காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

சனிப்பெயர்ச்சிப்பலன் 2014: துலாம்.


நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -
16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை
கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்
பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட
காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.

சனி பெயர்ச்சியின் காரணமாக பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படக் கூடிய பொதுப் பலன்களை கிரகநிலைகளின் துணைக்கொண்டு ஆராய்ந்து சொல்கின்றார், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்;
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast).

அவரது கணிப்பில் பன்னிரு ராசிகளுக்ககுமான விரிவான பலன்கள் இங்கு தொடர்ந்து பதிவாகும். இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. ஒவ்வொரு ஜாதகருக்குமான தசாபுத்தி நிலைகளின் அடிப்படையில், அவர்களது
நிகழ் பலன்களில் மாற்றங் காணலாம்.

துலாம்: சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்
மற்றும் ர, ரா, ரி, ரு, ரே ,ரோ, த , தா, தி, து
ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

கடமையே கண்ணாக கொண்டு காரியத்தை முடிக்கும் துலாம் ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் அசுரகுரு
என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன்
மூலம் பட்டம் பதவிகள் பெறுவீர்கள். திறமைகள் பல கொண்டவர்கள்.

இது வரை ஜென்ம சனியாகி உங்களைப் பாடாய்படுத்திய சனீஸ்வரன் இனி உங்களது தன, வாக்கு, குடும்பஸ்தானமான
இரண்டாம் வீட்டில் அமர்ந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

கிரகநிலை:
இதுவரை உங்களது ராசியில் இருந்த சனி பகவான் இனி தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது
ஏழாம் பார்வையாக உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது லாப ஸ்தானத்தையும்,
தனது மூன்றாம் பார்வையால் உங்களது சுகஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் நிலை:
குரு:
சனி மாறும் போது குரு லாப ஸ்தானத்தில் இருக்கிறார். குரு தனது பஞ்சம பார்வையால் உங்களது தைரிய வீரிய
ஸ்தானத்தையும், தனது சப்தம பார்வையால் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், தனது ஒன்பதாவது
பார்வையால் உங்களது களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

ராகு:
அயன சயன போக ஸ்தானத்தில் கன்னி ராசியில் இருக்கிறார். ராகு தனது மூன்றாம் பார்வையால் உங்களது தொழில்
கர்ம ஜீவன ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தையும், பதினோறாம்
பார்வையால் உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

கேது:
கேது ரண ருண ரோக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேது தனது மூன்றாம் பார்வையால் உங்களது
சுகஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது அயன சயன போக ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்
உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

நல்லவர் யார் கெட்டவர் யார், இவரை நம்பலாமா நம்பக்கூடாதா என்றிருந்த நிலை மாறும். ஜென்மச்சனி ஒரு உலுக்கி
உலுக்கி விட்டதா? இனி இது மாறும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருந்தாலும் எளியநிலை உடற்பயிற்சி,
உணவுக்க் கட்டுப்பாடு தேவை. அலைபாய்ந்த மனது ஒருமுகமாகும். வாழ்க்கைத்துணை இனி மகிழ்ச்சியடைவார்.
கணவன் மனைவிக்குள் சிறு சிறு வாக்கு வாதம் வந்து மறையும். குடும்பத்தில் அமைதி நிலைக்க பொறுமை தேவை.
வீண் செலவுகளை குறைக்க வேண்டும். வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை. சிலருக்கு பரிந்து பேசுவதால்
பிரச்சினை வரலாம். குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபர் முன் விவாதிக்க வேண்டாம். இதுவரை இருந்த மன
உளைச்சல் நீங்கி நிம்மதி ஏற்படும்.

தாயார் மற்றும் தாய் வழி உறவினர்களிடம் கவனம் தேவை. தாயார்
உடல்நிலையில் அக்கறை செலுத்தவும். வீடு, மனை, வாகனம் வாங்குவதில் சற்று கவனம் தேவை. நண்பர்களின்
உறவில் கவனமாக இருக்கவும். அயல்நாட்டு பயணங்கள் மற்றும் எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். சித்தர்கள் மற்றும்
மகரிஷிகளின் ஆசிகள் கிடைக்கும். பொது விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நன்மையைத்தரும்.

புதிய
வியாபாரம் மற்றும் தொழில் துவங்க அனுகூலமான நேரமிது. தைரியம் அதிகரிக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில்
வெற்றிகள் கிடைக்கும். திருமணத் தடைவிலகும். வாழ்க்கைத்துணையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரிந்த
நண்பர்கள் ஒன்று சேருவர். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உங்கள் உடல்நிலையிலும் அக்கறை
எடுத்துக் கொள்ளவும். ஹ்ருதய சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தகுந்த வைத்தியம் பெற்றுக் கொள்ளவும். புதிய
வாகனம் வாங்குவதாயிருந்தால் உங்கள் பெயரில் வாங்குவதை தவிர்க்கவும், மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயரில்
வாங்கலாம். புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அரசாங்க அலுவல் அனுகூல்யங்கள் மெள்ள மெள்ள கிடைக்கும்.
தங்களது திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கவனம் தேவை. மனனம்
செய்வதில் கவனம் தேவை. கலைஞர்களுக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி
தெளிவு ஏற்படும். உங்கள் தொழிலில் லாபங்கள் படிப்படியாக கிடைக்கும். முதலீடுகள் செய்யும்போது தகுந்த
ஆலோசனை பெற்று செய்யவும். மூத்த சகோதர சகோதரிகளிடம் கவனமாக இருக்கவும். வேலையில்லாதவர்களுக்கு
தகுந்த வேலை கிடைக்கும். கூடாநட்பை விட்டு விலகவும். கடன் சுமை நீங்கி நிம்மதி ஏற்படும். பொதுவாக சங்கடங்கள்
நீங்கி சந்தோஷத்தைக் கொடுக்கும்.
நக்ஷத்திர ரீதியான பலன்கள்:
சித்திரை 3 - 4ம் பாதங்கள்: உடல்நலம் மற்றும் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தடைகளைத்தாண்டி
வெற்றிகளைக் குவிப்பீர்கள். கல்வியில் மந்தமான சூழ்நிலை விலகி நன்மை கிடைக்கும். கல்வி மற்றும் தொழிலில்
சிறக்க ஸ்ரீ கணபதியை வணங்குங்கள்.

ஸ்வாதி: உங்களுக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த
கசப்புணர்ச்ச்சி நீங்கும். வரவேண்டிய கடன்பாக்கி வந்துசேரும். காதல் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
ஸ்ரீமஹாலக்ஷிமியை வணங்கி எதை ஆரம்பித்தாலும் வெற்றிதான்.

விசாகம் 1 - 2 - 3ம் பாதங்கள்: உங்கள் சகோதர சகோதரிகளின் உறவு பலமாகும். புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள். நீண்ட
நாட்களாக உள்ள திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும். ஸ்ரீஆதித்யஹ்ருதயம் சொல்ல சொல்ல தடைகள்
விலகி நன்மை பிறக்கும்.

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனுக்கு நெய் விளக்கு ஏற்றி
வணங்கி வரவும். முடிந்தவரை
கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.
சனிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்.


மொத்த வருகை: 100 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி