காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

உங்கள் நண்பரைக்கண்டுபிடியுங்கள் - மனுவேந்தன்.


வணக்கம்,இணைய வாசகர்களே! உறவுகள் ஒன்றுகூடி குதூகலிக்கும் தீபாவளித் திருநாளில்
உங்கள் சிந்தைக்கு விருந்தாக உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறோம்.
எம் இனிய இளையோரே!உலகத்தில் உத்தமராக வாழத் துடித்துக் கொண்டிருக்கும் இதயங்களே!உங்கள் உண்மை நட்புக்குரியவன் யாரென்று அறிந்து கொண்டீரா?அல்லது,உங்களுடன் பழகும் எல்லோருமே உங்கள் நண்பர்கள் என்று நம்பி ஏமாந்து கொண்டு இருக்கின்றீர்களா?ஆராய்ந்து கொள்ளுங்கள்.


சகோதர சகோதரிகளே!நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம்கூட உங்கள் குணம் காட்டும்.நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக தேர்ந்தெடுக்கும் வழிகூட உங்கள் நண்பரின் குணம் காட்டும்.எனவே உங்கள் நண்பர்களை எப்படித் தெரிவு செய்தீர்கள்.ஒருமுறை அலசிப்
பாருங்கள்.நாம் பாடசாலையில் படிக்கின்றபோது
நிறைய மாணவர்கள் எம்முடன்
படிக்கின்றார்கள்.அவர்கள் எல்லாம் எமது நண்பர்களா?எம்முடன் திரைப்படம் பார்க்க கூடவே சிலர் வருகிறார்கள்,அவர்கள் நண்பர்களா?வீதிகளில்
சந்திப்பதில் சிலர் சிரித்து எம்முடன் கதைக்கிறார்கள்.அவர்கள் நண்பர்களா?விளையாட்டு மைதானத்தில் எம் கூட
சந்தோசமாக
இணைந்து விளையாடும் அவர்கள் எல்லாம் எமது நண்பர்களா?அல்லது தொலைபேசியில் பலமுறையும் தொடர்புகொண்டு நேரம் போவது தெரியாமல் எம்முடன் கதைக்கிறார்களே அவர்கள் நண்பர்களா?சிந்தித்துப் பாருங்கள்.கூட இருந்து கூழ் குடிக்கும்போது நண்பன் என்று கூறியவன் நம் வாழ்வுக்குக் குழிபறிக்கக் கூடும்.உற்றார் ஆக

நடித்து உதவி பெற்றவன் தன் தேவை முடிந்ததும் நம் இதயத்தினை உதைக்கக்
கூடும்.சிரித்துப் பேசி நல்ல நண்பனாக இருந்தவன் கூட நம்மை அடுத்தவன் பார்த்து சிரிக்க வைக்கக் கூடும்.நமக்காக அழுது
அழுது நடிப்பவன் நம் சந்தோசத்தினை அழித்து நம்மை அழ வைக்கக் கூடும்.
இருவருக்கிடையே நட்பு உருவாகுவதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் நிச்சயம் இருக்கவேண்டும் என்றில்லை.இருவருக்கும் இடையே காணப்படும் ஒத்த மன உணர்வே போதுமானது.நேரில் காணும்போது புன்சிரிப்புக் கட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளம் ஆகாது.இதய பூர்வமாக
நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
மேலும்,
உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
யிடுக்கண் களைவதா நட்பு. அதாவது

நண்பன் எனப்படுபவன் நம் உடலை விட்டு உடை நழுவும்போது எமது உத்தரவுக்குக் காத்திராமல் எமது கைகள் தாமாகச் சென்று அவ் உடையினைசரிசெய்வதுபோல்,

நண்பனுக்குவரும் துன்பத்தைப் போக்க தாமாக த்துடி துத்து முன்சென்று
நண்பனுக்கு உதவுவதுதான் நட்புக்கு சிறந்த இலக்கணமாகும் எனத் திருக்குறள் அழகாகச் சொல்கிறது.

பழகும் இருவருக்கிடையில் வளரும் இதய பூர்வமான அன்பினால் கிடைக்கும் இன்பமும் வளருமானால் அதுவே உண்மையான நட்பு ஆகும்.

நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு செலுத்துவது போல் இருந்தாலும்,

அவர்களது தொடர்பு தீய வழிகளுக்கே நம்மை இட்டுச்செல்லும். தீய காரியங்களுக்கெல்லாம்கூட்டுச்சேர்வதெல்லாம் நட்பு என்று கூற முடியாது.

-தனக்குப் பயன் கிடைக்கும் போது இணைந்திருந்து தேவை முடிந்ததும் பிரிந்து செல்பவர்,

-ஆபத்து
வேளைகளில்,எமைவிட்டுஓடுபவர்கள்.

-பொழுதுபோக்குக்காக சிரித்துப் பேசுவதற்காக மட்டும் எம்மோடு இணைவோர்கள்,

-நிறைவேற்றக் கூடிய நியாயமான செயலை செய்யவிடாமல்
எம்மைத் தடுப்பவர்,

-சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவர்,

-தனிமையில் பேசும் பொது இனிக்கப் பேசி விசயங்களைப் பெற்றுப்பின் பொது

இடங்களில்,அதனை வைத்து,மற்றவர்களுடன் பழித்துப் பேசுபவர்.

இவர்களின் தொடர்பு நட்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக அவர்களை விலக்கிடவும் கூடாது.

ஔவையாரும் தனது மூதுரையில்''
அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு''

அதாவது, குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும்

பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு

விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர்.
அந்தக் குளத்திலேயே

அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல்

கொடிகளைப் போல, நம்முடனேயே நம் இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொள்பவர்களே நம் உறவு.எனப் பொதுவாகக் கூறுகிறார்.


எனவே உங்கள் உண்மையான நண்பனை யார் என உணர்ந்து நலமாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
செ மனுவேந்தன் - கனடா.மொத்த வருகை: 1049 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (3)


பவுல்

22-10-2014 12:36

உங்களெல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் .

நண்பர்களை தெரிந்தெடுப்பது பற்றிய விளக்கம் நல்லாயிருக்கு. சுயநலம் இல்லாத நண்பர்களை கண்டுபிடிப்பது கஸ்ரம், அவர்கள் நம் வாழ்க்கையில அக்கறையுள்ளவர்களாக நம் தவறுகளை திருத்த முயற்ச்சிப்பார்கள். அது எங்களுக்கு பிடிக்கா.
எனக்கு சேந்து பழக ஊரில சிலர் , இப்ப இங்க சிலர் இருக்கிறார்கள் . அவர்களை நம்பி எதையுமே செய்வதில்லை . ஆனா அவர்கள் நம்ப நடக்க முயற்சிப்பேன்.

நான் நம்புகிறவர்களை விட ஏனோதானோ என்று பழகுவோரே ஆபத்தில எனக்கு உதவிக்கரம் நீட்டுவது *எனக்கு விளங்காத அதிசயம்*. அதால நான் ஆண்டவரைத்தான் என் நம்பிக்கையின் நண்பராக வைத்திருக்கிறேன். மற்றப்படி சேந்து பழக விரும்புவோரோட பழகுவேன். சேராதவர்களை இதயத்தால தள்ளுவதுமில்லை.

கிறிஸ்துவே என் நம்பிக்கையின் உற்ற நண்பர். எனக்கு உதவி செய்யும்படி அவரிடம் கேட்டா நான் எதிர்பாராத நபர் உதவி செய்வார்.
இந்த தீபாவளி நன்நாளிலே நமக்குள்ள இருக்கிற அசுர சுபாவங்களை நீக்க வல்ல கிறிஸ்துவின் ரத்ததால பாவநிவாரணம் பெற்றா அவரே நம் நம்பிக்கையான நண்பர்,நம்சரீரம் கூட ஒரு நாள் நம்மை விட்டுக்கழண்டு விடும். நம் ஆன்மநேசர் பிரியவே மாட்டார்.


மனோகரன்

22-10-2014 04:13

இதென்ன புதினமாய் கிடக்குது ? மேலை வாசிச்சு போட்டு ,கட்டாயம் இதுக்கு கருத்து எழுதவேணும் என நினைத்து அந்த **உடுக்கை இழந்தவன் **குறளை எழுதவேணும் .மறந்து போனன் .திருக்குறள் புத்தகத்தை எடுத்து மேசையில் வைத்து பிரட்ட வயித்திலை கொஞ்சம் குழப்பம் .நேத்து கடை இடியப்பமும் புளிச்ச சாம்பாரும் அதுதான் போல .பின்னை போக வேண்டிய இடம் போய் வந்து ஸ்க்ரோல் பண்ண குறள் இருக்குது ஒரு கிலோ மீற்றருக்கு கீழை .எனக்கு ஒரு வேலை குறைஞ்சு போச்சுது .சித்தன்கேணி சந்தி தாண்டி கனதூரம் போக சண்டிலிப்பாய் சந்தி வரும் அதையும் தாண்டி கன தூரம் போக ஆறுகால் மட சந்தி வரும் .அது மாதிரி அல்லே இருக்குது இதுகும்.எதோ தொழில் நுட்ப கோளாறு போல .அது போக கதைக்கு வருவோம் .

உடுக்கை இழந்த கதை போல நண்பர்கள் இருக்கின்ற அதே வேளை ஒரு கோப்பையிலை ஒரே சோத்தை குளைச்சு திண்டவர்களே குழி தோன்றியதும் வரலாற்றில் பல இடங்களில் பதிவாகி உள்ளது
ஒருவர் தேர்ந்து எடுக்கும் நிறத்தில் இருந்து ஒருவரின் குணத்தை அறியலாம் என்று உள்ளது .நிறம் மட்டுமல்ல ஒருவர் உறங்கும் விதம் /உணவு உண்ணும் முறை /மற்றும் இன்னோரன்ன பழக்க வழக்கங்களில் இருந்து ஒருவரின் குணத்தை கணிக்க முடியும் .
திங்கள் தோறும் வருட கணக்காக நடக்கும் **தொற மடலாவ **என்னும் அருமையான தொலை காட்சி நிகழ்ச்சி .தவறாமல் பார்ப்பதுண்டு .கடைசி நிகழ்ச்சியில் நான்கு அதிதிகள் .இரு பேராசிரியர்கள் .ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர்
ஒரு மொட்டை (ஹாமதுரு ) அவர் கலாநிதி . உரையாடிய தலைப்பு **வேற்றுமை **
என்னை ஈர்த்த ஒரு விடயம் .அதை இங்கு கூறுவது பொருந்தும் .பேராசிரியர் ஒருவர் இவ்வாறு கூறினார்
**தான் பல்கலை கழக மாணவனாக இருந்த போது அவரின் junior மாணவன் ஒருவர்
இவருக்கு அவரை கண்ணிலும் காட்ட படாதாம் .கால போக்கில் இருவரும் இணை பிரியாத நண்பர்கள் ஆகி அவரின் திருமணத்தின் போது அவரே Best man ஆம் ***
எனவே உண்மையான உத்தம நண்பர்களை இனம் கண்டு உறவாடுங்கள்


மனோகரன்

22-10-2014 10:52

சொல்ல மறந்த இன்னொரு கதை .அதே நிகழ்ச்சியில் ஒருவர் உண்மை நட்பிற்கும் பொய்யான நட்பிற்கும் உதாரணம் சொன்னார் இவ்வாறு .
உண்மை நண்பர்கள் தேங்கா யாம் .
பொய் நண்பர்கள் இலந்தை பழமாம்
விளக்கம் சொல்ல முதல் தேங்காயில் பலவிதங்கள் (இது எனது கதை ) ஆயிரம் காச்சி /சூரிய காந்தி /நட்டு மூன்று வருடங்களில் பாளை தள்ளி குலை விடும் மாலைதீவு தென்னை இன்னும் எத்தனயோ வகைகள் .shape உம் ஒன்றுக்கு ஒன்று வேறுபடும் .கள்ளு முட்டி மாதிரி சில வகை .ஓரல் ஆக நீண்டு இருக்கும் இன்னொரு வகை .இன்னும் பல வகை .எல்லாம் தேங்காய் .அது போலவே நண்பர்களும் நட்பும் .
பின்னை கதை இதுதான் .நல்ல நண்பர்கள் தேங்காய் போலவாம் .
வெளியில் பொச்சுடன் கூடிய மட்டை .அதை உரித்தால் கடினமான சிரட்டை .அதையும் உடைத்தால் உள்ளே தாகத்துக்கு குடிக்க கூடிய அருமை இள நீர் கொஞ்சம் .வெள்ளை வெளேர் என்ற தேங்காய் சொட்டு .அது போலவே உண்மையான நண்பர்களும் .பார்த்தால் கரடு முரடு போல தோன்றினாலும் உள்மனது வெள்ளை + மென்மனது .
இலந்தை பழம் வெளியில் இனிமையான பழ பழக்கும் சுவையான இனிப்பான கோட்டிங் .தின்று முடிய கடுமையான கொட்டை .அதையும் கடிக்க போனால் பல்லெல்லாம் உடைஞ்சு தூள் தூள் ஆகிவிடுமாம் .துஷ்ட நண்பர்கள் .
தீப திருநாளில் நட்பை பற்றி பேசுவதும் ஆனந்தமே .
தீபாவளி அன்று சிறுவனாய் இருந்த நாட்களில் ஐந்து /பத்து சதங்கள் சேர்த்து டின் பாலும் தேங்காய் /சீனி /சவ்வரிசி வாங்கி புது உடுப்பு உடுத்து சிவன் கோயில் வயல் வெளி போய் பாகாசம் காச்சி குடித்து மகிழ்ந்த அந்த ஆனந்த காலங்கள் மீண்டும் Rewind இல் ஓடுகின்றது .அங்கும் இருவகை நண்பர்கள் நட்புகள் .பல கடந்தும் காண
நேரும் போது பழைய நினைவுகளை மீட்கும் பொருட்டு அவர்களை நான் அழைப்பதுண்டு **வாவன் கொஞ்சம் போடுவோம் ** என்று .சரி போவோம் என்று போய் ஊத்தி அடிச்சு **அப்ப உனக்கு எத்தினை பேர் ?? எனக்கு நாலு பேர் மூத்தவள் கனடாவிலை .இரண்டாவது மேன் அவன் அக்காளின்றை இளையவளை கட்டி இப்ப இத்தாலியிலை.மூண்டாவது மேன் லண்டனிலை அவனும் அங்கினை ஆரோ மானிப்பாயில் பெட்டை ஒண்டை லவ்வி கட்டி போட்டான் .கடிக்குட்டி மேள் .அவளுக்கும் ஒரு வெளிநாட்டு மாப்பிளையை பேசினோம் .அவள் வேண்டாமாம் .
என்னையும் மனிசியையும் தனிய விட்டு போட்டு தான் வெளிநாடு போகமாட்டன் எண்டு சொல்லுகிறாள் .
சரி இன்னொண்டை எடன் .? இல்லையடா மனோஹரா எனக்கு காணுமடா .இப்ப வயதும் போயல்லே விட்டுது .கணக்காய் போட வேணும் என்று சொல்ல .நான் ஒண்டை போட்டு காசை செட்டில் பண்ண வெளிக்கிட .சும்மா இரடா நான் குடுக்கிறன் என்று சொல்பவர்கள் .
அதே வேளை இன்னொரு வகை ஆக்கள் இப்படி .அன்புடன் பழைய நினைவுகளை மீட்க அழைத்தால் அவர்கள் என்னை ஒரு பேயன் என நினைத்து தாங்கள் கணக்காக போட்டு கதை பிராக்கு காட்டி எனக்கு ஊத்தி ஊத்தி தந்து காசு செட்டில் பண்ணும் போது ** கொண்டாடா காசை நான் குடுக்கிறன் **எண்டு சொல்லி (எனக்கு கூடி போச்சுதாம் ** என்று சொல்லி எனது காசை அவர்களே கொடுத்து மீதி எல்லாம் (கொஞ்ச நஞ்சம் இல்லை ஆயிரங்கள் ) அவர்களின் பொக்கட்டுக்குள் போகும் .பல தடவைகள் நடந்தது .அந்த வகை நண்பர்கள் /நட்புகள் எல்லாம் இப்போ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி விட்டினம் .கவனமாக பிளங்க வேணும் உந்த மாதிரி ஆக்களோடை .நட்பையும் நண்பர்களையும் இனம் காணுங்கள்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி