காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

சனிப்பெயர்ச்சிப்பலன் 2014: கும்பம்.


நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -
16.12.2014 செவ்வாய்கிழமையும்

கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை
கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்
பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட
காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.

சனி பெயர்ச்சியின் காரணமாக பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படக் கூடிய பொதுப் பலன்களை,
கிரகநிலைகளின் துணைக்கொண்டு ஆராய்ந்து சொல்கின்றார், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்;
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast).

அவரது கணிப்பில் பன்னிரு ராசிகளுக்ககுமான விரிவான பலன்கள் இங்கு தொடர்ந்து பதிவாகும். இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. ஒவ்வொரு ஜாதகருக்குமான தசாபுத்தி நிலைகளின் அடிப்படையில், அவர்களது
நிகழ் பலன்களில் மாற்றங் காணலாம்.

கும்பம்: அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2 ,3ம் பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்
மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸூ, ஸே, ஸோ, த ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

வாக்குறுதி என்பது சத்தியத்தியத்திற்கு சமமானது என்பதை தாரக மந்திரமாக கொண்டு வாழும் கும்ப ராசி அன்பர்களே.
நீங்கள் நவக்கிரகங்களில் கர்மபலனின் மூலமாக வசந்தத்தை வழங்குபவர் என்றழைக்கப்படும் சனியை ஆட்சி
நாயகனாக கொண்டவர்கள். இனிய வார்த்தைகள் இரும்புக்கதவையும் திறந்து விடும் என்று உணர்ந்த நீங்கள் அன்பும்
அணுகுமுறையும் கொண்டவர்கள்.

இது வரை பாக்கியஸ்தானமான ஒன்பதாவது ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி பத்தாமிடத்தில் வரும் 21/2
ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

கிரகநிலை:
இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு
மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது சுகஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது களத்திர
ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் நிலை:
குரு:
சனி மாறும் போது குரு களத்திர ஸ்தானத்தில் இருக்கிறார். குரு தனது பஞ்சம பார்வையால் உங்களது லாப
ஸ்தானத்தையும், தனது சப்தம பார்வையால் உங்களது ராசியையும், தனது ஒன்பதாவது பார்வையால் உங்களது தைரிய
வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

ராகு:
அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கன்னி ராசியில் இருக்கிறார். ராகு தனது மூன்றாம் பார்வையால் உங்களது ரண ருண
ரோக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்
உங்களது தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

கேது:
கேது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேது தனது மூன்றாம் பார்வையால் உங்களது அயன சயன
போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்
உங்களது சுகஸ்தானத்தையும் பார்க்கிறார்.

இதுவரை 9ம் இடத்தில் இருந்து உங்கள் புண்ணியங்களை தடுத்து வந்த சனீஸ்வரன், இனி அதையெல்லாம்
உங்களுக்கு தருவார். தந்தையாரின் உடல்நிலை மெதுவாக முன்னேற்றம் அடையும். தந்தை வழி சொத்துக்களில் உள்ள
பிரச்சனைகள் நீங்கும். நம்பியவர்கள் எல்லாம் ஏமாற்றினார்களே, அதற்கு பதிலடி கொடுங்கள்.கணவன் மனைவி உறவு
நெருக்கமடையும். தைரியம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களிடம் இருந்த பிணக்கு நீங்கும். கல்வித்தரம் உயரும்.

சகோதர வகையில் தனலாபம் கிடைக்கும். இடைத்த்ரகர்களை நம்பாமல் நீங்களே களத்தில் குதிப்பீர்கள். உங்களுக்கு
சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் காலமிது. உங்களுக்கு உதவ மறுத்தவர்கள் தானாக முன்வந்து உதவி
செய்வார்கள். வீட்டில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள்.தடைகள் பல நீங்கி நன்மை கிடைக்கும். அரசு
அதிகாரிகளின் உதவி கிடைக்கும். தாய்வழி சொத்துக்களை கவனமாக கையாளவும். வாகனத்தை இயக்கும் போது
கவனம் தேவை.

காடு, மலை, மரம் இவற்றால் லாபம் உண்டாகும். வெளிநாடுகள் மூலம் லாபம் உண்டாகும். ஆன்மீக
நாட்டம் அதிகரிக்கும். பக்கத்து வீட்டாருடன் இணக்கமாக இருப்பீர்கள்.பழைய கருத்து மோதல்கள் நீங்கும். வாழ்வில்
மலர்ச்சி உண்டாகும்.மனைவியால் செவவு அதிகரிக்கும். நிறைய நாட்கள் தூங்காமல் இருக்க வேண்டி வரும். டிரஸ்ட்,
சங்கம் தொடங்குவீர்கள். சமூக விஷயங்களில் ஈடுபடுவீர்கள். சாதுக்கள், சந்நியாசிகள் தொடர்பு கிடைக்கும். சொத்துக்கள்
வாங்குவது, விற்பது சுலபமாக முடியும்.

வியாபாரம் செழிக்கும். புதிய தொழில் அமையும். வேலைநிமித்தமாக வெளிநாடு,
வெளியூர் சென்று வருவீர்கள். பங்குதாரர்களிடம் இருந்த பிணக்கு நீங்கி உற்சாகம் பிறக்கும். தள்ளிப் போன வாய்ப்புகள்
கையில் வந்து சேரும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களை வகுப்பீர்கள். போட்டிகள் நீங்கும்.
வேலையாட்களுடன் சுமுக உறவு ஏற்படும். தூங்கப் போகும் போது நிறைய யோசிக்க கூடாது. நீண்ட தூர பயணங்களை
தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உங்களது திறமை வெளிப்படும். எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்கும்.
உயர்கல்வியில் தேர்ச்சி பெற்று தகுந்த சன்மானத்தை பெறுவீர்கள். சிலருக்கு சொந்த தொழில் கிட்டும்.

திருமணமாகாதவர்களுக்கு 2015 டிசம்பருக்கு மேல் திருமணமாகும். மாணவமணிகள் படிப்பின் மீது மிகுந்த கவனம்
கொள்ள வேண்டும். கடினமான பாடங்களின் மீது அதிக அக்கறை தேவை. உங்களின் மீதிருந்த வீண் பழி விலகும்.
கலைஞர்களைப் பொறுத்தவரை அதிக வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மொத்தத்தில் இந்த
சனிப்பெயர்ச்சி தடைபட்டிருந்த பாக்கியங்களை அள்ளித்தருவதுடன் பணம், பட்டம், பதவி ஆகியவற்றை தருவதாக
அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

அவிட்டம் 3 - 4: எதிலும் அவசரம் இருக்கும். எச்சரிக்கை தேவை. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம்
ஏற்பட்டாலும் செலவுகளும் முன் வந்து நிற்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஹனுமனை
வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றி கிடைக்கும்.

ஸதயம்: பேசுவதைக் குறையுங்கள் பாதி பிரச்சனை தீர்ந்து விடும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு நீங்கும்.
பண விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. திருமண முயற்சியில் வெற்றியடைவீர்கள். ஸ்ரீமஹாலக்ஷிமியை
வணங்குங்கள், தன முன்னேற்றம் ஏற்படும்.

பூரட்டாதி 1 - 2 - 3: உடல் நலத்தில் சற்று கவனமுடன் இருக்கவும். தந்தையாரின் உடல்நிலையில் கவனம் தேவை.
உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளிடம் கவனமாக பழகவும். யாரையும் அனுசரித்து போனால் பிரச்சினை
இல்லை. மஹான்களை வழிபட தடைபட்டிருந்த காரியங்கள் தடை விலகி நன்மை ஏற்படும்.

பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.
சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு மரிக்கொழுந்துவை அணிவித்து
வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை
படிப்படியாக
மூன்னேற்றம் ஏற்படும்.மொத்த வருகை: 255 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (1)


V .K .மனோகரன்

27-11-2014 08:50

பொறுங்கோ அப்ப என்னோடை ஏதும் கோவம் போல ? கும்பம் /மீன் /துலா எண்டு எல்லாம் சனி பெயர்ச்சி பலா பலனுகள் எழுதி குவிக்கிரியல் என்ரை ராசிக்கு பலன் எது எண்டு நானும் வாயை ஆவெண்டு பிளந்து கொண்டு இஞ்சினை தடவுகிறது தான் இன்னும் ஒண்டையும் இஞ்சினை காணேல்லை .என்ரை ராசி எதோ கடகமோ /கடக பெட்டியோ எண்டு ஆச்சி சின்னனிலை எனக்கு சொன்னவா தான் .வளவு உறிதியல் அறிமுக படுத்திய ஒல்லாந்தர் காலத்து அம்மன் கோயில் உறுதி படத்தை என் கை பட நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என் அயல் வீடு MAN கந்தையாவின் வேண்டு கோளுக்கு இனைய அப்பிடியே போட்டோ கொப்பி மாதிரி கீறி எழுதி குடுத்த ஆள் நான் .அதற்கு பிரதி உபகாரமாக அவர் எனது குறிப்பை ஓசியில் எழுதி தந்தார் .அது இப்போ எங்கு என்று நான் அறியேன் .அவரின் மனைவி கனகம்மா எனக்கு ஆச்சி வளி குஞ்சாச்சி .எல்லாம் தொலைந்தவைகள் .ஆனந்த அற்புத வாழ்வு அது .பிஞ்சை என்ரை இஞ்சாருங்கோ பேசுகிரா உமக்கு வேறை வேலை இல்லையே ? ஒரே சொறியல் உந்த பண் கொம்மிலை .இப்ப இன்னும் கொஞ்ச நேரத்திலை என்ரை கிளாசு மேற்று நான் வேம்படி கேர்ல்ஸ் இலை படிக்கேக்குல்லை அவள் சுதர்சனி புரியநோடை இப்ப பிரான்சில .அவைக்கு ஏதும் செஈயவல்லெ வேணும் .ஓடி போய் நாலு Pizza வேண்டி கொண்டு வரட்டாம் .நான் சொன்னேன் **எடியே குழல் புட்டு அவிச்சு மாசி கருவாடு போட்டு ஒரு சம்பலும் இடிச்சு பருப்பு கறியோடை குடுத்தால் அவைக்கு இறந்காதேடி ?** எண்டு சொல்ல அவள் இப்பிடி சொன்னாள் இல்லையுங்கோ உந்த புட்டேல்லாம் பழைய காலத்து அலுவலுன்கொ உலகம் போற போக்கிலை நாங்களும் Move பண்ண வேணும் .உமக்கு இப்ப என்ன வேணும் தரட்டே ஒண்டு ? எனக்கு ஒண்டும் வேண்டாமடி நான் போறன் pizza வேண்ட .எல்லாம் ஊழ வினை பயன் அடி .ஓட்டை லொட்டன் சைக்கிள் உருளுகின்றது இப்போ .என்னட்டை என்ன கார் கிடக்குதே இல்லை ஆக குறைஞ்சது மோட்டு மோட்ட சயிக்கில் ஆவது கிடக்குதே ?? இல்லை இல்லை


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி