காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

நிவர்சனின் தொழில்நுட்பச்செய்திகள் அடங்கிய இணையம்.வணக்கம் ஊர் நண்பர்கள் அனைவருக்கும்!
நான் உங்கள் நிவர்சன் மேற்குறிப்பிடப்பட்ட விடயம் யாதெனில் நான் புதிதாக ஓர் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து அதில் தொழில்ஙட்ப செய்திகள் பலவற்றை எழுதி பிரசுரித்து வருகின்றேன். காரணம் தொழில்ஙட்பம் சம்பந்தமான அறிவை எம்மவர் மத்தியில் பரப்புவதற்கு ஆகும். அத்துடன் எனது கல்வி தொடர்பாக இனனும் விருத்தி செய்வதற்கு ஆகவே இந்த இணையத்தளத்தை பலருக்கும் பகிர்ந்து கொள்ளவும்.
குறிப்பு: இந்த இணையத்தளத்தில் நான் ஆங்கிலத்தில் தான் எருதுகின்றேன். அத்துடன் இதில் எழுதியது போன்று தமிழிலும் எழுதி உங்கள் இணையத்தளங்களுக்கு அனுப்பவுள்ளேன்.
நன்றி இணையத்தளத்தின் பெயர்

http://digital-words.blogspot.com/


மொத்த வருகை: 1859 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (11)


manoharan

15-05-2013 05:35

கடல் நீரில் இருந்து நன்னீர் தயாரித்தல்

இன்று உலகம் முழுவதும் நீருக்கு தட்டுப்பாடு .அதனால் நீர் முகாமைத்துவம் அமுலில் .
பாசன நீருக்கு வரி அறவிட தயாரான இலங்கை அரசு எதிர்ப்பின் நிமித்தம் கிடப்பில்
போட்டுவிட்டது .குடி நீருக்கு பெரும் தட்டுப்பாடு .(எம்மூர் ஈறாக )எனவே இத்தருணத்தில் இதை எழுதுவது காலோசிதம் என்பது என் கருத்து .
உலக உருண்டையில் நிலபரப்பை விட கடல் நீர் எத்தனையோ மடங்கு கூடியது .
இலகு வழியில் அதை நன்னீராக்கும் படிமுறைகள் (process ) உண்டு .ஒவ்வொன்றாக
நோக்குவோம் .
1). காச்சி வடிகட்டல் (distillation ) .அனேகமாக கசிப்பு வடித்தலுக்கு ஒப்பானது
கடல் நீரை சூடாக்கி கொதிக்க வைத்து பின் நீராக ஒடுங்க (condense ) பண்ணுதல் .
சூடாக்க வெப்ப சக்தி அவசியம் .வெப்பத்தை பெற எரிபொருள் (fuel ) தேவை .
எரிபொருள் வாங்க பணம் தேவை .இங்குதான் சூக்குமம் உள்ளது எந்த ஒரு எரிபொருள் செலவுமின்றி கடல் நீர் நன்னீராக பல இடங்களில் பல்வேறு முறைகள்
மாற்ற படுகிறது
No 1 -- பாரிய மின் நிலையங்களில் (Power Plants ) விசேட மாக அனல் மின் நிலையங்களில் ஒன்றில் கொதிகலங்களில் (Boilers ) நன்னீர் கொதிக்க வைத்து
பெறப்படும் நீராவியினால் பாரிய சுழலிகள் (Turbine ) கள் சுழற்ற படும் .அன்றில் எரி
பொருள் எரி அறையில் (Combustion Chamber ) இல் எரியூட்டப்பட்டு பெறப்படும்
வாயு ( Flue Gas ) வினால் சுழற்ற படும்(விமானங்களின் ஜெட் இயந்திரம் போல . .இங்கெல்லாம் பிறப்பிக்கப்படும் வெப்ப
சக்தியானது முழுமையாக வேலையாக (Work ) மாற்றப்படாது வீணே வளிமண்டலத்திட்கு செல்கிறது .இந்த வீண் விரயமாகும் வெப்ப சக்தி கடல் நீரை
சூடாக்க பயன் படுத்த படும் .இதற்கு waste heat recovery ...வீணாகும் வெப்பம் மீளபெறல் ..எனப்படும் .
# 2.அடுத்த படிமுறை கப்பல்களில் கடல் நீர் நன்நீராக்கபடும் படி முறை .
அதற்கு முன் ஒரு சிறய விளக்கம் .கார் லொறி வசு யந்திரங்களில் எரி பொருள்
எரிக்கப்பட்டு பெறப்படும் வெப்ப சக்தி வேலையாக மாற்ற படும் .அப்போ
பாரிய அளவு வெப்பம் பிறப்பிக்க படும் இங்கும் குறிப்பிட்ட அளவு வெப்ப சக்தி
Exhaust Gas உடன் வெளியேறி வீண் விரயம் ஆகின்றது .அந்த இழக்கப்படும் வெப்பத்தை பிரயோகித்தே Turbo Charger வடிவமைக்கப்பட்டு Turbo Engine கள் வந்தன .அது வேறாக கதைக்க படல் வேண்டும் .இவ்வேளை இயந்திரமானது குளிரூட்டப்பட்டு குறிப்பிட்ட அளவு வெப்பநிலையில் மைண்டேன் பண்ண படல்
வேண்டும் .இல்லையேல் இயந்திரம் உருகி இரும்பு குழையல் (seize up ) ஆகி விடும்
அதை செய்வது radiator இனது வேலை .அங்கு காற்றினால் குளிர் ஆக்கல் நடைபெறும் .ஆனால் கப்பல்களில் உள்ள பாரிய பிரதான இயந்திரம் (main engine )
கடல் நீர் மூலம் குளிராக்க படும் .குளிர் ஆக்கலின் போது சூடடையும் கடல் நீரானது
பாரிய கலங்கள் (vessal ) ஊடே செலுத்தப்படும் .இங்கு தான் மந்திரமே உண்டு .
சாதாரணமாக நீர் கொதித்து ஆவியாக நீரின் கொதிநிலையாம் (Boiling Point ) ஆன
100 டிகிரி செண்டி கிரேட் உயர்த்த படல் வேண்டும் .இங்கோ 65 டிகிரியில் கொதிக்கும் .எப்படி எனில் கலத்தின் உள்ளே - (சய) அமுக்கம் (vacum ) மைண்டேன் பண்ண படும் போது 65 டிகிரியில் கொதிக்கும் .பின் நீராவியானது கடல் நீரால்
பாரிய ஒடுக்கிகளினால் (Condensor ) ஒடுக்கப்பட்டு தூய நன்னீர் (Pure Disitilled Water ) பெறப்படும் .கலத்தில் அடியில் சேரும் உப்பு வகையறாக்கள் (brine ) Brine Ejecting
பம்ப் மூலம் வெளியேற்றப்படும் .இந்த நீரானது பல்வேறு பட்ட முறை மூலம்
Chlorination /Ultra Violet Rays / இன்னும் பல முறைகளினால் கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுவை ஊட்டும் இரசாயனங்கள் மற்றும் மனிதனுக்கு தேவையான
கனிமங்கள் (minerals ) சேர்க்கப்பட்டு பாவனைக்கு எடுக்கப்படும் .நீங்கள் பாவிக்கும்
mineral water போத்தல்களில் லேபல்களில் குறிப்பிட பட்டுள்ள கனிமங்கள் அநேகமான brand களில் கிடையவே கிடையாது என்று நான் சொல்லவில்லை .
உலகின் பல்வேறு இடங்களிலும் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் (Sample ) மேட்கோள்ளப்பட்ட அமெரிக்க ஆய்வறிக்கை சொல்கிறது .அதை விட லோக்கல்
bodies வழங்கும் நீர் திறமாக உள்ளதாம் .
அடுத்த படிமுறை மிகவும் interest ஆனது .அதுதான் Reverse Osmosis Plant
இப்போ கடமை அழைக்கிறது .கடமை முடிந்து மீண்டும் வருவேன்


manoharan

20-01-2014 08:27

இது கூட நான் தேடாமல் சுயமாக இங்கு வந்தது .நான் கடல் நீரை நன்னீர் ஆக்கும்
படிமுறையை ஒவ்வொன்றாக இலகு நடையில் எவரும் புரியும் படி எழுதி அரை குறையில் அது நிண்டு போச்சுது .மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றிகள் பல .
ஆரோ ஒருவர் கன காலத்துக்கு முன் இங்கு எம்மூர் குடி நீர் பிரச்சனை பற்றி இங்கு
குறிப்பிட்டு இருந்தார் .எம்மூரவர் குடி நீருக்காக எத்தனை துன்பங்களை எதிர் கொள்கின்றனர் .நல்லதோ கெட்டதோ எல்லா கொண்டாட்டங்களுக்கும் இப்ப
சித்தன்கேணி பிள்ளையார் கோயிலடிக்கு Land Master போய் Plastic Container களில்
குடி நீர் இம்போர்ட் பண்ண படுகுது .(வெளி நாட்டு தீபங்கள் செய்யிற வேலை )
உதுக்கெல்லாம் ஒரு மாற்று வளி என்கை வசம் .அதுக்கு financial சப்போட்டு தர
எவர் ஒருவரும் முன் வர மாட்டார்கள் .எங்கயாலும் பாவட்டம் பத்தைக்குள் உள்ள
வைரவ சூலத்துக்கு சுத்து மதில் கட்டி கோபுரம் எழுப்பி மடப்பள்ளி கட்டி ஒரு தர்ம
கர்த்தா சபை .பின் ஒரு பூசகர் .அவருக்கு மாதாந்த சம்பளம் இன்னும் பல .
அதுக்கு கோடி கோடியாய் அள்ளி குடுக்க கன பேர்கள் உங்கினை .சிலவொண்டும்
இல்லாமல் மிக குறைந்த உற்பத்தி செலவுடன் ( Cost of production ) குடி நீர் ஊர் முழுக்க வழங்க கூடிய நடை முறை சாத்தியமான மாட்டருகள் என் கை வசம்
அதற்கு முதல் கடல் நீரில் இருந்து குடி நீர் பெறும் படி முறைகளுக்கான எனது
விளக்கங்கள் அரை குறையில் நிண்டு போச்சுது .அதன் மிகுதியையும் விளக்கிய பின்பே எனது திட்டம் பற்றிய மிகுதி .விசேடமாக அந்த Reverse Osmosis Process
விஞ்ஞானம் கற்ற பிள்ளைகள் அறிவார்கள் அது பற்றி .அதுதான் அந்த *பிரசாரண
அமுக்கம் ** அதை தலை கீழாக மாற்றி (Reverse ) உபயோகித்து கடல் நீரில் உள்ள
உப்பு வகையறாக்களை நீக்கி (சோடியம் குலெரெட்டு /மக்னீசியம் இன்னும் பல
எல்லாம் அகற்றி தூய நீர் பெற படும் ) எங்கடை ஊர் என்ன கடலில் இருந்து பல மைல்கள் தொலைவிலேயே ?இல்லை வாக்கிங் distansu .அங்கினை சன்னாசி கேணியடி பக்கம் ஒரு பத்து பரப்பு காணி ஒண்டை விலைக்கு வேண்டுகிறது
அதுகும் விடுகினம் இல்லை எங்கடை காணியள் வீடு வளவுகள் வேண்டி குவிக்கும் அன்பர்கள் --அங்கயும் போய் காணி விலையலை எத்தி போடுவங்கள்
படு பாவியல் --எவ்வளவு பரப்பு ? ஆக ஒரு 10 ஆயிரம் தான் --ஒருத்தருக்கும் பறைஞ்சு போடாதை நான் 15 தாரன் எனக்கு அமத்தி தா என்று பேதலிக்கும் மனிதர்கள் நாம் .உவை என்ன போகேகுல்லை உதெல்லாம் கொண்டே போக போகினம் .எல்லாம் அவா ..அவா பிசாசுகள் ) எனக்கு பசிக்குது கண்டியலே .அடைஞ்சு போட்டு பிறகு வாறன் .என்னவோ எழுத எண்டு இஞ்சினை குந்தி இப்ப வேறை எதோ எழுதி போட்டன்


Nivarsan

14-05-2013 17:53

நன்றி அனைவர்க்கும்


விசாகன் சிவலிங்கம்

16-03-2013 01:35

வாழ்த்துக்கள் நிவர்சன்.


மாவலன்

25-02-2013 02:57


எத்தனை பேர் முகநூலை தமிழில் பயன்படுத்துகிறோம் . இல்லையென்றால் உடனே தமிழுக்கு மாறுங்கள் !

முகநூலை எத்தனை பேர் தமிழில் பயன்படுத்துகின்றார்கள்? முகநூலில் மொழிபெய...
See More


jkswiss

13-01-2013 11:55

நல்லதொரு முயற்சி
தட்காலத்திட்கேட்ப உங்கள் தொழில்நுட்பச்செய்திகள் அடங்கிய இணையம் மிகவும் வரவேட்கத்த்க்கது
தொடர்ந்து பார்ப்பேன்
நன்றிகள்

jk swiss


manoharan

12-01-2013 20:26

மனபூர்வ வாழ்த்துக்கள் .வளர்க வளமுடன் .தம்பி தொழில்நுட்பம் அவ்வளவு எடுபடாது .அதைவிட நீங்கள் விரத அனுட்டானங்கள் /புருத்தாபனங்கள் /
கோயில் திருப்பணிகள் /நிதி நடைமுறைகள் /கணக்கு வழக்குகள் பற்றி எழுதினால்
சமூகமும் பயன் பெற்று உமக்கும் போற வழிக்கு புண்ணியம் பல கோடி


பலெர்மோ தமிழ் கிறுக்கன்

12-01-2013 17:50

வணக்கம் நிவேர்சன் உங்கள் தொழில்நுட்பச்செய்திகள் அடங்கிய இணையம்.முக்கியமான ஒன்றுதான் அங்கில மொழியில் இருப்பதால் வயது போன எங்களுக்கு மிகவும் கஸ்ரமனவிடயம் இப்பத்தே வெளிநாட்டில் வாழும் இளையோர்கள் அவரவர் மொழிகளிலும் இனைய தொழில்நுட்பத்திலும் கில்லாடிகள். என்ன எங்களுக்குத்தான் இதை பற்றிய போதிய விளக்கமில்லை நீங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து போடா முயற்ச்சிக்கவும்


manoharan

25-02-2013 06:33

நிலத்தை தோண்டி தங்கம் /கனி இரும்பு (iron ore --பல்வேறு உருக்கு -steel வகையறாக்கள் தயாரிக்க தேவை படும் மூல பொருள் ) பெற்றோலிய மூல பொருளான கூழ் எண்ணை (crude oil ) இல் தொடங்கி விண்வெளி பயணம் வரை
பல்வேறு பட்ட தொழில் நுட்ப தகவல்களை எவரும் புரியும் வண்ணம் இலகு /அழகு
தமிழில் நான் வழங்க தயார் .அவர்கள் அதை ஏற்க தயாரா ? சரக்குகள் நிறையவே
கைவசம் உண்டு .


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

16-03-2013 08:50

கிறுக்கனுக்கு பேரப்பிள்ளைகளை காணும் வயசிருக்குமோ? LoL

http://www.panncom.net/p/3954


ஆதங்கம்

12-01-2013 16:26

நல்ல முயற்ச்சி பாராட்டுக்கள்.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி