காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

இந்த முதலையின் பசியை தீர்த்தது யார்? - சிவாஸ்.


கள்ளியம் பிட்டி அருகில் ஓர் கும்பியடி என்ற குக் கிராமம் ஒன்று உண்டு. கள்ளியம் பிட்டிக்கும் கும்மிபியடிக்கும் இடையில் சரவணா என்னும் ஆறு ஓடுகின்றது. கும்ம்பிடியில் கிட்ட தட்ட 20 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களில் பலர் பிளைப்புக்காக இந்த ஆத்தை கடந்து கள்ளியம் பிட்டிக்கு தினமும் வருவதுண்டு அதில் ஓர் குடும்பத்தின் கதை தான் இது.

கும்பியடியில் ராகவன் என்னும் விறகு வெட்டி வாழ்ந்து வந்தான். அவன் தனது தாய் தந்தைமீது மிகபாசமுடையவனாகவும் அவர்களை தெய்வமாகவும் மதித்து வாழ்ந்து வந்தான்.


இவனுக்கு தாய் தந்தையினர் சகுந்தலை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இவர்கள் நால்வரும் இன்பமாக வாழ்ந்து வருங் காலத்தில் விபத்து ஒன்றின் மூலம் ராகவனின் தாயும் தந்தையும் இறந்துவிடுகின்றார்கள். இவர்களின் இழப்பை தாங்கமுடியாத ராகவன் துயரத்தால் துவண்டு விடுகின்றான். தொழிலை விட்டான் உணவை மறந்தான் ஓர் நடைப்பிணம் போல் ஆனான். இவன் இப்படி சோகத்தில் ஆழ்ந்திருந்தவேளை எங்கிருந்தோ வந்தான் ஒருவன். நண்பன் என ஆறுதல் கூற.

நண்பன்!!!!

நீ இளந்ததை இனி யாராலும் ஈடு செய்ய முடியாது.

உன் தாய் தந்தை உன்னை விட்டு பிரிந்து விட்டனர்.

அவர்கள் விதி முடிந்து விட்டது. எண்ணிப்பார்

நீ இப்படி சோகமாக இருப்பதை நிச்சயமாக அவர்கள் விரும்பமாட்டார்கள்.

உனக்காக ஓர் உன்னத உறவை தந்துள்ளார்கள்.

இனி நீ அவளுக்காக ஆவது
வாழ்ந்துதான் ஆகவேண்டும்.

உன்னை நம்பி வந்தவள்.

அவளை ஏமாற்றி விடாதே. (அவனின் நிலைகண்டு உருகியவனாய் உபதேசம் செய்தான்)


ராகவன்!!!!என் தாய் தந்தையை நான் கடவுளாக மதித்து வாழ்ந்து வந்தேன்.

அவர்களின் திடீர் இளப்பு என்னை மிகவும் வாட்டுகின்றது.


என்னால் தாங்க முடியவில்லை.

உன் ஆறுதல் வார்த்தைகள் என் மனதிற்கு ஆறுதல் தர முடியாது.

நண்பன்!!!!நானும் உன்போல் மிகவும் துன்பத்தில் இருந்தவன்தான்.

நான் என் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணியவேளையில் தான்

எனக்கு ஓர் நண்பன் இந்த வளியை காட்டினான்.

நீ வா உன் துன்பத்தை மறக்க நான் வழி காட்டுகிறேன்.

(இருவரும் மதுக்கடைக்கு போனார்கள். நண்பனாக வந்தவன் தன் செலவில் மதுவாங்கிக் கொடுத்தான்)

கவலைக்கு மருந்து இதை விட்டால் இந்த உலகத்தில் வேறு எதுகுமே இருக்க முடியாது.

இது மட்டும் தான் கவலைக்கு மருந்து.

மற்றதெல்லாம் போலி.

யார் என்ன சொன்னாலும் இதுக்கு ஈடாகாது.

அனுபவ சாலி சொல்கின்றேன் கேள்.

அருந்திப் பார்.

கவலைகள் தீரும்.

துன்பங்கள் துலையும்.

இன்பனிலை உருவாகும்.

உன் கவலைகளை தீர்த்து உன்னை ஓர் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும் .

உனக்காக எல்லாம் உனக்காக!!!!!

உன் கவலைகள் தீர நானும் குடிக்கின்றேன்.

நிச்சயமாக உன் கவலைகள் தீரும்.

உனக்காக எல்லாம் உனக்காக!!!!!!!

(என்றுகூறி அவனுக்கு மதுவை ஊற்றி கொடுத்தான்),

ராகவன்!!!!

எனக்கு இதுகள் எல்லாம் பழக்கமில்லை.

இது தப்பு என்று என் தாய் தந்தை கூறுவார்கள்.

எனக்கு இது வேண்டாம்.

நான் என் தாய் தந்தையை அவமதிப்பது போல் ஆகிவிடும் .

எனக்கு இது வேண்டாம்.

நண்பன்!!!!

(உதவிக்கு அருகில் இருந்தவர்களை அழைத்தான்)

ராகவா? இதோ இதில் உள்ளவரை பார்.

இவர் கதை தெரியுமா உனக்கு?

இவர் ஒருகாலத்தில் பைத்தியமாக றோட்டிலை திரிந்தவர் இப்ப எப்படி சந்தோசமாக இருக்கின்றார் பார்.

அதோ அவரைப்பார் அவர் களுத்தில் ஓர் கோடு தெரிகிறதே அது என்ன தெரியுமா?

அவர் தூக்கில் தொங்கிய அடையாளம்.

அவர் தற்கொலை முயர்சியில் இருந்து தப்பியவர் தெடியுமா!

அவர் இப்போ எப்படி சதோசமாக இருக்கின்றார் தெரியுமா?

சரி வா அவரிடமே கேட்போம்.

(நண்பன் அழைத்துச் சென்று புதிய நண்பனை அறிமுகம் செய்தார்)

நண்பரே!!!

இவர்தான் ராகவன்.

நமக்கு கிடைத்த புதிய நண்பன்.என்று அறிமுகம் செய்தான்.

புதிதாக அறிமுகமான நண்பன்!!!

நண்பரே நீ சொர்கத்துக்கு வந்து விட்டாய்.

இனி உன் வாழ்வில் என்றுமே இன்பந்தான்.

அனுபவி.. அனுபவி... அனுபவி ராசா அனுபவி என்று அவரும் ஆலோசனைகளை அள்ளிவழங்கினார்.

(இவகளுடன் இன்னும் பலர் இணைய ராகவன் ஒருவேளை இவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்குமோ என்று எண்ணி எதுக்கும் ஒருமுறை முயன்றுபார்ப்போம் என்று அவர்கள் வழியில் இறங்கிணான்)

எடுத்தான் போத்திலை.

குடித்தான் மதுவை.

அடைந்தான் மதியின் மயக்கத்தை.

தொடர்ந்தான் போதையில் வாழ்க்கையை.


சகுந்தலை !!!!

போதையில் வருங்கணவரை பார்த்து என்ன சொல்வது.

இவன் சோகத்தில் அழுவதை விட போதையில் தூங்குவது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

நாட்கள் கழிந்தன........

ராகவன் திருந்தியபாடில்லை அவன் மதுப்பழக்கம் மென் மேலும் அதிகரித்தது.

காலையில் விறகு வெட்ட செல்வான்.

வெட்டிய விறகை வீட்டில் கொண்டு வந்து போடுவான். பின் மதுக்கடையை நாடுவான்.

விறகை விற்பனைக்கு மனைவியே எடுத்துச் செல்லவேண்டும்.

அவன் மதுக்கடை சென்ற பின். விறகுகளை எடுத்துக் கொண்டு

ஆற்றை கடந்து கள்ளியம் பிட்டிக்கு சென்று விறகுகளை விற்று பொருட்களை வாங்கி வருவது சகுந்தலை.

நாட்கள் செல்ல செல்ல மது போதையால் பிரச்சனைகள் ஆரம்பமாகத் தொடங்கியது.

அவன் தாய் தந்தையை மறந்து விட்டான். ஆனால் மதுவை மறக்க முடியவில்லை.

குடும்பத்தில் வறுமையும் பிரச்சனையும் மிகச்செளிப்பாக வளர்ந்து மரமாக நின்றது.

இந்த நிலையில் சகுந்தலைக்கும் ஓர் நண்பன் கிடைத்தான் கள்ளியம் பிட்டியில் ஓர் வியாபாரி.

இவன் கூறும் வார்த்தைகள் இவள் மனதில் ஓர் ஆறுதலாக இருந்தது.

நாளடைவில் இவளும்
கள்ளியம் பிட்டி வியாபாரி கூறும் ஆசை வார்த்தைகளில் வசியப்பட்டாள்.

இவள் மனதை புரிந்து கொண்ட வியாபாரி

உன் கணவனை விட்டு என்னுடன் வா......

நான் உன்னை அன்பாக பார்த்துக்கொள்வேன்.......

நீ இப்படி கஸ்ரப்படத்தேவை இல்லை........

என்று ஆசை வார்த்தைகள் கூற அவளும் சங்கடப்பட்டாள்.

இந்த சங்கடத்துடன் இவள் இருக்க.

குடி போதை போதாமல் பணத்துக்காக வீடுதேடி வந்தான் ராகவன்.

பணம் கொடுக்க மறுத்த மனைவியுடன் ஆரம்பமானது தர்க்கம்.

போதையில் இருந்த ராகவன் முழங்கினான்.

வியாபாரி கூறிய வார்த்தைகள் சகுந்தலைக்கும் ஊக்கம் கொடுத்தது.

முடிவு!!!!!!!!!

சகுந்தலை வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தாள்.

இரவும் வந்தது.

ராகவனும் தூங்கிவிட்டான்.

சகுந்தலை வீட்டை விட்டு புறப்பட்டாள்.

உறங்கிக் கொண்டிருந்த படகோட்டியிடம் தன்னை அக்கரையில் விடும்படி கேட்டாள்..... கெஞ்சினாள்.... மன்றாடினாள்.....

என் நித்திரையை குழப்பாதே போய் விடு என்று துரத்தினான் படகோட்டி.

இவள் விடிவதற்குள் அக்கரையை அடைய வேண்டும்.

விடிந்து விட்டால் ராகவன் தன்னை போகவிட மாட்டான் என்று முடிவெடுத்த சகுந்தலை.

இந்த ஆத்தோரமாக இரண்டு மைல் தூரம் நடந்தால் மரப்பாலம் வரும் அந்த வழியால் அக்கரையை அடைந்து விடலாம் என எண்ணி ஆத்தோரமாக நடக்க ஆரம்பித்தாள்.

நடந்தாள்......நடந்தாள்.....நடந்தாள்.......

இரண்டு மைல் தூரம் நடந்த அவள். மரப்பாலத்தையும் கண்டாள்.

ஆகா!!!!!!!!!

என் எதிர்காலம் தெரிகின்றது என்று எண்ணிய வேளையில்


அவள் கால்களை கௌவியது ஓர் முதளை.

அதன் கோரப்பசிக்கு அவள் பலி ஆனாள்.

இந்த முதளையின் பசியை தீர்த்தவர் யார் ?

உங்களால் சொல்ல முடியுமா?

1.

அவளை அக்கரையில் விட மறுத்த படகோட்டியா?

2.

வீட்டில் இருந்து வெளிக்கிட்ட சகுந்தலையா?

3.

அடுத்தவன் மனைவிக்கு ஆசை வார்த்தை கூறிய வியாபாரியா?

4.

அடுத்தவர் வார்த்தையை நம்பிகெட்ட ராகவனா?

5. தப்பான வழியை காட்டிய நண்பனா?


சிவாஸ் - நெதர்லாந்து.மொத்த வருகை: 1162 இன்றைய வருகை: 2

கருத்துரைகள் (19)


மனோகரன்

16-10-2014 09:17

என்னூரில் அன்றிருந்த மூன்று கனிந்த கொய்யா பழ தோட்டங்கள் பற்றிய கதையும் சொல்லியே ஆகவேணும் .சிலர் நினைக்க கூடும் உந்த நைன்டி எங்களை அறுக்குது .ஒரே அறுவையை கிடக்குது எண்டு .உது கிளடுகளின்றை புத்தி .**நாங்கள் அந்த காலத்திலை ** எண்டு தொடங்கி எங்களை அறுக்க வெளிகிட்டு விடுவினம் .அது பரம்பரை இடைவெளி (generation gap ) என்றும் சொல்லுவினம்

நான் சொல்லுகிற கதையும் கொஞ்சம் கேளுங்கோ .அன்று நான் என்ரை ஆச்சிக்கு ஒளிச்சு சாரத்தை மடிச்சு சண்டி கட்டோடை செய்யாத எல்லாம் செய்த ஆள் .ஊரில் மூண்டு கொய்யா பழ தோட்டங்கள் .ஒன்று காயா பனையில் **நாசகத்தியின் **தோட்டம் .நாங்கள் போவோம் கொய்யா பழம் பிடுங்க .சல சலப்பு கேட்டதும் அவ ஆடி அசைஞ்சு வருவா **ஆறடி கொய்யா பழம் பிடுங்குகிறது ? எண்டு கொண்டு ..
அவ ஆடி அசைஞ்சு வர முதல் நாங்கள் கிட்டியில் பட்ட புள்ளு மாதிரி சண்டி கட்டில்
கொய்யா பழங்களுடன் முத்தர் கேணி பக்கத்தில் நிற்போம் .சுதரசனின் அயல் வீடு
அந்த நாசகத்திக்கு நாங்கள் அன்று வைத்த பெயர் **அங்கமுத்து ** அன்று சினிமாவில் கோலோச்சிய தங்கவேலு /கருணாநிதி (இன்றைய அரசியல் கள்ள கருணாநிதி அல்ல ) ஒல்லி குச்சி போல சாயி ராம் அவரின் மனைவி பூசணிக்காய் போன்ற **அங்கமுத்து ** நாங்க நாசகத்திக்கு அங்கமுத்து என்று பெயர் வைத்து கொய்யா பழம் பிடுங்கும் போது அவ ஏசி **ஆரடா உங்கினை எங்கடை கொய்யா பழம் பிடுங்குகிறது எண்டு பேசி கொண்டு அந்த ஆனை போன்ற உடலை ஆட்டி அசைச்சு வர முதல் **எடே அங்கமுத்து வாறா எண்டு நாங்கள் ஓடி ஒளிந்து காய பனை தொங்கலில் .மிகுதி ரண்டு கொய்யா பழ தோட்டத்தின் கதை தொடரும் .


பவுல்

14-10-2014 09:14

கட -உள் இறைவனை உள்ளத்தில கடத்தினா எந்த ஒரு சிக்கலுக்கயும் ஆத்துமா [அவன்+அவள் ] எந்த சூழ்நிலைகளையும் மகிழ்ச்சியாக கடக்கும்.சகுந்தலை தான் தன்னால தான் கெட்டாள்.

எந்த ஒரு மனிதரையும் இன்னொருவரால {அவர் இடங்கொடாம } கெடுக்க முடியா.

நம்மால நம்மை பாதுகாக்க முடியா. நமக்குள்ள இருக்கிற பாவ வினையான ஜென்ம சுபாவங்களை மாற்ற நம் கண்ணுக்குப்புலப்படாத இறைவனை நம் மனக்கண் முன்னுக்க நிறுத்தினா எந்தப்போராட்டத்திலும் தலைகுனியவோ உந்த முதளைக்கு இரையாகவோ போகமாட்டின.

சகுந்தலை பாவம் மனிசி மனிசரை நம்பி கடவுளை மெய்த்துணையை நினைக்காமலிருந்தது அவளால அவளே கெட்டாள். மற்றவர்களை நம்பவேண்டாம்.

*தாய்* என்றாலும் வாயும் வயிறும் வேற, இந்தப்பழமொழியின் அர்த்தம் என்ன?

வலுவற்றவர்களை வலுப்படுத்துவபவர் இயேசுகிறிஸ்து..
நம் பாவமன்னிபுக்காக அவர் பட்ட அடிகள்


மனோகரன்

14-10-2014 15:37

கட உள்ள .எல்லாம் கடந்து இருப்பவர் .அப்ப ஏன் பவுல் ஒன்றும் அறியாத அப்பாவி தாய் தேப்பனுக்கு கூனும் குருடுமாய் அங்க ஈன பிள்ளைகளை பெற வைக்கிறார் உங்கள் கர்த்தர் .சகல வல்லமையும் பொருந்திய அந்த கர்த்தர் ஒரு நிறை குழந்தயை பெற வைக்கலாம் அல்லே .முற்பிறப்பு ஊழ்வினை பயனை நீங்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டீர்கள் .இருந்தும் அதுவே அன்றில் இருந்து இன்று வரை நடை முறையில் நடந்தேறி கொண்டு இருக்கிறது .நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள்


பவுல்

14-10-2014 17:43

முற்பிறப்பு ஊழ்வினை பயனை நீங்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டீர்கள் .இருந்தும் அதுவே அன்றில் இருந்து இன்று வரை நடை முறையில் நடந்தேறி கொண்டு இருக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊழ் வினை உருக்கி உள்ளொளி ஏற்றத்தான் இறைவன் கடவுளாக பிறந்தார் அண்ணாஆ!!!ஆ,
அரசன் அன்றறுப்பான், தெய்வமோ நின்றறுக்கும.

பாவதீட்டு நீங்க கிறிஸ்துவின் ரத்தத்தை நம்பி திருமுழுக்குப்பெற்றவர்களின் {பாவவினை நீங்கிய} குடும்பத்தில தொடந்து கஸ்ரங்கள் வந்தா அது தென்னமர அடி வேரை வெட்டி பசளை தாப்பது மாதிரி, கண்டுகளை காயவிட்டு தண்ணிபாச்சுவது போல, அரிச்சந்திரனுக்கு வந்த சோதனை போல ,பொன்னை புடமிடுவது போல, குயவன் கையில களிமண்ணானது எவ்வளவு பாடுபட்டு அழகான பாத்திரமாகிறது. நாங்களும் அப்படித்தான். துன்பம் இல்லாத மனிதரால சந்தோசத்தில களிகூர முடியமோ? வாழ்க்கையில சுவை இருக்கா. தொடந்து இனிப்பையே சாப்பிட்டா எப்படி இருக்கும்? உலக வாழ்க்கை என்பது கல்விச்சாலையானா பரீட்சை இல்லாமல் உயரமுடியுமா? துன்பங்கள் 2வகையில வரும், 1அடி, 2பரீட்சை. எது அடி, எது பரீட்சை என மனிதரால ஆரம்பத்தில தெரியா, நாள்படநாள்பட அவைக்கு விளங்கும்.

பறவைகள் குஞ்சுகளை எப்படி பறக்கபழக்குது? நேற்றய வேதப்படிப்பில கழுகு குஞ்சை எப்படி பறக்கப் பழக்குது என்று கற்பித்தார்கள்.

நம் மரணக்கிரியை தான் கடவுளுடன் நாம் நெருங்கி இருக்கிறோமா? அல்லது துடக்கென்னும் தூரத்தில தள்ளப்பட்டவர்களாக இருக்கிறோமா? என்பதை காட்டுகிறது. கடவுளுக்கு மீன் படைத்தா அபத்தம், ஆன்மாவை சாந்திபண்ணிப்போட்டு வீட்டுப்பேய்க்கு எட்டுவீட்டில என்ன நடக்கு, எப்பவோ ஒருக்கா திருடிச்சாப்பிட்ட சகோதரர் சிவாஸிற்கு என்ன நடந்ததென்று கேட்டுப்பாருங்கோவன்.{எங்கயோ எழுதிக்கிடந்ததை வாசித்த ஞாபகம்}


manokaran

14-10-2014 18:31

அப்போ அந்த கடவுளும் (கர்த்தரும்/தேவனும் ) ஒரு படு சுயநல வாதி போல .தன் மகிமையை உணர ( To realize his Glory ) எழுத்து சோதினை (written test ) வாய்மொழி பரீட்சை (voiva test ) செய் முறை பரீட்சை (practical test ) ஒண்டும் வைக்காமல் ஒரு பாவமும் அறியாத ஏழை எளியதுகளின் வயிற்றில் தன் மகிமியை வெளிப்படுத்த கூன் .குருடுகள் மற்றும் அங்கவீன குழந்தைகளை பிறக்க வைத்து தன் மகிமையை வெளிப்படுத்த முனையும் அவரும் பொறுத்த ஒரு சுய நல வாதி .உதை விட அவர் பேசாமல் தன் பாட்டிலை இருக்கலாம் அல்லே ?. சகல வல்லமையும் பொருந்தியவர் என்றால் உவருக்கு என் உந்த தேவை இல்லாத தொழில் .அவர் சிருஷ்டித்த பூமி பந்தில் ஒரு மூலையில் உண்ண உணவின்றி எழும்பி நடக்கவும் பெலன் இன்றி எலும்பும் தோலுமாக மானிடர் (சோமாலிய இத்தியோப்பிய நாடுகளில் ) இன்னொரு மூலையில் I போன் மற்றும் லேட்டஸ்ட் சாதனங்களுடன் நாட்டியம் ஆடுகின்றனர் இன்னொரு புறம் (புலம் பெயர்ந்த நம் நாட்டு சனங்கள் ஈறாக ) கடவுளுக்கு ஏன் உந்த அநியாய ஒர வஞ்சனை வேலை ?
அதை விட பேசாமல் முனிவர் மார் இருக்குமா போல அமைதியாக நிஷ்டையில் இருக்கலாம் அல்லே ? .........


மனோகரன்

13-10-2014 17:15

*************ஐம்பது வருடங்களுக்கு பின்னான என்னூர் ******************

நாங்களும் பிறந்து /தவழ்ந்து /வாழ்ந்து/மரித்து பர லோகம் போய் விட்டோம் .அங்கு விசாரணைகள் மேல் விசாரணைகள் .எந்த ஒரு கூட்டத்திலும் என்னை வழிக்கு கொண்டு வர ஏலாதாம் .உவர் என்ன இந்துவோ இல்லை கிறிஸ்தவரோ இல்லை இசுலாமியரே இல்லை பெளத்தரோ என்று ஒரே கலக்கம் .எந்த நீதி மன்றில் என்னை விசாரிப்பது என்று ..சித்திர புத்திரர் சொன்னார் யம தர்மருக்கு இவ்வாறு .உந்த ஆளிட்டை இருந்து ஒண்டும் கறக்க ஏலாது .தான் ஒரு நடுநிலை வாதியாம் எந்த ஒரு நீதி மன்றிலும் தன்னை விசாரிக்க ஏலாதாம் .
ஓஹோ அப்படியோ சங்கதி ? அப்படி ஆயின் ஆளை கொண்டு போய் விடுங்கோ அங்கெ இடை தங்கல் முகாமில் ** Transist Camp ** இல் .எனக்கெண்டால் வலு குஷி .நேரத்துக்கு நேரம் சாப்பாடு .**Nonveg **கிடையாது எல்லாம் மரக்கறி தான் .
என்னை போல ஒரு முனிவரும் மாட்டு பட்டு இருக்கிறார் விசாரணை இழுத்தடிப்பில் .அவரோடை நான் கூட்டாளி ஆகி ஒரு வித்தையை கற்று கொண்டேன் .அதுதான் அந்த கூடு விட்டு கூடு பாயும் வித்தை .இப்ப வரியமோ 2064 ஆச்சுது .என்ரை வழக்கு விசாரிக்கிற பாடு இல்லை .வித்தையை பாவிச்சு அங்கை உள்ள செக்கூரிக்கு கையுக்கை பொத்தி நான் புகுந்து விட்டன் ஊரில் அம்மன் கோயிலுக்கு பக்கத்திலை உள்ள ஒரு வீட்டில் வளரும் ஒரு German டோபமிண்டோ பெப்பமின்டோ (அது நாங்கள் திண்ட இனிப்பு ) டொல்பினொ ஒண்டுமாய் விளங்கேல்லை .நாங்கள் வாழ்ந்தது ஊர் நாயள் ஓடை அல்லே .பூந்து விட்டன் நாயின் உடம்புக்குள் .குலைக்கிரன் நான் இப்ப .எனது குலைப்பில் சில வித்தியாசங்களை உணர்ந்த எசமானர் .என்ரை நாய்க்கு ஆரோ எரிச்சல் பொறாமையிலை சூனியம் செய்து போட்டினம் போல .ஒருக்காய் ஆளை கூட்டி கொண்டு போய் ஒரு E அரிச்சனை செய்து கொண்டு வாறன் .குலைக்கேக்குல்லை இருந்தா போல இங்கிலீசு மாதிரி பிறகு உங்கினை பொலிசுகாரர் கதைக்குமா போல சிங்களம் மாதிரியும் விளங்குகுது .இருந்தா போல 50 வரியத்துக்கு முதல் எம்மூரில் கிழடு கட்டையல் கதைச்ச ஊர் தமிழும் வருகுது .
கொண்டு போறார் என்னை அவற்றை பாசையிலை எதோ குஷ் /புஷ் எண்டு சொல்லி கொண்டு .
வெளியிலை வந்து ஊரை பாத்தால் தலை விறைச்சு போச்சுது எல்லாம் தலை கீழ் மாற்றம் .அங்கு அடுத்த தலை முறை புது வகை கோலங்களுடன் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு பாடு விளங்க வில்லை .ஆண்டாண்டு காலமாக சம உரிமை வேணும் பெண் விடுதலை வேண்டும் என்று போராடி 90 வீதம் வென்றுவிட்டார்கள் .இருந்தும் பெண் விடுதலை பெற்றாலும் **பேன் களில் **இருந்து எங்களுக்கு இன்னும் விடுதலை இல்லை ஒரே சொறி கடி .எத்தனையோ ஷாம்பூக்கள் தடவி குளிச்சு முழுகினாலும் என்ரை மனிசன் என்னை தடவி கொஞ்ச வந்தால் உந்த பேனுகள் பெரும் அரிகண்டம் .அதனால் எல்லா பெண்களும் சிலுப்பா தலை வெட்ட வேணும் எண்டு ஒரு ஓடர் போட்டு எல்லாரும் சிலுப்பா தலை ஓடை .ஒரு பெண்டுகளையும் இந்த நாய் காணேல்லை பின்னி முடிஞ்ச தலையோ இல்லை குடும்பி முடிஞ்ச தலையோடை .எல்லா பெண்டுகளும் சிலுப்பா வெட்டு .
பிறகு ஆம்பிளையளை ஏன் பேசுவான் ? அவை அந்த காலத்திலை தலை மயிர் செம்பாடு பத்தி போச்சுது எண்டு கவலை பட்டு தலைக்கு கறுப்பு பெயிண்ட் (டை ) அடிச்ச ஆக்கள் இப்ப எல்லாரும் தலைக்கு செம்பாட்டு பெயிண்ட் அடிச்சு நிக்கினம் .அது மட்டுமே .கோயில் கொடி
ஏறி விட்டுது .ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியேல்லை .பொடியல் ஒரு காதிலை மட்டும் கடுக்கன் கொளுவினான்கள் .இப்ப ரண்டு காதுகளிளையும் கடுக்கன் .பெண்டுகளும் ஜீன்ஸ் கொழுவி கொண்டு நிக்கினம் .ஆர் பொம்பிளை ஆர் ஆம்பிளை எண்டு விளங்கேல்லை .கோயில் கொடி ஏறியது remote operated control device
மூலம் ஐயர் பொத்தானை அமைத்த கொடி சூர் பூர் எண்டு ஏற .சனங்கள் **அரோகரா /அம்மாளே ஆச்சி எண்டு கும்பிடெல்லை ** எதோ காஷுக்கு பிசுக்கு எண்டு சொல்லி டனிஷ் டொச் /பிரெஞ்சு பாசையிலை கும்பிட்டிச்சினம் .அம்மாள் ஆச்சியும் வெளிநாட்டு பாஷையால் படிச்சு விட்டா போல .பிறகு இந்த நாய் அந்த காலத்திலை எங்கடை பால குமாரன்றை பேரன்மார் (பழைய மடம்) என்ரை மாமன் மார் வாசிக சாலைக்கு முன்னாலை வரியம் பூராக ஒழுங்கு பண்ணி தோரணம் கட்டி கமுகு நட்டு ஊறுகாய் தண்ணி மோர் தண்ணி சக்கரை தண்ணி ஊத்தின அந்த பந்தளுகள் எங்கை என்று முகர்ந்து முகர்ந்து பார்த்துது .ஒன்றையும் காணேல்லை .அது இருந்த அடையாளமும் இல்லை .என்ரை பூட்ட பிள்ளையளும் உவன் சுதர்சன் /சிரித்திரனின் பேர பிள்ளையளும் உங்கினை கோயில் அடியிலை நிக்கினம் அவையோடையும் கொஞ்சம் கதைக்க வேணும் .ஆனால் கூடு விட்டு கூடு பாயும் வித்தை சொல்லி தந்த முனிவர் ஏசுகிறார் நான் கன நேரம் னைக்குள் பூந்து இருந்து விட்டேனாம் கெதியாய் வரட்டாம்.இன்னொரு நாளைக்கு வாறன் .
சிரித்திரன்

13-10-2014 17:51

எனக்கெண்டால் ஒண்டு மட்டும் வெட்ட வெளிச்சமாய் தெரியுது. என்னண்டு சொன்னால் நீங்கள் கடந்தகாலத்தையும் முற்றாக உணர்ந்துள்ளீர்கள் அதேபோல் நிகழ், எதிர் காலத்தையும் உணர்ந்துள்ளீர்கள். அதாவது முக்காலமும் உணர்ந்தவராக இருக்கிறீங்கள். முக்காலமும் உணர்ந்தவர்கள் முனிவர்கள். நீங்கள் இன்றிலிருந்து முத்திய முனிவராக பதவி ஏற்கலாம். என்ன பேர் வைக்கவேனுமேண்டு உதவி எதேன் வேணுமெண்டால் செய்ய நான் ரெடி. விசுவாமித்திரர் தொடக்கம் கௌதமர் வரைக்கும் எக்கச்சக்க பேர் கையிருப்பில் இந்திரன், மன்மதன் உட்பட. என்ன பேர் வேணுமெண்டு கேளுங்கோ.
முனிவராக சத்திய பிரமாணம் எடுக்க முதல் பரீட்சையில் கவனித்து உறுதிப்படுத்த வேண்டியவை:
*** சாபம் கொடுக்க தெரிந்திருக்க வேண்டும்****
***சாபத்தை முற்றிலும் இல்லாமல் பண்ணாமல் சில பல கொண்டிசனுகளுடன் விமோசனமும் கொடுக்க தெரிந்திருக்க வேணும்***
நீங்கள் பிறந்த ஊரை கருத்தில் கொண்டு, சங்கு ஊதல், ஆடை அணிகல வேஷம் போன்றவற்றிட்க்கான பரீட்சை நடை பெற மாட்டாது என்பதை மிகவும் சந்தோசத்துடன் தெரிய படுத்துகிறோம்.
***மற்றவரை புண்படுத்தாமல் இருக்க உறுதி கொள்ள வேண்டும் .
***இன்னும் என்னென்ன முனிவர்கள் செய்வார்களோ அதனை விடயங்களையும் செய்யும் வல்லமை கொண்டிருக்க வேண்டும்****
***do you have any question?***


manokaran

14-10-2014 19:19

உவர் என்ன என்னோடை விளையாடுகிறார் போல ? முனிவர் பட்டம் தர போறாராம் .பிறகு சத்திய பிரமாணம் எடுக்கவேணுமாம் .ஆனால் ஒன்றுக்கு ஒன்று முரண் பட்ட கொண்டிசனுகளும் போடுகிறார் .தலையை சொறிய வேணும் போல கிடக்குது .
*சாபம் குடுக்க வேணுமாம் ** பிறகு சொல்லுகிறார் **அடுத்தவரின் மனதை புண் படுத்த படாதாம் ** இது கூழையும் குடி .மீசையிலும் பட படாது எண்டு சொல்லுமா போலை அல்லே கிடக்குது .
மனதை புண் படுத்தாமல் என்னெண்டு சாபம் இடுவது எனக்கெண்டால் விளங்கேல்லை .
பிறகு சொல்லுகிறார் இப்பிடி
***இன்னும் என்னென்ன முனிவர்கள் செய்வார்களோ அதனை விடயங்களையும் செய்யும் வல்லமை கொண்டிருக்க வேண்டும்****
அதுக்கேண்டால் எனக்கும் சரியான விருப்பம் தான் .இருப்பினும் .எங்கடை Chief நியூஸ் எடிட்டர் Mr .சுதர்சன் உங்கினை எங்கையோ எழுதி கிடக்குது **காம உணர்வுகளை மூளையில் சுரக்கப்படும் ஒரு வகை ஹோமொன்களை சுரக்கும் நீரோன்களால் என்று கடு பிடித்து விட்டார்களாம் .நான் நினைத்தேன் முனிவர் பட்டம் பெற முதல் மண்டை ஓட்டை துறந்து அந்த ஹோமொன்களை சுரக்கும் நீரோன்களை மட்டும் நீக்கி மண்டை ஓட்டை மீண்டும் கொழுவி தைக்கலாம் எண்டு
ஒப்பிரேசன் மேஜர் ஒப்பிரேசன் தான் .காசு கொஞ்சம் சிலவளிச்சால் பிஞ்சினை பிற வெட்டு ஆசுவத்திர்யளிலை செய்யலாம் பிறகு கீழை வாசிச்சு கொண்டு போகேக்குல்லை அல்லே நான் செய்ய வெளிக்கிட்ட மோட்டு வேலை விளங்கிச்சுது
**காமத்தின் மூலம் கிடைக்கும் அளப்பரிய /ஆச்சரியம் மிக்க பத்து நமைகளை பார்த்ததும் தலை விறைச்சு போச்சுது ** நான் செய்ய வெளிக்கிட்டது மோட்டு வேலை எண்டு .எல்லாம் cancelled .சாதாரண முனிவர்கள் போல நானும் வைத்து கொள்வேன் எனது பர்ன சாலையில் பூ மரம் வளர்க்க /தண்ணி ஊத்த இன்னும் பல வேலைகளுக்காக அகலிகை /சகுந்தலை போன்ற அழகிய இளம் பொம்மனாட்டிகளை .சிலவேளை Mrs வரக்கூடும் இப்பிடி சொல்லி கொண்டு .முனிவரும் ஆகினாய் பறுவாய் இல்லை .என்னை மறந்ததும் ஏனோ ? நானும் ஒருத்தி இருக்கிறன் அல்லே ? சின்ன பெட்டையளோடை அல்லே சல்லாபம் கொள்ளுகிறாய் !! எண்டு சொல்ல நான் சொல்லுவன் **எடியே நீ இப்ப கிளவியடி !!
**Over Age ** அடி .வீட்டை போய் ஆடு மாட்டுக்கு குழை வெட்டி போட்டு உன்றை பிராக்கை பாரடி .அடுத்த முறை என்னை பாக்க வரேக்குல்லை நான் இந்தியாவிலை வேண்டி கொண்டு வந்த அந்த காவி வேட்டியை கொண்டு வாடி என்று சொன்னதும் .மண் அள்ளி திட்டி போட்டு போனாள்.உவவின்றை திட்டு எங்கை பலிக்கும் என்னட்டை .நான் முனிவர் அல்லே .நான் ஒரு சாபம் இட்டால் ஆள் அந்த இடத்திலேயே சாம்பல் ஆகி போய் விடுவாள் .நான் அப்பிடி செய்ய மாட்டன் கடைசிவரை .பிறகு எனக்கு நன்றி கெட்ட முனிவர் உவர் என்று எனக்கு பட்ட பெயர் வைச்சு போடுவங்கள் உந்த சிரித்திரன் பாட்டியல்


மனோகரன்

13-10-2014 19:45

எனக்கு questions ஒண்டும் இல்லை என்ரை ராசாவே .ஆனால் ஒரு சிக்கல் ஒண்டு எனக்கு பேர் வைப்பதில் .உந்த இந்திரன் /கௌதமன்/ விசுவா மித்திரன் /மன்மதன் பேருகளை மட்டும் வைச்சு போடாதை .பிறகு மனிசி அறி ஞ்சால் எண்டால் என்னை அடிச்சு கொண்டு போடுவாள் .நீர் என்ன மன்மதனோ ? விசுவாமித்திரனோ ?ஏன் உமக்கு நான் காணேதே ?என்னிலை என்ன குறை ? நான் என்ன சொத்தியொ ? முடமோ ? இல்லை குறிடியோ ? எண்டு அடி பிடியிலை வருவாள் .அதாலை என்ரை ஒரிச்சினால் பேரான அந்த மனோஹரனையே use பண்ணு .மனோஹர முனி /முனிவர் .நல்லாய் றையும் பண்ணும்
. **நீங்கள் பிறந்த ஊரை கருத்தில் கொண்டு, சங்கு ஊதல், ஆடை அணிகல வேஷம் போன்றவற்றிட்க்கான பரீட்சை நடை பெற மாட்டாது என்பதை மிகவும் சந்தோசத்துடன் தெரிய படுத்துகிறோம்.**
நீர் என்ன எனக்கு **சந்கூதல் * இல் இருந்து பரீட்சை வைக்காமல் exemption தர போறீரோ ?நீர் பிறந்து கை சூப்பி திரிஞ்ச காலங்களில் இந்த எதிர்கால முனிவர் தன தாய்க்கு பொய் சொல்லி காரைநகர் எங்கும் மார்கழி திருவெம்பாவைக்கு சங்கு ஊதின இளம் முனிவர் .
அதோடு ஆடை அணிகல வேஷமும் தேவை படாது .அக்காளின்றை சீலையை ஒளிச்சு எடுத்து கொண்டு போய் பொம்பிளை வேஷம் போட்டு விக்டோரியா மேடையில் நடித்தவர் இந்த இளம் முனிவர் மேடயில் பாடவோ அன்றில் அறிவிப்பாலனாகவோ அன்று இலங்கையின் பிரபல மெல்லிசை பாடகர்களையும் அறிமுகம் செய்து மேடைகளில் முழங்கியவன் இந்த இளம் முனிவர் .அதெல்லாம் நீங்கள் அறிய வாய்ப்பே இல்லை .அன்று நீங்கள் எல்லாம் கை சூப்பியல் .கொம்மா மார் தந்த அந்த ரப்பர் சூப்பியையும் தோளில் கொழுவி கொண்டு .**அம்மா பசிக்குது பால் தா ** என்று கேட்ட ஆக்கள் நீங்கள் .அது போல பல வேஷங்கள் தரித்தவர் இந்த இளம் முனிவர் ..சரி பழைய கதையை விட்டு போட்டு பேரை இப்பிடி வைப்போம் **மனோஹர முனி ** .உனக்கும் அது பெரும் பெருமை அல்லே .இன்னார் உந்த முனிவர் என்ரை பேரன் என்று சொல்வதில் .


சிரித்திரன்

11-10-2014 11:55

இந்த கதைக்கு ஓர் கதையை சொல்லிபோட்டு பிறகு பார்ப்போம் யார் தப்பான வழியை காட்டியதென்று,
கதை:
ஒரு நதியில் முதலை தன துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்
.
ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை! தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது

ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று! திடீரென ஒரு ஆசை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீடிற்கு விருந்துக்கு அழைப்போம்... அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூடியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம், சந்தோசம்...!

அடுத்த நல்ல ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.

நடு ஆற்றில் சென்றுகொண்டிருக்கும் பொது ஆண் முதலை கூறியது "ஏன் இப்போ என வெடுக்கு போறோம் ன்னு தெரியும் ன்னு கேட்டது"

அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே ன்னு சொன்னது.

முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னைகூட்டிகிட்டு போறேன் ன்னு கூறியது.

சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

சற்று யோசித்த குரங்கு... அடடா என்ன நண்பா இத முன்னாடியே சொல்லகூடாத? நேத்து நான் என இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருக்கு ன்னு கூற

முதலையும் அப்படியா வாய் திரும்பி பொய் எடுத்துகொண்டு வருவோம்னு திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலிடம் கூறியது...! முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொள்ள பார்கிறாயான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி போடுசுசாம்.

----------------
இந்த நேரத்தில் தான் சகுந்தலை முதலையிடம் மாட்டி இருக்கிறா.
நீதி: எல்லாத்துக்குமே காரணம் இதயம் இதயம் இதயம்.


மனோகரன்

11-10-2014 15:22

****இந்த நேரத்தில் தான் சகுந்தலை முதலையிடம் மாட்டி இருக்கிறா.
நீதி: எல்லாத்துக்குமே காரணம் இதயம் இதயம் இதயம்.*****

கழகம் கலைக்க பட்டாலும் கழகத்தின் மூத்த சிரேஷ்ட அதி சிறப்பு மிக்க கவுரவ அங்கத்தவர் வந்துவிட்டார் இங்கே கருத்து கூற .ஆமை தன் கழுத்தை ஓட்டுக்குள் இழுத்து ஓடி மறைந்து இருக்குமா போல .வேட்டைக்காரர் அது எதோ கல்லு என நினைத்து உழக்கி போட்டு போய் விடுவார்கள் .
ஏன் உமக்கும் வேலை பளுவோ இல்லை Economical crisis பொருள் ஆதார நெருக்கடியோ அன்றில் ஆலி பாணம் கீதி போட்டாவோ நானறியேன் ஒன்றும் .இருந்தும் கன காலத்துக்கு பிந்திய மீள் வருகை நன்றே .
உமது கருத்தில் அடியில் உள்ள அந்த சகுந்தலையின் பெயர் கண்டதும் **சகுந்தலை வெண்பாவின் *திசை நோக்கி என்மனம் ஓடியது .அதன் Impact தான் இந்த கருத்து .அன்று ஒரு திரை படத்தில் ஒரு பாடல் காட்சி .சீர்காழி கோவிந்த ராசனின் கண்ணீர் குரலில் ஒரு நாட்டிய நாடகம் இவ்வாறு
**காளிதாச மகா காவியம் கன்னி சகுந்தலை எனும் ஓவியம்
தோழியர் எனும் மான்கள் நடுவிலே தூய மானென பள்ளி கொண்டனள்
மன்னன் துஷ்யந்தன் மான் வேட்டை ஆட வந்ததில் வந்தானாம்
வனத்து மான்களை துரத்தி வந்தவன் இந்த மான்தனை கண்டதும்
மையல் கொண்டனன் .கண்ணோடு கண்ணினை நோக்கியதும்
மன்னவன் தனை இழந்தான் .இவள் சகுந்தலையும் தனை மறந்தால்
அவனே நினைவானாள் .அவனே கனவானால்
அந்தி படுகின்ற வேளை ஆனதால் அவள் அங்கம் சிவந்திருந்தாள்
அலுவல் எல்லாம் முடிஞ்சு போறா அவ மோதிரத்தையும் வேண்டி கொண்டு
பங்கினை துர்பாஷ முனிவர் தம் தவ சாலை நோக்கி
எங்கையடி போவிட்டு வாறாய் என்னடி உனக்கு நடந்தது
எண்டு ஒரு கேள்வி ஞாயம் இல்லை
பாட்டு இப்பிடி போகும்
துடிக்கின்ற சினமே தன் துணையாய் கொண்ட துர்பாஷ முனிவர்
தம் தவம் முடித்து கொடிககின்ர சோலை நோக்கி வந்தாராம்
யாரங்கே ? யாரங்கே என்று குரல் கொடுத்தாராம்
அவர் முனிவர் அல்லே .எல்லாம் ஐந்தவர் .பின்னை பாட்டு இப்படி
எந்த எண்ணம் உனை வென்றதோ அதனை இன்று தீர்த்து விடுகின்றேன்
எந்த நாளும் அவன் சொந்த மாவதில்லை என தீர்த்தம் அள்ளி விடுகின்றேன்
மறந்து போ ..மறந்து போ ..துஷ்யந்தா இவளை நீ மறந்து போ .....
எண்டு கயிலை உள்ள அந்த லோட்டா மாதிரி ஒரு தண்ணி சொம்பிலை
உள்ள தீத்தத்தை எடுத்து விசிறி எரிய துஷியந்தனும் சகுந்தலையை
மறக்க பிறகு சகுந்தலை பாவம் துஷியந்தன் குடுத்த அந்த மோதிரத்தை
துரை அப்பா கடையிலை அடைவு வைச்சு காலத்தை போக்கினாவாம்


சிரித்திரன்

12-10-2014 05:48

துஷ்யந்தன், சகுந்தலை கதை அந்தமாதிரி! அதுக்குள்ள துரையப்பா கடையை புகுத்தியது ஆகா. இதை படிக்கேக்க நான் ரசித்து சிரித்து மகிழ்ந்த ஒரு பதிவு. வாசிச்சு பாருங்கோ.
-----------------------------------------------------------------------------------------------
துஷ்யந்தன், சகுந்தலை விவகாரத்தில் உண்மையாகவே என்னதான் நடந்ததாம்?
நம்ம நாடோடி இருக்காரே, அவருக்குன்னு அற்புதமான சந்தேகங்களெல்லாம் தோன்றும்.. அவர் சாகுந்தலத்தையும் விட்டு வைக்கவில்லை. அதையும் என் நினைவிலிருந்தே எழுதுவேன்.

சொர்க்கத்தில் கவி காளிதாசனுக்கு ரொம்பவும் புகழ். அவனது காவியங்களை அவன் வாயாலேயே பாடிக் கேட்பதில் இந்திரனுக்கு மிக்க மகிழ்ச்சி. அப்படித்தான் பாருங்கள், அன்று சாகுந்தலத்தின் காட்சிகளை சுவைபட கூறிக் கொண்டு வருகையில், எதிர்பாராத விதமாக முன்கோபத்துக்கு பிரசித்தி பெற்ற துர்வாச மகரிஷி இந்திர சபைக்கு வந்து பிரவேசிக்கிறார். காளிதாசன் திடுக்கிடுகிறான். பாவம் அவன், அப்போதுதான் சகுந்தலை தன் காதலன் நினைவாக இருந்த கோலத்தில் அதிதியாக வந்த துர்வாசரை கவனியாது போக, அவரும் கோபமுற்று, "நீ யார் நினைவால் என்னை கவனியாது மறந்து போனாயோ, அவன் நினைவிலிருந்து நீ மறையக் கடவாய்" என சாபமிட, அதை கவனித்த சகுந்தலையின் அண்ணன் சாரங்கனின் மனைவி பிரியம்வதா பதறிப் போய் முனிவரிடம் சாப விமோசனம் யாசிக்க, அதற்குள் கோபம் தணிந்த துர்வாசர், "சாபம் இட்டது இட்டதுதான், ஆனால் சகுந்தலையின் விரலில் துஷ்யந்தன் காந்தர்வ விவாகத்துக்கு அறிகுறியாக இட்ட அந்த கணையாழி அவள் கையில் இருக்கும் வரை என் சாபம் காத்திருப்பில் இருக்கும். அது தொலைந்தால் துஷ்யந்தன் அதை மறந்து விடுவான், ஆகவே சகுந்தலையிடம் சாபத்தைப் பற்றி கூறாது மோதிரத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்படி வேண்டுமானால் கூறிக் கொள்" என்று கூறிவிட்டு அகல்கிறார்.

இப்போது காளிதாசனுக்கு தர்மசங்கடமான நிலைமை. நாடோடி மேலே இவ்வாறு எழுதுகிறார்:

இந்திரன்: வாருங்கள் துர்வாச மகரிஷி அவர்களே. ஆசனத்தில் அமருங்கள்.

துர்வாசர்: சரி, சரி. மங்களம் உண்டாகட்டும் தேவேந்திரா. (கண்ணை இடுக்கிக் கொண்டு பார்க்கிறார்), யார் அது காளிதாசனா, என்னப்பா சௌக்கியமா?

காளிதாசன்: (மென்று விழுங்கியவாறு) வணக்கம் மாமுனிவரே. இந்திரரே, நான் விடை பெறுகிறேன், பிறகு வருகிறேன்.

துர்வாசர்: இரப்பா, காளிதாசா? ஏன் இப்படி பம்முகிறாய்? என்னமோ இந்திரனுக்கு படித்து காட்டிக் கொண்டிருந்தாயே, என்ன அது?

காளிதாசன்: சாகுந்தலம் நாடக காவியம் மகாபிரபோ.

துர்வாசர்: அடேடே, நானும் கேள்விப்பட்டிருகிறேன். நாடகத்தை எழுதியவனே படித்து காட்டுவது என்பது என்ன அரிய செயல். நானும் கேட்கிறேன். நான் வரும்போது எங்கு நிறுத்தினாயோ, அங்கிருந்தே ஆரம்பி.

காளிதாசன் அழமாட்டாக் குறையாக ஆரம்பிக்கிறான்.

சகுந்தலை தன் கணவன் துஷ்யந்தனை எண்ணி படுத்திருக்கிறாள். வெளியே துர்வாச மகரிஷியின் குரல்:

துர்வாசர்: அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன்.

சகுந்தலை காதில் வாங்காது தன் காதல் கணவனை நினைத்து படுத்திருக்கிறாள்.

துர்வாசர்: (கோபத்துடன்) அறிவற்ற பெண்ணே, என்னையா அலட்சியம் செய்தாய், யாருடைய எண்ணத்தில் இதை செய்தாயோ, அவன் உன்னை மறந்து போகக் கடவது.

காளிதாசன் இதை படிக்கக் கேட்ட துர்வாசர் கண்களில் நெருப்புப் பொறி பறக்கிறது.

துர்வாசர்: நிறுத்து துஷ்டனே. இது என்ன அபாண்டம். நான் அந்தக் குழந்தையை சபித்தேனா? நடக்காத கதை எழுதி என்னை அவமதித்து விட்டாய். பிடி சாபம்.

இந்திரன் (பதறிப் போய்): பொருத்தருள வேண்டும் மகரிஷே.

துர்வாசர்: (இன்னும் கோபம் தணியாது): இல்லாததை கூறினால் எப்படி பொறுப்பது? நான் கோபக்காரன் என்பதை ஒத்து கொள்கிறேன். அதுக்காக இப்படியா? இம்மாதிரி அக்குழந்தை தன் கணவனை எண்ணியுள்ளாள் என்பதைக்கூட தெரிந்து கொள்ளாது நான் இப்படி முட்டாள்தனமான சாபம் கொடுப்பேனா? இது என்ன சிறுபிள்ளைத்தனமா இருக்கு. அடேய் காளிதாசா, உண்மையில் என்ன நடந்தது என்பதை கேட்டறியாமல் நீ எப்படி இதை எழுதலாம்?

காளிதாசன் (சற்றே அசட்டு தைரியத்துடன்): அதை அறிவேன் முனிசிரேஷ்டரே. வேண்டுமானால் துஷ்யந்தனையே வரவழைத்து கேட்டு விடலாமே.

அப்படியே இந்திரன் துஷயந்தனையும் சகுந்தலையையும் வரவழைக்கிறான்.

துர்வாசர்: துஷ்யந்தா, நீ ஏன் சகுந்தலையை மறந்தாய்?

துஷ்யந்தன் (திடுக்கிட்டு): இதென்ன புதுக்கதை, நான் எங்கே அவளை மறந்தேன்? அவள் என் காதல் மனைவியல்லவா?

இந்திரன்: பின்னே ஏன் பரதன் காட்டில் தனியாக தன் அன்னையுடன் வசித்தான்?

துஷ்யந்தன்: வேறு ஒன்றும் இல்லை. நானோ அரசன், சகுந்தலையோ அரச குடும்பத்தை சேராத பெண். ஆகவே நாட்டு மக்கள் அவளை ராணியாக ஏற்று கொள்ள சமயம் தேவைப்பட்டது. அதனால்தான் அவளை தனியாக குடித்தனம் வைத்தேன். அவ்வப்போது வந்து போய் கொண்டிருந்தேன். பிறகு மந்திரி பிரதானிகள், அரசவை உறுப்பினர்கள் ஆகியோரது மனதை மாற்றி சகுந்தலையை அரண்மனைக்கு வரவழைத்தேன். அதற்கு சில ஆண்டுகள் பிடித்தன, அவ்வளவுதான்.

துர்வாசர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்கிறார்.

துர்வாசர்: என்னப்பா காளிதாசா, இந்த திருப்பம் எனக்கே பிடிக்கவில்லையே, உன் கற்பனையே நன்றாக இருக்கும் போலிருக்கே. ஆகவே அப்படியே இருக்கட்டும் எனக்கு ஆட்சேபணை இல்லை.

துஷ்யந்தன்: வேண்டுமானால் சபித்த முனிவரின் பெயரை வேண்டுமானால் மாற்றி விடட்டுமா?

துர்வாசர்: வேண்டாம், அப்படியே இருந்து விட்டு போகட்டும். நானும் காளிதாசனின் காவியத்தில் ஒரு பாத்திரம் என்பதும் எனக்கு கௌரவமே.

காளிதாசன் மறுபடியும் ஆரம்பிக்கிறான்:

"அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன். அதிதி வந்திருக்கிறேன்". துர்வாசரின் சாபம் இடம்பெற, அவையில் உள்ள எல்லோரும் (துர்வாசர் உட்பட) உச் கொட்டுகின்றனர்.

மீண்டும் டோண்டு ராகவன். இப்பதிவை போடும்போது, திடீரென ஒரு பயங்கர சந்தேகம் வந்தது. அதாவது சகுந்தலையின் அண்ணன் மனைவியின் பெயரில் சந்தேகம். பிரியம்வதா என்றுதான் ஞாபகம். இருந்தாலும் சரி செய்து கொள்ள நண்பர் இரா. முருகனுக்கு ஃபோன் செய்தேன். அவர் கேட்டு சொல்வதாகக் கூறினார். ஸ்டெல்லா மேரீஸ் காலேஜில் பொருளாதாரப் பேராசிரியையாக இருக்கும் என் தங்கைக்கு ஃபோன் செய்து கேட்க, அவளும் அக்கல்லூரி வடமொழி பேராசிரியரை கேட்டு பிரியம்வதாதான் என உறுதி செய்தாள். இந்த விஷயத்தை முருகன் அவர்களுக்கு ஃபோன் செய்து தெரிவிக்க, அவரும் நேர்று இரவு வேறு ஒரு காண்டக்ஸ்டில் பிரியம்வதா என்ற பெயரைக் கேள்விப்பட்டதாகவும், இன்று அதே பெயரைக் கேட்பது ஒரு ஹைப்பர் லிங்க் போல உள்ளது என்று கூறினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


மனோகரன்

12-10-2014 14:47

சரி சரி இப்ப ஓடி வெளிச்சு விளங்கி போட்டுது .உது நான் அறிந்தகதைதான் .இருந்தும் இப்போ எனது மெமரி சிப் உம் பழைய வேசன் எண்டதாலை மறந்து போனன் .
அது சரி ஒரு இடத்திலை இவ்வாறு சொல்ல பட்டுள்ளது .

**(அப்ப ஏன் அந்த முனிவரால அவர்கள் கள்ளமாக கூடியதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று எல்லாம் கேக்க கூடாது) **

ஏன் நாங்கள் கேட்க படாதோ ? நாங்கள் என்ன ஓவர் ஏஜ் எண்டே உம்மடை நினைப்பு ?
மற்றது முனிவர்கள் என்றால் முற்றும் துறந்து முழுவதும் அறிந்தவர்கள் .அப்ப அவருக்கு உந்த **கள்ள உறவை கண்டு பிடிக்க முடியாமல் போனது எவ்வாறு ?அவரும் அரை குறை மெக்கானிக்கு மார் போல ஒரு அரை குறை முனி தான் போல .
நானும் இதுகளை வாசிச்சு அடிச்சு அனுப்பி அடைஞ்சு போட்டு (இண்டைக்கு சீனரின்றை இடியப்பம் --அதுதான் அந்த உங்கடை நூடிளிசு ) படுக்க போய் நித்திரை வருமட்டும் யோசினைகள் பல திசைகள் நோக்கி ஓடும் .ஒரு நாள் இப்படியும் யோசித்தேன் .நானும் பிறந்து வளர்ந்து இத்தனை வருடங்கள் வாழ்ந்து பிள்ளை குட்டியள் பெத்து பேர பிள்ளையளையும் கண்டு போட்டன் .இனி காணவேண்டியது பீட்ட பிள்ளையளை காண வேண்டியதுதான் மிச்சம் என்று யோசிக்க யன்னல் ஓரம் ஒரு அசீரி குரல் ஒன்று இவ்வாறு **தம்பி மனோஹரா கவலையை விடு .உவர் **சிரித்திரனின் பிள்ளைகள் உனக்கு ஒன்று விட்ட பூட்ட பிள்லைகலடா !!** என்று சொல்ல நான் யோசித்தேன் அது எவ்வாறு என்று ..ஓடி வெளிச்சுது விஷயம் என்ன என்று .அவரின் தாய் உனக்கு பொறா மோள் அல்லே? .அப்ப பொறா மோளின்றை மோன் உனக்கு ஒண்டு விட்ட பேரனடா !!அப்ப அவன்றை பிள்ளை குட்டியள் உனக்கு ஒண்டு விட்ட பூட்ட புள்ளையல் அடா மூதேவி என்று சொல்லி அசீரி ஒளிந்து போக நானும் யோசிச்சன் அதுகும் சரிதான் .**ஐ ஆம் ஏ லக்கி மான் **என்று நினைத்து நல்ல ஆழ்ந்த நித்திரை நின்மதியாக


சிரித்திரன்

12-10-2014 11:50

கௌதமாரால் சபிக்கப்பட்ட அகலிகை, ராமனின் பாதங்கள் பட்டு சாபவிமோசனம் பெற்றது அனேகமாக எல்லோருக்கும் தெரியும். அதாவது இந்திரன் அகலிகையின் அழகில் மயங்கி கௌதமர் போல் தோற்றம் கொண்டு அகலிகையுடன் கூடிய நேரம் கௌதமர் குடிசை திரும்ப பூனை போல் தோற்றத்துடன் பூனை மாதிரி இந்திரன் வெளிப்பட முனிவர்(ரா கொக்கா) அதை கண்டுபிடிக்க (அப்ப ஏன் அந்த முனிவரால அவர்கள் கள்ளமாக கூடியதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று எல்லாம் கேக்க கூடாது) அப்பாவி அகலிகைக்கு கல்லாக போகும் சாபம் கிடைக்க அவ அலுத்து குளறி ஒருமாதிரிரி சாப விமோசனம் வாங்கி ராமரின் கால் பட்டு(நல்ல காலம் கால் பட்டு என்ற விமோசனம் கிடைச்சது. இல்லாவிட்டால் அதுக்கும் ஏதேன கிளை க்கதை வந்திருக்கும்) மீளும் பாக்கியம் கிடைத்தது.
இனி இந்திரனுக்கு என்ன சாபம் கிடைத்தது என்று பார்த்தால் ஒன்றும் அறியாத அகலிகைக்கே அந்த சாபம் என்றால் இந்திரனுக்கு எப்பிடி சாபம் கிடைத்திருக்கும்? இங்குதான் நீங்கள் கேட்ட ஆயிரம் யோனி விடயம் வருகிறது.
ஆத்திரத்துடன் இந்திரன் பக்கம் திரும்பிய முனிவர் அவனை பார்த்து " நீ எதுக்காக ஆசைப்பட்டாயோ அந்த உறுப்பே உன் உடல் முழுவதும் ஆயிரம் தோன்ற கடவது" என்று சாபமிட்டார். பிறகென்ன சாபம் கிடைத்தால் அதற்க்கு விமோசனமும் உண்டெல்லே. இந்திரன் மன்னிப்பு கேக்க மனமிரங்கிய முனிவர் மற்றவர் கண்களுக்கு(மற்றவர் கண்களுக்கு மட்டும்) அந்த ஆயிரம் யோனிகள் கண்களாக தெரிய கடவது என்று விமோசனம் குடுத்தாராம். அதனால் தான் இந்திரனுக்கு ஆயிரம் தாமரை கண்ணன் என்ற பெயர் வந்தது.
பி.கு.: இந்திரன் மன்மதனை விட கில்லாடி போல கிட


மனோகரன்

12-10-2014 08:23

ஐயகோ என் பேரா இது இன்னா பதில் கருத்து .அத்தனை அற்புதம் ..துரையப்பா கடை +
சகுந்தலையையும் ஜோஇன்ட் பண்ணி நான் எழுதியது உன்னை கவர்ந்ததாக நீ எழுதினாய் .அது எனது ஸ்டைல் .ஆனால் நீ எழுதி உள்ளதை வாசித்த பின் என் மூளை இப்படி ஜோசிச்சுது எப்பிடித்தான் உவன் எல்லாம் இப்பிடி எழுதி தள்ளுகிரனோ என்று யோசிக்கையில் எனது சிறு மூளையின் இடது பக்கத்தில் ஒரு பொறி தட்டி இவ்வாறு சொன்னது .அந்த ஏரியா தான் மூளையில் CID வேலைக்கு பொறுப்பான ஏரியா .உவன்றை தாயும் தேப்பனும் சட்டம்பி மாரடா .பிறகு உவனுக்கு சின்ன வயதில் இருந்தே நல்ல வாசிப்பு பழக்கம் .(அங்கினை தேர்முட்டி படியிலை கூட்டாளி மாரோடை அறுவையளும் நடந்தது தான் .நாங்களும் அறுத்த ஆக்கள் அல்லே )
இன்று எவ்வளவுதான் இலத்திரன் இயல் சாதனங்கள் (கொம்பிலீட்டார் /இந்திரன் நெட்டு /முகநூல் ) இருந்தாலும் வாசிப்பது போல் ஒன்றும் இல்லை .வாசிப்பு ஒரு மனிதனை பூரணம் ஆக்கும் என்று சும்மா சொலேல்லை .அவன் அன்று வாசித்த அகிலன் /சாண்டில்யன் /கல்கி சதாசிவம் போன்றோரின் எழுத்துகளை வாசித்த வாசிப்பின் தாக்கம் (impact ) இங்கு புரிகிறது .பின் சகுந்தலை /துஷ்யந்தன் /முனிவரின் கதையுடன் இந்திரனையும் கொழுவி இருக்க நான் நினைத்தேன் இந்திரனுக்கும் எத்தனையோ யோனிகள் உண்டாகாடும் என்று சபித்த விடயம் பற்றி சொல்ல போகிறான் போல என்று நினைத்து வாசிச்சு கொண்டு போனால் அது வேறு திசை நோக்கி நகர்ந்து இறுதியில்

***இருந்தாலும் சரி செய்து கொள்ள நண்பர் இரா. முருகனுக்கு ஃபோன் செய்தேன். அவர் கேட்டு சொல்வதாகக் கூறினார். ஸ்டெல்லா மேரீஸ் காலேஜில் பொருளாதாரப் பேராசிரியையாக இருக்கும் என் தங்கைக்கு ஃபோன் செய்து கேட்க, அவளும் அக்கல்லூரி வடமொழி பேராசிரியரை கேட்டு பிரியம்வதாதான் என உறுதி செய்தாள். இந்த விஷயத்தை முருகன் அவர்களுக்கு ஃபோன் செய்து தெரிவிக்க, அவரும் நேர்று இரவு வேறு ஒரு காண்டக்ஸ்டில் பிரியம்வதா என்ற பெயரைக் கேள்விப்பட்டதாகவும், இன்று அதே பெயரைக் கேட்பது ஒரு ஹைப்பர் லிங்க் போல உள்ளது என்று கூறினார். ***

என்று முடித்து போட்டார்

இஞ்சை வாடா என்ரை ராசா /என்ரை குஞ்சு .(இது எங்கடை ஊர் பெண்டுகள் போடுகிற மாயம் .அவையின்றை ஆடு மாட்டுக்கு தவிடு புண்ணாக்கு வேண்ட பண்டதேருப்புக்கு போக ஆக்கள் இல்லாட்டில் பக்கத்து வீடு பொடிக்கு போடுகிற மாயம் உது ) உந்த இந்திரானுக்கு ஆரோ ஒரு முனிவர் சாபம் இட்டு அவருக்கு ஆயிரம் யோனிகள் எண்டு எங்கையோ படித்த ஞாபகம் .அதையும் ஒருக்காய் எழுதடா பொடி .எனக்கும் இப்ப வயது போய் மறந்து போனன் பல மாட்டருகளை .


சிவா மோதரை

11-10-2014 04:53

நல்ல கருத்து மிக்க விடயம் .நன்றி .


manoharan

13-10-2014 05:43

**இந்திரன் மன்மதனை விட கில்லாடி போல ** கில்லாடியோ /புல்லாடியோ எனக்கு தெரியாது .ஆனால் உறவு முறை ரண்டு பேரும் சகலன் மார் .எப்படி என்றால் மன்மத ராசன்றை wife ரதி தேவியும் .இந்திரன்றை சின்ன வீடு அகலிகையும் அக்கா தங்கை மார் .அப்ப ரண்டு பேரும் சகலன் மார் அல்லே .தேவ லோகத்திலை ரண்டு பேரும் ஒண்டாய் ஒளிச்சு கள்ளுக்கு போறவையாம் புளுக்கொடியலும் கொண்டு .கள்ளு வாய்க்கு சப்ப .ரண்டு பேரும் வலு ஒட்டு கண்டியலே .


சிரித்திரன்

13-10-2014 14:28

முதலையில் தொடங்கி மன்மதன் வரைக்கும் வந்தாச்சுது. மன்மதன் கதை ஒன்றையும் பாப்போம்,
--------------------------------
சிவனின் கடும் கோபத்திற்கு ஆளாகும் நிலை மன்மதனுக்கு ஏற்பட்டுவிடுகிறது, மன்மதன் அவன் கடமையை மட்டும் செய்கிறவன். அதாவது காதலை பிறரின் மனதில் உண்டாக்குவதே அவன் தொழில். ஆழ்ந்த நிஷ்டையில் இருக்கும் சிவனைத் தழுவ முடியாத நிலையில், தேவி பார்வதி மன்மத ராஜனை சிவனின் தவம் கலைக்க வேண்டுகிறாள். மன்மதன் தன் தொழிலை எப்பொழுதும் செய்வது போல் சிவனின் மார்பு மீது தனது காமபானத்தை விடுகிறான். நிஷ்டை கலைந்த சிவபெருமான, பார்வதியிடம் செல்லாது தன் தவத்தைக் கலைத்த மன்மதனை தன் மூன்றாவது கண்ணால் எரித்து விடுகிறான்.

அதனால் உயிர்கள் அனைத்தும் யாரையும் காதலிக்கும் திறனையும், புலனையும் இழந்திருந்தனர். தன் காதலனை இழந்த ரதி சிவனிடம் சென்று முறையிட்டு தன் காதலனை திருப்பித் தருமாறு வேண்டுகிறாள். இறுதியில் அவளது போராட்டம் வெல்கிறது, எல்லோரும் தொடர்ந்து காதலித்து கொள்ள மீண்டும் வழி கிடைத்து விடுகிறது. ஆனால் ஒரு நிபந்தனை சிவனிடமிருந்து.


ரதி மயில் வாகனத்தில்- காஞ்சி
காமாண்டியாகக் கொண்டாடப்படும் மன்மதன் மீது அளவில்லாத காதல் வயப்பட்ட ரதிதேவி சிவனிடம் தன் காதலனை உயிர்பித்து தரச் சொல்லி மன்றாடிக் கேட்கிறாள். ரதியின் தவத்திற்கு இசைந்த கடவுள் மனமதன் உயிர்த்தெழுவான் என்றும், ஆனாலும் அவன் அவள் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்று சிவன் விமோச்சனம் அளிக்க கதை முடிகிறது.


மனோகரன்

13-10-2014 17:56

நல்ல வேளை உந்த சீனிலை ஒண்டில் சிவன் ரதியோடையோ இல்லை ரதி சிவநோடையோ ரூட் மாறி மன்மத பாணங்கள் வீச பட்டிருந்தால் கேஸ் பெரும் சிக்கலிலை போய் தான் முடிஞ்சிருக்கும் .தப்பி தவறி பாறுவதி அதை அறிய அவ கோவம் கொண்டு கோட்டுக்கு போக விவாக ரத்து கோரி வழக்கு வைக்க நடுவில் நாரதர் வர அப்பப்பா அதெல்லாம் பெரும் சிக்கல்கள் .எதோ ஸ்மூத் ஆய் முடிஞ்சது நல்லம் அப்பா .இல்லாட்டில் நாங்கள் சமய பாடத்துக்கு உந்த தலை இடியையும் விடிய வெள்ழன்னை எழும்பி பாடமாக்க வேணும் .தப்பி விட்டோம்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி