காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

சனிப்பெயர்சிப்பலன் 2014: மிதுனம்.


நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -
16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை
கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்
பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட
காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.

சனி பெயர்ச்சியின் காரணமாக பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படக் கூடிய பொதுப் பலன்களை, கிரகநிலைகளின் துணைக்கொண்டு ஆராய்ந்து சொல்கின்றார், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்;
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast).

அவரது கணிப்பில் பன்னிரு ராசிகளுக்ககுமான விரிவான பலன்கள் இங்கு தொடர்ந்து பதிவாகும். இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. ஒவ்வொரு ஜாதகருக்குமான தசாபுத்தி நிலைகளின் அடிப்படையில், அவர்களது
நிகழ் பலன்களில் மாற்றங் காணலாம்.

மிதுனம்: மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்
மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

நன்றாக சிந்தித்து செயல்பட்டு வேலையை செவ்வனே முடிக்கும் மிதுன ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில்
ஞானத்தை வாரி வழங்கும் புதனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.
மற்றவர் மனம் நோகாமல் சாமர்த்தியமாக
பேசும் ஆற்றல் உடையவர்கள்.

கிரகநிலை:
இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி ரண ருண ரோக ஸ்தானத்திற்கு
மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது அயன சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக
உங்களது தைரிய வீரிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும்
பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் நிலை:

குரு:
சனி மாறும் போது குரு உங்களது தைரிய வீரிய ஸ்தானத்தில் இருக்கிறார். குரு தனது பஞ்சம பார்வையால் உங்களது
களத்திர ஸ்தானத்தையும், தனது சப்தம பார்வையால் உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், தனது ஒன்பதாவது
பார்வையால் உங்களது லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

ராகு:
சுகஸ்தானம் கன்னி ராசியில் இருக்கிறார். ராகு தனது மூன்றாம் பார்வையால் உங்களது தன வாக்கு குடும்ப
ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்
உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

கேது:

கேது தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேது தனது மூன்றாம் பார்வையால் உங்களது அஷ்டம
ஆயுள் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது சுகஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால் உங்களது
அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

எதை எடுத்தாலும் காரியத்தடை, மனைவி பிள்ளைகள் நண்பர்களுடன் வாக்குவாதம், வீண் பணவிரயம் என்றிருந்த
காலம், மாறும் நேரம் வந்துவிட்டது. அதிரடியான திட்டங்கள் மூலம் இழந்ததை மீட்க வழியைப் பாருங்கள். நீங்கள்
எடுத்த காரியம் ஜெயமாகும் காலமிது. வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் இருந்த சிற்சில பிரச்சினைகள் தீரும்
காலமிது. பிள்ளைகள் தங்கள் சொற்படி கேட்டு நடப்பார்கள். அதனால் சமுதாயத்திலும், உறவினர் மத்தியிலும் உங்கள்
மதிப்பு கூடும் காலமிது. கடந்த 21/2 ஆண்டு காலமாக உங்களிடம் போயிருந்த கம்பீரம் மீண்டும் வரும் நேரமிது.

தங்களது குடும்ப வருமானம் செலவு சரியாக இருந்தது இல்லையா, இனி இது மாறும். சுபகாரியங்கள் பல நடக்கும்.
தடைபட்டிருந்த திருமணம் மற்றும் பிள்ளைப்பேறு தடை நீங்கும் காலமிது. ஆடை அணிகலன்கள் சேரும் காலமிது.
பிரிந்து போயிருந்த நண்பர்கள் ஒன்று சேரலாம் எனவே நீங்கள் சற்று இறங்கி வாருங்கள். புண்ணிய ஸ்தல பயணம்,
வெளிநாட்டு பயணம் தங்களைத் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்களைப்
பார்த்து ஒப்படையுங்கள், வெற்றி வரும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் போது வாழ்க்கைத்துணையிடம்
கருத்து கேட்டுக் கொள்ளுங்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பார்ட்னரை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில்
இருந்த சுணக்க நிலை மாறும். மேலதிகாரிகளின் பேராதவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கமிஷன்,
ஏஜண்ட், காண்டிராக்ட் போன்ற வேலைவாய்ப்பு தேடிவரும்.

கல்வியைப் பொருத்தவரை இதுநாள் வரை இருந்த சுணக்க
நிலை மாறும். இருந்த போதும் ஒருமுறைக்கு மீண்டும் ஒரு முறை படிப்பது நல்லது. கவிதை, கட்டுரை, ஓவியம்
போன்ற கலைகளை கற்றுக்கொள்ள இது ஒரு வாய்ப்பான காலம். அறிவியல், தொழில்நுட்பம் பயில்பவர்களுக்கு நல்ல
காலமிது, பயன்படுத்திக் கொள்ளுங்கள். நண்பர்களுடன், உறவினர்களுடன் பல நாட்கள் சந்தோஷ சம்பவங்கள்
நடைபெறும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு பதவிகள் தேடிவரும் காலமாக இந்த காலம் அமைந்துள்ளது.
மக்களிடம் செல்வாக்கு பெறவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் முயற்சி செய்யுங்கள். வயிற்று வலி
பிரச்சினைகள் நீங்கும். உடல்நலம் நன்றாகவும், சிறப்பாகவும் இருக்கும். இருந்தாலும் வாத, நரம்பு சம்பந்தப்பட்ட
நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது. மருத்துவ செலவினம் இல்லாத காலமாகவே இருக்கும். பொதுவாக மறைந்திருந்த
புண்ணியங்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மிருகசீரிடம் 3 - 4: உங்களுக்கு நல்ல பலன்கள், நல்ல முறையில் வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம், வழக்கு
வியாஜ்ஜியங்களில் வெற்றி என நற்பயன்கள் வந்து சேரும் காலமிது. தாய்தந்தையரை வணங்கி எந்த காரியங்களையும்
ஆரம்பியுங்கள், வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

திருவாதிரை: உத்தியோகத்தில் பதவிஉயர்வு, இடமாற்றம், பணியாளர்கள் ஆதரவு, மேல்மட்ட அதிகாரிகளின் ஆதரவு என
நல்ல பலன்கள் ஏற்படும். சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்ரீ
மஹாலக்ஷிமி காயத்ரி சொல்லி, வணங்கிவிட்டு காரியங்களை ஆரம்பியுங்கள்.

புனர்பூசம் 1 - 2 -3: நேரம் கிடைக்கும் போதெல்லாம் உழையுங்கள், அது ஒன்றே உங்களது பலம். அரசாங்க அனுகூல்யம்
கிடைக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை அணிகலன்கள் சேரும். ஆதிதயஹ்ருதயம் சொல்லுங்கள்.
ஆதித்யனின் அருளால் அனைத்தும் நடக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் பாடல் பெற்ற
ஸ்தலங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்பணியுங்கள்,
அவர் எல்லாவற்றையும் சீராக நடத்திவைப்பார்


மொத்த வருகை: 180 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி