காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

ஊர் கூடி தேர் இழுத்த நாங்கள் - தமிழ் கிறுக்கன்.


தமிழ் கிறுக்கன் - பலர்மோ.மொத்த வருகை: 1608 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (7)


அன்டன் மனோகரன்

30-09-2015 19:18

சத்தியத்தின் தேடல்களும் பதிவும் .உள்ளதை உள்ளபடி ஒளிவு மறைவேதும் இன்றி மிக துணிச்சலுடன் (எடை இப்பிடி எழுதினால் இஞ்சை உள்ளவங்களிட்டை கிளிதான் வேண்ட வேண்டி வரும் என்று பயந்து போகாமல் ) அழகு தமிழில் சக்கிலியன் எனும் பெயரில் கிறுக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .**உள்ளதை சொல்வதற்கும் தரையில் குந்துவதட்கும் எவருக்கும் பயப்பட தேவை இல்லை .அது ஒரு சிங்கள முது மொழி .
பல வருடங்களுக்கு முன் வெளிநாடுகளில் இருந்து வரும் என் உறவுகளில் சிலர் என்னிடம் இவ்வாறு சொல்வார்கள் .ஏனப்பா /எனன்னை இஞ்சை இருந்து கொண்டு மாச்சல் படுகிறியல் ? உங்களை மாதிரி ஆக்கள் அந்த பக்கம் வந்தால் என்ன மாதிரி சீவிக்கலாம் ........!!!!!!!!
எனது பதில் இவ்வாறு .உங்கடை நாடுகள் விசாவும் தந்து திக்கற்று சிலவும் தந்து வந்து சேர்ந்ததும் கவுரவ பிரசா உரிமையும் தந்து ஒரு கார் பங்களா மாதா மாதம் சிலவுக்கு கொஞ்ச ஈரோவோ லோடரோ வேறை எதோ எல்லாம் தந்து கூப்பிட்டாலும் இந்த செகம் அளிஞ்சும் வரான் இவன் .லோச்சில் இருந்து கொண்டு பல பேர்களை வெளிநாடு அனுப்பிய என் உறவு ஒன்று (இப்போ அவர் கனடாவில் என்னிடம் கேட்டார் *அண்ணை சுவீடனுக்கு ஒரு திக்கற்று கிடக்குது போங்கோவன் அண்ணை ** ஐயோ தம்பி ஆளை விட்டால் காணுமடா தம்பி .
சக்கிலியன் என்ற பெயரும் நன்கே .இந்தியாவில் தலித்துக்கள் .யாழ்ப்பாணத்து வீர மற தமிழன் சாதிய வெறி பிடித்து இழி குலத்தோர் என்று அவர்களை வாட்டி எடுத்து மிதித்து புளிந்தேடுத்த மேட்டு
குடிகள் தாம் உயர் குலம் என்று தம்பட்டம் அடித்தோரின் வாரிசுகள் உங்கினை போய் என்ன செய்கின்றார்கள் என்பதை யாம் நன்கே அறிவோம் .
ஒரு கூழோ கஞ்சியையோ குடிச்சு நாம் பிறந்த ஊரில் நாட்டில் வாழும் வாழ்வு போல் எங்கும் உண்டோ ?
தாய் /தாய் நாடு /தாய் மொழி அதுதான் போல இங்கிலீசிலை தாய்க்கு Mother தாய் மொழிக்கு Mother Tongue தாய் நாட்டுக்கு Mother Land எண்டு சொல்லுகிறவங்கள் போல


லொள்ளுபாண்டி

30-09-2015 23:23

நாங்கள் புலம் பெயர் நாட்டில் கழுவி துடைச்சு எடுத்த காசுலதான் உங்க உள்ள பிள்ளயள் படிச்சு கிழிச்சு இப்ப எங்களை நாறாடிக்கினம் .1980 களில் எமது கிராமம் எப்படி இருந்தது ,,,,இப்போ எப்படி இருக்கிறது ,,நல்லாய் யோசித்து பார்க்க வேண்டும் ஒரு சிலர்ற குதத்தை வைத்து எல்லா புலம் பெயர் குடும்ப தியாகி களையும் இடை போட கூடது ,,,,,நரக வாழ்க்கை வாழுகிறோம் யாருக்காக ..எல்லாம் உங்களுக்காக .....இப்படி எழுதுபவர்கள் எல்லாம் நேற்று முளைத்த காளான்கள் அவர்கள் வளர்ந்ததே புலம் பெயர் உறவினர் உதவியால் தான்


அன்டன் கந்தையா மனோகரன்

02-10-2015 18:33

&&&&&&&&&&&&&&&&& புல (ன் ) ம் பெயர்ந்தவர்கள் &&&&&&&&&&&&&&&&&&&&&7

புலம் பெயர் தமிழர் என்ற அடை மொழியுடன் மேற்குலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களை பலம் மிக்க சக்தியாகவும் ,இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் மேய்ப்பர்கள் /நல்லாயர்கள் (Good Shepherds ) மற்றும் விடுவிப்போர் (Salvationist ) தாமே என்று ஒரு கற்பனை உலகிலே வாழ்கின்றனர் என்பதே உண்மை .
உதாரணமாக புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் என அழைக்கப்படும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு /ஈழ தமிழர் அவை /நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற பல்வேறு அமைப்புக்களும் தங்களை சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருந்தனர் .இந்த ஒளி வட்டங்களை எல்லாம் கடந்த பொது தேர்தலில் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக தகர்த்து எறிந்து விட்டனர் .
யார் இந்த புலம் பெயர் தமிழர்கள் என்பதை இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர் .
1980 களின் பின் யுத்தம் ஆரம்பித்த போது அதை சாட்டாக வைத்து மேற்குலக நாடுகளுக்கு பிழைப்பிற்காக போனவர்கள் தான் இவர்களில் பெரும்பாலானவர்கள் . (புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களில் 20 % ஆனவர்கள் மட்டுமே உயிர் ஆபத்தால் தம் சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள் .மிகுதி 80 % ஆனவர்கள் சொத்து சேர்க்கவும் சொகுசு வாழ்விட்குமாக மேற்குலக நாடுகளை நாடி சென்றவர்கள் .
இந்த புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் மேற்குலக நாடுகளில் பொய் வாழ்க்கை வாழ்வது மட்டுமல்ல ,விடு முறை என தமது சொந்த ஊருக்கு சென்றும் (பனிப்புலம் /கலட்டி /காலையடி /சாந்தை உட்பட ) அங்கும் பொய்யான பகட்டை காட்டி விட்டே திரும்புகின்றனர்
இங்கு பட்டங்கள் பெற்றவர்கள் ஈறாக அங்கு சுத்திகரிப்பு தொழிலாளிகளாகவும் ,உணவகங்களிலும், வயோதிபர் இல்லங்களிலும் வேலை பார்த்துக்கொண்டு வட்டிக்கு பணம் எடுத்து பிறந்த நாளை கொண்டாடும் முட்டாள் +மோட்டு +மூட சமூகமாகவே புலம் பெயர் தமிழ் சமூகம் காணப்படுகின்றது .
வெளி உலகிற்கு தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என காட்டிகொள்வதட்காக வங்கிகளில் கடன் பெற்று பூ புனித நீரை ஆட்டும் விழா /50 ஆவது பிறந்த நாள் 60 ஆம் கலியாணம் /வளை காப்பு கட்டுதல் இன்னும் பல கொண்டாடி மகிழ்ந்து அவதி படுகின்றனர் .பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க கனேடிய நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவல வாழ்க்கைக்கு பழக்க பட்டு விடுகின்றனர் .பெண் பிள்ளைகள் பூப்பெய்வது என்பது ஒரு சாதாரண இயற்கை நிகழ்வு .மேற்குலகில் இதனை அடுத்த வீட்டில் உள்ளவர்களுக்கு கூட வெளிப்படுத்துவதில்லை ஆனால் நம்தமிழர் மேற்குலக நாடுகளில் தமது பிள்ளை பூப்பெய்தி 6 மாதமோ இல்லை ஒருவருடமோ இருவருடமோ கடந்த பின்பும் கூட பெரிய மண்டபம் எடுத்து விழா கொண்டாடுகின்றனர் .இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும் பண செலவில் ஹெலியில் அல்லது குதிரை வண்டியில் பெண் பிள்ளையை அழைத்து வரும் வேடிக்கையும் நிகழ்வதுண்டு .கனடா பக்கம் குளியல் அறை TUB இல் பசும்பால் நிறைத்து புஷ்பங்கள் இட்டு நீராட்டி ஏழு கன்னியர் குத்துவிளக்கேந்தி வர அனைத்து சம்பிரதாயங்களின் முடிவில் நான்கு மாமன் மார் ( 4 பேர் கிடைக்காத பட்சம் கூலிக்கு அமர்த்தும் மாமன்மார் ) பல்லக்கில் சுமந்து செல்லும் அத்தை கூத்துகளும் அரங்கேறுகின்றன .
ஒரு வருடத்திற்கு ஒருமுறை அன்றில் இருவருடத்துக்கு ஒரு முறை வங்கியில் கடன் பட்டோ இல்லை அயலவர்களிடம் கடன் பட்டோ இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ வருகின்றனர் .இவற்றுள் அனைத்து உண்மைகளும் இங்கிருப்பவர்களுக்கு மறைக்க படுகின்றது .இருட்டடிப்பு செய்ய படுகின்றது .தாம் புலம் பெயர் நாடுகளில் எதோ மன்னர்கள் போல வாழ்வதாக பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர் .
இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி சிங்கார சீமை என்ற விம்பம் ஏற்படுத்த பட்டுள்ளது அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மாயையில் மக்கள் வாழ்கின்றார்கள் .இந்த எதிர்பார்ப்பை புலம் பெயர்நாடுகளில் இருந்து இலங்கைக்கு விடுமுறையில் வருபவர்கள் இங்குள்ளவர்களை திருப்தி படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
விடுமுறையில் வரும் ஒருவருக்கும் இலங்கையில் இருக்கும் சாம்மானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாக கொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகின்றது தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம் பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்பு திரையை ஏற்படுத்து கின்றது
பயண சீடிட்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கி கடனிலோ ,கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடடத்த வேண்டிய நிலைக்கு தள்ள படுகின்றார் .முதல் படியாக இங்கு வந்ததும் மற்றவர்களுக்கு தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டையை பயன் படுத்தி விலை உயர்ந்த ஆடை அணி கலங்கள் வாங்குவார் இங்கு வந்ததும் உறவினர்களுக்கு பண உதவி /பரிசு பொருட்கள் /கோயில் திருவிழாக்களை பொறுப்பெடுத்தல் .திருப்பணிகளுக்கு அள்ளி வழங்கல் இன்னும் பல அனைத்தும் கடன் அட்டையை பயன் படுத்தியே .
துப்பரவு தொழிலாளியாக புலம் பெயர் நாடுகளில் வேலை செய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் கலரால் பிரமித்து போகும் உள்ளூர் வாசிகள் புலம் பெயர் நாடுகள் தொடர்பாக கனவுகளில் ஈடு பட ஆரம்பித்து விடுகின்றனர் .மண்ணோடு பற்றற்ற ஐரோப்பிய அமெரிக்க மேற்குலக கனவுகளில் வாழுகின்ற /சஞ்சரிக்கின்ற உதிரிகளின் சமூகம் இங்கே உருவாக்கி விடுகின்றது
அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த ஒருவர் சொன்னார் இப்போது இங்கே அனைவரிடமும் மிக விலை உயர்ந்த கை அடக்க தொலை பேசிகள் தான் காண படுகின்றதாம் .மோட்டார் சைக்கிள் இல்லாத வீடுகளை காண முடியாதாம் .இங்கு வந்தால் உறவினர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் பணம் கொடுக்க வேண்டுமாம் .10,000 குறைவாக ஒருவருக்கும் கொடுக்க முடியாதாம் .4 லட்சம் ரூவாய்கள் அதற்கு மட்டும் செலவாகி விட்டதாக கவலயுடன் சொன்னார் அவர் அங்கு கடன் பட்டே இலங்கைக்கு வந்திருந்தார் .
தாய் நாட்டில் விடுமுறையை முடித்து புலம் பெயர் நாடு நோக்கி திரும்பும் ஐரோப்பிய கனேடிய தமிழன் தான் பட்ட கடன் அட்டை கடனை திருப்பி செலுத்த இன்னும் பல ஆண்டுகள் தேவை .
இங்கு வரும் புலம் பெயர் தமிழர்கள் (இவர்களை புலன் பெயர்ந்தவர்கள் என்று அழைப்பதுதான் சால பொருந்தும் ) அறை குறை ஆடைகளுடன் வருகின்றனர் .முக்கியமாக பெண்பிள்ளைகள் மிக மோசமாக அரை நிர்வாண கோலத்தில் கடற்கரை (காரைனகர் கசூர்ண ) மற்றும் பூங்காக்களில் உலா வருகின்றனர் .இதனை பெற்றோர்கள் பெருமையாக கருதுகின்றனர் .அண்மையில் சுவட்சர்லாந்து லவுசான் மாநிலத்தில் உள்ள பெண் ஒருவர் தனது மகளை இலங்கைக்கு அழைத்து வந்திருந்தார் அவரின் வயதுக்கு வந்த மகள் உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு இலங்கையில் எடுத்த படங்களை முக நூலில் வெளிவிட்டிருந்தார் .ஏன் உங்கள் மகளுக்கு ஆடைகள் வாங்கி கொடுக்க பணம் இல்லையா ?என ஒருவர் கேட்டிருந்தார் . இத்தனைக்கும் அந்த பெண் மணி தமிழ் தேசியம் பற்றி தொண்டை கிழிய கொக்கரிப்பவர் .அந்தோ பரிதாபம் .
கோடை விடுமுறையில் வருபவர்கள் உள்ளூரில் பொருட்களின் விலை அதிகரித்து விட்டதாக ஆதங்க பட்டனர் .அவர்கள் உள்ளூர் சந்தைக்கு செல்லும் பொது தாங்கள் வெளிநாடு காரர் என்பதை காட்டும் பொருட்டு ஆடைகளையும் அணி கலங்களையும் சோடனை களையும் செய்தே போகின்றனர் .
500 ரூபா விற்கும் மீனுக்கு 1000 ரூபாயை கொடுத்துவிட்டு மிகுதியை வைச்சிருங்கோ என்று கூறி செல்பவர்களும் உண்டு இதனால் கோடையில் இறால் மீன் கணவாய் நண்டு மரக்கறி வகை அனைத்தும் விலை ஏறிவிட்டதாம் எல்லாம் இந்த புலன் பெயர்ந்தவர் தான் காரணமாம் .இது இன்று நேற்று நடப்பவை அல்ல பல்லாண்டு காலமாய் அரங்கேறு பவை
அன்று 60 களின் கடை கூற்றில் திருமலையில் நான் பள்ளி மாணவன் .உப்புவெளியில் இலங்கையிலே மிக பெரிய கண்ணாடி தொழில் சாலை எம்மூர்வர் பலர் அங்கு பணி. தினசரி கோட்டா விற்கு மேலதிகமான உற்பத்திக்கு ஊக்கிவிப்பு கொடுப்பனவு (Incentive ) மேலதிக கொடுப்பனவு (ஓவர் டைம் ) சேர நல்ல தொகை கையில் .எடுத்து கொண்டு போவர்கள் .வட கரை வீதி (North Coast Road ) --அந்த விதிக்கு அருகே உள்ள கடலில் இருந்து கொண்டே இதை அடிக்கின்றேன் --- புஹாரி வரப்பிரகாசம் பிடவை கடைகள் சென்று நல்ல தரமான சாரம் சேட்டுகள் வாங்குவார்கள் .வாங்கி முடிந்து பணம் கொடுக்கும் போது அவர்கள் மிச்சத்தை வைச்சு கொள்ளுங்கோ என்றார்கள் .இதை எனக்கு சொன்னது புஹாரி கடை முதலாளியின் மகன்.என் Class Mate கால போக்கில் வேலை நிறுத்தம் செய்து தொழில் சாலை கதவை இழுத்து பூட்டி விட்டார்கள் .
இன்னொரு கதை அகதிகள் படை எடுப்பு இந்தியா நோக்கி .வேதாரணியம் அடிய பகுதி மற்றும் ராமேஸ்வரம் எங்கும் முகாம்கள் .ஒருவாறு செட்டில் ஆகி வெளி நாட்டு பணமும் மெல்ல மெல்ல வர தொடங்க மீன் சந்தைக்கு போனால் சொன்ன விளைக்கும் மேலே கொடுத்து வாங்கும் ஒரு நிலை .அதனால் உள்ளூர் காரர் போனால் **போய்யா ஒனக்கு மீன் கெடயாது .அது மீன் வாங்க சிலோன் காரங்க தாய்யா.சொன்ன வேலைக்கு மேலாலை குடுப்பான்கையா .
அடுத்த கதை எங்கடை பனை சந்தையிலும் அதே கதை தான் .மெல்ல மெல்ல மீன்கள் வந்திரங்க நோட்டம் விடுவினம் பொம்மனாட்டிகள் நல்ல அறக்குளா /பாரை/ஷீலா வகையை கண்டினமோ உடனை ஒரு பாய்ச்சல் உமல வாயை துறந்து எடை சொறி இப்ப எங்கை உமல் .பிளாஸ்டிக் பைய துறந்து **என்ற்றைக்கை போடு /என்றைக்க போடு எண்டு ஒற்றை காலிலை நிப்பளவை அது அவா பிடிச்ச மாற தமிழனின் ஜீன்ஸ் .தான் வாழ்ந்தால் காணும் தான் திண்டால் காணும் அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் நோ புறப்பிளம்.கொழும்பிலும் அதே கதைதான் அன்றிலிருந்து இன்றுவரை ரயில் ஓடிய அந்த காலத்தில் சீற்று பிடி சண்டை அமளி அடி பிடியிலும் கிளாலி போட் இல் ஏறுவதிலும் அடி பிடி .சிலவேளை நான் முந்தி நீ முந்தி எண்டு ஏற வெளிக்கிட்டு போட் பிரளவும் பாத்துது .நான் ஒரு ஓரமாய் நின்று ரசிப்பது உண்டு மானமுள்ள தமிழனின் வீர தீர செயல்களை .சரி இனி மிகுதிக்கு வருவோம்
மரக்கறி மீன் கடைகளில் மட்டுமல்ல உடுப்பு கடை மளிகை கடைகளிலும் வெளிநாட்டு காரரை கண்டவுடன் கடை காரர்கள் விலைகளை உயர்த்தி விடுகின்றனர் .இதனால் உள்ளூர் மக்கள் பொருள் பண்டங்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ள படுகின்றனர் .
இரண்டு மூன்று கிழமைகள் ஊரில் நின்று கலர் காட்டி ஷோ காட்டி கலக்கி போட்டு அங்கு சென்றதும் தங்கள் கடன்களை அடைப்பதற்காக போராடுவதும் அதனால் குடும்பங்களுக்குள் ஏற்படும் தகராறும் பொலிசு வரை போகுது என்று இடையில் கேள்வி வெளிநாடுகளில் இருந்து இங்கு வருபவர்கள் போடும் ஆட்டங்களினால் மேற்குலக நாடுகளில்வால்பவர்கள் சொர்க்க புரியில் வாழ்கின்றனர் என எண்ணிக்கொண்டு இங்குள்ள இளைஞர்கள் தங்கள் அருமந்த தொழில்களையும் விட்டு விட்டு வெளிநாடு செல்ல துடியாய் துடிக்கின்றனர் .இளம் குமார் பெண்கள் கட்டினால் வெளிநாட்டு மாப்பிளையைத்தான் கட்டுவேன் என்று தவம் கிடக்கிறனர் .ஆனால் இந்த வெளிநாட்டு மாப்பிளை மோகம் கொண்டு ஐரோப்பிய நாடுகள் சென்ற பல பெண்கள் தம் வாழ்க்கையை தொலைத்து விட்டு கண்ணீரும் கம்பலையுமாய் அலைந்து அலைக்கழிந்து சீரழிவது ஊரில் யாருக்கும் தெரியாது
மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளும் ,சில தனி நபர்களும் சரி இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்பட வேண்டும் , 5 ஆம் கட்ட ஈழ போர் ஆரம்பமாக வேண்டும் என்றே விரும்புகின்றனர்
இதன் மூலமே எஞ்சி உள்ள தங்கள் உறவினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து கொள்ள முடியும் என்றும் மக்களிடம் பணங்களை அறவிட முடியும் என்று நம்புகின்றனர் .
இத்தகைய போலிகளே இலங்கையில் உள்ள தமிழ் மக்கள்தங்கள் சொற்படி நடக்க வேண்டுமென சன்னதம் ஆடு கின்றனர்.
வெளிநாடுகளில் உள்ளவர்களின் இத்தகைய போலி தன்கள் இங்கு உள்ளவர்களுக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் இடையே பெரும் இடைவெளியை உருவாக்கி இருப்பது உண்மையே.
இதற்கு நல்ல உதாரணம் அண்மையில் நடந்து முடிந்த போது தேர்தல் .இந்த தேர்தலில் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளும் ,சில புலம் பெயர்ந்தவர்களும் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு padu தோல்வி அடைய என்றும் மிக பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர் .அதற்காக பெரும் தொகைஇ பணனத்தையும் அள்ளி வீசினர் .
ஆனால் மக்கள் இவர்களை முற்றாக நிராகரித்து விட்டனர் .புலம் பெயர்ந்த மக்கள் யாரை தோற்கடிக்க கோரினார்களோ அவர்களை மக்கள் அமோக ஆதரவளித்து வெற்றி பெற வைத்திருக்கின்றனர் .
இந்த பாடங்களில் இருந்து புலம் பெயர் தமிழர் கற்று கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன .இதனை கற்று கொள்ள வில்லை என்றால் இரு பகுதியினருக்குமான இடை வெளி மேலும் மேலும் அதிகைரிக்கவே செய்யும்

பி .கு :: மேலே உள்ள அனைத்தும் என் சொந்த ஆக்கமோ அன்றில் கருத்துக்களோ அல்ல .அன்றாடம் கண்டதும் கேட்டதும் அனுபவித்ததும் பத்திரிகை கட்டுரைகளில் இருந்து சுட்டவை மற்றும் புலம்பெயந்தோர் ஊர் வரும் வேளை உறவுகள் /நண்பர்களுடனான உரையாடல்களின் போது பிச்சு பிடுன்கியவை இன்னும் பலவற்றின் குளையல்கள் + கலவைகள் .ஏதும் குறை குற்றம் இருந்தால் துணிச்சலுடன் விமர்சியுங்கள் .சில அரசியல் கருத்துக்களுடன் எனக்கு உடன் பாடு இல்லை எனது அரசியல் சித்தாந்தம் முற்றிலும் வேறு பட்டது .முதல் முறையாக சென்ற சநாதி பதி தேர்தலில் மட்டுமே எனது வாக்கை பிரயோகித்தேன் மைத்திரி அதிபர் ஆக வேண்டும் என்பதற்காக அல்ல .இராச பக்ஷ தோற்கடிக்க பட வேண்டும் என்பதற்காக .


லொள்ளுபாண்டி

02-10-2015 23:42

ஒற்றுமை ...தமிழர் ஒற்றுமை ,,,புலம் பேஜர் தமிழர் இழத்தமிழர்,,,நீங்களே எங்களை இப்படி பிரித்து யோசித்து பேசும் போது முஸ்லிம் தமிழர் எவ்வளவு துரம் ....இழந்ததையும் கடந்ததையும் யோசிக்கவேண்டும் ,,இனிமேல் நல்லதே நடக்க வேண்டும் என்று யோசிக்கவேன்ன்டும் ,,,,நீங்கள் சொன்ன கட்சி தலைவர்கள் எல்லாம் ஒரு கட்ச்சியில் இருந்து தான் எம் இனத்தை வேர் அறுத்தவர்கள் இனியும் அறுக்க மாட்டார்கள் என்று என்ன நிட்சயம் ............ஆயுதம் ஏந்தியவர்களும் ,,புத்த சாமி மாறும் அரசியலுக்கு வராமல் விட்டாலே நாடு முன்னேறும்


அன்டன் மனோகரன்

01-10-2015 18:11

லொள்ளு லொள்ளு **உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல .நீ எழுதாத எழுத்தும் எழுத்தல்ல நீ வாராத பண் கொம்மும் இணையமல்ல .நீ இல்லாமல் நானும் நானல்ல ஹா ஞா ஆ ஹா ....
எங்கயப்பா போய் இருந்தாய் இத்தனை நாளும்
லொள்ளு நீ என்ன எள்ளெண்ணை ஊத்த எள்ளு சாக்குடன் பிரையன் பற்று பக்கம் போனாயோ ?அன்றில் இப்போ விதைப்பு காலம் .குப்பையை வண்டிலில் ஏத்தி வயலில் கொண்டு போய் கொட்டி சிறு சிறு கும்பமாய் பிரித்து போட்டு பின் நார் கடகத்தில் போட்டு வயல் முழுதும் குப்பை சிந்தி பின் ஏர் பூட்டி மாடு கட்டி சால் உழுவை உழுது பின் மறுப்பு உழுவை உழுது .விதைப்பு மழை பெய்யும் வரை காத்திருந்து நெல் விதைத்தாயோ ?இல்லை அங்கு வயல் வெளிக்கு நல்ல தண்ணி அள்ள வரும் எம்குலத்து வந்சியருக்கு சருவ குடம் பழப்புளி + எலும்பிச்சம் பழ தோல் + அடுப்பு சாம்பல் போட்டு தேச்சு மினுக்கி ஓட்டை வாளியாலை தண்ணி அள்ளி குடுத்தாயோ நானறியேன் (இப்ப ஒருத்தரும் பித்தளை குடங்கள் பாவிப்பதில்லை .எல்லாம் பிளாஸ்டிக் .பழைய ஐட்டங்கள் எல்லாம் அசு பழ வான்காரருக்கு வித்து போட்டு தாயும் மேளுமாய் அசு கிரீம் வேண்டி நக்குகிறாலவை.இல்லை இல்லை குடிக்கினம் .நான் அந்த காலத்திலை உந்த குடம் மினுக்கல் +தண்ணி ஊத்தல் சப்போட்டும் செய்து பார்த்த ஆள் .ஆறேனையும் கரக்ட் பண்ணலாம் எண்டு .ஹூ ஹும் ஒருத்தியும் மசியெல்லை.

அதுசரி கதைக்கு வருவோம் ***ஒரு சிலரின் குற்றத்தை வைத்து கொண்டு எல்லா புலம் பெயர் தியாகிகளையும் எடை போடா கூடாது ** என்று உழாது .சிலர் என்பது பலர் என்று இருக்க வேண்டும் .அந்த தியாகிகளின் தியாக வேள்வியினால் அவர்கள் இங்கு உறவுகளுக்கு அனுப்பும் துட்டு என்ன பாடு படுத்து கின்றது என்பதையும் சற்றே சிந்திக்க வேண்டும் .அடிப்படை தேவைகளான இருக்க உறைவிடம் /உடுக்க உடை /உன்ன உணவு .அதன் பொருட்டு அள்ளி இறையுங்கோ .வேண்டாம் என்று சொல்லவில்லை .ஆனால் நீங்கள் உடலை வருத்தி உறக்கத்தை தொலைத்து கொட்டும் பணியிலும் உறையும் குளிரிலும் சம்பாரித்து அனுப்பும் பணம் இங்கு பத்தையும் செய்கின்றது .ஆடம்பர கோலங்கள் இல்லாதவனை தூண்டுகின்றது .வெளிநாட்டு தொடர்பேதும் அற்றவன் அது போல தானும் வாழ வேண்டும் என தூண்ட பட்டு பகல் கொள்ளை /வழிப்பறி /இரவில் வீடுடைப்பு
இன்னும் ஒரு படி மேலே போய் கையில் மது புட்டி .அடுத்த கட்டம் காமத்தின் விபரீதம் .கல்விக்கு பெயர் போன யாழ்ப்பாணம் திசை மாறி போகின்றது (எது எப்படியானாலும் கல்வியில் முன்னேறுபவர்கள் ஏறி கொண்டே இருக்கின்றார்கள் .அது மிக சொற்பம் ) சமூக ஒழுக்கம் /கட்டுக்கோப்பு சீரழிந்து கொண்டு போகின்றது முதியவருக்கு மரியாதை செய்தல் அறவே கிடையாது

என்றை அப்பு எங்கடை காலத்திலை வாத்தியை தூரத்திலை கண்டால் குலை நடுங்கும் எங்களுக்கு பயத்திலை .இப்ப என்னடா எண்டால் பிறவெட்டு கிளாசு முடிய வாத்தியும் இஸ்டுதேன்ட் உம ஒண்டாய் வியர் சாப்பிடுகினம் .கொஞ்சம் போதை ஏற ** Sir மச்சான் ** என்ன ஸ்டுடென் மச்சான் ?உம்மட்டை தம் அடிக்க ஏதும் கிடக்குதே ???????????????
இந்த நிலைக்கு கால மாற்றம் என்று சாட்டு சொல்லி தப்ப முடியாது .புலம் பெயர்ந்தர் r அனுப்பும் பணமும் பெரும் பங்கு வகிக்கின்றது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமுங்கோ !!!!!!!!!!!!!!


சக்கிலியன்

29-09-2015 00:19

வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.

எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.
மனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு

இரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.

இவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார்.
இவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன்மூலம்தங்களை தாங்களே பெருமைப்படுத்தும் அறிவீனமும் மறைந்த நிற்கின்றது

இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதற்காக தாம் வாழும் வாழ்கையை மறைத்து ஒரு நாடக வாழ்வியலை தெரிந்தே செயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.

பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கடா வெட்டி விருந்துவைத்தல் ,கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.

துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடு பற்றற்ற ஐரோப்பியக் கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வட-கிழக்கிலும் உருவாகிவிடுகின்றது.

தாய் நாட்டில் விடுமுறையை முடித்துப் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பும் ஐரோப்பியத் தமிழன் தனது கடனட்டைக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது. இதனாலேயே பல குடும்ப உறவுகளே சிதைவடைகின்றது.

தமது வாழ்க்கை தொடர்பான உண்மை நிலையை இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐரோப்பியத் தமிழனும் தமது உறவினர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களைக் கனவுலகத்திலிருந்து விடுவித்து சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகும் கடன் சமூகத்தை நோக்கி தவறான விம்பத்தை அழிக்க வேண்டும். எங்கள் சொந்த மண் எல்லா வளங்களையும் கொண்டது, வானமும் வையகமும் ஒத்துழைக்கும் செல்வம் கொழிக்கும் பிரதேசங்கள் அவை. இவற்றைப் புரிந்துகொண்டால் ஒடுக்குமுறைக்கு எதிராகப் வாழ்ந்து போராடி வெற்றிபெறும் சமூகம்


சக்கிலியன்

29-09-2015 00:07

மேற்கொள்கிறார்.

துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடு பற்றற்ற ஐரோப்பியக் கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வட-கிழக்கிலும் உருவாகிவிடுகின்றது.

தாய் நாட்டில் விடுமுறையை முடித்துப் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பும் ஐரோப்பியத் தமிழன் தனது கடனட்டைக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது. இதனாலேயே பல குடும்ப உறவுகளே சிதைவடைகின்றது.

தமது வாழ்க்கை தொடர்பான உண்மை நிலையை இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐரோப்பியத் தமிழனும் தமது உறவினர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களைக் கனவுலகத்திலிருந்து விடுவித்து சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகும் கடன் சமூகத்தை நோக்கி தவறான விம்பத்தை அழிக்க வேண்டும். எங்கள் சொந்த மண் எல்லா வளங்களையும் கொண்டது, வானமும் வையகமும் ஒத்துழைக்கும் செல்வம் கொழிக்கும் பிரதேசங்கள் அவை. இவற்றைப் புரிந்துகொண்டால் ஒடுக்குமுறைக்கு எதிராகப் வாழ்ந்து போராடி வெற்றிபெறும் சமூகம் தோன்றும்.சிந்திப்பீர்களா உறவுகளே


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி