காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

சனிப்பெயர்ச்சிப்பலன் 2014: விருச்சிகம்.


நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -
16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை
கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்
பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட
காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.

சனி பெயர்ச்சியின் காரணமாக பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படக் கூடிய பொதுப் பலன்களை கிரகநிலைகளின் துணைக்கொண்டு ஆராய்ந்து சொல்கின்றார், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்;
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast).

அவரது கணிப்பில் பன்னிரு ராசிகளுக்ககுமான விரிவான பலன்கள் இங்கு தொடர்ந்து பதிவாகும். இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. ஒவ்வொரு ஜாதகருக்குமான தசாபுத்தி நிலைகளின் அடிப்படையில், அவர்களது
நிகழ் பலன்களில் மாற்றங் காணலாம்.

விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்
மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய, யி, யு, நு
ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடையத் துடிக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில்
தைரியத்தை வழங்குபவன் என்றழைக்கப்படும் பூமிகாரகனாகிய செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.
குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வாழிபவர்கள்.

இது வரை விரையச் சனியாகி உங்களுக்கு பல விதமான முறையிலும் விரையங்களை ஏற்படுத்திய சனீஸ்வரன் இனி
உங்களது ஜென்மஸ்தானத்தில் அமர்ந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப்
பார்ப்போம்.

கிரகநிலை:
இதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது ராசிக்கு மாறுகிறார். அவர்
தனது ஏழாம் பார்வையாக உங்களது களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது தொழில் கர்ம ஜீவன
ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் நிலை:
குரு:
சனி மாறும் போது குரு தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார். குரு தனது பஞ்சம பார்வையால் உங்களது
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், தனது சப்தம பார்வையால் உங்களது சுகஸ்தானத்தையும், தனது ஒன்பதாவது
பார்வையால் உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

ராகு:
லாப ஸ்தானத்தில் கன்னி ராசியில் இருக்கிறார். ராகு தனது மூன்றாம் பார்வையால் உங்களது பாக்கிய
ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்
உங்களது ராசியையும் பார்க்கிறார்.
கேது:
கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேது தனது மூன்றாம் பார்வையால் உங்களது தைரிய
வீரிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது லாப ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால் உங்களது
களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

செலவுகளும், விரையங்களும் நிறைந்த கடந்த 2 1/2 ஆண்டுகள் போராட்டமாகவும், குழப்பமாகவும் இருந்ததா? இனி
அந்த நிலை மாறும். தைரியம் பிறக்கும். மன சம்பந்தமான குழப்பங்கள் நீங்கும். குருவும், கேதுவும் அனுகூலமான
இடங்களுக்கு வருவதால் இனி தடைகள் நீங்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில்
மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வழிகளிலும் பணம் வரும் என எதிர்பார்க்கலாம். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான
சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கைத்துணை உறவினர்களால் அலைச்சலும், சிரமங்களும் நேரலாம். எல்லா வேலைகளிலும்
சிறிது முயற்சி செய்தால் முதலிடம் உங்களுக்குதான்.

அசைவ உணவு பதார்த்தங்கள், ஜங்க் புட்ஸ், கொழுப்பு நிறைந்த
உணவுவகைகள் ஆகியவைகளை முற்றிலுமாக தவிருங்கள். உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. இளைய
சகோதர சகோதரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து செல்லவும். வீடு மனை வாகனம் யோகம் உண்டு. எந்த
விஷயமானாலும் சரி, நேர் வழியில் சென்றால் வெற்றிதான். அடுத்தடுத்து மங்கள நிகழ்ச்சிகள் உங்கள் வீட்டில்
நடைபெறும். இது வரை இருந்து வந்த சிற்சில கருத்துவேறுபாடுகள் நீங்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
கொடுத்திருந்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வராதிருந்த கடன் பாக்கி வந்து சேரும்.இனி தனவரவுகள் சேரும்.

முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தந்தையுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படும், மேலும் அவரது உடல்நிலையில்
முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி சொத்துக்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டு வேலை
கிடைக்கும். வெளிநாட்டு பிரயாணங்களால் அனுகூலம் ஏற்படும், தவிர வெளிநாட்டுடனான வியாபாரத் தொடர்பும்
கிட்டும். நிறைய பேர் உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளது, கவனமாக இருக்கவும். எதிலும் எப்பொழுதும் நேரத்தைக்
கடைபிடியுங்கள்.உத்தியோகத்தில் வரவேண்டிய பதவிஉயர்வு, இடமாற்றம் ஆகியவைகளுக்கு நன்கு உழையுங்கள்.
சிலருக்கு கூடுதல் சம்பளத்துடன் வேறு நிறுவனத்திலும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு தங்கள்
இரசனைக்கேற்ப வேலையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மற்றவர்களை நம்பி எந்த ஒரு பெரிய முடிவும் எடுக்க
வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பங்குதாரர்கள் உடனான கருத்துக்களின் மீது விவாதம் செய்யாதீர்கள்.
சோம்பலைத் தவிருங்கள். அன்றன்றுள்ள பணிகளை அன்றே முடியுங்கள். வேலைகளில் சுணக்கம் காட்டாதீர்கள்.
பொதுவாக இந்த சனிப் பெயர்ச்சி சிக்கல்களையும், கடினமான பாதைகளையும் தாண்டி சாதனைகளைப் படைப்பதாக
அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

விசாகம், 4ம் பாதம்: உடல்நலம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. எந்த வேலையிலும் முழுமுயற்சி
தேவை. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆதித்யஹ்ருதயம் மற்றும் ஸ்ரீ விஷணு
ஸகஸ்ரநாமம் சொல்வது பயனைத்தரும்.

அனுஷம்: தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றியடைவீர்கள். மனதில் புதிய
உற்சாகமும் எழுச்சியும் பிறக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளிடம் உறவு மேம்படும். கூடிய விரைவில் எதிர்பார்த்த
திருமணம் நடக்கும். ஸ்ரீ லலிதா த்ரிசதி சொல்ல சொல்ல வாழ்வில் ஒளி பிறக்கும்.

கேட்டை: கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வாகனம் யோகம்
மெதுவாக கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் ஆரம்பத்திலுள்ள முயற்சியைக் குறைக்காமலிருந்தால் வெற்றி
கிடைக்கும். ஸ்ரீ முருக வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும்.
நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். இலுப்பைஎண்ணையில் வீட்டில் விளக்கு ஏற்றவும். செவ்வாய்தோறும்
செவ்வரளிமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள்.


மொத்த வருகை: 192 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி