காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு


கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.


மறைவு 13,05,2016


தோற்றம் 10.08.1944

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு .கனகசபை லிங்கநாதன் அவர்கள் 13.05,2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார் காலம் சென்ற கனகசபை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
துரைசிங்கம் தங்கம்மாவின் அன்பு மருமகனும் லலிதாவதியின் அன்புக்கணவரும்
சத்தியசீலன் ( சுவிஸ்) , சத்தியரூபி ( டென்மார்க்) , சத்தியஅணுஸ்டா( ஜெர்மனி) ஆகியோரின் அன்பு தந்தையும்
ஜெயக்குமார், உதயராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்
தினுசா, தர்சிகா , சாருன்னியா, தாரிகா , செளசினின் அன்பு பேரனும்
காலம் சென்ற பூலோகராசா ( இலங்கை) , காலம் சென்ற இலன்கேசுவரி (இலங்கை ), சுப்ரமணியம் ( இலங்கை) , தில்லைநாதன்( இலங்கை ) , வேல்முருகன் ( ஜெர்மனி ), சிவனேஸ்வரன் (ஜெர்மனி ), தவராசா (ஸ்வீடன்), நாகேசுவரி( ஜெர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகின்றோம் …
தகவல் .
குடும்பத்தினர்
கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
தொடர்புகளுக்கு
சத்தியசீலன் ( மகன் )
0041 79 932 20 62


மொத்த வருகை: 1367 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (2)


anton மனோகரன்

19-05-2016 15:19

அன்னவரின் மறைவு சேதி அறிந்து மிக மன வேதனை .என் தாய் வழியில் அவர் எனக்கு மைத்துனன் .மனைவி எனக்கு சோதரி .தாய் தகப்பன் உறவு வழி அனைவரினதும் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நான் தவறுவதில்லை .இருந்தும் அவரின் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை .மறைய ஒரு மாதத்திற்கு முன் ஒரு வைபவத்தில் கலந்து கொள்ள நான் அங்கு சென்ற போது என்னை கண்டார் கதைத்தார் .சுக துக்கம் விசாரித்தோம் ஆளுக்கு ஆள் .இத்தனை விரைவில் விடை பெறுவார் என்று நான் கணமேனும் கருதவில்லை .
இனி அவரை பற்றிய சில பதிவுகள் .அன்று ஊரில் அவரை ஒத்த வயது காரர் மூன்று லிங்கங்கள் .ஒன்று சிவலை லிங்கம் மற்றவர் கறுவல் லிங்கம் .மூன்றாவர் இவர் கனகு வீட்டு லிங்கம் .அமைதியாக பேசுபவர் .எவரையும் புண்படுத்தும் வண்ணம் கதைப்பவர் அல்ல .பள்ளி படிப்பு முடிந்து கொழும்பில் செடியார் கடையில் வேலை செய்தவர் .பின் எத்தனையோ கஷ்டங்கள் பட்டு திருமலை கண்ணாடி தொழில் சாலையில் பனி புரிந்து அது மூடு பட்ட பின் கடல் படையில் சிவிலியன் தொழில் ஆழி ஆக இணைந்து தொழிலை கற்று படிப்படியாக முன்னேறி கதிரை பின்னும் Weaver தரம் ஒன்றிற்கு உயர்ந்தவர் .இவரிடம் அத்தொழிலை கற்ற இவரின் மைத்துனன் கூட பிற்காலத்தில் ஊரில் கதிரை பின்னி உழைத்தவர் .பிற்காலத்தில் திருமலை சிவன் வீதியில் தனக்கென்று ஒரு அழகிய இல்லம் அமைத்து அழகாக வாழ்ந்தவர் .நான் எப்போ அங்கு போனாலும் அவரை சந்திக்க தவறுவதில்லை .போனால் அத்தனை உபசரிப்பு .வடை சுடுகிறோம் தோசை சுடுகிறோம் தின் என்பார் .இந்த காலத்தில் உறவுகள் நண்பர்கள் வீடு போனால் அவர்கள் திரும்பியும் பார்க்கிறார்கள் இல்லை இந்த இந்திய தொலை காட்சி மோகத்தில் மூழ்கி .அவர் போய் விட்டார் திரும்பி வர போவதில்லை .இருந்தும் அவர் போன இடத்தில் அவரின் ஆத்துமம் சமாதானத்தின் மடியில் இளைப்பாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .அவரிடம் பொய் பித்தலாட்டம் பம்மாத்துகள் சுத்து மாத்து எதுவும் இல்லாதவர் .


பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

14-05-2016 07:25

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு .கனகசபை லிங்கநாதன் அவர்கள் 13.05,2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்றசெய்தி அறிந்து மிகவும் துயருற்றோம். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
ஓம்சாந்தி…….. சாந்தி ……. சாந்தி…….
பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி