காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.


இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதி யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான புகைப்பட ஆதாரங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள கார்டியன் சில புகைப்படங்களையும் வெளியடிட்டுள்ளது.

அதாவது இராணுவப் படையினர் சிவிலியன்கள் மீது கொத்தணி குண்டுத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து நிலக்கண்ணி வெடிகளை மீட்கும் பணியாளர்கள் கொத்தணி குண்டுகளை மீட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் யுத்த சூன்ய வலயத்தில் இவ்வாறு கொத்தணி குண்டுகளின் பாகங்களை காணக் கிடைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய மீட்புப் பணியாளர் ஒருவர் கொத்தணி குண்டு குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Cluster bomb image from Chundikulam, Sri Lanka. Human rights watch has documented their use in Georgia, Sudan, and quite extensively in Syria.புகைப்படத்தில் காணப்படும் கொத்தணி குண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆயுதம் குறித்த கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் அதற்கு முன்னர் ஆட்சி செய்த அசராங்கங்களும் நிராகரித்து வந்தன.

கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுப் பகுதியில் நிலக்கண்ணி வெடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது ஆணையிறவு பாச்சிளாப்பள்ளி என்னும் இடத்தில் கொத்தணி குண்டுகளின் 42 பாகங்களை மீட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனத்தின் பணியாளர் தெரிவித்துள்ளார்.

https://www.theguardian.com/world/2016/jun/20/cluster-bombs-used-sri-lanka-civil-war-leaked-photos-suggestமொத்த வருகை: 1237 இன்றைய வருகை: 3

கருத்துரைகள் (2)


வீரப்பன்

29-06-2016 18:44

ஐயோ வீரையா உங்கினை படங்கள் சீரியலுகளிலை வார மாதிரி எங்களை பயமுறுத்தாதேயும் காணும் .உந்த அரிவாளை எங்கள் வாழ் நாளில் காணேல்லை அந்த காலத்து எங்கடை ஊர் சண்டியன் மார் (அது போலி சண்டித்தனம் ஒழுங்கை களில் ஒளிச்சிருந்து ஆடு அறுக்கும் கத்தியால் வெட்டி விழுத்தி குடல் வெளியே வர நடையாற்றை கார் வந்து ஏத்தி போகும் பெரிய படனம் பிள்ளைகள் எல்லாம் தலை தலை எண்டு அடிச்சு குளறுவினம் வெட்டினவை எல்லாம் சண்டியர்களாம் இது நான் இளமையில் என்னூரில் கண்ட சண்டியன் மார்கள் சண்டியன் என்றால் அது சங்கானை துரையன் ஐஞ்சு பேர் வந்தாலும் வகை சொல்லுவினம் .படங்களில் வரும் கதா நாயகன் மார் போல ஐம்பது நூறு பேரை அடிச்சு விழுத்துபவர் அல்ல அவர்கள்


வீரைய்யன்

29-06-2016 01:26

இப்பதான் தேடுனோம்.....இவ்வளவும் நடந்து முடிந்தது ஒருத்தருக்கும் ஒண்ணும் தெரியாது ....


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி