காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

காகிதம் உருவான விதம் - லொள்ளுபாண்டி.


நாம் தினசரி எழுத பயன்படுத்தும் காகிதங்கள் எவ்வாறு உருவாகி இருக்கும் என யோசித்தது உண்டா?

மனிதன் தன் நினைவாற்றலை தாண்டி சில தகவல்களை சேகரித்து வைக்கவும், மற்றவர்களுடன் பகிரவும் முற்பட்ட போது தான் உருவானவை எழுத்துக்கள்.
ஆதிமனிதன் முதன்முதல் எழுத்துகளைப் பதித்து வைத்தது கற்களின் மீதுதான்.


அப்படி எழுதப்பட்ட கற்களை, தேவை ஏற்பட்டபோது ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமங்களைத் தொடர்ந்து, விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளின் மீதும் மனிதன் எழுதத் தொடங்கினான்.
நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் பேப்பர்களின் தோற்றத்தைப் போன்ற பொருளில், உலகில் முதன்முதலில் எழுதியவர்கள் எகிப்தியர்தான்.

கி.மு.7-ஆம் நூற்றாண்டில் எகிப்தின் நைல் நதியின் டெல்டா பகுதியில் விளைந்த 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரம் "பாப்பிரஸ்' ஆகும்.

இந்தப் பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுப் பகுதியை நுண்ணிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் நீர் மற்றும் சில தாதுக்களைச் சேர்த்து, பதப்படுத்தி, பின்பு அதனை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, எழுதுவதற்கென்று பயன்படுத்தினர்.
பேப்பர் என்ற சொல்லும் பிறந்தது பாப்பிரஸ் என்ற வார்த்தையில் இருந்து தான்.

இதேவேளை சீனர்களும் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் எழுதி வந்துள்ளனர்.

கி.மு.206ம் ஆண்டு காலகட்டத்தில் சீனாவின் ஹான் வம்சத்தில் நீதிமன்ற ஆவண காப்பாளராக வேலை பார்த்து வந்தவர் சாய் லூன்.

எலும்புகளிலும், தடிகளிலும் எழுவதுற்கு பதிலாக மாற்று வழியை கண்டுபிடிக்க முற்பட்டார்.

அப்போது உதயமானது தான் பேப்பர், இதற்காக பல பரிசுகளை வழங்கி அரசாங்கம் கௌரவப்படுத்தியது, ஆனால் பேப்பரின் தடிமன் 5 mm ஆக இருந்தது.
சிறிது காலத்திற்கு பிறகு சாய் லூன் ஒரு காட்சியை பார்க்க நேரிட்டது,

அதாவது ஒருவகைக் குளவி, மரத்தைத் துளையிட்டு, அதன் மூலம் கிடைத்த சிறு மரத்துகள்களைக் கொண்டு, தனது கூட்டை வலிமையாகக் கட்டிக் கொள்வதைக் கண்டார்.

அப்போதுதான், மரத்தைக் கூழ்மயமாக அரைத்தால், பேப்பரை நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொண்டார்.

இதனையடுத்து பேப்பர் ஆலை நிறுவப்பட்டாலும், சீனர்கள் இந்த நுட்பத்தை யாருக்கும் சொல்லாமல் ரகசியம் காத்து வந்துள்ளனர்.

பின் கி.பி.751ல் நடந்த போரில் அரேபியர்களிடம் சீனா தோற்றுப் போகவே, பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட சீனர்களிடம் இருந்து அரேபியர்கள் பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டனர்.

தொடர்ந்து உஸ்பெஸ்கிஸ்தானிலுள்ள மர்கண்ட் என்ற இடத்தில் அதிகாரப்பூர்வமாக பேப்பர் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டது.

இந்நுட்பம் மற்ற நாடுகளுக்கும் பரவவே, 1844ஆம் ஆண்டில் சார்லஸ் மற்றும் கெல்லர் ஆகியோர் இணைந்து வெள்ளை நிறப் பேப்பரை உருவாக்கும் தொழில்நுட்பத்தினைக் கண்டறிந்தார்கள்.லொள்ளுபாண்டி - ஜேர்மனி.
மொத்த வருகை: 985 இன்றைய வருகை: 2

கருத்துரைகள் (3)


மனோகரன்

26-08-2014 20:33

சடு புடு /ரூபன் மற்றும் இந்த அருமையான ஆக்கத்தை வழங்கிய லொள்ளு .
இந்த மூவரையும் இணைத்து நான் ஒரு கதை சொல்கிறேன்
லொள்ளு தான் சடு புடு வோ தெரியாது
***இது மிகவும் தவறான தகவல் ,,,வைக்கலில் தான் பேப்பர் தயாராகியது என்று நான் அறிந்தது ......***
ரூபன் அறிந்த ஒரு சிறிய தகவலை மட்டும் அடிப்படையாக கொண்டு உண்மை தகவலை மிகவும் தவறான தகவல் என்று சொல்வது மிக மிக தவறானது .
வைக்கோலும் காகித உற்பத்திக்கான மூல பொருள்களில் ஒன்று என்ற போதும் இன்றைய உலகின் காகித தேவையைக்கான பெரும்படி யான மூல பொருள் மரங்களே .விசேடமாக ஸ்கண்டிநேவிய நாடுகளில் பெரும்படியாக உள்ள ஊசி இலை காடுகளில் வளரும் மரங்களே .மரங்கள் மற்றும் வைக்கோல் நீராவியினால்
(Steam ) அவிக்க பட்டு கூழாக்க படும் --பேப்பர் pulb (எங்கடை ஒன்று கூட்டளுகளிலை காச்சுகிற கூளுகள் மாதிரி ) பின் குளோரின் கொண்டு வெளிற பண்ணி (bleach ) அமூக்கி இயந்திரங்கள் மூலம் அமுக்கி தேவையான தடிப்பங்களில் கடதாசி ஆக மாற்ற படும் .
உலகளாவிய ரீதியில் .இயலுமான வரை கடதாசி பாவித்து File களில் ஆவணங்கள் மைண்டேன் பண்ணுவதை தவிர்த்து கம்பிலீட்டர்களில் செய்ய சொல்லு ஊக்குவிக்க படுகின்றது .அதோடு வேஸ்ட் கடதாசிகளை எரிக்காமல்
மீள் சுழற்சி (recycle ) செய்யவும் உபதேசிக்க படுகின்றது .காரணம் மரங்கள் வீழ்த்த படும் விகிதத்தை குறைக்கும் பொருட்டு .
நல்ல ஆக்கங்களுக்கு இவ்வாறான தவறான கருத்துக்கள் வருவதை கண்டு ஆக்கி படைப்போர் சோர்வடைய கூடாது .எல்லாம் அறிவூட்டலும் + விழிப்புணர்வு செய்யும் நோக்கில் நகர வேண்டும் .wel டன் LOL பாண்டி .
.


சடுபுடு

26-08-2014 19:10

உதுகள் எங்களுக்கு ஒண்டும் தெரியாது அங்கினேக்க படிக்க சொல்லி வேண்டி தர்ற கொப்பி புத்தகத்தை கடலை காறியிட்ட குடுத்து கச்சான் வாங்கி சாப்பிட்டது தான் தெரியும் ...அங்க அசுபளத்துகு வாழி கம்பி குடுத்தவையும் கச்சான் காரிக்கு கொப்பி புத்தகம் குடுத்தவையும் பிசுங்கான் பெறிக்கி வித்தவையும் இப்ப கொம்பிலிட்டரில எதோ தாங்கள் தான் எல்லாத்தையும் கண்டு பிடிச்ச மாதிரி கிறிக்கி தள்ளுனம் .....பழசெல்லாம் மறந்து போச்சு..............சரி எதோ அவன் பாவியால நல்லாய் இருக்கட்டும் அவரும் போய் சேர்ந்து விட்டார் எண்டு கேள்வி -


ரூபன்

26-08-2014 17:51

இது மிகவும் தவறான தகவல் ,,,வைக்கலில் தான் பேப்பர் தயாராகியது என்று நான் அறிந்தது ......


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி