்பதன் மூலம்  பிள்ளைகளினது பிரச்சைனகளுக்கான தீர்வை தானாக கண்டுபிடிக்கும்  அல்லது துணிந்து முடிவெடுக்கும் திறமையினை பிள்ளைகள் பெற்றுவிடுகிறார்கள்.   -ஆனால் எமது பெற்றோர்கள் பிள்ளைகளின் மேற்படி விடயங்களில் அதிக தலையீடுகளையே கொண்டுள்ளார்கள்.   6.ஆரம்பக் கல்விக் காலத்திலேயே அவர்களின் புத்தகப் பையையும் அவர்களே சுமந்துகொண்டு செல்லப் பழக விடுங்கள்.இதன்மூலம் பிள்ளைகளிடம் அவர்களுக்கென்றும் சில சொந்த சுமைகள் என்ற பொறுப்புணர்வு சிறுவயதினிலேயே உருவாக வழி கொடுங்கள்.   -ஆனால் எமது பெற்றோர்கள் மறுகையில் பிள்ளையின் புத்தகப்பையினை தாங்கிச் செல்வதன்மூலம்,பிள்ளைக்கு எல்லாக் காலத்திலும், எல்லாத்தேவைகளுக்கும் ஒரு எடுபிடி தேவை என்பதினை நெஞ்சில் விதைத்து விடுகிறார்கள்.இப்பழக்கம் பெற்றோரின் வயதுபோன காலத்திலும் பிள்ளையினால்  பேணப்படும்போது பெற்றோர் மனம்நோக வேண்டிவரும்.   7.பிள்ளைகள் பரீட்சையில் எடுக்கும் புள்ளிகள் குறித்து அவர்களைப் பாராட்டி இன்னும் முயற்சிபன்ணினால் அடுத்தமுறை இன்னும் கூடப் புள்ளிகள் எடுக்கலாம் எண்டு  ஊக்குவியுங்கள்.   -ஆனால் எமது பெற்றோர்கள் பரீட்சையில் பிள்ளை 99 எடுத்தாலும் ஏன் 100 எடுக்கவில்லை என்று கடிந்து பிள்ளைக்கு ஏமாற்றத்தினை வழங்குகிறார்கள்.   8 பல்கலைக்கழகம் நுழைவதற்கான கல்வி தெரிவு செய்யும் விடயத்தை பிள்ளையின் கையிலே விட்டுவிடுங்கள்.வளர்ந்த நாடுகளில் அதனைத் தெரிவுசெய்ய அவர்களுக்குதவியாக அவர்கள் கற்கும் பாடசாலையிலேயே இதற்கென வழிகாட்டி ஆசிரியர்கள் சேவைசெய்ய முழுமனதுடன் காத்திருக்கிறார்கள்.   -ஆனால்பிள்ளையின் கல்வி தெரிவுசெய்யும் களத்திலேயே  எமது பெற்றோர்கள் குதித்துடுவர்.அம்மா ‘டொக்டர்’ என அப்பா ‘என்ஜினியர் ‘என வீடே போர்க்களமாக, இனியும் படிக்கவேணுமோ என்றே  சிந்திக்குமளவுக்கு பிள்ளை நிலை வந்துவிடும்.   மேலும்,இங்கே நான் அவதானித்துள்ளேன்.பிள்ளைகள் தமிழ் வகுப்புக்களுக்கு காரில் அழைத்து வரும் பெற்றோர்கள் காரை அங்கு நிறுத்தியதும் இறங்கி ஓடிவந்து கதவைத்திறந்து ஒருகையினால்  பிள்ளையின் கையினைப்  பிடித்து இறக்கிக்கொண்டு,மறுகையினால் பிள்ளையின் புத்தகப் பையினை எடுத்துக் காவிக்கொண்டும் செல்வர்.   இச்செயலெல்லாம் ஏன்?   அத்துடன்,கடன்காரர்களாக புலம்பெயர்ந்து கால்பதித்த நாங்கள் வந்த காலத்திலிருந்து அடிப்படைவேதனத்தில் வேலைபார்த்து அக்கடனையும் கடந்து பிள்ளைகளின் கல்வியினையும் கடந்து வசதியுடன் வாழ்கிறோ மெனில்,இங்கேயே கல்விமுடித்து,எம்மைவிட அதிக வேதனத்தில் தொழில் செய்து வாழப்போகும் இப்பிள்ளைகள் எப்படிவாழமுடியும் என்பதனை நாம் குறிப்பிட்டுச் சொல்லத்தேவையில்லை.ஆனால் அன்றுபோல் இன்றும்  பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்கள் சேர்ப்பதற்காக மிகவும் சிரமப்பட்டுஅடிப்படைவேதனத்தில் பல தொழில்கொண்டு வாங்கின வீட்டிலும் வாழாது அலைவது, பிள்ளைகள் மத்தியில் விசனத்தினையே ஏற்படுத்தி வருகிறது.இவ்விடத்திலும் பிள்ளைகளை சோம்பேறிகளாக்கவும்,அவர்களுக்கும் தமக்கும் இடையில் ஒரு இடைவெளியினை உருவாக்கவே  பெற்றோர்கள் சிரமப்பட்டுகொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.   பிள்ளைகளின் அனைத்து திறமைகளும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பெற்றோர்கள் செய்யவேண்டியவை.   1.உற்சாகப்படுத்தல்.   2.தன்னம்பிக்கை ஊட்டுதல்.   3.பொறுமையை வளர்த்தல்.   4.பலவகை சூழல்களில் அவர்களை ஈடுபடச் செய்து தீர்வு காணல்.   5.அவர்களுடைய சுயமரியாதைக்கு.. மதிப்பளித்தல்.   6.அவர்களுடன் கலந்துரையாடல்.   7.நல்ல நண்பர்கள் தொடர்பாக பாராட்டுதல்.   8.திறமைகளுக்குப் பரிசளித்தல்.   9.அவர்களுக்குரிய செயல்களில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தல்.என்பனவாம்.   பெற்றோரிடம் என்றும் பிள்ளைகளின்மேல்  உள்ள அன்பு அளவிடமுடியாததுதான்.அதற்காக தம் திறமைகளிலும் முயற்சியிலும் பிள்ளைகள் நொண்டியாக அந்த அன்பு காரணமாகிவிடக் கூடாது என்பதே இக்கட்டுரையின் நோக்கம். எண்ணம்:செல்லத்துரை,மனுவேந்தன்.     மனுவேந்தன் செல்லத்துரை - கனடா.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 11-11-2015

மன்றத்தில் தீக்குளிப்பா? - பவுல்.

மன்றத்தில தீக்குளிப்பு நடந்ததாக வெளிவந்த செய்தி கேள்விப்பட்டபோது அதிசயிக்க வைத்தது.    ஆத்துமாவை கொல்ல வல்லவர்களாக இராமல் சரீரத்தை மாத்திரம் கொல்ல வல்லவர்களுக்கு பயப்படாதே! ஆத்துமாவையும் சரீரத்தையும் நெருப்பிலே தள்ளுகிற (தீய உன் செயல்களுக்கே பயப்படுஃஃஃ)    கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாட உலகமெங்கும் தானே விழா,   கிறிஸ்து கொல்லப்பட்டு உயிரோட எழுந்ததையும் உலகமெங்குமே நினைவு செய்கிறார்கள்.    கிறிஸ்துவின் அன்பை நீங்க காணும் காலம் வரவேண்டும், காணும்போது~~~~~~!!!!! எங்களுக்காக பட்ட பாடுகளை நினைத்து நினைத்து ஆனந்தக்கண்ணீரோ``டாமலா போகும்.      அண்டசராசரங்களை ஆளுகை செய்பவர் பரமாத்மா, தன் மகனையே பூமிக்கு அனுப்பினார்.   என்னை யார் என்று சனங்கள் பாக்கிறார்கள்? என கிறிஸ்து தன் சீடர்களிடம் கேட்டார்,   கிறிஸ்து பூமியில வாழ்ந்த நாட்களிலே அவரை தேவகுமாரனாக நம்பினவர்களே அவரின் மகத்துவங்களை உணந்தார்கள். நம்பாதவர்களால் அவரின் மகத்துவங்களை உணரமுடியாமல் கிறிஸ்தவர்களை எதிர்த்தார்கள். அன்று தொட்டு இந்நாட்கள் வரை இந்த நிலை இருந்து கொண்டுதான் வருகிறது. வெட்டவெட்ட தளிர்விட்டு செழிப்பாக பெருகிக்கொண்டே போகிறார்கள்.   *பெரிய வெள்ளி*   ஆதி காலத்திலே கோவில்களில மக்கள் தங்கள் பாவ கர்ம வினைகள் நீங்க மிருகங்களை இரத்தப்பலி கொடுக்க வேண்டும் என இறைவன் தண்டனை இட்டார். உணர்வற்ற சனங்களோ பாவச்செயலில் இருந்து மனம் திரும்பவில்லை. இரத்தப்பலி செலுத்துவதிலே களிகூர்ந்தார்கள்.   பரமனின் ஆத்மாக்களான பரமாத்மாக்களை [மனிதரை] தெய்வம் காப்பாற்ற முயற்ச்சித்தார் .மிருகங்களை பலியிடுவதை நிறுத்தி,, இறைவன் தன்னோட இருந்த நேசமகனை [கிறிஸ்து] பரமாத்மாக்களின் பாவவினை நீக்கும் பலி ஆடாக பூமியில அவரால அனுப்பப்பட்டார். கிறிஸ்து பலியான நாளை புனிதவெள்ளி, பெரீயவெள்ளி என இன்றும் நினைவு செய்கிறார்கள்.     தம்மை தந்து என்னை மீட்டவரே இயேசுகிறிஸ்து உலகமெல்லாம் உணரந்து அவரை வணங்குகிறார்கள். கிறிஸ்து ஆடாக அடிக்கப்பட்ட பின்னர் மிருகப்பலி செலுத்தல் தேவையற்றதொன்றாக மாறிவிட்டது. கிறிஸ்துவை சரண்டைந்தவர்களுக்கு மட்டுமே அவரின் இரத்தத்தால பாவமன்னிப்பை பெறுகிறார்கள். பாவபழக்கவழக்கங்களிலிருந்து வெளியே வருவது அவர்களுக்கு இலேசான காரியம். திருந்தா பாவியை திருத்தி நடத்திட இயேசுகிறிஸ்து வல்லவர்    பெரீய வெள்ளி எல்லா மனிதருக்குமே மிக ஆசீர்வாதமான அதிஸ்ர நாள். இதை புரிந்தவர்கள் அந்த நாளில் விரதமிருந்து கடவுளுக்கு நன்றி சொல்வார்கள். மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான பாவச்சுவர் உடைபட்ட நாள். நம்பினோர் தகனமடையாமல் பாதுகாப்பு பெற்று விதையாக விதைக்கப்பட்டு புதிய வாழ்வை காண்பர்.  பாம்பை பற்றி கிறிஸ்து சொன்னவைகள் நடந்துகொண்டே இருக்கிறது. நிலத்துக்கு கீழ தான் பாதாளம் இருக்கிறது. வானத்திற்கு ஏற முடியாது. மண்ணிலே அதற்கு அற்புதங்கள் செய்ய முடியும்.   மனிதரை தன்னோட நிலத்துக்கு கீழ சேர்க்க *பாம்பும்*, , மனிதனை விண்ணுலகில(பரலோகம்) சேர்க்க *கிறிஸ்துவும்* மனிதர்கள் மத்தியிலே கிரியைகள் செய்கிறார்கள்.      அன்பை பெருக்கி என்னுயிரை காக்க வந்த இன்பப்பெருக்கே,கிறிஸ்து   கிறிஸ்துவின் அன்பை நீங்க காணவேண்டும்~`` காணும்போது< {தகனமா போகாமல் மாவீரராக விதைக்கப்பட்டு}< புதிய பூமியில விளைந்தெழும்ப வேண்டும்.     சகல சனங்களையும் தன் இரத்தத்தால மீட்பேன் என்றார். கிறிஸ்துவிடம் சரண்டைந்தவர்கள் மட்டுமே புதிய பூமியில மண்ணிலிருந்து உயிர்ப்பிக்கப்படுவார்கள். நெருப்பில தகனமடைவோர் நெருப்பிலே உயிரப்பிக்கப்பட்டு நெருப்பில வாழ்வார்கள். அதனாலதான் மாவீரரை தகனம் செய்வதில்லை. தகனமடையாமல் பாவவினை நீக்கி தன்னோட நாங்கள் வாழ வேண்டுமென இயேசுகிறிஸ்து எங்களை தம்மிடம் வரும்படி ஆவலாய் தம் கரங்கள் நீட்டியே அழைக்கிறார். நம் பாவங்கள் எவ்வளவானாலும் தன் சரீரத்திலிருந்து வடிந்த ரத்தத்தால் கழவுவார்..   எந்த மனுசனையும் உயிர்ப்பிக்க அவர் ரத்ததிலே வல்லமை உண்டு. என்ற அவர் வார்த்தைப்படி நடப்பதால உலகமெல்லம் உணந்தோதற்கரியவராக அவரை தேவாராதனை செய்கிறார்கள்.   ஆத்துமாவை கொல்ல வல்லவர்களாக இராமல் சரீரத்தை மாத்திரம் கொல்ல வல்லவர்களுக்கு பயப்படாதே!     பவுல் - மேற்கு ஐரோப்பா.

மேலும் படிக்கவும் 18 மறுமொழிகள் சுதர்சன் 03-04-2015

யதார்த்தங்கள் - பம்பல்Kமனோ.

உண்மைகள் உள்ளவாறு உள்ளபடி பேசி பறைய வேண்டும் அதைவிடுத்து தனக்கு தெரிந்ததெல்லாம் சொல்லி பறைஞ்சு நீலி கண்ணீர் வடித்து யாரோ ஒருவர் புனைந்த கவிதையை தன பெயரில் வெளிவிட்டு ஆனந்தம் கொள்வது அழகல்ல.பாராட்டு மழை ஒரு புறம் இன்னொரு புறம் யதார்த்தங்கள் சொல்லும் ஒரு சிலர் .அதே அவர் ஒரு காலம் எம்மூரில் பல இணையங்கள் போட்டி போட்டு கொண்டு .அவரின் தனிப்பட்ட கருத்தை பல இணையங்களுக்கு அனுப்பிய போதும் எவரும் வெளி விட வில்லை .ஏசினார் எல்லா இணையங்களையும் இவ்வாறு **உவை என்ன கண்டறியாத பொது இணையமோ நடத்துகினம் ? ஏன் நான் எழுதினதையும் உவை வெளி விடலாம் அல்லே என்று ஆத்திரத்தில் குமுறினார் .நான் அணுகினேன் பண் கொம் நிருவாகிகளை.அவர்கள் சொன்னார்கள் உந்த மனிசன் ஒரு மரியாதையான தொழில் செய்தவர் அல்லே .உதய் விட்டால் உவர் கிரிசை கேட்டு போவார் என்று சொல்ல நான் சொன்னேன் விடுங்கோ வாறதை நான் சமாளிக்கிறேன் என்று சொன்னதும் அது வெளிவிட பட்டது . சொன்னது போல நடந்தது .கூடிய வருகை .அவர் பிசக்க பட்டார் .நான் அவரின் பிரக்கராசி போல பல பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து அவரை காவாந்து பண்ணினேன் .அவர் இப்போ இங்கு வராமல் அவரை ஒதுக்கிய தளங்களில் கவிதை மழை பொழிகின்றார் .கவிதையின் சாராம்சம் .** பழமை இந்து சமய சம்பிரதாயங்கள் அழிந்து  ஒளிகின்றதாம் ** அனைத்தும் நான் கருத்து களத்தில் ஆங்காங்கே நாசூக்காக நகைச்சுவை கலந்து சொன்ன விடயங்களே .ஒரு உதாரணம் மட்டும் **அன்று மரண வீட்டில் பிரேதத்தை படலையால்  கொண்டு போகாமல்  வேலியை வெட்டி கொண்டு போனோம் .இன்று வெட்ட வேலி எங்கே ? எல்லாம் ஏற்கனவே நான் சொன்னவையே . இளம்  சமூகம் அறிவூட்ட படுகின்றதாம் பழையவற்றின் நினைவூட்டல்கள் மூலம் .பழமை வாதிகள் அப்படித்தான் சாக்கு போக்கு சொல்லி எதிர் கருத்து வரும் போது சமாளிப்பார்கள் . குடும்ப ஆதிபத்தியத்தில் பல பழமையான சம்பிரதாயங்களான  வேள்வி /பொங்கல் /மடை /கிடாய் வெட்டு நடந்த கோயில் கூட இன்று வேறு வடிவில் பரிணமித்து உள்ளது .ஒருவர் அதில் கூட விலகி தான் செய்வது /சொல்வது எல்லாம் சரி என்று கூறி இன்று தனிமை படுத்த பட்டு விட்டார் அவரின் செயல்பாடுகளினால் அவரின் தந்தையார் கூட அகாலத்தில் மனோ நிலை பாதிக்க பட்டு அமரர் ஆகினார்  .நான் கூட அவரின் அலுவல்களுக்கு துணை போனேன் சில காரனகளுக்காக .இன்று நான் வெட்கி தலை குனிகின்றேன்.ஊருடன் ஒத்து ஓடவேணும் என்றில்லாமல் அவரின் அலுவல்களுக்கு  துணை போனதற்காக..சரியாக ஆரம்பத்தில் ஜேவிபி காரராக பல்கலை கழகத்தில் அரசியலில் குதித்து பின் பல் டாக்குத்தராகி ரணிலுடன் சேர்ந்து குறிகிய கால அமைச்சர் ஆகி பின் கரணம் அடிச்சு சுதந்திர கூட்டணியுடன் சேர்ந்து மீன் பிடி அமைச்சர் ஆகி மீண்டும் கரணம் அடிச்சு ரணில் பக்கம் வந்து இவ்வாறு சொல்கிறார்  **நான் அன்று 18 ஆவது அரிசியல் அமைப்பு திருத்தத்துக்கு கையை உயர்த்தியதை இட்டு இன்று கவலை அடைகின்றேன் .நாட்டு மக்களுக்கு நான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோருகிறேன் ** என்று .ஆனால் நான் ஒரு அரசியல் வாதி அல்ல .சமூக வாதி .எனக்கு எந்த ஒரு பிரபலியம் ஒ அன்றில் மலர் மாலையோ இல்லை வாழ்த்தோ தேவை படாது .சரியென பட்டத்தை எவருக்கும் பயமின்றி துநிச்சளுடல் சொல்பவன் .அதற்காக நான் சொல்வதை எல்லோரும் கேட்க வேணும் அதன்படி ஒழுக வேணும் என்று அழுங்கு பிடி பிடிப்பவனும் இல்லை அது சிலருக்கு பரம்பரை பரம்பரை ஆக மரபணுக்களால் (geans களினால் காவி வர படும் குணாதிசியங்கள் அப்பா .அதுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது   பம்பல்Kமனோ - கலட்டி.  

மேலும் படிக்கவும் 12 மறுமொழிகள் சுதர்சன் 09-12-2014

புதுமையான லோகம் - பம்பல்Kமனோ.

வயது போன காலத்திலை ஊரிலை போய் செட்டில் ஆகி வாழுவோம் என்றால் எனக்கு நடந்தத கதை இது .வீட்டில் குடி கொண்ட வவ்வாளுகளை கலைச்சு சாம்பிராணி புகை பிடிச்சு 22 வருயங்களுக்கு பிறகு அம்மாளே ஆச்சி எண்டு நின்மதியாய் சீவிப்போம் எண்டு போய் கொஞ்ச மரக்கறி கோடி பக்கத்திலை நட்டு கொத்தி தண்ணி ஊத்தி வளர்த்து ஒரு போத்தில் கள்ளு குடிக்க நான் போய் விட்டன் . நாலு மல்லன்கள் முக்கால் சட்டையோடை  கயிலை மொபைல் ஓட வந்து படலையை தட்ட என்ரை மனிசி காறி போய் துறக்க அவை இப்பிடி சொல்லிச்சினமாம் **நாங்கள் பெரிய இடத்திலை இருந்து வந்திருக்கிறோம் .எங்களுக்கு ஒரு அம்பது லட்சம் காசு வேணும் இப்ப வைக்கவேணும் உடனை  **ஆக்கள் பதமாய் போட்டு தான் வந்து நிக்கினம் .இதை கேட்ட என்ரை மனிசி  **ஐயோ உவ்வளவு காசு எங்களிட்டை என்காலை ? **அம்மா டூப்பு விடாதேங்கோ எங்களுக்கு தெரியும் உங்கடை புரியன் கப்பலிலை லச்சன்கள் உளைச்சவர் எடுத்து விடுங்கோ உடனை .ஐயோ தம்பி மாறே அவர் கப்பலிலை உழைச்சது உண்மைதான் .எண்டாலும் அவர் வெளிநாட்டு கப்பளுகளிலை பொய் வறுகு வறு கெண்டு  வறுகாமல் ஒரு சொச்ச சம்பளத்துக்கு வேலை செய்து இப்ப இஞ்சை ஊரோடை வந்து விட்டோம் ராசாக்களே .அவருக்கு பென்சனும் இல்லை அல்லே ?      இதை  கேட்ட என்ரை மூத்தவள் சோதினைக்கு படிச்சு கொண்டு இருந்தவள் படலை அடிக்கு பொய் **ஆர் நீங்கள் ஏன் வந்தனீங்கள் எண்டு கேக்க ** அது அக்கா எங்களுக்கு கொஞ்சம் காசு வேணும் >அப்ப நீங்கள் ஆரெண்டு உங்கடை  ஐலேண்டி காட்டை காட்டுங்கோ ?? அதொண்டும் இல்லை அக்கா எங்களிட்டை .அப்பிடி எண்டால் இதை வாங்கி கொண்டு போங்கோ எண்டு என்ரை மூத்தவள் சுழட்டி சுழட்டி கராட்டி குன்  பூ எல்லாம் விளாச வீட்டு கோடியை சுத்தி ஓட .என்ரை மனிசி கோடி குல்லை ஒளிச்சு நிக்க வந்தவன் ஒருத்தன் அடி வேண்டியும் அவருக்கு என்ரை மனிசியோடை லவ்வு .   **நடந்து நடந்து போச்சுது ஐ லவ்வு யூ அண்டி .வாருங்கோ நாங்கள் ரண்டு பேரும் ஓடி போவோம் மலேசியாவுக்கு **எண்டு சொல்ல நம்மடை அவ  மேழை  கூப்பிட்டு **எடியே பிள்ளை இஞ்சை ஒரு மூதேவி என்னோடை சொறிய வாறான் .நான் அவன்றை தாய் மாதிரி .வந்து கவனி ஒருக்காய் அவனை ** கொஞ்சம் பொறுங்கோ .அவள் போய் மூஞ்சை உடைய கிழிச்சு எல்லாரையும் அனுப்பியாச்சுது .   நான் கள்ளை போட்டுவிட்டு வர அவ பெரிய கொம்ப்ளைன் எனக்கு .நீங்கள் கள்ளை போட்டு விட்டு வலு குஷாலாய் வாறியள் நாங்கள் பட்ட பாடு அதை ஏன் பேசுவான் ? எடியே அதுக்கள்ளே நான் என்ரை பெட்டைக்கு உதெல்லாம் படிப்பிச்சனான் .நானென்ன பாரத நாட்டியம் படிப்பிச்சு ஊர் உலகத்துக்கு கொண்டி காட்ட லச்சன்கள் சிலவளிச்சு அரங்கேற்றம் செய்தவன் இல்லையடி உன்றை புரியன் .உங்களை காவாந்து பண்ணினது தானே அது .இஞ்சை வாடி என்ரை மோளே .உனக்கு என்னடி வேணும் சொல்லு ? ஐயோ என்ரை அப்புவே எனக்கு ஒண்டும் வேண்டாம் நோய் நொடி இல்லாமல் எங்களோடை இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்தால் அது எங்களுக்கு காணும் எங்களை பெத்த அப்புவே ..**இதை விட வேறை என்ன வேணும் எனக்கு ?**   பம்பல்Kமனோ - கலட்டி.

மேலும் படிக்கவும் 7 மறுமொழிகள் சுதர்சன் 16-11-2014

உங்கள் நண்பரைக்கண்டுபிடியுங்கள் - மனுவேந்தன்.

வணக்கம்,இணைய வாசகர்களே! உறவுகள் ஒன்றுகூடி குதூகலிக்கும் தீபாவளித் திருநாளில்  உங்கள் சிந்தைக்கு விருந்தாக உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறோம்.     எம் இனிய இளையோரே!உலகத்தில் உத்தமராக வாழத் துடித்துக் கொண்டிருக்கும் இதயங்களே!உங்கள் உண்மை நட்புக்குரியவன் யாரென்று அறிந்து கொண்டீரா?அல்லது,உங்களுடன் பழகும் எல்லோருமே உங்கள் நண்பர்கள் என்று நம்பி ஏமாந்து கொண்டு இருக்கின்றீர்களா?ஆராய்ந்து கொள்ளுங்கள்.       சகோதர சகோதரிகளே!நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம்கூட உங்கள் குணம் காட்டும்.நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக தேர்ந்தெடுக்கும் வழிகூட உங்கள் நண்பரின் குணம் காட்டும்.எனவே உங்கள் நண்பர்களை எப்படித் தெரிவு செய்தீர்கள்.ஒருமுறை அலசிப்  பாருங்கள்.    நாம் பாடசாலையில் படிக்கின்றபோது  நிறைய மாணவர்கள் எம்முடன்  படிக்கின்றார்கள்.அவர்கள் எல்லாம் எமது நண்பர்களா?எம்முடன் திரைப்படம் பார்க்க கூடவே சிலர் வருகிறார்கள்,அவர்கள் நண்பர்களா?வீதிகளில்  சந்திப்பதில் சிலர் சிரித்து எம்முடன் கதைக்கிறார்கள்.அவர்கள் நண்பர்களா?விளையாட்டு மைதானத்தில் எம் கூட  சந்தோசமாக  இணைந்து விளையாடும் அவர்கள் எல்லாம் எமது நண்பர்களா?அல்லது தொலைபேசியில் பலமுறையும் தொடர்புகொண்டு நேரம் போவது தெரியாமல் எம்முடன் கதைக்கிறார்களே அவர்கள் நண்பர்களா?சிந்தித்துப் பாருங்கள்.    கூட இருந்து கூழ் குடிக்கும்போது நண்பன் என்று கூறியவன் நம் வாழ்வுக்குக் குழிபறிக்கக் கூடும்.உற்றார் ஆக   நடித்து உதவி பெற்றவன் தன் தேவை முடிந்ததும் நம் இதயத்தினை உதைக்கக்  கூடும்.சிரித்துப் பேசி நல்ல நண்பனாக இருந்தவன் கூட நம்மை அடுத்தவன் பார்த்து சிரிக்க வைக்கக் கூடும்.நமக்காக அழுது  அழுது நடிப்பவன் நம் சந்தோசத்தினை அழித்து நம்மை அழ வைக்கக் கூடும்.  இருவருக்கிடையே நட்பு உருவாகுவதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் நிச்சயம் இருக்கவேண்டும் என்றில்லை.இருவருக்கும் இடையே காணப்படும் ஒத்த மன உணர்வே போதுமானது.நேரில் காணும்போது புன்சிரிப்புக் கட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளம் ஆகாது.இதய பூர்வமாக  நேசிப்பதே உண்மையான நட்பாகும்.     மேலும்,                             உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே                             யிடுக்கண் களைவதா நட்பு. அதாவது நண்பன் எனப்படுபவன் நம் உடலை விட்டு உடை நழுவும்போது எமது உத்தரவுக்குக் காத்திராமல் எமது கைகள் தாமாகச் சென்று அவ் உடையினைசரிசெய்வதுபோல், நண்பனுக்குவரும் துன்பத்தைப் போக்க தாமாக த்துடி துத்து முன்சென்று  நண்பனுக்கு உதவுவதுதான் நட்புக்கு சிறந்த இலக்கணமாகும் எனத் திருக்குறள் அழகாகச் சொல்கிறது. பழகும் இருவருக்கிடையில் வளரும் இதய பூர்வமான அன்பினால் கிடைக்கும் இன்பமும் வளருமானால் அதுவே உண்மையான நட்பு ஆகும். நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு செலுத்துவது போல் இருந்தாலும், அவர்களது தொடர்பு தீய வழிகளுக்கே நம்மை இட்டுச்செல்லும். தீய காரியங்களுக்கெல்லாம்கூட்டுச்சேர்வதெல்லாம் நட்பு என்று கூற முடியாது. -தனக்குப் பயன் கிடைக்கும் போது இணைந்திருந்து தேவை முடிந்ததும் பிரிந்து செல்பவர், -ஆபத்து  வேளைகளில்,எமைவிட்டுஓடுபவர்கள். -பொழுதுபோக்குக்காக சிரித்துப் பேசுவதற்காக மட்டும் எம்மோடு இணைவோர்கள், -நிறைவேற்றக் கூடிய நியாயமான செயலை செய்யவிடாமல்  எம்மைத் தடுப்பவர், -சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவர், -தனிமையில் பேசும் பொது இனிக்கப் பேசி விசயங்களைப் பெற்றுப்பின் பொது   இடங்களில்,அதனை வைத்து,மற்றவர்களுடன் பழித்துப் பேசுபவர். இவர்களின் தொடர்பு நட்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக அவர்களை விலக்கிடவும் கூடாது. ஔவையாரும் தனது மூதுரையில்                                            ''அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல்                                              உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக்குளத்தில்                                              கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே                                              ஒட்டி உறுவார் உறவு'' அதாவது, குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும் பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர்.  அந்தக் குளத்திலேயே அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் கொடிகளைப் போல, நம்முடனேயே நம் இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொள்பவர்களே நம் உறவு.எனப் பொதுவாகக் கூறுகிறார்.   எனவே உங்கள் உண்மையான நண்பனை யார் என உணர்ந்து நலமாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.                                              செ மனுவேந்தன் - கனடா.

மேலும் படிக்கவும் 3 மறுமொழிகள் சுதர்சன் 22-10-2014

இந்த முதலையின் பசியை தீர்த்தது யார்? - சிவாஸ்.

கள்ளியம் பிட்டி அருகில் ஓர் கும்பியடி என்ற குக் கிராமம் ஒன்று உண்டு. கள்ளியம் பிட்டிக்கும் கும்மிபியடிக்கும் இடையில் சரவணா என்னும் ஆறு ஓடுகின்றது. கும்ம்பிடியில் கிட்ட தட்ட 20 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களில் பலர் பிளைப்புக்காக இந்த ஆத்தை கடந்து கள்ளியம் பிட்டிக்கு தினமும் வருவதுண்டு அதில் ஓர் குடும்பத்தின் கதை தான் இது. கும்பியடியில் ராகவன் என்னும் விறகு வெட்டி வாழ்ந்து வந்தான். அவன் தனது தாய் தந்தைமீது மிகபாசமுடையவனாகவும் அவர்களை தெய்வமாகவும் மதித்து வாழ்ந்து வந்தான்.  இவனுக்கு தாய் தந்தையினர் சகுந்தலை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இவர்கள் நால்வரும் இன்பமாக வாழ்ந்து வருங் காலத்தில் விபத்து ஒன்றின் மூலம் ராகவனின் தாயும் தந்தையும் இறந்துவிடுகின்றார்கள். இவர்களின் இழப்பை தாங்கமுடியாத ராகவன் துயரத்தால் துவண்டு விடுகின்றான். தொழிலை விட்டான் உணவை மறந்தான் ஓர் நடைப்பிணம் போல் ஆனான். இவன் இப்படி சோகத்தில் ஆழ்ந்திருந்தவேளை எங்கிருந்தோ வந்தான் ஒருவன். நண்பன் என ஆறுதல் கூற. நண்பன்!!!! நீ இளந்ததை இனி யாராலும் ஈடு செய்ய முடியாது. உன் தாய் தந்தை உன்னை விட்டு பிரிந்து விட்டனர். அவர்கள் விதி முடிந்து விட்டது. எண்ணிப்பார் நீ இப்படி சோகமாக இருப்பதை நிச்சயமாக அவர்கள் விரும்பமாட்டார்கள். உனக்காக ஓர் உன்னத உறவை தந்துள்ளார்கள். இனி நீ அவளுக்காக ஆவது  வாழ்ந்துதான் ஆகவேண்டும். உன்னை நம்பி வந்தவள். அவளை ஏமாற்றி விடாதே. (அவனின் நிலைகண்டு உருகியவனாய் உபதேசம் செய்தான்)   ராகவன்!!!!        என் தாய் தந்தையை நான் கடவுளாக மதித்து வாழ்ந்து வந்தேன். அவர்களின் திடீர் இளப்பு என்னை மிகவும் வாட்டுகின்றது.  என்னால் தாங்க முடியவில்லை. உன் ஆறுதல் வார்த்தைகள் என் மனதிற்கு ஆறுதல் தர முடியாது. நண்பன்!!!!        நானும் உன்போல் மிகவும் துன்பத்தில் இருந்தவன்தான். நான் என் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணியவேளையில் தான் எனக்கு ஓர் நண்பன் இந்த வளியை காட்டினான். நீ வா உன் துன்பத்தை மறக்க நான் வழி காட்டுகிறேன். (இருவரும் மதுக்கடைக்கு போனார்கள். நண்பனாக வந்தவன் தன் செலவில் மதுவாங்கிக் கொடுத்தான்) கவலைக்கு மருந்து இதை விட்டால் இந்த உலகத்தில் வேறு எதுகுமே இருக்க முடியாது. இது மட்டும் தான் கவலைக்கு மருந்து. மற்றதெல்லாம் போலி. யார் என்ன சொன்னாலும் இதுக்கு ஈடாகாது. அனுபவ சாலி சொல்கின்றேன் கேள். அருந்திப் பார். கவலைகள் தீரும். துன்பங்கள் துலையும். இன்பனிலை உருவாகும். உன் கவலைகளை தீர்த்து உன்னை ஓர் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும் . உனக்காக எல்லாம் உனக்காக!!!!! உன் கவலைகள் தீர நானும் குடிக்கின்றேன். நிச்சயமாக உன் கவலைகள் தீரும். உனக்காக எல்லாம் உனக்காக!!!!!!! (என்றுகூறி அவனுக்கு மதுவை ஊற்றி கொடுத்தான்), ராகவன்!!!! எனக்கு இதுகள் எல்லாம் பழக்கமில்லை. இது தப்பு என்று என் தாய் தந்தை கூறுவார்கள். எனக்கு இது வேண்டாம். நான் என் தாய் தந்தையை அவமதிப்பது போல் ஆகிவிடும் . எனக்கு இது வேண்டாம். நண்பன்!!!! (உதவிக்கு அருகில் இருந்தவர்களை அழைத்தான்) ராகவா? இதோ இதில் உள்ளவரை பார். இவர் கதை தெரியுமா உனக்கு? இவர் ஒருகாலத்தில் பைத்தியமாக றோட்டிலை திரிந்தவர் இப்ப எப்படி சந்தோசமாக இருக்கின்றார் பார். அதோ அவரைப்பார் அவர் களுத்தில் ஓர் கோடு தெரிகிறதே அது என்ன தெரியுமா?  அவர் தூக்கில் தொங்கிய அடையாளம். அவர் தற்கொலை முயர்சியில் இருந்து தப்பியவர் தெடியுமா! அவர் இப்போ எப்படி சதோசமாக இருக்கின்றார் தெரியுமா? சரி வா அவரிடமே கேட்போம். (நண்பன் அழைத்துச் சென்று புதிய நண்பனை அறிமுகம் செய்தார்) நண்பரே!!! இவர்தான் ராகவன். நமக்கு கிடைத்த புதிய நண்பன்.என்று அறிமுகம் செய்தான். புதிதாக அறிமுகமான நண்பன்!!! நண்பரே நீ சொர்கத்துக்கு வந்து விட்டாய். இனி உன் வாழ்வில் என்றுமே இன்பந்தான். அனுபவி.. அனுபவி... அனுபவி ராசா அனுபவி என்று அவரும் ஆலோசனைகளை அள்ளிவழங்கினார். (இவகளுடன் இன்னும் பலர் இணைய ராகவன் ஒருவேளை இவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்குமோ என்று எண்ணி எதுக்கும் ஒருமுறை முயன்றுபார்ப்போம் என்று அவர்கள் வழியில் இறங்கிணான்) எடுத்தான் போத்திலை. குடித்தான் மதுவை. அடைந்தான் மதியின் மயக்கத்தை. தொடர்ந்தான் போதையில் வாழ்க்கையை.   சகுந்தலை !!!! போதையில் வருங்கணவரை பார்த்து என்ன சொல்வது. இவன் சோகத்தில் அழுவதை விட போதையில் தூங்குவது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நாட்கள் கழிந்தன........ ராகவன் திருந்தியபாடில்லை அவன் மதுப்பழக்கம் மென் மேலும் அதிகரித்தது. காலையில் விறகு வெட்ட செல்வான். வெட்டிய விறகை வீட்டில் கொண்டு வந்து போடுவான். பின் மதுக்கடையை நாடுவான். விறகை விற்பனைக்கு மனைவியே எடுத்துச் செல்லவேண்டும். அவன் மதுக்கடை சென்ற பின். விறகுகளை எடுத்துக் கொண்டு ஆற்றை கடந்து கள்ளியம் பிட்டிக்கு சென்று விறகுகளை விற்று பொருட்களை வாங்கி வருவது சகுந்தலை. நாட்கள் செல்ல செல்ல மது போதையால் பிரச்சனைகள் ஆரம்பமாகத் தொடங்கியது. அவன் தாய் தந்தையை மறந்து விட்டான். ஆனால் மதுவை மறக்க முடியவில்லை. குடும்பத்தில் வறுமையும் பிரச்சனையும் மிகச்செளிப்பாக வளர்ந்து மரமாக நின்றது. இந்த நிலையில் சகுந்தலைக்கும் ஓர் நண்பன் கிடைத்தான் கள்ளியம் பிட்டியில் ஓர் வியாபாரி. இவன் கூறும் வார்த்தைகள் இவள் மனதில் ஓர் ஆறுதலாக இருந்தது. நாளடைவில் இவளும்  கள்ளியம் பிட்டி வியாபாரி கூறும் ஆசை வார்த்தைகளில் வசியப்பட்டாள். இவள் மனதை புரிந்து கொண்ட வியாபாரி உன் கணவனை விட்டு என்னுடன் வா...... நான் உன்னை அன்பாக பார்த்துக்கொள்வேன்....... நீ இப்படி கஸ்ரப்படத்தேவை இல்லை........ என்று ஆசை வார்த்தைகள் கூற அவளும் சங்கடப்பட்டாள். இந்த சங்கடத்துடன் இவள் இருக்க. குடி போதை போதாமல் பணத்துக்காக வீடுதேடி வந்தான் ராகவன். பணம் கொடுக்க மறுத்த மனைவியுடன் ஆரம்பமானது தர்க்கம். போதையில் இருந்த ராகவன் முழங்கினான். வியாபாரி கூறிய வார்த்தைகள் சகுந்தலைக்கும் ஊக்கம் கொடுத்தது. முடிவு!!!!!!!!! சகுந்தலை வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தாள். இரவும் வந்தது. ராகவனும் தூங்கிவிட்டான். சகுந்தலை வீட்டை விட்டு புறப்பட்டாள். உறங்கிக் கொண்டிருந்த படகோட்டியிடம் தன்னை அக்கரையில் விடும்படி கேட்டாள்..... கெஞ்சினாள்.... மன்றாடினாள்..... என் நித்திரையை குழப்பாதே போய் விடு என்று துரத்தினான் படகோட்டி. இவள் விடிவதற்குள் அக்கரையை அடைய வேண்டும். விடிந்து விட்டால் ராகவன் தன்னை போகவிட மாட்டான் என்று முடிவெடுத்த சகுந்தலை. இந்த ஆத்தோரமாக இரண்டு மைல் தூரம் நடந்தால் மரப்பாலம் வரும் அந்த வழியால் அக்கரையை அடைந்து விடலாம் என எண்ணி ஆத்தோரமாக நடக்க ஆரம்பித்தாள். நடந்தாள்......நடந்தாள்.....நடந்தாள்....... இரண்டு மைல் தூரம் நடந்த அவள். மரப்பாலத்தையும் கண்டாள். ஆகா!!!!!!!!! என் எதிர்காலம் தெரிகின்றது என்று எண்ணிய வேளையில்  அவள் கால்களை கௌவியது ஓர் முதளை. அதன் கோரப்பசிக்கு அவள் பலி ஆனாள். இந்த முதளையின் பசியை தீர்த்தவர் யார் ? உங்களால் சொல்ல முடியுமா? 1.   அவளை அக்கரையில் விட மறுத்த படகோட்டியா? 2.   வீட்டில் இருந்து வெளிக்கிட்ட சகுந்தலையா? 3.   அடுத்தவன் மனைவிக்கு ஆசை வார்த்தை கூறிய வியாபாரியா? 4.   அடுத்தவர் வார்த்தையை நம்பிகெட்ட ராகவனா? 5. தப்பான வழியை காட்டிய நண்பனா?   சிவாஸ் - நெதர்லாந்து.

மேலும் படிக்கவும் 19 மறுமொழிகள் சுதர்சன் 09-10-2014

பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.

தொடர்ச்சி ..........   பாசு போட்டு எடுத்து போட்டா பாக்கிய ஆச்சி .எவரும் அறியாமல் ரகசியமாக பயண ஒழுங்குகள் அமளியாக நடக்கின்றது .ரண்டு Bag நிறைய எதோ உர பை சாக்கில் அடைவது போல புழுக்கொடியல் மா /ஊறுகாய் /நல்லெண்ணெய் போத்தில் எல்லாம் அமுக்கு படுகின்றது எடியே பிள்ளை மரகதம் நான் போய் வருமட்டும் வீடு வாசல் /கோழியல் /ஆடு /மாடெல்லாம் கவனிக்கவேணும் வடிவாய் .வேலியிலை குழை வெட்டி கட்டு .அடுக்களையிலை கடகத்திலை கிடக்குது தவிடு .கோளியளுக்கு போடு .முன் படலையை துறந்து போடாதை .கள்ளர் காடையல் தூக்கி கொண்டு போவிடுவான்கள் பொருள் பண்டங்களை .நான் வரேக்குல்லை என்ரை பொடி பெட்டையளிட்டை சொல்லி உனக்கென்னடி வேண்டி கொண்டு வர ? ஐயோ எனக்கொண்டும் வேண்டாமனை.பாக்கியாச்சி பத்திரமாய் போய் வந்தால் காணும் .இல்லையடி எழுப்பும் விடாமல் உலவியாமல் சொல்லடி ஏதும் வேண்டி கொண்டு வர .சரி சரி கேட்டு போட்டியல் எண்டதுக்காக ஒரு வெளி நாட்டு செண்டு போத்தில் வேண்டியானை .எடியே எனக்கு தெரியும் உது உனக்கில்லை .நீ அந்த உங்கடை அயல் வீட்டு பொடியோடை எதோ இதாம் எண்டு நானும் கேள்விபட்டனான் .அவனுக்கு குடுக்கவல்லெ.குடடி குடடி. நானும் அந்த புண்ணிய வாளனை லவ்வி அல்லே கட்டினனான் .     எடே துரை லிங்கா பயணம் வெளிக்கிடேக்கை மம்மல் பொழுதிலை ஒருத்தருக்கும் தெரியாமல் ஒளிச்சு வெளிக்கிட வேணும் .ஆரென் கேட்டால் சொல்லவேணும் .பாக்கியத்துக்கு எதோ பொல்லாத வருத்தமாம் .கொழும்பிலை பிற வெட்டு ஆசுவத்திரியிலை காட்ட கூட்டி கொண்டு போறன் எண்டு .வெளிநாடு போறோம் எண்டு எங்கடை பெண்டுகள் அறிஞ்சாலவை எண்டால் சாமானுகள் திருப்பி  விட்ட கோவத்திலை சாவம் போடுவலவை உந்த கிழவிக்கு விசா குடுக்கபடாது எண்டு .விசா கிடைக்காட்டில் எனக்கு பிறகு விசர் அல்லே பிடிக்கும் . கொழும்புக்கு போய் நேரை கலியாணி லொச்சிலை.இறங்கிவிட்டினம்  முஹம்மத் நானா ஓடிவந்து ஹா வாங்க தம்பி எந்த எம்பசி ? விசா போம் எல்லாம் நாங்க நெரப்பி குடுப்போம்  ஒரு அரு நூறு ரூவாய் .எம்பசிக்கு ஏன்ட்ரை ஓட்டோ ஈக்குது .துரைலின்கன் பதில் இவ்வாறு  டாங்க்ஸ் நானா .நான் இஞ்சினை கொழும்பிலை பன்ரண்டு வருஷங்கள் பல சரக்கு கடையிலை வேலை செஞ்சேன் .சிங்களம் சுமாராய் ஓடும் இங்கிலீசும்  ஒரு மாதிரி yes /No /I dont know சொல்லி சமாளிப்பன் போம் நிரப்புகிறதும் எங்கடை சிங்கர் அண்ணையிட்டை குடுத்து ஒரு சல்லி காசும் இல்லாமல் ஓசியிலை செய்யலாம் .அவர் உங்கினை  பக்கத்திலை புறக்கோட்டை மீன் சந்தையிலை * மாலு கடையிலை " இரண்டாம் மாடியிலை . சரி சரி தம்பி நீங்க செஞ்சுக்குங்கோ .இந்த சீன்கள் அன்று வழமையான சீன்கள் .மொழி அறியாமை கொழும்பு தெரியாமையை உபயோகித்து பணம் பிடுங்கிய காலங்கள் .   இப்போ இரவாக துரைலின்கன் சாப்பாடு கட்ட வெளிகிடுகிறான்  பாக்கியாச்சி உங்களுக்குஎன்ன  மச்சமோ /மரக்கறியோ கொண்டர ? எடே மச்சம் கொண்டந்து போடாதை .இண்டைக்கு நுனசை தேரடா .   நான் விரதம் கண்டியே .சரி சரி உங்களுக்கு சைவ கடையிலை சுத்தி கொண்டு வாறன் .எனக்கு மீன் சாப்பாடு .பயண அலுப்பு தீர ஒரு காலும் போட்டு விட்டுத்தான் வருவான் பேசி கீசி போடாதை .சரி சரி போட்டா .நீ இல்லாட்டால் ஆரடா எனக்கு இதெல்லாம் செய்ய  ? சாப்பாடு முடித்து படுக்கைக்கு ஆயத்தம் .பாயும் தலைகனியும் பாணி பினாட்டு மாதிரி ஒட்டியது .பாக்கியாச்சி நினைத்தா வெளிநாடு போறதென்றால் இதெல்லாம் அனுபவிக்க வேணும் போல என்று நினைத்து .அம்மாளே ஆச்சியே என்று சரிந்து  உறங்கி எழும்பினா விடிய .துரைலின்கனுக்கு ஒட்டிய தலைகணி ஒன்றும் பிரச்சனை இல்லை .மாட்டி போட்டுதானே அவர் .   விடிய இருவரும் ஓட்டோ ஒன்றில் எம்பசி நோக்கி .அங்கு நேர்காணல் ஒரு தமிழ் அம்மா . ""ஆச்சி என் போறியள் வெளிநாடு ?? அது அம்மா என்ரை எட்டு பிள்ளையளும் உங்கினை எதோ அசுரோப்பாவோ அந்த நாடுகளிலை. நானும் பின்னை நான் பெத்த பிள்ளையளையும் /பேர பிள்ளையளையும் பாத்து கொண்டு வரலாம் எண்டுதான் வெளிக்கிடுகிரன்.அது சரி ஆச்சி .ஆனால் சில ஆச்சிமார் உப்பிடி சொல்லித்தான் போவினம் .ஆனால் திரும்பி  வரமாட்டினம் .அதாலை இப்ப இஞ்சை புது சட்டம் நீங்கள் திரும்பி வரவேணும் என்பதற்காக ஒரு பெறுமதியான உறுதி ஒன்று தரவேணும் .ஐயோ அம்மா என்ரை அவர் சிங்கப்பூரிலை உழைச்சு கட்டின பெரிய வீட்டோடை பதின்றண்டரை பரப்பு காணியோடை அங்கினை அம்மன் கோயில் வடக்கு பக்கமாய் .அதை தரட்டே பிணைக்கு ? சரிஅப்ப அதோடை நாளை இண்டைக்கு வாருங்கோ .     மீண்டும் ஓட்டோ லொச்சை நோக்கி .எடே துரைலின்கா துறப்பை பிடி .நீ ஊருக்கு போய் பெரிய வீட்டு அறையை துற .இது பெட்டக துறப்பு .அதை துறந்தால் .இடபக்க மூலையிலை கட்டு கட்டாய் உறுதியல் கிடக்கும் .முகப்பிலை மஞ்சள் பூசி கிடக்கும் .அதுதான் வீடு வளவு உறுதி .எடுத்துகொண்டு ஓடி வாடா என்ரை ராசாவே .நான் நீ வருமட்டும் எதோ சமாளிக்கிறன் இஞ்சை ..... பயணம் தொடரும்   பம்பல்Kமனோ - கலட்டி.         பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா - பம்பல்Kமனோ.

மேலும் படிக்கவும் 9 மறுமொழிகள் சுதர்சன் 25-06-2014

" கிறிஸ்து என்ன ஆட்டுக்கிடாயோ ! ? ! "

" கிறிஸ்து என்ன ஆட்டுக்கிடாயோ ! ? ! " ஆதி காலத்திலே கோவில்களில மக்கள் தங்கள் பாவ கர்ம வினைகள் நீங்க மிருகங்களை இரத்தப்பலி கொடுக்க வேண்டும் என இறைவன் தண்டனை இட்டார். உணர்வற்ற சனங்களோ பாவச்செயலில் இருந்து மனம் திரும்பவில்லை. இரத்தப்பலி செலுத்துவதிலே களிகூர்ந்தார்கள். பெரியவெள்ளி  மனிதரின் உணர்வற்ற பாவத்தின் சம்பளம் நரகம். .  பரமனின் ஆத்மாக்களான பரமாத்மாக்களை [மனிதரை] தெய்வம் காப்பாற்ற முயற்ச்சித்தார் .மிருகங்களை பலியிடுவதை நிறுத்தி,, இறைவன் தன்னோட இருந்த நேசமகனை [கிறிஸ்து] பரமாத்மாக்களின் பாவவினை நீக்கும் பலி ஆடாக பூமியில அவரால அனுப்பப்பட்டார். கிறிஸ்து பலியான நாளை புனிதவெள்ளி, பெரீயவெள்ளி என இன்றும் நினைவு செய்கிறார்கள்.  தம்மை தந்து என்னை மீட்ட தாயுமானவரே இயேசுகிறிஸ்து உலகமெல்லாம் உணரந்து அவரை வணங்குகிறார்கள். கிறிஸ்து ஆடாக அடிக்கப்பட்ட பின்னர் மிருகப்பலி செலுத்தல் தேவையற்றதொன்றாக மாறிவிட்டது. கிறிஸ்துவை சரண்டைந்தவர்களுக்கு மட்டுமே அவரின் இரத்தத்தால பாவமன்னிப்பை பெறுகிறார்கள். பாவபழக்கவழக்கங்களிலிருந்து வெளியே வருவது அவர்களுக்கு இலேசான காரியம். திருந்தா பாவியை திருத்தி நடத்திட இயேசுகிறிஸ்து வல்லவர் கிறிஸ்து பூமியில வாழ்ந்த நாட்களிலே அவரை தேவகுமாரனாக நம்பினவர்களே அவரின் மகத்துவங்களை உணந்தார்கள். நம்பாதவர்களால் அவரின் மகத்துவங்களை உணரமுடியாமல் கிறிஸ்தவர்களை எதிர்த்தார்கள். அன்று தொட்டு இந்நாட்கள் வரை இந்த நிலை இருந்து கொண்டுதான் வருகிறது. வெட்டவெட்ட தளிர்விட்டு செழிப்பாக பெருகிக்கொண்டே போகிறார்கள்.  பூமி எவ்வாறு உருவானது என்பதை பற்றி ஆராட்சி செய்கிறவர்கள் வேதாகமத்தில ஆதியாகமத்தில அழகாக சொல்லப்பட்டது போல ;வெளிப்படுத்தல்; அத்தியாயத்தில அதன் அழிவு எப்படி இருக்கும் என்பதை மிக விளக்கமாக சொல்லப்பட்டிருக்கு. மனித அறிவியலின் முதிர்ச்சியானது தன் கையால தனக்கே கேடு உண்டாக்கி அழிவான். [666] www இன்ரர்நெற் நல்லது நல்லது போல வந்து உலகத்தை அழிக்குமாம். சிப் மனித உடலில பொருத்தப்படும் என்பதை ஆண்டவர் அந்த நாட்களிலே சொன்னார் , அது உலகத்தின் அழிவு காலத்துக்கான அடையாளம் என சொன்னார்.  பாம்பை பற்றி கிறிஸ்து சொன்னவைகள் நடந்துகொண்டே இருக்கிறது. நிலத்துக்கு கீழ தான் பாதாளம் இருக்கிறது. வானத்திற்கு ஏற முடியாது. மண்ணிலே அதற்கு அற்புதங்கள் செய்ய முடியும். மனிதரை தன்னோட நிலத்துக்கு கீழ சேர்க்க *பாம்பும்*, , மனிதனை விண்ணுலகில(பரலோகம்) சேர்க்க *கிறிஸ்துவும்* மனிதர்கள் மத்தியிலே கிரியைகள் செய்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து பலிஆடாக பலியானார், இறைமகனாக 3டாம் நாளிலே உயித்தெழுந்தார். உலக சரித்திரம் 2டாகப்பிரிந்தது. அவர் கல்லறை இன்றும் வெறுமையாக கிடக்குது. ஒன்றே குலம், ஒருவரே தேவன். அவரே உலகமெல்லாம் உணர்ந்து ஆராதிக்கிறார்கள். உலகமெல்லாம் எல்லா மொழியிலும் மொழி பெயர்க்கபட்டு வாசிக்கப்படுகிறது கிறிஸ்தவ வேதாகமம்ஃஃஃஃ. இன்ரர் நெற்றில வருகிற செய்திகளில் கிறிஸ்தவ செய்திகளே அதிகமாக இருக்காம். காரணம் நாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம். எதிரிகளால வெட்ட வெட்ட தேவனதன்பு பெருகிக்கொண்டே பாய்கிறது. . இறைவா!!! நீர் அல்லா தெய்வமில்லை, எனது நெஞ்சே நீர் வாழும் இல்லம். அன்பை பெருக்கி என்னுயிரை காக்க வந்த இன்பப்பெருக்கே,  என்னுயுரான தேவா போற்றி போற்றி. உம்மையே தந்து,  என்னை தடுத்தாட்கொண்ட உம் அன்புக்கு,- நான், என்ன தர கருணாமூத்தியே போற்றி போற்றி, இயேசுகிறிஸ்துவுக்கு நமஸ்காரமே,்பவுல்

மேலும் படிக்கவும் 12 மறுமொழிகள் பண் த பாலா 17-04-2014

படிப்போ படிப்பு - பம்பல்Kமனோ.

தம்பிமுத்தர் வவநியாவிலை கூளான்குல மகா வித்தியாலயத்திலை அதிபர் .மாதம் ஒருமுறை லீவிலை போவார் .போகும் போது வெறும் கையுடன் போகார் .பிள்ளைகள் பாடசாலை தோட்டத்தில் விளைவித்த மரக்கறி வகையறாக்கள் பழுத்து பிடுங்கி காய வைத்த செத்தல் முளகாய் எல்லாம் ஒரு உரப்பை நிறைய .     கடைசி லீவில் பெரிய ஒரு சிக்கல் .அவரின் நாடுவான் தாயிடம் காசு வாங்கி எதோ எதோ படிக்க எண்டு சங்கானை சித்தன்கேணி மானிப்பாய் பக்கம் போய் வாறார். தம்மூத்தருக்கு அவனில்லை சாடையாய் டவுட்டு .உவன் எங்கை போறான் எண்டு பாக்க ஒரு FOLLOW அப் குடுத்து ஆள் மாட்டுபட்டு போனார் . இஞ்சை வா நான் பெத்த நடுவானே .நேத்து பின்னேரம் நீ எங்கை போனனி    வேறை எங்க போறது மானிப்பாய்க்கு கொம்பியூட்டர் HARD WARE COURSE CLASS  உக்கு தான் போனனான் .அப்ப சங்கானை மனிமஹால் தியெட்டருக்குல்லை ஒரு பெட்டையொடை நுளைஞ்சியாம் .அங்கை என்ன கொம்பியூட்டர்   SOFT WARE COURSE ஏ படிப்பிக்கினம் .நாடுவான் சரியான சுழியன் .மாட்டு பட்டு போனான் எண்டு தெரிஞ்சதும் கதையை திசை திருப்பும் நோக்கில் .அப்பு நீங்கள் அதிபர் அல்லே .கணக்கு சேர் ஒரு கணக்கு தந்தவர் எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்லை ஒருக்காய் சொல்லி தாணை என்ரை அப்பு எண்டு கேக்க சொல்லடா சொல்லு என்ன கணக்கேண்டு .     அதனை மழை வீழ்ச்சியை அளக்கும் பொருட்டு வட்ட வடிவான ஒரு கொள்கலனில்  34 c.m இல் சேகரிக்க பட்ட குவளையில் எத்தனை m.l  நீர் உள்ளது எண்டு கணிக்கட்டாம்  குவளையின் விட்டம் 55 m.l  ஆம் .அதை ரண்டாலை பிரிச்சால் ஆரை வரும் .பிறகு  பை ஆர் வர்க்க வாய் பாட்டை use பண்ணினால் பரப்பளவை காணலாம் .அதுக்கு பிறகு என்ன செய்யவேணும் என்ரை அப்பு .அதுதானடா எனக்கும் தெரியாது .நாங்கள் படிச்ச கணக்கு பாடத்திலை உந்த பையல்  Bag உகல்  ஆரைகள் வட்டங்கள் விட்டங்கள் விண்ணானங்கள் ஒண்டும் இல்லை  நேரமும் தூரமும் / நேரமும் வேலையும் / வட்டி கணக்கு --தொடர் வட்டி கூட்டு வட்டி அதுகள்தான  நாங்கள் படிச்ச கணக்குகள் .அதிலை ஏதும் கேள் சொல்லித்தாறன் .     அது சரி நான் கேட்ட கேள்விக்கு மறுமொழி என்ன ? நேத்து எங்கை போனனி  அது அப்பு வேறை ஆரோ போல .வேறை ஒருத்தரும் இல்லையடா நீதான் அது .கண் கண்ட சாட்சி இருக்குது .அதாரணை அப்பு கண்ணாலை கண்டவை .அது வேறை ஒருத்தரும் இல்லையடா உன்னை பெத்த இந்த கொப்பனடா என்ரை மேனே . ஓஹோ அப்ப இஞ்சை வீட்டிலை எல்லாமே அப்புதான் .விசாரிக்கிற நீதவானும் நீரே .கண்ணால் கண்ட சாட்சியும் நீரே வழக்காளியும் நீரே .நான் எதிரி கூண்டில் .ஏனெ ஆச்சி இஞ்சை வாணை ஒருக்காய் .இஞ்சை அப்புவின்றை அரிகண்டம் தாங்கேலாமல் கிடக்குதனை .என்ன என்ன இஞ்சை அமளி .இஞ்சை பாரன்றி உன்றை செல்லத்தை நேத்து உவன் கிளாசுக்கு போறதெண்டு பெட்டை ஒண்டோட படம் பாக்க போனவண்டி .எல்லாம் நீ குடுக்கிற செல்லம் தானடி .எடை அப்பிடியே சங்கதி நான் நினைச்சன் வேறை ஏதும் ஏடா கூடமாய் நடந்து போச்சுது எண்டல்லே .வாடா என்ரை குஞ்சு உம்மா உம்மா ஒரு நாளைக்கு எண்டாலும் நீதான்றா என்ரை செல்ல குஞ்சு .உன்றை கொப்பரை  நான் கட்டி இப்ப 27 ஏ முக்கா வரியங்கள் ஆகுது .ஒருநாள் பாத்து ஒரு படத்துக்கு கூட்டி கொண்டு போய் இருப்பாரோ எண்டு சொல்ல சொல்லு.வாடா என்ரை குஞ்சு என்னும் ஒருக்காய் கொஞ்ச வேணும் .அப்ப ஆரடா குஞ்சு படத்துக்கு திக்கற்று எடுத்தது  பெட்டை தான் எடுத்திருப்பாள் என்ன  உன்னட்டை ஏது காசு  எடியே மோடு .இந்த காலத்திலை பெட்டையள் எங்கயடி திக்கற்று எடுக்கிராலவை அவளவை எங்களிட்டை உள்ளதெல்லாம் வறுகி போட்டள்ளே விடுகிராலவை .     இந்த கோசு நான் லீவிலை வரேக்குல்லை வவனியா வசு  இஸ்டாண்டிலை எங்கடை பல்ளிகுடத்திலை படிப்பிக்கிற அந்த கோண்டாவில் பெட்டை அவள் கோன்ஸ்வரி சொன்னாள் சேர் வசுவுக்கு நேரம் கிடக்குது வாருங்கோவன் விஜி இன்றை படம் ஒண்டு பாப்போம் எண்டு சொல்ல நான் தான் திக்கற்று எடுத்தனான் எண்டு உளறி போட்டார் தம்மூத்தர் மூச்சு விடாமல் .இதை கேட்ட மனிசிக்காறி பத்திர காளி வேஷம் கொண்டு  **எடே படு பாவி நான் ஒருத்தி இஞ்சை குத்து கல்லு மாதிரி இருக்க தக்கதாய் இளம் வாத்தி பெட்டையளை படத்துக்கே கூட்டி கொண்டு போறாய் .பொறு வாறன் உன்னை என்ன செய்யிறன் பார் எண்டு கொண்டு தொண்டை குழியை பிடிச்சு அமத்த நடுவான் போய் ஆச்சி அவசர படாதையனை பிறகு ஆள் முடிஞ்சால் உனக்கு பென்சனும் இல்லை பிறகு கொலை குற்றத்துக்காக நீ கம்பி எண்ண வேண்டி வருமனை .தொண்டை குழியை விட்டு போட்டு இந்தா இந்த உலக்கையாலை குடு .விழுகுது இப்ப உலக்கை அடி .     நாடுவான் இப்பிடி சொன்னான் .என்ரை வழக்கு விசாரிக்க வந்த என்ரை அப்பு / அவர் அதிபர் வேண்டி கட்டுகிறார் ஆச்சியிட்டை  நான் கணக்கு செய்ய போறன்  பை ஆர் வர்க்கம் வட்டத்தின் பரப்பளவு .மிச்சத்தை மனோகரன் மாமா விட்டை போய் கேப்போம் .   பம்பல்Kமனோ - கலட்டி.

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 03-04-2014

பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா - பம்பல்Kமனோ.

பாக்கியம் ஆச்சி ,ஆச்சி ஆக முதல் பாக்கிய அக்காவாக இருந்த காலம் அயல்வீட்டு அமுதர் ஓடை லவ்வாகி கலியாணம் கட்டி கொஞ்ச நாளில் அமுதர் சிங்கப்பூர் போய் விட்டார் தொழில் தேடி .வரியம் ஒருதடவை வருவார் விடுமுறையில் .அவர் வந்தால் ஊரே களை கட்டி விடும் .பாட்டு பெட்டி என்ன .கோழி அடி என்ன .வெளிநாட்டு உள்நாட்டு போத்திலுகள் உருளும் .வீடு வளவு வாய்க்கால் எல்லாம் ஒரே சன கூட்டம் ஏதோ கோயில் பூங்காவான திருவிழா மாதிரி .வரியம் ஒருமுறை வந்து அடுக்கடுக்காக எட்டு பிள்ளையளை பெத்து போட்டா பாக்கியம் அக்கா .   இப்பதான் பாக்கியின் சோதனை காலம் தொடங்க போகுது ஊழ்வினை பயனோ இல்லை எதுவோ யாரறிவார் .அமுதரிடம் இருந்து ஒரு கடதாசியும் (லெட்டெர் ) இல்லை .ஒன்றும் இல்லை .காலபோக்கில் அப்போ நடந்த இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அகப்பட்டு இறந்து போனார் போல என்று நினைத்து கட்டி பிடிச்சு ஒப்பாரி வைச்சு அழுது குளறி காச்சி படைச்சு மனதை தேற்றி கொண்டா பாக்கி .     எட்டு பிள்ளைகளில் ஐஞ்சு பேர் பெண் பிள்ளைகள் .மூன்று ஆண் பிள்ளைகள் .அநியாயம் சொல்லப்படாது பாக்கி ஊரில் ஐஞ்சு பெண் பிள்ளைகளுக்கும் அமுதர் அனுப்பின காசை சோக்கு பண்ணி சிலவளியாமல் ஐஞ்சு காணி துண்டுகள் வாங்கி விட்டிருந்தா .பிட்காலத்துக்கு சீதனம் குடுத்து அல்லே பெண் பிள்ளையளை கரை சேர்க்கலாம் என்ற தூர நோக்கு .பாக்கியின் கதை இவ்வாறு நகர்ந்து போகின்றது .உள்ளதை கொண்டு பிள்ளைகளை படிக்க வைச்சு எட்டு பேரும் நட்ட வாழை மரங்கள் போல் வளர்ந்து விட்டார்கள் .பாக்கி தன் மன வலிமை /உறுதியை பிரயோகித்து எல்லா பிள்ளைகளையும் கரை சேர்த்து போட்டா .     மூத்தவன் முருகதாசன் சீமெந்து பட்டேரியிலை வேலை .அவன் அங்கினை தெல்லிபலை பக்கத்து ஒரு பிள்ளை அவனோடை வேலை செய்யிற ஒரு பிள்ளையை லவ்வி கட்டி போட்டான் .நாடுவான் மோகன தாஸ் ஊரிலையே தாய் பேசின செல்லையாவிற்றை இளையவளை கட்டி போட்டான் .கடை குட்டி செல்வராசு அவன் மின்சார சபையிலை வேலை எண்டதாலை நல்ல கொளுத்த சீதனத்தோடை வீடு வளவோடை சிங்கப்பூர் சின்னையாவின்றை நடுவாளை கட்டி சுமூத் ஆக நகர்கிறது .பெண் பிள்ளையளையும் தான் வாங்கின காணியளை ஒரு பிள்ளைக்கும் வஞ்சகம் செய்யாமல் ஒருவருக்கும் கூட குறைய குடுக்காமல் எல்லாருக்கும் சமமாக பங்கிட்டு எப்படி ஒரு தாயானவள் தான் சமைத்த உணவை பங்கிட்டு கொடுப்பது போல் பகிர்ந்து கொடுத்து எல்லா பெண் பிள்ளைகளையும் கரை சேர்த்து போட்டா .     இனித்தான் பாக்கியின் வாழ்வில் இடி விழ போகுது .நாடு அல்லோல கல்லோல படுகுது .ஒரு புறா கூட்டில் வாழ்ந்த தாய் புறா + பிள்ளை புறா எல்லாம் சிதறி ஓட போகின்றது .கட்டி காத்து வளர்த்த பிள்ளை புறாக்கள் இப்போ சிறகு விரித்து பறந்து பிளேன் ஏறி வெளி நாடுகள் பறக்க போகின்றன .ஒன்றன் பின் ஒன்றாக எல்லா புறாக்களும் டென்மார்க் /நெதர்லாந்து /சுவிட்சர்லாந்து /கனடா /அவுஸ்திரேலியா எங்கும் பறந்து போய் இப்போ பாக்கி ஆச்சி தனிய .அவவுக்கு துணை அயல் வீடு மரகதமும் தூரத்து உறவு காறன் ஆன துரைலிங்கன் மட்டுமே .       இவ்வாறு கதை நகரும் போது ஒரு நாள் உள்ளூர் கொம்மிநிகேசன் சXXXXம் வீட்டில் இருந்து ஒரு அழைப்பு பாக்காச்சிக்கு .மூத்தவள் வயரில் கதைக்கிறா **ஏனெ ஆச்சி உன்னை பாக்க எனக்கும் உன்றை மருமொனுக்கும் உன்றை பேர பிள்ளையளுக்கும் சரியான ஆசையாய் கிடக்குதனை .பெரிய தண்ணி விடாய் மாதிரி .நாங்கள் பொன்சர் பண்ணி கூப்பிடுகிறோம் ஒருக்காய் வாவணனை .ஓஹோ அப்பிடியே சங்கதி .நான் பெத்த எட்டு பேரும் என்னை இஞ்சை தனியாய் தவிக்க விட்டு நீங்கள் எல்லாம் ஓடி ஒளிஞ்சு இப்பவே உங்களுக்கு தாய் பாசம் பொங்கி வழியுது .பொறடி நான் பெறா என்ரை அயல் வீட்டு மரகத  பெட்டைக்கு பிசுங்கான் குத்தி போட்டுதாம் அவள்தான் எனக்கு எல்லாம் அதை பாத்து விட்டு வந்து உனக்கு மறுமொழி சொல்லுகிறன்     தொடர்ச்சி ....... இரண்டாவது தொலை பேசி அழைப்பு மூத்த மகளிடம் இருந்து  ஆச்சி நீ வரமாட்டியே ? பெரிய எளுப்பம் விடாதையனை .நாங்களும் ஏலா கட்டத்திலை தான் உன்னை விட்டு போட்டு வந்தனாங்கள் இந்த வெள்ளை காற நாடுகளுக்கு .எனக்கு தெரியுமனை எங்கடை வெளிப்புலத்து கீரை மர கறி யலின்ட்ரை ருசி .நாங்கள் இஞ்சை காருகளிலை போய் சுப்பர் மார்க்கேட்டுகளிலை வெறும் பச்சத்தண்ணி மரக்கறியல் வாங்கி அடையிறோம் அணை என்ரை ஆச்சியே கோவியாதை அணை ஆச்சி ஒருக்காய் வா இந்த பக்கம் .உன்னை பாக்க நான் உன்றை பேர பிள்ளையள் ஏன் உன்றை மருமேனும் அடிக்கடி என்னை கேப்பார் கொம்மாவை ஒருக்காய் கூபிடுமன் .எனக்கும் உன்னை பெத்த கோச்சி என்ரை மாமியை பாக்க ஆசையாய் கிடக்குது என்று அடிக்கடி சொல்லுவார் அவர் . எடியே பிள்ளை அப்பிடியே கதை .எனக்கு உங்களோடை சரியான கோவம் எண்டாலும் --இல்லாட்டில் எட்டு பிள்ளை பெத்த எனை தனியாக தவிக்க விட்டு எட்டு திசை எங்கும் ஓடின உங்களோடை கோவம் இருந்தாலும் நான் பத்து மாதம் சுமந்து பெத்த பிள்ளையள் அல்லேடி நீங்கள் .எனக்கும் என்ரை பேர குழந்தையலை தூக்கி கொஞ்சவல்லெ வேணும் .வாரண்டி வாறன் .என்னடி செய்யவேணும் ? ஆச்சி ஒண்டுக்கும் யோசியாதேங்கோ ஐரோப்ப முழுதும்  நீ பெத்த பிள்ளையள் .ஒவ்வொரு நாட்டுக்கும் நான் உன்னை அனுப்பி எடுப்பன் .என்னடி அசுரோப்போ எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்லை அடி என்ன செய்ய போறாய் என்னை .உன்னை ஒண்டும் நான் செய்யேல்லை உன்னை இஞ்சை கூப்பிட போறன் பாஸ் போர்ட் ஐ எடு ......   மூன்று மாதம் கழித்து ஒரு தொலை பேசி அழைப்பு . ஆச்சி பாஸ் போர்ட் எடுத்து போட்டியே ? அதை ஏனடி  கேள்ப்பான் அந்த தாலியகட்டுவார் ஐலென்ட்ரி காட்டும் பிறப்பு சேட்டிவிக்கற்றும் கேட்டாங்கள் என்னட்டை .எங்கை  ஏது பிறப்பு செட்டிவிக்கற்று ? ஏதோ ஆச்சி அபப சொன்னவா தான் எடியே பாக்கி நீ பிறந்தது அண்டைக்கு அம்மன் கோயில் சிவராத்திரி கூத்து நடந்த நாள் எண்டு ....... ஆச்சி போங்கோ மனோகரன் எண்டு ஒருத்தர் எங்கடை ஊரான் .அவர் உதெல்லாம் செய்து தருவார் .எடியே மனோஹரனே .அந்த பொடி எங்கடை சிவக்கொழுந்து ஆச்சியிற்றை கடை குட்டி .சில நேரம் துள்ளுவான் தான் ஆனால் எல்லாம் செய்து தருவான் .     இப்போ பாஸ் போர்ட் எடுத்தாச்சு பாக்கி ஆச்சிக்கு .பாக்கி ஆச்சி வெளிநாடு போகும் புதினம் ஊர் முழுக்க காட்டு தீ போல் பரவி வருகினம் படை எடுத்து கொண்டு இல்லாத பொல்லாத உறவுகள் கொண்டாடி பல பேர்கள் .அக்கா வெளிநாடு போக போறியலாம்.? ஓமடி போகத்தான் போறன் அதுக்கு என்ன உனக்கு வைத்தேரிச்சலே ? இல்லை அக்கா என்ரை மூத்தவளும் அங்கினை நீங்க போற வெளிநாட்டிலை தான் .அவள் இப்ப மூண்டு மாதம் எண்டு கேள்வி இந்த பாசலை கொண்டு போய் குடுங்கோ  இது போல பல சனங்கள் பாக்காச்சி வீட்டு முத்தத்தில்  ஒருத்தி ஏதோ சாக்கு படகம் மாதிரி ஒரு பாசல் .அது அவவின் பேரன் மிக்சிகனுக்கு டெனிம் களிசான் .இன்னொரு பாட்டி பொரி விளான்க்காய்.அடுத்த ஒரு பாட்டி இடியப்ப உரல் .இதை கொண்டு போய் கொலண்டிளை குடுங்கோ அவன் சுதர்சன் பொடி கொண்டு போய் குடுப்பான் எங்கடை மூத்தவளிட்டை இதை கண்ட பாக்கிய ஆச்சிக்கு கோவம் பொத்தி கொண்டு வந்து எடியே நான் வருத்தம் நோய் துன்ப பட்டு இருக்கேக்குள்ளை எனை எட்டியும் பாராத நீங்கள் இப்ப வந்து விட்டியல் என்னட்டை ஏத்தி விட .நான் என்ன லொறியிலை ஏறி கொழும்புக்கே போறன் .நான் பிளைற்றிலை பறந்து போறன் என்ரை பிள்ளையளை பார்க்க அங்கை 20 கிலோ மட்டும் தான் விடுவாங்கள் எண்டு நான் கேள்விபடனான் அந்த காலத்திலை கனடா  பக்கம் போனவைக்கு ஆளுக்கு 60 கிலோ விட்டவை .எங்கடை சனங்கள் செய்த திருகு தாளங்கலாலை அதுகும் இப்ப 22 குலோவுக்கு குறைச்சு போட்டாங்கள் . பாக்கி ஆச்சியின் பயணம் முடியவில்லை .     நான் இதொண்டும் எழுதி அடிக்கவில்லை .நீண்ட காலம்மாக என்மனதில் எழும் எண்ணங்கள் .இன்று ஏதோ தற்செயலாக எனக்கு கூகுளே மொழி பெயர்ப்பு கிடைத்தது மிகுதி இன்னும் எவ்வளவோ உண்டு மெல்ல மெல்ல வருவேன் உங்களுடன் கூடி குலாவ இது தொடரும் தொடர் கதை போல பாக்கிய ஆச்சி வெளி நாடு போய் அங்கு நடந்த கதை மீண்டும் தொடரும்.   பம்பல்Kமனோ - கலட்டி.

மேலும் படிக்கவும் 19 மறுமொழிகள் சுதர்சன் 21-03-2014

நந்தா நீ என் நிலா - சிரித்திரன்.

அண்மையில் Super Singer இல் பார்த்த ஒரு பாடல் உண்மையிலேயே மெய்மறக்க செய்து இதை பற்றி பகிர வேண்டும் என்று ஆர்வத்தை கிளறிவிட்டது. ஒரு பிசுறுகூட இல்லாமல் சரத் சந்தோஷ் என்னும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட அந்த பொடியன் பாடியபொழுது ஊன் ஆணியடித்ததுபோல் இருக்க உள்ளொளியை மெய்மறக்க வைத்து என்னை அப்படியே தூக்கிக்கொண்டுபோய் எழுபது எண்பதுகளில் ஊரில் விட்டு விட்டது இந்த பாடல். அண்மையில் காலமான V .தக்ஷிணாமூர்த்தி என்னும் இசைமேதையின் இசையில் கர்நாடக சங்கீத ராகத்தை அடிப்படையாக கொண்ட அருமையான காதல் மெலடி பாடல்.   இந்த பாடல் பற்றி பாடும் நிலா பாலுவில் வந்த ஒரு கட்டுரையை வாசிக்க முதல் பாட்டை பார்ப்போம்,         நந்தா நீ என் நிலா நிலா     நந்தா என் நிலா (1977) என்ற படத்தை நான் பார்த்ததில்லை. ஆனாலும் பாலுவின் இந்தப் பாடலை எவ்வளவோ முறை அந்தக் காலகட்டத்தில் கேட்டதுண்டு. படத்தில் விஜயகுமாரும் சுமித்ராவும் நடித்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.     வரிகளுக்கிடையே இடைவெளியேயில்லாது தொடர்ந்து பாடுவதைப் போன்ற ஒரு பிரமையைத் தந்த மெட்டு, இசை! மதுவந்தி ராகத்தில் அமைந்த பாடலாம் இது. (ஏற்கனவே மதுவந்தி ராகத்தில் அமைந்த பாடல்களாக "இலக்கணம் மாறுதோ"வையும் "இளஞ்சோலை பூத்ததா"வையும் பதிவுகள் முன்பு வந்தன!).     இசை மலையாளப் படவுலகில் பல வருடங்கள் கோலோச்சிய - "ஸ்வாமி" என்று தென்னிந்திய திரையுலகினரால் அழைக்கப்படும் - திரு.தக்ஷிணாமூர்த்தி அவர்கள். இவரைப் பற்றி அதிகம் நாம் அறிந்திருக்கவில்லை!. "நல்ல மனம் வாழ்க" பாடல் நினைவுக்கு வருகிறதா?   பாலு இந்தப் பாடலை அருமையாகப் பாடியிருக்கிறார். அவரது சிறந்த தனிப்பாடல்களில் இப்பாடலுக்கும் கட்டாயம் ஒரு இடம் உண்டு. கேட்கக் கேட்க கேட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் பாடல். இரவு நித்திரைக்கு முன்பும் தலைக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது - நீண்டநேரம்.     அதிக முஸ்தீபுகளின்றிச் சட்டென்று துவங்குகிறது பாடல். இலக்கண வரையறைகளுக்குள் அடங்காத புதுக்கவிதையைப் போல மெட்டு அனுமானிக்க முடியாமல் மாறிக்கொண்டே இருக்கிறது. பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை.   "நாணம் ஏனோ வா - விழி  மீனாடும் விழி மொழி  தேனாடும் மொழி குழல்  பூவாடும் குழல் எழில்  நீயாடும் எழில்"   என்ற வரிகளில் வார்த்தைகளால் விளையாடியிருக்கிறார் பாடலாசிரியர்.     இவ்வளவு நீளமான பல்லவியுடன் வேறு பாடல்கள் கேட்டதாக நினைவில்லை! சரணம் நான்கே வரிகளில் அமைந்திருக்கிறது.   நந்தா என் நிலா ஆஆஆஆஆ நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா - விழி மீனாடும் விழி மொழி தேனாடும் மொழி குழல் பூவாடும் குழல் எழில் நீயாடும் எழில் மின்னி வரும் சிலையில் மோகனக் கலையே வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே ஆடி நிற்கும் தீபம் நீயே பேசுகின்ற வீணை நீயே கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா   நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா   ஆயிரம் மின்னல் ஓருருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே அருந்ததி போலே பிறந்து வந்தாயே   நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா   பாகமம் கண்டு சீதையும் இன்று ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ மேகத்திலாடும் ஊர்வசி எந்தன் சோகத்திலாட இறங்கி வந்தாளோ   நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா   சரி இனி பாலுவின் குரலில் படப்பாடலை பார்ப்போம்,       சரி கட்டுரையில் வந்த இந்தப்பாட்டையும் பாருங்கள்,           சிரித்திரன் - கனடா.    

மேலும் படிக்கவும் 3 மறுமொழிகள் சுதர்சன் 07-02-2014

மாபெரும் அங்குரார்ப்பன வைபவம் - பம்பல்Kமனோ.

அனைவருக்கும்  ஆன பகிரங்க அழைப்பு    விடயம் :: பண் கொம்மின் வாசகர் வட்டத்தில் ஒரு ஒரு **கருத்து கந்தசாமிகளின் கழகம் நிறுவுதல்   இடம் : புதிதாக புனர் நிர்மாணிக்க பட்ட எம்மூர் வாசிக்க சாலை    நோக்கம் ::வாசகர்கள் படைப்பாளிகள் மற்றும் பாண பேர்களில் வந்து கருத்துக்கள் கூறும் முதுகு எலும்பு அட்ட்றோர் பின் சொந்த பேர்களில் வந்து கருத்து கூறும் கருத்து கந்த சாமி மார் எல்லோரையும் ஒன்றிணைத்து ஒரு ஒற்றுமையான ஒழுங்கமைக்க பட்ட நிறுவனமாக இயன்கல். ஒற்றுமையே பலம்  ** unity is strenth **   போசகர் ; அது உங்கினை தன்றை சொந்த அலுவல்களையும் விட்டு  போட்டு வந்து இஞ்சினை கிறுக்கி தள்ளும் அவர் அந்த மனோகரன்  அண்ணை.அவருக்கு அந்த தகமை இருக்குது .அவர் பாவம் நல்ல மனிசன்    தலைவர் :: தங்கராசு பாலகுமாரன் (அவரல்லெ எங்கடை இணையத்தின் பொஸ்.   செயலாளர் :சூர சுதர்சன் .பல பாஷைகள் அறிந்தவன் .உலகம் எல்லாம் சுத்தி வருபவன்    பொருலாலன் : சிரித்திருக்கும் சிரித்திரன் .தானும் சிரித்து அடுத்தவரயையும் சிரிக்க வைத்து சிந்திக்க தூண்டும் அவன் பொருளாளர் பதவிக்கு மிக பொருத்தமானவன் .உங்கினை கோயில் கட்ட வெளிநாடு பக்தர்கள் அனுப்பும் காசை விழுங்கி தன சீவியம்  போக்கும் ஆளில்லை அவன்       சர்வ தேச தொடர்பாடல் :: சச்சி சஜீதன் .அவர் அல்லே இணைய வடிவமைப்பு எல்லாம் கொம்பிலீட்டரலை கொம்பிலீட்டர் ஆய் செய்யிற எங்கடை பொடி ஆறு பேர் கள் கொண்ட நிறைவேற்று (குழு தெரிவி செய்ய படும்        ggogle kulappam pannukuthu naan adippathai thamilukku maaththa marukkuthu  ithu adikkadi enakku nadakkum aniyaayam       பம்பல்Kமனோ - கலட்டி.  

மேலும் படிக்கவும் 240 மறுமொழிகள் சுதர்சன் 29-01-2014

மாதங்களில் அவர் மார்கழி - பவுல்.

என்னை யார் என்று எண்ணியெண்ணி நீ பாக்கிறாய்?   என்னை யார் என்று சனங்கள் பாக்கிறார்கள்? என கிறிஸ்து தன் சீடர்களிடம் கேட்டார்.   அவர் பூமிக்கு வந்து 2000 ஆண்டுகளுக்கு மேல ..இன்னும் இந்த உலகத்தில பலர் அவரை  ஒரு மகா-ஆத்மா என நினைக்கிறார்கள்.. அவர் தேவகுமாரன். .    மனிதனையும் இறைவனையும் பிரிக்கிற பாவச்சுவரை அழிக்கவே பூமிக்கு வந்தார். மாதங்களில் சிறந்தது மார்களியில் உலகமே அவர் பிறப்பை கொண்டாடுவதிலே ஆர்பரிக்கிறது. மரியாள் திருமணத்திற்கான மணமகன் நிற்சயிக்கப்பட்ட ஒரு கன்னிகை. இறைபக்தி நிறைந்தவள் . அவள் முன்னிலையில தேவதூதன் தோன்றி " இறை அருள் பெற்றவளே " என்றழைத்து , "தேவ ஆவி உன்மேல உதித்து நீ கற்பவதியாவாய் , உன் மூலமாக தேவகுமாரன் உலகரட்சகர்(மீட்பர்) பிறக்கப்போகிறார்" என தேவதூதன் சொன்னவைகளுக்கு அவள் தன்னை ஒப்புக்கொடுத்து கற்பவதியானாள்.. உலகசனமோ அவளை நடத்தை கெட்டவளாக நடத்தியது . நியமிக்கப்பட்ட கணவனோ அவளை தள்ளி விட நினைத்தான். பெற்றோரோ அவமானத்தால தலை குனிந்தனர்.{சனங்கள் அவளை கல்லெறிந்து கொல்ல பஞ்சாயத்தில முடிவெடுத்த நிலையில மரியாளோ இறைவனையே இறுக பற்றிக்கொண்டாள். நடந்த உண்மையை எவருமே நம்பவில்லை.}    தேவதூதன் அவள் குடும்பத்தவர்களுடன் பேசியபடியால் குடும்பத்தவர்கள் அவளை சேத்துக்கொண்டு கணவன் அவளை திருமணஞ்செய்து , தேவகுமாரன் பிறக்குமட்டும் அவளை தொடாமலிருந்து பராமரித்தாராம். கிறிஸ்து பிறந்த பின்னர் மரியாள் தன் கணவனுக்கு வாழ்க்கைபட்டு பிள்ளைகளை பெற்றாள்.   தேவன் தன் குமாரனை பூமிக்கு அனுப்பினார் என்பதை பல சனங்கள் நம்பாவிட்டாலும்.சில சனம் நம்பினார்கள் . நானே உலக இரட்சகர் என்ற வார்த்தையின் படி அவரை அறியாத சனம் உலகிலே யாருண்டு? . உங்கள் ஜீவனுக்கு நான் ஒளி தந்து [பாவ இருள் நீக்குபவர்] பரஞ்யோதியோட சேர்பேன் என்றார்.  அவர் பூமியிலே வாழ்ந்த நாட்களில் நீர்,நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் அவர் வார்த்தைக்கு கீழ்படிந்துசெயல்பட்டன.. இறைவனாக காற்றிலே பறந்து விண்ணுலகிலே மனித சரிரத்தோட வாழ்கிறார். திரும்பவும் காற்றிலே இறங்கி வந்து புதிய பூமியில் பரலோக மகிமையில் அவரை சரண்டைந்தவர்களை கை விடாமல் காப்பார்.  தான் திரும்ப வரும் காலத்திற்கான அடையாளம். பண (தாளோ சில்லறையோ) நடமாட்டம் இருக்கா. செயற்கை மனிதர்கள் உயிரூட்டப்பட்டு மனிதரிலும் அறிவு கூடியவர்களாக இருப்பார்கள். சாத்திரம் பாக்குமாம் அதனை கடவுளாக வணங்கச்செய்யுமாம். றோபோக்களின் ஆலோசனை தேவ ஞானமாக சனங்கள் நடப்பார்களாம். சனங்களின் சரீரத்தில சிப் மின் குண்டு வைக்கப்பட்டு அவர்களின் எல்லா நடத்தைகளையும் கட்டுப்பாட்டுக்க வைத்திருக்கிற காலம் வரும் , அதுவே இப்ப நாங்க இருக்கிற பூமியின் அழியும் காலம்.. இவைகள் இப்பவே நடந்து கொண்டு இருக்கு. இனி கன காலம் செல்லாது.உலகத்தில எல்லாராலும் அறியப்பட்ட புத்தகம் கிறிஸ்தவ வேதாகமமே.   பவுல் - ஐரோப்பா.

மேலும் படிக்கவும் 25 மறுமொழிகள் சுதர்சன் 16-12-2013

மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சியே - சிரித்திரன்.

கண்ணதாசனின் புத்தகங்களை வாசிக்காதவர்களுக்கும் கண்ணதாசனை பிடிக்கும் அதற்கு காரணம் எல்லோருக்கும் விளங்கும் வண்ணம் அவர் வடித்த திரைப்பட பாடல்கள். ஒவ்வொரு பாடலும் வாழ்க்கையின் ஏதோ ஒரு பகுதியை ஞாபகப்படுத்தும் சில பாடல்கள் வாழ்க்கையையே ஞாபகப்படுத்தும் அந்தவகை பாடல் ஒன்று பாலமுரளிகிருஷ்ணா, எம் எஸ் விஸ்வநாதன், கண்ணதாசன், பாலச்சந்தர் கூட்டணியில் அமைந்த நூல்வேலி திரைப்படத்தில் வந்த  “மௌனத்தில்  விளையாடும்  மனசாட்சியே”  இந்த மனச்சாட்சி என்னும் ஒன்றையோ ஒருவரையோ நாங்கள் மறக்கும் விளிம்பில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். சரி, மனச்சாட்சிக்கு ஏன் இந்த நிலை? கொஞ்சம் விலாவாரியா பாப்போம். மனித மனம் என்பது ஆழ்மனம் புறமனம் என்பதன் கூட்டு. புறமனம் தான் எங்கள் வாழ்க்கை. இதில் மனச்சாட்சி என்பது ஆழ்மனத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது பிரிவாகவோ இருக்கவேண்டும். புறமனம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும் நடுநிலையில்(பிரபஞ்சநிலை) இருந்து சரியோ தவறோ என்று சுட்டிக்காட்டும் தொழிலை கச்சிதமாக செய்வது தான் மனச்சாட்சி.  சரியோ தவறோ என்று சுட்டிக்காட்ட மட்டும்தான் செய்யுமே ஒழிய வலியுறுத்தவோ திணிக்கவோ முயலாது அது அதன் வேலையும்  இல்லை. அப்படி இருந்திருந்தால் இன்று பூலோகம் சொர்க்கலோகம். நினைவு தெரிந்த நாளிலிருந்து எனக்குள் இருவர் விவாதிப்பதை உணர்ந்துகொண்டு அதற்க்கான கால நேரத்தை ஒதுக்கி கொடுத்து நல்லது எது? கெட்டது எது? செய்யக்கூடியது எது? செய்யக்கூடாதது எது? என்னும் பக்குவத்தை புரிந்து கொண்ட காலங்கள். பக்குவத்தை புரிந்து கொண்டதால அப்ப நீ ஒரு கெட்டதும், செய்யக்கூடாததும்  புரியவில்லையோ என்று ஒரு எண்ணம் இந்த கணம் உங்கள் மனத்திரையில் தோன்றலாம் நியாயமான எண்ணம் தான். இங்குதான் புறமனம் தன் வல்லமையை காட்டும் தவறோ செய்யக்கூடாததோ என்று சுட்டிக்காட்டபட்ட ஒன்றை தனக்குத்தானே சிலபல சமாதானங்களை சொல்லி செய்துவிடும். அப்படி செய்வதால் வரும் விளைவுகளால் பாத்திக்க படுவது கூட மனச்சாட்சி தான். பாரதூரமான விளைவுகளால் கூனி குறுகிபோகும் போது அந்த உணர்வு தாக்குவது ஆழ்மனதை. அதிலிருக்கும் மனச்சாட்சிக்கும் பாதிப்பு அதனால். அதுதான் இந்த பாட்டு. சுட்டிக்காட்டப்படுபவைகள் அத்தனையையும் ஏற்றுக்கொள்ளும் புறமனம் உள்ள மனிதர்கள் இல்லை. ஏற்றுக்கொள்ளும் அளவுகள் தான் வித்தியாசப்படும். இதுதான் மனிதனின் ‘இயல்பு(personality)’ என்ன என்பதை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று. பாட்டுக்கு போகமுதல் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கோ நீங்கள் மனச்சாட்சியோடு செலவிடும் நேரம் முன்பு இருந்ததும் இப்போதுள்ளதும் ஒரே அளவு எண்டு?  What is மனச்சாட்சி? எண்டு கேட்காமல் இருக்கிற அளவுக்கு சரி? கர்நாடக இசையின் பாதிப்பு அதிகமுள்ள இசைக்கோர்வையில் பாலமுரளிகிருஷ்ணாவின் மதுரக்குரலில் கண்ணதாசனின் வரிகள் ஏதோ சொல்லவருவதுபோல் மனதுக்குள் ஊடுருவி அறிவுக்கண்களை திறக்க முயற்சிக்கும் அற்புதமான பாட்டு!!! மௌனத்தில்  விளையாடும்  மனசாட்சியே   ஆயிரம்  நினைவாகி    ஆனந்த  கனவாகி    காரியம்  தவறானால்  கண்களில்  நீராகி        ரகசிய  சுரங்கம்  நீ  நாடக  அரங்கம்  நீ    சோதனை  களமல்லவா    நெஞ்சே  துன்பத்தின்  தாயல்லவா    ஒரு  கணம்  தவறாகி    பலயுகம்  துடிப்பாயே   ஊமையின்  பரிபாஷை    கண்களில்   வடிப்பாய் நீ  (2) - மௌனத்தில்        உண்மைக்கு  ஒரு  சாட்சி   பொய்  சொல்ல  பல  சாட்சி    யாருக்கும்  நீயல்லவா    நெஞ்சே  மனிதனின்  நிழலல்லவா    ஆசையில்  கல்லாகி    அச்சத்தில்  மெழுகாகி   யார்  முகம்  பார்த்தாலும்    ஐயத்தில்  தவிப்பாய் நீ  (2) – மௌனத்தில்     நன்றி   சிரித்திரன் - கனடா.

மேலும் படிக்கவும் 13 மறுமொழிகள் சுதர்சன் 04-12-2013

**சல ரோகமும் நாமும் ** பாகம் 2

சபாஷ் சரியான தளம் ஒன்று கிடைத்துவிட்டது எனக்கு .எனது **சல ரோகமும் நாமும் ** பாகம் 1 ஐ தொடர்ந்து பாகம் 11 ஐ வெளிவிடுவதில் பல சிக்கல்கள்  கூகிள் இற்கு போனால் அது இடை நடுவில் சண்டித்தனம் காட்டி அடிச்சதெல்லாம்  ஓடி ஒளியும் .முக்கி முக்கி அடிச்சு ஈ காயித பக்கம் போனால் அங்கும் பல சிக்கல்கள்  எனவே பாகம் 2 ஐ இங்கு கருத்து பகுதியில் கவுட்டு கொட்டுகிரன்.ஆருக்கென் ஏலுமெண்டால் இதை பிரிச்சு வேறாக எடுத்து வெளிவிட்டால் பலர் பார்த்து பயன்  அடைய கூடும் என்பது என் எதிர்பார்ப்பு .சரி பின்னை கதைக்கு வருவோம்  பாகம் ஒன்றில் சலரோகம் பற்றி விரிவான எளிமையான எவரும் புரியும் படியான  விளக்கங்களை நகைச்சுவை கலந்து தந்தேன் .இங்கு பாகம் 2 இல் சலரோக நோய்  உள்ளவர்கள் எவ்வாறு நோயற்ற மற்றவர்கள் போல் ஒரு ஆரோகியமான வாழ்வை  வாழலாம் என்பது பற்றி அலசுவோம் .பல்வேறு படி முறைகள்  படி ஒன்று ...நாவடக்கம் ..என்றதும் தவறாக யோசிக்க வேண்டாம் .உந்த ஆள் என்ன சொல்ல வருகுது எங்களை நாலு சனங்கலோடை பேசி பறையவும் வேண்டாம் எண்டே சொல்ல வாறார் .அதில்லை கதை .இது வேறு .அந்த நாவில் உள்ள சுவை  அரும்புகள் (taste butt ) களின் தேவைகளை கட்டுபடுத்துங்கள் .சலரோக நோய் உள்ளவர்களுக்கு சீனியுடன் சேர்ந்த இனிப்பு வகைகளில் ஒரு அபார ஈர்ப்பு .ஒருக்காய் தின்னவேணும் போன்ற tendency ஒரு படத்திலை (பெயர் நினைவுக்கு வர மறுக்குது சம்சாரம் ஒரு மிசாரமாய் இருக்கும் ) விசுவுக்கு சலரோகம் .மனிசி காறிக்கு ஒளிச்சு மருமொளிட்டை போய் கெஞ்சுவார் கொஞ்ச பூந்தி கேட்டு  அது எல்லாம் நேரடியான குளுக்கோஸின் intake .இனி மறை முக சீனி உள்ளேடுத்தலை பார்ப்போம் .ஒரு போதும் கோதுமை மாவினால் செய்த பாண் /பணிஸ்/கேக்கு /புட்டு /இடியப்பம் /கட்லெட் /பட்டீசு தின்னாதேங்கோ .இதுதான் கதை அவை எல்லாம் சமிபாட்டின் பின் குளுக்கொசாக மாறும் காபோ ஐதறேட்டுகளே .இவை தூய்மை ஆக்க பட்ட மாவுகளினால் (refined flour ) இனால் செய்ய படுபவை .அங்கு மேலே பாருங்கோ எதோ **நார் சத்தாம் * fibre ** அங்குதான்  ரகசியம் உண்டு .தீட்டாத அரிசி /குரக்கன் /இன்னும் பல .இவை எல்லாம் சக்தி வழங்கும் காபோ ஐதரெட்டுகல் தான் .இருந்தும் அவை அந்த நார் சத்தின் காரணமாக சமிபாடடைந்து குளுக்கொசாக மாறி உங்கள் குருதியில் கலக்கும் நேரம் slow down பண்ண படும் .அப்போ உங்கள் குருதியின் சீனி மட்டம் (sugar லெவல் ) திடீரென ஏறாது . அடுத்து சில சலரோக வியாதி காரர் பழ வகை உண்ணவும் பயம் .அது இனிப்பு அல்லே என்று .நேற்று கூட நான் ஒரு உறவினர் வீடு போகையில் இந்த விடயம் வர நான் அவர்களுக்கு ஒரு நீண்ட விளக்கம்  .அதயே மீண்டும் இங்கு .அதாகப்பட்டது இனிப்பு சுவை உள்ள அனைத்தும் சலரோக  காரருக்கு தீங்கு விளைவிக்காது .இனிப்பில் பழ வகை சுக்குரோசு /fruitose  இன்னும் பல .பழத்தில் குளுக்கோசு இனிப்பு இல்லை .அது fruitose அது ஒண்டும்  செய்யாது .அதுக்காக கிலோ கணக்கில் பழங்கள் அடைய படாது கண்டியலே  இப்ப இஞ்சை 8 மணி ஆகுது .ஒருக்காய் நியூஸ் பாக்க வேணும் ஊர் உலகத்திலை  என்ன நடக்குது எண்டதையும் அறியவல்லே வேணும் .பிறகு வாறன் மிச்சம் சொல்ல தொடர்ச்சி .இன்று உலகம் பூராகவும் சலரோக காரர் .தேத்தண்ணிக்கு கூட சீனி போடாதேங்கோ .அதற்கு பிரதியீடாக இன்று சந்தையில் எவ்வளவோ alternative கள் ச்வீட் இனுங்கு குளிசையல் கிடைக்கும் .சுவிஸ்/செர்மனி /இங்கிலாந்து /அமேரிக்கா  ஏன் இந்தியாவிலும் கூட (அது சரியான மலிவு கண்டியலே ) எத்தினையோ பேருக்கு  நான் சொல்லிபோட்டன் .அவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து அன்பு  பாசத்தின் நிமித்தம் அவர்கள் அனுப்பும் குளிசைகளை அவை தேத்தண்ணிக்கு போட்டு குடிக்க மாட்டினம் .ஏனடி போட்டு குடியன்றி எண்டு நான் சொன்னால் அவையின்றை பதில் இப்பிடி **அது மனோகரன் அண்ணை/மாமா /சித்தப்பா  இதுதான் கதை கொஞ்சம் சீனி போட்டு தேத்தண்ணி குடிக்காட்டில் பத்தியம் இல்லையாம் .அப்ப நான் சொல்லுவன் போட்டு குடியடி .வலு கெதியிலை சம்பில் பக்கம் போவாய் கண்டியே . பின்னை இனி கதைக்கு வருவோம் . உந்த சலரோக வியாதியால் பாதிக்க பட்டவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் (complications ) அதில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு அலசுவோம்  படி 2 : கால் பாதங்கள் .பாதத்தை காக்கும் ஒரு வளி ஒன்று சொல்ல போறேன் கேளுங்கோ .உந்த பாதங்கள் உங்களை ஆயிரம் ஆயிரம் கிலோ மீட்டர் கணக்கில்  உங்கள் வாழ்நாள் பூராக சுமந்து சென்ற பாதங்கள் .சரியாக உங்கடை கார்களின் நாலு சில்லுகள் போல .இருந்தும் நீங்கள் ஒரு சலரோக வியாதி காரன் எனும்  பட்சத்தில் உங்கள் இரு கண்களை போல (கண்கள் பற்றி பிறகு சொல்லுவேன் ) பாதம் ஆனது தினசரி பார்த்து சுத்த படுத்தி பாது காக்க பட வேண்டியது .  காக்க வேணும் கண்டியலே .அது எப்படி எனில் அங்கு செல்லும் இரத்த ஓட்டத்தில்  சலரோகம் காரணமாக அங்கு உள்ள கலங்களுக்கு (cells ) சக்தி கிடைக்காமல் அவை  இறந்து விடும் .பின் அதன் தொடர்ச்சியாக அங்கு நரம்பு கலங்களின் தொழில் பாடு  முடக்க பட்டு விடும் .அதற்கு சொல்வது உணர்ச்சி அற்ற தன்மை **nameless ** எண்டு பிறகு அவவின்றை ஆச்சி சொல்லுவா எடியே பிள்ளை இஞ்சை பாரன்றி  ஆர் வந்திருக்கினம் எண்டு உன்றை கொச்சியின்ற்றை தம்பி அவன் மனோகரன்  அமெரிக்காவிலை இருந்து உன்னை பாக்க நல்ல சொக்கிலேற்றேல்லாம் வேண்டி  கொண்டு வந்திருக்கிறார் எண்டு சொல்ல இவ புளுகத்திலை அடுப்படிக்கு ஓடி போய் அடுப்பு மூட்ட அங்கினை கிடந்த நெருப்பு தணல் ஒண்டு அவவின் கால் பாதத்தை சுட அவவுக்கு அது ஒண்டும் உணர படாமல் அது புண்ணாக்கி பெரும் infection இலை போய் பிறகு பானாவேட்டி ஆசுவத்திரிக்கு கொண்டுபோய் அங்கை இருந்து சங்கானை ஆசுவத்திரிக்கு மாத்தி பிறகு பெரிய பட்டணம் ஆசுவத்திரியலை மறிச்சு  கால் விரலுகள் ஒன்டோண்டாய் கழட்டி பிறகு முழு காலையும் கழட்டி கடைசியிலை ஆளையே கழட்டி விட்டினம் ஆசுவத்திரியிலை இருந்து .கடைசியாய் அவ எங்களுக்கு ஒருத்தருக்கும் பேசாமல் பறையாமல் ஒரு நாள் தன் பாட்டில் கண்ணை மூடி போய் விட்டா சலரோகம் பற்றி சொல்ல இன்னும் நிறைய உண்டு .எனக்கு என்னூரில் மட்டும் கவன ஈனத்தால் அகால மரணத்தை தழுவியவர்கள் பலர் .எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எவர் ஒருவரின் பெயர் விலாசங்கள் குறிப்பிடாததை பற்றி கொஞ்சம் கவனத்தில் கொள்ளவும் .அவன் சுதர்சன்+ சுதாகர்மார் என்ரை பொடியல் பின்னை காலை பற்றி சொல்லி போட்டன் .காலை கண்மாதிரி கவனிக்க வேணும் கண்டியலே .இப்ப நீங்கள் வெளிநாடோ அன்றில் உள்நாடோ .எங்கிருந்தாலும் படுக்க  போக முதல் உங்கடை காலை நன்றே சுத்த படுத்துங்கள் .அது உங்கடை கனடாவில்  மேள் வீடோ அன்றில் ஊரில் உங்கடை மேன் வீடோ என்பது அல்ல .உங்கடை கால்  விரல் ஈறுகளை நன்கே சுத்தம் செய்யுங்கோ ..வெளி நாட்டு உங்கடை மேள் இப்பிடி கேக்க கூடும் *அப்பா உங்களுக்கு என்ன விசரே கால் விரல் எல்லாம் கழுவுகிரியல்  எண்டு சொல்லேக்குல்லை நீங்கள் இப்பிடி சொல்ல வேணும் அது அப்பா எங்கடை  ஊர் லூசு ஒண்டு மனோகரன் எண்டவர் உங்கினை சலரோகம் உள்ளவை படுக்க  போக முதல் கால்களை கழுவி துடைக்கட்டும்மாம் எண்டு எழுதி கிடக்கிறது  அதுதான் நானும் செய்யிறன் உங்களுக்கு எடியே அப்பிடியே சங்கதி .அவன் சொன்னால் அதிலை ஏதும் விஷயம் இருக்கும்  பின்னை கதையை கேளுங்கோவன் ஒரு சலரோக வியாதிக்காரன் தினசரி படுக்கைக்கு போக முதல் அவன் தன் பாதங்களை சுத்து கரித்து (மைல்ட் SOAP ) இனால் கழுவி துடைத்து அவதானிக்க வேணும் அங்கு விரல் இறகுகளில் ஏதும்  அசாதாரணம் உண்டோ என்று .அது கடசியியில் அவருக்கு சலரோகத்தின் அல்சரை  வழங்கி சம்பிலுக்கு கொண்டு போய் சேர்த்து போடும் .எத்தனையோ கேசுகளை நான் என்னூரில் பார்ஹ்து விட்டேன் .மிச்சம் மீதி இன்னும் வரும் சலரோக வியாதி .மிகவும் மனதுக்கு வேதனை ஆன விடயம் இன்னும் எம்மவர் கோயில் எங்கை கிடக்குதுது எத்தினை விரதம் பிடிக்கலாம் .என்ன சீலை உடுக்கலாம்என்று ஓடுகிறார் ஒழிய இஞ்சை என்ன சொல்ல படுகுது என்பதை நோடிக்க பூதி கண்டியலே . நான் இப்ப அடுத்த படியாக சொல்ல வருவது BMI அதாவது body மாஸ் index அப்பிடி எண்டால் உங்கடை வயது உயரம் என்பதற்கு ஏற்றால் போல விகிதாசாரத்தில் உங்கள் நிறையும் இருக்க வேணும் .எம்மூரில் கூட அநேக சலரோக நோயாளிகளை நான் கண்டுள்ளேன் .அவைக்கு தெரியாது இதை பற்றி .நல்லாய் அடை அடை எண்டு அடைவினம் **எடியே எனக்கு சலரோகமாம் நான் இன்னும் கொஞ்ச நாள்தான் சீவிப்பன் எண்டு சொல்லி அடையல் ** குண்டு பத்தி அதுவே அவருக்கு மரணத்தை மிக early ஆக குடுத்துவிடும் .இன்னும் கொஞ்ச நாள் அவர் பேர பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடலாம் கொஞ்சம் கேளுங்கோ .அந்த காலத்தில் இப்போ உள்ள மாதிரி உந்த டெஸ்ட் உகல் எல்லாம் கிடையாது . ஆக குறைஞ்சது ஒரு 50 வயதுக்கு மேற்பட்ட ஆக்களுக்குத்தான் சலரோக வியாதி வரும் .ஆனால் இன்றோ கற்பத்தில்உள்ள சிசுவுக்கும் சீனி வியாதியாம் .எனவே நான் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கோ .எனக்கு இப்போ நித்திரை வருகுது மிகுதி சொல்ல மீண்டும் நாளை வருவேன் .சொல்ல இன்னும் நிறைய உண்டு.    நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் இன்று டயபற்றிக் என சொல்லாத ஒருவரும் இல்லை என்பது நாகரீகம். பகுதி 3 தொடரும்.

மேலும் படிக்கவும் 13 மறுமொழிகள் பண் த பாலா 22-11-2013

தமிழர்கள் கலாச்சாரம் எங்கே செல்கின்றது .

மேற்க்கு நாட்டு கலாச்சாரம் தமிழர்கள் வாழும் நாடுகளை தொற்றுகின்றது என்கிறார்கள். இது பற்றிய ஆராய்வுக்கான அவசியம் தற்போது உள்ள தேவையும் பண்கொம் நேயர்களோடு ஒரு கருத்துபரிமாற்றம். மேற்க்கத்தைய நாட்டு உடைகளின் ஆதிக்கம்,கலாச்சார ஆதிக்கம், மது,மாது போன்ற நடைமுறை சிக்கல்கல்கள் என பல வகையில் பிரித்து பார்க்கலாம்.தமிழர்கள் தமது கலாச்சாரத்தை பேணாமல் மேற்க்கத்தைய கலாச்சாரத்தில் பாழாகின்றார்கள் என அதி மேதாவிகள் கருத்துக்கள்.பட்டிமன்றங்கள்,பொதுமேடைகள், வலைத்தளங்கள், பத்திரிகைகள் என பல விமர்சகர்கள் மேற்க்கத்தைய கலாச்சரத்தை தரம் கெட்டதாக விமர்சிப்பதை அவதானிக்கலாம். தமிழர்கள் அடர்ந்து வாழும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் எமது கலாச்சாரங்களுக்கான ஆவணங்கள் சிலதை ஆராய்ந்தால் பல விடயங்கள் வெளிப்படும்.பல கல்யாண முறைகள் இந்து கடவுள்களிடம் உண்டு.உடைகளில் பல தமிழ் உடைகள் ஆபாசமானதாக இருப்பதை அவதானிக்கலாம்.இதைவிட குடும்ப உறவுகளில் கணவன் மனைவிக்கான அந்தரங்க விடயங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமை தமிழர்களிடம் இல்லை ஆனால் மேற்க்கத்தைய நாட்டவர்கள் வெளிப்படையான பல விடயங்களை தப்பு என்பார்கள். மேற்க்கு நாட்டவர்கள் ஒரு கல்யாணம் விவாகரத்து மறு கல்யாணம் இது தப்பா என பார்த்தால் இல்லை எனவே சொல்லலாம்.இவர்கள் முதல் மனைவியின் விவாகரத்துடன் இரண்டாம் மனைவியோடு வாழ்கை நடத்தினாலும் முதல் மனைவியை நண்பராகவே கையாளவார்கள்.நம்மவர் விரோதியாகவும், கேவலமாகவும் நடத்துவதை அவதானிக்கலாம்.அதேவேளை முதல் மனைவியை இன்னொரு வாழ்கையை அமைக்கவே விடுவதில்லை. மேற்க்கத்தையவர்கள் ஒரே வேளையில் பல மனைவிகளுடன் குடும்பம் நடத்தமாட்டார்கள்.தமிழர்கள் அதிகமாக இந்தியாவில் பல மனைவி,பல கணவன் வாழ்கை அதிகமாகும்.உதாரணமாக,கருணாநிதி. எம்.ஜி.ஆர், விஐயகுமார், சரத்குமார், எம்.ஆர்.ராதா, ராதிகா, லட்சுமி, ஜெமினிகணேசன், என அறிமுகமான பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.சொல்வதெல்லாம் உண்மை எனும் தொலைக்காட்சி நிகழ்சிகளை பாருங்கள் அதிகமானவை பல திருமண குளறுபடிகளே. மேற்கத்தைய நாட்டவர்களிடம் எந்த அளவு வெளிப்படை தன்மை உண்டோ அந்த அளவுகளிலேயே திருமண பந்தங்களும்.தமிழர்களிடம் எவ்வளவுக்கு மறைமுகத்தன்மைகள் உண்டோ அந்த அளவுக்கு பல சிக்கல்லை கொண்டதே திருமணங்களும். உடைகள் விடயத்தில் அவரவர் வாழும் நாடுகளில் காலநிலைகள், நாகரீகங்கள்.பொருளாதாரநிலை என பலவற்றை தாங்கியதே. தமிழர்கள் தாம் வாழும் நாடுகளைபற்றியோ, காலநிலைகள் பற்றியோ சிந்திப்பவர்கள் அல்ல.சகல வாழ்கை முறைகளையும் கலவையாக வாழுவதை அவதானிக்கலாம்.உதாரணம் தமிழ் திருமணம் ஆனால் சைனிஸ்,சகல இந்திய மாநிலங்கள்,வெள்ளைக்காரனின் முறைகள், பல்லக்கு,குதிரை என பல இல்லாத முறைகள் என கலப்பு முறைகளும் உடைகளும் உணவுகளும் என ஒரு தவறான பாதைகளை நோக்கி எமது சந்ததியை எடுத்து செல்வதைக்கூடாத தமிழர்கள் உணராமல் வாழ்கிறார்கள். "எந்த கலாச்சாரமும் அவரவர்களுக்கு பெருமைக்குரியதே ஆனால் தமிழர்கள் மட்டுமே மற்றவரது கலாச்சாரத்தின் தீயவற்றை இறுக பற்றிவருகின்றோம்". உங்கள் பண் த.பாலா.  

மேலும் படிக்கவும் 25 மறுமொழிகள் பண் த பாலா 08-11-2013

புலம் பெயர் நாட்டிலிருந்து உன் புத்திரன் எழுதுவது,

புலம் பெயர் நாட்டிலிருந்து உன் புத்திரன் எழுதுவது, (செய்யுள் ஆக்கம்:செல்லத்துரை,மனுவேந்தன்) [செய்யுள் வகை:ஆசிரியத்துறை] அன்புள்ள அம்மாவுக்கு ஆசையுடன் ஒரு கடிதம் உன்புள்ளை எழுதுகிறேன் உரிமையுடன் மனமுருகியே பெண்பிள்ளை என்றெனக்குப்பேசி முடித்தவளை கண்முன்னே கொண்டுவரக் கணணிப் பக்கம் வாராயோ! [செய்யுள் வகை:ஆசிரியத்துறை] அன்னநடையென்றால் இவ்வவசர வுலகிற்காகாதே சின்னஇடையென்றால் சித்திரம்வரையவாஅவளெனக்கு உன்போல் அமைந்தாலென் உலகமே அவளெனக்கு கண்முன்னே கொண்டுவரக் கணணிப் பக்கம் வாராயோ! [செய்யுள் வகை:ஆசிரியத்துறை] வெண்ணிறத் தாளிலும் வெண்மனமே  வாழ்வுக்குகந்த தையா என்றும் எடுத்துரைத்து எடுப்பாய் என்வாழ்வுக்கு ஒளிதேடியிம் மண்ணில் லென் வாழ்வில் பங்கெடுக்கும் மங்கை யவளை  கண்முன்னே கொண்டுவரக் கணணிப் பக்கம் வாராயோ! [செய்யுள் வகை:ஆசிரியத்துறை] மண் மணமுள்ள மங்கையிவள் மாலையிட்டா  ளெனில் கண்ணிமை போல் காப்பாளென் வாழ்வினையேயென்ற உன்மொழி போற்றும் உத்தமளை ஒருமுறையாயினும் கண்முன்னே கொண்டுவரக் கணணிப் பக்கம் வாராயோ! [செய்யுள் வகை:கலித்துறை] சின்னத்தனமான மனிதர்களே சீதனம் பேசுவார்க ளென்ற எண்ணத்தினாலு மம்மாநீ எங்கோ யுயர்ந்து விட்டாயிம் மன்னனின் மாளிகையி லவள் மகாராணியாய் மலரவே கண்முன்னே கொண்டுவரக் கணணிப் பக்கம் வாராயோ!

மேலும் படிக்கவும் 5 மறுமொழிகள் பண் த பாலா 03-11-2013

சர்வதேசவாதம் தேசியம் இனத்தேசியம் சாதியம். -ந.இரவீந்திரன்.

சர்வதேசவாதம் தேசியம் இனத்தேசியம் சாதியம்.   சர்வதேசவாதம் தேசியம் இனத்தேசியம் சாதியம்.  -ந.இரவீந்திரன்    உலகச் சமூகம் தமிழினத்தேசியத்துக்கு விமோசனம் பெற்றுத்தரும்வகையில் அரசியல் முன்னெடுப்பை தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ளும் சூழல். புலம்பெயர் ஈழத்தேசியச் சிந்தனையாளர்களில் ஒருபிரிவினர் இந்தத் தலைமைகள் வடக்கையும் இழக்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சாட்டுவதற்கு உள்ளூர் செயற்பாட்டுக்கு அழுத்தம் கொடுக்காதிருப்பது காரணம் எனக் காட்டுவதை விட்டு, உள்ளூர் வேலையில் சாதிச்சங்க முன்னெடுப்பில் துணைபோவதனைக் காரணமாகக் காட்டுகின்றனர். இங்கு(தளத்தில்) என்ன செய்யப்பட வேண்டும், புலம்பெயர் அக்கறையாளர்கள் என்ன செய்வதால் தமிழ் மக்களுக்கான விடுதலை சாத்தியமாகும் என்ற தேடலுக்கு உரிய சரியான கருத்தியல் தேடலை மேற்கொள்ள அவசியம் ஏற்பட்டுள்ளமையை இந்தப் பின்னணி எடுத்துக்காட்டுகிறது. அத்தகைய கருத்தியல் குறித்த ஒரு தேடலாக இந்தக் கட்டுரை அமைகிறது. 'உலகச்சமூகம்' என்பதே இன்றைய பிரதான பேசுபொருள்களாக இருந்தபோதிலும் சர்வதேசவாதம் என்பதை முன்னிறுத்தியமை இந்தக் கருத்தியலுக்கான அடிப்படை நோக்கு சார்ந்தாகும். எண்பதுகளின் பின் ஊடகங்கள் வாயிலாக பெரிதும் பேசப்பட்டு ஏற்புடைமையாக்கப்பட்டது 'உலக சமூகம்' என்ற கருத்தியல். முன்னதாக 'சர்வதேச' உணர்வு என்பது கவனிப்புக்குரியதாக இருந்த கருத்தியல். அதனைத் தலைகீழ் மாற்றத்துக்குரியதாக்கிய உலகமயமாதலின் கையூட்டில்தான் ஊடகங்கள் உலகசமூகம் பற்றிப் பேசின. அனைத்து தேசங்களது சுயாதிபத்தியத்தை மதித்து சமநோக்குடன் அணுகும் சர்வதேசவாதம் பட்டாளிவர்க்க சிந்தனைமுறைக்குரியது. சோசலிசமுகாம் இன்னமும் ஏதோவொரு வகையில் செயற்பட்ட சூழலில் சர்வதேச உணர்வு அடிப்படையில் பிற நாடுகளில் தலையிடாது, சமத்துவ உறவுகொள்ளல் பற்றி பாட்டாளிவர்க்க சர்வதேசவாதம் எண்பதாம் ஆண்டுகள்வரை பேசுபொருளாக இருந்தது. தேசிய இனப்பிரச்சனையில் சோசலிச நாட்டம் அப்போது இனத்தேசியங்களிடையே முனைப்படைந்திருந்தது. மாறாக, உலகமயமாதல் உலகநாடுகளை ஒரு கிராமம்போல ஆக்கியதால் உருவாகும் 'உலகச்சமூகம்' என்ற முறைமையைப் பேசியவாறு பிறநாடுகளினுள் தமது விருப்புகளை திணிக்க உலகமுதலாளித்துவம் முனைந்தது. இவ்வகையில் பல்தேசமூலதன ஊடுருவலைச் சாத்தியமாக்கும் அரசியல் மாற்றத் தலையீடுகள் உடையதாக உலகச் சமநிலை மாற்றப்பட்டது. அமரிக்க மேலாதிக்கத் தலைமையில் பல்தேசக் கம்பனிகள் அனைத்து நாடுகளையும் தமது சுரண்டலுக்கான வேட்டைக்காடாக்கின. அதற்கு உதவும்வகையிலும் ஆயுதவியாபாரத்தைப் பெருக்குவதற்காகவும் தேசங்களின் உள்விவகாரங்களையும், அயல்நாடுகளது பிரச்சனைகளையும் யுத்தசம்காரம் செய்யவைக்க ஏற்றதான வாய்ப்பையேற்படுத்தும் கருத்தியல் மாற்றம் இதன்போது ஏற்பட்டது என்பது கவனிப்புக்குரியது. இதன்பேறாக, தேசிய இனப்பிரச்சனை சோசலிச நாட்டங்கொள்வதைவிடவும் அமரிக்க மேலாதிக்கவாதத்துக்கு உதவுவது என்பதாய் மாற்றம்பெற்றது. அந்தவகையறா உலகசமூகம் பற்றியதாயில்லாமல், மக்கள் விடுதலை நலன்சார்ந்த சர்வதேசவாதம் குறித்தே இங்கு பேசுவோம். உலகளாவிய பிரச்சனைகளிலிருந்து எமது உள்ளூர்ப் போராட்டம் விலகியதாயில்லை. நாம் ஜெனீவாவுக்கு போவது தவிர்க்கவியலாதது; அங்கு முன்னெடுக்கும் அரசியல் எத்தகைய பெறுபேறைத் தருகிறது? அனேகமாக இப்போது தமிழ்த்தலைமைகளுக்கு வெளிநாட்டுக் காவடியெடுப்புக்கு அரசு தரப்பு இரகசிய வாய்ப்புக் கொடுக்க அவசியம் ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் இவர்கள் நின்றபோது இங்கே மின்சாரக் கட்டண உயர்வுக்கான அவசியம், பஸ்க்கட்டணம் உயர்த்தப்பட வேண்டியிருத்தல் பற்றியெல்லாம் பேசப்பட்டது. முன்னர் இதுபோலுள்ளதில் பத்துவிழுக்காடு உயர்வு பற்றிப் பேசினாலேயே கிளர்ந்தெழும் சிங்கள மக்கள் மௌனம் காத்தார்கள். புலிகளை அழித்த அரசுக்கு சோதனையேற்படுத்தி, மீண்டும் புலியைப் புலம்பெயர் நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்வதற்கான ஆபத்தை ஜெனீவாவூடாக மேற்கொள்ளும் சூழலில் விலையேற்றத்தை சகிக்க வேண்டியதுதான் என அவர்கள் கருதினார்கள். மரம் அமைதியாயிருக்க இடமளிக்காமல் கட்சிகள் தமது ஆட்சிபெறலுக்கான புயலாக்குவதற்கு விலையேற்றங்களை எடுப்பது காரணமாக இந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டியதுதான். இருக்கவேயிருக்கிறது கொமன்வெல்த் மாநாடு. இதுசார்ந்து தமிழ்த் தலைவர்களை அந்த இரகசியக் கரங்கள் அனுப்பலாம். இருதரப்பு மக்கள் விரோத இனவாதத் தலைமைகள் தமக்குள் கூட்டமைத்து மக்களுக்கு விரோதமாக எப்போதும் இவ்வகையிலேயே இயங்கிவந்துள்ளனர். இதனைக் கண்டுகொள்ளாமல் சாதிச்சங்கம் தோன்றுவதில் உள்ள இரகசிய உறவையே துப்பறிந்து கண்டுகொள்கிறார்கள். தமிழ்த் தேசியத்துக்கு தூய இலட்சியம் இருக்கும் நிலையில் இந்தமாதிரியான விலையேற்றம் மாதிரியான சில்லறை விவகாரங்களில் மினைக்கெடலாமா? இந்த விவகாரங்களுக்காக போராடவேண்டியுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் வறுமையிலுள்ள மக்கள் இன-மத-சாதி பேதங்களைக் கடந்து ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் மட்டுமே அவர்களது குறி முழுவதும். ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிச்சங்கங்களில் அணிதிரட்டப்பட்டு அரசுக்கு துணைபோவதாக அக்கறைப்படுகிறவர்கள் அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளின் நிறைவுக்கு ஏதாவது செய்யத் தயாரா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும். அதெல்லாம் ஈழம் வந்தபின் பார்ப்போம் என்று நிலாக்காட்டுவதில் வித்தகர்கள் இவர்கள். 'சிங்கள' அரசு ஜெனீவாவைக் காட்டி சிங்கள மக்களின் வயிற்றில் அடிப்பதைப் போலவே இவர்களது 'தமிழ்' ஆட்சியும் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. இப்படிச் சொல்வதால் ஒடுக்கப்பட்ட மக்கள் சிங்களப் பேரினவாத அரசுக்கு சாதகமாக இயங்குவதோடு, தமிழினத்தேசியத்துக்கு விரோதமாக செயற்பட வேண்டும் என்று சொல்லவரவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விசேட பிரச்சனைகள் உள்ளமையைத் தமிழினத்தேசியர்கள் விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றே கோருகிறோம். ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை இனிமேல் 'தலித்மக்கள்' என்று அழைக்கவேண்டும் என்பதற்கு எதிர்ப்புக்குரல் கொடுப்பது முதல் அவர்களது பல்வேறு கோரிக்கைகளையும் விருப்பங்களையும் அபிப்பிராயங்களையும் நிராகரித்தும் எதிர்த்தும் கண்டுகொள்ளாதிருந்தும் வருகிற ஆதிக்க சாதிநலன் பேணுவோர், தலித் மக்கள் சாதியாக அணி திரள்வதைக் கண்டிக்க அருகதையற்றவர்களாவர் (ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதைக் கட்டுரையில் இனித் தலித்மக்கள் என்றே சுட்டுவோம்). சாதிய இழிவுபடுத்தல்களுக்கு முடிவுகட்ட உருப்படியான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் தமிழ்த்தேசியம் என்றவுடனே எல்லோரும் ஒன்றுபட்டிருப்பதான பொய்த்தோற்றத்தை ஏற்படுத்திவிட இயலாது. தமிழினத் தேசியத்துக்கு விரோதம் கொள்ளாமலே இலங்கை அரசுடன் தமது கோரிக்கைகள் நலங்கள் ஆகியவற்றுக்காக தொடர்பாடும் உரிமை தலித் மக்களுக்கு உண்டு. தமிழினத் தேசியம் அதனை அங்கீகரித்து, அவர்களது கோரிக்ககளைத் தாமும் அரவணைத்து செல்வதுசார்ந்த உரையாடல்களை அவர்களோடு மேற்கொள்ள வேண்டும்; அதைவிடுத்து ஆண்ட பரம்பரை அகம்பாவத்துடன் 'துரோகி' முத்திரை குத்தக் கிளம்பக்கூடாது. அதெப்படி தலித் மக்களுக்கு அவ்வாறான தனித்துவ அடையாளத்தைக் கொடுக்க இயலும்? அவர்களும் தமிழ் மக்களுக்குள் அடங்குகிறவர்கள் தானே எனக் கேட்பதை உணர இயலுகிறது; ஆயினும், அவர்கள் தம்மைச் சமத்துவமாக நடத்த வேண்டும், கோயிலினுள் சென்று வழிபட வேண்டும் என்கிற எந்தவொரு கோரிக்கைக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடாத்தியே ஒவ்வொன்றாகப் பெற்றெடுத்து வருகிறார்கள். இன்று சாதிய இழிவுகள் பல ஒழிக்கப்பட்டுள்ளது என்றால், ஆயுதம் ஏந்திப் போராடிய அறுபதாம் ஆண்டுகளின் வரலாறுவரை சென்றே அவை சாதிக்கப்பட்டன. இன்றும் அவர்கள் 'அந்தப்பக்கம்' என்றே உயர்சாதியினரால் சுட்டப்படும் அடையாளம் முதல் பல்வேறு வேறுபாடுகளுக்குள் ஆட்படுத்தப்பட்டே வைக்கப்பட்டுள்ளனர். "அவையவையை வைக்கிற இடத்திலை வைக்கவேணும்" என்ற புகழ்பூத்த வாசகம் அடிப்படையில் சாதி உணர்வு சார்ந்தது என்பதையும், அது இன்னமும் ஒழிந்து போய்விடவில்லை என்பதையும் அறிவோம். சாதியொழிப்பு என்று சாதிச்சங்கம் சேர்வதால்தான் சாதி நீடிக்கிறது என்பவர்கள் உருப்படியாக சாதிகளிடையே புனிதம்-தீட்டு சார்ந்த கருத்தியல் இருப்பு முழுமைக்கும் எதிராகக் காத்திரமான பண்பாட்டு இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு தமிழ்த் தேசியம் செய்யும் பட்சத்தில் எவரும் சாதிச்சங்கத்தில் சேரப்போவதில்லையே. இவ்வகையில் தலித் மக்களுக்கான தனித்துவக் கோரிக்கைகள் என்பவை இன்று நேற்று ஏற்பட்டனவல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தில் சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் வட்டமேசை மாநாடு நடந்தபோது அம்பேத்கர் தலித்மக்களின் பிரதிநிதியாகக் குரல் கொடுப்பதை எதிர்த்த காந்தி, தலித்மக்களுக்கும் தானே பிரதிநிதி என்று வீம்புக்கு நின்றார். அம்பேத்கரது இரட்டை வாக்குரிமைக் கோரிக்கை அங்கே வெற்றிபெற்றது. தனக்கு தீராத அவமானத்தைத் தேடிய சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தி நடாத்தி, அம்பேத்கரின் அக்கோரிக்கையைக் கைவிடச் செய்யவேண்டியிருந்தது. ஆயினும் அனைத்துத் தலித் மக்களின் தலைவர் அம்பேத்கர் என்ற உண்மை வலியுறுத்தப்படுவதைக் காந்தியால் இல்லாதாக்க இயலவில்லை. இரட்டைவாக்குரிமை அனுமதிக்கப்பட்டால் சாதியேற்றத்தாழ்வுகள் ஒழிந்துபோயிருக்கும் என்றில்லை என்றபோதிலும், தலித் மக்கள் இன்னும் வலிமையாகப் போராட வேண்டும் எனும் உண்மையைக் காந்தியின் நிலைப்பாடு முதல் இன்றைய ஆதிக்க சாதித் தேசியர்கள் வரை உணர்த்துவர் என்பதற்கான வரலாற்று உண்மையாகப் பதிவாகியுள்ளது. தாராளவாத அரைப் பிராமணத் தேசியத்தைத் தலைமைதாங்கிய காந்தியே இத்தகைய வரலாற்றுத்தவறை இழைத்தார் எனில், நாகரிகப் போலி வேச வெள்ளாள ஆதிக்கத் தமிழ்த் தேசியம் பேசுவோர் தலித்துகளுக்கு எதிராக எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொள்வர் என்பதைச் சொல்லத்தேவையில்லை. என்ன இருந்தாலும் காந்தி 'ஹரிஜனம்' என்ற மகுடம் சூட்டி, ஆலயப் பிரவேசப் போராட்டங்களை நடாத்தி, சாதியாதிக்க சக்திகளுக்கு தீராத தலையிடியை ஏற்படுத்தி, தலித் மக்களையும் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபட வாய்ப்பளித்தவர். அன்றைய வரலாற்றுச் செல்நெறியின் பிரதான போக்காக ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா விடுதலை பெறுவது உடனடி அவசியப் பணி என்கிற வகையில் காந்தியின் தலைமையில் தலித் மக்களில் பெரும்பான்மையினர் நாற்பதுகளில் அணிதிரண்டபோது அம்பேத்கர் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டது. சுதந்திர இந்தியா காந்தியையும் பொய்யாக்கிய நிலையில் அம்பேத்கர் மிகப்பெரும் தலித் தலைவர் ஆவது தொடரும் வரலாற்றுத் தேவையாக ஆனது. இது கவனிப்புக்குரிய வரலாற்றுப் படிப்பினை. தேசியம் தலித் கோரிக்கைகளை உள்வாங்கும்போது எதிர்த் தேசியம் இடைநிறுத்தப்பட இயலும்; அவ்வகையில் தலித்தேசியக் கோரிக்கை உள்ளிட்ட பிராமணல்லாத ஏனைய சாதித் தேசியங்களது கோரிக்கைகளையும் கையேற்ற காந்தி-நேரு ஆகியோரின் தாராளவாத அரைப் பிராமணியத் தேசியம் தலைமையேற்று இந்திய சுதந்திரத்தை சாத்தியமாக்க இயலுமாயிற்று. பிராமணர் எனும் சமூக வர்க்கம் இந்தியா முழுமைக்குமான ஒரே சமூக சக்தி என்கிறவகையில் இவ்வகையிலான இந்தியத் தேசியம் (நாட்டுத் தேசியம்) நிதர்சனமானபோது தமிழ்நாட்டுக்கான (அன்றைய நிலையில் திராவிட நாடு என முன்வைக்கப்பட்டு, நடைமுறையூடாக தமிழினத் தேசியத்துக்கான) கோரிக்கை வரலாற்றுத் தேவையாக எழுச்சிகொண்டது. பிராமணிய எதிர்ப்பாக முனைப்படைந்த இந்த அணி தமிழ் ஆதிக்க சாதிகளது நலன் பேணுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதிலும் தலித்தேசியக் குரல்களையும் இடைச் சாதிகளது குரல்களையும் முன்னெடுப்பவர்களாகக் காட்டிக்கொண்ட வகையில் பரந்த ஐக்கியமுன்னணியைக் கட்டியெழுப்பினர். அறுபதுகளின் பிற்கூறில் ஆட்சிய வென்றெடுத்து தொடர்ச்சியாக ஆட்சியாளர்களாக விளங்கியபோது எண்பதுகளில் இடைச் சாதியினர் அதிகாரத்தை வெற்றிகொள்ளும் வகையில் தி.மு.க. பிளவுற்றது. இடைச்சாதியினர் ஆதிக்கம் தலித்துகளுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்திய நிலையில், அம்பேத்கர் நூற்றாண்டும் வந்த தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து தலித் இயக்கம் தமிழகத்தில் எழுச்சி கொண்டது. இலங்கையில் ஆங்கிலமயப்பட்ட கொவியா-வெள்ளாளக் கூட்டு ஆட்சிப்பங்கேற்ற நிலையில் ஏகாதிபத்தியம் சாதிய முரணையன்றி இன முரணைப் பிரித்தாளும் நோக்கத்துக்கான முரணாக வடிவமைத்த அரசியல் அரங்கில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் முரண் முனைப்படையலாயிற்று. சாதிவாதம் மேலாதிக்க சக்திக்குரியதாகாத நிலையில் சாதிமுரண் கூர்மையாக இருந்த யாழ்ப்பாணத்தில் முற்போக்கு செயற்பாட்டாளர்களான அனைத்து சாதியினரும் சாதியத்துக்கு எதிரான கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்தனர். இந்த அவசியப்பணியில் தலித் அணிக்கான அமைப்பின் அவசியம் உணரப்பட்டு 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' கட்டியெழுப்பப்பட்டது. அது தொடங்கிய நாற்பதுகளிலிருந்து கொம்யூனிஸ்ட் கட்சி தனது ஊழியர்கள் அங்கு செயற்பட ஆற்றுப்படுத்தியிருந்தது. அந்தவகையில் வெறும் சாதிவாத அமைப்பாக இல்லாமல் சமூக மாற்றத்துக்கான வலுவான அமைப்பாக அதனால் பங்களிக்க முடிந்தது. ஐம்பதுகளில்ருந்து, கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான எம்.சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கிய போது வர்க்கப்பார்வையில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டது. சிற்சில சாதியப் பிளவுகள் வெளிப்பட்டபோதிலும் பிரதான போக்கு தலித் தேசியம் எதிர்த்தேசியமாகப் பிளவுறாமல் சாதியெதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க முடிந்தது. அறுபதுகளில் இன்னும் கூர்மையான போராட்டங்களைச் சாதியத்துக்கு எதிராக முன்னெடுக்க ஏற்றதாக வரலாறு வளர்ச்சியுற்றநிலையில் அனைத்து சாதியினரும் அணிதிரண்ட அமைப்பான 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' தோற்றம்பெற்றது. இவ்வாறு தலித் தேசியம் முழு இலங்கைத் தேசியத்தின் ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை இயக்கப்படுத்தியபோது, அதனுடன் ஐக்கியப்பட்டு தனது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடியிருக்க வேண்டிய தமிழ்த்தேசியம் எதிர்ப்பு நிலையை எடுத்துக்கொண்டது. அவ்வாறு பிளவுபடுத்திய தமிழ்த் தேசியம் பிரிவினையை முன்வைத்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திக்கொண்ட அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளாமல் இன்றும் அதே வரலாற்றுத் தவறுகளை மேற்கொள்ள முற்படுகிறார்கள். இன்றைய நிலையில் சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளோடும் ஐக்கியப்பட்டு தமிழ்த்தேசியம் தனது சுயநிர்ணயத்துக்காகப் போராட வேண்டும். சிங்களப் பேரினவாதம் எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை; அதற்காக சிங்கள மக்கள் எல்லோருமே எதிரிகளல்ல. தம்மையும் வஞ்சிக்கும் பேரினவாதிகளுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட ஏற்றதாக தமிழ்த்தேசியத்தின் நடைமுறை அமையவேண்டும். மாறாக மேலாதிக்க சக்திகளுக்கு ஊடுருவலுக்கான வாய்ப்பாகப் பிரிவினைக் கோரிக்கையோடு சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைப்போமாயின் மேலும் அழிவுகளைச் சந்திப்போம். இதுவரையான தவறான அரசியல் மற்றும் யுத்தங்கள் கிழக்கை தமிழர்கள் பெரும்பான்மை எனும் இடத்திலிருந்து கைவிடுவதற்கு வழிகோலியது. இதனால் சிங்களத் தேசியம் வென்றதான மாயை சிங்கள மக்களைப் பேரினவாத சக்திகளுக்கு உடன்பட்டுப்போக வழியேற்படுத்தியபோதிலும், வளர்ந்துவரும் சமூக-பொருளாதாரப் பிரச்சனைகள் அதிகாரம்செலுத்தும் பேரினவாதக்கும்பலுடன் சிங்கள மக்கள் முரண்படுவதிலிருந்து தடுக்கும்வகையில் நீண்டகாலம் உதவப்போவதில்லை. முப்பதுவருட யுத்தசன்னதத்தை வளர்த்த இந்தியா (இதற்காக அர்ப்பணிப்போடு போராடிய சக்திகளின் பங்களிப்பு அந்த இந்திய மேலாதிக்க நோக்கத்துக்கான இரையாகும் வகையில்) பயன்படுத்திக்கொண்ட பின்னர் பதினாறுக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக இலங்கையை இந்தியா அடிமைகொண்டுள்ளது. ஆக, இலங்கையினுள் சிங்களப் பேரினவாதம் ஏனைய தேசிய இனங்களை அடக்கி மேலாதிக்கம் செய்யும் அதேகாலத்தில் இந்திய மேலாதிக்கத்தால் முழு நாடும் ஆட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துக் கொண்டு சிங்களத் தேசிய முற்போக்கு சக்திகள் செயற்படுவதற்கு முன்வரவேண்டும். தமிழ்த் தேசியம் தலித்தேசிய நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு அதன் கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் மதித்தவாறு செயற்படுகிற அதேவேளை, இலங்கைத் தேசியத்தின் நிதர்சனத்தை ஏற்றவாறு பிரிந்து செல்வதல்லாத சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும். இவை குறித்து இரட்டைத் தேசியம் குறித்த பல கட்டுரைகளிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உணர்வுடன் மக்கள் விடுதலை எனும் இலக்கு சார்ந்ததாக இலங்கைத் தேசியம் அனைத்து தேசிய இனங்களையும் சமத்துவமாக நடாத்துவதுபோன்றே சாதிய ஒடுக்குமுறையின் அனைத்துவடிவங்களையும் தகர்க்கும் இலட்சியத்தோடு தமிழினத் தேசியத்தின் சுயநிர்ணயப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கைத் தேசியத்தினின்றும் வேறுபடுத்தித் தனிநாடாக ஆக்கும் எத்தனம் மேலாதிக்க சக்திகளுக்கு உதவுவதாகிவிடும் என்பதான அதே பொருளில், தமிழினத் தேசியத்தைப் பலவீனப்படுத்தாதவகையில் தலித் தேசியக் கோரிக்கைகளும் செயற்பாடுகளும் அமையவேண்டும் என்பதை வலியுறுத்துவோம். சிங்கள முற்போக்கு சக்திகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும்போது பிரிவினைவாதம் வலுப்படுவது போலவே, இடதுசாரித் தமிழ்த் தேசியர்கள் தலித் தேசியத்தை நிராகரிக்கும்போது தலித்தியவாதம்(சாதிவாதம்) மேலோங்க வழியேற்படுத்துகிறார்கள் (ஆதிக்க சாதிக்கான 'ஆத்மீகப்' போலி முகமூடி அணிந்த சாதிவாதம் எப்படி முகங்கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தலித் விடுதலையாளர்கள் அறிவர்; ஆயினும் இந்த முற்போக்காளராய் முன்வந்து 'சாதிபேதம் இல்லாதொழிந்த பின்னும் நீங்கள் ஏன் சாதிபற்றிப் பேசுகிறீர்கள்' என்கிற நட்புசக்திகளிடமிருந்து காக்கத்தான் எந்தக்கடவுளும் முன்வருகிறார்களில்லை). இரட்டைத் தேசியக் கோட்பாடு எமக்கான செயற்பாட்டுக் கருத்தியல் என்கிறவகையில் இப்பிரச்சனை குறித்து விளக்கம்பெற உதவ இயலும். இந்தக்கட்டுரையின் பேசுபொருளுக்கு அமைவாக இரட்டைத் தேசியக் கோட்பாடு தொடர்பான ஐந்து அம்சங்களைச் சுருக்கமாக முன்வைப்பது அவசியமாயுள்ளது. அவை:   1   -சமூக வர்க்க ஆதிக்கமும் கருத்தியலும்- ஐரோப்பாவில் போல வர்க்கப்பிளவுற்ற சமூக அமைப்பல்ல எம்முடையது. விவசாய வாய்ப்புப் பெற்ற மருதத் திணைக்குரிய இனமரபுக்குழுக்கள் ஆதிக்க சாதியான வெள்ளாளராக தம்மை ஆக்கி வெல்லப்பட்ட இனமரபுக்குழுக்களை இடைச்சாதிகளாயும் தலித்துக்களாயும் ஆக்கிக்கொண்ட சமூகமுறைமை எமக்கானது. இதற்கு ஏற்புடையவர்களாக்க வலுவான கருத்தியல் அவசியம் என்கிறவகையில் பிராமணர் என்கிற சாதி அவசியப்பட்டது. இந்தியா முழுமைக்குமான ஒவ்வொரு பிரதேசங்களிலும் மேலாதிக்கம்பெற்ற சாதியென வெள்ளாளர், நாயர், நாயுடு  (இலங்கையில் கொவியா) என வெவ்வேறு சாதிகள் இருந்தபோதிலும் கருத்தியலுக்கான சாதியான பிராமணர் முழு இந்தியாவுக்குமானவர்களாக இருக்க முடிந்தது (இலங்கையில் ஆட்சியாளர்களுடன் பிராமணர் இருந்தபோதிலும் ஒரு சமூக சக்தியாக ஆதிக்கம் பெற இயலவில்லை; பௌத்தத்துக்கு நேரடியாக பிராமணர் பங்களிப்பு இருந்ததைக் கடந்து பௌத்த இலக்கியங்கள் வாயிலாக சாதிவாழ்முறை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது). சாதி ஏற்றத் தாழ்வுடன் ஆதிக்கசாதியின் உடைமையாளர்கள் பிறரைச் சுரண்ட ஏற்ற கருத்தியலை முன்வைக்கும் பிராமணியம், அமைப்பு மாற்றங்களுக்கு ஏற்றதாக மாறுபடும் கருத்தியல்களையும் காலந்தோறும் வடிவமைத்து வந்துள்ளது.   2. சமூகமாற்றத்துக்கு பண்பாட்டுப்புரட்சி- கருத்தியல் வாயிலாக  மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்கிற  சமூக வர்க்கமான ஆளும் சாதியை வீழ்த்திப் புதிய உற்பத்திமுறைக்கான மற்றொரு சாதி ஆதிக்கத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் கருத்தியல் மாற்றத்தை முன்னதாக ஏற்படுத்த வேண்டும். மூவேந்தர் ஆட்சி சாத்தியப்பட்ட வீரயுக உடமையாளர்களான கிழார்கள் தமது ஆதிக்கத்தோடு பிராமண ஆதிக்கத்துக்கும் வழியேற்படுத்தினர். பிராமணியத்தை வீழ்த்தி வைசியர்களைப் புனிதர்களாய்க் காட்டிய பௌத்த சமண எழுச்சி அறநெறிக்காலத்தை சாத்தியமாக்கியது. பக்திப்பேரியக்கம் வெள்ளாளரைப் புனிதப்படுத்தும் கருத்தியலுடன் பிராமணியத்தை வளர்த்து பண்பாட்டு புரட்சியை முன்னெடுத்து நிலப்பிரபுத்துவ அமைப்பு வெற்றிகொள்ளப்பட்டது. முதலாளித்துவ மாற்றியமைத்தலிலும் காந்தியின் ஆன்மீக வடிவம் பெற்ற போராட்ட முறைகள் முதல் தமித்தேசியத்துக்கான தி.மு.க.வின் பண்பாட்டு இயக்கங்கள் வரையானவை கவனங்கொள்ளப்பட வேண்டியன.   3. ஏகாதிபத்தியம் - ஒடுக்கப்பட்ட தேசம்: நவீன முதலாளித்துவ வரலாறு இருபதாம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய அமைப்பை நிதர்சனமாக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் சோசலிசம் வென்றெடுக்கப்படலாம் என மார்க்ஸ் நம்பியதைப் புதிய அமைப்பு முறை வளர்த்தெடுத்து சிந்திக்குமாறு கோரியது. ஒடுக்கப்பட்ட தேசங்களை ஐக்கியப்படுத்திய ருஸ்யப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு அப்பால் ஏனையவை அனைத்தும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட தேசங்களின் புரட்சி வாயிலாகவே சோசலிசம் கட்டியெழுப்பப்பட்ட நிதர்சனத்தைக் கவனம்கொள்ள வேண்டும். சமூக வர்க்கமாக ஒடுக்கி சுரண்டலை மேற்கொண்டு சமூக மாற்றங்களைக் கண்டுவந்த எமது அனுபவங்களிலிருந்து இதற்கான கோட்பாட்டு உருவாக்கம் சாத்தியமாக இயலும். இரட்டைத் தேசியக் கோட்பாட்டின் விரிவாக்கம் இதற்குரியது எனக் காணலாம். இதுகுறித்துப் பின்னால் பார்க்கலாம். ஒருவிடயம் மட்டும் இங்கு வலியுறுத்த அவசியமுள்ளது. ஏகாதிபத்தியம் என்பது மூலதனத்தை ஏற்றுமதி செய்து ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சுரண்டுவதாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒடுக்கிய ஆதிக்க சாதிகள் பிராமணியம் என்கிற பண்பாட்டு ஏகாதிபத்தியமாகும் வரலாறு எம்மத்தியில் முன்னரே நடந்தேறியது. தேசிய வாழ்முறை இன்றைய முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்கான அரசியல் வடிவம் என்றபோதிலும் சாதிமுறையில் வெளிப்பட்ட இந்தப்பண்பு சாதிகளை முந்திய வடிவத்துக்குரிய தேசியமாகக் கொள்ள இயலும் என்பதை மறுக்க இயலாது. வேறுவார்த்தைகளில், சாதிகள் ஒவ்வொன்றும் ஒருவகையில் தேசம் போன்ற அமைப்பை நவீன வரலாற்றில் வடிவம் பெற இடமுள்ளதாக கூறலாம். இந்தச் சாதித் தேசம் பௌதிகவடிவிலான நிலத் தொடர்பு உடையதல்ல என்றபோதிலும், சாதியமனம் எனும் அரூபமான 'நிலத்' தொடர்பைக்கொண்டுள்ளது.   4. புதிய பண்பாடு- ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும்போது ஆதிக்க சாதிகள் தலைமையேற்கும் நிலையில் தலித் கோரிக்கை (அம்பேத்கர்) அல்லது பிராந்திய ஆளும் சாதித் தேசியம் (பெரியார்) என்பன முறையே வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும்  எதிர்த் தேசியமாக இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டன. அம்பேத்காரியம், பெரியாரியம் என்பன அத்தகைய எதிர்த்தேசியங்களாகும். பாட்டாளி வர்க்க நோக்கில் முன்னெடுக்கப்படும் மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் புதியபண்பாடு எனும் வடிவம் கொள்ளும். ஆதிக்கசாதித்தேசியம் மரபு சார்ந்த பண்பாட்டியத்தை முன்னெடுக்கும்போது பிராமணிய எதிர்ப்புடையன எதிர்ப்பண்பாட்டியத்தை முன்னிறுத்தின. இது மரபுப் பண்பாட்டை முழுமையாக நிராகரிக்கும் நிலைப்பாடு. ஆதிக்க எதிர்ப்பு இதன் அடிப்படையாக இருந்தபோதிலும் பிற மேலாதிக்கத்துக்கு விட்டுக்கொடுக்க வாய்ப்பாக சொந்த வேர்களைத் தகர்க்கும் தவறு இதன்பால் உண்டு. புதிய பண்பாட்டியம் ஆதிக்க எதிர்ப்பில் எதிர்ப்பண்பாட்டியக் கூறை உள்வாங்கும் அதேவேளை, அவசியமான மக்கள் பங்கேற்பு சர்ந்த மரபுப்பண்பாட்டின் ஏற்புடையவற்றைக் கையேற்கும். அனைத்துவகை மேலாதிக்கங்களையும் முறியடித்து முழுமையான விடுதலையைச் சாத்தியமாக்குவது புதியபண்பாட்டியம்.   5. மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்- தேசவிடுதலையூடாக சோசலிசத்தை வென்றெடுக்கிற வரலாற்றுக்கட்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை மாஒ சேதுங் சிந்தனை மக்கள் ஜனநாயக சவாதிகாரம் என விருத்தி செய்து பிரயோகித்தது. ஆயினும் தொடர்ந்த வரலாற்றுப்போக்கின் நெருக்கடியில் ஒருபின்வாங்கல் நேர்ந்துள்ளது. இதனை தேசியவிடுதலை வாயிலாக சோசலிசத்தை வெற்றிகொள்ளல் எனும் புதிய மார்க்சியக் கட்டத்துக்குரிய கோட்பாட்டு நிலையில் மீளக் கட்டமைப்பது அவசியமாகும். ஆக, மேலாதிக்கம் ஏகாதிபத்தியம் என்பவற்றுக்கு எதிராக நாட்டுத்தேசியம் சோசலிசத்தை வென்றெடுக்கும் இலக்கோடு மக்களை அணிதிரட்ட வாய்ப்புண்டு. அதற்கான கருத்தியல் அடிப்படையில் எமக்கான கோட்பாட்டை வகுக்கவேண்டும். அதன்போது ஒவ்வொரு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் கவனம்கொள்ளப்பட வேண்டும். இந்த இனத்தேசியங்களின் மத்தியில் பண்பாட்டு ஏகாதிபத்தியத்துக்கு ஆட்பட்ட சாதித் தேசியங்களது சுயநிர்ணயம் அதற்குரிய வடிவத்தில் அங்கீகரிக்கப்படுவது அவசியம். 2013-நன்றி குவர்னிக்கா    

மேலும் படிக்கவும் 12 மறுமொழிகள் பண் த பாலா 14-10-2013

வாடகையில்லா வீடு.

வாடகையில்லா வீடு அன்னையின் கருவறை. பணமில்லா உணவும் அன்னையின் கருவறையில். நிம்மதியான உறக்கம் தாயின்மடியில். அன்னையிடம் வாடகையில்லையோ பிள்ளைகள் வீட்டில் இடம் இல்லை. உங்கள் பண் த.பாலா

மேலும் படிக்கவும் 5 மறுமொழிகள் பண் த பாலா 04-10-2013

அடிமைகளா நாம்?

அடிமைகளா நாம்? அன்று பெற்றோர்க்கு பிள்ளைகள் அடிமை. இன்று பெற்றோர் பிள்ளைகளுக்கு அடிமை. அன்று மனைவி கணவனுக்கு அடிமை. இன்று மனைவிக்கு கனவன் அடிமை. அன்று சமூகத்திற்க்கு நாம் அடிமை. இன்று சமூகம் நமக்கு அடிமை. அன்று ஆண்டவனுக்கு பக்தர்கள் அடிமை. இன்று பக்தர்களுக்கு ஆண்டவனே அடிமை. அன்று பணத்துக்கு நாம் அடிமை. இன்று பணம் எமக்கு அடிமை. அன்று மதுவுக்கு மதுப்பிரியர்கள் அடிமை. இன்று மதுப்பிரியர்களுக்கு மது அடிமை. அன்று முதியவர்க்கு இளையோர் அடிமை. இன்று இளையோர்க்கு முதியவர் அடிமை. அன்று உறவுகளுக்கு நாம் அடிமை. இன்று உறவுகள் எமக்கு அடிமை. அன்று நோய்கள் எமக்கு அடிமை. இன்று நாம் நோய்களுக்கு அடிமை. அன்று கலாச்சாரங்களுக்கு நாம் அடிமை. இன்று கலாச்சாரங்கள் எமக்கு அடிமை. அன்று ஆசான்களுக்கு மாணவர்கள் அடிமை. இன்று மாணவர்களுக்கு ஆசான்கள் அடிமை. அன்று இயற்கை உணவுக்கு நாம் அடிமை. இன்று செயற்க்கை உணவு நமது அடிமை. அன்று நிஐ அன்புக்கு அடிமை. இன்று போலி அன்பின் அடிமை. அன்று அடிமை விலங்கு என்ற பெயரில் கட்டுபாடுகளுக்குள் வாழந்தோம்.அந்த அடிமை விலங்கை உடைப்பதாக எண்ணி இன்னும் இறுக்கமான அடிமைகளாகியதை உணராத மனிதர்கள் நாம். உங்கள் பண் த.பாலா  

மேலும் படிக்கவும் 5 மறுமொழிகள் பண் த பாலா 24-09-2013

குறும் படம் இத்தாலி எம்மவர் ஆக்கத்தில்.

கீழே உள்ள வலையத்தளத்தை அமுக்கினால் எம்மவர் குறும்படத்தை பார்க்கலாம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ie8WA2JbbJ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ie8WA2JbbJY

மேலும் படிக்கவும் 20 மறுமொழிகள் சுதர்சன் 18-09-2013

வெளிநாட்டுவாழ்க்கை - 3.

ஊரில் பிறந்த நாங்கள்  எல்லோரையும் போல எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாக எங்கள் ஊரில் எம் ஊறவுகளுடனும்  நண்பர்களுடன் காலங்களை கழித்து வந்தோம் , யாருக்கு தெரியும் போர் எங்களை எல்லாம் இப்படி சிதறடிக்கும் என்று ஆளுக்கொரு  நாடு நாடக  சிதறியே போனோம்.  ஆனால் வெளிநாட்டில் பிறந்தவர்களையும் விட ஈழத்தில் பிறந்தவர்களுக்கு இது அதிக பட்ச நினைவுகளாகவே உள்ளது .இருந்தும்  எம் உறவுகள் எத்த நாட்டில் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் அன்று இருந்தோம் அனாலும் இருந்தும் இன்று பல இணையத்தளம் உடாக  பல உறவுகளை தேடித்தந்திருக்கிறது. இருந்தும் நாங்கள் இயந்திர வாழ்கையில் கால் பதித்து போலியான சந்தோசத்தை கொடுத்த பணத்தின் பின் ஓடி கொண்டிருக்கிறோம்.    அயல் நாட்டு காரன் கண் விழிக்க கூவும் சேவல்களோ ஆயிரத்தை தொலைத்துவிட்டு லட்சத்தை எடுக்கும் மாய வித்தை உலகம் நடுவில் பிழைக்க தெரிந்த மனிதர்கள் என்ற பட்டம் மட்டும் பெற்று விட்டோம் நாங்கள் . இருந்தாலும் உலக வாழ்க்கையில் மனித உறவுகளை பராமரிக்க நேரம் இல்லை சில ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கு மதிப்பு இருந்தது  உறவினர் வீட்டுக்குப் போனாலோ அல்லது நண்பர்கள் வீட்டுக்குப் போனாலோ  அவர்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். சுகம் நலம் விசாரித்தார்கள் இரு குடும்பத்தின் நல்லது கெட்டதுகளைப் பற்றி கலந்து பேசினார்கள். உறவினர் வீட்டுக்கு  . குடும்பத்தோடு போனால் இரட்டிப்புச் சந்தோஷம் மன ஆறுதல் அடைந்தார்கள் அன்று!! ஆனால் இன்றோ ஒருவர் வீட்டிற்குப் போவதென்றால் என்ன எதற்கு  என்று கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சும்மா இந்தப்பக்கம் வந்தேன்.     அப்புறம் பரஸ்பரம் நீங்க நலமா, நான் நலம், இதற்கு மேல் விசாரித்தால் அது அநாகரிகம். தேனீர்  அதுவாக வந்தால் குடிக்கலாம்.தேனீர் குடிக்கிறீர்களா என்று கேட்டால்  இப்போதுதான் குடித்தேன். என்று சொன்னால் திரும்ப கேக்கமாட்டார்கள் நீங்கள் போன வீட்டுக்காரர்கள் உங்களை விட வசதியானவர்கள் என்றால் நீங்கள் வாங்கிப்போன ரொபி அல்லது பழங்கள் அவர்கள் பெரிதாக கணக்கேடுக்கமட்டர்கள்.      ஒருவர் வீட்டிற்குப் திடிரென்று போகமுடியாது போகவேண்டுமேன்றல் முற்க்குட்டியே ரெலிபோனில் சொல்லவேண்டும். அவர்கள் ஓம் வாங்கோ என்று     பச்சைக் கொடி கட்டவேணும்  போகும்போது ஏதாவது வாங்கிக்கொண்டு போகவேண்டும்.      பத்து நிமிடத்திற்கு மேல் தங்கினீர்கள் என்றால் வீட்டுக்காரர்கள் முள் மேல் உட்கார்ந்திருப்பது போல் தவிப்பார்கள். இந்தப் பத்து நிமிடத்திலேயே அவருக்கு நான்கு போன் கால்கள் வந்திருக்கும். பத்து நிமிடத்தில் நீங்கள் இடத்தைக் காலி செய்யவில்லையானால், கடைசி போன் பேசி முடித்தவுடன் பாருங்கள்  ஒரு அவசரமான வேலை  போன் வந்து விட்டது, நான் போக வேண்டும், இன்னொரு நாளைக்கு சிந்திப்போம் என்று உங்களைக் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைப்பார்கள். ஏண்டா இவர்கள் வீட்டுக்குப் போனோம் என்று ஆகிவிடும்.   ரொபி , பழம் செலவு 20 ஈரோ போகவர பஸ் , ரெயின் சிலவு 30 ஈரோ மற்றும் சில்லறை  சிலவுகளுடன் 75 ஈரோவை  செலவு செய்து போனால் என்ற வந்தோம் என்று  இருக்கும்   திரும்ப வீட்டுக்கு வந்தால் வீட்டுக்காரியின் அர்ச்சனையை வேறு அதையும்  சகித்துக்கொள்ளவேண்டும். இன்றைய உலகில் காலம் மாறியிருக்கிறதா? அல்லது மனிதர்கள் மாறியிருக்கிறார்களா? தெரியவில்லையே.        மிண்டும் சிந்திப்போம்.   தமிழ்கிறுக்கன்..பலெர்மோ!!!!

மேலும் படிக்கவும் 16 மறுமொழிகள் பண் த பாலா 09-09-2013