காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


மனோகரன் பரிசித். | 23-01-2014 | SRI LANKA

காலையடி பணிப்புலத்தை சேர்ந்த மனோகரன் பரிசித் அவர்கள் 24.01.2014 அன்று அகவை 22 ல் பதிக்கின்றார்.இவரை அப்பா, அம்மா, அப்பம்மா, அப்பப்பா, அப்பம்மா, சித்திமார், சித்தப்பாமார், மாமாமார், மாமிமார், தம்பிமார், தங்கைமார் உற்றார், உறவினர்கள் அனைவரும் இவரை நல்லகல்வியும் பெற்று நல்ல தொழில் செய்வேண்டும் என வாழ்த்துகின்றனர்.மொத்த வருகை: 459 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (12)


சிவா குடும்பம் மோதரை

22-01-2014 13:37

பரிசித்துக்கு எமது உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் .


பண் த .பாலா குடும்பம் டென்மார்க், தங்கராசா குடும்பம் கொழும்பு

20-01-2014 06:51


manoharan

24-01-2013 08:35

பொறுங்கோ அப்ப காலைஅடியாம் பிறகு பணிப்புலமாம் .உந்த மனோகரன் பிறந்தது
காலைஅடி பின் புகுந்தது பனிப்புலம் .அவர் காலையடி. நான் கலட்டி உவரும்
க .மனோகரன் நானும் க.மனோகரன் .உவரின்றை லைட் பில் எனக்கு வந்து நான்
சுன்னாகம் யாழ்ப்பாணம் எல்லாம் போய் பட்ட பாடு நானல்லே அறிவேன் .அவர் எங்கடை பொலிசு கந்தசாமியின்றை மேன்.எங்கடை ஊரிலை ரண்டு பொலிசு கந்தசாமியல். அவர்களை வேறுபடுத்தி அடையாள படுத்த பாவிக்க பட்டது
சேனா கானா .சீனா கானா .உது சீனா கானா பொலிசுவின்ட்ரை மேன் மனோகரனின் மேன் பர்ஷித்துவின் பிறந்த நாள் .சிலர் நினைக்கலாம் என்ன இவர் வாழ்த்து கூறாமல் எதோ எல்லாம் எழுதி தள்ளுகிறார் எண்டு .வெறும் ஒரு கேக்கு துண்டை
தீத்தி போட்டு **என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ** கொஞ்சம் இங்கிலீசு தெரிஞ்சவை
many happy returns எண்டு சொல்லி போட்டு நல்ல கோழி பிராயணி அடைஞ்சு போட்டு போவதை விட நான் ஒரு வித்தியாசமான முறையில் நாங்கள் எப்படி
வாழ்ந்தோம் என்பதை மீட்டலில் ஏதும் தவறு உண்டா என் சோதரரே? .சரி இனி
subject உக்கு வருவோம் .உந்த பிறந்தநாள் கொண்டாடும் பரிஷித் கூட சும்மா
லேசுபட்ட ஆள் இல்லை .இந்த இணையம் தொடங்க முதல் என்னூரின் அந்த
அழகிய காட்சிகளை தன் கமராவுக்குள் அடக்கி ( அந்த ஒழுங்கை கட்டு bend உள்ள
வளைவில் உள்ள பனைகள் பின் சன்னாசி கேணியடி .பிறகு அங்காலை எங்கையோ கொட்டி கிடந்த குப்பைகள் .அதை நான் பார்த்து ரசித்தேன் .அதை தன்
கமராவுக்குள் அடக்கி அடுத்தவரும் பார்க்கும் வண்ணம் அள்ளி வீசவும் ஒரு மனோநிலை சிந்தனை வேண்டும் .அது மட்டுமல்ல ஊர் நிகழ்வுகள் அனைத்தும்
அவரின் கமராவுக்குள் சிறை படுத்த பட்டு இங்கு வெளிவிட்டு நாம் கண்டு மகிழ்கிறோம் .அவர் இணையத்தின் உத்தியோக (official ) உள்ளூர் படபிடிப்பாளர்
போல .வாழ்க வளர்க அவரின் பணி. இருபத்தி ஒன்றில் கால் பாதிக்கும் அவரை
101 இல் கால் பதித்து இது போல் இன்னும் பல செய்து மானிடர்க்கு உதவ என் நல்
வாழ்த்துக்கள் .நாளை உன்னை நான் நேரடியாக சந்திக்க கூடும் என்ற நப்பிக்கையுடன் விடை பெறுகிறேன் வணக்கம்


மனோகரன்

25-01-2013 10:44

சொன்னது போலவே அவரை கண்டேன் கதைத்தேன் உண்டேன் உண்டு களித்தேன்
எத்தனை ஆனந்தம் .அவரின் மருமோளின் சாமத்திய கொண்டாட்டங்களுக்கு அவர்
கொழும்பில் நானோ சிக்னல் இழக்கும் பேதை போல் அங்கு போய் அங்குள்ள என்
ஊரவர் பலருடன் ஒரு ஐஞ்சு பத்து நிமிடம் கதை பேச்சு .அவ்வளவு எம்மூர் சனங்கள்
அங்கு .எடை நான் குடுத்து வைச்சது இவ்வளவுதான் எண்டு சோறும் தின்னாமல்
வந்த ஓட்டோவில் திரும்பி பயணம் .பம்பலபிட்டியில் என் போனை முடுக்கி கேட்டன்
என்ன பன்னிரண்டு மணிக்கோ வெளிக்கிடுகிரியல் எண்டு .அக்கரையில் இருந்து
எனக்கு மறுமொழி .இல்லை இல்லை மூண்டு மணிக்கு தான் எங்கள் புறப்பாடு
எனக்கெண்டால் புளுகம் தாங்கேலாது .ஓட்டோவுக்கு சொன்னன் திருப்பி விடு அண்ணை வெள்ளவத்தைக்கு .அங்கு போனால் எல்லாம் என் சனங்கள் .ஒவொருவரும் தங்கள் சுக துக்கங்கள் குறை குற்றங்கள் கூறி என்னிடம் கதை
நான் சொன்னேன் ஐயோ என்னை விடுங்கோ நான் இன்னும் கொஞ்ச நேரத்தில்
வேலைக்கு போக வேணும் எண்டு சொல்லி அவர்களிடம் தப்பி கொஞ்ச சோறு
மரக்கறி ஓடை அடைஞ்சு அதுக்கு மேல் ஒரு உளுந்து வடை தள்ளி ஒரு கிளாஸ்
மோர் விழுங்கி அதுக்கு மேலை ஒரு அரை கிளாசு ரசமும் குடிச்சு இதை எளிதுகிறேன் .எங்கடை அந்த பரிசுத் இருவத்தி ஓராம் பிறந்த நாள் கொண்டாடுகிறாராம் .நான் அவரை அதே நாளில் இணையம் ஊடாக வாழ்த்தி
இன்று ஒரு நாள் பிந்தி நேரடி வாழ்த்து .அவர் படிக்கும் படிப்பு** கணிய அளவியல் **
QUANTIY SERVEYOR ** நிலம் அளக்கும் சேவையர் இல்லை .அவன் நாளைய உலகில் டிப்ளோமா அன்றில் டிக்கிரி அடிச்சு இன்று அபிவிருத்தி அடையும் மூன்றாம் உலக நாடுகளில் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உந்த தொழிகுக்கு
அதிக தேவை DEMAND அதெல்லாம் எங்கை விளங்கும் எங்கடை தேவார பிராண
மந்திர சூத்திர மகாபாரத இராமாயண இலக்கியம் படிச்ச பழைய பண்டிதர் மாருக்கு
அவை கொக்கர கொக்கரோ செவலேய் எண்டு கொக்கரிச்சு கொண்டு இன்னும்
பழைய பல்லவி பாடுவினம் .உந்த பொடி டிப்ளோமா அதுக்கு பிறகு டிக்கிரி அடிச்சு
அதை தொடர்ந்து சிவில் பொறி இயல் ஆளரர் ஆகவும் மாற கூடிய வாய்ப்புகள் அதெல்லாம் எங்கள் பண்டிதர்களுக்கு நோடியாது
அதை விடுத்து வெறும் வேம்பு அதற்கான கணக்கு வழக்கு அதன் அறிக்கை விடுவதில் இருந்து விலகி எங்களை முதன்மை படுத்தாது இவங்கள் தொடங்கிய
இந்த இணையத்தை சமூக மேன்பாட்டுக்கு பாவிப்போம்


பணிப்புலத்தான்

29-01-2013 09:35

இதென்ன பிறந்த நாள் வாழ்த்தோ பிரசங்கமேடையோ?


manoharan

25-01-2014 17:27

பிரசங்கமோ இல்லை இது பிறந்த நாள் வாழ்த்தோ என்று என்னிடம் வினா எழுப்பியவர் இப்போ எங்கே ஓடி ஒளிந்து விட்டார் .நான் சொன்ன விளக்கத்துக்கு அவரிடம் இருந்து பதில் இல்லை .இது எல்லாம் பல காலமாய் எங்களை தொற்றி பிடித்த
தொற்று நோய் .அந்த மனோ வியாதிக்கு இன்னும் ஒரு vaccine (தொற்று நோய் தடுப்பு மருந்து) கண்டு பிடிக்க படவில்லை .கண்டு பிடிக்கவும் முடியாது .அது அவர்களை பரம்பரை பரம்பரையாக தொற்றி வரும் மனோவியாதி .**உதாரடி உவள்
கம்பெசுக்கு போய் விட்டாளோ ? நாங்களும் எங்கடை பெட்டையை கம்பெசுக்கு அனுப்ப என்ன பாடு பட்டோம் .அவள் இப்ப ஆரோடை ஒருத்தனொடை ஓடி விட்டாள்
உந்த மன வேதனைகளின் வெளிப்பாடு தான் இஞ்சினை பாண பேர்களில் வரும்
ஆக்களின் எழுத்துக்கள்


manoharan

22-01-2014 06:29

பிரசங்க மேடையாகவும் எடுத்து கொள்ளலாம் .உற்று /ஊன்றி வாசித்தால் புரியும்
அங்கு சூக்குமமாக சில /பல சேதிகள் சொல்ல பட்டுள்ளதை .வாழ்த்துக்கு வாழ்த்தும்
அவரின் பணிகளுக்கான பாராட்டுகள் அத்துடன் எதிர்கால கல்வி நடவடிக்கைக்கான
நெறிப்படுத்தல்கள் ஒரே மேடையில் .எடுப்பவர் எப்படி எடுத்தாலும் எனக்கு நோ
பிரச்சனை .அங்கு ஆறுமுக வித்தியாசாலை 100 ஆண்டு மலரில் மணி மாஸ்டர்
தொழில் கல்வி பற்றி நீண்ட ஒரு கட்டுரை .அதையும் கூட சிலர் பிரசங்கம் போல
நோக்க கூடும் .அது எம்மவர் சிலருக்கு உள்ள வியாதி .அவர் கூட எனது உறவினன் ஆகி அடிக்கடி பல வருடங்களுக்கு முன் என்வீடு வருவார் .அவர் ஒரு BSc பட்டதாரி .அவருடன் ஆன உரையாடல்களின் போது ஒருநாள் இவ்வாறு கூறினார் **அண்ணை நாங்கள் படித்த காலங்களில் எங்களை வழிப்படுத்த /நெறிப்படுத்த உங்களை மாதிரி ஆக்கள் எங்கள் ஊரில் இல்லை அண்ணை **
(நான் அப்போ திருமலையில் ) தகுந்த தருணத்தில் ரூட் ஐ மாத்தி வேறு திசையில் கல்வி வண்டியை ஒட்டி இருந்தால் அவர் இன்று இருப்பதை விட எவ்வளவோ உச்சத்தில் . அவரின் கட்டுரை இங்கு இணையத்தில் சிரித்திரனால் மீள் பிரசுரம் செய பட்டுள்ளது .இயலுமானால் வாசிக்கவும் .


பலெர்மோ தமிழ் கிறுக்கன்

21-01-2013 20:35

எமது ஊர் கட்சிகளை கண்முன்னே கொண்டுவத்த பண் கொம் படப்பிடிப்பளருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்க்கை எப்பொழுதும் அழகானது. அந்த அழகான வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை. நித்தமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு மாறுகின்ற உலகில் மாறாமல் இருப்பது அன்பு மட்டுமே


தங்கை மாதங்கி

21-01-2013 13:31

சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்


யா .சௌமியன்

21-01-2013 13:28

அன்பின் அண்ணாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்


. சொப்பிங்பாக் சிற்றகொங்

20-01-2013 15:38

21ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் அன்புள்ள பரிசித்துக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்


பண் த .பாலா

19-01-2013 08:05

தம்பி பரிசித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வயது இருபத்தி ஒன்று.இளமைய் துடிக்கும் வயது மனம் பல சஞ்சலங்களுக்குள் இழுக்கும். அதிலும் தீயவையை ஒதுக்கி நல்லதை தெரிவு செய்து கல்வியை தொடர்ந்து பெற்றவரின் மனம் நோகாமலும் உறவினர் சொல் கேட்டு நல் வழி செல்ல வாழ்த்துக்கள்.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி