காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

கத்தரிக்காயின் நற்குணங்கள் - லொள்ளுபாண்டி.• உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.

• ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக்குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப்பங்கு வகிக்கிறது.


• 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.


• அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.


• ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.


• \"பி\' காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.


• மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.


• கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.


கட்டுரைப்பகிர்வு: லொள்ளுபாண்டி - ஜேர்மனி.


மொத்த வருகை: 506 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (4)


மனோஹர

10-06-2013 13:42

**அளவுக்கு அதிகமாக திண்டால் அவிஞ்சு ஊத்துண்ணுமாம்** எண்டு எண்டு எங்கடை பாக்கிய ஆச்சி சொல்லுகிறா .உந்த பாண பேரில் வரும் அந்த புண்ணிய வதி
பாக்கியவதி எவர் என்பதும் நானறிவேன் .சொந்த பெயரில் வர திராணியற்ற முதுகெலும்பு வளைந்த பெலன் அற்ற கோழைகள்.எடை கத்தரிக்காய் பற்றி கதைக்கவும் பெலன் அற்ற கோழைகள் .
நான் இப்போ சொல்லுகிகேறேன் கத்தரிக்காய் பற்றி **அளவுக்கு அதிகமாய் திண்டால்
அவிஞ்சு ஊத்துண்ணுமாம்** சுத்த பொய் .ஒரு காலம் வெளிக்கிடடி விசுவ மடுவுக்கு
எண்டு படித்த வாலிபர் குடியேற்ற திட்டத்தில் பலபேர் விசுவமடு /திருவை ஆறு
இன்னும் பல இடமெல்லாம் போய் காடுகளை வெட்டி கழனிகள் ஆக்கி சேனை பயிர்
செய்து நெல் விதைத்து அறுவடை செய்து அத்துடன் கூடவே மிளக்காய் வெங்காயம் விளைவித்து தாங்கள் வாழ்ந்த அந்த காட்டின் மத்தியில் தென்னை வளர்த்து நல வாழ்வு வாழ்ந்த வேளை உலகம் கலங்க போர் வெடிக்க எல்லாம் விட்டு கொழும்பு லொச்சுகலில்
தஞ்சம் அடைந்து ஏஜென்சி காரருக்கு லச்சங்களை இறைத்து இன்று புலம் பெயர்
நாடுகளில் .கத்தரிக்காய் கனக்க திண்டால் அவிஞ்சு ஊத்தும் என்று சொல்லும் எங்கடை பாக்கிய வதி அக்காளுக்கு உதெண்டும் தெரியாது போல .அவிஞ்சு ஊத்த
இதென்ன பறங்கி அன்னமன்னாவொ இல்லை அன்னாசி பழமோ? அன்னாசி
சிலருக்கு அலேர்ஜி ஒவ்வாமை .கத்தரிக்காய் அதிகம் உண்டு எவருக்கேனும்
அவிஞ்சு ஊத்தினது எண்டால் நான் சொல்லும் கதை கேளீரீர் பாக்கிய அக்கா
காலத்தின் தேவை கருதி எம்மூரில் பணம் பண்ணும் crops (பயிர்கள் ) ஆன
சீக்கிறேட்டு புகையிலை செய்தனர் .அதை புகை ஊட்டி பதம் பண்ணி கொளுவ விடும் சேகரிப்பு நிலையம் அந்த இடுமன் கோவில் (இப்போ ஞான வேலாயுதர் தேவஸ்தானம் ) தாண்டி போக வரும் வடலியடைப்பில் உள்ள அந்த ஆறேழு மாடங்கள் .எங்கள் நெசவு சாலை பாழ்பட்டது போல அது இன்று பாழடைந்த கட்டிடங்கள் .பின் வீடி புகை இல்லை வீறு கொண்டு பயிரிட பட்டது எம்மூரவர்
அதை பயிரிட்டு வளர்த்து நல்ல பணம் பண்ணினார்கள் ஒரு காலத்தில் பின் .அதன் தேவை
(demand ) வீழ்ச்சி உற சனம் எல்லாம் தொடங்கினார் முளகாய் வெங்காயம் நட்டு
பணம் சம்பாரிக்க .அதுவும் இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆக அதை விட்டு
திரும்பினார் அந்த உள்ளூர் தேவையான மரக்கறி வகை உற்பத்திக்கு .அங்கு
money making crop ஆன கத்தரிக்காய் செய்கைக்கு சனம் இறங்கியது
எம்மூரில் மட்டும் சாந்தை வயல்களில் போட்டா போட்டியில் கத்தரி செய்கை
மூட்டை கணக்கில் பண்டதேருப்பு சந்தைக்கு கத்தரிக்காய் .
கத்தரி வளர்த்தவர்களின் வீடுகளில் தினசரி நல்ல குவாலிட்டி விற்பனைக்கு சந்தைக்கு போக மீதி அழுகிய புழு பிடிச்ச பூச்சி குத்தின காய்கள் எல்லாம் அவர்கள்
வீட்டு தேவைக்காக சமைத்து உண்ண பட்டது .அவர்களுக்கெல்லாம் அவ்வளவு அதிகமாக அவிச்சு உண்டு அவிஞ்சு ஊத்து படுகிறதோ என்று அந்த பாக்கிய அக்காவிடம் நான் ஒரு கேள்வி ஒண்டு கேக்கிறன் .சும்மா ஏதும் எழுத வேணும்
எண்டு எழுதாமல் நல்லதை நல்லபடி அறிவு பூர்வமாக ஆதாரங்களுடன் அதி
நவீன விஞ்ஞான பூர்வ விளக்கங்களுடன் நவீன சமுதாயம் ஏற்கும் வண்ணம்
எழுத வேண்டும் .அதை விடுத்து மாட்டு வண்டில் கால கருத்துக்கள் இன்றைய
நவீன உலகுக்கு பொருந்தாது எங்கடை பாக்கிய அக்காள்


manoharan

08-06-2013 18:23

கத்தரிக்காய் இது எம் வாழ்வோடு இணைந்த ஒரு ஏழை மரக்கறி .எவரும் வாங்க கூடிய மரக்கறி இருந்தும் சிக்கல்கள் உச்ச கட்டத்தில் போன வேளை என்ரை அப்பூ
உந்த கத்தரிக்காய் கூட 250 ரூவாய் வரை போனது
கத்தரியில் பல வகை
நல்ல வெள்ளை கலரில் கள்ளு முட்டி போல் விளையும் கத்தரி மட்டுவில் காய்
பின் ஊதா நிறத்தில் நீண்டு நெடிய வளரும் இன்னொரு வகை கத்தரி .அதன் பெயர் தெரியாது .
அடுத்து லைட் ஊதா நிறத்தில் கோடுகள் உள்ள கத்தரி
பின் சுண்டங்கத்தரி (சுண்டக்காய் கா பணம் சுமை கூலி முக்கா பணம் எண்டு ஒரு
பழ மொழியும் உண்டு )
பிறகு சிங்கள நாட்டில் தலன பட்டு **அசல் ருசி கண்டியலே * அதுக்கு தமிழ் என்னெண்டு எனக்கு தெரியாது .பின்னை கத்தரிக்காய் கதைக்கு வருவோம்ம்
உந்த கத்தரிக்காயில் எத்தனை வகை அவியல்கள்
நீட்டு பாட்டாய் கீறி வெட்டி நல்ல றால் போட்டு குழம்போண்டு வைச்சால் அது வலு
சோக் .பிறகு வளவிலை உள்ள அந்த முருக்கை மரத்திலை ரண்டு காயை பிடுங்கி கீறி போட்டு குழம்பு வைச்சால் அது பூலோக சொர்க்கம் இன்னும் பல சொல்லலாம்
உந்த கத்தரிக்காய் பற்றி .நானோ ஒரு இரவல் கொம்பிலீட்டறிலை அடிக்கிறன் அவசர அவசரமாய் .கொஞ்சம் பிந்தினால் அடியும் விழும் .பின்னை கத்தரிக்காய்
கதை கேளுங்கோவன் .குழம்பு /பிரட்டல் /வதக்கல் தான் நாம் அறிந்தது .அதை விட
இன்னும் எவ்வளவோ உண்டு உந்த கத்தரி காயில். பிருந்ஜோல் மோஜு எண்டு ஒரு
ஐட்டம் .வெளிநாட்டு காரர் சில வேளை அறிந்து இருக்க கூடும் .அது நல்ல பிஞ்சு
கத்தரிக்காயை எண்ணையில் வதக்கி செய்யும் ஒரு அசல் ஐட்டம் .அதை விட இன்னொரு ஐட்டம் .அதுதான் அந்த கத்தரிக்காய் சம்பல் .எம்மூர் பழைய பெண்டுகளுக்கு தெரியும் .இருந்தும் இப்பத்தியில் புதிய பெண்டுகளுக்கு இதெல்லாம் நோடிக்க பூதி
அதனால் நான் சொல்லுகிறேன் கேளுங்கோ .நல்ல பிஞ்சு கத்தரிக்காய் கொஞ்சம்
எடுத்து விறகு அடுப்பில் சமைச்சு முடிய அந்த சாம்பலுடன் கொடிய அந்த வெந்தணலில் கத்தரிக்காகளை அமுக்குங்கள் .வெந்து வந்ததும் உங்கள் BBQ
அதை எடுத்து நல்ல வெங்காயம் முளகாய் அரிஞ்சு கொஞ்சம் தயிர் விட்டு பிசைஞ்சு வெள்ளி கிழமை விரத சாப்பாட்டோடை திண்டு பாருங்கோ .சும்மா கிழிச்சு எறியும்


பாக்கியவதி

09-06-2013 00:31

அளவுக்கு அதிகமாக தின்ன்டால் அவிஞ்சு ஊத்துண்ணும்


ரேணுகா

11-06-2013 13:59

மனோகரண்ணா சொன்னமாரி சம்பல் போட்டன் நல்லாதான் கிட.
கத்தரிக்காயில இவ்வளவு வடிவங்களா?


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி