காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

திண்ணையின் பயன்கள் - லொள்ளுபாண்டி.


நம் முன்னோர்கள் பிறருக்கு ஈகை புரிவதில் வான் அளவு உயர்ந்து நின்றனர். இன்றைய கால மக்கள் காலம் காலமாக வைத்து போற்றும் அளவு எதிர்கால சந்ததியினருக்கு நிறைய பண்பாடு,கலாசாரம்,வளங்கள்,மருத்துவ முறைகளை விட்டு சென்றுள்ளனர்.
அவர்களது ஈகை உணர்வுக்கு எடுத்துகாட்டாக பண்டைய கால வீடுகளில் உள்ள திண்ணைகளை கூறலாம்.

பேருந்து இல்லாத காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் வழிபோகர்கள் தங்க ஏதுவாக வீட்டில் திண்ணைகளை அமைத்தனர்.மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தரும் இடமாகவும், வயது முதிர்ந்த வயதானவர்கள் என பலதரப்பட்ட மக்களும் தங்கள் அறிவினை பகிருந்துகொள்ள, பொழுது போக்கிற்காக,கூட்டு குடும்பங்களாய் வசிப்போர் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினை கழிக்க என பல முகங்கள் திண்ணைகளுக்கு உண்டு.
இன்றைய “பாஸ்ட் பூட்” காலத்தில் பெற்ற குழந்தையுடன் செலவிடும் நேரமே குறைந்து விட்டநிலையில், நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று பாருங்கள் என்று நமக்கு ஒரு பாடமாகவே விளங்குகிறது நம் முன்னோர் விட்டு சென்ற இந்த திண்ணைகள்.

லொள்ளுபாண்டி - ஜேர்மனி.


மொத்த வருகை: 823 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (5)


மனோகரன்

05-09-2014 17:01

இணையத்து நிருவாகி களுக்கு என் பணிவான் வேண்டுகோள் ஒன்று .உங்கினை எங்கடை லொள்ளுவின்றை அருமையான ஆக்கமாம் அந்த **திண்ணையின் பயன்களுக்கு ** ஏன் அண்ணை மாரே கேரளத்து திண்ணைகளின் படங்களை போட்டு எங்களை அருக்கிறியல் ? ஏன் உங்களுக்கு கிடைக்கேல்லையே எங்க ஊர் திண்ணையால் .இன்றும் அழியாமல் லொள்ளு வீட்டு திண்ணை அங்கெ உண்டு .வையாளி வீட்டு திண்ணையும் அப்படியே உண்டு .அதுகள் உங்களுக்கு பிடிக்கேல்லை போல .இப்ப எங்கடை ஆக்கள் வெளிநாடுகளிலை கயிலை விசுக்கி விராண்டி வியர் வைச்சு கொண்டு குழந்தையள் ஓடை எதோ எதோ எல்லாம் திண்டு கொண்டு போஸ் குடுக்கினம் முக நூலிழை .அப்ப உங்களையும் குறை சொல்ல எலாதல்லே ?உலகம் போற போக்கிலை எங்கடை ஊர் திண்ணைகளை மறந்து கேரளா நாட்டு மலையாள திண்ணைகளை காட்டுங்கோ நீங்களும்


மனோகரன்

05-09-2014 10:26

லொள்ளு வீட்டு அந்த நீன்ற திண்ணை இன்றும் அப்படியே உள்ளது .அன்று நான் விக்டோரியா போன காலங்களில் அவரின் தோப்பனார் தெற்கு பக்கமாக சார்மனை போன்ற வடிவில் அமைக்க பட்ட குந்தில் அட்டன கால் இட்டு உல்லாசமாக படுத்து இருப்பார் .அண்மையில் ஊர் போய் கலட்டியில் ஒரு மரண வீட்டில் கலந்து பின் என் ஒன்றுவிட்ட சோதரன் கதிரமலையின் மரண வீடு நோக்கி என் லோட்டன் சைக்கிள் உருளும் வேளை லொள்ளு வீட்டு திண்ணையை கண்டதும் சைக்கிள் நிற்கின்றது .பழைய நினைவுகள் மீட்க படுகின்றது .அங்கு வீடு இல்லை .திண்ணை குந்து அப்படியே .படலை அடியில் போட்ட சீமேந்தில் நாங்கள் போளை அடிச்சு விளையாடின மாபிள்கள் புதைக்க பட்ட **wel Come ** அப்படியே உள்ளது .லொள்ளு புதைத்ததாக இருக்கலாம் .எல்லாம் அழிந்தவை /தொலைந்தவை /மறந்தவை .எத்தனை ஆனந்த அந்த கிராமிய வாழ்வு .
**எடியே இண்டைக்கு பயலி புட்டடி .கெதியாய் வாடி புல்லு கடகத்தை மாட்டு கொட்டிளிலை இறக்கி வைச்சு போட்டு **சுட சுட திண்டால் தான் ருசி அடி
இன்று **Come டார்லிங் what do you prefer ? Pizza ? KFC ? or Burger ? ஹூம் எல்லாம் காலம் செய்யும் கோலங்கள்


லொள்ளுபாண்டி

06-09-2014 23:56

இழந்தவைகள் நிறைய உண்டு அதில் இழக்க முடிஜாதவை பல உண்டு ,,,அனால் திரும்பும் எல்லாம் என்வாழ்வில் நான் திரும்ப வருவேன் என் ஊர்நோக்கி


மனோகரன்

05-09-2014 10:06

திண்ணை என்பதும் என் நினைவில் வருவது அன்று ஐம்பது களில் என்னூர் .இன்று என்றால் ஊர் முழுதும் கல்வீடுகளும் சுத்து மதில்களும் அரண்மனை கதவுகள் மாதிரி கேட்டு களும் கொழுவி போட்டினம் .
அன்று ஒரு கல்வீடும் கிடையாது .எங்கையாலும் ஒண்டு ரண்டு இருக்கும் .எல்லாம் குடிசைகளே .
ஊரில் கல்வீடு என்றால் இன்றைய தொண்டர் ஐயா வீட்டுக்கு வடக்கு பக்கமாய் அமைந்த அந்த வையாபுரி (வையாளி ) வீடு பனிப்புலத்தில் .பின் சாந்தை city இல்
ஒட்டு வீட்டு பொன்னையா வீடு .அதுக்கும் வீடு கல்வீடு இல்லை .மண் வீட்டுக்கு முதல் முதலாக அவர் கூரைக்கு ஓடு போட்டதால் அவருக்கு ஒட்டு வீட்டு பொன்னையா என்ற அடை மொழி ஒட்டி கொண்டது .அவர் வேறு யாருமல்ல .என்ரை இஞ்சாருன்கொவின்றை பேரனார் .அதோடை அடுத்த கல்வீடு .கள்ளு குடிக்கும் ஏரியா தாண்டி போக வேல்முருகன் மாஸ்டர் வீடு .அவரின் தோப்பனார் விதானையார் அது ஒரு கல்வீடு அப்போ .பின் ஐம்பதுகளின் கடை கூற்றில் (later half of 1950 ச ) வசதியானவர்கள் மெல்ல மெல்ல கல்வீடுகளை எழுப்பி இன்று ஒரு மண் வீட்டையும் ஊரில் காண ஏலாதப்பா .
இதற்கு எதிராக எவராவது .**இல்லை இல்லை எங்கடை பேத்தி /பேரன்ற்றை வீடும் கல்வீடு தான் அந்த காலத்திலை **என்று கூறுவார்கள் என்றால் அவர்களுhttp://www.panncom.net/static/img/zend.pngக்கு நான் சவால் விடுகின்றேன் நிரூபித்து காட்டுங்கள் என்று .


ரூபன்

04-09-2014 16:57

சோம்பேரிகள் இருக்க உதவும் இடம்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி