காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா - பம்பல்Kமனோ.


பாக்கியம் ஆச்சி ,ஆச்சி ஆக முதல் பாக்கிய அக்காவாக இருந்த காலம் அயல்வீட்டு அமுதர் ஓடை லவ்வாகி கலியாணம் கட்டி கொஞ்ச நாளில் அமுதர் சிங்கப்பூர் போய் விட்டார் தொழில் தேடி .வரியம் ஒருதடவை வருவார் விடுமுறையில் .அவர் வந்தால் ஊரே களை கட்டி விடும் .பாட்டு பெட்டி என்ன .கோழி அடி என்ன .வெளிநாட்டு உள்நாட்டு போத்திலுகள் உருளும் .வீடு வளவு வாய்க்கால் எல்லாம் ஒரே சன கூட்டம் ஏதோ கோயில் பூங்காவான திருவிழா மாதிரி .வரியம் ஒருமுறை வந்து அடுக்கடுக்காக எட்டு பிள்ளையளை பெத்து போட்டா பாக்கியம் அக்கா .
 
இப்பதான் பாக்கியின் சோதனை காலம் தொடங்க போகுது ஊழ்வினை பயனோ இல்லை எதுவோ யாரறிவார் .அமுதரிடம் இருந்து ஒரு கடதாசியும் (லெட்டெர் ) இல்லை .ஒன்றும் இல்லை .காலபோக்கில் அப்போ நடந்த இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அகப்பட்டு இறந்து போனார் போல என்று நினைத்து கட்டி பிடிச்சு ஒப்பாரி வைச்சு அழுது குளறி காச்சி படைச்சு மனதை தேற்றி கொண்டா பாக்கி .
 
 
எட்டு பிள்ளைகளில் ஐஞ்சு பேர் பெண் பிள்ளைகள் .மூன்று ஆண் பிள்ளைகள் .அநியாயம் சொல்லப்படாது பாக்கி ஊரில் ஐஞ்சு பெண் பிள்ளைகளுக்கும் அமுதர் அனுப்பின காசை சோக்கு பண்ணி சிலவளியாமல் ஐஞ்சு காணி துண்டுகள் வாங்கி விட்டிருந்தா .பிட்காலத்துக்கு சீதனம் குடுத்து அல்லே பெண் பிள்ளையளை கரை சேர்க்கலாம் என்ற தூர நோக்கு .பாக்கியின் கதை இவ்வாறு நகர்ந்து போகின்றது .உள்ளதை கொண்டு பிள்ளைகளை படிக்க வைச்சு எட்டு பேரும் நட்ட வாழை மரங்கள் போல் வளர்ந்து விட்டார்கள் .பாக்கி தன் மன வலிமை /உறுதியை பிரயோகித்து எல்லா பிள்ளைகளையும் கரை சேர்த்து போட்டா .
 
 
மூத்தவன் முருகதாசன் சீமெந்து பட்டேரியிலை வேலை .அவன் அங்கினை தெல்லிபலை பக்கத்து ஒரு பிள்ளை அவனோடை வேலை செய்யிற ஒரு பிள்ளையை லவ்வி கட்டி போட்டான் .நாடுவான் மோகன தாஸ் ஊரிலையே தாய் பேசின செல்லையாவிற்றை இளையவளை கட்டி போட்டான் .கடை குட்டி செல்வராசு அவன் மின்சார சபையிலை வேலை எண்டதாலை நல்ல கொளுத்த சீதனத்தோடை வீடு வளவோடை சிங்கப்பூர் சின்னையாவின்றை நடுவாளை கட்டி சுமூத் ஆக நகர்கிறது .பெண் பிள்ளையளையும் தான் வாங்கின காணியளை ஒரு பிள்ளைக்கும் வஞ்சகம் செய்யாமல் ஒருவருக்கும் கூட குறைய குடுக்காமல் எல்லாருக்கும் சமமாக பங்கிட்டு எப்படி ஒரு தாயானவள் தான் சமைத்த உணவை பங்கிட்டு கொடுப்பது போல் பகிர்ந்து கொடுத்து எல்லா பெண் பிள்ளைகளையும் கரை சேர்த்து போட்டா .
 
 
இனித்தான் பாக்கியின் வாழ்வில் இடி விழ போகுது .நாடு அல்லோல கல்லோல படுகுது .ஒரு புறா கூட்டில் வாழ்ந்த தாய் புறா + பிள்ளை புறா எல்லாம் சிதறி ஓட போகின்றது .கட்டி காத்து வளர்த்த பிள்ளை புறாக்கள் இப்போ சிறகு விரித்து பறந்து பிளேன் ஏறி வெளி நாடுகள் பறக்க போகின்றன .ஒன்றன் பின் ஒன்றாக எல்லா புறாக்களும் டென்மார்க் /நெதர்லாந்து /சுவிட்சர்லாந்து /கனடா /அவுஸ்திரேலியா எங்கும் பறந்து போய் இப்போ பாக்கி ஆச்சி தனிய .அவவுக்கு துணை அயல் வீடு மரகதமும் தூரத்து உறவு காறன் ஆன துரைலிங்கன் மட்டுமே .
 
 
 
இவ்வாறு கதை நகரும் போது ஒரு நாள் உள்ளூர் கொம்மிநிகேசன் சXXXXம் வீட்டில் இருந்து ஒரு அழைப்பு பாக்காச்சிக்கு .மூத்தவள் வயரில் கதைக்கிறா **ஏனெ ஆச்சி உன்னை பாக்க எனக்கும் உன்றை மருமொனுக்கும் உன்றை பேர பிள்ளையளுக்கும் சரியான ஆசையாய் கிடக்குதனை .பெரிய தண்ணி விடாய் மாதிரி .நாங்கள் பொன்சர் பண்ணி கூப்பிடுகிறோம் ஒருக்காய் வாவணனை .ஓஹோ அப்பிடியே சங்கதி .நான் பெத்த எட்டு பேரும் என்னை இஞ்சை தனியாய் தவிக்க விட்டு நீங்கள் எல்லாம் ஓடி ஒளிஞ்சு இப்பவே உங்களுக்கு தாய் பாசம் பொங்கி வழியுது .பொறடி நான் பெறா என்ரை அயல் வீட்டு மரகத  பெட்டைக்கு பிசுங்கான் குத்தி போட்டுதாம் அவள்தான் எனக்கு எல்லாம் அதை பாத்து விட்டு வந்து உனக்கு மறுமொழி சொல்லுகிறன்
 
 
தொடர்ச்சி .......
இரண்டாவது தொலை பேசி அழைப்பு மூத்த மகளிடம் இருந்து  ஆச்சி நீ வரமாட்டியே ? பெரிய எளுப்பம் விடாதையனை .நாங்களும் ஏலா கட்டத்திலை தான் உன்னை விட்டு போட்டு வந்தனாங்கள் இந்த வெள்ளை காற நாடுகளுக்கு .எனக்கு தெரியுமனை எங்கடை வெளிப்புலத்து கீரை மர கறி யலின்ட்ரை ருசி .நாங்கள் இஞ்சை காருகளிலை போய் சுப்பர் மார்க்கேட்டுகளிலை வெறும் பச்சத்தண்ணி மரக்கறியல் வாங்கி அடையிறோம் அணை என்ரை ஆச்சியே கோவியாதை அணை ஆச்சி ஒருக்காய் வா இந்த பக்கம் .உன்னை பாக்க நான் உன்றை பேர பிள்ளையள் ஏன் உன்றை மருமேனும் அடிக்கடி என்னை கேப்பார் கொம்மாவை ஒருக்காய் கூபிடுமன் .எனக்கும் உன்னை பெத்த கோச்சி
என்ரை மாமியை பாக்க ஆசையாய் கிடக்குது என்று அடிக்கடி சொல்லுவார் அவர் .
எடியே பிள்ளை அப்பிடியே கதை .எனக்கு உங்களோடை சரியான கோவம் எண்டாலும் --இல்லாட்டில் எட்டு பிள்ளை பெத்த எனை தனியாக தவிக்க விட்டு எட்டு திசை எங்கும் ஓடின உங்களோடை கோவம் இருந்தாலும் நான் பத்து மாதம் சுமந்து பெத்த பிள்ளையள் அல்லேடி நீங்கள் .எனக்கும் என்ரை பேர குழந்தையலை தூக்கி கொஞ்சவல்லெ வேணும் .வாரண்டி வாறன் .என்னடி செய்யவேணும் ?
ஆச்சி ஒண்டுக்கும் யோசியாதேங்கோ ஐரோப்ப முழுதும் 
நீ பெத்த பிள்ளையள் .ஒவ்வொரு நாட்டுக்கும் நான் உன்னை அனுப்பி எடுப்பன் .என்னடி அசுரோப்போ எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்லை அடி என்ன செய்ய போறாய் என்னை .உன்னை ஒண்டும் நான் செய்யேல்லை உன்னை இஞ்சை கூப்பிட போறன் பாஸ் போர்ட் ஐ எடு ......
 
மூன்று மாதம் கழித்து ஒரு தொலை பேசி அழைப்பு .
ஆச்சி பாஸ் போர்ட் எடுத்து போட்டியே ?
அதை ஏனடி  கேள்ப்பான் அந்த தாலியகட்டுவார் ஐலென்ட்ரி காட்டும் பிறப்பு சேட்டிவிக்கற்றும் கேட்டாங்கள் என்னட்டை .எங்கை  ஏது பிறப்பு செட்டிவிக்கற்று ? ஏதோ ஆச்சி அபப சொன்னவா தான் எடியே பாக்கி நீ பிறந்தது அண்டைக்கு அம்மன் கோயில் சிவராத்திரி கூத்து நடந்த நாள் எண்டு .......
ஆச்சி போங்கோ மனோகரன் எண்டு ஒருத்தர் எங்கடை ஊரான் .அவர் உதெல்லாம் செய்து தருவார் .எடியே மனோஹரனே .அந்த பொடி எங்கடை சிவக்கொழுந்து ஆச்சியிற்றை கடை குட்டி .சில நேரம் துள்ளுவான் தான் ஆனால் எல்லாம் செய்து தருவான் .
 
 
இப்போ பாஸ் போர்ட் எடுத்தாச்சு பாக்கி ஆச்சிக்கு .பாக்கி ஆச்சி வெளிநாடு போகும் புதினம் ஊர் முழுக்க காட்டு தீ போல் பரவி வருகினம் படை எடுத்து கொண்டு இல்லாத பொல்லாத உறவுகள் கொண்டாடி பல பேர்கள் .அக்கா வெளிநாடு போக போறியலாம்.? ஓமடி போகத்தான் போறன் அதுக்கு என்ன உனக்கு வைத்தேரிச்சலே ? இல்லை அக்கா என்ரை மூத்தவளும் அங்கினை நீங்க போற வெளிநாட்டிலை தான் .அவள் இப்ப மூண்டு மாதம் எண்டு கேள்வி இந்த பாசலை கொண்டு போய் குடுங்கோ 
இது போல பல சனங்கள் பாக்காச்சி வீட்டு முத்தத்தில் 
ஒருத்தி ஏதோ சாக்கு படகம் மாதிரி ஒரு பாசல் .அது அவவின் பேரன் மிக்சிகனுக்கு டெனிம் களிசான் .இன்னொரு பாட்டி பொரி விளான்க்காய்.அடுத்த ஒரு பாட்டி இடியப்ப உரல் .இதை கொண்டு போய் கொலண்டிளை குடுங்கோ அவன் சுதர்சன் பொடி கொண்டு போய் குடுப்பான் எங்கடை மூத்தவளிட்டை இதை கண்ட பாக்கிய ஆச்சிக்கு கோவம் பொத்தி கொண்டு வந்து எடியே நான் வருத்தம் நோய் துன்ப பட்டு இருக்கேக்குள்ளை எனை எட்டியும் பாராத நீங்கள் இப்ப வந்து விட்டியல் என்னட்டை ஏத்தி விட .நான் என்ன லொறியிலை ஏறி கொழும்புக்கே போறன் .நான் பிளைற்றிலை பறந்து போறன் என்ரை பிள்ளையளை பார்க்க அங்கை 20 கிலோ மட்டும் தான் விடுவாங்கள் எண்டு நான் கேள்விபடனான் அந்த காலத்திலை கனடா 
பக்கம் போனவைக்கு ஆளுக்கு 60 கிலோ விட்டவை .எங்கடை சனங்கள் செய்த திருகு தாளங்கலாலை அதுகும் இப்ப 22 குலோவுக்கு குறைச்சு போட்டாங்கள் . பாக்கி ஆச்சியின் பயணம் முடியவில்லை .
 
 
நான் இதொண்டும் எழுதி அடிக்கவில்லை .நீண்ட காலம்மாக என்மனதில் எழும் எண்ணங்கள் .இன்று ஏதோ தற்செயலாக எனக்கு கூகுளே மொழி பெயர்ப்பு கிடைத்தது மிகுதி இன்னும் எவ்வளவோ உண்டு மெல்ல மெல்ல வருவேன் உங்களுடன் கூடி குலாவ இது தொடரும் தொடர் கதை போல பாக்கிய ஆச்சி வெளி நாடு போய் அங்கு நடந்த கதை மீண்டும் தொடரும்.
 
பம்பல்Kமனோ - கலட்டி.


மொத்த வருகை: 1608 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (19)


சிரித்திரன்

24-03-2014 01:39

படித்ததில் இருந்து,
-----------------------------------------
முதுமை பேணிவந்தன
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று ஆன்றோர் கூறியதை மறக்கலாமா? அந்த வணக்கத்துக்குரிய தெய்வங்களை பாரமாகக் கருதுகிற இளைய தலைமுறையை என்னென்பது? பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் வயிற்றில் இருந்தபோது அவள் பாரமாகக் கருதியிருந்தால் இன்று நாம் பூமியில் பிறந்திருக்க முடியுமா? இதை எண்ணிப் பார்க்க இளைய தலைமுறைக்கு நேரமில்லை.
விலங்குகளின் குட்டிகள் நடக்கத் தொடங்கியதும் தாயை விட்டுப் பிரிந்து விடுகின்றன; பறவைக் குஞ்சுகள் சிறகு முளைத்ததும் தாயை விட்டு பறந்து விடுகின்றன. மனிதர்களும் அப்படியிருந்தால் பகுத்தறிவு பெற்று என்ன பயன்? நமக்கும், விலங்குகளுக்கும் வேறுபாடு என்ன?
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பார்கள். பழுத்த மட்டையைப் பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம். எவ்வளவு காலத்துக்கு இளமை இப்படியே இருக்கப் போகிறது? எல்லாருமே முதுமையை நோக்கியே பயணம் செய்கிறோம். இதுதான் உண்மை. இந்த உண்மையை சிந்தித்துப் பார்க்க நேரம் இல்லையா? மனம் இல்லையா?
"ஒரு தாய் 10 குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம்; 10 குழந்தைகள் ஒரு தாயைப் பேணுவது அரிது' என்பது சீனப் பழமொழி. "அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்றார் ஒளவைப் பிராட்டி. அருமையான காரியங்களைச் செயல்படுத்துவதே அறிவுடைய மனிதர்களின் அடையாளம். அந்த அடையாளங்களை இழந்து விட்டு வாழ்வதால் பயன் என்ன?

பிள்ளைகளைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு பல பெற்றோர்கள் தனிமையில் தனி வீட்டில் தவிக்கின்றனர். பணம் இருந்தும் உதவிக்கு ஆளில்லை; உறவுக்கும் யாருமில்லை; உபசரிப்புக்கும் யாருமில்லை. இதனைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அவர்களது பணத்துக்காகப படுகொலை செய்யும் பரிதாபப் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கே இருக்கிறது மனிதநேயம்?
திருவள்ளுவர் கூறியது போல உறுப்புகளால் மட்டும் ஒருவர் மனிதராக மாட்டார். கூர்மையான அறிவு பெற்றிருந்த போதும் மனிதப் பண்பு இல்லாதவர்கள் மரங்களைப் போன்றே மதிக்கப்படுவர்.
அரம்போலும் கூர்மைய ரேணும் மரம்போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்
என்று குறள் கூறுகிறது.
காயை விடக் கனி சுவையானது. இளைஞர்களைவிட முதியவர்கள் அறிவோடு அனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள். இந்த மூத்தவர்களின் அறிவையும், அனுபவத்தையும் இளைய தலைமுறை பயன்படுத்திக் கொள்வது அவர்களது முன்னேற்றத்துக்கு உதவும். வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பயன்படும்.


மனோகரன்

24-03-2014 06:30

நான் கதை வடிவில் சொல்ல வந்ததை அவர் அழகாக சுருக்கமாக அழகு தமிழில் திருக்குறளையும் மேற்கோள் காட்டி இரத்தின சுருக்கமாக வீசி உள்ளார் .சபாஷ் சரியான சப்போட்டிவ் மாட்டார் .


அகிலன்

23-03-2014 19:19

நல்ல ஒரு கிராமிய சமுக படப்பு ...மாறி வரும் உலகில் இப்படியான படைப்புகள்
பேணி பாது ஆக்க பட வேண்டியது ஒன்று ...


விசுவாசம்

23-03-2014 15:54

சிரித்திரன் சஞ்சிகை வாசிக்காத என்னைபோன்றவர்க்கு அதோடு எம்மூர் புழுதி மண்ணை சேர்த்து அடித்து அனுப்பிய உங்களுக்கு நன்றிகள் கோடி கோடி!
நாங்கள் வாழும் நாட்டில் இலை உதிர் காலம் வந்தும் வெள்ளை பனி புழுதி மட்டுமே உள்ளது.

பாக்கியம் ஆச்சிக்கு பிள்ளையள் 8, எல்லாம் எட்டா திசைக்கு. சீன நாட்டவர் 8 ஆம் நம்பர் தான் முழுமையானது இலக்கம் என்றும் லக்கி நம்பர் என்றும் சொல்வார்கள். மகாபாரதம் உருவானதே மூன்று 8 தானம் காரணம். வீஷ்மர் 8 ஆவது பிள்ளை, கண்ணன் 8 ஆவது பிள்ளை, சகுனி 8 ஆவது பிள்ளை. மூன்று 8 உம் முட்டி செய்த போர்.

பல கேள்விகளில் ஒரு கேள்வி,
ஆச்சி பாஸ் போர்ட் எடுத்து போட்டியே ?
அதை ஏனடி கேள்ப்பான் அந்த தாலியகட்டுவார் ஐலென்ட்ரி காட்டும் பிறப்பு சேட்டிவிக்கற்றும் கேட்டாங்கள்....

தாலி கட்டுறது என்ன தண்டனையா? யாருக்கு?


manoharan

23-03-2014 19:47

விசுவாசம் நான் சிறுவனாக இருந்த போது முதல்முறையாக அந்த ஒரிஜினல் தாலி கட்டு மணவறை ஓமம் வளர்த்தல் அம்மி மிதிதத்தல் அருந்ததி பார்த்தல் எல்லாம்
கண்டது உன் அம்மாவை உன் கொப்பர் கரம் பிடித்த கலியாண மண்டபத்தில் .அது நடந்தது அங்கு குஞ்சங்கலட்டியில் .எனது மாமன் .உன் கொம்மாவின் சித்தப்பன் மலை நாட்டு மலர்கள் கொண்டு வந்து மணபந்தல் எங்கும் அலங்கரிப்பு .அது எங்கை
நீ அறிய ? அப்ப நீர் பிறப்பதற்கு கற்பனையும் பண்ணி இருக்க மாட்டீர் .நான் அப்போ சின்ன சுட்டி பொடி.ஆனந்தமாக துள்ளி திரிந்த காலங்கள் .என்ரை மச்சாள் குலமனிக்கு கலியாணமாம் .அவ்வளவே எனக்கு தெரியும் .போனது .விளையாடினது .நன்கே அடைந்தது .


எஸ் .யாதவன்

23-03-2014 00:55

சிறந்த படைப்பு.அதுமட்டுமல்ல காலத்தின் பதிவு.எண்பதுகளில் வெளிவந்த செங்கையாழியானின் ஆச்சி கோழும்புக்கு பொகிறாள் என்ற குறுநாவல்போல் நகச்சுவையாக உள்ளது.அதைவிட எமது கிராமச் சூழலை களமாக கொண்டமைவதால் எம்பொன்ற தங்கள் இணைய வாசகர்களை மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது.மேலும் நகைச்சுவையுடன் தொடரை எதிர் பார்தபடி தங்கள் வாசகன்


manokaran

23-03-2014 05:24

யாதவனுக்கு நன்றிகள் .அதுதான் நான் எதிர்பார்த்து காத்திருந்தேன் .வாடிக்கை வாசகர்களின் கருத்தை இன்னும் காணவில்லை என்று .தொடர்ச்சி தொடரும்
விறுவிறுப்பாக கூடவே நகைச்சுவையுடன் .எந்த ஒரு இடத்திலும் தனிப்பட்ட எவரினதும் மனம் நோகும் படி நான் எழுதவில்லை .அனைத்தும் பொதுவாக எமது யதார்த்த நடப்பியல்
வாழ்வியல் சம்பவங்களை அடி ஒற்றியே நகரும் என்பதை கவனத்தில் கொள்ளவும் .


பலெர்மோ தமிழ் கிறுக்கன்

22-03-2014 15:57

வயது வந்தவர்களும் வெளி நாடு என்று வெளிக்கிட்டால் எமது முகவரிகளை தொலைக்கின்றோம் என்று அருமையாக சொல்லுகிறிங்கள் தொடரட்டும் ,


manoharan

22-03-2014 15:52

நான் கசுட்ட்ற பட்டு எழுதின .**பாக்கி ஆச்சியின்றை பயணம் ** கடைசியாக வந்த
15 கருத்துக்கள் ஓடை 16 ஆவது ஆக மறைஞ்சு போய் விடுமோ என்ற பயத்திலை இதை அடிக்கிறன்.நாளைக்கு ஞாயிற்று கிழமை .எங்கடை குஞ்சுகள் பாப்பினம் என்று ஒரு நப்பாசை அவைக்கும் நேரம் கிடைக்குமோ நான் அறியேன் .அதெல்லாம் அவர்களின் பழைய வாழ்ந்த வாழ்க்கையின் நினைவூட்டல்கள் .அவைக்கு நேரம் கிடையாது கண்டியலே .எடே மதர்சு நீ போடா பாரத நாட்டிய கிளாசுக்கு கொப்பா இரவைக்கு தான் வருவர் .அவள் சுக்சி எங்கயடா அவளும் DANCE கிளாசுக்கு போகவல்லே வேணும் .நீ நான் அவிச்சு வைச்ச அந்த இடியப்பத்தை அவன் இலை போட்டு சூடாக்கி தின்னடா என்ரை ராசு .செல்ல குஞ்சு நான் வேலைக்கு போகவேணும் .தாய் பாசம் அரவணைப்பு எல்லாம் இழந்து தவிக்கும் குழந்தைகள் .அவர்கள் வேறு எங்கு போக ? அதனால் தான் இன்று குழந்தைகள் முக நூலில் முகத்தை புதைக்கிறார்கள் .எனக்கு என் ஆச்சி முலை பால் மட்டும் ஊட்டவில்லை .எனக்கு ஒரு நோய் நொடி என்றால் பதை பதைத்து தோளில் சுமந்து மருத்துவம் செய்த ஆச்சி .இப்பத்தியில் ஆச்சி /அம்மா /மம்மி மாரிடம் அது ஒண்டும் கிடையாது .உன்னானை உதய் ஒளிக்காமல் ஒருக்காய் போடுங்கோ விடுங்கோ .நாளைக்கு எங்கடை BOSS இன்றை தாயின்றை திவசம் .அங்கயும் போகவேணும் .நேரம் இல்லை .


manoharan

21-03-2014 08:39

இந்த Concept அன்று சிரித்திரன் .எனும் சஞ்சிகையில் செங்கை ஆழியான் தொடராக
எழுதிய **ஆச்சி கதிர்காமம் போறா ** என்ற தொடரின் impact .இன்னும் பல தொடர்ந்து வரும் .பாக்கி lodge இல் .பின் கட்டுநாயக்கா AIRPORT பின் அங்கு ZURICH
AIR PORT இல் இறங்கல் இன்னும் பல .எனக்கு ஒரு மன வருடல் .நான் அனுப்பி கன
காலமாய் போச்சுது .ஏன் உவை இன்னும் வெளிவிடேல்லை என்று .இப்பவல்லே விளங்குது .ஏன் தாமதம் என்று .அவை ஒரு சீரியல் தயாரிக்குமா போல அதற்கு தேவையான பொருத்தமான படங்கள் தெரிவு செய்து EDITTING புள்ளடி அடி (அந்த புள்ளடி அடி தேவைதான் .நான் முடிந்த வரை எவரின் பெயரையும் குறிப்பிடுவதில்
இருந்து தவிர்ப்பவன் ) எல்லாம் சோக்காய் இருக்குது .இருந்தும் ஒரு மனக்குறை
படங்களில் உள்ள ஆச்சிமார் எல்லோரும் நம்மூர் ஆச்சிகள் இல்லையே என்பது .


ஆதங்கம்

21-03-2014 08:43

உங்கடை ஊர் ஆச்சிமாரை போட பேரப்பிள்ளையளுக்கு அப்பதான் ஒரு பாசம் பொங்கி ஏன் போட்டனீங்கள் எடுங்கோ எண்டெல்லே வருவினம்.


manoharan

21-03-2014 15:43

உண்மை தான் .நெதர்லாந்து ஒன்று கூட்டலில் ஒரு படத்தை போட்டதும் எடுங்கோ
உதய் எடுங்கோ என்று அவர்களின் சொந்தங்கள் சொன்ன போது அது எடுக்க பட்டது .
அது அவர்களின் மனோ நிலை .இருந்தும் இங்கே உள்ள ஆச்சிமாரின் படங்கள் கூட எங்கள் பழைய நினைவுகளை மீட்கிறது .அன்று நாம் செல்வ சந்நிதி //மாவிட்ட புரம்/
நல்லூர் கோயில்களின் தேர் திருவிழாக்களுக்கு ஆச்சி என்னை கையில் பிடித்து கூட்டி கொண்டு போய் கடலை கச்சான் வாங்கி தந்த காலங்கள் மீண்டும் நினைவில்
அன்று ராமநாத புர ஆச்சிமார் கடலை கச்சான் வறுத்து Fresh ஆக வித்த காலங்கள்
அவர்கள் தான் உந்த மாதிரி காதின் தோல் இழுபடும் வரை கடுக்கன் அணிந்து இருந்தார்கள் .அத்தனையும் அசல் பவுன் .இமிட்டேசன் பவுன் இல்லை .பறவை முனியம்மா மாதிரி .இப்போ இங்கு **அறுசுவை அரசி***என்று ஒருவர் வர போறாவாம் தமிழ் நாட்டில் இருந்து சமையல் பற்றி சொல்லி தர பட்டங்கள் குடுக்கிறத்துக்கும் ஒரு அளவு கணக்கு இல்லை .பிறகு அவவுடன் கூடவே உள்நாட்டு மல்லிகா ஜோசெப் உம் வருவாவாம் .அந்த அவ உண்மையில் superb அவ தமிழிலும் அந்த மாதிரி .சிங்கள channel களிலும் அந்த மாதிரி வாக்கியங்கள் பிரயோகம் .அவ இங்கிலீசு சொல்லு மற்றும் தமிழ் நாட்டு
வாணலி fry பண்ணி எடுத்துக்குங்கோ பெப்சி உமா சொல்வது போல நுனி நாக்கு தமிழ் /இங்கிலீசு அவவிடம் இல்லை ஒன்றும் பாவிக்க மாட்டா .ஒரிஜினல் ஆக நாங்கள் பாவிக்கும் தமிழ் நடை .எல்லாம் பணம் பண்ணும் வர்த்தக உலகம் இது


manoharan

21-03-2014 09:26

அது சரிதான் .இருந்தும் என்னை பெத்து வளர்த்த என்ரை ஆச்சியின்றை படம் என்னட்டை இல்லை .அப்ப அந்த காலத்திலை என்ரை ஆச்சியை ஐலென்ட்ரி காட்டுக்கு எடுத்த படம் மட்டுமே அதுகும் .என் சின்னண்ணன் அப்பி கொண்டு போய் விட்டார் .அவர் கூட இன்று உயிருடன் இல்லை .அப்ப நான் என்ரை ஆச்சியின்
படத்தை எங்கு தேடி பிடிக்க .எனது நரி மூளை நன்கே வேலை செய்தது .சுதர்சன்
உங்கினை எங்கையோ சொல்லி கிடந்தது தான் பிறந்த பின் தான் கலர் படங்கள்
வந்தது என்று நினைத்து எமார்ந்தாராம் .நான் கட்டின போதும் அங்கு கலர் படம் கிடையாது .என் நண்பன் ஒருவர் மூலம் ஜெர்மனி இல் இருந்து எடுப்பித்தேன் கலர்
பட FILM ROLL ஒன்றை .அதில் ஆக 16 SHOT கள் மட்டுமே .அதில் ஒரு படத்தில் ஆச்சியும் அப்புவும் புதுமண தம்பதிகள் அருகே .அதில் ஆச்சியின் படத்தை EXTRACT பண்ணி PRINT எடுத்து அவிட்டு விட்டேன் முக நூலில் .என்ரை அப்பூ உலகம் பூராக வியாபித்து கிளை பரப்பி வாழும் ஆச்சியின் பேர/ பூட பிள்ளைகள்
எல்லோரும் அந்த படத்தை பெறுமதியான பொக்கிஷம் ஆக கருதுவதை கண்டு உள்ளம் உவகை கொண்டேன் .**THANKS FOR THE TECHNOLOGY **


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

22-03-2014 22:44

தாமதத்துக்கு உண்மையான காரணம் நேர நெருக்கடி. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

ஊரவரின் படங்களுக்கு ஆதங்கம் சரியான கருத்தை தெரிவித்திருக்கிறார். பாசுபோர்ட்டு எடுத்துக்குடுக்கிற ஊராள் கொம்பிலீட்டருக்கு முன்னாள் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிற படத்தை போடக்கூட 2, 3 தரம் யோசிச்சுத்தான் போட்டது.


manokaran

23-03-2014 05:30

அந்த படத்தை போட 2/3 தரங்கள் யோசிக்க தேவை இல்லை .அது உண்மையாகவே எனக்கு நடப்பது .கொட்டாவி மட்டுமில்லை .நித்திரையும் தூங்கும் .இருந்தும் விடுகிறேல்லை .அடி அடி எண்டு அடிச்சு முடிச்சுத்தான் எழும்புகிறது .அது சரி இப்ப நான் வெளிக்கிடவேணும் .என்ரை BOSS ஒருத்தரிரின்றை தாயாரின் ஆண்டு திதி
வர சொல்லி சொன்னவை .பிந்தி போனால் கிளி தான் விழும் .


சிரித்திரன்

21-03-2014 07:58

ஆச்சி வெளிநாடு போற கதை வாசிக்கும் பொழுது பல இடங்கள் சம்பவங்கள் பலரது வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் என்னும் யதார்த்தம் புரிந்தது. அதோடு நாங்கள் வெளிநாடு வந்த கதை எழுதினால் எத்தனையோ அத்தியாயங்கள் எழுதலாம். எத்தனை விதமான மனிதர்கள், நாடுகள், விமான நிலையங்கள், சாப்பாடுகள், வெள்ளைக்காற கடவுச்சீட்டுக்களில் எம்மவர் திருமுகங்கள், ஏமாற்றங்கள், குற்றமிளைக்காமல் சிறைசாலைகளின் வாசங்கள் ,நேர்த்திகள்,பிரிவுகள்,புது உறவுகள்,.......அப்பப்பா எத்தனை விதம்விதமான அனுபவங்கள் வாழ்க்கையின் ஒரு குறுகிய காலத்தில்.
அசைபோடவைத்த ஆக்கத்துக்கும் ஆச்சிக்கும் நன்றிகள்!


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

22-03-2014 22:53

பல பல வெளிநாட்டு அனுபவங்களை சுருக்கி 56 சொற்களுக்குள் சொல்லிவிட்டீங்கள். கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், அறியா மொழிகள், இன்னும் எவ்வளவோ.

நாங்கள் வெளிநாடுகளின் சுயமாக அனுபவித்து இன்னும் விளங்காத விடயங்கள் பலதை நாட்டிலிருந்துகொண்டே பல வெளிநாட்டு விடயங்களை சரியாக விளங்கிவைச்சிருக்கிறார் பம்பல். இது வியப்பான விடயம்.


பண் த .பாலா

21-03-2014 07:32

இது ஒரு காலம். ஆனால் ஊரில் உள்ள முதியவர்களுக்கு விளக்கம் கூட என நினைக்கின்றேன்.


manoharan

23-03-2014 15:39

**எங்கள் வாழ்வும் எங்கள் சங்கே என்று முழங்கு சந்க்கூதி பிழைத்தவர் நாம் .ஊதடா
சங்கை கடலை வடை தேத்தண்ணி கிடைக்கும் .அப்பிடி வாழ்ந்த நாங்கள் இப்ப ஐரோப்பிய நாடுகள் போய் பேர பிளையலை தேடுகிறோம் அங்கினை ஐரோப்பா நாடுகளுக்கு கூப்பிட .மனோகரன் அண்ணை சொன்னார் அந்த காலத்திலை உந்த
எம்பசியை பேய் காட்டி விசா எடுக்கலாம் .இப்ப எங்கடை சனம் அவன்களை பேய் காட்டுவதால் அவை வலு ALERT


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி