காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

ஆறு கால ஆண்டுகள் சிறைத்தண்டனையில் ஓஸ்கர்


தென்னாபிரிக்காவின் புகழ்பெற்ற ஓட்ட வீரர், இரண்டு கால்களும் இல்லாத நிலையில் இரும்பு பிளேட் மூலம் செய்யப்பட்ட கால்களை வைத்து ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் எடுத்தவர் ஒஸ்கார் பிறிற்றோரியஸ்.

கால்கள் இல்லாதவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த இவர் மன ஊனம் காரணமாக செய்த வேலையால் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவர் கடந்த 2013ம் ஆண்டு மாசி மாதம் 14ம் திகதி காதலர் தினத்தன்று தனது காதலியும் மாடல் அழகியுமாக றீவா ஸ்ரீன்காம்பை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

சம்பவதினம் இவருடைய வீட்டின் கழிவறைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே திருடன் என்று கருதி சரமாரியாக சுட்டதாகவும், கதவைத்திறந்து பார்க்க தனது காதலி சுடப்பட்டு கிடந்ததாகவும் கதையளந்துள்ளார்.

ஆனால் சம்பவதினம் வீட்டில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாக அயலவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

ஏற்கெனவே மாடல் அழகிக்கும் வேறு ஒருவருக்கும் பழக்கம் இருந்தாகவும் இதனால் இருவருக்கும் பொறாமையில் இருந்து ஊற்றெடுத்த அழுகிய மனச்சிக்கல் ஏற்பட்டதாகவும் முன்னைய செய்திகள் கூறியிருந்தன.

ஒஸ்கார் பிறிற்றோரியஸ் இரண்டு கால்களும் இல்லாத நிலையில் அவருக்கு ஒரு தன்னம்பிக்கை வீழ்ச்சியும், தாழ்வுச்சிக்கலும் இருந்ததாகவும், ஏற்கெனவே இதுபோல பல வன் செயல்களில் ஈடுபட்ட மோசமான பேர்வழி என்றும் வேறு சில செய்திகள் தெரிவித்திருந்தன.

துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்மணியின் குடும்பத்தினரே சாட்சி சொல்ல தயங்குமளவுக்கு இவருடைய வன்குணம் காணப்பட்டுள்ளது.

சுடப்பட்ட மாடல் அழகியின் தரப்பு சட்டத்தரணி இவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தார், ஆனால் நீதிபதி ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்ததுடன் மேல் மூறையீடு செய்யவும் வாய்ப்பளித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் மட்டுமல்ல உலகளவில் இந்த வழக்கு உற்று நோக்கப்பட்டது, தென்னாபிரிக்க நீதித்துறையின் நம்பகத்தன்மையை உலகம் மட்டுக்கட்டவும் வழக்கின் மீதான அவதானிப்பு நிலவியது.

இருப்பினும் இந்த வழக்கும், அதன் தீர்ப்பும் ஏதோ ஒரு பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவுவதைக் காட்டுகின்றன.மொத்த வருகை: 397 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி