காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

வேத கணிதம் என்பதற்காக ஒரு இணையத்தளம்.தமிழில் ஒரு முதன்மையான கணித வலைத்தளம் எனும் அடையாளத்துடன் வலம்வந்து கொண்டிருக்கிறது 'வேத கணிதம்' இணையத்தளம்.

இந்து சமயத்தின் நான்கு அடிப்படை வேதங்களுல் ஒன்றான அதர்வண வேதத்திலிருந்து உருவாக்கப்பட்ட வேத கணிதமானது, உலகின் வேகமான கணக்கீட்டு முறைகளில் ஒன்றாக விளங்குகிறது.


மிகப்பெரிய கணக்குகளை சுலபமாக தீர்ப்பதற்கும், துல்லியமாகவும்,வேகமாகவும் விடை காண்பதற்கும் பெரிதும் உதவுகிறது வேத கணிதம். பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்கள், எண்களை எழுதுவதில் இடமதிப்பு திட்டத்தை அறிமுகபடுத்தியவர்கள் என இந்தியர்களுக்கு எப்படி கணிதத்தில் தனிப்பெருமை உண்டோ, அதே பெருமை வேத கணிதத்தின் கண்டுபிடிப்பாளர்கள் என்பதிலும் கிடைக்கிறது.


ஆனால் இன்றைய நவீன உலகில்,
வேத கணிதத்தின் அடிப்படை, முக்கியத்துவம், பயன்பாடு என்பவற்றை அறிந்து கொள்ளும் ஆவல் பெருமளவில் குறைந்துவிட்டது.இதனை கருத்திக் கொண்டு, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் வேத கணிதத்தை கொண்டு சென்று சேர்க்கும் வகையில் இந்த இணையத்தளம் தொழிற்பட்டு வருகிறது.


மேலும் தமிழ் மொழி தெரியாத மற்ற மொழி ஆர்வலர்களுக்கும், வேத கணிதம் பயன்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மொழி பெயர்ப்பியும் கொடுக்கப்பட்டுள்ளது. முதுனிலை பட்டதாரியும், கணிப்பொறி வல்லுனருமான தே. அன்பழகன் இந்த இணையத்தளத்தை நிறுவியுள்ளார்.


கணிதத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும், வேத கணிதத்தை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் நிச்சயம் இத்தளம் பயனுடையதாக இருக்கும் எனும் நம்பிக்கையில் பண்கொம் வாசகர்களுக்காக இத்தளம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளோம்.

வேத கணிதம் இணையத்தளத்திற்கு செல்ல வேண்டிய முகவரிமொத்த வருகை: 1703 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (21)


selvaraju

13-02-2016 09:18

சூப்பர்


madhan

23-11-2012 06:05

hhkyivkh


சிரித்திரன்

02-11-2012 15:40


அருமையான ஒரு தளம் இது.
இந்த அண்ட சராசரங்கள் இயங்குவது கணிதத்தின் அடிப்படையில் தான்.

ஒரு எண்ணை 12 ஆல் ஒரு வரியில் எப்படி பெருக்குவது என்பது எவ்வளவு இலகுவானதென்று சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது பெருக்குபடும் எண்ணுக்கு முன் ஒரு ௦(சைபர்) ஐ சேர்க்கவேண்டும். இந்த தளத்தில் உள்ள ஒரு உதாரணம் பார்ப்போம். 4131 என்பதை 12 ஆல் பெருக்க வேண்டும் என்றால் அதை 04131 என்று எழுதிவிட்டு வலது பக்கமாக தொடங்கி ஒவ்வொரு எண்ணையும் 2 ஆல் பெருக்கி அந்த எண்ணுக்கு வலது பக்கத்தில் உள்ள எண்ணை கூட்டி வலதிலிருந்து இடப்புறமாக எழுதிவந்தால் சரியான விடை கிடைக்கும்.
இந்த எண்ணில்(௦4131) முதலாவது (வலதுபுறமாக) இலக்கம் 1 அதை 2 ஆல் பெருக்கினால் 2 வரும் அதற்க்கு வலது பக்கத்தில் எந்த என்னும் இல்லை அதனால்
2
என்று எழுதுங்கள். அதன் பின் அடுத்த இலக்கம் 3 அதை 2 ஆல் பெருக்கினால் 6 வரும் அதற்க்கு வலது பக்கத்தில் இருப்பது 1 அதை கூடினால் 7 வரும் அதை முதல் வந்த இலக்கத்துக்கு முன்னாள் எழுதுங்கள்.
72

இப்படியே செய்தால் விடை
4131 X 12 = 49572
கிடைக்கும். முக்கியமாக சேர்க்கப்படும் எண்ணுடன் ௦ ஐ முன்னுக்கு சேர்க்க மறக்க வேண்டாம்.

Step 1: 04131
Step 2: 1X2 + 0 = -----------------2
(From right to left, Dobule the first digit. i.e., 1X2=2 then add its immediate right digit. There is no immediate digits, so we add zero. so, 2+0=2)
Step 3: 3X2 + 1 = ----------------72
(From right to left, Dobule the second digit. i.e., 3X2=6 then add its immediate right digit. so, 6+1=7)
Step 4: 1X2 + 3 = ---------------572
(From right to left, Dobule the second digit. i.e., 1X2=2 then add its immediate right digit. so, 2+3=5)
Step 5: 4X2 + 1 = --------------9572
(From right to left, Dobule the second digit. i.e., 4X2=8 then add its immediate right digit. so, 8+1=9)
Step 6: 0X2 + 4 = -------------49572
(From right to left, Dobule the second digit. i.e., 0X2=0 then add its immediate right digit. so, 0+4=4)

4131 X 12 = 49572
இனி கணினி யுகத்தில் எப்படி இந்த கணிதம் பயன்படுகிறது என்று பார்ப்போம்,
கணக்கு போட எத்தனை இலக்கங்கள் உள்ளன?.
நாம் உபயோகிக்கக் கூடிய கணக்கில் மொத்தம் பத்து இலக்கங்கள் உள்ளன. 0 – 9 இந்த பத்து இலக்கங்களை தசம என்றும் ஆங்கிலத்தில் இவற்றை டெசிமல் சிஸ்டம்(Decimal System) என்றும் குறிப்பிடுகிறோம்.
ஆனால் கணணி உபயோகத்தில் 0 மற்றும் 1 இந்த இரண்டு இலக்கங்களைக் கொண்ட பைனரி சிஸ்டம் பயன்படுத்துகிறோம். மின்சாரத் துடிப்புகளைக் கொண்டு கணினி செயல்படுவதால், 0 என்பதை மின் துடிப்பு இல்லை என்றும், 1 என்பதை மின் துடிப்பு உண்டு என்றும் உபயோகிக்கப் படுகிறது.
பிட் ( Bit – Binary Digit ) என்று அழைக்கப்படுகின்ற இந்த 0 அல்லது 1 இலக்கங்களின் கலவையாக கொண்ட 8 இலக்க கோர்வை (Byte) பைட் எனப்படும். இத்தகைய கோர்வைகள் மொத்தம் 256 ( 28 இரண்டின் எட்டாம்படிமாணம்). இந்த 256 விதமான கோர்வைகளை ஆஸ்கி ( ASCII ) அமைப்பில் கணினியின் தட்டச்சு பலகையின் (Keyboard) மூலம் உள்ளீடு (Input) செய்வதற்குத் தேவையான அனைத்து குறியீடுகளையும் ஒழுங்கு படுத்தி உள்ளார்கள். இந்த குறியீடுகளில் எண்கள் ( 0-9 ), எழுத்துருக்கள் (A-Z, a-z), பிரத்தியேக எழுத்துக்கள் மற்றும் கட்டளைக் குறியீடுகளும் உள்ளது.
உதாரணமாக 00110000=0, 00110001=1, 00111001=9, 01000001=A, 01100001=a மற்றும் 00100000=Space இடைவெளி
இந்த குறியீடுகளுக்குத் தேவையான ஒவ்வொரு 8 இலக்க கோர்வையும் (Byte) ஒரு எழுத்து என்று கணினி இயலில் அழைக்கப் படுகிறது.


சரவெடி சண்முகம்

02-11-2012 16:40

நாங்கள் வேப்பங்கொட்டை, இலுப்பம்கொட்டை எண்ணி கணக்குபோட்டனாங்கள் உதுகள் விளங்காது கண்டியளே.


சிரித்திரன்

02-11-2012 17:03

உந்த வேப்பம் புளியம் கொட்டை கணக்குகள் தான் உண்மையாய் மூளைக்கு வேலை கொடுத்தது. இது அபாகஸ்முறையை ஒத்தது தான்.
அபாகஸ் என்ற கணிதம் செய்வதற்குப் பயன்படுத்தும் மணிச்சட்டம் ஒரு பழமையான கணிதக் கருவியாகும். இதன் மூலம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவைகளுடன் மிகவும் கணித்த்தில் கடினமான கணக்குகளான பின்னம் (fraction), வர்க்க மூலம் (square root) ஆகியவைகளையும் செய்ய முடியும். இந்தக் கணக்கிடும் கருவியை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட்து. இந்த அபாகஸ் கருவி ஹிந்து-அரேபிய எண் முறைக்கு மிகவும் ஏற்றதாக அமைக்கப்பட்ட்தாகும். ஏனென்றால் அந்தக் கருவி 10 வரை உள்ள எண்களை அடிப்படையாக்க் கொண்டு, 0-லிருந்து 9-வரையும் உள்ள ஒவ்வொரு எண்ணும் ஒரு கம்பியை அடையாளமாக்க் கொண்டுள்ளது.


மனோகரன்

02-11-2012 20:44

உதென்ன அண்ணை சொல்லுகிரியல் .அங்கினை அம்மன் கோயில் .பிறகு ஞான
வேலாயுதர் (முன்னை நாள் விதானையார் /புலவர் வேல்முருகனின் இடுமன் கோவில் ) பிறகு சாந்தை சித்தி விநாயகர் கோவில் அங்கினை எல்லாம் உங்கடை
இஷ்டம் போல் எதையும் செய்யுங்கோ .ஆனால் என்ரை அயல்வீட்டு கலட்டி வைரவனுக்கு உவை சுத்துமதில் கட்டட்டும் பிறகு மடப்பள்ளி கட்டி புக்கை அடிக்கட்டும் .கோபுரம் கட்டி கும்பாவிஷேகம் செய்யட்டும் .வைரவரை நாய் வாகனத்தில் எத்தி வீதி வலம் கொண்டு செல்லவும் பக்த கோடிகள் வெளிக்குடுவினம்
கொண்டு போங்கோ அங்கினை மேற்கு வீதி எங்கடை வளவு .அது நாங்கள் வித்து
போட்டோம் .அங்கினை கிழக்கு வீதி பக்கம் வாருங்கோவன் .அசைய விட மாட்டன்
uசுளிபுரத்து என்ரை கூட்டாளி பொடியளுக்கு கள்ளு வேண்டி குடுத்து கல்லு மழை
பொழிய செய்வேன் உங்கடை வைரவர் வீதி வலத்தில்.கவனம் கலட்டி பக்த கோடிகள் .நான் இன்னும் அந்த கலட்டி வைரவரின் புளிய மரத்துக்கு பின்னாலை
ஒளிச்சு இருந்து பாத்து கொண்டு இருக்கிறன் ,வைரவரை நீங்கள் பேய்காட்ட ஏலாது
எடியே அன்னலெட்சுமி நான் இப்ப இத்தாளியிலை அடி .நான் கட்டினது ஆரெண்டு
தெரியும் அல்லே அங்கினை சாந்தையிலை அந்த சிவகுருவின்றை மூத்த மேனடி
அநியாயம் சொல்லபடாது அருமையான பிறவியடி மிதிச்சால் புல்லும் சாகாதடி
இப்ப கலட்டி வைரவர் கோயிலுக்கு கோபுரம் எழுப்ப போறாங்களாம் .அவர் கண்ணை மூடிக்கொண்டு எழுவத்தி ஐயாயிரம் எழுதி போட்டார் .உப்பிடி ஒரு
புரியனை கட்ட நான் முற்பிறப்பில் புண்ணியம் கனக்க செய்து இருக்கிறன் போல


மனோகரன்

02-11-2012 19:48

எடே இந்த மனோகரன் நீ கோச்சி கொப்பரோடை திருக்கனாமலைக்கு வந்து அங்கினை சிவன் கோவில் அடியில் வாழ முதல் நான் சீனனின் அந்த ABCD caffe
இலை நூட்லஸ் (சைனீஸ் இடியப்பம் ) திண்டவன் இவன் .எனக்கு புளியம்
கொட்டை கணக்கு பாக்கிறதை பற்றி சொல்ல வராதேங்கோ .நாங்கள் அன்று அடைஞ்ச


நூடில்ஸ் எத்தினை துலங்கன்எவ்வளவு எண்டு எல்லாம் ஒரு நொடியில் சப்பை
மூக்குகள் அந்த புளியங்கொட்டை கல்குலேடரை அங்கினை இஞ்சினை ஆட்டி
அசைச்சு இழுத்து போட்டு சொல்லுவினம் உங்கடை கணக்கு இவ்வளவு எண்டு
ஒரு பாண கணக்கும் விட ஏலாது


சரவெடி சண்முகம்

02-11-2012 17:34

ராசா உந்த கணக்கை சரியா விளங்கினா கோயில் கீயில்லை காசை அடிக்க சுகமோ.ஏனெண்டா கணக்குவிட உங்கடை விளக்கம் போதுமோ அல்லது அதிலை அனுபவப்பட்டவையிட்டை கேட்டு அடிக்கலாமோ. ஏனெண்டா கலட்டி வைரவற்றை கோயிலை ஒரு நல்லூர் அளவிலை கட்ட பிளானாம் அதுக்கு தம்பி வெளிநாட்டுலை காசு சேர்க்க பொறுப்பு சரவெடியரை போடுறதாய் லொள்ளு, மனோகரன் புறமிஸ் பண்ணினவை வேளைக்கு கணக்கை கணக்கு விட படிக்கத்தானப்பு.எனி சனவரயிலை கட்ட தொடங்குவினுவினமெல்லே,


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

02-11-2012 17:24

நன்றி சிரித்திரன் - இப்ப கொஞ்சம் லேசா கூட விளங்கத்தொடங்கிறது. இந்தியத்தமிழ் இன்னும் கொஞ்சம் கூட எனக்கு குழப்பத்தை தந்துவிட்டுது போல. உங்கடை இந்த விளக்கத்தை வாசிச்சு விளங்கிப்போட்டு, திருப்பி அந்த website இக்கு போய் அதே உதாரணத்தை திருப்பி வாசிக்க கூட விளங்கிறது.

பாட்ஷா படத்திலையும் வைரமுத்து/ரஜினி மனித வாழ்க்கையை எட்டு எட்டா புட்டு வைக்கிறமாதிரி உந்த bytes இம் எட்டாக வகுக்கப்பட்டிருக்கிறது இப்பதான் விளங்கிறது ஏன் இணைய வேகம், USB குச்சி, CD, கணனியின் storage capacity எல்லாத்தையும் எட்டாக பிரிக்கக்கூடிய வகையில் உருவாகியிருக்கிறது என்று.

பாத்தீங்களோ ஒருவருக்கு தெரியாதது இன்னொருவர் மூலம் தெரிந்து, விளங்கி, அறிய உதவுகிறதே. உங்கை ஒராள் நெடுகலும் சொல்லுற மாதிரி

'இப்பிடியே போவோமடா பொடியளே'
copyrights all reserved M


மனோகரன்

02-11-2012 19:24

தமிழ் நாட்டு இங்கிலீசை கொப்பி அடிக்க படாது சார் .எனக்கு கெட்ட கோவம் வரும்
சார்


மனோகரன்

02-11-2012 20:05

அற்புதனின் கேள்விக்கு பதில் என்கண்களில் வெறும் கண்நீர்களே ..நாங்கள் வெறுமனே அங்கு எங்கள் வாசிகசாளியில் எங்கடை குஞ்சுறு காச்சி ஊத்தின அந்த
பாலை மட்டும் குடித்து வளர்ந்தவர்கள் அல்ல .வருடா வருடம் ஒழுங்க்காக நடந்த
ஆண்டு விழா அத்துடன் சேர்ந்து நடந்த இல்ல விளையாட்டு விழா .எத்தனை அற்புதங்கள் அற்புதா .கட்டுரை போட்டி காலையடி பள்ளியில் .நான் கட்டுரை எழுதி
பலதடவை முதல் பரிசு .இப்பவும் நினைக்கையில் கண்களில் கண்ணீர் துளிகள் .எல்லாம் தொலைத்து போட்டோம் .நீங்களாவது ஏதும் உருப்படியாய் செய்யுங்கோ
எங்களுக்கு வயது பொய் விட்டது .இருந்தும் என் மோரல் சப்போட்டு என்றும் உங்களுடன் .வாழ்க என் ஊர் வளர்க என் மக்கள்


அற்புதன்

02-11-2012 19:40

மனோகரன் அண்ணா எனது ஞாவக சத்தியை பூர்த்தி செய்யும் வண்ணம் உங்களிடம் ஓர் கேள்வி

ஏதோஒரு கருத்து பிரிவில் சனக சமுக நிலையத்தில் குஞ்சுறு என்பவர் பால் கொடுத்த கதை ஒன்று சொன்னீர்கள் இது எனக்கும் ஞாவகம்முண்டு அப்போது எனக்கு ஐந்து ஆறு வயது இருக்குமென நினைக்கிறேன் எனது கேள்வி மன்றத்தில் வைத்து ஏன்.பால் கொடுக்கப்பட்டது ? அந்தநேரத்தில் மன்றத்தில் பாலர்பாடசாலை நடைபெற்றதா ?இதன் அடிப்படை காரணங்கள் என்ன ? இதன் பழைய நினைவுகளை சொல்லுங்கள் முடிந்தவரை நானும் அந்த இடத்தில் பால் குடித்த ஞாவகம்முண்டு ஆனால் மறந்துவிட்டேன்


மனோகரன்

02-11-2012 19:19

உதென்னடா நீங்கள் அலட்டுகிரியல்.எனக்கெண்டால் ஒரு நாசமறுப்பும் விளங்கேல்லை கண்டியலே .எதோ வேதம் எண்ணுகிரியல் பிறகு வேத கணிதம்
என்னுகிறுயல்.எனக்கெண்டால் ஒண்டுமாய் விளங்கேல்லை கண்டியலே
நான் படிச்ச வேதம் எல்லாம் இருக்கு வேதம் யசுர் வேதம் .படிச்ச கணிதம் கூட்டல்
விருத்தி பிளஸ் பெருக்கல் விருத்தி .அதுகும் நீங்கள் காசு குடுத்து இங்கிலீசு படிச்ச
அந்த தெய்வரின் தேப்பன் கு ....டி கந்தையா வாத்தியிட்டை நான் ஓசியிலை கணிதம்
படிச்சவன் எங்களுக்கு கணித வேதம் சொல்லிதர வெளிக்க்டாத்ன்கோ .நாங்கள் உதெல்லாம் கரைச்சு குடிச்ச ஆக்கள் கண்டியலே கரும் பலகையிலை சோக்கு கக்ட்டியாலை எழுதி எங்களுக்கு படிப்பிக்க வெளிக்கிட்ட சட்டம்பியார் ஆர் உவர் ?


தீபன்

03-11-2012 01:35

அபாரம்!
சிரித்திரன் இவ்வளவு அறிவுக் கடலா?


manoharan

03-11-2012 07:48

அது வெறும் கடல் அல்ல .ஆழி , ஆழ்கடல் .அதில் புதினப்பட ,ஆச்சரியப்பட ஒன்றுமே
இல்லை .நாயின் வாலை எப்படி நிமித்த முடியாதோ அது போலவே அடுத்தவனுக்கு
பாடம் சொல்லி குடுக்கும் உவங்கடை புத்தியை மாத்த ஏலாது கண்டியலே .அது பரமரை அலகினால் பாரம்பரியமாக காவி வரப்படும் ஜீன்ஸ் களின் தொழில்
அவற்றை கோச்சியும் கொப்பனும் dedicated சட்டம்பிமார் .நான் பொய் சொல்லுகிறன்
எண்டால் போய் பாருங்கோ ஆறுமுக கொலிச்சின் நூற்றாண்டு விழா மலரில் அவையிட்டை படித்து இன்று வாழ்வில் உச்ச நிலையில் உள்ள பழைய மாணவர்கள்
என்ன எழுதி உள்ளார்கள் என்று .அடுத்த சட்டம்பி ஆரோ தீபன் எண்டு .அவற்றை
ஆச்சியிட்டை இங்கிலீசு படிச்சவையும் அங்கை கிறுக்கி கிடக்குது .பிறகு இன்னொரு சட்டம்பி ஆரோ சுத்ர்சனாம் அவற்றை ஆச்சி அப்பு வாத்திமாராக
இல்லாத போதும் வாத்தி பின்னணி உள்ள பரம்பரை அல்லே அது .பேரன் பிரபல
வாத்தி .ஒன்றுவிட்ட பேரன் செல்லத்துரை வாத்தி .பிறகு அந்தகாலத்திலை நீட்டு
கால்சட்டை (புட்டுகுழல் ) கொழுவி இங்கிலீசு படிப்பிச்ச மார்கண்டு வாத்தி (என்ரை
பொக்கற்று பிரண்டு ) உவருக்கு கிட்டடி சொந்தம் கண்டியலே .எனவே அதில் புதின
பட ஒன்றுமே இல்லை .படிப்பியுங்கோ படிப்பியுங்கோ .நானும் உங்களிட்டை படிக்கும் ஒரு மாணவனே .எங்கையோ ஒரு இடத்தில் வாசிச்ச ஞாபகம் .ஒவ்வொரு
மனிதனும் வாழ்நாள் பூராக தினசரி ஏதோ ஒன்றை கற்கும் மாணவனே என்று
ஆச்சி எனக்கு பசிக்குது அந்த சூப்பி போத்திலுக்கை கொஞ்சம் பால் கரைச்சு ஊத்தி
தாணை குடிச்சு போட்டு தேர்முட்டிக்கு அங்கால் வீட்டு டியூஷன் உக்கு போக வேணும் .அந்த பொடி வாத்தியார் நல்லாய் படிப்பிப்பார் .என்னட்டை காசு வேண்டார் .ஓசி டியூஷன் .ஏன் எண்டு தெரியுமால்லே .**சொந்தக்காரங்க எனக்கு
ரொம்ப பேருங்க **


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

03-11-2012 21:44

தெரிந்தவை, விளங்கியவையை எடுத்துச்சொல்லுவது ஒரு திறமை, அவற்றை எல்லாரும் விளங்கக்கூடியளவு முறைப்படுத்தி casual wording விளங்கப்படுத்துவது சிரித்திரனிடம் நான் கண்ட ஒரு தனித்துவ திறமை. இம்முறையை தனது கட்டுரைகளிலும் கையாள்வதை காணக்கூடியதாகவுள்ளது.


சிரித்திரன்

03-11-2012 17:58

சந்திக்க விசாரித்த பொது நீங்கள் அப்போது கப்பலில் அதுதான் காரணம்.


manoharan

03-11-2012 12:30

அண்ணை டூப்பு மாஸ்டர் சும்மா டூப்பு விடாதேம் காணும் டூப்பு .அன்பை சொத்தாய்
மதிக்கிரவராம் பெரிய சொத்தாய் .அதாலைதான் நீர் புலத்தை பெயர்த்து அந்த பனி
உறையும் ஐசு நாட்டில் தஞ்சம் புகுந்து நம்ம ஊர் பெட்டை ஒன்றின் கரம் பற்றி
(என் சகலன் ஒருவரின் தங்கை ) பிறந்த நாடு நோக்கி வந்து உங்கள் இருப்பு அங்கினை
கொண்டிகளுகர் மாரின் வதிவிடமாம் வெள்ளவத்தையில் .என்வதிவிடமோ கோடி அற்ற கொம்பனித்தெருவில் .எடை உந்த கிழவனும் உங்கினை அல்லே இருக்கிறாராம் ஒருக்காய் போய் பார்த்து பேசி பறைஞ்சு வரலாம் தானே எண்டு நினைக்காதவர் இப்ப அம்பு மழை பொழிகிறார் .நான் நனைஞ்சு போனன் .கொண்டுவாடி அந்த கிழிஞ்ச குடையை .உங்களை மாதிரி எத்தினை டூப் பேர்வழிகளை கண்டு பழமும் திண்டு கொட்டை போட்டு முளைச்சும் விட்டுது
என்ரை கலக்கு வழக்கு கொடுக்கல் வாங்கல் பிளக்கங்கள் எல்லாம் என்போன்ற சாமாநியர்களுடன் கூடவே .கொண்டி காட்டுபவர்களுடன் நோ கொனேக்சண்


சிரித்திரன்

03-11-2012 11:21

நான் சொத்தாய் மதிக்கிறது அவங்க அன்பை தானுங்கோ.


சிவனாயாம்

29-10-2012 12:14

இது யாருக்காவது புரிகிறதா


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

01-11-2012 22:49

எனக்கு லேசா கொஞ்சம் கணக்கு ஓடும்.

http://www.vedic-maths.in/vedic-articles.php

என்ற இணையத்தில் போய் மேஞ்சு பார்த்தன் ஒரு அறுப்பும் விளங்கேலை. ஒன்றை தவிர, அதுவும் இலக்கம் ஏழின் குணாதிசயங்களைப்பற்றி:
http://www.vedic-maths.in/number-seven.php

சரி எனக்குத்தான் வேத கணிதம் புதிசு. இங்க செய்தியாக விட்டுப்பார்ப்போம் அறிஞ்சவர்கள், விளங்கினவர்களாவது ஏதாவது சொல்வார்கள் என்று பார்த்தன். வேத கணிதம் நம்மங்கட களுகன்மாருக்கு ஏகனும் நோடிக்கப்பூதி போல்?


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி