காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

மாதங்களில் அவர் மார்கழி - பவுல்.


என்னை யார் என்று எண்ணியெண்ணி நீ பாக்கிறாய்?

என்னை யார் என்று சனங்கள் பாக்கிறார்கள்? என கிறிஸ்து தன் சீடர்களிடம் கேட்டார்.

அவர் பூமிக்கு வந்து 2000 ஆண்டுகளுக்கு மேல ..இன்னும் இந்த உலகத்தில பலர் அவரை
ஒரு மகா-ஆத்மா என நினைக்கிறார்கள்.. அவர் தேவகுமாரன். .

மனிதனையும் இறைவனையும் பிரிக்கிற பாவச்சுவரை அழிக்கவே பூமிக்கு வந்தார்.
மாதங்களில் சிறந்தது மார்களியில் உலகமே அவர் பிறப்பை கொண்டாடுவதிலே ஆர்பரிக்கிறது.
மரியாள் திருமணத்திற்கான மணமகன் நிற்சயிக்கப்பட்ட ஒரு கன்னிகை. இறைபக்தி நிறைந்தவள் . அவள் முன்னிலையில தேவதூதன் தோன்றி " இறை அருள் பெற்றவளே " என்றழைத்து , "தேவ ஆவி உன்மேல உதித்து நீ கற்பவதியாவாய் , உன் மூலமாக தேவகுமாரன் உலகரட்சகர்(மீட்பர்) பிறக்கப்போகிறார்" என தேவதூதன் சொன்னவைகளுக்கு அவள் தன்னை ஒப்புக்கொடுத்து கற்பவதியானாள்.. உலகசனமோ அவளை நடத்தை கெட்டவளாக நடத்தியது . நியமிக்கப்பட்ட கணவனோ அவளை தள்ளி விட நினைத்தான். பெற்றோரோ அவமானத்தால தலை குனிந்தனர்.{சனங்கள் அவளை கல்லெறிந்து கொல்ல பஞ்சாயத்தில முடிவெடுத்த நிலையில மரியாளோ இறைவனையே இறுக பற்றிக்கொண்டாள். நடந்த உண்மையை எவருமே நம்பவில்லை.}

தேவதூதன் அவள் குடும்பத்தவர்களுடன் பேசியபடியால் குடும்பத்தவர்கள் அவளை சேத்துக்கொண்டு கணவன் அவளை திருமணஞ்செய்து , தேவகுமாரன் பிறக்குமட்டும் அவளை தொடாமலிருந்து பராமரித்தாராம். கிறிஸ்து பிறந்த பின்னர் மரியாள் தன் கணவனுக்கு வாழ்க்கைபட்டு பிள்ளைகளை பெற்றாள்.

தேவன் தன் குமாரனை பூமிக்கு அனுப்பினார் என்பதை பல சனங்கள் நம்பாவிட்டாலும்.சில சனம் நம்பினார்கள் . நானே உலக இரட்சகர் என்ற வார்த்தையின் படி அவரை அறியாத சனம் உலகிலே யாருண்டு? .
உங்கள் ஜீவனுக்கு நான் ஒளி தந்து [பாவ இருள் நீக்குபவர்] பரஞ்யோதியோட சேர்பேன் என்றார்.
அவர் பூமியிலே வாழ்ந்த நாட்களில் நீர்,நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் அவர் வார்த்தைக்கு கீழ்படிந்துசெயல்பட்டன.. இறைவனாக காற்றிலே பறந்து விண்ணுலகிலே மனித சரிரத்தோட வாழ்கிறார். திரும்பவும் காற்றிலே இறங்கி வந்து புதிய பூமியில் பரலோக மகிமையில் அவரை சரண்டைந்தவர்களை கை விடாமல் காப்பார்.
தான் திரும்ப வரும் காலத்திற்கான அடையாளம். பண (தாளோ சில்லறையோ) நடமாட்டம் இருக்கா. செயற்கை மனிதர்கள் உயிரூட்டப்பட்டு மனிதரிலும் அறிவு கூடியவர்களாக இருப்பார்கள். சாத்திரம் பாக்குமாம் அதனை கடவுளாக வணங்கச்செய்யுமாம். றோபோக்களின் ஆலோசனை தேவ ஞானமாக சனங்கள் நடப்பார்களாம். சனங்களின் சரீரத்தில சிப் மின் குண்டு வைக்கப்பட்டு அவர்களின் எல்லா நடத்தைகளையும் கட்டுப்பாட்டுக்க வைத்திருக்கிற காலம் வரும் , அதுவே இப்ப நாங்க இருக்கிற பூமியின் அழியும் காலம்.. இவைகள் இப்பவே நடந்து கொண்டு இருக்கு. இனி கன காலம் செல்லாது.உலகத்தில எல்லாராலும் அறியப்பட்ட புத்தகம் கிறிஸ்தவ வேதாகமமே.

பவுல் - ஐரோப்பா.


மொத்த வருகை: 1439 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (25)


தவம்நேசன்

24-12-2013 21:23

நமக்கு ஒரு குமாரன் பிறந்தார். நமக்கு ஒருகுமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்த்த்துவம் அவர் தோழில்மேல் இருக்கும்.அதுதான் கிறிஸ்மஸ்.எங்கள் நல்வாழ்த்துக்கள்.என்றென்றும் உங்களுக்கு உரித்தாகட்டும்


பவுல்

24-12-2013 12:56

அண்டசராசரங்களை உண்டாக்கி தன்னுள்ளடக்கிய பரம்ஜோதியின் குமாரனின் பிறந்த மாதம் மார்கழியில் விண்ணும் மண்ணும் ஆர்ப்பரிக்கிறது. .

இன்னும் எத்தனையோ சக்திகள் தங்கள் மந்திர வித்தைகளால சனங்களை
தங்கள் வசம் இழுத்து தகனத்தீயாக்குகிறார்கள்.

எந்த சக்திகளாயிருந்தாலும் கிறிஸ்துவின் பிறந்தநாள் மாதிரி உலகமெல்லாம் விழா கொண்டாடுவதில்லை.இரத்தத்தோடும் மாமிசத்தோடும் வானத்திற்கு ஏறிச்சென்றவர், அதே மாதிரி திரும்ப வருவேன் என்றார்.

அவரோட புதிய பூமியில நான் வாழப்போவதை நினைத்தா ~~~~~~~~என்ன என் ஆனந்தம் என்னா என் சொல்ல வார்த்தையே இல்லை. ஆடுவோம் பாடுவோம் ஆனந்தமே எப்போதும்..

கிறிஸ்துவின் அன்பை நீங்க காணவேண்டும்~`` காணும்போது< {தகனமா போகாமல் மாவீரராக விதைக்கப்பட்டு}< புதிய பூமியில விளைந்தெழும்ப வேண்டும்.

**கிறிஸ்துவின் மகா உன்னதமான பிறந்தநாள்++++<வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்..உங்கள் எல்லாருக்கும்.


லொள்ளுபாண்டி

25-12-2013 19:54

எங்களுக்கு தெரியாத மதமும் இல்லை எங்களுக்கு தெரியாத மொழியும் இல்லை எல்லாம் மனிதர்களை கட்டுபடுத்தி பக்குவத்துக்கு கொண்டு வர கண்டு பிடித்தவை


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

21-12-2013 12:45

கப்பலோட்டிய கலட்டியான் என்று உங்களை நான் வைச்சிருக்கிறன். என்னெண்டு கீழ் அடியில் (DownUnder) இருக்கும் கண்டத்தை மறக்கலாம்? LoL

உங்களுக்கு வயசு போக விஷயங்கள் ஞாபகமில்லாமல் போகுது - பறவாயில்லை.
எங்களுக்கு வயசு போறதே ஞாபகமில்லாமல் போகுது.

~~~~~~~~~~~~~~~~~~
manoharan 21-12-2013 12:39
பிழை திருத்தியதுக்கு நன்றிகள் .தவறுக்கு வருந்துகிறேன் .அது அவுஸ்திரேலியா
உலக படத்திலை அங்கினை வலது மூலை கீழை அல்லே /அதுதான் மறந்து போனன்
போல
வயது போக ஞாபக மறதியும் கூடவே வரும் .நாளைக்கு உங்களுக்கும் வரும் கண்டியலே ! இன்றைய கிழடுகள் நேற்றைய இளசுகள் (நாங்கள் ) .இன்றைய இளசுகள் நாளைய
கிழடுகள் (நீங்கள் ).கவனமாய் இருங்கோ காணும் .வருவியள் பிறகு நாளைக்கு நீங்களும் பல்லெல்லாம் விழுந்து பொக்கு வாய் ஓடை ..**ஏதே என்கையதா அன்ற கொக்க சட்ரகம் .கொன்ச மான்கா பிருங்க வேனும் ** எண்டு கொண்டு கொன்னை தட்டி
கொண்டு .கவனம் கண்டியலே !!!


சிரித்திரன்

21-12-2013 14:18

"மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" எண்டு சொல்லுவினம் இப்ப இதை பார்க்க கொஞ்சம் யோசிக்க வேணும் போல. ஞாபக மறதியில அவை எதையேன் சொல்ல நாங்கள் அதை அமிர்தமாய் எடுக்க ஏடாகூடமாய் எல்லோ போகும்?
-------------------------
ஞாபக மறதி..

ஏன்!

ட்வைட் மார்ரோ என்கிற புகழ்பெற்ற அமெரிக்கத் தொழிலதிபருக்கு நினைவாற்றல் மிகவும் குறைவு. தனது பெயரைக்கூட மறந்துவிடக் கூடிய அளவுக்கு ஞாபக மறதி அவருக்குண்டு.

ஒருநாள் ஏதோ அலுவலாய் வெளியே கிளம்பியவர் பாதாள ரயில் ஒன்றில் ஏறினார். வண்டி புறப்பட்டு விட்டது. கண்டக்டர் வந்தார். “”டிக்கட் வாங்கியிருக்கிறீர்களா, காட்டுங்கள்…” என்றார்.

மார்ரோவுக்கு டிக்கட் வாங்கினோமா, வாங்கவில்லையா என்ற ஞாபகம்கூட இல்லை. எனினும் கோட்டுப் பை, சட்டைப்பை எல்லாம் தேடு தேடு என்று தேடினார். ஆனால் டிக்கட் அகப்படவில்லை.

கண்டக்டர் அவரை யார் என்று அடையாளம் கண்டுகொண்டு, “”பரவாயில்லை ஐயா…” என்றார். கண்டக்டர் பேச்சைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் டிக்கட்டைத் தேடும் வேலையில்மும்முரமாக இருந்தார் மார்ரோ.

“நான்தான் டிக்கட் இல்லையென்றால் பரவாயில்லை என்றேனே. ஏன் சிரமப்படுகிறீர்கள்?” என்று கேட்டார் கண்டக்டர்.

“”நீ வேண்டாம் என்றால் போச்சா…? எனக்கு அது முக்கியம்! அதைப் பார்த்துத்தானே எங்கே போக வேண்டும் என்று நான் தெரிந்து கொள்ள முடியும்” என்றாரே பார்க்கலாம்.

-
------------------------
அம்மா.. நாங்க புதுசா ஒரு முதியோர் இல்லம்
ஆரம்பிக்க போறோம்...உங்களால் ஏதாவது உதவி
செய்ய முடியுமா...????

தாராளமா.. என்னோட மாமியாரே அழைச்சிட்டு போங்க....
-------------------------------------------------------
குப்புசாமி வீட்டை பூட்டியாச்சான்னு பலமுறை இழுத்துப் பார்க்கிறார்.. சரியான ஞாபக மறதி கேஸ்...

அதுசரி... அவரு இழுத்து பார்க்கிறது பக்கத்து வீட்டு கதவாச்சே....!
----------------------------------


மனோகரன்

21-12-2013 16:13

பிழை பிழை பிழை படு பிழை .பாதாள ரயிலில் எங்கை அப்பா கொண்டக்ற்றர் மார்
இதென்ன வசுவோ இல்லை தட்டி வானோ ?KS .பாலச்சந்திரன் சொன்னது போல
**அண்ணை றக்க்கம் அரசடி சந்தி ** சரி அண்ணை ரைட் எடுங்கோ எண்டு சொல்ல
உது ரயில் .அங்கை **டிக்கெட் செக்கர் மார் ** சரி எதோ எல்லாரும் பிழை விடுகிறதானே தானே .மன்னித்து அருளுவோம் .உதே மாதிரி கதை ஒண்டு
பொறுத்த பிரச்சனை நேரம் குமார் பொன்னம்பலம் போறார் காரிலை கொழும்பு கோட்டை பக்கமாக .ராணுவம் மறித்து அவரிடம் ID கேட்க அவரின் பதில் இவ்வாறு
ID கேக்க சட்டத்தில் ஒரு இடமும் இல்லை .என்னிடம் ID உண்டு .இருந்தும் அதை
நான் உங்களுக்கு காட்ட போவதில்லை என்றாராம் .பின்னை அந்த ராணுவ வீரரின்
பதில் இவ்வாறு **ஐயா எனக்கு தெரியும் நீங்கள் ஆரெண்டு .இருந்தும் என் மேலிட
உத்தரவு என்னை தடுக்குது உங்களை மேலும் நகர விடாது **
ஓஹோ அப்பிடியே கதை கொஞ்சம் பொறும் என்று சொல்லி போனை அடிச்சார்
மனைவிக்கு .அவ பெரிய டாக்குத்தர் .இப்பிடி ஒரு சிக்கலில் மாட்டி நான் கோட்டை
ரயில் நிலையத்துக்கு முன்னாலை held up ஆகி நிக்கிறன் எண்டு சொன்னதும்
அவ சொன்னா கொஞ்சம் பொறுங்கோ எண்டு சொல்லி ராணுவ உயர் அதிகாரி களுக்கு *My husband have been held up by your people /what the hell is going on man there ?*
எண்டு சொன்னதும் அவை **sorry sorry madam i will make arrangements to go ahead as
soon as possible * எண்டு சொல்லி செக் போய்ன்டுக்கு வோக்கி டோக்கியில்
இப்பிடி கதை **அடே பூறுவா (கழுதை ) உம்ப தன்னுவாத ஏ மஹத்தையா கவுத
கியல ஓவர் .சேர் மம தன்னுவ சேர் கவுத கியல .எஹெத் சேர்லா நே அப்பிட்ட
உபதேஸ் தீல தியன்னே கிசி கெனக்குட்ட ID நத்துவ யண்ட தெண்ட எப்பா கியல
ஓவர் சேர் .ஏக்க மட்ட வேடக் நா தன் உம்ப யண்ட தீப்பாங் அற மனுஷியாவ
பஸ்ஸ மட்ட பார்லிமென்ட் ஏகே உத்தர தெண்ட வெய்
பின்னை குமார் காரை ஒரு உறுமு உறுமி சுழட்டி கொண்டு போனாராம் .பிறகு
அவர் கொலை உண்ட கதை வேறு .உவற்றை வீட்டிலை தான் வாடகைக்கு குடி
இருந்தார் அந்த ஏழை கலைஞி கமலினி செல்வராசன் .உவர் அவவையும் வாடை
கட்டேல்லை என்று எழுப்பின மனிதாபமானம் அற்ற அரசியல் ஆளர்கள்
உது போலவே ஒரு விஞ்ஞானி கூட தன் ஆராச்சியில் மூழ்கி இருந்த வேளை
தன் உணவையும் மறந்து மூழ்கி இருக்கையில் அவரின் நண்பர் வந்து **எடே மனோஹரா என்று கூப்பிட அவருக்கு ஒன்றும் காதில் விழவில்லை ** பொறு
உனக்கு நல்ல வேலை செய்யிறன் எண்டு போட்டு மனோஹரனின் மனிசி அவருக்கு ஆக்கி வைச்ச றால் குழம்பு றால் வறை கிழங்கு கறி சொதி ஓடை எல்லாம் அரிச்சு வழிச்சு துடைச்சு திண்டு போட்டு கோப்பையையும் கழுவி வைச்சு
போட்டு போக மனோகரன் ஆராச்சி முடிஞ்சு ஒரு ஐஞ்சு மணி போல பசி வைத்தை
கிண்ட போய் பாத்தாராம் பெண்டில் கொண்டு வந்து வைச்சு போட்டு போன சோத்து
கோப்பையை .அதெல்லாம் வடிவாய் கழுவி வைச்சு கிடந்ததை பாத்து போட்டு
அவர் நினைச்சாராம் **ஓஹோ நான்தான் திண்டு போட்டு கழுவி வைச்சிருக்கிறன் போல எண்டு **இது எதை சொல்லுகிறது ? செய்யும் எதிலும்
அர்ப்பணிப்பு அர்பாணிப்பு அர்பணிப்பு ....பசியும் தெரியாது .நித்திரையும் வராது
கண்டியலே !!!!!!!!!!!!!!!!!!


சிரித்திரன்

21-12-2013 17:01


இரண்டு பள்ளி சிறுவர்கள் பேசிக்கொண்டது;
நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
எப்படிச் சொல்ற?
பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு,
நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க.
----------------------------------------------------------

நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. .
.
இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார்.

நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார்.

உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார்

------------------------------
மாப்பிள்ளை .
.
வேலை இல்லாமல் வெட்டியாக இருந்த ஒருவர் மாமியார் வீட்டிற்கே சென்று வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்ட திட்டமிட்டிருந்தார்.
.
மாமியார் வீட்டிற்கு சென்ற அவருக்கு முதல் சில தினங்கள் ராஜமரியாதை கிட்டியது.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறையத் தொடங்கியது. ஒரு நாள் இரவு சிற்றுண்டிக்காக பொங்கல் செய்து பரிமாறினார்கள்.


பொங்கலின் ருசியில் மயங்கிய மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிட வேண்டும் என்று விரும்பினார். இருந்தாலும் வாயைத் திறந்து கேட்க கூச்சமாக இருந்தது.


இதனால் காலியாக இருந்த சாப்பாட்டு தட்டைத் தட்டிக் காண்பித்து இந்தத் தட்டு மிகவும் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியது என்று கேட்டார்.


மாப்பிள்ளையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மாமியார், பொங்கல் பானையும் காலியாகத்தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட, பானையைத் தட்டி, இந்தப் பானை வாங்கிய அதே கடையில் தான் அந்தத் தட்டும் வாங்கினேன் என்றார்.


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

21-12-2013 16:27

எனக்கும் நல்ல மறதிக்குணம் இருக்கு. எப்படி இருந்தாலும் சாப்பிட்டனோ இல்லையோ என்றதிலை மட்டும் எப்பன் மறதியும் வாறேலை. அப்படி ஒரு சின்ன சந்தேகம் இருந்தாலும் இன்னொருக்கா சாப்பிட்டுடுவன்


மனோகரன்

21-12-2013 17:11

கப்பல் ஒட்டிய கல்ட்டியான் என்பது தவறு .அது past tense (கடந்த காலம் ) .present tense இல் (நிகழ்
காலத்திலையும்) நான் கப்பலை ஓட்டி கொண்டே இருக்கிறேன் .உங்கடை அன்பையும் ஆதரவையும் என்றும் மறக்க முடியாது .எவ்வளவோ எல்லாம் இங்கு
நடந்து நிகழ்ந்து முடிவுற்ற போதும் 2013 முடியும் இத்தறுவாயில் வரப்போகும்
2014 உங்கள் எல்லோருக்கும் prosperous /prospective & productivity ஆண்டாக மலர
என் இதயத்தின் அடி பொட்டொத்தில் இருந்து என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் உங்கள் அனைத்து நல் உள்ளங்களுக்கும் .Sorry for unable to mention individual basis quoting each and everybody's names separately . you all are my own people .


மனோகரன்

22-12-2013 09:16

எடை டட ஒண்டை சொல்ல தவறி விட்டேன் .குறிப்பாக சிலரை பெயர் சொல்லி வாழ்த்த வேணும் இத்தருணத்தில் .அவைதான் எம்மூர் மதம் மாறின /மாற்றின
அந்த கிறிஸ்டினா /பவுல் /XXகா இன்னும் பெயர் அறியாத பலர் .ஏன் என் கிட்டிய
சொந்தங்கள் கூட பலர் மாறி விட்டினம் .அது அவரவர் சொந்த விருப்பங்கள் தெரிவுகள் .ஒரு ஆளுக்கு காஞ்சிபுரம் பிடிக்கும் .இன்னொரு ஆளுக்கு மைசூர் சிலுக்கு
பிடிக்கும் .அடுத்த ஆளுக்கு பெனாசிர் பிடிக்கும் .இல்லையடி நீ காஞ்சிபுரம் தான் வேண்ட வேணும் என்று அடம் பிடிப்பது அவரவர் சொந்த விருப்பு வெறுப்புகளை
மறுதலிப்பது போன்றதாகி விடும் .அது உங்கினை மத சண்டை பிடிப்பவர்களிடையே
நான் காண்கிறேன் .சரி அந்த கதையை விட்டு போட்டு வாழ்த்து கூறும் படலத்துக்கு
வருவோம் .2013 முடிந்து /மரித்து/மடிய போகுது
முடிந்த ஆண்டை மீண்டும் திரும்பி நோக்கி ஆய்ந்து (Analysis ) பண்ணி பாருங்கள்
எத்தனை இன்பங்கள் --துன்பங்கள் /வெற்றிகள் --தோல்விகள் /சந்தோஷ களிப்புகள்
--கவலைகள் .நம்பினவன் துரோகம் பண்ணிய ஸ்டோரி கள்.கழுத்து அறுப்புக்கள் அதே வேளை சிறிய
உதவி ஒன்றையும் (நீங்கள் செய்த ) பெரிதாக மதித்து நன்றி உள்ள நாய் போல உங்களை சுற்றி வருதல் .பின் இழப்புகள் (losses ) அதே சமயம் எத்தனையோ அடைவுகள் (Achievements ) போற்றுவார் போற்றுவார்கள் --நல்மனம் உள்ளவர்கள்
கீழ் மனம் /தரம் கெட்ட 3 ஆம் கிளாஸ் மனம் உள்ளோர் தூற்றுவார்கள் .ஒண்டையும் கணக்கு எடுக்க படாது கண்டியலே .உதுதான் வாழ்க்கை சக்கரம்
நாம் வாழும் உளுத்து போன சமூகம் .நீங்கள் என்ன செய்ய வேணும் எண்டால்
கடந்த வருட அனுபவங்களை படித்த ஒரு பாடமாக எடுத்து பிறக்க போகும்
2014 ஐ திட்டமிடுங்கள் .ஓஹோ உவர் மனோகரன் உப்பிடி ஆனவர்(கெட்டவனோ இல்லை நல்லவனோ ) என்று அறிந்து
உணர்ந்து திட்டமிடுங்கள் .அப்போ உங்கள் வாழ்வு சிறக்கும்
கன தூரம் போய் சொல்ல வந்த கதையும் மறந்து போச்சுது .விசேடமாக எம்மூர்
அனைத்து மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு விசேடமாக என் இனிய நத்தார் /புது
வருட வாழ்த்துக்கள் **in அட்வான்ஸ் ** வர போறாங்கள் சைவ பாட்டியல் எனக்கு
அடி போட.உவர் மனோஹரனும் கலட்டியில் பிறந்த சைவன் அல்லே .தேப்பன்
நாங்கள் கண்டனாங்கள் தை பொங்கலுக்கு குளிச்சு முழுகி மேல் முழுக்க குறி
வைச்சு மந்திரம் ஓதி (அப்பு தீட்சை கேட்ட ஆள் கண்டியலே ) பொங்கல் பொங்குவார் .ஏன் அவற்றை தாய் சிவக்கொழுந்து எண்டா போல என்ன லேசே ?
அவவும் அம்மன் கோயில் /பிராளாய் முருகன் /பிள்ளையார் /புன்னாலை /திருவெம்பாவை விரதம் எல்லாம் ஒழுங்காய் பிடிச்ச மனிசி அல்லே .அப்பிடி ஒரு
தாய் தேப்பனுக்கு பிறந்த உவர் இப்ப வேதத்துக்கு மாறினவையை வாழ்த்து கிறார்
எண்டு கொண்டு வர போகினம் அடி பிடியில் .எனக்கு மீண்டும் மீண்டும்
சொல்லுகிறேன் **************எம்மதமும் சம்மதம் ************* ஆனால் மனித நேயம்
மானிட உணர்வுகளை உணருங்கள் மதியுங்கள் **response ** பண்ணுங்கள்
விரதம் பிடிச்சு காகத்தை கூப்பிட்டு சோறு வைக்கிறியள்.நாலு நாளாய் அன்னம்
தண்ணி காணாத ஒரு பாவம் கதவை தட்டுகுது **அம்மா பசிக்குது **எண்டு
நீங்கள் இப்பிடி சொல்லுவியள் .விரதம் ஒழுங்காய் பிடிக்கவும் இந்த மூதேவியள்
விடுகுதுகள் இல்லை .எடே /எடியே --சுலக்ஷி /சுலக்ஷ்னா கதவை சாத்தடா எண்டு
போட்டு நீங்கள் பெரும் வெட்டு .வாழை இலையை சுத்தி ஓணம் பண்டிகைக்கு
மலையாளத்தார் செய்யும் சுண்டல் /வறுவல் /பொரியல்/துவையல் போல ஒரு
பத்து பதினைஞ்சு ஐட்டங்களை வயிறு நிறைய அடைஞ்சு போட்டு ஒரு நீண்ட /பெரிய எவறையையும் விட்டு போட்டு நீங்கள் சொல்லுவியள் **எடே மனோஹரா
நான் இண்டைக்கு 3 ஆவது சனி விரதமடா .4 ஆம் சனி கடைசி சனிக்கு புன்னாலை
கோயில் போய் எள்ளெண்ணை சட்டி எரிக்க போறன் மனிசி பிள்ளையளோடை போய் .ஆரை அண்ணை பேய் காட்டி பம்மாத்து பண்ணி வாளுகிரியல் .அந்த
பசிக்கு புசிக்க கேட்ட பாவத்தை கலைச்சு போட்டு கதவை பூட்டி நீங்கள் அடைஞ்சு
போட்டு அதுக்கு பேர் விரதமாம் .பிறகு இரவைக்கு அரிசி சோறு தின்ன படாதம்
அரிசியை இடிச்சு ஆக்கின மாவிலை புட்டு /இடியப்பங்கள் அடைவினம் .அன்றில்
தோசை (எடியே சரோசா இண்டைக்கு உளுந்து நனைய போடடி இரவைக்கு விரதத்துக்கு தோசை சுட வேணுமடி )உதுதான் உவை பிடிக்கும் விரதங்கள் .
அந்த விரதத்தின் பலன்கள் அங்கு தேவ லோக கொப்பியில் பதிய படும் என்று அவர்களின் நினைப்பு .ஆனால் அதே கொப்பியில் இன்னுமொரு ledger பின்பக்கங்களில் இருக்கும் அது அவைக்கு தெரியாது .அதுதான் அந்த விரத நாள்
பசிக்கு புசிக்க கேட்டவனுக்கு கதவை சாத்தியதும் அங்கு பதிவாகும்
10,000 த்தில் ஒருவர் இருக்கிறார்கள் தான் .**மனிசன் காரன் இப்பிடி சொல்லுவர் மனிசி காரியிட்டை --எடியே பாவமல்லெ அந்த கிழவனும் கொஞ்சம் சுத்தி குடடி
என்று சொன்னதும் அவவும் ஒரு கொஞ்சம் இரக்க சுபாவம் உள்ளவ என்பதால்
தில்க்ஷி Come here .bring one lunch paper man .serve a little rice & curry .trap it and give it to
that poor man ** எண்டு சொன்ன சிலரையும் நான் என்வாழ்வில் கண்டுள்ளேன்
அதுகும் அந்த மகா புத்தகத்தில் பதிய படும்


manokaran

21-12-2013 10:24

எடே இந்த வரிய கடைசி 2013 எண்டாலும் சந்தோசமாய் கொண்டாடி கழிக்க விடுன்கொவன்றா / வந்து விட்டினம் சைவ காரரும் வேத காரரும் அடி பிடியிலை
இஞ்சை நீ பெரிசோ இல்லை நான் பெரிசோ ? உன் மதமோ இல்லை என் மதமோ
பெரிசு எண்டு அடி பிடி பட .எனக்கெண்டால் எம்மதமும் சம்மதம் கண்டியலே .
நான் இப்ப போக போறன்.வேத காரர் என்ரை பழைய கூட்டாளி .குடும்பம் முழுக்க
கப்பல் தொழில் .நத்தார் கொண்டாட எல்லாரும் வீட்டில் .கப்பல்களில் இறங்கி
என்னை கண்டதும் **Come ,come mano how are you .after long time ** எண்டு சொல்லி கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்து .பிலேண்டி டீ இல்லை **what you like to have ?
beer ? brandy ? wisky ? baccardi ? or wine ? என்று கேட்கும் மனிதர்கள் .நான் இப்ப அங்கை போக போறன் .வந்து பிறகு மிச்சம் எழுதுவன்.நீங்களும் அப்பிடி வாழ
பழகுங்கோ .நான் உங்களை குடிக்க வேணும் எண்டு சொல்லேல்லை அடி பிடி
படாமல் அன்னியோன்யமாக நட்புடன் வாழ றை பண்ணுங்கோ .ஓகே பாய் செரியோ


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

21-12-2013 11:59

எம்மதமும் சம்மதம்
மதம் பிடிக்காதவரை எந்த சமயமும் சமமே > சம[ய]ம்!
மார்கழி மாதம் வந்தால் கிறீஸ்தவ மதம்
தீபாவளி மாதம் அனைவரும் இந்து வழி
பங்கிறச்சியை ஒழிச்சுப்புசிக்கும் நாளே ஒளித்திருநாள்

சமயம் பார்த்து சமயம் மாறுவதனால் தான்
மதத்துக்கு சமயம் என்று இன்னொரு பெயராக்கும்
எல்லாம் சிவமயம் என்கிறார்கள்
மனித நேயம் இருக்கும்வரை சமயம் எனும் மாயை தடங்கல் எதற்கு?

மாதம், மதம், சமயம், மயம், சமம் எது என்ன மாயமாக இருந்திட்டு போகட்டும்
என்னுடைய பெயரில் ஒரு சொட்டு (shot) bacardi யில் அரிச்சனை செய்துவிடவும்.

ஆமேன் - அரோகரா - ஹம்துல்லா - கச்சாமி!


manoharan

22-12-2013 06:30

**பங்கிறைச்சியை ஒளிச்சு புசிக்கும் நாள் --ஒளித்திருநாள் **
ஒளிச்சு புசிப்பதால் ஒளித்திருநாள் ...
ஒழித்து புசிப்பதன் காரணம் ?? ...முன்பு போல் அல்ல இப்போ ஊர் .மிக மிக முனேற்றம் .அண்மையில் திருகோணமலையில் பத்திர காளி கோயில்
traditional custom ஒன்று இம்போர்ட் பண்ண பட்டுள்ளது .அது **கௌரி காப்பு விரதம் **
துர்க்கை அம்மன் + சத்திய காட்டு பத்திரகாளி அம்மன் கோயில் (முன்பு ஆயிர கணக்கில் கிடாய் வெட்டி வீழ்த்திய கோயில் ) காப்பு விரதம் அனுஷ்டிக்க பட்ட
போதும் எம்மூர் Highly influenced by the devotees who have migrated to Trincomalee from our village very
long ago and presently resettled in our village . உண்மையில் அது இஸ்திரிகளின் விரதம்
ஆனால் ஆண் பெண் வேறுபாடின்றி எல்லோரும் அனுஷ்டிக்கின்றனர் .
சிறு வயதில் நாயன்னகாரர் /மேளகாறரின் கைகளில் மட்டுமே நான் கண்ட கயிறு
இப்போ அனேகமாக ஊரிலுள்ள எல்லா ஆண்களின் கைகளிலும் கட்டி இருக்கிறார்கள் .
விரதம் பிடிக்காதவர்கள் ஆண்ட்டாண்டு காலமாக தீபத்திருனாளன்று ஊர் முழுக்க
கிடாய் அடி .போத்திலுகள் உருளும் .பழக்க தோஷம் ஆரைத்தான் விட்டுது
அவைதான் விரத காரருக்கு பயந்து **பாணத்திலை ஒளிச்சு ஆட்டு அசையனை
அடையினம் **அவையையும் குறை சொல்ல எலாதல்லே .


மனோகரன்

21-12-2013 17:33

மாறுபவர்கள் மாறட்டும் .அதில்லை சுதர்சு பிரச்சனை .நான் உன்னை விட இரு மடங்கிற்கு வயதில் மூத்தவன் .அதனால் நான் சொல்வதை ஏற்று கொள்ளவேண்டும் என்ற நிலை பாட்டிலும் நான் இல்லை .நானும் அன்றில் இருந்து
இன்று வரை என்தலையை போட்டு குழப்பி அடிச்சு கொண்டுதான் இருக்கிறேன் இருந்தும் என் சிற் றவுக்கு எட்டியதெல்லாம் இதுதான் .சமயங்கள் வேண்டும் .
இல்லாவிடில் சமூக ஒழுக்கம் (சோசியல் discipline ) அடியோடு இல்லாது ஒளிந்து
மானிடர் ஐந்து அறிவு பிராணிகள் போல்தான் வாழ்வார்கள் .ஆயிரத்து எட்டு
சமயங்கள் இருந்திட்ட போதும் உலகம் பூராக எத்தனை அநியாயங்கள் /அக்கிரமங்கள் ? எதோ ஒரு பயம் /பயத்தினால் உண்டாகும் பக்தி அதுதான் மானிட
வர்க்கத்தை இன்றும் காக்குது .சமயங்களின் பெயரால் பணம் பண்ணுவோர் .மற்றும் தங்களை முதன்மை படுத்தி முன்னுக்கு வர முனைவோரே உலகெங்கும்
இருந்தும் மறைமுக மாக (indirect impact ) அதுவே மானிட சமூகத்தை இன்றும்
காக்கிறது


அற்புதன்

21-12-2013 07:33

list=PL59D259AF1022AE03


பவுல்

20-12-2013 21:16

இப்ப எல்லா கண்டங்ளும் விழாக்கோலம்.

கிறிஸ்து பிறந்ததோ ஆசியா கண்டத்தில. சகல சனங்களையும் தன் இரத்தத்தால மீட்பேன் என்றார். கிறிஸ்துவிடம் சரண்டைந்தவர்கள் மட்டுமே புதிய பூமியில மண்ணிலிருந்து உயிர்ப்பிக்கப்படுவார்கள். நெருப்பில தகனமடைவோர் நெருப்பிலே உயிரப்பிக்கப்பட்டு நெருப்பில வாழ்வார்கள். அதனாலதான் மாவீரரை தகனம் செய்வதில்லை.

தகனமடையாமல் பாவவினை நீக்கி தன்னோட நாங்கள் வாழ வேண்டுமென இயேசுகிறிஸ்து எங்களை தம்மிடம் வரும்படி ஆவலாய் தம் கரங்கள் நீட்டியே அழைக்கிறார். நம் பாவங்கள் எவ்வளவானாலும் தன் சரீரத்திலிருந்து வடிந்த ரத்தத்தால் கழவுவார்..

எந்த மனுசனையும் உயிர்ப்பிக்க அவர் ரத்ததிலே வல்லமை உண்டு. என்ற அவர் வார்த்தைப்படி நடப்பதால உலகமெல்லம் உணந்தோதற்கரியவராக அவரை தேவாராதனை செய்கிறார்கள். உங்கள் எல்லாருக்கும் கிறிஸ்து பிறந்த நன்நாள், நல்மாதம் மகிழ்ச்சாயாக இருக்க வாழ்த்துகிறேன்.

**வாழ்க கிறிஸ்துவோட வளமாக**


லொள்ளுபாண்டி

21-12-2013 00:44

உங்களுக்கு நான் என்னத்த சொல்லி எப்பிடி விளங்கபடுத்த்துறது களைச்சுபோணன்


manoharan

21-12-2013 01:12

***மார்கழி மாதம் எல்லா கண்டங்களிலும் விழா கோலமாம் பவுல்** .அது மெத்த சரிதான்
விழா கோலம் மட்டுமல்ல அந்த ஜேசு பாலன் மாட்டு தொழுவத்தில் அவதரித்த
மார்கழி மாதம் சகல கண்டங்களிலும் குளிர் .இதை அடிக்கும் போதும் அந்த குளிரின்
மகிமையை அனுபவித்து கொண்டே அடிக்கிறேன் .ஆசியா கண்டத்தில் இந்துக்கள்
திருவெம்பாவை விரதம் அநிஷ்டிப்பார்கள் விடிய வெள்ழன்னை எழும்பி நடுங்கும்
குளிரில் தலையில் தண்ணி ஊத்தி முழுகி தோஞ்சு 10 நாட்கள் அதி காலை
கோயிலுக்கு போவாளவை கும்பிட .பிறகு .வந்து மார்க்கெட்டு சந்தைக்கு போய் கீரை பிடி
மரவெள்ளி கத்தரிக்காய் வேண்டி வீடு வரும் வழியில் அங்கு ஒன்றில் சடாசிவம் கடை
வெள்ளை /கறுத்த பாலு கடை or குஞ்சாம்பி கடைகளில் கொஞ்ச பருப்பு /உருளை கிழங்கு / அப்பளமும் வேண்டி கொண்டு போய் சமைப்பளவை. பத்து நாட்களும்
அது ஒரு ஆனந்தம் மார்கழியில்
அது போலவே கிறிஸ்தவர்கள் மார்கழி 20 ஆம் திகதியில் தொடங்கிவிடுவினம்
கேக் அடிக்க முட்டை சேர்க்க .விலை கூடிவிடும் .புரியன் மார் பட்டன பக்கம் போய்
நல்ல brand குடிவகைகள் கொண்டு வந்து சேர்ப்பினம் நத்தாருக்கு எல்லாரும் ஒன்று கூடி அடிக்க .24 ஆம் திகதி நள்ளிரவு பூசைக்கு நடுங்கும் குளிரில் போய் வந்து வீட்டில் ஜேசு பாலனின் பிறந்த நாளுக்கு கேக்கு வெட்டி உண்டு மகிழ்வார்கள்
தொடர்ந்து அண்ணன் /தம்பி /தகப்பன் /மகன் பேதம் இன்றி ஒன்றாக இருந்து
துலங்கன் அடி படும் .நான் பல தடவைகள் பல இடங்களில் கலந்து மகிழ்ந்துள்ளேன் .அது அவர்கள் ஸ்டைல் .மார்கழி மாதத்தின் மகிமை சொல்லி
மாளாது .இப்ப உங்கினை இதை கண்ட ஒரு கவிஞர் (பாண) அவர் தான் அவர்
சிரித்திரன் வர போறார் எங்கையாலும் ஒரு சினிமா பாட்டை கொப்பிகட் பண்ணி
கொண்டு இப்பிடி **மாதமோ மார்கழி மங்கையோ தேன்கனி ** /**மார்கழி பனி போல் ** இன்னும் பல பாட்டுக்கள் உண்டு


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

21-12-2013 12:09

ஒரு சின்னத்திருத்தம்:-

நத்தாரை (வெண்)பனியில்லாமல், குளிரில்லாமல், நீண்ட வெளிச்சநாட்களில் கொண்டாடும் ஒரே (மேற்கத்தேய) கண்டம் ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவில் மார்கழியில் கோடை.


manoharan

21-12-2013 12:39

பிழை திருத்தியதுக்கு நன்றிகள் .தவறுக்கு வருந்துகிறேன் .அது அவுஸ்திரேலியா
உலக படத்திலை அங்கினை வலது மூலை கீழை அல்லே /அதுதான் மறந்து போனன்
போல
வயது போக ஞாபக மறதியும் கூடவே வரும் .நாளைக்கு உங்களுக்கும் வரும் கண்டியலே ! இன்றைய கிழடுகள் நேற்றைய இளசுகள் (நாங்கள் ) .இன்றைய இளசுகள் நாளைய
கிழடுகள் (நீங்கள் ).கவனமாய் இருங்கோ காணும் .வருவியள் பிறகு நாளைக்கு நீங்களும் பல்லெல்லாம் விழுந்து பொக்கு வாய் ஓடை ..**ஏதே என்கையதா அன்ற கொக்க சட்ரகம் .கொன்ச மான்கா பிருங்க வேனும் ** எண்டு கொண்டு கொன்னை தட்டி
கொண்டு .கவனம் கண்டியலே !!!


சிரித்திரன்

21-12-2013 07:19

திருவெம்பாவைக்கு விடியப்பிறம் எழும்பி நடுங்கும் குளிரில் கிணத்தில் தண்ணி அள்ளி மேலில் வார்க்கும் போது அந்த தண்ணி வெளிக்குளிருடன் ஒப்பிடும்போது மேனிக்கு இதமாய் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு warm water இல் எடுத்த குளியல் மாதிரி. சரி இந்த பாண கவிஞர் கண்டுபிடித்த மார்கழி என்று வரும் பாடல்கள். தெரிஞ்சால் மேலும் சேர்த்துக்கொள்ளலாம்.
முதலில் இந்த தலைப்பை பார்த்தவுடன் நினைவில் வந்த பாட்டு, காலங்களில் அவள் வசந்தம் பாட்டில் வரும் மாதங்களில் அவள் மார்கழி என்ற வரிகள்,
-மார்கழி பூவே மார்கழி பூவே
-மார்கழி திங்கள் அல்லவா
-மாதமோ மார்கழி மங்கையோ
-மாதமோ மார்கழி மங்கையோ தேன்கனி
-பனியில்லாத மார்கழியா - இந்த பாட்டை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.(இந்த நாட்டில் பனியில்லாத மார்கழியா?)

pani illatha margazhiya - பனியில்லாத மார்கழியா
Movie - aanandha jyothi திரைப்படம்: ஆனந்த ஜோதி
Singers: P. Suseela பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.s. Viswanathan, B. Ramamoorthu இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
Year: 1963
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?
மலரில்லாத பூங்கொடியா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

ஆஹா...ஆ... ஆஹா.. ஆ.. ஆ..ஆ..ஆஆஆ

தலைவனில்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா?
கலையில்லாத நாடகமா காதலில்லாத வாலிபமா?
காதலில்லாத வாலிபமா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும் கதையல்லவா?
பருவம் செய்யும் கதையல்லவா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

https://www.youtube.com


manokaran

21-12-2013 09:39

பாண கவிஞரே உது முற்று முழுக்க பிழை .என்மனதை கன காலாமாய் குடைந்த
விடயம் .எங்கடை பணிப்புலத்திலை எங்கயடா மார்கழியில் பனி ? மார்கழி முழுக்க
சோனாவாரி மழை பொழியும் .கேணி கிணறு வயல் வெளி எல்லாம் வெள்ளம்
நாங்கள் நீந்தி கழிக்க 6 /7 ராத்தல் பாணும் வாழை பழமும் ஒரு சின்ன சவுக்காரமும்
வேண்டி கொண்டு போய் சாரத்தை தோய்ச்சு அங்கினை நெல்லு கதிர் மேலை காய
போட்டுவிட்டு காயும் வரை கிணத்தில் கரணம் அடிப்போம் .எம்மூரில் பனி பெய்வது தைபொங்கல் முடிஞ்சு அதை தொடர்ந்து மாசி மாதம் .அப்போ வயல் போகும் எல்லாரும் தலயில் ஒரு தலைப்பா பனியில் நனையாது இருக்க .பீனிசம்
உள்ள ஆக்களுக்கு ஒரே தும்மல் சளி .மூக்கிலை சவ்வும் வளரும் பிறகு ஒப்பிறேசனும் செய்யவேண்டி வரும் .வந்து விட்டார் உவர் மார்கழி பனி எண்டு சொல்ல எங்களுக்கு கோப்பி /காப்பி அடிக்கிறதுக்கும் ஒரு அளவு கணக்கு வெனுமல்லெ. மார்களியிலை அங்கினை தமிழ் நாட்டு பக்கம் பனி பெய்யுது போல .மாத்து அண்ணை பாட்டை இப்பிப்டி .மார்கழியில் பனிப்புலத்தில் பெய்யும் அடை
மழை போல உங்கினை நயாகராவிளையும் காண கிடைக்காது .வயாகரா குளிசை போட்ட போதும் அதில் நனையும் இன்பம் இந்த லோகத்தில் எங்கும் கிடையாதடி என் அன்பே **எண்டு அடியில் சுழி ஓடி
கல்லு சேறு கொண்டு வந்து வீர செயல் காட்டடி மகிழ்ந்தோம் .உப்பிடித்தான் நான்
சாந்தை கிணறு ஒண்டில் குளிக்கும் போது அடியில் சுழி ஓடி சேறு அள்ளி வரும் வேளை என்னை அறியாமல் எனக்கு மலம் வெளி வந்து அதனால் நான் கேட்ட
கேள்விகள் பட்ட அவஸ்தைகள் இன்றும் எனக்கு என்வாழ்வில் ஒரு Black Spot
இது எத்தனயோ வருடங்களுக்கு முன் நடந்தது .இருந்தும் பல வருடங்கள் கழிந்து
பாலகுமாரின் தாயாரின் மரண வீட்டில் கலந்து கொள்ள வந்த எம்மூர் மூத்த ஒருவர் என்னை கண்டதும் ஒரு நக்கல் சிரிப்பு விட்டு **எடே மனோஹரா நீயல்லெ
அங்கினை கிணத்திலை குளிக்க போய் ....டணி எண்டு சொல்ல எனக்கு அண்டம் பிண்டம் எல்லாம் பத்த அவருக்கு விளக்கி கூறினேன் இவ்வாறு .
ஒரு மனிதனின் குறை குற்றம் கண்டு பிடிச்சு அதை நக்கல் அடிச்சு மகிழ்வதை
விட அவனின்ற்றை அடைவு (achievement ) என்ன என்று சீர் தூக்கி பார்த்து அதை பற்றி கதைக்க உங்களுக்கு மனம் வராது .ஐஞ்சு ரூவாய் சம்பளத்துக்கு நாள் கூலியாய் சேர்ந்து இன்று நான் 60 தை கடந்தும் ரண்டு லச்சத்துக்கும் மேலை சம்பாரிக்கிறான் .அதை கதைக்க உங்களுக்கு மனம் வராது என்று சொன்னதும் அவர் வாயடைத்து மவுனி ஆகினார் .**ஆத்தை அடக்கினாலும் ......த்தை அடக்க ஏலாது * என்று ஒரு முது மொழி .அதன் பிரகாரமே அன்று நடந்த அந்த நிகழ்வு .
எனக்கு பாரம்பரிய ரீதியில் காவி வரப்படும் அந்த மரபணுக்களின் விளையாட்டோ
நானறியேன் .அந்த bowel opening is not regular லைக் .பலருக்கு விடிய எழும்பினதும்
சங்கூதி (கு ...) பனி பெய்து ..(மூ ...ம் ) தம்பிரான் வந்து இறங்குவான் .சிலருக்கு ஒரு
சுருட்டு பத்தி அங்கினை வயல் வெளியோ அன்றில் பனை வடலியோ போக வேணும் .எனக்கோ அப்படி இல்லை .bowel opening அவை தேவையான நேரத்தில் மட்டுமே
விக்டோரியா படிக்க போன காலங்களில் பாதை நடுவில் வயித்தை கலக்கும்
பின்னை நான் அங்கினை உள்ள அன்னமன்னா பத்தைகளுக்குள் புத்தகங்களை
வைச்சு போட்டு இறக்குவது .அங்காலை ஆரென் போனால் இஞ்சாலை அரக்கி
ஒழிக்கிறது. பிறகு பிஞ்சாலை ஆரென் போக பன்காலை ஒழிக்கிறது.சொன்னால்
நம்பமாட்டியள் அம்மாலானை அன்னமன்னா இலையாலை வெள்ளைக்காரர்
டிச்சியூ வாலை துடைக்குமா போல துடைச்சு போட்டு கால்சட்டையை கொழுவி கொண்டு வீட்டை போய் தான் ஆச்சிக்கும் சொல்லாமல் ஒளிச்சு கழுவுகிறது
பிறகு ஆச்சி கேப்பா என்னடா உனக்கு வைத்தொட்டமே .வாடா கட்டை டாக்குத்தரிட்டை போவோம் எண்டு அப்புவிட்டை சொல்லுவா .கால போக்கில்
நான் சேவை செய்த இடம் என்னை அதற்கு பழக்கி எடுத்து இன்று நான் regular
bowel opening தினசரி


விசுவாசி

20-12-2013 21:00

http://www.panncom.net/p/5931


manoharan

21-12-2013 06:11

இந்த புனிதமான மார்கழி மாதத்தில் உதெனப்பா உதுகளை எல்லாம் இஞ்சினை போட்டு குழப்பி அடிக்கிறியள்.எங்களை .ஏன் கன்னியளுக்கு அப்பிடி நடந்தால் அடுத்த அலுவளுகளை பாக்க வேண்டியது தானே / கிளினிக்கு போக வேணும் காட்ட வேணும் .மருந்துகள் குடுக்க வேணும் குழந்தை வளர .பிறகு பேத்துக்கு சரக்கு அரைச்சு குடுக்க உள்ளி /மிளகு /சீரகம் /வேர்கொம்பு /இஞ்சி தேட வேணும்
ஏன் ஐஞ்சு அறிவு பிராணிகள் என்ன கலியாணம் கட்டின பிறகே கரு தரிக்கினம் ?
நான் கண்ட அந்நியர்களில் கன்னியர்கள் கருத்தரிக்கும் ரேட் பிலிப்பீனியர்கலில்
வலு உச்சம் .கலியாணம் கிடையாது .ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்துவினம்
கரு தரிப்பினம் .பெறுவினம் .ஒரு மூட் வந்தால் கலியாணத்தை எழுதுவினம் .
ஒருவன் கேர்ள் பிரண்டியை அடிச்சு கொண்டு போட்டான் dubai இலை 2005 இல்
ஏன் தெரியுமே ? அவைக்கு பொறந்த பிள்ளை அவனை மாதிரி இல்லை எண்டுஅற்புதன்

19-12-2013 05:07

குரு பகவானின் அருள் பார்வை கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம்.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி