காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

ஆறாவது முட்டாள்.




மொத்த வருகை: 141 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (4)


சிரித்திரன்

10-01-2015 06:21

ரமனன் : டாக்டர்... நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடிஞ்சுதா?
டாக்டர் : இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?
டாக்டர் : என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்.
-----------------------
தை1

அம்மாஞ்சியும் அவன் நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டு
கடலுக்குள் போனார்கள். முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.
பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனார்கள். அங்கு நிறைய மீன் கிடைத்தது. அம்மாஞ்சியின்
நண்பன் சொன்னான் " நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்" என்றான். அம்மாஞ்சியும்
சந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் அம்மாஞ்சின் நண்பன் உடனே ஒரு சந்தேகத்தை
கிளப்பினான். "நாளைக்கு வர்ரதுக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கறது...?"
என்றான். கொஞ்ச நேரம் யோசித்த அம்மாஞ்சி சடாரென கடலுக்குள் குதித்து மூழ்கி கொஞ்ச
நேரம் கழித்து மேலே வந்தான். "எங்கடா போயிட்டு வர்றே..? எனகேட்ட நண்பனுக்கு
அம்மாஞ்சி பெருமையாக சொன்னான். " படகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டு
வர்ரேன்..நாளைக்கு இதை வச்சி இந்த இடத்துக்கு வந்துடலாம்".

கதை2

அம்மாஞ்சி எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி
குறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க அம்மாஞ்சி முடிவு
செய்தான்.ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான்.
அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் 'ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க...? ' என்றார்
"ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல..."
"ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா...?"
"அதுக்குதான் பணம் வச்சிருக்கேனே..."
"பணத்தை யாரும் எடுத்துட்டாங்கன்னா..?"
"பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்...அதிலேர்ந்து எடுத்துப்பேன்.."
"அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா...?
"நான் என்ன முட்டாளா....?அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்..."என்று
பெருமையாக சொன்னான் அம்மாஞ்சி.

கதை3

ஒரு டாக்சீல ரெண்டு பேர் ஏறினாங்க... அப்படிக்கா போயிக்கிட்டே இருக்கும்போது.. பின்னால உக்காந்திருந்தவங்கல்ல ஒருத்தரு திடீர்னு டிரைவர் தோள தொட்டு "லெப்டுல போப்பா" ன்னு சொல்லியிருக்கார்...

அந்த டிரைவர் அலறி அடிச்சிக்கிட்டு வண்டி கண்ட்ரோல விட்டுட்டான்... நல்ல வேளை.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்த எதிரா வந்த லாரியில கொண்டு போயி வண்டிய மோதியிருப்பான்...

வண்டிக்குள்ள எல்லாரும் ஒரு நிமிஷம் சைலண்ட் ஆகிட்டாங்க...
அந்த டிரைவர் திரும்பி பார்த்து சொன்னான்..." யப்பா இனி ஒரு தடவை இப்படி செய்யாதே... நான் ரொம்ப பயந்துட்டேன்..."

உடனே பின்னாடி உக்காந்திருந்தவன் சொன்னான் "சாரிப்பா!!.. ஒரே ஒரு தடவை தானே தட்டினேன்... அதுக்கே நீ இப்படி பயந்துக்குவேன்ணு தெரியாது..."

அதுக்கு அந்த டிரைவர் சொன்னான் " உன் பேர்ல தப்பில்லப்பா...
நான் இன்னைக்கு தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்...
இதுக்கு முன்னாடி 25 வருஷமா பிணம் எடுத்துட்டு போற வண்டில டிரைவரா வேலை பார்த்தேன்!!!"

இது எப்படி இருக்கு...


லொள்ளுபாண்டி

08-01-2015 10:03

அப்பிடியே எங்களையும் முட்டாள் ஆக்கிட்டிரே ஒய்


மனோகரன்

09-01-2015 10:35

அதொண்டும் இல்லை லொள்ளு .உவைக்கு கொஞ்சம் இடம் குடுத்தால் தலைஇலையும் ஏறி குந்துவினம் குட்டுவினம் .அதுக்குத்தான் சொல்லுகிறது **குழந்தை பிள்ளைக்கும் குட்டி நாய்க்கும் அளுவுக்கு அதிகமாக இடம் குடுக்க படாது **எண்டு .இது சரியாய் **ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியாய் ஆளையே கடிச்ச கதை மாதிரி அல்லே கிடக்குது .வளர்த்த கிடாய் வளர்த்தவனின் (வாசகர்கள் ) நெஞ்சிலை பாய்ஞ்ச கதை மாதிரியும் கிடக்குது .கடைசியிலை கொண்டு பொய் எங்கள் எல்லாரையும் முட்டாள் ஆக்கி போட்டார் .
மனிசி காறி தேத்தண்ணியும் வடையும் கொண்டுவாறாள் .இண்டைக்கு வெள்ளி விரதம் அல்லே .எக்கணம் இதை கண்டால் வலு புளுக படுவாள் .சரியாய்த்தான் அந்த பொடி சொல்லி கிடக்குது எண்டு .கிட்ட வர முதல் மூட போறன் கண்டியலே


சிரித்திரன்

08-01-2015 03:32

முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?
நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
ஆம் மன்னா...!
“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ..?”
“இல்லை மன்னா...! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
“தொடரும்” என்றார் மன்னர்.
“மன்னா..! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
“சரி அடுத்து”
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”
“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”
“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”
மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.
””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.
ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.
“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.
“சரி எங்கே முதலாவது முட்டாள்..?”
அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இணையத்தில் இந்த கதையை படித்துக்கொண்டிருக்கும் வாசகன்(நீவிர்) தான் நாட்டின் மிகப் பெரிய முட்டாள் .


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி