காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.


தொடர்ச்சி ..........

பாசு போட்டு எடுத்து போட்டா பாக்கிய ஆச்சி .எவரும் அறியாமல் ரகசியமாக பயண ஒழுங்குகள் அமளியாக நடக்கின்றது .ரண்டு Bag நிறைய எதோ உர பை சாக்கில் அடைவது போல புழுக்கொடியல் மா /ஊறுகாய் /நல்லெண்ணெய் போத்தில் எல்லாம் அமுக்கு படுகின்றது எடியே பிள்ளை மரகதம் நான் போய் வருமட்டும் வீடு வாசல் /கோழியல் /ஆடு /மாடெல்லாம் கவனிக்கவேணும் வடிவாய் .வேலியிலை குழை வெட்டி கட்டு .அடுக்களையிலை கடகத்திலை கிடக்குது தவிடு .கோளியளுக்கு போடு .முன் படலையை துறந்து போடாதை .கள்ளர் காடையல் தூக்கி கொண்டு போவிடுவான்கள் பொருள் பண்டங்களை .நான் வரேக்குல்லை என்ரை பொடி பெட்டையளிட்டை சொல்லி உனக்கென்னடி வேண்டி கொண்டு வர ? ஐயோ எனக்கொண்டும் வேண்டாமனை.பாக்கியாச்சி பத்திரமாய் போய் வந்தால் காணும் .இல்லையடி எழுப்பும் விடாமல் உலவியாமல் சொல்லடி ஏதும் வேண்டி கொண்டு வர .சரி சரி கேட்டு போட்டியல் எண்டதுக்காக ஒரு வெளி நாட்டு செண்டு போத்தில் வேண்டியானை .எடியே எனக்கு தெரியும் உது உனக்கில்லை .நீ அந்த உங்கடை அயல் வீட்டு பொடியோடை எதோ இதாம் எண்டு நானும் கேள்விபட்டனான் .அவனுக்கு குடுக்கவல்லெ.குடடி குடடி. நானும் அந்த புண்ணிய வாளனை லவ்வி அல்லே கட்டினனான் .


எடே துரை லிங்கா பயணம் வெளிக்கிடேக்கை மம்மல் பொழுதிலை
ஒருத்தருக்கும் தெரியாமல் ஒளிச்சு வெளிக்கிட வேணும் .ஆரென் கேட்டால் சொல்லவேணும் .பாக்கியத்துக்கு எதோ பொல்லாத வருத்தமாம் .கொழும்பிலை பிற வெட்டு ஆசுவத்திரியிலை காட்ட கூட்டி கொண்டு போறன் எண்டு .வெளிநாடு போறோம் எண்டு எங்கடை பெண்டுகள் அறிஞ்சாலவை எண்டால் சாமானுகள் திருப்பி
விட்ட கோவத்திலை சாவம் போடுவலவை உந்த கிழவிக்கு விசா குடுக்கபடாது எண்டு .விசா கிடைக்காட்டில் எனக்கு பிறகு விசர் அல்லே பிடிக்கும் .
கொழும்புக்கு போய் நேரை கலியாணி லொச்சிலை.இறங்கிவிட்டினம்
முஹம்மத் நானா ஓடிவந்து ஹா வாங்க தம்பி எந்த எம்பசி ? விசா போம் எல்லாம் நாங்க நெரப்பி குடுப்போம்
ஒரு அரு நூறு ரூவாய் .எம்பசிக்கு ஏன்ட்ரை ஓட்டோ ஈக்குது .துரைலின்கன் பதில் இவ்வாறு
டாங்க்ஸ் நானா .நான் இஞ்சினை கொழும்பிலை பன்ரண்டு வருஷங்கள் பல சரக்கு கடையிலை வேலை செஞ்சேன் .சிங்களம் சுமாராய் ஓடும் இங்கிலீசும்
ஒரு மாதிரி yes /No /I dont know சொல்லி சமாளிப்பன்
போம் நிரப்புகிறதும் எங்கடை சிங்கர் அண்ணையிட்டை குடுத்து ஒரு சல்லி காசும் இல்லாமல் ஓசியிலை செய்யலாம் .அவர் உங்கினை
பக்கத்திலை புறக்கோட்டை மீன் சந்தையிலை * மாலு கடையிலை " இரண்டாம் மாடியிலை . சரி சரி தம்பி நீங்க செஞ்சுக்குங்கோ .இந்த சீன்கள் அன்று வழமையான சீன்கள் .மொழி அறியாமை கொழும்பு தெரியாமையை உபயோகித்து பணம் பிடுங்கிய காலங்கள் .

இப்போ இரவாக துரைலின்கன் சாப்பாடு கட்ட வெளிகிடுகிறான்
பாக்கியாச்சி உங்களுக்குஎன்ன
மச்சமோ /மரக்கறியோ கொண்டர ?
எடே மச்சம் கொண்டந்து போடாதை .இண்டைக்கு நுனசை தேரடா .

நான் விரதம் கண்டியே .சரி சரி உங்களுக்கு சைவ கடையிலை சுத்தி கொண்டு வாறன் .எனக்கு மீன் சாப்பாடு .பயண அலுப்பு தீர ஒரு காலும் போட்டு விட்டுத்தான் வருவான் பேசி கீசி போடாதை .சரி சரி போட்டா .நீ இல்லாட்டால் ஆரடா எனக்கு இதெல்லாம் செய்ய
? சாப்பாடு முடித்து படுக்கைக்கு ஆயத்தம் .பாயும் தலைகனியும் பாணி பினாட்டு மாதிரி ஒட்டியது .பாக்கியாச்சி நினைத்தா வெளிநாடு போறதென்றால் இதெல்லாம் அனுபவிக்க வேணும் போல என்று நினைத்து .அம்மாளே ஆச்சியே என்று சரிந்து
உறங்கி எழும்பினா விடிய .துரைலின்கனுக்கு ஒட்டிய தலைகணி ஒன்றும் பிரச்சனை இல்லை .மாட்டி போட்டுதானே அவர் .

விடிய இருவரும் ஓட்டோ ஒன்றில் எம்பசி நோக்கி .அங்கு நேர்காணல் ஒரு தமிழ் அம்மா . ""ஆச்சி என் போறியள் வெளிநாடு ??
அது அம்மா என்ரை எட்டு பிள்ளையளும் உங்கினை எதோ அசுரோப்பாவோ அந்த நாடுகளிலை. நானும் பின்னை நான் பெத்த பிள்ளையளையும் /பேர பிள்ளையளையும் பாத்து கொண்டு வரலாம் எண்டுதான் வெளிக்கிடுகிரன்.அது சரி ஆச்சி .ஆனால் சில ஆச்சிமார் உப்பிடி சொல்லித்தான் போவினம் .ஆனால் திரும்பி
வரமாட்டினம் .அதாலை இப்ப இஞ்சை புது சட்டம் நீங்கள் திரும்பி வரவேணும் என்பதற்காக ஒரு பெறுமதியான உறுதி ஒன்று தரவேணும் .ஐயோ அம்மா என்ரை அவர் சிங்கப்பூரிலை உழைச்சு கட்டின பெரிய வீட்டோடை பதின்றண்டரை பரப்பு காணியோடை அங்கினை அம்மன் கோயில் வடக்கு பக்கமாய் .அதை தரட்டே பிணைக்கு ? சரிஅப்ப அதோடை நாளை இண்டைக்கு வாருங்கோ .


மீண்டும் ஓட்டோ லொச்சை நோக்கி .எடே துரைலின்கா துறப்பை பிடி .நீ ஊருக்கு போய் பெரிய வீட்டு அறையை துற .இது பெட்டக துறப்பு .அதை துறந்தால் .இடபக்க மூலையிலை கட்டு கட்டாய் உறுதியல் கிடக்கும் .முகப்பிலை மஞ்சள் பூசி கிடக்கும் .அதுதான் வீடு வளவு உறுதி .எடுத்துகொண்டு ஓடி வாடா என்ரை ராசாவே .நான் நீ வருமட்டும் எதோ சமாளிக்கிறன் இஞ்சை .....
பயணம் தொடரும்

பம்பல்Kமனோ - கலட்டி.
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா - பம்பல்Kமனோ.


மொத்த வருகை: 1986 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (9)


காதல் மன்னன் கதிரேசன்

02-07-2016 10:51

இந்த இணையத்தின் ஆரம்ப கால நீண்ட நாள் வாசகன் என்ற கோதாவில் /ரீதியில் ஒரு மன கவலை ஒன்று. இணையத்தின் வடிவமைப்பு Web Design ) பிறகு ஏதோ கிராபிக்காம் எண்டு ஏதோ எல்லாம் செய்த எங்கடை சச்சியிற்றை மோனுக்கு கல்யாணம் நடந்தது எண்டு இடையில கேள்வி .ஏனப்பா இஞ்சினை கல்யாணத்துக்கு ,ருது சோபன விழா ,பிறந்த நாள் விழா ,ஊரார் ஒரு கூடல் ,கூடி கூழ் குடிப்பு இன்னும் எத்தினை அழைப்புகள் ??? உதையும் இஞ்சினை விட்டிருந்தால் நானும் வந்திருப்பான் அல்லே ? நான் கொஞ்சம் கறு வல் தான் .படங்களுக்கு தோதாய் இருக்காது எண்டு ரகசியமாய் செய்து போட்டினம் போல .ரசனி என்ன சிவலையே ?அமாவாசை கறு வல் .கழிய ல் களிம்பு மூஞ்சை உடம்பெங்கும் அப்பி கொண்டு தான் வந்து பேய்க்காட்டி கோடி கோடியாய் சம்பாரிப்பு .நான் ஒல்லாந்து எம்பேசிக்கு போனான் எண்டால் கண்ணை மூடி கொண்டு விசா கிறுக்கி தருவங்கள்
நாலு பாசு போட்டு .பக்கம் பக்கமாய் பல நாட்டு விசாக்கள் ஏதோ தாவால் முத்திரையிலை சீல் அடிக்குமா போல .வெளி நாட்டு கலியாண சாப்பாடு தின்ன நான் குடுத்து வைக்கேல்லை போல .பரு வாய் இல்லை .இப்ப இஞ்சை உள்நாட்டு கலியாண வீடுகளிலையும் எங்களுக்கே உரித்தான சாப்பாடு இல்லை Yellow Rice ,Fried Rice and so many menues After some times we can exept Chiken Biriyaani followed by Pizza /Mc.Donald / Burger King /K.F.C too
ஏதோ இவ்வாறு எழுதியதட்கு என்னை ஏசுபவர்களும் உள்ளார்கள் .நடப்பியல் விவகாரங்கள் என்னை இவ்வாறு எழுத தூண்டியது அதை விடுத்து இறுதியாக


திருமண பந்தத்தில் இணைந்த அந்த இளம் சோடி புறாக்களுக்கு என் இதய பூர்வ இனிய வாழ்த்துக்கள் உரித்தாவதாக ***manokaran

09-07-2014 15:04

எனது வழமையான வாசகும் நான் அன்புடன் நேசிக்கும் ஒருவர் .நான் ஊர் போன போது என்னிடம் கேட்டார் இவ்வாறு **எங்கை அண்ணை உங்கடை பாக்கி ஆச்சியின்றை பயனத்தின்றை மிச்சத்தை காணேல்லை அவிட்டு விடுங்கோவன் மிச்சத்தையும் **இது நடந்தது அந்த எங்கடை வாசிக சாலை குந்திலை நான் சொன்னேன் இப்பிடி .அது அவிட்டு விட்டு கன காலமாய் போச்சுது .அவங்களும் (அட்மின் ) ஒரே அடியாய் துறந்து கவுட்டு கொட்ட ஏலுமே ? அவைக்கும் பல சோலியல் அல்லே .இப்ப போட்டுவிட்டினம் போய் பாரும் .பாத்து போட்டு உம்மடை கருத்தை கூறும் .இன்று ஒரு நாலு missed call கள் அவரின் தம்பி திருக்கேசு விட்டை இருந்து .அவர் ஒரு அதிபர் .ஆறுமுக வித்தியாசாலையில் கவுன்மேந்து கணக்கிலை land போனிலை இருந்து என்ரை மொபைல் இற்கு ஒரே அடி .நான் வேலை அலுவலாக பாரிய இயந்திர அறைக்கு போகும் வேளை போன் கொண்டு போவது கிடையாது .பிறகு அது தப்பி தவறி விழுந்தால் எல்லாம் கதை முடிஞ்சு போகும் .இப்ப நான் பாவிப்பது ஒரு 15 இற்கு மேற்பட்ட போன் .save பண்ணின நம்பருகள் எல்லாம் துலைஞ்சு போய் விடும் துலைஞ்ச போனோடை .எதோ பங்கினை பழைய பேப்பர் ஒண்டிலை எழுதி கிடந்த அவரின்ற்றை அண்ணன் யாதவனின் நம்பரை தேடி பிடிச்சு அடிச்சு அடிச்சு எடுக்க அவர் சொல்லுகிறார் இப்பிடி **அண்ணை நான் இப்ப மோட்ட சைக்கிள் ஓட்டுகிரன். வீட்டை போனதும் உங்களுக்கு அடிக்கிறன். நான் றை பண்ணினது அவரின்ற்றை தம்பி திருக்கேசுவின்றை கை அடக்க தொலை பேசி நம்பரை கேட்க .எதுக்கு எடுத்தார் என்னத்துக்கு எடுத்தார் என்ற ஒரு எதிர்பார்ப்பில் .அவருக்கு என்ன ஓசியிலை கவுன்மேந்து கணக்கிலை சுழட்டுவார் .எம்மனம் பதை பதைக்கும் உவர் எதுக்கு எடுத்தார் .ஏதும் அவசர செய்தியோ என்று .நான் அடித்தேன் அதே நம்பருக்கு .அந்த
நம்பர் எந்த நம்பர் எண்டு எனக்கு தெரியாதல்லே .அடி அடி எண்டு அடிக்க ஒரு பொம்பிளை இப்பிடி சொன்னா "இது சுழிபுரம் ஆறுமுக வித்தியாசாலை என்று **
நான் சொன்னேன் உந்த நம்பரில் இருந்து பல MISSED CALL கள் எனக்கு அதுதான் எடுத்தனான் .
எடை அப்பிடியே சங்கதி .அது அவர் எங்கடை பிரின்சிபால் உங்களுக்கு எடுத்து இருக்கிறார் போல .நான் ஒரு STAFF MEMBER ORU TEACHER PADIPPICHU NAALU KAASU SAMPAARIKKIRA ORU TEACHER எங்கடை பிரிஞ்சிபல்லு உங்கை எதோ அவற்றை வீடு வளவு வேலி பிரச்சனை எண்டு AGA கந்தோருக்கு போய் விட்டார் போல சிலநேரம் அவர் யாழ்ப்பான கல்வி கந்தோருக்கும் போவார் பள்ளிக்கூட மற்றும் பிள்ளைகள் நாங்கள் ஆசிரியர்களின் நலன் மற்றும் welfare கருதி


மனோகரன்

29-06-2014 10:23

பெண் குலத்து வந்சியரும் கொம்பிலீட்டரும் ஒரே குரூப் .நிறுவுகிறேன் பாருங்கோ .எங்கடை பெண்டுகளும் நல்லாய் இருப்லவை.வாய்க்கு ருசியான பட்சணங்கள் அவிச்சு கொட்டி பரிமாருவலவை .கேட்டால் ஊட்டியும் விடுவாலவை .இப்ப நான் ஊட்டி விட சொல்லி கேட்டால் எனக்கு உலக்கை அடி தான் விழும் அது வேறை கதை .**உமக்கு ஊட்டலே இப்ப தேவை படுகுது .வெக்கம் இல்லையே உமக்கு ? பேர பிள்ளையளையும் கண்டு போட்டு ஊட்டி விடட்டாம் ** எண்டு சொல்லுவலவை .அடுத்து ஊர் விடுப்பு /விண்ணானங்கள் /துளாவாரங்கள் அனைத்தும் அவளவைக்கு அத்துப்படி .எல்லாம் விரல் நுனியில்
Finger Tip இலை Information Technology ஆனால் எந்த நேரம் எங்கு எப்படி எந்த ரூபத்தில் குழம்புவலவையோ யார் அறிவார் .பத்திர காளி வேஷமும் போடுவலவை .அதை கொண்டுவா .இதை வேண்டி கொண்டுவா என்னுவலவை .குறை குற்றம் கானுவலவை .அவையின்றை வீட்டை ஏன் போனனி ? வேத்து டே பார்டிக்கு போய் மூக்கு முட்ட போட்டு வயிறு நிறைய அடைஞ்சு போட்டு வர உமக்கு வெக்கம் /மானம் /ரோசம் எண்டது கடுகளவும் இல்லையே என்றும் கேட்பார்கள் .அந்த பாவம் போனது To maintain the Social itergrity & relationship .இதை வாசிக்கும் சில அன்பர்கள் நினைக்க கூடும் உதெல்லாம் எனக்கு இல்லை என்று "வீட்டுக்கு வீடு வாசல் படி " என்பது போல அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரணமாக அரங்கேறும் விடயங்களே இவை .சிலவேளை இடத்துக்கு இடம் அவற்றின் பரிமாணங்கள்/
சொரூபங்கள் வேறுபட கூடும் .
இனி கொம்பிலீட்டர்களும் உந்த பெண்டுகள் மாதிரியே .நல்ல தகவல்கள் அனைத்தும் விரல் நுனியில் தரும் .பண் கொம் ஈறாக
நல்ல காச்சி அவிச்சு படைத்தல் ஆனால் இருந்தா போல பத்திர காளி வேஷம் பூண்டு அடம் பிடிக்கும் .Refuse to start up .அடிக்கிறதெல்லாம் ஓடி ஒளியும் .நான் இப்ப பாவிப்பது எனது ஐந்தாவது மடி கணணி .ஒருதடவை என்னுடன் சேர்ந்து என் கணணியும் கொஞ்சம் துலங்கனை பாவிச்சு பின் Mother Board
ஐ மாத்தினேன் .கொம்பிலீட்டரை திருப்பி திருப்பி வேண்டலாம் .ஆனால் மனிசி மாரை வேண்ட ஏலுமே ? அதென்ன கடை சரக்கே
மாத்தி மாத்தி வேண்ட .எதோ குறை பாடு குறை குற்றனகளையும்
சமாளிச்சு கொண்டு வாழ்க்கை வண்டிலை ஓட்ட வேண்டியது தான் .கிரிக் கேக்க பிக்க மாட்டின்றை வாலை முறுக்கி இஞ்சாலை மாதகல் பக்கம் திரும்பு அவன் அந்தொனியிட்டை கொஞ்சம் விதை வெங்காயம் வேண்ட வேணும்


manoharan

26-06-2014 17:56

உள்பெட்டி ""inbox "" ஈ காயிதத்ததை டெய்லி துறந்து பாக்க நானென்ன VIP யே.அங்கினை கொம்பனி இலை இருந்து ஏதும் வேலை விசயமாய் எப்பாலும் இருந்துவிட்டு ஏதும் அனுப்புவாங்கள் .அதுக்கும் அனுப்பின உடனை எனக்கு போன்
அடிச்சு சொல்லுவினம் ஒருக்காய் துறந்து பாத்து immediate ஆய் reply அடிக்க சொல்லி .


சிரித்திரன்

27-06-2014 06:32

ஒருநாளைக்கு ஒருக்காய் எண்டாலும் ஈமெயில் துறந்து பார்க்கும் வழக்கதத்தை ஏற்ப்படுத்திக்கொண்டால் உந்த பிரச்சனை வராது.
பாக்கியாச்சியின் பயணம் யதார்த்தம் பிசகாமல் அமர்க்களமாக போகிறது. இந்த பாக்கியாச்சியின் பயணம் புலம்பெயர்வின் இரண்டாம் கட்டம் என்று சொல்லலாம். முதலாம் கட்ட புலம்பெயர்வாளரின் அனுபவங்கள் எத்தனை எத்தனை. லொச்சு கிடைப்பதே வெளிநாடு போனதற்கு சமம். பழசை அசைபோட வைத்துவிட்டா பாக்கிய ஆச்சி!


,மனோகரன்

27-06-2014 18:03

ஐயோ பாக்கியாச்சிக்கு லொச்சு வலு லேசிலை கிடைச்சு போச்சுது .அப்ப அந்த காலத்திலை கொழும்பு முழுக்க லொச்சல்லெ ? கலியாணி லொச்சு /பாலாஜி லொச்சு /
ஐலண்டு லொச்சு ''அங்கை அறையல் கனக்க "" பிறகு பன்காலை 15 ஆம் நம்பர் லொச்சு இன்னும் எத்தினை ? அதெல்லாம் இப்ப எங்கடை சனங்கள் மறந்து போச்சினம் .அவை இப்ப வெளி நாடுகளில்லை அல்லே ? எதோ போங்கோ அப்பா நீங்கள் உப்பிடியே .நான் போக போறன் பங்கினை நான் பிறந்து தவழ்ந்து வளந்த என்ரை ஊருக்கு .நான் கட்டின என்ரை அவளுக்கு சொல்லி போட்டன் .எடியே நான் எப்ப /எப்பிடி /எங்கை செத்தாலும் என்ரை சவத்தை கொண்டு போய் பங்கினை சம்பில்
சுடலையிலை எரிக்கவேனுமடி எண்டு சொல்லி போட்டன் .ஓம் ஓம் அப்பிடியே செய்யிறோம் .அவள் எனக்கு பயம் கண்டியலே .என்ரை ஆச்சி அப்பு .ஆச்சியை பெத்த அக்கை .அப்பு பிறகு அப்புவின்றை அப்பு விசுவர் உடலுகள் எரிச்ச இடத்திலை தான் என்ரை உடலும் எறியவேனும் எண்டு சொன்னதும் ""ஓமோம் அப்பிடியே செய்யிறோம் நாங்கள் ""எண்டு சொன்னாள் பாவி .ஹா ஹா அப்பிடி எண்டால் சரியடி எண்டு நான் சொன்னேன் .அவ்வளவு பாணம்/ பயம் அவள் எனக்கு .இல்லாட்டில் வேறை என்ன எங்கையோ பிறந்து எங்கையோ எப்பிடியோ வாழ்ந்து எதோ பம்மாத்து எல்லாம் விட்டு எப்படியோ செத்து கரண்டிலை எரிச்சு படம் பிடிச்சு காட்டுகிறதை விட .என்னூரில் அந்த சுடலையில் அக்கினியுடன் சங்கமம் ஆவது தனி சிறப்பு .மழுவை சுடலைக்கு ஒரு வெளிநாட்டு காரர் டெனிம் களிசான் அடிச்சு சப்பாத்தும் கொளிவி கண்ணில் கண்ணீர் சிந்தி வந்தார் கொஞ்ச காலத்துக்கு முதல் .முழுக்க பம்மாத்துகள் கண்டியலே .உதய் மாதிரி பம்மாத்துகாரர் பலபேரை பல வருடங்களாக நான் கண்டு கழித்து விட்டேன் பாருங்கோ .


மனோகரன்

27-06-2014 11:52

பின்னை இண்டைக்கு நடந்த கதையையும் கேளுமன் அண்ணை.என்ரை கொம்பிலீட்டார் குழப்பம் பண்ண கொண்டு போனன் வேண்டின இடத்திலை காட்ட .அவங்கள் சொன்னாங்கள் அது Service center உக்கு கொண்டு போய் காட்ட சொன்னாங்கள் .எனக்கு புண்ணிலை புளி பட்டது போல சூடேற அங்கினை பக்கத்தில் உள்ள என் உறவு வீடு ஒன்று போனேன் .அங்கு எம்மூர் பிள்ளை ஒன்று .நான் ஒரு பொழுதும் முகம் காணாத என்னூர் பிள்ளை ஒன்று .அவர்களிடம் கேட்டேன் உதார் உது பிள்ளை என்று .அவர்கள் விலாசத்தை சொன்னார்கள் .என்னை விட ஐந்து வயதுகள் குறைவு அவ ஸ்கண்டிநேவிய நாடு ஒன்றில் சீவியம் .அவ சொன்னா நான் உங்கடை எழுத்துக்களை ஒழுங்காக வாசிக்கும் ஒருவர் .ஆனால் கருத்து எழுத தெரியாது .நான் சொன்னேன் அது பெரிய வேலை இல்லை பிள்ளை .பண் கொம்மிலை கருத்து எழுதுவது வலு லேசு பிள்ளை என்று சின்ன ஒரு வகுப்பே நடத்தி போட்டு வந்தேன் .இனிமேல் அவவின் கருத்துக்களையும் எதிர்பார்க்கலாம் .என்னையும் என் எழுத்துக்களையும் சிலர் தூற்று கின்ற அதே வேளை முகம் தெரியாத அந்த பிள்ளை எனக்கு சொன்ன வார்த்தை இது .நீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ .நாங்கள்
வாசிப்போம் என்பது .அது எனக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறேன் .சிலர் தூற்றுவதையும் நான் அறிவேன் .தூற்றுவார் தூற்றட்டும் .என் பயணம் தொடரும் .அந்த பிள்ளை நான் இவ்வளவு காலமும் எழுதியவற்றை வசனம் வசனம் விடாது என்னிடம் சொன்ன வேளை என்மனம் உவகை கொண்டது .எனது
effort / முயற்சிக்கு இற்கு கிடைத்த பலனாக /பரிசாக நான் அதை கருதுகிறேன்


manokaran

25-06-2014 09:54

துரைலிங்கன் ஊரிலை இருந்து உறுதி கொண்டு வந்து எம்பெசிக்கு காட்டி பாக்கிய ஆச்சியின்றை பாசு போட்டிலை விசாவும் குத்தி போட்டினம் .எங்கையடா இன்னும் பயண கதையை இஞ்சினை காணேல்லை எண்டு கதி கலங்கி நான் . அனுப்பின ஈ காயிதங்களை திருப்பி அடிச்சு எடுத்து பாத்தன் .சரியான இடத்துக்கு போச்சுதோ ? இல்லாட்டில் வேறை எங்கயாலும் போய் விட்டுதோ எண்டு .சரியாய்தான் போய் கிடக்குது .இப்ப அல்லே விளங்குகுது விஷயம் என்னெண்டு .பொருத்தமான படங்கள் தேடி பிடிச்சு கொழுவி அடிச்சு விட்டு கிடக்குது .அவங்களும் பாவங்கள் அல்லே .வேலை வெட்டியல்.பெண்டில்பிள்ளையளோடை கொஞ்சி விளையாட வேணும் .எல்லாத்துக்கும் ஒரு நாளில் உள்ள 24 மணி நேரம் கானாதபா . அடுத்த பாகம் 3 இல்
Air போர்ட் பின் .inflight Flight பாக்கியின் அனுபவங்கள் .அதை தொடர்ந்து அங்கு
aIR போர்ட் இல் மேளும் மருமோனும் .பிள்ளைகள் சகிதம் வந்து கூட்டி கொண்டு போதல் ஈறாக இன்னும் பல சுவையான சங்கதிகள் தொடரும்


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

25-06-2014 13:28

பதில் போட்டனான் இப்ப நேரம் கொஞ்சம் இறுக்கம், கொஞ்சம் பொறுக்கச்சொல்லி.
உங்களுக்கு வாற ஈ-காயிதங்களை வாசிக்கிறேலையோ? அனுப்புறது மட்டும்தானோ?


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி