காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.


தனது மனைவி கள்ளக்காதலனோடு இருக்கும் போது அவர்களை கையும் களவுமாக பிடித்த அந்த பெண்ணின் கணவன் ஊருக்கு முன்னிலையில் அவர்களை கட்டி வைத்து அடித்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

அந்த பெண்ணும் அவரின் கள்ளக்காதலனும் அடி பொறுக்க முடியாமல் அலறுகிறார்கள். அவர்கள் அடி வாங்குவதை அங்கு கூடியிருக்கும் குழந்தைகளும், பெண்களும் ரசித்து பார்க்கிறார்கள். ஆனால், இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மொத்த வருகை: 2348 இன்றைய வருகை: 3

கருத்துரைகள் (13)


மனோகரன்

11-08-2016 10:23

நெஞ்சு பொறுக்குதில்லை மனமோ
வேதனையின் விளிம்பில் செய்வது
என்ன என அறியாது தவிக்கின்றேன்
அன்று பருவ மழை பொழிவது போல்
பொழிந்து தள்ளிய பண் கொம் ஆனது
இன்று வானம் பார்த்த பூமி போலாகியது
முக நூலின் ஆக்கிரமிப்பு ஒரு புறம்
மறு புறம் ஸ்தாபகரின் ஒதுங்கி இருத்தல்
அவரும் இப்போ டென்மார்க் ஆசுவாத்திரியில்
என்று இடையில் அறிந்தேன் .அவர் நலம் பெற
எல்லாம் வல்ல ஆண்டவரை இறைஞ்சுகின்றேன்
அடுத்த சூரன் சூவன்னா சு வும் இப்போ இங்கு
இலங்கை பூராக சுற்று பயணம் செய்து
முக நூலில் படங்கள் போட்டு அவர் பாடு
வலு கொண்டாட்டம் கண்டியலே
அந்த சின்ன பொடி சதீசும் கலியாணம் கட்டி
புது மாப்பிளை அவருக்கும் பல சோலியல்
வேறை என்ன இனி மூடு விழாவை நடத்துவோம்
அது வேறை எங்கும் இல்லை எங்கடை
வாசிய சாலைக்கு முன்னாள் தான்
வருகை தரும் எல்லோருக்கும் ஆளுக்கு
அரை போத்தில் புளிச்ச கள்ளு வழங்கப்படும்
கூட குடுத்தால் பெரும் சோலி கண்டியலே


அன்டன் மனோகரன்

23-07-2016 20:04

அப்ப உங்கடை பிளான் என்ன ஊர் இணையத்தை ஒரே அடியாய் கதைவை பூட்டி மூடுகிறதே ஐடியா ??கடைசி வரையும் விடன் நான் கண்டியலே .அந்த சதீசு பொடியும் கலியாணம் கட்டி போட்டாராம் .அவருக்கும் பல சோலியல் இருக்கும் தேன் நிலவு கழிக்கவேணும் பிறகு மனிசி காறி யை கூட்டிக்கொண்டு போய் தனுஷ் நமீதா படம் காட்டவேணும் .பிறகு Mc.Donald / Pizzaa /கஃகிப்போய் ஆளுக்கு ஆள் மாத்தி மாத்தி தீத்த வேணும் .ஐயோ அத்தான் இது காணும் என்று அவ சொல்ல இவர் சொல்லுவார் இல்லை இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சுவார் .அது போல இன்னும் எத்தனை சோலியல் அவைக்கு .உவர் அவர் சுதர்சன் எண்டவரும் இப்ப வீறு இழந்து விட்டார் போல .நான் எண்டால் இன்னும் வீறு கொண்ட இளம் சிங்கம் வீரத்துடன் வலம் வருவேன் .பாலா மாஸ்டர் பிஞ்சினை அச்சிலேன்று பட்டு ஆசுவாத்திரியிலை அட்மிற்று பாக்க பொன்நான் .துடை எல்லாம் நோவாம் .ஒத்தனம் பிடிக்கிற லைட் ஒண்டு என்னட்டை கிடக்குது கொண்டு வந்து தாறன் எண்டு சொல்லி இன்னும் போக கிடைக்கேல்லை .எனக்கும் பல சோலியல் அல்லே


ஊரில் இருந்து ஒருவன்

19-07-2016 16:22

திரை கடல் ஓடி திரவியம் தேடியது போதும் என்று கருதி நான் பெற்ற அறிவு + அனுபவங்களை அடுத்தவருக்கும் (எம்மவர் ) பகிர்வோம் என்று கருதி மருதனார் மடத்தில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கடலோடல் மற்றும் கடல் சார் பொறி இயல் கல்லூரியில் விரித்து உரைக்கும் விரிவுரையாளர் ஆக இணைந்தேன் இடித்துரைத்து முயன்றேன் .வாழை பழத்தை தோலுரித்து ஊட்டுவது போன்றும் முயன்றேன் ஹூ ஹும் .ஒன்றும் தலையில் ஏறும் பூரும் பாடில்லை .ஆங்கிலத்தில் மட்டுமே விரித்துரைக்க வேண்டும் என்பது கப்பல் துறை அமைச்சின் கட்டளை. இருந்தும் நான் கூடிய
அளவு தமிழிலும் உரைத்தேன் .அவர்களின் ஆங்கில மொழி திறன் மிக மட்டம் .பொது அறிவு பூச்சியம் .ஒரு உதாரணம் மட்டும் . மின் பிறப்பாக்கிகள் மற்றும் பிரதான இயந்திரங்கள் வேகம் மாறா திருக்க Governor எனும் சாதனம் .அது அவர்கள் அறியாத சொல் என்பதால் .ஓ கே வட மாகாண ஆளுநர் யார் ? ஒருவருக்கும் தெரியாது .சரி அப்போ முதல் அமைச்சர் எவர் ?? ஒருவர் எழுந்து சொன்னார் .அது Politics இங்கு அரசியல் கதைக்க படாதல்லே Sir என்கிறார் .எனக்கும் சூடேற நான் சொன்னேன் இது காட்ஸி அரசியல் இல்லை தம்பி உங்கள் பிரதேச முதன்மை அமைச்சர் எவர் என்றுதான் கேட்ட்டேன் .பின் ஒழுக்கத்திட்கு பெயர் போன யாழ்ப்பாணத்தில் இப்போ ஒழுக்கம் ஒழுகி ஓடி மறைந்து விட்ட்து .எல்லாவற்றையும் கருத்தில் எடுத்து உதறி தள்ளி .இப்போ பணம் பண்ண வேறு ஒரு உபாய மார்க்கம் .அங்கு அனைவருக்கும் தொலை காடசி நாடக காச்சல் .எனக்கு ஒரு Concept என் மனதில் உதித்தது .நிலை வளமும் நீர் வளமும் (நிலாவரை கேணி) அங்கு சுன்னாகம் மருதனார் மடம் அச்சுவேலி ,நீர் வேலி எங்கும் ஒரே வாழை தோட்ட்ங்கள் .நான் சொல்வேன் வாழை குலை திருடன் என்று ஒரு தொலை காட்ச்சி நாடகம் ஒன்று தயாரிக்க போகின்றேன் .அதட்கு ஒரு சீன் களவாக வாழை குலை வெட்டுவது .ஒரு குலையை வெட்ட விடுங்கோ .நீங்கள் அப்போ தலையில் அடித்து குழற வேணும் **ஐயோ ஆரோ வாழை குலை களைவாய் வெட்டுகினம் ** என்று நீங்களும் சீனிலை வருவியல் .வாழை குலைக்கு பெறுமதியான காசு தருவோம் நாங்கள்.... ..ஐயோ என்னய்யா சொல்லுகிறியள் ?? .நாடகத்த்தில்லை நானும் வருவன்
என்றால் என்னத்துக்கு பிறகு காசும் கீஸும் என்பார்கள் .நான் ஒரு வாகனம் ஓன்று வாடகைக்கு அமர்த்தி வெறும் கோது மட்டும் உள்ள வீடியோ கமராவுடன் போய் இயலுமான வரை வாழை குலை களை வீழ்த்தி வாகனத்தில் ஏற்றுப்படும் shooting நடத்தும் போது ஓ கே ஷொட் ரெடி கமரா ஒன் .என்று சொல்லி இடை இடையே கட் கட் என்றும் சொல்லவேணும் .தேவையான குலைகள் கிடைத்ததும் மெதுவாக வாகனம் நகரும் என்னூர் நோக்கி .அடுத்த நாள் அதிகாலை ஒன்றில் சுன்னாகம் அன்றில் மருதனார் மட சந்தையில் அனைத்து குலைகளும் நல்ல விலைக்கு விற்க பட்டு கை நிறைய காசு .இதை விட வேறொன்றும் புரிய வில்லை எனக்கு


காதல் மன்னன் கதிரேசன்

02-07-2016 10:14

சூரியன் போல் சந்திரன் இல்லை
சந்திரன் போல் சூரியன் இல்லை
சூரியனோ பகல் முழுவதும்
ஒளியும் கூடவே வெப்பமும்
உலகெங்கும் தந்திடுவான் இங்கு
சந்திரனோ பதினைந்து நாளுக்கு
ஒரு தடவை பால் நிலா வீசி பின்
அடுத்த பதினைந்து நாளில் அமாவாசை
அமாவாசை அன்று என்போன்ற
கருமை ஒருவர் வந்தால் அவரை
அடையாளம் காணும் பொருட்டு
சிரிக்க சொல்வேன் பல்லு தெரிய
ஆள் உள்ள இடம் அறிந்து பின்
கட்டி தழுவி குசலம் விசாரிப்பு
கண்சிமிட்டி மினுமினுக்கும்
விண்மீன்கள் ஒருபுறம் ஆகாயத்தில்
சூரிய ,சந்திரனின் .விண்மீன் போன்ற
முன்று கடடளகிகள் என்மீது மையல்
எவரை ஏற்று கொள்வது என்று குழப்பம்
எவராவது உதவி அருளுங்களேன்


manoharan

24-06-2016 20:33

அடே எங்கப்பா ஒரு மாதிரி ஒர்க் அவுட் (அது தமிழ் நாட்டு பாஷை ) போச்சுது .இப்ப சில சனங்கள் வருகினம் பிஞ்சினை .வாருங்கோவன் வந்து ஊர் வம்பு பேசி அவளவையின்றை உவளவையின்றை துளாவாரங்கள் துலாவாமல் ஊர் நடப்பு விவகாரங்கள் உலக நடப்புகள் david kamoron பதவி விலக போறாராம் அதை பற்றி பேசி பறைவோம் வாருங்கோவன் .அதை விட்டிட்டு கண்டறியாத முக நூலிழை போய் சொறியாதேங்கோ .எங்கடை சொறியார் பொன்னற்றை பேரன் அவன் சுதர்சன் எவ்வளவு கசுற்ற பட்டு இதை கொண்டு செலுத்துகிறான் பாவி .அவனுக்கு சப்போட்டாய் இந்த உழியன் .கொஞ்சம் யோசியுங்கோ எம்மூரவர்களே சொறியார் எண்டு எழுதினத்துக்கு எக்கணம் உவன் என்னோடே அடி பிடி இலையும் வர கூடும் நோ புறப்பிலாம் .அவன் எங்கடை பொடி அல்லே


அன்டன் கந்தையா மனோகரன்

19-06-2016 15:42

அது தம்பி இன்றைய நவீன உலகில் மட்டுமின்றி அன்றைய ஆதி காலத்திலும் பெண்டுகளில் படிதாண்டா பத்தினிகளோ அன்றில் ஆடவரில் ஏக பத்தினி விரதம் அணிஷ்டித்தவர்களோ அல்ல அங்கும் இன்ன்குமாய் திரை மறைவில் அரங்கேறிய அரங்கேறும் நிகழ்வுகளே உவை .அதற்காக நாம் வீணே தலையை குழப்ப படாது கண்டீரே .
===== விசித்திர வழக்கொன்று =========
நீதி மன்றம் :: சர்வதேச நீதி மன்று
வழக்கிலக்கம் : ஐ பீ கோ ( Inetrnational Penal Court ) 368 உப பிரிவு 11 ஆ
வழக்காளி :: அன்டன் கந்தையா மனோகரன்
எதிரி :: முகநூல் + ஸ்மார்ட் போன்கள்
prosecutor : பாண் கீ மூன் .
சாட்சி கூட்டில் :: முன்னை நாள் பண் கொம் வாசகர்கள் +படைப்பாளிகள் +கருத்து கந்தசாமிகள் கழக அங்கத்தினர்
எதரி சார்பில் வாதாடும் வழக்குரைஞர் ::அது வேறு எவரும் இல்லை .அவரே தான்
விசாரணை ஆரம்பம் ஆகின்றது
மனோகரன் எழுந்து மதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய நீதி பதி அவர்களே உங்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது இந்த வழக்கில் நீதியானதும் நியாயமானதுமான தீர்ப்பை .
நீதவான் :: இஞ்சாரும் நீதி நியாயத்தை பற்றி எனக்கு நீர் படிப்பிக்க வேண்டாம் .மற்றது உங்கினை பெண்டுகள் மாதிர் மாயம் போட்டு பட்டர் பூச வேண்டாம் எனக்கு .என்ன பேரன்பு மதிப்பு எண்டு தொடன்குகிரீர் .இஞ்சை என்ன காலியான வீடே நடக்குது .
மனோகரன் ::ஐயா மன்னிக்க வேணும் ஏதோ பழக்க தொஷத்திலை அப்பிடி சொல்லிப்போட்டன்
நீதிபதி ::சரி சரி உமது வாத பிரதிவாதங்களை எடுத்து விடும்
மனோகரன் : ஐயா இதுதான் கதை .எத்தனையோ வருடங்களுக்கு முன் கோலா கலமாக ஆரம்பித்து அண்ணல் பாலகுமாரனை ஸ்தாபகராகவும் அவரின் வலது கை இடது கை போல இரு இளம் சிங்கங்கள் .வீறாக நகர்ந்தது செய்திகள் பிறந்த நாள் சமூகம் ஆன்மிகம் எம்மவர் ஆக்கங்கள் அமைப்புகள் தகவல்கள் வாசகர்கள் எண்டு ஏராளம் .அடிக்கடி பல காச்சலுகல் வேப்பம் காச்சல் கோயில் கணக்கு வழக்கு காச்சல் இன்னும் பல .
நீதி பதி : அதுக்கு என்னை என்ன செய்ய சொல்லுகிறாய் அப்பா ?
மனோகரன் :: நீங்கள் ஒண்டும் செய்ய வேண்டாம் ஐயா .ஒருக்காய் உந்த பராக் ஒபாமவிட்டை சொல்லி எண்டாலும் உந்த முக நூலையும் ஸ்மார்ட் போனையும் கொஞ்சம் கட்டு பாட்டின் கீழ் கொண்டு வர பாருங்கோ .அவர் உங்கடை கூட்டாளி அல்லே .எடை அந்த காலத்திலை வெள்ளை மாளிகைக்கு வெள்ளை அடிச்ச அவர் கெங்கை ஐ காணேல்லை இஞ்சினை கலட்டி சுள்ளான் நுள்ளான் இரணியன் ஒருத்தரையும் காணேல்லை ஆரம்பத்தில் என்னுடன் முட்டி மோதியவர்கள் நானும் உண்மை கல்ட்டியான் என்பதை விளக்கி கூறியதும் ஒதின்கினார்கள் .அற்புத எழுத்தாளர்கள் வினி .இரத்தின ராசு ரஞ்சிதம் வாத்தியின்றை மோன் என்ரை பெறா மோன் ஒருத்தன் .அவர் டாக்குத்தர் நேரம் இல்லை போல (எல்லாம் நொண்டி சாட்டு ) அற்புத எழுத்துக்கு சொந்தக்காரன் அற்புதன் இன்னும் எத்தனை பேர்கள் .ஓடி ஒளிந்து விட்டனர் .ஐயா எல்லாரும் இப்ப கேக்குகள் வெட்டி மேலுக்கு திரி கொளுத்தி கொஞ்சு பட்டு படம் பிடிச்சு முக நூலிலை கொழுவி மகிளுகினம் .நான் அப்பிடி செய்தால் அது பிழை இல்லை .நான் இப்ப வேதத்துக்கு மாறி விட்டன் அல்லே ஐயா .குத்து விளக்கு வாயாலை ஊதி நூர்க்காத பக்த கோடிகள் கப்பி வேட்டை டூ யூ எண்டு படிக்கினம்
நீதிபதி ::இஞ்சாரும் உம்மை எச்சரிக்கின்றேன் .வழக்கோடு சம்பந்தம் இல்லாத விடயங்கள் இங்கு கதைத்தீர் என்றால் நீதி மன்றம் கலையும் வரை கூட்டுக்குள் இருக்க வேண்டி வரும் கவனம் .
மனோகரன் :: என்னய்யா சொல்லுகிரியல் வழக்கொடை சம்மந்தம் இல்லையோ இதுகள் அப்பிடி எண்டால் உச்ச நீதி மன்றம் போய் உங்களையும் கூண்டிலை ஏத்துவன் ஐயா .என்னை லேசான ஆள் எண்டு நினையாதேங்கோ .இப்ப இஞ்சை ரண்டு நீதவான்கள் விளக்க மறியல் இலை கவுன்மேந்து கணக்கிலை சாப்பிடுகினம்
நீதவான் :: தலையை சொறிஞ்சு கொண்டு தனக்கு தானே சொல்லுகிறார் இவ்வாறு **உது ஒரு பொறுத்த மூதேவி போல உவநோடை தப்ப ஏலாது போல ** ஓகே proceed
மனோகரன் : நன்றி ஐயா (வழிக்கு வாழும் இல்லாட்டால் உம்மை வழுக்கி விழ வைப்பான் இவன் ) அப்ப ஐயா அந்த காலத்திலை நான் நோடியாது பாண கணக்கு விடாதை எண்டு எழுத நான் ஊர்போகும் வேளை தனில் என் சைக்கிளை மறித்து கனக்க படிச்ச பண்டிதர்மார் சிலர் எனக்கு ஏச்சு இவ்வாறு **அண்ணை நீங்கள் நல்லாய் தான் நீங்கள்
லொள்ளுபாண்டி

20-06-2016 23:32

அண்ண.....நல்ல திர்பபா சொல்ல சொல்லுங்கோ ...எனக்கும் கொஞ்ச நாளா பொழுது போகேல .........எத்தின பொழுது போக்கு மிசுணுகள் வந்தாலும் ..நாங்கள் முன்ன பறாஞ்ச banncom மாதிரி வராது


manoharan

24-06-2016 12:08

பண் கொம் வழக்கு விசாரணை விபரம் மற்றும் தீர்ப்பு எல்லாம் சொல்லி ஆச்சுது .மற்றது உங்கினை பெண்டில் புரியன் கள்ள காதலன் அடி பாடுகள் .அதுக்கும் ஒரு தீர்ப்பு சொல்ல போறன் பாருங்கோ .உதிலை ரெண்டு பகுதியிலையும் சரியும் இருக்குது பிழையும் இருக்குது பாருங்கோ .அந்த மாட்டருள் ஜீவ ராசிகளுக்கு மிக முக்கியமான அலுவல் .வெறும் இன்பம் கொண்டு pleasure கொள்வது மட்டுமல்ல .பரம்பரை விருத்தி -Development of Generation -- மனிதன் ஆடு மாடு கோழி மீன் எல்லாவற்றிக்கும் தேவையான உயிரியல் ரீதியான தொழில்பாடு .இங்கிலீசிலை இப்பிடி சொல்லுவினம் --Biological Necessity --சரியாக நாங்கள் நீர் அருந்துதல் /ஆகாரம் உண்ணல் போன்ற அலுவல் .அதை இங்கிதமாக இருவரும் இன்பமாக ஒழுங்காக சம பரமாக நடத்தினால் உந்த மாதிரி அடி பிடியில் போய் முடியாது .
அவர் :::::: நல்லாய் மூக்கு முடட போட்டு விட்டு வந்து கொர்ர்ர்ர் கொர்ர்ர் குறட்டை அன்றில் இயறகைக்கு ஒவ்வாத Approaches அன்றில் அவள் மட்டும் காணாது என்று மலருக்கு மலதாவி தேன் உண்ணும் வண்டுகள் போல ஏழு எட்டு மாதர்களுடன் சல்லாபம் .அவள் பாவி என்ன செய்ய தன் தாக்கம் தீர்க்க வேறொருவரை நாடுவது இயல்பே .

அவள் : மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து போன கட்டின புரியன் மாருக்கு ஒரு தேத்தண்ணியும் போட்டு குடாலாவை .அவளவைக்கு பக்கத்து வீட்டு மைனர் மாரோட லவ்வு மற்றது உந்த மாதிரி அலுவல் நடந்து ஊர் முழுக்க அது பரவ Bad news has wings -- அது சிறடித்து பரவும் .பிராக்கில்லாத பெண்கள் தாளிச்சு பொரிச்சு பரப்பு வளைவை .உன்காற்றி விஷயம் தெரியமே .அந்த பாதிப்பு Impact from Society -
அவனை வெறி கொள்ள வைக்கும் .கொலையும் பண்ணுவான் பொறுமை இழந்து
பின் கோடு போக அது **கை மோச கொலை ** என்று அவன் விடுதலை .

என் சீனியர்கள் சொன்ன கதை ஒன்று சீனியர்கள் சீனியர் ஒருவர் தொழில் நிமித்தம் ஒரே வெளி ஊர்களாம் (இப்பத்தையில் வெளி நாடுகள் இல்லை ) அவரின் மனையாள் ஊரில் ஒருவரை கண்டு பிடித்து அலுவல்கள் அமோகமாக நடந்ததாம்
இருந்தும் தொட்டு தாலி காட்டியவர் நடு சாமத்திலும் வருவாராம் .அதட்காக கள்ள காதலனுக்கு முடடை பொரியலோடை சோறு போட்டு இன்னொரு கோப்பையால் மூடி குப்பைக்குள் தாட்டு வைப்பாவாம் .இது போல இன்னும் ஏராளம் கதைகள் உண்டு என்னிடம்
-


அன்டன் manoharan

22-06-2016 08:14

இவ்வளவு நாளும் கோடிக்கை ஒளிச்சிருந்த லொள்ளுவுக்கு ரோசம் பொத்திக்கொண்டு வந்துவிட்டுது பாருங்கோ .வழக்குக்கு விசாரணை முடிஞ்சு தீர்ப்பு சொல்ல முதல் தொழில் நுட்ப கோளாறு .பிறகு வாறன் மிச்சம் சொல்ல .


அன்டன் மன்றன்

22-06-2016 15:11

கோட்டு அலுவல் பாத்து களை களை எண்டு களைச்சு போய் கோட்டுக்கு முன்னாலை இருந்த அந்த வாகை மர நிழலில் இருக்க தலையை சுத்திச்சுது நான் பயந்து போய் ஓடினான் எங்கடை டாக்குத்தரிடடை பிரஷர் கிரஷர் கூடி போச்சுதோ எண்டு சோதிக்க அவர் சோதிச்சு போட்டு சொன்னார் உங்கடை பிரஷர் நோமல் ஒருக்காய் அந்த பட்டினி கிடந்து சீனி அளவு அளக்கும் சோதினையியும் செய்வோம் எண்டு சொல்லி சோதிச்சால் அதுகும் நோமலம் 108 ஆம் .பிறகென்ன கோதாரி எனக்கென்று கேக்க டாக்குத்தர் சொன்னார் ஐயா கொஞ்சம் பொறுங்கோ அவதி படாதேங்கோ .உந்த வயதிலை எல்லாரும் அப்பிடித்தான் பட படப்பினம் .என்றை அப்பரும் ஒரு தமிழ் வாத்தியார் பள்ளிக்கூட அதிபர் அவரும் அப்பிடித்தான் .பொறுங்கோ உங்கடை குளச்சல் மடடத்தை ஒருக்காய் சோதிக்க வேணும் .நான் எழுதி தாறன் சோதிச்சு கொண்டு ரிப்போடடை கொண்டு வாருங்கோ .நானும் போனான் பெரிய படடணம் .பெடடை ஒருத்தி கையை உருவி உருவி ஊசியிலை குத்தி ரத்தம் கொஞ்சம் உருவி எடுத்து போட்டு சொன்னா **நாளைக்கு வாருங்கோ ஐயா ரிப்போட்டு தரலாம் எண்டு .நான் போனேன் அடுத்த நாள் .அவள் பாவி சொன்னாள் *ஐயா உங்கடை ரிப்போட்டின் படி நீங்கள் pregnancy positive ஆம் .இதென்ன தாலிய கடடடி பிள்ளை நான் என்ன பிள்ளை தகுச்சியோ ?ஐயோ என்றை கடவுளே என்றை மனிசி அறிஞ்சால் எண்டால் என்னை அடிச்சு கொண்டு போடுவாள் பிள்ளை .ஐயா கோவ படாதேங்கோ இந்த காலத்திலை உப்பிடியும் நடக்க வாய்ப்பு உள்ளது .உங்களுக்கு யாரேனும் Girl friends மார் இருக்கினம் ? எடியே என்னடி சொன்னாய் ?நான் உன்றை பேரன் மாதிரி கொஞ்சம் சொக்கை சுருங்கினாலும் பால் வடியும் என்றை முகத்தை பாத்து இப்பிடி ஒரு கேள்வி எப்பிடி அடி கேப்பாய் .
இது வெறும் நகைச்சுவை அல்ல .வணிக மயமாகி விடட இன்றைய நவீன உலகில் இவை போன்ற பல அலுவல்கள் அரங்கேறுகின்றன .நீதி மன்ற மீதி தொடரும்


அன்டன் மன்றன்

22-06-2016 15:43

தொடர்ச்சி .......அவையள் சொல்லிச்சினம் நீங்கள் நல்லாய்த்தான் எழுதுகிரியால் இருந்தும் என் அந்த எங்கடை பாஷையையும் இடைக்கிடை கொழுவுகிரியல் ? அயலூர் சனம் எங்களை நெளிக்கினம் உதார் உந்த மனோகரன் எண்டு .என் பதில் இவ்வாறு .**அந்த மொழியின் ஆற்றல் நீவீர் அறியீர் .எம் உயிர் காத்த மொழி அது இராணுவ ரவுண்ட் அப் .கேட்ப்பார்கள் ஒங்கடை வீட்டிலை புளி இருக்கா ?கோடி பக்க புளிய மரத்தை காட்டியவர்கள் .அடோ உங்கடடை Pistol இருக்காடா ?ஓம் ஐயா இருக்குது என்று என் மைத்துனன் இரவு சாப்பாட்டுக்கு பின் புகைக்க வைத்திருந்த Bristol ciggeret ஐ மேசை ளாச்சியை திறந்து காட்டியதும் வரலாறு .அத்தனைக்கும் மேல் ராணுவம் வெறியில் (இன ) அலையும் வேளை வயது போனவர்கள் இந்த மொழியை எவ்வாறு கையாண்டு பலரை காப்பாற்றிய வரலாறு எல்லாம் மறந்து தான் அவர்கள் இவ்வாறு ..**கையில் ஏதாவது ஒன்றை எடுத்து கொண்டு அதை கொடுப்பது போல பாசாங்கு செய்து எடே கொன்னை கழுகார் ஏதும் 10 சதம் பற்றி கேடடால் ஏகனும் நோடிக்க பூதி எண்டு கீத வேணும் **********இன்னும் எத்தனை அந்த மொழியின் பெறுமானம் .அனைத்தும் தமிழ் மொழியில் உள்ள இலக்கண வாகட சொற்கள் .நித்திரை --கங்குல் புலவர்கள் பாவித்தால் அது ok உங்கள் பெயர் இருப்பிடம் அதட்கு அப்பிளிக்கேஷன் போமுகலிலை **வதிவிடம் ** மனோகரன் இப்ப என்கை வாதியிரான் ?? அவன் இப்ப கொழும்பிலை வதியிரான் போல .எல்லாம் போலி பம்மாத்துகள் .எங்கடை என்பதை நாங்கள் அறிய வேண்டும் .அதை மதிக்க வேண்டும்


manoharan

22-06-2016 18:08

பின்னை வழக்கின்றை மிச்சத்தையும் கேளுங்கோவன்
நீதவான் :: இந்த வழக்கு மிகவும் சிக்கல் இதை நான் அடுத்த ஜூலை மாதம் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து தவணை போடுகிறேன்
மனோகரன் :: அங்கை தான் ஐயா கதை .வேலி வழக்கு ஆடுகால் வெட்டின வழக்கு வரம்பு வெட்டி வயல் பிடிச்ச வழக்கெல்லாம் நீங்கள் இழுத்தடிச்சு தவணை போடுவியல் பிரேக்கராசி மார் எல்லாரும் உங்கடை கூட்டு ஆளி மார் அல்லே .சடடம் ஒன்றாய் படிச்ச ஆக்கள் .அவைக்கு காசு உழைக்க நீங்கள் போடும் மாய ஜால வலை .எங்களுக்கு உதெல்லாம் விளங்கும் நீதிபதி அவர்களே .விடயத்தை விபரமாக அணுகி உடனடி தீர்ப்பு வழங்குங்கோ
நீதி பதி :: யுவனோடை நான் தப்ப ஏலாது போல .சரி சரி நான் இப்போ இறுதி தீர்ப்பு சொல்ல போகின்றேன் அனைத்து பண் கொம் படைப்பாளிகள் மற்றும் ஆயுள் கால அங்கத்தினர் அனைவரும் தண்ட பணமாக சிறு தொகை செலுத்தி மீண்டும் பண் கொம்மை உயிர்ப்பிக்கலாம் .
மனோகரன் :: ஐயா அந்த சேரும் காசுக்கு என்ன செய்ய ?
நீதிபதி :: எடே மனோகரா நீ என்ன கோயில் கோபுரம் கட்டும் சமூக சேவகனே ??
இல்லை நான் உன்னை அறிவேன் நீ எவன் என்று .அந்த காசை கொண்டு போ அங்கு உன் ஊரில் உள்ள ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் போகும் அந்த சுடலைக்கு .அங்கு நெருஞ்சி நாகதாளி பத்தைகள் .எல்லாத்தையும் ஒரு Land Master
போட்டு உளு .பிறகு ஒரு நாலைஞ்சு உளவு மிசினிலை அங்கினை செம்பாட்டு பக்கம் மண் கொண்டு வந்து போடு .ஆண்கள் பக்கத்தில கிடக்கிற நேவி காம்பை ஒருக்காய் பாருங்கோ .பிஞ்சலை பன்சாலையை பாருங்கோ .அதுக்கு பண் காலை இருக்கிற சிங்களரின் விடுதியை (Pilgrimage )ஐய் பாருங்கோ ஏன் நாங்கள் எங்கள் சுடலையை அவ்வாறு செய்ய முடியாது ???ஊரில் ஒருவருடன் அதை பற்றி கதைத்த போது அவர் சொன்னார் உத்து சரிப்பட்டு வராது .சிரமதானம் செய்வோம் வாருங்கோ என்று கூப்பிடடாள் அடி பிடியில் வருவினம் கண்டியே அவருக்கு நான் சொன்னேன் எல்லாரும் போகும் இடம் .எவரும் வராத இடம் ஏன் செலவில் நான் அதை சவக்காலை இன்றி ஒரு பூம்சோலை ஆக்கி காட்டுகிறேன் .இன்ஸா அல்லா


தமிழ்கிறுக்கன்!

14-06-2016 22:03

ஆண்களிலும் நல்லவர்களும் . கெட்டவர்களும்
பெண்களில் நல்லவர்களும் .கெட்டவர்களும் வாழுகின்ற பூமி இது .
தவறுகள் என்று தெரிந்தால் தண்டிக்கப்படா வேண்டியவைதான் ,
ஆனால் இப்படியான தண்டனையை ஏற்றுக் கொள்ள முடியாது ,
தவறுகள் எந்தப்பக்கம் இருக்கிறது என்று தெரியாமலும் கருத்தும் .
எழுத முடியாது?
(இன்றைய நவீன உலகம் இது )


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி