காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

உண்ணும்போது தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நன்று - பவுல்.


நம்மில் பலருக்கு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்துஅறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர,, மற்றப்படி தண்ணீர் அருந்தவே கூடாது.
ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

நம்மவர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்” .

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.
அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.
எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.

கட்டுரைப்பகிர்வு: பவுல் - மேற்கு ஐரோப்பா.


மொத்த வருகை: 841 இன்றைய வருகை: 2

கருத்துரைகள் (12)


manoharan

26-09-2013 11:07

அறுக்கிறான்கள் ஐயா அறுக்கிறான்கள் .அறுக்குகிறத்துக்கும் ஒரு அளவு கணக்கு
வேணுமள்ளே? **ஆத்திலை போட்டாலும் அளந்து போடு ** எண்டு சும்மாவே
சொன்னவை .உந்த பாட்டியல் எல்லாம் எங்கையோ உங்கினை blade கத்திரிக்கோல்
செய்யிற கொம்பநியளிலை சீவுகினம் போல .அதுதான் தாங்கேலாத அறுவை கள்
எடே பொடியளே அந்த காலத்திலை என்ரை அப்பு shave எடுப்பார் எப்பிடி தெரியுமே ?
ஊரில் பலர் தாடி வாலாக்கள் .என்ரை அப்பு கொழுந்து கட்டி.... .அங்கினை கள்ளியங்காட்டு பக்கம் போய் கொழுந்து கட்டி போட்டு வரேக்குல்லை யாழ்ப்பாணம்
டவுன் பக்கத்திலை 10 சதம் குடுத்து 7 "O " Clock (made in இங்கிலாந்த் ) பிளேற்று ஒண்டை
வேண்டி கொண்டு வந்து உடைஞ்ச கண்ணாடி துண்டை ஒரு கையில் பிடிச்சு
பிளேற்றாலை மாத்திரம் வறுகல் (அது ஷேவிங் இல்லை ) நடக்கும் .நான் பக்கத்திலை போய் புதினம் பார் படும் .உதென்ன அப்பு செய்யிறார் எண்டு .
அது புது blade ஆக இருந்த போதும் அப்புவின் கிழமை கணக்காக shave பண்ணு
படாத(unshaved ) அந்த வளர்ந்த மயிர்களை அவர் வழிக்கும் போது எதோ வடலி கருக்கு மட்டையாலை வழிக்குமா போல சற பற எண்டு சத்தம் கேக்கும் .அது அந்தளவு
கசுட்ட பட்டு அப்பு வழிச்சதின் மர்மம் பிறகள்ளே எனக்கு விளங்கினது .
அப்பு ஆச்சியோடை full true லவ்வு கண்டியலே
இப்ப அப்பிடி இல்லை
எதோ turbo எண்ணுகினம் பிறகு tripple edge ரேசர் gillet எண்டெல்லாம் மார்க்கெட் இலை கிடக்குது .அதுகளை வேண்டி வளியுன்கோவன்.பிறகேன்
வாறியள் பழைய blade உகளை கொண்டு எங்களை அறுக்க ?நாங்கள் நல்லாய்
இருப்பது உங்களுக்கு பிடிக்கேல்லையே .ஐயோ தலை தலை எண்டு அடிச்சு
குழற வேணும் போல கிடக்குது .
பக்கத்து வீட்டு செல்லம்மா சொன்னா அவவின்றை மேளுக்கு போய் பாரடி பிள்ளை
அது பாவம் தலை தலை எண்டு அடிச்சு குளறுகுது .பாப்பார் மேய்ப்பார் கவனிப்பார்
ஒருத்தரும் இல்லாத கிழவன் அல்லே .அங்கினை கிடக்கிற சோத்திலை கொஞ்சம்
கிள்ளி போட்டு கொப்பருக்கு ஒளிச்சு வைச்ச அந்த கருவாட்டு பொரியலிலை
ஒரு துண்டையும் போட்டு கொண்டு போய் குடடி. பாவம் அல்லே அந்த மனிசன்
அவருக்கு எண்டு ஆர் இருக்கினம் .கட்டின பெண்டிலும் விட்டு போட்டு ஓடி விட்டாள் ஆரோடையோ .பெத்த பிள்ளையளும் திரும்பியும் பாக்கிறேல்லை
அது பாவம் தானே தனிய ஒரு அரை சுண்டு கால் சுண்டு அரிசியை போட்டு
அவிச்சு கருவாடோ கத்தரி காயையோ போட்டு ஒரு கறி வைச்சு தானுண்டு தன்
பாடு உண்டு எண்டு கொஞ்சம் துலங்கனை போட்டு **வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் ** எண்ட பாட்டை படிச்சு போட்டு படுக்கிற ஒரு பாவம் அல்லே
அவராலை எங்களுக்கு ஒரு கரைச்சலும் இல்லை அல்லே .நீ ஒண்டுக்கும் யோசியாமல் உந்த சோத்து கோப்பையை கொண்டு போய் குடடி பிள்ளை அந்த
மனிசனிட்டை .நானைக்கு அயல் அட்டை சனம் கதை உண்டாக்குவினம்
நீ அந்த கிழவநோடை கூட்டு எண்டு .நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை யோசியாதை
கொண்டு போய் குடு இந்த சோத்தை அந்த பாவம் கிழவனுக்கு
உனக்கு தெரியுமல்லெ உன்றை கொம்மவின்றை குணம் .உவளவை வருவினம்
நாளைக்கு கதை பறைய .நான் என்ரை வாய் துறந்தால் தெரியுமல்லெ என்ன நடக்கும் எண்டு
பின்னை அந்த பிள்ளை சாப்பாட்டு கோப்பையை தூக்கி கொண்டு அங்கை போக
அந்த கிழவன் இப்பிடி சொன்னாராம்
பிள்ளை சாப்பாடு கொண்டு வந்ததுக்கு ஒரு கோடி நன்றிகள் .இருந்தும் பார் பிள்ளை
இந்த எங்க ஊர் வலைபின்னளிலை (இன்டெர் நெட் வெப் தளத்திலை ) உவங்கள்
எப்பிடி அடி பிடி படுகிரான்கள் எண்டு .எடை **ஒரு பொடி பெட்டையளின்றை
காதலை பற்றி கதைக்கிறாங்களே **கலியாணத்தை கட்டிக்கிறோம் ஒண்டில் ஓடி போய்
இல்லாட்டில் ஓடி போய் பிறகு registrar office போய் எழுதுவோம் ** ஊத்தி கிட்டே அடிச்சுக்கலாம் அடிச்சு கிட்டே ஊத்திக்கலாம் * அதுகளை விட்டு போட்டு உவை
உங்கினை தேவை இல்லாத எதோ மாட்டருகள் அல்லே கதைக்கினம் .அதுதான்
பிள்ளை எனக்கு சரியான கவலை .சரி சரி என்ன பிள்ளை கொண்டு வந்தனி
உனக்கும் உன்றை கொம்மாவுக்கும் சீவிய காலமும் நன்மைகள் நடக்கும் பிள்ளை
நான் கட்டின பெண்டிலும் எனக்கு சமைச்சு போட்டவள்தான் .நான் பெத்த பிள்ளையளும் எனக்கு பாச மழை பொளிந்தவைதான்.இருந்தும் இன்று என்மனைவி வேறு ஒருவனுடன் வெளிநாடு ஒன்றில் .பிள்ளைகளும் எனை மறந்து
கன காலம் .எதோ உடலில் உயிர் இருக்கும் வரை வாழ்வோம்manoharan

25-09-2013 17:22

உதேனப்பா சும்மா தேவை இல்லாமல் அடி பிடி படுகிறியள் .ஒரு பாட்டி சொல்லுகுது
ரண்டு ஐதஅரசும் ஒரு ஓட்சிசும் சேருகுதாம் .சேர்ந்து தண்ணி -நீர் -உண்டாகுதாம்
பிறகு மற்ற பாட்டி சொல்லுகுது உதெண்டும் எங்களுக்கு தெரியாதப்பா எண்ணுகினம்
அப்ப நடுவிலை நிக்கிற எங்களை என்ன செய்ய சொல்லுகிரியல் .நாங்கள் என்ன
அரளி கொட்டை அரைச்சு விழுங்கவே எங்களை சொல்லுகிறியல்.இப்ப இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல் நான் நூல் இழையிலை தப்பி வந்த கதையை கேளுங்கோவன் .
நான் கொம்பிலீட்டறிலை சொறிஞ்சு கொண்டிருக்க என்ரை அவ வந்தா சொறிஞ்சது
காணும் நீத்து பெட்டி புட்டு அவிச்சு கருவாடும் முருங்கைக்காய் குழம்பும் வைக்க
போறன் .காய் முளகாய் முடிஞ்சு போச்சுது .கடையல் பூட்டமுதல் ஓடிப்போய்
வேண்டியாருங்கோ எண்டு சொல்ல .நானும் கொம்பிலீட்டரை மூடிப்போட்டு
இண்டைக்கு வேண்டின புது தொப்பியையும் SUNGLASS ஐயும் அடிச்சு கொண்டு
எடுத்தன் மொபைல் ஐ காதிலை கொளுவினன் EAR போன் ஐ முறுக்கினன்
ஒரு F M ஐ .பாட்டு போகுது இப்பிடி *******ஊதா கலரு ரிப்பன் உன் அப்பன் பேரு என்ன .நான் சலாம் அடிக்க வேணும் உன்றை கொப்பனுக்கு ****எண்ட பாட்டு போக
நான் என்னை அறியாமலே என்ரை வாய் முணுமுனுத்துது**
ஊதா கலரு றிப்பான்** எண்டு .என்ரை கறும நேரம் எனக்கு முன்னாலை ஊதா
கலரிலை கொண்டை கட்டின நல்ல வடிவான படிச்ச இளம் குமரி ஒருத்தி .கொம்பனிதெரு எண்டால் கொம்பனியல் நிறைஞ்ச இடம் .எங்கையோ ஒரு கொம்பநியிலை .மார்க்கெட்டிங் excicutive ஒ இல்லை மநேச்சரோ தெரியாது .எல்லாருக்கும் எல்லா கொம்பநியிளையும் காருகள் குடாகினமல்லெ.அவள் ரயிலை பிடிக்க போறாள் போல .என்ரை பாட்டை கேட்டு போட்டு திரும்பினாள்
பாவி ஒரு திரும்பு .*ஐ சே don 't play the fool with me ** எண்டதும் நான் பயந்து நடுங்கி
போனின்றை பீக்கரை on பண்ணி தொப்பியை கழட்டி சுண் கிளாசையும் உருவி (இல்லாட்டால் அவள் நினைப்பால் அல்லே நான் ஒரு இளவட்டு எண்டு ) ஐயோ
என்ரை குஞ்சுவே நான் உன்றை கொப்பர்மாதிரி பிள்ளை .போனிலை போன அந்த
ஊதா கலரு ரிப்பன் எண்ட பாட்டை முனுமுனுத்தனான் பிள்ளை .உன்றை கொம்மா மாதிரி வயது பிள்ளை என்ரை மனிசி .அவ புட்டவிச்சு கருவாட்டு குழம்புக்கு போட காய் முளகாய் இக்கு சொல்லி போட்டு காத்திருக்கிறா நான்
போகும் வரை சொல்லி கில்லி போடாதை அங்கினை சந்தியிலை இருக்குற பொலிசிட்டை .பிறகு நான் என்ரை பொடி பெட்டையள் பெண்டில் மாரிட்டை
தப்ப ஏலாது .
***ஒஹ் ஐ ஸீ ஐ ஆம் சொறிஓல்ட் மான் யு மே ** எண்டா
இது வெறுமனே ஜோக் நகைச்சுவை இல்லை இன்று இங்கு நடப்பவை .இன்னும் வரும் இது போல .ஐதரசனும் ஓட்சிணனும் பிறகு வேதாந்தமும் கிறிஸ்த்துவின்
ஆராதனையும் அம்மன் கோயில் தேருமாம் உவை .நாங்கள் இஞ்சை எத்தினை
ஷெல் அடியல் பொம்மர் அடியல் அது இதெண்டு எல்லாம் வேண்டி (என்குடும்பம்
மூன்றுமாத கால இடைவெளியில் 11 முகாம்கள் விசவ்த்தனை முருகன் கோயில்
யாழ்ப்பான டவுனும் அதில் ஒன்று .அது ஒரு உத்தியோக பற்றற்ற அகதி முகாம்
என்மனம் புகலிடம் தேடி அந்நிய நாடு போ என்று சொல்லவில்லை .பிறந்த நாட்டில்
வாழவேண்டும் என்று ஒரு பிடிப்பு .எவ்வளவோ துன்ப துயரங்களின் ஊடே இங்கு
கொழும்பு வந்து இன்னும் மிக எளிமையான சிம்பிள் வாழ்க்கையையே நான்
வாழ்கிறேன் .நான் பண்ணும் தொழிலுக்கு பல லட்சம் பணம் சம்பாரிச்சு
இன்று பகட்டு (பம்மாத்து ) காட்டி எப்படியோ நான் வாழலாம் .என்னை அறிந்தவர்கள் அதை அறிவார் .தப்பாக எண்ணவேண்டாம் இவர் என்ன தன்னை
பற்றி தம்பட்டம் அடிக்கிறாரோ எண்டு .அதில்லை கதை என் இத்தனை வயதிலும்
நான் இதுவரை என் வாக்கை கூட அளித்ததில்லை .நான் தேர்தலில் நிக்க போகும்
அரசியல் வாதியும் இல்லை .வெறுமனே சமூகத்தின் மேன்மை கருதும் ஒரு சமூக வாதி மட்டுமே
பவுல்

25-09-2013 13:53

உங்கட கருத்துக்களெல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனா எனக்கு உந்த ஐதரசன், ஒட்சிசன் இதுகளைப்பற்றி ஒன்றும் விளங்காது.

இப்ப நாம் இருக்கும் உலகத்தை விட வேற உலகம் இதற்கு முதலிருந்து அழிந்ததாக கேள்விப்பட்டேன். {அதுகளை நான் இப்ப சிந்திப்பதில்லை. எனக்கென்ன இதாலை பிரயோசனம்}

கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைக்க முதல் காலத்தில பூமி உருவற்ற மகா ஆழமாய் நீராலும் இருளடைந்து இருந்ததாம், நீரிலும் காரிருளிலும் இறைவனசைவாடினார்.

இறைவன் நீர் திரளுக்கு இடையிலே தான் வானத்தை உண்டாக்கினார்.விண்ணுலகத்திற்கு கீழ நீருக்குமேல தரையை உண்டாக்கி, தரைநிலத்துக்கு கீழயிருக்கிற தண்ணிக்கு கீழ பாதாளலோகம் உண்டாக்கினார். விண்ணுலகத்திலுள்ள நீராவிக்கு மேல பரமலோகத்தை உண்டாக்கினார்,.

தரையில் உள்ள நீரை பிரித்து சமுத்திரக்கடல்களாக எல்லை போட்டார். நீரற்ற இடத்தை தரைநிலமாக்கினார்..ஒளியை உண்டாக்கினார் பகலை ஆழ சூரியனும் இரவை ஆழ சந்திரனுமாக எல்லாமே எம்பெருமான் பரம்ஜோதியால உண்டாக்கப்பட்டன..

இப்ப இந்த உலகமும் அழிய காலம் நெருங்கி விட்டதாம். அடுத்தது சொற்க பூமி உண்டாக்கி அதிலே இறைவனோட தேவாவியிலே இணைந்த ஆன்மாக்கள் புது வாழ்வு பெறுவார்கள். இறைவனுக்கு சாப்பாடு கொடுத்து ஒளி கொடுப்பவர்கள் சொற்க பூமியில இருக்க மாட்டினம். ஏனென்றா பரஞ்ஜோதிக்கே ஒளியேற்றிய ~````வர்கள்.


பவுல்

24-09-2013 10:41

நாங்க இண்டைக்கோ நாளைக்கோ நம்மை விட்டுப்பிரியப்போகிற சரீரத்தை பராமரிக்க எடுக்கிற ஆர்வமானது , நம் உயிரை விட்டுப்பிரியாத ஆன்மாவை பராமரிக்க முயற்ச்சி செய்யாமல் மரணத்தின் பின்னால செய்கிற பணச்சடங்கால எந்த மோட்சக்கதவுமே திறபடாது.

நம் மாம்ச சரீரத்திற்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ, அதே போல நம் ஆன்மாவுக்கும் தண்ணீர் தேவை, கிறிஸ்து அழைக்கிறார் எங்களை ஆத்மாவில தாகமாக இருக்கிறவர்களே கேளுங்கள் உங்களுக்கு ஜீவதண்ணீர்(அழிவில்லா வாழ்வு தரும் தண்ணீர்) தருவேன். இதை பெற்றவர்களின் ஆன்மா உயிர்ப்பிக்கப்பட்டிருக்கும் .

ஜீவதண்ணீரால் ஆன்மா உயிர்ப்பிக்கப்பட்டால் ஆன்மா *ஜீவ ஒளியை* பெறும். இறைவனின் உண்மை இயல்பினை அறிந்து, நம் உள்ளத்தாலே {அருவுருவமற்ற, ஆவியான இறைவனை } நம் ஆன்மாவானது தேவ ஆவியோட சேர ஆராதனை செய்யலாம்..

நீரல்லா தெய்வமில்லை எனது நெஞ்சே நீர் வாழுமில்லம் என்று இறைவன் மேல காதலாகி கசிந்துருகி ஆனந்தகண்ணீரால நாம் ஆண்டவரோட இணைய ஆசையாகி இருப்பவர்களே கேளுங்கள் வாழ்வு தரும் ஜீவ தண்ணீரை கிறிஸ்துவிடம். {யோவான் 4ம் அதிகாரத்தில வாசிங்கோ,} சாகா வாழ்வு ஜீவதண்ணீரால் உண்டாகிறது


manoharan

24-09-2013 12:22

ஐயோ கொப்பி அடிச்சுப்போட்டார் கொப்பி அடிச்சுப்போட்டார் பவுல் அண்ணை.**காதலாகி பிறகு
கசிந்துருகி ஆனந்த கண்ணீர் மல்கி ** .எண்டு சொல்லுகிறார் .உது எங்கடை மாணிக்க
வாசகரோ திருநாவுக்கரசரோ (ஆரெண்டு நினைவில்லை .சமய பாடம் படிச்சு இப்ப
எத்தினை வரியங்கள் ? மறந்து போனன்) அன்று பாடியருளிய தேவாரத்தை கொப்பி
அடிச்சுப்போட்டார் உவர் .மற்ற இன்னுமொரு டூப்பு விடுகிறார் மரணத்தின் பின்னாலை செய்கிற பணச்சடன்காம் .ஆரப்பா செயினம் செத்த வீட்டுக்கு பிறகு
பணச்சடங்கு ?அது மூண்டாம் நாள் முதலாம் எட்டு முழுக்க non veg ஐட்டங்கள்
எங்களுக்கும் பெரிய அரிகண்டம் .பொஸ் மார் பெண்டுகள் ஆணை இடுவினம்
எடே மனோஹரா பண்டதேருப்புக்கு போய் சீனவெடி கடையில பலகாரங்கள்
வேண்டியா எண்டு .பிறகு போகவல்லே வேணும் போகாட்டால் தப்பெலாதல்லே அவளவையிட்டை .சும்மா போறேல்லை .அதிலையும் கொஞ்சம் கொமிசன் அடிக்கிறது தான்
பிறகு ஐஞ்சாம் நாள் இரண்டாம் எட்டு .total veg ஐட்டங்கள் .ஒரு மாதம் கழிய
அந்தியேட்டி ஐயரை கூப்பிட்டு .ஒரு வரியம் முடிய ஆட்டத்திவசம் .பின் ஒவ்வொரு வரியமும் ஆண்டு திவசம் .ஆருக்கு விடுகிறார் உவர் பவுல் பணசடங்கு
செய்யிறோம் நாங்கள் எண்டு .அது அங்காலை வெஞ்சிபுலொவும் குஞ்சங்கல்ட்டியும் மாறி மாறி போட்டிக்கு பீக்கர் கட்டி காசு சேர்க்க செய்யும் சடங்குதான் பண சடங்கு .இப்ப அவையும் செய்யிறேல்லை .ஏனென்டால் அவையிட்டை இப்ப நல்ல பண புழக்கம் கண்டியலே .
சிரித்திரன்

24-09-2013 13:52

தண்ணீர் மட்டுமல்ல பவுல் பஞ்ச பூதங்கள் அத்தனையும் அவசியம்.
பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுவது நீர், நிலம், நெருப்பு, காற்று , ஆகாயம்.

பஞ்ச பூதங்களால் ஆனதாக கூறப்படும் இந்த உலகம் முழுவதுமே பல பொருட்களால் ஆனது. பொருட்கள் பல சேர்மங்களாலும் சேர்மங்கள் எல்லாம் தனிமங்களாலும் ஆனது. இத்தகைய அடிப்படை தனிமங்கள் 106 என வகைப்படுத்தியும் வைத்திருக்கிறோம். இதில் நீர், நிலம், காற்று மூன்றுமே இந்த அடிப்படைத் தனிமங்கள் பல மூலக்கூறுகளாக சேர்ந்து உருவாகியது தான்.

நிலம் ஒரு திடப்பொருள், நீர் ஒரு திரவப்பொருள். காற்று ஒரு வாயுபொருள். நெருப்பு எனப்படுவது ஒரு வேதி மாற்ற விளைவு.

நெருப்பு என்பது வேறு வெப்பம் எனப்படுவது வேறு, சமையல் செய்யும்போது உருவாகும் நெருப்பு என்பது ஒரு எரிபொருளில் உள்ள ஹைட்ரோ கார்பன்களை குறிப்பிட்ட அளவு வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகள் சிதைந்து அதிலுள்ள கார்பன் அணுக்கள் காற்றில் உள்ள ஒக்ஸிஜன் அணுக்களுடன் சேர்ந்து கார்பன் டை ஒக்ஸைடாக மாறுகிறது . இந்த வேதி மாற்றத்தில் உபரி சக்தி வெப்ப சக்தியாக வெளியிடப்படுகிறது. இது அணுக்களை இடம் பெயர்ப்பதால் எஞ்சும் சக்தி . இது சாதரண நெருப்பு. மைக்ரோ வேவ் அவனில் மின்சார சக்தி மைக்ரோ வேவ் அலைகளாக மாற்றப்பட்டு அந்த அலைகள் உணவுப் பொருள்களில் உள்ள நீர் மூலக்கூறுகளை அசைப்பதால் உணடாகும் உராய்வு வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. இங்கே நெருப்பு உருவாகவில்லை. அணுகுண்டு வெடிக்கும் போதும் அணு உலைகளிலும் கதிரியக்க அணுக்களை பிளப்பதால் பெரும் சக்தி வெளியாகிறது. இங்கும் வெப்பம் இருக்கிறது. நெருப்பு இல்லை. சூரியன் எரியும் போது ஹைடரஜன் அணுக்கள் சேர்ந்து ஹீலியம் அணுவாக மாறுகிறது. இதனால் பெரும் வெப்பம் வெளியாகிறது. அதும் நெருப்பல்ல.

நிலம் என்ற திடப்பொருளை சூடாக்குந்தோறும் அதில் உள்ள ஒவ்வொரு தனிமங்களும் வெவ்வெறு வெப்ப நிலைகளில் உருகி திரவ நிலை அடையும். அதாவ்து நீராகும். அப்படி 0*C க்கு மேல் 100* C குள் ஹைட்ரஜன் மற்றும் ஒக்ஸிஜன் இணந்த மூலக்கூறுகள் நீராக இருக்கிறது. பூமியில் நிலவும் வெப்பம் 0*C க்கு கீழே இருக்குமானால் பூமி முழுவதும் ஒரே போல்திடமாகவேஇருக்கும்.

இனி இந்த திரவப்பொருளை உதாரனமாக நீரை சூடாக்கினால் அது வாயுவாக மாறிவிடும். சாதரண பூமி வெப்பத்தில் எந்த மூலக்கூறுகள் எல்லாம் வாயு நிலைக்கு தள்ளப்படுமோ அது தான் காற்று. காற்றை அதிக அளவு குளிர்வித்தால் அது திரவமாகி விடும். மேலும் குளிர்வித்தால் அது திடமாகிவிடும். ஒரே பொருள் அது வெப்பத்தை ஏற்று திட நிலையிலிருந்து திரவமாகும் மேலும் வெப்பமூட்ட வாயு வாகும் . வாயுவை மேலும் வெப்பமூட்டினால் அது ஒளி அலைகளாகவும் வெப்ப அலைகளாகவும் மாறி பிரபஞ்சம் முழுதும் பரவுகிறது. வெப்ப இழப்பிற்கேற்ப வாயு , திரவ நிலக்கு வந்து பின் திட நிலைக்கு வருகிறது.

இரு ஹைட்ரஜன் அணு ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் சேர்ந்து ஒரு நீர் மூலக்கூறு உருவாகிறது, இது பூமியின் சாதரண வெப்ப நிலையில் திரவநிலையில் இருக்கிறது- இது தான் -நீர்.

ஒரு பொருளில் உள்ள கார்பன் அணுக்கள் குறிப்பிட்ட வெப்பத்தில் காற்றில் உள்ள ஒக்ஸிஜன் அணுக்களோடு சேர்ந்து கட்சி மாறும் நிகழ்ச்சி தான் நெருப்பு.

பூமியில் நிலவும் சாதாரண வெப்பத்தில் திட நிலையிலே இருக்கும் மற்ற தனிமங்கள் எல்லாம் கலந்த அமைப்பு தான் நிலம்.

சாதாரண வெப்பத்தில் வாயு ரூபத்தில் உள்ள சில தனிமங்களும் சேர்மங்களும் சேர்ந்து -காற்று

சூரிய ஒளி காற்று மண்டலத்தை கடக்கும் போது நீல வண்ண அலைகள் மட்டும் அதிகம் ஊடுருவுவதால் காற்று மண்டலத்தில் தோன்றும் நீல வண்ணத்தை தான் ஆகாயம் என்று சொல்கிறொம்.

அடிப்படையில் இவை எல்லாம் ஒரே பொருளின் பல் வேறு நிலைகள்.

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனையும் இந்த பஞ்ச பூதங்களின் கலவையே. இதை தான் சித்தர்கள் “அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்” என்று கூறி வைத்துள்ளார்கள்.


சிரித்திரன்

24-09-2013 19:04

புத்தரின் கோட்பாட்டின்படி, ஓர் உடலை உருவாக்கும் தனிமங்கள் நான்கு மட்டுமே! ப்ரித்வீ, அப்பு, தேஜ் மற்றும் வாயு எனப்படும் நிலம், நீர், தீ, காற்று ஆகியன. இந்நான்கு மூலங்களும் சேர்ந்ததுதான் உடல். பஞ்ச பூதங்கள் எனப்படுவதற்குப் பதில் நான்கு பூதங்கள் என்கிறது பவுத்தம். இந்தக் கருத்தையே பழங்கால சார்வாகம் கூறியது. வானம் என்பது மூலம் (தனிமம்) அல்ல என்பது இதன் கருத்து. வானத்துக்கும் மனித உடலுக்கும் தொடர்பில்லை.
உடல் (இறந்து) இயற்கையடைந்தபின், இந்த நான்கு மூலங்களும் அழிந்து போகின்றன என்பதை புத்தர் ஏற்கவில்லை. அவை விண்ணில் மிதக்கும் அவற்றையொத்த மூலங்களின் தொகுதியோடு இணைந்துவிடுகின்றன என்றார் புத்தர். அப்படி இணையும்போது புதிய பிறப்பு இடம் பெறுகிறது என்கிறது பவுத்தம்.
ஆணின் உயிரணு பெண்ணின் சினையுடன் காற்றும் வெளிச்சமும் புக முடியாத கருவறைப் பகுதியில் இணையும்போது புதிய உயிர் உருவாவதாக அறிவியல், வெட்ட வெளியில் காற்றும் வெளிச்சமும் கரியும் தூசும் கண்டதும் கலந்து மிதக்கும் விண்ணில் மிதக்கும் மூலங்களோடு செத்த உடலின் மூலங்கள் கலப்பதால் புதிய உயிர் பிறக்கிறது என்று புத்தம் கூறுகிறது. அந்தப் புதுப்பிறப்பு மனித உயிரா? விலங்கா? புழுவா? பூச்சியா? மரமா? செடியா? கொடியா? கொடிய பாம்பா?


விசுவாசம்

24-09-2013 15:23

டென்மார்க் பிரஜை ஒருவர் 70/75 வயதானவர், எழுத்து நடையில் எங்கள் தமிழ் கதைப்பது உங்களால் நம்பமுடியுமா?
அவர் தமிழ் படிக்க கிட்டதட்ட 5 வருடம் எடுத்ததாம். சரளமாக தமிழ் கதைக்க 16 வருடம் எடுத்ததாம். இப்படி கஷ்ரப்பட்டு இனிமையான தமிழ் மொழியை ஏன் கற்றார் என்றால் கர்த்தரின் மகிமையை பரப்பவே!!
எப்படி எல்லாம் சமயம் பரப்ப தங்கள் சந்தைப்படுத்தும் திறனை பாவித்திருக்கின்றார்கள் (Marketing Tactic), அசர வைக்கிராங்கையா!!
இப்ப இணைய சமய சந்தைபடுத்தல் நிபுணர்களும்...
தண்ணி பற்றி நல்ல விஷயம் சொல்லிப்போட்டு தண்ணி காட்ட வெளிகின்றியலே..... ஏன்?

அந்த கூட்டத்தில் சேர்ந்தால் 10 பேரை கூட்டிக்கொண்டு வா என்றா கேட்கின்றார்கள்? அல்லது நான் பெற்ற இன்பம் இவ் வையகம் பெற.. என்று சேவை செய்கின்றீர்கள் என்று வைத்தால், அதை சமயம் மாற்றாமலே செய்யலாமே?

விண்ணப்பம் ஒன்று: புகுந்த வீட்டு சமய நிறைகளை மட்டும் சொல்லி இந்து சமயம் முட்டாள்களால் உருவாக்கபட்டது என்று உங்களை கோமாளி ஆக்காதீர்கள்!!!
சமயம், கலாச்சாரம் எல்லாமே ஒரு நல்ல வழிகாட்டல்/ஒழுங்குமுறை. எல்லா சமயத்திலும் பெரும் வெற்றிபெற்றவர்கள் இருகின்றார்கள் சிறப்பாக வாழ்பவரும் இருகின்றார்கள். எல்லா சமயத்திலும் வியாபாரமும் நடக்கின்றது என்பதும் உண்மை. றோமை ஒரு குடையின் கீழ் நடக்கும் மா..பியா.. கொள்ளை கூட்டம் என்று சொல்லுவார்கள்.

அது சரி, இது சரி, எது சரி....? பனை மர உச்சியில் இருந்து கள்ளு சீவிறவனுக்கு பலத்த காற்றடித்தால், அப்போ காற்றின் வேகத்தை குறைத்த கடவுள் தான் அவன் கடவுள்.

இருந்தாலும் அன்றிலிரிந்து இன்றுவரை, நீங்க தீ..யா..ய்.. வேலை செய்கின்றீங்க பவுலு.... பிறகு எப்பிடி பரவாமல் இருக்கும்??
--------------------------------------------------------------------------
போர்த்துக்கீசிலிருந்து வந்த குருக்களே தமிழ் நூல்களை அச்சிடுவதற்குத் தமிழ் அச்சுப் பொறிகளை உருவாக்கிப் பதினாறாம் நூற்றாண்டிலே தமிழ் நூல்களை அச்சிட்டனர்’ என்கிறார். அவர் லிஸ்பன் நகரில் 1554இல் அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல் தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள் கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும், செபங்களும் அடங்கியுள்ளன.

தமிழில் இரண்டாவதாக அச்சேறிய நூல் தம்பிரான் வணக்கம். இது 1577ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் நாள் கேரளாவிலுள்ள கொல்லம் என்னும் இடத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பக்கங்கள் உள்ளன. 1579இல் கொச்சியில் அச்சிடப்பெற்ற கிரிசித்தியானி வணக்கம் என்னும் நூல் மூன்றாவதாக அச்சிடப்பட்ட நூலாகும். இது மொத்தம் 120 பக்கங்களைக் கொண்டது.
------------------------------------------------------------------------


சிரித்திரன்

22-09-2013 08:43

ஜீரணிக்க செய்வதற்கான திரவங்களை இடையில் குடிக்கும் தண்ணீர் ஐதாக்கி விடுவதால் சமிபாடு பாதிக்கப்படும். உண்மைதான் அதுக்கு தந்திருக்கும் டிப்ஸ் ஐ பாத்தால் உப்பு உறைப்பு இல்லாமல் எல்லோ சாப்பிடவேணும். அதுதான் கஷ்டமான விடயம்.முதலில் நாக்கை திருப்த்திப்படுத்த வேண்டும் அதுக்கு பிறகு நடக்கிறதை பிறகு யோசிக்கலாம்.


manoharan

21-09-2013 21:35

அற்புதனுக்கு மீன் தொண்டையிலை குத்துகுதாம் .உயிருடன் மீனை விழுங்கினாலும் மீன் கடைசிவரை குத்தாது .கடிக்கும் .மீனின் முள்ளுத்தான் குத்தும் குத்தின முள்ளு தொண்டையில் சிக்கினால் அதுக்கு வைத்தியம் கதலி இல்லாட்டால்
கப்பல் வாழை பழத்தை எடுத்து விழுங்கினால் சிக்கிய முள்ளு கழட்டு பட்டு வழுக்கி
கொண்டு இறங்கிவிடும் .மற்றது மேலை சொல்லி இருக்குது உப்பு கூடின சாப்பாடு
தாகத்தை உண்டு பண்ணுமாம் .அதெண்டால் உண்மைதான் .அதுதான் போல
அந்த காலங்களிலை கொழும்பில் உள்ள யாழ்ப்பானத்தாரின்றை சோத்து கடையளிலை போய் குந்தினதும் இலையை போட்ட உடனை அப்பளத்தை வைப்பினம் .இது பாவம் பசி அல்லே .சோறு போட முதல் அப்பளத்தை எடுத்து
சற பற எண்டு கடிக்க அது கொஞ்ச நேரத்தாலை தாகம் எடுக்க தண்ணியை குடிக்க
அரை வயிறு நிரம்ப பிறகு அரை வாசி சோறு தான் அடை படும் .
இன்னொரு டெக்கினிக்கு சோத்துக்கு பாக்கும் போட்டு அவிப்பங்கள் படு பாவியள்
அடையலை குறைக்க .எல்லாம் விசிநேசு றிக்சு .உப்பிடித்தான் 70 /80 களில் கொம்பனித்தெரு செட்டியார் வீட்டில் பல்வேறு அலுவல்களுக்காக எம்மூரவ்ர் பல பேர்கள் .
மாலை ஆனதும் துலங்கனை போட்டு விட்டு set ஆக போவினம் மலே ஸ்ட்ரீட் இல்
உள்ள புங்குடு தீவு சோத்து கடைக்கு.. கணக்காக .துலங்கன் போட்டால் அடையலின் அளவும்
கூடுமல்லெ.set ஐ தூரத்தில் கண்டதும் சொல்லிப்போடுவினம் **சாப்பாடு முடிஞ்சுது **எண்டு .படு பாணம்.போடு போடு எண்டு கேக்க அவங்கள் 3 /4 தரம்
போட அவங்களுக்கு கட்டுமே? .கடையை பூட்டிபோட்டு தலையிலை துண்டைததான்.போட்டு கொண்டு யாழ்தேவி ரயில் ஏற வேணும் அவங்கள் பிறகு
set அங்காலை முசிலீம் ஹோட்டல் பக்கம் போய் கொத்துரட்டியை விழுங்கி போட்டு போறதுதான்


ஆதங்கம்

21-09-2013 18:46

நல்லதொரு விடயத்தை கூறியமைக்கு நன்றிகள்.பல விடயம் அறிந்துள்ளேன்.


அற்புதன்

21-09-2013 17:03

விழுங்கிய மீன் தொண்டையில் குத்துகையில் உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்!


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி