காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

புத்தகங்கள் காணா சத்தகங்களின் வித்தகங்கள் - பம்பல்Kமனோ.


சத்தகங்கள் .எத்தனை வகை சத்தகங்கள் அன்று பாவனையில் .எல்லாம் இப்ப கோடி பக்கம் ஒதுங்கி கறல்கட்டுகுது .இப்ப modern kitchen களில் வகை வகையான சத்தகங்கள் .வெளிநாட்டு காரரின் அடுக்களை /அடுப்படி /கொட்டிலுக்கை/குசிநிகளிலை ஜெர்மன் made ஒக்காப்பி .பிறகு ஜப்பானிஸ் stainless ஸ்டீல் சத்தகங்கள்.

கொக்க சத்தகம் :--
கொக்கத்தடியில் கட்டி ஆடு மாட்டுக்கு குழை அறுத்தல் .வேலி ஓரமாய் நிற்கும் அயல் வீட்டு மாவிலை அங்கினை ஆளில்லா நேரம் பார்த்து நைசாய் சொதிக்கு போட இரண்டொரு மாங்காயை கொழுவி விழுத்த உதவும் .சத்தகத்தின் அடியில் ஒரு feather ஒன்று இருக்கும் .ஸ்மார்ட் ஆன ஆக்கள் கொக்கத்தடியின் நுனியில் துளை ஒன்று இட்டு அதில் ஓட்டி கட்டுவார்கள் .சும்மா கட்டினால் சத்தகம் அங்கும் இங்கும் ஆடி சொல்வழி கேளாது .சுடுதண்ணி type ஆக்கள் மனிசி மாரோடை ஏறுவினம் .**எடியே இதென்னடி சத்தகம் ஆடுகுதடி ** எண்டு தெய்வர் கிணத்துக்குள்ளை மிசினை தள்ளின மாதிரி. .

அருவி சத்தகம் :-
வயலில் அருவி வெட்ட use பண்ணுவது cutting edge பற்களை கொண்டது .அதுகும் துரு பிடிக்குது .இப்ப வன்னி பக்கத்தில் இருந்து மிசின் வந்து அரிஞ்சு கொட்டுகுது .
கோப்பி சத்தகம் (கத்தி ) :-
வெள்ளையர் காலத்தில் கோப்பி தோட்டங்களில் கோப்பி மரம் crop பண்ண use பண்ணியது .அதை உள்ளூர் கம்மாலைகள் கொப்பி அடிச்சு உருவாக்கியதே கோப்பி சத்தகம் .
File:Sri Lanka-Noix de coco (12).jpg
File:Knives shop, Kannur.JPG
காம்பு சத்தகம்( பன்னச் சத்தகம்) :-
multi purpose -- பெட்டி /கடக பெட்டி /கடகம் /பாய் இளைக்கும் போதும் repair பண்ணும் போதும் ஓலையை கொளுவ தேவையான gap சத்தகத்தின் காம்பினால்
உண்டாக்கபடும் .மேலும் ஓலை சார்வை தேவையான width இல் கிழித்து எடுப்பதற்காக மடிக்கபட்ட மட்டையினால் ஆன ஒரு guide இல் பல்வேறு அளவில் ( பெட்டி + பாய் --5/6 mm கடகம் --7/8 mm சூடு மிருக்கும் பாய் 8/10 mm ) ஒரு வரிசையில் V ஷேப் இல் groove க்கள் வெட்ட பட்டிருக்கும் .தேவையான இடத்தில் காம்பு சத்தகத்தை பிடிச்சு அடி பக்கத்தில் ஓலையை கொழுவி இழுப்பலவை ஒரு இழுவை .தேவையான சைஸ் இல் ஓலை .எப்பிடி எங்கடை நம்முன்னோரின் டேக்கிநோலோஜி.

.அது மட்டுமே அடுக்களையிலை பல்வேறு பாவனை .பாவிக்கும் போது காம்பை கொண்டு போய் கொண்டையிலும் கொளுவுவினம் .அதென்னெண்டால் மிஸ் place ஆவதை தடுக்க .தற்காப்புக்காகவும் (self defence --அப்பத்தெல் பெண்டுகளுக்கென்ன இப்பத்தையார் மாதிரி கராட்டி குங் பூ /ஜூடோ தெரியுமே ) .வேலி சண்டை ஒண்டு அமளியாய் நடக்குது .உச்ச கட்டத்தில் வார்த்தை பரிமாற்றங்கள் .ஒரு ஆளின் கொண்டையில் காம்பு சத்தகம் கொளிவினது ஞாபகம் வர உருவி எடுத்தாள் பாவி **எடியே என்னடி சொன்னனி ? உன்றை மூக்கறுப்பனடி கண்டியே கவனம் ** எண்டு சொன்னதை கேட்ட அவையின்றை புரியன்மார் --வீட்டிலை அவை அவையளின்றை பெண்டில்மாருக்கு பெண்டில் மார் மொடல் ) சரி சரி எனிகானும் வா .சமைக்கவும் அல்லே வேணும்.

பம்பல்Kமனோ - கலட்டி.
மொத்த வருகை: 1847 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (28)


விசு க மனோகரன்

24-08-2015 09:26

பொதுவாக முகநூலையும் கைஅடக்க தொல்லை பேசியையும் குறை சொல்பவன் நான் .நன்மைகளை விட தீமைகள் பல .இருந்தும் 65 ஆவது அகவையில் கால் பதித்த வேளை ஜாதி மத இன மொழி பால் வேறுபாடுகளையும் கடந்து வந்து குவிந்த வாழ்த்துக்களை கண்டு மலைத்து விட்டேன் .அவை என் ஆயுளை நீட்டி விட்டது .அனைத்து நல்லுள்ளம் கொண்டோருக்கும் மன பூர்வ நன்றிகள் அனந்தம்.
Like Comment Share


பண் - ரசிகன்

26-08-2015 15:13

அருமையாக போய்க்கொண்டுருந்த bancomin பின்னடைய்வுக்கு காரணம் என்ன ,,என்ன ,,,என்ன


மனோகரன்

30-08-2015 10:08

பின் னுக்கு அடையவும் இல்லை (பின்னடைவு ) முன்னுக்கு ஏறவும் இல்லை (முன்னேற்றம் ) அதே இடத்திலை தான் .காரணங்கள் பல .அவற்றில் சில இதோ
முக நூலின் ஆக்கிரமிப்பு
தரமான ஆக்கங்களுக்கு உள்ள கேள்வியின் வீழ்ச்சி பொருளாதாரத்தில் Production based on demand and followed up by marketing உற்பத்தி கேள்வியின் அடிப்படையில் .அதை தொடர்ந்து சந்தை படுத்தல்
மழைக்கு முளைக்கும் காளான்கள் போல ஒரு தொகை இணையங்கள் ஊரின் பேரில்
எங்கடை சனகளுக்கு பெண்டுகளின்றை சீலை டிசையின் விலை தலை பற்றி கிறுக்கினால் விழுந்து அடிச்சு வாசிப்பினம் இல்லாட்டில் கோயில் கணக்கு வழக்கு ஆரேநின் விடுப்புகள் /விண்ணானங்கள்
உதென்ன உதொரு இணையமே ? கண்டறியாத இணையம் !!!! அவர் மனோகரன் எண்டொரு கிழட்டு லூசு அளட்டுகுது .அவருக்கு கூசா தூக்க இனூம் கொஞ்ச பேர் .அவர் சூரன்றை மேன் ஒருத்தர் ஆரோ சுதர்சனாம் .வாடி நாங்கள் போவோம் விசி இன்றை படம் பொடுஇனமாம் பொன்னம்மா வீட்டிலை .வெத்திலை பாக்கையும் கொண்டாடி


மனோகரன்

29-08-2014 19:00

சத்தகங்களின் வித்தக கதைகள் ஆயிரம் வருகையை தாண்டி விட்டது .எனக்கு புளுகம் வர என்ரை மேழை கூப்பிட்டு கொண்டு வாடி பிள்ளை அந்த காம்பு சத்தகத்தை தீட்டி ஒருக்காய் என்ரை கால் நிகங்கள் வெட்ட வேணும் எண்டு சொல்ல
அவள் பாவி அடிக்க வாறால் இப்பிடி சொல்லி **அப்பு உனக்கென்ன லூசே ? காம்பு சத்தகத்தாலையே கால் நிகம் வெட்ட போறாய் ? அது உங்கடை பழைய காலத்து பட்டன் .இப்ப போன கிழமை எங்கடை அண்டியின்றை மூத்தவ அதுதான் அவ தில்ருக்ஷி ஜேர்மனிலை இருந்து பெரிய நிகம் வெட்டி ஒண்டு கொண்டு வந்து தந்தவா அல்லே ?அதாலை வெட்டுங்கோ கால் நிகன்களை .**ஓமடி பிள்ளை சொறியடி * உவளவை எல்லாம் வெளிநாடு போக முதல் நிகங்கள் வெட்டினதை உன்றை கோச்சி ஆணை நான் காணேல்லை .நிக கண்ணிலை 100 கிராம் ஊத்தை
இப்ப அவளவை சென்ட் அடிச்சு வெளி நாட்டு கொண்டி காட்டுகினம் எங்களுக்கு .என்ன செய்ய காலம் மாறி போச்சுது


கதிரவன்

31-08-2014 21:34

உவளவை எல்லாம் வெளிநாடு போக முதல் நிகங்கள் வெட்டினதை உன்றை கோச்சி ஆணை நான் காணேல்லை .நிக கண்ணிலை 100 கிராம் ஊத்தை

இதெல்லாம் சாப்பிட்டாப் பிறகு இருக்காது எண்டதை மறந்திட்டியள் போல


விசு க மனோகரன்

29-08-2015 11:20

**கதிரவா கரணம் இது ***
நான் போகின்றேன் ஊரில் ஒரு லாண்ட் மாஸ்டர் ஹையர் பண்ணி பீக்கர் கொழுவி கத்தி கொண்டு போனன் இப்பிடி பிரதேச சபை லச்சான் கேட்டு மெம்பர் ஆக வேணும் எடுத்து விட்டேன் இப்பிடி
*அன்பார்ந்த பொதுசனங்களே எனக்கு vaakkaliththu என்னை பிரதேச சபைக்கு தெரிவு செய்யுங்கோ
அது அரசியல் செய்ய முதலாவது படி .அந்த காலத்திலை கிராம சங்கம் .எங்கடை நடையார் பால் சங்க குஞ்சர் எல்லாரும் கிராம சங்க மேம்பர்மார் .அதை தொடர்ந்து சர் கொண்டு வந்த மாவட்ட சபை .பிறகு அங்கு கால் பதித்தால் பிறகு இப்ப உள்ள மாகான சபை .எம்மூரில் ஒருவரும் ஒருத்தியும் எனக்கு சொன்ன கதை இது எங்களுக்கு வோட்டை போடுங்கோ வெண்டால் *நான் பஜிரோ வாகனத்திலை பயணம் ** இது அடக்க பட்ட ஒடுக்க பட்ட ஏழை எளியவர்களுக்கு செந்கொடியில் அணி திரண்ட இடது சாரிகள் என்று கொக்கரிக்கும் கூட்டத்தினர் சொன்ன கதை .இன்றும் தங்கள்
சொந்த நலன்களை மறந்து வாழும் உண்மை சிகப்பு சட்டைகள் பலரை நான் தரிசிக்கின்றேன்
பின்னை மிச்ச கதையை கேளுங்கோவன்
என் லேன்ட் மாஸ்ட்டர் போகுது ஊர் எல்லாம் சுத்தி .நான் வீர முழக்கம் இவ்வாறு **அன்பார்ந்த
வாக்கால பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு அள்ளி கொடுங்கோ நான் பிரதேசை சபை போனதும் உங்களுக்கு என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன் .இதுக்குள் என்ரை
மனிசிக்காரி சொன்னாள் இப்பிடி **உமக்கு வேறை வேலை இல்லையே ? கிரிக்கட்டு maachchilai
கடைசி ஓவர் அடிக்கிற மாதிரி அல்லே நாங்கள் ரண்டு பேரும் இனி என்ன இன்னும் 100 200 வரியம் வாளுகிறதே உம்மடை பிளான் **
இல்லையடி பொறடி எண்டு சொல்ல சரியாக சிவன் கோவில் சாந்தி பெண்ட் எடுத்து பாண கதை விட்டு லாண்ட் மாஸ்டர் ஸ்பீக்கர் குளறி அலறுகிறது .ஒரு படிச்ச பொடி ஒண்டு என்னட்டை கேகணை இப்பிடி ** அண்ணை /மனோகரன் ஐயா உங்களை மாதிரி எவ்வளவோ பேரை நானும் என்ரை அப்புவும் கண்டுவிட்டோம் .எத்தனை போராட்டங்கள் பகிஷ்பரிப்புகள் நாங்கள் இன்னும்
அதே இடம் .ரோட்டுகள் இன்னும் பள்ளம் குழி .மஹிந்த பண்டெருப்பு எங்கும் காப்பெட் ரோட்டு
இருந்தும் அன்று பல்கலை கழகம் எங்கும் எம் தமிழர் பொறி இயல் வைத்திய பீடம் .பரா மெடிக்கல்
எங்கும் நம்மவர் .இருந்தும் நன்கே சிறிமாவோ அம்மையாரும் பொது நிருவாக அமைச்சர் ஆக ஈர்ந்த பீளிச்ஸ் டையஸ் பண்டார நாயகனும் சேர்ந்து வைத்தாங்கள் எங்களுக்கு அப்பு .இன்றைய தலை முறை இது அறியாது. முள்ளி வாய்க்கால் பெரும் எடுப்பில் ஐ நா வரையில் பேச படு கின்றது கதிரவனின் கேள்விக்கு பல கோணத்தில் பதில் தருவேன் நான் .இருந்தும் பல்வேறு காரணிகள் என
கையை கட்டி போட்டு விட்டுது .நான் இப்போ அவுஸ்திரேலிய யுத்த கப்பலுக்கு எண்ணை சப்பிளை
கொஞ்சம் கூட பிசக படாது
இதுதான் கதிரவா பண்ண பண்ண கொம்ம் சும்மா லூஸ் கொம் இல்லை அது பொறுத்த பக்கம்
இருந்தும் இன்று **காக்கா முடை ** படத்தை ஒருக்காய் பாருங்கோ .அப்போ விளங்கும் பண்ண
கொம்மின் பின்னடைவுக்கு .அது பின் அடைவு அல்ல முன் அடைவு நான் இன்றும் எழுதுகிண்றேன்
நாலு பேர் பார்த்தாலும் மனதுக்கு திருப்தி நின்மதி ஆத்மா திருப்தி .பின்னடைந்தாலும் நான் நான் என்றும் உங்களுடனே


நா.சிவாஸ்

24-08-2014 14:23

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!!!!
அருவி அருவாள் கொண்டு சின்னி விரல் அறுத்ததும்.
கொக்கச் சத்தகம் கொண்டு கிணற்றுக்குள் வாழி எடுத்ததும். குந்தி இருக்கையில்
கொழுவிச்சத்தகம் கொண்டு குண்டியில் குத்து வாங்கியதும் ஞாபகம் வருதே.

ஐயோ! ஐயோ! ஐயோ ஓ ஓ ஓ இந்தச் செல்வங்களை எல்லாம் அள்ளிக் கொடுக்கும் நீங்கள் எங்களை விட்டு எங்கையய்யா போவீர்கள்


லொல்லுபாண்டி

26-08-2014 15:03

அந்த காலத்தில சத்தகம் கத்தி கோடாலி செய்து தந்த அந்த தொழிலாளர் எல்லாம் இப்ப என்ன தொழில் செய்வினம் -----அவையளும் படிச்சு வேற வேற தொளிலுகள் செய்வினம் ஆக்கும்


கதிரவன்

26-08-2014 20:53

ஏதோ ஒரு கோணத்தில இருப்புதான் அடிப்பினம்.
படிப்பு ஏறியவர்கள் ஏதும் மாத்தியோசிக்கலாம்.


கதிரவன்

28-08-2014 17:09

கத்தியல அடிச்ச ஆள் இல்ல கத்தியால அடிச்ச ஆள்


மனோகரன்

27-08-2014 11:17

இல்லை பிள்ளைகளே .அவர்களும் மாறி வரும் உலகின் trend இற்கு ஏற்றால் போல
தங்கள் ஜீவனோபாயத்தை மாற்றி நன்கே வாழ்கின்றார்கள் ..சத்தகம் கோடாலி மண்வெட்டி அருவி சத்தகங்கள் ஒன்றும் அங்கு போவதில்லை .இப்போ அங்கு போகும் ஓடர்கள் இப்படி ** என்ரை அக்காளின்றை பொடி வெளிநாட்டிலை இருந்து கொஞ்ச காசு அனுப்புகிறான் இப்பிடி சொல்லி --மாமா நீங்கள் இன்னும் அந்த பழைய காலத்து சனங்கள் மாத்ரி வரியா வரியம் பனை ஓலை வெட்டி வேலி அடிச்சு கறையான் பிடிச்ச பாவட்டம் பத்தையோடையே வாழ பொறியல் /நான் கொஞ்ச காசு அனுப்புகிறன்.உங்கினை ஊர் முழுக்க வீடெல்லாம் சுத்தி கட்டுகிற சுத்து மதிலை கட்டி முன்பக்க மதிலிலை கொளுவுங்கோ ஒரு லேட்டேச்ட்டு படலை ரண்டு .அங்கினை இஞ்சினை போக படாது அவங்கள் நெருப்பு விலை சொல்லுவாங்கள் .நேரை போங்கோ பங்கினை அம்மன் வீதி பக்கம் அவை ஞாயமான சார்ச்சு .இல்லாட்டில் போங்கோ பங்கினை பத்திரகாளி கோயில் பக்கம்
அவையும் கண்ணை பொத்தி அடிக்கமாட்டினம் ஞாயமாய் எடுப்பினம் .ஆக குறைஞ்சது ஒரு ஒன்டுக்குல்லை (ஒரு லச்சத்திலை )முடிக்கலாம் .நான் அடுத்த முறை அம்மன் கோயில் திருவிழாவுக்கு வெளிநாட்டிலை இருந்து என்ரை பெண்டில் பிள்ளையளோடை ஊரிலை இருந்து அனுப்பின வானிலை ஏறி நேரை
direct ஆய் ஊரிலை வந்து என்ரை மாமா வீட்டிலை Horn அடிக்க .நீங்கள் படலையை ஸ்டைல் ஆய் துறக்க .**ஆஹா எத்தனை ஆனந்தம் ?* அயல் அட்டை சனம் எல்லாம் விடுப்பு பாப்பினம் .பெண்டுகள் இப்பிடி சொல்லுவினம் ..உங்கை அவைக்கு வெளிநாட்டு சொந்த காரர் வந்து விட்டினம் .கொஞ்ச நாளைக்கு எங்களுக்கு இஞ்சினை சீவிக்க ஏலாது .ஒரே ஆட்டமும் பாட்டுமாய் இருக்கும்
ஹூம் நாங்கள் என்ன செய்ய ?நாங்கள் குடுத்து வைச்சது அவ்வளவு தான் .**எடியே நீ என்ன ஆவேன்னுகிறாய் .ஆட்டுக்கு தவிட்டை வைச்சு போட்டு அங்கினை கொட்டிலுக்கை கோதம்ப மா புட்டு அவிச்சு வைச்சு கிடக்குது .றால் குழம்போடை திண்டு போட்டு கொப்பருக்கும் கொஞ்சத்தை வை


ஆனந்தன்

27-08-2014 08:52

நீங்களும் இந்தக்கத்தியளை அடித்த ஆள் போல


சரவெடி சண்முகம் .

26-08-2013 17:44

சத்தகம் இந்த வைர்த்தையை காதால் கேட்டே பல வருடம்.பழமைகள் பதிவுகளாக்க மிகவும் அக்கறையோடு செயற்படுவதற்க்கு நன்றிகள். சத்தகம் தானாக அழியவில்லை அதை அழிப்பதற்க்கு முக்கிய காரணிகளில் புலத்தவரின் பங்கும் உண்டு.நாங்கள் வூடுகளை சுத்தி சுத்தி சுத்துமதில் கட்டிப்போட்டோம்.வீடுகளுக்கு முன்னாலை கல்லுகளை பதிச்சுப்போட்டம் அப்ப என்ன தேவை இருக்கு. உதெல்லாத்திலும் ஒரு ஞாபகம் ஒண்டு ஒருத்தல் வயலுக்காலை வாறார் அப்ப அம்மங்கோயிலடியிலை கோயில் நிர்வாகத்துக்கும் பூசாரிகளுக்கும் சண்டை நடந்தபடி இருக்க அதில் பலவித ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன அதிலும் சத்தகத்தால் ஒரு கொத்து ஒண்டு ஒருவர் முதுகில் கொத்தினார் XXXக்கால வந்த நபர்.ஆனால் கொத்தின சத்தகம் திருப்பி எடுக்கமுடியேல்லை கொத்து வேண்டினவர் அப்பிடியே XXXXலைக்கு பின்னுக்கு தன்ரை XXடை ஓடிவிட்டார். அப்பசத்தகம் வயல் சண்டையளுக்கும் பாவிச்சவையோ?


Raja

24-08-2013 13:56

அற்புதமான படைப்பு. நன்றி ஐயா.


சிரித்திரன்

24-08-2013 10:25

சிரிப்பு நேரம்:
----------------------------------------------------------
யுத்தத்திற்கு தேவையான அளவு ஈட்டி கேடயம் கத்தி சத்தகம் நம்மிடம் இல்லை என்ற ரகசியத்தை வெளியிட்டது யார்?

பேரிச்சம்பழ வியாபாரிதான் அரசே!
-----------------------------------------------------------------------------------
மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த பூனை கேட்டது
“ஏன் அவனைக் கொன்னே…?”
“அந்தப் பரதேசி மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் ‘எவ்ளோ பெரிய பூனை’ன்னு.”
——————————————————————–
மனைவி – ஏங்க எனக்கு ஒரு கனவு வந்துச்சுங்க. அதுல, நீங்க எனக்கு ஒரு வைர மோதிரம் வாங்குறா மாதிரி இருந்துச்சுங்க…
கணவன்- ஆனா, அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி எனக்குக் கனவுல வந்துச்சே
——————————————————————–
ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்.
வேறு ஒருவர் வந்து தடுத்தார் ஏன் சார் அடிக்கீறிங்க?
நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்…கேள்வி கேட்டால் இவனுக்கு ‘சந்திரனுக்கும். சூரியனுக்கும்’ வித்தியாசம் தெரியலை என்றார்.
யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும்.
என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே? என்றாராம் டென்ஷனாக.
—————————————————————————————————-
சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு…
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா… அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்… நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்.
———————————————————–
போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்… நாங்கதான் கூச்சல் போடுவோம்…
————————————————————
“”தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?”
“”போங்க சார்… ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே…”


manoharan

24-08-2013 17:06

இப்ப ஊர்பக்கம் அசு கிரீம் விக்கிற வான் காரரும் பழைய இரும்புக்கு அசு கிரீம்
குடுக்கினமாம் .அப்ப கறல் கட்டின சத்தகம் கத்தியளை அவையிட்டை குடுத்து
போட்டு அசு கிரீம் வேண்டி குடிக்கலாம் .
உப்பிடித்தான் நாடு குழம்பி இருந்த நேரம் நான் குடா நாட்டுக்கு உணவு விநியோகிக்கும் கப்பலில் சீவல் .கள்ளு சீவல் இல்லை .கறல் சுரண்டல் .
அப்ப திரும்பி வரும்போது கப்பல் empty .சிலவேளை கொஞ்சம் உருளை கிழங்கு
வெங்காயம் கொண்டு வருவோம் .ஒரு முறை அங்கு உள்ள ஒரு பெரும் பண முதலை ஒண்டு அங்குள்ள வீடுகள் கோயிலுகள் இன்னும் பல இடங்களில் இருந்து
பலபேர்கள் பலவித்தத்தில் பாணி அடிச்ச பித்தளை செம்பு வெண்கல அயிட்டங்கள்
புல் கப்பல் லோட். பல கதை பேசும் அரும் பெரும் செல்வங்கள் .(antique ) .பெரும்பாலும் யாழ் நூல்நிலையத்தில் அளிக்கப்பட்ட அந்த பொக்கிஷங்கள் போல
உண்மையில் என் கண்களில் கண்ணீர் .ஒருவருக்கும் நான் அதை காட்டவில்லை
35 40 பேர்களில் நான் ஒருவனே தமிழன் .பின்பு கொஞ்ச காலத்தில் அவற்றில் சிலதை கண்டேன் அங்கு tourist மாருக்கு விக்கும் அரும் பெரும் பொருட்கள் விக்கும் இடத்தில் அவை காட்சிக்கு வைக்க பட்டு இருந்தது


தீபன்

24-08-2013 21:15

என்ன செய்வது எமது பெருமைகளை இழப்பதையே பெருமையாக நினைக்கும் இழிகுலம் தானே நாம்.


manoharan

01-09-2013 08:40

லொள்ளுவின் கேள்விக்கான பதிலை தரமுடியவில்லை .காரணம் அடித்து கொண்டு
இருந்த வேளை அயல் வீட்டு பிள்ளை தன் மகனை பெரிய பள்ளிக்குடத்திலை செர்க்கவேணுமாம் .கடிதம் ஒண்டு கிறுக்கி தாருங்கோ அண்ணை எண்டு கொண்டு வந்தா .கிறுக்கி குடுத்ததுதான் .அதுகளும் செய்யவல்லே வேணும் .சமூக சேவை
பின்னை பதில் இதுதான் .அவராக பட்டவர் பொதுமக்களின் வரி பணத்திலேயே
படித்தார் .அதை ஈடு செய்தும் போட்டார் .அதாகப்பட்டது மூன்று பெரும் நிறுவனங்களில் மக்கள் பணி புரிந்த பின்பே புலத்தை பெயர்த்தார் .அதில் இரு இடங்கள் அவசர சிகிச்சை பிரிவு (ICU ) .அதன் அழகிய பக்கம் எதுவெனில் இரு இடங்களில் தன்னை ஈன்று தாலாட்டி சீராட்டி ஆளாக்கிய அவரின் தாயையும்
தகப்பனையும் தானே வைத்தியம் பார்த்து இனிதே அனுப்பி வைத்தார் .அந்த
பாக்கியம் இலகுவில் கிடையாது .விரும்பியோ விரும்பாமலோ பல்வேறு காரணங்களினால் புலத்தை பெயர்த்து போட்டு இப்போ முளுசுவதை நான் அறிவேன். அமெரிக்க கனடா போன்ற நாடுகளில் கல்வி ஆனது மிக மிக இலகு
ஆகி விட்டது .நவீன teachching technologies இலகு பாட திட்டங்கள் .வேறை என்ன
சுமாரான அறிவு /ஆற்றலும் படிப்பதற்கான தேவை /ஆற்றல் /அவா /ஆசை அதோடு
கொஞ்ச காசும் இருந்தால் எவரும் உச்சத்தை எட்டலாம் .அவை அனைத்தும் இருந்த போதும் ஆசிய நாடுகளில் கல்வி பலருக்கு குதிரை கொம்பாகவே உள்ளது
இங்கு நம்நாட்டில் மருத்துவ மற்றும் பொறி இயல் கற்கும் வாய்ப்பு ஏதோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓடி தங்கம் வெள்ளி வெண்கலம் வாங்குவது போல
முடியாமல் போனவர்கள் வெளிநாட்டு காரரரின் financial assistance உடன் 100 இற்கு
மேற்பட்ட லச்சன்கள் செலவு செய்து ரஷிய சீன நாடுகள் போய் பட்டம் பெற்று வருகிறார்கள் .இயலாதவை கொட்டாவிதான் மிச்சம் .இங்கு இப்போ ரஷியாவுடன்
இணைந்து மாலபே என்ற இடத்தில் பாரிய தனியார் மருத்துவ கல்லூரி .பாராளு மன்றத்தில்
பெரும் சர்ச்சைகளின் பின் அனுமதி கிடைத்து தொடங்கி நடக்குது .மீண்டும்
படிப்பு முடிவில் உள்ளக பயிட்சிக்காக teachching Hospital பிரச்சனை .அரச ஆசுவத்திரியளிலை நோ சான்ஸ் .பின்னை அவை ஒரு அதி நவீன வசதிகளுடன்
கூடிய 1100 படுக்கைகளுடன் கூடிய 45 விஷேட வைத்திய நிபுணர் அடங்கிய
ஆசுவத்திரி தொடன்கியாச்சுது .அங்கெ 12 மாணவர்கள் முற்றிலும் இலவசமாக
கற்கின்றனர் .அதோடு கனடா ஒச்ற்றியா இன்னும் சில வெளிநாட்டு மாணவர்களும் கற்கின்றனர் .ஆசுவத்திரி சார்ஜ் எல்லாம் மற்ற தனியார் ஆசுவத்திரிகளுடன் ஒப்பிட்டால் moderate rates .150 ரூவாஇயுடன் OPD போய்
தேவை ஏற்படின் விசேட வைத்திய நிபுணரின் சேவையும் கிடைக்கும் .மற்ற
ஆசுவத்திரியளிலை சுளையாய் 1500 ரூவாய்க்கு மேலை பிடுங்கி போடுவினம்
கதை உப்பிடி போகேக்குல்லை .உந்த கனடா அமேரிக்கா காரரின்றை கண்டறியாத
சட்ட திட்டங்கள் .விண்ணாதி விண்ணன் எண்டாலும் அவையிட்டை படிச்சு
சோதினை கிறுக்க வேணுமாம் .ஆங்கு அடுப்பு ஊதும் அந்த புல்லாங்குழல் தனக்கு
தோதான நாடொன்று விரைவில் போய் மதுர கானங்கள் இசைக்க போகுது பாருங்கோவன் .இருந்தும் நான் இங்கு சிலருடன் அவரை பற்றிய கதை வரும் போது இவ்வாறு கூறுவதுண்டு **உந்த மனிசன் ஒரு கவுன்மேந்து ஆசுவத்திரியலை
வேலை செய்து கொண்டு இஞ்சாலை பண்டத்தெருப்பு .சித்தன்கேணி சங்கானை
பக்கத்திலை சின்னனாய் ஒரு டிசுப்பென்சரி துறந்தால் சும்மா ராசா மாதிரி சீவிக்கலாம் அல்லே எண்டு ** ஹும்...அதுக்கு நாங்கள் என்ன செய்ய ? எல்லாம்
அவரவர் நேரம் .நீண்டு போச்சுது எண்டு பேசி போடாதேங்கோ .இஞ்சை கூப்பிடுகிரான்கள் .ஏதோ கழண்டு கொட்டுண்டு போச்சுதாம் .

manoharan

31-08-2013 17:44

நீங்கள் இன்றைய வாழ்வை காட்டி கதைக்கிறீர்கள் .அதுவும் தேவையே .நான் அன்றைய வாழ்வை காட்டுகிறேன் .அதுகும் காலத்தின் கட்டாய தேவ்வையே
அதை எவர் இங்கு செய்கிறார் என் வயதில் .அந்த ரீதியில் உந்த மனோகரன் எண்டவர் எங்கள் கடந்த கால நினைவுகளை மீட்கிறார் .எனவே கொண்டு வாருங்கோ
அவருக்கு ஊரில் இருந்து கொண்டு வந்த அந்த மணி சோடினைகள் நிறைந்த பொன்னாடையை போர்த்துவோம் ***இஞ்சாருங்கோ எனக்கு ஒரு குளிரும் இல்லை
கூதலும் இல்லை ** எனக்கு ஒண்டும் போத்த வேண்டாம் .மனிசி அறிஞ்சால் அடிதான்
விழும் .ஏதேனும் தின்ன கிடந்தால் தாருங்கோ .எனக்கு சீனி சலரோக வருத்தம்
குரக்கன் புட்டு மாதிரி ஐட்டம் ஏதும் கிடக்குதே .கொதம்பை அயிட்டம் திண்டால்
என்ரை மனிசியிட்டை அடிதான் வேண்ட வேணும் .சலரோகம் உள்ள நீ உனக்கு
குரக்கன் புட்டு அவிச்சு வைக்க நீர் அங்கினை கோதம்ப ரொட்டியே விழுங்கி
போட்டு வந்து விட்டீர் எண்டு பேசுவாள் என்ரை மனிசி காரி .விடுங்கோ என்னை
அவள் அவிச்ச புட்டை தின்ன


manoharan

31-08-2013 16:22

லொள்ளுவின் கேள்வி நியாயமானதே .அவரின் சார்பில் அதற்கான விளக்கங்களை
நான் தருகிறேன் கொஞ்சம் கேளீர் . இந்த நாட்டில் அரிவரி வகுப்பில் தொடங்கி பல்கலை கழகம் வரை இலவச கல்வி .அதை சிலர் நினைப்பது அது கவுன்மேந்து
சிலவு எண்டு .அந்த சிலவு எங்கடை காசு என்பது இன்னும் பலர் அறியாமல் இருபதுதான் விந்தையிலும் விந்தை .அவர்கள் அறிவூட்டபடாமையே அதன் தார்ப்பரியம் .வசுகளின் சீற்றுகளின் காதலர்கள் பெயர் எழுதுவது .அதை கிழிப்பது
இன்னும் பல .அவர்கள் அறிவூட்ட படவில்லை .இது உனது சொத்து என்று .இங்கு
கல்வி கூட நாம் அன்றாடம் குடிக்கும் ஒரு கோப்பை தேநீரில் உள்ள தே இலை
சீனி இக்கு கூட நாம் வரி செலுத்துகிறோம் என்பதை அப்பாவி சனங்கள் அறிவதில்லை.பானாவெட்டி சங்கானை ஆசுவத்திரியிலும் எங்களுக்கு வைத்தியம்
மருந்து எண்கள் வரி பணத்தில் இருந்து தான் தர படுகிறது என்பதை எத்தனை
பேர் அறிவார் .எதோ அது கவுன்மேந்து குடுக்குதாம் என்று நினைக்கும் அப்பாவிகள்
அந்த மாதிரி ஒரு மாய பொய் தோற்றத்தை சனங்கள் இடையே விதைத்து வைக்க பட்டு உள்ளது .நான் இதில் எழுதுவது போலவே அன்றாட வாழ்வில் கூட அநியாங்களை என்னால் முடிந்தவரை எதிர்த்து நிற்பவன் .அதனால் பல பின்னடைவுகள் (சில வேளை வேலைக்கு கூட பிந்தி போய் boss மாரிடம் எச்சு
வாங்கியதும் உண்டு )
உங்கள் நாடுகளில் பட்டங்கள் பெறுவது மிக இலகு .படிக்க ஆசை ஆர்வம் இருந்தால் அத்தினை ஸ்டேர்லிங் காசை கட்டியாச்சுது படிசாச்சுது .அந்த யூனிவெர்சிட்டி இந்த யூனிவெர்சிட்டி இத்தினை டொலர் இத்தினை ஸ்டேர்லிங்
pounds எண்டு ஒரு காலம் அப்ப அது அந்த காலம் .இந்த மனோகரனும் லண்டனுக்கு
போக வெளிக்கிட்டவன் உங்கடை அகதி குடியேற்றத்துக்கு முதல் .அதனாலை
தான் உந்த வெளி நாட்டு விபரம் எல்லாம் என் கை விரல் நுனினியில்
அப்ப லண்டன் .படிக்க போனவை .நானும் றை பண்ணினனான் .கனடாவை கற்பனையும் பண்ண ஏலாத காலம் அப்ப .இப்ப ஆரோ ஆற்றையோ பிள்ளைகளின்
இழப்பை use பண்ணி நல்லாம்மாவும் செல்லம்மாவும் அங்கினை கனடாவிலையாம்
அதுக்குத்தான் நான் அடிக்கடி சொல்லும் வசனம் உங்களை உங்கினை கொண்டு போய் சேர்த்த அந்த இறந்த ஆத்மாக்களுக்கு ஆக குறைஞ்சது ஒரு அரை நிமிடமாவது அஞ்சலை செலுத்துங்கோ எண்டு


manoharan

31-08-2013 14:37

லொள்ளு கவனமடா உங்கினை பெண்டுகள் வந்து விடுவளவை கொக்க சத்தகம்
காம்பு சத்தகத்தோடை உன்றை காது /மூக்கு அறுப்பன் எண்டு கொண்டு .அதுகும்
இப்ப வலு கயிட்டம் .நீ செர்மநியிலை அல்லே .முந்தி தான் பிள்ளை பெத்து பாக்க
போக வேணும் என்ரை மூத்தவளுக்கு எண்டதும் அவங்கள் எம்பேசி கண்ணை மூடி
கொண்டு விசா கிறுக்கி குடுத்தவங்கள் .இப்ப எங்கடை தாலியக்கட்டுவார் செய்த
திருகு தாளங்கள் ஆலை அவங்கள் இப்ப உறுதி (வீடு வளவு ) கேக்கிறாங்கள் .அந்த
முறையிலை நீ பயப்பிடாதை .


லொள்ளுபாண்டி

30-08-2013 01:24

நீர் மட்டும் ,,,,,,,,,,,,,,உள்நாட்டில் படிச்சு போட்டு வெளிநாட்டில் என்னவேலை உமக்கு ,,,,,,,,,,,,சண்டைக்கு வந்துவிடதேங்கோ ஊர் பற்று லதான் கேக்கிறன்


manoharan

24-08-2013 17:41

சிரிப்பு நேரம் நல்லாஇத்தன் இருக்குது கண்ணா .இருந்தும் நீங்கள் சிரிக்க வைப்பது
அங்கினை தமிழ் நாட்டு பக்கம் போய் அவர்களின் அமெரிக்க இங்கிலீசு கலந்த
அரை குறை தமிழிலை அல்லே வழங்குகிறீர்கள் .நான் வழங்குவதெல்லாம் நான்
வளர்ந்த அந்த கலட்டி தமிழ் .**வாடி இஞ்சை உளுந்தை ஆட்டடி நாளைக்கு தோசை
சுட்டு குடுக்கவேணும் என்ரை பொடி மனோகரன் கொழும்புக்கு போறானாம் எதோ
பெரிய சோதினை எழுத .அவன் பாசு பண்ணுவன் .எடுபடுவன்.எடியே சரோசா
நீ அந்த கற்பூரத்தை தம்பையா கடையிலை வேண்டி கொளுத்தடி அங்கினை அம்மன்
கோயில் கேணிக்கு முன்னாலை இருக்கிற அந்த வைரவ கோயிலுக்கு .அம்மாளுக்கும் கொளுத்தினோம் .அவ ஒண்டும் கவனிக்கிற பாடாய் காணேல்லை
கற்பூரம் கொளுத்தேக்குல்லை கவனம் அடி .அங்காலை ஒரு கோழி ஒண்டு வேலிக்காலை எட்டி பாத்து உன்னோடை சேட்டை விட பாக்கும் .நீ சொல்லு நான்
ஆற்றை மேள் தெரியுமே ? எங்கடை அப்பாவிட்டை சொன்னான் எண்டால் நீர்
சரி .எடியே உன்றை கொப்பா மனோகரனே .என்ரை அம்மா அறிஞ்சால் அடிதான் விழும் .அப்ப ஆளை விடடி நான் ஓடி தப்புகிறான் ஒருத்தருக்கும் பறைஞ்சு கிறைஞ்சு போடாதையடி .கொப்பன் அறிஞ்சால் நான் குளோஸ் அடி .சொல்லி கில்லி போடாதை அவர் அறிஞ்சால் கொண்டு போடுவார் .சொறி அடி
வந்து விட்டார் என்ரை மேலோடை சேட்டை விட


தீபன்

24-08-2013 21:11

மேலே சத்தகங்கள் பற்றிய அருமையான அதேநேரம் அபாரமான நகைச்சுவை ததும்பும் ஆக்கத்தை பார்த்தபிறகு இந்த நகைச்சுவையைப் பார்க்க சூரியனுக்கருகில் நிற்கும் மின்மினிப் பூச்சி போன்று உள்ளது.


சிரித்திரன்

23-08-2013 15:45

கால ஓட்டத்தில் மறைந்துகொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தமிழரின் முதிசங்களில் ஒன்றான இந்த சத்தகத்தின் வித்தகத்தை உண்மையிலேயே இந்தளவு விளக்கமாக எந்த புத்தகத்திலும் காணமுடியாது. அதை நடைமுறை செயல்பாட்டு விளக்கங்களுடன் நகைச்சுவை கலந்து வேறு யாரால் சொல்லமுடியும்? அதிலும் கடகம் பெட்டி இழைப்பதற்கு ஒலைவாருவதற்கு இந்த காம்புசத்தகம் எப்படி பயன்படுகிறது என்று இப்படி “ ஓலை சார்வை தேவையான width இல் கிழித்து எடுப்பதற்காக மடிக்கபட்ட மட்டையினால் ஆன ஒரு guide இல் பல்வேறு அளவில் ( பெட்டி + பாய் --5/6 mm கடகம் --7/8 mm சூடு மிருக்கும் பாய் 8/10 mm ) ஒரு வரிசையில் V ஷேப் இல் groove க்கள் வெட்ட பட்டிருக்கும் தேவையான இடத்தில் காம்பு சத்தகத்தை பிடிச்சு அடி பக்கத்தில் ஓலையை கொழுவி இழுப்பலவை ஒரு இழுவை .தேவையான சைஸ் இல் ஓலை ரெடி.” விழகக்கிய விதம் பக்கத்தில் நின்று பார்த்த அனுபவத்தை தந்தது. இப்படி பல அடுப்படியில் பாவிக்கும் பொருட்கள், வீட்டில் வயலில் என்று எங்கள் அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த இப்போது அழிந்து கொண்டிருக்கும் பொருட்ட்களை பற்றிய கட்டுரைகள் நிஜமான ஆவணங்கள்.

இன்னுமொன்று இந்த சத்தகத்தை பற்றி, எங்கள் பண்பாட்டு நிகழ்வான சாமத்திய வீட்டில் சத்தகம் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கும் எப்படிஎன்றால் பட்டு சேலை கட்டி வெள்ளை நெற் துணியினால் மறைத்தும் மறக்காத முகத்துடன் பெண்ணின் கையில் ஒரு நெல் நிரப்பிய கொத்தின் நடுவில் இந்த காம்பு சத்தகத்தை குத்தி கொடுத்து விடுவார்கள். எதையும் அளந்து செய்ய வேண்டுமென்பதற்கு கொத்தும், அன்னத்தை சமைத்து வழங்குவதால் நெல்லும் காய் கறிகள் வெட்டுவதற்கும் தேவை ஏற்படின் இந்த கட்டுரையின் கடைசியில் அவர் விளக்கிய பாதுகாப்புக்கும் அடையாளமாக இந்த பொருட்களை பாவித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இதை வாசித்தபொழுது மீண்டும் ஒரு கிராம வாழ்க்கை வாழ்ந்து வந்த உணர்வு ஏற்ப்பட்டது. நன்றியும் மேலும் இதைபோன்ற கட்டுரைகள் புனைய வாழ்த்துக்களும்!!


manokaran

23-08-2013 16:31

அதில்லை கதை .நான் முதலில் நினைத்தன் என்ரை மூத்த பொடி சிரித்திரன் தான்
சத்தகங்களை பற்றி இஞ்சினை அடிச்சு போட்டு சத்தம் இல்லாமல் இருக்கிறான்
போலை எண்டு இப்ப நோடிக்கை அல்லே நோடிக்குது என்ரை இரண்டாவது மேன்
சுத்ர்சு குஞ்சன் தான் உதய் செய்து இருக்கிறான் எண்டு .என்ரை கடை குட்டி அவன்
விசுவாசமும் சலேன்சு பண்ணுகிறான் வாருங்கோ பாப்போம் முட்டி மோதி
பாருங்கோ எண்டு .இது எத்தனை அற்புதம்
எடே சிரித்திரா அன்று நெல்லு அளக்க பாவித்த அந்த மரத்தினால் ஆன கொத்து
அதில் நெல்லை நிறைத்து காம்பு சத்தகத்தை கொழுவி கொடு வருவினம் சாமத்திய
வீட்டு சம்பிரதாயம் காட்ட எல்லாம் முழு பம்மாத்துகள் ,பிரான்சின் தலை நகர்
எங்கும் கோயில் கட்டி போர் தேங்காய் அடிச்சு பிரதட்டை பண்ணி பொலிசில்
பெர்மிசன் எடுத்து கலை கலாச்சாரம் வளர்க்கும் எங்கடை சனங்கள் '
சிலர் சொல்லுகிறவை எங்கடை கலாச்சாரத்தை கண்டு வெள்ளைகள் எல்லாம்
புகழ்ந்து பேசுகினமாம் .அவை அங்காலை போய் வேறு ஒரு உருப்பாலை சிரிப்பது
ஏன் உங்களுக்கு இன்னும் புரியவில்லை .
எடை ஒரு பெண் பிள்ளை வயதுக்கு வருவது ஒரு இயற்கை நிகழ்வு .அதுக்கு
நெல்லளக்கும் கொத்திலை நெல்லு நிரப்பி பலகாரம் வடை சுட்டு
இப்ப கனடாவிலை நாலு மாமன் மார் பல்லக்கில் சுமந்து வந்து ஆருக்கு நீங்கள்
பம்மாத்து பன்னுகிரியல் .இயலாத நாலு பேருக்கு உதவுங்கோ .அது நீங்கள் போற
வழிக்கு புண்ணியம் .இதுக்கு மேலை எனக்கு சொல்ல தெரியாது அப்பா
அங்கினை கனடா RICHMOND ஹில் முருகன் கோயில் இலை ஒரு கறுப்பனும்
வந்து அரிச்சனை செய்தவராம் .அதை நினைச்சு எங்கடை சனத்துக்கு வலு கொண்டிபுளுகம் .உந்த போக்கில் போனால் வலு கெதியில் டாய் விழும் .கவனம்
கண்டியலே .உது உங்களுக்கு அடைக்கலம் தந்த நாடுகள் .அங்கினை அமைதி அடக்கம் பேணவேண்டும் .கொஞ்சம் யோசியுங்கோ .தலை கீழாய் நடக்க படாது
பிறகு தலை குனிஞ்சு பனிப்புல பக்கம் தான் நீங்கள் மீண்டும் வர வேண்டி வரும்
அப்ப நான் இஞ்சினை இல்லை .சம்பில் சுடலை போய் சுடலை சாமி உடன் சங்கமம்
பிறகு என்னை பேச படாது .எங்கையடா எங்கடை மனோகரன் அண்ணை அவர் சொன்னவர்தான் .நாங்கள் எங்கை கேட்டோம் .அவர் சொன்னது நடந்து போச்சுது
எங்கையடா உந்த மனிசன் எண்டு தேடுவினம்
83 அடி பிடிக்கு முதல் நான் இதையே சொன்னேன் ஏன் மைத்துனனுக்கு .அது நடந்து முடிந்த கதை .இப்ப நான் குரக்கன் றொட்டி அடைய போறன்.பின்னை போவிட்டு வரட்டே


manoharan

23-08-2013 07:53

உதென்ன உங்கடை பிளான் .கொளுவு சத்தகம் மாதரி என்னை எங்கையாலும்
கொளுவ வைச்சு போட்டு கூத்து பாக்கிறதே உங்கடை பிளான் ..இது ஜோக்
உங்கடை பாஷையிலை LOL
இருந்தும் நான் முனைவதேல்லாம் அழிந்து ஒளிந்து மறந்து மறந்தவைகளின்
மீட்புகளே .அதற்கு உந்து உறுதுணை வழங்கும் உங்கள் அனைவருக்கும் என் வந்தனைகள் கூடிய நன்றிகள்
பிறகு என்னை பேச படாது பேருகள் சொல்லேல்லை எண்டு கொண்டு
பேருகள் சொல்ல போனால் அது பெரும் பிரச்சனை போகும் .எல்லாரும் நான் பெறா
பொடியல் .தப்பி தவறி ஒருத்தனை மறந்து போனால் பிறகு அவர் வருவார் அடி
பிடியிலை .அதனாலை எல்லாருக்கும் பொது நன்றிகள் .பின்னை வரட்டே பசிக்குது
அடையவேணும்


விசுவாசம்

23-08-2013 01:50

------> முடிந்தால் மோதிப் பார்க்கலாம் <-------

எத்தனை பேருக்கு இந்த சத்தகம் தெரியும்?

எங்கு பிறந்தது?

அதன் குலம் கோத்திரம் என்ன?

எப்படி எப்படியெல்லாம் பாவிக்கபட்டது?

எப்படி வளர்த்தது?

இப்போ எப்படி அழிந்தது?

அத்தனையும் யாழ்ப்பான தமிழனின் தொலையும் முத்துக்கள். எந்த புத்தகத்தில் தேடி பிடிக்கமுடியாத இந்த சத்தகம். எந்த இணையத்திலும் முக்கியத்துவம் குடுக்காத விடயம், இங்குமட்டும் தனித்துவமாக....

இப்படியான தகவல்களுடன்.....

------> முடிந்தால் மோதிப் பார்க்கலாம் <-------


முடிந்தால் மோதிப் பார்க்கலாம் <-------

எத்தனை பேருக்கு இந்த சத்தகம் தெரியும்?

எங்கு பிறந்தது?

அதன் குலம் கோத்திரம் என்ன?

எப்படி எப்படியெல்லாம் பாவிக்கபட்டது?

எப்படி வளர்த்தது?

இப்போ எப்படி அழிந்தது?

அத்தனையும் யாழ்ப்பான தமிழனின் தொலையும் முத்துக்கள். எந்த புத்தகத்தில் தேடி பிடிக்கமுடியாத இந்த சத்தகம். எந்த இணையத்திலும் முக்கியத்துவம் குடுக்காத விடயம், இங்குமட்டும் தனித்துவமாக....

இப்படியான தகவல்களுடன்.....

------> முடிந்தால் மோதிப் பார்க்கலாம் <-------


-->

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி