காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

சனிப்பெயர்ச்சிப்பலன் 2014: ரிஷபம்.


நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -
16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை
கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்
பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட
காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.

சனி பெயர்ச்சியின் காரணமாக பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படக் கூடிய பொதுப் பலன்களை கிரகநிலைகளின் துணைக்கொண்டு ஆராய்ந்து சொல்கின்றார், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்;
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast).

அவரது கணிப்பில் பன்னிரு ராசிகளுக்ககுமான விரிவான பலன்கள் இங்கு தொடர்ந்து பதிவாகும். இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. ஒவ்வொரு ஜாதகருக்குமான தசாபுத்தி நிலைகளின் அடிப்படையில், அவர்களது
நிகழ் பலன்களில் மாற்றங் காணலாம்.

ரிஷபம்:கார்த்திகை- 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ,ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

கிரகநிலை:
இதுவரை உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது ராசியையும், பத்தாம் பார்வையாக உங்களது சுகஸ்தானத்தையும், தனது
மூன்றாம் பார்வையால் உங்களது பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் நிலை:
குரு:
சனி மாறும் போது குரு உங்களது சுகஸ்தானத்தில் இருக்கிறார். குரு தனது பஞ்சம பார்வையால் உங்களது ஆயுள்
ஸ்தானத்தையும், தனது சப்தம பார்வையால் உங்களது தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தையும், தனது ஒன்பதாவது
பார்வையால் உங்களது அயன சயன போகஸ்தானத்தையும் பார்க்கிறார்.

ராகு:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் கன்னி ராசியில் இருக்கிறார். ராகு தனது முன்றாம் பார்வையால் உங்களது தைரிய
வீரிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது லாப ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால் உங்களது
களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

கேது:
கேது லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேது தனது மூன்றாம் பார்வையால் உங்களது பாக்கிய ஸ்தானத்தையும்,
ஏழாம் பார்வையால் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால் உங்களது
ராசியையும் பார்க்கிறார்.

பலன்:
கவர்ச்சிகரமான தோற்றமும் உள்ளப் பொலிவும் கனிவான பேச்சும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே. நீங்கள்
நவக்கிரகங்களில் அள்ளிக் கொடுக்கும் வல்லமை கொண்டவர்
என்று போற்றப்படும் சுக்ரனை ஆட்சி நாயகனாக
கொண்டவர்கள்.
இனிமையாக பேசுவீர்கள்.

இது வரை 6வது ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி ஸப்தமஸ்தானத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு
என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.
இதுவரை தீராத பிரச்சனை, முடிவெடுக்க முடியாமல் குழப்பம், மருத்துவச் செலவுகள் என இருந்ததல்லவா, இனி அந்த
நிலை மாறும். கணவன் - மனைவிக்குள் எந்த பிரச்சனையானாலும் மனம் விட்டு பேசி உங்கள் பிரச்சனைகளை
நீங்களே முற்றுப்புள்ளி வையுங்கள். மூன்றாம் மனிதரின் தலையீடு வேண்டாம். பிள்ளைகளின் உணர்விகளுக்கும் இடம்
கொடுங்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடல்நிலையிலும் அக்கறைசெலுத்தவும். தலைவலி மற்றும் வாயு
சம்பந்தமான நோய்கள் வந்து குணமாகும். பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டடரத்தில் மதிப்பு, மரியாதை
உயரும். எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம். அரசு விஷயாதிகளில்
நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிக்கவும்.

புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிரியமானவர்களிடம்
அடிக்கடி உரையாடுங்கள். சொத்து சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். தாய் மற்றும் தாய்
வழி உறவினர்களிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகும். அலைச்சகள் நிறைந்த பயணங்கள் நிரம்ப இருக்கும்.
பணத்தட்டுப்பாடு குறையும். தியானம் யோகா போன்றவற்றில் மனம் செலுத்துங்கள். முடிந்த வரை இரவு நேர
பயணங்களை தவிருங்கள். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் முடிவடையும். பல சுபகாரியங்களில் கலந்து
கொள்வீர்கள்.

வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள். கொடுக்கலில் வாங்கலில் கவனம்
தேவை. கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது. பங்குதாரர்களை அனுசரித்து போகவும். நம்பிக்கைக்கு
உரியவர்களிடம் ஆலோசனைகள் பெற்று காரியங்களில் இறங்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு
கிடைக்கும். சம்பளம் உயரும். இடமாறுதல் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.

மணமாகாதவர்களுக்கு மணமாகும். சுச்செலவுகள் இருக்கும். குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். வீடு,
வாகனம், மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த
கவனமாக செயல்படவும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு உயர்கல்வி
கிடைக்கும். நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம் முயற்சி செய்தால் அள்ளலாம். கலைஞர்கள் விருதுகள் பெறுவார்கள்.
மொத்தத்தில் சகிப்புத்தன்மையையும், தன்னடக்கத்தையும் தருவதாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.
நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

கார்த்திகை 4 : உங்களுக்கு ஏற்றத்தையும், பொலிவையும் கொடுக்கும் காலமிது. வெளியூர் பயணங்களால் அனுகூல்யம்
உண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியையும் மகான்களையும் வியாழக்கிழமைகளில்
தரிசனம் செய்து வாருங்கள்.

ரோகினி : ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் தடைகள் விலகும். எதிரிகளின் பலம் என்ன என்று உங்களுக்கு
தெரிய வரும். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். அனுமன் காயத்ரியை சொல்ல சொல்ல
வாழ்வில் இனிதே நடக்கும்.

மிருகசீரிடம் 1 - 2 : உடல்நலம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வும் இடமாறுதலும் கிடைக்கும். பொருளாதார நிலை
சிறப்பாக இருக்கும். கலைஞர்களுக்கு இது சிறப்பான காலம். ஸ்ரீமுருகனை ஆராதனம் செய்தால் எல்லா நலமும்
கிடைக்கும்.

பரிகாரம்:
வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை வெண் மொச்சை
சுண்டல் செய்து வழங்கவும்.
வெள்ளிக்கிழமை தோறும் மல்லிகை மலரை பெருமாளுக்கு சாத்தி வழிபடவும். பெருமாள்
கிருபையால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.


மொத்த வருகை: 232 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (2)


மலர்

19-10-2014 17:14

தனுசு இராசி அன்பர்களே

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு வரப்போகிறார். “ஏழரை சனி பிடித்தது” என்று பயம் வேண்டாம். ஜென்ம-சுகாதிபதியான குருவின் ஆதிக்கமான விசாகம் நட்சத்திரத்தில் சனி வருவதால், ஏழரை சனி பாதிப்பு ஒன்றும் செய்யாது. பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சொத்துக்கள் வாங்கச் செய்யும். வாக்கு பலிதம் உண்டாகும். மனைவியால் யோகம் உண்டு. திருமணம் நடைபெற வாய்ப்பு வரும். குடும்பத்தில் சச்சரவு நீங்கும். வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு வரும். பல நாட்களாக நிலுவையில் இருந்த கடன் தீரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்து கைக்கு வரும். தொழில் துவங்க வழி பிறக்கும். 2-ம் இடம், 6-ம் இடம், 9-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், கண்களில் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு கவனிக்கலாம் என்ற எண்ணம் வேண்டாம். சிறு துளி பெரும் வெள்ளம் என்பதுபோல் சிறுசிறு கடன்தான் பெரிய பாதகத்தை கொடுக்கும். பெற்றோர், பெரியோர் பேச்சை காது கொடுத்து கேளுங்கள். அதனால் நன்மை உண்டாகும், திருப்பம் தரும். ஏழரை சனியின் துவக்கமான 12-ம் இட சனி என்று கவலை வேண்டாம்.


மனோகரன்

18-10-2014 14:12

பொறுங்கோ அன்னை மாரே .எங்களை பேய் காட்டுகிறதே உங்கடை பிளான் ?
பொது பலன் சொல்லி எங்களை எமாத்துகிறதே உங்கடை நோக்கம் .கிரகம் ஒண்டு தன இருப்பிடம் மாத்தும் பொது பன்னிரு ராசிகளுக்கும் ஏற்றால் போல அவரவர்க்கு பலா பலன் நிகழும் .போன மாதம் தான் ஒவொரு சனியும் (புரட்டாதி சனி ) விரதம் பிடிச்சு காகத்துக்கு சோறு வைச்சு விரதம் பிடிச்ச களையும் மாறேல்லை இன்னும் .
(ஒரே மரக்கறி மரக்கறியை அடைஞ்சு அலுத்து போச்சுது )வட்டியும் குட்டியும் சேர்த்து 22 ஆம் திகதி தீவாளி அல்லே .ஆரேனும் ஒளிச்சு ஆடு அடிப்பினம் .எத்தினை ரூவாய் எண்டாலும் ஒரு பங்கு றைச்சி வேண்டி பல்லு உளைவு தீர தின்ன வேணும் எண்டு ஒரு பிளான் .இப்ப ஊர் எல்லாம் தீவாளிக்கு பெண்டுகளோடை சேர்ந்து ஆம்பிளையளும் கவுரி காப்பு விரதம் அல்லே பிடிக்கினம் .பாப்போம் பாப்போம் .
ராசிகளின் ரீதியில் பலா பலன் சொல்லி கிடக்கும் எண்டு துழாவி துழாவி கிண்டி கிளறி பாத்தாலும் ஒண்டையும் காணேல்லை .பொது பலன் சொல்லி சமாளிச்சு போட்டினம் .
என்ரை ராசி கடகம் (கடகமோ இல்லை கடக பெட்டியோ கொட்ட பெட்டியோ (ஆச்சியின்றை மணி பேசு ) எனக்கு தெரியாது .ஆச்சி அந்த காலத்திலை சொல்லுகிறவா உவன்றை ராசி கடகமாம் .நட்சத்திரம் புனர் பூசமாம் எண்டு .பிட்காலத்திலை வலு சுளியனாய் வருவான் எண்டு சாத்திரியார் சாதகம் பாத்து சொன்னவர் எண்டு .
கிரகங்கள் ஒன்பதும் இடம் மாறும் போது பலா பலன்கள் சொல்வது எழுத்து வதும் ஒரு பிழைப்பாக்கி போட்டினம் .முன்பெல்லாம் பத்திரிக்கை /சஞ்சிகைகள் /மற்றும் வேறாக புத்தகங்கள் அடிச்சு பணம் பண்ணினார்கள் .
இன்றோ தொல்லை தரும் தொலை காட்சிகள் ஈறாக தினசரி பலா பலன்கள் .உள்ளூர் தொல்லை காட்சி சானல்கள் ஏராளம் .அதில் சிங்கள சானல்கள் எங்களையும் மிஞ்சி விட்டனர் .விடிய திறந்தால் ஒரே அரிகண்டம் .ஒவ்வொரு வரும் எங்கடை சனங்கள் பொன்னாடை தங்களுக்கு தாமே போர்க்குமா போல அவரவர் தங்களுக்கு தாமே பட்டங்கள் பல சூடி கொண்டு **சாஸ்திர விற்பன்னர் /சோதிட சக்கரவர்த்தி /ஜோதிஷ்ய முனி இன்னும் பல ** ஒரே அறுவை .தான்கேலாதப்ப .இன்றைய பலன் உங்களுக்கு இதுவாம் .சிங்கள சனல்களில் பெண்
சாத்திரிச்சி மாரும் .அவை இப்பிடியும் ஒரு டூப்பு விடுவினம் .சநாதி பதிக்கும் தான் தான் பலா பலன் சொல்லுகிறது எண்டு .உதய் மாதிரி எத்தினை டூப் மாஸ்டர் மாரை கண்ட ஆக்கள் நாங்கள் எண்டு உவைக்கு விளங்கேல்லை கண்டியலே ???

முக்கிய குறிப்பு :-- தயவு செய்து இந்த சனி மாற்றம் எனது பலா பலனின் படி (ராசி -கடகம் நட்சத்திரம் :- புனர் பூசம் ..நான்காம் பாதம் ) இந்த வரியம் எண்டாலும் என்ரை கலியாணம் ஒப்பே றுமோ எண்டு ஒருக்காய் பாத்து சொல்லுங்கோ ? கிட்டடியிலை கல்லுண்டாய் பக்கத்திலை ஒண்டு சரிவருமா போல வந்து நான் கேட்டன் என்ன சீதனம் தருவியள் எண்டு ? அவை சொல்லிச்சினம் பிள்ளைக்கு போட பட்ட நகைகள் ஓட (எத்தினை பவுன் எண்டு சொல்லாயினம் .அது சஸ்பென்சு ..பிறகு கலியாணத்து பின் றாட்டு பிராட்டு .காசு ஒரு அம்பத்தி அறாயிரமும் பங்கினை பழைய உப்பள பக்கத்திலை ஒரு இரண்டே கால் பரப்பு காணியும் எண்டினம் .நான் சொல்லி போட்டன் நீங்கள் வேறை எங்கயாலும் பாருங்கோ .தாரத்தையும் தாறியல் புல்லு கூட முளையாத உப்பள பக்க காணி அல்லே .ஏன் அந்த அராலி பக்கத்து நெல் காணியிலை ஒரு ஐஞ்சு பரப்பை தந்த்தால் என்ன குறைஞ்சே போய் விடுவியல் எண்டு சொல்ல .
அது தம்பி இளையவளுக்கு குடுக்க எண்டு வைச்சிருக்கிறோம் .
அப்ப இளையவளை கட்டி தாருங்கோ ..!!!!!!!!!!!!
என்னடா கிழவா சொல்லுகிறாய் ? வந்த வழியை பாத்து திரும்பி போம் காணும் .எங்கடை மூத்தவன் உங்கினை நிண்டான் எண்டால் முதுகெலும்பு உடைய தான் வேண்டுவீர் .
நான் என்னை கூட்டி கொண்டு போன பொடியிட்டை சொன்னன் .எடடா தம்பி மோட்ட சயிக்கிளை .நிண்டால் உனக்கும் சேர்த்து தான் விழும் கண்டியே .
புடு ..புடு ..புடுக்...... வட்டு hindu தாண்ட போர்ட் ஒண்டு இப்பிடி **கள்ளு அருந்தோவோம் வாரீர் ** தம்பி நிப்பாட்டடா கொஞ்சம் அருந்துவோம் மன கவலை தீர .


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி