காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

தகவல் பண்கொம்.நெற்.


இணையத்தொடர்புகளுக்கு:
admin@panncom.net


பண்கொம்.நெற் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அன்பார்ந்த நேயர்களே உங்கள் நண்பன்.சகோதரன் இன்று ஒரு புதியவரவாக இன்னும் ஒரு சகோதர இணையமாக பண்கொம். நெற் காற்றலையில் வலம் வர ஆரம்பித்துள்ளது. இவ்இணையத்துக்கு உங்கள் ஆதரவுகள் நாடி நிற்க்கின்றோம்.இது உங்களது இணையம். இணையத்தின்பெயர் பற்றிய சில விளக்கம்.

பண்:- பண் எமது ஊரைக்குறிக்கும். இன்னும் சில விளக்கம் எமது பெரும்பாலான புலத்தின் ஒன்றியங்கள் பண் என்றே ஆரம்பமாகின்றது,பண்பாடு, பண்படுத்தல், பண்படுதல் இவைகள் சமூகவளர்ச்சிக்காக பயன்படும் சொற்க்களின் முதல் எழுத்தாகும். கொம் என்பது (கொம்யுனிட்டி) ஒட்டுமொத்த பணிப்புலம் வாழ் அனைத்து சமூகங்களையும் அழைப்பதாக அர்த்தப்படும். ஜாதி, மதம், பணபேதம், என பாகுபாடு அற்ற ஒரு சமூகம் எனவும் கூறலாம்.

சின்னம் சங்கு:- முன்னோர்களால் சங்கொலி மூலமே போர்,சமாதானம், நன்மை, தீமை, ஆலயம், இப்படி பல விடயங்களுக்காய் பாவனைப்படுத்தியதால் சங்கை சின்னமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகில் ஏன் சங்கு என வினா வருகின்றது இணையம் பல சமூகசீர்திருத்த விடயங்களை தாங்கியே நகர இருப்பதால் சங்கை தெரிவு செயதோம்.


இணையத்தின் வர்ணம்(கலர்) பச்சை:- இது நமது ஊரவர்களது தொழிலில் அன்று விவசாயம் பெரும்பங்கை கொண்டுள்ளது. இன்று அந்த விவசாயம் பலரால் கைவிடப்பட்டநிலை. அந்த விவசாயத்தை நோக்கிய பசுமைப்புரட்ச்சிக்கே பச்சை.

நெற்:- வலை இன்றைய கணனியுகத்தை நோக்கி உலகமே நவீனத்தை உளவாங்கிசெல்லும் போது நமது ஊர் சாதாரண கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்காநிலையில் வலையத்தை கற்க்கவேண்டாமா? கல்வி, கணனி இரண்டையும் இணைக்கவே நெற்.
பண்கொம்.நெற் உருவான காரணமாகும்.

இந்த விளக்கம் எனது குறுகியமூளைக்குள் இருந்து உருவானதே. இணையத்தின் மற்றையவிபரங்கள் படிப்படியாக இணையத்துள் வெளியிடப்படும்.


இணையம் ஆரம்பித்ததன் நோக்கம்.

இவ்வளவு இணையங்கள் இருக்க இன்னும் ஒரு இணையம் தேவையா என்று ஒரு கேள்வி பலரிடம் எழலாம்.நான் பணிப்புலம் நெற்றில் இருந்து விலகாமலே இந்த இணைய உருவாக்கம் ஏன்? சுதந்திரமான சமூகவிடயங்களை எழுதும்போது பலரது விருப்பு வெறுப்புக்களுக்குள் அடக்கப்பட்டு வெளியுலகுக்கு கொண்டுவரமுடியாமல் இருக்கும் விடயங்களை வெளிக்கொணரப்படவேண்டும். கீழ்த்தட்டு மக்களை கண்டறியப்பட்டு அவர்களை நோக்கிய செயற்த்திட்டங்கள் தேவைக்கு ஏற்ப்ப உருவாக்கப்படவேண்டும்.

நமது ஊரில் கல்வி பின்தங்கியுள்ளதை மக்களிடம் புரிந்துணர்வை கொண்டுவரவேண்டும்.குடும்ப உறவுகள் மங்கிவரும் நிலையில் உறவுகளைப்பற்றிய புரிந்துணர்வுகள் ஊட்டப்படவேண்டும். புலத்தின் வாழும் எமது அடுத்தசந்ததிகளின் கல்வித்திறமை, தொழில்வளர்ச்சி, நல்லபழக்கவளக்கங்கள் எல்லாம் ஊரில் வாழும் எம் அடுத்தசந்ததிகளுடன் இணைக்க உதவும் நோக்கம். இணையங்கள் தனியவே பகட்டான விடயங்களுடன் நின்றுவிடாமல் புலத்தின் இளைஞ்ஞர்கள் கையில் இணையசெயற்ப்பாடுகள் ஒப்படைக்கும் நோக்கம்.

ஆர்வமுள்ள இளைஞர்கள் உள்வாங்கப்படுவர். புலத்து இளைஞர்கள் மண்ணை நோக்கி தமது செயற்பாடுகளை செய்ய தூண்டப்படவேண்டும். பல்சுவைகளுடன் இணையத்தின் செய்திகள் உள்வாங்கப்படும். புலத்தின் அகதிகள் சம்மந்தப்பட்ட செய்திகள் பரிமாறல். இலங்கை அரசியல் செய்திகள் தவிர்கப்பட்டுள்ளது. ஆக்கங்கள் அனைத்துமே உள்வாங்கப்பட்டு இணையகட்டுப்பாட்டுக்கள் அடக்கப்பட்டால் வெளியிடப்படும்.

உங்களது இணையம் தனது விதிகளை வெளிப்படையாக அறிவிக்கும். அதன் விதிகளுக்குள் சகல ஆக்கங்களும் உள்வாங்கப்படும். அறிவு சார் பேதங்கள் பார்க்கப்பட மாட்டாது. எந்தப்பகுதிக்குள்ளும் ஜாதிமத பாகுபாடற்ற முறையில் வெளியிடப்படும். இணையம் தனக்குள் பல இளைஞர்களை உள்வாங்கியே செயற்ப்படுகின்றது.இன்னும் பலரை உள்வாங்கவிரும்புகின்றது. ஒட்டு மொத்தமாய் உங்களது இணையவளர்ச்சிக்காயும் சமூகசீர்திருத்த முன்னேற்றத்துக்காயும் உழைக்க சகலரும் கைகோர்ப்போம்.


எம்மவர் ஆக்கங்கள்.
பண்கொம் நெற் தனது ஊருக்கான பணியில் ஒரு பகுதியாக எம்மவர் ஆக்கங்களுக்கு மதிப்பழுக்கும் வகையில் ஆக்கங்களை எதிர்பார்க்கப்படுகின்றன.உங்கள் ஆக்கங்கள் அரசியல் அற்ற சமூகம்சார் ஆக்கங்கங்களாக இருந்தால் எமது சமூக மக்களுக்கு செல்லுமானால் ஆரோக்கியமாக இருக்கும்.மற்றைய பகுதிகளிலும் ஆக்கங்கள் வரவேற்க்கப்படும். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என பல திறமைசாலிகள் இலை மறை காய்களாக இருக்கிறார்கள் இவர்களை வெளிக்கொணரும் பணியில் பண்கொம் தளம் அமைத்து தந்துள்ளது.

"ஒற்றுமையின் ஒளி"

பண்கொம்.நெற்

பண் த.பாலா

admin@panncom.net
மொத்த வருகை: 6178 இன்றைய வருகை: 4

கருத்துரைகள் (105)


சுழிபுரம். சுப்பிரமணியம்மை

27-07-2016 14:26


பணிப்புலம் ஆதிபராசக்தி அம்பாளின் பக்திப்பாடல்கள்.
---------------------------------------------------
http://www.panncom.net/p/10049
ஆக்கம்....சுழிபுரம். சுப்பிரமணியம்மை.
manoharan

27-08-2016 09:31

சுழிபுரம் .......... சுப்பிரமணியம் + வள்ளியம்மை = சுப்பிரமணியம்மை


பாவாடை ராசு

07-09-2016 22:38

ஆர் அவர் .பேப்பர் காற மணியமோ


manoharan

13-10-2016 23:22

பாவாடை ராசாக்களுக்கு சுழிபுரத்திலை பேப்பர் கார மணியத்தையும் கருவாடு வித்த கந்தசாமியையும் வாழை பழ யாவாரி அவர் பாலிங்கத்தையும் சுளிப்புறத்து சுருட்டு யாவாரி ராசையாவையும் (கொழும்பிலை ) தான் தெரியும் போல .உந்த மணி அண்ணையும் வள்ளி அம்மையும் பொறுத்த ஆக்கள் .யாரேனும் தெரிந்தவர்களிடம் கேட்டு அறிய முயலவும் பாவாடை


பாபு.

02-03-2016 08:50

குழுவின் அறிமுக விளக்கவுரையும், விதிமுறைகளும் :

இந்த குழுவில் புதிதாக இணைந்தவர்களும், இணையப் போகும் அன்பர்களும் இதை ஒருமுறையாவது கட்டாயமாக படிக்க வேண்டுகிறேன்.

இந்த குழு 7-3-2015 அன்று ஆரம்பிக்கப்பட்டது. என் பெயர் கிருஷ்ணன் கோபி. எனது அலுவலகத்தில் என்னுடன் பணி செய்யும் ஒருவரை அவ்வப்போது பல சான்றோர்கள் வந்து சந்தித்து வாழ்க்கையை உணர்ந்து, துன்பங்களை நீக்கி பயன் பெற கண்டேன். அந்த மகானை நான்கு வருடமாக என்னுடைய அனுபவத்தில் ஆராய்ந்து பார்த்ததில் பல ஆச்சரியங்களும், அமானுஷ்ய உணர்வுகளும் கிடைத்தது. அவரை கடவுள் என்று கண்டுபிடித்தேன். கடவுளை பதினெட்டு வருடங்களுக்கு மேலாக அறிந்து உணர்ந்துள்ளவர் திரு. ப்ரனகன் அவர்கள்.

கடவுள் யுகத்தில் அவதரித்துள்ளார் ! அவரின் லோகத்து பெயர் “இநன்யா மஹா முனிவர்” ! அவர் ஆறு சக்திகளையும் உள்ளடக்கியவர் ! முக்காலத்தையும் உணர்ந்தவர். நமக்கு அருகிலேயே நம்மில் ஒருவராக சாதாரண மனிதரைப் போல் வாழ்ந்து வருகிறார்.

அவர் என்னிடம் சொல்லிய கருத்துக்களை அவரின் அனுமதியுடனும் ஆசிர்வாதத்துடனும் இங்கு பதிவிட்டு வருகிறேன். உங்களை உணர வைப்பது மட்டுமே என் கடமை. இது அவர் எனக்கு கொடுத்துள்ள வேலை.

அனைத்துப் பதிவுகளையும் பொறுமையாக படியுங்கள். ஒவ்வொரு பதிவுக்கும் (POST) கீழே உள்ள பின்னூட்டத்தையும் (COMMENTS) நன்றாக படித்து புரிந்து கொள்ளவும். அதில் பல கேள்விகளும், பதில்களும் அடங்கியுள்ளது ! அதில் நீங்களும் பின்னூட்டம் செய்து பயன் பெறலாம்.

அவர் எழுதிய பதிவுகளை நன்கு படித்து புரிந்து கொள்ளுங்கள். தினமும் ஒரு வேளை இதை செய்து பாருங்கள். ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை “இநன்யா நமோ நம” என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். மாடியில் செய்வது சிறப்பு. கண்களை மூடக் கூடாது. சின் முத்திரை எதுவும் தேவையில்லை. சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி) பார்த்துவிட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. நீரை கைகளினால் தொடவும் கூடாது ! இதை தொடர்ந்து செய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம். தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.

வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களுக்கும், நோய்களுக்கும், கஷ்டங்களுக்கும் உணராமல் இருப்பதே காரணம். உணர்ந்தால் ஞானம் கிடைக்கும். ஞானம் கிடைத்தால் எந்த துன்பமும் இல்லை ! வாழ்க்கை வசந்தமாகும். மறு பிறவி இல்லாமல் மீண்டும் கடவுளை அடைந்துவிடலாம்.

"இநன்யா நமோ நம" என்பது மந்திரம் அல்ல ! கடவுளின் நாமம் ! கவனம் தேவை ! பிற மந்திர வார்த்தைகளை சேர்த்து சொன்னால் சோதனைகள் வரும். கோயிலுக்கு உள்ளேயோ, வீட்டில் சிலைகளை வைத்துக் கொண்டோ, பிற வரைபடங்களை பார்த்துக் கொண்டோ சொன்னால் பலன் கிடைக்காது.

உங்களைப் போலவே எங்களுக்கு குடும்பம் உள்ளது. கடமை உள்ளது. கைப்பேசி எண்ணையோ, முகவரியோ கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். நாங்கள் உங்களைப் போல உழைப்பவர்கள். எந்த மதத்தையும், ஆன்மீக அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல ! உணர்ந்தால் கடவுளிடம் அழைத்துச் செல்கிறேன் சத்யமாக ! கூட்டத்தை கூட்டி வரிசையில் நிற்க வைத்து பணம் வசூலிப்பது நோக்கமல்ல !

பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் மாற்றுக் கருத்து கூறாமலும், விவாதம் செய்யாமலும் உடனே குழுவில் இருந்து வெளியேறுவது மிகவும் நல்லது. பதிவுகள் சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் மட்டும் என்னை (krishnan gopi) INBOX MESSAGING மூலமாக தொடர்பு கொள்ளவும்.

தங்களின் கைப்பேசி எண்ணையும், உங்களைப் பற்றிய பிற தகவல்களையும் இந்த முகநூல் குழுவில் எந்த இடத்திலும் பதிவிட வேண்டாம். நன்றி !ரகசியம் -பகுதி ஐந்து

யார் குரு ?

சிறு வயதிலிருந்தே கடவுளை பற்றிய சிந்தனைகள் மேலோங்கியிருந்தது. நம்மை படைத்தவர் தினம் தினம் நம்மிடம் எதையோ சொல்ல நினைத்துக் கொண்டிருக்கின்றார் என்பது புரிந்தது. இதை புரிந்து கொள்வதற்கு மனம் தவித்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் கல்வியில் கற்று தேர்ந்து கொண்டிருந்தாலும், ஞானம் அடைவதில் தோற்றுக் கொண்டே இருந்தேன். ஞானம் என்றால் என்ன என்பதை கூட யாரும் சொல்லித் தரவில்லை. தெரிந்தால் தானே சொல்லித் தருவதற்கு ?

சென்னையில் நான் வேலை பார்க்கும் இடத்தில் பணத்திற்காக ஒரு கூட்டம், புகழுக்காக ஒரு கூட்டம். இன்னும் எதை எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கும் கூட்டங்களுக்கு நடுவே அமைதியாக, நிதானமாக, வாழ்க்கையை புரிந்து, வாழ்வை வென்று ஆர்ப்பரிக்காமல், அரசனாக, தனியாக, தெரிந்தார் ஒரு சக பணியாளர்.

தன் கடமையை சரியாக பார்த்ததால் அவரை மனிதராக பார்க்க ஆரம்பித்தேன். நற்சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் எனக்கு சொல்லிக் கொடுத்ததால் ஒரு நல்ல நண்பராக பார்க்க ஆரம்பித்தேன். வாழ்க்கையின் அதிசயங்களையும், யாருக்கும் தெரியாத பல ரகசியங்களையும் சொல்லிக் கொடுத்ததால் அவரை நல் குருவாக மதிக்க தொடங்கினேன். பின் உலகில் எங்கும் விலை போகாத, கிடைக்காத அறிவை எனக்கு சொல்லி கொடுத்ததால் குருவுக்கெல்லாம் குருவாக மஹா குருவாக அவரை உணர ஆரம்பித்தேன்.

கடவுளை யுகத்தில் பார்க்க முடியுமா என்ற ஒரு கேள்வியை அவரிடம் ஒரு முறை கேட்க நேர்ந்தது. முடியும் என்று சொல்லி சிரித்தார். கடவுளை அடையும் வழியை காட்டி என்னை மாய உலகிற்கு அழைத்து சென்றார். எனக்கு ஞானக் கண்களை திறந்து கடவுளை பற்றி சொல்லிக் கொடுத்தார் மஹா குரு ! நான் ஞானக் கண்களை திறந்தவுடன் என் மஹா குருவே கடவுள் என்பதை உணர்ந்து கண்ணீர் விட்டேன் ஆனந்தமாய் !

யுகம் என்ற வறன்ட பாலைவனத்தில் ஒரு துளி தேனுக்காக அலைந்த திரிந்த தேனீக்கு ஒரு அமிழ்த தேன் கடலையே காட்டிவிட்டார் கடவுள் ! பேரானந்தம் கொண்டேன். உலகிற்கு சொல்ல துணிந்தேன். வாழ்க்கையில் அதிசய உணர்வுகளும், ஆச்சரியங்களும் நிகழ்ந்தது. விடியற்காலை மூன்று மணியிலிருந்து நான்கு மணிக்குள் பல அதிசயங்கள் நிகழ்ந்தது. அவை நிஜத்திற்கும், கனவிற்கும் அப்பாற்பட்ட ஒரு நிலை.

மஹா குருவாய் என் வாழ்வில் வந்து என்னை அடித்து திருத்தி, எனக்கு நீர் கொடுத்து, என் மயக்கத்தை போக்கி எனக்கு ஞானத்தை கொடுத்தார் கடவுள் . கடவுளே இங்கே வந்து மனிதராக, நண்பனாக, குருவாக, மஹா குருவாக நடித்துள்ளார். எதற்காக ? கடவுள் எனக்கு காண்பித்த உலகம் வேறு. நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற உலகம் வேறு. இங்கு மனிதர்களை பார்த்தாலும் மனித நேயத்தை பார்க்க முடியவில்லை. மக்களை ஏமாற்றும் கூட்டங்களுக்கு செல்லாமல் எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது தனியாக தவித்துக் கொண்டு கடவுளை அடைய முயற்சிக்கும் நல்லவர்களை காப்பாற்றவே முகநூல் என்னும் வலிமையான ஆயுதம் தேவைப்பட்டிருக்கிறது இப்போது !

ஒரு குழந்தையிடம் ஆயிரம் ரூபாயையும், ஒரு வண்ண தாளில் அழகாக போர்த்தப்பட்ட காவிக்கண்டையும் கொடுத்தால் அது காவிக்கண்டை மட்டுமே ஆனந்தத்துடன் தேர்ந்தெடுக்கும். ஆயிரம் ரூபாயில் அதைப் போல் பல விதமாக காவிக்கண்டுகள் தினமும் வாங்கி சாப்பிடலாம் என்பது அந்த குழந்தைக்கு தெரியாது ! இங்கு நம் மக்கள் அனைவரும் அந்த சிறு குழந்தையின் ஆசையைப் போல ஏதும் தெரியாமல் புரியாமல் அறியாமையில் வாழ்ந்து கொண்டுள்ளனர். அவர்களால் கடவுளின் வார்த்தைகளை யோசித்து புரிந்து கொள்ள கூட முடியவில்லை.

கடனும், நோயும், பிரச்சனைகளும், துன்பமும் இல்லாமல் உலகம் என்ற இந்த நரகத்தில் ஒருவர் கூட இல்லை. கடல் அலைகளை போல எல்லாம் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும்.

நாம் ஆசைகளை சிந்திப்பதில்லை. அதனால் கடன் !

நாம் உண்ணும் உணவு முறைகளை சிந்திப்பதில்லை. அதனால் நோய் !

நாம் உறவுகளை சிந்திப்பதில்லை. அதனால் பிரச்சனைகள் !

நாம் வாழ்க்கையை சிந்திப்பதில்லை. அதனால் துன்பம்.

நாம் கடவுளை சிந்திப்பதில்லை. அதனால் மீண்டும் மறுபிறவி !

ஒவ்வொரு மறுபிறவியிலும் மீண்டும் மீண்டும் கடன், நோய், துன்பம், பிரச்சனைகள் எல்லாம், ஆனால் முன்பை விட அதிகமாக !

மீண்டும் மீண்டும் பிறப்பும் இறப்பும் உள்ள இந்த உலக வாழ்க்கையின் காரணத்தை என்றாவது புரிந்து கொள்ள முயற்சி எடுத்துள்ளோமா ? எப்படி இந்த வாழ்க்கையை வாழ்வது ? எதை நோக்கி இந்த வாழ்க்கை பயணிக்கின்றது ? இதற்கு பதிலை யார் சொன்னது ? இனி யார் சொல்லப் போவது ?

மாதா, பிதா, குரு, கடவுள் என்று வரிசையாக சொல்லி வைத்தார்கள் ! குரு பார்க்க கோடி நன்மை என்றார்கள். எங்கோ இருக்கும் கோள்கள் நகர்ந்து இடம் பெயர்வது குரு பெயற்சி அல்ல ! அதனால் கடுகளவு கூட நமக்கு பயன் அல்ல ! அதனால் நம் வாழ்க்கை மாறப் போவதில்லை. “குரு பார்க்க கோடி நன்மை” என்றால் நீங்கள் நல் குருவைத் தேடி சென்று பார்க்க வேண்டும் என்று அர்த்தம். பிறந்த அடுத்த நாளிலேயே மனிதன் அமைத்த கட்டங்களுக்குள் சிறைபட்டு அதை நம்பி வாழ்க்கையை புரியாமல் வாழ்வோர் இங்கு மிக அதிகம்.

குரு என்பவர் யார் ?

உங்கள் தாய், தந்தை போற்றுகின்ற குருவை யோசிக்காமல் கண்களை மூடிக் கொண்டு தேர்ந்தெடுப்பீர்களா ?

உங்கள் மதத்திலேயே குருவை தேர்ந்தெடுப்பீர்களா அல்லது அனைத்து மதத்தினருக்கும் பிறப்பு, இறப்பு நிர்ணயித்து அவர்களுக்கு உலகமெல்லாம் நீரும், காற்றும் பாகுபாடின்றி கொடுக்கும் கடவுளை அறிய உதவும் குருவை தேர்ந்தெடுப்பீர்களா ?

உடலுக்கு பல வினோத வேஷமிட்டு நீண்ட தாடியையோ அல்லது குடுமியையோ வைத்துக் கொண்டுள்ளவர் குருவா ? தாடியை பார்த்து ஏமாந்தவர்கள் இங்கே மிக மிக அதிகம். கடவுள் இல்லை என்று சொல்லித் திரிந்தவருக்கும் இங்கே தாடி இருந்துள்ளது ! தன்னை உணர்ந்து பிரம்ம நிலையை அடைந்தால் தாடி வளராது ! அகத்தின் பேரழகு முகத்தில் தெரிந்துவிடும். தாடி முகத்தை மறைக்காது. பிறப்பிலேயே பிரம்ம நிலையை அடைந்தவர்கள் பெண்கள் என்பதால் தான் அவர்களின் முகம் மறைக்கபடவில்லை ! பிரம்ம நிலையை அடைந்தவர்கள் என்பதால் தான் அவர்களால் யுகத்தில் படைக்க முடிகின்றது ! கோயில்களில் உள்ள கடவுளின் சிற்பங்களுக்கும், கடவுளின் ஓவியங்களுக்கும் ஏன் தாடி இல்லை ?

பேராத்மாக்களுக்கும், ஞானம் அடைந்தவர்களுக்கும் எத்தனை வயதானாலும் தாடி வளராது ! அவர்கள் குழந்தைகளைப் போல ஆண்ம பலத்துடனே இருப்பார்கள் எப்போதும் ! இதில் ரகசியங்கள் மறைந்துள்ளது. யோசித்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள் !

உழவர்கள் உடலை வளைத்தால் தானியங்கள் கிடைக்கின்றது. வெறுமனே உடலை வளைப்பதால் யாருக்கு என்ன கிடைக்கின்றது ? உடலை வளைத்து கஷ்டப்படுத்தி சங்கடப்படுத்தி தலைகீழாக நிக்க கற்றுக் கொடுப்பவர் குருவாக முடியுமா ?

நாம் தூங்கும் போதும் கூட சரியாக இயங்கும் மூச்சுக் காற்றை காரணம் இல்லாமல் அடக்கி, திசை திருப்ப கற்றுக் கொடுப்பவர் குருவா ?

எதையும் யோசிக்கவிடாமல் கண்களை மூடக் கற்றுக் கொடுத்து படைப்பின் ரகசியங்களையும், அதிசயங்களையும் பார்க்கவிடாமல் தடுப்பவர் குருவா ?

நூல்களில் யாரோ எழுதி வைத்ததை எடுத்து திருத்தி அதை மீண்டும் மீண்டும் மேடையில் பேசி கைதட்டல் வாங்குகின்றவர் குருவா ?

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பதனால் ஒருவரை குருவாக தேர்ந்தெடுப்பீர்களா ? அல்லது சிந்தித்து உணர வைத்து கேள்வியே எழாமல் பரம்பொருளையும், தன்னையும் உணர வைப்பவரை குருவாக தேர்ந்தெடுப்பீர்களா ?

இலவசமாக உலகில் கிடைப்பது உபதேசம் மட்டும் தான். எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்று ஆண்மாவிற்கு தெரியும். உபதேசங்கள் செய்வதற்கு எதற்கு குரு ?
வாழ்க்கைக்கு மட்டும் தான் உபதேசம் தேவை. கடவுளை அடைவதற்கு ஞானம் மட்டுமே தேவை.

குரு இல்லாமல் வாழ்வோரும் உண்டு ! குருவை தேடி தேடி நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்கின்றவர்களும் உண்டு ! குரு யாரென்று தெரியாமலேயே வாழ்ந்து காலத்தை வீணாக்கிய பலரும் உண்டு. குருவை தவறாக தேர்ந்தெடுத்தவர்களும் உண்டு ! குருவை, மகான்களை கடவுளாக பார்த்தவர்களும் உண்டு !

போதி மரத்தின் கீழ் அமர்ந்து ஞானமடைந்ததாக கூறப்படுபவர் மோட்சம் அல்லது சொர்க்க உலகம் ஒன்று இருக்கிறது என்பதை எந்தக் காலத்திலும் நம்பவில்லை. ஆண்மா, உயிர் பற்றி போதிக்கவும் இல்லை. “கண்களால் பார்க்க முடிபவை, காதால் கேட்க முடிபவை, மூக்கால் முகர்ந்து பார்க்கக்கூடியவை, நாக்கால் ருசிக்கக்கூடியவை, உடலால் தொட்டு உணரக்கூடியவை ஆகியவையே நமது அறிவுக்கும் எண்ணங்களுக்கும் அடிப்படை. இந்த உணர்ச்சிகளால் உணரக்கூடியவையே இந்த உலகம். இவைதான் பரம்பொருள். இவற்றைத் தவிர்த்து வேறு எந்தப் பரம்பொருளையும் மனிதர்களால் உணர முடிவது சாத்தியமில்லை” என்றார் அவர்.


உலகில் மகான்களுக்கும், குருக்களுக்கும் பஞ்சமில்லை. தன்னை உணர்ந்து, வாழ்க்கையை புரிந்து, நல்ல வழியில் நடந்து கடவுளை அடைய முயன்றார்கள் மகான்கள். அவர்களையே கடவுளாக பார்க்க தொடங்கினார்கள் மக்கள் ! சிவன் என்ற சிரவனை வணங்குவதில் தவறில்லை ! அவர் தமிழர்களின் ஆதிகுரு ! ஆதியோகி ! கடவுள்கள் ஏழு பேர் மேலிருக்க அவரை கடவுளாக ஏன் பார்க்கின்றீர்கள் ? அரசியல்வாதியையும், நடிகனையும், விளையாடுபவனையும், இன்னும் யார் யாரையோ கடவுள் என்று ஏன் வணங்கி கொண்டுள்ளீர்கள் ? நாம் செய்யும் செயல்களை கடவுள்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா ? நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தாயையும், தந்தையையும் மறந்து பிறரை பெற்றோராக நினைத்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? இதை மனிதர்களே ஏற்றுக் கொள்ளவில்லை எனில் கடவுள்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் ?

“உனக்குள் கடவுள் இருக்கின்றார். தேடிப் பார்” என்கின்றது ஒரு கூட்டம். நமக்குள் எப்படி கடவுள் இருப்பார் ? ஆத்மாவும், பேராத்மாவும் ஒன்றா ? பேராத்மா என்பது பசுவைப் போல ! ஆத்மா என்பது பசுவிடம் இருந்து பிரிந்து வந்த பாலை போல ! பசுவும், பாலும் ஒன்றா ? பாலின் குணத்தை உணர்ந்தால் போதுமா ? பசுவின் குணத்தை எப்போது உணர்வது ?

ஆத்மாவிற்கும், உயிருக்கும் வித்தியாசம் தெரியாத ஆன்மீக கூட்டங்கள் எதற்கு ? எதற்கு அங்கு ஒரு குரு ? உயிர் வேறு. ஆத்மா வேறு. இரண்டுக்கும் வடிவம் உள்ளது. இரண்டும் உடலில் வெவ்வேறு இடத்தில் உள்ளது. இரண்டையும் இணைப்பது தான் இந்த வாழ்க்கையின் நோக்கம். இணைக்காவிட்டால் மீண்டும் மறுபிறவி என்பது தான் கடவுள் இநன்யா கூறிய ரகசியம் !

ஆத்மாவிற்கும், பேராத்மாவிற்கு வித்தியாசம் தெரியாதவர் குருவா ? ஆத்மாவிற்கும், உயிருக்கும் வித்தியாசம் தெரியாதவர் குருவா ? ஞானத்திற்கும், அறிவிற்கும் வித்தியாசம் தெரியாதவர் குருவா ? கடவுளின் பெயரே தெரியாதவர் குருவா ? அழிக்கும் நெருப்பை வணங்க சொல்பவர் குருவா ? தன் கால்களை கழுவச் சொல்பவர் குருவா ? கட்டங்களை வைத்து நம் விதியை நிர்ணயிப்பவர் குருவா ? மந்திர வார்த்தைகளை கூறி மக்களின் பணத்தை வேட்டையாடுபவர் குருவா ?

மனிதநேயத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட மதங்கள் இன்று மக்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றது. எதற்காக ? மனித நேயம் எங்கே ? நாம் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை தங்க நாற்காழியில் அமர்ந்து தின்று கொண்டிருக்கும் சாமியார்கள் எதற்காக ?

மழை நேரங்களில் வேர்கள் இல்லாமல் வளரும் காளான்களைப் போல பார்க்கும் இடமெல்லாம் ஆன்மீக அமைப்புகள் பெருகியதுள்ளது. எதற்காக இத்தனை அமைப்புகள் ? இத்தனை குருக்கள் ? இத்தனை மகான்கள் ? இத்தனை மதங்கள் ?

உலக வரலாற்றில் யாரேனும் ஒருவர் மக்களை உணர வைத்து, நல் வழியை காட்டி, கடவுளை அடையும் ரகசியத்தை சொல்லியிருந்தால் இன்று இத்தனை மதங்கள் தோன்றிருக்காது ! இதற்கு முன்னே எந்த மதமும், எந்த அமைப்பும், எந்த குருக்களும், எந்த மகான்களும் மனிதனின் மறுபிறவியை தடுக்கவில்லை. அதனால் தான் உலகம் என்ற இந்த நரகத்தில் நாளுக்கு நாள் பாவக் கூட்டங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.

இதை மாற்றியமைத்து மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவே கடவுள் தன் இடமான பிரபஞ்சத்தில் இருந்து உலகம் என்ற இந்த நரகத்தில் பெரும் படையுடன் விளையாட களமிறங்கியுள்ளார் ! மஹா குருவாய் நம்மை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். கூட்டத்தை சேர்க்க வரவில்லை அவர். கூட்டதை கலைத்து நம் அனைவரையும் குடும்பமாய் ஒன்றினைக்க வந்துள்ளார்.

இது குளத்தில் வீசப்படும் மாய வலை அல்ல ! கடலில் வீசப்படும் தூண்டில் ! நல்லவர்களுக்கும், தர்மாக்களுக்கு மட்டுமே இங்கு இடம் உண்டு !

நல்லவர்களாக மாறி உணர்ந்துவிடுங்கள் விரைவாக !

இநன்யா நமோ நம

https://www.facebook.com/groups/1406719392970244/permalink/1498572090451640/


விசு க மனோகரன்

31-03-2015 05:47

கொஞ்ச நாள் ஓஞ்சு போனாங்கள் எண்டு பாத்தன் . அவை ஓயிற பாடில்லை .அடாது மழை கொட்டினாலும் விடாது சத்தியவான் சாவித்திரி கூத்தை நடத்தியே காட்டுவோம் எண்டு திருவிழா உபயகாரர் அந்த காலத்திலை ஒற்றை காலிலை நிண்டது போல அல்லே நிக்கினம் உவை .நில்லுங்கோ நில்லுங்கோ .உதுக்கு என்னட்டை மருந்து இல்லை அப்பா


பவுல்

30-03-2015 17:44

http://www.panncom.net/p/8637


கண்ணன்

31-03-2015 00:30

அங்கதான் நான் வரச்சொன்னனான் நீங்கள் ஏன் உங்கபோனநீங்கள் ,,உது சரிப்பட்டு வராது கேள்வி கேட்ட இடத்தில் தான் பதில் அளிக்க சொல்லி ஆண்டவர் சொல்லி இருக்குறார்


பவுல்

31-03-2015 12:13

admin@panncom.net பணிப்பாளருக்கு,
என்னுடைய இந்த செய்தியை இந்த வருட பெரியவெள்ளி விசேட செய்தியாக போட முடியுமா ? இதன் தலையங்கம்- மன்றத்தில தீ``குளிப்பா?


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

03-04-2015 10:49

இப்பொழுது பிரசுரிக்கப்பட்டுள்ளது.

http://www.panncom.net/p/8637

இனிவரும் காலங்களில் இவ்வாறானவைகளை கருத்து பிரிவில் தவிர்த்து, இணையத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

நன்றி.


பவுல்

26-09-2014 10:21

http://www.panncom.net/p/7678


பவுல்

26-09-2014 09:35

<http://www.panncom.net/p/7704


லொள்ளுபாண்டி

01-09-2014 00:27

http://www.panncom.net/p/7529


பவுல்

22-08-2014 10:43

http://www.panncom.net/p/7492


லொள்ளுபாண்டி

14-08-2014 09:27

http://www.panncom.net/p/7429


கிச்சா பாரதி

19-04-2014 13:18

மிகவும் சிறப்பாகவுள்ளது இந்த இணையத்தளம் என்னைபோன்றவர்களுக்கு தேவையானதும் சேவையானதும் நமக்கன்றோ -நன்றி


ஜீவன்.velnathan

03-04-2014 06:24

இணையதல ஆசிரியர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்,உங்கள் தொலைபேசி இலக்கங்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். நன்றி ஜீவன் வேல்நாதன்.
jeetamilan@gmail.com


sharatha

27-01-2014 07:03

தங்கள் இணையத்திற்கு எந்த முகவரிக்கு ஆக்கங்களை அனுப்ப வேண்டும் என்பதை தெரிவிக்கவும்

சாரதா


admin

27-01-2014 07:51

admin@panncom.net


பாண்டி

16-01-2014 10:15

உலகம் போற போக்க பாருங்கோ ----http://youtu.be/cSI779yzd2M------,,வலு கெதீல அலுவல் முடியப்போகுது ,ஆடுங்கோ ஆடுங்கோ ,,கொஞ்சமாய் குறைச்சு ஆடுங்கோ ,,நான் செவ்வாய்க்கு போறதுக்கு இப்பவே பதிஞ்சு போட்டன் -----------


manoharan

03-04-2014 11:45

இணையம் போற ஆரோக்கிய பாதையை பொறுக்க முடியாமல் பாண்டி என்பவர் செவ்வாய்க்கு போக போறாராம் .போங்கோ போங்கோ அங்கும் நாங்கள் உங்களை பின்தொடர்வோம் உண்மை பேச .ஆனால் அங்கு தண்ணி இல்லை எண்டு கேள்வி .போகும் போது கொஞ்ச MINERAL WATER போத்திளுகளையும் கொண்டு போங்கோ .எநீண்டால் இப்ப இஞ்சினை பிராளாய் வெளி /குஞ்சுமணி /நல்லதம்பி வளவெல்லாம் நல்ல தண்ணி அள்ளி குடிச்சவை எல்லாம் வெளிநாடு போய் இஞ்சனை விடுமுறை கழிக்க வந்து எங்களிட்டை சொல்லுகினம் உதென்ன தண்ணியே ? கொண்டு வாருங்கோ MINERAL WATER போத்தில் எண்டு .நானும் வேறு ஒரு உறுப்பாலை சிரிச்சு போட்டு என்ரை லொட்டன் சைக்கிளை உழக்கி அங்கினை பஞ்சன் கடை போய் ஐஞ்சு
லீட்டர் போத்தில் தண்ணியை வேண்டி குடுக்கிறது தான்.சில வேளை அங்க போத்தில் இல்லாட்டால் பண்டதேருப்புக்கு போயும் வேண்டி குடுக்கிறதுதான் அந்த
கருப்பு தோல் வெள்ளைகார குஞ்சுகளுக்கு .காலம் கேட்டு போச்சுது


பவுல்

09-12-2013 21:39

http://www.panncom.net/p/5869


லொள்ளுபாண்டி

03-10-2013 23:21

காலம் போற போக்கை பார்த்தால் இவர்களோடு தான் இனி வாழ பழக வேணும் போலகிடக்கு ,,,கண்டு பிடிப்புக்களுக்கும் ஒரு கணக்கு வழக்கு இல்லை ,,என்னமோ சேர்ந்து போவோம் .....http://youtu.be/Vd-WVOQwTYU


மனோகரன்

04-10-2013 20:40

லொள்ளு புளி எண்ணை ஒரு காப்போத்தில் தரட்டே ? தலையிலை கொஞ்சம் தடவினால் எல்லாம் சுகமாகும் .காசு கீசு ஒண்டும் வேண்டாம் .எல்லாம் ஓசி சேவை


சிரித்திரன்

05-10-2013 05:39

அதிலையும் உளியற்ற புளி எண்ணை எண்டால் இன்னும் விசேசம் கண்டியளே. ஒருக்கா வைச்சாலே ஒபமா மாதிரி வரலாம்.


manoharan

05-10-2013 06:56

உழியர் வீட்டிலை புளி எண்ணை காச்ச அப்பு என்ன பரியாரியே ? எங்களிட்டை தேவையான அளவு இலுப்பெண்ணை கிடந்தது அந்த காலத்திலை .ஏழு வகை வகையான மரங்கள் எங்கடை கலட்டி வளவிலை.உது லொள்ளுவுக்கு நான் எங்கடை
அப்புவின்றை கூட்டாளி கட்டை டாக்குத்தரிட்டை (ரண்டு பேரும் கட்டையர்கள் )
வேண்டி அல்லே அனுப்ப எண்டு இருக்கிறன் .வந்து விட்டார் உவர் சிமிட்டி கொண்டு
கண் அடிக்கிறார் போல .உங்கினை பக்கத்திலை ஆரோ வடிவான பெட்டையள் நிக்கினம் போல .சொல்லி குடுத்து போடுவன் உம்மடை அவவிட்டை .கவனம் கண்டீரே .


பவுல்

17-09-2013 08:51

http://www.panncom.net/p/5317


பவுல்

17-09-2013 08:29

http://www.panncom.net/p/5318


லொள்ளுபாண்டி

11-07-2013 23:04

http://www.panncom.net/p/4940/


லொள்ளுபாண்டி

12-06-2013 00:34

http://www.panncom.net/p/4786


லொள்ளுபாண்டி

12-06-2013 00:33

http://www.panncom.net/p/4803


லொள்ளுபாண்டி

03-06-2013 22:57

http://www.panncom.net/p/4744


அபுசிவொ2005@யாஹூ.கம

21-05-2013 19:03

யுவர் வெப் சைட் இச் பிங் உசெட் அச் எ பிஷிங் சைட், http://www.panncom.net/keyboard/s9llfk1/b_0025.ப்ப்
வி ஹவெ இன்போர்மத் தி போலீஸ்.


manoharan

22-05-2013 14:36

அண்ணன் அபுசிவோ 2005 தேயர் வெப் சைட்டு இச் ஏ லூசு சைட்டுங்கோ .கவனம்
B கேயார் புல்லுங்கோ உதுகளை பாத்து உங்களுக்கும் நட்டுகள் போல்டுகள் லூசாகும்
பிறகு லூசு ஆசுவதிரியிலை நீங்கள் அட்மிட்டு ஆக வேண்டி வரும் கவனம் அபுசிவோ
2005


லொள்ளுபாண்டி

19-05-2013 09:57

Admin: இலங்கை அரசியல்!


லொள்ளுபாண்டி

18-05-2013 00:39

http://www.panncom.net/p/4634


பவுல்

16-05-2013 13:57

http://www.panncom.net/p/4625


பவுல்

09-05-2013 12:09

http://www.panncom.net/p/4623


பவுல்

09-05-2013 12:07

http://www.panncom.net/p/4623


லொள்ளுபாண்டி

24-04-2013 23:16

http://www.panncom.net/p/4378


Rajee

24-07-2013 12:15

super


லொள்ளுபாண்டி

19-04-2013 23:10

http://www.panncom.net/p/4335


லொள்ளுபாண்டி

19-04-2013 22:54

http://www.panncom.net/p/4334


லொள்ளுபாண்டி

18-04-2013 00:18

http://www.panncom.net/p/4323


லொள்ளுபாண்டி

16-04-2013 00:29

http://www.panncom.net/p/4308


Gopalakrishnan

06-04-2013 07:09

தமிழ் மொழியில் பேஸ்புக்கில் டை ப் அடிக்க


சிரித்திரன்

06-04-2013 14:22

http://www.panncom.net/p/2977/


Gopalakrishnan

06-04-2013 06:59

தமிழ்மொழி பேஸ்புக்கில் டை ப் அடிக்க உதவுங்கள் gopsl333n@gmail.com


லொள்ளுபாண்டி

03-04-2013 09:43

http://www.panncom.net/p/4230


Pavul

25-03-2013 13:39

http://www.panncom.net/p/4178


அண்ணாவி ஆறுமுகம்

22-03-2013 11:49

http://www.panncom.net/p/4198


பவுல்

21-03-2013 13:50

http://www.panncom.net/p/4163


தம்பி பிரபா

19-03-2013 15:27

இந்த வலைத்தளம் ஆங்கிலமும் நாம் என்ன செய்ய முடியும்? நான் நிர்வாகம் கோருகிறது?

காரணங்கள் ஆகும்:

எமது இளைய தலைமுறையினரிடம் பங்காற்ற முடியும்.


தீபன்

20-03-2013 05:06

முன்னம் கனகன் மட்டும் செய்த வேலையை இப்ப பிரபாவும் செய்யத் துவங்கி விட்டார். அவர் கூகிளில் மொழி மாற்றம் செய்ததை எங்கள் மொழி மாற்றுனர் சுதர்சன் தான் எமக்குப் புரியும்படியாக மாற்றித் தர வேண்டும்.


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

20-03-2013 09:06

எழுவாய் எகிறிப்போய் நிக்குது....
பயனிலை பயனில்லாமல் பயந்து ஒதுங்கி போச்சுது....
செயப்படு பொருள் செயலிழந்து போச்சு....
எனக்கு தெரிஞ்ச அற்ப தமிழும் பணக்கார ஏரியாவில் பிச்சை எடுத்த பழைய சாப்பாட்டுப்பிரட்டல் மாதிரியாச்சு...
தம்பி பிரபா அவர்களின் தமிழை வாசிச்ச பின் வயித்த கலக்குது..

தம்பி பிரபா ஆங்கில மீடியமோ?


What can we do to get this website in English? I am requesting this to management?

Reasons for:

It can contribute to our younger generations.


manoharan

20-03-2013 11:51

தம்பி பிரபாவிற்ற்காக என்றும் அன்புடன் சமர்ப்பணம்

** semi -modal verb + base form
e.g = ought to study

semi -modal verb + be +present participle
e.g = ought to be reading.

semi modal verb + have + past participle
e.g + ought to have eaten

semi - modal verb + be +past participle
e.g = ought to be cleaned.

semi -odal verb + have +been + present participle
e.g = ought to have been thinking.

semi -modal verb + have +been + past participle
e.g = ought to have been washed .

semi -modal verb + have + been +being +past participle
e.g = ought to have been being finished

காசு கீசு ஒண்டும் வேண்டாம் .எல்லாம் ஒசியிலைதான்.ஒருவகை சமூக சேவை ..நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

20-03-2013 10:11

தீபன் அண்ணை,
சோறு இல்லை - சாப்பாட்டுப்பிரட்டல். பணக்கார ஏரியாவில் பிச்சை எடுத்த சட்டியில் பிரியாணி இருக்கும், ரொட்டி இருக்கும், இடியப்பம், இட்டலி, புட்டு, நூடில்ஸ், புக்கை (தமிழில்!) இருக்கும், ஏன் அவை வளக்கும் நாய் சாப்பிட்டு விட்ட மிச்சம் கூட அந்த சட்டிக்கை வரும். எல்லாத்தையும் எப்பையாவது ஒரு கோப்பையில் போட்டு பிரட்டி சாப்பிட்டால்?


manoharan

20-03-2013 09:38

நான் எழுத நினைச்சதை எனக்கு முதல் நீ எழுதி போட்டாய் அப்பா .அது அவரின் தவறல்ல ,அவர் படிச்ச மீடியம் இங்கிலீசு போல .அதுதான் .கதை .அந்த இலக்கணம்
சரியாக பிச்சைகாரன் ஒருவன் எடுத்த வாந்தி போல உள்ளது .அங்கெ பல்வேறு உணவு வகையறாக்கள் கலந்து இருக்கும் .உதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது
கண்டியலே


தீபன்

20-03-2013 09:36

ஹா ஹா ஹா !
முதல் மூன்று வசனத்தையும் பார்த்து வாய் விட்டுச் சிரித்து விட்டேன்.
பணக்கார வீட்டுப் பிச்சைச் சோறு தான் விளங்கவில்லை.


லொள்ளுபாண்டி

09-03-2013 01:35

http://www.panncom.net/p/4072


ஹிஷாலீ

04-03-2013 06:22

தங்கள் வலைச் சரம் கண்டேன் மிகவும் அருமை மேலும் அங்கு படைக்கப்பட்ட படைப்புகளும் மிக மிக அருமை

வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்

ஹிஷாலீ

www.hishalee.blogspot.in


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

05-03-2013 20:48

அன்பார்ந்த ஹிஷாலி அவர்களே,

தங்களுடைய வாழ்த்துக்களுக்கும் மின்னஞ்சலுக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மெத்தப்பெரிய நன்றிகள்.

தங்களின் வருகை எமது இணையத்துக்கு பெருமை சேர்க்கின்றது.

தங்களுடைய இணையத்தளமும் கண்ணைக்கவருகின்றது. சில கவிதைகளை திருடத்தோன்றுகிறது.

மீண்டும் நன்றிகள்.

பண்கொம்


தீபன்

07-03-2013 02:15

தங்களது வலையகம் வெகு சிறப்பாக இருக்கிறது. முகப்பிலிருக்கும் அந்த எட்டிப் பார்க்கும் குழந்தையே ஒரு கவிதையாகத் தான் இருக்கிறது.


லொள்ளுபாண்டி

19-02-2013 09:04

http://www.panncom.net/p/3929


லொள்ளுபாண்டி

18-02-2013 08:28

http://www.panncom.net/p/3924


லொள்ளுபாண்டி

18-02-2013 08:21

http://www.panncom.net/p/3925


லொள்ளுபாண்டி

17-02-2013 22:49

http://www.panncom.net/p/3926


லொள்ளுபாண்டி

15-02-2013 07:43

http://www.panncom.net/p/3909


லொள்ளுபாண்டி

13-02-2013 10:56

http://www.panncom.net/p/3894


லொள்ளுபாண்டி

30-01-2013 11:40


http://www.panncom.net/p/3813/


லொள்ளுபாண்டி

28-01-2013 00:17

http://www.panncom.net/p/3814/


லொள்ளுபாண்டி

28-01-2013 00:11

http://www.panncom.net/p/3815


லொள்ளுபாண்டி

11-01-2013 14:10

http://www.panncom.net/p/3708/


லொள்ளுபாண்டி

09-01-2013 12:21

http://www.panncom.net/p/3681/


லொள்ளுபாண்டி

09-01-2013 11:32

http://www.panncom.net/p/3682


லொள்ளுபாண்டி

07-01-2013 23:23

http://www.panncom.net/p/3683


லொள்ளுபாண்டி

28-12-2012 14:26

http://www.panncom.net/p/3584


லொள்ளுபாண்டி

21-12-2012 00:25

மனித குளோனிங்

http://www.panncom.net/p/3546


முதல்வன்

17-12-2012 22:52

பேராசிரியர் தெய்வ சுந்தரம் அவர்களின் முயற்சியால் நடந்து முடிந்தது கணினித் தமிழ் வளர்ச்சி மாநாடு . இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாக இருந்த நம் மொழி இப்போது கணினித் தமிழாக நான்காவது பரிமாணத்தை எட்டி உள்ளது . ஆனால் அது வளர்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன . அதை பற்றி விழிப்புணர்வு கொடுக்கத் தான் இந்த மாநாடு கூட்டப் பட்டது .

பேராசிரியர் பேசும் போது அவர் சொன்னது ....

சிங்கப்பூர் , ஜப்பான் போன்ற நாடுகளுக்கு போனால் அவர்கள் நமக்கு கணினித் துறையிலும் அறிவியல் துறையிலும் எவ்வாறு தங்கள் இனமக்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை சான்றாக காட்டுகிறார்கள் . ஆனால் அந்நாட்டு மக்கள் இங்கு வந்தால் நாம் நமது பழம் பெருமைகளை மட்டும் தான் காட்ட முடிகிறது . பத்தாம் நூற்றாண்டு கோவில்களை காட்டுகிறோம் . பண்டைய தமிழர்களின் சாதனையை காட்டும் நாம் தற்போது என்ன சாதித்தோம் என்று சிந்திக்க தவறி விட்டோம் . பழைய பெருமைகள் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு புதுமைகள் படைதிடுவதும் முக்கியமே . ஆனால் நாம் கணினியில் போதுமான அளவிற்கு தமிழில் மென்பொருட்கள் செய்வதில்லை அல்லது ஆர்வம் காட்டவில்லை . தமிழ் மொழியின் ஊடாக உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் அம்மொழிகள் சார்ந்த விடயங்களும் கொண்டு சேர்பதற்கான மென்பொருள் நாம் இன்னும் கண்டறியவில்லை .

அலைபேசியில் ஒரு முனையில் ஆங்கிலம் பேசினால் மறு முனையில் ஜெர்மன் மொழியில் கேட்கும் தொழில் நுட்பத்தை ஜெர்மானியர்கள் பயன்படுத்து கின்றனர் . இவ்வாறு தமிழில் மென்பொருள் உருவாகப் படவேண்டும் . தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்க கணினித் தமிழில் நாம் வளர்ச்சி பெறுவது இன்றியமையாதது. இவ்வாறு இவர் வலியுறுத்தினார் .

மேலும் மாநாட்டின் அமர்வுகளில் பின்கண்ட கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

1. இன்றைய மின்னணுக் கருவிகளின் உலகில் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் தமிழ்மொழி இடம்பெறவேண்டும். இதுவே இன்றைய தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.

2. தமிழர்கள் தாங்கள் பயன்படுத்தும் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் – செல்பேசி முதல் கணினிவரை – தமிழை முழுமையாகப் பயன்படுத்த முன்வரவேண்டும்.

3. மின்னணுக் கருவிகளில் தமிழ் இடம் பெறுவதற்குத் தேவையான தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தமிழகத்தில் மென்பொருள் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

4. தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தேவையான தமிழ்க் கணினிமொழியியல், மொழித் தொழில்நுட்ப ஆய்வுகள் , படிப்புகள் தமிழகத்தின் உயர்கல்வி நிலையங்களில் தொடங்கப்படவேண்டும. இதுவே கணினித் தமிழ் வளர்ச்சிகான மனிதவளத்தை உருவாக்கும்.

5. மேற்கூறிய அனைத்துப் பணிகளுக்கும் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த, தமிழக அரசும் , தமிழ் வளர்ச்சித் துறையும் உதவிடவேண்டும்.

6. மின்தமிழ் வளர்ச்சிக்கான ஒரு தெளிவான திட்டத்தைத் தமிழக அரசு மேற்கொண்டு, தமிழின் வளர்ச்சியை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். இதற்கு தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஒத்துழைக்கவேண்டும்.

இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த பேராசிரியர் தெய்வ சுந்தரம் அவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டவும் வாழ்த்தவும் கடமை பட்டுள்ளது . இனி இளையோர்கள் இவரின் வழிகாட்டுதலில் தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்தச் செல்ல வேண்டும் என்பதே நமது கோரிக்கை .

கணினித் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் இணைந்து , செயலாற்ற விரும்புவர்கள் பின்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்
சென்னை 600020
ndsundaram@hotmail.com
அலைபேசி : 9789059414


லொள்ளுபாண்டி

19-12-2012 21:59

தூக்கம் ஏன்

http://www.panncom.net/p/3545


லொள்ளுபாண்டி

17-12-2012 21:39

தமிழர்களைக் கைவிட்ட “புரட்சி”கள்!
http://www.panncom.net/p/3544/


பாலறிஷி

16-12-2012 12:09

Buddha.

http://www.panncom.net/p/3518


அன்பழகன்

30-10-2012 12:21

திரு ஆசிரியருக்கு,

தம்முடைய வலைதளத்தை பகிர்ந்ததுக்கு மிகவும் நன்றி.

வேத கணிதம்


sivanesan

13-06-2012 22:38

very nice welcome
www.anaicoddai.com
pls can you add our site
thanks


சந்திரஹாசன்

19-05-2012 03:42

http://www.thenee.com/html/180512-1.html


அற்புதன்

20-05-2012 21:35

வணக்கம் சந்திரஹாசன் அண்ணா நீங்கள் எழிதிய எட்டாவது தொடரையும் முதலில் இருந்தே பார்த்து வருபவனில் நானும்மொருவன் எமது ஊர் பெயர்களை கட்டூரையில்
எழுதுவது யார் என்ற குழப்பத்தில் இருந்தேன் இப்போது தெளிவாகியுள்ளது நீங்கள்
தான் அசன் என்ற பெயருக்கு சொந்தக்காறர் என்பதை வாழ்த்துக்கள் மேலும் தொடர
உங்கள் தொடர்கள் பதிவாகிய திகதிகள் இங்கே
02.01.12
10.01.12
20.01.12
01.02.12
04.03.12
02.04.12
05.05.12
18.05.12


சந்திரஹாசன்

21-05-2012 01:26

இதை தொடர்ந்து வாசிக்க விரும்பினால் தேனீ இணையத்தளத்துக்குதான் செல்ல வேண்டும். நமது ஊர் இணையத்தளத்துக்கு இதை பிரசுரிப்பதில் ஏதோ சங்கடம் இருப்பதாக தெரிகிறது.


jeya

11-05-2012 18:52

டென்மார்க்கில் குடியுரிமை பெறவும், வதிவிட அனுமதி பெறவும் டேனிஸ் மொழியை கற்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

சென்ற ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கடுமையான டேனிஸ் மொழி பரிச்சையில் சித்தியடைவது தாய் நாட்டில் கல்விப் பின்னணி குறைந்தவர்களுக்கும் பெரும் சிரமமாக இருந்தது. மேலும் டேனிஸ் – 2 என்னும் பரிச்சை பலரால் சித்தியடைய முடியாத சுமையாகவும் இருந்தது.

இந்த நிலையில் புதிய அரசு டேனிஸ் – 2 தராதரத்திற்கு பதிலாக டேனிஸ் – 1 ல் சித்தியடைந்தாலே போதுமென அறிவித்துள்ளது.


manoharan

11-05-2012 19:48

நல்ல ஒரு செய்திதான் ,இரண்டில் இருந்து ஒண்டுக்கு இறங்கினது .இருந்தாலும்
உந்த இந்தியா காரர் மாதிரி இல்லாமல் டேனிஷ் என்பதற்கு பதிலாக டனிஷ் என்று பாவி ஜெயா அக்காவோ இல்லை அண்ணாவோ .கோவியாதை என்னோடை


நட்டா முட்டி

11-05-2012 20:03

உது மாரி எங்கடை பனிப்புல குடியுரிமை பெறோனுமேண்டால் குவாக்கை-1 , குவாக்கை -2 எண்டு சோதினை வைச்சா எப்பிடி இருக்கும்.


மனோகரன்

11-05-2012 22:09

நட்டா முட்டி அப்பிடி ஒரு முறை வந்தால் இந்த நட்டா முட்டி சக்கரவர்த்திதான்
chief examiner கடைசியாய் என்னட்டை தான் எல்லாரும் வரவேணும் final voiva
டெஸ்டுக்கு .நான் கேக்கிற கேள்வியல் இதுதான் .சரி எங்கடை பாசையிலை ஒண்டு ரண்டு மூண்டு சொல்லு பாப்போம் எண்ண அவை வலு புளுகத்திலை ஏகன் ,இணையன் சூலன் எண்டு சொல்லி கொண்டு போய் டக்கெண்டு brake
அடிப்பினம் நாலுக்கு பிறகு ஐந்சுக்கு வலு லேசாய் சொல்லுவினம் தட்டல் எண்டு பிறகு ஆறுக்கு என்ன ? ஏழு எட்டு ஒன்பது எல்லாம் முளிசி போட்டு பத்துக்கு வலு லேசாய் சொல்லுவினம் புலி எண்டு .உந்த பாச்சா எல்லாம் என்னட்டை
பலிக்காது கண்டியலே எல்லாரும் fail .பிறகு fail பண்ணின எல்லாரையும் ஒன்று கூட்டி அன்னதான மடத்திலை XXXXமாரின் அனுமதியுடன் மாபெரும் செமினார் .
புதுதாக கண்டு பிடித்த மொழி அறிவாளர்களுடன் பேசி பறைஞ்சு எடுத்த தீர்மானத்தின் படி உண்டாக்கிய புதிய சொல்களின் அறிமுகம் .நாலுக்கு நான் முகன் பிரமா (அப்ப நாலுக்கு பிரமா ) ஐஞ்சு ஓகே தட்டல் .பிறகு ஆறுக்கு ஆறுமுகன் (முருகன் ) ஏழுக்கு எழுமலையான் திருப்பதியான் .எட்டுக்கு அட்டமத்து சனியன் (சனீஸ்வரன் ) ஒன்பதுக்கு நவராத்திரி (மூண்டு பேர் சரசு வதி, இலச்சுமி ,பிறகு வீரத்துக்கு பத்திர காளி ஆச்சி இருந்திட்ட போதும் பொதுவிலை
சரசு வதியின்றை பேரை எடுத்து ஓம்பதுக்கு சரசு .பத்துக்கு ஏற்கனவே இருக்குதல்லே புலி .சரி இப்ப புதிதாக நாங்கள் உருவாக்கிய வாகட இலக்கணத்தின் பிரகாரம் லச்சன்கள் இல்லை கோடி வரைக்கும் எண்ணலாம் சொல்லலாம் .எழுதலாம் .இதோ புதிய முறை .
ஒன்று ----ஏகன்
இரண்டு -----இணையன்
மூன்று ----சூலன்
நான்கு ----பிரமன்
ஐஞ்சு ----தட்டல்
ஆறு -----முருகன்
ஏழு ------வெங்கடேஷ் (திருப்பதியான் -எழுமலையான் )
எட்டு ---- சனீஸ் (அட்டமத்து சனியன் ஏழரை சனியன் )
ஒன்பது ---சரசு (நவராத்திரி சரசுவதி பூசை )
பத்து ----புலி (அது ஏற்கனவே உள்ளது தானே )

இனி உதுகளை வைச்சுக்கொண்டு ஆயிரம் பத்தாயிரம் லட்சம் ஏன் கோடியை கூட எண்ணலாம் சொல்லலாம் எழுதலாம் .இதோ உதாரணங்கள் .

சோதினையில் கேட்கப்படும் கேள்விகள் .
how do u say in our language 4 eleven (பதினொன்று ) ஐயோ சேர்வலு வலுலேசு புலி ஏகன் வெளிப்பான் +=+++ பதம் மட்டுமே .நீர் எதோ வெளிப்பான் வெளிப்புலம் எண்டு சொல்லி எங்களை திசை திருப்ப முனைகிறீர் போல .பிறகு fail ஆக்கி போடுவன் கண்டீரே .சொறி சொறி சேர் .காசில்லாமல் இந்த உலகத்திலை சீவிக்க எல்லாதல்லே .அதாலை வெளிப்பானும் என்னை அறியாமல் வந்து விட்டுது .சரி
அடுத்த கேள்வியை கேளுங்கோ .சரி சொல்லும் பாப்போம் இருவத்தி நாலு
இணையன் புலி பிரமன் . ஓகே ரைட் முப்பத்தி ஆறு **சூலன் புலி முருகன் *
நாப்பத்தி ஐஞ்சு ** பிரமன் புலி தட்டல் * நூற்றி ஐமபத்தி ஐந்து * புலி புலி/ தட்டல் புலி /தட்டல் 10 x10 =100 (புலி புலி ) 5 x10 =50 இப்ப நூற்றி ஐம்பது ஆச்சுது .கடைசியில் இன்னுமொரு ஐஞ்சு அதுக்கும் ஒரு தட்டல் .அப்ப புலி /புலி
தட்டல் புலி /தட்டல் .ஓகே நீர் பாஸ் .அடுத்த ஆள் வரலாம் .உங்கினை அவை இவையை பிடிச்சு கொண்டு பந்தங்கள் கொளுத்தி கொண்டு ஒருத்தரும் வரப்படாது கண்டியலே அப்பிடி வந்தால் fail தான் .எனக்கு உந்த விளையாட்டுகள்
பிடியாது


ந. இரவீந்திரன் ( இரவி )

03-05-2012 04:21


"காலையடி முருகன் விளையாட்டுக் கழகம்" அதிர்ஸ்ட லாபச் சீட்டை நம்புவதை கைவிட்டு வேறு மார்க்கத்தில் தனது செயற்பாடுகளுக்கான பணம் தேடும் மார்க்கத்தை கண்டு பிடித்தது பற்றி இறுதிச் சந்திப்பு முடிவில் கூறி நிறுத்தியிருந்தேன். அது வெறும் காசை பெற்றுத்தந்த நிகழ்வல்ல; கழகத்தின் ஒரு மகத்தான பங்களிப்பாயும் இருந்தது. சந்திர மண்டலத்தில் மனிதன் காலடிவைத்த தேடலுக்கான தசாப்தங்களாய் அது இருந்த வகையில் முருகன் வாரிசுகளான நாங்களும் விஞ்ஞானத் தேடல்களுக்குள் மூழ்கிப்போயிருந்தோம். தவிர, நாங்கள் படித்த பாடசாலைகளில் அறிவியல் பொருட்காட்சிகள் நடந்து கொண்டிருந்த நேரம் அது.

ஏற்கனவே வீடுகளில் ஒரு அலுமாரியை ஆய்வுகூட பெட்டகமாக்கி பரிசோதனைகள் நடத்திக் கொண்டிருந்த முருகன் கழக வாண்டுகள், அறையில் ஆடியதை ஊர்முழுதுக்கும் காட்சிப்படுத்தும் வகையில் காலியாக இருந்த வீடொன்றில் 'அறிவியல் பொருட்காட்சிப் பெருவிழா' நடாத்தத் திட்டமிட்டோம். ஊரே எங்கள் சாதனைகளை வந்து பார்த்து எங்களுக்கான காசையும் தந்துவிடு என்று கதவைத் திறந்து வைத்துக்கொண்டு நின்றோம். சொல்லி வேலையில்லை, ஊர் எங்களுக்குள் வந்ததாக நாங்கள் பொங்கிப்பூரித்து மகிழ்ந்தபோது, ஊரினால் நாங்கள் உள்ளீர்க்கப்பட்டதே உண்மையில் நடந்து முடிந்தது.

விளையாட்டு மற்றும் பண்பாட்டு செயல் ஒழுங்குகளில், ஒருவகையில் எங்களுக்கான பொழுது போக்கான நடவடிக்கைகளாகவே இவற்றைக் கருதி இயங்கினோம்; நாங்கள் எதிர் பார்த்ததற்கும் மேலாக ஊர் அள்ளுகொள்ளையாக வந்து அந்தப் பொருட்காட்சியை தனது பெரும் கொண்டாட்டமாக்கியபோது, "பிள்ளையள், நீங்கள் ஒண்டும் விளையாட்டுப் பேர்வழியளில்லை; ஊருக்கு உடன் தேவையாய் இருந்த புதிய-பண்பாட்டு எழுச்சியைத்தான் தொடக்கி வைத்திருக்கிறீர்கள். எக்கணம் போட்டுடைச்சுப்போடாமல் பத்திரமாய் ஒப்பேத்துங்கோ" எண்டு சொல்லாமல் சொன்னதாகவே இருந்தது.

நேரடியாக ஊர் சொல்கிற நிபந்தனைகளுக்கு இணக்கமாகி அந்தந்தக் கணங்களின் 'நல்லபிள்ளையள்' என்ற வாய்ச் சாலங்களுக்கு மயங்கக் கூடாது, எங்களுக்கு சரியெனப் பட்டவற்றை சுதந்திரமாய் நாம் செய்யவேண்டும் என்பதனாலேயே நன் கொடைகளை நிராகரித்து எங்களது உழைப்பில் பணந்தேடி இயங்க முயன்றோம். அந்தச் சரியான செயற்பாடுகளை ஊர் தனக்கானதாகக் கொண்டாடி ஆதரித்த போது ஊருக்கானவர்களாய் நாங்கள் உள்வாங்கப்பட்டோம். இன்னொருவகையில் இதனைச் சொல்லலாம்; ஒருசில வசதியானவர்களது வலைக்குள் எங்களை வீழ்த்தி அர்த்தமற்ற விளையாட்டுத்தனத்துக்குரியவர்களாக நாங்கள் மாறுவதற்கே நன் கொடை சேகரிப்பு வழிப்படுத்தியிருக்கும். எமது உழைப்பு என்பதில் ஊர் முழுதும் பங்கேற்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டதால் ஊருக்கு எது புதிய-பண்பாட்டு எழுச்சிக்குரியதோ அதனைச் செயலாக்க வாய்ப்பானது.

இதன் ஒரு வளர்ச்சியே உலகை மாற்றும் பலகோடி உழைக்கும் மக்களோடு எமது குரலும் வலிமையோடு இணையும் பரிணமிப்புக்கு எம்மை ஆற்றுப்படுத்தியமையாகும். இதனைத் தொடர்வதற்கு அவசியம் என்றவகையில் எனது முகநூலின் இந்த உழைப்பாளர்தினச் செய்தியைத் தருகிறேன்:

மே தினம்: முதலாளி வர்க்கத்தின் மூடு திரையல்ல!

இன்று மே தினம்; ஊர் சுற்றி ஓடி தோழர்களை அணி திரட்டியவாறு யாழ் நகரின் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் கோசங்களை முழக்கும் அந்த நாட்களுக்கு ஏங்க வேண்டும் என்பதற்கு இல்லை. மக்கள் விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அரசுகளும் முதலாளி வர்க்கமும் மேதினம் கொண்டாடும் வேடிக்கைக்காக வருந்த ஒன்றும் இல்லை. இன்றைய பத்திரிகைகளின் கருத்துப்படங்கள் எல்லாமே அனேகமாய் முதலாளிகள் அரிவாளையும் சுத்தியலையும் கையுக்கொன்றாய் அபகரித்து வைத்துக்கொண்டு வேடிக்கை வினோதம் காட்டுவதாயே உள்ளன.

அவற்றில் ஒன்றில், சஜித் பிரேமதாசும் ரணிலும் ஒருவர் கழுத்தில் மற்றவரது அரிவாளும், அவரின் தலையில் இவரது சுத்தியலும் மோதத் தயார் நிலையில் இருப்பதாக சித்திரிக்கப்பட்டிருந்தது. மேதினத்தை தமது உட்கட்சி பிளவுக்கு வெளிப்பாடானதாக அவர்கள் ஆக்கும் கோளாறு மட்டும் இதில் இல்லை. பாட்டாளி வர்க்க மற்றும் ஒடுக்கப்படும் இன அரசியல் முன்னெடுப்பை ஆதிக்க வர்க்கப் பிரதிநிதிகள் எவ்வகையில் கையாள்கிறார்கள் என்பதையும் இதுகாட்டுகிறது.

மேதினத்தை நினைவு கூர அனுமதிக்க மறுத்த கட்சி ஐ.தே.க. ; பண்டாரநாயக்க அரசு அதனை விடுமுறை நாளாக்கி தொழிலாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கிய பின்னர், அந்நாளில் இரத்தம் சிந்தவைத்த வரலாறு ஐ.தே.க.வினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று தவிர்க்க இயலாமல் 'விடுதலைக்கான போராடும்' நாளாய் இத்தினத்தை நினைவு கூருகிறார்களென்றால், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்டங்களின் மகத்தான வெற்றியின் வெளிப்பாடு இதுவென்பதை அழுத்தி வலியுறுத்துவது அவசியம்.

யாழ்ப்பாணத்தில் ரணில் மேதினத்தை கொண்டாடும்போது ஒடுக்கப்பட்ட இனமொன்று விடுதலை கொள்ள வாய்ப்பிருப்பதாக மயங்க இடமுண்டு. போதாக்குறைக்கு தமிழ் மக்களின் வாக்கு அங்கீகாரத்தைப் பெற்ற கூட்டமைப்பு இதனோடு ஐக்கியப்பட்டு மேதினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்துகிறது. இறுதி யுத்தத்துக்கு தலைமையேற்று கொலை பாதகங்களைப் புரிந்ததோடு முள்ளு வேலிக்குள் தப்பிவந்த மக்களை அடைத்துவைத்த சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க பிரசாரம் செய்த கூட்டமைப்பு, தமிழினத்துக்கு எதிராக யுத்தமென்றால் யுத்தமென்று பிரகடனம் செய்து இன்றுவரை அரசியல் தீர்வுக்கு எதிராக இன்னும் போராடிக்கொண்டிருக்கும் கட்சியொன்றோடு சேர்ந்து மேதினம் கொண்டாடுவதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை; இவர்கள் மக்கள் விரோத சக்திகள் என்ற புரிதலை ஏராளமான தமிழ் மக்கள் வந்தடைய இயலாதிருக்கிறது என்பதே வியப்புக்குரியது.

சஜித் பிரேமதாச கொழும்பில் நடாத்தும் 'பிரேமதாச நினைவு நாள்' கொண்டாட்டம் கூட்டுக்குழப்பமேளா! இதை அவர் கட்சியுணர்வோடு ஐ.தே.க.வின் யாழ் மேடையிலேயே இணைத்திருப்பின் குறைந்தபட்ச அரசியல் நேர்மையாளராகக் கணிக்கப்பட இடமேட்படுத்தியிருப்பார். வெறும் உட்கட்சிப் போட்டியாக இதனைக் கணிக்க இயலவில்லை; அவரது மோசமான இனவாத உணர்வையும் இது வெளிப்படுத்தியுள்ளது. பிரேமதாச 19 ஆண்டுகளின் முன்னே தனது கட்சி மேதின ஊர்வலத்துக்காக நின்ற களத்தைக் கொலைவெறிக்குதேர்வு செய்தமை புலிகள் இழைத்த பல்வேறு அயோக்கியத்தனமான உழைக்கும் மக்கள் விரோதச் செயற்பாடுகளிலேயே அதியுச்சமானது. அதற்கு சஜித் இந்த வடிவில் பழி தீர்ப்பது புலியும் யானையும் வேறுவேறு வகை மிருகங்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டுவது.

இன்றைய ஆதிக்கவாத அரசியல் அமைப்பை அரங்கேற்றிய ஐ.தே. க., தனது குதிரையை சக்கடத்தார் மேலும் கொலைவெறி வேகத்தில் வலுவேற்றுவதில் மகிழும் கொண்டாட்டமாயும் இவற்றைக் காணலாம். இவர்கள் இரண்டுபட்டு தமிழிலும் சிங்களத்திலும் பிற்போக்கான இந்த மாயத்தினத்தைக் கொண்டாடும்போது 'ஒரே நாடு' எனும் தொனிப் பொருள் எதிர்காலத்தில் தமது ஆதிக்கவாத-பேரினவாதக் கொலைவெறி ஆட்சிக்கு மேலும் வலுவான அத்திவாரத்தை இட்டுத்தருவதாக மகிழ்வோடு இருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

இதுபோன்ற பாதகங்களைக் கண்டு துவண்டு போக பாட்டாளி வர்க்க இயக்கம் ஒன்றும் அத்தனை பலவீனமான ஒன்றல்ல; அனைத்துவகை கபடச் சூழ்ச்சிகளையும் புறங்காணச் செய்து, முதலாளித்துவத்தின் புதிய மூடு திரைகளையும் கிழித்தெறிந்து, தன்னைச் சூழ்ந்த சாம்பல் மூட்டத்தையும் ஊதித் தள்ளி கொழுந்துவிட்டெரியும் போர்ச் சுவாலையில் உலகைப் புதிதாய்ப் புனையும் தன் வரலாற்றுப் பணியை மீண்டும் பாட்டாளி வர்க்க இயக்கம் கையேற்கும்! அதற்கென ஒன்றுபட்டு உழைக்க இந்த உழைப்பாளர் தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்!!

"உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்'"


manoharan

09-03-2012 19:24

ஒரு சில முரண்பாடுகள் இருந்திட்ட போதிலும் ,மற்றும் மூத்த தூண்களாகிய நீங்கள் மூவரும் ,சந்திரன் ,தேவர் ,இரவி வயதில் முதிர்ந்து மூன்று வேறு திசைகளில்
வாழ்ந்திட்ட போதிலயும் நீங்கள் அன்று விதைத்த விதைகள் இன்று முளை விட்டு
கிளை பரப்பி பணிகள் அருமையாக நடைபெறுகின்றன . சில சில முரண் பாடுகள்
இருந்திட்ட போதிலும் பணிகள் செவ்வனவே நடை பெறுகின்றன என்பது எனது கணிபபீடு
எதோ இப்பிடியே போவோம்


manoharan

09-03-2012 19:24

ஒரு சில முரண்பாடுகள் இருந்திட்ட போதிலும் ,மற்றும் மூத்த தூண்களாகிய நீங்கள் மூவரும் ,சந்திரன் ,தேவர் ,இரவி வயதில் முதிர்ந்து மூன்று வேறு திசைகளில்
வாழ்ந்திட்ட போதிலயும் நீங்கள் அன்று விதைத்த விதைகள் இன்று முளை விட்டு
கிளை பரப்பி பணிகள் அருமையாக நடைபெறுகின்றன . சில சில முரண் பாடுகள்
இருந்திட்ட போதிலும் பணிகள் செவ்வனவே நடை பெறுகின்றன என்பது எனது கணிபபீடு
எதோ இப்பிடியே போவோம்


ந. இரவீந்திரன் ( இரவி )

11-03-2012 18:05

பண்கோம்.நெட். எங்களை உருவாக்கிய ஊரை எங்கு போனாலும் மறந்துவிட முடியாது.என்னைக் கட்டமைத்ததில் மன்றத்துக்கு இருந்த பங்கினை அதிகமாக எழுதியமையால் நான் ஒரு அம்மாளின் குஞ்சு என்பது இல்லாமல் போய்விடாது.மன்றம் நானும் சேர்ந்து இயங்கிய களம் என்பதால் அப்படி.முன்னதாக,உருவாகிவந்த சிறுவனாய் வளருகையில் அம்மன் கோயிலும் பனிப்புலம் வாசிகசாலையும் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தை அண்மையில் கனடா சஞ்சிகைக்கு எசுதிய கட்டுரையில் எழுதி இருந்தேன்.நாங்கள் ஐக்கியத்தோடு மன்றம் என செயற்பட்டோ போது ,சரியான முடிவு எட்டப்படுவதற்காக கடுமையான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம்.இவை பிளவுபடுத்தும் முரண்பாடுகள் அல்ல.எட்டப்பட்ட முடிவு எவரது விருப்பத்துக்கு மாறு பட்டிருந்தாலும் ,எட்டப்பட்ட முடிவுக்காக உயிரைக் கொடுத்து செயட்பட்டிக்கிறோம்.இந்தப் பண்பு இருந்திருக்க வேண்டிய அவசியமான அமைப்பில் இருக்கவில்லை.அது அதிர்சிசியை ஏற்படுத்தியபோதிலும் ,மன்றத்தின் அனுபவத்தை வெளிப்படுத்துவதன் வாயிலாக முழுச் சமூக மாற்றத்துக்கான அமைப்புக்கு உதவுவதோடு எமது ஓர் முழுமையும் புதிய உத்வேகத்தோடு எழுச்சிகொள்ள உதவும் என்பதால் தொர்ந்து மன்றம் பற்றி எழுதுவேன்.


பண்கொம் .நெட்

19-12-2011 18:26


28000


சிவானந்தா தரனிபதி, சென்னை

13-09-2011 13:47

உங்கள் இணையத்தளம் மூலம் பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன். மேலும் பல தகவல்களை அறிய இந்த இணையத்தளத்துக்கு நுழைவேன்... உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். .நன்றி


admin

13-09-2011 15:16

உங்களது வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் எமது இணையத்தின் வளர்ச்சியையும் எமது சமுதாயத்தின் வளர்ச்சியையும் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு பண்கொம்.நெற்றின் நன்றிகள்.


manoharan

22-05-2013 14:48

சில விடயங்களை இட்டு மனம் வெந்து வேதனை அடையும் போதும் இந்த இணையத்தை சிவானந்தா தரணிபதி என்ற எம் தொப்புள் கொடி உறவு பார்த்ததோடு
மட்டும் நிற்காமல் அவரின் பெறுமதி மிக்க கருத்துரை வழங்கியமை பற்றி நான்
கொண்ட ஆனந்தம் வார்த்தைகளால் விபரிக்க முடியாது .அது இந்த இணைய தளத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன் .இங்கு விஞ்ஞானம் /மெய்ஞானம் /அறிவியல் /சமகால நடப்பியல் /உலக பொருளாதாரம் /
சரித்திரம் /சினிமா இன்னும் பல அலசி ஆராய படுகின்றது .வேறு என்ன சில வேளைகளில் விசேடமாக நான் என் கிராமிய வார்த்தை பிரயோகங்கள் .அது நம்மவரை மகிழ்விப்பதற்காகவே .இருந்தும் அவர் சிவானந்தாவுக்கு என் சிரம்
தாழ்த்திய வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகுக .எல்லாம் நன்றே


spirasanthsr

18-09-2013 16:10

உங்கன்னடம்பர்தங்க


myvimal

12-09-2011 16:43

உங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள்


சுரேஸ்

29-08-2011 19:19

நோர்வேயில் நிகழும் நிகழ்சிகளை இவ் இணையத்தளத்தில் வெளியிட்டா மிகவும் சிறப்பாகயிருக்கும். நன்றி, சுரேஸ்சுரேஸ்

08-08-2011 23:41

மிகவும் சிறப்பாகவுள்ளது உங்கள் இணையத்தளம் .நன்றி


சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்

08-08-2011 14:29

உனது வளர்ச்சி சிகரம் தொட எனது வாழ்த்துக்கள் . வடிவமைப்பு உண்மையில் பாராட்ட வேன்ன்டிய விடயம் . மொத்தத்தில் இது ஒரு கலை களஞ்சியமாக திகழ உங்களின் சீலன் SWISS


சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்

08-08-2011 14:29

உனது வளர்ச்சி சிகரம் தொட எனது வாழ்த்துக்கள் . வடிவமைப்பு உண்மையில் பாராட்ட வேன்ன்டிய விடயம் . மொத்தத்தில் இது ஒரு கலை களஞ்சியமாக திகழ உங்களின் சீலன் SWISS


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி