காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

புலத்தவர் ஊர்நோக்கிய பயணமும் நன்கொடைகளும்.


ஓட்டு எண்ணிக்கை


Loading...


மொத்த வருகை: 3297 இன்றைய வருகை: 7

கருத்துரைகள் (15)


தீபன்

21-06-2013 16:06


இன்றைய உலகில் இன்றிய மையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள் ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியா வசிய தேவையாக இருக்கிறது.

கல்வியின் சிறப்புப் பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும்.

கற்றவனுக்கு தனது நாடு ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

‘எண்’ என்று சொல்லப்படுவதும் ‘எழுத்து’ என்று சொல்லப்படுவதும் இவை இரண்டினையும் அறிந்தோர் சிறப்பு மிக்க மக்களின் உயிர்களுக்கு கண் என்று சொல்லப் படுவர். இந்த அளவிற்கு கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப் படுகின்றது.

‘கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர்’.

கற்றவரின் நிறப்புப் பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் கல்வியின் சிறப்பும் அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகின்றது.

கல்வி உடையவர் எல்லா மக்களிடமும் நன்றாக பழகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அவர்களுடன் சந்தோசமாக சேர்ந்து வாழ்வதையே விரும்புவர். இவர்களை பிரிக்கின்ற போது இனி நாம் எப்போது நாம் மீண்டும் சேர்வோம் என்ற நினைவிலேயேபிரிகின்ற தன்மை கற்றவரிடம் இருக்கும் தன்மையாகும்.

மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். கல்வி என்பது ஆய்வு, கல்வி மூலம் சூழலை, அறிவை, சமூகத்தை, பண்பாடு, மரபை ஆராய்ந்து கொள்ளலாம்.

கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பதில்லை.

மேற்கூறிய வாசகத்தை ஆராய்ந்த போது கற்றவனின் சிறப்பைக் காணலாம். அதாவது இக் கல்விக்கா உயிர்கொடுத்தோர் மரணிப்பதில்லை. கல்வி கற்றவர் மரணித்து விடுவார். ஆனால் அவர் கற்ற கற்பித்த கல்வி இந்த உலகம் அழியும் வரை இருந்தே ஆகும்.

தான் இன்புறுவது உலகின் பிறர்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்.

ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும் கற்பதையே விரும்புவான். இது கல்வியின் பண்பாக கருதப்படு கிறது.

அறிவியற் ககல்வி, சமூக அறிவியற் கல்வி, ழேகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கும் அவசியமானவையாகும். ஒருவனு க்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறில்லை.

கல்வி தொழிலுக்கம் வழி காட்டுகிறது. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் ககல்வியை பயன்படுத்த வேண்டும்.

கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வி யானது ஒரு மனிதனின் முக்கிய தேவை யாக இருக்கி றது. எந்த வொரு சமூக மும் கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொறுத்த வரை மிகவும் தாழ் வாகவும் இழிவாகவும் கருதப் படும்.

எனவே இவ்வாறு பார்க்கும் போது கல்வியின் முக்கியத்து வத்தை அறிய முடிகின்றது. ஒருவன் கல்வி கற்றால் எவ்வாறு சமூகத்தில் மதிக்கப் படுகின்றான் என்பதை விளங்க முடியும். இவ்வாறு கல்வியை கற்று சமூகத்தில் சிறந்ததோர் பிரஜையாக வாழ கல்வி உதவுகின்றது.


சிரித்திரன்

21-06-2013 17:44

அருமையான விளக்கம் தீபன்!
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என ஓளவையாரும்,
“எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என திருவள்ளுவரும் எண்களின் முக்கியத்துவத்தையும் மொழியின் முக்கியத்துவத்தையும் தங்கள் பாடல்களில் குறித்துக் காட்டியுள்ளனர்.

அதாவது கணிதமும் மொழியும் தெரிந்தால் மற்றவை எல்லாம் இலகுவாக வரும். அதனால் தான் இங்கு பல்கலை கழக அனுமதிக்கு முதலில் அவர்கள் பார்க்கும் பாடங்கள் கணிதமும் மொழியும்தான். அதன் பின் தான் மற்றவை.. இந்த அண்ட சராசரங்களும் இயங்குவது கணிதத்தின் அடிப்படையில்தான். அதை தெரிந்து கொள்வதற்கு மொழி அடிப்படையாகிறது. கிரகங்கள் தன்னை தானே சுற்றுவது, ஒன்றை ஒன்று சுற்றுவது, நேரம், இதயத்துடிப்பு, என்று இயற்கையுடன் கணிதம் பின்னி பிணைந்து உள்ளது. மொத்தத்தில் இந்த அண்ட சராசரங்களை இயக்கும் சக்திக்கும் இந்த கணிதம் தேவையாய் இருக்கிறது. ஏன் ஒரு மரம் எப்படி கிளைகள் இலைகளுடன் வளர்கிறது என்பதை கூட முதலே fractal geometry என்னும் கணிதத்தை வைத்து கண்டுபிடிக்க முடியும் என்று சொல்கிறார்கள் கணித மேதைகள்.

ஆக மொத்தத்தில் அந்த இரண்டு கண்களையும் பேணி காப்பது எல்லோரினதும் முதல் கடமை!


அற்புதன்

08-06-2013 09:18

வசதியில்லாத நாங்கள் சுமக்கிறோம் பசியை
சுமக்கிறோம் பசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
பசியையும் வறுமையையும் விரட்டுங்கள்
வயிற்றுப் புண்ணை ஆற்ற.பரிசளியுங்கள்

கல்விச்சேவை ஊருக்கே வழி சொல்லும்
ஒரு வெற்றிப்பாதை மலரத்துடிக்கின்ற
மொட்டுக்களை தூக்கி சுமக்கவேண்டாம்
நடக்க கற்று கொடுங்கள்


அவதானி

07-06-2013 18:16

ஆபிரிக்கர் என்று சொல்லுங்கோ நோ புரப்பிளம் .அனால் தோட்ட காடு எண்டு மட்டும்
சொல்லாதேங்கோ .அது மகா தவறு .அவர்கள் இன்று கல்வி .சமூக விழிப்புணர்ச்சி
மேம்பாடு என்றெலாம் எங்கேயோ போய் விட்டார்கள் .ஏன் ஆபிரிக்கர் என்றால் போல எதோ லேசே .அவர்களும் உலகெலாம் வியாபித்து விந்தைகள் பல புரிகிறார்கள் .அன்று இருண்ட கண்டம் என்று ஒடுக்க பட்டவர்கள் இன்று விஞ்ஞானம் /அரசியல் (கொண்டலீசா சோறு (ரைஸ் ) மார்டின் லூதர் இன்னும் பலர் .இசை (போனி எம் /மைக்கல் ஜாக்சன் )விளையாட்டு (ஒலிம்பிக்கில் வாங்கும் தங்க பதக்கங்களின் தொகை களில் கூடியது
அவர்கள் வசமே பிறகேன் சொல்லுகிரியல் ஆபிரிக்கரும் தோட்ட காரரும் எண்டு
**its damn சாமே** .நாங்கள் எவ்வளவு முன்னேறிய சமூகம் .அன்னமன்னா பத்தை
பாவட்டம் பத்தை எல்லாம் உள்ள கோயிலுகளை நாங்கள் புனருத்தாபனம் செய்து
இன்னும் பல கோயில்கள் புது புது பெயர்களில் புது பொலிவுடன் எழுப்பி அங்கு சங்கு அபிஷேகம்
கும்ப அபிஷேகம் செய்து வெளி நாட்டு பக்த கோடிகள் அனுப்பும் காசுகளை கொண்டு கோபுரம் எழுப்பி அபிஷேகம் செய்து வீடியோ பிடித்து அன்னதான மடத்தில் உட்கார்ந்து நல்ல வண்ண வண்ண காஞ்சிபுர பட்டுடுத்து பிறகு எங்கடை
அவை புரியன் மார் இடுப்பிலை கலர் கலர் சால்வை சுத்தி சாமி ஊர்வலம் வந்ததும்
அங்கினை போய் அவிச்சு கொட்டின அன்னதான மடத்திலை ஒரு வெட்டு வெட்டி
போனால் அதை விட ஆனந்தம் இந்த பூலோகத்திலை வேறேதும் இருக்கோ ஒருக்காய் சொல்லுங்கோ .உங்கினை வேறை வேலை வெட்டி இல்லாத சில லூசுகள் எதோ அலட்டுகினம் .எதோ படிப்பாம்/ கல்வியாம் அதாம் இதாம் எண்டு
உவைக்கு வேறை வேலை இல்லை போல .நாங்கள் என்ன படிச்சனான்களே .இல்லை எங்கடை ஆச்சி அப்புவும் படிச்சவையே .எதோ வெளிநாடுகளுக்கு போன
எங்கடை குஞ்சுகள் கடவுளுக்கு பயந்து அனுப்புதுகள் .நாங்கள் அதை எடுத்து கோயில் குளம் கட்டினால் உவைக்கு புகைச்சல் /எரிச்சல் போல .வந்து விட்டினம்
எங்களுக்கு சொல்ல எதோ கல்வியாம் படிப்பாம் பிறகு எதோ சமூகமாம் .எனக்கெண்டால் உதெண்டும் விளன்காதடி .உங்கினை சொன்னாங்கள் அங்கினை
அந்த காலத்திலை நாங்கள் வெளிப்புலத்துக்கு புல்லு செருக்க போன நேரம் அங்கினை ஒழுங்கை கட்டு பக்கத்திலை அந்த bend இலை கறல் பிடிச்ச சூலாயுதம்
ஒண்டு கிடந்ததடி .அங்கயும் ஒரு கோயில் எழுப்ப போகினமாம் .பிறகு அதுக்கும்
விரதம் பிடிக்கவேணும் .ஒரே மரக்கறி திண்டு இப்ப அலுத்து போச்சுதடி ***.எல்லாம்
மாயம் போலி** .உண்மையை உணர்ந்து வாழுங்கள்


manoharan

07-06-2013 19:18

தயவு செய்து மன்னிக்கவும் .நான் கருத்து எழுதும் போது விலாசத்தை கவனிக்காமல்
அமத்து பொத்தான் அடி பட்டு போச்சுது .என்பெயருக்கு பதிலாக ஆரோ அவதானி
எனும் பெயரில் வந்து போட்டுது .அது அவதானி அல்ல நான் என் சொந்த பெயரில்
நெடுக வரும் இந்த மனோகரன் .


ஆதங்கம்

07-06-2013 17:18

ஆலயம் என்பது ஒரு காலம் மக்களின் மனக்கஸ்டங்களுக்காய் மக்கள் போய் தன் இன்னல்களுக்கு விடிவுக்காய் வேண்டுவார்கள்.இன்று ஆலயம் என்பது வியாபாரிகளின் முதல் அற்ற தொழிலாகிவிட்டது. அன்று ஆலய வணக்கத்தின் முறைகள் அனைத்துமே உடற்பயிற்சியுடன் சம்மந்தப்பட்டவை.அன்னதானம் அருமை பெருமையாக உள்ள மரக்கறி வகை உணவு உடல்நலத்தை தாங்கியதே.விரதம் என்பது உடலின் குடல் பகுதிகளின் செயற்ப்பாட்டுக்கானவை.இப்படிப்பட்ட விடயங்களை தாங்கிய ஆலய வழிபாடுகள் இன்று தலைகீழாய் மாறிவிட்டதே உண்மை.


விசுவாசம்

07-06-2013 14:46

இதைதான் சொல்லுவது லொள்ளு வாதம் என்று. ஊருக்கு போகிறவன் கோயிலுக்கு போகிறான், அவனைப்போல் கோயிலுக்கு குடுக்கக்கூடாது என்றால் எப்படி?
புலத்தின் அதிவேகமும் அழுத்தமும் மிகுந்த வாழ்க்கையில் இருந்து விடுமுறையில் செல்பவர் மதுப்பிரியரை உபசரிக்க மாட்டினமா? அதற்காக அதுதான் அவர்களின் வாழ்க்கையென எடுப்பது யார் தப்பு?
குறைந்தபட்சம் எமது ஊரின் கல்வினிலயைபற்றி வறுமையை பற்றி ஒரு விழிப்புணர்வு வராதா?
உறவினருக்கு உதவுவதில் தப்பே இல்லை. அதுகும் ஒரு வகை சுயநலமான பொதுநலம் தான். பொதுநலமே ஒருவகையில் சுயநலத்தின் விரிவாக்கம் என்பதிலும் உண்மை இருக்கல்லவா?
உங்களுக்கு அதிக வாக்கு வேண்டுமானால் கோயிலுக்கு குடுக்கவேண்டாம் குடிகாறனை கெடுக்க வேண்டாம் என்று வந்தாலும், நடைமுறையில் உதைக்கின்றதே! இது எங்களை நாங்களே பேய்காட்ட செய்கிற வேலை. இருந்தாலும் நமது ஊருக்கு அடிப்படை தேவை கல்வி என்பதில் நானும் ஒத்துப்போகின்றேன். ஒரு கோட்டை போட்டால் நம்ம ஆட்கள் றோடு போட்டு அதிலை வீடும் கட்டுவார்கள் என்பது நம்பிக்கை!! அதற்கு ஒரு பென்சில் வாங்கி கொடுப்பதில் தப்பென்ன?


manoharan

07-06-2013 22:26

உதென்ன அண்ணை சொல்லுகிறியல்.ஏதோ கல்வி எண்ணுகிரியல்.பிறகு ஏதோ
ரோட்டு /கொடு /பெஞ்சில் /பெண்டில் எண்ணுகிரியல் .எங்களுக்கேண்டால் ஒண்டுமாய் விளங்கேல்லை அப்பா .கல்வி அதென்ன .உங்கை படிச்சவை எல்லாம்
படிச்சென்ன கிளிச்சேய் போட்டினம் .சும்மா விடும் காணும் .என்ன பாடு பட்டெண்டாலும் நாலு பணம் சம்பாரிச்சால் காணும் கண்டியலே .அப்ப தான் புது
டிசைன் சீலை .புது மொடல் கார் பிறகு கட்டு காசுக்கு நல்ல வசதியான வீடு .
இஞ்சினை ஊர்பக்கம் எண்டால் சுத்து மதில் வீடு முழுக்க மாபிள் முத்தமெல்லாம்
கொண்கீரிட்டு சிலப்பு (வெளிநாட்டு தீபத்தில் ) பொடி பெட்டையளுக்கு விதம் விதமான தெல்லி போனுகள் மோட்டு சயிக்கிளுகள் இன்னும் எத்தினை ?
கண்டறியாத கல்வியாம் .இன்னும் கொஞ்சம் விட்டால் கல்வியா காசா பெரிசெண்டு ஒரு விவாதமும் நடத்துவியல் போல .ஆரோ ஒருத்தர் XX
XXXX உசத்தி எண்டு நடத்த வெளிக்கிட்ட மாதிரி .ஏனப்பா எங்களுக்கு உந்த
கண்டறியாத கல்வி .அடிக்கு ஒரு முழத்துக்கு ஒரு கோயில் இருக்கும் வரை எமக்கு
ஏது குறை .ஆண்டவன் அருள் மழை அடை மழை போல் பொழிந்த வண்ணம் இருக்கும் .அத்துடன் அன்னதான மடம் எங்கும் அமுதம் (சோறு ) கொட்டிய வண்ணம் இருக்கும் .பிறகேன் கவலை எமக்கு .கல்வியாம் கல்வி .கண்டறியாத கல்வி ..


Mavalan

05-06-2013 08:14

முட்டாள் தனமான கருத்துக்கணிப்பு. உதவி entrusted கல்விக்காக இருக்கட்டும், அந்த உதவி என்றும் பயனுடையதாக இருக்கும்.

\"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிரக்கு\"

கல்விக்கண்களை திறவுங்கள் உலகம் உயிர்க்கும்


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

05-06-2013 10:40

\'கல்விக்கண்களை திறவுங்கள் உலகம் உயிர்க்கும்\' அருமையான கூற்று.

ஆரம்பத்திலிருந்து கூறிக்கொண்டிருப்பதும் ஒன்றே தான். அறியான்மை அகற்றப்பட்டால் > மூடநம்பிக்கை நீங்கும் > சமூகம் செழிக்கும். இதற்கு தகுந்த கருவி = கல்வி(யே). எம்மூருக்குள் இக்கருவி சிலருக்கு இன்னும் எட்டாக்கனி போல் இருப்பது வேதனைக்குரிய விடயமே.

நல்ல கருத்து. ஸ்தாபனங்களூடாகவின்றி தனியார்கள் இக்கல்விக்கு எவ்வழிகளில் உதவலாம் என்ற ஆலோசனைகள் தங்களின் மனதில் தோன்றினால் இங்கு பகிர்ந்துதவவும். (எளிய தமிழில். நன்றி)


ஆனந்தம்

06-06-2013 12:29

பசி வந்தால் பத்தும் மறக்கும்,
சிவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்.

ஆபிரிக்கர் மாதிரி எங்கட நாட்டில யுத்ததால பாதிக்கப்பட்டதுகளையும்,
தோட்டக்காட்டு தமிழ் சனங்களையும் போய் பாத்தோண்டு வருவது நல்லது. மக்கள் சேவையே மகேசன் சேவை,


palarajah

04-06-2013 19:14

உதவுவதில் இது என்றில்லாமல் உதவுங்கோ குடிப்பதற்கு கொடுப்பது என்பதில் ஒரு தப்புமில்லை வெளிநாட்டில் உள்ளவர் 2 பேரோடை சேர்ந்து குடித்தால் என்ன? எல்லாம் தேவையானதுதான் என்னைபொருத்தவரை எது தவறு என்று ஒருவன் சொல்லலாம் ஆனால் பின்பற்றுவது கடினம்.


manoharan

04-06-2013 19:03

உதென்ன ஷன்முகண்ணை சொல்லுகிறியல் ? ஆட்டு கிடாய் 50 ஆயிரமோ ? என்ரை
அப்பூ எங்கடை காலத்திலை ஒரு பங்கு இறைச்சி ஆக ஒரு ஐஞ்சு ரூவாய் மட்டுமே
எங்களை மாதிரி கசுட்ட பட்ட சனங்கள் ஒரு பங்கை வேண்டி இன்னும் ஒரு கசுட்ட
பட்ட வரோடை அரை பங்காய் பிரிச்சு எடுத்து சமைச்சு சாப்பிடுகிறது .அப்ப ஆளுக்கு
சரிபாதி 2.50 சதங்கள் .இப்ப ஆடொண்டு 50 ஆயிரம் எண்டால் ஒரு பங்கு இறைச்சி என்ன விலை .அப்ப எங்களை மாதிரி ஏழை எளியதுகள் இனி ஆட்டிறைச்சியை கனவிலை தான் தின்னலாம் போல .எல்லாம் கலிகாலம்


பதவி பிசாசு

04-06-2013 17:59

எண்களுக்கு.???


சரவெடி சண்முகம்

04-06-2013 17:33

புலத்தவர் ஊர்நோக்கிய பயணமும் நன்கொடைகளும்.
ஆலயங்களுக்கு நன்கொடை செய்வதே பெருமை 0% 0
மதுப்பிரியர்களுக்கு மட்டுமே செய்யலாம்.
கல்விசார் நன்கொடைகள் செய்யலாம்.
வறுமைக்கோட்டுக்குள் உள்வர்களுக்கு உதவலாம்.
உறவினர்களுக்கு மட்டுமே உதவலாம்.
எந்த ஒரு உதவியும் செய்யவேண்டியதில்லை. கருத்துக்கணிப்புக்கு.
இப்ப என்ன சொல்ல வாறியள்.நாங்கள் போய் அங்கை அ--------கோயில்கார் அஞ்சாறு வளவு தீத்தவை அதுக்கு பாத்து பாராமல் குடுக்கவேண்டாமே.ஆடு 50 ஆயிரத்துக்கு போகுது அடிக்கவேணும்.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி