காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

பித்தத்தை குறைக்கும் அன்னாசி - லொள்ளுபாண்டி.


அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது .


எல்லா பழங்களிலுமே இயற்கையாகவே அதிக சக்தியளிக்கும் தன்மை உண்டு.
100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு


நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம்.இரத்தசோகை ,மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது என்றால் பாருங்களேன் இதன் சக்தியை .


அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை இருக்காது .இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.


தேகத்தில் போதுமான இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்து . நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.


இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அதன் பயன்களை நீங்களே அறிவீர்கள்.

கட்டுரைப்பகிர்வு: லொள்ளுபாண்டி - ஜேர்மனி.


மொத்த வருகை: 805 இன்றைய வருகை: 2

கருத்துரைகள் (8)


manoharan

14-06-2013 21:14

அன்னாசி பழம் இங்கு உறுல்படுகிறது.எனக்கெண்டால் ஒரு இளவுமாய் விளங்குகுது
இல்லை .எதோ ஒரு சக்தி எங்களை இந்த இணையம் மூலம் இணைக்கிறது .அது
எது என எனக்கு புரியவில்லை .எடை நான் எழுத நினைப்பது உடனை இங்கு
வேறு ஆரோ ஒருவரால் எழுத படுகுது .நான் தகவல் சேகரிக்க அரும் பாடு படுகிறேன் .அது நீங்கள் அறியீர் .இன்று கூட ஒரு பத்திரிக்கை துணுக்கு .அங்கு வல்லாரை கஞ்சி
பின் பிலாக்காயின் மகத்துவம் .இதை மொழி மாற்றி எம்மவர் பயன் பெற வேண்டும்
அதை இணையத்துக்கு அனுப்ப வேணும் என்று அதை சிங்கள பத்திரிகையில்
கொய்து கொண்டு வந்து என் CABINIL . சொன்னால் நம்பையால் என் கபினில்
என் சாமான்களை விட தகவல் சேகரிப்பின் சாமான்களே மிக அதிகம் .
நடை பாதையில் வாங்கிய புத்தகங்கள் .சிங்கள ஞாயிறு பேப்பர்களில் வரும் கட்டுரைகள் இன்னும் பல அங்கும் இங்குமாய் கிடக்குது .எல்லாம் எழுத எனக்கு
எங்கை நேரம் .இருந்தும் இயலுமான வரை எழுத முயற்சி .
சரி இனி கதைக்கு வருவோம் .இங்கு அன்னாசி .நான் சொல்ல போவது பிலாக்காய்
பக்கத்தில் சிங்கள பேப்பர் அதை பார்த்து அடிக்க போகிறேன் தமிழில்
அன்றொரு கால் என் கிராமத்தில் என்ரை ஆச்சி எனக்கு தடிமல் பிடிச்சால்
நல்ல புளிகஞ்சி ஊரரசி போட்டு அம்மியில் முளகு சீரகம் உள்ளி சேர்த்து அரைச்சு
நண்டு றால் போட்டு முல்லை /முசுட்டை இலையும் சேர்த்து ஒரு புளி கஞ்சி காச்சி
தருவா .விடிஞ்சதும் ஆச்சி என்னை கூப்பிட்டு இஞ்சை வா என்ரை குஞ்சு உனக்கு
தடிமன் நெஞ்சு தடிமன் ஆக்கி போட்டுது எண்டு சொல்லி முட்டை ஒண்டு அடிச்சு
ஊத்தி பூவரசம் தடியை ஏழு எட்டாய் பிளந்து செய்த அந்த எங்கள் கிராமிய FORK
முள்ளு கரண்டியாலை முட்டையை அடிச்சு தந்த கோப்பியை குடிச்சால் நெஞ்சு
தடிமன் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிஞ்சு போகும் .அதை நாங்கள் இனி எங்கு
காண .ஆச்சியும் இல்லை .முட்டை கோப்பியும் இல்லை .சரி இப்ப கதைக்கு வருவோம் .நான் எழுத வெளிக்கிட்டது பிலாக்காய் பற்றி .பிறகு வாறன்
அன்னாசி பற்றி கதைக்க
பிலாக்காய் ------ இது சிங்கள பிரதேசங்களில் எங்கள் பனமரம் வளர்வது போல்
வளரும் ஒரு மரம் .காகம் கொண்டு போய் போடும் கொட்டை கூட மரமாய் முளைத்து பயன் தரும் .சரியாக எங்கள் பிரதேசத்தில் மாடு சூப்பிய பணன்கொட்டை முளைத்து மரமாவது போல .பிலா காய் ஆனது உண்பதற்கு
பலர் விருப்பம் (சிங்களர் ) இது பல்வேறு பட்ட வகையில் உண்ண படும் அதே வேளை பற்பல நன்மை பயக்கும் நல்ல போஷாக்கு உணவாகும் .விசேடமாக
பிலாக்காய் சுளை /கொட்டை /கொட்டையை சுற்றி உள்ள அந்த தோல் \'மற்றும்
வல என்று சொல்லப்படும் கூழாம் பிலாப்பழம் .மற்றும் பொலஸ் (அது எம்பிரதேசச்த்தில் கிடையாது .பிஞ்சு பிலாக்காய் .அதை அவிச்சு துண்டு துண்டாய்
வெட்டி நல்ல மல்லி முளகு சீரகம் இட்டு ஒரு கறி வைப்பார்கள் சிங்களர் .சும்மா
ஆட்டிறைச்சி குழம்பு தோத்து போகும் .நான் ஆசை பட்டு என் உதவியாளர்களிடம்
சொல்லுவேன் எனக்கு பொலஸ் கறி தின்ன கொஞ்சம் ஆசை எண்டதும் அவை
தங்கடை மனிசி மாரிட்டை சொல்லி சமைச்சு வாட்டின வாழை இலையிலை சுத்தி
கொண்டு வந்து தருவினம் நான் enjoy பண்ணி அடைந்தது உண்டு .
பிலாக்காயை பல்வேறு பதத்தில் உண்ணலாம் .கறி /சுண்டல் /மசியல் /பழம்
ஆக .நாங்கள் சுண்டுவதும் இல்லை மசிபதும் இல்லை .ஒண்டில் கூழுக்கு போடுவோம் .இல்லாவிடில் பழுத்த பின் சுளை பிடுங்கி தின்னுவோம்.
பிலா உணவில் மாப்பொருள் 25 % .பிலா கோட்டையில் 40 % மாப்பொருள்
இது சமிபாட்டின் பொது குளுக்கோஸ் ஆக பரிவர்த்தனை அடைந்திட்ட போதும்
சலரோக வியாதி காரருக்கு கூட அது அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது .
இருந்தும் பிலா கொட்டை அதிக அளவில் உட்கொள்ளல் கூடாது .அதில் உள்ள
அந்த மனநிற கோதில் விட்டமின் B சத்து நிறையவே உள்ளது .
பால் பருக்கும் தாய் மாருக்கு பிலா உண்ணல் மிக சிறந்தது .பால் சுரத்தலை கூட்டும்.
பிலா உணவு வாய்வு என்று சொல்லும் சிலர் உள்ளனர் .சில மூட நம்பிக்கைகள்
அதில் உண்மை இல்லை .இதை உணவாக உட்கொள்ளப்படும் போது ஜீரணிக்க
கொஞ்ச கால தாமதம் ஆவதால் ஜீரன process இன் போது சில வாயுக்கள் உண்டாவது இயல்பே .இதனால் சிலரிடம் ஒரு அபிப்பிராயம் உண்டு **பிலாக்காய்
திண்டால் சரியான வாய்வு எண்டு **
பிலா உணவு உட்கொள்ளப்படும் போது .நித்திரை வராமல் அவதி உறுவோருக்கும்
நிவாரணம் கிட்டும் .பிலா மர துளிர் இலைகளை சுண்டி உண்டாலும் தூக்கம் வராதவர்களுக்கு நிவாரணம் கிட்டும் .
மகளிர்க்கு உண்டாகும் மாத விலக்கு கோளாறு களுக்கும் பொலஸ் (அது எங்களிடம் இல்லை .சிங்கள தேசத்தில் போய் வேண்ட வேணும் ) மிக சிறந்தது
ஒன்று இரண்டு நாள்ட்கள் மட்டும் உண்பதில் பலன் கிட்டாது
அடிக்கடி மலம் கழிப்பவர்களுக்கு கூட பிலா உணவு ஒரு அரு மருந்தாகும் .
சோத்துக்கு சொந்தம் கொண்ட்டாடு பிலா உணவு கூட ஒரு நாளுக்கு இரு தடவை
உண்பதில் தவறேதும் இல்லை .அது சிங்களருக்கு பொருந்தும் .எங்களுக்கு நாங்கள்
எங்கடை பனம் பழத்தை தான் சூப்ப வேணும் .80 களில் நான் ஓமான் நாட்டில் பணம்
பண்ணி என் வீட்டு கட்டுமான பணி வலு அமளியாய் நடக்குது .எனக்கு மண் பறிக்கிறார் என் வடலியடைப்பு நண்பர் ஒருவர் நாகர் கோயில் பக்கத்தில் இருந்து
பிலாப்பழம் தின்ன ஆசை பட்டு அவரிடம் சொன்னேன் .அந்த பக்கத்தில் இருந்து
எனக்கு ஒரு பழம் வேண்டி கொண்டுவாரும் எண்டு .கொண்டு வந்து தந்தார் .
விலை என்ன தெரியுமே .ஆக 450 ரூவாய் .அப்ப இப்ப வேண்டுகிரதேண்டால்
ஆக குறைஞ்சது ஒரு 1500 ஆவது வேணும்




ரசிகன்

14-06-2013 16:31

1. அன்னாசிப்பழத்தை துண்டுகளாக்கி அல்லது சாறாக குழந்தைகட்கு கொடுக்க... வயிற்றிலுள்ள பூச்சிகள் மாறும்.

2. பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர... இடுப்பு வலி மாறும்.

3. அன்னாசிப் பழத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சற்று மாநிறமாக உள்ள உடல் பொன்னிறமாக மாறும்.

4. அன்னாசிப் பழத்தை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி அரைத்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்

5. அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட... இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.

6. பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.

7. அன்னாசிப்பழத்தை வட்டமாக வெட்டி காய வைத்து பாலில் போட்டு பின் உலர வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தம் ஊறும். பித்தக் கோளாறுகள் தீரும்.

8. வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும்.

9. இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சீனியும் கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு தீரும்.

10. அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும்.

11. அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

12. பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரணம் ஏற்படும்.

13. அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது.

14. குழந்தைகட்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர... எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும். கண்கள் ஒளி பெறும்.

15. அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகட்கு கொடுக்க உள் உறுப்புகள் பலப்படும். பசி ஏற்படும்.

16. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகும். வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும்.

17. இரவில் பாதி அன்னாசிப் பழத்தை சின்னதாக வெட்டி, அத்துடன் 2 ஸ்பூன் ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்து மறு நாள் காலை 5 மணிக்கு எழுந்து, நன்கு வடிகட்டி குடிக்க இடுப்பு சதை குறையும்

18. அன்னாசி பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு மற்றும் தர்ப்பூசணி பழச்சாறு ஆகிய மூன்றையும் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பின் அளவை குறைத்து சிறுநீரக கோளாறுகள் குறையும்.

19. அன்னாசிப் பழத்தை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி அரைத்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்

20. ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்

21. ஒரு டம்ளர் அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.

22. அன்னாசிப் பழ இலைச்சாறுடன் சர்க்கரைக் கலந்து சாப்பிட்டால் விக்கல் குறையும்

23. அன்னாசிப் பழம் ஒன்றை எடுத்து தோல் நீக்கி சிறுத்துண்டுகளாக நறுககிக் கொள்ளவேண்டும். அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமமத்தை எடுத்து பொடி செய்து போட்டு நன்குக் கிளறி விட்டு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும. அதை இரவில் வைத்திருந்து மறுநாள் காலையில் பிழிந்துச் சாறு எடுத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு பத்து நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் பருத்த வயிறு குறையும்.


ரசிகன்

14-06-2013 14:59

செந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது.

நிறை குறைந்தவர்களை பொன்நிறமாக்க அன்னாசி!
இடுப்பு வலி மாற்ற அன்னாசி!
வயிற்று பூச்சி கொல்ல அன்னாசி!
பலவீனம் குறைய அன்னாசி!
தொண்டைவலி தீர அன்னாசி!
இடுப்பு சதை குறைக்க அன்னாசி!
ஆஸ்துமா நோய் குறைய அன்னாசி!....


சிரித்திரன்

14-06-2013 17:39

நிறை குறைந்தவர்களை பொன்நிறமாக்க அன்னாசி!
**நிறைகுரைந்தவர்களுக்கும் பொன்னிறத்துக்கும் என்ன சம்பந்தம்?**

இடுப்பு வலி மாற்ற அன்னாசி!
**இடுப்புவலி ஏன்ஏற்படுகிறது?**

வயிற்று பூச்சி கொல்ல அன்னாசி!
**வாயிற்று பூச்சிக்கு அன்ரிபால் எல்லோ நல்லது இல்லாட்டி இருக்கவே இருக்குது பூச்சி கொல்லி மருந்து **

பலவீனம் குறைய அன்னாசி!
**பலவீனத்தை குறைச்சு என்னத்தை கிழிக்க போறோம்**

தொண்டைவலி தீர அன்னாசி!
*அளவாய் கதைச்சால் தொண்டை வலி வராது(சொல்லுற ஆளை பார் எண்டு நினைக்கிறியள் விளங்குது**

இடுப்பு சதை குறைக்க அன்னாசி!
**குனிஞ்சு நிமிந்து வேலை செய்தால் ஏன் சதை அங்க வைக்கபோகுது**

ஆஸ்துமா நோய் குறைய அன்னாசி!....
**இது தீபனிட்ட தான் கேக்கவேணும்**


ரசிகன்

14-06-2013 17:48

நிறை குறைந்தவர்களை பொன்நிறமாக்க அன்னாசி!
**நிறைகுரைந்தவர்களுக்கும் பொன்னிறத்துக்கும் என்ன சம்பந்தம்?**

கணனியில் எழுதும்போது வந்த எழுத்துப்பிளை

நிறம் குறைந்தவர்களை பொன்நிறமாக்க அன்னாசி!


சிரித்திரன்

14-06-2013 18:09

என்ர எழுத்து பிழைகளோடு ஒப்பிடும் போது உது nothing . என் எழுத்துப்பிழை வருத்தத்துக்கு ஏதேன் அன்னசிமாதிரி மருந்து இருந்தால் சொல்லுங்கோ. அடிக்கடி வருகுது .எழுதிப்போட்டு வாசிச்சாலும் பிடிபடுது இல்லை.


ரசிகன்

14-06-2013 17:44

1. அன்னாசிப்பழத்தை துண்டுகளாக்கி அல்லது சாறாக குழந்தைகட்கு கொடுக்க... வயிற்றிலுள்ள பூச்சிகள் மாறும்.

2. பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர... இடுப்பு வலி மாறும்.

3. அன்னாசிப் பழத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சற்று மாநிறமாக உள்ள உடல் பொன்னிறமாக மாறும்.

4. அன்னாசிப் பழத்தை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி அரைத்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்

5. அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட... இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.

6. பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.

7. அன்னாசிப்பழத்தை வட்டமாக வெட்டி காய வைத்து பாலில் போட்டு பின் உலர வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தம் ஊறும். பித்தக் கோளாறுகள் தீரும்.

8. வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும்.

9. இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சீனியும் கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு தீரும்.

10. அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும்.

11. அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

12. பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரணம் ஏற்படும்.

13. அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது.

14. குழந்தைகட்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர... எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும். கண்கள் ஒளி பெறும்.

15. அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகட்கு கொடுக்க உள் உறுப்புகள் பலப்படும். பசி ஏற்படும்.

16. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகும். வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும்.

17. இரவில் பாதி அன்னாசிப் பழத்தை சின்னதாக வெட்டி, அத்துடன் 2 ஸ்பூன் ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்து மறு நாள் காலை 5 மணிக்கு எழுந்து, நன்கு வடிகட்டி குடிக்க இடுப்பு சதை குறையும்

18. அன்னாசி பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு மற்றும் தர்ப்பூசணி பழச்சாறு ஆகிய மூன்றையும் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பின் அளவை குறைத்து சிறுநீரக கோளாறுகள் குறையும்.

19. அன்னாசிப் பழத்தை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி அரைத்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்

20. ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்

21. ஒரு டம்ளர் அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.

22. அன்னாசிப் பழ இலைச்சாறுடன் சர்க்கரைக் கலந்து சாப்பிட்டால் விக்கல் குறையும்

23. அன்னாசிப் பழம் ஒன்றை எடுத்து தோல் நீக்கி சிறுத்துண்டுகளாக நறுககிக் கொள்ளவேண்டும். அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமமத்தை எடுத்து பொடி செய்து போட்டு நன்குக் கிளறி விட்டு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும. அதை இரவில் வைத்திருந்து மறுநாள் காலையில் பிழிந்துச் சாறு எடுத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு பத்து நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் பருத்த வயிறு குறையும்.

அன்னாசி பழச் சலாட்


ரசிகன்

14-06-2013 17:51

அன்னாசி பழச் சலாட்

தேவையான பொருட்கள்....

அன்னாசிப்பழம் - 1 துண்டு
வெள்ளரிக்காய் - 1
எலுமிச்சை - அரை மூடி
தக்காளி - 1
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை....

• வெள்ளரிக்காய், தக்காளி, அன்னாசிப்பழம் இவற்றை வெட்டி வைத்துக்கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வெட்டிவைத்துள்ள பழங்களை போட்டு அதில் உப்பு, மிளகு தூள் கலந்து, எலுமிச்சம்பழத்தைப் பிழிந்துவிட்டு, கடைசியில் கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும்.

• சாப்பிடச் சுவையாக இருக்கும். காலையில் சாப்பிடுவது நல்லது.

பைனாப்பிள் கேசரி

ரவை - 1 கப்
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் - 1/2 கப்
சக்கரை - 1/2 கப்
பால் - 2 கப்
பைனாப்பிள் கலர் - சிறிதளவு
நெய் - 2 மேசைக்கரண்டி

முதலில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி பைனாப்பிளை 2 நிமிடம் வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலினை காய்ச்சவும்.
பின்னர் கடாயில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி ரவையினை வறுக்கவும்.
அதன் பின் அதில் பாலினை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி வேகவிடவும். (இடைஇடையே நெய்யினை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்).
ரவை முக்கால் பாகம் நன்றாக வெந்த பிறகு சர்க்கரை மற்றும் வதக்கி வைத்துள்ள பைனாப்பிள்ளை சேர்த்து 2 - 3 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.
கடைசியில் நீங்கள் விரும்பினால் வறுத்த முந்திரி சேர்க்கவும்.
இப்பொழுது சுவையான பைனாப்பிள் கேசரி ரெடி

பீன கொலொடா (Pina Coloda)
இந்த பிரபலமான பாணி பானம் செய்முறையை. தேவியான பொருட்டகள்

3 Oz ரம் வகை (light Rum)
3 தேக்கரண்டி கட்டி தேங்காய் பால்
3 தேக்கரண்டி நசுக்கிய அன்னாசிபழம்

மூன்றையும் சேர்த்து அத்தோடு ஐஸ் கட்டியும் போட்டு ஒரு மிக்ஸ்சியில் அடிக்கவேண்டும். அது கர கர என்று வரும்வரை அடித்தபின் ஒரு கிளாஸ் இல் விட்டு ஸ்ரோ வைத்து அருந்தும் அமுத பானம்.

குறிப்பு: Rum இற்கு பதிலாக Bacardi அல்லது Vodka வும் பாவிக்கலாம். தேங்காய் பாலை விட கிறீம் தான் நல்லது. அன்னாசி ஜூஸ் உம் பாவிக்கலாம்.



உன் கன்னம் கண்டேன் - ஆப்பிள் கவிதை..!
உன் விழிகள் கண்டேன் - திராட்சை கவிதை..!
உன் இதழ்கள் கண்டேன் - கொய்யா கவிதை..!
உன் பற்கள் கண்டேன் - மாதுளம் கவிதை..!
உன் கழுத்தை கண்டேன் - அன்னாசி கவிதை..!
உன் மார்பை கண்டேன் - மாங்கனி கவிதை..!
உன் இடையை கண்டேன் - முந்திரி கவிதை
உன் கால்கள் கண்டேன் - வாழை கவிதை..!
உன் நிறத்தை கண்டேன் - எலுமிச்சை கவிதை..!
உன் பேச்சை கண்டேன் - கரும்பின் கவிதை..!
உன் கவிதை என்ன விலை - கேள்வி கேட்டேன்
உன் கைகளில் கண்டேன் - செருப்பு கவிதை..!

https://www.youtube.com


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி