காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

யதார்த்தங்கள் - பம்பல்Kமனோ.


உண்மைகள் உள்ளவாறு உள்ளபடி பேசி பறைய வேண்டும் அதைவிடுத்து தனக்கு தெரிந்ததெல்லாம் சொல்லி பறைஞ்சு நீலி கண்ணீர் வடித்து யாரோ ஒருவர் புனைந்த கவிதையை தன பெயரில் வெளிவிட்டு ஆனந்தம் கொள்வது அழகல்ல.பாராட்டு மழை ஒரு புறம் இன்னொரு புறம் யதார்த்தங்கள் சொல்லும் ஒரு சிலர் .அதே அவர் ஒரு காலம் எம்மூரில் பல இணையங்கள் போட்டி போட்டு கொண்டு .அவரின் தனிப்பட்ட கருத்தை பல இணையங்களுக்கு அனுப்பிய போதும் எவரும் வெளி விட வில்லை .ஏசினார் எல்லா இணையங்களையும் இவ்வாறு **உவை என்ன கண்டறியாத பொது இணையமோ நடத்துகினம் ? ஏன் நான் எழுதினதையும் உவை வெளி விடலாம் அல்லே என்று ஆத்திரத்தில் குமுறினார் .நான் அணுகினேன் பண் கொம் நிருவாகிகளை.அவர்கள் சொன்னார்கள் உந்த மனிசன் ஒரு மரியாதையான தொழில் செய்தவர் அல்லே .உதய் விட்டால் உவர் கிரிசை கேட்டு போவார் என்று சொல்ல நான் சொன்னேன் விடுங்கோ வாறதை நான் சமாளிக்கிறேன் என்று சொன்னதும் அது வெளிவிட பட்டது .
சொன்னது போல நடந்தது .கூடிய வருகை .அவர் பிசக்க பட்டார் .நான் அவரின் பிரக்கராசி போல பல பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து அவரை காவாந்து பண்ணினேன் .அவர் இப்போ இங்கு வராமல் அவரை ஒதுக்கிய தளங்களில் கவிதை மழை பொழிகின்றார் .கவிதையின் சாராம்சம் .** பழமை இந்து சமய சம்பிரதாயங்கள் அழிந்து
ஒளிகின்றதாம் ** அனைத்தும் நான் கருத்து களத்தில் ஆங்காங்கே நாசூக்காக நகைச்சுவை கலந்து சொன்ன விடயங்களே .ஒரு உதாரணம் மட்டும் **அன்று மரண வீட்டில் பிரேதத்தை படலையால்
கொண்டு போகாமல்
வேலியை வெட்டி கொண்டு போனோம் .இன்று வெட்ட வேலி எங்கே ? எல்லாம் ஏற்கனவே நான் சொன்னவையே .
இளம்
சமூகம் அறிவூட்ட படுகின்றதாம் பழையவற்றின் நினைவூட்டல்கள் மூலம் .பழமை வாதிகள் அப்படித்தான் சாக்கு போக்கு சொல்லி எதிர் கருத்து வரும் போது சமாளிப்பார்கள் .
குடும்ப ஆதிபத்தியத்தில் பல பழமையான சம்பிரதாயங்களான
வேள்வி /பொங்கல் /மடை /கிடாய் வெட்டு நடந்த கோயில் கூட இன்று வேறு வடிவில் பரிணமித்து உள்ளது .ஒருவர் அதில் கூட விலகி தான் செய்வது /சொல்வது எல்லாம் சரி என்று கூறி இன்று தனிமை படுத்த பட்டு விட்டார் அவரின் செயல்பாடுகளினால் அவரின் தந்தையார் கூட அகாலத்தில் மனோ நிலை பாதிக்க பட்டு அமரர் ஆகினார்
.நான் கூட அவரின் அலுவல்களுக்கு துணை போனேன் சில காரனகளுக்காக .இன்று நான் வெட்கி தலை குனிகின்றேன்.ஊருடன் ஒத்து ஓடவேணும் என்றில்லாமல் அவரின் அலுவல்களுக்கு
துணை போனதற்காக..சரியாக ஆரம்பத்தில் ஜேவிபி காரராக பல்கலை கழகத்தில் அரசியலில் குதித்து பின் பல் டாக்குத்தராகி ரணிலுடன் சேர்ந்து குறிகிய கால அமைச்சர் ஆகி பின் கரணம் அடிச்சு சுதந்திர கூட்டணியுடன் சேர்ந்து மீன் பிடி அமைச்சர் ஆகி மீண்டும் கரணம் அடிச்சு ரணில் பக்கம் வந்து இவ்வாறு சொல்கிறார்
**நான் அன்று 18 ஆவது அரிசியல் அமைப்பு திருத்தத்துக்கு கையை உயர்த்தியதை இட்டு இன்று கவலை அடைகின்றேன் .நாட்டு மக்களுக்கு நான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோருகிறேன் ** என்று .ஆனால் நான் ஒரு அரசியல் வாதி அல்ல .சமூக வாதி .எனக்கு எந்த ஒரு பிரபலியம் ஒ அன்றில் மலர் மாலையோ இல்லை வாழ்த்தோ தேவை படாது .சரியென பட்டத்தை எவருக்கும் பயமின்றி துநிச்சளுடல் சொல்பவன் .அதற்காக நான் சொல்வதை எல்லோரும் கேட்க வேணும் அதன்படி ஒழுக வேணும் என்று அழுங்கு பிடி பிடிப்பவனும் இல்லை அது சிலருக்கு பரம்பரை பரம்பரை ஆக மரபணுக்களால் (geans
களினால் காவி வர படும் குணாதிசியங்கள் அப்பா .அதுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது

பம்பல்Kமனோ - கலட்டி.மொத்த வருகை: 1399 இன்றைய வருகை: 2

கருத்துரைகள் (12)


நா.சிவாஸ்

11-12-2014 00:14

நான் அன்று 18 ஆவது அரிசியல் அமைப்பு திருத்தத்துக்கு கையை உயர்த்தியதை இட்டு இன்று கவலை அடைகின்றேன் .நாட்டு மக்களுக்கு நான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோருகிறேன் ** என்று .ஆனால் நான் ஒரு அரசியல் வாதி அல்ல .சமூக வாதி .எனக்கு எந்த ஒரு பிரபலியம் ஒ அன்றில் மலர் மாலையோ இல்லை வாழ்த்தோ தேவை படாது .சரியென பட்டத்தை எவருக்கும் பயமின்றி துநிச்சளுடல் சொல்பவன் .அதற்காக நான் சொல்வதை எல்லோரும் கேட்க வேணும் அதன்படி ஒழுக வேணும் என்று அழுங்கு பிடி பிடிப்பவனும் இல்லை அது சிலருக்கு பரம்பரை பரம்பரை ஆக மரபணுக்களால் (geans
களினால் காவி வர படும் குணாதிசியங்கள் அப்பா .அதுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது

பம்பல்Kமனோ - கலட்டி.
மனிதன் புனிதமாகும் இடம் இதுதான்!!!!
இந்தமனம் எத்தினைபேருக்கு வரும்??????


விசு க மனோகரன்

11-12-2014 08:21

அழுக்கு நிறைந்த உடைகளை நாங்கள் சவுக்காரம் போட்டு கழுவி தோய்ச்சு வெண்ணிற வெள்ளை வெளேர் உடு புடைவைகள் ஆக மாற்றுவது போல எங்கள் சிந்தனைகள் செயல் பாடுகள் எல்லாம் எங்களாலேயே சுய விமர்சனம் செய்ய பட வேண்டும் .என்னிடம் உள்ள +ve எவை -ve எவை என்று நாங்கள் எங்களயே எங்கள் மன சாட்சியை பிரயோகித்து வினா எழுப்பவேண்டும் எடை போட்டு நிறுக்க வேணும் .நான் செய்த + விட்ட தவறுகளுக்காக மனம் வருந்தி சம்பந்த பட்டவர்களிடம் மன்னிப்பு கோர வேணும் மனதை திறந்து .அதை தான் நான் இங்கு செய்தேன் .அதை உணர்ந்த அறிந்த இந்த நாவன்னா சிவாசு விற்கு நான் நன்றி கூறுகின்றேன் என் அடி மனதில் இருந்து


பலெர்மோ .தமிழ்கிறுக்கன்

09-12-2014 20:24

அன்று வேலி வெட்டிக் கொண்டு போவதற்கு இப்பிடித்தான் இருக்குமோ?

முதல் வசதின்மை காரணமாக வேலியை போட்டுவிட்டு சிறு பாதையால்
போகமுடியதென்று வேலி வெட்டியிருப்பார்கள்.

ஆனால் இன்றோ சுத்துமதிலை போட்டுவிட்டு பெரிய கேர் போட்டிருக்கின்றார்கள்
மதில் உடைக்கதேவையில்லை என்று.


மனோகரன்

10-12-2014 03:53

மாட்டு வண்டில் போக கூடிய தட்டி படலை இருந்த வீடுகளிலும் வேலியை வெட்டித்தான் கொண்டு போக வேண்டும் என்பது அன்றைய சம்பிரதாயம்


விசு க மனோகரன்

09-12-2014 15:32

நான் வெறுமனே இங்கு கிறுக்கும் கிறுக்கன் என்று யோசியாதேங்கோ .எண்ணூரை ஐயும் நான் நேசிப்பவன் .சும்மா பழய கதை பேசி காலத்தை கடத்தி எனது விளம்பரம் தேடி அலையும் அபலை அல்ல நான் .இன்றைய எங்கள் மூலிய தேவை என்ன ? அதுதான் அந்த குடி நீர் .இன்று குடி நீருக்காக நாங்கள் பண்டத்தெருப்பு சித்தன்கேணி எங்கும் அலைகின்றோம் சைக்கிளில் பிளாஸ்டிக் கான் களை கட்டி கொண்டு .வசதி உள்ளவர்கள் land மாஸ்டர் ஐ வாடைகக்கு அமர்த்தி சித்தன்கேணி பிள்ளையார் கோயிலுக்கு பொய் நல்ல தண்ணி அள்ளி கொண்டு வருகினம் பெரிய பிளாஸ்டிக் காங்களிலை
இன்று நான் கேட்ட பார்த்த உலக சேதி இப்படி சொல்லுகுது .மாலை தீவில் மழை நீரை சேகரித்து அவர்கள் வாழ்ந்தார்களாம் .இன்று நவீன தொழினுட்பம் பிரயோகிக்க பட்டு அவர்கள் கடல் நீரில் இருந்து நன்னீர் பெற்றார்களாம் .அந்த பிளான்ட் எதோ தொழில் நுட்ப கோளாறினால் இன்று இயங்க வில்லையாம் .அதற்கு இந்தியா பாகிஸ்தான் அவர்களுக்கு குடி நீர் வழங்க உதவ போகிறார்களாம்
நாங்கள் என்ன செய்கின்றோம் ?அன்று நல்ல தண்ணி அள்ள போனோம் வயல் வெளி எங்கும் சருவ குடங்களை புளியம் பலத்தில் மினுக்கி
இன்று கூட உவர் தண்ணி கிணத்து தண்ணிகளை கூட குடி நீர் ஆக்கும் தொழில் நுட்பங்கள் உள்ளன .நான் எத்தனயோ வெப் சைட் களை உழுது கொண்டு இருக்கின்றேன் இன்னும் சரியான responds கிடைக்கவில்லை .கிடைத்ததும் என் சொந்த செலவில் ஆவது கிணத்து நீரை உவர் இன்றி குடி நீர் ஆக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வேன் என் ஊரில் .அதற்கு எனக்கு ஒருவரும் பணம் பொருள் தர வேண்டாம் .அதற்கு பண்டிதர்களின் வழி காட்டலில் கோடிகள் கொட்டி கோபுரங்கள் கட்ட பல பக்தர்கள் எம்மூரில் .உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
என்ன பாடு பட்டாலும் என் ஊருக்கு நல்ல குடிநீர் வழங்கியே ஆவேன் நான் கண் மூடு முன்


விசு க மனோகரன்

09-12-2014 08:37

விட மாட்டார்கள் என நினைத்தேன் விட்டு விட்டார்கள் விட்டதற்கு அனந்த (infinity ) நன்றிகள் .தனி பட்ட ரீதியில் எவருடனும் மோதுவது எனது நோக்கம் அல்ல .அது எவராக இருந்த போதும் யதார்த்தங்கள் உள்ள படி கதைச்சு பேசி பறைய பட வேண்டும் .
இப்ப பாருங்கோ நான் கூட இன்னும் சொற்ப நாட்களில் ஊரில் செட்டில் ஆக முனைபவன் .சுத்து மதில் கட்டுவதை குறை கூறிய போதும் நான் கூட மூன்று வேலி எல்லாம் மதில் கட்டினேன் வேறு வளி இன்றி As there is no alternative .even if you like it or not you are compelled to some sort of things reluctantly .வேலி அடைக்க கூலிக்கு ஆளை பிடிக்க ஏலாது .ஒலைக்கும் பெரும் தட்டு பாடு .அப்பு உயிரோடை இருந்தால் ரண்டு போத்தில் கள்ளோடை அடிச்சு தருவார் .அவரும் போய் கன காலம்
நான் போய் மதில் கட்டலை பாக்க போனால் அங்கை என் வீட்டுக்கு
முன்னாலையும் அங்காலை சூட்டி கனகசபை வீட்டுக்கு முன்னாலையும் குப்பை கொட்டும் தளமாக உரு மாற்றம் பெற்று உள்ளது .ஆட்கொல்லி நோயான டென்குவிட்கு எதிராக பெரும் பிரச்சாரங்கள் .சித்தி விநாயகர் சன்ச மூக நிலைய ஆல மரத்திலை கலர் கலராய் போஸ்டரும் அடிச்சு கொழுவி கிடக்குது .
அங்கெ குப்பையில் ஷொப்பிங் பாக் .empty வியர் கானுகள் இன்னும் பல .மழைக்கு தண்ணி தேங்கி அது நுளம்பின் பண்ணை ஆகும் .இதை பற்றி சிந்திக்கும் யோசிக்கும் ஒருவரும் அங்கில்லை எனக்கு ஒரு உபாய மார்க்கம் தோன்றியது .
என்று நான் அங்கு போனேனோ அன்று ரண்டு கலர் பிரிண்ட் எடுத்து லமினடே பண்ணி மழை வெய்யலுக்கு தாக்கு பிடிக்கும் வண்ணம் கொளுவபோறேன் ரண்டு இடத்திலும் .ஒன்று என் படலைக்கு முன்னாள் .அடுத்தது சூட்டி வீட்டு படலைக்கு முன்னாள் .இரண்டும் அம்மன் கோயில் வளைவுகள்

**WARNING ** எச்சரிக்கை இவ்விடத்தில் குப்பை போடுதல் முற்று முழுதாக தடை செய்ய பட்டுள்ளது .இது மக்கள் குடி இருப்பு பிரதேசம் .மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் **
சிலர் நினைபினம் உது ஆரோ லூசு ஒண்டு எழுதி கிடக்குதடி .கொட்டடி குப்பையை அங்கினை எண்டு கொட்டுவினம் .நான் என்ன செய்வன் தெரியுமே ? என்ரை மதிலுக்கு பின்னாலை ஒளிச்சு இருந்து இப்பத்தியில் shop லிப்டேர்ஸ் ஐ CCTV கமராவிலை அமத்துமா போல என்ரை சைபர் shot இலை ரண்டு மூண்டு shot எடுத்து கொண்டு போய் குடுப்பன் இளவாலை பொலிசிலை .பிறகு மல்லாகம் கோட்டுக்கு போய் கட்டுவினம் காசை
எடை பங்கினை சன்னாசி கேணி பக்கம் கொண்டு போய் கொட்டுன்கோவன் உங்கடை குப்பையளை .அங்கு சனங்கள் குடி இருக்கவில்லை .அந்த கேணியும் இப்ப Refuse இனால் நிரம்பி விட்டது
**Refuse Management ** என்று ஒரு அலுவல் உண்டு .உங்கள் குப்பை கூளங்களை வகை படுத்துங்கள் .இலை /குழை/சருகு /கஞ்சல் /பேப்பர்களை வேறாக்குங்கள்.அதை நிலத்தில் மண்ணுடன் கலந்து தாழ்க்கும் போது கூட்டு பசளை கிடைக்கும் .மாட்டெரு வாங்க எக்கச்சக்கமான காசு வேணும் இப்ப .எனது
ஊரின் கடைசி பயணத்தின் போது மிக பிரபலியமான ஒரு நபர் .அவர் வெளிநாடு ஒன்றில் இருந்து வந்து ஊரில் மனைவியுடன் ரிலாக்ஸ் ஆக இருக்கிறார் .அவர் அரச /வேப்பம் இலையை கூட்டி ஒன்றாக்கி வாசிக சாலைக்கு முன்னாள் கொளுத்துகிறார் .என்மனம் கூட்டு பசளை பற்றி சொல்வோம் என்று நினைத்த போதும் அடி மனம் தடுத்தது பிறகு சொல்லுவினம் .உவனுக்கு லூசு போல .எதோ அளட்டுகிறான் என்று .கதைக்கும் போது அவர் சும்மா ஜோக் ஆக சொன்னார் இது கூட்டாட்டால் மனிசி எசுவாவாம்
அடுத்து ஷொப்பிங் bag புடவை கடையிலை சீலை போட்டு தந்த அந்த Bag எல்லாவற்றையும் வேறாக பிரித்து எடுங்கள் .அதை நீங்கள் வெட்டி தாட்டாலும் உக்க மாட்டுது .ஏழெட்டு பராபரை வரையும் அப்படியே இருக்கும் .அதை அழிக்க அவை எரிக்க பட வேண்டும் .அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பாரிய எரிக்கும் பொறிமுறை (INCENERATORS ) சிலவற்றை மீள் சுழற்சிக்கு (RECYCLING ) உட்படுத்தி மீண்டும் பாவிக்கலாம் .வீடுகளில் கூட மிக எளிய (SIMPLE INCENERATOR ) உருவாக்க முடியும் .பழைய ஒரு பீப்பாவில் அடியில் ஒரு துளை இட்டு (காற்று உட் புக ) எல்லாவற்றையும் கொட்டி நெருப்பை கொழுத்துங்கோ எல்லாம் எரிந்து ஒரு கொஞ்ச சாம்பல் மிஞ்சும் .சூழலும் பாது காக்க பட்டு நீங்களும் ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்து அடுத்த பரம்பரைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நீங்கள் வழங்க முடியும்
**எடே உதென்னடா உந்த லூசு எதோ அலட்டுகுதடா ** வாடா நாங்கள் போவோம் எங்கடை பிராக்கை பாத்து கொண்டு .வேறை வேலை இல்லையே எங்களுக்கு ???
ஹும் வந்து விட்டார் உவர் எங்களுக்கு சொல்ல !!!!!!!!!


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

09-12-2014 09:17

கட்டுரையை விட கருத்து நீளமா இருக்கு? LoL


விசு க மனோகரன்

10-12-2014 14:23

கருத்தின் நீள /அகலத்தை அளக்காமல் அதன் ஆழத்தையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ அண்ணை மாரே உந்த கிழடு என்ன சொல்ல றை பண்ணுகிறார் என்று .அங்கு நகை சுவையுடன் கூடவே சமூகத்தை அறிவூட்ட்டும் விழிப்புணர்வு கொள்ளள வைக்கும் பல சேதிகள் அங்கு இருக்கும் .அறிந்தவர்கள் அறிவர் அதை


விசு க மனோகரன்

11-12-2014 06:10

**'ஆழத்தை அறிந்து காலை விடு***
அது அழகிய தமிழ் மொழியில் உள்ள ஆழ்ந்த அர்த்தமுள்ள முது மொழி
அதன் -ve version இவ்வாறு
*** ஆழம் அறியாமல் காலை விடாதே (விடு---- விட்டு போட்டு உங்கினை கனபேர் மாச்சல் படுகினம் .அது வேறை கதை )
இது போலவே இங்கிலீசிளையும் ஒரு பழம் முது மொழி ஒன்று இவ்வாறு

**Think before Jump ** அதன் -ve version இவ்வாறு
***Jump before think ** think பண்ணாமல் Jump பண்ணி போட்டு ஆழ நீரில் நீந்த தெரியாமல் தத்தளிக்கும் பலரை என்வாழ்வில் கண்டுள்ளேன் .கை கொடுத்து உதவி கரை சேர்ப்போம் என்று உதவ போனாலும் ஏச்சும் பேச்சும் விழும் இப்பிடி
**வந்து விட்டார் உவர் என்னை கரை சேர்க்க .!! போம் காணும் உம்மடை வேலையை பாத்து கொண்டு .மனிசியோடை ஒரே அரிகண்டம் ஒரே அதை வேண்டி தா இதை வேண்டி தா எண்டு .கடன் தொல்லை தலைக்கு மேலை .இப்பிடியே தாண்டு முழுகி செத்து போவோம் எண்டாலும் அதுக்கும் விடுகிறாங்கள் இல்லை .வந்து விட்டார் என்னை காப்பாத்த .ஒரு ஒண்டரை லட்சம் கை மாத்தாய் கேக்கேக்குல்லை உவர் இல்லை எண்டு சொன்னவர் .அது என்ரை இளையவனுக்கு ஒரு I Pad வேண்டி குடுக்க கேட்டனான் .அந்தரத்துக்கு உதவாத உவர் வந்து விட்டார் இப்ப என்னை காத்தருள >>>>>>>>>>>


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

10-12-2014 14:39

சுருக்கமாக சொன்னால் ஈர்ப்பாக இருக்கும்.
'ஆழத்தை அறிந்து காலை விடு' என்பதுபோல் நான் முதலில் நீளத்தை பார்த்தே கருத்தை வாசிக்க முடிவெடுப்பேன். இங்கு நான் மட்டுமில்லை என்று நினைக்கிறேன்.


விசு க மனோகரன்

10-12-2014 07:28

கட்டுரையை விட கருத்து நீளமா இருக்கு?
உண்மைதான் என்ரை பொடியே அதற்கும் காரண காரியம் உண்டு அல்லே
நீளத்தை அளந்து அதற்கு ஏற்றால் போல கட்டுரையையும் கருத்தையும் ஒப்பீடு செய்து நீளத்தை வெட்டி குறைச்சு *எடிட் ** பண்ணுவோம் என்றால் எனது நீளம் அளக்கும் அந்த பட்டி கூட (measuring Tape ) எழுத்துக்கள் எல்லாம் அழிஞ்சு அரை குறையாய் தெரியுது .எனக்கும் வயது போக என்ரை நாடா /டேப்புக்கும் வயது போகும் அல்லே .அதுதான் போல எழுத்துக்கள் இலக்கங்கள் ஒண்டும் விளங்குகுது இல்லை
இருந்தும் நான் இங்கு என்ன எழுதி உள்ளேன் என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள் .குடிநீர் ஊருக்கு .மற்றும் பம்மாத்து பண்டிதர்களின் பம்மாத்துகளை விலா வாரியாக சித்தரிக்கின்றேன் .எதோ அன்று பலபேர் வந்து பல பிரயோசனமான கட்டுரைகள் + கருத்துக்கள் வழங்கினார்கள் .அதில் பலர் இன்று ஓடி ஒளிந்து விட்டார்கள் .ஒரு சில உன்னையும் என்னையும் போன்றவர்களை தவிர
நேரம் இல்லையாம் .பொருளாதார சுமையாம் .இன்னும் பல சறுக்கல் சாட்டுகள்
எல்லாம் யாம் அறிவோம் அதன் தார்ப்பரியங்கள் எது என்று எடே பொடியே
**வந்தவர் எல்லாம் தங்கி விட்டால்
இந்த இணையத்தில் நமக்கே இடமேது
வந்தவர் வரட்டும் போனவர் போகட்டும்
நாமென்றும் வருவோம் வாடிக்கை கள்ளு
றால் வேண்டு மா போல என்ரை ராசாவே
போனால் போகட்டும் போடா
இந்த இணையத்தில் எவரும் நிரந்தரமாய்
வந்தவர் இல்லை அதுதான் உண்மை
இருந்தும் பலபேர் ஒளிச்சு ஒளிச்சு வந்து
ஒழுங்காய் வாசிக்கினம் கண்டியே .


விசு க மனோகரன்

09-12-2014 19:50

வந்து விட்டா என்ரை இஞ்சாருங்கோ இந்த லோகத்திலை இல்லாத மாய மையலுகள் போட்டு கிலோ கணக்கிலை பட்டர் தடவி தொன் கணக்கிலை ஐஸ் வச்சு என்னை மருட்டி விழுத்தி எதோ வேண்டுவிக்க என்னை கொண்டு .என்னடி வேணும் சொன்னானடி /புது பற்றநிலை சீலை ஏதும் வந்து கிடக்குதே ?
அவள் :: அதில்லையுங்கோ இது வேறை சாமானுங்கோ .ஊரிலை கோயில் ஒண்டிலை திருவிலாவுங்கோ .நான் விரதமுங்கோ .இண்டைக்கு மச்சம் இல்லையுங்கோ .உருளை கிழங்கு பிரட்டட்டோ ?இல்லாட்டில் கத்தரிக்காய் வதக்கி ஒரு குழம்பு வைக்கட்டோ எண்டு சொல்லுங்கோவன்
நான் :: என்னத்தை பிரட்டி உருட்டி என்டாலும் செய்யடி .என்ன வேணும் எண்டு சொல்லண்டி .அவள் :: அதுவுங்கோ உங்கினை குழந்தையள் குஞ்சு குருமன் எல்லாம் இப்ப எதோ I pad எண்டு வைச்சு கொண்டு தடவி திரியுதுகள் .அதிலை எனக்கும் ஒண்டு வேண்டி தாருங்கோவன் .
நான் :: எடியே எனக்கும் அது என்னெண்டு தடவு கிரதேண்டு இன்னும் விளங்கேல்லை .நீ வேண்டி என்ன செய்ய போறாய் ? எல்லாரும் தடவுகினம் எண்டு நீயும் தடவ போறியேடி ?
அவள் :: நீங்கள் வேண்டி தந்து போட்டு பாருங்கோவன் .பிறகு உங்களுக்கும் சொல்லி தருவன் .நான் என்ரை பொடி பெட்டையளிட்டை கேட்டு பளகுவன் என்னெண்டு தடவுகிரதேண்டு .பிறகு பாருங்கோவன் என்ன நடக்கும் எண்டு
நான் :: சரி சரி வேண்டி தாறனடி .பிறகு வேண்டி குடாட்டில் ஒண்டில் குழம்புக்கு உப்பு குறையும் சிலவேளை கூடும் .என்ன செய்ய எல்லாம் இந்த சன்சார மாயா வாழ்வில் சம்சாரன்களை திருப்தி படுத்தியே ஆகவேண்டும் .எடியே இண்டைக்கு பாவக்காய் வதக்கி ஒரு குழம்பு வையடி .நான் வாடிக்கை கள்ளுக்கு போவிட்டு வாறன் .
அவள் :: இஞ்சாருங்கோ கள்ளாலை வரேக்கை மறந்து போகாமல் அவன் குண்டன் கடையிலை அரை கட்டு இந்தியா அப்பளமும் வேண்டி கொண்டு வாருங்கோ
நான் ::சரி சரியடி வேண்டியாரனடி .வேண்டியராட்டால் உன்னட்டை தப்பெலுமேடி??எல்லாம் முட்பிரப்பிலை நான் செய்த பாவமடி .உத்தரிக்க வேண்டியது தானடி ............**********##########%%%%%%%%5&&&&&&&&&&&&


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி