காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

கொடிய பாவத்துக்கு சமம்.


மதுபானத்தை ஒரு தட்டிலும், மற்ற பாவங்களையெல்லாம் ஒரு தட்டிலும் வைத்தால் சரிசமமாக இருக்கும்.

குடிவெறியை விடக்கொடிய பாவம் எதுவும் இதற்கு முன்னும் இருந்ததில்லை; இனிமேல் இருக்கப்போவதுமில்லை.மொத்த வருகை: 1060 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (121)


மனோகரன்

25-09-2014 15:32

1000 வருகைகள் தாண்டி விட்டது .கருத்துக்கள் 115 .சிலர் நினைக்க கூடும் .சொல்ல கூடும் இவ்வாறு .** என்ன உவர்தான் அடிக்கடி வாரார் போல .அவரே பல கருத்துக்களும் எழுதுகிறார் .அதிலும் ஒரு உண்மை இருந்த போதும் .நான் வேலை வெட்டி பிராக்கு ஒண்டும் இல்லாமல் இஞ்சினை வரவும் இல்லை கிறுக்கவும் இல்லை .எங்களுக்கும் பல சோலியல் இருக்கத்தக்கதாக தான் நான் இங்கு வந்து வாசிச்சு கிறுக்குறேன் .அது என் ஊர்மேல் உள்ள பிணைப்பு .வருகைகளை 1000 திற்கு உயர்த்திய அனைத்து வாசகர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் .எனக்கு தெரியும் வாசகர்களில் பல விதம் .
1) வாசிப்பது மட்டும்
11) வாசித்த பின் அதற்கான காத்திர மான கருத்தை சொந்த பெயரில் சொல்பவர்கள்
111) வாசிப்பினம் .பிறகு இரவல் பேரில் வந்து கருத்து சொல்லும் கருத்து கந்த சாமியல்
iv ) வாசிப்பினம் ஏதும் எழுத வேணும் என்று நினைப்பினம் .எழுதி அடிக்க நோடிக்க பூதி .மனிசி காறியிட்டை **எடியே எப்பிடி அடிச்சு அனுப்புகிறது ஒருக்காய் எனக்கும் சொல்லி தாடி ** என்று கேட்டால் அவ சொல்லுவா எனக்கு இண்டைக்கு நைட் duty பங்கினை பொடி பெட்டையளிட்டை கேளுங்கோ எண்டு சொல்லி அவ காரை சுழட்டி கொண்டு நைட் duty உக்கு போய் விடுவா .பிறகு இந்த பாவம் பொடி பெட்டையைட்டை போய் கேக்கும் *எனக்கும் உதய் கொஞ்சம் சொல்லி தாருங்கோ **
அப்பா நீங்கள் அங்கை எதோ பெரிய படிப்பு படிச்சநீன்கலாம் உதுகும் தெரியாதே உங்களுக்கு ? என்று சொல்லி பிள்ளைகளும் விலகி போக அவர் வாசிப்பு மட்டுமே .அடிச்சு அனுப்ப நோடிக்க பூதி .பாவம் அந்த மனிசன்
இது போல பல அலுவல்கள் பிஞ்சினை .


வாட்டுவான்

26-09-2014 00:33

நீடுழி வாழ்க என் அன்பு அண்ணா


மனோகரன்

26-09-2014 15:25

நீடூடி வாழ நாங்கள் என்ன 500 /600 வரியங்கள் சீவிக்கவே இஞ்சை பிறந்து இருக்கிறோம் .ஆக கூடியது ஒரு 100 வரியங்கள் மட்டுமே .அன்று என்கிராமத்தில் ரண்டு சோடிகள் எங்கு போனாலும் ஒன்றாகவே போவார்கள் .கூனல் விழுந்தும் புரியணும் பெண்டிலும் ஒன்றாகவே போவார்கள் .ஐயோ அதை நான் வாசிக சாலை குந்தில் குந்தி இருந்து ரசித்தவன் .இன்று அது போல ஜோடி ஒன்றை கனவிலும் காண கிடைக்காது .இப்ப அவை ஆந்திரா பெட்டை அவள் ஜோதிக்காவின்ரை புரியன் எங்கடை சிவகுமாரின்றை மேன் அவன் அந்த பொடியொடை நடிக்கிற லவ்வு சீன்களை அல்லே ரசிக்கிறோம் .இன்னுமொரு காதல் ஜோடி புறாவை கண்டேன் என்னூரில் .எங்கு போனாலும் ஒன்றாகவே போவார்கள் 80 கழிந்தும் .அது அந்திஎட்டியோ இல்லை ஆட்ட திவசமோ இல்லை கலியாண வீடோ எங்கும் சோடியாக நிற்பார்கள் சாப்பிட அவ்வாறு தான் நாங்கள் அன்று வாழ்ந்தோம் .சொந்தம் பந்தம் அழைப்பு எதுவும் இன்றி ஒருதாய் மக்கள் பெற்ற பிள்ளைகள் போல வாழ்ந்த ஒரு காலம் .இன்று எல்லாம் கண்மூடி மறைக்க பட்டு **எடியே உவை உனக்கு காட்டு தந்தவைஎடி ? இல்லை அப்பிடி எண்டால் நீ போகாதையடி என்று வாழும் பேதலிகள் நாம் .சொந்த பந்தம் உறவுகள் ஊர் வழக்கம் எல்லாம் மறந்து எங்கோ பறந்து போகிறோம் நாம் .இப்பிடியே போனால் வலு திறம் தான் எங்கள் எதிர்காலம் .போவோம் வாருங்கோ உப்பிடியே ..உவர் எதோ அலட்டுகிரார்
வாடி போவோம் நாங்கள் எங்கடை பிராக்கை பாத்து கொண்டு .எடியே இஞ்சை வாடி உன்றை புரியன் நீ அந்த காலத்திலை புல்லு செருக்கின கடகம் உளவாரம் எல்லாம் படம் பிடிச்சு உங்கடை வீட்டிலை நடு hall இலையும் மாட்டி பத்தாததுக்கு
அங்கினை முக நூலிளையும் விட்டு கிடக்குதடி .அதுக்கு நீ என்ன சொல்லுகிறாய் ?
அந்த ஆளுக்கு லூசடி .கொஞ்சம் நட்டுகள் கழண்டு போச்சுதடி .வாடி நாங்கள் போவோம் எங்கடை பிராக்கை பாத்து கொண்டு .என்ரை அப்பூ மறந்து போனனடி இண்டைக்கு எங்கடை அவள் பிளின்சியிற்றை பெர்த் டே பார்டியடி பின்னை வரட்டே


manoharan

26-09-2014 10:38

எடே என்ரை தம்பி வாட்டுவான் லேசான சாமான் இல்லையடா என்ரை தம்பி அது பொல்லாத சாமான் .எத்தினையோ பேரை வாட்டி எடுத்த சாமான் அது .அதை பற்றி எழுதுவத்ன்றால் வேறாக எழுத வேணும் .அதன் மைகிமை பற்றி முன்பு எங்கோ இங்கினை கிறுக்கியதாக ஞாபகம் .எம்மூரின் மத்தியில் வாட்டுவான் இழுக்கும் மத்திய நிலையம் ஒன்று .அங்கு தூர இடங்களில் (சித்தன்கேணி ஈறாக பலர் ஒன்று கூடுவார்கள் ) உங்கடை ஒடியல் கூழ் /கொத்து ரொட்டி பாட்டி போல .எல்லாம் சொல்ல ஏலாது .ஒன்றை மட்டும் சொல்கிறேன் .முன்பொரு காலம் நான் சீவிய இடம் ஒன்றில் வாட்டுவான் இழுப்பது ஒரு நோமல் காரியம் .ஒளிச்சுதான் இழுப்பினம் .அங்கு ஒழுக்கம் (discipline ) முதன்மை .ஒழுக்க பரிபாலகர் (மாஸ்டர் at Arms ) என்று .அவரிடம் மாட்டினால் கதை சரி .நீதி மன்றில் வழக்கு விசாரிப்பது போல் பெரும் விசாரணை .பின் தண்டனை .ஒருமுறை வாட்டுவான் இழுத்த மூவர் கையும் மெய்யுமாக அம்பிட்டு விசாரணை நடக்குது .வாரத்தில் ஒருமுறை அது நடக்கும் இங்கிலீசிலை **defaulter 'parade ** என்றும் தமிழில் குற்றவாளிகளின் அணிவகுப்பு .விசாரிக்க பட்டு தகுந்த தண்டனைகள் வழங்க படும் .வேலையில் இருந்து நீக்கல் (சிறை தண்டனை ஈறாக ) சிலருக்கு உள்ள பதவியில் இருந்து கீழ் இறக்கம் (Demotion ) வருடாந்த சம்பள உயர்வு (Annual salary increment stoppage ) இன்னும் பல .

இந்த வாட்டுவான் விசாரணையில் பெரும் புத்னம் நடந்தது .விசாரணையின் முடிவில் தீர்ப்பு இவ்வாறு ** சரி பிள்ளைகளாய் ** (ஹறி லமயோய் ) நீங்கள் வாட்டுவான் இழுத்தீர்கள் .அது பெரும் குற்றமல்ல .அது ஒரு மருந்து (ஏக்க ஏக்க ஔஷதயக் ) பருவாய் இல்லை .ஆனால் நல்லாய் பால் (மில்க் ) குடிக்க வேணும் .நல்லாய் சாப்பிடவேணும் கண்டியலே .உங்கள் குற்றங்களில் இருந்து உங்களை நான் விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கின்றேன் .
ரகசியம் என்ன தெரியுமே .விசாரித்த அந்த உயர் அதிகாரியும் ஒரு பிரபல வாட்டுவான் பிரியர் .அவர் தனது 86 ஆவது வயதில் அண்மையில் காலமானார் என்று அறிந்தேன்


மனோகரன்

23-09-2014 14:07

சாவகச்சேரி நீதிமன்றம் கூடுகின்றது .விபச்சாரம் செய்து மாட்டிகொண்ட விமலாதேவியின் வழக்கு விசாரணைக்காக .
குற்றவாளி கூண்டில் அவள் .நீதவான் வருகிறார் .வழக்கு இலக்கம் வாசித்து பகவத்கீதை புத்தகம் அவள் முன்னால் நீட்ட பட்டு சத்தியம் செய் படுகின்றது இவ்வாறு **நான் சொவதேல்லாம் உண்மையே ! உண்மையை தவிர வேறேதும் இல்லை ** சத்தியம் பண்ணும் போது அவள் தனக்குள்ளே முணு முனுத்தால் இவ்வாறு .நான் உண்மை சொல்லாமல் பொய் எ சொல்லபோரன் .காசு வேண்டி கொண்டு பொய் சாட்சி சொல்ல வந்த கள்ள சாட்சியே நான் ? கோட்டு முதலியிடம் அவள் கேட்டாள் .**உதென்ன அண்ணை --பகவத் கீதையே --கொண்டு போகாதேங்கோ எனக்கு பிறகு உது தேவை படும் .உங்கினை வையுங்கோ
இப்போ அரச தரப்பு வழக்குரைஞர் கோட்டில் உள்ள தூசியை தட்டி கம்பீரமாக எழுந்து நின்று **கனம் நீதி பதி அவர்களே ! இதோ இங்கு குற்றவாளி கூண்டில் நிற்கும் இந்த பெண் ஆனவள் நேற்று இரவு ஆ9 வீதியில் உள்ள அநேக Inn கள்
guest ஹவுஸ் கள் மற்றும் Body to Body மசாஜ் கிளிநிக்குளில் ஒன்றான **பால் நிலா ** inn இல் விபச்சாரத்தில் ஈடு பட்டிருந்த வேளை கையும் மெய்யுமாக சிறீ இலங்கை பொலிசினால் கைது செய்ய பட்டு இங்கே நிறுத்த பட்டுள்ளார்
நீதவான் :- குற்றவாளிக்காக வாதாட வழக்கறிஞர்கள் இல்லையா ?
விமலா ::-- ஐயா வழக்கறிஞர்களை நாடினேன் .அவர்கள் கேட்கும் பெரும் தொகை பணம் என்னிடம் இல்லை ஐயா .அதனால் நானே என்தரப்பு வாதங்களை கூற அனுமதி தாருங்கள்
நீதவான் :- ஓகே accused request is granted you can proceed .Before that you tell something about you .(அதை தமிழிலை சொல்லி இருக்கலாம் அல்லே .கோட்டிலை கூடி உள்ள சனங்கள் என்ன வெள்ளைக்காரர் ஏ ? அவரும் தன்றை இங்கிலீசு பாண்டித்தியம் காட்டினார் .விமலாவுக்கு இங்கிலீசு விளங்கும் )
விமலா : ஐயா நான் என்னை பற்றி முதலில் சொல்லுகிறேன் .நான் வடமாராட்சியில் அழகிய குக்கிராமம் ஒன்றை சேர்ந்தவள் .என் அப்பர் தமிழ் பள்ளிக்குடம் ஒன்றில் தலைமை வாத்தியார் (அதிபர் ) இள வயதில் இருந்தே குடி குடி என்று குடித்து 52 ஆவது வயதில் பரலோகம் போய் விட்டார் .அவரின் இழப்பை தாங்க முடியாமல் அம்மையும் அவர் பின்னே போக நான் அநாதை ஆனேன் .இருந்தும் நான் படிப்பில் கெட்டிக்காரி என்பதால் அம்மையின் தம்பி மார்க்கண்டு மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தேன் .அவர் என்னை பிரபல பெண்கள் கல்லூரியில் சேர்க்க நான் A /L இல் நல்ல results எடுத்தும் பல்கலை கழகம் பூர முடியவில்லை .இருந்தும் நான் சும்மா இருக்கவில்லை ஐயா .சட்ட கல்லூரி புகு முக சோதினை எழுதி எடு பட்டு விட்டேன் .இருந்தும் கொழும்பு போய் படிக்க வசதி இல்லை .மார்க்கண்டு மாமாவும் ஒரு தோட்ட கார விவசாயி .அவரின் பாடும் பெரும் கஷ்டம் .இப்படியே காலம் போகையில் மாமா எனக்கு ஒரு வெளிநாட்டு மாப்பிளையை பேசினார் .எனக்கெண்டால் துளி அளவும் விருப்பமில்லை வெளி நாட்டு காரரை கட்ட .எதோ மாமாவின் வற்புறுத்தலினால் ஓமென்ன வல்லிபுர கோயிலிலை மாலை மாத்தி கலியாணம் முடிஞ்சு ஒன்றரை வருடங்கள் இங்கிருந்து இரண்டு பிள்ளைகளையும் தந்து பின் வெளிநாடு போய் விட்டார் அவர் .போகும் போது சொன்னார் **நான் போனதும் முதல் வேலை உன்னை sponsor பண்ணி கூப்பிடுகிறது தான் என்று சொன்னார் ஐயா .போனதும் போனவர் தான் ஒரு காயிதமும் இல்லை கதை பேச்சும் இல்லை ஐயா .அங்கெ வெள்ளை காரியை கட்டி போட்டார் என்று அறிந்தேன் ஐயா .வேறு வழி இல்லாமல் தான் இந்த தொழில் இறங்கினேன்
நீதவான் : very pathetic கேஸ் I sympathize .அப்போ ஏன் மகளே இந்த இழி தொழில் செய்யாது வயல் வெளியில் கூலி வேலை செய்து வயித்தை கழுவி தன்மானத்தோடு சீவிக்கலாம் தானே ?
விமலா :- ஐயோ ஐயா அதையும் செய்து பார்த்தேன் ஐயா .வெங்காய பாத்தியில் புல்லு பிடுங்கவும் போனேன் .பத்து மணிக்கு அரை ராத்தல் பாணும் ஒரு பிலேண்டியும் தருவார்கள் .அதை தரும் போது கையை சுரண்டுவார்கள் .கண் அடிப்பார்கள் .மதியம் ஆக கூலி தர வயல் சொந்த காரன் வந்து காசு தரும் போது என்போன்ற இளம் பெண்களுக்கு சொல்வார்கள் பொழுது பட வீட்டை வா பிள்ளை இன்னும் கொஞ்ச காசு தர வேணும் என்று சொல்வார்கள் .சில இளசுகள் போனவைதான் .எனக்கு ஏன் அந்த கேவலம் கெட்ட தொழில் என்று ஒதுங்கி இருந்து விட்டேன் .இவ்வாறு போகும் போது தான் தூரத்து உறவுக்கார சன்முகண்ணை சொன்னார் வா பிள்ளை உனக்கு நல்லொரு Job ஒண்டு எடுத்து தாறன் A 9 இலை உள்ள ஹோட்டல் ஒன்றில் என்று சொல்ல நானும் நம்பி போனேன் .அங்கு போனதும் முகாமையாளருக்கு என்னை அறிமுகம் செய்தார் .அவர் நான் செய்ய வேண்டிய கடமைகளை Brief பண்ணினார் .பெட் சீட் தலைகணி உறை மாத்த வேனும்மாம் .அறைகளை கூட்டி துப்பரவு பண்ண வேணுமாம் .பாத் ரூம் எல்லாம் பழ என்று இருக்கவேனுமாம் .நல்ல சம்பளம் தருவோம் அதோடு முக்கியமாக Guest
மாரை மனம் நோகாமல் கவனிக்க வேணும் .நான் சொன்னேன் ஓம் Sir எல்லாம் வடிவாய் செய்கிறேன் என்று சொல்லி செல்வ சந்நிதியானுக்கும் நன்றி சொன்னேன் மனதார .முருகா இப்பவாவது கண்ணை துறந்து போட்டாய் என்று .இன்னும் சில மணி நேரங்களில் என் கண்ணிரண்டும் கெட போவதை நான் அறியவில்லை .
மாலை ஆகி மம்மல் பொழுதில் நான் சுத்தம் பண்ணி கொண்டிருந்த அறையின் கதவு தட்ட பட்டது .முகாமையாளன் உள்ளே நுழைக்றான் .நல்ல சென்ட் அடிச்சு கொண்டு .இன்று நான் முகாமையாளன் இல்லை Guest என்னை கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று என்கரம் பற்றினான் .என் உடல் எங்கும் வெட வெடத்து நடுங்கியது .தள்ளினான் கட்டில் மேலே .அவனுக்கு தேவையானதை செய்து முடித்து ஆயிரம் ரூவாய் நோட்டு ஒன்றை மேசை மேல் வைத்து விலகி சென்றான்
அன்று தொடங்கியது தான் ஐயா இந்த தொழில் .ஒரு நாளைக்கு நான்கு ஐந்து வாடிக்கையாளர்கள் .அதில் எத்தனை ரகங்கள் .பெரும் பண முதலைகள் டாக்குத்தர் இஞ்சினியர்மார் .அரசியல் பிரமுகர்கள் .இன்னும் பலர் .ஏன் பொலிஸ் அதிகாரிகள் கூட .சுற்றி வளைப்புக்கு என்று வருவார்கள் .அவர்கள் சுற்றி வளைக்க முதல் எனது வளைப்பில் வீழ்ந்து விடுவார்கள் .இந்த முறை மாட்டி விட்டேன் .வந்த அந்த பண்டா வின் மேலதிகாரியின் கடும் உத்தரவு .ஏதாவது கேஸ் கொண்டு வந்தால் தான் உனக்கு promotion என்று .என்னை கொண்டு வந்து இந்த தொழில் மாட்டிய சன்முகன்னைக்கு நான் திருப்தி படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 100 ரூப வீதம் கொமிசன் .நான் இரவாகி வீடு போனதும் அயலவர் கேட்பார்கள் .என்ன பிள்ளை எந்த நாளும் பிந்தி வருகிறாய் .அவ்வளவு வேலையே என்று **என் சோடித்த பதில் இவ்வாறு .அது நான் அங்கினை அரியாலையிலை institute ஒன்றில் Computer கிளாஸ் எடுக்கிறனான் .சில பிள்ளையள் டவுட் கெட்டால் கிளாஸ் முடிஞ்ச பிறகும் சொல்லி குடுத்து போட்டு வாறனான்
நீதிபதி :- உமது கதையை கேட்டால் எனக்கும் பரிதாபமாக தான் உள்ளது .இருந்தும்
குற்றவியல் தண்ட சட்டத்தின் 43 ஆவது அத்தியாயத்தில் உப பிரிவு 27 (ஆ ) வின் பிரகாரம் 6 மாத கடுமையான வேலைகள் சகிதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்குகின்றேன் .
விமலா :- ஐயா உங்கள் தீர்ப்பை மனப்பூர்வம்மாக ஏற்று கொள்ளும் அதே வேளை நான் ஒரு விடயத்தை ஞாபக ஊட்ட அனுமதி வேண்டும் ஐயா
நீதி :-- கூறும் என்ன என்று
விமலா : ஐயா கீதொபத்சத்தை காட்டி சத்தியம் செய்ய சொல்கிறீர்கள் .ஆனால் பகவத் கீதையில் திரௌபதை ஐந்து பஞ்ச பாண்டவர்களுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்ள முடியுமானால் .நாங்கள் இயலாதவர்கள் ஏழை எளியதுகள் வயித்து பிளைப்பிற்க்காக அதை ஒரு தொழிலாக செய்தால் அது தண்டனைக்கு உரிய குற்றம் .சிலவேளை அவர்கள் அரச பரம்பரை என்பதால் அவர்களுக்கு சட்டம் விதி விலக்கு exemption போல
நீதி :-- விமலா நீ சொல்வதிலும் நியாயம் இருக்குது .நான் உன்மேல் இரக்க பட்டு உன்னை விடுதலை செய்தால் .அதே குற்றவியல் தண்ட சட்டத்தின் கீழ் என்னை நீதிபதி பதவில் இருந்து தூக்கி விடுவார்கள் .நான் பிள்ளை குட்டி காரன் பிள்ளை விமலா .எதோ பல்லை கடிச்சு கொண்டு 6 மாதம் கழிய வெளியில் .அங்கு சிறை கூடத்திலும் கவனம் பிள்ளை .சிறை அதிகாரிகளின் கழுகு பார்வையில் இருந்து காவாந்து பண்ணி கொள் .உன்னை


மனோகரன்

24-09-2014 09:37

********ஒரு நாளைக்கு நான்கு ஐந்து வாடிக்கையாளர்கள் .அதில் எத்தனை ரகங்கள் .பெரும் பண முதலைகள் டாக்குத்தர் இஞ்சினியர்மார் .அரசியல் பிரமுகர்கள் .இன்னும் பலர் .ஏன் பொலிஸ் அதிகாரிகள் கூட .சுற்றி வளைப்புக்கு என்று வருவார்கள் .அவர்கள் சுற்றி வளைக்க முதல் எனது வளைப்பில் வீழ்ந்து விடுவார்கள் .இந்த முறை மாட்டி விட்டேன் ********
ஐயா மன்னிக்கவேணும் .முக்கிய விடயம் ஒன்றை சொல்ல மறந்து விட்டேன் .இதோ
இங்கு குற்றவாளி கூண்டில் நிற்கும் என்னிடம் குறுக்கு விசாரணை நடத்தும் இந்த அரசு தரப்பு வழக்குரைஞர்கள் மட்டுமல்ல .பிரபல கிரிமினல் வழக்குகளை தங்கள் வாத பிரதி வாத வாயாடி திறமையினால் குற்றவாளிகளை தண்டனையில் இருந்து தப்ப வைச்ச பிரபல வழக்குரைஞர்களும் எனது வாடிக்கையாளர்கள் ஐயா .ஒரு நாள் ஒருவரிடம் கேட்டேன் **ஏன் ஐயா நீங்கள் இங்கு என்னிடம் வருகிறீர்கள் .உங்களுக்கு தானே நல்ல அழகு தேவதை போல ஒரு மனைவி .பின் குழந்தைகள் உங்களுக்கு சும்மா தேவலோக குழந்தைகள் போல .எல்லோரும் சர்வதேச பாடசாலைகளில் கொழும்பில் படிக்கின்றார்கள் .பின் ஏன் நீங்கள் என்னை தேடி இங்கு வருகிறீர்கள் ?என்று கேட்க அவர் சொன்னார் இவ்வாறு .விமலா நான் உருட்டி பிரட்டி ஏன் வாய் சாலத்தினால் எத்தனையோ வழக்குகளை வெண்டு லச்சன்கள் சம்பாரிச்சாலும் எனக்கு தேவையான அந்த அன்பு /அரவணைப்பு என் வீட்டில் கிடைப்பதில்லை .நான் என்ன உடல் பசியோ இல்லை வயிற்று பசி தீர்க்க இங்கு வரவில்லை .எல்லாம் அங்கு என்வீட்டில் கிடைக்கும் பிள்ளை .எது கேட்டாலும் கிடைக்கும் .ஆனால் அந்த அன்பு அரவணைப்பு துளி கூட அங்கு இல்லை .நீ /உன்னுடன் கதைக்கும் போது அது எனக்கு கிடைக்கின்றது .நீ இந்த இழி தொழில் செய்தாலும் உன் கதைகள் புண் பட்ட மனதுக்கு மயில் இறகால் எண்ணை
தடவுவது போல நான் உணர்கிறேன் பிள்ளை என்று சொன்னார் .நான் சொன்னேன் சரி சரி இனி காணும் போங்கோ .எப்ப பொலிசு வருமோ தெரியாது கெதியாய் போங்கோ வீட்டை .என்று சொன்னதும் அவர் சொன்னார் பொலிசு என்ன கண்டறியத பொலிசு அதை நான் பாத்து கொள்ளுவன்.இன்னும் ரண்டு கதை பேசு பிள்ளை .நொந்த மனசு ஆற .**நீங்கள் இனி எண்டாலும் குற்ற வாளியலை தப்ப வைக்கும் வழக்குகளுக்கு பேசி லச்சன்கள் சம்பாரிக்காமல் .தண்டனை பெற வேண்டியவருக்கு தண்டனை பெற்று குடுங்கோ .தப்ப வேண்டிய நிரபராதியலை தப்ப வையுங்கோ உங்கடை வாய் சாலத்தை உபயோகித்து .அப்ப பாருங்கோ மன நின்மதி மன சாந்தி எல்லாம் வீடு தேடி ஓடி வரும் .மனிசி காரியும் உங்களுக்கு பால் காச்சி சீனி போட்டு **அத்தான் குடியுங்கோ இதை என்று ஓடி வருவா ** இப்போ அவை உங்கடை காசைத்தான் லவ்வுகினம் .பின் பாருங்கோ என்ன நடக்கும் என்று
பிள்ளை விமலா மூடி இருந்த என் கண்களை திறந்து போட்டாய் பிள்ளை .இனிமேல் நான் இந்த பக்கம் தலையும் காட்ட மாட்டன் பிள்ளை என்று போனவர் போனவர் தான் .இந்த பக்கம் ஆளை காணவில்லை இதுவரை . **திருந்தி விட்டார் போல **


பவுல்

23-09-2014 11:43

மனோகரன்,
நான் கண்மூடினால் மிக அமைதியாக சடங்கு சம்பிரதாயம் ஒண்டும் இல்லாமல் (வெறும் பம்மாத்துகள் ) என் உடலை சுமந்து கொண்டு ஒழுங்கை கட்டாலை கொண்டு போகேக்குல்லை ஏலுமானால் சாடையாய் கண் விளித்து பார்ப்பேன் அந்த வெளிப்புல வயல் வெளிகளை பார்த்து என் இளமை கால நினைவுகளை மீண்டும் அசை போடுவேன் .பிறகு சுடலையில் என் இறந்த உடலை இறக்கி போலி சம்பிரதாயங்கள் செய்யாமல் விறகு அடுக்கி எரிக்கவேனும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~````````````````````````
பவுல் ,
எனக்கொரு ஆசை!! என் இறுதி சரீர விதைப்பு கிரியைகளை எங்கட ஊரவர்கள் பாக்கவேணுமென்று. நிட்சயமாக இருள் சூழ்ந்த கனத்த நாளாக இருக்கா. நான் வெளிநாட்டுக்கு வரும்போது ஏற்பட்ட பிரிவுமாதிரி இருக்கும்.அந்த விசேசித்த நாளை பண்கொம்மில காண்பித்தா நல்லது. அடக்கம் செய்ததும் நல்ல சாப்பாடு கொடுப்பார்கள். பயப்படாம சாப்பிடலாம் துடக்கே வரா. ஏனேண்டா அங்க வீட்டுப்பேயே வரா. நான் அதை எல்லாவற்றையும் ஆவியில பாப்பேன். ஆனா உறுஞ்சி சுவைக்க மாட்டேன். பரதீஸில தேவாமிர்தம் எப்போதும் இருக்கும். குதூகலம் கொண்டாட்டமே எம் தேவனின் சந்நிதியில ```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````


நா.சிவாஸ்

25-09-2014 21:08

இத்தளத்து வாசகர்க்ளுக்கு ஓர் நற்செய்தி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீங்கள் என்ன பாவம் செய்தாலும் பிரச்சனை இல்லை!!!!!!!!!!!!!!!!!!!
உங்கள் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கடைசியாக வந்து என்னுடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டால் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!வாருங்கள் வந்து பாருங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
!!!!!!!!!!!!!!!!!!!!!நீங்கள் சொர்கம் போக வேண்டுமா???????????????????????????????????
!!!!!!!!!!!!!!!!!!!!உறுதியளிக்கின்றேன் வந்து பாருங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


பவுல்

26-09-2014 09:48

நீர் என்னை பூமியிலிருந்து எடுக்கும் நாளை நான் அறியேன் தந்தையே,.

இறைவா!! உம்முடைய ஆற்றலை, நுணுக்கரிய நுண்ணுணர்வை கதிரவன போன்றவர்களுக்கு வெளிப்படுத்தினீரோ ,்,,. நோக்கரிய நோக்கே, கதிரவன தன்னைப்பற்றி தான் என்ன நம்புகிறார்?

இறைவா உமக்கு மறைவாக நான் எங்கே போக , உமது ஆற்றலை விட்டு எங்கே செல்லக்கூடும்? கதிரவனிடத்திற்கு சென்றாலும் அங்கேயும் கதிரவனுக்கு ஒளி நீர் தானே இறைவா, சூரியனின் ஒளி ஒரு நாள் செயலிளக்கும், ஆனால் உம் சுவாசமான பரமாத்மாக்களோ தங்கள் தகுதிக்கு தகுந்த இடத்திலே நிலைப்பார்கள்.

தம்பி லொள்ளுக்கு,
யாரையும் சொற்கத்துக்கு அனுப்ப எனக்கு தகுதியில்லை. நாம் பூமிக்குஅனுப்பபட்டதன் நோக்கம் என்ன ? இந்தமண் எங்களின் சொந்தமண்ணே அல்ல.
நமக்கு வேற ஒரு போராட்டம் நாம் யுத்தம் செய்ய வேண்டும். நம் ஆன்மாவை பரிசுத்தமாக காக்க வேண்டும். **உலகம் பாவ பொய்யில தழைக்குது**. இந்த உலக இன்பத்தை பாவத்தால சம்பாதிக்காம வாழ, கிறிஸ்துவினால பாவ துடக்குக்கழிய திருமுழுக்கு ஆத்மாவில பெறவேணும்.

நீங்க தான் உங்கட கணக்கை தீர்க்கவேண்டும் தெரியுமா?. கிறிஸ்துவின் மன்னிப்பை உணரும் காலம் வரவேண்டும்~`` உணரும்போது கிறிஸ்து உங்கள் ஜீவ ஒளியாவார். ஆன்மாவின் ஒளிவிளக்கு கிறிஸ்து. ஜீவ ஒளி இல்லாவிட்டா புதிய பூமிக்கு வரமுடியா லொள்ளு.


சிவேசன்

22-09-2014 00:10

108 அரோகரா பனிப்புலத்து அம்மாள் இயேசு கிறிஸ்த்துவுக்கு அரோகரா


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

22-09-2014 20:37

கருத்துக்கள்:-

1 / உடைப்போம் பெண் விலங்கை - பவளக்கொடி. 247
2 / மாபெரும் அங்குரார்ப்பன வைபவம் - பம்பல்Kமனோ. 240
3 / திருக்குறள். 206
4 / 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக செயற்படுத்துவதை நிறுத்துவோம்' 183
5 / கோடைக்கால ஒன்றுகூடல் ஜேர்மன் . 164
6 / ஆச்சியின் காலத்தில் ஆட்சிபுரிந்த மூக்குப்பேணி - லொள்ளுபாண்டி. 147
7 / முருங்கை புராணம் - சிரித்திரன். 142
8 / வேம்பு படங்கள் இணைப்பு - சாந்தை சித்தி விநாயகன் ஆசிபெற்ற ஒருவனின் உருக்கமான வேண்டுகோள் 119
9 / 2012 இல் அழியுமா உலகம்? - விசாகன். 109
10 / கொடிய பாவத்துக்கு சமம். 109


வருகைகள்:
1 / தகவல் பண்கொம்.நெற். 10011
2 / தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு கதை. 6525
3 / உடல் சூட்டை குறைக்கும் முருங்கைக்கீரை. 5093
4 / திருக்குறள். 4202
5 / உலக அதிசயங்கள் 7. 3788
6 / ஒரு ரகசியம் பரகசியம் ஆகிறது - விசுவாசம். 3719
7/ Lakshmi & Jewellery and Silks 3588
8 / உலக அழிவு! - சதீஸ். 3411
9 / பிரமிட்; புரியாத புதிர்களில் ஒன்று - சுதாகரன். 3378
10/ புலத்தவர் ஊர்நோக்கிய பயணமும் நன்கொடைகளும். 3365


. மனோகரன்

21-09-2014 17:17

இதென்னடா இந்த மனிசன் ஆட்டுக்கை மாட்டை கொளுவ வெளிக்கிட்டு விட்டார் போல என்று நினைகவேனடாம் .என்மனது சொல்லுகுது எழுதடா உதையும் என்று .எனக்கு பலபேர் உவர் உங்கினை பண் கொம்மிலை லூசு அலட்டுகிறார் அவர் ஒரு காமடியன் போல என்று சொல்லும் குரல்களும் என்காதில் விழுகின்றது .இதை நான் இங்கு கொழுவுவது நல்ல வருகைகள் தினசரி .அதுவே காரணம்
இன்று நான் கண்டேன் ஞாயிறு சிங்கள பத்திரிக்கை ஒன்றில் **Dr .ராஜினி ராஜசிங்கம்
(திரணகம ) பற்றி .இல்லை தெரியவே தெரியாது .அவைக்கு ரஜனி அவரின் மருமோன்
தனுஷ் ஐ பற்றி வடிவாய் தெரியும் .அன்றும் இன்றும் அரசியல் விமர்சகனான பத்திரிகை ஆளன் ஆன DBS .ஜெயராஜ் என்பவர் Daily mirror பத்திரிகைக்கு அனுப்பிய கட்டுரையின் சிங்கள மொழி பெயர்ப்பு லங்கா தீப பத்திரிகையில்
ஆக 35 வயதே ஆன ராஜனி யாழ் மருத்துவ பீடத்தில் உடல் கூற்று பிரிவில் (Department of Anotomy ) head of department .பகுதி தலைவர் .சுட்டு கொண்டு போட்டாங்கள் உண்மையை பேசியதால் .அவவின் அக்கா தான் நிர்மலா நித்தியானந்தன் .அடுத்தவர் நலனுக்காக தம் இன்னுயிர் நீத்தவர்கள் .முழுவதும் சொல்ல முடியாது அது முழு பக்க கட்டுரை .கூழ் காச்சி கொத்து ரொட்டி போட்டு மினுங்கல் /மணி சோடினை சீலையல் உடுத்து படங்கள் பிடிச்சு விடேக்குள்ளை உவையை பற்றியும் கொஞ்சம் யோசியுங்கோ .அவை விட்ட உயிர்களினால் தான் நீங்கள் எல்லாம் இன்று நடுங்கும் குளிர் நாடுகள் போய் குளிர் காய்கிரீர்கள் ஹீட்டர் பூட்டின காருகளிளையும் வீடுகளிலையும் என்றதை மறவாதெங்கோ என்ரை குஞ்சுகளே


அப்பாவி

22-09-2014 00:02

மீண்டும் துளிர் விடுவார்கள் ,வெண்டு தருவார்கள்


மனோகரன்

23-09-2014 10:23

அப்பாவியே ஒற்றுமை என்பது ஒரு துளி கூட கிடையாத (மருந்துக்கும் கூட இல்லை )
நீ பெரிசோ இல்லை நான் பெரிசோ ? அவற்றை படிப்பென்ன என்ரை படிப்பென்ன ? உங்கை பாருங்கோ என்ரை மனிசியின்றை சீலையிலை மினுங்குகிற மணி சொடினையை பாருங்கோ ?அவற்றை மனிசி வெறும் பிளேன் சீலை அல்லே சுத்தி கொண்டு வந்திருக்கிறா இந்த பாட்டிக்கு என்று பேசி பறைஞ்சு மகிழ்ந்து கொண்டாடும் எங்களுக்கு விடிவே கிடையாது அப்பாவியே .உதெல்லாம் வெறும் கற்பனைகளே .

***மீண்டும் துளிர் விடுவார்கள் ,வெண்டு தருவார்கள் ***
அதுக்கென்ன நாங்கள் இஸ்ரேளியர்களோ அன்றில் பாலஸ் தீநியர்களோ இல்லை செபியர்களோ இல்லை சோமாலிய /சிரியர்களோ இல்லை .நாங்கள் இலங்கை தமிழர் .அதிலும் யாழ்ப்பாணத்து தமிழர் வலு விசேஷம் கண்டியலே .சுய நல பிசாசுகள் .என்ன பாடு பட்டாலும் தன் அலுவல் முடிச்சு போடுவான் .அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் அவனுக்கு நோ புரப்பிளம் ..கையுக்கை பொத்தி எண்டாலும் காரியத்தை முடியடா மனோஹரா என்று சொன்னவர்கள் பலர் .நான் இது வரை எவருக்கும் ஐஞ்சு செப்பு சல்லி கூட கையுக்குள் பொத்தியது கிடையாது .அதனால் பல பின்னடைவுகள் .இருந்தும் வென்று வந்த நிகழ்வுகள் பல

எனவே அப்பாவியே .எடை பாவமே உது நடவாது என்ரை குஞ்சுவே .சிலவேளை நடக்கும் இப்படி ஒரு யுகம் தோன்றினால் .
சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமய சாஸ்திரங்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்து இன்னும் பல வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றாக இணைவோம் ஆகில்
நீ கற்பனை பண்ணும் அந்த யுகம் உதயமாகும் .அதற்கான சாத்திய பாடு அண்மையில் இருப்பதாக தோன்றவில்லை .சிலவேளை எனது பூட்ட பிள்ளை கோப்பாட்ட பிள்ளை காலத்தில் உருவாக கூடும் .அப்போ நாங்கள் மண்ணுடன் மண்ணாக சாம்பல் ஆகி சம்பிலில் சங்கமம் ஆகி விடுவோம் .
நான் என்ரை பெண்டில் பிள்ளையளுக்கு சொல்லி போட்டேன் என் இறுதி ஆசையை
(Last வில் ) நான் கண்மூடினால் மிக அமைதியாக சடங்கு சம்பிரதாயம் ஒண்டும் இல்லாமல் (வெறும் பம்மாத்துகள் ) என் உடலை சுமந்து கொண்டு ஒழுங்கை கட்டாலை கொண்டு போகேக்குல்லை ஏலுமானால் சாடையாய் கண் விளித்து பார்ப்பேன் அந்த வெளிப்புல வயல் வெளிகளை பார்த்து என் இளமை கால நினைவுகளை மீண்டும் அசை போடுவேன் .பிறகு சுடலையில் என் இறந்த உடலை இறக்கி போலி சம்பிரதாயங்கள் செய்யாமல் விறகு அடுக்கி எரிக்கவேனும் .அதோடை கதை சரி .நீயும் பிள்ளையளும் கொஞ்சம் அளுவியல் .அழுங்கோ அதுக்கு தடை ஏதும் இல்லை **ஐயோ என்ரை புரியன் என்னை விட்டு விட்டு போய்
விட்டார் .எவ்வளவு செய்தார் எனக்கு நான் இனி எங்கை போக ? (நீ எங்கையடி போக அதுதானே என்ரை பென்சன் காசு மாசா மாசம் கிடிக்குமல்லெ போஸ்ட் ஒப்பிசிலை போய் எடுத்து சீவியடி எண்டு நான் சொல்லுவன் அசீரியாக ) சம்பில் சுடலையில் என் உடல் வெந்து வேகும் போதும் என் சிந்தனை எல்லாம் என்மனைவி பிள்ளைகள் மீதே .பின் நான் பெற்ற செல்வ குழந்தைகளின் குமுறல்கள் இவ்வாறு **ஐயோ எங்கடை அப்பு என்கையனை அப்பு எங்களை விட்டு போட்டு போறியள் .எங்களுக்காக எவ்வளவு செய்தியள் .ஊனை மறந்து உறக்கத்தை மறந்து உழை எண்டு உழைச்சு சம்பாரிச்சு .எங்கள் நலத்துக்காக நீங்கள் எத்தினை பேரோடை எத்தினை சண்டையல் பிடிச்சிருப்பீன்கள் ஏன் அப்பு எங்களை விட்டு போட்டு போறியள் ?
குழந்தாய் களே .வாருங்கோ இங்கே .இங்கு வந்தவர்கள் அனைவரும் என்றோ ஒருநாள் போயே ஆக வேணும் .எனக்கு என்ரை காலம் முடிஞ்சு பெல் அடி படுகுது
நான் போயே ஆகவேணும் .போக முதல் உங்களுக்கு நான் சொல்வது இதுதான் .கொப்பர் போல நீங்களும் வாழ முட்படுங்கோ .அடுத்தவனின் பொருளுக்கு ஆசை படாதேங்கோ .அடுத்தவனின் முன்னேற்றம் கண்டு பொறாமை படாதேங்கோ (ஊக்குவிங்கோ Try to boost up ) இயலாதர்க்கு உதவுங்கோ .கொப்பர் சில சந்தர்ப்பங்களில் அநீதி அக்கிரமங்களை கண்டு பொங்கி எழுந்து கதைகள் பல பேசியதால் பாழ் பட்ட சமூகத்தில் பல கெட்ட நாமங்களையும் சூடியதுண்டு .அதற்காக நான் வருந்தவில்லை .நான் போய் வருகிறேன் செரியோ பாய்


அப்பாவி

23-09-2014 23:53

Scotland Independence (Part 2) – An analysis by K.S.Thurai
tubetamil.com


லொல்லுபாண்டி

23-09-2014 19:38

அண்ணா என்ர அண்ணா பொறுங்கோ பொறுங்கோ என்ன அவசரம் என்னும் கனகாலம் கிடக்கு ..அந்த பென்சன் காசை நீங்களும் சேந்து அனுபவிக்க வேணும் கனகாலம் .....அந்த அப்பாவி ஒருத்தர் மனிசனுக்கு பழசுகளை யாபகபடுத்தி வேதனையை உருவாக்கிறார் ..சிலவிசயங்கள் கற்பனையில் கஸ்ரமாக இருக்கும் களத்தில் இறங்கினால் சுலபமாக முடிந்து விடும் . அதுவரை பொறுமை உடன் .காத்திருப்போம்


மனோகரன்

21-09-2014 10:54

***********ஆஸ்தீகன் என்றால் உண்டு என்பவன். ஆஸ்தி என்ற சொல் அஸ்தி என்ற சொல்லில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது. அஸ்தி என்றால் மிச்சம் என்பது தானே. மனிதனை எரித்தால் மிஞ்சுவது சாம்பல் அதைதானே அஸ்தி என்பர் அந்த அஸ்தி உள்ளவரை அவனுக்கு என்று ஒன்று இப்புவியில் உண்டு. அதையும் கடலில் கரைத்தபின் அவன் நாஸ்தீகன் . அவன் இப்புவியில் இல்லை.**
ஆஸ்திகன் நாத்திகன்
ஆஸ்தி /அஸ்த்தி
சொற்கள் மருவிய போதும் இப்படியும் தமிழில் அர்த்தங்கள் .உந்த சொற்கள் அனைத்தும் வட மொழி சம்ஸ்கிருத சொற்கள்
ஆஸ்த்தி == சொத்துகளுக்கும் ஆஸ்தி
ஆஸ்தி என்றால் உண்டு .ஓம் அவனுக்கு சொத்துக்கள் பல உண்டு .அந்த உயில் அது
தமிழ் நாட்டு சீரியல் பாசை .எங்களூர் பாசையில் உறுதி **இறுதி காலத்திலும் மரண
படுக்கையில் பரிதவிக்கும் போதும் *எடே அந்த உறுதி எங்கயடா ? வெளிபுலத்து காணியின்றை அதை என்ரை மூத்தவளுக்கு குடுங்கோ **
அப்பு உங்களுக்கு என்ன விசரே கண் மூடுகிற நேரத்திலையும் .உன்றை மூத்தவள் இப்ப வெளிநாட்டிலை .அவளுக்கு ரண்டு காரும் மூண்டு வீடுமனை அப்பு .நான் ஒரு வேலை வெட்டி ஒண்டும் இல்லாமல் வருமானம் ஒண்டும் இல்லாமல் வயல் வெளியை நம்பி மன்வேட்டியோடை தான் என்ரை சீவியம் போகுதனை என்ரை அப்பு .எனக்கும் மூண்டு குமருகள் அல்லே .அவையையும் கரை செர்க்கவல்லெ வல்லே வேணும் .உங்கினை வெளிநாடுகளிலை இருக்கிற நீ பெத்த பெட்டையள் அதுதான் என்ரை சகோதரியல் எனக்கு ஐஞ்சு செப்பு சல்லியும் அனுப்புகிறேல்லை அப்பு .உந்த காணியை எனக்கு எழுதி தாணை. எடே அப்பிடியே கதை கொண்டு வாடா அந்த உறுதியை கோச்சியிட்டை கேட்டு எடுத்து .எனக்கும் கண் மூடுகிற நேரம் கையெழுத்து வைக்க ஏலாது .கை எல்லாம் நடுங்குது .கை விரல் அடையாளம் வைச்சு உனக்கு எழுதி தாரன்
அது ...ஆஸ்தி ..சொத்து
பின் *அஸ்தி ....*** மிச்சம் ....சாம்பல் ...அதுதான் போல எரிச்ச சாம்பலை மூண்டாம் நாள் சுடலையிலை காடாத்தி (அது காட்டை ஆற்றும் காடாற்றலாம் ) எடுத்து எத்தினை பாடு படுத்துகினம் .நெல்லு விதிக்குமா போல சுடலையில் உள்ள சுள்ளிகளினால் கலப்பை கட்டுவினம் உளுவினம் .நவதானியம் விதைப்பினம் .இன்னும் எதோ எதோ எல்லாம் செய்வினம் .உள்ளூரில் உள்ள எல்லா முறை தலை அறிஞ்ச அந்த பண்டித குருக்களை கொண்டு .எல்லாம் முழு முழு பம்மாத்துகள் கண்டியலே


நா.சிவாஸ்

21-09-2014 13:21

நான் ஒரு எழுத்தை மிச்சம்பிடிச்சதை கண்டு பிடிச்சிட்டியள்.

ஆஸ்த்தியும் அஸ்த்தியும் சமஸ்க்கிருத்ச் சொற்கள் தான் ஆனால் அவை இரண்டும் ஒரே அர்த்தத்தினை உடையவை.

சமஸ்க்கிருதம் நான் படித்ததில்லை அறிந்தவைகளே!

ஒரு வேளை தாங்கள் எழுதியவை உஎனக்கு புரியவில்லையோ?


நா.சிவாஸ்

20-09-2014 23:56

வானம் ஒன்றே .காற்றும் ஒன்றே கடலும் ஒன்றே .எல்லோருக்கும் பொதுவான **ஒன்றே ஒன்றை** இன்னும் சொல்லி கொண்டே போகலாம்

மதம் என்ற சொல்லுக்கு நம் முழுபலம் என்றும் கொள்ளப்படும்.
அதாவது தாங்கள் குறிப்பிட்டது போல்

.>>>அதாவது நான் கடவுளை நம்பாத ஒரு நாத்திகன் அல்ல .அனைத்துக்கும் மேலாக ஒரு அபார எல்லையற்ற /எல்லை கடந்த மாபெரும் சக்தி ஒன்று உள்ளது என்பதை திடமாக உறுதியாக நம்புபவன் .இல்லாது இந்த உலகம் இவ்வாறு இயங்காது .<<<

நாஸ்தீகன் என்று நான் அறிந்தவரை யாரும் இல்லை. ஆஸ்தீகன் என்றால் உண்டு என்பவன். ஆஸ்தி என்ற சொல் அஸ்தி என்ற சொல்லில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது. அஸ்தி என்றால் மிச்சம் என்பது தானே. மனிதனை எரித்தால் மிஞ்சுவது சாம்பல் அதைதானே அஸ்தி என்பர் அந்த அஸ்தி உள்ளவரை அவனுக்கு என்று ஒன்று இப்புவியில் உண்டு. அதையும் கடலில் கரைத்தபின் அவன் நாஸ்தீகன் . அவன் இப்புவியில் இல்லை.


மதம்? நம் முழுபலம்: >>>ஒன்றே ஒன்றான கடவுள் விடயத்தில் மட்டும் உவை ஏன் ஆளுக்கு ஆள் பிரிஞ்சு எத்தனையோ மதங்களை உருவாக்கி என்ரை பெரிசு ...இல்லை என்ரைதான் பெரிசு
மதங்களின் பெயரால் ஆண்டாண்டு காலமாக மனித படு கொலைகள் .அதுதான் ஏனென்று எனக்கெண்டால் இன்னுமாய் விளங்கேல்லை <<<

ஐயா இங்கு தான் மதம் என்ற சொல்லின் சூட்சமமே அடங்கி உள்ளது.
மதம் என்பது கடலாகக் கொண்டால் சமயம் என்பது ஆறு,ஏரி.கால்வாய், போன்றவைகளே. இதில் ஆற்றில் செல்லும் நீர் மட்டும் தான் கடலை சென்றடையும் என்பதில் என்ன நியாயம்.

மதம் பிடித்தவர்களால் ஆக்கமும் நிகழ்கின்றது. அழிவும் நிகழ்கின்றது. இது எப்படி?
பைபிளின் படி பார்த்தால் இறைவன் மனிதனை படைத்தார் (ஆதாம்) அவனில் பாதியை பிசாசு வந்து பற்றிக்கொண்டது. (ஏவாள்) !!!!
வேதம் சொல்கின்றது தெய்வீக குணமும் ராட்சத குணமும் கொண்டவனாகவே மனிதன் படைக்கப்பட்டான் என்று.
இப்போ சிந்தியுங்கள் மனிதனின் உள்ளிருக்கும் தெய்வீக குணத்துக்கு மதம் பிடித்தால் அது அமைதியையும் சாந்தியையும் போதிக்கும். இதுவே மனிதனுள் இருக்கும் ரட்சதகுணத்துக்கு மதம் பிடித்தால் ???? இன்று காசா .... நேற்று அயோத்தியா.... இன்னும் பல பல. இவை ரத்தம் சிந்திய யுத்தகளம் இன்னும் பல ரத்தம் சிந்தாத யுத்தகளங்கள் எத்தனை எத்தனை???? இவற்றுக்கு காரணம் மனிதனுள் இருக்கும் பிசாசினை பற்றிக்கொண்ட மதம் .

இலங்கையில் இருப்பவர்கள் சோறு சாப்பிடுகிறார்கள். அமரிக்காவில் இருப்பவர்கள் நூல்டிஸ் சாப்பிடுவார்கள் இரண்டுமே சாப்படுதானே!!!!!!!!!!!!!!!!!!!!!!

குரக்கன் பிட்டு அழிந்துவிட்டது. பிற்சா பெருகிவிட்டது. இதில் எதில் ஆரோக்கியம் உண்டு??

சிந்தித்தால் சிரிப்பு வரும்.
மனம் நொந்தால் அழுகை வரும்.
தென்றலும் புயலாய் மாறி மாறி வரும்.

மீண்டும் தொடர்வது >>>>>>>>>>>>>>>மதத்தில் மீதி<<<<<<<<<<<<<<<<<<<<<<<< இன்னும் இருக்குதெல்லே இதோட முடியுமா????????????????????????????


மனோகரன்

21-09-2014 10:15

அனைத்து விளக்கங்களும் அருமையிலும் அருமையே .ஓடி ஒளிந்தவர்கள் ஒழியட்டும் .இருந்தும் இங்கு இப்போ கையால் எண்ண கூடிய அறிவு ஞானிகள் எஞ்சி இருப்பது கண்டு என் உள்ளம் உவகை கொள்கிறது .
சிவாசின் விளக்கங்கள் போன்று இங்கு வரும் என்பது நான் எதிர் பார்த்ததே .
ஏனெனில் நான் ஆறுமுக வித்தியா சாலையில் ஏடு தொடக்கி 5 ஆம் ஆண்டு வரை கற்று பின் விக்டோரியா போய் தொடர்ந்து புனித சூசை அப்பர் கல்லூரியில் (அன்றைய அமெரிக்கன் மிசன் --எத்தனையோ வெள்ளை கார பாதிரிமார் ) கற்றேன் .எத்தனை சரசு வதி பூசைகள் .64 நாயன்மார் குரு பூசைகள் .மார்கழி தோச்சல் .திருவெம்பாவை ./திருப்பள்ளி எழுச்சி இன்னும் எத்தனை .? ஒரு சமயம் வெள்ளி தோறும் வீடுகள் தோறும் பஜனை .எல்லாம் வசதி வாய்ப்பு ulla பெரிய மனிதர்கள் என்று தங்களை தாமே தம்பட்டம் அடிப்பவர்களின் வீடுகளில் (affluence Society )
பஜனையிலும் நான் முன் வரிசையில் .திருமலை நகரெங்கும் திருவெம்பாவை வீடுகள் தோறும் பாடி விடிய அது கோணேசர் கோயிலில் முடிவுறும் .சிவயோக சமாசத்தில் தியானம் + யோகாப்பியாசம் செய்தேன் .வில்லிசையும் நடத்தினோம்
சிறு வயதில் என்னை பெத்தவளுக்கு ஒளிச்சு எம்மூர் சந்கூத்து காரர் உடன் காரை நகர் (அப்போ அது **காரை தீவு ** தீவு என்பது அவர்களுக்கு பிடிக்காமல் நகர் என்று மாற்றி விட்டனர் பிற்கால்த்தில் )
சற்று கூட எழுதி விட்டேன் போல .இனி வருகிறேன் சிவாசிட்கான விளக்கம் சொல்ல
இங்கு நான் கேட்ட வினாக்களை நான் பல வருடங்களுக்கு முன்பே பலரிடம் கேட்டுள்ளேன் .
அவை கத்தோலிக்க /கிறிஸ்தவ பாதிரி மார் .மொட்டை வழித்த காவி உடை தரித்த
ஹாமதுரு மார் /இசுலாமிய மத குரு மார் மற்றும் இந்து சமய குருக்கள் மாரிடம் நான் ஒன்றும் கேட்கவில்லை .பதிலுக்கு வேதாகம /உபநிடதம் /மற்றும் மகாபாரதம் /ராமாயணம் கற்று பண்டிதர்கள் ஆன பலரிடம் நான் கேட்ட கேள்விகள் தான் உவை
எம்மூரின் ஒரு மூத்த கல்விமான் சிரேஷ்ட பிரஜை .அரசில் பெரும் பதவி வகித்து ஓய்வு பெற்று வாழ்வின் இறுதி காலத்தை கழித்து கொண்டு இருப்பவர்
பெரும் புதினமான விடயம் என்ன எனில் நான் கேட்ட கேள்விகளுக்கு சடையலும் சமாளிப்புகளும் ஆன பதில்களே .
இங்கு சிவாஸ் சொன்னது போல **பசி ஒன்றாய் இருந்த போதும் அந்த பசியை வெவ்வேறு ஆட்கள் வெவ்வேறு வழியில் தீர்க்கின்றார்கள் .ஏழை எளியியதுகள் பழைய பலன்சொத்தை முளகாய் வெங்காயம் நறுக்கி போட்டு தின்னுவினம் .வசதி ஆனவன் pizzaa KFC அடைவிணமாம் .அதுக்கு அவை ஒண்டும் செய்ய ஏலாதாம்
மற்றும் நதிகள் பல பல்வேறு இடங்களில் ஊற்று எடுத்து (மகாவலி இலங்கையில் மஞ்சள் நதி சீனாவில் அமேசன் நதி பின் நைல் நதி இன்னும் எத்தனை நதிகள் உலகம் பூராக .எல்லாம் கடலில் சங்கமிக்குதாம் ) உதெல்லாம் ஆண்டாண்டு காலமாக நாங்கள் கேட்டு புளிச்சு போன பழைய பல்லவிகள் .இன்னும் எனக்கு தெளிவு இல்லை .
புதிதாக சிந்திப்போம் வாரீர் .ஏதும் புதிதாக கண்டு கொள்ள
**இஞ்சை வாடி உந்த கிழட்டு மனோஹரனும் பங்கினை ஆரோ சிவாஸ் எண்டவரும் உங்கினை எதோ அலட்டுகினம் .வாடி நாங்கள் எங்கடை சோலியலை
பாத்து கொண்டு போவோம்பவுல்

19-09-2014 15:21

எப்போ நாம் எங்கள் மேல் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்குறோமோ அப்போ தான் உந்த கடவிள்கள் வந்து குடி கொள்கிறார்கள்

சொர்க்க பூமிக்குபோற அலுவல் நடந்தால் ,நீங்கள் எங்களை விட்டுவிட்டா
போகபோறியள்
````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
தம்பி நீங்க சொன்ன மாதிரி எனக்கு என்மேல ஒரு துளி நம்பிக்கையுமில்லை. அடுத்த கணம் எனக்கு என்ன நடக்குமோ!!!~~~? *கடவுள்* தான் எனக்கு எல்லாம். நான் எப்படி உருவானேன்? என் பெற்றோரா என்னை உருவாக்கினார்கள்? என்னால ஒரு குழந்தையை உருவாக்க முடுயுமா?

பிதாவே"; என்னைப்பற்றிய உம் நினைவு ,எனக்கு மிகவும் ஆச்சரியமா! இருக்கு... தேவா அது என்னறிவுக்கு எட்டாத வியப்பே~~>. என்னை தாயின் வைற்றிலே உருவாக்கிய விதமோ !!!. அஞ்சத்தகு வியத்தகு முறையிலே என்னை உருவாக்கினீர்.உம் கண்கள் கருமுனையில என்னுறுப்புக்களை கண்காணித்ததே`

நீர் என்னை பூமியிலிருந்து எடுக்கும் நாளை நான் அறியேன் தந்தையே,.
இறைவா!! உம்முடைய ஆற்றலை, நுணுக்கரிய நுண்ணுணர்வை லொள்ளு போன்றவர்களுக்கு வெளிப்படுத்தினீரோ ,்,,. நோக்கரிய நோக்கே, லொள்ளு தன்னைப்பற்றி தான் என்ன நம்புகிறார்?

இறைவா உமக்கு மறைவாக நான் எங்கே போக , உமது ஆற்றலை விட்டு எங்கே செல்லக்கூடும்? கதிரவனிடத்திற்கு சென்றாலும் அங்கேயும் கதிரவனுக்கு ஒளி நீர் தானே இறைவா, சூரியனின் ஒளி ஒரு நாள் செயலிளக்கும், ஆனால் உம் சுவாசமான பரமாத்மாக்களோ தங்கள் தகுதிக்கு தகுந்த இடத்திலே நிலைப்பார்கள்.

தம்பி லொள்ளுக்கு,
யாரையும் சொற்கத்துக்கு அனுப்ப எனக்கு தகுதியில்லை. நாம் பூமிக்குஅனுப்பபட்டதன் நோக்கம் என்ன ? இந்தமண் எங்களின் சொந்தமண்ணே அல்ல.
நமக்கு வேற ஒரு போராட்டம் நாம் யுத்தம் செய்ய வேண்டும். நம் ஆன்மாவை பரிசுத்தமாக காக்க வேண்டும். **உலகம் பாவ பொய்யில தழைக்குது**. இந்த உலக இன்பத்தை பாவத்தால சம்பாதிக்காம வாழ, கிறிஸ்துவினால பாவ துடக்குக்கழிய திருமுழுக்கு ஆத்மாவில பெறவேணும்.

நீங்க தான் உங்கட கணக்கை தீர்க்கவேண்டும் தெரியுமா?. கிறிஸ்துவின் மன்னிப்பை உணரும் காலம் வரவேண்டும்~`` உணரும்போது கிறிஸ்து உங்கள் ஜீவ ஒளியாவார். ஆன்மாவின் ஒளிவிளக்கு கிறிஸ்து. ஜீவ ஒளி இல்லாவிட்டா புதிய பூமிக்கு வரமுடியா லொள்ளு.


மனோகரன்

20-09-2014 07:09

பவுல் இந்த match இல் 100 ஆவது கருத்தை அனுப்பி centenary அடித்து விட்டார் .பாராட்டுக்கள் .அவர் பவுல் ஆக விளையாடில்லை .சரியாகவே விளையாடுகின்றார் .இருந்தும் நான் அவரிடம் சில சந்தேகங்களை கேட்க விரும்புகின்றேன் .

அதாவது நான் கடவுளை நம்பாத ஒரு நாத்திகன் அல்ல .அனைத்துக்கும் மேலாக ஒரு அபார எல்லையற்ற /எல்லை கடந்த மாபெரும் சக்தி ஒன்று உள்ளது என்பதை திடமாக உறுதியாக நம்புபவன் .இல்லாது இந்த உலகம் இவ்வாறு இயங்காது .
கடவுள் == கடந்து + உள்ளவர் .
கட + வுள் == கடந்து + உள்ளேயும் உள்ளவர் (அதுதான் உங்கள் மனத்துள்ளேயும் இருப்பார் ஒரு மூலையில் குந்தியவாறு ) அதற்காக ஒன்றுக்கு ஒன்று முற்று முழுதாக முரண்பட்ட மத கோட்பாடுகளை சொல்லும் மதம் பிடித்த மதங்களின் பின்னால் நான் அலைவதில்லை .
இப்போ பாருங்கள் .இரவு /பகல் வருகின்றது .சூரியனின் வேலை அது .முழு உலக இயக்கத்துக்கும் சக்தி வழங்கும் சூரியன் .ஒரே ஒரு சூரியன் .ஏழெட்டு சூரியன்கள் இல்லை (சமயங்கள் போல ) பூரணை நிலவன்று முழு உலகுக்கும் பால் நிலா பட்டொளி வீசுவதும் ஒரே ஒரு சந்திரன் .அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவாதாரமான நீர் முழு உலகெங்கும் ஒரே நீர் .இரு ஐதரசன் அணுக்களும் ஒரு ஒட்சிசன் அணுவும் சேர்ந்து உருவாவது நீர் .கனடா விலை ஒரு வகையும் லண்டனிலை ஒருவகையும் பணிப்புலத்திலை வேறொரு வகை நீரும் இல்லை
சில வெளிநாட்டு காரர் கொண்டி காட்ட mineral வாட்டர் கேக்கிறது வேறை கதை .அங்கும் அதே ஒரே நீர்தான் .உயிர் வாழ நாம் சுவாசிக்கும் கற்றும் (ஒட்சிசன் ) உலகம் பூராக ஒன்றே .அமெரிக்காவிலை என்ன ஐதரசனே சுவாசிக்கினம் ?
பசியும் ஒரே பசிதான் எல்லாருக்கும் .வெள்ளைக்காரருக்கு வெள்ளை பசியும் நீக்கிரோக்களுக்கு கறுத்த பசியும் பசிப்பதில்லை .ஒரே வித பசிதான் உலகம் பூராக .
வானம் ஒன்றே .காற்றும் ஒன்றே கடலும் ஒன்றே .எல்லோருக்கும் பொதுவான **ஒன்றே ஒன்றை** இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .அப்படி இருக்க இந்த
ஒன்றே ஒன்றான கடவுள் விடயத்தில் மட்டும் உவை ஏன் ஆளுக்கு ஆள் பிரிஞ்சு எத்தனையோ மதங்களை உருவாக்கி என்ரை பெரிசு ...இல்லை என்ரைதான் பெரிசு
மதங்களின் பெயரால் ஆண்டாண்டு காலமாக மனித படு கொலைகள் .அதுதான் ஏனென்று எனக்கெண்டால் இன்னுமாய் விளங்கேல்லை .ஒரு வேளை இப்பிடியாய் இருக்கலாம் .அவரவர் தங்கள் தங்கள் வசதிக்கு /வாய்ப்பிற்கு /தேவைக்கு (பணம் சம்பாரித்தல் ஈறாக ) உண்டாக்கி போட்டினம் போல உலகம் பூராக எத்தனை மாதங்கள் ???????????????????/


மனோகரன்

16-09-2014 15:23

சொல்ல வந்த கதையை சொல்ல மறந்து போனேன் ரூட் மாறி போனதால் .நான் இப்போ கேட்கிறேன் பவுல் பாட்டியிடம் ஒரு கேள்வி ?
உங்கடை கர்த்தர் /தேவன் /ஏசுநாதர் இடம் சொல்லுங்கோ ஒரு SMS ஆவது அடியுங்கோ .உந்த இஸ்ரேல் காரார் பாலஸ்தீனத்துக்கு அடிக்கும் அடியை கொஞ்சம் நிப்பாட்ட சொல்லி .இன்று நான் நியூஸ் பார்த்தேன் பாலஸ்தீன குழந்தைகள் பள்ளிகுடம் போகினம் உடைஞ்ச கட்டிடங்களில் .எங்கடை பிள்ளையளும் அப்பிடித்தான் அந்த காலங்களில் .எல்லாம் எங்கடை சனங்கள் மறந்து போச்சினம் அப்பா .நீ உந்த விசர் கதையை விட்டு போட்டு வாடா .பங்கினை உன்றை சொந்த காரர் வெளிநாட்டிலை இருந்து பிளைட்டடா இண்டைக்கு .உனக்கும் ஒரு வெளிநாட்டு விசுக்கி கொண்டு வருவினம் .வான் ஒண்டு போகுது ஊரிலை இருந்து .
எடே உவையின்ட்ரை விஸ்கி விராண்டி ஒண்டும் எனக்கு தேவை படாதடா .நான் குடிக்காத விஸ்கி விரன்டியே ? போடா நீ போ


லொள்ளுபாண்டி

17-09-2014 00:42

அவர்களுடைய வாழ்கை முறையே ஒரு நாடகம் போன்றது கர்த்தர் குர்த்தர் தேவன் எண்டு ...உப்பிட்யெ போனால் ,,,இன்னொருத்தர் வருவார் கதிரவன் எண்டு கொண்டு ,நாம் ஆணவத்தில் ஆடுகிறோம் எண்டு கொண்டு ...தம்பியவக்கு நான்ஒன்று கூற விரும்புகிறேன் எப்போ நாம் எங்கள் மேல் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்குறோமோ அப்போ தான் உந்த கடவிள்கள் வந்து குடி கொள்கிறார்கள்


மனோகரன்

17-09-2014 09:34

சபாஷ் சரியாக சொன்னாய் லொள்ளு .எவன் ஒருவன் சுய கவுரவம் ( Self respect ) சுய நம்பிக்கையை (self Confidence ) ஐ இள க்கின்றானோ அவனே கடவுளை தேடி ஓடி அலைவான் .தேடுங்கோ ஓடி அலையுங்கோ வேண்டாம் என்று சொல்லவில்லை .அதற்காக அடுத்தவனை அரிகண்ட படுத்தி வம்புக்கு இழுக்க படாது .கண்டியலே .என்ரை மதம் தான் சரி .உங்கடை எல்லாம் பிழை எண்டு கொண்டு


பாண்டி

19-09-2014 00:22

இப்ப எங்கட ஆறுமுகவித்தியாலத்துக்கு பணி புரியும் கேதிஸ் அண்ணாவ பாரட்டி சிராட்டி ......என்ர அதிபர் விருத்தாசலத்தை நினைவு குர்ந்து அவரின் கனவை நினைவாக்கும் எந்த திட்டத்திற்கும் நான் உறுதுணயாய் நிப்பேன்


பவுல்

17-09-2014 18:59

சொல்ல வந்த கதையை சொல்ல மறந்து போனேன் ரூட் மாறி போனதால் .நான் இப்போ கேட்கிறேன் பவுல் பாட்டியிடம் ஒரு கேள்வி ?
உங்கடை கர்த்தர் /தேவன் /ஏசுநாதர் இடம் சொல்லுங்கோ ஒரு SMS ஆவது அடியுங்கோ .உந்த இஸ்ரேல் காரார் பாலஸ்தீனத்துக்கு அடிக்கும் அடியை கொஞ்சம் நிப்பாட்ட சொல்லி ,
~```~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~>
அண்ணா , இறைவனை நம்பிக்கையால தான் உறவாட முடியும். 2012-க்குப்பிறகு பூமியிலயும் [ இயற்கையும் மனிதரிலும்] வானத்திலையும், கடலிலையும் மாற்றங்கள் அதிகமாக அழிவை வரட்சியை வேதனையாக மாறப்போவதை மெஞ்ஞானிகள் மாத்திரமல்ல விஞ்ஞானிகளும் சொல்லுற செய்திகளை கேட்க வில்லையோ? இன்று அங்க நாளை !!!!???<>.

புதிய பூமி உண்டாக இன்னும் கனகாலம் இல்லை. வானத்துக்குப்போன கிறீஸ்து திரும்ப புதியதோர் பொன்னுலகம் உண்டாக்க இன்னும் கனகாலம் செல்லா. நம்ப மறுக்கிறவர்களை யாரால காக்க முடியும். கடவுள் இருக்கிறாரா? இந்தக்கேள்வி!! ```


லொள்ளுபாண்டி

18-09-2014 09:18

நாங்கள் சின்னன் சிறிசுகள் தெரியாமல்எதாவது இருக்கு இல்லை எண்டு வாதாடிஇருக்கலாம் ,இனியும் வாதாடலாம்,,,,,ஆனால் அப்பிடி எதாவது இருந்து நீங்கள் சொன்ன மாதிரி அந்த புதிய சொர்க்க பூமிக்குபோற அலுவல் நடந்தால் ,நீங்கள் எங்களை விட்டுவிட்டாபோகபோறியள் ............. நிங்களும் நாங்களும் அப்பிடியே பிளங்கிறோம் ,எங்களுக்கு இயேசு கிறிஸ்த்துவால் ஒருபிரச்சனை எண்டால் நீங்க எங்களுக்காக வாதாடமாட்டியளே ,,என்னஇருந்தாலும் நீங்க எங்கட உறவேல்லே ,,,,,,,


கனகன்

19-09-2014 09:36

ஏன் அவர் என்ன ஐநா சபையே நடத்திறார் -கடவுள வம்புக்கு இழுக்கிறியள்


மனோகரன்

15-09-2014 15:37

##########இதுவரை மௌன விரதம் காக்கும் அனைத்து கருத்து கந்த சாமி கழகத்தின் அங்கத்தவர்களுக்கான இறுதி எச்சரிக்கை .Final warning சிவப்பு கலரில் ரெட் நோட்டீஸ் .உவை என்ன நினைக்கினம் .கழகத்தில் அங்கத்தவர்கள் ஆகி கழக நிதியில் நாங்கள் குடுத்தோம் அவைக்கு கார் வேண்ட லோன் .பிறகு பெண்டிலுக்கு வைத்துக்கை குத்துகுது எண்டு படு கள்ள கதை சொல்லி மெடிக்கல் பில்லும் கவர் பண்ணிச்சினம் கழகத்து நிதியில் இருந்து .உதெல்லாம் எங்களுக்கு தெரியாது எண்டே நினைக்கிறியள் ? யாம் அனைத்தும் அறிவோம் உங்கள் திருகு தாளங்கள் .அனைத்து அங்கத்தவர்களுக்கும் அனுப்பியாச்சுது பதிவு தவாலில் .நோமல் தவாலில் அனுப்பினால் சொல்லுவினம் காயிதம் கிடைக்கேல்லை எங்களுக்கு எண்டு .
கழகத்தின் யாப்பின் 32 ஆம் அத்தியாயத்தில் இப்படி .அது இங்கிலீசிலை சொல்ல வேணும் .அப்பவும் சிலர் பேசுகினம் உவர் என்ன இங்கிலீசிலை சொல்ல வாரார் எண்டு .இங்கிலீசிலை சொன்னால் தான் அதன் தார்ப்பரியம் எவ்வளவு உதைக்கும் எண்டு விளங்கும் கண்டியலே To know & understand the gravity of the problem .இங்கிலீசில சொல்லி போட்டு பிறகு தமிழ் இலையும் சொல்லுக்ரன்
** Under the chapter 32 of the karuththu kanthasaami kalakam all the members who have not contribute any comments so far here by notified that they are liable to loose their membership for ever under section 15 A #############


நா.சிவாஸ்

17-09-2014 01:53

ஐயா தங்கள் பதிவுத்தபால் கிடைத்தது .
தற்சமையம் 25,26. ஆவது மணித்துளிகள் எங்கே கிடைக்கும் என்று தேடுகின்றோம் .
கிடைத்ததும் மிகவிரைவில் வருவோம் .

மதம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதை ஓர் கட்டுரையாகத்தரலாம் என நினைத்தேன் அதுக்கு எப்ப நேரம் வரும் என்று தெரியவில்லை.

மதம் : ஆதிமூலம், நம் முழுபலம்.

பலருக்கு ???? ???????????????? எழும். நான் அறிந்தவரை பதில் தர காத்துள்ளேன்.
?களை என்னிடம் கேளுங்கள். தயவு செய்து கதிரவனிடம் கேட்டுவிடாதீர்கள்.
>தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே!<

பைபிளில் ஓர் வசனம் உண்டு: நாம் சொல்வது சத்தியமாக இருந்தாலும் அது கேட்பவன் மனம் நோகாமல் இருக்கவேண்டும்.

பைபிளை படிப்பவர்களாவது இதை கடைப்பிடிப்பார்கள் என நம்புகின்றேன்.


manoharan

10-09-2014 16:19

பழைய கதை நான் ஒன்று சொளுகிறேன் கேளுங்கோ
இதேன்னட்டா உந்த கிழடு ஒண்டு எங்களை அறுக்க
வந்துட்டார் போல என்று நினையாதீர்கள் .உண்மை பேச
வரும் கிழவன் நான் .நடுன்குகுது கொஞ்சம் கோப்பி
தாடி என்ரை பேத்தி .குடுயுன்கொவான் கோப்பியை
தந்தாள் என்ரை பேத்தி குடிச்சு போட்டு சொன்னேன்
இப்பிடி .எடியே என்ரை பேத்தி எங்கடை சனத்துக்கு
ஒண்டும் நோடிக்க பூதி அடி அவை எங்கை பிறந்தவை
எப்பிடி வாழ்ந்தவை இப்ப எப்பிடி வாழுகினம் எண்டு
? என்ரை அப்பப்பா உதய் ஒண்டும் கண்டும் காணாதது
போல போங்கோ .நானும் இன்டைக்கு பின்னேரம்
பாரத நாட்டிய கிளாசுக்கு போகவேணும் .அரங்கேற்றம்
வாற மாதம் 28 ஆம் திகதி .அழைப்பிதல் விடுவோம்
இணையங்கள் எல்ல்லாம் .
எடியே அப்பிடியே சங்கதி நான் போறனடி சிப்பிலி சந்தைக்கு
ஷீலா தலை வேண்டி உன்றை கொச்ச்சியோடை ஒரு
கூழ் காச்சி குடிக்க .ஆட்டுன்கொடி ஆட்டுன்கொடி உங்கடை
சின்னமேலன்களை வெளி நாடுகளில்லை .உங்களை பெத்த
கோச்சி கொப்பர் இன்னும் இஞ்சை முருங்கை இலை யும்
றால் போட்ட கூழும் காச்சி குடிச்சு தான் காலம் போகுதடி
நான் பெத்த பேர குஞ்சுவே .செயுன்கொடி செயுன்கொடி
எங்களை மறந்து ஒருநாள் கடவுள் உங்களை கேப்பாரடி


ஜூவன்னா

10-09-2014 13:55

.தமிழ் புலவர் **திருவள்ளுவர் ** எழுதிய திருக்குறள் எத்தனையோ ஐரோப்பிய மொழிகளில் (சிங்களம் ஈறாக ஒரு ஹாமதுரு வினால் ) மொழி பெயர்க்க பட்டு கன காலம் .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~மநோகற் அங்கிள் நனக்கி யொறு நெதர்லாந்து மொழி திருக்குறள் எங்ங வாந்களாம் .னெர்ரில தோடிறன் காநேளே. தம்மிள் தெறியா.அதிலதாண் கேட்ரேன்.~~


மனோகரன்

10-09-2014 18:58

நெட்டிலை வலை வீசி என்ன மீன் பிடிக்கவே வெளிக்கிட்டு விட்டியல் ஜூவன்னா ?
போங்கோ நெதர்லாந்திலை எங்கடை சூர சுதர்சுவிட்டை .அவர் சொல்லி தருவார் அத்தனை குறள்களுக்கும் அர்த்தங்கள் எத்தனையோ மொழிகளில் .அவர் பன்மொழி அறிந்த பல்மொழி வேந்தன் .சும்மா பேய் காட்டாதேங்கோ .போங்கோ அவரிட்டை .


மனோகரன்

09-09-2014 21:17

நன்றாகவே நான் வாழ்ந்த காலங்கள் அன்று
உறவுகள் உணர்வுகள் என்று வாழ்ந்த காலங்கள்
நூறு பொய்கள் சொல்லி பத்து சதததிட்டை
தப்பி வந்து நான் வெளிநாடு போகாமல்
கொழும்பில் ஒரு வாடை வீட்டில் என் சீவியம்
நானோ உள்நாட்டு கப்பல்களில் யாழ்பாணத்துக்கு
அரசி மா சீனி கொண்டு போகும் கப்பல்களில்
குறைஞ்ச சம்பளத்தில் என் சீவியம்
அன்று என் வீட்டில் பலர் வந்து போனார்கள்
வெளிநாடு போக லோச்சுக்ளில் தங்காமல்
சகலன் ஒருவர் வந்தார் .என்வீட்டு பால்கனி \
இல் இருந்து கொண்டு எதோ கப்பல் மூழ்கியது
போல் அவர் யோசிக்க அக்கம் பக்கத்து
குச்சுகள் (முசிலீம்கள் ) பொலிசிக்கு போன்
அடிச்சு புலி ஒண்டு வந்து இருக்குது எண்டு சொல்ல
பொலிசு வந்து அப்பி கொண்டு போய் கூட்டில்
அடைக்க நான் போய் கொண்டு வந்தேன் வெளியிலை
பின் அவர் வெளிநாடு போக அவரின் பேண்டில் பிள்ளைகள்
இங்கு வர வீடுகள் எடுத்து குடுத்து பள்ளிகுடம் சேர்த்து
செய்தேன் பலதை .அவர்கள் இன்று இஞ்சினியர்களுக்கு
படிக்கினம்மாம் .அவர்களை பெத்து வளர்த்து
பீச்சல் சீலை தோய்ச்ச அவையின்றை அம்மம்மாவை
மறந்த இஞ்சீயர் மார் .அந்த மனிசி செத்த நேரம்
பந்தம் கூட பிடிக்க வராத பேர இஞ்சினியர் மார் .
வந்தால் காசு கொஞ்சம் சிலவாகும் போல
இல்லாட்டில் இஞ்சினியர் படிப்பு குழம்பி
போய் விடும் போல .அந்த முறையிலை
என்ரை பொடியல் அம்மம்மா எண்டு அழுது
குளறி லண்டன் இல் இருந்து வந்து கிழவியின்
உடல் சுமந்து சுடலை வரை கொண்டு போனாங்கள்
It was கிரேட் .I feel i am a லக்கி guy to have such
children like திஸ் ...........................


லொள்ளுபாண்டி

09-09-2014 23:28

அண்ண இதில ஒருத்தர் கருத்துக்கள் கூட வந்தால் கணக்கு போட வாறவர்,,கருத்துக்கள் 75 தாண்டியும் அவரை காணேல,,,இல்லாட்டி வந்திருப்பார் ,பனமரம் 45---வேம்பு 140 எண்டுகொண்டு ,,,,,,---------,,,,,,,,ஒருவேளை நாங்கள் இணையன் பேரும் தான் மாறி மாறி கிறிக்கி நாங்களே வாசிக்கிறோமோ ,,சீசி அப்பிடி இருக்காது இதுகளை சரி பிள பாத்து அமத்தி விர்றவரும் வாசித்து தானே ஆகவேணும்


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

13-09-2014 10:50

இங்க 108 கருத்துக்கள் தாண்டின பிறகுதான் அவர் வருவாறாம்.


மனோகரன்

15-09-2014 09:53

ஐயோ என்னை ஒரு சபைக்கும் செராதேங்கோ .நான் ஒரு பாவம் .கிழவன் .சிவனே எண்டு கடைசி காலம் கழிக்கும் கிழவன் .கடைசி காலம் வர சிலருக்கு சுடலை ஞானம் பிறக்கும் .கூடவே மரண பயம் தொற்றிவிடும் .அந்த வளவுக்கு என்ன நடக்கும் ? இந்த சொத்துக்கு என்ன நடக்கும் ?எண்டு பயந்து வாழ்வு முழுக்க செய்த அநியாயங்கள் அக்கிரமங்கள் எல்லாம் மறந்து தான தருமங்கள் செய்வார்கள் .அள்ளி கொடுப்பார்கள் கோயில்களுக்கு .அது மட்டுமே ? கோயில்களுக்கு போய் தியானத்திலும் ஈடு படுவார்கள் .நான் பல பேரை என்னூரில் கண்டேன் .அது போல நானும் போனேன் எங்கடை வயல் கரை சிவன் கோயிலுக்கு **அமைதியான இடம் .நல்ல வயல் காற்று ** தியானத்தில் மூழ்கி நான் தேவார திருவாசகம் எல்லாம் முனு
முணுத்து கொண்டு அடுத்த பிறவிக்கு நான் ஆன்ம ஈடேற்றம் தேட .வந்துவிடடாள் அந்த சண்டாளி என்ரை பெண்டில் .முதுகிலை தட்டி என் தியானத்தை குழப்பி சொன்னாள் இப்பிடி ** உனக்கென்ன விசரே ? விடிய வெள்ள அண்ணை நீ வேண்டி கொண்டு வந்த கவுனாவத்தை வேள்வி இறைச்சி பங்கு நானே அருவாளிலை அறுத்து எலும்பெல்லாம் அந்த மணை கத்தியாலை கொத்தி கொஞ்சத்தை எடுத்து ரசமும் வைச்சு கிடக்குது .உன்றை மூத்தவநிட்டை கேட்டன் இந்த இறைச்சியை வெட்டி தாடா .கொப்பர் வர போறார் இன்னும் கொஞ்ச நேரத்திலை கள்ளாலை.
அவன் சொன்னான் தனக்கு கொம்பிலீட்டார் கிளாஸ் எண்டு (எல்லாம் படு பாணம்
அவன் ஊர் சுழரும் பொடியளோடை சுழற போய் விட்டான் ) பிறகு ஆட்டு கறிக்கு எழும்பிச்சன்காய் புளி கொஞ்சம் விட்டால் தான் ருசி ஆய் இருக்குமெண்டு ஊர் கடை முழுக்க உழுது தேடினாலும் ஒரு கடையிலும் எழும்பிச்சன்காய் இல்லை .இருக்கிற கயட்டை கண்ணி பிஞ்சும் பத்து ரூவாய் எண்டு சொல்ல நான் என்ரை பக்கத்து வீட்டு பொடி அவன் பரமசிவத்திட்டை சொன்னன் **இஞ்சை வாடா என்ரை குஞ்சு ராசாவே ! ஓடி போய் உன்றை மோட்ட சைக்கிளை போய் உங்கினை சங்கானை பக்கத்திலை நல்ல புளி உள்ள எழும்பிச்சன்காய் ஒண்டு வேண்டி கொண்டு வா ராசா .இரவைக்கு நான் தோசை சுட போறன்.உனக்கு நான் ஒரு முட்டை தோசை சுட்டு தாறன்.
**அண்டி அப்பிடியே கதை முட்டை தோசை எண்டால் சங்கானை இல்லை சண்டிலிப்பாய் சந்திக்கு போய் எண்டாலும் கொண்டு வாறன் எலும்பிச்சம் காய்
**எடியே உவ்வளவு கசுற்ற பட்டு விட்டியே நீ .உன்னானை உன்னை நினைச்சால் அழுகை தான் வருகுதடி .கண்டறியாத தியானமும் கோயிலும் .ஆட்டு இறைச்சி குழம்பையும் எலும்பிலை நீ வைச்ச ரசத்தையும் நினைச்சால் நாவெல்லாம் உமிழ் நீர் ஊத்துகுது அடி .கொஞ்சம் பொறடி நான் கொண்டு வந்த அந்த விரிப்பு எல்லாம் சுத்தி கொண்டு வாறன் .கவனமடி உங்கினை கடி நாய் அள் ரோட்டு முழுக்க .அப்ப நீங்கள் என்னெண்டு வருவியள் ? நான் அந்த லொட்டன் சைக்கிளிலை வாறன் நீ நடந்து போடி .என் என்னையும் டபிள் அடிச்சு கூட்டி கொண்டு போங்கோவன் ?
எடியே அது அந்த காலமடி .பிறகு பொடியல் கண்டாங்கள் எண்டால் ஹூ அடிச்சு நக்கல் அடிப்பாங்கள்


லொள்ளுபாண்டி

13-09-2014 23:53

மரனோகரனண்ணாவை நான் பாத்த ஞாபகமில்லை. லொள்ளுவை யார் என தெரியா. ஆனா உங்களை புதிய பூமியில பார்க்கவேண்டுமென , எனக்கொரு ஆசை.எனக்குள்ள சிறகடிக்கிற ஆசை,,,,,,,,,,,,,,......------------........... அதுசரி ஆசைய்கள் சிறகடிக்கட்டும் தப்பில்ல அது சரி பவுல் அங்கிள் ஆர் அவர் மரனோகரனண்ணா புதிசா கிடக்குது அவரும் உங்கட சபையில் இருக்கிறாரோ


மனோகரன்

13-09-2014 12:35

108 / 108 என்ன சங்காவிஷேஷமே நடக்க போகுது 108 உக்கு பிறகு ?


கணக்கு வாத்தியார்

11-09-2014 08:23

மொத்த வருகை: 639 இன்றைய வருகை: 7


. manokaran

11-09-2014 08:49

லொள்ளு பாத்தியே கணக்கு உவாத்தியார் வந்து விட்டார் .எடே லொள்ளு கூட்டல் கழித்தல் /பெருக்கல் பிரித்தல் ஐஞ்சாம் வகுப்பு மட்டும் எங்கடை செட்டி பள்ளிகுடத்திலை எங்கடை தம்பையா வாத்தியாரிட்டை படிச்ச ஆள் .அதுக்கு பிறகு எத்தினையோ கணக்கெல்லாம் நான் படிச்சனான் .Pure Mathematics (தூய கணிதம் )
பிறகு ஐம்பது வயதை தொட்டு கொண்டு இருந்த போதும் பிரயோக கணிதம் (Applied Maths ) என்ரை மேனிட்டை கேட்டு படிச்சன் .கப்பலில் கறல் சுரண்டும் சோதினை எழுத அதுகும் கொஞ்சம் அடிப்படை தேவை .டிக்கிரி அளவில் தேவை இல்லை .இருந்தும் நான் வெக்க படவில்லை .பிள்ளையிடம் அப்பன் கேட்டு படிப்பதோ எண்டு .
கேட்டேன் /படித்தேன் /சோதினை பாசு பண்ணினேன் .
கன கணக்குகள் நான் படிச்சு விட்டன் லொள்ளு .எங்களுக்கு உவை என்ன வட்டி கணக்கே இனி படிப்பிக்க போகினம் .கூட்டு வட்டி /தொடர் வட்டி கணக்கெல்லாம் படிச்ச ஆக்கலடா லொள்ளு நாங்கள்


மனோகரன்

10-09-2014 19:13

லொள்ளு விடு கதையை .நாங்கள் ரண்டு பேரும் தான் எழுதி கிறுக்கி அடிச்சு அனுப்பி கதைக்கிறோம் எண்டு வைச்சு கொள்ளுவோம் .அதிலும் லாபம் தானடா தம்பி .உன்றை போன் நம்பர் நம்மங்களுக்கு நோடிக்க பூதியடா தம்பி .அதுக்கு அடிச்சு ரண்டு பேரும் அலட்டினோம் எண்டால் காசடா தம்பி சிலவாகும் .இது ஓசியிலை அலுவல் நடக்குது அல்லே உந்த இணைய காரர்ற்றை புண்ணியத்திலை .போவோமடா உப்பிடியே ஓசியிலை இணைய இணைப்புக்கு மாதா மாதம் கொஞ்ச காசு கட்ட வேணும் .அவ்வளவே


மனோகரன்

09-09-2014 19:10

பின்னை ஆச்சி அப்பு போவிட்டு வரட்டே ? எங்கயடி பிள்ளை எங்களை விட்டு போறாய் நாங்கள் பெத்த பிள்ளை .? நாங்கள் இஞ்சை தனியவ்டி உன்னை பெத்த கோச்சியும் நானும் .எங்கயடி போறாய் எங்களை விட்டு போட்டு .
நான் போறான் வெளிநாட்டுக்கு என்ரை அவர் பேசுவார் நான் நேரத்துக்கு போகா விட்டால் .நீங்கள் கண்ணை மூடினால் நான் வருவேன் ஊருக்கு .பண் கொம்மில் அம்மா (ஆச்சி ) செத்து போனா என்று ஒரு மரண அறிவித்தல் விடுவேன் என்னை பெத்த தாயே .இதுதான் உங்கினை கன பேர் செயினம் வெளி நாட்டு காரர் இப்ப வளை
காப்பும் கட்டுகினம் .ஆச்சி என்னட்டை கேட்டா உதென்னடா உந்த வளை காப்பு எண்டு ?
ஏன்அடா மனோஹரா உவலவையின்றை காப்புகள் வளைஞ்சு போச்சுதே வளை காப்பு கொளுவ ? நான் பின்னை ஆச்சிக்கு சொன்னேன் அது எங்கடை பெண்டுகள் சீஇயலுகல் பாத்து இப்ப வளை காப்பு கட்டுகிராலவை .இன்னும் பல் செய்வாலவை
இன்னும் உவளவை பலதும் செய்வளவை எல்லாம் பொறுக்க வேண்டியது எம் கடன் .ஆம்பிளையைகளாய் பிறந்து துலைத்து விட்டோம் .அவளவை சொல்லுகிறதை கேட்டு அவளைவையின் அடிமைகளாய் வாழ்வோம் அரோகரா


மனோகரன்

08-09-2014 14:36

அண்மையில் நானும் என் நண்பன் ஒருவனும் அளவெட்டி பக்கம் போனோம் ஒரு பிரபல சுவாமியிடம் எங்கள் கஷ்டங்கள் தோஷங்கள் சொல்லி நிவாரணம் தேடி .
எங்கள் முறை வர சீடன் கூப்பிட்டார் .அந்த பனிப்புலத்தில் இருந்து வந்த ரண்டு பேரும் போங்கோ உள்ளை எண்டதும் ரண்டு பேரும் பூனை பதுங்குமா போல பதுங்கி பதுங்கி பண்டதேருப்பு சந்தையிலை வாங்கின அரிச்சனை சாமான்களை எல்லாம் பாதத்தின் அருகே வைத்து கும்பிடுகிறோம் சுவாமியே .நீங்கள் தான் எங்கள் குறை தீர ஒரு மார்க்கம் சொல்லவேண்டும்
சுவாமி : பகருங்கள் உங்கள் குறைகளை .
நான் : சுவாமியே எனக்கு ரண்டு வீடுகள் .ஒண்டு பெரியது .மற்றது சிறியது .என்ரை வருமானத்துக்கு ரண்டு வீட்டையும் கவனிக்கிறது கட்டு படி ஆகுதில்லை .பெரிய வீட்டுக்கு ஒரு டிவி வாங்கி குடுத்தால் சின்ன வீட்டுக்காரி அடி பிடியிலை வாறாள் .
*உனக்கு பெரிய வீடு தான் பெருத்து போச்சுது நான் சின்னனே உனக்கு எண்டு தலை தலை எண்டு அடிச்சு ஒப்பாரி வைச்சு குளறுகிறாள் .பிறகு பெரிய வீட்டிலையும் நின்மதி இல்லை சுவாமியே .மூத்தவன் ஓ/எல் உம பெயில் .பிறகு எதோ கொம்பிலீட்டார் படிச்சு கிழிக்க போறன் காசு தாருங்கோ எண்டு என்னட்டை சுளை சுளையாய் பிடுங்கி கொண்டு ஆணை பந்தி கந்தர்மடம் போறன் எண்டு போனான் .எங்கை போனானோ கடவுல்க்குத்தான் தெரியும் .இப்ப அண்டி மார் அனுப்பின காசுகளிலை ஒரு பிழைக்கு பெரியோ (Black berry ) எண்டு ஒரு போனும் கமராவும் வைச்சு கொண்டு சேவையர் வேலை அதுதான் சுவாமி ரோட்டு அளக்கிறான் .
வீட்டை அயல் வீட்டு காறி ஒரே அரிகண்டம் எங்கடை வேலியோடை நிக்கிற புளிய மர சருகு அவையின்றை பூக்கண்டு குள்ளை விழுகுதாம் .தறிக்கட்டாம் அவள் மோட்டுக்கு தெரியாது புளியம் சருகு நல்ல பசளை எண்டு .மரம் தறிக்கிறது முன்னைய மாதிரி இல்லை சுவாமியே .விதானையிட்டை அலைஞ்சு திரிஞ்சு பிறகு எ சி எ கந்தோருக்கு போய் பேமிட்டு எடுக்க வேணும் சுவாமி .
சுவாமி :: நிப்பாட்டும் காணும் உம்மடை பாட்டை .விட்டால் விடிய விடிய சொல்லுவீர் போல .வந்த விடயத்தை சுருக்கமாய் சொல்லும் காணும் .உம்மோடை வந்தவர் வாயும் துறக்காமல் silence ஆய் இருக்கிறார் .அவர் என்ன ஊமையே .
நான் : இல்லை சுவாமியாரே அவர் லேசிலை வாய் துறவார் .துறந்தால் ரண்டு ஒரு கதை தான் சொல்லுவார் .சொன்னால் சொன்னது தான் .அவன் அமாவாசை இருட்டிலை பிறந்தவன் .அதாலை கதை பேச்சு குறைவு .நானெண்டால் விடிய புறம் 04.49 உக்கு பிறந்தனான் .சேவல் கூவி காகம் கரையிற நேரம் அல்லே .அது என்ரை பிறப்பு வாசி போல சுவாமியாரே .ஒண்டையும் ஒளிச்சு வைக்காமல் கவுட்டு கொட்டி போடுவன்
சுவாமி : சரி சரி நெடும் தூரத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள் .களைப்பாக இருக்கும் ஆச்சிரமத்தில் நல்ல பால் கோப்பி பரிமாறுவார்கள் கொஞ்சம் அருந்தி செல்லுங்கள்
உங்கள் குறைகள் நிவர்த்தியாக நான் ஒரு பரிகாரம் சொல்கிறேன் செய்யுங்கள் .உங்கள் ஊரிலும் என் போன்ற சுவாமியார் ஒருவர் இருப்பதாக அறிய கிடக்கின்றது .அவரை நாடுங்கள் .பரிகாரம் சொல்வார் .
நான் : நன்றி சுவாமியே
சுவாமி :: ஆச்சிரமத்தில் கோப்பி பரிமாறுவது எனது பெண் சீடிகள் .அவர்களின் கையை சுரண்டி ஏதும் சேட்டை விட்டீரோ பிறகு இளவாலை பொலிசு கூட்டிலை தான் இருப்பீர் கவனம் .உம்மை நம்ப ஏலாது .ரண்டு வீடுகள் மைண்டேன் பண்ணுகிற ஆள் அல்லே நீர்
நான் :ஐயோ சுவாமி அப்பிடி ஒண்டும் நடவாது .என்ரை பெண்டில் (கள்) பிள்ளையள் சத்தியமாய் சொல்லுகிறன் .பின்னை போவிட்டு வாரோம் சுவாமியே
சுவாமி :: என்ன போவிட்டு வரபோறியலோ. போங்கோ இனிமேல் இந்த பக்கம் வர படாது கண்டியலே


மனோகரன்

08-09-2014 09:20

கருத்து கந்தசாமிகள் கழகத்தின் கவுரவ அங்கத்தினர் நல்ல வளமான கருத்துக்களை வாடிக்கையாக இங்கு அள்ளி வீசி கொண்டு இருந்தனர் .இப்போ திடீர் என பலர் ஓடி ஒளிந்து விட்டனர் .பேசி பறைஞ்சு நடக்குது போல

கழகத்தின் உத்தியோக பூர்வ போஷகன் என்ற ரீதியில் /கோதாவில் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை (disciplinary Action ) கழகத்தின் ஆப்பு இல்லை இல்லை யாப்பின் 23 அத்தியாயம் பகுதி ii (ஆ ) பிரிவின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க படும்
**எடியே பளுக்ஷி என்னடி பல்லை இளிச்சு கொண்டு வேலிக்காலை எட்டி பாக்கிறாய் ?
ஆரென் பொடியல் போறாங்களே ?
அது என்ரை secretary பெட்டை .இடைக்கிடை பேசவும் வேணும் உவலவையை இல்லாட்டில் வேலை வாங்க ஏலாது உந்த குமரியளிட்டை இருந்து .நாங்கள் கிழடுகள் எண்டதாலை எங்கடை காதிலை பூ சுத்தவும் வெளிக்கிடுவளைவை .பிறகு மருட்டி மாயம் போட்டு **இஞ்சை வா பிள்ளை உங்கை கன காலமாய் பண் கொம் இலை கருத்து ஒண்டும் எழுதாத மெம்பெர் மாரின்றை Personnel File எல்லாத்தையும் கொண்டு வா பிள்ளை .எல்லாருக்கும் தனி தனியாய் எச்சரிக்கை கடிதங்கள் (Warning Letters ) அடி பிள்ளை .
Sir அவன் சிறி கொண்டு வந்த தேத்தண்ணியை குடியுங்கோ ஆற போகுது .
நான் பேசினாலும் அந்த பிள்ளை என்னோடை வலு அன்பு கண்டியலே .நான் அவளினற்றை பேரன் மாதிரி அல்லே

பி .குறிப்பு :-- அங்கத்தவர்கள் இப்போ இங்கு வராததற்கு இதுவும் ஒரு காரண காரியம் ஆகவும் இருக்க கூடும் .**போடா வேறை வேலை இல்லையே உங்கினை கிறுக்க எண்டு Studio பக்கங்கள் திரியினம் போல பெண்டில் பிள்ளையளோடை படங்கள் பிடிச்சு முகநூல் சுவருகளிலை கொளுவ ** கொளுவுங்கோ கொளுவுங்கோ நான் வேண்டாம் என்னெல்லை அரோகரா .


லொல்லுபாண்டி

08-09-2014 13:53

கேள்வி கேக்கும் தோழர்களையும் காணவில்லை ,,முன்நாள் உறுப்பினரையும் காணவில்லை ,இடிமேல் இடிவிளுந்தாலும் அடிமேல் அடிவிழுந்தாலும் குச்சிமேல் குச்சி கடிச்சாலும் ,இது எழுதிக்கொண்டு இருக்கேகேக்க முதலாளி வந்து கண்டு என்ர கூலியய் கிழிச்சாலும் நான் கிறுக்குவதில் இருந்து ஓயமாட்டேன் ...இதுகும் இல்லையென்றால் நாங்கள் ஊரோடு பேசி பறையிறது எப்படி


மனோகரன்

09-09-2014 11:05

**இது எழுதிக்கொண்டு இருக்கேகேக்க முதலாளி வந்து கண்டு என்ர கூலியய் கிழிச்சாலும் நான் கிறுக்குவதில் இருந்து ஓயமாட்டேன் ...இதுகும் இல்லையென்றால் நாங்கள் ஊரோடு பேசி பறையி**
இதை கண்டதும் எனக்கு டவுட்டு உவன் லொள்ளுவும் கொம்பிலீடறிலை சொறியிற தொழில் தான் செய்யிறான் போல எண்டு .எடே பொடியே நான் ஒரு கதை சொல்லுகிறன் கேளுங்கோ .எந்த தொழில் செய்தாலும் --அது விறகு கொத்துவதாய்
ஒ அன்றில் அன்றாடம் காச்சி கூலி தொழிலோ அன்றில் டாக்குத்தர் இஞ்சினியரோ இல்லை வேறு ஏதும் பெரும் பதவியோ உங்கள் தொழிலை நேசியுங்கள் .லவ் பண்ணுங்கள் .ஏமாத்து பம்மாத்து பண்ணாமல் நேர்மையுடன் செய்யுங்கள் அது உங்களுக்கு விதை விதைத்தவனுக்கு நல்ல அறுவடை அள்ளி வழங்குவது போல அள்ளி கொட்டும் .இதை நான் சும்மா சொல்லவில்லை .என் வாழ்வியல் நாடகத்தில் நான் கண்டு அனுபவித்தவை .செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழுங்கள் .இதை சொலும் நான் செய்த தொழில்கள் எத்தனை என்று எனக்கே தெரியாது .அத்தனை தொழில்களிலும் நான் கண்டு கேட்டு அனுபவித்தவைகளின் சாராம்சமே இது
கூலி தொழில் தொடங்கி மீன் வாடிகளில் சிங்கள மீனவர்களுடன் நல்ல பருப்பும் சிங்கள உருளை கிழங்கு பிரட்டலும் தமிழ் சைவர் களின் வெள்ளி கிழமை விரத உருளை கிழங்கு பிரட்டல் கீரை கறியோடும் பத்தும் பலதையும் தின்று ருசித்து ரசித்து வாழ்பவன் என்ற ரீதியில் நான் இறுதியாக சொல்வது இதுதான்
**நாங்க ஆர் ? எங்கு பிறந்தோம் ? இப்போ எங்கு வாழ்கிறோம் ? என்ன நடக்கும் எங்களுக்கும் எங்கள் எதிர்கால பரம்பரைக்கும் ? எங்களுக்கு என்று ஏதாவது அடையாளங்கள் மிஞ்சுமா எதிர்காலத்தில் ?
எடியே வாடி உந்த கிழடு எதோ அலட்டுகுது .இண்டைக்கு சாமத்திய வீடல்லெ ? அங்கை குளியல் அறை அந்த வேசின் ..**எடியே அது வேசின் இல்லை பாத் ரூம் Tab
அடி .**என்ன இழவோ எனக்கு தெரியாதடி .நாங்கள் உதெல்லாம் எங்கயடி கண்டது
துலாவிலை அப்பு படையிலை கோலி தண்ணி இறைக்கேக்குல்லை ஆச்சி வரம்பு வெட்டி தண்ணி விடுவா அங்கினை எலும்பிச்சம் கண்டுக்கும் பிறகு தென்னம் பிள்ளைக்கும் .பிறகு நான் அங்கினை மாதம் மாதம் வாற அந்த துடக்கு கழிய அப்பு பட்டையாலை அள்ளி ஊத்துகிற தண்ணியிலை தோஞ்சு முழுகி துடக்கு கழிக்க ஆச்சி தருவா ஒரு பச்சை முட்டையை .**குடியடி இதை எண்டு **எனக்கெண்டால் அருவருக்கும் பச்சை முட்டையை பச்சையாய் விழுங்க ** ஆச்சியின்றை அரிகண்டம் தாங்காமல் விழுங்கினது தான் .
அப்பிடி வாழ்ந்த நாங்கள் இப்ப எங்கையடி போய் விட்டோம் ?
அப்ப எங்கடை அக்காளின்றை மூத்தவளின்றை சாமத்திய வீடடி இண்டைக்கு .அந்த வாத்து ரூமிலை பால் அபிஷேகம் நடக்கும் .அதுக்கு கொஞ்சம் பூக்கள் போடா வேணும் .அநியாயம் சொல்ல படாது என்ரை மனிசன் வீட்டு முத்தம் எல்லாம் பூந்தோட்டம் வளக்கிறார் .எங்கடை ஊர் பொடி ஒன்டிட்டை தான் வீடு வாங்கினவர் .
நான் சாமத்திய படெக்குல்லை உது ஒண்டும் இல்லையடி .அப்பு தொழில் அங்கினை மலை நாட்டு பக்கம் .ஆச்சி தந்தி ஒண்டு அடிச்சா மேள் சாமத்தியம் .
Come இம்மேடீட்லி எண்டு எங்கடை மனோகரன் அண்ணையிட்டை சொல்லி ஒரு தந்தி .அப்பு விழுந்து அடிச்சு கொண்டு ஓடி வந்து விட்டார் .பிறகு அண்ணை அங்கினை வெளி மடை பக்கத்திலை பல சரக்கு கடை ஒண்டிலை வேலை .அவரும் ஓடி வந்து என்னை கட்டி பிடிச்சார் .பிறகென்ன என்ரை சாமத்திய வீடு அமர்க்களமாய் நடந்தது .இண்டைக்கு வேறை கதை நடக்குது
**பல்லக்கை தூசி தட்டுங்கோ **


மனோகரன்

09-09-2014 10:10

**இடிமேல் இடிவிளுந்தாலும் அடிமேல் அடிவிழுந்தாலும் குச்சிமேல் குச்சி கடிச்சாலும் ,இது எழுதிக்கொண்டு **
வலு ஷோக் இது
**உச்சி மீது வானிடிந்து வீழ்த்த போதும் அச்ச்ச்சமில்லை அச்சமில்லை ** என்று அன்று அந்த ஏழை கவிஞன் /புலவன் /மகா கவி பாரதி சொல்லி போட்டு போய் விட்டார் .**உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலை என்றும் எத்தி திரிவார் அடி கிளியே செய்வதறியார் அடி ** என்றும் சொன்னார்
அதுதான் இன்றும் நடக்கின்றது எங்கள் இடையே .
நீ உன்னானை என் உடன் பிறவா தம்பி அடா லொள்ளு .ரண்டு பேரும் பிறந்த அந்த இலுப்பை பூ வாசம் வீசும் கலட்டி குக்கிராமத்தின் மண்வாசனையோ நானறியேன் .நீ உங்கினை எங்கையோ சொல்லி கிடந்துது ** நான் என்றோ ஒரு நாள் ஊர் போவேன் ** என்று .கடைசி வரை அது நடவாதடா தம்பி .உன்றை அயலில் சின்னி Mrs ஓயா விட்டை றால் /கீழி வேண்டி சமைச்சு காலம் போக்கினவை இப்ப KFC /Pizza /மக் டொனல்ட் அருந்தி காருகளிலை ஓடுகிரவை உதெல்லாம் விட்டு போட்டு ஊருக்கு வருவினமே ? கடைசி வரை நடவாது லொள்ளு .நானெண்டால் நோய் நொடி உண்டும் இல்லாமல் இன்னும் கொஞ்ச காலம் வாழ்வேன் என்றால் அது எண்ணூர் தான் .அது சொர்க்கத்துக்கு ஈடானது லொள்ளு .அங்கை இப்ப செட் அப் எல்லாம் தலை கீழாய் மாறி போச்சுது புலம் பெயர் வாழ்வு .இருந்தும் அந்த கிராமியத்தில் இன்னும் கொஞ்ச அலுவல்கள் எஞ்சி உள்ளன .பனி பெய்கிறது .விடிய சேவல்கள் கூவுகிறது .வசந்த காலத்தில் குயில்கள் கூவுகிறது .இன்னும் பல அங்கு நடந்து கொண்டே இருக்கின்றது .புலன்களை பெயர்த்து உவர்கள் பம்மாத்து பண்ணினாலும் இயற்கை நிகழ்வுகளை தடுக்க முடியாது உவைக்கு
**வாடி மிஞ்சிக்கா உந்த உவர் எதோ லூசு அலட்டுகிறார் .இண்டைக்கு பொடியற்றை
காளி கோயிலிலை வேள்வி அடி டாடா சொன்னவர் அல்லே அங்கை பொங்கல் போந்குவினம் புனருத்தாபனம் பண்ணி (முந்தியிலை கிடாய் வெட்டின கோயில் எனக்கும் ஒரு இறைச்சி பங்கு தாருங்கோ எண்டு அலைஞ்சு திரிஞ்ச காலங்கள் ) அதிலை போய் போஸ் குடுத்து கொண்டு நிக்க சொல்லி .படங்களை அனுப்ப டாடா
Face Book இலை போடுவார் .**ஐயோ மமி leave me alone I feel nothing like a nap **
போடி போய் படடி .உதுகளுக்கு உவ்வளவு காசு சிலவளிச்சு இஞ்சினை கூட்டி கொண்டு வந்து வெளிநாட்டு கொண்டி காட்டுவோமேண்டால் அதுகளுக்கு அதொண்டும் விளங்கேல்லை .போடி போய் படடி .பிறகு எழும்பி வந்து என்னட்டை கேக்க படாது அங்கினை நீ தின்னுகிற ஐஸ் கிரீம் .இஞ்சை அது ஒண்டும் கிடையாது .இது ஒரு பட்டி காடடி.


மனோகரன்

14-09-2014 16:08

இதுவரை மௌன விரதம் காக்கும் அனைத்து கருத்து கந்த சாமி கழகத்தின் அங்கத்தவர்களுக்கான இறுதி எச்சரிக்கை .Final warning சிவப்பு கலரில் ரெட் நோட்டீஸ் .உவை என்ன நினைக்கினம் .கழகத்தில் அங்கத்தவர்கள் ஆகி கழக நிதியில் நாங்கள் குடுத்தோம் அவைக்கு கார் வேண்ட லோன் .பிறகு பெண்டிலுக்கு வைத்துக்கை குத்துகுது எண்டு படு கள்ள கதை சொல்லி மெடிக்கல் பில்லும் கவர் பண்ணிச்சினம் கழகத்து நிதியில் இருந்து .உதெல்லாம் எங்களுக்கு தெரியாது எண்டே நினைக்கிறியள் ? யாம் அனைத்தும் அறிவோம் உங்கள் திருகு தாளங்கள் .அனைத்து அங்கத்தவர்களுக்கும் அனுப்பியாச்சுது பதிவு தவாலில் .நோமல் தவாலில் அனுப்பினால் சொல்லுவினம் காயிதம் கிடைக்கேல்லை எங்களுக்கு எண்டு .
கழகத்தின் யாப்பின் 32 ஆம் அத்தியாயத்தில் இப்படி .அது இங்கிலீசிலை சொல்ல வேணும் .அப்பவும் சிலர் பேசுகினம் உவர் என்ன இங்கிலீசிலை சொல்ல வாரார் எண்டு .இங்கிலீசிலை சொன்னால் தான் அதன் தார்ப்பரியம் எவ்வளவு உதைக்கும் எண்டு விளங்கும் கண்டியலே To know & understand the gravity of the problem .இங்கிலீசில சொல்லி போட்டு பிறகு தமிழ் இலையும் சொல்லுக்ரன்
** Under the chapter 32 of the karuththu kanthasaami kalakam all the members who have not contribute any comments so far here by notified that they are liable to loose their membership for ever under section 15 A
தமிழில் இவ்வாறு ....அத்தியாயம் 32 இன் பிரகாரம் கருத்து கந்த சாமி கழகத்தின் அங்கத்தவர்கள் இதுவரை எது வித கருத்துகளும் வழங்காத பட்சத்தில் இத்தால் அவர்களுக்கு அறிய படுத்த படுவதாவது யாதெனில் கழக யாப்பின் பகுதி 15 அ வின் பிரகாரம் அவர்கள் தங்கள் உறுப்புரிமையை இழந்து விடுவார்கள்
இந்த கடிதத்தை நான் அடிக்க சொல்ல என்ரை செக்கு உருட்டி (secretary ) பெட்டை எனக்கு வந்து இப்பிடி சொன்னாள்
Sir ஐயோ பாவங்கள் அல்லே ? எல்லாரையும் ஏன் ஒரே அடியாய் விலக்க வெளுக்கிடுகிர்யல் ?
எடியே பிள்ளை நான் சொல்லுகிறதை செய்யடி நீ .நான் Boss இல்லை நீ Boss ஒ
உன்றை கொப்பன் என்ரை கூட்டாளி வந்து சொன்னான் என்ரை பெட்டை படிச்சு போட்டு வீட்டிலை இருக்கிறாள் அவளுக்கு ஒரு வேலை போட்டு குடடா எண்டு சொல்ல நான் உனக்கு வேலை தர நீ எனக்கு படிப்பிக்கவே வெளிக்கிட்டு விட்டாய் ?
ஐயோ sorry Sir சும்மா ஒரு கதைக்கு சொன்னன் .அதுகளும் பாவங்கள் அல்லே .
எடியே பிள்ளை பாவ புண்ணியம் பாத்து சீவிக்க எலாதடி இந்த காலத்திலை .எல்லாம் சுரண்டலும் சுருட்டலும் தான் ..உனக்கு தீவாளிக்கு ஒரு பஞ்சாவி செட் வேண்டி தருவன் அதுக்கும் பயமடி பிள்ளை உன்றை கொம்மா ஒரு பக்கம் துள்ளி கொண்டு வருவா .நாங்கள் எங்கடை பெட்டையை உவரிட்டை வேலைக்கு விட்டனான்களோ இல்லை பஞ்சாவி வேண்ட விட்டனான்களோ எண்டு .பிறகு நம்மடை மனிசி அறிஞ்சால் அடிச்சு கொண்டு போடுவாள் .என்னடா உங்கினை நடக்குது ?உன்னோடை வேலை செய்யிற பெட்டையளுக்கு பஞ்சாவியே வேண்டி குடுக்கிறாய் எண்டு .நான் பாவம் அடி பிள்ளை .என்னட்டை அந்த நோக்கம் ஒண்டும் இல்லை .நான் உங்கடை கொப்பன் மாதிரி .அது உன்றை கொம்மாவுக்கோ இல்லை என்ரை மனிசிக்கோ விளங்கேல்லை .அதுக்கு நான் என்ன செய்ய ? எடியே பிள்ளை கவனம் அடி பிள்ளை உங்கினை பொடியல் வருவாங்கள் உன்னை லவ்வு அடிக்க .படிப்பு ஒண்டும் இல்லை .கயிலை போனும் மொட்ட சைக்கிளிலை வந்து வட்டம் அடிப்பங்கள் உன்னை மாட்ட .ஏமாந்து போகாதையடி பிள்ளை .அப்பிடி ஆரேனும் வந்தால் என்னட்டை சொல்லடி பிள்ளை .நல்ல கதை சொல்லி ஆக்களை கலைக்கிறான் நான் .உன்றை படிப்பு என்ன வடிவு என்ன குணம் என்ன .உவங்களிட்டை ஏமாற நான் உன்னை விடனடி பிள்ளை .நீ நான் பெறாத பிள்ளையடி .உன்றை கலியாணம் என்ரை சிலவிலை நடக்கும் அடி .அங்கை பம்மாத்து ஒண்டும் இராதடி .
ஐயோ என்ரை Sir /என்ரை Boss நீங்கள் என்னை பெத்த தேப்பனுக்கும் மேல .நீங்கள் என்ரை கடவுள் Sir
எடிடியே மாயம் போடாமல் போடி .நான் சொன்னதெல்லாம் செய்வேனடி
போடி இப்ப வீட்டை .யன்னல் கதவெல்லாம் வடிவாய் பூட்டடி .உங்கினை கசிப்பு கள்ளர் பிடுங்கி கொண்டு போய் விடுவங்கள் .நானும் ஒரு ஒண்டரை போத்தில் கள்ளு போட வேணும் .பிந்தி போனால் அவளிட்டை ஏச்சும் பேச்சும் வேண்ட வேணும் .இண்டைக்கு தோசை எண்டு கேள்வி .நீ பத்திரமாய் போ பிள்ளை .உங்கினை நாயள் கவனம் .நாலு கால் நாய்களை விட ரண்டு கால் நாயலோடை வலு கவனம் கண்டியே பிள்ளை


manoharan

07-09-2014 18:03

நான் அடிப்பது பல அடித்து கொண்டு இருக்கும் போதே இடையில் ஒளிந்து போவதும் இடையில் அரை குறையில் அனுப்ப படுவதும் ஒரு சூழ்ச்சி என்பதை அறிந்து கொண்டேன் .இது தொழில் நுட்ப கோளாறு அல்ல SOMETHING else Somebody is playing the fool . This is not first time or second time .very frequently it is happening .Thank you very much for interrupting me by utilizing the latest technology .you see I am an old guy no ???????


manokaran

07-09-2014 11:59

**இந்த வசனத்தினை நான் எழுதவில்லை. எழுதியவர் யார்?**
நீர் தான் அதை எழுதியதென்று நான் எங்கே சொன்னேன் .புது பட நான் சொன்னேன் .
தாய் தகப்பன் வைச்ச பேறுகளை ஒளிச்சு வைச்சு கொண்டு ஒரு ஆள் இங்கு 27 பேரிலை வருகினம் கத்தரிக்காய் வெண்டிக்காய் தென்னவன் கதிரவன் எண்டு கொண்டு .அப்ப உதெல்லாம் வாசிச்சு கருத்து எழுத எங்களுக்கு என்ன லூசெண்டே உங்கடை நினைப்பு ? வாருங்கோ ஒரிச்சினால் பெருகளோடை .நான் தாரன் கருத்து .

**இந்த வசனத்தினை அற்புதனின் விடையத்தில் நீங்கள் கையாண்டிருந்தால் இன்றும் என்மனதை துளைத்துக் கொண்டிருக்கும் சில வசனங்களை எழுதியிருக்க மாட்டீர்கள்**
அந்த பெயரில் நாடோடி மன்னன் படத்தில் MGR முதல் முறையாக டபுள் acting இல் நடித்த படம் போல .ஒரு MGR விரலை மூக்கில் வைச்சு முசூம் என்று சீறி வாளுடன் வருவார் .அடுத்த mgr பாவம் சும்மா நோமலாய் வந்து வாழ் பயிற் நடக்கும் .அது போலவே ஒரிஜினல் அற்புதன் ஒரு இடம் அவரின் பெயரில் எழுதும் டபிள் அக்டிங் அற்புதன் வேறு இடம் .டபிள் அக்டிங் அற்புதனுக்கு நான் இங்கு எழுதும் எழுத்துக்கள் பிடிக்காது எரிச்சல் ஊட்டி வாந்தியும் (சத்தி ) வந்ததாம் .


யசோதா

06-09-2014 01:06

இன்று (06.09.14) - சனி மகா பிரதோஷம்

ஈசன் விஷத்தையுண்டு, சயனித்து, பிறகு எழுந்து முதன்முதலாக சந்தியா தாண்டவத்தை ஆடியது ஒரு சனிக்கிழமை மாலையில்தான் என்பதால் சனிப்பிரதோஷம் சிறப்பானது.

பிரதோஷ வேளையில் ஈசன் ஆடும் தாண்டவத்திற்கு அம்பிகை பாட, நான்முகன் தாளம்போட, சரஸ்வதி வீணைமீட்ட, நரநாராயணர்கள் மத்தளம் இசைக்க, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, லட்சுமி கஞ்சிரா இசைக்க, ஏழுகோடி இசைக்கருவிகளை கந்தர்வர்கள் மீட்டுவதாக ஐதீகம்.

ஈசான திக்கில், ஈசன் ஆலகால விஷமருந்தி பின் எழுந்து ஆனந்த தாண்டவம் ஆடியபோது கூடவே பூதகணங்களும் பூதநிருத்தம் ஆடின. இந்நேரத்தில் ஈசனுக்குப் பிரியமான சங்கராபரணம் ராகத்தையும், அன்னைக்குப் பிரியமான ஆனந்த பைரவி ராகத்தையும் இசைப்பார்கள்.

பிரதோஷ காலங்களில் ஈசனின் கருவறை கோமுகம் அருட்சக்தியோடு துலங்குவதால் அதை பக்தியுடன் வணங்க வேண்டும்.

ஆலகால விஷத்தைக் கண்டு பயந்த தேவர்கள் முன்னும் பின்னுமாக ஓடியதை நினைவுறுத்தும் வகையில் பிரதோஷ வேளையில் சோமசூக்தப் பிர தட்சிணம் செய்யப்படுகிறது. அது அனந்தகோடி பலனைத் தரும் என்பர்.

ஈசன் பாற்கடலிலிருந்து வெளிவந்த ஆலகால விஷத்தை உண்டபோது அதன் உஷ்ணம் அவரைத் தாக்காமலிருக்க அசுவினி தேவர்கள் மயில் பீலி ஆலவட்டத்தை வீசினர். அதன் நினைவாக இன்றும் பிரதோஷ வேளையில் பல ஆலயங்களில் ஈசனுக்கு மயில் பீலி விசிறிகளால் வீசுகின்றனர்.

இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

பிரதோஷ நேரத்தில் ஈசனுக்கு வில்வ தளங்களால் மாலை தொடுத்து அணிவிப்பது பெரும் பாக்கியம் தரும். ஒரு பிடி அருகம் புல்லை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் அனைத்து துன்பங்களும் விலகி, சர்வ மங்களங்களும் உண்டாகும்.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பிரதோஷ தரிசனம் செய்பவர்களுக்கு சிவலோக பதவி கிட்டும்.

ஓம் நமசிவாய ....


manoharan

07-09-2014 18:30

எடியே பிள்ளை யமிஸ் க்கா .உங்கினை எங்கடை யசோதா பிள்ளை சொல்லி போட்டா
இண்டைக்கு எதோ சனி மகா பிற தொஷாம் ஆம் எண்டு .அதையும் பிடிப்போமடி .நேத்து காச்சின றால் குழம்பு சட்டியை கிணத்தடியிலை (பாத் ரூம் ) கொண்டு போய் வடிவாய் கழுவி போட்டு அடுப்படி எல்லாம் சாணியாலை மெளுகடி..நான் போய் ஒரு பிடி கீரையும் உன்றை குஞ்சி கொப்பர் வீட்டிலை ரண்டு வாழை இலையும் வெட்டி கொண்டு வாறன் விரதத்துக்கு தின்ன .அவள் உன்றை குஞ்சாச்சி குசுப்பி இருந்தாள் எண்டால் எண்டால் இலையும் வெட்ட விடாள் அடி .இப்பதான் குலை போட்ட வாழை .அதிலை இல்லை வெட்ட படாதேண்டு .அப்பிடி சொன்னாள் எண்டால் நான் சொல்லுவன் நீங்களும் உங்கடை வாழை இலையும் எண்டு சொல்லி போட்டு உன்றை கொம்மான் என்ரை அண்ணை சிவிங்கம் வீட்டிலை போய் மூண்டு தலை வாழை இலை நறுக்கி கொண்டு வருவன்.அண்ணை பெண்டில்
அவ அருமையான மனிசி கண்டியலே .என்னோடை அவ உசிர் .அவன் பாவி என்ரை மனிசன் கள்ளை போட்டு போட்டு வந்து சட்டி பானை எல்லாம் உடைச்சு எறிஞ்சு சாப்பாடு ஒண்டும் இல்லாமல் நாங்கள் பட்டினியாய் இருக்கேக்குல்லையும் வந்து மச்சாள் சாப்பிடுங்கோ எண்டு எனக்கு கடக பெட்டியிலை தன்றை புரியனுக்கு ஒளிச்சு சோறு கொண்டு வந்து தந்த கடவுள் அவ .என்ரை மச்சாள்


கணக்கு வாத்தியார்

11-09-2014 22:44

பிரதோஷ வேளையில் ஈசன் ஆடும் தாண்டவத்திற்கு அம்பிகை பாட, நான்முகன் தாளம்போட, சரஸ்வதி வீணைமீட்ட, நரநாராயணர்கள் மத்தளம் இசைக்க, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, லட்சுமி கஞ்சிரா இசைக்க, ஏழுகோடி இசைக்கருவிகளை கந்தர்வர்கள் மீட்டுவதாக ஐதீகம்.,,,,,,,,,, இயேசு நாதர் ஆடேலையோ அவையோட சேந்து ..அல்லது அப்பவே கடவுள் களுக்குள் பிளவுகள் துவங்கி விட்டோ ,,


அற்புதன்

05-09-2014 16:51

கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் மனிதன். தன்னைத் திருத்தியமைப்பதன் மூலம் தனக்குத் தோன்றும் நன்மையை வெல்லுகிறான்.ஆனால் ஒவ்வொரு இந்து இறைவனின் வடிவத்திற்கும் ஒவ்வொரு வாழ்க்கைத் தத்துவம் உள்ளது .என்பது அவனின் அறியாமையும்,அப்பாவித்தனமும்.எனவே ஒரு இந்து கிறிஸ்தவனாக மாறினால் அது மத மாற்றம்.ஒரு கிறிஸ்தவன் இந்துவாக மாறினால் அது 'தாய்மதம் திரும்புதல்


லொள்ளுபாண்டி

06-09-2014 00:00

வீட்டுக்குள்ளே இருக்கும் போது,,இந்து முஸ்ல்லிம் கிறிஸ்டின் ஆக இரு வெளியில் வரும் போது மனிதனாக நடந்து கொள் ,,எல்லா மதமும் போதிப்பது எல்லோரிடமும் அன்பு அன்பு அண்பு செலுத்துங்கள் எண்டுதானே


பவுல்

07-09-2014 21:32

,,எல்லா மதமும் போதிப்பது எல்லோரிடமும் அன்பு அன்பு அண்பு செலுத்துங்கள் எண்டுதானே
- -------~~~~~~~~~~~
தம்பி லொள்ளு மதம் என்றா வெறி , சிலர் மதத்தை அவினுக்கு ஒப்பிடுவார்கள். கொலைவெறிக்கும் ஒப்பிடலாம். கிறிஸ்து மதத்தை உருவாக்கவில்லை. இறைவனையும் மனிதனையும் இணைக்கும் பாலமாக, வளியாக இருக்கிறார்.
[மார்க்கம் நம் ஜீவ ஒளி அவர்] உலகமெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு உரியவர். எல்லாமொழியிலுமே மொழிபெயர்க்கப்பட்ட ஒரேயொரு ஆகமம் கிறிஸ்தவ வேதாகமம். கல்விக்கு முதலிடம் கொடுப்பது. இலங்கை இந்தியாவில பாடசாலைகளை உண்டாக்கினார்கள். பெண்கள் உடன்கட்டை ஏறும் கொடுமையை தடுத்தார்கள். இப்படிப்பல .


மனோகரன்

08-09-2014 08:50

**எல்லாமொழியிலுமே மொழிபெயர்க்கப்பட்ட ஒரேயொரு ஆகமம் கிறிஸ்தவ வேதாகமம். **
அதெண்டால் உண்மை தான் தம்பி பவுல் .ஆனால் இன்று ஐரோப்பிய அமெரிக்க ஆசி நாடுகளில் எத்தனை தேவாலயங்கள் கதவு மூட பட்டு எம் பக்த கோடிகளினால் விலைக்கு வங்க பட்டு அங்கு தங்க தேர்கள் ஓடுகுது .சிதறு தேங்காய் அடி படுகுது .பெண்டுகள் பஞ்சாவி /காஞ்சி புர பட்டுடுத்து கொண்டி காட்டுகினம் *எடியே அசல் சீலையடி என்கினை வேண்டினனி ? எத்தினை ஈரோவடி ? அது அவர் தான் வேண்டியன்தவர் பங்கினை எங்கடை யாழ்ப்பானத்தாற்றை புடவை கடையிலை .உன்காற்றி சாமி இருப்பிடத்துக்கு வந்து விட்டார் அரோகரா .என்ரை அவரும் காவடி எடுக்கிறார் .பங்காற்றி அந்த தண்ணி பந்தலடியிலை ஆடுகிறார் .அவற்றை கூட்டாளி மார் நிக்கினம் .எனக்கு கிட்ட போக வெக்கமடி

இது பவுல் இற்கான பதில் பௌல் பதில் அல்ல .
அன்று ஜேசுநாதர் பெத்ல ஹெமில் பிறக்க முதலே .தமிழ் புலவர் **திருவள்ளுவர் ** எழுதிய திருக்குறள் எத்தனையோ ஐரோப்பிய மொழிகளில் (சிங்களம் ஈறாக ஒரு ஹாமதுரு வினால் ) மொழி பெயர்க்க பட்டு கன காலம் பவுல் .
எத்தனை குறள்கள் ? எத்தனை அதிகாரங்கள் ? (Chapters ) எத்தனை பால்கள் ?
அறத்து பால் /பொருட் பால் /காமத்து பால் .
அனைத்தும் இன்றைய நவீன இலத்திரன் இயல் கணணி யுகத்திற்கும் பொருந்தும்


மனோகரன்

08-09-2014 08:16

**சிலர் மதத்தை அவினுக்கு ஒப்பிடுவார்கள். கொலைவெறிக்கும் ஒப்பிடலாம். **
அன்று அவ்வாறு சொன்னவர் வேறு எவருமில்லை (அம்மாலானை நான் சொல்லேல்லை ) இன்று வல்லரசாக வர துடிக்கும் சீனத்தை கட்டி எழுப்பிய சிற்பி .
* மா ஒ சே துங் ** சொன்னது .அதற்காக என்னை சீன கொம்முநிஸ்ட் காரன் எண்டு மட்டும் முத்திரை குத்தி போடாதேங்கோ .எனக்கு **எம்மதமும் சம்மதம் .
மீண்டும் உவன் ஒரு அங்கும் பாடி **அம்பிடு சிங்கி ** எண்டு நினையாதேங்கோ .
பாம்புக்கு தலையை காட்டி விலாங்கு மீனுக்கு வாலையும் காட்டும் ஒரு சந்தர்ப்ப வாதி எண்டும் நினைச்சு போடாதேங்கோ .நான் ஒரு மத்தியஸ்த வாதி நல்ல விடயங்களை அது எவர் சொன்னாலும் மனபூர்வமாக ஏற்று கொள்பவன் .தவறுகள் எனில் அது ஆசிரியரோ அன்றில் ஆச்சி அப்புவோ அண்ணன் தம்பியோ அக்காள் தங்கையோ என்று பாராமல் தட்டி கேட்பவன் ஆசிரியருடன் முட்டி மோதி செமை அடி வாங்கின ஆள் .எனக்கு இப்ப வயது 46 .அதை reverse இலை எழுதினால் உண்மை வயது புலப்படும் .18 வயது வர வாக்களிக்கும் தகமை வந்து விடும் ..எத்தனை தேர்தல்களை கண்டவன் இவன் .இன்று வரை வாக்கு சீட்டை கண்ணால் காணவில்லை என்றால் யோசியுங்கோவன் நான் ஆர் ? எப்பிடி பட்டவன் எண்டு ?
பாணம் கீதி போடாதேங்கோ .டாய் பிடியிலை வந்து போடாதேங்கோ .


பவுல்

04-09-2014 19:07

மனோகரனண்ணா, உங்களுக்கு மரணத்தின் பின்னால என்ன நடக்கப்போகுது என்பதை இப்ப நீங்க நிட்சயப்படுத்த முடியாத படியால , ஏதோ மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், இருப்பதை இல்லாததுகளுக்கு கொடுத்து சகோதர அன்போட வாழ்ந்தா காணும். என்பது உங்கட விருப்பம்.

எனக்கோ , மரணத்தை பற்றி எப்ப விளங்கிச்சோ அந்த நாட்களிலயிருந்தே அதைப்பற்றி அறிய ஆவல். செத்தவீடுகளில பாடப்படுகிற பாடல்களை கவனித்து கேட்பேன். மரணத்தோட நம் வாழ்வு முடியாது,, தொடரும்!!!---.என்பதை அந்தப்பாடல்களுடாக விளங்கியது. பாவம் செய்தா நெருப்புக்க போடப்படுவாகள். நான் பாவம் செய்யக்கூடாதென நினைப்பேன். ஆனா எனக்குள்ள இருக்கிற பூர்வீக வல்லமைகள் , சரீரசோம்பல், கோபப்படல், பொறாமை, பெருமை --
இப்படிப்பல, இதிலிருந்து[ நரகத்திலிருந்து ] எப்படி வெளியே வரலாம்?

எப்ப அறிந்தேனோ
கிறிஸ்து இரத்தம் சிந்தத்தான் கடவுள் மனிதனானார் . அவரின் பாடுகளால நம் நரகவேதனையை நீக்குகிறார் எனபதை எப்ப அறிந்தேனோ அப்பவே கிறிஸ்துவுக்குள்ள என்னை அற்பணித்தேன். என் பழைய சுபாவத்தை மாத்தவேணும் என்னும் உணர்வு இப்ப அதிகமாக இருக்கு. கடவுள் மீதான காதல் பேரானந்த்ததை தருது.

நீங்களும் மரணத்தின்பின் வீட்டுப்பேய்களாய், கணங்களாய்,----- நெருப்பில போடப்படாம விதைக்கப்பட்டு புதிய பூமியில புதுவாழ்வு வாழலாமே,

கிறிஸ்துவோட இணைந்த வாழ்வு மகா பேறு,. இதை தடுக்க பாம்பைப்போல பல சக்திகள் பாதாளத்துக்க [மண்ணுக்கு கீழ] தள்ளிக்கொண்டிருக்கு.. மரணவீட்டிற்கும் தேவாலயத்துக்குமான தொடர்பினை வைத்து இதை உணர முடியும்.

இதை நான் இப்ப 2,3 வருடமாய் உங்களுக்கு சொல்லிச்சொல்லிக்கொண்டே வாறன்.
நீங்களோ செத்துப்போன ஆத்மாக்களை பிராத்தனை மூலம் சாந்தி அடைய பண்ணுகிறீர்கள்.

பக்குவப்பட்ட *ஆன்மா* மட்டும் தான் சாந்தியடையும். பக்குவப்படுத்துவது பூலோக வாழ்வில. அதனாலதான் கல்விச்சாலை என்றும் நாடகமேடை என்றும் பூமியை ஆத்மீகவாதிகள் சொல்கிறார்கள்.


லொள்ளுபாண்டி

04-09-2014 23:33

1}மனோகரனண்ணா, உங்களுக்கு மரணத்தின் பின்னால என்ன நடக்கப்போகுது என்பதை இப்ப நீங்க நிட்சயப்படுத்த முடியாத படியால , ஏதோ மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், இருப்பதை இல்லாததுகளுக்கு கொடுத்து சகோதர அன்போட வாழ்ந்தா காணும். என்பது உங்கட விருப்பம். ++++++++++++....................................அது தான் எங்கட விருப்பமும் ....................................+++++++++++++++++++++++++++2]பாவம் செய்தா நெருப்புக்க போடப்படுவாகள். நான் பாவம் செய்யக்கூடாதென நினைப்பேன்....................அப்போ நெருப்புக்குள் போட்டு விடுவார்கள் என்று பயந்து தான்பாவம் செய்யாமல் இருக்கிறீர்கள் ,,நாங்கள் அப்படி ஒரு சத்திக்கும் பயப்பிடுவது இல்லை ,காரணம் மனச்சாச்சிக்கு விரோதம்மாய் நடந்ததும் இல்லை இயற்கையாகவே பாவம் என்று ஒரு விஷயம் தெரிந்தால் அதை செய்வதும் இல்லை ,,,...............++++++,,,,,,,,3]
நீங்களும் மரணத்தின்பின் வீட்டுப்பேய்களாய், கணங்களாய்,----- நெருப்பில போடப்படாம விதைக்கப்பட்டு புதிய பூமியில புதுவாழ்வு வாழலாமே, ..............வேண்டாம் வேண்டவே வேண்டாம் இவ்வளவும் காணும் இதுக்கு பிறகு சுடுகாட்டோட முடிஞ்சால் காணும் ,,புல்லாகவும் வேண்டாம் புழுவாகவும் வேண்டாம்,,சாம்பல் அனால் காணும்


மனோகரன்

05-09-2014 09:46

இடிச்சு இடிச்சு சொல்லியும் அடிச்சு அடிச்சு எழுதியும் இன்னும் உவங்களுக்கு புரியவில்லை நான் ஆர் என்ன எழுதுகிறேன் .எப்படி வாழ்கிறேன் சிந்திக்கின்றேன் செயல் படுகிறேன் .என்று .நான் ஒன்றும் ராமகிருஷ்ண பரம ஹம்சரோ இல்லை அவர் மனைவி அன்னை சாரதா தேவியோ இல்லை விவேகானதரோ இல்லை விபுலானதரோ இல்லை .ஒரு சாமானியன் .உங்கள் ஊரவன் .வாழ்வில் கண்டு கேட்டு அனுபவித்ததை இங்கு சொல்கிறேன் .மீண்டும் அடி பிடியில் வந்து விட்டினம் ரண்டு பகுதியும்
**மனோகரனண்ணா, உங்களுக்கு மரணத்தின் பின்னால என்ன நடக்கப்போகுது என்பதை இப்ப நீங்க நிட்சயப்படுத்த முடியாத படியால , ஏதோ மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், இருப்பதை இல்லாததுகளுக்கு கொடுத்து சகோதர அன்போட வாழ்ந்தா காணும். என்பது உங்கட விருப்பம். **

இது பவுலின் கதை .பிறகு லொள்ளு அதை ஒட்டி இன்னொரு கதை இவ்வாறு

**]பாவம் செய்தா நெருப்புக்க போடப்படுவாகள். நான் பாவம் செய்யக்கூடாதென நினைப்பேன்....................அப்போ நெருப்புக்குள் போட்டு விடுவார்கள் என்று பயந்து தான்பாவம் செய்யாமல் இருக்கிறீர்கள் ,,நாங்கள் அப்படி ஒரு சத்திக்கும் பயப்பிடுவது இல்லை ,காரணம் மனச்சாச்சிக்கு விரோதம்மாய் நடந்ததும் இல்லை இயற்கையாகவே பாவம் என்று ஒரு விஷயம் தெரிந்தால் அதை செய்வதும் இல்லை ,,,...............++++++,,,,,,,,

எனக்கோ உந்த பம்மாத்து கதைகளில் துளி அளவும் நம்பிக்கை இல்லை முற்பிறப்பு இப்பிறப்பு மறு பிறப்பு சுவர்க்கம் நரகம் நெருப்பில் சுடுவது .மரணம் .எல்லாம் அவரவரின் கற்பனை திறன்களில் உருவான காவியங்கள் .மரணம் அதை நான் எந்த வடிவிலும் எப்பொழுதும் ஏற்றுகொள்ள தயார் .பிறந்த கூட்டில் சிசு மரிக்கின்றது தாய் தப்பும் .சிலவேளை தாய் மரிப்பாள் .சிசு தப்பும் .பிறந்த சிசு கூட சிலவேளை ஊனமாக .அவை எல்லாம் சகிக்க முடியாதவை .எனவே மரணத்தை கண்டு நான் பயப்பட்டு ஏங்குபவன் அல்ல நாளை மரணித்தாலும் சுகமே /இன்பமே என்று வாழ்பவன் நான் .சிங்கள மொழியில் இவ்வாறு ஒரு பழ மொழி **ஹெட்ட மறுனத் துக்க நஹா ** நாளை செத்தாலும் துக்கம் இல்லை .
அப்படியே வாழ்பவன் நான் .சுவர்க்கத்தையும் நரகத்தையும் அன்றாட வாழ்வில் பூலோகத்தில் நாங்கள் தரிசிக்கின்றோம் .எனவே பைபிளில் இத்தனையாம் அத்தியாயத்தில் இவ்வாறு சொல்ல பட்டுள்ளது திருவாசகத்தில் **புல்லாகி புழுவாகி பூண்டாகி வல்லசுரறாய் தேவராய் ** குர் ஆனில் நாளை நீ மவுத் ஆனதும் ஒருநாள் நீ அல்லாஹுவுக்கு கணக்கு காட்ட வேணும் ** என்று ஒவ்வொருவரும் அடி பிடி படுவதிலும் மேலானது உங்களுக்கு உள்ளே உறைந்து வாழும் கடவுளை தேடுங்கள் உணருங்கள் .அந்த கடவுள் சொல்லின் படி வாழுங்கள் .சொர்க்கத்தை இவ்வுலகிலே அனுபவிப்பீர்கள் .ஆர் அந்த கடவுள் தெரியுமே ? அதுதான் உங்கள் **மன ..சாட்சி ** என்ன சொல்கிறீர் கள் எப்படி சிந்திக்கிறீர்கள் எவ்வாறு செயல் படுகிறீர்கள் என்பதை ஒழித்து இருந்து monitor பண்ணும் கடவுள் .அவருடன் இயைந்து அவருக்கு விரோதம் இல்லாமல் வாழ்வீர்கள் என்றால் சுவர்க்கம் இங்கேயே தரிசிக்க படலாம் .இதுக்கு மேல் சொல்ல எனக்கு ஞானம் /அறிவு கானாதப்பா .ஆளை விடுங்கோ .பசிக்குது .இன்னும் அடையவில்லை


மனோகரன்

03-09-2014 15:10

மதங்களின் பெயரால் இந்த இணையத்தையே ஒரு யுத்த களமாய் நகர்த்தும் அன்பர்களுக்கு நான் ஒரு பணிவான கதை சொல்கிறேன் .கேளுங்கோ இது றீல் இல்லை .கதை அல்ல நிசம் .என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் .வேறை என்ன கொஞ்சம் நீளம் கூடினாலும் கொஞ்சம் பொறுமையுடன் வாசியுங்கோ
அன்று நான் 20 வதுகளில் வாழ்ந்த வாலிபன் .ஏலா கட்டத்தில் கடல் படையில் சேர்ந்துவிட்டேன் .ஆறு மாத படை சார் பயிற்சி அதை தொடர்ந்து ஒன்றரை வருட கடல்சார் பொறி இயல் பயிற்சி
ஆரம்ப பயிட்சியின் போது விடிய வெல்லன்னை நாலரை மணிக்கு எழும்பி அவங்கள் தாற அரிசி கழுவின மாதிரி தேத்தண்ணியை குடிச்சு போட்டு நீல கலர் கட்டை கால்சட்டை கொழுவி வெள்ளை நிற வென்னியன் கொழுவி கிலோ மீட்டர் கணக்கில் ஓடி வந்து பொழுது விடியும் தருணத்தில் வந்து விடுவோம் அங்கினை ground இற்கு அங்கு தொடங்கும் P .T அதை ஏன் பேசுவான் up down stretch down /one /two /three எண்ணுவினம் எல்லாம் செய்து களைச்சு விழுந்து போனால் அங்கை காலை சாப்பாட்டுக்கு ஒரு அரை ராத்தல் பாணும் மஸ்க்கட் தொதல் துண்டு மாதிரி மாட்டிறைச்சி துண்டும் ஒண்டும் (இப்ப கடல் படையில் மாட்டிறைச்சி கண்ணிலையும் காட்டுவதில்லை என்று இடையில் கேள்வி ).ஆச்சி சுட்டு தந்த அப்பம் /புட்டு /தோசையை /இடியப்பத்தை /பல்ன்சொத்தை எங்கை நான் அங்கு காண ? எல்லாம் ஊழ்வினை பயன் எண்டு நினைத்து அனுபவித்தது தான் .பிறகு அது முடிய எட்டு மணி போல ஆஜர் ஆகவேணும் Parade Ground இலை left wright பழக .நான் அதெல்லாம் விக்டோரியாவில பழகி என் 13 /14 வயதில் தியத்தலாவை ராணுவ முகம் போய் துவக்காலையும் சுட்டு போட்டு வந்தவன் நான்
உது முடிய வகுப்பறை பாடங்கள் நடக்கும் .துவக்குகளை கையாளும் விதம் பற்றி
ஒருமுறை ஒரு Instructor சொன்ன கதை இன்றும் என் நினைவில் .துப்பாக்கி என்பது கவனமாக handle பண்ண வேணும் .சரியாக உங்கள் மனைவி போல .அதை ஒருவருக்கும் கொடுக்க படாது .பிறகு உனது துப்பாக்கியே உனக்கு இயமன் ஆகவும் கூடும்
இவை எல்லாம் முடிந்து பின் கடல் ஓடுவது பற்றி வகுப்பு வேறு வகுப்பறை களில்
அது முடிந்து நீண்ட kew வில் நின்று மறியல் காறர் போல ஒரு கொஞ்ச சோறும்
கறியும் பெரும் பாடு பட்டு திண்டு போட்டு சின்ன குட்டி தூக்கம் போட்டு மீண்டும் எழுந்து எங்கள்


manoharan

04-09-2014 09:00

முக்கிய விடயம் சொல்ல முதல் தானாகவே அரை குறையில் அனுப்பபட்டு விட்டது .அது அடிக்கடி நடக்கும் சமாச்சாரம் .விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன் .
மதிய உணவு மறியல் காரர் kew வில் நின்று வாங்குவது போல வாங்கி அடைந்து பின் ஒரு குட்டி தூக்கம் .இதையும் சொல்லியே ஆகவேண்டும் .உணவில் பெரும்பாலும் மாட்டிரைச்சியே .இறைச்சி உண்ணாதவர்களுக்கு Meat free என்று ஒரு Card கொடு படும் .அவர்களுக்கு மீனோ அன்றில் முட்டையோ கொடுபடும் .பெருபாலோர் அதை விரும்புவைதில்லை .மாதம் ஒரு முறை இருமுறை கோழி கறி நல்ல ருசி அதை இழந்து விடுவோம் என்பதற்காக அவர்கள் எடுப்பதில்லை .மாட்டிறைச்சி என்று உணவு supply பண்ணும் அந்த Contract காறன் supply பண்ணுவது அங்கினை பன்குளம் /தம்பல காம பக்கத்தில் உள்ள எருமை மாடு /காட்டில் உள்ள குழு மாடுகளின் இறைச்சி .அப்படி supply பண்ணின ஒரு contractor விமலதாச என்பவன் மூன்று மாடி வீட்டில் வாழ்ந்து கடைசி காலத்தில் இடுப்புக்கு கீழே உணர்வில்லாமல் படுத்த படுக்கையாய் நடக்கவும் முடியாமல் மரித்துவிட்டார் .
அந்த குட்டி தூக்கம் போடும் கதையையும் சொல்ல வேணும் .அது கதை இதுதான்
பயிற்ச்சியின் போது குந்தி இருக்கவும் நேரம் கிடைக்காது .இருந்தும் எங்களுக்கு
tropical Routine (வெப்ப வலய) என்ற வழிமுறை .அதாவது இங்கிலாந்து கடல் படையில் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது லோர்ட் நெல்சணினால் அறிமுக படுத்த பட்டது .வடக்கில் யுத்தத்திற்கு முன்பு எல்லாளனின் பெயரில் **எலார **என்ற ஒரு கடல் படை முகாம் மட்டுமே .இன்றோ அங்கு ஏராளம் .காங்கேசனில் **உத்தர ** (வடக்கு ) சம்பிலை அண்டி **அக்போ ** இன்னும் பல
அதோடு ஐந்து கிலோ மீற்றருக்கு ஒரு Naval detachment கள் .அப்போ அன்று காரை
நகர் தளத்தில் அந்த **tropical Routine ** நடை முறையில் .தண்ணி இல்லை .சுன்னாகத்தில் இருந்து பௌசெர் களில் வரும் .பின் மூளாயில் ஒரு கிணறு தோண்ட பட்டது .கோடையில் சுட்டெரிக்கும் வெயில் ..ஒரு மணியுடன் அலுவல்கள் முடிந்து விடும் .அதே Routine பயிற்ச்சி கல்லூரியிலும் கடை பிடிக்க பட்டது .காரணம் பயிலும் அதிகாரியாக(officer Cadet ) அன்றைய கடல் படை தளபதியின் மகனும் அங்கெ .அது எங்களுக்கும் வாசி ஆக குட்டி தூக்கம் போட்டு எழும்பி பொலிஷ் பண்ணி மினுக்கி மீண்டும் ஆஜர் ஆக வேணும் 4 மணிக்கு ஸ்போர்ட்ஸ் கிரௌண்ட் போக .அங்குதான் சுவாரசியம் நடக்க போகுது .
ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டத்தில் ஓடி கிரௌண்ட் அடைவோம் .அங்கு அனைத்து ஸ்போர்ட்ஸ் களும் எல்லோரும் விளையாட வேணும் சுழற்சி முறையில் .உதய் பந்து /கை பந்து /கூடை பந்து /கிரி கோட்/ஹொக்கி இன்னும் பல
எனது Batch இல் 117 பயிலினர்கல் .அதில் 12 தமிழர்கள் .நாட்டின் பல பாகங்களிலும் இருந்து .பெரும் பான்மை யாழ்ப்பாணத்தவர் .
அதில் ஒருவர் ஊர்காவல் துறையை சேர்ந்த ************ஜேசுதாசன் ************தோப்பனார் ஒரு இன்ஸ்பெக்டர் of Police
இன்னொருவர் ******கிருஷ்ணதாஸ் ******** பரித்தித்துறை வியாபாரி மூலையை சேர்ந்தவர் .அவரின் தாயார் ஒரு ஆசிரியை .தோப்பனார் காங்கேசன் சீமேந்தில் ஒரு Store keeper . பின்னை சுவாரசியத்தை கேளுங்கோவன் .ரண்டு பேரும் எதிர் எதிர் கோஷ்டியில் ஹொக்கி விளையாடுகினம் .ஹொக்கி stick தவறுதலாக காலில் அடி பட இருவருக்கும் இடையே சண்டை மூண்டு கட்டி பிடிச்சு உருள் படுகினம் .இதை தூரத்தே இருந்து அவதானித்த PTI (Physical training Instructor ) புத்த தாச .கண்டு விட்டார் .ஆறேழு PTI மார் மேற்பார்வை செய்வார்கள் .இந்த புத்த தாச என்பவர் திருமலையில் பிறந்து வளர்ந்து படித்தவர் .Very ஸ்மார்ட் young handsome gentleman தமிழ் கதைத்தால் அவர் ஒரு சிங்களர் என்று எவரும் சொல்லார் .தோற்றத்தில் ஒரு ஹிந்தி நடிகன் போல .கடல் படை உதய் பந்தாட்ட குழுவான **SEA HAWKS ** இல் ஒரு முன்னணி வீரன் .அவர் ஓடி போய் அந்த இருவரையும் விலக்கி சொன்ன கதை இது
நீங்கள் ரண்டு பேரும் யாழ்ப்பாணம் அல்லே .நீ கிருஷ்ண தாஸ் ஒரு ஹிந்து .உங்கடை சிவபெருமாநின்றை வாகனம் அல்லே பசு .ஆனால் மெஸ் இலை நீ மாட்டு இறைச்சி எண்டு நினைச்சு எருமை மாட்டின் இறைச்சி தின்கிறாய் .நீ ஜேசுதாசன் ஒரு கிறிஸ்தவன் .உங்களுக்கு மாட்டிறைச்சி தடை இல்லை .இருந்தும் நான் இந்த புத்த தாச ஒரு உண்மை பௌத்தன் எனது meal card Meat free
ஏனடா அடி பிடி படுகிறியள் .ஒண்டாய் வாழ பழகுங்கோ .உன்றை இரத்தம் அவனுக்கு எத்தலாம் .அவன்றை இரத்தம் உனக்கு எத்தலாம் Blood குரூப் ஒத்து போனால்
அவர் நினைத்தால் அந்த ரண்டு போரையும் அடி பிடி பட்டதற்காக பயிற்ச்சி பள்ளியில் முறை பாடு செய்து பெரும் தண்டனைகள் வாங்கி கொடுத்து இருக்கலாம் .அதை அவர் செய்யவில்லை .மாறாக மானிட அணுகு முறை
பாருங்கோ பேர்களை
**கிருஷ்ண தாஸ் **
**ஜேசுதாஸ் **
**புத்த தாச **
நீங்களும் எங்கடை பெரிசு .இல்லை எங்கடை தான் பெரிசு எண்டு அடி பிடி படாமல்
எல்லாரும் பெரிசு .எல்லாற்றையும் பெரிசு என்று நினைத்து எம்மதமும் சம்மதமே என்று வாழ பழகுவோம் ஆக .


manoharan

04-09-2014 17:15

வெளிநாடுகளில் நடக்கும் தில்லுமுல்லு திருகுதாளங்களையும் கொஞ்சம் கேளுங்கோ .அன்று ABCD தெரியாதவ்வை எல்லாரும் வெளிநாடு ஓடி லச்சன்கள் குடுத்து லோச்சுகலிளில் அலைஞ்சு இன்று வெளிநாடுகளில் .அவை படும் பாடை என்னெண்டு சொல்ல ? எங்கடை ஊர் ஒருவற்றை மகன் acident பட்டு ரோட்டிலை சப்பை ஆகி .அவரின் தேப்பன் அருகில் போய் உதாரோ accident பட்டு போச்சினம் போல எண்டு அவர் கண்டும் காணாததும் போல போய் விட்டாராம் .அவருக்கு தெரியாது அங்கு சப்பை ஆகி உள்ளவர் தன் மகன் என்று .அந்த நாட்டு பொலிஸ் போன் அடிச்சு உன்மகன் accident பட்டு அரை குறை உயிரில் அவரை காப்பாத்த வேணும் என்று சொல்ல அவர் சொன்னாராம் .ஐ நோ இன்கிலீஎசு எண்டு இதுதான் நாங்கள் வாழும் வெளிநாட்டு வாழ்வு .எடை abcd தெரியாதவை எல்லாம் வெளிநாட்டில் வீடு வளவு வேண்டி விக்கும் Real எஸ்டேட் காரர் .டாக்குத்த்னுக்கு படிச்ச என்ரை பொடி இன்று அலைஞ்சு திரிகிறான் அங்கும் இங்குமாக .எல்லாம் காலம் செய்யும் கோலங்கள் .**எடியே வாடி அம்மன் கோயில் திருவிழாவுக்கு போய் நாங்கள் கொண்டி காட்டவேனுமடி .எடடி உடுப்பு எல்லாத்தையும் .அடுக்கடி
சூட்கேசுக்குல்லை .உந்த லூசு மனோகரன் அளட்டுகிறார் .வாடி போவோம் ஊருக்கு எங்கடை வெளிநாட்டு கொண்டி காட்ட .அந்த காலத்திலை சீவாத தலையோடை பேன் பிடிச்ச மயிரோடை வெளிப்புல வயல் எல்லாம் புல்லு செருக்கி திரிஞ்ச பெண்டுகள் தான் நாங்கள் .இப்ப வெளிநாடு வந்து கூழ் பாட்டி
BBq போடுகிற நவீன பெண்டுகள் நாங்கள் .உவர் மனோகரன் எண்ட கிளட்டுக்கு எங்களை பாத்தால் அழல் எரிச்சல் போல ..*அதில்லையடி பெட்டையழலே நீங்கள் எங்கயடி பிறந்தநீன்கள் ? எப்பிடியடி வாழ்ந்தநீன்கள் /கொஞ்சம் ஜோசின்கொவடி ?
எதோ வானத்தில் இருந்து விழுந்த ஆக்கள் மாதிரி அல்லே நடக்கிரியல்
இன்னும் இஞ்சை நீங்கள் உங்கினை போக முதல் வாழ்ந்த மாதிரி கன பேர்கள் .அந்த பாவங்களுக்கும் ஏதும் செய்யுங்கோ உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் .நீங்கள் பேர் எடுக்க கோயில் குலத்துக்கு அல்லே இலச்ச கணக்கில் அள்ளி கொட்டுகிரியல்


கதிரவன்

05-09-2014 10:32

ஏனடா அடி பிடி படுகிறியள் .ஒண்டாய் வாழ பழகுங்கோ .உன்றை இரத்தம் அவனுக்கு எத்தலாம் .அவன்றை இரத்தம் உனக்கு எத்தலாம் Blood குரூப் ஒத்து போனால்
அவர் நினைத்தால் அந்த ரண்டு போரையும் அடி பிடி பட்டதற்காக பயிற்ச்சி பள்ளியில் முறை பாடு செய்து பெரும் தண்டனைகள் வாங்கி கொடுத்து இருக்கலாம் .அதை அவர் செய்யவில்லை .மாறாக மானிட அணுகு முறை
பாருங்கோ பேர்களை
**கிருஷ்ண தாஸ் **
**ஜேசுதாஸ் **
**புத்த தாச **
நீங்களும் எங்கடை பெரிசு .இல்லை எங்கடை தான் பெரிசு எண்டு அடி பிடி படாமல்
எல்லாரும் பெரிசு .எல்லாற்றையும் பெரிசு என்று நினைத்து எம்மதமும் சம்மதமே என்று வாழ பழகுவோம் ஆக . !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


சூழ்னிலை காரணமாக முளுவதும் வாசிக்க முடியவில்லை இருந்தும் மேலே உள்ள வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வார்த்தையை மிகவும் மதிப்போம் .

யேசுவுக்கு நான் எதிரியல்ல. யேசுவின் பெயரால் நடக்கும் தீமைகளைதான் பொறுக்க முடியவில்லை.

இத்தளத்தினை விட்டு பிரியவும் முடிய வில்லை .
இங்குவந்தால் நின்மதியும் இல்லை.

ஆணவங் கொண்டவர்கள் தங்கள் பெருமையை கூறுவது தவறல்ல. ஆனால் அடுத்தவரின் நம்பிக்கையை அவதூறு செய்வது தவறில்லையா?

தெரியாததை தெரிந்து கொள்ள கேள்வி எழுப்புவது தவறில்லை. அனால் அடுத்தவரின் நம்பிக்கைமீது அவதூறு பேசுவது தவறில்லையா?

நான் சொல்வது மட்டும் தான் சரி மற்றவை அனைத்தும் தவறு என்று கொக்கரிக்கும் நபர் என்னமும் மதத்துக்குரிய விழக்கம் சொல்லவில்லையே ஏன் ?
நெற்றில் எங்கேயும் கிடைக்கவில்லையா?

அடுத்தவரின் நம்பிக்கைமீது அவதூறு பேசுவதை அனுமதிப்பது இத்தளத்தின் நிர்வாகிகள் செய்யும் தவறில்லையா?

ஒரு தனிநபரின் பெயர் பந்தாடப்பட்டிருக்கிறது அது தவறில்லையா?

நாங்கள் என்ன எழுதினாலும் புள்ளடி போடும் நிர்வாகிகள் ஏன் அந்த தனினபரின் பெயருக்கு புள்ளடி போடவில்லை?

எழுதியவரின் உள்னோக்கம் வெளிப்பட்டுவிடும் என்பதினாலா?

உங்களுக்கு நான் பதில் எழுதிப்போட்டு பஸ்சை விட்டுட்டு நிற்பது தவறில்லையா?


லொள்ளுபாண்டி

07-09-2014 10:13

வஸ்சை விட்ட மாதிரி உணர்ச்சி வசப்பட்டு வேலய விட்டுடாதேங்கோ மிஸ்ரர் கதிர்


மனோகரன்

05-09-2014 14:59

கதிரவா கதிரேஸ் வரா !! உன்கூற்றை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை .இஞ்சினை வந்து வாசிச்சு நீ வேலைக்கு போற வசுவை மிஸ் பண்ணினால் அதுக்கு நாங்கள் பழியே ? ஏன் அண்டைக்கு உளவாரத்தொடையும் புல்லு செருக்கி திரிஞ்ச எங்க ஊர் பெண்டுகள் இப்ப வெளிநாடுகளிலை BMW Benze volvo காருகளை சுழட்டி
பீச் பாட்டி /கூழ் பாட்டி போடுகினம் .நீரும் அது மாதிரி மலிஞ்ச கார் ஒண்டு வேண்டினால் நேர காலத்துக்கு வேலைக்கு போகலாம் அல்லே ?

**அடுத்தவரின் நம்பிக்கைமீது அவதூறு பேசுவதை அனுமதிப்பது இத்தளத்தின் நிர்வாகிகள் செய்யும் தவறில்லையா?**
அது அவர்களின் தவறு அல்ல .அவர்கள் சரியானதையே செய்கிறார்கள் .முரண் பட்ட கருத்துக்கள் முட்டி மோதும் பொது தான் ஒருவன் சிந்தனையில் தெளிவு அடைவான் .அதிலையும் குறை காண்கிறீர்கள் குறை காண்பதென்பது அன்றில் இருந்து இன்று வரை எங்களை பீடித்துள்ள தீராத வியாதி .அதுக்கு ஆயுர் வேதத்திலோ அன்றில் வெஸ்டேர்ன் வைத்தியத்திலோ மருந்து /சிகிச்சை இல்லை
அது எங்களிடம் உள்ள தீராத வியாதி .அவர்கள் எந்த ஒருவரினதும் **உவற்றை படிப்பு என்ன தொழில் என்ன .ஊர் என்ன வசதி வாய்ப்பு என்ன எந்த நாடு ஊர் எத்தினை கார் எத்தினை வீடு எண்டு தேடாமல் கருத்துக்கள் + ஆக்கங்களை வெளி விடுகிறார்கள் .அண்மையில் கூட ஒருவர் **இ ஜி சி பூ பொ மாசி குசி **என்று அனுப்பியதையும் நான் கண்டேன் .அதற்காக சில வேலை அற்ற வீணர்கள் எழுதி அனுப்பும் தூஷணங்களையும் அனுப்ப சொல்லியே எதிர் பார்க்கிறீர்கள் .**புள்ளடி அடிப்பதும் /முழுவதையுமே மறைப்பதும் அவர்களின் உரித்து


லொள்ளுபாண்டி

07-09-2014 23:15

நா.சிவாஸ்

இந்த லொள்ளுபாண்டியிட்ட கேட்டு கேட்டு அலுத்துப்போச்சு .
பவுலாரே உங்களுக்குத்தானே மதம் பற்றி எல்லாம் தெரியும் நீங்களாவது சொல்லன் ராசா மதம் என்றால் என்ன ராசா,,,,,,,,,,,,,,,,,,,???? ?????????????????? கதிரவன்
நான் சொல்வது மட்டும் தான் சரி மற்றவை அனைத்தும் தவறு என்று கொக்கரிக்கும் நபர் என்னமும் மதத்துக்குரிய விழக்கம் சொல்லவில்லையே ஏன்,,,,,,,,,,,,,,,,,,,,,,இப்போ புரிகிறதா யார் அவர் எண்டு


manokaran

07-09-2014 12:44

நீதிமன்றம் கூடுகின்றது .நீதி பதி வருகின்றார் அவரின் ரகசிய அறையில் இருந்து உடுப்புகள் கொழுவி .அவரும் பொய்களை உண்மை என்றும் உண்மைகளை பொய் என்றும் காசுக்காக தன் வாத திறமையினால் எத்தனையோ குற்ற வாளிகளை தண்டனையில் இருந்து தப்ப வைச்சு தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களை தப்ப வைச்சு அரசு தரப்பு வக்கீல் (government procurator ) ஆகி பின் உள்ளூர் அரசியல் வாதிக்கு பந்தம் பிடிச்சு இப்போ அவர் மாவட்ட நீதிபதி .அவர் வருகிறார் .
சுப்பிர்ரீம் கோட் silence .அந்த காலத்தில் அரண்மனைக்கு மன்னன் வரும் போது
**வீர பராக்கிரம உத்தம விக்கிரம அதி உத்தம மன்னர் ஜெய வீர ஜெக மன்னர் வருகிறார் **பராக் பராக் ** என்பது போல நீதி பதி கோட்டுக்கு வர அங்கு குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேளாத நிசப்தம் .
எழும்புகிறான் பனிப்புலம் கலட்டியை சேர்ந்த யதார்த்த வாதி பிரக்கன் அவன் மனோகரன் எண்டவன் .
கனம் நீதி பதி அவர்களே ! யுவர் ஆனார் எண்ணுவினம் தமிழ் நாட்டு படங்கள் + சீரியளுகளிலை .பிரக்கராசி மனோகரனுக்கு ஒரிச்சினால் இங்கிலீசு தெரியும் .இருந்தும் அவன் சுத்த தமிழில் விவேக் ஒரு படத்தில் கதைத்தது போல் கதை
இவ்வாறு .
**கனம் நீதி பதி அவர்களே இந்த நீதி மன்றம் பல வருடங்களாக மூடி கிடந்தது ஐயா .எத்தனையோ விசித்திர வழக்குகளை எல்லாம் விசாரித்த நீதி மன்றம் ஐயா ஆடுகாலை வெட்டி போட்டான் .வயல் வரம்பை மூண்டு அங்குலத்தால் அரக்கி போட்டன் என்று அன்று நாங்கள் பிரக்கராசி மாரை வாழ வைச்சோம் வரிய கணக்கிலை காசை அள்ளி இறைச்சோம் இண்டைக்கு அவையின்றை பிள்ளையால் எல்லாம் வெளிநாடுகளிலை வெள்ளை காரர் மாதிரி வாழுகினம் ஐயா **
நானும் ஒரு சட்ட கல்லூரி போய் படிக்காத ஒரு பிரக்கராசி ஐயா ..என்னை உங்கை பலர் பேசுகினம் இப்பிடி
நீதி மன்ற கலரி எங்கும் ஒரே அமளி .உந்த லூசு மனோகரன் எல்லாம் புட்டு புட்டு வைக்கிறான் பாவி .வாடி அங்கினை போய் ஒரு பிலேன்றி குடிச்சு போட்டு தட்டி வானிலை ஏறி வீட்டை போவோம் .நீதவான் இப்பிடி சொன்னார் அவர் சொன்னதிலும் ஞாயம் உண்டு உவர் லொள்ளு எண்களின் நீதி மன்றில் கதிரவன் என்ற கள்ள பெயரில் தாக்கிய வழக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை .அவர் ஆர் எவர் அவரின் பிறப்பு அத்தாட்சி பத்திரம் கச்சேரியில் பதிய பட்டுள்ளதா என்று visaariththu


கதிரவன்

06-09-2014 01:05

மதங்களின் பெயரால் இந்த இணையத்தையே ஒரு யுத்த களமாய் நகர்த்தும் அன்பர்களுக்கு நான் ஒரு பணிவான கதை சொல்கிறேன் !!!!!

இந்த வசனத்தினை நான் எழுதவில்லை. எழுதியவர் யார்?

பிசாசு என்ற சொல் தூசணமாக எந்த அகராதியில் உள்ளது என்று நான் அறியேன்.
பிசாசும் பாம்பு போன்ற ஓர்சொல் என்றே நினைக்கின்றேன்.

அறியாததை அறிந்து கொள்ள கேள்வியாக எளுப்பலாம். அவதூறு பேசவேண்டிய காரணம்.

>முரண் பட்ட கருத்துக்கள் முட்டி மோதும் பொது தான் ஒருவன் சிந்தனையில் தெளிவு அடைவான் .அதிலையும் குறை காண்கிறீர்கள் <

இந்த வசனத்தினை அற்புதனின் விடையத்தில் நீங்கள் கையாண்டிருந்தால் இன்றும் என்மனதை துளைத்துக் கொண்டிருக்கும் சில வசனங்களை எழுதியிருக்க மாட்டீர்கள். இது அற்புதனுக்கு வக்காளத்து அல்ல. சிலவார்த்தைகள் என்மனதினை மிகவும் ஆளமாக தோண்டிவிட்டது.

கொஞ்சம் அதைகப் பிரசங்கித் தனமாய் எழுதிப்போட்டன் போல?


லொள்ளுபாண்டி

05-09-2014 23:35

இதில் கருத்து எழுதும் எனது சகோதரர் பவுலும் நானும் அன்பாக தான் இருக்குறோம் முட்டி மோத மாட்டோம் எங்களின் கருத்துக்கள் வேணுமெண்டால்முட்டி மோதி அதில் நல்ல கருத்துக்கள் கிடைக்கலாம் ,அதேபோல் கதிரவனையும் அப்படி தான் நினைக்குறோம் ,,,அத்தோடு ஒருவருடைய நம்பிக்கையையும் நான் கேடுக்கேல அவர்களுடைய நம்பிக்கை அவர்களுடையது அதை அடுத்த மதக்காரர்களிடம் திணிக்க படாது ,,அதுதான் என்வாதம் ,,,,உதுக்காக என்னை நீதி மன்றத்தில் கொண்டே நிப்பாட்டி போடதயிங்கோ


மனோகரன்

02-09-2014 13:45

அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று முகநூலில் இவ்வாறு **இளவாலை /பனிப்புலத்தை சேர்ந்த 28 வயது தாய் ஒருவர் தொண்டமனாறு செல்வச்சந்நிதி கோயிலில் ஐஸ் கிரீம் கேட்ட தன் ஐந்து வயது குழந்தையை அடித்து தாக்கியதால் பொலிசினால் கைது ** அதற்கு நான் எழுதிய கருத்தை கொளுவ கஷ்டபட்டேன் .அதனால் இங்கு கொளுவுகிறேன்
***அன்றைய எமது கிராமிய வாழ்வில் நாம் என்றும் இவை போன்று கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை .இன்று இவாறு நிகழ்வதற்கான மூல காரணம் இன்றைய வாழ்வில் மனிதர்களின் தேவைகளின் அதிகரிப்பு .அத்தியாவசிய தேவைகளுக்கு மேல் தொழில்நுட்ப மாற்றங்களினால் தொலைகாட்சி /கை அடக்க தொலைபேசி /கணணி /புது புது உடு புடவை இன்னும் பற்பல .இவை எல்லாம் சாமானியர்கள் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாதவை .அன்று உள்ளவருக்கும் இல்லாதவருக்கும் இடையே இருந்த இடை வெளி சொற்பமே .இன்றோ அது விரிந்து வியாபித்து நீண்ட இடை வெளி .இது பலருக்கு மன அழுத்தம் எனும் வியாதியை கொடுத்து விடும் .அதன் பாதிப்பே அந்த பால் குடி பிள்ளைகளை கொல்ல முனைந்தது .சிலர் தாங்களும் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபடுவார் .இன்னொரு முக்கிய பங்காற்றுவது வெளி நாட்டு காரரின் பணமும் அவர்கள் ஆடும் ஆட்டங்களும் ***


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

02-09-2014 21:39

http://www.seithy.com/breifNews.php?newsID=116025&category=TamilNews&language=tamil

கடின உழைப்பிருந்தும் தாம் ஏனையவர்களின் நிலைக்கு உயர முடியவில்லையே என்ற விரக்தியின் வெளிப்பாடுகளின் ஒன்றாகவும் இது இருக்கலாம். இருப்பவர்கள் அவற்றை (மேலதிகமாக) காட்டுவதற்கு கோயில்களைத்தான் தலமாக கொள்கிறார்கள் என்பது எமது ஊரிலும் நடக்கிறது ஒன்று.

http://www.panncom.net/p/2572


மனோகரன்

03-09-2014 13:25

ஓம் ஓம் அதெண்டால் உண்மைதான் .இருப்பவர்கள் தங்களிடம் இருப்பவற்றை இல்லாதவர்களுக்கு புடம் போட்டு காட்டி மகிழும் இடங்களில் கோயில்கள் முதன்மை ஸ்தானம் .
அன்று நான் சிறுவனாக இருந்த காலம் புத்தூர் மார்க்கண்டு செட் .கொக்குவில் சின்னத்துரை செட் பிறகு சிறு விளானில் இருந்து ஒரு செட் சின்ன மேளங்கள் .மூண்டு வாசல் சப்பறங்கள் .மல்லாகத்து சிகரங்கள் கொண்டு வந்து ஷோ காட்டி மகிழ்ந்தனர் திருவிழா உபயகாரர் .விடிய காசு கொடுத்து செட்டில் பண்ணும் போது அவையின்றை புளுகத்தை பாக்க ஏலாது அப்பா .நான் பள்ளிகுடமும் போகாமல் ஆ எண்டு புதினம் பாக்கிறது .பிறகு பள்ளி குடம் போக செல்ல ஆச்சியிட்டை பேச்சு வாங்கி பள்ளிகுடத்திலை லேற்றாய் போய் வாத்தியிட்டை பிரம்படி வேண்டினதுதான் .
இன்று trend இன் வடிவம் மாறி .டவுனில் இருந்து வெளிநாட்டு பக்த கோடிகளின் அருள் கொடையில் லச்சன்கள் செலவு செய்து மியூசிக் குரூப் வரவழைச்சு பாடுவிக்கினம் .சனம் வாயை ஆவெண்டு கொண்டு ரசிக்கினம் .பக்தி ததும்பும் கோயில்களில் அவர்கள் பாடும் பாடல்கள் இவ்வாறு .**lux soap ஆய் மாறிவிட நான் ரெடி .இப்ப நீங்க ரெடியா ?
வடிவங்கள் மாறினாலும் நோக்கங்கள் ஒன்றே .அப்ப அந்த இயலாத ஏழை எளியதுகள் என்ன செய்ய ? எங்கு போக ? பாவங்கள் குழந்தைகளை அடிப்பினம் .ஏலா கட்டத்தில் அரளி கொட்டையிடம் சரண் அடைவார்கள் .சாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி பரலோகம் போக வேண்டியது தான்


பவுல்

29-08-2014 20:58

இன்று காலை வேலை இடத்தில இருந்து தென்னிந்தியருக்கு அனுப்பிய கடித்ததை காணவில்லையே


பவுல்

29-08-2014 10:57

.தென்னிந்தியரே,
இறைவன் தன் மகன் மீதோ மகள் மீதோ வைத்த உறவை எந்த மற்ற உறவுகளால பிரிக்க முடியா. மற்ற விடயங்களில பெற்றோர், கணவன் , முதலாளி, அரசாங்கம் போன்றவர்கள் தங்கள் அதிகாரங்களை பயன்படுத்தலாம்.
இறைவனையும் மனிதனையும் பிரிக்க யாருக்கும் அதிகாரத்தை அன்பேசிவம் அனுமதி கொடுக்கவில்லை. நாம் அவருடைய ஆன்மாக்கள்.
சில குடும்பங்களில நடந்த சம்பவங்கள் அதிகாரவர்க்கத்தால மறைக்கபட்டாலும், உண்மை உறங்காது. .
ஒருபோதும் இறைவன் குடும்பத்தை பிரிக்கமாட்டார். இறைவன் பல வழிகளில பக்தர்களை பரீட்சித்துப்பாப்பார், ராகவேந்திரரின் கதை, இறைவன் அன்பினால சித்தாத்தர், திருவெண்காடர் போன்ற பலர் தங்கள் மனைவியரை பிரிந்தனர், ஆனா ஐயனாரைப்போல இன்னொருத்தியை கட்டவில்லை.

கிட்லர் காலத்தில நடந்ததே காசாவில .

இந்து ஆலயங்களில நடப்பது என்ன? எதை நாம் புறக்கிறோம்.அரும்பெரும்ஜோதிக்கு என்ன தேவை?

செத்த பிணத்தினை துடக்காக தள்ளப்படுவதை பழையேறபாட்டில வாசிங்கோ, செத்த பிணம் எப்படி பரிசுத்தமாகிறது என்பதை புதிய ஏற்பாட்டில வாசிங்கோ .

இந்து மதம்
சிலர் தங்களை இந்து என்கிறார்கள். ஆனால் அவர்களை இந்து என்றால் என்ன என்றால் 100 -க்கு 90 பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அப்படி இருந்தும் நம் மக்கள் மூட நம்பிக்கையால் மதத்தின் பேரால் கொண்டுள்ள அன்பு செப்பத்தரமல்ல. மற்ற மதக்காரர்கள் அவைகளை அறிவது போல் நம் மதம் நாம் அறியக் கூடாதவர்களாயிருக்கிறோம்.. நம் மக்களை யாராவது உங்கள் மதம் என்ன? யார் ஏற்படுத்தியது? அதன் காலம் என்ன? இது போன்ற வினா வெழுப்பினால் பதில் சொல்லுவாரில்லை. .

கடவுளால் ஏற்பட்டது என்பர் சிலர். ஆதாரம் என்ன வென்றால் வேதம் என்பார்கள். அது என்ன சொல்லுகிறது என்றால் நீ பார்க்கக் கூடாது, நீ கேட்கக் கூடாது, படிக்கக் கூடாது என்பார்கள். அதை கடவுள் எழுதியிருப்பார் என்று யாராவது நம்ப முடியுமா? என்று பாருங்கள். ஒரு பொழுதும் முடியாது. ஏனெனில் கடவுள் சொன்ன வேதமானால் உலகத்தார் எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும். யாரும் பார்க்க வேண்டும். அப்படி இருக்க நாம் எப்படி அந்த வேதத்தை நம்புவது அதன்படி நடப்பது? கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தென்றும் கோடிகோடி வருஷங்களானதென்றும் சொல்லும் நமது மதத்தையோ பெரும்பான்மையான மக்கள் படிக்கக்கூடாது. அப்படி மீறி படித்தால் நாக்கை அறுக்கவும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும், படித்து விட்டால் நெஞ்சை அறுக்கவும் மற்றும் பலவிதமான தண்டனைகள் உண்டு. இதன் பலனாய் . வேதத்தைதான் படிக்கக் கூடாதென்கிறோமேயன்றி வேறில்லை” என்கிறார்கள்.


தென்னிந்தியன்

30-08-2014 07:09

யேசு ஓர் XXXXரியோடு வாழ்ந்தது தப்பாகத் தெரியவில்லை ஆனால் ???இறைவனால் வழங்கப்பட்ட பொறுப்புக்களை உதறித் தள்ளிவிட்டு மனம் போன போக்கில போவது சரியா? (சிதம்பரத்தில் ஓர் ஆசாமி எனற திரைப்பட த்தினை முடிந்தால் ஓர் தடவை பாருங்கள் இது ஓர் சாதாரண் மக்க்ள் எப்போ துறவறத்தினை ஏற்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டுகின்றது. இது பக்திப் படம் அல்ல)
இறைவனையும் உயிர் களையும் பிரிக்க முடியாது என்பதனை நன்கு அறிவேன் இறைவன் உயிர்களுடன் எப்பவுமே ஒன்றித்தவன். இதை உணராதவர்கள்தான் அக்கரைக்கு இக்கரை பச்சை என்றும் இங்குதான் இறைவன் இருக்கினறான் அங்கில்லை என்றுரைதவண்ணம் தன் இச்சைகளுக்காக அலைகின்றான்.

உங்கள் பளைய ஏற்பாட்னை ஏங்களுள் ஏன் திணிக்கிறீர்கள்?
இந்து மதம் எனறால் என்ன என்பது பற்றி அறிய வேண்டுமானால் நமக்கு ஆயுள் போதாது ஆனால் இந்து மதத்தின் அடிப்படையைக்கூட அறியாமல் பலர் இருப்பது வேதனைதான் இப்போதாவது அறிய விரும்புகின்றவர்கள் இஷாயோகா என்ற இணையத்தளத்தின மூலம் அறியலாம்.
வேதத்தினை சாமான்ய மக்கள் படிக்கக்கூடாது என்று வியாசர் எழுதியதற்கான காரணம் என்ன என்பதை நிச்சயமாக நான் அறியேன் நான் எல்லாம் தெரிந்தவன் அல்ல. ஆனால் எனக்கு ஓர் ஊகம் உண்டு 1972இல் யேமனியில் உள்ள பிரபல்யமான ஓர் பததிரிகைக்கு அணுகுண்டை கண்டுபிடித்த விஞ்ஞானி ஓர் செவ்வியளித்தார் அதில் தான் வேததினை படிக்காமல் இருந்திருந்தால் யப்பான் இந்த அழிவைசந்தித்திருக்காது. வேதத்தில் வயாசர் அணுவைப்பற்றி கூறி இடையில் நிறுத்துகின்றார் அதற்கு அவர் கூறிய காரணம் மனிதன் அணுவைவகூடுதலாக அழிவுசக்தியாகவே பயன்படுத்துவான் என்றார். அவர் விட்ட இடத்தில் இருந்தே நான் தொடர்ந்தேன். நான் வேதத்தினை படிக்கவில்லை எனில் அணுவைப்பற்றி சிந்தித்ஏ இருக்கமாட்டேன் என்றார் இப்படிப்பட்டவர்கள் வேதத்தினை படித்தால் மனிதன்ஆக்கப்பாதையை விட்டு அழிவுப்பாதையினை மிகளிதில் நெருங்கி விடுவான்
என்பதை அவர் அன்றே உணர்ந்திருக்கலாம்


நோர்த் இந்தியன்

06-09-2014 10:26

அறே சவுத் இந்தியன் வாலே ! தும் கியா போல்த்தா ஹை? .மேரா நோர்த் இந்தியன் வாலே ஹை .மேரா நாம் குத்வால் .தும் பாகல் போல்தா ஹை .தும்சே பாகல் ஸ்டோரி பூரா மேரா விஸ்வாஸ் நெய் கர்த்தா ஹை

தமிழில் இப்படி .எடே தென்னிந்தியனே ! நீ என்னடா பறையிறாய் ? நான் வட இந்தியன் .என்ரை பேர் குத்வால் .நீ விசர் கதை பறையிறாய் .உன்றை விசர் கதை ஒண்டும் நான் நம்ப மாட்டன்
வந்து விட்டினம் இஞ்சினை தென்னிந்தியன் எண்டு பறைய எங்கடை ஆக்கள்
இன்னும் கொஞ்ச நாளில்லை தென்னாபிரிக்கன் எண்டும் வருவினம் கண்டியலே .ஆற்றை காதிலை உவை பூ சுத்த வெளிக்கிட்டு விட்டினம் ???????????????


பவுல்

01-09-2014 15:56

எங்களுக்கு இங்க கூடுதலாய் சனி, ஞாயிறு திரு விழாக்கள் நடக்கும். அங்க அரும்பெரும் ஜோதீஸ்வரரை தேவாராதனை செய்வோம். எங்களை படைத்தவரிடம் [காப்பவருக்கு] நன்றி சொல்லுவோம். வளிகாட்டி வேத நூலை படிப்போம். இறைவனது பிரசன்னத்தால இதயம் பூரிப்பாகும்.

தென்னிந்தியன் சொன்னமாதிரிஇறைவன் உயிர்களுடன் எப்பவுமே ஒன்றித்தவர் ஆகத்தான் *விரும்பி* மனிதரை படைத்தார். ஆனா எங்கட ஊரில நடக்கிற திருவிழாக்களில அதை தெய்வீகக்காதலை இறைபிரசன்னத்தை ஆனந்தக்கண்ணீரை ஒருத்தரிடத்திலும் காண்பதே இல்லை. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள காதலனுபவங்களை ஔவையார் கதைகளில ஆதியில கேள்விப்பட்டதை இப்ப கிறிஸ்துவுக்கூடாக கண்ணால காண்கிறேன்.

இனிமையானது காதல், துறவறம் என்றா என்ன?

இறைவனால் வழங்கப்பட்ட பொறுப்புக்களை உதறித் தள்ளிவிட்டு மனம் போன போக்கில போவது சரியா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அரிச்சந்திரனை ~அல்லா ~ராகவேந்திரரை அல்லா சித்தாத்தரை அல்லா அருணகிரிநாதரின் மனைவி போல பலர் யாரை சொல்கிறீங்க? திருவிளையாடல்கள்


மனோகரன்

28-08-2014 17:18

ஐயோ பிஞ்சினை அடி பிடி அமளியாய் நடக்குது லொள்ள்ளு ஒரு பக்கம் பிறகு பவுல்
இன்னொரு பக்கம் அடி பிடி வலு அகோரமாய் நடக்குது பிஞ்சினை .நீங்கள் ஏனடா அடி
பிடி படுகுரியல் நான் பெறா பொடியளே ? சமயங்கள் மதங்கள் எல்லாம் ஒண்டைதான்
சொன்னது .அன்பே சிவம் **அசல் வசியாவ பிரேம கரன்ன ** love your neighbour **
என்றுதான் சகல சமயங்களும் போதிக்கின்றது .ஆனால் நாங்கள் என்ன செய்கின்றோம் / உவர் உவ்வளவு சொல்லுகிற உந்த மனோஹரநின்றை பேண்டில் காறி நேத்து நடந்த கூழ் பாட்டிக்கு அவ சுத்தி கொண்டு வந்த சீலையின்றை விலை என்ன தெரியுமே ஈரோவிலை ? சொன்னால் உனக்கு தலை சுத்தும் .அதாலை நான் சொல்லேல்லை .எல்லாம் பம்மாத்துகலடா பொடியே


manoharan

29-08-2014 14:56

உங்கடை கண்டறியாத அடி பிடி ஒருபக்கம் .எங்கடை கேசு எங்கை உங்களுக்கு விளங்கும் ?ஒருத்தருக்கும் சொல்லி போடாதேங்கோ .பிறகு எனக்கு அடிதான் விழும் .
ஊருலகம் எல்லாம் பரப்பி போட்டிஎடா மூதேவியே எண்டு .கதை இதுதான் எங்கடை
பெரியாச்சி நல்ல பிள்ளைக்கு ஆசுவத்திரியிலை சோதிச்சு சொல்லி போட்டினம் கான்சலாம் (புற்று நோய் ) எண்டு .ஆள் தப்பாதாம் .கான்சல் தானாம் எண்டு .
பிறகு குஞ்சாச்சி நல்லம்மாவுக்கும் பிறேசராம் .நெஞ்சை கீறி கிழிச்சு பெரிய ஒப்பிரேஷன் (By பாஸ் surgery ) செய்ய வேணுமாம் .எக்கச்சக்க லச்சன்கள் வேணுமாம் .எங்களிட்டை என்காலை உவ்வளவு காசு .வெளிநாட்டு உதவி உள்ளவை செய்வினம் .நாங்கள் எங்கை போக ? உந்த அடி பிடி படுகுற நீங்கள் எண்டாலும் ஒரு வழி சொல்லுங்கோ ? என்ரை பெரியாச்சி குஞ்சி ஆச்சியை காவந்து பண்ண .அவை சொல்லுவினம் இப்பிடி .ஒரு பாட்டி சொல்லும் இப்பிடி
**கர்த்தரை விசுவாசித்து கருணையுடன் தேவனிடம் மன்றாடுங்கள் .நாமும் உமது
பெரியாச்சி குஞ்சாச்சி மாருக்காக ஜெபிப்போம் /பிரார்த்திப்போம் .குணம் பெறுவது
நிச்சயம் .அடுத்த பாட்டி இப்பிடி சொல்லுவினம் .அண்ணை உதெல்லாம் லூசு வேலை .நீங்கள் நேருங்கோ ஒரு நேத்தி கடன் அந்த பாவட்டம் பத்தைக்குள் வெளிநாட்டு பணத்தில் திடீர் எண்டு முளைச்சு எழும்பின அந்த அருள் மிகு (எல்லா கோயில்களிலும் இப்ப அருள் மிகுந்து அருள் பொழிஞ்சு வழியுது ) ஒரு மணிக்கூட்டு கோபுரம் இன்னும் பல நேருங்கோ .சொல்லி மூண்டு மாதத்திலை
உங்கடை பெரிய + குஞ்சு ஆச்சி ரண்டு பெரும் சுக பட்டு கோயிலுக்கு வந்து விரதம்
பிடிச்சு அடி அளிப்பினம் .நடக்குதோ இல்லையோ எண்டதை பொறுத்து இருந்து
பாருங்கோ !!
அப்ப எங்களை என்ன செய்ய சொல்லுகிரியல் நீங்கள் ? எடே நாங்களும் மனிசர்கள் அல்லே ?நாங்கள் என்ன தேவ லோகத்திலை இருந்து குதித்த தேவர்களே ?


பவுல்

27-08-2014 21:41

உங்களோட வந்து வீடு வீடாய் புத்தகத்தோட அலைய எனக்கு நேரம் காணது அய்யா ,,அப்பிடித்தான் மாறி வந்தாலும் இஞ்ச உள்ள அயலட்ட எல்லாம் ஒரு வலது குறைஞ்சதைய் பார்க்கிறது போல பாப்பினம் அய்யா ...............

லொல்ளுக்கு,
பாவநிவாரணமாக முன்னம் ஆடு,கோழி கோயில்களில பலி இட்டவை. இது ஆதிபகவான் பரம்யோதியின் கட்டளை. {பழைய ஏற்பாடு} இந்து ஆலயங்களில ஆதியில செய்தார்கள். கிறிஸ்து பலியாடான பின்னர் மெள்ள மெள்ள குறைந்து போனாலும். கிறிஸ்துவின் ரத்தத்தால பாவம்[துடக்குகழிவு ]நீக்க திருமுழுக்கு முழுகி நன்நெறியில வாழ உங்கள் வாழ்க்கை பாதை மாறும்.
ஞானியின் இருதயம் துக்கவீட்டில {வலது குறைஞ்சதைய் பார்க்கிறது போல பாப்பினம்} பேதைகளோ களியாடங்களில நகைவிலையை விட உடை விலை அதிகம்----உலகத்தின் அதிபதி பாவம்< பாம்பு. இராவணனின் தகப்பன்.


லொள்ளுபாண்டி

28-08-2014 00:16

நீங்கள் கிறிஸ்த்தவ மதத்தில் எவ்வளவு நம்பிக்கை. அன்பு .. பற்று ,,கொண்டீர்களோ ,,,அதில் இருந்து ஒரு துளியும் குறையாமல் இஸ்லாமிய மதத்தில் நம்பிக்கை. அன்பு .. பற்று கொண்டுள்ளார்கள் ஒரு குழுவினர் ,அவர்கள் தான் சமிபத்தில் சிரியா,இராக் ,,போன்ற நாடுகளில் மத வேட்டை ஆடும் ,is is குழுவினர் அவர்களும் தங்கள் மதத்துக்காக தான் மனித வேட்டை ஆடுகிறார்களாம் ,,,,,,அதுக்காக நான் இரண்டு சம்பந்தபட்டவர்களையும் ஒப்பிடவில்லை ,,ஏன் இவ்வளவும் எதுக்காக எண்டுதான் கேக்கிறேன் ,,,எம்மதமும் சம்மதம் ,,,எல்லா சமயங்களும் மதங்களும் மனிதன் கட்டுப்பாடோடு பயபத்தியோடு ஒழுங்காக வாழ கண்டு பிடிக்க பட்டவையே இதை புரிந்து கொண்டு எல்லோரோடும் அன்போட வாழ பழகினால் ,எல்லாம் சிவமயமே ,,,,,


பவுல்

28-08-2014 19:42

2012இல உலகம் அழியும். என்ற அச்சத்துக்கான காரணத்தை புரிந்தா IS IS பற்றி தெரிந்திருக்கும்.

அன்பே கடவுள். ஆனாஆ!
வரப்போற காலத்தில நாய்களை விட மோசமான கடி, மனுசருக்க மனுசர் ~~~~ இது இறை அருள் எங்கே? என்று கேக்கிற காலம். மனுசருக்க அன்பை காணேலா, இயற்கை 2012க்கு பிறகு படு மோசமா மாறிக்கொண்டே போகும். றோபோக்கழும் [இன்ரர்நெற்]மனிதனுடைய சுயாதீனத்தை கணக்கெடுத்து கட்டுக்க தள்ளும். இது கடைசி மணித்துளில நிக்கிறோம்.

பிணமாக தீட்டாக நெருப்புக்க எரியாதபடி , கிறீஸ்து தன் பாடுகளுக்கூடாக எங்களின் {துடக்குக்கழிவு} குற்ற நிவாரணபலியை மீட்பாக தருகிறார்.பழைய வேதாகம விதிப்படி கொள்ளிவைத்தால் ஒரு வருடத்திற்கு துடக்கு, எரிகிறவரின் உயிர் என்னவாகுமென்று மாணிக்க வாசகர் சொன்னாரே தம்பி, வீட்டுப்பேய் என்று சொல்லித்தானே இறைச்சிமீனை படைக்கின,படைக்கமுன் அதை களவெடுத்து சாப்பிட்டவர்களை பேயடிச்சு காச்சல்ல கிடந்தவர்களை பாத்ததால தான் தம்பி, நீங்களெல்லாம் கிறிஸ்தவராகி துடக்குகழிவு பெற திருமுழுக்கை எடுங்கோ. மரண நிச்சயதாத்தம் மகிழ்ச்சியாக மாறும்.

நீங்க எங்களைப்பாத்து கவலைப்படாதேங்கோ,


மனோகரன்

16-09-2014 14:52

பாத்திஎடா லொள்ளு நீயும் நானும் உவ்வளவு சொல்லியும் இன்னும் வாறான்கள் மதம் திணிக்க .உங்களுக்கு போதிக்க .நான் உவயிட்டை ஒரு கேள்வி கேக்கிறன் .அதுக்கு சரியான பதில் சொல்ள்ளட்டும் உவை .அன்று நாடு தேசம் இன்றி உலஎல்லாம் அலைந்து திரிந்து சொல்லோன்னேன்னா துயர்களை அனுபவித்து (இரண்டாம் உலக யுத்தத்தின் பொது ஹிட்லர் இன் அநியாயங்கள் ஏற்றாக அனுபவித்த அந்த யூதர்கள் தங்களுக்கு என்றும் ஒரு நாடு வேணும் என்று ஒன்று கூடி உண்டாக்கியது தான் அந்த இஸ்ரேல் .மண்ணின் உருத்தானவர்களை விரட்டி ஆக்கிரமித்து உருவாக்கிய தேசம் அது .இலங்கை தேசத்திலும் அதுவே கதை .உண்மையான மண்ணின் சொந்தகாரர் (மண்ணின் மைந்தர்கள் ஓரம் கட்ட பட்டு )
ஆக்கிரமிப்பாளர் அதுதான் அந்த சிங்களர் இன்று இது நம் நாடு நாங்கள் சொல்லுகிற படி தான் நீங்கள் சீவிக்க வேணும் .உங்கடை ஊர் முழுக்க எங்கடை பொலிசு தான் இருப்பினம் .நீங்கள் அறியாத தெரியாத பாஷையிலை தான் முறை பாடு சொல்லி கீழை கை எழுத்தும் வைச்சு போட்டு போகவேணும் .உது ஒண்டும் உங்கினை வெளி நாடுகளில்லை இருக்கிற கனக்க படிச்ச பண்டிதர் மாருக்கு நோடிக்க பூதி .அவைக்கு ராசபக்சே குடும்பம் போடும் தார் ரோட்டுக்கு மேல காப்பெட் போட்ட A 9
பாதை பிறகு கூசா தூக்கும் அரசியல் வாதிகளுக்கு அவை பந்தமும் கொளுத்தி பிடிப்பினம் .
சரித்திரம் வரலாறு அனைத்தும் தி ருபு படுத்தி மழுங்கடிக்க பட்டு இருட்டு அடிப்பு செய்ய படுகின்றது .அன்று மூத்த சிவன் என்ற தமிழ் மன்னனின் பெயர் இன்று **மகா வம்சத்தில் ** முட்ட சீவ என்று மாற்றி விட்டனர் .ஆர் உதய் கேக்க ? எங்கடை ஆய்வாளர்கள் புல் சைலேன்சு உதென் உதுகலுக்குல்லை போய் தலயை குடுத்து
வீணாய் சிக்கலில் மாட்டுவான் .வாற மாதம் என்ரை மூத்தவிலின்ட்ரை கலியாணம்
பிறகு வாற மாதம் எனக்கு பணிப்பாளர் புறமோசன் .உதுக்குள்ளை தலையை குடுத்து என்ரை வாழ்க்கையை நான் ஏன் பாலாக்க வேணும் என்று வாழும் மனிதர்கள் .கந்தர் ஓடை அகழ்வு ஆராச்சில் எத்தனை தடயங்கள் .எல்லாம் மூடி மறைக்க பட்ட கதைகள் .முக நூலில் நான் கண்டேன் ஆரோ ஒரு புண்ணிய வாளன்
கடலுக்கு அடியில் சுழி ஓடி அங்கு உள்ள பழைய கோயிலை காட்டி யிருந்தார் .
நான் கூட அந்த கடல் எல்லாம் சுழி ஓடியவன் அன்று ஏன் இள வயதில்
போத்துகேயர் ஒல்லாந்தர் எங்கள் கோயிலை இடித்து அழிச்சு விக்கிரகனகளை கடலில் வீசு அதில் சிலதை ஐயர் மார் எடுத்து கண்டு போய் அங்கெ பத்தாம் நம்பர் என்னும் மீன் பிடி கிராமத்தில் தாட்டு வைத்தாராம் .பின் அவர்கள் அங்கு கிணறு தோண்டும் போது (1960 களில்) கிடைக்க .அந்த இரண்டு வெண்கல சிலைகளும் இன்றும் அங்கெ கோணேசர் கோயிலில் காட்சிக்கு வைக்க பட்டு உள்ளது .அதன் படங்கள் பிடித்து ஏன் நண்பனின் அண்ணன் பிரபல பட பிளிப்பாலன் நாகராசா கணபதி பிள்ளை பிடித்த படங்கள் அன்று கோணேசர் கோயில் மண்டபத்தில் இரு பக்கமும் இருந்து .இன்று எல்லாம் கழட்ட பட்டுதோ நான் அறியேன்


மனோகரன்

29-08-2014 18:36

உவர் தென்னிந்தியன் தென்னிந்தாவின்றை எந்த பக்கம் எண்டு சொல்லுங்கோ ? தென்னிந்தியா /வட இந்தியா எங்கும் சுத்தி அலைஞ்சவன் இவன் .நீத்து பெட்டி shape
இல் உள்ள இந்தியாவின் வெஸ்ட் கோஸ்ட் இல் கண்லா வில் தொடங்கி ஈஸ்ட் கோஸ்டில் உள்ள கல்கத்தா வரைக்கும் அனைத்து துறை முகங்கள் haldiyaa காக்கி நாடார் /விசாக பட்டினம் நாக பட்டினம் /காரைக்கால் /மதராசு (சென்னை ) தூத்துக்குடி
கொச்சின் /மங்களூர் /கரவார் பின் பம்பாய் எல்லாம் சுழண்டு திரிஞ்சவன் நான் .ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமான இடிச்சல்கள் .அனைத்தும் ருசித்தவன் நான்
வந்து விட்டார் உவர் எங்களுக்கு தென்னிந்தியன் என்னும் பெயர்ரில் எங்கள் காதில் பூ சுத்த .உவரும் ஒரு பண் கொம் வாசகர் .பனிப்புலத்து பானத்தான் ..பகிடி விடாமல் ஒரிச்சினல் பேரிலை வாருங்கோவன் .என்ன பயமே ? பயந்தான் கொள்ளிகளே உங்களுக்கு ? முதுகெலும்பில் பெலம் இல்லையெனில் அதுக்கு குளிசைகள் கிடைக்கும் மருந்து கடியளிலை .வேண்டி விளுன்குங்கோ டாக்குத்தர் மாரின்றை துண்டுகலோடை பொய் .வருகினம் இஞ்சினை எங்கடை கழுத்து அறுக்க தென்னிந்தியன் வட இந்தியன் எண்டு சொல்லி கொண்டு .நாங்கள் உதெல்லாம் வாசிக்க என்ன வேறை வேலை வெட்டி இல்லாத புளுடுகள் எண்டே உங்கடை நினைப்பு ?எங்களுக்கும் பல சோலியல் இருக்க தக்கதாய் ஊரை நேசிப்பதால் இஞ்சினை துறந்து பாத்து எதோ நாங்கள் அறிஞ்சதை அடிச்சு அனுப்புகிறோம்


லொள்ளுபாண்டி

29-08-2014 10:10

என் அன்பு சகோதரரே இன்னும் ஒன்று சொல்ல கடமைப்பட்டு இருக்குறேன் ,,,கடந்த ஆண்டு டென்மார்க்கில்உள்ள தேவாலயங்களை மூடி அதுக்குள் பாடசாலை நடத்த முடிவு செய்து இருக்குறார்கள் காரணம் கோயில்களுக்கு ஒருவரும் வருவதில்லயம் ,,2014...இப்போ அறிவு வூ வூ வூ ,,,,,,வளர்ந்து சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் ,நல்லமுடிவு தான் எடுத்து இருக்கிறார்கள் ,,,,இன்னொண்டையும் சொல்ல விரும்புகிறேன் எவன் ஒருவன் சுயநலம் உடையவனோ ,,தன்மேல் நம்பிக்கை இல்லாதவனோ அவன்தான் இன்னொரு சக்தியின் உதவியை நாடுவான்,,,,,,,


தென்னிந்தியன்

29-08-2014 04:58

யேசு புனிதமானவரே ஆனால் யேசுவின் பெயரால் பல பாவங்கள் நடைபெறுகின்றனவே அவற்ரை ஏன் இந்த யேசுவினால் தடுக்க முடியவில்லை.
இன்று காசாவில் நடைபெறும் கொடூரங்கள் யாரின் பெயரால் நடைபெறுகின்றன.

எத்தனை குடும்பங்கள் யேசுவின் பெயரால் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
கணவனுக்கு தெரியாமல் மனைவியையும். மனைவிக்கு தெரியாமல் கணவனையும் ரட்சிப்பது யார். ரட்சிக்கப்படாதவர்களுடன் வாழ்வது பாவம் என்று சொல்லப்பட்டிருப்பது பைபிளில் தானே.

பழமயை மறவாமல் செளிப்பாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கின்றது ஆனால் தங்களைப்போறவர்கள் உட்பட கூன் குருடு செவிடு நீக்கி ஓர் உன்னதமனிதராக தங்களை உருவாக்கிய வழிபாட்டு முறைகளை உதாசீனம் செய்கின்றீர்கள். இதுதான் நீங்கள் பழமையை மறவாத லட்சணமா

பழமை யார்கும் தீங்கற்ற விடையங்களை அவர் அவர் சந்தோசத்துக்கு கடைப்பிடிப்பதில் என்ன தவறு .

செத்த பிணத்தினை தொடக்கூடாது என்று இந்து மதத்தில் எத்த இடத்தில் கூறப்பட்டுள்ளது என்பதன தெளிவாக சுட்டிக்காட்டவும்.

ஒரு குருவானவர் சீடர்களுக்கு பாடம் நடாத்தும் போது பூனை ஒன்று குறுக்கே ஓடி ஓடி சீடர்களின் கவனத்தினை திசய்திருப்பிக்கொண்டிருந்தது அந்த பூனையை ஓர் மரத்தில் பிடித்து கட்டுவித்தார் குருரிது தினமும் நடந்தது. நாளடைவில் குரு மரணிக்க பிரதமசீடன் அங்கு குருவானார். அப்போதும் அந்த பூனை கட்டப்பட்டது. நாளடைவில் பூனையும் சாக . சீடர்கள் பூனை கட்டுவதை விட்டுவிட்டனர். இதைகண்ட குரு சீடர்களிடம் கேட்டார் பாடம் நடாத்துவதற்கு முன் இங்கு ஏன் பூனை கட்டப்பட்வில்லை என்றார் . பூனை இறந்து விட்டது. அப்படிஎன்றால் வேறொரு பூனையை கொண்டுவந்து கட்டவேண்டியதுதானே என்று குரு கேட்டாராம். இதேபோன்று காரணம் அறியாத காரியங்கள் பலர் செய்கின்றார்கள் தான்,


இந்துமதத்தின் முளுமுதற்கடவுள் என்றளைக்கப்படும் சிவன் வாழுமிடம் சுடலையாச்சே அப்போ அவருக்கும் துடக்கா

அப்ப மதம் மாறுவோமா


லொள்ளுபாண்டி

28-08-2014 23:22

கிறிஸ்தவ மதத்தவர்களைத்தான் தேடி தேடி களைய் பிடுங்குகிறார்களாம் இராக்கில் கிறிஸ்தவர்கள் வாழும் ஒரு நகரைகைப்பற்றி அங்கு எவ்வளவோ அநியாயங்கள் நடத்தி இருக்கிறார்கள் ,,ஒன்பது வயது சிறுமியை சின்னாபின்னம் ஆக்கி இருக்கிறார்கள் இளம் பெண்களின் உறுப்புக்களில் சிலுவையை அறைந்து இருக்கிறார்கள் ,ஆண்களின் உறுப்பை கத்தியால் வெட்டி எறிந்துஇருக்கிறார்கள் கிறிஸ்தவ கோயில்களையும் சிலுவைய் களையும் இடித்து தரைமட்டம் ஆக்கி இருக்கிறார்கள் ,, இவ்வளவு அநியாயமும் கிறிஸ்த்தவர்க்குநடந்தேறியது இப்போ ஏசிடி என்ற அடுத்த மதகாறருக்கு நடக்கிறது ....எல்லாம் மதவெறியே ......


விசுவாசி

26-08-2014 15:43

இதில் கருத்துதெரிவித்தவர்களில் யாருக்கு மதம்வெறி இல்லை சமையவெறி நிறைந்தவர் என்று வாசிக்கிறவர்களுக்குதான் புரியும்.


மனோகரன்

25-08-2014 19:52

**ஏன் செத்தவீடுகளில சாப்பிட்டா துடக்கு** கவலையை விடுங்கோ .என்ன துடக்கோ /
செத்தவீட்டிலை சாப்பிட்டால் .எட்டு வீட்டிலை (Eight house ) போய் வயிறு முட்ட அடை அடைஎண்டு குரக்கன் கூழ் /ஒடியல் கூழ் கணவாய் /நண்டு கறி ஆட்டு இறைச்சி கோழி குளம்போடை வெட்டு வெட்டெண்டு வெட்டி போட்டு கோயிலுக்கு போய் சாமியும் காவலாம் .துடக்கு கழிஞ்சு போகும் ஏழு கிணத்திலை தோஞ்சு முழுகி
இடுப்பிலை அந்த அந்த காலத்து மேளகாரர் சுத்துமா போல கலர் கலராய் இப்ப உங்கினை வெளிநாட்டு காரர் கூதலுக்கு போத்துகிற பொன்னாடை போல கொழுவி கொண்டு போனால் செத்தவீட்டு துடக்கு கழிஞ்சு போம் எண்டு எங்கடை ஐயர் சொன்னவருங்கோ .நான் சொல்லேல்லை .பிறகு என்னோடை அடி பிடியிலை வந்து போடாதேங்கோ .இப்ப குரு மாற்றம் எனக்கு அவ்வளவு சரி இல்லை .ஒரே ஆக்களோடை கொளுவல் தான் .கொளுவ கிழுவ வந்து போடாதேங்கோ என்னோடை .நான் ஒரு கிழவன் .பாவம் கண்டியலே


பவுல்

25-08-2014 20:47

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JqlS11NS6eE


கதிரவன்

25-08-2014 21:11

சுகிசிவம் ஓர் இடத்தில் சொல்வார் மதப்பிரச்சாரம் செய்பவர்கள் எல்லாம் ஓர் அருமையான நடிகர்கள் என்று நடிப்பு சூப்பர் என்ன பின்னணி இசைதான் வாய்கேல்ல


மனோகரன்

26-08-2014 11:23

***மதப்பிரச்சாரம் செய்பவர்கள் எல்லாம் ஓர் அருமையான நடிகர்கள் என்று நடிப்பு சூப்பர் என்ன பின்னணி இசைதான் வாய்கேல்ல**
உதென்ன கதிரன்வன் அண்ணை கதைக்கிறியல் ?பின்னணி இசை வாயக்கேல்லையோ / கொண்டு வாருங்கோ பிரச்சார பாட்டுகளை என்னட்டை .சும்மா யுவன் சங்கர் ராசாக்களை எல்லாம் ஓரத்திலை ஒதுங்கி நிக்குமா போல நான் பின்னணி இசை வழங்குகிறான் .வேறை என்ன interlude நோட்ஸ் எல்லாம் பத்திரமாய் என்னட்டை கிடக்குது .நான் நோட்ஸ் ஐ தர உங்கடை வாத்தியங்களிலை வாசிச்சு கிழிச்சு எறியவேண்டியதுதான்
**ஏசு நாதர் ஏசினால் அவர் என்ன ஏசுவார் **
எடை டட typing error J அடிக்க மறந்து esu உவை மட்டும் அடிச்சு போட்டன் .பொடியல் அடி பிடியிலை வர போறாங்கள் .எங்கடை இயேசு பிரானை உவர் என்ன
பரிகாசம் பண்ணுகிறார் போல எண்டு .அது இப்பிடி வரவேணும்
ஜேசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ?
பாவி நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார் ?
பாவிகளே பாவிகளே உங்கள் பாவத்தை பாருங்கள்
தேவனையே மன்றாடி நீங்கள் மன்னிப்பு கோருங்கள்
திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் நிர்ணயம்
சேர்ப்பதும் பிரிப்பதுவும் (Divorce ) தேவனின் விதியாகும்
**எல்லாம் ஜெசுவே எனக்கெல்லாம் ஜெசுவே
**எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா
பரிசுத்த ஆவியாலே பர புத்திரன் ஈன்ற தாயே
கணமேனும் ஷாந்தி இலையே
நெறி மாறி வந்த தாலே நகைப்பனதே என்வாழ்வே
அங்காலை மறந்து போனன்
பிறகு அசல் பாட்டு நான் இறக்கும் வரை மறக்க
முடியாத மணியான பாட்டு
**கேளுங்கள் தரப்படும் /தட்டுங்கள் திறக்கப்படும்
ஜேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் **
மிச்சம் எழுத போனால் நீங்கள் பேசுவியல்
கீதாபதேசம் .வேதாகம உபநிடதம் எங்கும்
கிடையாது .
ஒரு வரி மட்டும் சொல்கிறேன் எலா கட்டத்தில்
**நிலங்களை உழுவது போல் உள்ளத்தை (மனதை )
உளுங்கள் என்று உலக பிதா சொன்ன போது
ஊரார்கள் உழவர்கள் உள்ளமதில் ஒன்றாக பதிந்து
விட்டார் .ஜேசு ஒன்றாக பதிந்து விட்டார்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்க படும்
ஜேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்
தேடாமல் /கதவை தட்டாமல் கேட்காமல்
எப்பிடி அப்பா கிடைக்கும் ?சிலர் இரவோடு இரவாக
பணக்காரன் ஆக வேணும் என்று நினைத்து தூள்
கடத்துகினம் .சூது விளையாட casino போய் அலைஞ்சு
கயிலை உள்ளதையும் இழந்து பிச்சை காரர் ஆகி
சிலர் அந்தந்த நாட்டு கவுன்மேந்து அன்னதான மடங்களிலை
அதுதான் ஜெயில் இலை சாப்பிட்டு கொண்டு இருக்கினம்
இன்னும் சிலர் நல்ல பட்டு வேட்டி சால்வை அடிச்சு
இடங்களுக்கு ஏற்றால் போல கோட்டும் சூட் உம் கொழுவி
ஷோ காட்டுபவர்களும் உள்ளார்கள் .எல்லாம் கொஞ்ச
காலங்களுக்கே !! தற்காலிகம் உது /உவை எல்லாம்
அடி மனதில் நித்திய ஆனந்தம் மன மகிழ்வு அறவே கிடையாது
வெளி தோற்றத்தில் பார்த்தால் மினு மினு மன்னையும்
போவது லேடஸ்ட் காருகளிலை .எல்லா இடமும் தலைக்கு
மேலை கடன் கடன் ..கடன் .............!!!!!!!!!!!!
தொல்லை நிறைந்த இவ்வுலகில் எல்லாம் ஜெசுவே **


பவுல்

25-08-2014 17:52

இவ்வுலகில் எத்தனையோ மனித யென்மங்கள் பசி பசி பசி படிப்பறிவு இன்மை அவர்களை தேடி தேடி உதவினால் நீங்கள் கேட்பது நினைப்பது எல்லாம் தன்னால் வந்தடையும் .நீங்க சொன்னது தான் லொள்ளு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~>
ஆனா உண்மை இறைவனது அன்பை, அவர் ஏன் இவ்வளவாய் தன் கட்டளைகளுக்க தன் பிள்ளைகள் நடக்க வற்புறுத்துகிறார்? கழுகைப்போல யாரை கொத்தலாம் என சபிக்கப்பட்ட ஊரும்பிராணி வலைவிரித்து திரிகிறதை யார் பாக்கிறார்கள்.

நாங்க தம்பி மரணத்தின் பின் நம் வாழ்வு என்ன? என்பதை அறிந்தா நெருப்பில விழாமல் தப்பலாம். மாவீரரைப்போல விதைக்கப்படுவோம்.

செத்தவரை கடவுள் தான் தீட்டாக சொல்கிறார். எங்கட ஊரில துடக்கு , தீட்டானவள்{மாதவிடாய்} , ஏன் செத்தவீடுகளில சாப்பிட்டா துடக்கு , யாரை எரிக்கவேண்டும், யாரை தாக்க வேண்டும், இதுகளில கவனமாக இருக்க கடவுள் வேதாகமங்களை படிக்க தந்தும் , அதை அலட்சியம் செய்தா ஆபத்து ஆபத்து. இந்த முறைமைகள் மூடநம்பிக்கை அல்ல லொல்லு. கவனமா காக்கவேண்டியது.

பழைய ஏற்பாட்டில கவனமா தீட்டுப்படாம வாழ கடைப்பிடிக்க வேண்டிய வளி சொல்லப்பட்டிருக்கு,

ஆனா கிறிஸ்துவின் ரத்தத்தை நம்பி அவரிடம் சரண்டைந்தவர்களுக்கு இந்த தீட்டுத்துடக்குகள் கழுவப்படுவதால ஆலயத்தில பரிசுத்தமாக்கப்படுகிறோம். தகப்பன் தன் பிள்ளையை நடத்துகிற உறவில வாழ்வோம்.

நீங்க தம்பி கிறிஸ்துவை சரண்புகா விட்டா துடக்குகளை கவனமற்று {சிரித்திரனின் பதில் உங்கட பதில்} இருக்காதேங்கோ. கிறிஸ்தவ நாடுகளில துடக்கு இல்லை. கிறிஸ்துவின் ரத்தத்தால மீட்கப்பட்டவர்களுகே, .

மரணம் நமக்கு நிச்சயதாத்தம் செய்யப்பட்டிருப்பதால அதற்குப்பின்னும் நம் ஆன்மா அழியாத பரிசுத்த இடத்தை போக வளி இங்கதான் உண்டு. இதோ நம் ஆன்மாவை நேசிக்கிற ஆன்ம நேசர் கிறிஸ்து பாதம் பணிந்து துடக்கு கழிப்பை பெறுவோம். திருமுழுக்கு பெற்று பரமனடி சேர , இயேசு கிறிஸ்துவின் ரத்ததிலே நம்பிக்கை வைப்போம். மரண நிச்சயதாத்தம் அழியா பேரின்பத்தினை தரும்.

நரை மயிர் மதிக்கபடத்தக்கதாம். வெண்ணாடையும் பதிப்பானது.


லொள்ளுபாண்டி

25-08-2014 23:47

செத்தவரை கடவுள் தான் தீட்டாக சொல்கிறார். எங்கட ஊரில துடக்கு , தீட்டானவள்{மாதவிடாய்} , ஏன் செத்தவீடுகளில சாப்பிட்டா துடக்கு , யாரை எரிக்கவேண்டும், யாரை தாக்க வேண்டும், இதுகளில கவனமாக இருக்க கடவுள் வேதாகமங்களை படிக்க தந்தும் , அதை அலட்சியம் செய்தா ஆபத்து ஆபத்து. இந்த முறைமைகள் மூடநம்பிக்கை அல்ல லொல்லு. கவனமா காக்கவேண்டியது. --------------------------------------------------------------------------- ------,,,,,,,ஐயோ இதென்ன கோதரியாய் கிடக்குது இந்தாள் என்னபாணபடுத்தியே அங்கால மாத்தி கீத்தி போடும் போல கிடக்கு அய்யா என்ன ஆழவிடுங்கோ எனக்கு என்னும் பலசோலி கிடக்கு , உங்களோட வந்து வீடு வீடாய் புத்தகத்தோட அலைய எனக்கு நேரம் காணது அய்யா ,,அப்பிடித்தான் மாறி வந்தாலும் இஞ்ச உள்ள அயலட்ட எல்லாம் ஒரு வலது குறைஞ்சதைய் பார்க்கிறது போல பாப்பினம் அய்யா ...............ஒரு சின்ன வேண்டு கோள் அய்யா ,,,அந்த மண்ணுக்கா மக்களுக்காக தங்களையே அர்ப்பணிக்கும் அந்த மாவீரரோட ஒப்பிட்டு உங்கட விதையல் எல்லாத்தேம் கொண்டே விதக்கதேங்கோ அய்யா அய்யா அய்யா --


மனோகரன்

26-08-2014 19:31

எங்கட ஊரில துடக்கு , தீட்டானவள்{மாதவிடாய்} , ஏன் செத்தவீடுகளில சாப்பிட்டா துடக்கு , **
அதை ஏன் பேசுவான் லொள்ளு அது ஒரு இயற்கை நிகழ்வு .இன விருத்திக்காக பெண்களின் உடலில் சூலகத்தில் (ovary ) இல் இரு பக்கத்திலும் இரு முட்டைகள் (eggs ) உருவாகி கரு கட்டலுக்காக விந்து அணுக்கள் கிடைக்காத பட்சம் (புணர்தல் இன்றி )
அவை தாமாகவே ஓட்டமட்டிக் ஆக அழிந்து குரிதியுடன் வெளி ஏறுவதுதான் அந்த மாத விடாய் .அது ஒரு cyclic உடற்கூற்று செயல் பாடு .அதுக்கு எங்கடை பழைய கால பென்டுகள் பல பேர்கள் சொல்லிச்சினம் .அவள் துடக்கு /சூதகம் இன்னும் பல .கரி துண்டாலை கோடு கீறி கழிச்சு வைச்சினம் .வர படாது கோட்டுக்கு இஞ்சாலை எண்டு மூண்டு நாள் ஒதுக்கி வைச்சினம்
இண்டைக்கு என்ன நடக்குது .கிணத்தில் நல்ல தண்ணி குடிச்சவை mineral வாட்டர்
போத்தில் அல்லே கேக்கினம் ? பிள்ளை பிறந்தால் பழைய வேட்டி சீலையல் ஆலை
குழந்தையளின்றை பீச்சல் துடைச்சு தோச்சு தோச்சு கொடியிலை காய போட்டவலவை இப்ப எதோ கோவணம் மாதிரி பம்பேசு கொழுவி கொண்டி காட்டுகிராலவை எங்களுக்கு .அது மட்டுமே ? அவளவையும் அன்று அந்த மாத விடாய்க்கு என்ன செய்தவளவை எண்டதும் எங்களுக்கு தெரியும் .இப்ப sanitary நாப்கின் அல்லே (absorbant ) கொழுவி எங்களுக்கு டூப்பு விடுகிராலவை .Thank God ஆம்பிளையளுக்கு உந்த சோலியல் ஒண்டும் இல்லை .செய் யுன்கொடி வேண்டாம் எண்டு சொல்லேல்லை .மாறும் உலகில் நாங்களும் மாறத்தான் வேணும் .அதுக்காக நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்பதை மறக்கலாதடி என் செல்ல கண்ணுன்களே ராசாத்தி அம்மு குட்டிகளே .வர போறா ஏ செல்ல கண்ணு நேக்கு அடி போட **உதெல்லாம் எழுத உமக்கென்ன லூசே ? எண்டு கொண்டு .இல்லையடி உலகம் போற போக்கையும் கொஞ்சம் கதைச்சு பறையவள்ளே வேணும் ! அப்பிடியே கதை ?உமக்கு இண்டைக்கு இடிச்சல் கிடையாது .போய் எங்கையாலும் இடியும் .ஓஹோ அப்பிடியே கதை போகுது .நான் என்ரை கூட்டாளி லொள்ளுவீட்டிலை போய் இடிவனடி .அவன்றை மனிசியும் எனக்கு சொந்தமடி .போடி போடி .**கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி என் பெண்டிலே .காட்டுக்கென்ன காவல்காரன் என் wife ஏ ?**


லொல்லுபாண்டி

26-08-2014 21:27

ஐயோ ... ஐயோ .... ஐயோ ....அந்தகாலத்து சமாச் சாரந்களை கிளறப்படாது ,,அதெல்லாம் .. துண்டோட,, மன்னிக்கவும் அண்டோட முடிஞ்சகதைய்


மனோகரன்

23-08-2014 10:32

உங்கினை எங்கையோ ஆரோ எழுதி கிடந்தது **மதம் ..மதம் ..மதம் ..உதென்ன யானைக்கு பிடிக்கும் மதமோ ?என்று ஒரு வினா எழுப்பி இருந்தார்கள் .நான் அதற்கு
பதில் சொல்கிறேன் .அது வேறை மதம் .யானைக்கு தன் இன விருத்திக்காக தன் எதிர்பாலுடன் (பெண் யானை ) உடல் உறவு கொள்ளவேணும் .ஒருவரும் கிடைக்காத பட்சத்தில் வீறு கொண்டு விசர் பிடிச்சு அலையும் .(சில ஆறறிவு மனிதர்கள் போல )
அந்த அதைத்தான் சொல்வது யானை மதம் பிடிச்சு திரியுது எண்டு .வரியம் 364 அரை நாளும் மதம் வராது .அதுக்கும் ஒரு சீசன் உண்டு .நாய் பூனையளுக்கும் அப்பிடியே
மனிசருக்கு எல்லா நாளும் அது தேவை .அலைஞ்சு திரிவினம் 364 அரை நாளும் .
யானைகள் குழம்புவது வேறு கதை .ஆயிரம் வருடங்களாக கண்டியில் நடக்கும் தலதா மாளிகை ஊர்வலம் **பெற ஹர ** போன கிழமை நடந்தது .அங்கு ஒரு யானை குழம்பி (சிங்களத்தில் அலியா குழப்பு உணா என்று சொல்வார்கள் ) அங்கு
தீ பந்தத்தில் விளையாட்டு காட்டியவர்களையும் தனது boss ஐயும் அடிச்சு உழக்கி புதினம் பாத்த 28 பேர்கள் ஆசுவத்திரியிலை .Tourist மார் ஏராளம் .உது எங்கடை வேட்டை திருவிழாவுக்கு அம்மாள் ஆச்சி பணிப்புலத்திலை இருந்து இடுமன் கோயிலுக்கு போகுமா போலை இல்லை .அது பெரிய கதை .எல்லாம் சொல்ல போனால் கதை நீண்டு போகும் .அதாலை இதோடை முடிச்சு முடிவுரை ஆக நான் சொல்ல விளைவது .*யானைகளின் மதம் வேறு .ஆனால் மனிதர்களுக்கு பிடித்துள்ள மத வெறி வேறு . மதம் என்ற மத வெறியில் மனித படு கொலைகள் .
அன்று அயோத்தி ராமர் ஆலயம் மசூதி .அதை தொடர்ந்து குஜராத்தில் முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் தலைமையில் மனித படு கொலைகள் .இன்று அவர் பாரத நாட்டை ஆளும் /ஆட்டுவிக்கும் பிரதம மந்திரி .57 இல் கட்டின பெண்டிளின் தாலியை வித்து சிங்கள தேசம் எங்கும் வாழைப்பழ /சுருட்டு /பலசரக்கு கடைகள் நடத்தி நாலு பணம் சம்பரித்தார்கள் எங்கள் யாழ்ப்பனத்தவ்ர். பாணந்துறையில் ஒரு முருகன் கோயிலில் யாழ்பாணத்து நாசுற காரரின் நாகசின்னத்தின் இசை மழையில் சிங்களர் கூட மெய் மறந்து ரசித்தார்கள் அன்று .அதே கோயில் ஐயரை
நாடு குழம்பி இனவெறி /மதவெறி தலை விருத்து ஆட ரோட்டுக்கு தார் போட கொதித்து கொண்டு இருந்த தார் பீப்பாவில் அமுக்கி எடுத்தார்கள் .
வெறியை அகற்றுங்கள் .மனிதர்களாக வாழ்வோம் வளமுடனே .அன்பே சிவம் மட்டுமல்ல கர்த்தர் /ஜேசுநாதர் /அல்லாஹ் /புத்த பெருமான் .அவையும் அதை தான் சொன்னவை .ஆனால் அவர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்லி அவர்கள் என்ன செய்கின்றார்கள் /மதம் என்ற பெயரில் மதம் பிடித்த /பீடித்த யானைகள் போல அலைகின்றார்கள்


நா. சிவாஸ்

23-08-2014 21:42

அன்பே சிவம் மட்டுமல்ல கர்த்தர் /ஜேசுநாதர் /அல்லாஹ் /புத்த பெருமான் .அவையும் அதை தான் சொன்னவை .ஆனால் அவர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்லி அவர்கள் என்ன செய்கின்றார்கள் /மதம் என்ற பெயரில் மதம் பிடித்த /பீடித்த யானைகள் போல அலைகின்றார்கள்

மதம் என்ற சொல்லின் அர்த்தத்துக்கு கிட்ட நெருங்கி விட்டீர்கள்.


லொல்லுபாண்டி

25-08-2014 13:32

மதம் என்றால் ஒரு சமயம்சாந்டவர் என்று நினய்க்குறேன் ,,இவர் கேக்குறத்தை பார்த்தால் வெறியாய் இருக்குமோ ........அன்பே சிவமாய் இருந்தால் சரி


மனோகரன்

26-08-2014 18:47

ஏன் அன்பே சிவம் எண்டு எதோ எழுதாதாத சட்டமே ? ஐயர்மாருக்கு அள்ளி குடுத்தால் அங்கு அன்பே சிவமாக சிவபெரும்மான் எழுந்து அருளுவார் சிலருக்கு =பலருக்கு .நபிகள் நாயகமும் புத்த பெருமானும் ஜேசு கிறிஸ்த்துவும் அன்பையே போதித்தார்கள் .ஆனால் என்ன நடக்குது எல்லாரும் அன்பை மறந்து காசுக்கு பின்னால் பறந்து திரிகின்றார்கள் .நல்ல கவர்ச்சி கரமான பேச்சுக்கள் /சொட் பொழிவுகள் அப்பப்பா எத்தனை வித்தைகள் மனமுடைந்து வாழும் மனிதர்களை கவர்ந்தெடுக்க ? சமயங்கள் அனைத்தும் பணம் வறுகும் உபாய மார்க்கங்கள் ஆகி போச்சுது .கொழும்பு தலைநகர் மற்றும் யுத்தத்தின் பாதிப்புக்கு உள்ளான கிளிநொச்சி மாங்குள பக்கத்தில் மட்டும் எத்தனை தேவாலலயங்கள் ? தென்னோலை கொட்டில்களிலும் சீமெந்து கட்டிடங்களிலும் .ஜேசு ஜீவிக்கிராராம்
பிறகு நாளைக்கு ஜேசு வருவாராம் .என்ரை அப்பு இன்னும் எத்தினையோ .இஞ்சை கொழும்பிலை ஞாயிறு தோறும் ஆழ லூயா படிக்க ஏழெட்டு வசுக்களிலை ஆக்களை எத்தி கொண்டு போகினம் .நொந்த மனங்களை use பண்ணி பணம் பிடுன்குகின்றார்கள் .அம்மாளுக்கு 101 சிதறு தேங்காய் அடிச்சால் எல்லாம் சரியாய் போகும் என்று சொல்ல வெளிநாட்டு பக்த கோடிகள் ஓடி விழுந்து அடிச்சு இஞ்சினை வந்து டெனிம் களிசாநோடை சிதறு தேங்காய் அடிச்சு பெண்டுகள் ஒருபக்கமாய் பிறகு ஆம்பிளையள் ஒரு பக்கமாய் நிண்டு கொண்டு தேர் வடம் பிடிச்சு இழுத்து வீடியோவிலை படம் பிடிச்சு இந்திரன் நெட்டிலை விடுமா போலை .
முந்தியிலை பெண்டுகளை கிட்டவும் நெருங்க விட மாட்டினம் .அவளவை துடக்கு காறியல் .தேர்வடம் தொட படாது எண்டு சொன்ன பண்டிதர் மார் இப்ப பெண்டுகளுக்கு சம உரிமை குடுத்து போட்டினம் .தன் உடலில் சரி பாதி உமையவளுக்கும் கொடுத்து அர்த்த நாரீஸ்வரர் கோலம் கொண்ட சிவனை போல


பாண்டி

21-08-2014 22:53

மரணத்தின் பின்னர் ஏன் மாவீரர்களை எரிக்காம அடக்கம் செய்கிறார்கள்?+++அவர்களை நினைய்வு கூறுவதற்காக ,,,,துடக்கோட கோவிலுக்குப்போனால் வியாதிப்படுகிறார்கள்......எந்த துடக்கு ஒருவர் கடும் தோற்று நோயினால் இறந்து விட்டால் அவரைய் தொட்டு அழுது புலம்பி அடக்கம் செய்து விட்டு அப்பிடியே பொதுஇடங்களுக்கு செல்லலாமா ,அந்த இறந்த வரை பதித்த கிரிமி பொது இடங்களில் இருக்கும் சிறார்களை பாதிக்காத ----மாமிசம் சாப்பிட்ட பாவமா இல்லையா என்று அந்த உயிரினத்தை கொண்டு தின்பவன் தான் முடிவு எடுக்க வேனும்


பவுல்

22-08-2014 09:21

நன்றி தம்பி உங்கட பதிலுக்கு,
மாவீரர்களை அடக்கம் செய்த இடங்களெல்லாம் நிர்மூலமாக போச்சாம். அப்ப அவர்கள் மறக்கப்பட்டு போனார்களோ தம்பி?
எரிக்கப்பட்டுப்போறவர்கள் உங்கள் பதில பாத்தா நினைவு செய்யாமலா இருக்கிறீங்க தம்பி.

தொற்று நோயால இறந்தவர்களை தொடமுடியாதபடி செய்துதான் பார்வைக்கு வைப்பார்கள். தொற்றுநோயால பாதிக்கப்பட்டவர்களை பராமரித்த பலர் இப்பவும் உயிரோட இருக்கின . இயற்கையோட இணைந்து வாழ வேண்டுமாம்.பயந்த காரியம் நடக்குமாம்.

இறைவன் ஒரு உயிரைத்தான் இன்னொரு உயிருக்கு உணவாக படைத்ததாக கேள்வி. எதுவும் அளவுக்கு மிஞ்சினா கேடுதான்.

இன்னும் பல விசயங்கள் எனக்கு விளங்கவில்லை தம்பி.
சித்தாத்தர், திருவெண்காடர், ராகவேந்திரர், ஔவையார், போல பலர் இறைவனோட இணைந்த சாட்சிகள். இவர்களை பின்பற்றாம முருகனைப்போல பல மனைவிகள்{ஐயனார் போன்ற) பூசாரிகளால சூரியனை படைத்ததவருக்கு பூசை செய்யலாமா?

மதம் என்றா மூர்க்கம்[கடுங்கோபம்] என்றும், , மார்க்கம் [பாதை] என்று நினைக்கிறன்


லொள்ளுபாண்டி

25-08-2014 00:47

தயவு செய்து நீங்கள் கண்ணுக்கு தெரியாத அறிவுக்கு எட்டாத உணர்வுக்கு புரியாத பொய் மூட நம்பிக்கைய் களுக்கு உங்களது பொன்னான நேரத்தையும் பணத்தையும் அநியாயம் செய்யாமல் இவ்வுலகில் எத்தனையோ மனித யென் மங்கள் பசி பசி பசி படிப்பறிவு இன்மை அவர்களை தேடி தேடி உதவினால் நீங்கள் கேட்பது நினைப்பது எல்லாம் தன்னால் வந்தடையும்


கதிரவன்

23-08-2014 10:46

இன்னும் சிலவிடையங்கள் எனக்கு விளங்கவில்லை என்று எழுதிய விடையங்களை எழுதும் அருகதை தங்களுக்கு இல்லை
ராமனின் சீதையை கடத்திச் சென்றான் இராவணன் இராவணனால் கடத்தப்பட்ட சீதை இராவனனுக்குதான் சொந்தம் என்று தீர்புசொன்னான் ஓர் ராட்சதன் அந்த குடிகெடுக்கும் ராட்சதனால் நடாத்தப்படும் ஆராதனையில் அப்பம் வங்கித்தின்னும் நீங்கள் இதபற்றி கேட்க அருகதை அற்றவர் முதலில் உங்கள் முதுகில் உள்ள சாக்கடையை கழுவுங்கள் பின்னர் அடுத்தவன் முதுகைப்றி யோசிக்கலாம்


பவுல்

24-08-2014 21:21

இந்து மதவேதத்தைத்தையோ பெரும்பான்மையான மக்கள் படிக்கக்கூடாதுஃ.
~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~.
உங்கள் பதிலை பாக்க மேல உள்ள வசனம் உண்மை தான் போல,

கிறிஸ்தவ வேதாகமம் ,கி.மு- கி.பி என இரு பிரிவுகளை கொண்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முன்னுள்ள ஆகம விதிகளும், இந்து சமய ஆகம விதிகளும் 100:90% ஒத்தகருத்துக்களாக இருக்கு.

அங்க இந்த துடக்குகளைப்பற்றி வலியுறுத்தி சொல்லப்பட்டிருக்கு. மீறினோர் பல துன்பங்களுக்காளானதும் எழுதப்பட்டிருக்கு. தேவாலயம் மகா பரிசுத்தாலயமாக காக்கப்பட்டது. கிணறும்தான் துடக்கு பொறுக்கா, கீழ் சாதியினர் இவர்கள் இறைவனால சபிக்கப்பட்டவர்கள். இவர்கள் ஆலயத்துக்க போகபடாது, வெளியில தான் நிற்கவேண்டும். தண்ணியும் அள்ளக்கூடாது. இப்படி கன நியாயப்பிரமாணங்கள் பழைய ஏற்பாட்டில கட்டாயப்படுத்தப்பட்டிருக்கு.

இந்தக் கட்டளைகளால மனிதர் இறைவனுக்குத்தூர இருந்தனர். பாவத்தினால கிடைத்த தண்டனை அது.

இறைவனையும் மனிதனையும் பிரிக்கிற பாத்தை நீக்குகிற பரிகாரியாக கிறிஸ்து சிலுவைப்பாடு ஏற்றார். இறைமகன் மனிதகுமாரனாக பூமிக்கு வந்து பாவநிவாரண பலியானார். அவர்தான் எங்களை சாபக்கட்டிலிருந்து விடுதலையாக்க இயேசு அழைக்கிறார். அவரை சரண்டைந்தவர்களுக்கே புதிய ஏற்பாடு என்ற வேதாகம விதிகளை தந்தார். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இவை இரண்டும் சேர்ந்ததே, கிறிஸ்தவ வேதாகமம்.
மா வீரர்களை விதைப்பது போலவே கிறிஸ்துவின் ரத்தத்தால பாவவிடுதலை அடைந்தவர்களை விதைக்கப்பட்டு, புதிய பூமியில உயிர்ப்பிக்கப்படுவார்கள். நெருப்புக்கு தகுதியானோர் நெருப்புக்கயே கிடப்பார்கள். மீட்பரை அலட்சியம் செய்வதால.
இந்து சமயத்தை நம்புகிற நீங்க உங்கட வேதங்களை வாசிக்க தடையானால் பழைய ஏற்பாட்டை வாங்கிப்படிங்கோ, துடக்குகள், சாதிகள் , ஆசாரியர் பூசாரிமார் ~`` இந்து மதக்கோட்பாடு மாதிரி கிட.

புதிய ஏற்பாடு இது கிறிஸ்துவினால பாவ விடுதலை அடைந்தவர்களுக்கு அவர் கொடுக்கும் புது நியாயப்பிரமாணங்கள்.கிறிஸ்துதான் சாதிப்பாவக்கட்டை அறுத்தார். துடக்குகளை கழுவி பரிசுத்தமாக்கினார்.இயேசுவின் ரத்தமே சகல கட்டுக்களிலிருந்தும் கட்டவிழ்த்து பரமனடி சேற்கிறது. இந்த மண்ணோ , வாழ்வோ , உறவோ எல்லாம் விலகியே போகும். சூரியனை படைத்த இறைவனுக்கும் நமக்கும் இடையான உறவில பிரிவே வராது. கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். நம்மோட கூட வருவதை சம்பாதிப்போம்


கதிரவன்

23-08-2014 21:20

ராமனின் சீதையை கடத்திச் சென்றான் இராவணன்.
இராவணனால் கடத்தப்பட்ட சீதை இராவனனுக்குதான் சொந்தம் என்று தீர்புசொன்னான் ஓர் ராட்சதன்.

இந்த ராட்சதன் யார் என்பது பவுலாகப்போன பாம்பார்க்கு நன்றாகத்தெரியும் என்பதை நானும் நன்றாக அறிவேன். மேலதிக விளக்கம் கேட்டு தங்கள் முகத்திரையை கிளிக்க விரும்பினால் கேளுங்கள்.
நேரடியாக பதில் தர நான் தயார்.
குறிப்புக்காக: தங்கள் பெயர், அழைப்பு பெயர், மதவெறியர்களால் சூட்டப்பட்ட பெயர்,தாங்கள் இத்தளத்தில் எழுதும் பெயர் மட்டுமல்ல தங்களால் ஏமாற்றப்பட்டவர்களையும் நான் அறிவேன். என்னையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.
தம்பி என்ற வேசம் வேண்டாம்.


பவுல்

23-08-2014 15:07

ராட்சதனால் நடாத்தப்படும் ஆராதனையில் அப்பம் வங்கித்தின்னும் நீங்கள்.
```````````````````````````````````````
தம்பி கதிரவா யார் அந்த ராட்சதர்? புதிசா ?

திருந்தாத பாவிகளை திருத்தி எடுப்பவர் கிறிஸ்து.
திருந்த வேண்டும் என்பதே கிறிஸ்துவின் ஆத்மதாகம்.
தம்பி கதிரவா யார் அந்த ராட்சதர்? புதிசா ?

நீங்க உங்க ஆத்தும அப்பாவை அறிந்து அவரோட சேர்க்கத்தான் கிறிஸ்து உங்களை அழைக்கிறார்.


நா.சிவாஸ்

23-08-2014 01:35

தொற்று நோயால இறந்தவர்களை தொடமுடியாதபடி செய்துதான் பார்வைக்கு வைப்பார்கள். தொற்றுநோயால பாதிக்கப்பட்டவர்களை பராமரித்த பலர் இப்பவும் உயிரோட இருக்கின . இயற்கையோட இணைந்து வாழ வேண்டுமாம்.
1. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது இப்போ பழங்காலத்தில் அந்த முறை இல்லை
2. மரண சடங்கு நடைபெறும் இடத்தில் அனைவரும் சோகமயமாகவே இருப்பார்கள். (இந்த இடத்தில் சோகம் எனக்கு உடன்பாடில்லை)
இதன் காரணமாக அந்த இடத்தில் ஆரோக்கியமற்ற ஒரு நிலை ஒவ்வொவருக்கும் ஏற்படும் (இது விஞ்ஞானத்தினால் நிருபிக்கப்பட்ட உண்மை) காரணம் அந்த இடத்தில் வீசும் காற்றில் கூட ஒட்சிசன் தன்மை குறந்தே இருக்கும். இது மரண வீட்டில் மட்டுமல்ல மக்கள் கூட்டங் கூட்டமாக எங்கெல்லாம் சோகமாக இருக்கின்றார்களோ அங்கெல்லாம் இந்த நிலை ஏற்படும். இந்த நிலையில் இருந்து மனிதன் யதார்த நிலைக்கு திரும்புவதற்காகவே குளிர்ந்த நீரில் குளிப்பது. சாதாரண பாமரர்களுக்கு இதை விளக்குவது மிகவும் கஸ்ரமான விடையம் என்பதால் சுருக்கமாக துடக்கு என்று சொல்லி வைத்தார்கள். துடக்கு என்றால் அதன் பொருள் தூய்மை என்பது தாங்கள் அறியாதது அல்ல. இதற்கு இன்னம் விரிவான விழக்கம் தர முடியும் ஆனால் அது பைபிளில் இருக்கின்றது என்று சொன்னால் மட்டுமே தாங்கள் நம்புவீர்கள் மற்றவைகள் அனைத்தும் பொய் என்பதுதான் தங்கள் கருத்து என்பதையும் நான் அறிவேன்.


இறைவன் ஒரு உயிரைத்தான் இன்னொரு உயிருக்கு உணவாக படைத்ததாக கேள்வி. எதுவும் அளவுக்கு மிஞ்சினா கேடுதான்.

மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவை படைத்தான்.


இன்னும் பல விசயங்கள் எனக்கு விளங்கவில்லை தம்பி.
சித்தாத்தர், திருவெண்காடர், ராகவேந்திரர், ஔவையார், போல பலர் இறைவனோட இணைந்த சாட்சிகள். இவர்களை பின்பற்றாம முருகனைப்போல பல மனைவிகள்{ஐயனார் போன்ற) பூசாரிகளால சூரியனை படைத்ததவருக்கு பூசை செய்யலாமா?
முருகனை உருவமாக பார்ப்பவர்க்கு இரண்டும் மனைவியர்.
அருவமாக பார்ப்பவர்க்கு அவை இரண்டும் சக்திகள்.

பல மனைவிகள்{ஐயனார் போன்ற) பூசாரிகளால சூரியனை படைத்ததவருக்கு பூசை செய்யலாமா?
இதி ஐயனாருக்குரிய கேள்வி இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்பதை நீங்களும் அறிவீர்கள்.

மதம் என்றா மூர்க்கம்[கடுங்கோபம்] என்றும், , மார்க்கம் [பாதை] என்று நினைக்கிறன்
மதத்துக்கு இது சரியான பொருளாக தெரியவில்லை.


மனோகரன்

21-08-2014 20:20

இது அசல் . மது ....விஸ்கி /விராண்டி /வியரின்றை படங்களை போட்டு அதோடை மதுபானத்தை ஒரு தட்டிலும் மற்ற பாவங்களை இன்னொரு தட்டிளையும் வைக்க போய் (உதென்ன தட்டிலை வைச்சு நிறுக்க என்ன தராசே வைச்சிருக்கிரியல் ? ) பவுல் பாவத்துக்கு அந்த **பாவம் ** என்ற சொல்லை கண்டதும் அவர் கோவம் கொண்டு பைபிளை உதாரணம் எடுத்து கர்த்தரை சாட்சிக்கு அழைத்து லொள்ளுவுக்கு சரியான ஏச்சும் பேச்சும் குடுத்து விளாசி போட்டார் .லொள்ளுவுக்கு உது தேவையோ ? எங்கடை பாட்டிலை எங்கடை சோலியை பாத்து கொண்டு என்ரை பெண்டில் என்ரை பிள்ளையள் என்ரை வீடு வளவு வாய்க்கால் எண்டு வாழ்ந்தால் ஏன் உந்த சோலி ? கண்ட நின்டவையிட்டை எல்லாம் பேச்சும் கிளியும் வேண்ட /????
ஏணே ஆச்சி உண்காரனை உவன் லொள்லன் பொட்டுக்காலை பூந்து எங்கடை பனையாலை விழுந்த பணம் பழத்தை எடுக்கிறான் அணை .பொறடி அவன் உவன் மனோகரன் மாதிரி பொறுத்த குழப்படி காரனடி .நான் அவன்றை தாயிட்டை சொல்லுகிறன் அவனை கொஞ்சம் கவனிக்க சொல்லி


பவுல்

21-08-2014 09:18

உண்மை தான். மது வியாதிகளை குணப்படுத்துவதாய் இருந்தாலும் பலரின் உடலை, வாழ்வை புண்ணாக்குது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லொள்ளுபாண்டி 19-08-2014 10:08
தாங்கள் பிறந்த வீட்டில் பிறந்த ஊரில் கிடைய்த்தது கற்றது அறிந்தது எல்லாம் பொய் என நினைத்து நம்பிக்கை இழந்து ,தங்கள் சமயங்களை பற்றியே சரியாய் அறியாமல் அரைய் குறையாய் தெரிந்து கொண்டு அடுத்த சமயத்துக்கு மாறும் சில மனிதர்களுக்கு பிடிக்கும் நோய் ,,,,,,,,,,,,,,,,,,,,/////////////////////////,,பின் குறிப்பு அவரவர் விருப்புக்கு ஏற்ற வாறு அவர்கள் எந்த சமயத்திலும் எந்த மதத்திலும் மாற அவர்களுக்கு சுகந்திரம் உண்டு ,,,அது அவர் அவர் விருப்பம் ,,,,,,,அதே போல் எங்கள் உறவுகள் மதம் மாறும் போதும் ,,அதைப்பற்றி கவலைப்பட எங்களுக்கும் உரிமை உண்டு ......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தம்பி நீங்க எங்கள் மேல காட்டுற அன்புக்கு நன்றி. உங்கட அன்புக்கு நான் தலை வணங்குகிறேன் தம்பி.
எனக்கு பல விடயங்கள் புரியாததால கிறிஸ்துவை ஆண்டவராக வணங்குகிறேன்.
எனக்கு விளங்காதவை பல, நீங்க விளக்கம் தருவீர்கள் என நம்புகிறேன்.
~
மரணத்தின் பின்னர் ஏன் மாவீரர்களை எரிக்காம அடக்கம் செய்கிறார்கள்?
துடக்கோட கோவிலுக்குப்போனால் வியாதிப்படுகிறார்கள்?வீட்டுக்கிணத்தில தண்ணி அள்ளினால் ஏன் கிணறு குற்றம் பொறுக்காமல் பலி எடுக்கு? மாமிசம் சாப்பிட்டா பாவமா?
என்னும் கன கேள்விகள் கேட்கலாமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அற்புதன் 19-08-2014 16:55
இதன் பொருள் என்னவென்றால் அறியாமையும்.அப்பாவித்தனமும்.

அற்புதன் அவர்களே என் அறியாமையும்.அப்பாவித்தனத்தை நீக்க உதவி செய்வீர்களா?


நா.சிவாஸ்

22-08-2014 02:11

இந்த லொள்ளுபாண்டியிட்ட கேட்டு கேட்டு அலுத்துப்போச்சு .
பவுலாரே உங்களுக்குத்தானே மதம் பற்றி எல்லாம் தெரியும் நீங்களாவது சொல்லன் ராசா மதம் என்றால் என்ன ராசா


அற்புதன்

22-08-2014 11:26

“சமய சீர்த்திருத்தம்” என்பது பற்றி பேசுவது என்பது என்னைப் போன்ற ஒருவருக்கு இலேசான காரியமல்ல. அதற்குத் தக்க ஆராய்ச்சி வேண்டும். சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசவும் எனக்குப் போதுமான திறமையில்லை. நான் சமய ஆராய்ச்சி செய்யவில்லை. கடந்த ஆறேழாண் டுகளாக அரசியலில் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் நடைபெற்று வந்த காங்கிரசில் நான் உழைத்து வந்தது அன்பர் பலர் அறிவர். அரசியலின் மூலம் நாட்டின் சீர்திருத்தத்திற்கு அரும்பாடு பட்டும் யாதொரு பலனும் அடைய இயலாமல் போனதாலும், அதற்கு காரணம் சமய சம்மந்தமான கொள்கைகளே தடை என்று உணர்ந்ததாலும் அக்குறைகளை நீக்க உழைப்ப துதான் அவசியமெனத் தோன்றிய பின்னர் அவ்வழியில் உழைத்துப் பார்க்க லாமென முற்பட்டேன். சமயத்தின் பேரால் உண்டாகும் கஷ்ட நஷ்டங் களையும் விடுதலைக்கு விரோதமானவைகளையும் மக்கள் சுயமரியாதை யற்ற வாழ்க்கையில் துன்புறுவதையும் ஒழிக்கவே முதலில் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாம் விடுதலை அடைய முடியும். நம் நாடு விடுதலையடைய முடியாததற்கும் சுயமரியாதையற்ற தன்மையில் வாழ்வ தற்கும் நமது சமயக் கொள்கைகள்தான் இடையூறாக இருக்கின்றன. நான் இப்பொழுது பேசினால் கேட்போர்களில் சிலருக்கு மன வருத்தமாய்த்தான் தோன்றும். ஏனெனில் நம் மக்களுக்கு சமயப் பற்று என்கிற மூட நம்பிக்கை யை சுயநலக்காரர்கள் அதிகமாய் ஊட்டிவிட்டார்கள். அது நமது இரத்தத் திலும் நன்றாய்க் கலந்து விட்டது. சுலபமாய், கேட்போருக்கு சமாதானம் சொல்லி சரிப்படுத்த முடியாத அளவு பதிந்திருக்கின்றது. நாட்டின் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் நான் பேசும் விஷயங்களை உறுதியாய் நம்புகிறேன். நம் நாட்டிற்கு என்றுமே விடுதலை இல்லாத வழியில் காரியங்கள் சமயத்தின் பேரால் நடைபெற்று வருவதைத் தெரிவித்தால் சிலர் மனம் வருந்தும். அதற்குப் பயந்து வெளிப்படுத்தாமல் போனால் நான் சுயநலம் கருதுபவனா வேன்; அல்லது பயங்காளித்தனம் கொண்டவனாவேன். பகுத்தறிவைக் கொண்டு பொது நிலையில் இருந்து ஆராய்ச்சி செய்தால் நான் சொல்லுவதில் குற்றம் சொல்ல அவசியமிராது. சமய விடயம் பேசும் பொழுது அதன் பயனாய் அரசியலிலும் ஏற்பட்ட குற்றங் குறைகளை கூறவேண்டி இருக்கிறது. அரசியலில் நான் தீவிர வேலை செய்தேன் என்பது இங்குள்ள பலர் அறிவர். பின்பு அவ்வனுபவத்தைக் கொண்டு அஃதல்ல விடுதலை அடைய பாடுபடும் வழியெனக் கருதியே அதை விட்டு வெளியேறினேனேயன்றி, மற்றபடி யாராலாவது வெளியேற்றப்பட்டோ, அல்லது சிறு அபிப்பிராய பேதம் ஏற்பட்டோ வெளிவந்தவனல்ல. நான் சாதாரண நிலையிலிருந்து வெளிவரவில்லை. அரசியலில் ஒரு பொறுப்புள்ள பதவியிலும் உத்தியோகத் திலுமிருந்தே நான் வெளி வந்தேன். நமது நாட்டுக்கு இவ்வரசியல் இயக்க மூலம் ஒன்றும் ஆகாது எனக் கருதியே வெளிவந்தேன். காஞ்சிபுரம் மகாநாட்டில் தான் இவ்வுணர்ச்சிகள் பலப்பட்டு வெளிவந்தேன். அரசியலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், தமிழ்நாட்டுக் காரியதரிசியாகவும் பல ஆண்டுகள் இருந்தேன். அப்பொழுதுதான் நான் ஆற்றும் தொண்டு வீண் தொண்டெனவும், நமது எதிரிகளுக்கு அனுகூலமாய் இருந்து கொண்டு நாட்டையும் சமூகத்தையும் பாழாக்குகின்றோம் எனவும் கருதி நான் விலகினேன்.
மத சம்பந்தமாகவும் எனது நிலையை நீங்கள் அறிய வேண்டுமானால் 1904 ஆம் வருடம் முதல் 1927 ஆம் வருடம் சூன் மாதம் வரையில் சுமார் 23 வருட காலமாக எனது தாலூகாவாகிய ஈரோடு சர்க்கில் தேவஸ்தான கமிட் டிக்கு காரியதரிசியாகவும் தலைவனாகவுமிருந்தேன். இந்துமத பரிபாலன போர்டாரும் எனது நிர்வாகத்தைப் பற்றி பெருமை பாராட்டியே பேசியும், எழுதியும் வந்திருக்கிறார்கள். தற்பொழுது உண்டாகிய புதிய போர்டார் புதிய கமிட்டியை நியமிக்கவே, அவர்கள் நான்கு தாலூகாவிற்கு ஒரு கமிட்டியாக ஏற்படுத்தி அதில் என்னையும் தேவஸ்தானக் கமிட்டி அங்கத்தினராக நியமித்திருக்கிறார்கள். தற்கால மந்திரி சபைக்கும் எனக்குமுள்ள சம்மந்தம் நீங்கள் அறிந்த விடயமே. அவர்கள் செய்யும் குற்றங்களைப் பளிங்கு போல் எடுத்துக்காட்டி வருகின்றவர்களில் நான் ஒருவன். அப்படி இருந்தும் அவர் கள் என்னை நியமித்தார்கள். என்னைப் பற்றிய பிராதுகள் பல அவர்களுக் குப் பார்ப்பனர்கள் அனுப்பி என்னை நியமிக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள். அவைகளில் முதல் பிராது நான் குற்றவாளி என்றும், சிறை சென்றவனென்றும், இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டவனென்றும் எழுதி அனுப்பினார்கள். அந்த பிராது எனக்கே என் பார்வைக்கு வந்தது. நான் அவர்கள் எழுதியதெல்லாம் உண்மை தான். ஆனால் மூன்று தடவை சிறை சென்றேன் என்பதற்கு பதிலாக இரண்டு தடவை என்று எழுதியதுதான் பிழை என்று திருத்தி அனுப்பி விட்டேன். மறுபடியும் பல பார்ப்பனரல்லாதாரிடமும், பல பார்ப்பனர்களிடத்திலும் கையொப்பம் வாங்கி “இவன் மதத்தை நிந்திக் கிறான். எப்பொழுதும் பார்ப்பனரையே வைகிறான். வேண்டுமானால் சி.ஐ.டி. ரிப்போர்ட்டர்களின் ரிப்போர்ட்டுகளைப் பாருங்கள்” என்று ஒரு விண்ணப் பம் சர்க்காருக்கு அனுப்பினார்கள். அதைப் பற்றியும் சர்க்கார் என்னைக் கேட்டார்கள். நான் அதற்கு பதில் எழுதியதில் நான் ஒரு வகுப்பாரை மாத்திரம் வையவில்லை. எல்லோரையும் வைகிறேன். என் தொண்டுக்கு எந்தெந்த வகுப்பார் கொள்கை எதிரிடையாக இருக்கிறதோ அவர்களைக் கண்டியாமல் இருக்க என்னால் முடியாதென்றும், எல்லாருக்கும் சம உரிமை வழங்கப் படுவற்காக உழைக்கிறேனேயல்லாமல் வேறு அல்ல வென்றும் அறிவித் தேன். மறுபடியும் என்னை நியமித்தார்கள். சென்னைக்கு வருவதாலும் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதனாலும் எனது தலைமைப் பதவியைப் பொறுப்பு வாய்ந்த ஒருவருக்குக் கொடுத்து நான் இன்று வரையில் உபதலைவராகயிருந்து வருகிறேன். என்னை சிலர், நான் செய்யும் உபந்நியாசங்களைக் கேட்டு ‘நாஸ்திகன்’ ‘மதத்தை நிந்திக்கிறவன்’ என்றும் ‘சுயராஜ்ய விரோதி’ என்றும் ‘சர்க்கார் நேசன்’ என்றும் குறைகூறி வருவார்கள். சர்க்காருக்கு வேண்டியவன் என்பதற்கு அறிகுறி ஒன்றும் எனக்குப் புலப்படவில்லை. சர்க்கார் அன்று என்னை எப்படி பாவித்து நடத்தி வந்தார்களோ அதுபோலவே இன்றும் என்னை நடத்தி வருகிறார்கள். இன்னும் எனக்குப் பின்னால் போலீஸ்காரர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நான் உங்கள் முன்னிலையில் சொல்ல வந்தது சமய சீர்திருத்தம். நான் சொல்லுவதையெல்லாம் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டுமென்றும், அதன்படி நடக்காவிட்டால் பாவம் வரும் என்றும் சொல்லி பார்ப்பனர் களைப்போல் நான் உங்களை ஏமாற்ற வரவில்லை. நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்டு பிறகு உங்கள் பிரியம்போல் நடவுங்கள் என்று சொல்லிய பின்பே நான் இன்று பேச எடுத்து கொண்ட சமய சீர்திருத்தம் என்னும் விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறேன்.
சமய சீர்திருத்தம்
சமயம் என்பதும், மதம் என்பதும் ஒன்றுதான். சமய சீர்திருத்தம் என்றால் மதத்தை சீர்திருத்த வேண்டுமென்பதுதான் பொருள். சமயம் அல்லது மதம் என்றால் பொருள் என்ன? மதம் வேண்டுமென்கிற உணர்ச்சி எப்போது உண்டாயிற்று? மதம் எதற்காக வேண்டும்? என்பவைகளை உணர வேண்டும். மதம் என்பது என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் எந்த முறையில் ஏற்பட்டிருக்க வேண்டுமென்றால் மக்கள் கூடி கூட்டமாக வசிக்க ஏற்பட்ட வுடன் அவர்களுடைய நித்திய வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடு இருக்கவும் மற்றவர்களுக்கு மனிதன் துன்புறுத்தாமல் உபயோகப்படுகின்ற முறையில் தான் ஏற்படுத்தப்பட்டது. அந்த முறையில் ஏற்படுத்தின காலத்தில் அக்கால மக்களுக்குள்ள அறிவு, ஆற்றல், நிலைமை, சீதோஸ்ண ஸ்திதி முதலியவை களுக்கு ஏற்றவாறு ஒரு சிறு கொள்கைகளை அமைத்து உண்டாக்கி இருக்க வேண்டும்; நாளைடைவில் அது வளர்ந்து கொண்டும் தனி மனிதன் பெருமைக்கும், அவன் ஆசைக்கும் பிறகு அரசியலுக்கும் ஆக சிறிது சிறிதாய் மாறி இப்போதுள்ளவைகள் போல் சமயம் ஏற்பட்டிருத்தல் வேண்டும். நமது நாட்டில் ஆதியில் சமயம் ஏற்பட்ட காலத்தில் சமயத்திற்கும் அரசியலுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அக்காலத்தில் அரசியலில் நம் மக்களுக்குள்ள உணர்ச்சி இல்லை. உணர்ச்சி உண்டாக வேண்டிய அவசிய முமில்லை. ஏன்? பதினாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்புள்ள சரித்திரங்களை ஆராயுங்கள். அக்காலத்தில் வேளாண்மை மிகுதியுமிருந்தது. ஒவ்வொருவனுக்கும் வேண்டிய பொருள்கள் அனைத்தும் இருந்து வந்த தோடு மிகுதியும் பட்டது.
நெல் வைத்திருப்பவன் பருத்தி வைத்திருப்பவனுக்கு நெல்லைக் கொடுத்து பருத்தியோ அல்லது துணியோ பெறுவான். இதுபோல் எல்லா சௌகரியமும் உண்டு. இதுதான் பண்டமாற்றுதல் என்று பெயர். நம்மவர்கள் ஓய்வு நேரங்களில் சிந்தித்ததிலேயே சில சட்டங்களும் மற்ற சமய கட்டுப் பாடுகளும் ஏற்பட்டது. ஆனால் இதுதான் பின்னால் நம் நாட்டிற்கு வந்த பார்ப்பனர்கள் கவலையற்று இருந்த நம் மக்களை ஏமாற்றி தங்கள் நன்மைக் குத் தகுந்தபடி திருப்பி தங்களுக்கு இவைகள் எல்லாவற்றையும் அடிமை யாக்கிக் கொண்டு இவைகளுக்குத் தாங்களே கர்த்தாவாகவும் எஜமானர் களாகவும் ஆகிவிட்டார்கள். கொள்கையொன்றும் ஏற்படவில்லை. அவரவர் இஷ்டம் போல் அனுபவித்தார்கள். மகமதிய மதமும், கிருஸ்துவ மதமும் வெறும் கடவுளை வணங்குதல் என்பதோடல்லாமல் வர வர அரசியல் கருத்தைக் கொண்டும், தங்கள் தங்கள் மதத்தை பொறுத்த வேலை செய்தும், செய்து கொண்டும் வருகிறார்கள். ஆனால் நாம் கட்டுப்பட்டுக் கிடக்கும் சமயத்தையோ அந்த காலத்திலிருந்த நிலையிலே இருக்க வேண்டுமே யல்லாமல் ஒரு சிறிதும் மாற்றக்கூடாது என்கிறார்கள். இதை நம்புகிறவர்களும் பிடிவாதக்காரராய் இருக்கிறார்கள். இங்குதான் அபிப்பிராய பேதம் ஏற்படு கிறது. நமக்கு அவசியமானபடி நாம் மாற்றிக் கொள்ளல் வேண்டும். அப்படி மாற்றுவதில் அடியோடு மாறவும் ஏற்படலாம். நம் மதம் கட்டுப்பாடு உடைய தல்ல. ஒரு குறிப்புக்கு ஒத்ததல்ல. இக்காரணமே நம்மை அடிமையாக்கிற்று. ஆனால் இதனை நம் மக்கள் அறியார். இப்படி இருந்தால் நாம் எப்பொழுது முன்னேற்ற மடைய முடியும்? நாம் எப்படி அடிமை வாழ்வினின்று நீங்கி சுயமரியாதையுடன் வாழமுடியும். ஆகையால் ஒரு நாடோ, ஒரு தேசமோ சுயமரியாதையுடன் வாழ தடுக்கின்றவர்களை அழிக்க உடனே முற்படல் வேண்டும். பிடிவாதக் குணத்தை விட்டொழித்து மக்கள் நிலைமைக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு காரியங்களை முடித்து தடைகளை அகற்றி சுயமரியாதை அடைந்து விடுதலை பெற வேண்டும்.
இந்து மதம்
சிலர் தங்களை இந்து என்கிறார்கள். ஆனால் அவர்களை இந்து என்றால் என்ன என்றால் 100 -க்கு 90 பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அப்படி இருந்தும் நம் மக்கள் மூட நம்பிக்கையால் மதத்தின் பேரால் கொண்டுள்ள அன்பு செப்பத்தரமல்ல. மற்ற மதக்காரர்கள் அவைகளை அறிவது போல் நம் மதம் நாம் அறியக் கூடாதவர்களாயிருக்கிறோம். மகம்மதியர்களில் 100 -க்கு 90 பேர் தங்கள் மதத்தைப் பற்றி தெரிந்தவர் களாயிருக்கிறார்கள். நம் மக்களை யாராவது உங்கள் மதம் என்ன? யார் ஏற்படுத்தியது? அதன் காலம் என்ன? இது போன்ற வினா வெழுப்பினால் பதில் சொல்லுவாரில்லை. மகமதியரையோ அல்லது கிறிஸ்தவர்களையோ அல்லது புத்தர்களையோ வேறு யாரையோ கேட்டால் உடனே பதில் சொல்லத் தயாராயிருக்கிறார்கள். இந்து மதத்தில் இவர்கள் கற்பிக்கப்படும் வயது இலேசானதல்ல. அதாவது கடையில் உள்ள காகிதங்களையெல்லாம் வாங்கி அதில் ஒன்று போட்டு அதன் பின் எத்தனை முட்டை வடிவம் போட்டாலும் அதற்கு மேல் போகுமேயன்றி குறையாது. தலைவர் யார் என்றால் சொல்லும் நிலைமையிலில்லை. கடவுளால் ஏற்பட்டது என்பர் சிலர். ஆதாரம் என்ன வென்றால் வேதம் என்பார்கள். அது என்ன சொல்லுகிறது என்றால் நீ பார்க்கக் கூடாது, நீ கேட்கக் கூடாது, படிக்கக் கூடாது என்பார்கள். அதை கடவுள் எழுதியிருப்பார் என்று யாராவது நம்ப முடியுமா? என்று பாருங்கள். ஒரு பொழுதும் முடியாது. ஏனெனில் கடவுள் சொன்ன வேதமானால் உலகத்தார் எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும். யாரும் பார்க்க வேண்டும். அப்படி இருக்க நாம் எப்படி அந்த வேதத்தை நம்புவது அதன்படி நடப்பது? மற்ற மதக்காரர்கள் தங்கள் வேத நூல்களை பல மொழிகளில் மொழி பெயர்த்து அச்சிட்டு தங்கள் மதஸ்தர்கள் அல்லாத ஒவ்வொருவர் கையிலும்கூட கிடைக்கும் வண்ணம் தங்கள் வேதத்தையும் மதத்தையும் பரப்பி வருகிறார்கள். முகமதியர்களும் கிறிஸ்தவர்களும் இத்தகைய முயற்சி எடுத்து தங்கள் மதங்களையும் வேதங்களையும் மற்ற மக்களிடம் பரப்பினதால்தான் ஏழரைக்கோடி முகமதிய சகோதரர்களும் ஒரு கோடி கிறிஸ்தவர்களும் நமது நாட்டில் உண்டாக நேரிட்டது. இந்த ஏழரைக் கோடி முகமதியரும் அரபி அல்லது துருக்கி முதலிய தேசத்திலிருந்து வந்தவர்களென்று யாராவது சொல்ல முடியுமா? முடியாது. அப்படி வந்தவர் களும் ஒரு கோடிக்கு மேலிருக்க முடியவே முடியாது. மற்ற மக்கள் நம் ‘இந்து’ மதத்திலிருந்து பிரிந்து சேர்ந்தவர்களேயாவார்கள். கிறிஸ்துவ சமயத்திலும் வெளியிலிருந்து வந்தவர்கள் 2 அல்லது 3 இலட்சம் பேரே இருப்பார்கள். மற்ற 97 இலட்சம் பேரும் நம் மக்கள்தான். திருவனந்த புரத்திலே 40 இலட்ச மக்களுள் பதினாறரை லக்ஷம் கிறிஸ்தவர்களும் மூன்றரை லக்ஷம் முகமதியர்களும் உண்டாகி இருப்பார்களானால் எத்துணை மக்கள் நம் சமயம் விட்டு பிற சமயம் புகுந்தார்கள் என்பது இதில் காணக்கிடக்கின்றது. வாரம் ஒன்றுக்கு இந்துக்கள் என்போர்களில் 4000 பேர் அன்னிய மதம் புகுகின்றார்கள். காரணம்? அவர்கள் மத பிரசாரம் செய்கிறார்கள். மத பிரசாரம் செய்து ஏற்றுக் கொண்ட மக்களுக்கு முதலில் மதத்தைப் பற்றியும் கல்வியிலும் பயிற்சியடையச் செய்கிறார்கள். பின்பு அவன் வாழ்க்கையை செவ்வனே கழிக்க ஒரு தொழில் ஏற்படுத்தி பின்பு தங்கள் மதமே உலகத்தை ஆளவேண்டு மென்ற உணர்ச்சியை உண்டாக்கு கின்றார்கள். இவ்வளவு காரியத்திற்கும் அவர்கள் வெகு குறைந்த பணத்தைத் தான் மதத்தின் பெயரால் செலவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் நாம் மதத்தின் பேரால் செலவிடுவதில் 100-ல் ஒரு பங்கு கூட செலவு செய்ததில்லை. நம்மைப் போல் மற்றெந்த மதக்காரர்களும் செலவிட மாட்டார்கள். கிறிஸ்தவர்கள் நம் நாட்டிற்கு வந்து சொற்ப நாள்களுக்குள் நம்மக்களைச் சேர்த்து கல்வி கற்பித்து அவர்களை நமக்கு எஜமானர்களாக்கி யிருக்கிறார்கள். உயரிய நிலைக்கும் கொண்டு வருகிறார்கள். 100 -க்கு 90 பேர் படிக்கும்படி செய்து வருகிறார்கள். ஆனால் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தென்றும் கோடிகோடி வருஷங்களானதென்றும் சொல்லும் நமது மதத் தையோ பெரும்பான்மையான மக்கள் படிக்கக்கூடாது. அப்படி மீறி படித்தால் நாக்கை அறுக்கவும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும், படித்து விட்டால் நெஞ்சை அறுக்கவும் மற்றும் பலவிதமான தண்டனைகள் உண்டு. இதன் பலனாய் வெள்ளைக்கார அரசாங்கம் நமது நாட்டிற்கு வந்து இப்போது கூட 100 -க்கு 5 பேர்தான் படிக்க முடிகின்றது. அதிலும் 100 -க்கு 90 பேர் பார்ப்பனர்கள். ஆனால் இப்போது சிலர் “நாங்கள் படிப்பதை தடுப்பதில்லை. வேதத்தைதான் படிக்கக் கூடாதென்கிறோமேயன்றி வேறில்லை” என்கிறார் கள். வேதகாலக் கல்வி இக்காலத்தைப் போன்று இங்கிலாந்து, ஐரோப்பா, அரேபியா முதலிய சரித்திரங்களல்ல. மற்றும் சேக்ஸ்பியர், மெக்காலே முதலியவர்களால் எழுதின நூல்களுமல்ல. ஆனால் அக்காலத்திய கல்வியென்பது நீதிகளை உணர்வது. நீதிகளோ வேதமாய் விட்டது. வேதமோ நாம் படிக்கக் கூடாதது. இம்முறையில் நாம் 1000 - க்கு ஒருவராவது படிக்க முடியுமா? வெள்ளைக்கார ராஜாங்கம் வராதிருந்தால் நம்மில் ஆயிரத்துக் கொருவராவது படிக்க நமது மதம் இடம் தந்திருக்குமா? வேதம்தான் படிக்கக் கூடாதென்றாலும் வட மொழியாவது கற்றல் கூடாதா வென்றால் அதுவும் கூடாது என்பார்கள். ஏன் என்றால் அது வாயில் நுழையாது என்பார்கள். இல்லை நான் முயற்சி செய்கிறேன் என்று சொன்னால் வேதத்திலுள்ள நீதிகள் அதில் இடை இடையே வருமாதலால் அதைப்படிக்கக் கூடா தென்பார்கள். இம் மாதிரியாகவே மதத்தின் பெயரால் நாம் படும்பாடும் அடையும் இழிவும் செப்பத்தரமன்று. ஆனால் செலவாகும் ரூபாயோ கணக்கிலடங்காது. இவ் வளவு ரூபாய் மற்றெந்த சமயக்காரர்களும் சமயத்தின் பெயரால் செலவிடு வதே இல்லை. மற்ற மதத்துக்கு யாரோ ஒருவர் இருவர் 1000 பவுன் 4 ஆயிரம் பவுன் கொடுப்பார்கள். அது சமயத்தை பரப்புவதற்கு பயன்படும். சமயம் பரப்புவது என்பது மக்கள் கல்வி அறிவு, மக்கள் நோய் தீரல், அற்புதம் கண்டு பிடித்தல் முதலியவை. ஆனால் நம் சமயத்திலோ ஒவ்வொருவரும் மத வரி கொடுத்து தான் ஆக வேண்டுமென்ற கட்டாயமிருக்கிறது. நம் மாகாணம் மட்டும் சர்க்கார் கணக்குப்படி ஒருவருஷத்திற்கு 2 கோடி ரூபாய் மதத்தின் பெயரால் கோவிலுக்கும் மடத்திற்கும் மாத்திரம் வரும்படி வருகிறது. இஃதன்றி தனிமடம் கோவில்களின் வரும்படிகளைக் கணக்கு பார்த்தால் இப்படி எத்தனையோ பங்கு அதிகமாக முடியும். திருப்பதி கோவிலை மாத்திரம் எடுத்துக் கொண்டால் வருட வருமானம் 20 லட்சமாகும். திருநெல் வேலி ஜில்லாவிலுள்ள மூன்று அல்லது நான்கு கோவில்களில் மாத்திரம் வருடத்திற்கு 2, 3 லட்சம் வரும்படி ஆகும்.
இன்னும் சிதம்பரம், இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் முதலிய பெருமை பெற்றதென்னும் கோவில்களில் கணக்கைப் பார்த்தால் அதிகமாகவே முடியும். இவைகள் தவிர கணக்குக்கு வராத ரூபாய்கள் எவ்வளவு? உதாரண மாக இங்கிருந்து ஒருவர் திருப்பதிக்கு 2 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக செலுத்த புறப்படுகிறார் என்றால் அது தவிர அவனுக்கு நேரிடும் செலவு எவ்வளவு? அவன் தன் சுற்றத்தாரை அழைத்துப்போக வேண்டியிருக்கிறது. மஞ்சள் ஆடை தரிக்க வேண்டியிருக்கிறது. மேள வாத்தியங்களுடன் ஊர்வலம் வர வேண்டி யிருக்கிறது. வீதிகளில் கோவிந்தா சப்தம் போட்டு பிச்சை வாங்க வேண்டி இருக்கிறது. இவ்வளவு செய்து 2 ஆயிரம் ரூபாய் காணிக்கை செலுத்துவது எதற்கு என்றால் அது அவரே செய்து கொண்ட பிரார்த்தனையாம். என்ன பிரார்த்தனை என்றால் அவர் முன்பு காயலா வாயிருந்த பொழுதோ வேறு கஷ்டமாயிருந்த பொழுதோ கடவுளை வேண்டிக்கொண்டாராம். கடவுளும் அவர் வேண்டுகோளுக்கிணங்கி அவரை நோய்வாயினின்றும் நீக்கினாராம்! அவர் நினைத்ததை அனுகூலம் செய்தாராம்! அதற்காகப் பிரார்த்தனை ரூபாயில் ஒரு காசுகூட குறையாமல் கொண்டுபோய் கொட்ட வேண்டுமாம். எனவே இதற்கு மற்ற செலவுகளிருக் கின்றன. இவைகளுக்கெல்லாம் எவ்வளவு ரூபாய் செலவாகுமென்று சற்று யோசியுங்கள். இதைப்போன்ற எத்தனை மக்கள் இமய மலையிலிருந்து கன்னியாகுமரி வரையிலுள்ளவர்கள் செல்வார்கள். உற்சவத்திற்காகவும் காணிக்கை வேண்டுதலை இல்லாமல் பல மக்கள் செல்லுகிறார்கள். அந்த முறையில் செலவிடும் செலவு எவ்வளவு? எனவே இவ்வித நம்பிக்கையைப் பற்றி நான் இங்கு சொல்ல வரவில்லை. இப்படி செலவு செய்யும் பணத்தின் பலன் என்ன? இது என்ன ஆகின்றது? என்பதற்கே இந்த கணக்குச் சொல்லு கின்றேன். இதனால் யார் பலன் அனுபவிக்


நா.சிவாஸ்

23-08-2014 01:44

தங்களின் கோபம் புரிகின்றது ஆனால்!!!!!!

சமயம் என்பதும், மதம் என்பதும் ஒன்றுதான். என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
மாவில் இருந்து உருவானது தான் இடியப்பமும் பிட்டும். வைற்றுக்குள் தான் சென்றடையப்போகின்றது. ஆனால் இரண்டும் வேறு வேறு. என்பதே என்கருத்து.


சிரித்திரன்

22-08-2014 08:03

மரணத்தின் பின்னர் ஏன் மாவீரர்களை எரிக்காம அடக்கம் செய்கிறார்கள்?
- ஏனென்றால் அவர்கள் விதைக்க படுகிறார்கள்

துடக்கோட கோவிலுக்குப்போனால் வியாதிப்படுகிறார்கள்?
-எல்லாத்துக்கும் ஒரு இடைவெளி தேவை அப்பத்தான் அலுப்படிக்காது. கோவிலுக்கு போறதுக்கு ஒரு இடைவெளிதான் துடக்கு. துடக்கே இல்லாட்டில் கோவில் கொள்ளாது.

வீட்டுக்கிணத்தில தண்ணி அள்ளினால் ஏன் கிணறு குற்றம் பொறுக்காமல் பலி எடுக்கு?
-செத்தவீடுகளுக்கு போய் அரட்டை அடி அடி எண்டு அடித்துவிட்டு அதோடு வேற எதெல்லாமோ அடிச்சுப்போட்டு வீட்டுக்கு போய் கிணத்தில தண்ணியள்ளேக்க விழுந்து செத்து கித்து போனால்? அதுக்குதான் உந்த புலுடா.

மாமிசம் சாப்பிட்டா பாவமா?
- மாமிசம் சாப்பிடுவது பாவமோ தெரியாது மாமிசம் சாப்பிடுவது பிடித்தவர்களுக்கு சுவை, பிடிக்காதவர்களுக்கு அருவருப்பு.

என்னும் கன கேள்விகள் கேட்கலாமா?
-தாராளமாக கேட்கலாம்.


கணக்கு வாத்தியார்

11-09-2014 22:50

என்னும் கன கேள்விகள் கேட்கலாமா?
-தாராளமாக கேட்கலாம். அப்போ மாவிரர விதைக்கேக்க எரு உரம் எல்லாம் போட்டோ விதைப்பினம்


பவுல்

23-08-2014 09:59

இந்து மதவேதத்தைத்தையோ பெரும்பான்மையான மக்கள் படிக்கக்கூடாதுஃ.
~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~.
உங்கள் பதிலை பாக்க மேல உள்ள வசனம் உண்மை தான் போல,

கிறிஸ்தவ வேதாகமம் ,கி.மு- கி.பி என இரு பிரிவுகளை கொண்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முன்னுள்ள ஆகம விதிகளும், இந்து சமய ஆகம விதிகளும் 100:90% ஒத்தகருத்துக்களாக இருக்கு.

அங்க இந்த துடக்குகளைப்பற்றி வலியுறுத்தி சொல்லப்பட்டிருக்கு. மீறினோர் பல துன்பங்களுக்காளானதும் எழுதப்பட்டிருக்கு. தேவாலயம் மகா பரிசுத்தாலயமாக காக்கப்பட்டது. கிணறும்தான் துடக்கு பொறுக்கா, கீழ் சாதியினர் இவர்கள் இறைவனால சபிக்கப்பட்டவர்கள். இவர்கள் ஆலயத்துக்க போகபடாது, வெளியில தான் நிற்கவேண்டும். தண்ணியும் அள்ளக்கூடாது. இப்படி கன நியாயப்பிரமாணங்கள் பழைய ஏற்பாட்டில கட்டாயப்படுத்தப்பட்டிருக்கு.

இந்தக் கட்டளைகளால மனிதர் இறைவனுக்குத்தூர இருந்தனர். பாவத்தினால கிடைத்த தண்டனை அது.

இறைவனையும் மனிதனையும் பிரிக்கிற பாத்தை நீக்குகிற பரிகாரியாக கிறிஸ்து சிலுவைப்பாடு ஏற்றார். இறைமகன் மனிதகுமாரனாக பூமிக்கு வந்து பாவநிவாரண பலியானார். அவர்தான் எங்களை சாபக்கட்டிலிருந்து விடுதலையாக்க இயேசு அழைக்கிறார். அவரை சரண்டைந்தவர்களுக்கே புதிய ஏற்பாடு என்ற வேதாகம விதிகளை தந்தார். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இவை இரண்டும் சேர்ந்ததே, கிறிஸ்தவ வேதாகமம்.
மா வீரர்களை விதைப்பது போலவே கிறிஸ்துவின் ரத்தத்தால பாவவிடுதலை அடைந்தவர்களை விதைக்கப்பட்டு, புதிய பூமியில உயிர்ப்பிக்கப்படுவார்கள். நெருப்புக்கு தகுதியானோர் நெருப்புக்கயே கிடப்பார்கள். மீட்பரை அலட்சியம் செய்வதால.
இந்து சமயத்தை நம்புகிற நீங்க உங்கட வேதங்களை வாசிக்க தடையானால் பழைய ஏற்பாட்டை வாங்கிப்படிங்கோ, துடக்குகள், சாதிகள் , ஆசாரியர் பூசாரிமார் ~`` இந்து மதக்கோட்பாடு மாதிரி கிட.

புதிய ஏற்பாடு இது கிறிஸ்துவினால பாவ விடுதலை அடைந்தவர்களுக்கு அவர் கொடுக்கும் புது நியாயப்பிரமாணங்கள்.கிறிஸ்துதான் சாதிப்பாவக்கட்டை அறுத்தார். துடக்குகளை கழுவி பரிசுத்தமாக்கினார்.இயேசுவின் ரத்தமே சகல கட்டுக்களிலிருந்தும் கட்டவிழ்த்து பரமனடி சேற்கிறது. இந்த மண்ணோ , வாழ்வோ , உறவோ எல்லாம் விலகியே போகும். சூரியனை படைத்த இறைவனுக்கும் நமக்கும் இடையான உறவில பிரிவே வராது. கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். நம்மோட கூட வருவதை சம்பாதிப்போம்.


கதிரவன்

24-08-2014 12:15

பைபிளின் புதிய ஏற்பாடு யேசுகிறிஸ்துவினால் தொகுக்கப்பட்டது அல்ல.
யேசுகிறிஸ்துவின் நேரடி சீடர்களாலும் தொகுக்கப்படவில்லை.
கிறிஸ்துவுக்கு பின் 325 ஆவது வருடம் கிட்டத்தட்ட ஒருலட்சம் கண்னியாஸ்திரிகளையும் பாதிரிமார்களையும் பலிகொண்டு ரோம ராட்சியத்தினால் தொகுக்கப்பட்ட ஓர் தொகுப்பு தான் புதிய ஏற்பாடு என்கின்ற நூல்.
இப்புவியில் ஆன்மீகம் என்பது ஒரே ஒரு மூலம் தான். இதை வேறுபட்ட கோணங்களில் பார்த்த வேறுபட்ட மனிதர்களின் கருத்துக்கள் ஆன்மீகத்தில் பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளது. ஏன் பைபிள் என்னும் ஓர் நுலையே பலகோணத்தில் பார்க்கின்றார்கள். கடவுளின் தூதனா ஓர் உருவத்தில் வந்த யேசுவையே இத்தனை கோணத்தில் பார்க்கும் மனிதர் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை எத்தனை கோணத்தில் பார்த்திருப்பார்கள்.
இதில் நான் பார்க்கும் கோணத்தில் மட்டும் தான் இறைவன் இருக்கின்றான் மற்றக் கோணத்தில் இல்லை என்று சொல்வது கடவுளை அறியாத ஆணவத்தின் முட்டாள்தனமான வெளிப்பாடேயாகும்.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி