காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.


எப்பொழுதும் உன் சொப்பனங்கள்

(கேள்வியின் நாயகன் - 3 )


கேள்வி: ராகங்கள் என்றால் என்ன?

மேளகர்த்தா ராக சக்கரம்

மேளகர்த்தா ராகச்சக்கரம்

பதில்: ராகங்கள் என்றால் ஏழு ஸ்வரங்களுக்குள்ளும் எடுத்த ஸ்வரங்களின் கோர்வை. எல்லா ராகங்களிலும் எல்லா ஸ்வரங்களும் வராது. 72 மேளகர்த்தா ராகங்கள் கர்நாடக சங்கீதத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு ராகத்திற்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் காலையில் பூபாளம், சோகத்திற்கு முகாரி ராகம் மாதிரி.
இந்த ஸ்வர கோர்வைகள் படிப்படியாக மேலே போய் கீழே வருவது ஆரோகணம் அவரோகணம் என்று சொல்லப்படும். தனி ஆரோகணத்திலேயே இளையராஜா ஒரு பாடல் compose பண்ணியிருப்பார் சிந்து பைரவி படத்தில் 'பூ மாலை வாங்கிவந்தால் பூக்கள் இல்லையே ' என்று.
இந்தப்பாட்டில் அவரோகணமே இல்லை.

இனி இந்தமுறை பாட்டுக்கு போவோம்.
சமீபத்தில் வந்த படம் ஒன்று "முப்பொழுதும் உன் கற்பனைகள்" . அந்தப்படத்தை பற்றி நான் சொல்ல வரேலை அதில அப்பிடி சொல்லுரத்துக்கும் ஒன்றும்
இல்லை அமலா பாலை தவிர.

இந்த படத்தின் தலைப்பை கேட்டவுடன் காலத்தால் அழியாத ஒரு பாடல் ஞாபகம் வந்தது. 'கோபுர வாசல்'
படத்தில் இளையராஜாவின் மெய்சிலிர்க்கும்
இசையில் வாலியின் இளமை துள்ளும் வரிகளில் ஜானகியின் மயக்கும் குரலில் வந்த "தாலாட்டும் பூங்காற்று நானல்லவா " என்ற ஏக்கம் அல்லது தாபம் வகை பாடல். முடிந்தால் இந்தப்பாடலை கேட்கும் போது அமைதியான இடத்தில் இருந்து கண்களை மூடிக்கொண்டு(அப்பிடியே நித்திரை கொள்ளுறேல) கேளுங்கள்.
பாட்டின் மெட்டு, இடையில் வரும் வாத்தியங்களின் ஆலாபனை, விதம் விதமான வாத்தியங்களின் இசைகளை அழகாக கோர்த்து பாடுபவரின் குரலுடன் கலந்து பின் காற்றில் சங்கமமாகி காதுகளில் இதமாக விழும்பொழுது ஒரு நல்ல பாடல் பிறக்கின்றது. அப்படி ஒரு பாடல்தான் இது.

ஜானகியின் குரலில் ஆலாபனையுடன் தொடங்கும் பாடல்
தாலாட்டும்
என்று தடங்கி பூங்காற்று வரும்பொழுது தபேலா ஒரு அழுத்தத்துடன் தொடங்கும். சாதாரணமாக பாடல் தொடங்கும் போதே தாள வாத்தியங்கள் ஆரம்பமாகும். என்ன ஒரு Dynamics ஜனாகியின் குரலில். அழகான சங்கதிகள்.

‘நள்ளிரவில் நான் கண்விழிக்க உன் நினைவில் என் மெய் சிலிர்க்க’ என்ற வரிகள் வரும் போது அதனுடன் வரும் புல்லாங்குழல் இசை உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கும். மெய் எண்ணுறது உடம்பு இல்லை பட்டினத்தார் சொன்ன
'காயமே அது பொய்யடா காற்றடைத்த பையடா'
வில வாற காற்று தான் மெய்,

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீகேட்டு பாராட்டு ஓ மன்னவா


வருவாயோ.... வாராயோ............

ஓ நெஞ்சமே.........

ஓ நெஞ்சமே.........

என் நெஞ்சமே

உன் தஞ்சமே..


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீகேட்டு பாராட்டு ஓ மன்னவா


நள்ளிரவில் நான் கண்விழிக்க

உன் நினைவில் என் மெய் சிலிர்க்க

பஞ்சனையில் நீ முள்விரிப்பாய்

பெண் மனதை நீ ஏன் பறித்தாய்

ஏக்கம் தீயாக ஏதோ நோயாக

காணும் கோலங்கள் யாவும் நீ யாக ,

வாசலில் மன்னா உன் தேர் வர ,,,

ஆடுது பூந்தோரணம் ....


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீகேட்டு பாராட்டு ஓ மன்னவா


எப்பொழுதும் உன் சொப்பனங்கள்,

முப்பொழுதும் உன் கற்பனைகள்,

சிந்தனையில் நம் சங்கமங்கள்,

ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்.........

காலையில் நான்பாடும் காதல் பூபாளம்

காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்

ஆசையில் நாள்தோறும் நான் தொழும்

ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீகேட்டு பாராட்டு ஓ மன்னவா


வருவாயோ.... வாராயோ............

ஓ நெஞ்சமே.........

ஓ நெஞ்சமே.........

என் நெஞ்சமே

உன் தஞ்சமே..


முதல்ல பாட்டை மட்டும் கேட்டுவிட்டு பிறகு கார்த்திக்கையும் பானுப்பிரியாவையும் பார்க்கலாம்.


இன்னொமொரு இதேவகை பாடல் அலைபாயுதே படத்தில் A .R . ரகுமான் இசையில் ஸ்வர்ணலதாவின் குரலில் வந்த 'எவனோ
ஒருவன்
வாசிக்கிறான் ' என்ற பாடல்.

A .R . ரகுமான் உடைய guitare இசை அருமையாக இருக்கும் அதோடு ஸ்வர்ணலதாவின் குரலில் இருக்கும் ஏக்கம் உங்கள் மனசுக்கு இடம் மாறிவிடும்.

எவனோ
ஒருவன்
வாசிக்கிறான் ...இருட்டிலிருந்து
நான்
யாசிக்கிறேன்

தவம்
போல்
இருந்து
யோசிக்கிறேன்
அதைத்
தவணை
முறையில்
நேசிக்கிறேன்


எவனோ
ஒருவன்
வாசிக்கிறான்
இருட்டிலிருந்து
நான்
யாசிக்கிறேன்

தவம்
போல்
இருந்து
யோசிக்கிறேன்
அதைத்
தவணை
முறையில்
நேசிக்கிறேன்

கேட்டு
கேட்டு
நான்
கிறங்குகிறேன்
கேட்பதை
எவனோ
அறியவில்லை

காட்டு
மூங்கிலின்
காதுக்குள்ளே
அவன்
ஊதும்
ரகசியம் புரியவில்லை


எவனோ
ஒருவன்
வாசிக்கிறான் ...இருட்டிலிருந்து
நான்
யாசிக்கிறேன்

தவம்
போல்
இருந்து
யோசிக்கிறேன்
அதைத்
தவணை
முறையில்
நேசிக்கிறேன்


இன்னும் சில இதே ரக பாடல்களின் இணைப்புகள் கீழே,

காற்றினிலே வரும் கீதம்

அந்த
சிவகாமி
மகனிடம்
சேதி
சொல்லடி

செந்தூர
பூவே

மாலையில்
யாரோ
மனதோடு

பால்
போலவே
வான்

இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன.


கேள்வி: நடந்த கதை ஒன்று?

பதில்: அண்மையில் இந்தியாவில் K .S .பாலச்சந்திரன் அவர்களுக்கு விருது கிடைத்ததாக செய்தி வாசிக்கும் போது ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.
1989 இல் பரீட்சை நிமித்தம் கொழும்பில் உள்ள church ஒன்றில் நானும் மற்ற ஐந்து நண்பர்களும் தங்கியிருந்தோம்.
அதே church இல் K .S .பாலச்சந்திரன் உடன் அவரது இளைய சகோதரனும் மற்றும் ஒரு அக்கா பெட்டி படுக்கையுடன் தங்கியிருந்தனர். முதல் முதலாக அக்காவை பார்க்கும் பொழுது அசோகவனத்து சீதை மாதிரி இருந்தது, சீதைக்குத்தான் மனிசனை பிரிஞ்ச சோகமே ஒழிய எப்பிடியும் அவர் வந்து ஒளிச்சு இருந்தெண்டாலும் ராவணனை போடுத்தள்ளிப்போட்டு, (வாலியின்ர கதையை முடிச்சதுமாதிரி) தன்னை கூட்டிக்கொண்டு போவார் எண்ட நம்பிக்கை இருந்திருக்கும்.
ஆனால் அக்காவின் முகத்தில் அது கூடி இல்லை. மேல சொன்ன எப்பொழுதும் உன் சொப்பனங்கள் என்ற மாதிரி யாரோ ஞாபகமா இருந்தா. ஏன் அக்கா அங்கு தங்கியிருக்கிறா என்பதை அறியவேணும் எண்டு தலைக்குள்ள குடைஞ்சுகொண்டே இருந்துது.

K .S .பாலச்சந்திரன் இன் சகோதரனிடம் விசாரிச்சதில் ஏதோ interview இக்கு வந்து இப்போது யாருடையதோ telephone ஐ எதிபார்த்துக்கொண்டிருக்கிறா வெளி நாட்டிலிருந்து.
பிறகொருநாள் அவவிடம் கதை குடுத்ததில் இன்னுமொரு
interview இக்கு காத்திருப்பதாக மட்டும் சொன்னா. எவ்வளவோ முயற்சித்தும் ஒரு விசயமும் வெளி வரேல. ஒருக்கா சொன்னன் "அக்கா உங்கட தம்பிமாதிரி நினைச்சு உண்மையை சொல்லுங்கோ", அதுக்கு "அவனை ஞாபகப்படுத்தாத அவனால தான் நான் இங்க இருக்கிறன்" எண்டு சொன்னா.


" அக்கா சோதினைக்கு வந்திருக்கிறன், உங்கட கதை தெரியாட்டி படிப்பேறாது தயவு செய்து சொல்லுங்கோ"
எண்டு கடைசி ஆயுதத்தையும் பாவிச்சன். கொஞ்சம் கொஞ்சமாக கதை சொல்ல தொடங்கினா.

அவவுக்கு 28 வயசு, பாலர் பாடசாலை teacher . அம்மா, அப்பா, ஒரு தம்பி, தங்கை எண்டு நடுத்தர குடும்பம்.
18 வயதிலிருந்து அதே ஊரை சேர்ந்த ஒருவருடன் காதல்!
ஆரம்பத்தில் நல்லாக போய்கொண்டிருந்த காதல் அவர் ஓமான் இக்கு போனபிறகு இரண்டு மாதத்துக்கு ஒரு கடிதம் எண்ட நிலைக்கு வந்து இப்ப அவர் Germany போனபிறகு

ஒண்டுரண்டு telephone ஆக இருந்து கடைசியில் ஒரு தொடர்பும் இல்லை. தம்பிக்காரன் அக்காவுக்கு கலியாணம் பேசிமுடிக்க அது பிடிக்காம intrerview சாட்டை வைத்து கொழும்பு வந்துவிட்டா.
நான் சொன்னன் " தம்பிபாத்த கலியாணத்தை செய்யலாம் தானே?" ,


"அவனுக்கு என்ர நலைமை விளங்காது",


" அக்கா கூடப்பிறந்ததுகள் கூடாது செய்யமாட்டினம் நல்ல முடிவெடுங்கோ."
எண்டு உலகத்தில் free ஆகவும் easy ஆகவும் கிடைக்ககூடிய
ஒரு advice உதிர்த்துவிட்டு பார்த்தன்.

கொஞ்ச நாளைக்கு பிறகு K .S .பாலச்சந்திரன் சொன்னார் "இண்டைக்கு இரவு நாடகம் கேளுங்கோ கொக்காவையும் கேட்க சொல்லு."

இரவு 7 மணிக்கு எல்லாரும் radio வுக்கு கிட்ட இருந்து நாடகம் கேட்க தொடகினோம்.
அண்டைக்கு அக்கா சொன்ன சுயசரிதை தான் நாடகமாக ஓடிக்கொண்டிருந்தது.

அக்காவின் பாத்திரத்தில் கமலினி செல்வராசன் நடித்திருப்பார். என்ன ஒரு குரல்!

அக்காவின் முகத்தை பார்த்தால் சோகமாய் இருந்துது. நான் கேட்டன் "எப்பிடி அக்கா நாடகம்?", உடன "உந்தப்பிள்ளைக்கு வந்த சோகத்தை பார்" எண்டவுடன் இன்னும் தன்ர கதை எண்டு விளங்காத அளவுக்கு அக்கா smart . இனி too late ஆய் போகுமெண்டு நான் சொன்னன் "அக்கா உங்கட கதைதான் ஓடுது உது கூடி விளங்கேலையே?".
உடன விம்மி விம்மி அழுகை. " அக்கா அழுகையை விட்டுவிட்டு நாடகத்தை கேளுங்கோ".

"அண்ணனுக்கு எப்பிடி என்ர கதை தெரியும்?" (அந்தக்காலத்து எல்லா பெண்களின் மனதிலும் தணியாத தாகம் நாடகத்தில் வரும் சோமு அண்ணனாக இடம் பிடித்திருந்தார் K.S.பாலச்சந்திரன் அவர்கள்)


"அண்டைக்கு நீங்கள் சொல்லேக்க பக்கத்து room இலிருந்து கேட்டிருப்பார்".


நாடகம்
கதாநாயகி குடும்பத்துடன் சேர்ந்து அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை கலியாணம் முடிப்பாதாக முடியும்.

அதற்கு பிறகு அக்காவின் முகத்தில் கொஞ்சம் தெளிவு வந்தமாதிரி இருந்தது.

பிறகொருநாள் அக்கா "நான் ஊருக்கு போகப்போறன்" என்று சொன்னா. "நாங்கள் இவ்வளவு சொல்லியும் மாறாத உங்கட மனம் ஒரு நாடகத்தை கேட்டு மாறிவிட்டுதே?"

"அண்ணை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்".

எப்பொழுதும் 'அண்ணை ரைட் ' ஆகத்தான் இருப்பார்.

கொஞ்ச நாளில் அக்கா பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு ஊர் போய் நலமே சேர்ந்தா!.

இதிலிருந்து ஒரு கலைஞனின் படைப்புக்கு கிடைத்த வெற்றியை பாருங்கள். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காத அக்கா ஒரு குறு நாடகத்தோட மனம் மாறியதென்றால் அதற்கு இருந்த சக்திதான் என்ன!

இதில் இன்னுமொன்று சொல்லவேண்டும். பண் த.பாலா வின் அப்பா K.S. பாலச்சந்திரனின் நல்ல நண்பர். மன்னாரில் செங்கை ஆழியானின் 'வாடைகாற்று' கதையை படமாக எடுக்கும்போது ஏற்றபட்ட நட்பு என்று சொன்னதாக ஞாபகம்.
இந்தக்கதை நடக்கும் போது அவர் அங்கு இரண்டு மூன்று முறை வந்து சென்றவர். சிலநேரம் அவருக்கும் இந்தக்கதை ஞாபகம் இருக்கலாம்!!


கேள்வி: நூறு வருடங்கள் பத்து நிமிடங்களில்,

பதில்: இந்த கண்ணொளியை பாருங்கள் எங்கள் கதையை விட மற்றவை இருக்கின்றன.


கேள்வி: பிடிக்காத படம் ஓன்று?

பதில்: இப்போதெல்லாம் படம் பாக்கவென்று DVD ஐ கையில் எடுத்தால் எதோ அருவாளை எடுத்தமாதிரி எல்லாரும் ஓடுதுகள். வெட்டு குத்து இல்லாமல் ஒரு படம் கேட்டுவாங்கிக்கொண்டு வந்து பார்த்தால் பெயரும் கவித்துவமாக இருந்ததால்
(ஒருகல் ஒரு கண்ணாடி) அதை போல torture வேற ஒண்டுமில்லை. ஆருக்கும் தண்டனை
குடுக்க வேணும் என்றால் இந்த படத்தை இருக்கவிட்டு போட்டுவிடலாம். மெழுகுப்பொம்மை மாதிரி உணர்சிகளற்ற கதாநாயகி.படம் முழுக்க கதைத்துக்கொண்டே இருக்கும் சந்தானமும் மற்றவரும். அறுவை!


கேள்வி: நேர்மையான பக்தி என்றால் என்ன?

பதில்: ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி இருந்தான். தானுண்டு தன்மனைவி உண்டு தன் வேலை உண்டு என்று சந்தோசமான வாழ்க்கை. ஒவ்வொருமுறையும் காட்டுக்கு விறகுவெட்ட போகும்பொழுதும் அங்கு அரசமரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கும்பிட தவறுவதில்லை. உந்த அரசமரத்துக்கு இப்ப இருக்கிற மாதிரி பிரச்சனை வருமெண்டு முந்தியே பிள்ளையாருக்கு தெரிஞ்சிருந்தால் வேறையொரு மரத்தை choose பண்ணியிருப்பார். பிள்ளையாருக்கும் அந்த விறகுவேட்டிமேல் நல்ல அபிப்பிராராயம்.
ஒருநாள் கோடாலியை வைத்துவிட்டு பிள்ளையாரை கும்புட்டுவிட்டு திரும்பிப்பார்த்தால் கோடாலி missing . உடனே விறகுவெட்டி அழுதுகொண்டு "பிள்ளையாரப்பா என்னட்டை இருக்கிறது ஒரேயொரு கோடாலி, அதில்லாமல் நான் எப்படி பிழைப்பு நடத்திறது?"
எண்டு புலம்பினான்.
பிள்ளையாரும் மனமிரங்கி நேரில் வந்து கையை ஒரு சுத்து சுத்த ஒரு வெள்ளி கோடாலி அவர் கையில். "இதுவா உன் கோடாலி?", என்று கேட்க "இல்லை!" என்றான் விறகுவெட்டி.
மீண்டும் கையை ஒரு சுத்து சுத்த ஒரு தங்க கோடாலி அவர் கையில். "இதுவா உன் கோடாலி?", என்று கேட்க "இல்லை!" என்றான் விறகுவெட்டி. கடைசியாக விறகுவெட்டியின் சொந்த கோடாலியை எடுத்து காட்ட அவன் "ஓம்" என்றான். "உன் நேர்மைக்கு மெச்சினோம்" எண்டு சொல்லிய பிள்ளையார் அவனிடம் மூன்று கொடாலிகளையும் கொடுத்தார்.

அதன் பிறகு விறகுவெட்டி பணக்காரனாகி சொந்தவீடு வேண்டி சந்தோசமாக இருந்தாலும் பழைய தொழிலை விடவில்லை. அவனுடைய மனிசி எப்பிடி அவன் பணக்காரன் ஆனான் என்று கேட்டு துளைச்செடுக்க பொறுக்கமுடியாமல் ஒருநாள் என்ன நடந்ததென்று சொன்னான்.
தானும் அந்த பிள்ளையாரை பாக்கவேணுமெண்டு ஒற்றைகால்ல நிண்ட மனிசியை காட்டுக்கு கூட்டிக்கொண்டு
போய் காட்டினான். திரும்பிபார்த்தவனுக்கு அதிர்ச்சி. மனிசியை காணேலை. "பிள்ளையாரப்பா எனக்குள்ளது ஒரேயொரு மனிசி (மற்றவைக்கென்ன ரண்டு மூண்டே?) அவளில்லாமல் நான் என்ன செய்வேன்" எண்டு அழுதான்.

இப்ப பிள்ளையார் காட்சிதந்து நயன்தாராவை மந்திரத்தால் எடுத்து காட்டி "இதுவா உன் மனைவி?" என்றார். ஒரு second உம் யோசிக்காமல் "ஓம்" எண்டு பதில் வந்தது. பிள்ளையார் நொந்து நூலாகிப்போனார். "பணம் வந்தவுடன் நீ மாறிவிட்டாய்" என்றதற்கு விறகுவெட்டி " நான் மறேல, நீங்கள் நயன்தாராவை காட்ட நான் இல்லையெண்ண பிறகு அனுஷ்காவை காட்ட அதையும் நான் இல்லையெண்ண அதுக்குபிறகு என்ர மனிசியைகாட்ட நான் ஓம் எண்ண என்ர நேர்மையை மெச்சி நீங்கள் மூண்டுபேரையும் வைச்சிரு என்று சொல்லியிருப்பீங்கள். ஒண்டுக்கு மேல வைச்சிருந்தா எவ்வளவு சிக்கலென்று பிரம்மசாரியான உங்களுக்கெங்கை தெரியப்போகுது . சும்மா சொல்லப்படாது நீங்கள் எடுத்து தந்த அம்மணியும் சோக்காதான் இருக்கிறா!

இந்த சம்பவத்தால் மனம் நொந்த பிள்ளயார் அந்த இடத்தையே மாத்திபோட்டார். உங்க உள்ளவை உதை கேள்விப்பட்டால் வாச்சுப்போகும் அகற்றாமலே நிறுவுறத்துக்கு!


கேள்வி: பில்கேட்ஸ் தமிழனாக
பிறந்திருந்தால்


பதில்: பில்கேட்ஸ் madras தமிழனாக
பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ

Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ

Help = ஒதவு

Find = பாரு

Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ

Mail = போஸ்ட்டு

Mailer = போஸ்ட்டு மேன்

Zoom = பெருசா காட்டு

Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு

Open = தெற நயினா

Close = பொத்திக்கோ

New = புச்சு

Old = பழ்சு

Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு

Run = ஓடு நய்னா

Execute = கொல்லு

Print = போஸ்டர் போடு

Print Preview = பாத்து போஸ்டர் போடு

Cut = வெட்டு - குத்து

Copy = ஈயடிச்சான் காப்பி

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

Delete = கீச்சிடு

anti virus = மாமியா கொடுமை

View = லுக்கு உடு

Tools = ஸ்பானரு

Toolbar = ஸ்பானரு செட்டு

Spreadsheet = பெரிசிட்டு

Database = டப்பா

Exit = ஓடுறா டேய்

Compress = அமுக்கி போடு

Mouse = எலி

Click = போட்டு சாத்து

Double click = ரெண்டு தபா போட்டு சாத்து

Scrollbar = இங்க அங்க அலத்தடி

Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு

Next = அப்பால

Previous = முன்னாங்கட்டி

Trash bin = கூவம் ஆறு

Solitaire = மங்காத்தா

Drag & hold = நல்லா இஸ்து புடி

Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?

Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?

Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?

Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு

Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

General protection fault = காலி

Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!

Unrecoverable error = படா பேஜார்பா

Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்

உவரும் திருவள்ளுவர் மாதிரி நம்மாளாக இருந்தால் இந்த மெனு எப்பிடி இருக்கும் என்று பம்மல் k மனோ அவர்கள் மொழிபெயர்த்து தருவார்.


மீண்டும் சந்திக்கும் வரை,

சிரித்திரன் - வட-அமெரிக்கா.மொத்த வருகை: 3188 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (33)


manoharan

20-06-2013 15:48

மீள் பிரசுரம் மிகவும் நன்றே .மறந்து போன மிக முக்கிய மாட்டருகள் மீள நினைவு
படுத்தல் .அதை இந்த இணையம் நன்றே நிறைவேற்றுகிறது .இந்த பகிர்வு ஒரு பகுதி
மட்டுமே என்று இருந்தது அதை படித்தே நான் களைச்சு போய் ஒரு பிலேன்றி குடிச்சு போட்டுத்தான் இதை அடிக்கிறன்.அத்தனை அற்புதம் உவர் சிரித்திரனின் இந்த பகிர்வு
இசை .இசை .அடிக்க முதல் இங்கு உள்ள ஒரு லோக்கல் சனலில் நடந்த ஒரு இசை
தேர்வு நிகழ்ச்சி .ஐயோ அது பெரிய அநியாயம் கண்டியலே .ஒரு 11 ,12 வயது பெண்பிள்ளை ஒண்டு பாடுகுது ஒரு பாட்டு காது கேக்க மறுக்குது .அது சிரித்திரனின்
பகிர்வில் உண்டு .இந்த சமூகம் எங்கு போகுதோ நாமறியோம் .
இனி வருவோம் கதைக்கு .
இசை என்பது மானிட வாழ்வில் மனிதனுடன் இணைந்தது .அதனாலேயே வண்டில்
ஓட்டுபவனும் (அவன் என்ன யாழ்ப்பான கம்பெசிலைஅன்றில் ராமநாதன் இசை கல்லூரியில் இசை பயின்றவனே இல்லை ) அந்த அப்பாவி கூட வண்டில் ஓட்டும் போது எதோ தனக்கு தெரிஞ்ச பாட்டை படிச்சு இடை இடை அந்த interlude மாதிரி
சூய் சாய் கிரீக் பிறீக் எண்டு சொல்லி பின் மிகுதியை பாடுவான் .இதுதான் இசைக்கும் மனிதருக்கும் உள்ள தொடர்பு .இனி போவோம் அந்த விசுவநாதன்
ராமமூர்த்தியிட்டை .ஆஹா எத்தனை அற்புதம் .
அங்கு ஆரம்பத்தில் வில்லியம் வோர்ட்ஸ் worth ஆம் .இதுகும் அந்த மனிசனின் பெயரில் உள்ள Words worth என்பது போல் மிக fully worth ஆன அலுவலுகள் .அவரின்
கவிதைகள் எனக்கு இங்கிலீசிலை உடுவில் ASM .ஸ்பென்சர் Sir 60 களில் படிப்பிச்சார் .அது மட்டுமா .ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ /மெர்ச்சண்ட் of வெனிஸ்
ஹம்லெட் எல்லாம் படிப்பிச்சு தந்தார் .நன்றியுடன் இன்றும் அவரை நான் நினைவு
கூருபவன்.அத்தனை அற்புத அர்ப்பணிப்புள்ள வாத்திமார் .இன்றைய லோகத்தில்
அப்பிடி சட்டம்பி மாரை நாங்கள் கனவிலைதான் காணலாம் .அந்த ஒத்தல்லோ
நாடகத்தை எங்களை கொண்டு வகுப்பறையில் நடிக்க வைத்தார் .நடித்தோம் .துரதிஷ்ட வசமாக அது கல்லூரி மேடையில் மேடை ஏற்ற முடியாமல் போய் விட்டது .ஏனெனில் அங்கு பக்த நந்தனார் காரைக்கால் அம்மையார் /மோதகம் எடுத்த கிரிஷாம்பாள் அதுக்குத்தான் முதலிடம் .உலக இலக்கியம் உலக மொழி
அதுக்கு நோ சான்ஸ் at all .அதனால் அங்கு பயின்ற பலர் இன்னும் *frog in the wel**
அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது கண்டியலே .பின்னை இனி கதைக்கு
வருவோம் .பல பல விடயங்கள் பல் இடங்களில் உண்டு எல்லாவற்றிற்கும் ஒரே
அடியாக கருத்து எழுத எனக்கு ஏலாதப்பா .இருந்தும் சில முக்கிய மாட்டருகளை
மட்டும் என் pad இல் எழுதி இப்போ பதில் கருத்து எழுதுகிறேன் .பெரிய பகிடி என்ன
என்றால் நாளைக்கு விடிய ஐஞ்சு மணிக்கு நாங்கள் வெளிய போக வேணும் .பிறகு
எனக்கு சமிக்ஞை கிடையாது கண்டியலே .அதாலை அவதி அவதியாய் அடிக்கிறன்
அதுக்கும் சிலவேளை இருந்தாப்போல அழியுது எனக்கேண்ட்டல் ஒரு இழவுமாய்
விளங்கேல்லை .
**கவிதை ஒரு அறிவாளியின் தேர்வு என்றும் அதை புரிந்து கொள்ள ஒரு பாமரன்
தன் அறிவை வளர்த்து கொள்ளவேண்டும் என்று குறியீடாக உணர்த்தபட்டு அவனை


சிரித்திரன்

21-06-2013 13:25

படித்ததில் ரசித்தது
--------------------------------------------
001
துக்கத் தூசிகளை கழுவிக்கொண்டு
மனதுக்கு மலர்சூட்டுகின்றனர்.
சங்கீத தேவதைகள்.

002
காதுவழி நுழையும்
இசைக் குருவிகளின் பாடலில்
உற்சாகத்தில் நிரம்புகிறது உடற்கூடு.

003
இசையில் தொடங்கி
இசையில் முடிகிறது வாழ்க்கை.
\"லப் டப்\"

004
பால்மணியோடு தொடங்கி
ஊளைநாயோடு முடிகிறது.
ஒரு சங்கீதத் திருநாள்.

005
பசி கொதிக்கும் வயிற்றுக்குள்
சங்கீதம் இசைக்கின்றன
முறுக்கெடுக்கும் குடல்கள்.


006
கண்ணுக்குத் தெரியாது பறந்துவரும்
ஒலிச் சிறகுகளின் வருடலில்
ஆத்மாவின் காயங்கள் நலம்பெறுகின்றன.

007
இதுவரை கேட்டதில்லை.
கவிதைகளும் சங்கீதமும் இல்லாத
ஒரு காதல் கதையை.


008
வார்த்தைகள் தொலைந்த மௌனத்தை
இசைகளால் நிரப்பிக் கொள்கிறார்கள்.
காதலர்கள்.

009
எப்பொழுதும்
உலகஅதிசயங்கள் ஏழு தான்.
ச,ரி,க,ம,ப,த,நி.

010
இசையில்லாத ஒரு உலகத்தில்
காதுகளில்லாத மனிதர்கள்
உயிர் வாழக் கூடும்.


நன்றி-தீபிகா


ரசிகன்

19-06-2013 15:22

சிரித்திரன் ஒரு நல்லதொரு ரசிகன். \"மாலையில் நான் ஓர் மனதோடு...\" பாட்டில் மயங்காத மனமுண்டா? நான் முதல் முதலில் வாங்கிய Solo பெண் பாடகியின் CD சுவர்ணலதாவினுடையது தான். அவரின் படலை இன்னொருவரால் அதேமாதிரி பாடமுடியாது.

அதிலும் அவர் ஒரு பாடலை இழுத்து பாடும்போது \"போவோ..மா.... ஊர்..கோ..லம்... பூ..லோ..கம்.... எங்கெ..ங்கும்...\" அதை எந்த படகராலும் ஈடுசெய்யமுடியாது. அவர் கான குரலில் வரும் ஹம்மிங் மனிதனை மயக்கும், \"என்னுள்ளே என்னுள்ளே ஒரு இன்பம் வரும் நேரம்\" (வள்ளி) என்ற பாடலில் முதலில் வரும் \"ங..ஆ.. ஙா..ஆ.. \" என்ற ஆரம்பமே உங்களை எங்கோ கொண்டுசென்றுவிடும்.

அடுத்து \"மாசி மாசம் ஆளான பொண்ணு\" (தர்மதுரை) என்ற பாடலின் ஆரம்பம் \"ஸ்.. ஆ.. \" அத்தோடு இளசும் சேர்ந்து வாத்தியத்தால் ஒரு ஹம்மிங் போடும்.
என்றும் மறக்கமுடியாத பாடல் \"போறாளே பொன்னுதாயி...\" (கறுத்தம்மா), அதிலும் பாடலின் ஆரம்பம் அவரின் குரலில் சோககானம் பாடும். \"பூங்காற்றிலே உன் சுவாசத்தை, தனியாக தேடி பார்த்தேன்... \" (உயிரே) என்ற பாலில் முதல் வரி மட்டுமே பாடியிருப்பார், ஆனாலும் முழு பாடலும் அவர் பாடியதுபோல் கேட்ட்பவருக்கு இருக்கும்.

மணிவண்ணனின் இயக்கத்தில் அவரும் சத்தியராஜும் நடித்த எந்த ஒரு படத்தோடும் ஒவ்விடமுடியாத அரசியல் கடிப்படம் அமைதிப்படை. அதிலும் சுவர்ணலதாவின் \"சொல்லிவிடு வெள்ளிநிலவே..\" என்ற அருமையான பாடல் ஒன்று. பாட்டு வாத்தியாரில் \"நீதானே நாள்தோறும் நான் பாட..\". ராசாவின் கூவலில் \"குயில் பாட்டு வந்ததென்ன இள மானே..\" (என் ராசாவின் மனசிலே)
சில பாடகர் சும்மா இருக்கின்றவையை ஊளையிட வைப்பார்கள். அப்படிதான் இந்த கருத்துகளும் பகிர்வும் என்னையும் கிறுக்க வைக்குது.


ரசிகன்

19-06-2013 16:30https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GpbmUoZRMGc


சிரித்திரன்

22-06-2013 02:35

போறாளே பொன்னுதாயி அமைதியான ரஹ்மானின் பின்னணி இசையுடன் ஸ்வர்ணலதாவின் குரல்வழி வரும் ஏக்கத்துடனான சோகம் எங்களின் மனங்களுக்குள் இறங்கி அங்கிருக்கும் சோகத்துடன் ஒன்றாகி பாடல் முடியும் போது எல்லாவற்றையும் கரைத்துவிட்டு மனசை பஞ்சாக்கி செல்லும் இந்த பாடல்.manoharan

21-06-2016 14:58

என் மனதுடன் ஒன்றிணைந்த அட்புத பாடகி சுவர்ண லதா .**நெஞ்சமே பாடடெழுது அதில் நாயகன் பேரெழுது ** எத்தனை தடவைகள் கேட்டிருப்பேனோ எனக்கு தெரியாது .அவர் மரணித்ததை நான் அறியவில்லை .நிகழ்வொன்றில் அவரின் மக்கள் தாயின் பாடலை பாடிய போது மனோ (நானில்லை பாடகர் மனோ ) கண்ணில் கண்ணீர் வழிந்து ஓடியதாம் .சகல துறைகளிலும் அபார திறமைகள் உள்ளவர்கள் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் அக்காலத்தில் மரித்திடட போதும் .


தீபன்

25-06-2012 13:03

"மாலையில் யாரோ...", "செந்தூரப் பூவே..." என்ன அருமையான பாடல்கள்! இந்தப் பாடல்களைக் கேட்கும் போது தான் இளையராஜா எனும் ஒரு மாபெரும் இசைக் கலைஞனை தமிழ் திரையுலகம் தற்போது பயன்படுத்தாமல் வீணடிக்கும் விடயம் உறைக்கிறது.


சிரித்திரன்

25-06-2012 14:12

ஜானகியை புகளின் உச்சிக்கு கொண்டுசென்ற பாடல் சென்தூரப்போவே. என்னை பொறுத்தவரை இளையராஜாவுக்கு நிகர் அவரேதான். எவனோ ஒருவன் பாடலிலும் ஸ்வர்ணலதாவின் குரல் தேன்மாதிரி இருக்கும். அதனுடைய படக்காட்சியை நான் இணைக்காததர்க்கு காரணம் படத்தில் வரும் வேறு சத்தங்கள் பாட்டின் முழுமையை குறைக்கிறது. மணிரத்தினத்தின் விசிறிகள் கல்லெறிஞ்சு போடாதேங்கோ. சுசீலாவின் பால்போலவே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது, MSV இன் அருமையான இசை.


சிரித்திரன்

25-06-2012 14:12

ஜானகியை புகளின் உச்சிக்கு கொண்டுசென்ற பாடல் சென்தூரப்போவே. என்னை பொறுத்தவரை இளையராஜாவுக்கு நிகர் அவரேதான். எவனோ ஒருவன் பாடலிலும் ஸ்வர்ணலதாவின் குரல் தேன்மாதிரி இருக்கும். அதனுடைய படக்காட்சியை நான் இணைக்காததர்க்கு காரணம் படத்தில் வரும் வேறு சத்தங்கள் பாட்டின் முழுமையை குறைக்கிறது. மணிரத்தினத்தின் விசிறிகள் கல்லெறிஞ்சு போடாதேங்கோ. சுசீலாவின் பால்போலவே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது, MSV இன் அருமையான இசை.


தீபன்

25-06-2012 16:10

அதுக்கென்ன ! இரண்டு மூன்று பாட்டுகளைப் பாடி யூ டியூப்பில் ஏத்தி விட்டு பண்கொம்மில் சிரித்திரனின் விவரணையோடு போட்டால் பிரமாதமாக இருக்கும்.

இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! கௌதம் வாசுதேவ் மேனனின் (இவரின் தாய் தமிழச்சி, தந்தை மலையாளி) அடுத்த படமான "நீதானே என் பொன் வசந்தம்" படத்துக்கு இசைஞானி தான் இசை. தமிழ் திரை உலகின் இசைத்தட்டுகளிலேயே அதிக விலை போயிருப்பது இதுதானாம். சோனி நிறுவனம் இதற்கு முன் ரகுமானின் "விண்ணைத் தாண்டி வருவாயா"வின் பாடலுரிமையை தான் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்ததாம். ஆனால் இப்போது அதை விட அதிக விலை கொடுத்து இந்தப் புதிய படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாம்.


மனோகரன்

25-06-2012 14:54

இசையை ரசிக்க மொழி ஒரு தடை அல்ல .நான் எத்தனையோ மொழி மூலமான
பாடல்களை மெய்உருகி ரசித்துள்ளேன் .அத்தனையிலும் எம்மொழி தமிழ் மொழி போல் வராது .அது கர்நாடக மாய் இருக்கட்டும் (ஜனரஞ்சகமான பால முரளி
கிருஷ்ணாவின் சங்கராபரன பக்கம் போங்கோ .அன்றில் சிந்து பைரவி பக்கம்
போங்கோ அதை ரசிக்க தெரியாதவன் மானுடன் அல்ல அல்லவே அல்ல ) தேனிசை தேவாவின் கானா பாட்டு அடுத்து
பழைய பாடல்கள் MK தியாகராச பாகவதர் .கிட்டப்பா ,MK ராதா .ML வசந்தகும்மாரி(அபூர்வ ராகம் படத்திலை ****எழு சுவரங்களுக்குள் ***** பாட்டை படிச்ச ஸ்ரீ வித்தியாவின் தாய் )
MS சுப்புலச்சுமி TR .மகாலிங்கம் ,KR ராமசாமி (அவனின்றி ஓர் அணுவும் அசையாதே ) சிதம்பரம் ஜெயராமன் (அன்பாலே தேடிய என் )
ஜவகார் சீதாராமன் ,சீர்காழி சவுந்தர ராசன் ,AM .ராஜா ...என்ரை அப்பு லிஸ்ட் நீண்டு கொண்டு போகுது நீங்கள் அடி பிடியிலை வர போரியல் உவருக்கு என்ன லூசோ எண்டு கொண்டு .உந்த பாட்டுகள் மட்டுமில்லை .உங்கடை தனுசுவின்றை கொலை வெறி வரை ரசிக்கிற ஒருவன் நான் .இருந்தும் என்னை இந்த அளவு எழுத வைத்தது எது என்றால் மேலே தீபன் கூறி இருக்கும் அந்த இரு பாடல்களிலும்
முதலாவது பாடலான **********மாலையில் யாரோ மனதோடு பேச ************* என்ற
பாட்டை வந்த புதிதில் ஒரு நாளில் மட்டும் திருப்பி திருப்பி ஒரு நூறு தடவைகள் நான் கேட்டு ரசித்து உருகிய பாடல் அத்தனை இசை நயம் .அதோடு இடையில் வரும் அழகிய இன்டெர் லுட். சொல்ல வார்த்தைகள் இல்லை .இப்ப இஞ்சை சிறுவர்களுக்கான இசை தேர்வு நடக்குது .சும்மா சின்னஞ்சிறுசகள் பழைய பாட்டுகளை சும்மா பிச்சு பிடுன்குகுதுகள் .எனக்கு தோன்றும் **சீ அநியாயம் ஒரு
நாப்பது ஐம்பது வரியம் பிந்தி பிறந்திருந்தால் நானும் உதுகல்லை பங்கு பற்றி
கலக்கி இருக்கலாம் எண்டு .அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது .நாம் நினைப்பது ஒண்டு தெய்வம் நினைப்பது வேறொன்று .உந்தாள் என்னை கொஞ்சம் பிந்தி பிறக்க வைச்சிருக்கலாமள்ளே .சரியான ஓர வஞ்சனை காற ஆள் கண்டியலே உவர் .அதாலை தான் நான் உவருக்கு அரிச்சனை கிரிச்சனை ஒண்டும் பன்னுகிரதுமில்லை .உண்டியளுக்குளை காசு கீசு போடுகிரதுமில்லை .சிதறு
தேங்காய் அடிக்கிறது மில்லை .காசு சேர்க்க ஆரேன் லிஸ்டு கொண்டுவந்தால்
**சொறி அண்ணை போவிட்டு வாருங்கோ ** எண்டு சொல்லுகிறது .வேறை ஏதும்
லிஸ்டு கொண்டு வந்தால் என்னாலை எலுமானத்தை எழுதுவன்.


சிரித்திரன்

26-06-2012 03:40

நீங்கள் சொன்னது 100 % உண்மை. உங்களின் இசைமேல் உள்ள வெறியை பற்றி நன்றாக அறிந்தவன் நான். மொழியே தேவையில்லாத விசயங்கள் இரண்டு . ஒன்று இசை மற்றது காதல்! காதில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்தால் அது இனிமையான இசை. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்தால் அது காதல். தனுஷின் 'கொலை வெறி' பாட்டு அருமையான எல்லோருக்கும் பிடிக்கும் ரிதத்தில் அமைந்தது. அதனால்தான் உலகம் முழுக்க பலராலும் விரும்பிக்கேட்க பட்டது.


சிரித்திரன்

26-06-2012 18:53

உதாரது? உப்பிடியொரு பூனை பெயர நான் கேள்விப்பட்டதே இல்லை. கின்னஸ் புத்தகத்தில போடலாம் போல. கோள்மூட்ட வெளிக்கிட்டால் அம்மாளாச்சியா பார்த்து பேரை மாத்திப்போட்டா போல கிடக்குது.


jdkrclsdjcncncn

26-06-2012 14:45

சிரித்திரா நீ வர வர மோசம் கண்டியே .என்ன உரசுகிற கதை விடுகிறாய் .
பொறு ,இரு கொம்மாவிட்டை சொல்லி (கோள்மூட்டி ) தாறன்.என்ன உங்கடை
வயதுக்கேத்த கதையே நீங்கள் கதைக்கிறியல் .


சிரித்திரன்

26-06-2012 11:21

இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்தி பொழுதில் வந்துவிடு எண்டவரியை பார்த்தால் என்ன விசயத்துக்கு கூப்பிடுகிறாரோ அதை எவ்வளவு அழகாக நேரடியாக சொல்லாமல் மாலை பொழுதை வர்ணிபதிலே சொல்லிவிடுகிறார்.


manoharan

26-06-2012 08:15

உந்த பாட்டிலை வாற திறம் இடம்தான் நீ மல்லிகை பூவை சூடிக்கொண்டால்
ரோசாவுக்கு காச்சல் வருமாமடா அப்பா .ரோசாவுக்கு காச்சல் வந்தால் அதுக்கு நாங்கள் என்ன செய்ய .பேசாமல் ஒரு எட்டு பத்து பனடோல் வேண்டி போட
காச்சல் தன்பாட்டிலை குறையும்


manoharan

25-06-2012 09:10

ஆரிட்டை அண்ணை நீங்கள் இங்கிலீசு படிச்சனீங்கள் .பிழையான ஆளிட்டை படிச்சிருக்கிறீங்கள் போல .mouse உக்கு எலியாம் .ஹு ஹு .பிழை
அண்ணை mouse எண்டால் சுண்டெலி அண்ணை .எலி எண்டால் rat அண்ணை
உங்களுக்கு இனி நான் A for apple B for ball C for cat R for rat (எலி ) M for mouse (சுண்டெலி )
எல்லாம் முதல்லை இருந்து படிப்பிக்க வேணும் போல .உதுக்கெல்லாம் எங்கை
அண்ணை மாரே எனக்கு நேரம் .நீங்கள் இங்கிலீசிலை உங்கினை விக்கிற பால பாடம்
பால போதினி புத்தகங்களை வேண்டி சுயமாக படியுங்கோ .நீங்கள் கிழடுகள் அல்லே .டியூஷன் உக்கும் போக ஏலாது .பிறகு உங்கடை wifes மார் உங்களை
நக்கல் பண்ணுவினம் இப்பிடித்தான் **என்னத்தான் எனதத்தான் உங்களுக்கு வெக்கமில்லையே இந்த வயதிலையும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு டியூஷன்
உக்கு போக .உதய் விடுங்கோ நான் உங்களுக்கு சொல்லி தாரன் அந்த நாளி
லை தெய்வரிட்டை படிச்ச இங்கிலீசிலை கொஞ்சத்தை ...எனக்கு காசு கீசு ஒண்டும்
வேண்டாம் ஓசியிலை சொல்லி தாரன் .ஆனால் ஒண்டு மட்டும் தர வேணும் .
வேறை என்ன நீங்கள் வழக்கமாய் எனக்கு தாற அதிலை ஒண்டு (தெரியுமல்லே
என்னெண்டு ) ஸ்பெசலாய் ஒண்டு தாருங்கோ .ஐயோ உங்கினை சிகீஷ் பகிஷ் (எங்கடை பொடி பெட்டையள்)
பக்கத்திலை நிக்கினமோ தெரியாது .அவைக்கு கேளாமல் பாராமல் தந்தால் காணும் என்ரை கோழி குஞ்சு அத்தான்


சிரித்திரன்

25-06-2012 13:46

நானும் அவரிட்டை தான் ஆங்கிலம் பயின்றனான். அவரிட்டை போய் அடிவாங்காம வாறதுதான் முதல் குறிக்கோள் பிறகெங்கை படிக்கிறது. ஒருநாள் உப்பிடித்தான் வகுப்பெடுக்க முதல் குளிக்கபோய் தண்ணி இறைக்கிற மிசினை அஞ்சாறு தரம் இழுத்து start பண்ணிப்பார்த்தார் . அது சொல்லுக்கேக்கேலை. ஒரேதள்ளு மிசின் கிணத்துக்கை. பிறகென்ன நாங்களெல்லாம் பொய் கயிறு கட்டி ஏலேலோ ஐலசா பாடி மிசினை வெளியில எடுத்ததோட அன்றைய வகுப்பு இனிதே நிறைவேறியது. மறக்கமுடியாத நினைவுகள்.


மனோகரன்

25-06-2012 18:49

நீங்கள் அவரிட்டை போய் காசு குடுத்து படிக்க முதல் நாங்கள் ஓசியிலை
படிச்ச ஆக்கள் கண்டியலே .அவர் கொஞ்சம் hot டெம்பர் ஆள் .நான்
அவரிட்டை physics படிச்ச பேராளன் கண்டியலே .அவரின் தகப்பன் இடம்
maths படிச்சவன் .கூட்டல் விருத்தி பெருக்கல் விருத்தி உந்த தெய்வரின் தகப்பநிட்டை படிச்ச ஆள் தான் இஞ்சினை இணையத்திலை என் அனுபவங்களை
பகிருகிறேன்.எனவே இனியாவது நான் ஆரெண்டு அறியுங்கோ பொடியலே.
எனக்கு மறுமலர்ச்சி மன்றமும் தெரியும் அம்மன் கோவிலும் தெரியும் .அதுக்கு
முன்னாலை இருந்த ஆல மரமும் தெரியும் .அதை தறிச்சு கட்டின சோத்து மடமும் (அன்ன தான மடம்) தெரியும் .இது ஏன் எவரால் எதற்காக எப்போது
கட்டபடது என்ற சகல விபரமும் என்னிடம் உள்ளது .அன்றாடம் தங்கள் ஒரு
நேர வைத்தை நிரப்ப வழி இல்லாது தவிக்கும் ஏராளமான மானிட பிறவிகள்
தவிக்கும் தருணம் தங்கள் நிரம்பிய வண்டியை தடவி கொண்டு எல்லாரும் நால்லாய் சாப்பிடுங்கோ எண்டு சொல்லி மூட்டை மூட்டையாய் அவிச்சு கொட்டி
ஒரு நாள் பெரிய அன்ன தானம் வழங்கி மகிழும் மோட்டு பக்த கோடிகள்.
அவை தங்கடை மினுங்குகிற வண்டியை ஒருக்காய் தடவி சொல்லுவினம்
நீங்கள் நல்லாய் போட்டு சாப்பிடுவோன்காவாம் .உந்த பம்மாத்தை விட்டு
அந்த பாவங்கள் ஏழை எளியதுகளுக்கு ஏதாவது வாழ்வை முன்னெடுத்து
செல்ல செயுன்கோடா பாண பம்மாத்துகாரரே .அதை ஓரளவாவது சிறிய
அளவில் ஆவது அந்த ஹோலந்த் உள்ள எங்கடை சனம் செய்யுது .கா கா
கா கா கா கா கா . மனோகரன் காக்கா பிடிக்கிரானாம் .எனக்கு காகா பிடிக்க
வேண்டிய எந்த ஒரு தேவையும் இல்லை .நான் இனியும் இந்த லோகத்திலை
ஒரு ஐம்பது அறுவது வாரியம் சீவிக்க வேண்டிய தேவையும் இல்லை .
நான் எனது வாழ்க்கையை எவருக்கும் தீங்கு விளைவிக்காமல் அடுத்தவருக்கு
எதோ என்னால் முடிந்தவற்றை செய்து இன்னும் கொஞ்ச நாள் வாழ எண்டு
வாழ்கிறேன் .அது வரை நான் நல்லதையே நினைக்கிறேன் .நல்லதையே செய்வேன்


manoharan

26-06-2012 08:05

கோபாலு எனக்கு தெரிவித்த நன்றிக்கு என் பிரதி நன்றிகள் எண்ணற்றவை .
அனந்தம் (infinity ) அன்புக்கு நான் அடிமை கு .....கை களின் உயர் பண்புக்கு நான்
அடிமை ..நீங்கள் என்னை ஊக்குவிக்கும் ஊக்க மாத்திரைகள் (தூக்க மாத்திரைகள் அல்ல ) கண்டியளே .
மீண்டும் என் நன்றிகள் பல .


கோபால் ...

25-06-2012 21:36

அண்ண நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு என்னும் வாழவேனும் உங்களிடம் இருந்து என்னும் எமது உரைபற்றி பழைய தகவல்கள் நாங்கள் அறியவேண்டும் நீங்கள் அதை சுவாரசியமாக தொடர்ந்து எழுதவேணும் உங்களை போல் நகைச்சுவையாக எழுதுபவர்கள் அரிதன்னே ....நன்றி ,,,வணக்கம்


சிரித்திரன்

22-06-2012 12:01

புதிதாக இணைத்த படங்கள் நல்லாய் தான் இருக்குது. தேடலின் நாயகனின் தேடலில் கிடைத்த படங்கள்.


சிரித்திரன்

20-06-2012 01:50

எல்லோருக்கும் நன்றிகள். மீண்டும் ஒருமுறை சுதர்சனுக்கு நன்றிசொல்லாமல் இருக்கமுடியவில்லை. படங்கள் என்ன ஒரு தேர்வு! அவருக்கு என்னுடைய சார்பாக "தேடலின் நாயகன்" என்ற பட்டம் சூட்டுகிறேன்.


மனோகரன்

20-06-2012 05:32

ஆளுக்கு ஆள் பட்டங்கள் சூட்டுகிரியல் .எல்லாரும் வாருங்கோ அம்மன் கோவில் திருவிழாவுக்கு .பூங்காவனம் முடிஞ்சு அடுத்த நாள் சூட்டோடை சூடாக
வாசிக சாலைக்கு முன்னாலை மேடை ஒண்டு கட்டி எல்லாருக்கும் பட்டமளிப்பு
விழா நடத்துவோம் .பொன்னாடை பன்னாடை கின்னாடை தேவை ஆனவை
உண்ணானை சொல்லுகிறன். அவை அவை தங்கட சிலவிலை தங்களுக்கு
இஷ்டப்பட்ட கலரிலை டிசைன் இலை வேண்டி கொண்டு வாருங்கோ .எல்லாரும்
வேட்டி கட்டி கொண்டு வந்து நல்ல பிள்ளையள் மாதிரி வரிசையில் நிக்கவேணும் .நான் மேடையில் நிண்டுகொண்டு மைக்கை சும்மா ஸ்டைலாக
பிடிச்சுக்கொண்டு பேருகளை வாசிப்பன் .அப்ப ஒவ்வொருவராக ஒழுங்காக வரவேணும் .நான் தான் எல்லாருக்கும் போர்த்து விடுவன்.


manoharan

25-06-2012 12:22

அது சரி உங்கினை மதராஸ் சேரி பாசையிலும் விளாசி கிடக்குது .எழுதினவர்
என்ன லூஸ் மோகனின்றை சொந்தமோ .அதே வாடை வீசுகுது .நான் லூஸ்
மனோகரன் அவருக்கு (லூஸ் மோகன் ) சொந்த மில்லை .ஆனாலும் கொஞ்சகாலம்
அந்த கஸ்மாலத்தொடை பழகினனான் .அவ்வளவுமே


manoharan

19-06-2012 12:15

எடே சிரித்திரா நீ ஏனடா பல்லை ஈ எண்டு காட்டி இழிச்சுகொண்டு
உங்கினை இருக்கிறாய் .ஆரடா உன்னை புலத்தை பெயர்க்க சொன்னது
நீ மற்றும் இந்த கிழவன் .சூர சுதர்சன் பாலா அண்ணை சச்சி மற்றும்
தீபன் கூடவே வினோதினி அக்கா அற்புதமான அற்புதன் பிறகு
பவல் ,கிறிஸ்டினா அக்கா இத்தாலியில் சங்கரன் அதோடை இன்னும் பலர்
புலத்தை பெயர்க்காமல் பணிப்புலத்திலேயே வாழ்ந்திருப்போமேயானால்
பார் எல்லாம் வியக்கும் வண்ணம் விந்தைகள் பல புரிந்திருப்போம் அல்லவா
உதெல்லாம் உந்த கடவுளார் செய்த அநியாய அலுவல்கலடா சிரித்திரா
அதனாலே அந்த கடவுளாருடன் நான் இப்ப சரியான கடுப்புடன் கோவத்துடன் .
நான் நினைக்கிறன் உவர் கடவுளாரும் ஒரு FOOT BALL பயித்தியம் போல
எங்களை foot ball அடிக்கிற மாதிரி பூமி பந்தில் நாலா பக்கமும் அடிச்சு வீசி
அவர் காலுக்கு மேலே காலை போட்டு விட்டு சுங்கானை பத்தி ஊதி இழுத்து
நல்லாய் விசுலும் அடிச்சு ரசிச்சு மகிழுகிறார் போல .உவர் இஞ்சினை எனக்கு
கைக்கெட்டின தூரத்திலை நிப்பாரே எண்டால் என்ன நடக்கும் தெரியுமே .
கயிலை கிடைக்கிறது எது எண்டும் பாராமல் செமை சாத்து சாத்துவன் கண்டியலே


சிரித்திரன்

20-06-2012 02:01

football ஐயும் கடவுளையும் எங்கட current situation ஐயும் கோர்த்த விதம் 'அருமை'. விரும்பி பெயர்ந்த புலமில்லை இருந்தாலும் வந்தாரையும் வாழவைக்கும் நாடு இது!


தீபன்

19-06-2012 00:47

சிரித்திரனின் இரசனை வியப்பைத் தருகிறது. சங்கீதம், திரைப்பட ரசனை, சம்பவங்கள், அறிவியல் என்று சுற்றி வந்து இறுதியில் நகைச்சுவையில் முடிகிறது. சிரித்திரன் என்ற பெயரை விட நவரச நாயகன் என்ற பெயர் இன்னும் சிறப்பாக பொருத்தமாக இருக்கும்போல் தெரிகிறது.


லொள்ளுபாண்டி

19-06-2012 10:56

சிரித்திரன் அண்ணா அந்த பிள்ளையார் கோவில் எங்கண்ண இருக்கு நான் நேத்தி வச்சிட்டன் கிடைக்கிறதில பாதி உங்களுக்கு சரி உங்களுடைய படைப்பு அருமை நல்ல பாடல்கள் அந்த சிவகாமி மகனிடம் பாடல் கண்ணதாசனின் படைப்பு அதில் அவர் தன்னுடைய சொந்த விஷயத்தை எழுதி உள்ளார் அதாவது காங்கிரஸ் கட்ச்சியில் இருந்து கருத்து மோதலால் வெளியேறி அதிமுகாவில் சேர விரும்புகிறார் அனால் வேற கட்சியில் இருக்கும் போது திமுகாவை நன்றாக வசை பாடி இருந்தார் அதனால் நேரபோக குச்சபட்டு தூதாகஅனுப்புகிறார் யாருக்கு அந்த சிவகாமியின் மகனுக்கு அவர்தான் அண்ணாத்துரை அந்தநேர திமுகா தலைவர் சரியா அன்புடன் லொள்ளுபாண்டி


சிரித்திரன்

20-06-2012 01:54

கிடைக்கிறதில பாதி எண்டால் அரைவாசி நயந்தாராவோ? சிவகாமி மகனிடம் பாடலுக்கு தந்த விளக்கம் நன்று.
நன்றிகள்!


manoharan

19-06-2012 12:28

நான் துறந்த உடனை உணர்ச்சிகளின் உந்தலினால் முழுதையும் வாசிக்காமல்
கருத்து எழுதினேன் .பிறகுதான் பாத்தன் அந்த கே .எஸ் .பாலா +அவரின் அக்காவின் கதையை .புதன் தோறும் இலங்கை வானொலியில் போன நாடகங்களில் எம்மூரில் உண்மையாக நடந்த ஒரு கதையை அடிஒட்டி
வடலியடைப்பை சேர்ந்த தி .வ .அரியரத்தினம் என்பவரின் நாடகம்
காற்றொலியில் தவழ்ந்து வந்ததை உங்களில் எத்தனை பேர் அறிவீரோ நானறியேன்


கொருக்குப்பேட்டை கபாலி

19-06-2012 00:18

பட்ச்ச தொரை நம்ம மெட்ராஸ் பாசையிலை பூந்து இன்னாமா வூடு கட்டுது பாரு. தொரை ராயபுரம் பக்கம் வந்தா மெய்யாலுமே நம்ம ஊட்டாண்ட கொஞ்சம் ஒதுங்கு. கருவாட்டுக் கொளம்போடை நாஷ்டா துன்னுட்டு சுண்டங்கஞ்சியும் வச்சிருக்கம்பா அதையுன்காட்டிலும் ஊத்திகலாம்பா .ஊத்திகீனு கடிச்சுக்கலாம், கடிச்சுக்கீனு ஊத்திக்கலாம். இன்னாவோ சந்கீதம்கீற சாராயம்கீர ஒரே மெர்சலாக்கீது. நமக்கு கானாப் பாட்டு தான் தொரை சோ நீ இன்னா பண்ற நம்ம கானாப் பாட்டு பத்தியும் கொஞ்சம் இழ்த்து வுடு.


சிரித்திரன்

20-06-2012 01:56

Definitely!


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி