காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

பணிப்புலம் ஆதிபராசக்தி அம்பாளின் பக்திப்பாடல்கள் - சுப்பிரமணியம்மை


பணிப்புலம் என்ற ஊரைப் பதிகொண்ட பராசக்தி..
அணிகலன் இல்லாமலே அழகான திருவடிவே......
அணிகலன் பூண்டபின்னர் உன்னழகை என்னசொல்வேன்....!
தணியாது பக்தர்களின் பரவச விரதக்கோலம்.....!

இச்சையுடன் இந்தமண்ணில் இறுமாப்பாய் வீற்றிருந்து .....
மெச்சும் அருள்பொழிந்து மேன்மையாய் தேரிலன்று....
பச்சை சாத்துகையில் உன்அழகைப் பார்கையிலே...
உச்சந்தலை தொடங்கி உள்ளமெலாம் சிலிர்க்குதம்மா.....!

உன்மண்ணில் உதித்தவர்க்கு ஒருகுறைவும் இல்லையென்ற
தன்நிறைவு கொடுத்த தயாபரியே தண்ஒளியே.....'
பொன்போன்ற அரவணைப்பும் புனிதமான பண்பும்..
அன்பும் சொரிந்து ஆதரிக்கும் அன்னைநீயே...!

ஆதிபராசக்தி அம்பிகையே ஆவலுடன் தொழுவோர்க்கு
பாதிப்பு ஏதுமின்றி பரிபாலிக்கும் பராபரியே....!
நீதிக்கும் நேர்மைக்கும் நிலையான சுந்தரியே....
நாதியற்றோர் தமக்கு நலன்கொடுத்த நாயகியே...!

மண்ணிலே ஐந்து கண்டமெலாம் பரந்துவாழும் மாந்தருக்கு
எண்ணிய எண்ணப்படி எழுச்சியான வாழ்வுநல்கி...
கண்ணியமான கல்விச் செழிப்புற்று வாழ்க்கையிலே...
புண்ணியம் அதிகம் செய்த புனிதரெனப் பூரித்தாய்..!

புலம்பெயர்ந்தும் புகழ்பூத்த உன்தன் கிருபையினால்...
உலகெலாம் பரந்துவாழும் உன்னடியார் உள்ளத்தை...
வலம்வந்து வாஞ்சையுடன் வருடிவிடும் வனிதாமணி...
நலத்துடன் வாழவைத்த நம்பிக்கைத் தாயாரே......!

கிழக்கிலே இடும்பருடன் வேட்டைக்கு வருகின்ற அம்பிகையே....
தெற்கிலே கண்ணகையை தங்கையென அமரவைத்தும்...
மேற்கில் மக்களாம்விநாயக,முருகமூர்த்தி துணையிருக்க ..
வடக்கிலே சிவனைப் பிள்ளையாரை காவல் கொண்டாய்..!ஆக்கம்: சுழிபுரம் சுப்ரமணியம்மை


மொத்த வருகை: 1255 இன்றைய வருகை: 2


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி