காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 பாண்டி:
காதலின் அளவை அதிகரிக்கும் குறிப்புகள்.
1 நா.சிவாஸ்:
பெரிய கப்பலையும் மூழ்கடிக்கக்கூடியது - பெஞ்சமின் பிராங்கிளின்.
1 thasan:
கும்பாபிஷேகம் மறுமலர்ச்சி மன்றக்கந்தன் - பாலசுப்ரமணியம்.
50 லொள்ளுபாண்டி:
1வது உலகப்போரின் 100வது ஆண்டு நினைவு.
15 palarajah:
எப்படியும் வாழலாமா .
7 திருமால் :
'இலங்கை அதிபர் திடீர் மர்ம மரணம்'.
12 மனோகரன் :
கனடா-பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் நன்றிகள் - விஜயநாதன்.
5 வெற்றிவேல் :
'5 ஆண்டுகளாகியும் போர் அடையாளங்கள் அழியவில்லை'
2 மனோகரன் :
கட்டிப்பிடித்தால் டென்சன் குறையுமாம்.
3 velaiutharaja:
ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் - லொள்ளுபாண்டி.
1 M .sajeeban:
கணவன்-மனைவி உறவை பேணவுதவும் அடிப்படை விடயங்கள்.
1 sivarajah:
ரசிகர்கள் மனது வைத்தால் ரஜினி முதல்வர் ஆகலாம்.
1 லொள்ளுபாண்டி:
40 வயதில் 26 தடவைகள் திருமணம் முடித்த பெண்.
2 ரமேஷ் :
இத்தாலி ஊரவர் ஒன்றுகூடல் படங்கள் - சங்கர்.
98 லொள்ளுபாண்டி:
தகவல் பண்கொம்.நெற்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

ஆன்மிகம்

பக்கம் தேர்ந்தெடுக்கவும்:

ஆரத்தி எடுக்கும் முறைகள்.

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.   சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.      தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.   ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.     ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.   மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.    மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.      அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.     எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.   

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 16-02-2014

இந்திய கலாச்சாரமும் காதலர் தினமும்.

மாசி 14ம் திகதி, இத்திகதிக்கு மேற்கொண்டு அறிமுகம் தேவையில்லை. காதலர்களுக்காகப்போராடிய வாலண்டைன் என்ற பாதிரியார் மறைந்த நாள் இது. காலத்தால் அழியாத காவியங்களைக் காதலர்களால் மட்டுமே படைக்க முடியும். அத்தகையவர்கள் காதலர் தினத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.     ஆனால் இந்த நாள், மேற்கத்திய நாகரிகத்தின் அடையாளம் என்று சிலரால் விமர்சனம் செய்யப்படுகிறது. இன்னும் சிலரால் இந்திய பாரம்பரியம் என்பது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்கள்தான் என்றும் சொல்லப்படுகிறது. காதல் என்பதே ‘காலம் கெட்டுப் போனதன் விளைவு’ என்று கூட சொல்லப்படுகிறது.   ஆனால், இந்திய வரலாற்றில் எப்போதுமே காதலுக்குச் சிறப்பான இடம் உண்டு. அது காலம் காலமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால், காதலர்கள் பல ஆண்டுகளாகவே இங்கே கொண்டாடி வருகிறார்கள். இந்து திருமணங்களில் எட்டு வகைகள் உண்டு. அதில் ராக்ஷச திருமணம் என்றும், கந்தர்வ திருமணம் என்றும் திருமண வகைகள் உண்டு. இதில், ராக்ஷச திருமணம் என்றால் ஓடி போய் திருமணம் செய்வது. கந்தர்வ திருமணம் என்றால் வெறும் காமத்துக்காக திருமணம் செய்து கொள்வது. இன்றைய ‘சேர்ந்து வாழும் கலாச்சாரத்தையும்’ கந்தர்வ விவாகத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இவை அனைத்தும் சாத்திரத்தின் படி அங்கீகரிக்கப்பட்டவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.   கிருஷ்ணர் ராதையைத் திருமணம் செய்தது ராக்ஷச திருமண முறையில்தான். முருகன் வள்ளியைக் கரம் பிடித்ததும் காதல் புரிந்துதான். தம்பியின் காதலுக்கு முழுமுதற் கடவுளான விநாயகர் உதவவும் செய்தார். ஏன், சிவனும், பார்வதியும் கூட காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தவர்கள்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர, இறைவனையே காதலனாகவும், கணவனாகவும் நினைக்கும் பக்தி இலக்கியங்கள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.   தமிழகத்தில் இந்துக்கள் கொண்டாடும் இரண்டு பண்டிகைகள் அல்லது விழாக்கள், காதலர்களுக்கே உரியது. அவை இரண்டும் வீடுகளில் கொண்டாடப்படுவதில்லை. கோயில் உத்சவங்கள் என்ற பெயரில் சமுதாய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. அவை பங்குனி உத்தரமும், வசந்த உத்சவமும்.   பங்குனி உத்தரம் என்றாலே சிவன் ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் வள்ளி - முருகன் திருகல்யாண உத்சவங்களும், விஷ்ணு ஆலயங்களில் சீதா - ராமர் திருகல்யாண உத்சவங்களும் நடைபெறுவது வழக்கம். இவை இரண்டும் மனம் இணைந்து, காதலித்து ஒன்று சேர்ந்த தம்பதிகளைக் கொண்டாடும் தன்மையே.   அடுத்து, வசந்த உத்சவம். சித்திரை மாத பௌர்ணமி முடிய 10 நாட்கள் நடைபெறும் இந்த உத்சவம் சிவன் ஆலயங்களில் அனுசரிக்கப்படுகிறது. பத்தாவது நாள் மன்மத தகனம் என்ற பெயரில் மன்மதனை சிவன் எரிப்பதும், பின்பு அவனை உயிர்த்தெழ வைப்பதுமாக கோலாகமாகக் கொண்டாடப்படும் இந்த உத்சவம் உண்மையில் இளைஞர்களுக்கானது. பத்து நாட்களும் இந்த உத்சவத்தில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், யுவதிகளுக்கு காதல் வலை வீசுவது ஆலயங்களில் பல ஆண்டுகளாக நடைபெறும் கண்கொள்ளா காட்சிகள். காதலுக்காக ஒரு நாள் அல்ல, பத்து நாட்களைத் தந்தவர்கள் நாம்.   தெய்வீக காதல் மட்டுமல்ல. மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன் - சுபத்திரை காதல், அவர்களது மகன் அபிமன்யு - துரியோதனன் மகள் உத்திரை காதல் ஆகியவை முதல் அம்பிகாபதி - அமராவதி காதல், நளன் - தமயந்தி காதல், அரிச்சந்திரன் - சத்தியவதி காதல், சென்ற நூற்றாண்டில் மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்திக்கும், ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் ஏற்பட்ட காதல் வரை ஏராளமான உதாரணங்கள் நமது இந்திய வரலாறு முழுக்கவே உண்டு.   இவையெல்லாம் பல ஆண்டுகளாக இந்திய பாரம்பரியம் காதலர்களைப் புறக்கணிக்காமல் அவர்களை நாயகர் - நாயகிகளாக்கிய பெருமைகளை நமக்கு உணர்த்துகின்றன.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 14-02-2014

10 திருமணப்பொருத்தங்கள்.

திருமணம் செய்யமுன் 10 பொருத்தங்கள் பார்க்கும் முறை.   1) தினம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.   2) கணம்:- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.      3) மகேந்திரம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.    4) ஸ்திரீ தீர்க்கம்:- பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.   5) யோனி:- நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.   குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு. 6) ராசி:- பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.    7) ராசி அதிபதி:- பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.    8) வசியம்:- பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.                 9) ரஜ்ஜு (மாங்கல்யம்):- நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.     10) நாடி:- 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.    அ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.   ஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.   இ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.   பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.      எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.   அ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.   ஆ) தினம்,கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.   இ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.   ஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.   இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 11-02-2014

வழிபாடுகளில் முக்கியம் வகிக்கும் நெருப்பு.

இந்துக்களின் வழிபாட்டில் நெருப்பு (ஜோதி) ஒரு முக்கிய இடம் வகுக்கிறது. நெருப்பு மிகச்சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும். இந்த குணங்களைக் கொண்ட நெருப்பை வணங்குவது முன்னோர் வகுத்த வழி.    அதுமட்டுமல்ல, நெருப்பு இடையறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனதிற்குள் உள்ள ஆட்டம் மெல்ல மெல்ல அடங்கும். நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி.    நெருப்பு என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குத்துவிளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒருமுகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில் போட்டு விடுகிறேன். எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று வழிபட்டால் போதும். நெருப்பு மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 09-02-2014

கடவுளுக்கேற்ற மலர்கள்.

அன்றலர்ந்த மலர்களால் சுவாமியை பூஜிக்கும்போது சுவாமிகளின் மனம் குளிர்கிறது.     இதனால், அகம் மகிழும் சுவாமிகள் நமக்கு வேண்டிய வரங்கள் தந்து பாவங்களைப் போக்கி அருள் புரிகின்றனர். எனவேதான், சுவாமி பூஜையின்போது பிற பூஜைப் பொருட்களை விட மலர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வாறு, பூஜைக்கு சிறந்த சில மலர்களில் வாசம் செய்யும் சுவாமிகள்.     தாமரை - சிவன் கொக்கிரகம் - திருமால் அலரி - பிரம்மன் வில்வம்- லட்சுமி நீலோத்பலம்- உமாதேவி கோங்கம் - சரஸ்வதி அருகம்மலர்- விநாயகர் செண்பகமலர்- சுப்பிரமணியர் நந்தியாவட்டை- நந்தி மதுமத்தை - குபேரன் எருக்கம் - சூரியன் குமுதம் - சந்திரன் வன்னி - அக்னி

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 04-02-2014

ஒன்பது தாற்பரியங்களை குறிக்கும் தாலி.

திருமணத்தின்போது பெண்ணிற்கு கட்டப்படும் தாலியும் அதன் மகத்துவங்களும்.     தாலி: தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது.   அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்க்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.   அவை:- 1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல் 2. மேன்மை 3. ஆற்றல் 4. தூய்மை 5. தெய்வீக நோக்கம் 6. உத்தம குணங்கள் 7. விவேகம் 8. தன்னடக்கம் 9. தொண்டு   ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.   இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு.   தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.     இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள். தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை. இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.     சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக்குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;     பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது.  உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம். மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி, ஆமைத் தாலி, புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.      

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 02-02-2014

பெருமிதம் கொள்ளும் இந்துக்கள்.

*இந்துக்களில் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற சொல்வதில்லை.    *இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் பழக்கங்களை "மூடநம்பிக்கை" என்று இழிவாக பேசுவது இல்லை.    *இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் கடவுளை தீய சக்தியாக பார்ப்பதும், அவர்களைவணங்குவது பாவம் என்று இல்லை.    *உலகின் பழமையான மதமாய் இருந்தாலும், பெரும்பான்மையானமதமாய் இல்லாது இருக்க காரணம், நாம் எந்த நாட்டையும் படை எடுத்து சென்று நாம் மதத்தை பரப்பாமல் இருந்தது. இப்படி இருந்தவர்களை அடிமை படுத்தி மற்ற மதத்தினர் அவர்கள் மதத்திற்கு நம் மக்களை மாற்றினர்.    *மேலும் நம் நாட்டில் நம்மைவிட மற்ற மதத்தினர்க்கே சலுகைகளும் சட்டங்களும் அதிகம்.    *ஆர்.எஸ்‌.எஸ்,இந்து முன்னணி போன்ற அமைப்புகளை "காவி தீவிரவாதிகள்" என்று அழைப்பதுக்கு முன், அந்த அமைப்புகளின் தொடங்க காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள். இந்துக்களின் ஒருங்கிணைப்புக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் தொடங்கப்பட்ட அமைப்பு அது. மேலும் இவ்வமைப்புகள் இல்லா விட்டால், இன்று நாம் தலையில் குல்லா அல்லது கழுத்தில் சிலுவை அணிந்து இருப்போம்.   *நம் மதம் இப்பொழுது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. *இந்து மதம் இந்தியாவின் பூர்வீக சொத்து. அப்படிபட்ட இந்து மதத்தை கலங்கப்படுத்த செய்யப்படும் எந்த ஒரு செயலும் தேச துரோகம்.    *நாம் ஒன்றும் மற்ற மதத்தினர் செய்வது போல் மற்றவர்களை மூளை சலவை செய்து பிழைப்பு நடத்துவது இல்லை.    *நமக்கு மற்ற நாடுகளில் இருந்து, வேற்று மதத்தினர்களை நம் மத்தினராக மாற்ற பண உதவியோ பொருள் உதவியோ கிடைப்பதிலை.    *நமது நாட்டின் பழம்பெருமைக்கானகாரணம் நம் மதமே. நம் மதம் அழிவாதல் அழிவது நம் நாட்டின் பெருமையும் தான். மேலும் இந்துக்கள் மற்ற மதத்தினரை மனிதனாக பார்தாலும், அவர்கள் நம்மை பாவிகளாகதான் பார்க்கின்றனர். நாம் அவர்களில் தவறு செய்யும் ஒருசிலரை சித்தரிப்போம். ஆனால் அவர்கள், நாம் அனைவரையும் பாவிகளாக தான் சித்தரிக்கின்றனர்.      *நாம் யாரையும் கெடுக்காத போது நம்மை கெடுக்க நினைக்கும் எவருக்கும் இடம் கொடுக்காதீர்கள். சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! அது இயலாவிட்டால், பின்நின்று குறைசொல்வதையாவது தயவு செய்து நிறுத்துங்கள்.    வாழ்க பாரதம்! வளர்க இந்து மதம்!

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 01-02-2014

சம்மணமிட்டு இருந்து உண்ணும் தமிழர் கலாச்சாரம்.

தமிழ் கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து உண்பது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள். இது சரியா தவறா.   முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன.   சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

மேலும் படிக்கவும் 4 மறுமொழிகள் சுதர்சன் 30-01-2014

தமிழை நேசி - தமிழ் கிறுக்கன்.

தமிழ் கிறுக்கன் - இத்தாலி.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 29-01-2014

சுக்கிலத்திலிருந்து பிண்டம் வரை.

பிள்ளை பிறப்பதற்கு மூலகாரணமான பொருள் ஆணிடமுள்ள சுக்கிலம் எனப்படும் தாதுவாகும்.     இத்தாதுவில் 84 அம்சங்கள் உள்ளன. அதில்  இருபத்து எட்டு அம்சங்கள் அந்த மனிதன் உட்கொள்ளும் உணவு மற்றும் அருந்தும் நீர் முதலியவற்றால் உண்டாவான;  பெற்றோரிடமிருந்து இருபத்தியொரு அம்சமும்;  பாட்டனாரிடமிருந்து பதினைந்து அம்சமும்; முப்பாட்டனாரிடமிருந்து பத்து அம்சமும்; நான்காம் மூதாதையிடமிருந்து ஆறு அம்சமும்;  ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று அம்சமும்; ஆறாம் மூதாதையிடமிருந்து ஒரு அம்சமும்  என ஆறு தலைமுறையினரின் ஐம்பத்தியாறு அம்சங்கள் ஏழாம் தலை முறை மனிதனின் சுக்கிலத்தோடு தொடர்பு கொண்டவை.     இதில் அதிகமாக தங்கள் அம்சத்தை தங்கள் வாரிசுகளுக்குத் தருபவர்கள் பெற்றோர், பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே. எனவேதான் திவசத்தின் போது இந்த மூவரின் பெயர்களைக்கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது.

மேலும் படிக்கவும் 10 மறுமொழிகள் சுதர்சன் 27-01-2014

மனம் மௌனமாகினால்?

மனித மனத்தின் சபலங்களை, சலனங்களை எப்படி அடக்குவு என்பது பற்றி பரந்தானமன் அர்ஜூனனுக்கு உபதேசித்த பகுதி பகவத் கீதையின் தியான யோகமாகும்.   1/ சகல காரியங்களுக்கும்: இன்பத்திற்கும்-துன்பத்திற்கும், நன்மைக்கும்-தீமைக்கும், இருட்டுக்கும்-வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும்-புண்ணியத்திற்கும், அன்புக்கும்-வெறுப்புக்கும் மனமே காரணமாகிறது.   2/ மனதின் அலைகளே உடம்பைச்செலுத்துகின்றன.   3/ பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக்கொண்டு வழி நடத்துகிறது.   4/ கருணையாளனைக்கொலைகாரனாக்குவதும் மனம்தான். கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.   5/ இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை மனத்தின் ராகங்கள் அழித்துவிடுகின்றன.   6/ உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக்கொள்வதால் மனதின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.   கடிவாளம் இல்லாத இந்த மனக்குதிரையை அடக்குவது எவ்வாறு?   1/ எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனதின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.   2/ பற்றறுப்பது, சுற்றுச்சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.    3/ நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்ற முடிவுக்கு வருவது.   4/ ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப்பம்பரம்போல் ஆட்டி வைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டு கொள்வது.   5/ காலையில் இருந்து மாலைவரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று தேற்றிக்கொள்வது.   பாசத்திலே மூழ்கிக்கிடந்த பட்டினத்தார் ‘ஞானி’ யானது இப்படித்தான். தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர் ஆண்டவனின் திருப்புகழைப்பாடியதும் இப்படித்தான்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 23-01-2014

விபூதி அணிவதனால் ஏற்படும் பலன்கள்.

விபூதி அணிவதால் தடையற்ற இறைச்சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.    உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப்பட்டவைகளை ஒதுக்கும் மனப்பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப்பிறவிப்பிணி அறுத்து மோக்கம் (மோட்சம்) செல்ல வழிகாட்டும்.    இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்:- கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே!

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-01-2014

கும்பிடும் முறைகள்.

வீட்டில் பூஜை செய்யும் போது கைகளைக்குவித்து வழிபடுவோம். ஆனால் கோயில் வழிபாட்டில் கைகளைத்தலைக்கு மேலே குவித்து வழிபடவேண்டும். கோயில் மூலவருக்கு இந்த முறை பொருந்தும்.      சிலருக்கு பிரதான சிவனை விட தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்றவர்கள் இஷ்டதெய்வமாக இருக்கும். இஷ்ட தெய்வத்தின் சந்நிதியில் கைகளை உச்சிக்கு நேராக நன்கு உயர்த்தி தலையில் படாமல் கும்பிட வேண்டும்.      குருநாதரை வணங்க புருவத்திற்கு நடுவிலும், தந்தையை வணங்க வாய்க்கு நேராகவும், தாயாரை வணங்க வயிற்றுக்கு நேராகவும், மற்றவர்களை மார்புக்கு நேராகவும் கைகுவித்து வணங்க வேண்டும்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 20-01-2014

பெற்றோரின் கால்களில் விழுந்து வணங்கும் மரபு.

மார்கண்டேயனின் மரணத்தை முன் கூட்டியே அறிந்துகொண்ட அவர் தந்தை வயதான சான்றோர் அனைவரின் காலிலும் விழச்செய்தார்.அதே போல் சப்த ரிசிகள் காலில் விழும்போது அவர்கள் சிரஞ்சீவியாக வாழு என்றார்கள்.     அப்புறம்தான் அவர்களுக்கே மார்கண்டேயனின் அல்பாயுசு அமைப்பு தெரிய வந்தது.இருந்தாலும் சப்த ரிஷிகளின் ஆசிர்வாதத்தால் சிவபெருமானால் மார்கண்டேயன் சிரஞ்சிவியாக வாழ்ந்தார் என்பது புரணாமாகும்.     நம்முடைய முதல் தெய்வமான பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கினால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி வளமான வாழ்வு அமையும் என்பதே உண்மையாகும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 18-01-2014

விரதத்துக்கு சமைக்கும் உணவுகளில் வெங்காயம் சேர்க்கக்கூடாது.

விரதத்துக்கு ஆக்கும் உணவுகளில் வெங்காயம், உள்ளி சேர்க்கக்கூடாது என்பது எதற்காக?     விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள்.    விரதமிருப்பவர் அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலமோ சலமோ கழிக்க நேரிடுமே என்பதால் தண்ணீர் கூட அருந்தாமல் பசித்திருந்து சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக்கூறியுள்ளனர்.      உபவாசம் என்றால் இறைவனுக்கு அருகில் இருத்தல் என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், வெங்காயம், உள்ளி இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், உள்ளி இவற்றைச்சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 16-01-2014

இந்து மதத்துக்குள் உள்ளடக்கமுடியாத வாஸ்து.

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதம் சார்ந்த ஒன்று என்று இன்றளவில் பலரால் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் வாஸ்துவை அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகும் எவரும் அதை மதம் சார்ந்த விஷயமாக கருதமாட்டார்கள்.  ஆறறிவு கொண்ட மனிதன் சமுதாயத்தால் கூறப்படும் அனைத்து கருத்தையும் தன் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்த பிற்பாடே அதனை நம்ப வேண்டும்.   வாஸ்துவில் கூறப்படும் உண்மைகள் அனைத்தும் அறிவியல் சார்ந்தே இருக்கிறது என்கிறபோது அது எப்படி மதம் சார்ந்த விஷயமாக கருதப்படும்.  எந்த நிலையிலும் வாஸ்துவில் பணத்திற்காக விற்கப்படும் பரிகாரப் பொருட்களுக்கும், தேவையில்லாமல் செய்யப்படும் பூஜை, மந்திரம், தந்திரம் போன்ற கண்கட்டு வித்தைகளுக்கு என்றுமே வேலையில்லை.  எனவே சூரியனை ஆதாரமாகவும், பூமியை இருப்பிடமாகவும் வைத்துள்ள நம் மனித இனம் அனைத்திற்கும் வாஸ்து என்பது அடிப்படையான ஒன்றாகும். இது என்றைக்குமே மதத்தின் கோட்பாட்டுக்குள் வராது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 15-01-2014

ஒரு மாம்பழத்துக்காக முருகனின் கோபம்.

இந்துமதத்துக்குள் பல்வேறு தத்துவப்புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச்சரியாக அந்தப்புதையல்களைக்கண்டெடுத்தவர்களைத்தான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா?  சேவற்கொடியோன் கதை என்ன சொல்கிறது?    ஞானம் அடைதலுக்கான இருவழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி.      உலக விஷயங்களில் உழன்று உலக விஷயங்களைச்சுற்றி வந்து அனுபவித்து பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. இது இப்போது உனக்கு வேண்டாம். உள்ளே விஷயக்குவியல் இருக்கிறது. தனியே ஓடு. குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். தவம் செய். நீ ஞானத்தைத்தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப்பழம் ஞானப்பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான் முருகக்கடவுளின் கோபம் கூறும் செய்தி.  

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 14-01-2014

புகும் வீட்டிற்கு செய்யவேண்டிய ஹோமங்கள்.

நாம் கடினமாக உழைத்து ஒரு வீடு கட்டி வருகிறோம். இன்னும் 2 மாதத்தில் வீட்டு வேலைகள் நல்லபடியாக முடிந்து விடும் அதன் பின்னர் புதிய வீட்டில் குடிபோகும் முன்பு என்னென்ன ஹோமங்கள் செய்ய வேண்டும்?    யாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் கேலி செய்கிறார்கள் நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது. காசும் நேரமும் தான் செலவே தவிர வேறு எந்த பயனும் இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.     பொதுவாக நாம் பல நேரங்களில் வெளி தோற்றங்களை வைத்தே அனைத்து விஷயங்களையும் உண்மைகளை தேடுகிறோம் அது சரியான அணுகுமுறை அல்ல உண்மை என்பது வெளித்தோற்றத்தில் மட்டும் தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது பலா பழத்தின் வெளிபாகத்தை மட்டும் கணக்கு போட்டால் உள்ளே இருக்கும் சுவையான சுழைகள் கிடைக்காமலே போய்விடும்.   எனவே உண்மை என்பது வெளியில் மட்டுமல்ல உள்ளேயும் இருக்கிறது. அதாவது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாத சூட்சம வடிவிலும் உண்மைகள் உண்டு யாகத்தில் உள்ள உண்மைகள் அப்படிப்பட்டதே நெருப்பு மட்டும் தான் கீழிருந்து மேல் நோக்கி செல்லும் இயற்க்கை சக்தியாகும். அதில் பூமியில் உள்ள அதிர்வுகளை எடுத்துகொண்டு பிரபஞ்சத்தில் சேர்க்கும் சக்தி இருக்கிறது என்று வேதங்கள் சொல்கின்றன அயன வெளியில் பல வித அதிர்வுகள் சதா சஞ்சாரம் செய்தவண்ணம் உள்ளது. மூலிகை பொருட்களை ஆகுதிகலாக கொண்டு சொல்லப்படும் மந்திர அதிர்வுகளை அக்னி பிரபஞ்ச அதிர்வுகளோடு சேர்க்கின்றன இதன் மூலம் யாகம் மற்றும் ஹோமம் செய்யும் கர்த்தா பல நன்மையை அடைகிறான் அந்த நன்மை என்பது கண்ணுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.     வீடு என்பது மனிதர்கள் வாழும் ஒரு கூடாரம் மட்டுமல்ல வாஸ்துபடி கட்டப்படும் இல்லங்கள் அயன வெளியில் உள்ள நல்ல அதிர்வுகளை தனக்குள் ஈர்க்கும் சக்தி வாய்ந்த கேந்திரங்களாகவும் இருக்கிறது. எனவே இல்லங்களில் நல்ல எண்ணங்களும் சந்தோசங்களும் நிறைய வேண்டுமென்றால் அவற்றில் தொடர்ந்து சத்கர்மாக்கள் செய்யப்பட வேண்டும். வைதீக முறைப்படி சத்கர்மாக்கள் என்றால் அவற்றில் ஹோமங்களும் அடங்கும் மனிதன் வாழ்வதற்கு புதிதாக ஒரு வீட்டை உருவாக்கி அதில் குடியேறும் போது பிரணவ வடிவான அதிர்வுகள் நிறையும் படி முதலில் செய்ய வேண்டும். அதற்கு உகந்த ஹோமம் கணபதி ஹோமமாகும் இல்லத் தலைவனுடைய நேரங்காலங்களை சரிபடுத்தி அவனை வீட்டில் செளக்கியமாக வாழ செய்வது நவக்ரக ஹோமமாகும். அதே போல கட்டுமானத்தில் உள்ள குறைபாடுகளையும் தோஷங்களையும் நீக்க வல்லது வாஸ்து ஹோமமாகும். ஒரு புதிய வீட்டில் குடிபோகும் முன்னால் இத்தகைய ஹோமங்களை செய்வது வைதீக நெறிப்படி மிகவும் சிறந்ததாகும்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 13-01-2014

நெருப்பை வணங்கும் இந்துக்கள்.

இந்துக்களின் வழிபாட்டு முறையில் நெருப்பு ஒரு முக்கிய இடம் வகுக்கிறது. நெருப்பு மிகச்சுத்தமானது, மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக்கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும். இந்த குணங்களைக்கொண்ட நெருப்பை வணங்குவது முன்னோர் வகுத்த வழி.      அதுமட்டுமல்ல நெருப்பு இடையறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத்தோன்றும். உற்று அந்த சலனத்தைக்கவனித்தால் அந்த ஆட்டத்தைப்பார்க்க நம்முடைய மனதிற்குள் உள்ள ஆட்டம் மெல்ல மெல்ல அடங்கும். நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச்செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி.     

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 11-01-2014

ஆண்டவனின் வாகனமாகிய விலங்குகள்.

அனைத்து உயிர்களும் ஆண்டவனின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால் ஆண்டவனின் முன் நேரெதிர் குணம்கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும்.     மயிலும் பாம்பும் முருகனிடமும்,  கருடனும் பாம்பும் விஷ்ணுவிடமும், காளையும் சிங்கமும் சிவபார்வதி முன்நிலையிலும் சாந்தத்துடன் கூடி இருப்பதைக்காணலாம்.      எதிரெதிர் குணமுள்ள விலங்குகளே கடவுளின் முன் கூடி வாழும் போது ஒரே இனத்தில் பிறந்த மனிதன் அன்புடன் கூடி வாழ்ந்தால் என்ன என்பதை இது வலியுறுத்துகிறது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 09-01-2014

மரணச்சடங்குக்கு போய் வந்த பின் முழுகவேண்டிய தேவை.

மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் முழுக வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்   ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.   சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.     இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.   இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.     இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.  

மேலும் படிக்கவும் 10 மறுமொழிகள் சுதர்சன் 07-01-2014

கோயிலுக்கு செல்வதனால் அறிவியல் ரீதியாக ஏற்படும் பயன்கள்.

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது.   இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது. இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது. பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. அதேபோல் காலனி இல்லாமல் பரிகாரத்தை வலம் வரும்போது நம் பாத்திலுள்ள, உடல் பாகங்களுகான அனைத்து புள்ளிகளும் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 05-01-2014

மகிமைகள் நிறைந்த ஓம் எனும் பிரணவ மந்திரம்.

ஓம் எனும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.  ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.     ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.   வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.      எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.    வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.      சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.  ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.      வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக்கூடாது.     ஓம் என்ற எழுத்தை கோலமாக தரையில் போடுவது.   சில வீடுகளில் ஓம்  என்ற எழுத்தை வாசலில் கோலமாக போடுகிறார்கள். அதை பார்க்கும்போது மனதிற்கு சங்கடமாக இருக்கிறது. புனித சின்னங்களை தரையில் போடுவது அவமரியாதை இல்லையா? விளக்கம் தரவும்.     சிலருக்கு எது புனிதம், எது புனிதமில்லை என்ற அறிவு இருப்பதே இல்லை. தனக்கு பிடித்தமான சினிமா நடிகரின் படத்தை யாராவது தப்பி தவறி கீழே போட்டு விட்டால் வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பார்கள். ஆனால் அவர்களோ தனது பெற்றோர் படத்தையோ, இறைவனின் திருவுருவ படத்தையோ குப்பை மேட்டில் எறிந்தால் கூட கண்டுகொள்ள மாட்டார்கள் இது கலியுக கொடுமை.      “ஓம்” என்பது ஹிந்து மதத்தின் தனிப்பட்ட சொத்து அல்ல, அது உலகம் முழுமைக்கும் சொந்தமானது. ஜைனர்களும், பெளத்தர்களும் அதை அப்படியே பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஆமென் என்ற வார்த்தையில் ஓம் நடு மையமாக மறைந்துள்ளது. இஸ்லாமியர்களின் ஆமீன் என்பதில் ஓம் இருக்கிறது.      பூமியில் மூன்று பங்கு உயிரினம் தண்ணீரில் வாழ்கிறது. ஒரு பங்கு உயிரினம் காற்றில் வாழ்கிறது. ஆனால் அகில புவனமும் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தில் வாழ்கிறது. அதனால் தான் அதை உலகுக்கே பொதுமையானது என்று துணிந்து கூறுகிறேன். அப்படிப்பட்ட பிரணவ மந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது மனிதனின் முதல் கடமை.      “ஓம்” என்ற அட்சரத்தை மனித காலடிகள் படாத ஆலய வளாகங்களில், பூஜை அறையில் கோலமாக போடுவது தொன்று தொட்டு இருந்து வருகிற மரபு. எனவே அதை நாமும் கடைபிடிக்கலாம். அதில் தவறில்லை இவைகள் தவிர வேறு எந்த இடத்திலும் புனித சின்னங்களை தரையில் வரையக்கூடாது. அது சரி இப்போது நமது தமிழ்நாட்டில் பெண்கள் தினசரி கோலம் போடுகிறார்களா? ஆச்சரியமாக இருக்கிறதே கோலம் போடுவதை பெண்ணடிமை தனத்தில் சேர்க்கவில்லையா?

மேலும் படிக்கவும் 12 மறுமொழிகள் சுதர்சன் 04-01-2014

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

ஆஸ்திகர் ஒருவர் பல கோயில்களையே கட்டி வந்தார். ஆனால் அவருக்கு இறுதியில் ஒரு சந்தேகம் எழுந்தது. கடவுள் உண்மையிலே இருக்கிறானா இல்லாவிட்டால் என் வாழ்கையே வீணாக்கி விட்டேனா என்ற சந்தேகம். ஒரு நாள் அதிகாலை புத்தரை காண அந்த ஆஸ்திகர் வந்தார். புத்தரிடம் கேட்டார் "கடவுள் இருக்கிறா?" என்று. புத்தரிடம் கடவுள் இருக்கிறாரா பலர் கேட்டபோது பதில் கூறுவது இல்லை மெளனமாக இருந்து விடுவார். ஆனால் இந்த ஆஸ்திகர் கேட்ட கேள்விக்கு "கடவுள் இல்லை!" என பதில் கூறினார். சிஷ்யர்களும் மகிழ்ந்தனர் கடவுள் இல்லை என நிம்மதி அடைந்தனர்.   அன்று மாலைநேரம் ஒரு நாஸ்திகர் வந்தார். அவர் பல ஆஸ்திகரையே நாஸ்திகராக்கிய நாஸ்திகர். அவர் மரணம் அடையும் காலம் வந்தது. அப்போது அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. கடவுள் உண்மையில் இருந்தால் என் வாழ்கையே வீணாக்கி விட்டேனா என்ற சந்தேகம் வந்தது. அவர் புத்தரிடம் கேட்டார் கடவுள் இருக்கிறாரா என்று. புத்தர் 'கடவுள் இருக்கிறார்!" என்றார். புத்தரின் இந்த பதிலால் சிஷ்யர்களும் குழப்பம் அடைந்தனர்.     புத்தர் ஏன் இப்படி கூறினார் என்று உங்களுக்கும் குழப்பமாக இருக்கும். ஏன் அப்படி கூறினார் என்றால் இந்த ஆஸ்திகரும் நாஸ்திகரும் தாங்கள் சுயமாக தேடி கடவுளை அறியவில்லை. அடுத்தவர் நம்பிக்கையில் தான் வாழ்ந்து இருக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்கு அந்த சந்தேகம் அடிமனதில் ஒளிந்து இருந்து இருக்காது. உண்மையில் எமக்கு கடவுள் இருக்கிறானா இல்லையா என்பது தெரியாததே உண்மை. எமக்கு அந்த தேடல் இருந்தால் புத்தர் விவேகானந்தரை போல் தேடி உணர்ந்தாலே முழுமையான பூரணத்தெளிவு அடைவோம்.

மேலும் படிக்கவும் 4 மறுமொழிகள் சுதர்சன் 03-01-2014

ஆணும் பெண்ணும் சரி நிகரானவர்கள்.

தமிழர் பண்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி நிகர் சமமான இடம் கொடுக்கப் பட்டுள்ளது. இதை பல்வேறு இலக்கியங்கள் வலியுறுத்தி உள்ளது. சங்க இலங்கியங்கள் முதல் அண்மைகால ஆன்மீக இலக்கியங்கள் வரை தமிழர்கள் இதை சுட்டிக் காட்டியுள்ளனர். அருட்பெருஞ்சோதி அகவல் எழுதிய வள்ளலார் இதை மேலும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். இயற்கையில் உள்ள ஆண் பெண் என்னும் தத்துவத்தை ஏழு வரிகள் மூலமாக வெளிக் கொணர்ந்து உள்ளார் வள்ளலார். இந்தப் பாடல் வரிகளின் மூலமாக அவர் கூறுவதாவது,   ஒவ்வொரு உயிர்களிலும் ஆண் பெண் என்ற தத்துவ அமைப்புகள் பிறப்பின் முதலே உள்ளது. அவைகள் தனித் தனியே படைக்கப் படுவது அல்ல. ஒவ்வொரு ஆணுக்கு உள்ளேயும் பெண்ணின் தத்துவமும் , ஒவ்வொரு பெண்ணுக்கு உள்ளேயும் ஆணின் தத்துவமும் பின்னிப் பிணைந்து தான் படைக்கப் படுகிறது. இவ்வாறு தான் இயற்கை இவ்வுலகை படைத்துள்ளது. நம் எல்லோருக்குள்ளும் ஆண் தன்மையும் பெண் தன்மையும் சேர்ந்தே இயற்கை படைத்துள்ளது. ஆதலால் இவ்வுலகில் உள்ள உயிர்களுள் எவையும் முழுமையான ஆணும் இல்லை , முழுமையான பெண்ணும் இல்லை. இரண்டும் கலந்தே படைக்கப் பட்டுள்ளது.   அகம் புறம் என சங்க இலக்கியங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகச் சரியான சமமான இடத்தை கொடுத்துள்ளனர் தமிழர்கள். காலத்திற்கு தகுந்தாற் போல் ஒரு ஆண், பெண் தன்மையை வெளிபடுத்துகிறான். அவனிடம் உள்ள தாய்மை, பாசம் வெளிப்படுகிறது . அதே போல் பெண்ணும் போருக்கு செல்கிறாள். கோபம், வீரத்தின் மூலமாக தனது ஆண்மையை வெளிப்படுத்துகிறாள். ஆகவே இவ்வுலகில் ஆண்களும் பெண்களும் சரி நிகர் சமமானவர்களே என்பதை உணர்ந்து , ஒவ்வொரு உயிர்களின் உள்ளே இருக்கும் பெண்மையை போற்றுவோம். பெண்களின் மீதான வன்முறையை தடுப்போம். தமிழர் பண்பாட்டை நிலை நிறுத்துவோம். படத்தில் காண்பது கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் இறைவனே ஆணுமாகி பெண்ணுமாகி இருப்பதை அழகிய சிற்பத்தின் வாயிலாக தமிழர்கள் காட்டி உள்ளனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 02-01-2014

தமிழ் திருமண முறைகள்.

இக்காலத்தில் இடம்பெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன. திருமணத்தின் போது செய்யப்படும்  சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை, குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் இடம்பெறுபவை. இயந்திரம்போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த்திருமண முறைகள் கீழே ஒழுங்காக தொகுத்து தரப்பட்டுள்ளன.       திருமண உறுதி / நிச்சயதார்த்தம்:  திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையும் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.   சடங்கு முறைகள் : அவையில் சான்றோர்களுடன் மணமக்களை சார்ந்த பெற்றோர்கள் அமர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையிட்டு சந்தானம், பன்னீர் கொண்டு நலுங்கு செய்து கொள்ள வேண்டும். இரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) சபையில் படித்து காட்ட வேண்டும். மணமக்களை மேடைக்கு அழைத்து சங்கல்பம் செய்து திருமண உறுதி புடவையும், அணிகலன்களையும் கொடுத்தல் வேண்டும். மணமகள் அப்புடவையை அணிந்து வந்து சபையோரை வணங்க வேண்டும். சான்றோர்கள் மஞ்சள், அரிசி தூவி ஆசீர்வதித்து பின் மகளிர் நலுங்கு இடுதல் வேண்டும்.     தமிழ் திருமுறை, திருமண தீபம்: மனையில் மூன்று கலசங்கள், மஞ்சள் பிள்ளையார், முளைப்பாலிகை, நவகோள்கள் வைத்து இரு குத்து விளக்கில் ஒன்றில் மணமகள் வீட்டாரும், மற்றொன்றில் மணமகன் வீட்டாரும் தீபம் ஏற்ற வேண்டும்.     அம்மை அப்பர் கலச வழிபாடு: மூன்று கலசத்தில் முதல் கலசம் கொண்டு புண்ணிய வாசம் செய்த பிறகு அடுத்த இரு கலசங்களில் இத்திருமணத்துக்கு சாட்சியாக அம்மை அப்பர் தெய்வத்தையும் ஆவாஹனம் செய்து வரவழைக்க வேண்டும்.   நவகோள் வழிபாடு: முழு பச்சை பாக்குகள் ஒன்பதை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பஞ்சாங்கத்தில் உள்ளபடி கிரகங்களை வரிசை கிரமமாக நிறுத்தி தமிழ் நவக்கிரஹ மந்திரத்தை சொல்லி நவக்கிரக பூஜையை முடித்த வேண்டும்.     முளைப்பாலிகை வழிபாடு: தமிழ் திருமணங்களில் முளைப்பாலிகை வழிபாடு மிக முக்கியமாக இடம் பெறுமாம் திருமண விழாவில் இறைவனின் திருவுளத்தை அறிந்த கொள்வதற்கே முளைப்பாலிகை வழிபாடு செய்தல் வேண்டும்.     மணமக்களை கன்னியர்களாக வரவழைத்தல்: மணமகள், மணமகனை மேடைக்கு வரவழைத்து அம்மை அப்பர், நவகோள், முளைப்பாலிகை இவற்றை வணங்க செய்து புண்ணியகவாசம் செய்த நீரை மணமக்கள் மீது தெளித்து புத்தாடை மற்றும் தங்க நகைகளை கொடுக்க வேண்டும்.   மங்கள நான் வழிபாடு: மங்கல நானை தேங்காயில் சுற்றி மஞ்சள் அரிசி தட்டில் வைக்க வேண்டும். மங்கல நாணில் உள்ள திருமாங்கல்யத்தை மேலாக வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, தர்ப்பையில் மங்கல நாணின் பாதத்தை தொட்டு கொண்டு தமிழ் வேத மந்திரம் அல்லது அபிராமி அந்தாதி பாடலை பாட வேண்டும்.     முன்னோர்கள் வழிபாடு: வந்தவுடன் மணப்பொங்கல் வைத்திருப்பார்கள். அதற்கு பூஜை செய்து விட்டு, முன்னோர்கள் உருவப் படத்தையோ அல்லது அருவமான மஞ்சள் கூம்பையோ வைத்து மங்கல பொருட்கள் கொண்டு அலங்கரித்து உதிரிப்பூக்கள் கொண்டு தமிழ் மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.     பாத பூஜை: பெற்றோர்களுக்கு மணமக்கள்பாத பூஜை செய்யும்போது நாற்காலியில் அமர்ந்து நிதானமாக பாத பூஜையை ஏற்று மணமக்களை ஆசீர்வாதிக்க வேண்டும். மணமகள் தான் முதலில் பாத பூஜை செய்ய வேண்டும்.   மங்கல நான் ஆகுதி: அவையோர்க்கு அனுப்பி ஆசீர்வதிக்கப்பட்ட மங்கல நாணை குண்டத்தில் அருகில் வைப்பார்கள். திருமந்திரம் ஓதி மணமக்களை தொட்டு வணங்கி தமிழ் வேதியர் திருமந்திரம் ஓதி பெரிய மனிதரிடம் மங்கல, நானை கொடுக்க அவர் மணமகனிடம் கொடுக்க மணமகள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சு இட வேண்டும்.     விளக்கேற்றும் உரிமை, பட்டம் கட்டுதல்: மணமக்கள் பின்புறம் நாத்தனார்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி நிற்க வேண்டும். தாலி கட்டிய பிறகு மணமகளின் அப்பா, மணமகளின் தாய்மாமன் இவர்கள் மணமகளுக்கு நெற்றியில் பட்டம் கட்ட வேண்டும்.     அக்னி வலம் நிகழ்ச்சி: மணமகன் சுண்டு விரலோடு மணமகள் சுண்டு விரலை சேர்த்து கொண்டு அக்னி வலம் வரவேண்டும். காமாட்சி அம்மன் தீபத்தோடு மணமகனுக்கு முன்னே ஒரு பெண் செல்ல வேண்டும். மணமகளுக்கு பின்னால் முளைப்பாலிகையை ஏந்திக்கொண்டு சிறுமிகள் செல்ல வேண்டும்.   அம்மி மிதித்தலும் மெட்டி அணிவித்தலும்: அம்மி மிதித்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சி அக்னி வலம் வரும் பொழுது மூன்றாவது சுற்றில் நடைபெறும் அம்மி, என்பது கருங்கல்லால் ஆனது. இது உடையுமே தவிர வளையாது. மணமகளானவள் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற இந்த அம்மியை போல் உழைத்து தேய்ந்து உடைய வேண்டுமே தவிர, குடும்ப கௌரவத்தை என் இஷ்டத்துக்கு வளைக்கமாட்டேன் என்று உறுதி கூறும் நிகழ்ச்சி.     ஆசீர்வாத நிகழ்ச்சி: வேதியர் தமிழ் வேத மந்திரம் ஓதி மணமக்களுக்கு திருநீறு இட்டு ஆசீர்வதித்த பின் பெரியோர்கள் தத்தம் குல வழக்கப்படி மஞ்சள் அரிசி தூவி வாழ்த்துவார்கள். இறுதியில் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து சிறப்பாசனத்தில் அமர செய்து வாழ்த்துவார்கள்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 01-01-2014

கண் துடிப்பும் அதன் விளைவும்.

  இடது கண் துடித்தால் பெண்களுக்கு லாபம் எனவும் ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக்காட்டுகிறது.    ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப்பிடித்தபடியே புதுமணத்தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர்.  ''ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல் சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது,'' என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார்.      அந்த சமயத்தில் எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது.      வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது.    பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ அவனுக்கு இடதுகண் துடித்தால் அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 31-12-2013

எக்கடவுளை வழிபடுவது?

சிவனா, முருகனா, பிள்ளையாரா, விஷ்ணுவா?  இத்தனை கடவுள்களை வைத்துக்கொண்டு எந்த இறைவனைத்தான் நாங்கள் வழிபடுவது?   உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்ணு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம். முதலில் இந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர்.   சிவா என்றால் புணிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்ணு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன். இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தன்மையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ?     கீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம், ஏன் ஏசு எனும் அரூபத்திலும் நினைக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான்.அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது.   நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான். புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.   இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள்.  

மேலும் படிக்கவும் 19 மறுமொழிகள் சுதர்சன் 29-12-2013

நல்லெண்ணெய் முழுக்குப்பற்றிய விஞ்ஞான நோக்கு.

எம் முன்னோர் ஒவ்வொரு சனியிலும் நல்லெண்ணை உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது. இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது. அதனால் அதனை ஒரு பாபக்கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனி கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்ளில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு. இத்தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிச்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணையய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் தோய வேண்டும், அதனால்தான் எமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணை வைத்து தோயும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை பின்பற்றப் பெறுவதில்லை.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-12-2013

கணவன் உண்ட எச்சில் இலையில் மனைவி உண்ணும் மரபு.

கணவன் உண்ட எச்சில்த்தட்டில் மனைவி உண்ண என்ன காரணம் என்பதன் விளக்கத்தை கீழே காண்க.   திருமணம் முடித்த பெண்களை வீட்டில் உள்ள பெரியோர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச்சொல்லுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.   கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,     அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவிமார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.   கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.     என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 24-12-2013

மெஞ்ஞானத்திற்கான முதற்படி.

கர்ம வினை எனப்படுவது 3 வகைப்படும்:- 1/ பறித்தல் 2/ பங்கிடுதல்  3/ படைத்தல்     1/ பறித்தல் மிருகங்கள் உணவு கிடைத்ததும் மற்றவர்களுக்கு கொடுக்காமல் தான் மட்டும் உண்ணவேண்டும் என்று நினைக்கிறது. மனிதர்களில் கடைநிலைபட்டவர்கள் இதே இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.     2/ பங்கிடுதல் மனிதர்கள் சேர்ந்து வாழும் குடும்ப வாழ்வில் ஈடுபாடு உடையவர்கள். தங்களுக்கு கிடைப்பதை பகிர்ந்து உண்ணும் இயல்புடையவர்கள்.     3/ படைத்தல் தனக்கு கிடைக்கும் உணவையோ மற்ற பொருட்களையோ பிறருக்கு கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியில், இன்பம் அடைபவர்கள் உயர்ந்தவர்கள்.     இந்த மூன்றாவது நிலையே மெஞ்ஞானத்திற்கான முதற்படி.

மேலும் படிக்கவும் 15 மறுமொழிகள் சுதர்சன் 19-12-2013

உணவும் சாத்திரமும்.

சாப்பிடும் விடயத்தில் சாத்திரம் சொல்வதை பார்ப்போம்.   தனக்குத்தானே சோறிட்டுக்கொள்வது ஆயுளைக்குறைக்கும்.  இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள். பால்சோறு சாப்பிடலாம். கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும். மேற்கு நோக்கினால் பொருள் சேரும். தெற்கு நோக்கினால் புகழ் வளரும். வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும். சோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 17-12-2013

தீப ஒளியும் தமிழர் வழியும்.

தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக்கொலை யானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.   சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்கு காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாச மானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்க மாக விளக்குவோம்.   அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத் திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்குவ தற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து விட்டு விட்டாராம்.   அந்த சமயத்தில் அந்த பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசூரன் என்று பெயராம். இவன் கசேரு என்ப வளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.   விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம். நரகாசூரன் விஷ்ணுவைத் தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம். தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில், பூமியை ஒரு ராட்சசன் பாயாக சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?   சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக்கும்?   கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகா சூரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?   அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக்காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?   அந்த அழகை பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது. நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது?   அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்திருக்க வேண்டும்? பூமா தேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்களாக் குடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?   இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவமானத்தை உலகம் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டி ருப்பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர்களை, தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறை பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.   ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டா லும், பார்ப்பன அடிமைகளான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்களுக்குச் சுரணை இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம். இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங் களை தமிழர்களுக்கு படிப்பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் – அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தியும், மன வேத னையும் படுவது உண்மையானால் – தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 02-11-2013

சகுனங்களும் சங்கடங்களும்.

மக்களிடையே மண்டிக்கிடக்கின்ற மூடநம்பிக்கைகளுள் சகுன நம்பிக்கையும் ஒன்று. இதனால் ஏற்படும் பாதிப்புகள், கேடுகள், இழப்புகள் ஏராளம் என்பதோடு இவை உருவாக்கும் மன உளைச்சல், வீண்பழி, மனத்தளர்ச்சி, வாழ்விழப்பு போன்றவை ஏராளம். குறிப்பாக, விதவைப் பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கும் இளம்பெண்களும் அடையும் இழப்பும், இன்னல்களும் ஏராளம். ஒரு பெண்ணின் வாழ்வையே பல்லியின் ஓசையில் பலிகொடுக்கும் அவலமும் இதில் அடங்கும். எனவே, சகுனம் பற்றிய விழிப்புணர்வு பிஞ்சுகளுக்கேயன்றி பெரியவர்களுக்கும் வேண்டும்.   சகுனங்கள் பல வகைப்படும்:   மனிதர்கள்: எதிரில் வரும் மனிதர்கள் யார்? என்பதை வைத்து சகுனம் பார்க்கப்படுகிறது.   சலவைத் தொழிலாளி, பால்காரர் எதிரில் வந்தால் நல்ல சகுனம்; எண்ணெய், விறகு எடுத்துக்கொண்டு எதிரில் வந்தால் கெட்ட சகுனம்.   காரணம், பால் மங்கலப் பொருள். அழுக்கு நீக்கி ஆடை வெளுப்பவர் சலவைத் தொழிலாளி. எனவே, நல்ல சகுனம். எண்ணெய், விறகு அமங்கலப் பொருள். எனவே, அது கெட்ட சகுனம்.   விதவை வாழ்வு இழந்தவள். அதனால் கெட்ட சகுனம். சுமங்கலி வாழ்வுடையவள். எனவே, நல்ல சகுனம்.   ஒலி: சங்கு ஊதினால், வெடிவெடித்தால் கெட்ட சகுனம்.  மணி ஒலித்தால் நல்ல சகுனம்.   பறவை: சில பறவைகள் கத்தினால் நல்லது. ஆந்தை போன்றவை கத்தினால் கெட்ட சகுனம்.   பல்லி: கத்துகின்ற இடத்தைப் பொறுத்து நல்ல சகுனம், கெட்ட சகுனம் என்று கொள்ளப்படுகிறது.   விலங்கு: கழுதை கத்தினால் நல்ல சகுனம். பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம்.   தோணி(ஓடம்) : ஆற்றின் இக்கரையில் இருந்தால் நல்ல சகுனம். அக்கரையில் இருந்தால் கெட்ட சகுனம்.   தும்மல்: சிலர் தும்மினால் நல்ல சகுனம். சிலர் தும்மினால் கெட்ட சகுனம்.   வார்த்தைகள்: ஒரு காரியத்திற்குச் செல்லும் போது, காதில் விழும் வார்த்தைகளை வைத்து நல்ல கெட்ட சகுனம் கணிக்கப்படுகிறது.   பொருள்கள் தவறிவீழ்தல்: விழாமல் பிடித்துக் கொண்டால் நல்ல சகுனம். தவறி விழுந்தால் கெட்ட சகுனம். தவறி விழுந்து பொருள் உடைந்தால் பாதிப்பு வரும் என்ற நம்பிக்கை.   மேற்கண்ட சகுனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.   1. காட்சியின் தன்மையை வைத்து நல்ல காட்சியாயின் நல்ல சகுனம்; கெட்ட காட்சியாயின் கெட்ட சகுனம்.   2. நாம் எதிர்நோக்கும் ஆளோ, பொருளோ, வாகனமோ அமைவது, சாதகமான நிலையாயின் நல்ல சகுனம், பாதகமான நிலையாயின் கெட்ட சகுனம்.   3. மரபுவிழா சொல்லப்படும் சகுனங்கள்: முதலாவதாக, நல்ல காட்சி - நற்சகுனம் கண்டால் - நல்லது நடக்கும் என்பதும், கெட்ட காட்சி - கெட்ட சகுனம் கண்டால் கெட்டது நடக்கும் என்பதும், நம்  மனதில்  எழும்  வெறுப்பு விருப்புகளின்  வெளிப்பாடாகும்.   இரண்டாவதாக, காட்சி சாதகமா அல்லது பாதகமா என்பதை வைத்து எழும் சகுன நம்பிக்கை, நடக்கப்போகும் காரியத்தின் முன்னறிவிப்பாக இக்காட்சிகளைக் கருதும் அறியாமையால் எழுகிறது.   மூன்றாவதாக, பல்லி, பூனை போன்ற சகுன நம்பிக்கைகள் மரபு வழியில் கற்பிக்கப்பட்ட சகுன நம்பிக்கைகள் ஆகும். விதவை என்பவள் வாழ்விழந்தவள், அலங்கோலப்படுத்தப்பட்டவள். எனவே, அவள் எதிரில் வந்தால் கெட்டது நடக்கும் என்ற நம்பிக்கை. அவள் மீதுள்ள வெறுப்பால் எழுந்தது. நடக்கப்போகும் கெடுதலுக்கு அவள் எப்படிப் பொறுப்பாவாள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.   நடக்கப்போகும் கெடுதலுக்கு வாழ்விழந்த பெண்ணை, அபாய அறிவிப்பாக ஆக்குவதும், அதை நம்புவதும் அடிமுட்டாள்தனமல்லவா? அநியாயம் அல்லவா?   நடக்குப்போகும் காரியத்திற்கு, புறப்படுமுன் நல்லதாயின் நல்லது நடக்கும் என்பதும், கெட்டதாயின் கெட்டது நடக்கும் என்பதும், காட்சியோடு காரியத்தைப் பொருத்திப் பார்க்கும் மூடத்தனத்தின் விளைவாகும்.   இந்தக் காட்சிகளை பலமுறைச் சோதித்துப் பார்த்தால், கெட்ட சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது நல்லது நடப்பதையும், நல்ல சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது கெட்டது நடப்பதையும் நாம் அறியலாம்.   எந்தவொரு காட்சியும், வார்த்தையும், ஒலியும் நடக்கப்போவதை அறிவிக்கக் கூடியவை அல்ல. எல்லாம் நமது உள விருப்பு, வெறுப்பின் வெளிப்பாடுகள்; தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் விளைவுகள்.   மேலும், ஒரே காட்சியை, ஒரே சகுனத்தைப் பார்த்துச் செல்கின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைப்பதில்லை. விதவையைப் பார்த்துச் சென்ற ஒருவருக்குக் கெட்டது  நடந்திருந்தால், இன்னொருவருக்கு நல்லது நடந்திருக்கும். எனவே, காட்சிகளுக்கும், நடக்கப்போகும் காரியங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை, பிஞ்சுக் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் நன்கு சிந்தித்து, சகுன நம்பிக்கையென்னும் மூடநம்பிக்கையை விட்டொழித்து பகுத்தறிவுப் பாதையில் பரிசோதித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 01-11-2013

நன்றி உள்ள நாய் .

மனிதனுக்கு மனிதன் நன்றியுள்வனா? உறவுகளுக்குள் நன்றியுள்ளவர்கள் உண்டா? இதனால் தானோ வீடுகளுக்கு காவலாளியாக நாயை வளர்கின்றார்களோ! மனிதனாய் பிறந்தவன் நன்றிகெட்டவன் என்பதாலோ மனிதனே நாயை நம்பினானோ!  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை பண் த பாலா 31-10-2013

எந்தத்திசை தலைவைத்து படுப்பது?

எம் வீட்டு பெரியோர்கள் சொல்வார்கள் 'டேய் வடக்கு பக்கம் தலை வைக்காதடா'. ஏன் என கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது ஆனால் அவர்கள் சொல்வதில் விஞ்ஞானம் இருக்கிறது அந்த விஞ்ஞான அறிவியல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நமக்கு எல்லோருக்கும் தெரியும் நம் பூமியே சுற்றிலும் ஒரு காந்த படுகை இருக்கிறது நமது கிரகங்களும் (Planet) காந்த முனைவுகளை கொண்டுள்ளது நம் கிரகங்கள் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி காந்த துருவம் அமைந்திருக்கிறது இதை சாதரணமாக நம்மிடம் இருக்கும் திசை காட்டும் கருவியில் (Compass) பார்த்தாலே தெரியும். திசை காட்டும் கருவியின் மேல்முனை எப்போதும் வடக்கு நோக்கி இருக்கும் எதிர் முனை தெற்கு பகுதியை நோக்கியே இருக்கும் இந்த காந்த சக்தியை முன்பே விஞ்ஞானம் வளராத காலத்திலேயே நம் முன்னொர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் தெற்கு கிழக்கு பகுதிகளில் சரி சமமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது அதனால் நாம் தூங்கி எழும் போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமால் எழுந்திருக்க முடியும்.    நமது கிரகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வருகிறது மேலும் சூரியனின் காந்த துருவம் கிழக்கில் இருந்து பூமிக்குள் வருகிறது இதன் அழுத்தம் நம் தலை வழியாக வெளியேற பார்க்கும் போது அதிகபடியான வெப்பம் எதிர் நோக்கி எழும்பும் போது நம் தலையில் ஒரு வித ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு நோய்வாய் ஏற்படும் நிலையும் வருகிறது. இதன் அடிப்படையிலேயே தான் வீட்டின் முகப்பு கூட வைக்கப்படுகிறது இது நம் இந்தியாவில் இதை கடைபிடிக்கிறார்கள் வேறு இடங்களில் குறைவாகவே இருக்கிறது.   மேலும் இது பற்றிய ஆராய்ச்சியில் வடக்கு மற்றும் மேற்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் அதிகமாகவும் உடம்பில் சோர்வுத்தன்மையும் மூளையை மந்த புத்தி ஆக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் இரவு உணவு எப்போதும் கஞ்சனை போல சாப்பிட வேண்டும் அதாவது மதிய உணவு உண்பது போல உண்ணக்கூடாது உறங்கும் போது கிழக்கு பக்கம் தலை வைத்து மேற்கு பக்கம் கால் நீட்டவும் அல்லது தெற்கு பகுதியில் தலை வைத்து வடக்கு பக்கம் கால் நீட்டவும். இதற்கு எதிர்மறையான நிலையில் உறங்குபவர்கள் எப்பொழுதும் எரிச்சலும் சோம்பேறித்தனமும், தன்னம்பிக்கையும் இழந்து காணப்படுவார்களாம். சரி என்ன பெரிய தூக்கம் தூங்கின பின் நமக்கு என்ன தெரியபோகுது? எப்படி தூங்குனா தான் என்ன என கேள்வி கேட்பவர்களுக்கு உங்கள் இரவு தூக்கம் சரியில்லை என்றால் அன்றைய தினம் விடிந்ததும் உங்களால் அசூசையான நிலையை உணரமுடியும் பின்ன என்ன எடுத்ததுக்கெல்லாம் எரிச்சல் வரும் வீட்டில் சண்டை வரும் அதோடு அலுவகம் சென்றால் அங்கு சொல்லவே வேண்டாம் உங்கள் தூக்கம் தான் பிரச்சினைகளை விடுபட வைக்கும் சரியான தூக்கமின்மையும் மேலும் சில வியாதிகளை பரிசாக தரும் சரியான நேரத்தில் தூங்கி எழுபவரின் மூளைக்கும் மன உளைசல் அல்லது இன்ன பிற காரணங்களால் தூங்காதவர்களின் மூளையும் EGG (ELECTRICAL ACTIVITY IN THE BRAIN) என்கிற பரிசோதனையில் அதிகம் வித்யாசம் வருவதாக சொல்கிறார்கள்.   நாம் சரியாக தூங்காத போது நம் உடலின் தசைகளும் ரிலாக்ஸாக ஆவதில்லையாம் மாறாக முறுக்கு கூடி அதனாலே முதுகு வலி, கை கால் வலி வரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவம் சொல்கிறது அதே போலவே தூங்குவதும் எழுந்திருப்பதும் ஒரு சரியான நேரத்தை வழமையாக்கி கொள்வது நல்லது அதனால் உடல் சரியான இயக்கதில் இருக்கவும் செய்யும். வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்து படுத்தால் மந்த புத்தி சுகவீணம், தன்னம்பிக்கை குறைவு வரும்.   தெற்கு கிழக்கு தலை வைத்து படுப்பதால் காந்த சக்தியால் நமக்கு இழப்பு ஏற்படுவதில்லை தேவையில்லாதா அசூசகமான நிலை வருவதில்லை.    ஓவ்வொரு நபருக்கும் தூக்கத்திற்கான அளவுகள் இருக்கிறது. குழந்தைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்க வேண்டும்    இளைஞர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேண்டும்    வயது வந்தவர்கள் 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும். கர்ப்பமான பெண்கள் வழமையாக தூங்கும் நேரத்தை விட மேலும் சில மணி நேரங்கள் உறங்குவது நல்லது.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 28-10-2013

கேதாரகௌரி விரதம்.

   கேதாரகௌரி விரதம்       கேதார கௌரி விரதம் அனுஸ்டிக்கும்முறைகள் கேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தெவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. முன்னொருகாலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழசிவன்,  பார்வதி தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கிகிருடி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பியைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்டஅம்பிகை கைலை மலையைவிட்டுத் தவம் செய்வதற்காக கௌதமுனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடுதிரும்பிய மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து செய்துவிட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும்போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து எமக்கு அருள் புரிகின்றாள். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார்.   பொருளடக்கம்     [மறை]  1 கேதாரேஸ்வர விரதம் அனுஷ்டிக்கும் முறை 2 இவ்விரத்தை அனுஷ்டிக்கக் கூடியவர்கள் 3 பூலோகத்தில் இவ்விரதம் பரவிய முறை 4 விரதபலன் 5 உசாத்துணைகள் கேதாரேஸ்வர விரதம் அனுஷ்டிக்கும் முறை. ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரத்த்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்டசிவலிங்கத்தை  அமைத்து கும்பம் வைத்து பூக்கள் வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும் . ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம்,  பாக்கு,வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை  வைத்து தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும் .ேகதுகர்ிகஸவப இவ்விரத்தை அனுஷ்டிக்கக் கூடியவர்கள். ஐந்து மாதங்களிற்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத பெண்களும் மாதவிலக்கு  நீக்கப்பெற்ற பெண்களும் 21 நாட்கள் விரதமிருக்கலாம். ஏனையோர் மாதவிலக்கு அம்முறை வந்தபின் அமாவாசைத் திதிக்கு முன்னுள்ள 9 நாட்களோ 7 நாட்களோ மூன்று நாட்களோ அல்லது அன்றைய தினமோ இவ் விரத்த்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்ட்க்கலாம். பூலோகத்தில் இவ்விரதம் பரவிய முறை   சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்ர்வராஜனுக்கு கூறியருளினார். விரத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசிய குலத்துப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். மிகவும் வறுமையினால் வாடிய இவ்விரத்த்தை அனுஷ்டிக்க சிவபெருமான் தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுத்தருளினார். {{அனைவருக்கும் வணக்கம். இந்த விரதம் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இங்கு ஆவணிமாதம் வளர்லிறை நவமியில் ஆரம்பித்து புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு முன்தினம்வரை 21 நாட்கள் நடைபெறுகிறது. வாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவேண்டுகிறேன்.எம்.பிரகாசம்}} அர்த்தநாரீஸ்வரர் விரதபலன்.. தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில்  திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும் உசாத்துணைகள். மதி திருஸ்ரீ வித்யாரஞ்சனி, திருகோணமலை அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி (சிவன்) கோவில்  கும்பாபிஷேக மலர், 1999, கேதார கௌரி விரத கதை பாட்டு வடிவில்..   காப்பு ஆதி பரமேஸ்வரியே ஆண்டவனைப் பூசித்துப் பாதியிடம் பெற்ற பரிசு தனை- நீதியுடன் சொ  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை பண் த பாலா 15-10-2013

நவராத்திரிகொலு வைக்கும் முறை.

நவராத்திரிகொலு வைக்கும் முறை.     மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக படிப்படியாக உயர்த்திக் கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனித பிறப்பின் அடிப்படை தத்துவம் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் நவராத்திரி விழாவில் கொலு வைக்கப்படுகிறது. இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகளில் வைக்கப்பட வேண்டிய பொம்மைகள்... 1ம் படி: ஓரறிவு உயிர் பொருட்களான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் 2ம் படி: இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் 3ம் படி: மூன்றறிவு உயிர்களான எறும்பு, ஊறும் உயிரின பொம்மைகள் 4ம் படி: நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள். 5ம் படி: ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவை பொம்மைகள். 6ம் படி: ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள். 7ம் படி: மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள். 8ம் படி: தேவர்கள், நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூதங்கள், அஷ்டதி பாலகர் பொம்மைகள். 9ம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி பொம்மைகள் (ஆதிபராசக்தி நடுவில்) இருத்தல் வேண்டும்.

மேலும் படிக்கவும் 4 மறுமொழிகள் பண் த பாலா 14-10-2013

நன்கொடை.

ரியூப் லயிற்றை வாங்கி பூட்டிப்போட்டு அதற்க்கு மேல் எங்கள் பெயரை எழுதி அதில் இருந்து வரும் வெளிச்சத்தை தயவு செய்து மறைத்துவிடாதீர்கள்." புலம்பெயர் தேசத்தில் எமது ஊரின் அபிவிருத்திக்காக உழைக்கும்  ஒருவரின் கருத்து.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை பண் த பாலா 13-10-2013

வெற்றியில் மகிழ்ச்சி.

"வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர்."    முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை.    தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் கேட்டார்   . “நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள்.    என்போல் தோல்வியைத்தழுவியிருந்தால் தெரியும்”. வெற்றியாளர் சொன்னார், “இல்லை நண்பரே! நான் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாய் இல்லை.   மகிழ்ச்சியாய் இருப்பதால் வெற்றி பெற்றேன்!”    வெற்றியின் ரகசியம் வெளிப்பட்டது அன்று.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-10-2013

வைரவருக்கு விளக்கு ஏற்ற உகந்த நாள்.

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும். பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். சனிகிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.     திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது. இதை செய்ய முடியாதவர்கள் தினமும் விளக்கு போடலாம், அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் 7 விளக்கு போடலாம்.   அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம். பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி, அணைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர், மேலும் சனி பகவானுடைய குரு.

மேலும் படிக்கவும் 4 மறுமொழிகள் சுதர்சன் 06-10-2013

மன அமைதியை தரும் சிவஸ்லோகம்.

குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் கீழ்க்கண்ட ப்ருதிவிஸ்வராய தியான ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யலாம். அதிகாலையிலும் மாலையிலும் இரவிலும் இச்சுலோகங்களைச் சொல்லி சிவனை வழிபட வேண்டும் .   நமோ நமஸ்தே ஜகதீச் வராயசிவாய லோகாஸ்ய ஹிதாய ஸம்பவே அபார ஸம்ஸார ஸமுத்தராய நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்ராய விஸ்வாதி காய அதிவிமானகாய ஸோமாய ஸோமார்த்த விபூஷணாய ஸ்ரீகாள கண்டாய க்ருபாகராய நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய ஆஸாம் பராய அம்பர வர்ஜிதாய திகம்பராய அம்பிகாய யுதாய குணத்ரயாத்யை: அபவர்ஜிதாய நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய மாயா விகாராதி விவர்ஜிதாய மாயாதி ரூடாய தபஸ்திதிய கலாதி ரூடாய கபர்தினே ச நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய கபாலினே காமவிவர் ஜிதாய கதம்பமாலா கவிதாய பூம்னே நிரஞ்சனாயாமித தேஜஸே ச நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 01-10-2013

புரட்டாதிச்சனி விரதமும் பயன்களும்.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது.   கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.  இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு. ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார்.   சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார். இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார்.     பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி.     அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.     புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, சஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 29-09-2013

கடவுளை பிரார்த்திக்கும் முறைகள்.

ஒருவனால் நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. பணிபுரியும் நேரத்திலும் பக்தி உணர்வுடன் செயல்பட்டால் மனம் தூய்மை பெறும். உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள். குணத்தையோ, குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும் அங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேர்ந்துவிடும்.   எதையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க, இறைவனை வேண்டுங்கள், அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான்.   இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இறைவனை மட்டும் நேசிப்பவன் புண்ணியவனாகிறான். உலகம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள், அவன் தனது கருணையை உங்கள் மீது பொழிவான்.

மேலும் படிக்கவும் 4 மறுமொழிகள் சுதர்சன் 27-09-2013

எண்ணை தீபங்கள்.

கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.   * முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது.   * ருத்ராரி தேவதைக்கு இலுப்பை எண்ணெய் ஏற்றது.   * தேவிக்கு ஐந்து வகை எண்ணெய் உபயோகிக்கலாம்.   * நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். * மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.   * சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது.   * குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 18-09-2013

ஹோமம் வளர்ப்பதற்கு இடும் பொருட்களால் ஏற்படும் நன்மைகள்.

முக்கனிகளை இட்டால் - திருமணத்தடை அகலும்.   பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும். தேன் ஊற்றினால் - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.   சர்க்கரையை இட்டால் - புகழ், கீர்த்தி அதிகரிக்கும். பால் ஊற்றினால் - வாகன யோகம் கிட்டும்.   நெய் இட்டால் - சுகபோகமான வாழ்க்கை அமையும். தயிர் இட்டால் - சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும்.   அரசு சமித்துக் குச்சிகளை இட்டால் - பதவி வாய்ப்புகள் கிடைக்கும். அருகம்புல்லை இட்டால் - நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 15-09-2013

அமாவாசையில் பிள்ளை பிறந்தால்.

திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை நாளில் புத்திர பாக்யம் வேண்டுபவர்கள் காலை 6 லிருந்து 11 மணிக்குள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட  வேண்டும். தெய்வங்களை வழிபட உகந்தது என அமாவாசையை சாஸ்திரம் கூறுகிறது. நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம், திதி கொடுப்பதை இந்த நாளில்தான் செய்ய வேண்டும். அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும்.   இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸுமாகரம்’ என்ற நூல் கூறுகின்றது. பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும் சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை விலக்க வேண்டும் என ஆதிசங்கரர் கூறியுள்ளார்.  

மேலும் படிக்கவும் 3 மறுமொழிகள் சுதர்சன் 13-09-2013

வெள்ளிக்கிழமை 13ம் திகதி வந்தால்.

13ம் இலக்கம் அதிர்ஷ்டமற்றது,13ம் இலக்கத்தில் வீடு வாங்குவது நல்லதல்ல என்று  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கிறிஸ்தவத்தில் இன்னொரு கதையும் உண்டு . மேலைத்தேய நாடுகளிளும் வெள்ளிக்கிழமை  அதிர்ஷ்டமற்ற நாளாக நடைமுறையில் உள்ளது .     நேரத்தை சரியாக ஒழுங்கு படுத்த மனிதனால் தான் நாட்க்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தான்  7 நாட்களாக பிரிக்கப்பட்டு 12 மாதங்களாகவும் பிரிக்கப்பட்டது .   ஆனால் இந்த பதின்மூன்றாம் திகதி மர்மத்தின் படி இறைவன் முதலிலேயே நாட்க்காட்டி படைத்து விட்டு மனிதனை படைத்தது போலவே கதை உள்ளது .   paraskevidekatriaphobia என்றழைக்கப்படும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீதான பயம் மேல் நாட்டில்   பெரும் தொகையான மக்களால் நம்பப்படுகிறது .     இந்த பயங்களுக்கு கட்டுக்கதைகளே காரணம் (எந்தவித ஆதாரமும் அற்ற )...       இயேசு தனது 12 தோழர்களுடன் இருந்த போது பதின் மூன்றாவதாக வந்தவர் யூதாஸ் . அவர் தான் இயேசுவை காட்டி கொடுத்தவர் .      வெள்ளிக்கிழமை மீதான பயத்துக்கு காரணம் ...     இயேசு  வெள்ளிக்கிழமை இறந்தமை ... ஆதாம் ஏவாளும் பழம் உண்ட நாள் வெள்ளிக்கிழமை .. பாரிய வெள்ளப்பெருக்கு வந்த நாளும் வெள்ளிக்கிழமை .. பைபிளின் படி ...     இன்னொரு உறுதிப்படுத்தப்படாத கட்டுக்கதையும் உண்டு . கிட்டத்தட்ட பொய்யானது என்றும் சொல்லலாம் .    பிரிட்டிஷ் கடற்ப்படை கப்பல் 1800 இல் H .M .S Friday  என்ற கப்பல் ஒரு வெள்ளிக்கிழமை புறப்பட்டதாம்.  அதுவும் அதன் கப்டன் பெயர் James Friday ஆம் . அந்த கப்பல் அப்படியே காணாமல் போய்விட்டதாம் .        கிறிஸ்தவம் எனும் சமயம் இருக்கும் முன்னர்  pagan (பகன் )என்னும் சமயம் இருந்தது . அதன் தழுவலில் இருந்து வந்தது தான் இந்த பதின் மூன்று  என்ற எண். காரணம் பகன் ( pagan lunar calendar.) நாட்காட்டியில் 13 மாதங்கள் என்றே பிரிக்கப்பட்டிருந்தது .    ரோமானிய காலத்தில் வெள்ளிக்கிழமை வீனஸ் க்காக இருந்தது . வீனஸ் காதலின் கடவுள் . Norsemen எனப்படுபவர்கள் அதை சுட்டு அவர்கள் பிரிக்க் பிரேய என்று பெயர் வைத்தார்கள் . அது தான் பின்னாளில் ஃப்ரைடே என்று அழைக்கப்படுகிறது .    காலம் காலமாக கட்டுக்கதையாகவும் ஒன்றுதொட்டு ஒன்றாக வந்த மதங்களும் மாற்றியமைத்த விளையாட்டு  தான் இவை .  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 13-09-2013

21 பேறுகள் கிடைக்கும் விநாயகர் சதுர்த்தி.

அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர். மிகவும் எளிமையான கடவுள் கணபதி.வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். விநாயகரே முழு முதற்கடவுள் என்று வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.   எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும், தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் இணைந்து "உ'' எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.   எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.   அன்னை தந்தையான சிவ பார்வதியை வலம் (சுற்றி) வந்ததாலேயே உலகம் முழுமையும் சுற்றிய பெருமை கிடைத்ததால் ஞானப் பழத்தினை மிக சுலபமாகப் பெற்றவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். அந்த விநாயகரையே வலம் வந்தால், ஞானம் எனும் கல்வியறிவு, பழம் எனும் முயற்சியில் வெற்றி பெறலாம்.   விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாகத் தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.   விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப் பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன.அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மïரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.   பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம். மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.   விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் 1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. சௌபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16.சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம் ஆகிய 21 விதமான பேறுகள் கிடைக்கும். விநாயகப்பெருமானையே தங்கள் வழிபடு கடவுளாகக் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகியவர்களின் வாழ்க்கையில் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணிலடங்காது.   அகத்திய முனி மூலம் காவிரி தந்தமையும், நம்பியாண்டார் நம்பி மூலம் அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் மூவர் தேவாரங்களை உலகுக்கு கொடுத்து சைவ சமயத்தையே காப்பாற்றிய பெருமையும், யாவரும் அறிந்ததே.இன்னும் எண்ணிலடங்காத அற்புதங்களையும் நிகழ்த்திவரும் விநாயகப்பெருமான் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் கருணைத் திறன் அளவிடற்கரியது. விநாயகப்பெருமான் திருத்தாள் பணிந்து அவர் அருளாலே அவன் தாள் வணங்கி உய்வோமாக.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 10-09-2013

விநாயகர் சதுர்த்தி.

எதிர்வரும் திங்கட்கிழமை (2013-09-09) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இயக்கங்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.   விநாயகர் சதுர்த்தி   முழு முதல் கடவுளான விநாயகருக்கு சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதம், விதமாக, பல வண்ணங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே தயார் செய்யப்பட்டன. இந்த சிலைகள் நகரின் முக்கிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்து முன்னணி, விசுவ இந்துபரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பாகவும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.   50 ஆயிரம்பிரமாண்ட சிலைகள்   தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இதற்கான மேடைகள், நிழற்குடைகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்த அளவில் சுமார் 2 ஆயிரம் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிறுவப்படுகிறது. இவை தவிர வீடுகளிலும் மக்கள் லட்சக்கணக்கில் களிமண் விநாயகர் சிலைகளை வைத்து சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட உள்ளனர். இதற்காக சிலைகள் விற்பனையும், சதுர்த்திக்கு தேவையான விநாயகர் குடைகள், பூ, பழங்கள் விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.   நீர் நிலைகளில் கரைப்பு   இந்த விநாயகர் சிலைகளுக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அந்தந்த இடங்களுக்கு ஏற்ப 3–வது நாள் முதல் 7–வது நாள் வரையில் ஏதாவது ஒரு நாளில் பூஜை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏரி, குளம், கடல் போன்ற நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. பிரச்சினைக்கு உரிய சில குறிப்பிட்ட இடங்களில் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதேபோல சில குறிப்பிட்ட தெருக்களில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்துக்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.   துப்பாக்கி ஏந்திய போலீஸ்   விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. அது தவிர முக்கிய பகுதிகளில் ரோந்து செல்லவும், வாகன சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிரச்சினைக்குரிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது. உளவுத் துறை போலீசாரும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காதபடி விழிப்புணர்வுடன் செயல்படும்படி எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.   ஊர்வலத்துக்குகூடுதல்பாதுகாப்பு   விநாயகர் சதுர்த்தி விழாவை மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமலும், சிறப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடும்படி சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்கள் தவிர பிரச்சினைக்குரிய மாவட்டங்களில் மத்திய ரிசர்வ் போலீசாரும், அதிரடிப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.   விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போதும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.  

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 08-09-2013

சங்குகளும் அவற்றின் வகைகளும்.

பொதுவாக நமது இறை வழிபாட்டிலேயே சங்குக்கு முக்கிய பங்கு உண்டு. தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது. தருமர் வைத்துள்ள சங்கு, ` அனந்த விஜயம் ` என்றும்,அர்ஜூனர் வைத்திருக்கும் சங்கு, ` தேவதத்தம் ` என்றும் , பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , ` மகாசங்கம் ` என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, `சுகோஷம் ` என்றும், சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, ` மணிபுஷ்பகம் ` என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் ` பாஞ்சஜன்யம் ` என்ற சங்கு, இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது. சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையும், அரிய வகையான வலம்புரிச் சங்கும் தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. இந்த பதினாறு வகை சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும். திருக்கழுக்குன்றம் குளத்தில் உருவாக்கும் புனித சங்கு : மார்க்கண்டேயர் அனைத்து சிவ தலங்களையும் வழிபட்டு விட்டு திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு அவர் பூஜை செய்யும்போது தீர்த்தம் எடுப்பதற்கான பாத்திரம் இல்லை. அவர் பூஜைக்குரிய தீர்த்தப் பாத்திரம் வேண்டி சிவனை நினைத்தார். அப்போது சங்கு தீர்த்தக்குளத்தில் ஒரு அற்புதமான சங்கு கரை ஒதுங்கியது. அச்சங்கை சிவபெருமானே பூஜைக்கு கொடுத்து அருள் புரிந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனையடுத்து 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தக் குளத்தில் சங்கு உருவாகிறது. இதனை புனித சங்காக பூஜையில் வைத்து பூஜித்து வருகிறார்கள். ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில் வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்போது சங்குதீர்த்தக்குளத்தில் உருவாகும் புனித சங்கு பூஜையில் முதன்மை பெறும். இந்த குளத்தில் குளித்தால் தோல் நோய் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் இந்தியா முழுவதும் இருந்து ஆன்மீக சுற்றுலா வருபவர்கள் இந்த குளத்தில் நீராடி செல்கின்றனர். 1939-ல் இருந்து இதுவரை 6 சங்குகள் பிறந்துள்ளன. அவை பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு ஆடி பூரம் தினத்தில் சங்கு தீர்த்தக்குளத்தில் புனித சங்கு உருவானது. இதனையடுத்து 12 ஆண்டுக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியான வியாழக்கிழமை சங்கு தீர்த்தக்குளத்தில் புனித சங்கு கரைஒதுங்கியது. இது 7-வது புனித சங்காகும். அடுத்த புனித சங்கு 2023-ம் ஆண்டு பிறக்கும். சங்கு தரிசனம் : சிவன் கோவில்களில் ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் போல, கார்த்திகை, சோமவார சங்காபிஷேகம் மிகவும் விசேஷமானது. `சித்தாந்த ரத்னாகரம்' என்ற நூலில் சங்காபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. சங்காபிஷேகம் செய்ய இயலாதவர்கள் அதை தரிசித்தாலே அபிஷேகம் செய்த பலனை அடைவர் என்பது நம்பிக்கை சங்காபிஷேக தலங்கள் : மதுரை, திருக்கடையூர், திருவாதவூர், திருவாடானை, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருச்சி, மயிலாடுதுறை, திருக்கழுக்குன்றம் ஆகிய தலங்களில் கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் 1008 சங்குகள் வைத்து பூஜித்து சிறப்பாக அபிஷேகம் நடத்தப்படுகிறது.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 06-09-2013

3 வேதங்களை குறிக்கும் 3 விபூதிக்குறிகள்.

கோயில்களில் கடவுளை வணங்கியபின் விபூதியை 3 குறியாக பூசிக்கொள்கிறோம். இதனை குறிப்பது நாம் விபூதியை பூசுவதற்கு பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு இருக்குவேதம், நடுவிரல் யசூர்வேதம், மோதிரவிரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக்குறிக்கிறது.   முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.     அவற்றுள் சில:-   1/ பிரம்மா, விஷ்ணு, சிவன்,    2/ சிவன், சக்தி, ஸ்கந்தர்   3/ அறம், பொருள், இன்பம்   4/ குரு, லிங்கம், சங்கமம்   5/ படைத்தல், காத்தல், அழித்தல்

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-09-2013

காத்தீரே என்னை கருத்தாக.

மீன் குழம்பு கம கம வாசனை எழுப்பியது. சுரேஷுக்கு அக்குழம்பை அப்போதே சாப்பிட்டுவிட ஆசை. ஆனால், அவன் தாயார்தான் தேவாலயத் துக்குப் போய் இறைவணக்கம் சொல்லிவிட்டு பிறகு வந்து சாப்பிடலாம் என்று சொல்லி அழைத்துச் சென்றாள். ஆராதனை ஒழுக்க நெறிகளைத்  தாயார்போலவே கடைபிடிப்பவனாதலால் சுரேஷ் மனதை அடக்கிக்கொண்டு தேவாலயம் புறப்பட்டான். பிரார்த்தனை முடிந்ததும், அந்த தேவாலயத்தில் தாயாருக்கு சில சமூக சேவைகள் இருந்தன. ஆகவே வீட்டுச் சாவியை தாயாரிடமிருந்து  வாங்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடினான். அந்த அளவுக்கு மீன்குழம்பு வாசனை அவனை ஈர்த்தது! ஆனால், வீட்டுக்கு வந்தால், அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், மீன் குழம்பு பாத்திரத்தை பூனை தட்டிவிட்டிருந்தது. கீழே சிதறிய மீன்களையும்  பூனை விட்டு வைக்காமல்  தின்றுவிட்டு திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தது. ஆத்திரத்தில் சுரேஷ் கையில் கிடைத்த கரண்டியால் பூனையை  தாக்க முனைந்தபோது, அன்று சபையில் போதகர் பேசிய ஒரு வாசகம் நினைவிற்கு வந்தது. 'அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்ப ட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.' (ரோமர் 8: 28) சற்று நேரத்தில் தாயாரும் வீட்டிற்குத் திரும்பினார். அவரிடம் தன் மீன் குழம்பு ஏமாற்றத்தைத் தெரிவித்தான் சுரேஷ். அவனுக்கு முன் அதை முழுவ துமாக சாப்பிட்டிருந்த பூனையின் மெலிதான மியாவ் ஒலி மட்டும் சற்றுத் தொலைவில் கேட்டது. விவரம் அறிந்துகொண்ட தாயார், 'எந்நாளுமே து திப்பாய்...' என்று பாடிக்கொண்டே சுரேஷின் முதுகை தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினாள். பின்னர் கீழே சிதறியிருந்த மீன் குழம்பை சுத்தம் செய்ய  ஒரு வாளியில் தண்ணீரை எடுக்க குழாயடிக்குச் சென்றபோது அங்கே பூனை பரிதாமாக இறந்துகிடந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அதைப் பார்த்த  சுரேஷுக்கும் அதிர்ச்சி. பூனையின் சாவுக்கு என்ன காரணம்?  இருவருமாக மீன் குழம்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தைப் பார்த்தார்கள். அதனுள் ஒரு பாம்பு செத்துக் கிடந்தது. பூனையின் சாவுக்குக் காரணம் தெரிந்துகொண்ட சுரேஷ், போதகர் கூறியதை மீண்டும் நினைத்துப் பார்த்தான். தேவாலயத்துக்குப் போகும்  அவசரத்தில் தான் மீன் குழம்பு பாத்திரத்தைச் சரியாக மூடாமல் போய்விட்டதுதான் காரணம் என்பதை தாயார் கூறினாள். ஒருவேளை நாமும் இக்கு ழம்பை சாதத்தில் ஊற்றி சாப்பிட்டிருந்தால் நம்முடைய நிலமையும் பரிதாபமாக முடிந்திருக்கும். தேவன்தான்  நம்மை தடுத்திருக்கிறார் என்று இரு வரும் ஆறுதல் அடைந்தார்கள். 'காத்தீரே என்னை கருத்தாக...' என்று பாடி தேவனுக்கு நன்றி சொன்னார்கள். நம் வாழ்க்கையில் துயரம் இயல்பானது. அதுவும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஆகவே நம்  வாழ்க்கையில் வருகிற பிரச்னைகளை கண்டு கலங்கத் தேவையில்லை. எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி எப்பொழுதும் ஆண்டவரை துதித்துக்  கொண்டிருப்போம். காப்பாற்றும் தேவனை கருத்தாக பிடித்துக் கொள்வோம்

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 02-09-2013

குருதோஷம் நீக்க அனுஷ்டிக்கும் விரதம்.

நவகிரகங்களில் ஒருவரான குரு எனப்படும் வியாழ பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாதகப்படி குருவின் பார்வை பட்டால் தான் திருமணம், குழந்தை செல்வம், சிறந்த பதவி, செல்வச்சிறப்பு ஆகியவை ஏற்படும்.ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தாலோ, கொடூரமானவராக இருந்தாலோ, கோசார ரீதியாகக் கெட்டவரானாலோ குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும். வியாழன் தோறும் விரதம் இருந்து பூஜிக்க வேண்டும்.   தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தட்சிணாமூர்த்தியை தரிசித்து பூஜித்து தியானித்து அர்ச்சனை முதலியவை செய்தால் குரு தோஷம் விலகும் என்று சூரியனார் கோவில் தல வரலாற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது. தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி.குருதோஷத்துக்கு ஆலங்குடி பரிகாரத்தலம் என்று அதன் தலபுராணமும் குறிப்பிடுகிறது. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண்முல்லை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட குரு பகவானை வணங்க வேண்டும்.   அரசமர சமித்துகளால் ஹோமம் செய்து கடலைப்பொடி அன்னத்தால் அல்லது எலுமிச்சை ரச அன்னத்தால் ஆகுதி செய்து வேள்வியை முடிக்க வேண்டும். கொத்துக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும். குரு கீர்த்தனைகளை அடாணா ராகத்தில் பாடி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இவற்றால் குரு தோஷம் நீங்கும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 31-08-2013

நாவூறை கழிக்கும் முறைகள்.

நாவூறை கழிப்பது என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.   சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.   சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.   ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 27-08-2013

கற்பூரத்தீபம் காட்டுவது எதற்காக?

கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லு கிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத் துடனேயே இருக்கிறது.   வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின்  பிரகாசத்தில் காண்கிறோம்.   அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக் கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடு வதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது.  

மேலும் படிக்கவும் 26 மறுமொழிகள் சுதர்சன் 25-08-2013

விநாயகரை தொழும் நாட்கள்.

விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம் என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம். வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான பேறுகளையும் பெறலாம்.   விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.   விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.   செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள். மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள். செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.   இந்த விரதத்தை பார்வதி தேவியிலிருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன்பெறலாம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 22-08-2013

நட்சத்திரங்களும் அவற்றின் குணாதிசயங்களும்.

அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர். கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர். ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர். மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம். திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர். புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம். பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர். ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர். மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர். பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர். உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர். அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர். சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர். சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர். விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர். அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர். கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர். மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர். பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர். உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர். திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர். அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர். சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர். பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர். உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர். ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 20-08-2013