காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

விவசாயியும், பாம்பும் நாரையும்.


ஒரு பாம்மை மக்கள் அடித்து விரட்டினார்கள், அது ஓரிடத்தில் பயந்து ஒளிந்திருந்தது.

அந்தப் பக்கமாக ஒரு விவசாயி வந்தான் அவனிடம் ஐயா என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சி மன்றாடியது.

விவசாயியும் அதன் மீது இரக்கப்பட்டு தன் வயிற்றுக்குள் ஒளிந்து கொள் என்றான், அவன் குந்திக்கொள்ள பாம்பும் பின்புற வழியாக அவன் வயிற்றில் புகுந்து குடருக்குள் நுழைந்து வயிற்றுக்குள்ளே பத்திரமாக ஒளிந்து கொண்டது.

கொஞ்சத் தூரம் சென்றதும் பாம்பே பத்திரமான இடத்திற்கு வந்துவிட்டோம் வெளியே வா என்றான் விவசாயி.

இல்லை நான் வரமாட்டேன்.. இந்த இடம் கதகதப்பாக இருக்கிறது, நான் ஏன் வெளியே வரவேண்டும் என்று பாம்பு கேட்டது.

வேறு வழியில்லாமல் வயிற்றுக்குள் பாம்பை சுமந்தபடியே சென்ற விவசாயி வழியில் ஒரு நாரையை கண்டு தன் துயர நிலையை சொன்னான்.

அதற்கு நாரை நீ முன்போலவே குந்தி நன்றாக முக்கு பாம்பு வெளியே வரும் நான் பிடித்துக் கொள்கிறேன் என்று சொன்னது.

விவசாயியும் அப்படியே செய்தான் பாம்பு வெளியே தலையை நீட்டியது, அவ்வளவுதான் நாரை அதை வெளியே இழுத்து கொன்றது.

அப்போது விவசாயிக்கு ஒரு கவலை பிறந்தது.. ஒரு வேளை பாம்பு குடலுக்குள் விஷத்தைக் கக்கியிருக்குமோ என்று பயந்தான்.

அவனுக்கு நாரை ஒரு யோசனை சொன்னது.. ஒரு நாளைக்கு ஒரு நாரைப்படி நான்கு நாட்களுக்கு நான்கு நாரைகளை பிடித்து சமைத்துச் சாப்பிடு விஷம் இருந்தால் அகன்றுவிடும் என்று வைத்தியம் கூறியது.

அப்படியா இன்றே மருந்து சாப்பிட ஆரம்பிக்கிறேன் என் முதல் மருந்து நீதான் என்று நாரையைக் கழுத்தில் பிடித்துக் கொண்டான் விவசாயி.

நாரையை வீடு கொண்டு சென்று ஒரு கூட்டில் அடைத்துவிட்டு, நடந்த விஷயத்தை மனைவியிடம் சொல்லி அதை கறி சமைக்கச் சொன்னான்.

அவன் மனைவி தன் கணவனை திட்டினாள்.. உன்னைக் காப்பாற்றிய நாரையை கொல்லப்போகிறாயா என்று கோபமாகக் கேட்டாள்.

நாரையை விட்டால் நான் இறந்துவிடுவேன் என்று விவசாயி அலறினான்.. ஆனால் அவள் கேட்கவில்லை.

கணவன் இறந்தாலும் காரியமில்லை என்று கூட்டைத் திறந்து நாரையை வெளியே பறக்க விட்டாள், நாரை மகிழ்வாக பறந்தது ஆனால் பறக்கும்போது அந்தப் பெண்ணின் இரண்டு கண்களையும் சொடக் சொடக்கென கொத்திக் குருடாக்கிவிட்டு பறந்தது.

தன் உயிரைவிட நாரையின் உயிர் பெரிதென கருதிய குருட்டு மனைவியுடன் குடும்பம் நடத்த முடியாதென அவளை அடித்துக் கொன்றான் விவசாயி..

மனைவி இறக்க அவனுக்கு பாம்பின் விஷம் வேலை செய்தது.. துடிதுடித்து அவள் பக்கத்திலேயே இறந்தான்.

குடியானவன், மனைவி, பாம்பு, நாரை இந்த நால்வரிலும் யார் நல்லவர்கள்…?

எல்லோருமே தான் தப்பினால் சரி என்று நினைப்பவர்கள்தான்.. ஆனால் அனைவருமே ஒருவருக்காக மற்றவர் வாழ்வதைப் போல வேடமிட்டார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல.. இதுபோல நமக்கு விசுவாசமானவர்கள் நமக்காகவே வாழ்வதாக நினைப்போம் ஆனால் தருணம் வரும்போதுதான் உண்மை தெரியும், அதுவரை யாரையும் கண்டு பிடிக்க முடியாது.

இப்படித்தான் நண்பர்களும் உங்களுக்குக் கீழ்ப்படிவாக இருப்பதாக வேடம் போடுவார்கள், நீங்கள் சொல்வதற்கு ஆமாம் போடுவார்கள், சந்தர்ப்பம் வரும்போது காட்டிக்கொடுக்கும் சுயநலமிகளாக மாறுவார்கள்.

எனவேதான் நண்பர்களை பதவியில் அமர்த்தாதீர்கள் தகுதியானவரை பதவியில் அமர்த்துங்கள் என்றான் நெப்போலியன்.

ஆனால் நண்பர்களும் உங்களுக்கு வேண்டும் நீங்கள் செய்த தவறுகளை யாருடைய தலையில் போடுவது அதற்கு ஒரு நண்பன் வேண்டும்.

இப்படி பல நண்பர்களுடைய தலைகள் வரலாற்றில் துண்டாடப்பட்டது, ஒரு நண்பன் போனால் என்ன செய்வது என்று நினைக்கிறீர்களா.. அந்த இடத்திற்கு வர இன்னொருவன் காத்திருப்பான்.

இதுதான் உலகம்..

மேலைத்தேய இராஜதந்திர சிந்தனைகள் இப்படித்தான் நகர்கின்றன.. நல்ல பழமொழிகளை அறிவது மட்டும் சரியானதல்ல மறு பக்கங்களையும் பார்ப்பது அவசியமானது.

காலில் விழுந்துவிட்டால் விசுவாசம் வந்துவிடும் என்றோ.. தியாகிகளை போற்றுவோருக்கெல்லாம் தியாக மனம் இருக்கிறதென்றோ தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள்.. எல்லாமே பாம்புகளும் நாரைகளுமாக இருக்கலாம் எச்சரிக்கை



மொத்த வருகை: 522 இன்றைய வருகை: 2


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி