காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


சினத்தம்பி தங்கராஜா 81 வது பிறந்தநாள் . | 30-12-2013 | SRI LANKA

 

பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி தங்கராசா அவர்கள் 30.12.2013 ல் 81 வது அகவையில் கால் பதிக்கின்றார்.இவர் அமரர் இலங்கேஸ்வரியின் கணவரும்.பாலகுமார் டென்மார்க்,பாலரமணி சுவீடன், ஜெயக்குமார் டென்மார்க், ஜெகதீஸ்வரி கொழும்பு,ஜெகதீஸ்வரன் நோர்வே,ஜெயபாலன் டென்மார்க் .அன்பு மருமக்கள்,பேரன்,பேத்திகள்,பூட்டப்பிள்ளைகள் அனைவரும் இவர் நோய் நொடிகள் நீங்கி திடகாத்திரமாக வாழ வாழ்த்துகின்றனர்.

அன்பு அப்பப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்கள் அன்பு பேத்தி துர்க்கா. 

 மொத்த வருகை: 421 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (18)


விசு க மனோகரன்

31-12-2014 09:48

நேற்றைய தினம் 30.12.14 இவரின் 82 ஆவது பிறந்த நாள் .எனக்கும் அழைப்பு .மிக எளிமையாக கொண்டாட பட்டது .ஆர தழுவி முத்தமிட்டு வாழ்த்தினேன் அவரை
அவரோ ஆல் போல விழுது விட்டு ((பேர பூட்ட பிள்ளைகளை கண்டு )) ஆறுகம் புல்லு போல வேர் விட்டு ((உலகெங்கும் பரந்து வியாபித்துள்ள அவரின் வாரிசுகள் ))
அவரை வாழ்த்திய போது நான் கூறிய வார்த்தைகள் இது ***அண்ணை (உறவு முறையில் அவர் எனது அண்ணன் ) 40 இல் நாய் குணம் /60 தில் அறளை பெயரும் /80 இல் வாக்கு மூக்கு மாறும் .**எங்கயடி உங்கினை வைச்ச என்ரை கண்ணாடியை காணேல்லை .என்ரை மூத்தவநின்றை மூத்தவன் ஆரோ பெட்டை ஒண்டோடை லவ்வாம் ? என்று அலட்டுவினம் .ஆனால் நீங்களோ இன்றும் என்றும் பதினாறு போல ஒரு இளம் பொடி போல வலு நிதானமாக நிக்கிறியள் .
**எடே மனோஹரா கனக்க புளுகாதையடா .பிறகு கண்ணூறு பட்டு போகும் .
வாருங்கோ தலையை காட்டுங்கோ எண்டு சொல்லி மூண்டு தரம் துப்பினன்.
அடுத்தவருக்கு உதவுவது உங்க்களுக்கு கை வந்த கலை .அன்று அமளி பிரச்சனையின் போது பொலிசு கூடுகளுக்குல்லை இருந்த எத்தனை பேர்களை அவரின் சொந்த செலவாக்கை பிரயோகித்து வெளியில் கொண்டு வந்தார் ? உவை எனக்கு சொந்தமோ ? இல்லை உறவோ என்று பாராமல் எம்மூர்வர் என்ற நோக்கில் செய்தார் .அது இன்று சில பலருக்கு நினைவில் இல்லை நாங்கள் செய் நன்றியை உடனே மறக்கும் மனிதர்கள் தானே .**மேடைகளில் முழங்குவோம் திருக்குறள் பற்றி ஆனால் நடை முறை வாழ்வில் **ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி * என்று வாழும் பேதலிகள் நாம் .

அவர் அந்த தங்கராசு பலதும் பெற்று இன்னும் சில பல ஆண்டுகள் வாழ்வார் .
**எடியே உங்கினை இப்ப ஊரிலை இருந்தும் ஒரு போன் அடிக்க வான் வருகுதம் எயர் போட்டுக்கு.எனக்கு உந்த வான் ஒண்டும் வேண்டாமடி .அடியடி போனை எங்கடை தங்கராசு அண்ணைக்கு .அவர் நாங்கள் வெளிநாடு போக வந்து பங்கினை கலியாணி லோச்சிலை இருக்கேக்குள்ளை என்ரை மூத்தவனை அவன் பத்து செம்
எண்டு பொலிசு அப்பி கொண்டு போக அவர் அல்லே வெளியிலை எடுத்து தந்தவர் .அதை நாங்கள் எப்பிடி மறக்க ? எடியே அவருக்கு மூண்டு T சேட்டு வாங்கடி .பாவம் அவருக்கும் வயது போய் விடுதல்லே ?? எடியே பிள்ளை மறக்காமல் ரண்டு
மூண்டு விசுக்கி /விரண்டி போத்திலும் வேண்டடி .அவற்றை கூட்டாளி ஒருத்தர் மனோகரன் எண்டவரும் ஒண்டாய் குந்தி இருந்தி போடுவினம் எண்டு இடையிலை கேள்வியடி .அவருக்கும் இப்ப எக்கச்சக்கமான வயது நாசமறுப்பான் இப்பவும் பொடியல் மாதிரி திரியிறான்
அதனை ஆச்சி மனமும் மனோ நிலையையும் தூய்மையாக இருந்தால் ஆயுள் கெட்டி .சிலர் ஒரு சீக்கிறேட்டு பத்தாமல் .சாராயம் கள்ளு விசுக்கி விராண்டி குடிக்கிறேல்லையாம் .அதை தாங்கள் பெற்ற பெரும் பட்டங்கள் போல பெரும் தம்பட்டம் அடித்து கொண்டு திரிபவர்கள் எம் சமூகத்தில் அவர்கள் கூட இன்று இரவு நித்திரை கொள்ள போனால் நாளை விடிய துயில் எழும்புவது நிச்சயம் அல்ல
மனம் நிறைய இருள் /வஞ்சகம் /சூது /வாது/பொறாமை /எரிச்சல் /அழல்


S. திருக்கேதீஸ்வரன்.

04-01-2014 03:18

உங்களை வாழ்த்துவதில் மகிழ்வும் பெருமையும் அடைகின்றோம்.நீங்கள் ஊரவர்க்குப் பணம் பதவி பார்க்காது செய்த செய்கின்ற உதவிகளுக்கு நாம் என்றும் நன்றி உடையோம் . நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.


manuventhan

02-01-2014 23:46

81 வது அகவை அடையும் திரு சி தங்கராஜா அவர்கள் மேலும் பல்லாண்டு வாழ்க வென வாழ்த்துகிறோம்.
மனுவேந்தன் குடும்பம்


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

30-12-2013 10:44

நோய் நொடியின்றி இன்று போல் என்றும் நீடூழி வாழ்கவென வாழ்த்துகிறோம்.


MANOHARAN

31-12-2013 06:48

அதெல்லாம் நாங்கள் வலு ஷோக்காய் கொண்டாடினோம் நேத்து .கூப்பிட்டார் அவர் என்னை **எடே மனோஹரா வாடா இண்டைக்கு எங்கடை வீட்டை *லஞ்ச் **
என்ன விசேசம் எண்டு நான் கேக்க அவர் சொன்னார் எடே இண்டைக்கு என்ரை 81 ஆவது பிறந்த நாளடா ** எடை அப்பிடியே சங்கதி .உங்கினை உவங்கள் இணையத்திலை போட்டு கிடந்தது தான் .நான் நினைச்சன் முடிஞ்சுது எண்டு .பின்னை நான் சொன்னான் பொறுங்கோ நான் இப்ப வாறன் எண்டு போட்டு
வெறும் கையை ஆட்டி கொண்டு நான் போகேல்லை கண்டியலே .ஒரு சோடி ரோசா
பூவிலை ஐசின்க் செய்த கேக் துண்டு ஒண்டு வேண்டிக்கொண்டு .ஒட்டோவிலை
போய் இறங்கினன்.என்னட்டை ஏது கார் .முறுக்கி சுழட்டி கொண்டு போக .நான் ஏழை
அல்லே .பின்னை போய் இறங்கினதும் அவர் எனது வரவுக்காக காத்திருக்கிறார் .
புது சேட்டு கொழுவி புது மாப்பிளை போல .நான் ஏங்கி போய் கட்டி பிடிச்சு ஆர
தழுவி முத்தம் ஒண்டு குடுத்து (வித்தியாசமாய் நினைக்க படாது .இது அன்பு /பாசத்தின் நிமித்தம் கொடுத்த முத்தம் ) இப்பிடி சொன்னேன் .**அண்ணே கண்ணூறு பட படாது .சும்மா இளந்தாரி பொடி மாதிரி அல்லே இருக்கிறியள்
இங்கிலீசிலை வாழ்த்தினன்.பிறகு கூப்பிட்டார் வாடா உன்காலை அந்த அறை
பக்கம் .(அது நான் எப்ப அங்கு போனாலும் வழமையான நிகழ்வு ) உதிலை கொஞ்சம் எடடா --மூடி துற படாத Johny Walker Red Label நான் சும்மா விலை வைச்சு போடட்டு .பிசாசு மாதிரி Long Shot இழுக்காமல் நல்ல டீசெண்ட் ஆய் சின்ன
shot ஒண்டு எடுத்து போட்டு பிறகு கேக்கு வெட்டல். நான் கொண்டு போன கேக்கும்
வைச்சு அவையின்றை கேக்கும் ஒண்டாய் வைச்சு வெட்டு பட்டு ஆளை ஆள்
மாத்தி மாத்தி தீத்து படுகுது .பேர பொடியல் படங்களும் பிடிச்சாங்கள் .
இதை பாக்க சிலருக்கு ஒருவகை பொறாமை /எரிச்சல் வருவது நியாயமே !!
ஏன் நாங்கள் உங்களை உங்கினை போக சொன்னனான்களே ?காசு காசு எண்டு
ஓடினியல் உன்காலை .பெண்டில் புரியன் முகம் காணாமல் /புரியன் பெண்டில்
முகம் காணாமல் இரவு /பகல் வேறுபாடு தெரியாமல் ஓடி ஓடி உளைக்கிரியல்
அவன்றை வீடு மாதிரி வேண்ட வேணும் .அவளின்றை காரை விட கொண்டி காரை வேண்டி சுழட்ட வேணும் எண்டல்லே நீங்கள் அலையிரியல் .கஷ்டங்கள் /
துன்பங்கள் /துயரங்கள் /பொம்மர் அடி /ஷெல் மழை தாங்கி சொல்லொன்னா துயரங்கள் மத்தியிலும் நாமிங்கு வாழ்ந்தோம் .இப்போ பூலோக சொர்க்கத்தை நாங்கள் அனுபவிக்கிறோம் .நீங்கள் இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை எண்டு
ஒடினியல் உங்கினை .முகங்களை (சொந்த )இழந்து முகவரிகள் அளிக்கப்பட்டு
ஏனோதானோ என்று வாழ்கிறீர்கள் .அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாதப்பா !!
ஏன் நாங்களே சொன்னனாங்கள் உங்களுக்கு வீடு வளவை வித்தேன்டாலும்
ஓடடா வெளி நாடு எண்டு ???????????????


Seelan

30-12-2013 08:57

அன்பு மாமாவுக்கு எண்களது பிறந்தனாள் வாழ்துக்கள்

சீலன்போட்டோ


Tharmika und Tharnika

29-12-2013 16:21

Happy Birthday Periyappa


சுப்ரமணியம் குடும்பம் ற்றின்கோமள்ளே

29-12-2013 13:34

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அத்தான்


MANOHARAN

31-12-2013 06:50

திருகோணமலை /திருக்கோணமலை /ஊர் மொழியில் திருக்கணாமலை
யை என்ன பாடு படுத்தி கிடக்குது பாருங்கோ .இதுதான் நாம் வாழும் போலி வாழ்வு


சிவா குடும்பம் -மோதர,கொழும்பு -

28-12-2013 12:38

நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறோம்


shanthasivam

27-12-2013 17:22

உங்களுக்கு எமது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சிவா குடம்பம் (கனடா)


சுதாகரன்

27-12-2013 13:50

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!


சிவஜோகராசா குடும்பம்

27-12-2013 08:05

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


வேல்முருகன் குடும்பம்

27-12-2013 08:04

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


சசி வீடியோ swiss

26-12-2013 20:41

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா .


விக்னேஸ்வரன்

26-12-2013 19:52

உதய சூரியனாக வலம் வந்த
பணிப்புலத்து மைந்தன் -அவர்
நாவில் உச்சரிக்கும் வார்த்தை என்றும்
உயிர் கொடுக்கும் நம்பிக்கை .
பணிப்புலத்து பொக்கிஷம் .
என்றும் நலமுடன் வாழ .

வாழ்த்தி நிற்கும் .
கனகசபை ( சூட்டி)குடும்பம்


manoharan

27-12-2013 09:15

*****இதற்கு மேல் சொல்லவும் வார்த்தைகள்
ஏதும் தமிழில் உண்டோ அவரை பற்றி பகிர
நானும் தேடி பார்த்தேன் ஒன்றும் கிடைக்கவில்லை
அதனால் அதையே சொல்லி வாழ்த்தி நிற்கிறேன் *****


தருண், டிலோஷிகா நோர்வே

26-12-2013 11:42

துர்க்கா அக்காவோடு சேர்ந்து நாங்களும் அப்பப்பாவுக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்துகின்றோம்.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி