காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

சனிப்பெயர்ச்சிப்பலன் 2014: சிம்மம்.


நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -
16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை
கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்
பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட
காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.

சனி பெயர்ச்சியின் காரணமாக பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படக் கூடிய பொதுப் பலன்களை கிரகநிலைகளின் துணைக்கொண்டு ஆராய்ந்து சொல்கின்றார், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்;
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast).

அவரது கணிப்பில் பன்னிரு ராசிகளுக்ககுமான விரிவான பலன்கள் இங்கு தொடர்ந்து பதிவாகும். இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. ஒவ்வொரு ஜாதகருக்குமான தசாபுத்தி நிலைகளின் அடிப்படையில், அவர்களது
நிகழ் பலன்களில் மாற்றங் காணலாம்.

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்
மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

சொல்லும் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்கும் சிம்மராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் நாயகனும், ஆத்மாவிற்கு
உடையவனுமாகிய சூரியனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.
எந்த விதமான சிரமங்களையும் சமாளித்து
வாழ்வில்
வெற்றிக்கனியை பறிப்பீர்கள். கொஞ்சம் கர்வம் உடையவர்கள் நீங்கள்.

இது வரை உங்களது மூன்றாம் வீட்டில் அமர்ந்து நல்ல பல முன்னேற்றங்களையும், அதிரடி மாற்றங்களையும் தந்த
சனீஸ்வரன் இனி அஷ்டமத்தில் பாதியான அர்த்தாஷ்டம ஸ்தானமான நான்காம் ஸ்தானத்தில் இருந்து வரும் 21/2
ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

கிரகநிலை:
இதுவரை உங்களது தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி சுகஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர்
தனது ஏழாம் பார்வையாக உங்களது தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது
ராசியையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் நிலை:
குரு:
சனி மாறும் போது குரு ராசியில் இருக்கிறார். குரு தனது பஞ்சம பார்வையால் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய
ஸ்தானத்தையும், தனது சப்தம பார்வையால் உங்களது களத்திர ஸ்தானத்தையும், தனது ஒன்பதாவது பார்வையால்
உங்களது பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

ராகு:
தன வாக்கு குடும்ப ஸ்தானம் கன்னி ராசியில் இருக்கிறார். ராகு தனது மூன்றாம் பார்வையால் உங்களது அயன சயன
போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்
உங்களது சுகஸ்தானத்தையும் பார்க்கிறார்.

கேது:
கேது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேது தனது மூன்றாம் பார்வையால் உங்களது ரண ருண ரோக
ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்
உங்களது தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

நான்காம் வீடாச்சே, அர்த்தாஷ்டமச் சனியாச்சே, அஷ்டமத்தில் பாதியாச்சே அல்லல்படுத்துமோ? அழைக்கழிக்குமோ?
என்றெல்லாம் பயந்திருக்கிறீர்களா? அதை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு சற்று வாருங்கள். உங்களுக்கு
அதிர்ஷ்டதைக் கொடுப்பவரே அவர்தான். எனவே நீங்கள் பயப்படவே வேண்டாம். ஜூலை 2015 வரை அவர் குரு
பார்வை பெறுவதால் நற்பயன்களைக் கொடுப்பார் என நம்பலாம்.

மேலும் அடுத்த வருடம் வரும் இராகு - கேது
பெயர்ச்சிக்கும் உங்களுக்கும் நிரம்ப சம்பந்தம் உண்டு. ஏனென்றால் உங்கள் இராசிக்கு வரும் ராகுவை வைத்தும் [சனி
பார்வையுள்ள ராகு] உங்களுக்கு நல்ல பலன் உண்டு. நியாயமான ஆசைகள் நிறைவேறும். உங்களுடைய முயற்சிகளில்
தனிக்கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம். யாரிடம் பேசினாலும் எச்சரிக்கையாகவும், பணிவாகவும் பேசினால்
எதிலும் எங்கும் வெற்றிதான். முக்கியமாக தாயாரிடமும், தாய்வழி உறவுகளிடம் சுமுகமாகப் போனால் உங்களது
அந்தஸ்து உயரும்.

இதுவரையில் இருந்த கடன் பிரச்சனை தீரும். எதிரிகளை வீழ்த்த வழி தெரிய வரும். வழக்கு
வியாஜ்ஜிங்களில் உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் வெற்றி கிடைக்கும். திடீர் பிரயாணங்களால் அனுகூல்யம்
கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகளுக்கு காத்திருந்தவர்கள் தயாராகுங்கள், வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
பிரபலங்களது நட்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தன உதவி கிடைக்கும்.
வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மேலும் நீர்நிலைகளில் செல்லும் போதும் மிகுந்த கவனம் தேவை
[நீர்நிலை என்றால் கடல், ஆறு, குளம் போன்றவை மட்டுமல்ல நமது வீட்டு கினற்றடியும், பாத்ரூம் கூட நீர்நிலைதான்].
இரவு நேர பயணங்களை முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள்.

வீடு, வாகனம் போன்றவற்றைப் பராமரிப்பீர்கள். பழைய
வீட்டை விற்று புதிய வீட்டிற்கு குடிபோகும் இராசி உங்களுக்கு வந்துவிட்டது, பயன்படுத்திக்கொள்ளுங்கள். சொத்துக்கள்
வாங்கும்போது உங்களது வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்றால் சொத்து முத்துதான். முதலீடுகள் செய்யும்போது ஒரு
முறைக்கு இருமுறை யோசனை செய்யவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துப் போங்கள், நல்ல பலன் கிடைக்கும்.
அக்கம்பக்கத்து வீட்டார், சகவேலை பார்ப்போர், சக ஊழியர்கள் ஆகியோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் தாங்களாக எந்த வேலையையும் எடுக்கும் முன் யோசனை செய்யவேண்டும். உறவினர்,
நண்பர்களுக்கு தாங்கள் உதவி செய்ய வேண்டி வரும், முடிந்தால் செய்யுங்கள். தங்களைப் பற்றிய கிசுகிசுக்கள்
வரலாம், எனவே ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள். பிள்ளைகளின் போக்கு நல்ல விதமாக மாறும். உங்கள்
பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும்.

அசைவம்
உணவுகளை முடிந்தவரை தவிருங்கள். எண்ணெய்ப் பலகாரம், கார உணவுகள், வாயு சம்பந்தப்பட்ட உணவுகள்
ஆகியவற்றை குறைத்து உண்ணவும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் கறாராக
இருந்தால் நல்ல லாபம் பார்க்கலாம். பங்குதாரர்களிடம் வாக்குவாதம் வந்தாலும் முடிந்தவரை உங்கள் கருத்தைத்
திணிக்காதீர்கள். யாரையும் நம்பி முன் ஜாமீன் போட வேண்டாம்.

கல்வியைப் பொறுத்தவரை அக்கவுண்ட்ஸ், கணிதம்
துறையில் உள்ளவர்கள் இன்னும் முயற்சி எடுத்தால் மதிப்பெண்களை அள்ளலாம். மற்ற துறையில் உள்ளவர்கள்
ஆழ்ந்து, ஆராய்ந்து படிக்கவும். எழுதிப் பார்த்து படியுங்கள் மாணவமணிகளே. மொத்தத்தில் புதிய அனுபவங்களை புதிய
பாதையில் புதிய முறையில் சந்திக்கத் தயாராகுங்கள்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மகம்: புதிய பாதைகளில் செல்லும்போது சோதனைகள் வந்தாலும் முயற்சி செய்தால் சாதனைகளாக மாற்றலாம்.
மருத்துவச் செலவுகள் பயமுறுத்தலாம், எனவே சின்னப் பிரச்சினையானாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது
நல்லது. தாங்களாக மருந்து உட்கொள்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துப் போங்கள். புருஷ
ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் படித்தால் நீங்கள் செல்லும் பாதையில் ஒளி கிடைக்கும்.

பூரம்: எந்த டாக்குமெண்ட் என்றாலும் கையெழுத்து போடும் முன் யோசனை செய்யவும். சோம்பலைத் தவிர்க்கப்
பாருங்கள். தொழில், வியாபாரம், உத்தியோதத்தில் போட்டிகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் மனதைரியமும்,
வலிமையும் தங்களுக்கு உண்டு என்பதனை உணருங்கள். சிவபுராணம் மற்றும் கோளறு பதிகம் படிப்பதனால் நன்மை
நாடி வரும்.

உத்திரம் 1ம் பாதம்: உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. வேலைப்பளு
கூடினாலும் தங்களுக்கு இது நல்ல அனுபவமாக அமையும். எதிர் பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கவில்லையே என
ஆதங்கப்படவேண்டாம், அது நல்லதற்கே என நினையுங்கள். எதிலும் எங்கும் முன்கோபம் கூடவே கூடாது. இராம நாம
ஜெபம் மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சந்தனாதி தைலத்தை அபிஷேகம்
செய்து விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீசூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன்
உதிக்கும் போது தரிசம் செய்வதும் நன்மையைத் த்ரும். “எருக்க மலரை” சிவனுக்கு மாத சிவராத்திரி அன்று அர்ப்பணம்
செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி
நடக்கும்


மொத்த வருகை: 192 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி