காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

மற்றவர் கருத்துக்கள் தீா்ப்புக்கள் அல்ல.... - புதியவன் ஜேர்மனி


பெரும்பாலன மனிதா்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவா்களுடைய கருத்துக்களை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விசயத்தை புகழ்ந்தால் அது உன்னதமாக தெரிகிறது.ஒரு உயா்ந்த விடயத்தை பலரும் பரிகாசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது.ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை.

பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை,அறிவு,அனுபவம்,விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமர்சனங்கள் எமுகின்றன. சிலர் அந்த சிரமத்தை கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகிறது.

மிகவும் மந்த புத்திக்காரன் அறிவு கூர்மை போதாது என்று ஆசிரியர்களால் கருதப்பட்ட ஒரு இளைஞர் அதை ஏற்றுக் கொண்டு தன் திறமைகளில் நம்பிக்கை இழந்து பின்வாங்கி இருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக உலகம் கருதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை உலகம் இழந்திருக்கும்.

விமான இயந்திரவியல் படிக்க விண்ணப்பித்து பன்னிரண்டு பேர் டேராடூனில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்கள். அந்தப் பன்னிரண்டு பேர்களில் ஒருவர் மட்டும் தகுதியில்லை என்று நீக்கப்பட்டார். அவர்தான் டாக்டர் அப்துல்கலாம். விஞ்ஞான இயந்திரவியலுக்குத் தகுதியில்லை என்று நீக்கப்பட்டவர் பின்னாளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இயக்குனர் பதவி வகுத்து பல சாதனைகள் புரிந்தது விந்தையல்லவா?

பள்ளிக்கூட கூடைப்பந்தாட்டக் குழவில் விளையாடத் தகுதியில்லாதவர் அன்று மறுதலிக்கப்பட்ட ஒருவர் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கூடை பந்தாட்ட வீரராகப் புகழ்பெற்றார். அவர் தான் மைக்கேல் ஜோர்டான். பள்ளிக்கூட அளவிலேயே அவர் சேர்ந்து ஆடவதை விட்டிருந்தால் வாழ்ந்த சுவடு தெரியாமல் அவர் போயிருப்பார்.

ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தக் கூடத் திராணியற்றவள்' என்று கேவலமாக ஒரு கன்னியாஸ்திரியைப் பார்த்து பெரயமதகுரு சொன்னார். துன் இயக்கத்திற்காக லொரெட்டோ கன்னிமடத்தைத் துறக்க அனுமதி கேட்டபோது தான் இந்த வார்த்தைகளை அவர்கேட்க வேண்டிவந்தது. இதற்குக் கூடத் திராணியில்லாத நீ ஒரு இயக்கத்தையா வழிநடத்தப்போகிறாய் என்கிற ரீதியில் பேசப்பட்ட கன்னியாஸ்திரி வேறு யாரும் அல்ல கல்கத்தா வீதிகளில் பெரும் சேவை புரிந்த நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா தான்.

ஒரு செய்தித்தாளில் 'கார்ட்டூனிஸ்டா' கத் தன் வேலையை ஆரம்பித்த இளைஞருக்கு வேலை சில நாட்களிலேயே போய்விட்டது. அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் சொன்ன காரணம் 'உனக்குக் கற்பனைத்திறமையே இல்லை' அந்த இளைஞர் யார் தெரியுமா? கார்ட்டூன் உலகின் மேதை வால்ட்டிஸ்னி. அவர் உருவாக்கிய டிஸ்னிலேண்ட் என்ற பரவச உலகம் பல நாடுகளில் இன்றும் கற்பனைத்திறன்களின் சிகரமாகக் கருதப்படுகிறது.

இப்படி உதாரணங்களால் நூற்றுக்கணக்கான பக்கங்களை ஆதாரத்தோடு நிரப்பமுடியும் என்றாலும் செய்தி இது தான் மற்றவர்களுடைய மோசமான கருத்துக்களை தீர்ப்புகளாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள் உங்களுக்குள் இருக்கும் உற்சாகத் தீயை அணைந்து விட அனுமதிக்காதீர்கள். அப்படி அணையவிடும் போது தான் அவர்கள் கருத்து தீர்ப்பாகிறது. எதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆரவம் இருக்கிறதோ, அதற்காக உழைக்கவும் நீங்கள் தயாரோ அதில் நீங்கள் தாக்குப்பிடித்தால் போதும் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.மொத்த வருகை: 945 இன்றைய வருகை: 2

கருத்துரைகள் (5)


. மனோகரன்

21-08-2014 12:33

புதியவனின் இந்த படைப்பானது ,, வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று வெற்றி கம்பத்தை நோக்கி வீறு நடை போடுபவர்களுக்கு பல்வேறு காரணிகளினால் சறுக்கி வீழ்ந்தவர்களை மீண்டும் எழுந்து முன்னே செல்ல வைக்கும் ஊக்க மருந்து இந்த ஆக்கம் .கருத்து கந்தச்சமிகளின் கழகத்து போஷகன் ஆன(சுய நியமனம் --Self Appointment / சுய தொழில் மாதிரி ) என்கண்ணில் படவில்லை .
சறுக்கி வீழ்ந்து பின் சாதனை ஆளர்கள் வரிசையில் இன்னும் பலர் உள்ளனர் .நானறிந்த ஒருவரையும் சொல்கிறேன் .
கிரேக்கத்தை சேர்ந்த பாரிய கப்பல் நிறுவனத்தின் (150 கப்பல்களுக்கும் மேல் ) உரிமையாளன் ஆன ஒனாசிஸ் என்பவர் இளமை காலத்தில் அமேரிக்கா குடி ஏறி
அமெரிக்க கடல் படையில் (US Navy ) இல் பயிலும் இளவல் (Officer cadet ) ஆக இனைய விண்ணப்பித்து நேர்முக பரீட்சையில் .உயரம் காணாது என்று கலைத்து விட்டார்கள் .பின் பலவருடங்களின் பின் அமெரிக்க கடல் படையில் பணி புரிந்து
இளைப்பாறிய பல உயர் அதிகாரிகள் அவரை காண /அவரின் கப்பல்களில் பணி புரிய Kew வில் நின்றார்களாம் .
அவருக்கு சொந்தமான ஒரு தீவு உண்டு .தன பெயர் உலகெங்கும் பிரபல மாக வேண்டும் என்பதற்காக கொள்ளை உண்ட முன்னை நாள் அமெரிக்க சனாதிபது
john F .kenedy யின் மனைவி jaquilin kenedy ஐ தள்ளாத வயதிலும் திருமணம் செய்து
தீவில் சல்லாபமாக இருந்த காட்சிகள் பத்திரிக்கை காரர் இனால் ஒளித்திருந்து படம் பிடித்து பிரசுரித்து பெரும் சர்ச்சைகள் .சரியாக டயானாவுக்கு நடந்தது போல .
இன்று பிரபல கப்பல் இருவனங்களில் ஒன்றான PIL (pacific International Line ) --150 இற்கு மேற்பட்ட கொள்கலன் கப்பல்கள் .அதன் சொந்தக்காரன் ஆர் தெரியுமே ?
முன்னை நாள் ஒரு பிரதம சேவகன் (Chief Steward ) ஆக கப்பல்களில் பணி புரிந்தவன் .பிளேனிலை சாப்பாடு பரிமாறுகிற பெண்டுகளுக்கு ஒரு boss உள்ளது போல கப்பல்களில் இருப்பவர்
*******முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் *********** முவைத்த காலை பின் வையாதீர் **** துணிந்து நில் தணிந்து செல் தோல்வி கிடையாது *****போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே ஆற்றும் கடமையை மறக்காதே .புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கஞ்சா கறுப்பன்

21-08-2011 22:44

நானும் உப்பிடித்தான் மேற்கொண்டு படிப்பதற்குச் சென்றால் எனது புள்ளிகள் போதாது என்று என்னைக் கலைத்துவிட்டார்கள்.ஆனால் நான் இப்போது என்மனைவி போற்றும் ஒரு திறமையான சமையல்காரணாக வளர்ந்துள்ளேன்.பகுதி நேரங்களில் என் திறமையைக் காட்டிக்கொள்ள உடுப்புகளை கையால் தோய்த்து காயப் போடுவேன்.என்னையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.


மனோகரன்

21-08-2014 15:47

கஞ்சா கறுப்பா எனக்கும் உதே கதை கன இடங்களில் கன தடவை நடந்தது தான் .உனக்கு Maths ஓடாது .வெளியிலை போ எண்டு கொப்பியை எடுத்து கொண்டு வகுப்பு விறாந்தையில் எனை வரிசையில் நிப்பாட்டின வாத்தி மார் .சும்மா அந்த காலத்து SSC வாத்திமார் இல்லை .காசு சிலவளிச்சு இந்தியா பொய் வாங்கி வந்த BSc உவாத்திமார் .எங்களை Condem பண்ணி எங்கள குல தொழிலாம் அந்த Trumpet ஐ ஊதி காட்டி பும் பூம் என்று நக்கல் அடித்த எங்கடை உவாத்திமார் .அவை மட்டும் இல்லை சக மாணவர்கள் கூட அந்த மாதிரி .எங்களை பொ.........ம் காவியள் என்று பரிகாசம் பண்ணி உளக்கியத்தை எப்பிடி மறக்க .இருந்தும் நான் சோரவில்லை .இரவு பகலாக கசுற்ற பட்டு உழைச்சு படிச்சு அந்த கணித பாடம் ஈறாக (நான் ஒரு விகடத்திட்காக இங்கு கப்பலில் கறள் சுரண்டுகிறேன் என்று எழிதிய போதும் )நான் ஒரு கப்பல் பிரதம பொறி இயலாளன் (Chief marine Engineer ) கண்டியலே .என்னை அன்று வகுப்புக்கு வெளியாலை கலைச்ச அந்த நாய் வாத்தி அரசியல் செல்வாக்கில்லை பணிப்பாளர் ஆகி எதோ ஒரு அலுவலுக்கு லோட்டன் சைக்கிளிலை மலாய் வீதியில் அன்று இருந்த கல்வி இலாகாவுக்கு போறார் .நான் என்ரை கூட்டாளி ஒருவனின் luxury காரில் பயணம் .அவரை கண்டதும் என்மனம் சொல்லிச்சுது இறங்கடா மனோகரா ஒருக்காய் போய் சொல்லடா **புளிச்சல் ராசையா ** (அவருக்கு அன்று நாங்கள் வழகிய பட்ட பேர் ) ஒரு வகை தீவு கூட்டம் அவர் .என்னை வகுப்பில் இருந்து கழிச்ச கலைச்ச நீர் எங்கை ? நான் இப்ப எங்கை எண்டு ஒருக்காய் பாரும் எண்டு சொல்ல நினைச்சு போட்டு சொல்லுவதில் ஒன்றும் பிரயோசனம் இல்லை என்று நினைத்து இன்று அவர்கள் புலம் பெயர்த்தும் அதே கதைதான் நடந்தேறுகிறது என்று நினைத்து பேசாமல் போனேன் அங்கு என் வீட்டுக்கு .அங்கை போனால் நல்ல ஒடியல் கூழ் காரல் கீழி போட்டு மரவெள்ளி கிழங்கு சின்ன றால் துண்டு துண்டாய் வெட்டின செத்தல் முளகாய் ஓடை .வயிறு நிறைய கூழ் குடிச்சு அந்த புளிச்சல் ராசையா வாத்தியையும் நினைச்சு பெரிய ஏவறை ஒண்டு வர நித்திரை கொண்டதுதான் .ஒரு அரை மணித்தியாலம் கழிய அவள் வந்து தட்டி எழுப்புகிறாள் .**என்ன கொற கொற எண்டு குறட்டை விட்டு கொண்டு படுக்கிரியல் .உங்கை இண்டைக்கு அங்கினை எங்கயோ வெளிநாட்டு காரரின்றை காசிலை கட்டின கோயில் கும்பாவிஷேகம் அல்லே ? உங்களையும் அழைச்சவை அல்லே நீங்கள் போகேல்லையே ?எடியே சும்மா விடடி உவங்கள் வெளி நாட்டு தீவ கொண்டி காட்டுகிரான்கள் .குடிச்ச கள்ளோடை நீ காச்சின ஒடியல்
கூழையும் குடிச்சு போட்டு கொஞ்சம் நின்மதியாய் நித்திரை கொள்ள விடனடி ??
ஓம் ஓம் சொறி !! எடியே உனக்கு இங்கிலீசும் தெரியுமேடி ? அது நான் உங்கினை வெளிநாட்டு பெண்டுகளிட்டை படிச்சு போட்டன் .அப்பிடி எண்டால் அது நல்லதடி .என்னை விடு இப்ப கொஞ்சம் நித்திரை கொள்ள .**குறட்டை .ஹுர்....பூர் ஹா ஹா
ஆ .ஊ .. இஞ்சை வாடி சலிக்ஷி கொப்பருக்கு கொஞ்சம் வெறி கூடி போச்சுது போல சாத்துவாயும் ஊத்துகிறார் .துடைச்சு விடடி .எனக்கு உதுகள் ஒண்டும் செய்ய நேரம் இல்லை .நான் பாரத நாட்டிய கிளாசுக்கு போக வேணும் .ஏன் உந்த குடி கார அப்பனை கட்டினநீன்கள் .நீங்கள் அனுபவியுங்கோ நான் வாறன் போய் விட்டு
எடியே இஞ்சை வாடி உது உன்றை கொப்பன் அடி .அவர் இல்லை எண்டால் நீ பிறந்து இருக்க மாட்டியடி
அது எனக்கு இப்ப தேவை இல்லை .எனக்கு கிளாஸ் உக்கு late ஆகுது ஓகே பாய்


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

21-08-2011 17:19

நல்ல கட்டுரை. எமக்கு பிடித்தவர்கள், சமூகத்தில் முன்னிலையில் இருப்பவர்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களை வேத வாக்காக ஏற்றுக்கொள்ளும் மனநிலை யை இந்த கட்டுரை மாற்றி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
புதியவன் என்ற பெயரின் அர்த்தம் இப்பொழுது தான் எனக்கு விளங்கிறது.
உங்கள் புதுமை பயணம் தொடரட்டும்.


பண் த.பாலா

21-08-2011 14:57

புதியவனின் கருத்துமூலம் பல யதார்த்தவாதிகளின் உன்மை சம்பவங்கள் மூலம் புரியவைத்துள்ளது. அபாரம்.நம்மிடம் இருப்பதை வளர்க்கவும்,வளம்பெறவும் பலரது கிறுக்கல்கள் தான் கவிதையாகவும்,கதைகளாகவும் பெயர்பெற்ற சரித்திரங்கள் உண்டு.எமது இணையம் யாரானாலும் வந்து கிறுக்க இடம் தர தயாராக உள்ளது.வரவுகள் அனைத்துமே பிரசுரமாகும் மீண்டும் மீண்டும் உங்கள் ஆக்கத்துக்காய் காத்திருக்கும் வாசகரில் நானும் ஒருவன். பண்.த.பாலா


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி