காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

ஆன்மிகம்

பக்கம் தேர்ந்தெடுக்கவும்:

ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுதல்.

பொதுவாக பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற விளக்கேற்றி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வழிபடுகிறார்கள்.    செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.    பூஜிக்க உகந்த காலம்   துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு காலம். ராகு தோஷம் நீங்க இந்த ஆராதனை நடைபெறுவதால், ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றித் துதிக்க வேண்டும். துர்கை கண்ணனுக்கு மூத்தவள் என்பதால், விஷ்ணுவின் அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் இவளுக்கு உகந்தவையே.   மேலும் அவளுக்கே உரித்தான அமாவாசை, பவுர்ணமி திதிகள் மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் இவளை ஆராதிப்பதற்குச் சிறந்த நாட்களாகும்.       காயத்திரி (சகல காரியங்கள் வெற்றி அடைய)   ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனஹ் ப்ரசோதயாத்   துர்கை (ராகுதோஷ நிவர்த்திக்காக)   ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமரி தீமஹி தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்   ஓம் சிம்மத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத்   ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது.    ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும்.அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.    நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகு கால வேளையில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கிய வாறு விளக்கு இருக்க வேண்டும்.    இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது. ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம்.    வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் செய்வதால் பலன் கிட்டும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 23-06-2016

தியானம் செய்யும் வழிமுறைகள்.

தியானம் என்பது எண்ணத்தால் இறைவனை ஆழ்ந்து சிந்தித்தல் என்று பொருளாகும். இது அன்றை காலந்தொட்டு இன்றைய காலம் வரை மக்களால் உணரப் பட்டதொன்றாகும்.   இறையுணர்வுகள் தேய்ந்து வரும் இக்காலத்தில் தியானம் என்ற சொல்லின் பொருளை சாமன்ய மக்களாலும், கல்வி அறியுள்ளோராலும் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. மனதைச் சற்றும் சலனமற்ற நிலையில் ஒரே எண்ணத்துடன் பிடிப்புடன் ஒரே நிலைப்பாட்டுடன் நிற்க வைத்தல் என்று தியானத்தைப் பற்றி பொதுவாக பொருள் கொள்ளலாம்.   நமது ஆன்றோர்கள் தியானம் என்ற சொல்லையும் தியானத்தையும் ஆன்மீகம் சம்பந்தமாக இணைத்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.   சிலர் தியானம் என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதனால் சாமான்யனுக்கு எந்தவித பயனும் இல்லையென்று உணர்ந்து அது ஒரு உபயோகமற்றச் சொல் என்று எண்ணம் கொண்டுள்ளனர். இதனால் மனிதனுக்கு எவ்வித பயனும் கிடையாது என்று தவறாக எண்ணி வருகின்றனர்.   மனிதனை நல்ல மனிதனாக்க மதம், கடவுள், தியானம், பக்தி போன்றவை இன்றியமையாததென்பதை இன்னும் பலரால் சரிவரப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இத்தகைய சக்திகள் யாவும் வாழ்வை நெறிப்படுத்தி, சரியான வழி நடத்தி அவன் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியையும், இன்பத்தையும் வாரி வழங்கும் மாபெரும் சக்திகளாகவே காலங்காலமாக அமைந்து வந்துள்ளன.   இவ்வுலக வாழ்க்கையிலேயே நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்கும் வல்லமை, மதம் கடவுள் நம்பிக்கை பொன்ற ஆன்மீக எண்ணங்களாலேயே நிறைவேற்றி வைக்க முடியுமென்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.   ஆழ்நிலை தியான விதிமுறைகள்   1. ஆழ்நிலை தியானத்தை தினமும் காலையிலும், மாலையிலும், பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம்.   2. உட்காரும் போது சௌகரியமாக உட்கார்ந்து கொள்ள வேண்டும், நேராக உட்கார வேண்டுமென்ற அவசியமில்லை.   3. தியானத்தின் போது வயிறு காலியாகயிருப்பது நல்லது.   4. தூங்கப் போகும் முன்பாக தியானத்தில் ஈடுபடக் கூடாது.   5. தியானம் செய்யும் போது ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டுமென்பதில்லை.   6. ஆற அமர உட்கார்ந்து பின் கண்களை மூடி பதட்டமேதுமின்றி அரைநிமிடம் கழிந்த பின்பு தியானத்தைத் தொடங்களாம்.   7. தியானம் செய்யுமிடம் அமைதியான சூழ்நிலையில் திகழ வேண்டும்.   8. தியானத்தின் போது நித்திரை வந்தால் விழித்திருக்க முயற்சிக்க வேண்டாம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 15-06-2016

எவ்வேளையில் எக்கடவுளை வணங்குவது?

சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப்பொழுது கடவுளைத்தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக்கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.   * விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்  * செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் * நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி * வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் * ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன் * மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் * கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி * திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை * மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி * புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி * தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி * புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி * விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி * உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி * வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர் * சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் * பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன் * பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர் * அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 26-05-2016

நமசிவாய எனும் மந்திரம்.

நமசிவாய' என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம் ஏற்படும்.   'நமசிவாய ஊம் நமசிவாய' என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.   'நமசிவயங் செலகை நமசிவாய' என மந்திரம் உச்சரித்தால் அறுபத்தி நான்கு பாஷானங்களினால் ஏற்படும் விஷங்களும் தீரும்.   'நமசிவாயம் லங்க நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.   'சவ்வும் நமசிவாய நமா' என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.   'ஶ்ரீயும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள்.   'ஊங்கிறியும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும். 'அலங்கே நமசிவாய நமோ' என்ற மந்திரத்தைச் சொன்னால் புகழ் மற்றும் பெருமை உண்டாகும்.   'வநம சிவாய' என்று செபித்தால் தேக சித்தி உண்டாகும்.   'ஓம் நமசிவாய' என்று செபித்தால் காலனை வெல்லலாம்.   'லங்கிரியும் நமசிவாய' என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்.   'ஓங்கிறியும் ஓம் நமசிவாய' என்று சொல்லி வந்தால் வாணிபங்கள் நன்றாய் நடக்கும். 'ஓங் ஊங் சிவாய நம உங்நமா' என்ற மந்திரத்தை உச்சரித்தால்    பதினெட்டு வகையான குட்டமும் தீரும்.   'லீங் க்ஷும் சிவாயநம' என்ற மந்திரம் உச்சரித்தால் பெண்கள் வசியம் ஏற்படும்.   'லூங் ஓங் நமசிவாய' என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.   'ஓங் அங்கிஷ சிவாய நமா' என்று ஓதினால் பூமியெங்கும் சஞ்சாரம் செய்யலாம்.   'அங் சிவாய நம' என்று உச்சரித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.   'அங் உங் வங் சிவாய நம' என மந்திரம் உச்சரிக்க உடலில் உண்டான நோய்கள் தீரும்.   'ஹம் ஹம் சிவாய நமா' என்று உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும்

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-03-2016

மார்கழியில் பிறந்தோர் குணாதிசயங்கள்.

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து பொதுவான தங்கள் குணாதிசயங்களை கீழே படித்து தெரிந்துகொள்ளவும். தமிழ் மாதம் என்பது ஆங்கில மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமாகும். உதாரணமாக தமிழ் தை மாதம் என்பது ஆங்கிலத்தில் ஜனவரி 15க்கும் பெப்பிரவரி 15க்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும்.   தை – (ஜனவரி 15 – பெப்பிரவரி 15) | மாசி – (பெப்பிரவரி 15 – மார்ச் 15) | பங்குனி – (மார்ச் 15 – ஏப்ரல் 15) | சித்திரை -(ஏப்ரல் 15 – மே 15) | வைகாசி – (மே 15 – யூன் 15)| ஆனி – (யூன் 15 – யூலை 15) | ஆடி – (யூலை 15 – ஆகஸ்ட் 15) | ஆவணி – (ஆகஸ்ட் 15 – செப்டெம்பர் 15) | புரட்டாசி – (செப்டெம்பர் 15 – அக்டோபர் 15)| ஐப்பசி – (அக்டோபர் 15 – நவம்பர் 15) | கார்த்திகை – (நவம்பர் 15 – டிசம்பர் 15) | மார்களி – (டிசம்பர் 15 – ஜனவரி 15)   குளிர்ந்த மாதமான மார்கழியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். ஒரு காரியத்தை துவங்கினால் அதை முடிக்காமல் தூங்க மாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம், அரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள் ஏற்றவை. இதில் ஈடுபட்டால் இவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும். ஆடம்பரத்தில் இவர்கள் விருப்பம் கொண்டவர்கள். சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் அதிகமாக செலவழிக்க வேண்டும் என விரும்புவார்கள். இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கையின் பின்பகுதியில் சிரமப்படுவார்கள். எனவே இவர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டு எதிர்காலத்தைப் பற்றி யோசித்து நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு சைக்கிளில் சென்றால்கூட வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதே நேரம் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இடிந்து போவார்கள். இந்த நேரத்தில் இறைவனை வணங்கி அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். சிறந்த எழுத்தாளர்களாகவும் இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் முக்கியமான எதைப்பற்றியாவது எழுதினால் அது உலகின் தலைவிதியையே மாற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கெட்ட சிநேகிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கெட்டவர்களுடன் சேர்ந்து மோசமான உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் வாய்ப்பு அதிகம். இதற்காக பின்னால் மிகவும் வருத்தப்படுவார்கள். அதே நேரம் படிப்பில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு திருமணத்தில் அதிக விருப்பம் இருக்காது. அதேநேரம் ஆண்கள் பெண் நண்பர்களுடனும், பெண்கள் ஆண் நண்பர்களுடனும் வாழ்வதற்கு பிரியப்படுவார்கள். மொத்தத்தில் சுதந்திரமான வாழ்க்கையை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் விரும்புவர். எனவே பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 12-02-2016