காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

சனிப்பெயர்ச்சிப்பலன் 2014: தனுசு.


நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -
16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை
கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்
பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட
காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.

சனி பெயர்ச்சியின் காரணமாக பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படக் கூடிய பொதுப் பலன்களை கிரகநிலைகளின் துணைக்கொண்டு ஆராய்ந்து சொல்கின்றார், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்;
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast).

அவரது கணிப்பில் பன்னிரு ராசிகளுக்ககுமான விரிவான பலன்கள் இங்கு தொடர்ந்து பதிவாகும். இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. ஒவ்வொரு ஜாதகருக்குமான தசாபுத்தி நிலைகளின் அடிப்படையில், அவர்களது
நிகழ் பலன்களில் மாற்றங் காணலாம்.

தனுசு:
மூலம், பூராடம், உத்திராடம் 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்
மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா
ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

சராசரி மனிதனாய் பிறந்து தங்களது நற்செயல்களின் மூலமாக புகழும் பெருமையும் அடையும் தனுசு ராசி அன்பர்களே.
நீங்கள் நவக்கிரகங்களில் சுபத்தை வழங்குபவர் என்றழைக்கப்படும் தேவகுருவாகிய குருவை ஆட்சி நாயகனாக
கொண்டவர்கள். சாதனையாளர்களாக வலம் வந்து மற்றவர்களுக்கு பயன் தருபவர்கள்.

இது வரை லாபஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான முறையிலும் லாபங்களையும் விரையமாக்கிய
சனீஸ்வரன் இனி விரையச்சனியாகவும், ஏழரைச்சனியின் முதல் வட்டத்தில் வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ
பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

கிரகநிலை:

இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது அயன சயன போக ஸ்தானத்திற்கு
மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக
உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும்
பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் நிலை:
குரு:

சனி மாறும் போது குரு பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். குரு தனது பஞ்சம பார்வையால் உங்களது ராசியையும்,
தனது சப்தம பார்வையால் உங்களது தைரிய வீரிய ஸ்தானத்தையும், தனது ஒன்பதாவது பார்வையால் உங்களது
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

ராகு:

தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கன்னி ராசியில் இருக்கிறார். ராகு தனது மூன்றாம் பார்வையால் உங்களது அஷ்டம
ஆயுள் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது சுகஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால் உங்களது
அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

கேது:

கேது சுகஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேது தனது மூன்றாம் பார்வையால் உங்களது தன வாக்கு குடும்ப
ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்
உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து மூன்றாம் பார்வையாக உங்கள் இராசியைப் பார்த்த சனீஸ்வரன் உங்களது
தைரியத்தையும், முயற்சியையும் தடுத்திருந்தார். அதனால் எதிலும் தோல்வி, சோம்பல் என்று முடங்கிக் கிடந்தீர்கள்.
இனி உங்களுக்கு அவர் யோக பலனையேத் தருவார். என்ன ஐயா, எங்களுக்கு ஏழரைசனி ஆரம்பிக்கிறது என்று
நாங்களே பயந்து கொண்டிருக்கிறோம், யோகம் வரும் என்று சொல்கிறீர்களே, இது எப்படி? என்று நீங்கள் கேட்கும்
கேள்வி எனது காதில் விழுகிறது.

உங்கள் இராசிக்கு தனஸ்தானாதிபதியே சனிதான், எனவே நீங்கள் பயப்பட
தேவையில்லை. பய உண்ர்வு நீங்கி தெளிந்த சிந்தனை பிறக்கும். கோப உண்ர்வு நீங்கி சாந்தமாகி நிதானமாக
பேசுவீர்கள். பல பிரச்சனைகளில் சமாதானமாகப் போவீர்கள். பழைய நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
உங்களது பிள்ளைகளின் பிடிவாதம் நீங்கும். உங்கள் சொற்படி கேட்டு நடப்பார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல
இடத்தில் வேலை கிடைக்கும்.

உங்கள் பிள்ளைகளுக்கு சொந்த பந்தமெல்லாம் ஆச்சரியபடும் அளவுக்கு திருமணம்
நடத்தி வைப்பீர்கள். சிலரின் குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமாகவோ, பணி சம்பந்தமாகவோ வெளிநாடு
வேலைவாய்ப்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும், அதேபோல் செலவினங்களும் அதிகரிக்கும். வங்கிக்
கடனுதவியுடன் வீடு மனை வாகனம் வாங்குவீர்கள். பிறரிடம் ஏமாந்த நிலை மாறும். எவருக்காகவும்
சாட்சிகையெழுத்து போடுவதோ, பரிந்து பேசுவதோ கூடாது. எதிலும் மூக்கை நுழைக்காமல் பார்வையாளராக இருப்பது
நல்லது. பிறரை விமர்சனம் செய்தல் கூடவே கூடாது. கருத்து சொல்லும் போது மிக ஜாக்கிரதையாக இருக்கவும்.

பித்தம் சம்பந்தபட்ட உணவுவகைகளை அறவே தவிர்த்தல் வேண்டும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை
தேவை. பெரிய பொறுப்புகள் வரும் போது யோசித்து ஏற்றுக் கொள்ளவும். வாக்கு கொடுக்கும் போது நன்கு பரிசீலித்து
வாக்கு கொடுக்கவும். முடிந்தளவு கமிட்மெண்ட்ஸை தவிர்க்கவும். யாருடனும் தேவையில்லாமல் பேசக்கூடாது. வம்புச்
சண்டைக்கு போகவே கூடாது. வாழ்க்கைத்துனையுடன் வரும் கருத்து மோதலுக்கு நீங்கள் பனிந்து போவதே
நன்மையைத்தரும். தங்களைப் பற்றிய தவறான செய்திகள் வந்தால் புறந்தள்ளுங்கள். கிசுகிசுக்களுக்கு
செவிசாய்க்காதீர்கள். முடிந்தளவு தியானம் செய்யுங்கள்.

குலதெய்வகோவிலுக்கு சென்று வாருங்கள். பெற்றோர் நலனில்
அக்கறை எடுத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் புதுமையைக் கொண்டு வாருங்கள், வெற்றி பெறலாம். பங்குதாரர்களிடம்
பணிந்து போங்கள். பிறரின் மேல் தேவையில்லாமல் வீண்பழி சுமத்தாதீர்கள். அனுபவம் மிக்க ஆட்களை பனியில்
அமர்த்துங்கள். உணவு, எலக்ட்ரானிக்க்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, அக்கவுண்ட்ஸ் போன்ற தொழில்கள் சிறப்படையும்.
போட்டிகள் இருந்தாலும் முயற்சி செய்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கூடுதல்
அக்கறை தேவை. முக்கியமாக அறிவியல், கணிதம் படிப்பவர்கள் அதிக முயற்சி எடுக்கவும். எதிர்பார்த்த மதிப்பெண்கள்
வராமல் போகலாம், கவனம் தேவை. கலைஞர்களுக்கு தகுந்த மரியாதையும் சன்மானமும் கிடைக்கும். மொத்தத்தில்
இந்த சனிப்பெயர்ச்சி உங்களை வெளியுலகுக்கு அழைத்து வருவதுடன் மரியாதையையும் மதிப்பையும் அளிப்பதாக
அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மூலம்: உடல்நலம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. கடன் தொல்லைகள் வரலாம். முடிந்தவரை கடன்
வாங்காமிலிருப்பது நல்லது. எந்த தருணத்திலும் டென்ஷன் கூடவே கூடாது. செவ்வாய் கிழமையன்று முருகன்
வழிபாடு நன்மையைத் தரும்.

பூராடம்: மனதில் எதையும் வைத்திராமல் யாருடனாவது கலந்துரையாடுங்கள். முடிந்தவரை தனிமையைத் தவிருங்கள்.
வெளியூர் வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடுக்கல்
வாங்கலில் தகராறு வரலாம். முடிந்த வரை வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.

உத்திராடம் 1ம் பாதம்: உற்சாகம் இல்லா காரியங்களில் ஈடுபட வேண்டாம். மனத்தை ஒருமுகப்படுத்தி எந்த
காரியத்திலும் ஈடுபடுங்கள். அரசுவழியில் சோதனைகள் வரலாம் கவனம். கூட்டுதொழில் ஆரம்பிப்பதாய் இருந்தால்
நன்கு பரிசீலித்து ஈடுபடவும். மகான்களை வழிபடவும்.



பரிகாரம் :
வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும்.
கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து

வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக
முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம்
அதிகரிக்கும்.



மொத்த வருகை: 112 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி