காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

சனிப்பெயர்ச்சிப்பலன் 2014: மேடம்.


நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -
16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை
கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்
பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட
காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.

சனி பெயர்ச்சியின் காரணமாக பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படக் கூடிய பொதுப் பலன்களை கிரகநிலைகளின் துணைக்கொண்டு ஆராய்ந்து சொல்கின்றார், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்;
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast).

அவரது கணிப்பில் பன்னிரு ராசிகளுக்ககுமான விரிவான பலன்கள் இங்கு தொடர்ந்து பதிவாகும். இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. ஒவ்வொரு ஜாதகருக்குமான தசாபுத்தி நிலைகளின் அடிப்படையில், அவர்களது
நிகழ் பலன்களில் மாற்றங் காணலாம்.

மேஷம்: அஸ்வினி, பரணி, கார்த்திகை-1ம் பாதம் மற்றும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

கிரகநிலை:

இதுவரை உங்களது சப்தம களத்திர ஸ்தானத்தில் கண்டச் சனியாக இருந்த சனி பகவான் இனி ஆயுள் ஸ்தானத்திற்கு
அஷ்டம சனியாக மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம்
பார்வையாக உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தொழில் கர்ம
ஜீவன ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் நிலை:
குரு:
சனி மாறும் போது குரு உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். குரு தனது பஞ்சம பார்வையால்
உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், தனது சப்தம பார்வையால் உங்களது லாப ஸ்தானத்தையும், தனது ஒன்பதாவது
பார்வையால் உங்களது ராசியையும் பார்க்கிறார்.

ராகு:
ராகு ரண ருண ரோகஸ்தான கன்னி ராசியில் இருக்கிறார். ராகு தனது முன்றாம் பார்வையால் உங்களது
சுகஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது அயன சயன போகஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்
உங்களது ஆயுள்ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

கேது:
கேது அயன சயன போகஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேது தனது மூன்றாம் பார்வையால் உங்களது தொழில் கர்ம
ஜீவன ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது ரண ருண ரோகஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்
உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்:
தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வமுடன் லட்சிய நோக்குடன் தக்க விதத்தில் செயலாற்றி வாழ்க்கையில்
சாதனைகள் புரியும்
மேஷ ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் தைரியக்காரகன் என்று போற்றப்படும்
செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். இது வரை ஸப்தம ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி அஷ்டமஸ்தானத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு
என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை ஏழ்மையும், ஏமாற்றமும் தந்துவந்தார். எதை எடுத்தாலும் காரியத்தடை, உடல்நிலை குறைபாடு என கடந்த 2
1/2 வருட காலமாக அப்பப்பா சொல்லமுடியாத வருத்தங்கள். இனி உடல்நிலையில் சிறந்த முன்னேற்றம் இருக்கும்.
சின்ன சின்ன கண்டங்களிலிருந்து தப்பித்து இருப்பீர்கள். எதையுமே முழுதாக அனுபவிக்க முடியாமல் ஏதாவது தடை
இருந்து வந்திருக்கும். அது இனி மாறும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள்
மற்றும் பங்குதாரர்களுடன் இருந்த மனக்கசப்புகளும் நீங்கும். தடைபட்டிருந்த கல்வி இனி சிறப்புறும். தாய் மற்றும் தாய்
வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும்.

எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின்
கையெழுத்து போடுவதோ கூடவே கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும் போது கவனமாக
இருக்கவும். அவர்களை நம்பி எந்த பெரிய முடிவும் எடுக்க கூடாது. கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும்.
பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை செய்யாதீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை சில நாட்கள் தள்ளி
போடவும். பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.
வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீர்நிலைகளில் செல்லும்போதும் கவனம் தேவை. எதிலும் யோசித்து
செயல்படவும். நீங்கள் நல்லது சொன்னாலும், செய்தாலும் விமர்சனம் செய்யப்படலாம். கவனம். நீங்கள் யாருக்கெல்லாம்
நல்லது செய்தீர்களோ அவர்களில் சிலர் அதையெல்லாம் மறந்து விட்டு சண்டையிடலாம். முடிந்தவரை
ஆன்மீகப்பாதையில் செல்லவும்.

தியானம் மற்றும் யோகாசனம் செய்யவும். அவற்றையும் பொறுமையாக கையாளவும்.
யாரிடமும் அளவாகப் பழகுங்கள். ஆடை அணிகலன்கள் சேரும். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க அனுகூல்யம்
கிடைக்கும். சிலர் உங்களை பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம். கடன் வாங்குவதையோ மற்றும் கொடுப்பதையோ
தவிர்க்கவும். வெளிநாட்டு தொடர்புகள் அதிகரிக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் செல்ல நேரிடலாம்.

குடும்ப
ரகசியங்களை வெளியில் விவாதிக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையை சந்தேகப்படும் அளவுக்கு உங்களது
நடவடிக்கைகள் இருக்காவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். குல தெயவபிரார்த்தனையை கைவிடாதீர்கள். வழக்கு
வியாஜ்ஜியங்களில் பல பேரிடம் ஆலோசனைகளை கேளுங்கள். அதன்பின் முடிவெடுங்கள். பிள்ளைகள் மற்றும்
உடன்பிறந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். வியாபாரத்தில் அதிரடியாக புதிய
வியூகங்களை அமைப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமூக உறவு இருக்கும். உண்மையான நன்பர்களை அடையாளம்
கண்டு கொள்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தவும். நல்ல நண்பர்களிடம் நட்பு வையுங்கள்.
பெற்றோர் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள். முன்கோபம் கூடவே கூடாது. கலைஞ்ர்கள் பரபரப்பாக இருப்பார்கள்.
அந்நிய வாய்ப்புகள் தேடிவரும். பொதுவாக கடந்த கால இழப்புகளிலிருந்து மீண்டு புதிய தன்னம்பிக்கையும், துணிவும்
தருவதாககைந்தபெயர்ச்சி அமைந்திருக்கும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

அஸ்வினி: சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக
இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை. முருகனை வணங்குங்கள்,
முன்னின்று அனைத்தையும் நடத்துவான்.

பரணி : இடையூறுகள் எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக
போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே கூடாது. துர்க்கையை
வணங்கினால் எதிலும் சக்ஸஸ்தான்.

கார்த்திகை - 1 : பிள்ளைகளால் தொந்தரவு நேரலாம். வெளிவட்டாரபழக்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும். சூரிய பகவானை மனதில் நினைத்துக்
கொண்டே இருந்தால் மனதிடம் அதிகரிக்கும்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை சனீஸ்வரருக்கு எள்
எண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும்.
செவ்வாய்கிழமைதோறும் அறுகம்புல்லை விநாயகருக்கு
அர்ப்பணிக்கவும்.


மொத்த வருகை: 209 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி